எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாலையில் பால் நிலா (கதை திரி)

Status
Not open for further replies.

NNK-15

Moderator
1

அன்று.

“படிச்சவர் தானே நீங்க.. நீங்க செய்யறது உங்களுக்கு சரின்னு தோணுதா.. உங்க கிட்ட தான் மிஸ்டர் கேட்டுட்டு இருக்கிறேன். கொஞ்சம் திரும்பி என் முகத்தை பார்த்து.. என்னோட கண்ணை பார்த்து பதில் சொல்லுங்க” கோபமாக சரண்யா கேட்க ..அவனும் இவளை பாராமல் சற்று நகர்ந்து வேறு எங்கோ பார்த்தபடி தலையை கோதிக் கொண்டிருந்தான்.

‘ உனக்கு என்ன? ஈசியா சொல்லிடுவ.. உன் முகத்தை.. உன்னோட கண்ணை என்னால பார்க்க முடியலை” ஒரு பெருமூச்சு விட்டபடி திரும்பி இவளை பார்த்தான்.

சரண்யா 19 களின் துவக்கத்தில் இருந்தால் முதலாம் வருட மாணவி.. நல்ல சிவந்த நிறம்.. தற்போது கோபத்தில் இன்னமும் சிவந்து காணப்பட்டது.

“ இப்போ உனக்கு என்ன தெரியணும்” என்று கேட்க.. அவனை நோக்கி இரண்டடி எடுத்து சரண்யா நகர்ந்து வர.. சட்டென மறுபடியும் திரும்பி நின்றான்.

“இது காலேஜ் சேர்ந்து ஆறு மாசம் ஆச்சு..இந்த ஆறு மாசமா நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கிறேன். எங்க போனாலும் சரி எங்க வந்தாலும் சரி முன்னாடி முகத்தை ரிஜிஸ்டர் செய்ற மாதிரி வந்து நிக்கிறது கொஞ்சம் கூட சரி கிடையாது.

நான் இங்க வந்திருக்கிறது படிக்கிறதுக்காக மட்டும் தான். அது தாண்டி என்கிட்ட எதையும் எதிர்பார்க்க வேண்டாம் புரிஞ்சுதா..”

“இத பாரு சரண் நானும் படிக்கறதுக்கு தான் வந்திருக்கிறேன்.*

“ ஓ.. சாருக்கு என்னோட பேர் எல்லாம் தெரியுமா .”

“என்ன கேள்வி இது ஆறு மாசம் பின்னாடி வரேன்னு கரெக்ட்டா சொல்ற ..பின்ன பெயர் தெரியாமலா வருவாங்க.”

“ இத பாருங்க” கோபமாக அவனை நோக்கி வர..

“ ப்ளீஸ் ரெண்டு அடி தள்ளி நின்னு பேசு .இப்போ என்ன? ஆறு மாசமா பின்னாடி வரேன் இல்லன்னு நான் சொல்லலையே .

நானும் ஒன்னும் பொறுக்கி கிடையாது. நானும் படிக்கிற பையன் தான் .டாக்டருக்கு படிச்சுக்கிட்டு இருக்கேன் தெரியும் தானே..

நீ சைக்காலஜி ஸ்டுடென்ட்.. அம்மா அப்பா தான் உன்னோட உலகம் .

அம்மா, அப்பாவோட ஒரே செல்ல பொண்ணு .

இருக்கிறது அப்பார்ட்மெண்ட் ஏரியா.. மிடில் கிளாஸ் ஃபேமிலி தான் .பெருசா சொல்லிக்கற மாதிரி எதுவும் இல்ல.

கிராமத்து பக்கத்துல சில ஏக்கர் இடம் இருக்கு. விவசாய இடங்களை குத்தகைக்கு விட்ருக்கீங்க .அதுல வர்ற பணம் ஓரளவுக்கு ஃபேமிலியை ரன் பண்ண மேனேஜ் ஆகுது.

உங்கப்பா சின்ன அளவுல ஸ்டேஷனரி கடை ஒன்னு நடத்திட்டு வராரு .அது அன்றாட செலவுக்கு சரியா இருக்குது.

அடிச்சு பிடிச்சு அந்த அப்பார்ட்மெண்ட்ல வீடு வாங்கிட்டீங்க .சொந்த வீடு அதனால கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கிறார் . இன்னமும் ஏதாவது தகவல் சொல்லனுமா..”

“எதுக்காக இதையெல்லாம் நீங்க விசாரிக்கிறீங்க. இது கொஞ்சம் கூட சரி கிடையாது”.

“ சரண் நான் தான் சொன்னேன்ல.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன் .
ஆறு மாசமா பின் தொடர்ந்து வரும் போது தெரியலையா”.

“ இத பாருங்க சார் .நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது. நான் என்னை பெத்தவங்க பார்க்கற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணுவேன்.

எனக்குன்னு எந்த ஆசையையும் வளர்த்துக்க மாட்டேன் .நீங்க தேவை இல்லாம உங்க டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம்.

இன்னொரு முறை இது மாதிரி என் பின்னாடி வந்தீங்கன்னா என்ன செய்வேன்னு தெரியாது.

யோசிக்கவே மாட்டேன் போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன் .இனிமே பஸ் ஸ்டாப்ல, லைப்ரரியில தட்டுப்படற வேலை வேண்டாம் புரிஞ்சுதா..”

“இப்படி சொல்லிட்டா அப்படியே நான் கேட்பேன்னு நினைக்கிறாயா? “

“என்ன ரவுடி மாதிரி பேசறீங்க ..நீங்க வசதியானவரா இருக்கலாம் .அதுக்காக எல்லாரும் உங்களுக்கு கீழ இருக்கணும்னு அவசியம் இல்ல .

நீங்க நினைச்சது நடக்கணும்கிற அவசியம் இல்லை “.

“ஹலோ நான் கேட்டது என்ன நீங்க பேசுறது என்ன புரியுதா..”

“எனக்கு எதுவும் புரிஞ்சுக்க தேவையில்லை .எனக்கும் ஓரளவுக்கு உங்கள பத்தி நல்லாவே தெரியும் .

ரொம்ப வசதியான வீட்டுப் பையன் .உங்களுக்கு எத்தனையோ பிசினஸ் இருக்கு. அதனால தான் உங்களுக்கு நிதர்சனம் புரியல .

மிடில் கிளாஸோட வலி என்னன்னு உங்களுக்கு தெரியலை .என்னால என்னோட அப்பாவுக்கு தலை குனிவு வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்.

இப்ப மட்டும் இல்ல எப்பவுமே.. தேவை இல்லாம என் பின்னாடி சுத்துறத விட்டுட்டு உங்க பின்னாடி எப்பவுமே ஒரு கூட்டம் சுத்துதே அவங்கள்ல ஒரு பொண்ண சூஸ் பண்ணி அவங்க பின்னாடி போற வழிய பாருங்க”.

“ ஹலோ என் மனசுல இருக்கிறது யார் என்பதை நான் தான் முடிவு பண்ணனும் நீ சொல்லி கேட்க வேண்டியது இல்லை. எனக்கு பிடிச்ச பொண்ணுனா அது நீதான்..”

“இந்த விளையாட்டு எல்லாம் இங்க வேண்டாம் .ஒழுங்கா உங்க வேலைய மட்டும் பாருங்க.

இன்னொரு முறை எனக்கு எதிர்ல வர வேண்டாம் . எப்பவுமே இதே மாதிரி இருக்க மாட்டேன் .உண்மையிலேயே நான் ரொம்ப கோவக்காரி.. தைரியமானவ.. யோசிக்க மாட்டேன். ஏதாவது செஞ்சுடுவேன் பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு நகர அதே நேரத்தில் நந்தனின் நண்பன் சஞ்சய் அங்கே வந்தான்.

“ என்னடா ரொம்ப கோபமா கத்திட்டு போற மாதிரி இருக்குது .ஒரு வழியா பேசிட்ட போல இருக்கு .
தைரியம் வந்துருச்சா” என்று கிண்டலாகக் கேட்க ..

“நீ வேற விளாசு விளாசுன்னு விளாசிட்டு போறா.. எனக்கு தான் அவ கிட்ட என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. திரு திருன்னு முழிச்சுக்கிட்டு இருக்குறேன் .”

“டேய் நந்தா.. நான் தான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன்ல .இந்த பொண்ணு எல்லாம் உனக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு..

இது குடும்பம் வீடுன்னு இருக்கற பொண்ணு. கடைசி வரைக்கும் உன் முகத்தை கூட பார்க்க மாட்டாள்.”

“ உனக்கு தெரியாது டா..அந்த கண்ணு.. அந்த கண்ணு என்கிட்ட எதையோ பேசிக்கிட்டு இருக்குது. என்னால அவளை பார்க்க முடியல. அந்த கண்ணுக்காகவே உயிரை கொடுக்கலாம் “.

“சரிதான் பித்தம் தலைக்கு ஏறி உளரிகிட்டு இருக்கற.. எப்படியோ அந்த பொண்ணு சார்பில் ஸ்டேஷன் வரைக்கும் போவேன்னு எனக்கு தோணுது.

இப்ப சொல்றது தான் கேட்டுக்கோ..அது மாதிரி ஒரு நிலைமை வந்ததுன்னா முதல்ல நீ எனக்கு கூப்பிடு. என்னாலான உதவி வந்து சேரும்.

ஏன்னா உன் வீட்டுக்கு தெரிஞ்சதுன்னா பாவம் அவங்க ரொம்ப பதறி போயிடுவாங்க .

என் பையன் ரொம்ப சாது .யார்கிட்டயும் பேசமாட்டான். சமத்துப்பையன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.

இங்க என்னடான்னா.. இந்த பையன் ஆறு மாசமா ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்குறான்.

அந்த பொண்ணு இன்னைக்கு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு போறா ஆனாலும் சோ க்யூட் டா நீ ..

அந்த பொண்ணு கிட்ட பதில் சொல்ல முடியாம முழிச்சத பார்க்கும் போது எனக்கே சிரிப்பு சிரிப்பா வந்துச்சு .

நானே வந்து இடையில பேசி காப்பாற்றி விடலாம் என்று தான் நினைச்சேன் .அதுக்குள்ள அந்த பொண்ணே.. ஐயோ பாவம்னு விட்டுட்டு போயிட்டா..”

“சரி இப்போ கேண்டீன் போகலாமா ..”

“லைப்ரரிக்கு போகலாம் புரிஞ்சுதா ..டாக்டருக்கு படிக்க வந்துட்டு பொறுப்பு வேண்டாம்”.

“ சரிதான் இத நீ சொல்றியா.. நல்லவேளை இன்னைக்கு இந்த நேரத்துக்கு அந்த பொண்ண பார்த்த.. ஒருவேளை காலேஜ்ல பார்த்து இருந்தேன்னா நடக்கிறதே வேற மாதிரி இருந்திருக்கும்..”

“ஏண்டா இப்படி சொல்ற “.

“பின்ன இல்லையா.. காலேஜ்ல பாதி பொண்ணுங்க உன் பின்னாடி தான் சுத்துறாங்க. இந்த பொண்ணு கிட்ட நீ பேசி இருக்க முடியுமா..”

“ஆமாண்டா இந்த காலேஜ்ல அது ஒரு பிரச்சனை.. இந்த பொண்ணுக்கு ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல. என்கிட்ட அப்படி என்ன இருக்குதுன்னு இப்படி சுத்துறாங்கன்னு தெரியல.”

“பணம் அது ஒன்னு போதாதா”.

“ விடுடா..பார்த்துக்கலாம்.. ஆனால் படிப்புல எப்பவுமே காம்ப்ரமைஸ் கிடையாது..

அது அப்பா ,அம்மாவோட கனவு அத கரெக்டா செய்யணும்.அது மட்டும் இல்ல நான் பெரிய சர்ஜன் ஆகணும்.

அதுதான் என்னோட ஆசை இதோ மூன்றாவது வருஷம் முடியப்போகுது . இன்னும் ரெண்டு வருஷம்.. அதுக்கு பிறகு மேல படிக்கணும்.

எனக்கு நிறைய கனவு இருக்கிறது. அதை எல்லாம் நிறைவேற்றணும்.”

“எல்லாம் கரெக்டு அப்புறம் என்ன இது சைடுல ..”

“இது காதல் டா .இது வேற பிசினஸ். நிச்சயமா இந்த பொண்ணு தான் எனக்கு மனைவியா வரப்போறவ..

அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல .லைஃப் எப்பவுமே ஒரே மாதிரி போகக்கூடாதுல்ல.. நமக்கும் கொஞ்சமா டைம் பாஸ்க்கு ஏதாவது சைடுல வேணும்ல .அது தான்..
இந்த பொண்ண பார்த்து பேசிட்டே இருக்கணும்.”

“ இது ரொம்ப தப்பு டா..எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது அந்த பொண்ணுக்கு முதல்ல உன் பேர்ல நல்லா அபிப்ராயம் வரணும் .”

“அதெல்லாம் வரும். வராம எங்க போயிட போகுது.”

“எனக்கு அப்படி தோனலை நண்பா .ஏன்னா எப்பவுமே ஒரு கூட்டம் உன் பின்னாடி சுத்திக்கிட்டுதான் இருக்குது.”

“ அது வேற இது வேற ..”

“எப்படி வேற வேற.. சொல்லு முதல்ல தெரிஞ்சுக்கறேன். “

“என் கூட இருக்கிறவங்க என் பின்னாடி சுத்துறவங்க எல்லாருமே என்னோட பிரண்டுங்க .”

“நீ தான் அப்படி சொல்லிக்கற.. ஆனா இங்க காலேஜ்ல வேற மாதிரி தான் பேசுறாங்க.”

“ வேற மாதிரினா எப்படி”.

“ நீ பணக்காரன் .அந்த காசுக்காக தான் இப்படி சுத்துறதா சொல்றாங்க “.

“சும்மா இருடா பாதி பேர் என்கிட்ட ஹெல்ப் தான் கேட்கிறார்கள் .உதவி செஞ்சு தரேன் .மத்தபடி எக்ஸ்ட்ராவா நான் யார்கிட்டயும் பேசுறது இல்லையே.

என்றைக்காவது யார்கிட்டேயாவது வழிஞ்சு பேசி நீ பார்த்திருக்கிறாயா? “

“பார்க்கல ஆனா எப்பவுமே ஒரு கூட்டம் உன்னை பிசியாவே வெச்சி இருக்குது. கொஞ்சம் யோசிச்சு பாரு.

விலகி இருந்து ஒருத்தவங்க பார்க்கும் போது உன் பேர்ல எந்த மாதிரி அபிப்பிராயம் வரும்.

பொண்ணுங்க கூடவே இருக்கிறான் .அப்படின்னா இவன் சரியான பொம்பள பொறுக்கி போல இருக்கு .இது மாதிரி தான தோணும் “.

“டேய் என்னடா இப்படி சொல்லிட்ட ..”

“உண்மை தானே .நானே உன் கிட்ட பேசணும்னா தனியா நேரம் செட் பண்ண வேண்டியதா இருக்குது .

அந்த மாதிரி தானே இருக்குது. இப்ப பாரு காலேஜ்ல நீ இருந்தா அந்த இடம் ரணகளம் ஆயிருக்கும் .

இப்ப காலேஜ் முடிஞ்சது.. வெளிய வந்ததால இப்ப ஃப்ரீயா பேச முடியுது. இப்ப கூட யாராவது உன் பின்னாடி ஃபாலோ பண்ணிட்டு வந்தாலும் வந்து இருக்கலாம் தெரியுமா .”

“சும்மா மிரட்டாத.. வா வீட்டுக்கு போகலாம் .அம்மா ,அப்பா இரண்டு பேருமே உன்னை கூப்பிட்டுட்டு இருந்தாங்க..”

“ என்ன திடீர்னு”.

“ ரொம்ப நாளாச்சுதாம் நீ வந்து..

சஞ்சய் என் கண்ணுக்குள்ளயே இருக்கிறான் .எப்ப அழைச்சிட்டு வருவேன்னு அம்மா கேட்டாங்க. நானும் இன்றைக்கு கூப்பிட்டுட்டு வர்றதா சொன்னேன் .அதனால தான் உன்னை இங்க வர சொன்னேன்..”

ஓகே ஓகே வரேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களது வீட்டில் இருந்தான்.

எப்போதும் போலவே இப்போதும் அந்த வீட்டின் பிரமாண்டம் இவனை பிரமிக்க வைத்தது. கூடவே ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்கள் இவனை பார்த்து புன்னகைக்க.. பதிலுக்கு புன்னகைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

நந்தனின் தந்தை சுரேந்தர் இவனை பார்க்கவுமே” வா..வா சஞ்சய். ரொம்ப நாளாச்சு பார்த்து..” என்று கேட்டார்.

“ஆமாம்பா.. ரொம்ப படிக்க தராங்க .அதுக்கே நேரம் சரியா போயிடுது..”

“டாக்டர்னா சும்மாவா..சரி படிப்பெல்லாம் எப்படி போகுது “.

“அது நல்லா போகுதுப்பா .”

“சரி பேசிக்கிட்டு இரு வரேன்.” என்று சொல்லிவிட்டு நகர அடுத்ததாக நந்தனின் தாயார் இவனை பார்த்து..”வாடா இப்ப தான் நேரம் கிடைச்சுதா..”என்று அழைக்க ..”அம்மா வந்துட்டேன்ல..”என்ற படியே உள்ளே சென்றான் .

இவர்கள் வந்த அரை மணி நேரத்திலேயே சுரேந்தர் வேலை விஷயமாக வெளியே சென்று இருக்க.. இவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.

கெளரி மெல்ல பேசியப்படியே அழைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைய..” என்னடா காசிப் பேச போறீங்களா. நான் இருக்கணுமா போகணுமா “என்ன சத்தமாக ஹாலில்லிருந்து குரல் கொடுத்தான் நந்தன் .

“போடா உனக்கு தெரியாத விஷயம் எதையாவது நான் பேச போறேனா என்ன?”கௌரி சொன்னபடியே உள்ளே நுழைய கூடவே சஞ்சையும் பின்னால் சென்றான்.

“அம்மா நத்தா மட்டுமல்ல நானும் எந்த தப்பும் பண்ணலை”.

