எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்திவானச் செந்தூரமே கதைத்திரி

அந்திவானச்
செந்தூரமே


பகுதி -01

"அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும் "


ரயில்வண்டி தடதடக்க அவள் காதுகளில் மனோவும் சுவர்ணலதாவும் தங்கள் இனிமையான குரலில் பாடலாய் ஒலித்துக் கொண்டிருந்தனர்.


கண்களை மூடி இசையில் லயித்தவளுக்கு இதழில் புன்னகை நெளிந்தது.


பாடல் முடிந்து சிலநொடி மௌனத்தில்," என்னா வடைய்யா மசால்வடை மசால்வடை தான்" என்ற வடிவேலின் குரல் கேட்க, விழிகளை கோபமாய் சுருக்கி இமைபிரித்தாள்.


'எவன்டா அவன் இதை எல்லாம் ரிங்டோனா வச்சிருக்கவன்?' என்று பார்க்க, எதிரே வெள்ளைநிற டீசர்டில் வடிவேலின் பாடிசோடா புகைப்படத்தை ப்ரிண்ட் செய்து அணிந்திருந்தான்.


'பயபுள்ள பயங்கர வடிவேல் ஃபேன் போல...!' என மனதினுள் சொல்லியபடி, வேறு பாட்டை ஐபேடில் துழாவ, எதிரில் வந்தமர்ந்தவன்," ஹாய் !"என்று சொல்ல, ஒரே ஒரு இஞ்ச் இதழை நீட்டி புன்னகையை பரிசளித்து மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.


"ரொம்ப போர் அடிக்கும் போலவே ..."சத்தமாகவே முணுமுணுத்தான் எதிரே இருந்தவன்.


மறுபடியும் விழிதிறந்து பார்த்தவள் பாட்டில் லயித்துவிட்டாள்.


"சத்தியசோதனை..." என்றவனோ, தனது கைபேசியை எடுத்து பேசத் துவங்கி விட்டான்.


"ஏன் மாப்பு உனக்கு நான் என்ன துரோகம் செஞ்சேன்னு இப்படி ஒரு காரியத்தைப் பண்ண நீ?" என்று கேட்பது அவள் காதிலும் விழத்தான் செய்தது.


"*******"


"பின்ன என்னடா ஒரு நல்ல கம்பார்ட்மென்ட் கிடைக்கலை உனக்கு. எதிர்த்தாப்ள ஒரு மௌனவிரத கேஸு, சிரிக்க கூட காசு கேட்பாங்க போல... இந்தப் பக்கம் ஒரு தூங்குற பாட்டி , அந்தப் பக்கம் அவரு தூங்குறாரா இல்ல முழிச்சிருக்காரான்னே தெரியாத அளவுக்கு ஒரு ஆளு, இப்ப இதுல நான் என்னன்னு பயணம் பண்ண ?"என்றான் ஹிந்தியில்.


அவளுக்கு ஹிந்தி தெரியும் ஆதலால் அவன் பேசியது நன்றாகவேப் புரிந்தது.


அவனை நிமிர்ந்துப் பார்த்து முறைத்தாள்.


"ஏங்க ஹிந்தி தெரியுமா உங்களுக்கு.?" என்றவன் மறுபடியும் கைபேசியில் பேசத் துவங்கி விட்டான்.


'சாம்பார்ல போடுவாங்க பருப்பு
மவனே உன்மேல ஏகப்பட்ட வெறுப்பு
வைடா ஃபோனை என் கருப்பு '

என ரைமிங்கில் சொல்ல எதிரில் இருந்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.


"மச்சான் சிரிச்சுட்டாங்கடா!" மெல்லிய குரலில் கிசுகிசுத்தவன்," ஈஈஈ !" என இளித்து வைத்தான்.


மீண்டும் அவள் புன்னகை மறைந்து போனது.


"ம்ம்க்கும்" என்று முனகியவன் தன் பையிலிருந்த புத்தகத்தை வெளியே எடுத்தான்.


"மண்டை உடையாமல் சண்டை போடுவது எப்படி ?,ஆசிரியர் அக்மார்க் கணவன்" என்று சத்தமாக படித்திட ,அங்கிருந்த மூவருமே அவனைத்தான் பார்த்தார்கள்.


'என்ன இப்படி ஒரு தலைப்பா....?!'என்று விழிவிரிக்க

"ஹாஹாஹா நம்பிட்டீங்கள்ள..."என சிரித்தபடி," இது கதைபுக்கு இல்ல தமிழ் புக்கு. என் தமிழ் லடுக்கியை கரெக்ட் பண்ண போயிட்டு இருக்கேன். அட்சர சுத்தமா தமிழ் பேசினா தான் என்னைக் கட்டிப்பாளாம். அதான் ட்ரெயினிங் எடுக்கிறேன். இப்ப நான் தமிழ் நல்லா பேசுறேனா... போலோ மாதாஜி "என பாட்டியைப் பார்த்து கேட்க

அவரோ," வெளையாட்டுப்புள்ள !" என்று சிரித்தார்.


அவன் புத்தகத்தில் மூழ்கிவிட, எதிரில் இருந்தவள் தன் கைபேசி ஒளிர்வதை ஒரு விதமான எரிச்சலுடன் பார்த்திருந்தாள்.


கைபேசியை எடுத்தவள் சுத்தமாக ஆஃப் செய்து விட்டு கைப்பைக்குள் திணித்தாள்.


முகமே ஒரு மாதிரியாக சிவந்து போயிருந்தது.


அதை அவன் கவனித்தாலும், கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான்.


'பாவம் அதுக்கு என்ன பிரச்சனையோ? சோகத்த!' என்று முனகியபடி புத்தகத்தை தன் முகத்திற்கு நேராக பிடித்தபடி இருக்க, பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.


அடுத்த நிறுத்தம் வரவும், விரைந்து ஊறிக் கொண்டிருந்த ரயில் வண்டி தன் ஓட்டத்தை சற்றே நிதானப்படுத்தியது.

"இது எந்த ஊரு பாட்டி ?"என்று அவன் கேட்க

"பூதலூர்யா இப்ப எடுத்திருவாக. ரெண்டு நிமிஷந்தேன் நிக்கும். ஏன் ஏதாச்சும் வாங்கப் போவணுமா?" என்று அந்தப் பாட்டி கேட்க

"ஆமா பாட்டி அனுகுண்டு வாங்கலாம்னு நினைச்சேன்."என்று சிரிக்காமல் சொல்ல, மற்ற இருவரும் திகைத்துப் போய் பார்த்தனர்.


"அட முட்ட போண்டாவை சொன்னேன் பாட்டி. இதுக்கு எதுக்கு இந்த பெத்த ரியாக்ஷனு...?" என கலகலவென சிரித்த மாத்திரத்தில் எதிரில் இருந்தவள், காதில் இருந்த ஹெட்ஃபோனை கழற்றி விட்டு எழுந்து சென்றாள்.


'கடோத்கஜன் மாதிரி சிரிச்சுட்டோமோ பயந்து ஓடிட்டாங்க!' என்று முணுமுணுத்துக் கொண்டே," பெருமாளே ரொம்ப போரடிக்குது பெருமாளே...!" என்றான் சத்தமாக.


"ஓ பேரு என்ன சாமி?" என்று அந்தப் பாட்டி கேட்க


"ரமணா...!"என்றதோடு நிறுத்திக் கொண்டவனின் முழுப்பெயர் ரமணா ராத்தோர். அவனது தந்தை ரமணமகரிஷியின் மேல் கொண்ட பக்தியின் விளைவால் மகனுக்கு இப்பெயரை சூட்டியிருந்தார்.


பூதலூரில் இருந்து வண்டி நகர்ந்தது. ரமணா வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, பாவையவள் மீண்டும் உள்ளே நுழைந்தாள். முகம் கடுகடுவென இருந்தது.


'சிரிக்கவே தெரியாதோ?' என்ற ஆகப்பெரிய சந்தேகம் அவனுக்கு. அப்படித்தான் அவள் முகத்தை வைத்திருந்தாள்.


"ஏந்தாயி ஏன் இப்படி மொகத்தை வச்சிருக்கவ அழகா லட்சணமா இருக்க சிரிச்சா அம்புட்டு அம்சமா இருப்ப?!" என்று அந்தப் பாட்டி வெள்ளந்தியாய் வினவ


அவளோ," அதனால தான் சிரிக்கிறதில்லை."என்று கண்களை மூடிக் கொண்டாள்.அவளின் விநோதமான பதிலில் துணுக்குற்று பார்த்தவர்களோ, நொடியில் இயல்பாகி தங்கள் வேலைகளில் கவனமாகினர்.


இதோ அதோவென தஞ்சை ரயில்நிலையத்தில் கீறிச்சிடும் சப்தத்துடன் வந்து நின்றது ரயில் வண்டி.


மாலை மங்கிய நேரம் அடிவானம் ஆஞ்சநேய பக்தரின் நெற்றியில் பட்டையாய் குடி கொண்டிருக்கும் செந்தூரத்தைப் போல சிவந்திருந்தது.


