எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -10

Padma rahavi

Moderator
வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சிவகர்ணிகாவிற்கு மனது ஒரு நிலையில் இல்லை. எப்படி இருக்கும்!

மனதை முழுதாக ஆக்கிரமித்திருந்தவன் கூறிய வார்த்தைகள் அவள் செவிகளில் இன்பத்தை அள்ளி வழங்கிக் கொண்டு இருந்தன. பதிலுக்கு இவள் தன் காதலை வெளிப்படுத்தவும் இல்லை. அது தான் தானாக அவள் வெட்கத்தின் வாயிலாக வெளிப்பட்டு விட்டதே!

அவன் தன் மனதை முழுதாக கூறிய பிறகு சற்று நேரம் வார்த்தைகள் அற்று சிலையாய் நின்றிருந்த அவளை தோள் பற்றி இருக்கையில் அமர வைத்தான் சிவநந்தன்.

அவன் தொடுகையில் உடல் மயிர்க்கூச்செரிந்தது. மேனி சிலிர்த்து ரோமங்கள் முழித்துப் பார்த்தது.

நான் சொன்னது உனக்கு அதிர்ச்சியா இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா எந்த விஷயத்தையும் ரொம்ப போட்டு குழப்புறது எனக்குப் பிடிக்காது. உன்னோட தான் என் வாழ்க்கைன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். இனி உன் விருப்பம் சொல்லு என்றான்.

வாழ்வில் முதன் முறையாக பேச்சடைத்து அமர்ந்திருந்தாள் சிவகர்ணிகா. என்ன கூறுவாள் அவள்!

அவள் கருவிழிகளில் பிரதிபலித்த அவன் முகம் தான் அவள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பதை அவள் நாணமே காட்டிக் கொடுத்து விட்டதே!

மெல்லிய தலையாட்டலோடு ஓடி வந்துவிட்டாள்.

அன்று இரவு ஒருவர் அலைபேசி எண்ணை மற்றொருவர் வைத்துக் கொண்டு யார் அழைப்பது முதலில் என்ற குழப்பத்தில் இருந்தனர்.

அவளே முதலில் அழைத்தாள்.

கையிலே அலைபேசியை வைத்திருந்தவன் முதல் ரிங்கிலேயே எடுத்தான்.

ஐந்து வினாடி மௌனத்திற்குப் பிறகு,

இங்க பாருங்க! என்னால சும்மா இப்படி பேச தயங்குறது, இதையே யோசிக்கிறது இதெல்லாம் பிடிக்காது. அது என் குணமும் இல்லை என்றாள்.

அது வரை இருந்த இறுக்கத்தில் இருந்து விடுபட்ட சிவநந்தன், வை விட்டு சிரித்தான்.

சரி அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற என்றான்.

ஒன்னும் பண்ண வேணாம். எப்பவும் போல பேசலாம்.

முன்னாடி ஒரு நட்பா பேசுனேன். அப்படியே பேச சொல்றியா என்றான்.

நட்பு இப்ப இருக்கக் கூடாதுனு யார் சொன்னா? காதலிச்சாலும், கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நட்பு இருந்தா தான் அதே காதலோட கடைசி வரை இருக்க முடியும்.

ஓஹோ அப்ப கல்யாணம் பண்ற ஐடியா இருக்கோ என்றான் சிரிப்பை அடக்கியபடி!

பின்ன! இப்படியே வழிஞ்சு பேசிட்டு, பாக்கும் போது எல்லாம் கண்ணடிச்சிட்டு, யாரும் இல்லாதப்ப கையை புடிச்சிட்டு, டாட்டா காட்டிட்டு போகலாம்னு நினைச்சீங்களா என்றாள் சிவகர்ணிகா.

அம்மா தாயே. அப்படி உனக்கு டாட்டா காட்டுனா அந்த கையை வெட்டி போட்ருவ மாட்ட. நாளைக்கே கூட கல்யாணம் பேச நான் ரெடி என்றான்.

இந்த பேச்சு அவளை வெட்கப்பட வைத்தது.

சரி நான் வைக்கிறேன். தூக்கம் வருது என்றாள்.

தூக்கம் வரல வெட்கம் வருது சரி தானே என்றான் விடாமல்.

ச்சை. எனக்கென்ன வெட்கம். நிஜமாவே தூக்கம் வருது பை என்றவள் பதிலை எதிர்பாராது அலைபேசியை வைத்தாள்.

உண்மையில் தூக்கம் துபாய் தாண்டி எங்கோ சென்றுவிட அவனின் குறும்புச் சிரிப்பும், பேசும் கண்களும் அவளை படுத்தின.

மறுநாள் காலை நேரம் தாண்டியே எழுந்தாள். முகத்தில் நிரந்தரமாக தங்கிய சிரிப்போடு வளைய வரும் மகளை பார்க்க வித்தியாசமாக தெரிந்தது வாசுகிக்கு.

அலுவலகம் கிளம்பிக் கொண்டு இருந்தவள் வாயிலில் சரலென்று நின்ற காரைப் பார்த்து வெளியில் வந்தாள்.

பாண்ட் பாக்கட்டில் கை விட்டபடி, கருப்பு கண்ணாடியுடன் ஸ்டைலாக இறங்கிய சிவநந்தனைப் பார்த்த சிவகர்ணிகா திகைத்து விட்டாள்.

அவள் திகைப்பை பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தவன் ஜம்மென்று சோபாவில் அமர்ந்தான்.

நீங்க எங்க இங்க என்று திக்கித் திணறி கேட்டாள் சிவகர்ணிகா.

நான் தான் சொன்னேனே! நாளைக்கே கல்யாணம் பேச நான் ரெடினு என்று அமைதியாக கூறினான்.