“ டேய் உன்னை யாருடா சொன்னாங்க. யாருமே எந்த தப்பும் செய்ய மாட்டீங்க. எனக்கு நல்லா தெரியும். இது வேற விஷயம் வா” என்றவர் ஹாலில் அமர்ந்திருந்த நந்தனை பார்த்தபடியே..

“ஆமாம் நீ எதுக்கு இப்ப பயப்படற அப்படின்னா ஏற்கனவே உனக்கு விஷயம் தெரியும் அப்படித்தானே ..”

“ஐயோ என்ன விஷயம் .முதல்ல சொல்லுங்க. எனக்கு நிஜமாகவே ஒண்ணுமே புரியல.”

“உனக்கு தெரியுமா சஞ்சய் ..இப்ப கொஞ்ச நாளா நந்தாகிட்ட ஒரு மாற்றம் தெரியுது “.

“அம்மா அப்படியா.. எனக்கெல்லாம் அப்படி எதுவும் தெரியலையே.” நண்பன் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தபடி கூற ..”நான் சொல்றது வேறடா. நீ என்ன நினைச்சு எட்டி பாக்குற “.

“அப்படி இல்ல மா.. எப்பவும் மாதிரி தானே இருக்கிறான். என்கிட்ட வழக்கம் போல தான் பேசறான் .சிரிக்கிறான். அதுல எந்த வித்தியாசமும் எனக்கு தெரியலையே ..புதுசா நீங்க என்ன கண்டுபிடிச்சீங்க”.

“நான் ஒரு கேள்வி உன்னை கேட்க வந்தால் நீ என்னை திரும்ப நாலு கேள்வி கேட்டியா? உண்மைய சொல்லு.

நந்தா காலேஜ்ல யாரோ ஒரு பொண்ணை லவ் பண்றான். உண்மை தான..”

“ அப்படியா எனக்கு தெரியாதே. நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியுது.”

“ டேய் நந்தா காலேஜ்ல உன் பின்னாடி தான சுத்தறான் .ரெண்டு பேரும் எப்பவுமே பிரியறது இல்லை . எனக்கு நல்லா தெரியும்.”

“அம்மா நிஜமா எனக்கு தெரியாது . யார் மா அந்த பொண்ணு”.

“அதை தான் நான் கேட்கறேன்.. கரெக்டா பதில் சொல்லறத விட்டுட்டு நீ புதுசா ஒரு கேள்வியை கேட்கற..

அது எப்படி டா..அவன் லவ் பண்றான்கறதை என்கிட்ட வந்து நேரடியா சொல்லுவானா..
இந்த நிமிஷம் வரைக்கும் சொல்லல “.

“பின்ன என்னம்மா என்னைக்காவது ஒரு நாள் வந்து சொல்ல போறான். உண்மையா இருக்கும் பட்சத்தில் ..”

“சும்மா இப்படி பிட்டு போடற வேலை எல்லாம் வேண்டாம். உனக்கு தெரியாம எதுவுமே நடக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும் .யார் அந்த பொண்ணு என்ன பண்றா.. அதை பத்தி சொல்லு”.

“ அம்மா மறுபடியும் முதல்ல இருந்தா..நெஜமாவே எனக்கு எதுவும் தெரியாது .நான் சிவனேன்னு காலேஜுக்கு போறேன் .திரும்பி என்னோட ஹாஸ்டல் ரூமுக்கு போறேன் .வேற எங்கேயும் போறது கிடையாது .

சரி நீங்க இவ்வளவு தூரம் சொல்லும் போது உண்மையா தான் இருக்கும்.

எப்படி கண்டுபிடிச்சீங்க. அதை சொல்லுங்களேன் “.

“அதுவா அன்றைக்கு ஒரு நாள் இந்த நந்தன் பையனை எக்சசைஸ் பண்ண எழுப்பி விடப் போனேன் .அவன் தான் ஏதோ ஒரு பொண்ணு பேரை சொல்லி உளறிட்டு இருந்தான்.

அத வச்சு தான் நான் கெஸ் பண்ணினேன். அப்புறமா அவன் அந்த பக்கம் போன பிறகு அவனோட மொபைல் எல்லாம் எடுத்து செக் பண்ணி பார்த்தேன் .”

“கண்டுபிடிச்சீங்களா.. ஏதாவது தெரிஞ்சதா”.

“ போடா நீ வேற.. நிறைய போட்டோஸ் இருந்தது. அதுல நிறைய பொண்ணுங்க இருக்காங்க .

அந்த பொண்ணுங்கள்ள எந்த பொண்ணுன்னு நான் எப்படி கண்டுபிடிக்கறது. அதுக்காக தான் உன்னைய இங்க இன்னைக்கு அழைச்சிட்டு வர சொன்னேன் “ .

“சரிதான் ரொம்ப தெளிவா இருக்கீங்க .ஆனா பாருங்க எனக்கும் எதுவும் தெரியாது .

அவனுக்கு நிறைய ஹெல்ப்பிங்க் மைன்ட் செட் உண்டு .எப்பவுமே கூட நிறைய பேர் அவன் பின்னாடி சுத்துவாங்க .”

“அதெல்லாம் தப்பு கிடையாது டா .மத்தவங்களுக்கு உதவி செய்யறது ஒன்னும் தப்பு எல்லாம் இல்லை.. அத அவன்கிட்டேயே சொல்லி இருக்கிறேன் .”

“அப்புறம் என்ன மா உங்களுக்கு பிரச்சனை”.

“சரி பேச்ச மாத்தாத ..உனக்கு தெரியுமா தெரியாதா”.

“ அம்மா நெசமாவே யாருன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சா நான் உங்ககிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போறேன் .

இந்த விஷயம் உங்களுக்கு மட்டும் தெரியுமா. இல்ல அப்பாவுக்கும் தெரியுமா “.

“அப்பாகிட்ட நான் இன்னும் சொல்லல .எனக்கு மட்டும் தான் தெரியும்.”

“ ஹப்பா நல்ல வேளை தெரியவில்லை.. ஒரு வேளை நீங்கள் அப்பா கிட்ட ஏதாவது உளறி வைத்திருந்தீங்கன்னா நெஜமாவே அவங்க கிட்டயும் நான் பதில் சொல்ல வேண்டியதா இருக்கும்”.

“ என்னடா என்னவோ கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்ட மாதிரி சலிச்சுக்கிற..

இந்தா.. இந்த காபி, ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்துட்டு போயி நந்தா கிட்ட பேசிகிட்டு இரு வரேன் .அப்புறமா இன்னொரு விஷயம் “.

“என்னம்மா சொல்லுங்க.”

“ நான் கேட்ட விஷயத்தை நீ நந்தா கிட்ட சொல்லக்கூடாது. புரிஞ்சதா”.

“இதையெல்லாமா சொல்லுவாங்க. ஆளை விடுங்கம்மா.”
கையில் தந்ததை வாங்கிக் கொண்டு நகர ..அவன் நகரவுமே..” நல்ல பையன் தான் ஆனா இந்த நந்தன் கூட சேர்ந்து நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டான் .

அவன் தான் கல்லூலிமங்கன் வாயை திறந்து
சொல்ல மாட்டேங்குறான். அதே மாதிரி இவனும் வாயை திறந்து சொல்ல மாட்டேங்குறான். ஆனால் உங்க கிட்ட இருந்து எப்படி வார்த்தையை வாங்கணும்னு எனக்கு நல்லா தெரியும்.

பாக்கலாம் எத்தனை நாளைக்கு இப்படியே மறைச்சு வச்சுட்டு சுத்த போறீங்கன்னு” சொன்னபடி நகர்ந்தார் கௌரி.
 

NNK-15

Moderator
2


அன்று.


நேரம் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது .


அந்த லைப்ரரியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க.. சரண்யா அவளுக்கு வேண்டிய புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தாள்.


நாலாவது ரோவில் உயரமான இடத்தில் இவள் தேடிய புத்தகம் இருக்க எடுப்பதற்கு சற்று சிரமமாகவே இருந்தது .

எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்க.. அப்போது அந்த குரல் அவளை இடை மறித்தது.


“ அதுதான் எடுக்க வரலல்ல.. யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்க வேண்டியதுதானே “என்று சொன்னபடியே நந்தா எளிதாக புத்தகத்தை எடுக்க.. தனக்கு அருகே நெருக்கமாக நின்றவனை சற்று அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள்.


“ என்ன அப்படி முட்ட கண்ண வச்சு பார்த்தா என்ன அர்த்தமாம்!! எந்த புக் இதுல வேணும் “என்று கேட்க ..


“எனக்கு எதுவும் வேண்டாம்” என்று சொன்னபடியே வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.


இதயம் மத்தளம் வாசிக்க ஆரம்பிக்க இவ்வளுக்குள்ளும் ஒரு பதட்டம் , படபடப்பு .


‘நேத்து தானே அவ்வளவு தூரம் திட்டினோம். கொஞ்சம் கூட திட்டினது உரைக்கவே இல்லையா.

மறுபடியும் பேசுறாங்க’ மனதிற்குள் சொன்னவள் வேகமாக நடக்க ஆரம்பிக்க.. அவளை பின்தொடர்ந்து வந்தான் நந்தன்.


“ என்ன பேசாம போனா என்ன அர்த்தம் .”


“இத பாருங்க நேத்தே நான் உங்ககிட்ட சொல்லிட்டேன் .நான் இங்க வந்தது படிக்க ..


இது எவ்வளவு பெரிய காலேஜ் தெரியுமா .இங்க சீட் கிடைக்கிறதே ரொம்ப ரொம்ப ரேர் ..நான் படிக்க ஸ்காலர் ல இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன் .


என்னை தயவு செய்து படிக்க விடுங்க” என்றவள் நிமிர்ந்து பார்த்தாள் .


நேற்றைக்கு பார்த்த நந்தனுக்கும் இப்போது பார்க்கும் நந்தனுக்கு நிறைய வித்தியாசம் இருந்தது.


காலேஜில் பாதி கிளாசில் இருந்து வெளியே வந்திருப்பவன் போன்ற தோற்றம்..


ஃபார்மலான உடைக்கு மேலாக போட்டிருந்த வெள்ளை கோர்ட் இன்னும் அவனை உயரமாக ஹேண்ட்ஸ்மாக காட்டியது.


ஒரு நிமிடம் முகத்தை பார்த்தவள் பேசிய படியே நடக்க..

“ இங்க நான் மட்டும் எப்படி வந்திருக்கறேனாம்.. நானும் படிச்சு ஸ்காலர்ல தான் இங்க செலக்ட் ஆகி வந்து இருக்கிறேன் .


என்னோட பணத்தை வச்சு வரலை. உனக்கு தெரியுமா” என கேட்டபடியே பின் தொடர்ந்தான் .

“ஏன் இந்த காலேஜ்ல சேர்ந்தேன்னு யோசிக்க வைக்காதீங்க .இங்க மெடிக்கல், ஆர்ட்ஸ்ன்னு எல்லா டிபார்ட்மெண்ட்டும் ஒன்னா ஒரே பில்டிங்கில் வைத்தது காலேஜ்ஜோட தப்பு போல இருக்குது .


அதுவும் ஒரே ஒரு லைப்ரரிய கட்டி வச்சு மொத்த ஸ்டூடண்ட்சும் இங்கே வந்து எடுத்துக்கலாம்னு வெச்சிருக்கற இந்த ஸ்கீம் ரொம்ப ரொம்ப மோசம். உங்கள காலையில இங்க பார்க்க வேண்டிய அவசியம் வந்திருக்காது “.


“நல்ல கேள்விதான் நானும் லைப்ரரில புக் எடுப்பதற்காக தான் வந்தேன் . உன்னை பார்க்கவும் ஆச்சரியமா போயிடுச்சு .


தினமும் இந்நேரத்துக்கு தான் வருவியா .”


“ஏன் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க .”


“ஜஸ்ட் உதவி செய்ய தான்..”


“பொறுக்கி மாதிரி பேசாதீங்க.. உங்க உதவிக்கு நான் காத்திருக்கலை..தேவை படற நிறைய பேர் இருக்கிறார்கள். அவங்க கிட்ட போயி உங்க உதவிய செய்யுங்கள் எனக்கு தேவையில்லை.”


“ஹலோ என்ன ?நானே தேடி தேடி வர்றதால இவ்வளவு பிகு பண்ணிக்கிறியா என்ன?.”

கோபமாக பதில் தர வேண்டும் என திரும்பியவளை வேறு ஒரு பெண் வந்து காப்பாற்றி இருந்தாள்.


“நந்தா.. இந்நேரத்துக்கு இங்க வந்திருக்கற..தெரிஞ்ச பொண்ணா என்ன.. பேசிக்கிட்டு இருக்கற” என்று இவனிடம் வந்து நிற்க..” அது வந்து “என்று ஆரம்பிக்கும் போதே இவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள்.


“நேற்றைக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்து இருந்தாங்கல்ல .எனக்கு அது புரியவே இல்ல கொஞ்சம் விளக்கமா சொல்லணும் அதுக்காக தான் உன்னை தேடி வந்தேன் “.


“சரி.. சரி சொல்லி தரேன்.” என்று கேட்ட படியே அவளோடு நகர்ந்து இருந்தான்.


அதே நேரத்தில் அவனை விட்டு நகர்ந்து சென்ற சரண்யாவோ அவனைத்தான் திட்டியபடி நடந்தாள்.


“ ஒரே காலேஜ் தான்.. காலேஜுக்கு இடையில வந்து தொந்தரவு பண்ணினது இல்ல. வெளியே அங்கங்கே வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருந்தான் .


இன்னைக்கு நேரா லைப்ரரி வரைக்கும் வந்தாச்சு. இது இன்னும் எங்க கொண்டு போய் விடும்னு தெரியவில்லை.


கடவுளே இன்னமும் மூணு வருஷம் இருக்குது. மேல ரெண்டு வருஷம் படிக்கலாம் என்கிற ஆசை வேற இருக்குது. இவன் என்னை படிக்க விடுவானா..


என்னால தொடர்ந்து இங்க படிக்க முடியுமா இல்ல காலேஜை மாத்தி தான் ஆகணுமா.


இந்த காலேஜ் வேண்டாம்னு சொன்னா நிறைய பிரச்சனை வரும் .அப்பா ஏன் எதுக்கு என்று கேப்பாங்க ..


பார்த்தா மோசமானவன் மாதிரியும் தெரியல. சொன்னா புரிஞ்சிக்குவானா.. யோசித்தபடியே வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.


நேராக பஸ் ஸ்டாப் சென்று நின்றவளுக்கு அன்று வேறு ஒரு பிரச்சனை தொடங்கியிருந்தது .


வழக்கமாக பஸ் ஸ்டாப்பில் நிறைய பெண்கள் நின்றிருப்பார்கள். கூடவே இவளும் சேர்ந்து நின்று கொள்வாள்.


பஸ் வந்த உடனேயே பஸ்ஸில் ஏறி நேராக வீட்டிற்கு சென்று விடுவாள். இது தான் அவளுடைய அன்றாட வாடிக்கையான நிகழ்வு.


அன்றைக்கும் அங்கே சென்று நிற்க.. வேறு காலேஜ்ஜை சேர்ந்த சில மாணவர்கள் அங்கே நின்றிருந்த பெண்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.


முதலில் பெரியதாக கண்டுகொள்ளவில்லை சரண்யா .


நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக நகர இவள் செல்வதற்கான பஸ் இன்னமும் அங்கே வந்திருக்கவில்லை.


இப்போது பயம் சற்றே தொற்றிக் கொண்டது .


அஞ்சு மணியை நெருங்க ஆரம்பிக்க இப்போது இவளோடு கூடவே நின்றிருந்தது சில பெண்கள் மட்டுமே ..


அவர்களும் கூட அடுத்த பஸ்ஸில் ஏற போக இப்போது தனித்து நின்றிருந்தால் சரண்யா .


அவர்களின் கிண்டல் நேரத்திற்கு நேரம் அதிகமானதே தவிர குறைவது போல தெரியவில்லை.


அவர்கள் இவளை நெருங்க சற்றே பயத்தோடு பின் நகர ஆரம்பித்தாள்.


அதே நேரத்தில் அந்த வழியாக சஞ்சய் வந்து கொண்டிருந்தான் தன்னுடைய வண்டியில்..


பஸ் ஸ்டாப்பை இவளை பார்க்கவும் சற்று வண்டியை நிறுத்தி இவளை பார்த்து குரல் கொடுத்தான்.


“ ஹலோ சரண்யா என்ன இன்னமும் பஸ் வரலையா.. எனக்காக தான் வெயிட் பண்றீங்களா” என்று கேட்க.. இவளோ மனதுக்குள்’ அடடா இன்னொரு பிரச்சனையா. ஏற்கனவே இந்த பிரச்சனையே முடியல ‘மனதில் பயம் தோன்ற திரு திரு என விழித்துக் கொண்டிருந்தாள்.


அதே நேரத்தில் அந்த நால்வர் கூட்டம் இவளை மிகவும் அருகே நெருங்கியிருந்தனர்.


“என்ன சரண்யா என்னை அடையாளம் தெரியலையா.. உங்க பிரண்டு பேரு நிலா தானே.. நான் நிலாவோட அண்ணா .ஏற்கனவே நம்ம பார்த்து பேசி இருக்கிறோமே” என்று சொல்ல..” ஆமாம்” என்பது போல வேகமாக தலையாட்டினாள்.


அதே நேரத்தில் பஸ் வரவுமே “இதுதான நீ வழக்கமாக போற பஸ்.. போய் ஏறிக்கோ “என்று சொல்லி அவளை பஸ்ஸில் ஏற்றி விட்டுவிட்டு சஞ்சய் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான் .


இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை .சஞ்சயை இதுவரைக்கும் பார்த்தது கூட கிடையாது. ஆனால் எப்படி தன்னுடைய பெயர் தெரியும்.


தன்னுடைய ப்ரெண்டின் பெயரை கூட சொல்கிறானே.. என யோசித்தபடியே புறப்பட்டு இருந்தாள் சரண்யா.


வீட்டிற்கு செல்லவும் அன்றைக்கு இவளுடைய தந்தை சற்றே சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்திருந்தார் .