"ப்பா...! பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்குடா ரமணா. செந்தூரா தூரா....ஆஆஆஆ சேர்ந்தே செல்வோம் செந்தூரா" என்று பாடியவன்," இப்புடி ஒரு புள்ள நம்ம லைஃப் ல என்னைக்குப் பாடப்போகுதோ?" என்றான் முனகலாக.

"டோன்ட் கால் மீ செந்தூரா!" என சத்தமாக பேசியபடி அவளிறங்க

ரமணாவோ," பாடிருச்சா?"என்று சொல்லிக் கொண்டு திரும்ப,


அவள் கைபேசியில் யாரையோ கத்திக் கொண்டே சென்றாள்.


"ஓஓஓ மேடம் பேரு செந்தூராவா...?! பேருக்கேத்த மாதிரி தான் போல பேச்சும் கோபச் செந்தூரம் மணக்குது. எவன் சிக்கி சின்னாபின்னமாகுறானோ "என்றபடி பெட்டியை இழுத்துக் கொண்டு நகர்ந்தான் ப்ளாட்பாரத்திற்கு.


"டேய் மச்சான் ரம்மு...!" என பாய்ந்து ஒருவன் கட்டிக் கொண்டான் ரமணாவை.


"ஜின்னு... எவ்வளவு நாள் ஆச்சுடா மச்சி உன்னைப் பார்த்து?" என ரமணாவும் அங்கேயே அவனைக் கட்டிக் கொண்டு குதிக்க


"பேரைப்பாரு ரம்மு, ஜின்னு னு அடச்சீ வீட்டுக்குப் போய் கட்டிப்புடிச்சு உருளுங்க" என இருவரையும் பிரித்து விட்டான் அருகில் இருந்தவன்.


"டேய் பீரு ! எப்படி மச்சி இருக்க?, நீ ஏன்டா இந்த நேரத்துல வந்த?" என்று அவனையும் பாய்ந்து கட்டிக் கொள்ள


"அடேய் அலப்பறை பண்ணாம வாங்கடா, நெறைய வேலை கெடக்கு "என்றான் பீர் என்று ரமணாவால் அழைக்கப்பட்ட பீர்முகமது.


முன்னேக் கட்டிக் கொண்டவன் ப்ரஜின். ஆனால் இவர்கள் அழைப்பதோ ஜின்னு என்று. பேரில் மட்டும் தான் மது உண்டு. நிஜத்தில் அக்மார்க் நல்லப்பையன்கள். எந்தவித கெட்டப்பழக்கத்தையும் கற்றுக் கொள்ளாத வாலிபர்கள். மூவரும் தஞ்சையில் உள்ள பிரபலக் கல்லூரியில் படித்த ஒரே வகுப்புத் தோழர்கள்.


"அப்புறம் மச்சான் வேலை எல்லாம் எப்படி போகுது புடிச்சிருக்கா...? செட்டில் ஆகிட்டியா ?" ப்ரஜின் ரமணாவின் தோள்மீது கைபோட்டு அணைத்தபடி அழைத்துச் சென்றான்.


"என்னத்த புடிச்சு என்ன செய்ய.? அடபோடா... நானெல்லாம் எங்க எப்படி இருந்திருக்க வேண்டியவன். ஹ்ம்ம் எங்கப்பா மசாலா கம்பெனிக்குள்ள போட்டுக் கொல்லுறாரு."என்றான் அலுப்பாக.


"ஏன்டா சொந்தத் தொழிலை பார்க்க இவ்வளவு அலுத்துக்கிற. கம்பெனியை வளர்த்து லட்டு மாதிரி தூக்கிக் குடுத்திருக்கார், அதைப் பார்த்துட்டு ஜாலியா இருக்காம நீ என்னடான்னா சலிச்சுக்கிற" என்றான் பீர்.


"ஆமா தூக்கிக் குடுத்தாரு. அடபோடா!" என்றவன்," சரி அதை விடுங்க வீட்டு நினைப்பு வந்திடக் கூடாதுனு தான் இங்க வந்தேன். அதை எல்லாம் ஞாபகப்படுத்தாத. "என்றவன்


"அப்புறம் பீரு என்னடா பொசுக்குனு கல்யாணத்தை வச்சுட்ட. ரெண்டு மூணு வருஷம் வேலைக்குப் போயிட்டு பண்ணிப்பனு நினைச்சேன்." என்று அவனைக் கேட்க"வா வா சொல்றேன். எனக்கு மட்டும் ஆசையா என்ன...? சூழ்நிலை அப்படி ஆகிப் போச்சு. அத்தா இப்பவே நிக்காஹ் வச்சாகணும்னு சொல்லிட்டாரு."என்றான்


"ஆமா பொண்ணு யாருடா... நீதான் கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்த... சரி பண்ற வரைக்கும் நல்லது தான்." என்று ரமணா சொல்ல


"நீயே தெரிஞ்சுக்குவ !"என்றவன் அமைதியாக இருக்க ரமணா ப்ரஜினைப் பார்த்தான்.


அவனோ உதடுபிதுக்கி கண்களை அமர்த்தினான்,' எதுவும் பேசாதே !'என்று.


பேசிக் கொண்டே சென்றதில் வீடு வந்துவிட்டது.


"ம்மா...!"என வாசலிலேயே கூவிக் கொண்டு சென்றான் பீர்.


"வாடா உன்னை அத்தா தேடினாரு. சொல்லிட்டு போக மாட்டியா நீ?" என்றவர் பின்னாடி வந்த ரமணாவைக் கண்டு


"ஹேய் ரமணா... வா வா.. நல்லா இருக்கியா பார்த்து ரெண்டு வருஷம் ஆச்சுல்ல. வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா!?" என்று வந்தவனை கைப்பிடித்துக் கொண்டார்.


"நல்லாருக்கேன் மா... நீங்க ஏன் எளைச்சு போயிட்டீங்க. ஒழுங்கா சாப்பிடுறதில்லையா?" என்று கேட்க


"வயசாகுதுல்ல அம்மாக்கு" என்றவர்," நீ மொதல்ல சாப்பிடு வா... ப்ரஜி ரூமுக்கு கூட்டிட்டுப் போ இதோ எடுத்து வைக்கிறேன்." என்றபடி சமையற்கட்டிற்குள் சென்றார்.


"ப்ரெஷ் ஆகிட்டு வாங்கடா. அத்தாவை பார்த்துட்டு வர்றேன்."என்றபடி பீர் சென்றுவிட ப்ரஜினைப் பிடித்துக் கொண்டான் ரமணா."என்னாச்சு மச்சி ஏன் அவன் முகமே சரியில்லை.? என்ன ஏதாவது பிரச்சினையா... ?"என்று கேட்க


"ப்ப்ச் பிரச்னை எல்லாம் இல்லடா. நபீஷா தங்கச்சி தான்டா பொண்ணு "என்று சொல்ல, ரமணா திடுக்கிட்டான்."யாரு மெஹ்ரினா...?"என்றதும்," ஆமாம்" என்று தலையாட்ட


"என்னடா இது. மெஹ்ரின் எப்படி ஒத்துக்கிட்டா?"


"அவ தான் பீரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதே, அதான் இவனுக்கு கோபம்."என்று சொல்ல


"லூசாடா அவ... அக்காவை லவ் பண்ணி இருக்கான். இவளே தூது போயிருக்கா இப்ப வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நிற்கிறா" என்று கோபமாக ரமணா பேச


"ரமணா பாய் !"என்ற அழைப்பில் திரும்ப, மெஹ்ரின் சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.


அவளை முறைத்தவன்," என்ன இதெல்லாம்?" என்று முறைக்க


"நிக்காஹ் தான் பாய் உங்க ஃப்ரெண்டுக்கு வாழ்க்கை தரலாம்னு" என்றாள் அவன் முறைப்பைக் கண்டு கொள்ளாமல்.