திகைப்பில் இருந்து மீளாத சிவகர்ணிகாவிற்கு இந்த பதில் அதிர்ச்சியின் உச்சத்தை காட்டியது.

சிவா! யார் கிட்ட பேசிட்டு இருக்க என்று கேட்டபடி வந்த வந்த வாசுகி சிவநந்தனைக் கண்டதும்,

வாங்க வாங்க தம்பி. நீங்க சிவா எம். டி தானே. என்ன இந்த காலையில என்று கேட்டாள்.

அவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற சிவnந்தன், அது ஒரு முக்கியமான விஷயம் பேசணும் மா. சார் இருக்காரா என்று கேட்டான்.

வெளியே சென்றிருந்த வாசனும் வந்துவிட வழ வழா என்று இழுக்காமல்

சார்! நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன் என்று பட்டென போட்டு உடைத்தான்.

இதைக் கேட்ட மற்ற மூவரும் காதில் கேட்ட விஷயத்தை மூளைக்கு எடுத்துச் சென்று அவன் பேசியதின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, அதற்கு என்ன பதில் கூறலாம் என்று யோசித்தனர்.

சாரி. என்னைப் பற்றி முதல்ல சொல்லிடுறேன். என் பெயர் சிவநந்தன். நந்தன் எஸ்போர்ட்ஸ் எம்
டி. அம்மா அப்பா இல்லை. ஒரே ஒரு தம்பி இருந்தான். அவனும் இப்ப இல்லை.

தம்பியைப் பற்றி கூறும் இடத்தில் மட்டும் குரல் கமறியது.

இரு பெண்களில் ஒருத்தியையும், உடன்பிறப்பையும் இழந்த வருத்தத்தில் இருந்த அவர்கள், ஒரே ஒரு உறவை தொலைத்த அவனின் மனநிலையை எண்ணி வருந்தினர்.

இனம் புரியாத பாசம் அவன் மேல் சுரந்தது.

சிவகர்ணிகா என் வாழ்க்கைல வந்ததுக்கு பிறகு தான் எப்படி வாழணும்னு எனக்கு புரிஞ்சது. உங்களை பாத்த பிறகு ஒரு குடும்பம் கிடைச்சதுனு மகிழ்ச்சியா இருக்கு. இது நிலைக்கிறது உங்க கைல தான் இருக்கு என்று தெளிவாக பேசி முடித்தான்.

வாசனும், வாசுகியும் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். தங்கள் மகளின் முகத்தில் தெரிந்த நாணத்திலேயே அவளின் மனம் புரிந்தது.

அவர்களுக்கு என்று பெரிதாக எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லாதது, அவனின் பண்பு, சிவகர்ணிகாவை ஒருவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவர்களை சம்மதிக்க வைத்தது.

அலுவலகம் செல்லாமல் கடற்கரையில் கை கோர்த்து கடலை ரசித்துக் கொண்டிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அதெப்படி மிஸ்டர் நந்து. எங்க அப்பா அம்மா கிட்ட அவ்ளோ தைரியமா பேசுனீங்க?

அதாவது மிஸ் கர்ணி, எனக்கு உன் கண்ணைப் பார்த்து பேச மட்டும் தான் பயம். அந்த கண்ணு அப்படியே என்னை சிறைபிடிச்சு உள்ள போட்ருது. மத்த எல்லார் கிட்டயும் நல்லாவே பேசுவேன்.

இருவரும் சிரித்து, மகிழ்ந்து, கொஞ்சி, கெஞ்சி பேசிக் கொண்டிருந்த நேரம் அவனின் தொலைபேசி சிணுங்கியது.

எடுத்துப் காதில் வைத்தான்.

ஹிலோ மிஸ்டர் சிவநந்தன். நான் டாக்டர். ராம் பேசுறேன். சிவா கண்ணு முழிச்சிட்டான். முதல்ல உங்க கிட்ட தான் சொல்லணும்னு அவங்க அப்பா அம்மா விரும்புறாங்க. இன்னும் ஒரு மாசம் அப்சர்வேஷன்ல வச்சிட்டு வீட்டுக்கு போகலாம் என்றார்.

சிவாவின் பெற்றோர் மாறி மாறி நன்றி சொல்லி கண்ணீர் பூத்தனர்.

காதல் கை கூடிய மகிழ்ச்சியுடன் இதுவும் சேர்ந்தது அவனுக்கு.

தன் தம்பியின் மனதை நோகடித்த பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று அவன் மனம் பரபரத்தது.

இதனால் இவர்கள் வாழ்வில் ஏதேனும் பிரச்சனை வருமா! பார்ப்போம்
 

Kalijana

Member
சிம்ப்ளை சூப்பர் Episode 👌❤️
 

Attachments

  • MEME-20221014-014700.jpg
    MEME-20221014-014700.jpg
    220.6 KB · Views: 1
  • MEME-20221014-012736.jpg
    MEME-20221014-012736.jpg
    248.9 KB · Views: 1
  • MEME-20221014-013717.jpg
    MEME-20221014-013717.jpg
    262.8 KB · Views: 0
  • MEME-20221014-012034.jpg
    MEME-20221014-012034.jpg
    256.5 KB · Views: 0
  • MEME-20221014-125617.jpg
    MEME-20221014-125617.jpg
    226.8 KB · Views: 0
  • MEME-20221014-015349.jpg
    MEME-20221014-015349.jpg
    238.2 KB · Views: 0
  • MEME-20221014-010733.jpg
    MEME-20221014-010733.jpg
    193.3 KB · Views: 0
  • MEME-20221014-011539.jpg
    MEME-20221014-011539.jpg
    250.6 KB · Views: 1

Fa.Shafana

Moderator
இவ தான் தம்பி கிட்ட வாய் கொடுத்து இருப்பாளோ?
 
Top