“என்ன பாப்பா ரொம்ப சோர்ந்து தெரியற “என்று கேட்க.. “ஆமாம்பா பஸ்ல ரொம்ப கூட்டம் .கொஞ்சம் லேட்டாகிடுச்சு .என்னப்பா நீங்க வீட்ல இருக்கீங்க .”


“அதுவாடா உடம்புக்கு கொஞ்சம் சரியில்லாத மாதிரி இருந்தது அதனாலதான் இன்னைக்கு கடையை அடைச்சிட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டேன் .


உன்னை கூட அழைச்சிட்டு வர பஸ் ஸ்டாப் வரலாம்னு நெனச்சேன் .ஆனா அம்மா தான் விடல .”


“ஏம்பா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வழக்கமா போயிட்டு வர்ற மாதிரி வந்துடுவேன். என்னப்பா செய்யுது உடம்புக்கு..”


“ அதுவா பாப்பா காலையில சாப்பிட்டது எதுவோ சேரலை போல இருக்கு. ஃபுட் பாய்சன் மாதிரி.. வயிறு வலி வேற.. மாத்திரை வாங்கி போட்டுட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டேன்.

உனக்கு காலேஜ் செட் ஆயிடுச்சா “.


“என்னப்பா இது ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு .இப்ப வந்து கேக்குறீங்க”.


“ இல்ல படிக்கிறதுக்கு எல்லாம் ஈஸியா இருக்குதா.. முதல்ல ரொம்ப கஷ்டமா இருக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னியே”.


‘ ஆமாப்பா அங்கே எல்லாருமே இங்கிலீஷ்ல பேசுறாங்க .அது கொஞ்சம் கஷ்டமா இருந்தது ஆனா இப்போதைக்கு பிரச்சனை இல்லப்பா .


இப்ப எல்லாமே நார்மல் ஆகிடுச்சு .”


“சரி புதுசா ஃப்ரெண்டுங்க கிடைச்சிருக்காங்களா”.


“ அதெல்லாம் காலேஜ்ல எல்லார்கிட்டயும் பேசுறேனே” என்று சொன்னபடியே தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் .


யோசனை முழுக்க சஞ்சயை சுற்றி இருந்தது.


‘யார் அவர்.. சரியான நேரத்தில் வந்து உதவி செஞ்சாரு. நாளைக்கு காலேஜ் போனா நிலா கிட்ட கேட்கணும் .


ஒரு வேலை அவளுக்கு தெரிஞ்சவரா இருந்தா இன்னிக்கு செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லணும்’என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.


அதே நேரத்தில் சஞ்சய் நந்தனிடம் அழைத்து பேசிக் கொண்டிருந்தான்.


“ உன்னோட ஆள் தான் இன்னைக்கு பஸ் ஸ்டாப்ல வகையா சிக்கி கிட்டா போல இருக்கு .


அந்த காலேஜ் பசங்க ரொம்ப சேட்டை பண்றானுங்கடா.. முன்ன மாதிரி இல்ல .


பஸ் ஸ்டாப்ல எந்த பொண்ணுங்களையும் நெருக்க விடறது இல்ல .


அவனுங்களை பார்த்தா படிக்கிற பசங்க மாதிரியே இல்ல .பொறுக்கி பசங்க மாதிரி இருக்கிறாங்க.


அந்த காலேஜ்ல பான்பராக் ,கஞ்சான்னு சரளமாக உள்ள நுழையுது போல இருக்கு .இன்னைக்கு சரியான நேரத்துல போனேன் . இல்லாட்டி அந்த சரண்யா பொண்ணு பாவம் தான் .ரொம்ப பயந்திருப்பா..”


“ என்னடா சொல்ற..”


“ பயப்படாதே சேஃபா உன்னோட சரண்யா பஸ் ஏறி கிளம்பிட்டா .ஆனா இந்த பசங்களை ஏதாவது செய்யணும் டா.”


“ சரி விடு நாளைக்கு பாத்துக்கலாம் .நம்ம பசங்க கிட்ட சொல்லி வச்சிடு. நாளைக்கு அந்த பசங்க அங்க பஸ் ஸ்டாப் வந்தாங்கன்னா நம்ம போயி பார்த்துக்கலாம் .


நாளைக்கு கொடுக்கிறதுல இனி எப்பவுமே அந்த பஸ் ஸ்டாப் பக்கம் வரக்கூடாது”.


‘ என்னடா நீ சொல்றத பார்த்தா சண்டை போட போறியா என்ன?”


“ ஏன் போட்டா என்ன தப்பா.. சரண்யா கிட்டையே வம்பு இழுக்கிறாங்கன்னா சும்மா விட்ருவேனா.. “


“அப்படின்னா சரிடா .நானும் இங்க பசங்க கிட்ட சொல்லி வச்சிடறேன் .ஏற்கனவே இத பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க ஆனா இன்னைக்கு ரொம்ப ஓவரா போயிடுச்சு .ரெண்டு மூணு பொண்ணுங்க கையை எல்லாம் பிடித்து இழுத்திருக்கறாங்க..”


“ம்ம்..”


“சரி போனை வைக்கிறேன் .நாளைக்கு பார்க்கலாம் “என்று போனை வைக்க.. இரவு முழுவதுமே சரண்யாவை பற்றி யோசித்துப்படியே கண் அமர்ந்தான் நந்தன்.


அடுத்த நாள் காலேஜ் சென்றவள் பார்வை சஞ்சயை தான் தேடியது .


எங்காவது தென்படுகிறானா நன்றி சொல்லி விடலாம் என தேட மாலை வரையிலுமே அவன் கண்களுக்கு தென்படவே இல்லை.


அருகில் அமர்ந்திருந்த நிலாவிடம் கேட்க ..அவளுக்குமே அந்த பேரில் யாரையுமே தெரியவில்லை.


“அந்த பேர்ல எனக்கு யாரையுமே தெரியாது .நிஜமா என் பேரு தான் சொன்னாங்களா.. வேற யாராவது நிலாவா இருக்க போறாங்க .”


“இல்ல நிஜமாகவே உன்னோட அண்ணான்னு தான் சொன்னாங்க .”


“அப்படியா எனக்கு தெரியாம.. எனக்கு ஒரு அண்ணாவா.. சரியா போச்சு. எனக்கு ஒரே ஒரு சிஸ்டர் மட்டும்தான் இருக்கிறா.. அவ கூட டென்த் படிச்சுக்கிட்டு இருக்குறா..


யாரோ உன்கிட்ட நல்லா தலையில மிளகாய் அரைச்சிருக்காங்க .நீயும் அதை நம்பிகிட்டு என்கிட்ட வந்து விசாரிச்சுக்கிட்டு இருக்குற..”


“ இல்ல அப்படி இல்ல ..தப்பா எல்லாம் எதுவும் பேசல .நேத்து அந்த பொறுக்கி பசங்க வழக்கமா நிப்பாங்க இல்லையா .


அவங்க அங்க வந்து ரகளை பண்ணினாங்க .அப்ப அவர்தான் வந்து என்கிட்ட பேச்சு கொடுத்த பஸ்ல ஏத்தி அனுப்பிவிட்டார் .”


“ஏற்கனவே உன்னை தெரிஞ்சிருக்குமா இருக்கும். பிரச்சனையில் இருக்கற அப்படிங்கிறதுக்காக ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணி உன்னை நகர்த்தி விட்டிருக்கிறார். நியாமா நீ நன்றி சொல்லி இருக்கணும் .”


“கரெக்டு தான் ஆனா ஆளே தெரியாம யார் கிட்ட போய் நன்றி சொல்றதாம்.


இந்த காலேஜ்ஜா இருந்தா இன்னைக்கு இல்லாட்டி எப்பவாவது ஒரு நேரம் கண்ணுக்கு முன்னாடி வந்து நிப்பாரு .அப்ப பார்த்து நன்றி சொல்லிடு சரியா.


இப்போ நாம கிளம்பலாம் சரியா “என்று சொல்ல.. நேற்றைக்கு போல மறுபடியும் வந்து ரகளை செய்வார்களோ என்கின்ற பதட்டம் லேசாக இவள் மனதில் இருந்தது.


“ என்ன நேத்து மாதிரியே யாராவது வம்பு பண்ணுவாங்கன்னு நினைக்கிறியா .


நேற்றைக்கு ரகளை பண்ணி இருந்ததால காலேஜ்ல பாதி பேருக்கு தெரிந்திருக்கும். நிச்சயமா இன்றைக்கெல்லாம் அந்த பசங்க இந்த பக்கம் வர மாட்டாங்க. பயப்படாம வா” என்று அழைக்க.. சொன்னது போலவே அன்றைக்கு யாருமே அங்கே வந்து எந்த ரகளையிலும் ஈடுபடவில்லை.


ஒரு வாரம் சற்று அமைதியாக நகர்ந்தது .எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லை.


வழக்கம் போல நாட்கள் வேகமாக செல்ல ஆரம்பித்தது.


சரண்யா நந்தனை மட்டுமல்ல சஞ்சயை கூட மறந்திருந்தாள். ஏனென்றால் அன்றைக்கு நந்தன் பேசிய பிறகு அவனை எங்கேயும் அவள் பார்க்கவில்லை.


சரியாக ஒரு வாரம் கடந்திருக்க அன்றைக்கு மறுபடியும் அதே மாணவர்கள் வந்து ரகலையில் ஈடுபட ..இப்போது அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு ஜீப் ,இரண்டு வீலர் என வந்து நிற்க.. இறங்கியவர்கள் வம்பு செய்து கொண்டிருந்த மாணவர்களை தாக்க ஆரம்பித்தனர் .


சில நிமிடங்களிலேயே அங்கே கலவரம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது .


பெண்கள் சற்றே பாதுகாப்பான இடத்தில் நகர்ந்து நிற்க நந்தன் வம்பு பேசிய மாணவர்களை அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் கூடவே அவனுக்கு உதவியாக சில மாணவர்கள் களத்தில் புகுந்திருக்க ..சிறிது நேரத்திலேயே சண்டை பெரியதாக ஆரம்பித்திருக்க, யாரோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் போலீசுக்கு அழைப்பு விடுத்திருந்தார் .


சில நிமிட நேரங்களிலேயே போலீஸ் வண்டி அங்கே வந்து நிற்க ,மொத்த பேரையுமே நிறுத்தி வண்டியில் ஏற்ற ஆரம்பித்திருந்தனர்.


அருகில் நின்றிருந்தவர்களிடம் விசாரிக்க ,யாருமே சரியான பதில் கூறவில்லை .ஆனால் சரண்யா யோசிக்காமல் வந்திருந்த போலீசாரிடம் பேசினாள்.


“ இந்த பசங்க கொஞ்ச நாளாவே இங்க வந்து ரகளை பண்ணிக்கிட்டு இருக்காங்க.


இன்னைக்கு வழக்கம் போல தான் இங்க வந்து பேச ஆரம்பிக்கும் போது இவங்க எல்லாம் வண்டில வந்து இவங்கள தாக்க ஆரம்பிச்சிட்டாங்க “என்று சொல்ல..” யார் யார் அடித்தது” என்று கேட்டபடியே பார்க்க, யோசிக்காமல் நந்தினை நோக்கி கையை நீட்டியிருந்தாள்.


“இவங்க எல்லாம் யாரு தெரியுமா.”


“இவங்க யாரையுமே நான் பார்த்ததில்ல. இன்னைக்கு தான் பார்க்கறேன்.”


“உன் பேரு.. எங்க படிக்கிற.. வீட்டு அட்ரஸ் கொடுத்துட்டு போ.. ஏதாவது முக்கியமான விஷயம்னா விசாரிக்கணும்.”


“சாரி சார் .அப்பா கொஞ்சம் பயந்தவரு.. சட்டுனு போலீஸ் ஸ்டேஷனா பயந்திருவாங்க..

அதனால என்னால நீங்க கூப்பிட்டால் வர முடியாது.”


“ புரியுதும்மா ஜஸ்ட் போன்ல தான் விசாரிப்போம். பயப்பட வேண்டாம் . எனக்கும் பொண்ணு இருக்கிறாம்மா” என்றவர் வேகமாக நந்தனின் சட்டையை கொத்தாக பற்றிய படி ..”என்னடா நீங்க எல்லாம் பெரிய ரவுடிகளா. நீங்க எல்லாம் எங்க படிக்கிறீங்க” என்று விசாரிக்கப்படியே போலீஸ் ஜிப்பை நோக்கி நெட்டி தள்ளினார் .


போவதற்கு முன்னால் திருப்பி சரண்யாவை பார்க்க அவனின் கோப கண்களை பார்க்க முடியாமல் சட்டென்று திரும்பி நகர்ந்தாள் சரண்யா
 

NNK-15

Moderator
3


அன்று.


“எல்லாரும் படிக்கிற பசங்க தானே ..இப்படி பொறுக்கி பசங்க மாதிரி சண்டை போடுவாங்களா.. பார்க்கவே அசிங்கமா இருக்குது. சுரேந்தர்..நிஜமாகவே நம்ப முடியல.”


“ஐ அம் சாரி இப்படி ஆகும்னு நினைக்கல .நான் கண்டிச்சு வைக்கிறேன்.”


“ சுரேந்தர் சார் உங்களோட பையன்.. இப்படி ஒரு காரியம் பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல.


அப்பாவோட பேரை கேட்டு விசாரிக்கும் போது உங்க பேரை சொன்னான். எங்களுக்கு ஷாக்கிங் இருந்தது.


நீங்க எவ்ளோ பெரிய ஆள். எவ்வளவு நல்ல காரியங்களை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. ஆனா உங்களோட பையன் இப்படி ஒரு காரியம் பண்ணுவான்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.”


“ மனப்பூர்வமா சாரி கேட்டுக்குறேன். என்ன பிரச்சனை தெரியல . அவன் ரொம்ப நல்ல பையன் தான்.


யார் பிரச்சினைக்கும் இதுவரைக்கும் போனதில்லை. இதுவே எனக்கு ஷாக்கிங் தான்.


இந்த மாதிரி ஒரு இடத்தில் வந்து நிற்பான்னு நாக யோசிச்சது கூட இல்ல “.


“ஓகே ஓகே.. இப்போ யார் மேலேயும் நாங்க கேஸ் போடல. எல்லாருமே படிக்கிற பசங்க..


பியூச்சர்ல அவங்க வெளிநாடு போக வாய்ப்பு இருக்கு .சிலர் கவர்மெண்ட் வேலைக்கு கூட ட்ரை பண்ணுவாங்க .


அப்போ இந்த கேஸால பிரச்சனையாகும்.அது அவங்களுக்கு பெரிய இழப்பா இருக்கும் .அதனால எல்லாத்தையும் விட போறதா சொல்லி இருக்கிறேன்.


இன்னொரு தடவை இது மாதிரி நடந்துக்காம பார்த்துக்கோங்க” என்று சொல்லி நந்தனை அனுப்பி வைக்க.. அமைதியாக தந்தையோடு நகர்ந்தான்.


காரில் அமர்ந்தவர் வண்டியை கிளப்பாமல் மகனை திரும்பிப் பார்க்க..” ஐ அம் சாரிப்பா இவ்வளவு தூரம் பிரச்சனையாகும்னு நான் நினைக்கல .


பண்ணினது தப்புதான் இனி இது போல ஒரு காரியம் எப்பவும் செய்ய மாட்டேன்.”


“ நான் உன்கிட்ட எதுவும் கேட்கல நந்தா .ஆனா இவ்வளவு தூரம் ரகளை பண்ற அளவுக்கு என்ன நடந்துச்சு .


என்னால நம்பவே முடியல உன்னோட அம்மாவுக்கு தெரிஞ்சதுனா ரொம்ப வேதனைப்படுவா..


பொறுப்பான பையனா, நல்ல பையனா வளர்த்துக்கிட்டு இருக்கிறேன்னு அவளுக்கு கர்மமே உண்டு .அதுக்கு பெரிய அடி.. இன்றைக்கு செஞ்ச காரியம் ..


சரி பெருசா சண்டை போட்டு இருக்கிற.. எங்கயாவது அடி ஏதாவது பட்டிருக்கிறதா” என்று கேட்க.. கையே எடுத்து தந்தையிடம் நீட்டினான்.


“கையில தான் அடிப்பட்டு இருக்கிறது பா.. கைய அசைக்க முடியல “என்று சொல்ல.. அப்போது அந்த கை வீங்க ஆரம்பித்து இருந்தது..


வேகமாக கையை தொட்டுப் பார்த்தவர் .அவனுடைய முகத்தை பார்க்க.. நெற்றியிலும் சிறு காயம் அதிலிருந்து இரத்தம் வெளியே வர ஆரம்பித்து இருந்தது


வேகமாக கர்சிப்பை எடுத்து ஒற்றி எடுக்க ..”சாரிப்பா தப்பு என் பேர்ல தான் .”


“சரிடா டெய்லியும் அந்த பசங்க பிரச்சனை பண்றாங்க சரி.. அதை போலீஸ்கிட்ட சொல்லி இருக்கலாம் .இல்ல என்கிட்ட சொல்லி இருந்தா கூட அதற்கான ஆட்களை அனுப்பி நான் சரி பண்ணி இருப்பேனே.. நீயேன் பிரச்சினைக்குள்ள போகணும்....


நல்ல வேளை சரியான நேரத்தில் சஞ்சய் போன்ல கூப்பிட்டு பேசினான். இந்த மாதிரி அங்க பிரச்சனை போய்கிட்டு இருக்குது .நந்தா போயிருக்கறான் அப்படின்னு..”


“அப்பா இன்னைக்கு சஞ்சய்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை இல்லாட்டி அவனும் என் கூட புறப்பட்டு வர வேண்டியது .”


“நல்ல வேலை டா தேவையில்லாம அந்த பையனையும் பிரச்சனைக்குள்ள இழுத்து விட பார்த்திருக்கிற.. அவனாவது எந்த பிரச்சினைக்கும் போகாம கரெக்ட்டா இருக்கட்டும்”.


“ இல்லப்பா நான் பிரச்சனை பண்ற ஆள் எல்லாம் இல்ல. உங்களுக்கு தான் நல்லா தெரியுமே ..


நான் யார்கிட்டயும் இதுவரைக்கும் சண்டை எல்லாம் போட்டது இல்லை“.