"உனக்கும் அவனுக்கும் பத்து வருஷம் வித்தியாசம் மெஹ்ரின் இப்பதான் உனக்கு பதினெட்டு வயசு" என திட்ட


"இருக்கட்டும் பாய். எங்கம்மாக்கும், அத்தாக்கும் பதினைஞ்சு வருஷ வித்தியாசம் தெரியுமா?" என்றாள்."ப்ப்ச் மெஹ்ரின் எல்லாத்திலும் விளையாட்டா உனக்கு. அவன் உங்கக்காவை..." எனும்போதே இடைநிறுத்தியவள்," தெரியும் பாய். உங்க ஃப்ரெண்டுக்கு தூது போனவளே நான்தான். எனக்குத் தெரியாதா...?அக்கா ஒரு சுயநலவாதி பாய் துபாய் மாப்ளைன்னதும் அந்தப் பக்கம் சாஞ்சுட்டா. இந்த நிக்காஹ் செய்யக்கூடாதுனு அவ்வளவு சண்டை போட்டா. உங்க ஃப்ரெண்டு வேற கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைனு சொல்லிட்டு அலையிறாரு, வீட்டுக்கு ஒரே பையன் மாமி மனசு என்ன பாடுபடும்.? சரி இதெல்லாம் அப்புறம் பேசுவோம், இங்க வந்தேன்னு தெரிஞ்சா அம்மா திட்டும். நான் அப்புறம் சொல்றேன் பாய். கவலைப்படாதீங்க உங்க ஃப்ரெண்டை கண்ணுகலங்காம பாத்துக்கறேன். ரைத்தாவுக்கு வெங்காயம் கூட வெட்டவிடமாட்டேன்." என்று சொல்லிக் கொண்டே ஓடினாள்.ரமணாவோ ஓடும் அவளையேப் பார்த்தவன் ,"இன்னும் குறும்புத்தனமாவே இருக்கா. எப்படி சமாளிப்பான் அவன்.? பரிதாபப்பட்டு கட்டிக்கிறாளோனு இருக்குதுடா." என்றான் கவலையாக.


"அவனும் அதையேதான்டா சொல்றான். இது பரிதாபம் இது நிலைக்காதுனு பேசுறான். புலம்பித் தள்ளிட்டான். ஆனா எனக்கென்னவோ நபீஷாவை விட மெஹ்ரின் தான் இவனுக்கு பொருத்தம்னு தோணுது."என்ற ப்ரஜின்,

" கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுடா நான் மத்த பசங்களையும் அழைச்சுட்டு வந்திடுறேன்." என்று அவன் வெளியேறினான்.


ரமணா கண்கள் மூடிட ,ரயிலில் சந்தித்த அவள் விழிகளை நிரப்பினாள் சோகமான முகத்துடன்.சட்டென்று விழிகளை திறந்தவன்,' என்ன சிம்ரன் இதெல்லாம்... நாலு மணிநேர ட்ராவல்ல பார்த்தவங்க எல்லாம் கண்ணை மூடினா ஞாபகத்துக்கு வர்றாங்க உங்களை நான் அப்படி வளர்க்கலையே சிம்ரன். என்ன இதெல்லாம்?!' என்று தன் மனதைக் கேட்டுக் கொண்டான்.


மீண்டும் கண்களை மூட மறுபடியும் அவளின் நிழல்.


"ஸ்ஸ்ஸப்பா செவசெவனு தெரியிறா செந்தூரம்
நேர்ல போய் நின்னா கேப்பா பச்சை பச்சையா" என்று அவளது முகத்தை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்தவன், தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.


அவனின் நினைவின் நாயகியோ எதிரில் நின்றிருந்தவனை செக்கச்சிவந்த விழிகளுடன் முறைத்து நின்றாள்.


...... தொடரும்.


Thread 'அந்திவானச் செந்தூரமே கருத்துத்திரி' https://www.narumugainovels.com/threads/10940/
 
பகுதி -02"ஒண்ணு இந்திரன்னு வையி, இல்ல எந்திரன்னு வையி, நம்ம தலைவர் படம் அதனால அனுமதி தர்றேன். இதென்ன பேரு அந்திரன்...?அப்படின்னா என்ன ஆந்திரா முதல்வரா?" என ஏகத்திற்கும் நக்கலடித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.எதிரே இருந்தவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க,"இன்னா லுக்கு ஆளைப் பாரு. கண்ணைப் பாரேன் ஹாலிவுட் ஹீரோ மாதிரி. இதென்னய்யா புளூ கலர்ல கண்ணு, பதில் பேசுய்யா ஏ டொமேட்டோ?!" என்று கேட்டுக் கொண்டிருக்க


இன்னொருத்தியோ," நீ மட்டும் அவர் எதித்தாப்ள நின்னு பேசியிருக்கணும். அப்ப தெரிச்சிருக்கும் பல்லு. ஃபோட்டோவுல இருக்க மனுசனை என்ன ஓட்டு ஓட்டுற...? அடியேய் மசாலாக் கம்பெனி ஓனருடி, கண்ணு கடல் நீலத்துல இருக்குனு நினைச்சிடாத, அவரு கண்ணுல காரத்தோட இருப்பாரு, மகனே சிக்குன சிக்கன் சிக்ஸ்டிஃபைவ் மசாலா டின்னுல அடைச்சு வித்துடுவாரு உன்னை."என்றாள்.


"யாரு...? இவரு...! ஆளைப் பார்த்தா அப்புராணியாத் தெரியிறாரு.. இவரு அப்படி எல்லாம் செய்ய மாட்டாரு, என்னங்க ஓனர் ?"என்று புகைப்படத்தைப் பார்த்து பல்லைக் காட்டினாள்.


"யாரு அவர் அப்புராணியா...? அது அப்பிராணி இல்லடி என் சாம்பிராணி. அது ஒரு அர்னால்ட். கோட்டுப் போட்ட கொழந்தையாட்டமா மூஞ்சி வச்சிருக்கார்னு தப்பா நினைச்சிடாத."என்றாள் பதிலுக்கு."அதென்னடி ஓவரா பில்டப் தர்ற... அவர் மசாலா கம்பெனி ஓனர்னா பயந்துடுவாங்களா...?" என்றாள் அவள்.


"நீ பயப்படவே வேணாம் தாயே...! இப்ப கிளம்பு நேரம் ஆகிடுச்சு. சார் ரவுண்ட்ஸ் வந்தா டப்பா டான்ஸ் ஆடிடும்" என்று வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்றாள் அவளை.


"ஏன்டி நதி உனக்கு அவர் மேல இவ்வளவு கோவம் ?"

"பின்ன என்னடி... என்னைப் பாரு, என் அழகைப்பாருனு அவர் மட்டும் கோட் சூட் போட்டு நின்னா போதுமா... ஒர்க்கர்ஸும் நல்லா இருக்கணும்னு நினைக்க வேண்டாம். ஒர்க்கர்ஸ் நல்லா இருந்தா தானே அவர் கம்பெனி ப்ரொடக்ஷனும் கெய்ன் ஆகும், அது புரியாம சும்மா ஒர்க்கர்ஸ் வேலை பார்க்கிறது பத்தலை அதுஇதுனு சொன்னா எரிச்சல் வருமா வராதா?" என்றாள் கடுமையான குரலில்.


"நீ வந்தே ஆறு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள இவ்வளவு கோபம், சலிப்பா...?"என்றவளை ஆழ்ந்து பார்த்தவள்


"எத்தனை நாள் இருக்கிறோம்ங்கிறது முக்கியம் இல்லை, நம்ம வேலையில் நிறைவா இருந்தோமான்றது தான் முக்கியம்." என டயலாக் பேசியவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு


"வசனம் பேசுறதை விட்டுட்டு வறுத்த மசாலா வந்திடுச்சானு பாரு. மெசின்ல கொட்டணும். இல்ல நம்மளை கொட்டிடுவாங்க" என்றாள் அவள்.


"மசாலாக்கு தேவை மிளகா !
இப்பவே வரேன்டி என் திலகா!!"


என எதுகை மோனை பேசியபடி நகர்ந்தாள்.


'அடங்க மாட்டேங்கிறாளே இவ... ஆனா இவ கூட இருந்தா பொழுது நல்லா போகுது. 'என்று முனகியபடி திலகவதி வேலையை கவனிக்க


நதியா சுற்றும் முற்றும் பார்த்தபடி, வறுத்த மசாலா அடங்கிய கன்டெய்னரை இழுத்து வந்தாள்.


"வறுத்ததே இவ்வளவு வாசனைனா, மசாலா சும்மா தூக்கலா இருக்கும் போலவே "என்று சொல்லிக் கொண்டே நகர, அங்கே ஒருவன் ஏதோ ஒன்றை மசாலா அரைக்கும் மெசினில் கொட்டச் சென்றான்.


"ஏய் ஏய் நில்லு என்னத்தைக் கொட்டுற?" என்று அவனிடம் ஓட


"ஏய் யார்டி நீ ?, அடச்சீ கையை விடு." என அவன் ஏளனத்துடன் கையை உதற


"ம்ம்ம் உங்க ஆத்தா. மவனே டீ போட்ட கழுத்தை சேர்த்து நாலு வச்சிடுவேன். என்னத்தடா கொட்டுற அதுல?" என்று அவன் கீழே வைத்த பாத்திரத்தை பார்க்க , அதில் கட்டி பெருங்காயம், வறுக்காத மல்லி, மிளகாய் இருந்தது.


"இது வறுக்கவே இல்லை. இதை எதுக்கு கொட்டுற... இன்கீரிடியன்ஸ்ல இது கிடையாதே நீ என்ன செய்யிற ?"என்று அதட்ட


"அதைப் பத்தி உனக்கென்ன தேவை, போய் உன் வேலையைப் பாரு, வந்துட்டா பெருசா வியாக்கியானம் பேசிகிட்டு"என்றவன் மீண்டும் அந்த டப்பாவை கையில் எடுக்க ,அவள் தட்டிவிட்ட வேகத்தில் அங்கே சிதறிவிட்டது அனைத்துப் பொருட்களும். மெஷின் ஓடிய சத்தத்தில் ஒருவருக்கும் இந்த சத்தம் கேட்கவில்லை.


