எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -9

Padma rahavi

Moderator
சிவகர்ணிகாவின் பெற்றோர் என்ன என்னமோ பேசினர்.

ஏற்கனவே மூத்த மகளை பறிகொடுத்த நிலைமையில் இருக்கும் போது இவள் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவது, கண்ட நேரத்தில் வீட்டிற்கு வருவது என்று இருப்பதாகவும் இவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்தால் பின் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்றும் பேசிக் கொண்டே இருந்தனர்.

இதையெல்லாம் அவன் செவிகள் கேட்டாலும் மனம் வேறு ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டு இருந்தது.

வேதிகாவின் உடலைப் பார்த்து கதறி அழுத சத்தமும், அவர்கள் முகமும் இன்னும் அவன் மனதில் கண்ணாடி போல் பதிந்து உள்ளது. அதை மறைந்திருந்து பார்த்த அவன் அதன் பின் எக்காரணம் கொண்டும் அவர்கள் முன்னிலையில் தன் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்று நினைத்தான்.

ஒரு வழியாக மணியைப் பார்த்த வாசுகி, ஐயோ மன்னிச்சிருங்க தம்பி. நான் பாட்டுக்கு பேசிட்டே போய்ட்டேன். உங்களுக்கு நேரம் ஆகுதுல. சாபிட்டீங்களா என்று கேட்க,

ஆ ஆ சாப்பிட்டேன் ஆண்ட்டி. நான் வரேன் லேட் ஆகிடுச்சு என்று கூறிவிட்டு சிவகர்ணிகாவிடம் கூட கூறாமல் தன் காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.

வழியெங்கும் அவன் கண்களில் நீர் அரும்பி கண்ணீர் திரையை மறைக்க எந்த நிலையிலும் நிதானத்தை விடாத அவனே சற்று தடுமாறிப் போனான்.

எப்படியோ வீடு வந்த அவன், படுக்கையில் வீழ்ந்தான்.

தனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? இத்தனை காலம் அவன் வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த வரையாவது நிம்மதியாக இருந்தான். முதன் முதலில் சோகத்தை மீறி சந்தோஷ சிறகுகளை அவன் அடையும் வேளையில், சிறகுகள் உடையும் அளவிற்கு ஒரு உண்மை புலப்பட்டு விட்டதே.

இனி உண்மையை மறைத்து சிவகர்ணிகாவை காதலிக்கலாம், கல்யாணம் கூட செய்யலாம் ஆனால் நிம்மதியாக வாழ முடியுமா? அப்படியே வாழ்ந்தாலும் என்றாவது உண்மை தெரியும் போது ஏமாற்றி திருமணம் செய்தாயே என்று கேட்டால் அன்று இருவரின் வாழ்க்கை என்னாவது? அல்லது உண்மையை கூறினால் திருமணம் செய்யும் அளவிற்கு பெரிய மனதா அவளிடம் இருக்கும்?

இப்படி பல கேள்விகளும், அதற்கான பதில்களும் அவனுக்குள்ளேயே மாறி மாறி தோன்ற தன்னையறியாமல் கண் மூடினான்.

அங்கு சிவரகர்ணிகாவோ நன்றாக இருந்தவன் திடிரென ஏன் ஒரு மாதிரி ஆனான் என்று புரியாமல் முழித்தாள்.

சரி நமக்கு ஏற்பட்டது போல் அவனுக்கும் இந்த உணர்வு தோன்றி இருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டாள்.

அந்த "இந்த" உணர்விற்கு பெயர் காதல் என்று அவளும் வெளிப்படையாக நினைக்கவில்லை. அதன் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டுமே. இதை இப்படியே ரசிக்கவே அவள் விரும்பினாள்.

மறுநாள் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் போதே மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. என்றும் இல்லாமல் இன்று கண்ணாடி முன்பு அரை மணி நேரம் நின்று ரசித்தாள்.

ஒருவித ஆர்வத்துடன் அலுவலகம் சென்றவள் அவன் அறையைப் பார்க்க, அவன் இன்னும் வந்திருக்கவில்லை.

என்னடா இது என்று அதிசயமாக கடிகாரத்தைப் பார்க்க, அப்போது தன் உறைத்தது அவள் அரை மணி நேரம் முன்பாகவே அலுவலகம் வந்திருக்கிறாள். தன்னையறியாமல் சிரித்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் வந்த சிவநந்தன், உள்ளே நுழைந்ததும் சிவகர்ணிகாவைப் பார்த்து ஆச்சரியமடைந்தான்.

அவளுக்குள் சட்டென நாணம் எழ, கண்ணை சிறிது தாழ்த்தி, இடப்புறம் வலப்புறம் நகற்றி, பின் அவனை நோக்கி நிமிற்றி சற்று குழைவான
குரலில்

குடமார்னிங் சார் என்றாள்.

அவள் வெட்கத்தை மௌனமாக ரசித்தவன் குரலை சற்று செருமி

குடமார்னிங் என்றான்.

மேலும் எதாவது பேசுவான் என்று எதிர் பார்த்தவள் அவன் அமைதியாக உள்ளே சென்றதைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தாள்.

தன் அறைக்கு சென்ற சிவநந்தனுக்கு
, சிவகர்ணிகாவின் மாற்றம் புரியாமல் இல்லை. தன்னைப் போலவே அவளுக்கும் ஏதோ உணர்வு உள்ளது என்று அவனுக்குப் புரிந்தது. நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தவன், காலையில் அவன் எடுத்த முடிவையும் நினைத்துப் பார்த்தான்.