“இன்னைக்கு அதுதான் எனக்கு பெரிய ஷாக்கா இருக்குது. சரி.. ஓகே விடு . நான் உன் கிட்ட எதையும் கேட்கல .வீட்டுக்கு போகலாம்.. அதுக்கு முன்னாடி முதல்ல ஹாஸ்பிடலுக்கு போய் அந்த காயத்துக்கு கட்டு போட்டுட்டு வீட்டுக்கு போகலாம். அம்மா கிட்ட கேட்டா ஏதாவது சொல்லி சமாளி .”


“சரிப்பா “.


“ஒன்னு செய் நீ இப்படி சொல்லிடு.. வண்டியில் இருந்து விழுந்துட்டேன்னு சொல்லிடு. அம்மா நம்பிடுவா.


அங்க சண்டை போட்டது பற்றி எதுவும் சொல்ல வேண்டாம். ஸ்டேஷன் வரைக்கும் போனது எப்பவுமே அம்மா காதுக்கு போக கூடாது புரிஞ்சுதா “.


“சரிப்பா நான் ஏற்கனவே ஸ்டேஷனில் சொல்லிட்டேன் .யாரைப் பற்றியும் எந்த நியூஸ்சும் வெளியே வராது. இனியாவது கரெக்டா இருந்துக்கோ ..இன்னொரு தடவை இது மாதிரி பிரச்சினை வரக்கூடாது .உன் மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன்.


பெரிய சர்ஜன் ஆகணும் நிறைய பேரோட உயிரை காப்பாத்தணும் .இப்படி நிறையவே இருக்கு .உனக்காக ஒரு ஹாஸ்பிடல் கட்டி தர கூட நான் தயாரா இருக்கிறேன். ஆனா நீ இப்படி நடந்து கொள்வதை பார்க்கும்போது பயமா இருக்குது .”


“ ப்பா என்ன பா..இனி இது மாதிரி எதுவும் ஆகாது .நீங்க தலைகுனியள மாதிரி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன் .”


“எனக்கு நம்பிக்கை இருக்குது நந்தா.. நான் உனக்கு அப்பா மட்டுமல்ல .உன்னோட பிரண்டு மாதிரி ..


எப்ப எந்த பிரச்சனையினாலும் தைரியமாக என்கிட்ட வந்து நீ பேசலாம். இனி எப்பவுமே இதுபோல அவசர முடிவு எடுக்கக் கூடாது. எனக்கு பிராமிஸ் பண்ணு”.


“ நிச்சயம் ப்பா “என்று கையை பற்றிக்கொள்ள சரி என்பது போல தலையாட்டி விட்டு வண்டியை நகரத்தினார்.


கையில் லேசாக சதை பிசகி இருப்பதாக கூற.. சிறியதாக ஒரு பேண்டேட் சுத்தப்பட்டு அனுப்பி வைத்தனர்.


“கையை அசைக்க கூடாது இரண்டு நாட்களுக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் “என்று கூறி மாத்திரை கொடுத்து அனுப்பி இருக்க.. வீட்டிற்கு செல்லவும் கெளரி பார்த்து பதறி விட்டார்.


“ நான் அப்பவே சொன்னேன் நீங்க கேக்குறீங்களா.. அவனுக்கு டூவீலர் எல்லாம் வேண்டாம் .


காரில் போயிட்டு வரட்டும். டிரைவரை கூட அனுப்புங்கனா கேக்குறீங்களா.. அவனும் பழகனும்..வெளி உலகம் பழகணும்னு கதை சொன்னீங்க.


இப்ப பாருங்க காயம் பண்ணிட்டு வந்திருக்கறான். .

அதுவும் நெத்தியில கூட “என்று சுரேந்திரிடம் சண்டையிட ஆரம்பிக்க..


“ தெரியுமே நீ இப்படித்தான் பதறுவேண்ணு.. அதுக்காக தான் அவனுக்கு நிறைய அட்வைஸ் சொல்லி கூப்பிட்டுட்டு வந்திருக்கிறேன் .


இனிமே இது போல எதுவும் செய்ய மாட்டான் .”


“சும்மா எந்த காரணமும் சொல்ல வேண்டாம் .இனி அவன் வண்டியை தொடக்கூடாது .


டூவீலர்ல எப்பவுமே போக வேண்டாம் .கார் எடுத்துட்டு போகட்டும் .”


“அம்மா என்னம்மா இதெல்லாம் ..இது ரொம்ப சின்ன காயம் . நானே எதிர்பார்க்கல ..


ரோட்டுல ஒரு நாய்க்குட்டி கிராஸ் ஆச்சுதா.. அது மேல வண்டியை விடக்கூடாதுன்னு பயத்துல பிரேக் அடிச்சிட்டேன்.


அதனால சரிக்கி விழுந்துட்டேன் .நம்புங்கம்மா” என்று சமாதானம் செய்து கொண்டிருந்தான் .


மகனின் சமாதான பொய்யைக் கேட்டு சிரிப்பு வர,அவரது சிரிப்பை கண்டு கொண்ட கெளரி “என்ன முன்னாடியே தெரிஞ்ச மாதிரி இருக்குது நீங்க நடந்துக்கிறத பார்த்தால்..”


“ ஐயோ ..சத்தியமா தாயே எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.


எனக்கு சஞ்சய் போன் பண்ணி இருந்தான். அங்கே நந்தாவுக்கு பிரச்சனை போய் பாருங்க அப்படின்னு ..”


*ஏன் அவனுக்கு என்ன ஆச்சு.. சஞ்சய் எப்பவுமே நந்தா கூட தானே இருப்பான்.


இன்றைக்கு தனியா போனதுனால தானே காயம் பட்டுதா ..”


“ஐயோ அம்மா.. என்ன சொல்லி உங்களை சமாதானம் பண்றதுன்னு தெரியல. அவனுக்கு உடம்பு சரியில்ல ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறான்.


நீங்க பயந்துருவீங்கன்னு சொல்லி சஞ்சய்க்கு போன் பண்ணினேன் .அவன்தான் அப்பாவுக்கு போன் பண்ணி வர சொல்லி இருக்கிறான்.


அதுதான் எதுவுமே இல்லையே இப்போ வராட்டி கூட நான் இந்நேரம் வண்டி எடுத்துட்டு வந்து இருப்பேன்”.


“ எப்படி ?இந்த கையிலயா.. அப்படி பேசினா என்ன அர்த்தம்..”


“ ஐயோ அம்மா.. எதுவும் ஆகலல்ல ..சின்னதா சதை பிசகிட்டு இருக்கு. இந்த கட்டு கூட தேவையில்லைன்னு சொன்னாங்க .


அப்பாதான் பயந்து பேண்டேட் போட்டு விட்ச் சொன்னாங்க.. நான் கையை அசைச்சு கிட்டு இருப்பேனாம்.


நான் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கிறேன் போதுமா.. பயப்படாதீங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் நந்தா.


அடுத்த நாள் காலையில் வழக்கம் போல காலேஜுக்கு சென்றிருந்தால் சரண்யா.


யோசனை முழுக்க நேற்று பார்த்த நந்தனின் முகமே கண்களுக்குள் நிழலாடியது.

கடைசியாக இவளை ஆக்ரோஷமாக முறைத்து பார்த்தது .


யோசிக்கும் போது இப்போதுமே பயம் வந்தது. நிச்சயமாக அவனின் மேல் தவறு கிடையாது அது இவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால் எதற்காக அவனை குற்றவாளி ஆக்கினால் என்ற கேள்விக்கு இந்த நிமிடம் வரையிலும் அவளிடம் பதில் இல்லை .


நிச்சயமாக இனி அவன் தன்னை பின் தொடரக்கூடாது என்கின்ற ஒரு காரணத்திற்காக சம்மந்தமே இல்லாமல் மாட்டி விட்டு வந்திருந்தாள்.


அது ஒரு புறம் உறுத்தலாக இருக்க.. அதே யோசனையோடு சுற்றிக் கொண்டிருந்தாள்.


அப்போது எதிர்பாராத வகையில் சஞ்சயை சந்திக்க நேர்ந்தது .


அவனை பார்க்கவுமே அடையாளம் தெரிய ..வேகமாக அவனை நோக்கி நகர்ந்தாள்.


“ சஞ்சய் சஞ்சய் “என்று குரல் கொடுக்க முதலில் சரியாக கவனிக்காதவன் பிறகு இவளை பார்க்கவும்..” என்ன இந்த பக்கம்”என்று கேட்டான்.


“நீங்களும் இந்த காலேஜ்ல தான் படிக்கிறீங்களா “என்று கேட்க ..”ஆமா நீ என்ன செய்ற.. இந்த இடத்தில்..”


“இங்க தான் படிக்கிறேன்.சாரி அன்றைக்கு எனக்கு உதவி செஞ்சீங்க .என்னால நன்றி சொல்ல முடியல .நான் இந்த ஒரு வாரமா உங்களை தான் தேடுகிறேன் தெரியுமா.”


“ சரியா போச்சு.. நான் எப்பவும் போல காலேஜ் வந்துட்டு தான் இருக்கிறேன்.”


“எனக்கு ஒரு உண்மையை சொல்லணும்.”


“ என்ன உண்மை.”


“உங்களுக்கு நிலாங்குற பேர்ல யாரையும் தெரியாது தானே.. பொய்தான சொன்னீங்க.


நான் என் பிரண்டு நிலா கிட்ட கேட்டேன் ‌அவளுக்கு அண்ணாவே கிடையாதாம். ஒரே ஒரு தங்கச்சி தான் இருக்கிறான்னு சொன்னா..”


“ ஓ சாரி.. அன்னைக்கு அந்த நிமிஷம் உன்னை காப்பாத்தணும்னு தோணுச்சு. நான் என்ன பண்ணட்டும் சட்டுனு அந்த பேரு தான் ஞாபகம் வந்தது ‌அதனால அப்படி ஒரு பொய் சொல்லி உன்னை நகர்த்தி விட்டேன். ஆபத்துக்கு பாவம் இல்லல்ல.”


“எஸ் ..எஸ் நானும் அப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்.” என்று சொல்ல..


“ ஆமா நீ செமயான காரியம் பண்ணி இருக்கற போல இருக்கு “.


“என்ன பண்ணினேன் .நான் எதுவும் பண்ணலையே “.


“சரியா போச்சு.. நேத்து நீ என்ன பண்ணின ..பஸ் ஸ்டாப்ல கலாட்டா நடந்துச்சு இல்லையா..


சம்பந்தமே இல்லாம ஒரு பையனை மாட்டி வேற விட்டு இருக்கற..ஸ்டேஷன் வரைக்கும் இழுத்துட்டு போயிருக்கறாங்க”.


“ யாரு சொல்றீங்க..அந்த நந்தனையா..”


“அப்படின்னா ஆளத் தெரியுது.. தெரிஞ்சுதான் இத பண்ணின அப்படித்தானே.. ”.


“இப்ப என்ன ஆச்சு . இந்நேரத்துக்கு விட்டுருப்பாங்க. ஜஸ்ட் மிரட்டுவதற்காக தான் அழைச்சிட்டு போறதா சொன்னாங்க.


அந்த போலீஸ்காரர் கூட அப்படித்தான் சொன்னாரு..”


“ சரிதான் மிரட்டறதுக்காக அழைச்சிட்டு போனாலும் இப்படித்தான் மொத்தமா மாட்டி விடுவியா.. உங்க எல்லாத்துக்காகவும் தானே அங்க வந்து சண்டை போட்டான்.”


“ அது எப்படி? சண்டை போஞறது தப்பு தானே. நீங்க எல்லாம் டாக்டருக்கு படிக்கிறீங்க .எவ்வளவு பொறுப்பா இருக்கணும்.ஒருத்தரை வந்து அடிக்கிறான்னா அது எப்படி நல்ல விஷயமாகும்.”


“கரெக்டு தான் இல்லன்னு சொல்ல மாட்டேன் ஆனா நீ பண்ணனது தப்பு தானே..


ஸ்டேஷன்ல வேற மாதிரி நடந்திருந்தால் என்ன செய்திருப்ப.. அவனும் அவன் குடும்பத்துக்கு பதில் சொல்லணும்ல ..”


“இது பயம் அவருக்கு தானே வரணும் .பொறுக்கி மாதிரி மத்தவங்க கிட்ட சண்டை போட்டா இது மாதிரி பிரச்சினை எல்லாம் வரும்ணு அவருக்கு தானே தெரியும் .அத விட்டுட்டு என்கிட்ட வந்து நான் தப்பு பண்ணினேன்னு பேசினா என்ன அர்த்தம்.”


“ஓ சாரி கோபப்படறியா சரண்யா..”


“கோபம் எல்லாம் ஒன்னும் இல்ல .அவர் யாரு உங்களோட பிரண்டா.. பிரண்டா இருந்தா தயவுசெய்து அந்த பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுங்க .


ஆளை பாத்தாலே தெரியலையா சரியான பொறுக்கி மாதிரி இருக்கிறான். இவன் எல்லாம் டாக்டருக்கு படிச்சு என்ன பெருசா சாதிக்க போறான்னு எனக்கு தெரியவே இல்லை..”


“இப்படி பேசாத சரண்யா ரொம்ப தப்பு.. பின்னாடி நீ தான் வருத்தப்படுவ..”


“நான் எதுக்காக வருத்தப்படணும் .முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. அவன் உங்களோய பிரண்டா..”


“ அவனும் என்னோட பிரண்டு தான் . நானும் எம்பிபிஎஸ் ஸ்டுடென்ட் தான். அங்க பஸ் ஸ்டாப்பில் நடந்த பிரச்சனையே பொதுவா சொல்லிக்கிட்டு இருந்தேன் .


இந்த மாதிரி பொண்ணுங்கள பஸ் ஏறி விடுவதில்லை .ரொம்ப ரகளை பண்றாங்க. ஈவ்டீசிங் மாதிரி இருக்குதுன்னு.‌ நான் பார்த்துக்குறேன்னு நந்தா சொன்னான். அது இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல.”


“இத பத்தி தான் பேசுவீங்கன்னா இந்த பேச்சை இத்தோட விட்டுடலாம்.. அன்றைக்கு உதவி செய்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்.”


“என்னோட ஃப்ரெண்டுன்னு சொன்னதால சட்டுன்னு இப்படி பேச்சை கட் பண்ணிட்டு போவியா என்ன ?சரண்யா உன்கிட்ட தான் கேட்டுக்கிட்டு இருக்கிறேன்..”


“எனக்கு அவனைப் பார்த்தாலே பிடிக்கல .தொடர்ந்து ஆறு மாசமா டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கறான் .அவனுக்கு நீங்க அட்வைஸ் பண்ணுங்க இதுபோல பின்னாடி தொடர்ந்து வர வேண்டாம்ணு..”


“அவனை பாக்கும்போது சொல்றேன் .கூடவே இன்னொரு விஷயமும் உன்கிட்ட சொல்லிடறேன்.


நேத்து நடந்த ரகளையில ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போன போலீஸ் அவனை நல்லாவே அடிச்சிருக்கறாரு..


அதனால கையில பிராக்சர் ஆகிடுச்சாம்.. கையில கட்டு போட்டு இருக்கிறதா தகவல் வந்துச்சு‌”


“ அது எதுக்கு என்கிட்ட சொல்றீங்க எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”


‘ அப்படி கிடையாது .நீ தான் சம்பந்தமே இல்லாம அவனை மாட்டிவிட்டு இருக்கிற ..அவனை பத்தி கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு சரண்யா.”


நான் எதுக்காக முயற்சி பண்ணனும். எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .நான் பார்க்கும் போது எல்லாமே தப்பு தப்பா தான் நடந்துக்கிறார் .


ஒன்னு அவர் பின்னாடி பொண்ணுங்க சுத்திக்கிட்டு இருக்காங்க .இல்ல யாரையாவது பிடிச்சு அடிச்சுக்கிட்டு இருக்காரு..


அப்படி இருக்கும் போது அவர் மேல எப்படி நல்ல அபிப்பிராயம் வரும் .என்னோட அபிப்ராயத்தை எப்பவும் நான் மாத்திக்க போறது கிடையாது .


கை மட்டும் உடைய கூடாது ‌கால் உடைஞ்சா கூட சந்தோஷம்தான். கொஞ்ச நாளைக்கு இங்க, அங்கன்னு போகாம ஒரு இடத்தில் உட்கார்ந்து இருப்பார்ல…”கோபமாக சொல்ல..” சரண்யா இது ரொம்ப தப்பு .இவ்வளவு மோசமா ஒருத்தனை விமர்சனம் பண்ண கூடாது. அவனை பற்றி உனக்கு என்ன தெரியும். அவன் ரொம்ப நல்லவன் தெரியுமா.”


“என்ன ..அவர் நல்லவர்னு செர்டிபிகேட்ஸ் கொடுக்க தான் இங்கே வந்தீங்கன்னா தயவு செய்து இனி எப்பவுமே பார்க்க வேண்டாம்.”


“பேசின வரைக்கும் ஒரு விஷயம் புரியுது. நீயும் கூட நந்தாவை கவனித்துக் கொண்டுதான் இருந்திருக்கற உண்மைதானே “.


“ஆமா கவனிக்காம எப்படி இருப்பாங்க .ஆறுமாசமா அங்கங்க முகத்தை ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டு இருந்தா ..யாரு என்னன்னு பாக்கத்தானே செய்வாங்க ‌அது இயல்பா தோன்றுகிற கியூரியாசிட்டி..


“அப்படி கவனிச்சதால தான் என்னால அவனை புரிஞ்சுக்க முடிஞ்சது . அவன் சரியான பொறுக்கி ,ரவுடி ..


அவங்க அப்பா தன்னுடைய பணத்தால இந்த காலேஜ்ல சேர்த்து விட்டிருக்கிறார்னு நினைக்கிறேன்..”


“இனி பேச எதுவுமே இல்ல சரண்யா .ரொம்ப நன்றி நீ தேங்க்ஸ் சொன்னதுக்கு..


எந்த பொண்ணு பிரச்சினையில் இருந்தாலும் நான் போய் நிச்சயமாக உதவி செய்திருப்பேன் .அத தான் உனக்கும் செஞ்சேன்.


நந்தா என்னோட பிரண்டு.. சீக்கிரமாவே அவனை பத்தி புரிஞ்சுக்கவே..