ஃபேக்டரியை சுற்றிப் பார்க்க வந்த அந்திரன், தனது அலுவலக அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் நடப்பதை கவனித்து வேகமாக வந்திருந்தான்.


அவன் அப்படி ஓடி வரவும் பயந்து போன பணியாளர்கள் அவன் பின்னே வர, திரும்பி ஒரு பார்வை பார்த்து," போய் வேலையைப் பாருங்க." என்றான் கடுமையாக.


"எவ எவனெல்லாம் மாட்டப் போறானுகளோ?" என முனகியபடி அவர்கள் கலைந்து விட்டனர்.வந்த வேகத்தில் நதியிடம் வம்பு செய்தவனை இழுத்து வைத்திருந்தான் ஒரு அறை.


"சார் அந்தப் பொண்ணு தான்." என்று இழுக்க அந்திரன் கோபத்தில் கீழே கிடந்தவனை ஒற்றைக் கையால் தூக்கி அந்தரத்தில் நிறுத்தியவன்," ஹான்... ஹான் கேட்கலை இப்போ பேசு...! என்னது அந்த.." என்று எடுத்துக் கொடுக்க


"அந்தப் பொண்ணு..." என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. எங்கிருந்து வரும் கழுத்தைத் தான் அந்திரன் நெருக்கிப் பிடித்திருந்தானே...!


அப்படியே அவள் பின்னால் பார்த்தவன்," ஷாலை எடுத்துப் போடு."என்றான் கர்ஜனையாக.அப்போது தான் மேலே துப்பட்டா இல்லாததையே கவனித்தாள் நதியா. சட்டென எடுத்து அணிந்து கொண்டவள்,"வறுக்காத மசாலாக்களை போய் ஓடுற மெசின்ல கொட்டப் போனான் தட்டிவிட்டேன், அடிக்க வர்றான். அதான் குனிய வச்சு நாலு மிதி மிதிச்சிட்டேன்." என்றாள் அறிவிப்பாக.


அந்திரனுக்கு சிரிப்பு இதழில் இழையோடினாலும், அதைக் காட்டாமல் ,"இன்னும் அடிக்கணுமா?" என்று கேட்க


மேலே தேமே என்று தொங்கியவனுக்கோ ,' இன்னும் முடியலையா !' என்றிருந்தது.


"இல்ல கை வலிக்குது சார், ரெண்டு மணிநேரம் கழிச்சு அடிச்சுக்கிறேன்."என்றாள் மீண்டும்.


"சரி போங்க வேலையை பாருங்க" என்றவன் சுற்றி நின்ற ஆண்களைக் கண்டு தூக்கிப் பிடித்திருந்தவனை அப்படியே விட்டான்.


அவன் பொத்தென்று தரையில் விழ, வலித்ததில் கத்தியே விட்டான்.


"சூப்பர்வைஸர் எங்கே...? இதை எல்லாம் கவனிக்கிறதில்லையா ? இல்ல நீங்களும் இதுக்கு உடந்தையா...? பேக்டரில சுத்திவர சிசிடிவி இருக்கு. அப்பவே இந்த தில்லாலங்கடி பண்றிங்களா?, ஒருத்தன் விடாம வேலையை விட்டுத் தூக்கிடுவேன்." என எச்சரித்தவன்," இவனைத் தூக்கி ஸ்டோர் ரூம்ல போடு, வந்து வைக்கிறேன் கச்சேரி" என்று பல்லைக் கடித்துவிட்டுச் செல்ல, நதியா திலகவதியுடன் நின்றிருந்தாள்.


ஒரு விரலை மட்டும் நீட்டி," இங்கே வா!" என அழைக்க நதியா மெதுவாய் நடந்து வந்தாள்.


"உன் பேரென்ன?"என்று கேட்கவும் சட்டென நிமிர்ந்து பார்த்துவிட்டு," நதியா !"என்றாள் இறுக்கத்துடன்.


"வெல் குட்ஜாப் ."என்று பாராட்டிவிட்டு," நீ கேட்ட டூ ஹவர் ரெஸ்ட் எடுத்துட்டு வேலையை கவனி" என்றபடி போய்விட்டான்.


"ஏய் நதி... சூப்பர் டி !"என திலகா பாராட்ட


சட்டென்று முகத்தை மாற்றியவளோ "அட அதெல்லாம் இல்ல. எங்க வீட்டுலயும் இந்த மசாலா தான் யூஸ் பண்றாங்க. இந்த நாய் பாட்டுக்கு மசாலாவை மாத்திப் போட்டுட்டா யார் பேதியில கஷ்டப்படுறது, அதான் தட்டிவிட்டேன். ஆனாலும் இந்த எந்திரன் கொஞ்சம் பாடிபில்டர் தான். அவர் பேர் என்ன சொன்ன?" என கேட்க


"எவர் பேரு...?" திலகா முழிக்க


"அதான்டி காலையில் சொன்னீயே ரெனால்டா டொனால்டா..?!" என யோசிக்க

"அது அர்னால்ட் டி !"என்றாள் அவள்.


"ஹான் ! அவரே தான்... அவரை மாதிரி இல்லாட்டியும் அவரோட மினியேச்சர் மாதிரி தான் இருக்காரு. அர்னால்ட் அந்திரன் எப்படி நம்ம வச்ச பேரு?" என்று காலரை தூக்கி விடுவது போல கேட்க"யம்மாடி நீ வாடி போகலாம். உனக்குத் தான் ரெஸ்டு எங்களுக்கு இல்ல" என்றபடி அவள் போய்விட்டாள்.


"என்னைக் கூப்பிட்டுட்டு அவமட்டும் போறா..." என முனகியபடி செல்ல, அந்திரன் அங்கே தவறு செய்தவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தான்."துப்பட்டா... துப்பட்டாவை கிழிக்கிற நீ... ஹான்...! கை கையிருந்தா தானே கிழிப்ப அந்த மெசின்ல விட்டு கையிரெண்டையும் வெட்டி எடுங்க" என்று அரற்ற


"தீரன் காம்டவுன்."என்ற குரலில் சற்று தெளிந்தான் அவன்.


"வானு இவன்...." எனும் போதே," இருக்கட்டும் நான் பார்த்துக்கிறேன்." என்ற அந்த கடினக்குரலில் அடிவாங்கி மயங்கி இருந்தவனுக்கு மேலும் திகில் கிளம்பியது."பேச்சு பேச்சா இருக்கும்போது பொண்ணு மேல கைவைக்கிற... ஹான் தப்பு இல்லையா...? தப்புக்கு தண்டனை தரணுமே, வெல் என்ன தரலாம்?" என யோசித்தவள்," போலீஸ்ல புடிச்சுத் தர்றது, அப்புறம் கொலை பண்றது, ஆக்ஸிடன்ட் பண்றது இதெல்லாம் எனக்கு செட் ஆகாது. வேற என்ன செய்யலாம்?" என அந்திரனையே கேட்க


"வானு தான் டிஃபரன்டா யோசிப்பீங்களே செஞ்சிடுங்க" என்றான் புன்னகையாக.


"மிளகாயை வறுக்காம கலக்கப் போனியாமே..."என்றபடி," அப்போ மிளகா
காய வச்சிருக்க இடத்துக்கு மேல தலைகீழா கட்டித் தொங்க விடுங்க ரெண்டு நாள் போதும் "என்றாள் அசட்டையாக.


"மேடம் !"என அந்த வலியிலும் அலறியவனை முறைத்தபடி" மிளகாயிலேயே உருட்டி இருப்பேன். உன் நல்ல நேரம் எனக்கு இப்போ கோபமில்லை , அதனால தப்பிச்ச" என்றாள் விழிகளை உருட்டி.


"சரி நீ போ நான் பார்த்துக்கிறேன்" என்று அந்திரன் அவளை அனுப்ப முயல

"இன்னும் நாலு சூப்பர்வைசர் நம்பிக்கையானவங்களா பார்த்துப் போடுங்க." என்றபடி வெளியேறினாள்.

"சார் இவங்க...!"என்று அடிவாங்கியவன் அஞ்சிட


"மூச், எங்கேயாவது வாயைத் திறந்த, அவ்வளவு தான் ."என்றான் விரல் நீட்டி எச்சரித்து.


வெளியே இருந்த செக்யூரிட்டியை அழைத்து அவனை தலைகீழாக தொங்க விடும்படி சொல்லி விட்டு மீண்டும் ஃபேக்டரிக்கே வந்தான்.மேனேஜரோ," சார் இது கொஞ்சம் அதிகமா தெரியுது" என்றார் பவ்யமாக.