காலை எழும் போதே தலை பாரமாக இருக்க, இதயமும் அதே அளவு பாரமாக இருந்தது. எத்தனை முறை யோசித்தாலும் வழி ஒன்றும் கிடைக்கவில்லை.

எந்த விஷயத்தையும் இப்படி குழப்பிக் கொண்டே இருப்பது அவனுக்குப் பிடிக்காது. இன்று சிவகர்ணிகாவை சந்திக்கும் போது நாம் என்ன முடிவு எடுத்திருக்கிறோம் என்று கூறிவிட வேண்டும்!

எல்லா உண்மையையும் கூறும் முடிவில் தன் அலுவலகம் வந்தான்.

ஆனால் எப்போது சிவகர்ணிகாவை பார்த்தானோ, அவள் வெட்கத்தைப் பார்த்தானோ அப்போதே அவள் தன்னுடையவள் என்று முடிவு எடுத்து விட்டான். நடந்த எதிலும் அவன் தவறு ஒன்றும் இல்லை.

இனி அவளுடன் வாழ்வதே அவன் வாழ்வின் தொடக்கம் என்று அவனுள் ஒன்று கூற இரு முடிவுகளுக்கு இடையில் தடுமாறியபடி அவளிடம் பதில் கூறாது சென்று விட்டான்.

மாலை வரை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிவகர்ணிகா, அனைவரும் கிளம்பியதும் நேராக அவன் அறைக்குச் சென்றாள்.

அங்கு நின்று அவனை முறைத்துப் முறைத்துப் பார்த்தவள்,

ஹலோ சார், என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல! என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? எதுவுமே நடக்காத மாதிரி இருக்க எப்படி முடியுது உங்களால. ஒரு வேளை நான் தன் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போல. உங்க மனசுல ஒன்னும் இல்லை என்று பட படவென பொரிந்து விட்டு பின்னே திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

மின்சாரம் பாய்ந்தது போல் கைகளில் ஏதோ தாக்க, சட்டென நின்று அவன் புறம் திரும்பியவள் பார்த்தாள், மின்சாரம் பாய்ந்தது அவனின் கைகள் மூலம் தன் கைகளுக்கு என்று!

அது வரை அடை மழையாய் பொழிந்தவள், மெல்லிசை தூறும் மேகம் போல் மாறினாள். அவன் கைகளுக்குள் சிறைப்பட்ட தன் கைகளை விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

என்ன கேட்ட! என்ன நினைச்சிட்டு இருக்கேன் மனசுல னு தானே. அதுக்கு பதில் சொல்லவா!

இதுவரை வேலையை மட்டும் பாத்துட்டு இருந்தவன், எல்லாரையும் ரொம்ப எளிதாக நேருக்கு நேர் பாத்து பேசுறவன் இந்த குண்டு கண்களுக்குள்ள விழுந்து, மேல எழுந்து வர முடியாம தவிக்கிறேனே அது எப்படினு நினைச்சிட்டு இருக்கேன்.

அடுத்து என்ன கேட்ட? உன்னைப் பார்த்தா எப்படி தெரியுதுன்னா!

வெறும் அலுவலக பணியாளர்னு தான் தெரிஞ்சது முதல்ல , இப்ப நிமிடத்திற்கு நிமிடம் கண்ணாடி கதவு வழியா உன் கண்ணு, மூக்கு, உதடு, உடை, நீ நடக்குறது பேசுறது சிரிக்குறதுனு தனி தனியா பார்த்து ரசிக்கிறேன். இப்ப உன்னைப் பார்த்தா என் வாழ்க்கையோட மொத்த சந்தோஷத்துக்கும் காரணம்னு தெரியுது.

அவளின் அடை மழை அவனுள் இறங்கியது போல் அவன் பேசித் தீர்க்க, அவனின் சாரல் மழை அவளுள் நுழைந்தது போல் அவள் அமைதி காக்க,வந்த நிமிடமே ஒருவரின் இயல்பை முற்றிலும் மற்றும் விந்தைக்குப் பெயர் தான் "காதலோ"


(உரையாடல் இல்லையே என்று காண்டு ஆகாதீர்கள் மக்களே. இந்த யுடி முழுவதும் வெறும் உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளேன். அடுத்த யுடியில் உங்களுக்கு பிடித்தது போல் உரையாடல் வைக்கிறேன் )
 

Kalijana

Member
Omg What a feel full episode ya இது அல்லவா ரொமான்ஸ் காதலை எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க ♥️ அவன் நினைச்சு வந்தது ஒன்னு ஆனா அவளை பார்த்ததும் நடந்தது வேற இது வரைக்கும் இல்லாத feel இன்னைக்கு epi ல omg speech less ♥️
 

Kalijana

Member
🔥❤️
 

Attachments

  • IMG-20221012-WA0000.jpg
    IMG-20221012-WA0000.jpg
    202.3 KB · Views: 0
  • MEME-20221012-095246.jpg
    MEME-20221012-095246.jpg
    229.3 KB · Views: 0
  • MEME-20221012-094129.jpg
    MEME-20221012-094129.jpg
    287.2 KB · Views: 0
  • MEME-20221012-092853.jpg
    MEME-20221012-092853.jpg
    226.4 KB · Views: 0
  • MEME-20221012-092214.jpg
    MEME-20221012-092214.jpg
    230.9 KB · Views: 0
  • MEME-20221012-083751.jpg
    MEME-20221012-083751.jpg
    190.8 KB · Views: 0
  • MEME-20221012-083224.jpg
    MEME-20221012-083224.jpg
    189.4 KB · Views: 0
  • MEME-20221012-085143.jpg
    MEME-20221012-085143.jpg
    204.3 KB · Views: 0
Top