அவன பத்தி நல்ல விதமா யோசிக்கிற நாளும் வரும். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன் “என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.


அடுத்து சில நாட்கள் சற்று அமைதியாகவே சென்றது.


காலேஜ் மொத்த மாணவர்களுக்கும் நடுவே ஒரு விமர்சனம் பரவிக் கொண்டிருந்தது .


அன்றைக்கு நந்தாவை மாட்டி விட்டது இந்த காலேஜ் பெண் தான் என்று.. யார் என்று தெரியாமலேயே ஒரு அமைதியான தேடுதல் வேட்டை அங்கே நடந்து கொண்டிருந்தது.


முக்கியமாக நந்தாவின் கிளாஸ்மேட்டாக இருந்தவர்கள்..


ஒரு வாரம் அமைதியாக நகர்ந்திருந்தது. நந்தா கிட்டத்தட்ட ஒரு வாரம் விடுமுறை முடித்து அன்றைக்கு காலேஜுக்கு வந்திருந்தான்.


காலேஜ் வந்திருக்கிறான் என்பது காலையிலேயே இவளுக்கு தெரிந்து விட்டது.


நிச்சயமாக இவளை தேடி வர வாய்ப்பு இருக்கிறது என்று புரியவும் அவன் கண்களுக்கு சிக்காமல்.. எங்கு சென்றாலும் சற்று சுற்றிலும் பார்த்துவிட்டு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள்.


இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் ஒரு வாரம் வரயிலுமே நடந்தது .


வழக்கமாக சொல்லும் பாதையில் இப்போது செல்வது இல்லை .


வேறு ஒரு வழியாக சுற்றி சென்று கொண்டிருந்தாள்.


அந்த காலேஜில் முன்புற கேட் ஒன்று இருக்க அதை போலவே பின்புறத்திலும் ஒரு கேட் இருந்தது .


பெரும்பாலும் நிறைய மாணவர்கள் பின்புற கேட்டை உபயோகப்படுத்துவது இல்லை.


இவள் இந்த பிரச்சனை ஆன பிறகு பின் வழியில் மட்டுமே செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள்.


அன்றைக்கும் அப்படி செல்ல சரியாக நந்தாவின் கூட படிக்கும் சில மாணவர்கள் இவளை வழிமறித்தனர்.


மாட்டி கொண்டது புரிய ஆரம்பிக்க.. இவளோ திருதிரு என விழித்தாள்.


“ எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. நான் சொன்னேன்ல.. அன்றைக்கு பஸ் ஸ்டாப்பில் இவளும் தான் அங்க நின்னா..


நாங்க எல்லாம் முன்னாடி போயிட்டோம். கடைசியா இவளும் இன்னொரு பொண்ணும் தான் இருந்தா..”


“ நான் இல்ல ..எனக்கு எதுவும் தெரியாது “என்று ஆரம்பிக்க.. “சும்மா கதை சொல்லாத.. உன்னை பார்த்தாலே தெரியுது. நிச்சயமாக நீ தான் ஏதோ அன்னைக்கு செஞ்சிருக்கிறேன்னு.


உன்னால தான் நந்தாவோட கைல காயம் பட்டுச்சு. இவ தான் எனக்கு நன்றாக தெரியும் “என்று பேசிக் கொண்டிருக்கும் போதே பின்புறத்தில் இருந்து நந்தாவின் குரல் கேட்டது.


“நீங்க நினைக்கிற மாதிரி இந்த பொண்ணு கிடையாது. எனக்கு நல்லா தெரியும் .நானே பேசுகிறேன்” என்று சொன்னவன் இவளை செல்ல விடாமல் வழியை மறைத்து நின்றான்.

சற்று திகைத்தபடி பார்க்க.. கையில் போட்டு இருந்த பேண்ட்டை பார்த்தபடியே முகத்தை பார்க்க.. நந்தாவும் கூட பேண்டேடை பார்த்தபடி தான் இவளுடைய முகத்தை திரும்பி பார்த்தான்.


சற்றே பயம் இவள் மனதிற்குள் தோன்ற ..அவனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அடுத்து வரப்போவது என்ன என்று புரியாமல்..
 

NNK-15

Moderator
4


அன்று.


“நகர்தேன்னா பிச்சிடுவேன். அங்கேயே நில்லு “என்று சொல்ல …வேகமாக தப்பிக்க வழி இருக்கிறதா என சுற்றிலும் பார்த்தால் சரண்யா .


அந்த நேரத்தில் யாருமே இருக்கவில்லை. முக்கியமாக பின்புறமாக செல்லும் வழிக்கு கூட இன்னும் சற்று தூரம் நடக்க வேண்டியது இருந்தது.


இரண்டு டிபார்ட்மெண்டுக்கு நடுவே இருந்த சிறு வழியில் தான் வந்தது. வகையாக சிக்கி கொண்டாள் சரண்யா.


“இத பாருங்க தேவையில்லாம என்கிட்ட பேச வேண்டாம் புரிஞ்சுதா .முதலில் வழியை விடுங்க. நான் போகணும் “.


“சரி.. எதுக்காக இப்படி ஓடி ஓடி ஒளியற .. நான் தெரிஞ்சுக்கலாமா.. குற்றம் இருக்கிற மனசு அதுதான் குறுகுறுக்குது இல்லையா..


என்ன பார்க்க கூடாதுன்னு தானே இப்படி ஒளிஞ்சி ஒளிஞ்சி ஓடிட்டு இருக்கிற.. “


“நான் எதுக்காக உங்களை பார்த்து பயந்து போகணும் .அப்புறமா உங்களோட டிபார்ட்மெண்டுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது .


நான் படிக்கிறது ஆர்ட்ஸ் ல நீங்க மெடிக்கல் ஸ்டூடண்ட் உங்க வேலை என்னவோ அத மட்டும் பார்த்துட்டு போங்க.


தேவையில்லாம என்னோட வழியில் வர வேண்டாம் .”


“அப்படியா சரி வரல .. அத விடு எதுக்காக நிக்காம ஓடற..என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது டி .”


“இத பாருங்க மரியாதை இல்லாம பேச வேண்டாம் .இந்த டி போட்டு பேசுற வேலை எல்லாம் எனக்கு பிடிக்காது.”


“ அப்படியா ஆனா இனி நான் உன்னை டி போட்டு மட்டும் தான் பேசுவேன் .ஏன்னா நீ எனக்கானவ ..எனக்கு உரிமையானவ..”


“இப்படி பேசறதை முதலில் நிப்பாட்டுங்க.. என்னைக்கும் நான் உனக்கு கிடைக்க மாட்டேன் ‌


இந்த மாதிரி பேசுற வேலை இங்க வேண்டாம் .”


“அப்படியா.. பார்த்துவிடலாம் இனி வார்த்தைக்கு ஒரு டி போடலைன்னா என் பேரை நீ மாத்திக்கலாம்.”


“ நீ எல்லாம் மனுசனே கிடையாது” என்று சொன்னபடியே நகர்ந்து செல்ல போக .. சட்டென பிடித்து சுவற்றோடு சாய்த்து நிறுத்தி இருந்தான்.


“ என்ன அவ்வளவு திமிரா பேசுற ..ஆனா இந்த திமிர் ,இந்த பேச்சு தான் என்னை திரும்பத் திரும்ப உன் பக்கத்துல இழுத்துட்டு வருது அது உனக்கு தெரியுமா.”


“ நீ பணக்காரன் தான் அதுக்காக தயவு செய்து உன்னுடைய பணத்திமிரை என்கிட்ட காட்ட வேண்டாம்.


உனக்கேத்த பொண்ணுங்க கிட்ட நீ போய்க்கோ.. தயவு செய்து என் கிட்ட வராத.. என்னை இப்படியே விட்டுடு..”


“அப்படியா.. விடாம உன்னை துரத்திட்டு வந்தா அப்படி என்னதான் செஞ்சிடுவ..”


‘ யோசிக்கவே மாட்டேன். கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் .என் பின்னாடி வந்து டிஸ்டர்ப் பண்றதா..”


“ யார்கிட்ட ..போலீஸ் ஸ்டேஷன்லயா.. தாராளமா போய் சொல்லிக்கோ.. எனக்கு ஒன்னும் பயம் கிடையாது .”


“ஆமா நீ எப்படி பயப்படுவ ..நீ வேண்டான்னு சொல்ற அளவுக்கு பணம் நிறைய வைத்திருக்கிற ..


அந்த பணத்தால ஈஸியா வெளியே வந்துடலாம் அப்படித்தானே..”


“அப்படி எத்தனை பேர் பின்னாடி போயி பணத்தால வெளியே வந்தேன்னாம்.. அதையும் சொல்லு.. ஜஸ்ட் தெரிஞ்சிக்கிறதுக்காக தான்..

ஒரு கணக்குக்காகன்னு வச்சுக்கோயேன் “.


“இத பாரு உன் கூட பேசி பிரயோஜனம் இல்ல .முதல்ல இந்த மாதிரி வழியை மறைச்சிட்டு நிக்கிற வேல வேணாம் .


நான் தான் உன்னோட சாவகாசமே வேண்டாம்ணு ஒதுங்கி போறேன்ல அப்படியே விட்டுட்டு போறதுக்கு உனக்கு என்ன பிரச்சனையாம்.” என்று சொன்னவள் சட்டென்று எதிர்பாராத வகையில் அவனை தள்ளிவிட்டு விட்டு அந்த இடத்திலிருந்து வேகமாக விலகிச் சென்றாள்.


“ஹலோ இன்னைக்கு தப்பிச்சி இருக்கலாம் .ஆனா இன்னொரு நாள் வகையா என்கிட்ட சிக்குவ.. அன்னைக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும் “என்று இவனுடைய குரல் காற்றோடு கலந்து வந்தது.


அன்றைக்கு வீட்டிற்கு செல்லவும் சரண்யாவின் தாயார் இவளை அழைத்துக்கொண்டு இருந்தார் .

பக்கத்து தெருவில் இருக்கிற கோவிலில் கும்பாபிஷேகம்.. இன்றைக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வரலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.

நீயும் வரேன்னு சொன்ன.. வர்றியா”என்று கேட்க ..


“அம்மா எனக்கு கோயிலுக்கு வர மூடு இல்லம்மா.. நான் எங்கேயும் வரல .வேணும்னா நீங்க போயிட்டு வாங்க..”


“என்ன நீ எப்ப பார்த்தாலும் இப்படியே பேசினா என்ன அர்த்தம் .எங்கயாவது வெளியே கூப்பிட்டா வரியா.


ஒரு வாரத்துக்கு முன்னாடி கேட்கும்போது நீ என்ன சொன்ன.. அம்மா நான் கட்டாயமாக வருவேன் .


அங்க வேடிக்கை பார்க்க நல்லா இருக்கும்னு சொன்னியா இல்லையா..”


“ அம்மா அந்த கோயில் பெரிய கோயில் தான் இல்லன்னு நான் சொல்லல .நிறைய பேர் வருவாங்க .கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல கோவில்ல கூடியிருப்பாங்க. இல்லைன்னு சொல்ல மாட்டேன் .ஆனா எனக்கு இப்போ வர்ற எண்ணமே இல்லையே .”


“அது எப்படி இல்லாம போகும். கொஞ்சமாவது வெளியே வந்தா தானே யார் யார் அக்கம் பக்கத்துல இருக்குறாங்கன்னு தெரியும் “.


“அம்மா அது தெரிஞ்சு நான் என்ன செய்யப் போறேன் .நம்ம இருக்கிற இந்த அப்பார்ட்மெண்ட்ல எல்லாத்தையும் தெரியும் .இதோ ரோட்ல போகும்போது அங்க அங்க பாக்குறவங்க கிட்டயும் பேச தான் செய்கிறேன். இதைத்தாண்டி வேற யாரை தெரிஞ்சுக்கணுமாம்.”


“கோயிலுக்கு போகணும்னு நெனச்சேன் சரண்யா. தனியா போகணும்ல ..அதுக்காக தான் கூப்பிடறேன் “.


“இப்படி தன்மையா கூப்பிட்டா வரப்போறேன் .அதை விட்டுட்டு அங்க போகணும். இங்க போகணும் அவங்கள தெரிஞ்சுக்கணும்னு கதை சொல்றீங்க..


சரி ..நான் எத்தனை மணிக்கு கிளம்பணும்னு சொல்லுங்க. நான் கிளம்பி வரேன் “.


“இப்பவே கிளம்பு.. சின்னதா குளியல் போட்டுக்கோ .லாஸ்ட் பொங்களுக்கு டிரஸ் எடுத்தோமே.. அந்த டிரஸ் போட்டுக்கோ “.


‘என்னது அந்த டிரஸ்ஸா.‌ அது எதுக்கு கட்ட சொல்ற .”


“கட்டினா ரொம்ப அழகா இருக்கும் .இன்னைக்கு மாவிளக்கு பூஜை அந்த டிரஸ் போட்டுட்டு வந்தா மேட்சிங்கா இருக்கும் “என்று சொல்ல..


“ சரி சரி இருங்க நான் புறப்பட்டு வர்றேன்” என்று நகர்ந்தாள்.


அரை மணி நேரத்தில் இருவரும் புறப்பட்டு சென்றனர்.


அதே நேரத்தில் அங்கே நந்தாவின் தாயார் கூட நந்தாவை அழைத்துக் கொண்டு இருந்தார்.

அதே கோவிலுக்கு செல்ல வேண்டி..


“அம்மா என்ன எதுக்கு கோவிலுக்கு கூப்பிடற..எனக்கு இந்த சாமி கும்பிடற பிசினஸ் ஆகாது. நீங்க கிளம்பி போங்க. எனக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்குது.


இத பாருங்க எவ்வளவு பெரிய புஸ்தகம் “என்று எடுத்து நீட்ட.. “சும்மா கதை விடாதடா.. நீ எல்லாம் நல்லாவே படிப்ப.. கைல வேற காயம் ஆச்சு இல்லையா .


நான் கோயில்ல வேண்டி இருக்கிறேன் ‌உன்னை அழைச்சிட்டு வரணும்னு..”


“ அம்மா இப்படி எல்லாமா வேண்டுவாங்க .அடிபட்டதோ சின்னதா … அது தெரியாம பட்டுடுச்சு .


அதுக்கும் கோயிலுக்கு போறதுக்கும் என்ன சம்பந்தம்”.


“ இதை பாருடா இந்த மாதிரி எல்லாம் பேசிக்கிட்டு இருக்காத.. ஆல்ரெடி கும்பாபிஷேகத்திற்காக அப்பா டொனேஷன் கொடுத்து இருக்காங்க .


ஒரு நாள் பூஜைக்கும் தேவையான பணத்தை கொடுத்து இருக்காங்க .நாம இன்னைக்கு போய் தான் ஆகணும் .”


“ அம்மா அப்படி கூப்பிட்டாங்கன்னா.. நீங்களும் அப்பாவும் போகணும் . என்னை கூப்பிட்டுட்டு இருக்க கூடாது”.


“ உங்க அப்பாக்கு பிசினஸ் இருக்குன்னு வெளியே கிளம்பி போயிருக்கிறார். நைட் வர லேட் ஆகுமாம் .


ஏதோ மீட்டிங் இருக்குதாம் .அவர் தான் உன்னை அழைச்சிட்டு போக சொன்னாரு..


அதுதான் நந்தா இருக்கிறான்ல ரெண்டு பேரும் போயிட்டு வாங்கன்னு சொன்னாரு.. அதனாலதான். இப்ப நீ வருவியா வரமாட்டியா”.


“ வரமாட்டேன்னு சொன்னா என்ன செய்வீங்க.”


“ பெருசா ஒன்னும் செய்ய மாட்டேன் .உங்க அப்பாக்கு போன் பண்ணி சொல்லுவேன்“.


“அம்மா அப்பா கிட்ட நீங்க சொல்றதால நான் பயந்துடுவேன்னு நினைக்கிறாயா?”


“ பயப்படற ..பயப்படலைன்னு நான் சொல்ல மாட்டேன் .ஆனா நிச்சயமா சொல்லுவேன் .


இந்த நந்தா பையன் ரொம்ப மாறிட்டான். இப்பல்லாம் என்ன கேட்டாலும் செய்யறது இல்ல .


என்னை அவனுக்கு பிடிக்காமல் போயிடுச்சுன்னு சொல்லுவேன்”.


“ ஐயோ அம்மா இதுதான் கம்ப்ளைன்ட் சொல்றதா ..இப்ப என்ன நான் உங்க பின்னாடி வரணும் .அவ்வளவுதானே வந்துட்டா போச்சு .போங்க சீக்கிரமா கிளம்புங்க .நானும் வரேன் “.


“இந்த மாதிரி சாட்ஸ் போட்டுட்டு வரக்கூடாது. நீட்டா பேண்ட் சட்டை போட்டுட்டு வரணும். டீசர்ட் போட்டாலும் எனக்கு ஓகே தான் “என்று குரல் தர ..


“கொஞ்ச நேரம் ஃப்ரீயா இருக்க விடுறீங்களா . ஒரே டார்ச்சர் இன்னைக்கு மட்டும் தான் வருவேன் .மறுபடி ஏதாவது கோயிலுக்கு போகணும் .வேண்டுதல் இருக்குன்னு என்னை கூப்பிட்டீங்கன்னு வச்சுக்கோங்களேன் .அப்புறமா நடக்கறதே வேற ..”


“ரொம்ப பண்ணாதடா .உனக்கு நான் அங்க பஞ்சு மிட்டாய் வாங்கி தரேன்”.


“ அம்மா நெஜமாவே அடிச்சிடுவேன். பேசாம போயிடுங்க “என்று குரல் தர சிரித்தபடியே நகர்ந்தார் கௌரி.


காரில் ஏறி அமர்ந்தபடி தாயாருக்கு குரல் கொடுத்தான். “சீக்கிரமா வாங்க ..நேரம் ஆச்சு. நான் வந்து உட்கார்ந்தாச்சு. டிரைவர் அண்ணாவை கூட கூப்பிட்டு சீட்ல உட்கார வச்சுட்டேன். நீ இன்னும் வெளியே வரல.”


“ இருடா வரேன் .பர்சை எங்கையோ வச்சுட்டேன் .அத தான் தேடிக்கிட்டு இருக்கிறேன்.”