"எனக்கும் அந்தப் பொண்ணு துப்பட்டாவை பிடிச்சு கிழிச்செறிந்தது அதிகமா தெரியுதே...?என்ன செய்யலாம்?" என கேட்க கப்பென வாயை மூடிக் கொண்டார் அவர்.


"ஒரு பொண்ணை பலவீனப்படுத்தனும்னா உடனே அவளை மானபங்கப்படுத்திடணும். அதானே உங்க தாட்ஸ் எல்லாம்." என வார்த்தைகளை கடித்துத் துப்பியவன், அங்கு வேலை செய்த பெண்களைப் பார்த்து ,"எவனாவது வம்பு பண்ணா அழுதுட்டு மறைக்கக் கூடாது. தூக்கிப் போட்டு மிதி, வர்றதைப் பார்த்துக்கலாம் "என்று விட அனைவரும் ,"சரிங்க சார்."என்று தலையாட்டினர்.அந்திரன் ஏவிஆர் மசாலா எனும் நிறுவனத்தின் ஏகபோக வாரிசு. சமீபகாலமாக மசாலாவின் தரம் குறைந்துவிட்டதாக பொதுமக்களிடையே வதந்தி நிலவியது. அந்திரனுக்குமே அந்த யோசனை இருந்தது. ஏனெனில் அவன் வீட்டிலுமே அவர்களின் மசாலாக்கள் தான் பயன்படுத்தி வந்தனர். தொழில் சற்று நசிவடைய வெளியில் இருந்த மகனை வரவழைத்தார் வேணுகோபாலன்.


"எப்படிப்பா இத்தனை வருஷம் சரியா இருந்த தரம் சமீபமா சரியில்லாம போகும்?" என்று குழப்பமாக கேட்க


"சமீபத்தில் தானேப்பா பார்ட்னர்ஷிப் உடைஞ்சது." என்று வேணுகோபாலன் சொல்ல, அந்திரன் யோசனையானான்."சரிப்பா நான் இனி பார்த்துக்கிறேன்." என்று நியூயார்க்கிலிருந்து திரும்பி வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.


ஏவிஆர் மசாலாஸ் வேணுகோபாலன் மட்டும் உருவாக்கியதில்லை. அவருடைய நண்பர் அக்ஷதீப்புடன் துவங்கியது. முப்பது வருடங்களாக இருவரும் இணைந்தே தொழிலில் முன்னேற்றம் கண்டனர். ஆனால் இடையில் வந்த சிறுமனத்தாங்கல் இருவரின் நட்பையே உடைத்திருந்தது.


ஏவிஆர் மசாலாஸ் இரண்டாக பிளவுபட்டு ஏவிஆர் என்ற பெயரை வழக்கு போட்டு வேணுகோபாலன் கைப்பற்றி கொள்ள, அக்ஷதீப் ஏஆர் ஸ்பைசஸ் என துவங்கி இனி தமிழ்நாட்டில் காலை வைக்க மாட்டேன் என்று சபதமெடுத்து தொழிலை தன் மாநிலத்தில் அடித்தளம் போட்டுக் கொண்டார்.

..... தொடரும்.
 

Advi

Well-known member
இந்த தீப் ரமணா அப்பா வா?????

அவரும் மசாலா கம்பனி தானே வெச்சி இருக்கார்....

தீரன் - நதி & ரமணா - செந்துரா தான் ஜோடியா????

இந்த வானு யாரு.?????
 
இந்த தீப் ரமணா அப்பா வா?????

அவரும் மசாலா கம்பனி தானே வெச்சி இருக்கார்....

தீரன் - நதி & ரமணா - செந்துரா தான் ஜோடியா????

இந்த வானு யாரு.?????
Thanks ma சீக்கிரம் சொல்கிறேன் 🥰🥰🥰
 
அசத்தலா அதிரடியா கதையை கொண்டு போறீங்க!!... நதி எதுக்கு பெயர் கேட்டதும் இறுக்கமாகனும்???... இன்ட்ரஸ்டிங்!!...
நன்றி மா சீக்கிரம் சொல்கிறேன்💐💐💐😍😍
 

Mathykarthy

Well-known member
Interesting start 🤩🤩🤩

ரமணா செம க்யூட்... 🥰 ஜாலியா குறும்பு பண்ணிட்டு இருக்கான்....

ரம்ஸ் பீர் ஜின்னு 🤣🤣🤣🤣 நல்லா சேர்ந்தானுங்க நட்புன்னு...
மெஹ்ரின் சூப்பர்... பரிதாபமோ என்னவோ உன்னை வேணாம்னு சொன்னவளை விட உனக்காக வர்றவளை ஏத்துக்கோ பீர்....

செந்தூரா ஏன் இவ்ளோ சோகம் அழுத்தம்.... 😔

அந்திரன் சூப்பர்..
ரமணா அப்பான்னு தான் தோணுது.... நதி செம bold... பேச்சு செயல் எல்லாம் அப்படியே ரமணா போல கலகலன்னு... ஏன் அந்திரன் மேல வெறுப்பு..🤔
 
Interesting start 🤩🤩🤩

ரமணா செம க்யூட்... 🥰 ஜாலியா குறும்பு பண்ணிட்டு இருக்கான்....

ரம்ஸ் பீர் ஜின்னு 🤣🤣🤣🤣 நல்லா சேர்ந்தானுங்க நட்புன்னு...
மெஹ்ரின் சூப்பர்... பரிதாபமோ என்னவோ உன்னை வேணாம்னு சொன்னவளை விட உனக்காக வர்றவளை ஏத்துக்கோ பீர்....

செந்தூரா ஏன் இவ்ளோ சோகம் அழுத்தம்.... 😔

அந்திரன் சூப்பர்..
ரமணா அப்பான்னு தான் தோணுது.... நதி செம bold... பேச்சு செயல் எல்லாம் அப்படியே ரமணா போல கலகலன்னு... ஏன் அந்திரன் மேல வெறுப்பு..🤔
மிக்க மகிழ்ச்சி மா அழகான விமர்சனம் சீக்கிரம் சொல்கிறேன் மா 💐💐💐💐🤩🤩🤩
 
அந்திவானம் -03


ரமணா தன் தோழனின் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் தன் ஊருக்குப் பயணமானான்.


'போகும்போதாவது எதிர்த்தாப்ள ஒரு ஃபிகர் இருந்தது. இப்ப அதுவும் இல்ல. யார் கிட்ட மாட்டக் கூடாதுனு நினைச்சோமோ அந்த மனுஷன் கிட்டவே மாட்டுறது எல்லாம் விதினு சொல்றதா இல்ல எங்கப்பன் செஞ்ச சதினு சொல்றதா...?' என தன் விதியை நொந்தபடி காரில் பயணம் செய்து கொண்டிருந்தான்.


டிரைவர் வேறு ," சோட்டே மாலிக் குச் ச்சையே? (சின்ன முதலாளி ஏதாவது வேணுமா?)" என அடிக்கடி கேட்டுக் கொண்டான்."நிம்மதி வேணும்டா, எங்கேயாவது இருந்தா ஒரு கிலோ இல்ல இல்ல மொத்தமா பார்சல் பண்ணி வாங்கிட்டு வா" என்றான் தமிழில்.


"சோட்டே மாலிக் ஆப் க்யா போல்ரஹிஹே சமஜ் நஹி ஆத்தி ஹே! (சின்ன முதலாளி என்ன சொல்றீங்க புரியல)" தலையை சொறிந்தபடி கேட்க


"ஆத்துனா மட்டும், வாங்கியாத் தரப் போற" என முனகியபடி ,"குச் நஹி பாய்ஷா. காடி ச்சல்லாயியே(ஒண்ணுமில்ல வண்டியை ஓட்டுங்க)" என்றான் முகத்தை நிர்மலமாக வைத்துக் கொண்டு.


அதற்குள் கைபேசி அழைத்திடவே,'செத்தான்டா சேகரு. ஒட்டகப்பாலை மூஞ்சி மேலயே ஊத்தப் போறாய்ங்க' என முணுமுணுத்துக் கொண்டே ,"ஹம்மா ஹனி பாபாஷா!" என்றான் பவ்யமாக.


"ஹனி ஹம்மா... ஹ்ஹப் ஆவோஹீ? (எப்ப வருவீங்க?)"என்ற குரலிலேயே புரிந்து போனது அவனுக்கு. இன்று செமத்தியாக உண்டென.


"பஸ், தஸ் ஹண்டே கி பாத்,( இன்னும் பத்து மணி நேரத்தில்) "என்றவனுக்கு,' நேரமே ஓடக்கூடாது கிருஷ்ணா !'என்று வேண்டிக் கொள்ளதான் தோன்றியது.


"டீஹே. ஆஜாயியே ஃபிர்(சரி...வாங்க அப்புறம்) " என்றதுமே அவனுக்குள் திகில் கிளம்பியது.


"பாபாஷா!" எனும் போதே இணைப்பைத் துண்டித்திருந்தார் அவர்.


