எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ

S.Theeba

Moderator
வணக்கம் நட்புக்களே.. இது என் முதல் கதை. தளத்தில் rerun பண்ணுறேன். நிறை, குறைகளை சுட்டிக்காட்டி எனக்கு பலம் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்

வரம் 1
"கழுதை... கழுதை... எத்தனை நாளாய் நானும் சொல்றன்..... குழந்தை மாதிரி இப்படி விரல் சப்பாதேனு... கேட்குறாளா பாரு..." என்று திட்டிக் கொண்டே அவள் வாயில் வைத்திருந்த விரலை எடுத்து விட்டு, அவளைத் தட்டி எழுப்பினாள் மாலதி. "இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறன் விடம்மா..." என்று சொன்னபடி மீண்டும் பெருவிரலைத் தன் வாயில் வைத்தாள்.
பட்டென்று அந்தக் கையிலேயே அடியொன்றைப் போட்ட மாலதி, அவளது போர்வையையும் விலக்கினாள். சோம்பலாக எழுந்த வர்ஷனா "என்ன மாலு.... என்னைத் தூங்கவிடாமல் ரொம்பப் படுத்துற. வெரி பாட் மம்மி நீ...." என்று சிணுங்கினாள். "நீ ஆபிஸ் போகலையா..? இன்று லீவ் போட்டுட்டியா..? இப்போ ரைம் என்ன தெரியுமா? எட்டு ஆச்சு" என்று மாலதி சொன்னதைக் கேட்டதும் "ஐயையோ எட்டாச்சா..." என்று பதறியபடி எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள் வர்ஷனா.

நம்ம கதையின் நாயகி தான் இந்த வர்ஷனா. கலையரசன்-மாலதி தம்பதியின் மூத்த புத்திரி. எழிலரசி, அழகோவியம் இப்படி வர்ணிக்க வைக்கும் அழகு நிரம்பியவள் அல்ல. சாதாரணமாக பார்ப்பதற்கு பாந்தமான அழகுடன் மாநிறமாக இருப்பாள்.

தமிழ்நாட்டில் முதல் பத்து இடங்களுக்குள் தடம்பதித்து நற்பெயரோடும் செல்வாக்கோடும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கிளைகள் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ். கூட்டு நிறுவனத்தில், சேர்மனின் காரியதரிசியாகப் பணியாற்றி வருகிறாள்.

அவளுக்கு தம்பி வருணியன். டாக்டராகும் கனவுடன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான்.

மஞ்சள் நிறத்தில் நீல நிறப் பூக்கள் அங்கங்கே பரவியிருந்த சுடிதார் அணிந்து, ஒற்றைப்பின்னலும் மிகச் சொற்ப அலங்காரமுமாக ஆயத்தமாகித் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள் வர்ஷனா.

"மாலு... எனக்கு இன்றைக்கு பிரேக்பஸ்ட் வேண்டாம். டைம் ஆச்சு... இன்று முக்கியமான மீட்டிங் ஒன்று இருக்கு. குட்பை மா..." என்று சொல்லிக் கொண்டே வந்தவள், அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வருணனைக் கண்டதும் அருகே சென்று அவன் தலையைக் கலைத்துக் கொண்டே "வருண் குட்டி... அக்காவுக்கு ஒரு வாய் ஊட்டிவிடு" என்றாள்.
அவனும் தான் சாப்பிட்டு கொண்டிருந்த இட்லியில் ஒரு துண்டு பிய்த்து சட்னியில் தோய்த்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

இதைப் பார்த்துக் கொண்டே அங்கே வந்த மாலதி, தன் கையில் இருந்த ரிபன் பொக்ஸை வர்ஷனாவிடம் கொடுத்தபடி "ஆமா இப்போ ரெண்டு பேரும் ஊட்டி விடறதென்ன... கொஞ்சுறதென்ன... பாசமலர்கள் தான். ஆனால் இரவானால் உங்க சண்டையை விலக்கு பிடிக்கவே என் பிராணன் போயிடுது...ரொம் அன்ட் ஜெரி" என்றாள்.

"என் தம்பி, நான் சண்டை பிடிப்பேன். கொஞ்சுவேன்.. உங்களுக்கு என்ன", "ஆமாடி, இப்போ இப்படி சொல்லு. அப்புறம் சண்டை பிடிக்கும் போது பஞ்சாயத்து கொண்டு வா.. அப்போ இருக்கு உனக்கு" என்றார் மாலதி.
"ஓகே மாலு,, எனக்கு உன்னோட பேசிற்று இருக்க டைம் இல்ல... குட்பை.. வருண் குட்பை" என்று சொல்லிவிட்டு தனது ஸ்கூட்டியில் அலுவலகத்திற்குப் புறப்பட்டாள்.

தனியார் வங்கி ஒன்றில் கணக்காளராகப் பணியாற்றி வரும் கலையரசன் வங்கி செல்ல ஆயத்தமாகி வந்தார்.

"மாலதி, நான் புறப்படுறன். வர்ஷு ஆபிஸ் போயிற்றாளா?", "ஆமாங்க, இப்பதான் போனா... அப்புறம் கொஞ்ச நேரம் முன்னாடி அண்ணி கோல் பண்ணாங்க... சண்டே வீட்டுக்கு வாறாங்களாம்....." என்று இழுத்தாள் மாலதி. " நீ ரிலாக்ஸாக இரு. அக்கா வரட்டும் நான் பேசிக்கிறன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
 
Last edited:
Top