“ அம்மா என் கிட்ட ஜிபே இருக்குது .உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் வாங்கி தரேன்.”


“ போடா நீ எல்லாம் ஒன்றும் வாங்கி தர வேண்டாம் .நான் தான் உனக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி தர்றதா ப்ராமிஸ் பண்ணி இருக்கிறேன் .

அதுக்கு காசு வேணும்ல..”


“அம்மா அடி வாங்க போற.. இப்ப வர போறியா இல்லையா” என்று குரல் தர ..”இதோடா.. வந்துட்டேன் .இதோ கிடைச்சிருச்சு “என்று சொன்னபடியே வந்து மகனோடு அமர்ந்து கொண்டார்.


வண்டி செல்ல ஆரம்பித்தது.. பத்து நிமிடம் தாண்டவுமே “என்னம்மா பக்கத்துல தான் கோயில்ன்னு சொன்ன ..


வண்டி பாட்டுக்கு போய்கிட்டே இருக்குது..உண்மையை சொல்லு .கோயில் எங்க இருக்குது “.


“இங்க இல்லடா பக்கத்துலன்னா .பத்து கிலோமீட்டர் தாண்டி இருக்குது.”


“ அம்மா அவ்வளவு தூரம் இருக்கிற கோவிலுக்கு எல்லாம் நீ போயிட்டு வர்றியா என்ன?”


“நந்தா அது பழைய ஆபீஸ் பக்கத்துல இருந்த கோயில். நீ பொறக்குறதுக்கு முன்னாடி முதல் முதல்ல கல்யாணம் முடியவுமே அந்த கோயிலுக்கு தான் நானும் உன்னோட அப்பாவும் போனோம்.


ரொம்ப ராசியான கோயில் ..அடுத்த வருஷமே நீ எங்களுக்கு கிடைச்சிட்ட அதனால கொஞ்சம் சென்டிமென்ட்..


அப்பப்போ போயி பார்த்து பேசிட்டு வருவேன் .அங்க இருக்கிற ஐய்யர் கூட நல்லா தெரியும் .அந்த கோயிலுக்கு தேவையானது எல்லாமே நிறையவே செஞ்சிருக்கோம் .


ஏன்னா அந்த கோயில்னால தான் நாம முன்னேறினதா எனக்குள்ள ஒரு நம்பிக்கை”.


“ சும்மா கதை சொல்லாதம்மா அப்பாவோட உழைப்புதான் இவ்வளவு தூரத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கிறது.


சும்மா கோயில் பேர சொல்லி ஏமாத்தாத புரிஞ்சுதா ..”


“டேய் அப்பாவோட உழைப்பு இருந்தாலும் அதிர்ஷ்டமும் தெய்வத்தோட அனுகிரகமும் வேணும் .

அது நிறையவே கிடைத்தது”.


“ அப்படியா அப்படின்னா ஏன் அந்த கடவுள் இன்னொரு குழந்தையை தரல .


எனக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ தந்திருக்கலாம்ல அதை செய்யாம தான பாத்துக்கிட்டாரு ..இதுக்கு என்ன அர்த்தம்.”


“ஏன் அந்த இப்படி கேக்குற”.


“ பின்ன என்னமா குழந்தை பிறந்த கொஞ்ச நாள்ல கர்ப்பப்பை எடுக்க வேண்டிய சூழ்நிலை.


எத்தனை பிரச்சனை உனக்கு.. இன்பெக்க்ஷன் இது அதுன்னு கிட்டத்தட்ட என்னோட ரெண்டு வயசு முடியறவரைக்கும் நீங்க ஹாஸ்பிடல்ல தான் இருந்தீங்களாம்.


அப்பா கதை கதையா சொல்லி இருக்கிறாங்க .எனக்கு நல்லா தெரியும் .ஏன் நீங்க சாமி கும்பிட்ட அந்த கடவுள் உங்களை காப்பாத்தல .


இந்த மாதிரி ஒரு பிரச்சனை வராமல் இருந்திருக்கலாம்ல.. எனக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் .”


“நந்தா அப்படி எல்லாம் சொல்லக்கூடாது .ஒரு வகையில நானும் தான் காரணம். நீ பிறக்கும்போது நிறைய பிரச்சனை .


அந்த நேரத்துல பெரியவங்க யாருமே பக்கத்துல இல்ல. அதனால தான் இத்தனை பிரச்சனையாகிடுச்சு .


சரி அதெல்லாம் விடு போனதைப் பத்தி எல்லாம் பேசக்கூடாது. எனக்கு நீ கிடைச்சிருக்குற ..


பொறுப்பான பையன் ,பாசமான பையனா நீ இருக்கிற.. எனக்கு நீ மட்டுமே போதும்.


நிறைய பிரச்சனைகளை ஆரம்பத்துல சந்தித்ததாலையோ என்னவோ இனொரு குழந்தையை பத்தி யோசிக்கவே இல்ல .


அதுக்கு ஏத்த மாதிரி எல்லாமே நடந்துடுச்சு .நானும் உன்னோட அப்பாவும் நிறையவே ஆசைப்பட்டோம் .


ஒரு குழந்தையை தத்து எடுத்து வளக்கணும்னு ..அதுவும் கூட முடியாமல் போயிடுச்சு .


என்ன செய்யறது ஆரம்பத்துல தாய்ப்பால் இல்லை. உனக்கு டின்பால் கொடுத்து தான் வளர்த்தோம்.


அதனாலயே என்னவோ அடிக்கடி உனக்கு உடம்பு சரியில்லாமல் வந்தது .


அதுக்கு ஏத்த மாதிரி நானும் அடிக்கடி முடியாமல் படுத்துக்கொண்டேன் .


அதனால அது பத்தி யோசிக்கவே இல்ல .ஆனா அதுக்கு பிறகு எல்லாம் மாறிடுச்சு.


நந்தா தான் என்னோட உலகம்னு மாறிப்போனேன் தெரியுமா..”


“அப்படியா.. இப்ப என்னை பாத்தா சின்ன வயசுல அடிக்கடி உடம்பு சரி இல்லாம போன பையன் மாதிரியா இருக்கிறேன் ‌”


“அப்படி எல்லாம் இல்லடா ..என்னோட பையன் பூர்ண ஆயுசோட நீண்ட காலத்துக்கு நல்லபடியா இருப்பான். எனக்கு அது நல்லாவே தெரியும் .


அது மட்டும் இல்ல அதெல்லாம் சின்ன வயசுல.. இப்ப பாரு கம்பீரமா என் பையன பார்க்கும்போது நானே பிரம்மச்சு பார்க்கிறேன் தெரியுமா.”


“ஐயோ போச்சுடா மறுபடியும் பொலம்ப ஆரம்பிச்சிட்டீங்களா.. இனி உங்களை நிறுத்தவே முடியாது.


இனி லைனா வரிசையா பேசுவீங்களே..”


“ பின்ன இல்லையா.. சின்ன வயசுல இருந்து அவ்வளவு நல்லா படிப்ப ..


எல்லா போட்டியிலேயும் கலந்துக்குவ.. உன்னோட சர்டிபிகேட் உன்னோட மெடல்னு அத வைக்கிறதுக்கு ஒரு ரூம்ல சோட்கேஸ் பண்ணிணோம் தெரியுமா ‌அதெல்லாம் ஸ்வீட் மெமரிஸ் டா..


இன்னைக்கு நினைச்சாலும் எனக்கு அத்தனை சந்தோஷமா இருக்கும். எனக்கு மட்டும் இல்ல உன்னோட அப்பாவுக்கு தான் தெரியுமா”.


“ சரி சரி போதும் மா .இதுக்கு மேல என்னை பத்தி எதுவும் பேசக்கூடாது. கோவில் எப்பதான் வரும் .அதையாவது சொல்லு .”


“இதோ வந்தாச்சு .திரும்பினா கோயில் தான் .பெரிய கோயில்.. குட்டியா தெப்பக்குளம் கூட இருக்கும் தெரியுமா. பார்க்கறதுக்கு அருமையா இருக்கும் .நீதான் இதுவரைக்கும் வந்ததே இல்லை .முதல் முதலில் வர்ற.. அதுவே எனக்கு எத்தனை ஹேப்பியா இருக்குது தெரியுமா” என்று படியே இவனை அழைத்துக் கொண்டு சென்றார்.


நேராகக் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு மகனை அழைத்துக்கொண்டு பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.


ஏதேதோ பேசி சிரிக்க தாயின் மகிழ்ந்த முகத்தையே பார்த்தபடி புன்னகையோடு அமைதியாக வந்து கொண்டிருந்தான்.


“என்னடா பேசாம அமைதியா வர்ற..”


“ உண்மையிலேயே இன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற மா.. முகம் அவ்வளவு அழகா இருக்குது. இந்த சந்தோஷத்தை பார்க்கறதுக்காகவே எனக்கு பிடிக்காதுன்னா கூட அடிக்கடி உன் பின்னாடி வரலாம்னு தோணுது.”


“அது என்ன பிடிக்காம வர்றது அதெல்லாம் தாராளமா பிடிக்கும். கோயிலுக்கு வந்தா எவ்வளவு அமைதியா இருக்குது.


நீ பார்த்துட்டு தானே இருக்கிற இந்த அமைதி வீட்டில் கிடைக்குமா.. ஒரு நிமிஷம் சாமி முன்னாடி கண்ணை மூடி கும்பிடும்போது மனசு எவ்வளவு அமைதியா ரிலாக்ஸ்டா ஆகுது தெரியுமா . அதெல்லாம் உனக்கு சொன்னா தெரியாது.


உன்னோட அப்பா ஆபீஸ் ஆபீஸ்னு சுத்துவாங்க .நீ காலேஜ்க்கு போயிடற.. நான் தனியா என்ன செய்யறது. அப்பப்போ இது போல வந்தா மட்டும் தான் நானும் கூட பைத்தியம் பிடிக்காமல் கொஞ்சம் சிரிப்போட இருக்க முடியும் .ஏதாவது ஒரு பற்று வேணும் தானே.”


பேசியப்படியே கோவிலை சுற்றி விட்டு வெளியே வரும் போது தான் கவனித்தான் சரண்யா அவளுடைய தாயாரோடு வந்து கொண்டிருப்பதை..


சரண்யா அங்கிருந்த ஒரு வளையல் கடையில் நின்று பேரம் பேசிக் கொண்டிருக்க.. தாயார் வேறு எங்கோ நகர்ந்து சென்றிருந்தார் .


அதே நேரத்தில் நந்தாவின் தாயார் கூட..” டேய் உனக்கு சாப்பிட என்ன வேணும் சொல்லு .நான் வாங்கி தரேன்.


இங்கே எல்லாமே நல்லா இருக்கும் தெரியுமா. நிறைய புது புது கடைகள் எல்லாம் போட்டு இருக்காங்க.”


“ அம்மா கண்டதையும் சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகிட போகுது. கொஞ்சம் பேசாம இருக்கிறயா..”


“ சும்மா அதையே சொல்லாதடா வெளிய வந்தா ஏதாவது சாப்பிட தானே செய்யணும்.


அப்பப்போ மெடிக்கல் ஸ்டுடென்ட் என்கிறதை இப்படித்தான் பேசி நிரூபிக்கிற நந்தா .அது வேற இது வேற.. நீ முதல்ல நகரு..


வீட்டிலிருந்து வரும் போதே நான் யோசிச்சிட்டு வந்தேன். நான் சாப்பிட போறேன் .”


“அம்மா அடி வாங்க போற.. எதையாவது சாப்பிட்டு நாளைக்கு முடியலன்னு சொன்ன வச்சிக்கோ அப்பாகிட்ட போட்டு கொடுத்துடுவேன் .”


“சும்மா மிரட்டாத போடா. சும்மா டென்ஷன் பண்ணிட்டு.. எனக்கும் சொல்லத் தெரியும்.


இப்ப நீ வராம இருந்திருந்தால் கூட நான் வந்து சாப்பிட்டு தான் இருப்பேன் .உனக்கு என்ன வேணும் சொல்லு. உனக்கு வாங்கி தரேன்”.


“ எனக்கெல்லாம் எதுவும் வேண்டாம் “.


“அப்படின்னா ஒன்னு செய்றேன் உனக்கு நான் பஞ்சு மிட்டாய் வாங்கி தர்றதா சொன்னேன்ல. எங்க இருக்குதுன்னு பார்த்து வாங்கிட்டு வரேன் சரியா..”


“ அம்மா ப்ளீஸ் சின்ன புள்ள தரமா பண்ணாதீங்க .இதுக்காக தான் நான் உங்க கூட வர மாட்டேன்னு அடிக்கடி சொல்றது.


கொஞ்சமா வயசுக்கேத்த மாதிரி நடந்து பழகுங்க .”


“சும்மா எதையாவது பேசிக்கிட்டு என்னோட கோபத்தை கிளறிட்டு இருக்காத நந்தா .இரு வந்தர்றேன்” என்று நகர.. இவனுமே சரண்யாவை பார்த்து இருக்க, நேராக அந்த கடைக்குள் சென்று இருந்தான்.


“அண்ணா இந்த வளையல் என்ன ரேட் ணா” என்று ஒரு வளையலை காட்டி கேட்டுக் கொண்டிருக்க..”


“ எது இந்த வளையலா.. ரொம்ப நல்லா இருக்குது” என்று அவளுக்கு பின்னால் நின்றவன் நேராக வளையலில் கை வைக்க.. சட்டென திரும்பி இருந்தால் சரண்யா.


திரும்பிய வேகத்தில் அவனின் மேல் மோதி இருக்க சரியாக அவனுடைய உதடு அவளுடைய நெற்றியில் தடம் பதித்து இருந்தது முத்தமாக…

அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள் சரண்யா.
 

NNK-15

Moderator
5


“பொறுக்கி இங்கேயும் வந்துட்டியா.. என்னை ஃபாலோ பண்றத தான் நீ வேலையா வச்சிருக்கிறயா” கோபமாக கேட்டவள் சட்டென அவனை தள்ளி விட்டுவிட்டு நடக்க..


“என்ன வாய்க்கு வந்த மாதிரி பேசுற. நீ இங்க வந்தது இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு தெரியாது.


ரெண்டு தெரு தாண்டி தான் உன் வீடு இருக்கிறது தெரியும். ஆனா இன்னைக்கு இங்க வந்து இருப்பேன்னு எனக்கு தெரியாது. இது எனக்கு ஷாக்கிங் தான் தெரியுமா “சாதாரணமாக பேசியபடி பின்னாள் வர..


“ பொறுக்கி மாதிரி என் பின்னாடி வர்ற வேலை வச்சுக்காத .அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. கூட்டத்தில் அசிங்கப்பட்டுட்டு போகாத..


ஆல்ரெடி நான் உன்கிட்ட வார்ன் பண்ணி இருக்கிறேன் .என் பின்னாடி வர்ற வேலை வச்சுக்காத.. “


“இவ வேற திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்லிட்டு.. எனக்கு என்ன ஆசையா.. தானா அமையுது .நான் என்ன செய்யட்டும் “என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இவனின் ஃபோன்னிற்கு அழைப்பு வந்தது .


வேகமாக பார்த்தவன்” ம்மா எங்க இருக்கீங்க “என்று சொன்னபடியே நகர அவனை முறைத்தபடியே இவளும் நகர்ந்தாள்.


“ உனக்கு ரொம்ப கொழுப்பாயிடுச்சு.. யோசிக்காமல் நெத்தியில முத்தமா தர்ள..” என்று மனதிற்குள் வசை பாடியவள்..

‘இதுக்கெல்லாம் மொத்தமா வாங்கி கட்ட போற.. நிச்சயமாக எதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் இப்போ இங்க நீ தப்பிச்சு போய் இருக்கலாம். நிச்சயமா இந்த இடத்துல நான் பிரச்சனை பண்ண மாட்டேன். என்னோட அம்மா வந்து இருக்காங்க .அவங்க முன்னாடி உன்னை போல் ஒருத்தன் கிட்ட பேசுறதே பாவம்னு நினைக்கிறேன். ஆனா நிச்சயமா நீ இன்னைக்கு நடந்ததுக்கு பதில் சொல்லியே ஆகணும்’ மனதிற்கு திட்டியபடியே தன் தாயாரிடம் நகர்ந்து இருந்தாள்.


“ இங்க பாருடா உனக்கு நான் என்ன வாங்கி வந்திருக்கிறேன்னு” என்று எடுத்து நீட்ட ..உண்மையிலேயே பஞ்சுமிட்டாய் வாங்கி வந்திருந்தார் .மஞ்சள் கலரில் ஒன்று பஞ்சு மிட்டாய் நிறத்தில் ஒன்று என்று.. கையில் பிடித்திருக்க தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது இவனுக்கு..


“ அம்மா சீரியஸாவே நீங்க இப்படி எல்லாம் செய்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. சரி நம்ம கிளம்பலாமா..”


“ நீ எங்கடா அந்த பக்கம் போன..”


“ உங்களுக்கு தான் வளையல் வாங்கலாமான்னு எட்டி பார்க்க போனேன் .”


“யாரு? நீ இதை என்னை நம்ப சொல்ற.. நான் உன்னை நம்ப மாட்டேன்”.


“ ம்மா.. நான் உங்களுக்காக தான் அங்க வாங்க போனேன்”.


“அப்புறம் ஏன் வாங்கல.. அதையும் சொல்லிடு..”


“ அம்மா இப்ப என்ன உங்களுக்கு நான் வாங்கி கொடுத்தா போட்டுக்குவீங்களான்னு சொல்லுங்க . இப்பவே வாங்கி தரேன்” என்று மறுபடியும் நகர போக.. பிடித்து நிறுத்தினார்.

“ போட்டு இருக்குற தங்க வளையிலேயே பாதியை ராத்திரி நேரம் கழட்டி வச்சிடறேன் .பிறகு எதுக்குடா.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ இப்போ வா போகலாம்.” இரண்டடி நடந்தவர் பிறகு மகனை பார்த்து “நிஜமாகவே உண்மையை சொல்லு .எனக்கு தான் வாங்க போனியா “.


“அம்மா ஏன் உனக்கு இப்படி எல்லாம் சந்தேகம் வருது நெஜமா உனக்காக தான் வாங்க போனேன் .சரியா..”