விஜய் நடிச்ச படம் பிகிலு
எனக்கு இப்பவே கிளம்புதுடா திகிலு

ரமணா ராத்தோர். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் தான் சொந்த ஊர். உதய்ப்பூர் அரண்மனையில் சமையலராக இவனது முன் தலைமுறையினர் வேலை செய்துள்ளனர். சமையற்கலையில் சிறந்து விளங்கியவர்கள், பின்னாளில் மசாலாக்களின் ராஜாக்களாக திகழ்ந்தனர். தன் முன்னோர்களின் தொழிலை முன்னெடுத்த ரமணாவின் தந்தை அக்ஷதீப் தனது மாநிலம் மட்டுமல்லாது தமிழ்நாடு கேரளா, ஆந்திரா என பல்வேறு மாநிலத்தில் தன் கம்பெனியை நிறுவ எண்ணம் கொண்டு முனைப்புடன் செயல்பட்டார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அக்ஷதீப்பை அன்புக்கரங்களால் தாங்கிக் கொண்டது. தமிழகத்தில் தான் அவருக்கு ஆழ்ந்த நட்பும் கிடைத்தது. மற்ற மாநிலங்களில் தன் சகோதரர்களை தொழில் செய்ய வைத்தவர் தமிழகத்தில் தன் ஜாகையை மாற்றிக் கொண்டார். முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் இருந்தவர் தற்போது தான் உதய்ப்பூருக்கு சென்றுவிட்டார்.


அக்ஷதீப் -சமிக்ஷா தம்பதியின் முதல் மகன் தான் ரமணா. அவனுக்கு அடுத்து ஒரு மகள் சுரேகா மட்டுமே. மகன், மகள் இருவரும் பிறந்து வளர்ந்தது அனைத்தும் சிங்காரச் சென்னையில் தான். அதில் ரமணா மட்டும் தஞ்சை மண்ணின் மீது மோகம் கொண்டு தன் படிப்பை அங்கு தொடர்ந்தான். அப்போது கிடைத்த நண்பர்கள் தான் பீர்முகமது, ப்ரஜின் இருவரும். குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் மசாலா தொழிலில் மோகமென்றால் ரமணாவிற்கு மனமெல்லாம் உயிரியியல் துறையில் நிலைகொண்டது. மகனின் ஆசையை மறுக்காமல் அவன் கேட்ட படிப்பிலேயே சேர்த்துவிட்டார் அக்ஷதீப். மகனின் ஆசையெல்லாம் நிறைவேற்றியவருக்கு இன்று அவனது இந்த செயலை ஏற்கவே முடியவில்லை.யோசனையினூடே அமர்ந்திருந்தவரின் தோளைத் தொட்ட கெஹ்னா," என்ன யோசிக்கிறீங்க?" என்று கேட்க


"ரமண்ஷா படே ஹோஹைனா சம்மிஜி" (ரமணா பெரியவன் ஆகிட்டானில்ல) என்று ஆழ்ந்த பெருமூச்சுடன் கேட்க


"ஃப்ரெண்டோட மேரேஜ் போகாம எப்படி இருப்பான். தஞ்சாவூர் தானே போனான், சென்னைக்கு இல்லையே ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க?" என்றார் சமிக்ஷா."ஏனோ தெரியல. ப்ப்ச் இது மனசுக்கு ஒரு மாதிரி எப்படி சொல்லன்னு தெரியலையே..." என்றவரை சங்கடமாகப் பார்த்துவிட்டு


"நீங்க நினைக்கற மாதிரி எதுவும் ஆகாது. விடுங்க அப்படியே ஆனாலும் வேணு பாய்" எனும் போதே எரிக்கும் பார்வை பார்த்தார் அக்ஷதீப்.


"அச்சா டீகே ஷாப், எதுவும் சொல்லலை போதுமா. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்" என்று அப்போதைக்கு சமாதானம் செய்துவிட்டார் சமிக்ஷா."அவன் பேரை கூட இங்க சொல்லக் கூடாது" என்று கத்திவிட்டுச் சென்றார் அக்ஷதீப்.


'இவங்களுக்கு வேணுன்னா ஒட்டிப்பாங்க, இல்லாட்டி பிச்சுக்குவாங்க அதுக்கு நானா கிடைச்சேன். ஏ தோனோ தோஸ்த் ஹேனா ஏக்ஜெசேஹே (இந்த இரு தோழர்களும் ஒரே மாதிரி தான்)'என்று அங்கலாய்த்துக் கொண்டபடி எழுந்தார் சமிக்ஷா.


"சம்மி... ஏ ச்சோரி" என்ற குரலில்," வர்றேன்!" என்றார் சத்தமாக.


அக்ஷதீப்பின் பாட்டி தான் சத்தமிட்டது. நூறு வயதை நெருங்குபவருக்கு குரல் மட்டும் குறைவே இல்லை. அக்ஷதீப்பின் பெற்றோர் மறைந்து விட்டனர். எஞ்சி இருப்பது அப்பாவின் அம்மா மட்டுமே. பேரனின் மனைவி என்றால் அவருக்கு அத்தனை தொக்கு. படுக்கையில் இருந்தாலும் குச்சி ஊன்றி நடந்தாலும் சமிக்ஷா வந்து தான் நிற்கவேண்டும் எதுவானாலும். இல்லையெனில் வீடு ரெண்டுபடும்.


"என்ன வேணும் தாதிஷா?" எனும்போதே," தூனா...!" என்று துவங்கி தேவநாகரியில் திட்ட, சமிக்ஷாவிற்கு அலுப்பாய் இருந்தது."டீகே தாதிஷா !"என்றவர் பெட்பேனை சுத்தம் செய்து விட்டு, அவரையும் வீல்சேரில் அமரவைத்தார்."ரமண் ஆஹைஹே க்யா? (ரமணா வந்தாச்சா?)"என்றதுமே,' இன்னும் இல்லை' என்று தலையாட்டினார்."அக்ஷி எங்க?" என்று கேட்க


"கம்பெனி போய்ட்டாங்க. நீங்க வெளியே வர்றீங்களா?"என்றதும் ஆமென்று தலையாட்டிவிட்டு," ரமணுக்கு இந்த மாசம் மேரேஜ் பண்ணியே ஆகணும். பொண்ணு நம்ம..." எனும் போதே சமிக்ஷா எல்லாவற்றுக்கும் சரி என்று தான் பதிலளித்தார்.*************


செந்தூரா கோபம் சுமந்து சிவந்த விழிகளுடன் நின்றிருக்க, அவளது பெற்றோர் அவளை சங்கடமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


"ம்மா நான்" என்று சொல்லும்போதே கையை உயர்த்தி,' பேசவேண்டாம்' என்று மறுத்தவள் ,"நான் கேட்டேனா, உங்க கிட்ட கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி?" என்று கேட்க அவர்கள் இல்லையென்று தலையசைத்தனர்.


"அப்புறம் ஏன்ப்பா?" என்றாள் இயலாமையுடன்.


"இல்லம்மா மாப்பிள்ளை" என்று சொல்ல வந்தவர் சட்டென அமைதியாகி," அந்தப் பையன் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட், அதான் உன்னை புரிஞ்சு தான் ஒத்துக்கிட்டான்னு நினைச்சேன்." என்றார் பரிதாபமாக.


"நான் சொன்னேனாப்பா அவன் என்னை புரிஞ்சவன்னு?, சொல்லுங்க நான் சொன்னேனா இல்ல என்னைக்காவது அவனுக்கு என்னைப் பிடிக்கும்னு சொல்லி இருக்கேனா...? பிடிக்காதுப்பா, என்னை யாருக்கும் பிடிக்காது, இந்த குண்டச்சியை, யானையை, பீப்பாவை யாருக்கும் பிடிக்காது. புரியுதா உங்களுக்கு?" என்றவள்," இனிமேல் என்னைக் கேட்காம கல்யாணம் ஏற்பாடு பண்ணாதீங்கப்பா. மறுபடியும் மறுபடியும் அவமானப்பட எனக்குத் தெம்பு இல்லை."என்றாள் வேதனையாக.


"இல்லம்மா இது நல்லா கேட்டுத்தான்" என்ற தாயை முறைத்தவள்," உனக்கு பாரமா இருக்கேன்னு தானே இவ்வளவும் பண்ற. இனி இருக்கவே மாட்டேன்."என்று பட்டென்று சொல்லிவிட்டாள்.


'செந்தூரா, செந்தி, செந்தூ' என பல குரல்கள் ஒருங்கே ஒலிக்க, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு," நான் இப்படி பேச காரணமே இவங்க தான் "என்றாள்.