“ என்னவோ தெரியல. இப்ப எல்லாம் நிறைய பொய் சொல்ற மாதிரி எனக்கு தோணுது “.


“அம்மா அப்படி எல்லாம் எதுவும் இல்லை “.


“நிஜமாடா ..நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லுவியா.”


“ என்னமா கேக்க போறீங்க. சொல்லுங்க தெரிஞ்சா பதில் சொல்லுவேன் .”


“வந்து ..உனக்கு யாராவது பொண்ணை பிடிச்சிருக்கா”.


“ என்ன திடீர்னு இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க. என்னை பார்த்தா அப்படியா தெரியுது”.


“ எனக்கு தெரியலடா அதனாலதான் கேட்கிறேன். அன்றைக்கு ஒரு நாள் ரூம்புக்கு வரும் போது நீ ஒரு பொண்ணோட பேரை சொல்லிக்கிட்டு இருந்த..

அப்ப இருந்து நானும் உன்னை தான் வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன் .”


“அடிக்கடி யாரோ ரூமுக்குள்ள வந்துட்டு போற மாதிரி தோணும். அது யார்னு இப்ப தெரியுது.. அப்படின்னா அன்னைக்கு சஞ்சய்யை கூப்பிட்டு வச்சு இந்த விஷயம் தான் பேசி இருக்கிறீங்க. அப்படித்தானே “.


“டேய் இவ்வளவு ஷார்ப்பா எல்லாம் இருக்காத சரியா.. அவன்கிட்ட அது பத்தி எல்லாம் எதுவும் கேட்கல .அவனுக்கு.. அவனுக்குமே உன்னை பத்தி எதுவுமே தெரியல .ரொம்ப சீக்ரெட்டா மெண்டைன் பண்ற போல இருக்கு. நானும் உன்னை கவனிச்சுக்கிட்டு தான் இருக்கிறேன் .எப்பவாவது சிக்குவ “.


“அம்மா.. வா பேசாம வீட்டுக்கு போகலாம். நேரம் ஆகுது .அப்பா போன் பண்ணினார்களா .”


“இல்லடா வீட்டுக்கு போய் தான் என்னன்னு கேட்கணும் .வா போகலாம் “என்று நகர்ந்தனர்.


அன்றையே இரவு முழுவதுமே சரண்யாவின் ஞாபகத்திலேயே கழிந்தது.


சட்டென திரும்பி மோதியவள்.. இவனை பார்த்தது.. அவளுடைய வாசனை இன்னமுமே இவனோடு ஒட்டிக்கொண்டது போல தோன்ற ..தன்னை அறியாமல் அவள் நெற்றியை ப் பட்ட உதட்டை மெல்ல தடவிக் கொடுத்தான்.” நீ அதிர்ஷ்டம் பண்ணினவன் தான் எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது” என்று சொல்ல அவனையும் அறியாமல் சிறு கூச்சம் ஒன்று உற்பத்தியானது.


‘இன்னைகெல்லாம் இவ என்னை தூங்க விடமாட்டா போல இருக்கே’ என்று நினைத்துப்படியே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.


கடைசியாக ஒரு வழியாக தலையணையை கட்டியணைத்தபடியே கண்ணையற ..அதே நேரத்தில் அங்கே சரண்யாவோ இவனை மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தாள் .


‘பொறுக்கி கொஞ்சம் கூட யோசிக்காமல் பின்னாடி வந்து நின்னுதும் இல்லாம எவ்வளவு கேஷவலா எதிர்பாராத நேரத்துல நெத்தியில முத்தம் கொடுக்கிறான் .சரியான பொம்பள பொறுக்கி போல இருக்குது .இவன்கிட்ட இன்னமும் கவனமா இருக்கணும் .இனி எங்க போனாலும் ஒரு தடவை பார்த்துட்டு தான் போகணும்.


ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல நிச்சயமா நீ மாட்டுவ.. அப்ப இருக்குது உனக்கு ..என் கையால மறக்க முடியாத மாதிரி ஏதாவது செஞ்சு வைக்கப்போறேன் பாரு ‘என்று நினைத்தபடியே மெல்ல தூங்க ஆரம்பித்தாள்.


வெறுப்பு முழுக்க அவனின் மேல் இருக்க அன்றைய கனவு கூட அவன் சம்பந்தமாகவே இவளை தொடர்ந்து கொண்டிருந்தது .


இரண்டு முறை விழித்தவள் “சரியான கிராதகன்.. தூங்க கூட விடுவதில்லை. கனவுல கூட வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு என்னை தூங்க விடாம செய்யறான்” என்று திட்டியப்படியே மறுபடியும் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள் சரண்யா.


அடுத்த வருவாரம் வேகமாக நகர்ந்து இருந்தது .


இந்த ஒரு வார காலமும் நந்தன் இவளது கண்களில் தென்படவில்லை. நிம்மதியாக உணர்ந்தால் சரண்யா.


அன்றைக்கு மதியமே இவர்களுக்கு காலேஜ் முடிந்து இருந்தது .


“இன்னைக்கு மதியத்துக்கு மேல் காலேஜ் லீவு பசங்க பாதி பேர் கட் அடிச்சுட்டு படத்துக்கு போறாங்க .நீ என்ன பண்ணலாம்னு இருக்கற..” நிலா சரண்யாவை பார்த்து கேட்க ..


“நான் நேரா வீட்டுக்கு தான் போக போறேன்.”


“ இந்த உச்சி வெய்யில்லையா..”


“ அப்புறம் வேற என்ன செய்றதாம்”.


“ நம்ம கொஞ்ச நேரம் புட்பால் மேட்ச் பார்க்கலாமா..*


“ எங்க ?”என்று திரும்பி கேட்டாள்.


“ இன்னைக்கு ஃபுட்பால் மேட்ச் நடக்குது .சீனியர்களுக்கானது. ஒரு காலேஜ்ல ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்லையுமே கலந்துக்குறாங்க .


ரொம்ப விறுவிறுப்பா போகுமாம்.. எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க. கொஞ்சம் பேர் படத்துக்கு போயிருக்காங்க. மிச்சம் நிறைய பேர் ஃபுட்பால் கிரவுண்டுக்கு தான் போறாங்க நீயும் வரியா. கொஞ்ச நேரம் போய் பார்க்கலாம் .மூன்று மணிக்கு வீட்டுக்கு போனா போதும்ல. வெயில் குறைந்திடும். கொஞ்சம் நல்லா இருக்கும். என்ன சொல்ற சரண்யா” என்று கேட்க, யோசனையோடு சரி என்று தலையாட்டினாள்.


நிறைய மாணவர்கள் புட்பால் கிரவுண்டை நோக்கி சென்று கொண்டிருக்க ..இவ்ர்களுமே அவர்களோடு இணைந்து கொண்டாள்.


“ இரு சாப்பிட்ட ஏதாவது சாக்லேட் மாதிரி வாங்கிட்டு வரேன் “என்று நிலா நகர.. “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.என்கிட்ட சினாக்ஸ் இருக்கு.. அத ஷேர் பண்ணிக்கலாம் .“என்றால் சரண்யா.


வேறு வேறு டிபார்ட்மெண்டில் இருந்து ஒவ்வொரு டீம்மாக கலந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்க.. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா .


உண்மையிலேயே விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருந்தது.


நேரம் செல்லச் செல்ல ஒவ்வொரு மாணவர்களையும் அந்தந்த டிபார்ட்மெண்டில் இருந்தவர்கள் ஆர்வமாக பெயர் சொல்லி கத்திக் கொண்டிருக்க.. அடுத்ததாக கலந்து கொண்ட மாணவர்களில் நந்தாவும் இருந்தான்.


சஞ்சய் அவனின் அருகிலேயே இருக்க.. நந்தாவை பார்க்கவுமே இவளுடைய முகம் சுருங்கியது.


“ ம்.. இங்கேயும் இவன் தானா..” பேசாம கிளம்பி போயிடலாம் என்று பார்க்க இவளை சுற்றிலும் ஒரு பெரிய கூட்டமே இருந்தது .


நந்தா இறங்கிய சில நொடிகளிலேயே ஆரவாரமாக மாணவர்கள் கத்த ஆரம்பித்தனர் .


“எதுக்காக இப்படி கத்துறாங்க “என்று கேட்க ..”உனக்கு தெரியாதா இந்த டீம் செமையா விளையாடுவாங்கலாம். நிறைய பேர் இந்த டீமோட விளையாட்ட பார்க்கறதுக்காகவே வந்திருக்கிறாங்க தெரியுமா..”


“ஓ அப்படி என்ன பெருசா விளையாடிட போறாங்க “என்று சாதாரணமாக கேட்டப்படியே கவனிக்க ஆரம்பித்தாள் .


உண்மையிலையே விளையாட்டு விறுவிறுப்பாக இருந்தது.


இவளும் ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தால் .அதிலும் நந்தா நிறைய கோல்களை போட்டுக் கொண்டிருந்தான் .


சரியாக ஒவ்வொரு ஃபாலும் அதனுடைய எல்லைக்குள் சென்ற போது அங்கே பெரிய ஆரவாரமே துவங்கி அடங்கியது .


சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடியே இவளும் அமர்ந்திருக்க.. நிலாவோ உச்ச ஸ்தானியில் மகிழ்ச்சியாக கத்திக் கொண்டிருந்தாள்.

வேடிக்கை பார்த்து முடித்தவள் சரியாக அவர்களுடைய விளையாட்டு முடியவுமே கூட்டம் கலைய ஆரம்பிக்க ..இவளுமே எழுந்து நகர ஆரம்பித்தாள்.


நிலாவின் கையை பற்றி இழுத்தபடியே..” போதும் ரொம்ப நேரம் ஆயிடுச்சு. இனி வீட்டுக்கு போகணும் . வழக்கமா காலேஜ் விடற நேரம் ஆகிடுச்சு. இப்ப பஸ் ஸ்டாப் போனா சரியா இருக்கும் “என்று இழுத்துக் கொண்டு நடக்க ..அதே நேரத்தில் விளையாடிய பிளேயர்கள் கூட ஒவ்வொருவராக கூட்டத்தோடு கலந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.


வாசலருக்கு சென்ற போது சரியாக நந்தா இவளை வழி மறித்து இருந்தான்.


கையில் ஃபாலை வைத்தபடியே “என்ன .. என்னை பார்க்க தானே இவ்வளவு தூரம் வந்த” என்று கேட்க.. முதலில் திகைத்தவள் பிறகு கூட்டத்தில் தனக்கருகே இவன் நிற்பதை பார்த்து.. ‘இவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் நம்மகிட்ட வந்தான்’ என யோசித்தப்படியே..” யார் சொன்னாங்க அப்படின்னு.. முதல்ல வழியை விடுங்க “என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருகே சஞ்சையின் முகம் தென்பட்டது. வேகமாக” சஞ்சய்.. சஞ்சய் “என கத்தி அழைக்க அவனுமே திரும்பிப் பார்த்தவன் இவளை பார்க்கவும் அறிமுக புன்னகை சிந்தினான்.


“.ஹலோ என்ன இந்த பக்கம்.. மேட்ச் பார்க்க வந்தீயா.‌” என்று கேட்டபடியே அருகே வர..” ஆமா “என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிலா நந்தனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து இருந்தாள்.


“ சீனியர் செம சூப்பரா விளையாடுறீங்க .இனி எப்ப எல்லாம் உங்களோட மேட்ச் இருக்குதுன்னு முன்னாடியே தெரிஞ்சிதுனா.. இங்கே நேரா வர வசதியா இருக்கும். உங்களோட நம்பர் தர முடியுமா “என்று கேட்க..

இவ்ளோ நிலாவின் கையை இறுக பற்றியவள்.” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எதுக்காக நம்பர் கேக்குற.. தேவை இல்லாம பேசி டிஸ்டர்ப் பண்ணவான்.. எல்லார்கிட்டயும் நம்பர் வாங்குற வழக்கத்தை முதல்ல நிப்பாட்டு.” என அடிக்குரலில் அவளை மிரட்டிக் கொண்டிருந்தாள்.


“என்ன உங்க பிரண்டு என்ன சொல்றாங்க. என்னோட நம்பர் அவங்களுக்கும் வேணுமா.. இதோ நான் தரேன்” என்று சொன்னபடியே சரண்யாவின் கையில் இருந்த போனை டக்கென்று வாங்கியவன் நம்பரை டயல் செய்ய ஆரம்பிக்க.. இவளோ லாக் கூட போட்டு வைத்திருக்கவில்லை.


“மேனர்ஸ் இல்லையா.. ஃபோனை கையில குடுங்க.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க .எதுக்காக இப்ப என்னோட போன பிடுங்கறீங்க” என சத்தமிட்டு கொண்டிருந்தாள்.


“ ஹலோ அவசரப்படாதம்மா. ஒரு லாக் கூட போட்டு வைக்கல இவ்வளவு ஃப்ரீயாவே விட்டு வைப்ப ..


ஒரு வேலை போனை யாராவது தூக்கினாங்கன்னா என்ன செய்வ” என கேட்டபடியே வேகமாக அவளுடைய போனில் இருந்து தன்னுடைய ஃபோனிற்கு ரிங் விட.. கடைசி நேரத்தில் பிடுங்கி இருந்தாள்.


“ இதோ நம்பர் என்கிட்ட வந்துருச்சு .ரொம்ப தேங்க்ஸ்” என்று சொன்னவன் அருகே நின்று இருந்த சஞ்சய்யை பார்த்து ..”சஞ்சய் போகலாமா.. நேரமாயிடுச்சு .”என்று சொல்ல நிலாவோ ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்து விழித்துக் கொண்டிருந்தாள்.


“உங்க பிரண்டோட போன்ல நம்பர் இருக்குது வாங்கிக்கோங்க. தேவைப்பட்டால் எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க. நான் பேச தயாரா இருக்கிறேன். “சொன்னவன் சரண்யாவை பார்த்து லேசாக கண்ணடித்தபடியே சஞ்சயை இழுத்துக் கொண்டு நகர்ந்திருந்தான்.


அவர்கள் நடந்த அடுத்த நொடியை நிலா சரண்யாவை பிடித்துக் கொண்டாள்.” என்னடி நடக்குது இங்க.. ஈஸியா போனை வாங்கி போன் நம்பர் ஷேர் பண்ணிட்டு போற அளவுக்கு அந்த சீனியர் உனக்கு தெரியுமா .அந்த சீனியர் பயங்கர பேமஸ் தெரியுமா .


மேக்ஸிமம் இங்க எல்லா காம்பெடிஷன்லயுமே அவர் இருப்பாராம் .நம்ம கிளாஸ்ல கூட எல்லாரும் இவரை பற்றி தான் பேசிகிட்டு இருந்தாங்க.


உனக்கு தெரியும்கிற விஷயத்தை எனக்கு சொல்லவே இல்ல பார்த்தியா.. ஏற்கனவே சொல்லி இருந்தேன்னா நானும் ஃபிரெண்டாகி இருப்பேன்ல..”


“ நீ கொஞ்சம் சும்மா இருக்கிறயா.. நானே செம கடுப்புல இருக்கேன். இதுல நீ வேற வந்து இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்காத புரிஞ்சுதா நீ முதல்ல வா போகலாம் .”


“இத பாரு உனக்கு அவனை பிடிக்கும்னா தாராளமா சொல்லிடு. அதுக்காக இப்படி எல்லாம் என்கிட்ட கடுகடுன்னு இருக்காத புரிஞ்சுதா .”


“நிலா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல .அவனைப் பார்த்தாலே தெரியலையா.. நெத்தியில பொறுக்கின்னு எழுதி ஒட்டி இருக்கு.”


“ என்ன நீ இப்படி சொல்லிட்ட.. அவங்க டிபார்ட்மெண்ட்ல மட்டும் இல்ல .ஒட்டுமொத்த ஹோல் காலேஜ்லேயுமே கேட்டு பாரு. நந்தா பத்தி எல்லாருமே ரொம்ப நல்ல விதமா தான் சொல்லுவாங்க .அத்தனை பேருக்கும் கேட்காமலே உதவி செய்றவராம். எங்கேயாவது ஏதாவது ஒரு பொண்ணுக்கு பிரச்சனைனா முதல்ல முன்னாடி நின்னு தட்டி கேட்கிறது அவர்தானாம். இப்படி நிறைய சொல்லிக்கிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா ஈஸியா பொறுக்கின்னு கதை சொல்லிகிட்டு இருக்குற.. எதையாவது நம்புற மாதிரி சொல்லு புரிஞ்சுதா..”


“இப்ப நான் வீட்டுக்கு கிளம்ப போறேன். நேரா பஸ் ஸ்டாப் போக போறேன் .நீ வரியா இல்லையா .அத முதல்ல சொல்லு .இல்லன்னா விடு..நீ பொறுமையா நந்தாவோட புராணத்தை பேசிட்டு வந்து சேரு. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல .


அவனை பத்தி பேசுறதுக்கு இங்க 1000 பேர் இருப்பாங்க. அந்த ஆயிரம் பேர் கூட நீ தாராளமா போய் சேர்ந்துக்கலாம் என்னை விட்டுடு “என்று சொன்னபடி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தால் சரண்யா.


சரண்யா நடக்க ஆரம்பிக்கவும் அவளை பின்தொடர ஆரம்பித்து இருந்தாள் நிலா.


சஞ்சய் நந்தனின் முதுகை தட்டியவன் .”என்ன அப்படி பார்த்துட்டு இருக்கிற வா நம்மளும் கிளம்பலாம் .இன்னைக்கு உன்னோட வீட்டுக்கு வர்றேன் .அம்மாவை பார்க்க வேண்டியது இருக்கு”.


“என்ன திடீர்னு வீட்டு பக்கம் அம்மா வர சொல்லி இருந்தாங்களா..”


“ வழக்கம்போல தான் ரொம்ப நாளாச்சுதாம்.. இப்போ வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட 15 நாளைக்கு மேல ஆச்சுல்ல.. போன் பண்ணி வர சொல்லி இருந்தாங்க .என்னோட வண்டியிலேயே இன்னைக்கு போயிடலாம்.”