"என்ன இவங்க தான்... இவங்க தான் னு பாடம் படிக்கிற. எல்லாத்துக்கும் காரணம் நீதான். ஒரு உடம்பை எப்படி வச்சுக்கிறதுனு தெரியல, ஒரு ஹெல்த் கான்சியஸ் கிடையாது. கண்டதையும் கண்ட நேரத்தில் தின்ன வேண்டியது. பன்னி மாதிரி பெருத்து போயிட்டு இப்ப அவங்களை காரணம் சொல்ற" என்று அவளின் பெரியப்பா தாம் தூமென்று குதிக்க


"அண்ணே அமைதியா இருங்களேன்." செந்தூராவின் அப்பா மகளை பேசுவதற்கு தடைவிதித்தாரே ஒழிய கண்டனம் தெரிவிக்கவில்லை.


"நீ பேசாதடா, பொண்ணை பெத்தா மட்டும் போதுமா கட்டுப்பாடா வளர்க்கத் தெரியாதா...? என் மகளுகளைப் பாரு எப்படி வளர்த்திருக்கிறேன்னு, கொஞ்சம் கூட கவலையே இல்லாம தின்னு பெருத்தா எவன் கட்டுவான். நல்லா பழகனவனே இந்தா இவ வேணாம், தங்கச்சி தான் வேணும்னு கட்டிக்கிட்டான். அதுக்கு இப்ப வந்து உன்னை குறை சொன்னா ஆச்சா!, சும்மா ஏதாவது பேசின எனக்கு கெட்டக் கோவம் வந்திடும்."என்றவர் செந்தூராவின் பக்கம் திரும்பினார்.


"சும்மா ஊர்சுத்துறேன் பேர்வழினு கண்டதையும் தின்னு பெருக்காம, கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேடுற வரைக்கும் ஜிம், டயட்னு ஏதாவது செய்யி. நூறுபவுன் போடுறேன்னு சொன்னாலும் எவனும் உன்னைக் கட்ட முன்வரமாட்டிக்கிறான்" என்றார் ஆத்திரமாக.

செந்தூரா எல்லாவற்றையும் கேட்டவள்," உங்க சம்பாத்தியத்தில் சாப்பிடுறேனா?, இல்ல உங்க உழைப்பை தின்னுறேனா, இல்ல எனக்கு மாப்பிள்ளை அமையல...எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு நான் கேட்டேனா, இல்ல உங்கப் பொண்ணுங்க கல்யாணம் ஆகமுடியாம இருக்கிறதுக்கு நான் காரணமா?, என்னைவிட மூத்தவங்க தானே நல்ல ஜாப்,நல்ல சாலரி, உங்க பாஷையில் நல்ல ஸ்லிம்மா ஜீரோ சைஸ்ல இருக்க அவங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை. ஹான்! அவங்கவங்க குடும்பத்தை பார்க்கணும் பெரியப்பா. சும்மா தம்பி தான் அடங்கிப் போறாரேனு நாட்டாமைத்தனம் பண்ணக் கூடாது. அதுவும் என்கிட்ட பண்ணவே பண்ணாதீங்க." என்றாள் முகத்திலடித்தாற்போல"இதுக்குத்தான் இவ கல்யாணத்துக்கு நான் வரலைனு சொன்னேன்" என அவர் கொந்தளிக்க அதைக் கண்டு கொள்ளாமல் மணமக்களிடம் சென்றாள்.


மணமகனிடம் வந்தவள்," கங்கிராட்ஸ் மனோ!" என்றாள் இயல்பாய்.


"சாரி செந்தூ அதுவந்து..." என விளக்கம் கொடுக்க முற்பட்டவனை தடுத்தவள்," என் சிஸ்டரோட பழக தான் உன் கிட்ட ஃப்ரெண்ட்சிப் வச்சிருந்தேன்னு நீ சொல்லி இருக்கலாம் மனோ. இல்ல இவளைதான் லவ் பண்றேன்னு தைரியமா என் கிட்ட சொல்லி இருக்கலாம். நான் உன் ஃப்ரெண்ட் தானே...? ஃப்ரெண்ட் கிட்ட இதுபோல விஷயங்களை ஷேர் பண்ணிக்கலாமே தப்பில்லையே.
ஓஓஓ ஐம் சாரி. சாரி நீ இவ கூட பழக என்னை ட்ரம்ப் கார்டா யூஸ் பண்ணி இருக்கன்னு தெரியாம ஃப்ரெண்ட் அது இதுன்னு சொல்றேன் பாரு. ஐம்சாரி யா. எனிவே கங்கிராட்ஸ் அகைன் போத் ஆஃப் யூ!" என்று கீழிறங்கிவிட்டாள்."இந்தத் திமிருக்குத் தான் இவளுக்கு எதுவுமே அமைய மாட்டேங்கிது" என்றாள் மணப்பெண்ணான செந்தூராவின் உடன்பிறந்த தங்கை.


"வனி!" என்று அவளை மனோ அதட்டிட," நீ பேசாதே!" என்றாள் கடுப்பாக.


செந்தூரா அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.


அவள் மனம் பெரியப்பா பேசியதிலேயே உழன்றது.


'இதுவே அவரதுப் பெண்களை பேசியிருந்தால் இந்நேரம் என் பெற்றோரைப் போல அமைதியா கேட்டுட்டு இருந்திருப்பாங்களா...?இவங்க மட்டும் ஏன் இப்படி அடிபணிஞ்சு போறாங்க. எல்லாரும் ஜீரோ சைஸ்லயே சுத்தினா இந்த நாட்டை பஞ்சம் புடிச்ச நாடுனு சொல்லிட மாட்டாங்க.'என அவளுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டாள்.


"ஹே... ஹாய் தூரி!" என்று ஒரு குரல் கேட்க, இடுங்கியப் புருவங்களுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.யாரென்று அவளுக்கு தெரியவில்லை.


"என்ன அடையாளம் தெரியலையா...? நான் நதி. சென்ட் ஜோசப் ஸ்கூல் 12 த் ஸ்டான்டர்ட், பயலாஜி குரூப் இப்ப ஞாபகம் வருதா?" என்று கேட்டதும் செந்தூராவின் முகம் பூவாய் மலர்ந்தது.


"நதி வாவ் வாட் எ சர்ப்ரைஸ் என்னை அடையாளம் தெரியுதா உனக்கு?" என்று செந்தூரா கேட்டவள்,: அஃப்கோர்ஸ் என் பாடியை பார்த்தே கண்டுபிடிச்சு இருப்ப "என்றாள்.


"ப்ப்ச் இதான் ஆகாத பேச்சு. மை ச்சப்பி சீக்ஸ், டிம்பிள் ச்சின் கேர்ளை மறக்க முடியுமா...?" என கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி கொஞ்ச


"பழசை மறக்கறதே இல்லை போல!" என்றாள் கிண்டலாக.


"மறக்கறதா?" என்ற நதி," நோ வே மைடியர். ஏன் தனியா உட்கார்ந்து இருக்க வா!" என்று அழைக்க


"சும்மா தான்!" என்றபடி," அப்புறம் நீ எப்படி இருக்க?"என்றும் நலம் விசாரித்தாள்.


"நானா நான் நல்லா இருக்கேன். பாரு பேசிட்டே மறந்துட்டேன், ஏ திலகா சீக்கிரம் வா!" என்று குரல் கொடுக்கவும் திலகவதி வேகமாக ஓடி வந்தாள்.


"ஏன்டி கூட ஒருத்தி வந்தாளேன்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கா உனக்கு?, சிஸ்டர் யாரு?" என்றும் கேட்க செந்தூராவை அறிமுகம் செய்து வைத்தாள்.


"அச்சோ பனிரெண்டு வருஷமா இவளோட எப்படி குப்பை கொட்டுனீங்க சிஸ்டர்.? ஆறு மாசம் கூட இருக்கேன் அதுக்கே நொங்கெடுக்கிறா என்னை. நீங்க எல்லாம் கடவுள் தெய்வமே!" என்றிட செந்தூராவிற்கு சிரிப்பு வந்தது திலகவதியின் பேச்சில்.


"ஹாஹாஹா...! வா வா அதெல்லாம் அப்படித் தான்."என்றவள் செந்தூராவிடம் பேசியபடியே வந்தாள்.


"அப்புறம் அட்ரஸ் குடு தூரி, நான் உன்னை வந்து பார்க்கிறேன். இன்னும் தனியா தான் இருக்கியா?" என்று கேட்க


"இல்ல நதி. காலேஜ்லாம் வீட்டில் இருந்து தான் போனேன். இங்க வேலைக்கு வந்து அப்படியே இருந்தாச்சு. இப்பதான் வேலையை ரிசைன் பண்ணேன் மறுபடியும் வேற வேலை தேடணும்" என்றாள்.


"ஓஓஓ என்ன படிச்சிருக்க. ஐ திங்க் எம்பிஏ வா தான் இருக்கணும், அம்மணி தான் அப்பவே தொழிலதிபர் ஆவேன்னு சொன்னீங்களே!?" என்று கேட்க

"அதே தான். ஆனா தொழிலதிபர் தான் ஆக முடியல. பசங்க பிஸ்னஸ் பண்ணனும்னு கேட்டாலே வீட்ல பணம் கிடைக்காது. இதுல பொண்ணு நான் கேட்டா கிடைக்குமா?" என்றவள்," ஆமா நீ எங்க வேலை பார்க்கிற?" என்றதும்


"ஏவிஆர் மசாலாஸ் ஃபேக்டரியில தான் வேலை" என்க


"நதி !"என்று கேள்வியாக பார்த்திட


"அட ஆமாம் நம்பலையா நீ?, இதோ இவ கூட என்னோடு தான் வேலை பார்க்கிறா." என திலகவதியை கைகாட்ட," சரி !"என்றாள் செந்தூரா.


"உனக்கு வேலை இல்லைன்னா என்ன?, எங்க கம்பெனில கூட மேனேஜர் போஸ்ட் காலியா இருக்கு, அதுக்கு நீ அப்ளை பண்ணு உடனே கிடைக்கும். நான் வேணும்னா அங்க சொல்லி வைக்கிறேன்." என்றாள்.


"ஆமாம் சிஸ்டர் ஓனர் இவளோட மொறைப்பையன். உடனே கண்ணே நீ கொண்டு வந்த ஆளா...?! அப்ப வேலையில் சேர்த்துக்கிறேன்னு தூக்கி வேலையை தந்திடுவார். இல்ல நதி...." என நக்கலடித்தாள் திலகவதி.


செந்தூரா சிரித்தபடியே, நதியைப் பார்க்க அவளோ," அந்த எந்திரனை எல்லாம் மாமாப் பையனா யோசிக்கக் கூட முடியாது."என்றாள் இடவலமாக தலையை ஆட்டியபடி.


"ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவர் பேரை இப்படி கிண்டலடிக்கிறதுக்கு நீ மாட்டப் போற பாரு" என்று திலகா சிரிக்க, நதியோ," மாட்டினா மட்டும் என்ன செஞ்சிடுவாரு உங்க ஓனரு. மசாலா டப்பாக்குள்ள போட்டு அடைச்சிட மாட்டேன்." என்றாள் அதற்கும்.மூவரும் பேசிக் கொண்டே செல்ல அந்திரன் தன் காரில் சாய்ந்தபடி கைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தான்.


"ஹேய் நதி !ஓனர் ஓனர் "என்றாள் திலகவதி கிசுகிசுப்பாக


அவனைப் பார்த்து விட்டு," பாரு எல்லாரும் பீச்சுக்கு கடலை பார்க்க வருவாங்க இவர் கைபேசியை பார்க்க வந்திருக்காரு. இதுக்குத் தான் சொல்றேன் அது சரியான சிட்டி ரோபோ. எந்திரன்னு பேர் மாத்தி வைக்கச்சொல்லி...யார் கேட்கறீங்க ?"எனும் போதே அவன் நிமிர்ந்து பார்த்தான்.


.....தொடரும்.

 

santhinagaraj

Active member
ரொம்ப அருமையா போகுது கதை சூப்பர்👌👌👌
நதி கேரக்டர் செம வேற லெவல் 😍😍

அவங்கவங்க உடம்புக்கு தகுந்த மாதிரி அவங்கவங்க இருக்காங்க இதை ஒரு குறையா சொல்றது எப்ப தான் விட போறாங்களோ 🙄🙄
 

Advi

Well-known member
சொந்த வீட்டிலேயே இப்படி பேசினா எப்படி????

குண்டா இருக்கிறவங்க எல்லாம் ஓவரா சாப்பரவங்க இல்லைனு எப்ப தான் புறியுமோ?????

நதி ஓட ப்ரெண்ட் தான் செந்துவா🤩🤩🤩🤩

அச்சோ பார்த்திட்டான் 🤣🤣🤣🤣🤣
 
பெரியப்பாக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் நல்லா திருப்பி கொடுத்தா!!!... சூப்பர் சூப்பர்!!... அவ தங்கச்சி கூட இப்படி இருப்பான்னு எதிர்பார்க்கலை!!... ஒரு ஓனர்னு கூட பார்க்காமல் என்னா பேச்சு பேசுறா???.. எப்ப சிக்க போறாளோ???
 

Mathykarthy

Well-known member
ரமணா mind voice செம 🤣🤣🤣🤣🤣🤣🤣 ரைமிங்ல பின்றான்... 🤭🤭🤩🤩🤩
அக்ஷதீப் ஏன் இப்படி பயப்படுறாரு ரமணா சென்னை போனா என்ன ஆயிடும் ... 🙄

ஒரு மசாலா கம்பெனியை வச்சு குழப்பி ரமணா அப்பா அந்திரன் ன்னு யோசிக்க விட்டுட்டாங்க இந்த writer ji... 🤧🤧🤧🤧 இது என்னடா அர்னால்ட் அந்திரனுக்கு வந்த சோதனை 🤪🤪🤪🤪🤪

செந்தூரா பப்ளி பேபியா 😍 பெரியப்பா 😡😡😡😡 எவ்வளவு பேசுறாரு குண்டா இருக்குறது அவ்வளவு பெரிய குற்றமா...அப்பாவும் அவரை கண்டிக்காம கெஞ்சிட்டு இருக்காரு.... தங்கச்சி இருக்காளே அதுக்கு மேல... 😤😤😤😤 குடும்பமா இது... 😈 மனோ 😡

நதி சூப்பர்.... 👌❤️
 
Yeththana sonnaalum body shaming pesursthunga adangaathunga pola...nice update dear
தெரிஞ்சும் தெரியாமலும் ஒருத்தங்களை அவங்க அப்பியரன்ஸ் வச்சு கிண்டல் பண்ணிடனும் அதுதான் நிறைய நடக்குது 😣😣😣😣 மிக்க மகிழ்ச்சி மா
 
ரொம்ப அருமையா போகுது கதை சூப்பர்👌👌👌
நதி கேரக்டர் செம வேற லெவல் 😍😍

அவங்கவங்க உடம்புக்கு தகுந்த மாதிரி அவங்கவங்க இருக்காங்க இதை ஒரு குறையா சொல்றது எப்ப தான் விட போறாங்களோ 🙄🙄
உலகம் அழிஞ்சாலும் அழியும் இவங்க திருந்த மாட்டாங்க மா மிக்க நன்றி மா 🥰🥰
 
சொந்த வீட்டிலேயே இப்படி பேசினா எப்படி????

குண்டா இருக்கிறவங்க எல்லாம் ஓவரா சாப்பரவங்க இல்லைனு எப்ப தான் புறியுமோ?????

நதி ஓட ப்ரெண்ட் தான் செந்துவா🤩🤩🤩🤩

அச்சோ பார்த்திட்டான் 🤣🤣🤣🤣🤣
அதுதான் பா தெரியல. நிறையபேர் அப்படித்தான் நினைக்கிறாங்க நிறைய சாப்பிட்டா தான் குண்டு ஆவோம்னு மிக்க மகிழ்ச்சி மா
 
பெரியப்பாக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் நல்லா திருப்பி கொடுத்தா!!!... சூப்பர் சூப்பர்!!... அவ தங்கச்சி கூட இப்படி இருப்பான்னு எதிர்பார்க்கலை!!... ஒரு ஓனர்னு கூட பார்க்காமல் என்னா பேச்சு பேசுறா???.. எப்ப சிக்க போறாளோ???
ஹாஹாஹா ஆமா ஆமா ஆனா அவ தான் பேசுவா 😉😉😉😉 மிக்க மகிழ்ச்சி மா
 
ரமணா mind voice செம 🤣🤣🤣🤣🤣🤣🤣 ரைமிங்ல பின்றான்... 🤭🤭🤩🤩🤩
அக்ஷதீப் ஏன் இப்படி பயப்படுறாரு ரமணா சென்னை போனா என்ன ஆயிடும் ... 🙄

ஒரு மசாலா கம்பெனியை வச்சு குழப்பி ரமணா அப்பா அந்திரன் ன்னு யோசிக்க விட்டுட்டாங்க இந்த writer ji... 🤧🤧🤧🤧 இது என்னடா அர்னால்ட் அந்திரனுக்கு வந்த சோதனை 🤪🤪🤪🤪🤪

செந்தூரா பப்ளி பேபியா 😍 பெரியப்பா 😡😡😡😡 எவ்வளவு பேசுறாரு குண்டா இருக்குறது அவ்வளவு பெரிய குற்றமா...அப்பாவும் அவரை கண்டிக்காம கெஞ்சிட்டு இருக்காரு.... தங்கச்சி இருக்காளே அதுக்கு மேல... 😤😤😤😤 குடும்பமா இது... 😈 மனோ 😡

நதி சூப்பர்.... 👌❤️
அவருக்கு மகன் தன்பேச்சை கேட்கணும்மா அதான் வேற ஒண்ணுமில்லை நம்மாளு தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்ததால அவருக்கு இங்க அட்டாச்மென்ட் அதிகம். சிலர் அப்படித்தான் மா தன் குழந்தைகளை பேசினா கூட எதிர்த்து பேச முடியாத பிறவிகள். மிக்க மகிழ்ச்சி பா 🥰🥰
 
Top