“ஆல்ரெடி கார் வந்திருக்கும் சஞ்சய் .அப்போ இரு நான் டிரைவருக்கு போன் பண்ணி சொல்லிடுறேன். நான் சஞ்சய் பின்னாடி வரேன் .கொஞ்ச நேரம் ஆகும்னு சொல்றேன் .பக்கத்துல எங்கேயாவது போய் சாப்பிட்டு கிளம்பலாமா .”


“ம் கிளம்பலாமே வா “என்று அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.


“என்னடா அவ்வளவு சீக்கிரம் வெளியே சாப்பிடலாம்னு அழிச்சிட்டு வர மாட்ட.. இன்னைக்கு அதிசயமா இருக்குது .வீட்டுக்கு போகணும்னு சொன்ன பிறகு கூட சாப்பிட்டுட்டு போலாம்னு இழுத்துட்டு வந்து இருக்கற.. என்ன விஷயம் சொல்லு ஏதாவது குழப்பமா இருக்கறியா”.


“ ஆமா சஞ்சய் நிறைய குழப்பமா இருக்குது. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல”.


“ சுத்தி வளைச்சி எல்லாம் பேசாத.. ஸ்ட்ரைட்டாவே சொல்லு என்ன விஷயம் .”


“இந்த சரண்யா என்னை பத்தி என்ன நினைக்கறான்னு தெரியல .எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. ஒவ்வொரு தடவை அவ கிட்ட பேசும் போதும் தப்பாவே முடியுது .அவ என்ன பத்தி தப்பா மட்டும் தான் நினைக்கறா”..


*முழுசா காலேஜ் தொடங்கி ஒரு வருஷம் கூட முடியல அதுக்குள்ள எப்படி நல்ல விதமாக யோசிக்க முடியும் கொஞ்சம் டைம் வேணும்.


உனக்கு இது மூணாவது வருஷம்.. கொஞ்சம் படிப்புல கவனம் செலுத்து .எனக்கு உன்ன பார்க்கும் போது கொஞ்சம் பயமா இருக்குது.


முன்ன மாதிரி இல்ல.படிப்புல சரியா இன்ட்ரஸ்ட் இல்லாத மாதிரி இருக்கிற.. இனி வர்ற எக்ஸாம்ல ஏதாவது பிரச்சனையா இருந்துச்சுன்னா மறுபடியும் முதல்ல இருந்து படிக்க வேண்டியதா இருக்கும் புரியுதா .


நீ பெரிய சர்ஜன் ஆகணும். நிறைய பேருக்கு உதவனும் இதெல்லாம் உன்னோட ஆசை மட்டும் இல்ல கனவும் கூட..


உன்னோட அப்பா உனக்கு பெரிய ஹாஸ்பிடல் கட்ட இப்பவே இடம் எல்லாம் வாங்கி போட்டு தயாரா இருக்காங்க .அப்படி இருக்கும் போது நீ இப்படி உன்னோட கவனத்தை சிதற விடுறது சரி கிடையாது புரியுதா.


நந்தா நான் உன்னோட ப்ரெண்ட்.. உனக்கு நல்லது மட்டும்தான் யோசிப்பேன் புரியுதா”.


“ புரியுது இல்லைன்னு சொல்லல .ஆனா என்னோட நிலைமை பற்றியும் யோசிக்கணும்ல..”


“ நீயே ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட்.. உனக்கு தனியா சொல்ல தேவையில்லை.. எல்லாமே ஹார்மோன் செய்யற விளையாட்டு ..கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ.. உன்னையே கட்டுப்படுத்திக்கோ புரியுதா..”


“ம்ம்..”


“ சரி இதை பற்றி யோசிக்க வேண்டாம் .இப்ப சாப்பிடு நேரா வீட்டுக்கு போகலாம்.”


“ஓகே டா தேங்க்ஸ். உன்கிட்ட பேசின பிறகு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன மாதிரி தோணுது. நீ சொல்றதும் கரெக்ட் தான்.


கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் இன்னுமே ரெண்டு வருஷம் இருக்குதுல்ல ..நானே அவசரப்பட்டு ஒவ்வொரு தடவையும் போய் பேசும்போது ஏதாவது ஒரு பிரச்சனை வருது. இதையெல்லாம் முதல்ல சால்வ் பண்ணனும் .முக்கியமா இந்த பொண்ணு என் பெயரில் கொஞ்சமாவது நல்ல அபிப்பிராயம் வர வைக்கணும். அதெல்லாம் சரி பண்ணின பிறகு பொறுமையா என்னை பத்தி புரிய வச்சுக்கலாம்னு தோணுது .”


“ஹப்பா இப்பவாவது நிதர்சனத்தை புரிஞ்சுகிட்ட.. ரொம்ப நல்லது. கிளம்பி வா.. “


ஆனால் அடுத்த சில நாட்களிலேயே பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அதற்கு முக்கிய காரணமாக சரண்யாவே இருக்கப் போகிறாள் என்பதை அப்போது அவன் அறியவில்லை. 

NNK-15

Moderator
6


காலையில் வேக வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தான் நந்தா.


“அம்மா காலேஜுக்கு லேட்டாயிடுச்சு .சீக்கிரமா” என்று சத்தம் தர..” இரு டா அவசரப்படாத ..சாப்பிட ரெடியாயிடுச்சு .இரு எடுத்துட்டு வரேன் “.


“அம்மா அந்த ரெஃபரன்ஸ் புக் எடுத்துட்டு போகணும் ஏற்கனவே எடுத்து வச்சேனே எங்க எடுத்து வச்சீங்க..”


“ ஆமாண்டா ரெஃபரன்ஸ் புக் எடுத்துட்டு போகணும்னு சொன்ன.. என்ன பண்ணின? படுத்த வாக்குல புத்தகத்தை கட்டி புடிச்சிட்டு தூங்கிகிட்டு இருந்தே..


எடுத்து அந்த செல்ப்ல வச்சேன் பாரு.”


“ உங்களை.. யார் மா எடுத்து வேற இடத்தில வைக்க சொல்றது .எனக்கு டைம் ஆகிக்கொண்டிருக்கிறது.


நான் மறந்துட்டு போயிட்டேன்னா இன்னைக்கு அவ்வளவு தான் தெரியுமா..”


“ சும்மா எதையாவது சொல்லிகிட்டு இருக்காத.”


“ சரி அப்பா எங்க? இங்க இருக்காங்களா ..இல்ல காலைல கிளம்பி போயாச்சா”.


“ அவர் என்னைக்குடா இவ்வளவு நேரம் வரைக்கும் இங்கே உட்கார்ந்து இருக்கிறார். காலையில எந்திரிச்சு போயாச்சு. நீயும் காலேஜ் போனா மறுபடியும் சாயங்காலம் தான் வருவ..


எனக்கு தனியா இருக்க எவ்வளவு போரடிக்குது தெரியுமா .”


“அதுக்கு என்ன பண்ணலாம். அதையும் சொல்லுங்களேன்.”


“ என்ன பண்ணலாம்.. என் பையனுக்கு அழகான ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்.”


“ எப்படி படிச்சிட்டு இருக்குற பையனுக்கு..” கொஞ்சம் நக்கலாக கேட்ட படியே ஃபுக்கோடு வெளியே வர..” என்னடா எல்லாத்தையும் கரெக்டா எடுத்துட்டியா. எதையும் விட்டுடலையே”.


“ அதெல்லாம் கரெக்டா எடுத்து வைத்திருக்கிறேன்மா .நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..”


“ சும்மா பேச்சுக்கு சொல்றதுதான் அதுக்காக உடனேயா கல்யாணம் பண்ணி வைப்பாங்க .


உனக்கெல்லாம் இன்னமும் நிறைய டைம் இருக்குதுடா. நீ படிச்சு முடிக்கணும் .ஹாஸ்பிடல் கட்டி அதை நீ பொறுப்பா கவனிக்கணும் .இப்படி எவ்வளவோ இருக்குது.”


“ அப்புறம் ஏன் சும்மா சும்மா பொண்ணு பார்க்கறேன்..கல்யாணம் பண்றேன்னு வம்பளந்துக்கிட்டு இருக்கீங்க .”


*அப்படி சொன்னாதாவது உன் வாயிலிருந்து ஏதாவது வருதான்னு பார்க்கத்தான்..”


“ என்ன உண்மை உங்களுக்கு தெரியணும் .அம்மா நான் உங்ககிட்ட எதையும் மறைக்கல புரியுதா.”


“ நீ அப்படித்தான்டா சொல்ற.. ஆனா இதை சொல்லும் போது எல்லாமே உன்னோட கண்ணு என்ன பாக்குறதே இல்ல .இங்க அங்கன்னு அலைபாயுதே அதுவே சொல்லுது நீ என்கிட்ட பொய் சொல்றேன்னு.. சரி பார்க்கலாம் இன்னும் எவ்வளவு தூரம் தான் நீ போறேன்னு .”


“சும்மா இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க மா. முதல்ல சாப்பிட எடுத்து வைங்க நேரம் ஆயிடுச்சு” என்று அமர அப்போது சரியாக சஞ்சயிடம் இருந்து அழைப்பு வந்தது .


“என்னடா இவ்வளவு காலையில் கூப்பிட்டு இருக்கிற.. என்ன விஷயம்.*


“ என்ன விஷயமா.. பிரச்சனை இப்பெல்லாம் பெருசு பெருசா தான் வருது .முன்ன மாதிரியெல்லாம் இல்லை காலேஜ்ல ஒரு பிரச்சனை போய்கிட்டு இருக்குது. அது இன்னைக்கு தான் என் காதுக்கு வந்துச்சு .உன்கிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு ஒரே யோசனையாக இருக்கிறது.”


“ இதில் யோசிக்க என்ன இருக்கு. சொல்லிடு. நான் கேட்டுக்கறேன் “.


“வந்து.. பிரச்சனையை பெருசு பண்ண கூடாது .இத எப்படி டீல் பண்றதுன்னு எனக்குமே புரியல “


“டேய் என்னடா ஏன் இத்தனை பீடிகை போட்டுக்கிட்டு இருக்கிற.. நேரடியா விஷயத்தை சொல்லு .”


“வந்து ..நந்தா கொஞ்ச நாளாவே காலேஜ்குள்ள பசங்களுக்கு நடுவுல டிரக் அதிகமா பொழங்குறதா தகவல் கசஞ்சிக்கிட்டு இருந்தது.”


“ ஆமா இதை லாஸ்ட் டைம் கூட நீ சொன்னியே ..ஆனா யாரு என்னன்னு தெரியலன்னு சொல்லிக்கிட்டு இருந்த.. ஞாபகம் இருக்குது”.


“ ஆமாண்டா சொல்லிக்கிட்டு இருந்தேன் .இன்னிக்கி கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சு போல இருக்கு .


காலேஜுக்கு இப்பதான் வந்தேன். வரவுமே தெரிஞ்சது”.


“ என்னடா .என்ன ஆச்சு .டிரக்ஸ் சீனியர் பசங்க கொஞ்சம் பேரு யூஸ் பண்ணி இருப்பாங்க போல இருக்கு .


பத்தாததுக்கு ஜூனியர் பசங்க கிட்ட பணம் கேட்டு ரகளை பண்றாங்க. அடிக்கவும் செஞ்சிருக்காங்க .கிட்டத்தட்ட ஈவ்டீசிங் மாதிரி..


இது பசங்களுக்கு மட்டுமல்ல பொண்ணுங்க கிட்டையுமே ஹார்ட் சாக நடந்து இருக்காங்க இப்பதான் விஷயம் தெரிஞ்சது. இங்க பெருசாவே ரகளையாகும் போல இருக்குது.”


“ என்னடா பண்ணனும்”.


“ இன்றைக்கு நீ பேசாம வராம லீவு எடுத்துக்கோ.. நீ இங்க வந்தா பிரச்சனை நிச்சயமாக பெருசாகும் .”


“டேய் நானா போய் சண்டை போட போறேன் .அப்புறம் ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்கிற.. இரு இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன்” என்று போனை வைக்க ..இவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் .”என்னடா என்ன பிரச்சனை அங்க.. நீ என்னவோ இப்ப வந்துடுறேன்னு வேற சொல்லிக்கிட்டு இருக்குற ..யார் பேசினது சஞ்சயா..”


“ சஞ்சய்தாம்மா பெருசா எதுவும் இல்ல .காலேஜ் பசங்களுக்குள்ள ஏதாவது சின்னதா தகறாராம். அதான் வந்து பார்த்துக்கறேன்னு சொன்னேன் .”


“என்னவோ சண்டைக்கு எல்லாம் போகாதடா. எனக்கு சண்டைனாலே பயம்.. “


“அம்மா யாரு ம்மா இப்ப சண்டைக்கெல்லாம் போறாங்க. ஏன் இப்படி திடீர்னு சொல்ற..”


“ சும்மா என்ன ஏமாத்தலாம்னு நினைக்காத நந்தா .உங்க அப்பா என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு .


அன்னைக்கு ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்தியாமே எனக்கு ஷாக்கிஙகா இருந்தது .அன்னைக்கு சொல்லல ஆனா ரெண்டு நாளைக்கு முன்னாடி சொல்லியாச்சு .


சொன்ன நேரத்தில் இருந்து நான் உன்னை தான் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு உன்னை பார்க்கும் போது கொஞ்சம் பயமா கூட இருக்குது .”


“என்னமா என்னை பார்த்து பயப்படுறீங்களா .இத என்னை நம்ப சொல்றீங்களா .”


“தெரியல டா வீட்டுக்குள்ள நீ ரொம்ப நல்ல பையனா இருக்குற.. எதிர்த்து பேசறது இல்ல.


நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுக்கற ஆனா வெளியே என் பையன் எப்படி இருக்கிறான்னு எனக்கு தெரியலையே .


ஒரு வேலை இந்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல வர்ற மாதிரி வீட்டுக்குள்ள ரொம்ப நல்ல பையனாவும் வெளியில் அப்படியே ஆப்போசிட்டாவும் இருக்கறயோன்னு தோணுது.”


“ ஐயோ அம்மா நிறைய படம் பார்த்து நீங்க கெட்டு போயிட்டீங்க .அது மட்டும் நல்லா தெரியுது .இப்படி எல்லாம் பயப்பட வேண்டாம் சரியா.. உங்க பையன் என்னைக்குமே தப்பு பண்ண மாட்டான் .அது மட்டும் மனசுல வச்சுக்கோங்க. ஒருத்தர் கிட்ட சண்டை போடறேன்னா அதுக்கு கூட நியாயமான காரணம் இருக்கும் .அதை புரிஞ்சுக்கோங்க “.


“அதுதான் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்குறேன் .

யார்கிட்டயும் எப்பவும் சண்டை போடக்கூடாது. எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது புரிஞ்சுதா”.


“ சரிமா யார்கிட்டயும் எந்த பிரச்சினைக்கும் போகல சரியா உங்களுக்கு சந்தேகமா இருந்தா சஞ்சய் கிட்ட நீங்க அப்பப்போ போன் பண்ணி விசாரிச்சுக்கோங்க .”


“இது என்னடா வீட்டு பையனை பத்தி அடுத்த பையன்கிட்டயா விசாரிப்பாங்க.”


“ என்னது இதுவரைக்கும் கேட்டதே இல்ல.. அப்படிங்கிற மாதிரி இப்படி ஒரு கொஸ்டினை என்கிட்ட கேக்குறீங்க .இந்த கதை எல்லாம் இங்கே ஆகாது மா .எனக்கு உங்களை நல்லாவே தெரியும். சரி நீங்க என்ன சொன்னாலும் நம்புகிறேன் இப்ப நான் கிளம்புறேன் “என்று வெளியேறினான் நந்தா.


வேகமாக தன்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு புறப்பட..” டேய் உன்னை கார்ல போக சொல்லி இருக்கிறேன் .டூவீலர் தொடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் ஞாபகம் இருக்குதா”.


“ சும்மா சின்ன பிள்ளை மாதிரி இப்படியே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க .நானும் வளர்ந்தவன் தான் .நான் பார்த்து போய்க்குவேன். எனக்கு டூவீலர் தான் வசதியா இருக்குது .கார்னா வீட்டுக்கு வர லேட் ஆகும். இதுன்னா சட்டுனு காலேஜுக்கு போயிட்டு திரும்ப வந்துடலாம் “ என்று நகர்ந்து இருந்தான் .


நேராக சஞ்சய் இருக்கும் இடத்திற்கு சென்றவன் .”எங்கடா பிரச்சனை யார் பண்ணிக்கிட்டு இருக்காங்க “என்று கேட்க ..


“இனமும் கூட பிரச்சனை முடியல. இன்னுமுமே ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.


சீனியர் பசங்க ரொம்ப மோசம் போல இருக்குது .ஜூனியர் பசங்க கிட்ட தகாத வார்த்தையை சொல்லி அடிக்கிறது பொண்ணுங்கள கையை பிடித்து இழுக்கிறதுன்னு ரகளை பெருசாவே போகுது .”


“எந்த இடத்தில் வைத்து இதெல்லாம் நடக்குது . “


“வாசலுக்கு பக்கத்துல தான் இந்த ரகளை நடக்குது.”


“இன்றைக்கு இதுக்கு முடிவு கட்டிடலாமா.. என்ன சொல்ற சஞ்சய் “என்று கேட்க ..


“இல்ல வேண்டாம் நந்தா ஏற்கனவே இப்பதான் பிரச்சினையில் சிக்கி கைகட்டை கூட பிரிச்சிருக்கிற.. இப்ப மறுபடியும் தகராறுனா..சரிப்பட்டு வராது ஜஸ்ட் நம்ம பார்த்து வார்ன் மட்டும் பண்ணிவிடலாம். பிரச்சனையை பெருசாக்க வேண்டாம். நம்ம மேனேஜ்மெண்ட்ல இத பத்தி பேசலாம். அவங்க பாத்துக்குவாங்க.”


“ஏற்கனவே இது சம்பந்தமா நீ சொன்னதா ஞாபகம் ஆனா இதுவரைக்கும் எந்த ஆக்ஷனும் எடுக்கல தெரியுமா.”


“ அதுக்கு என்னடா பண்றது .எல்லாருமே பயந்துகிறாங்க.. அந்த பசங்க மேல கை வச்சா பிரச்சனை வேற மாதிரி ஆகும். அது இல்லாம பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கிறது ஒரு பெரிய இடத்துப் பையன்கறப்போ என்ன செய்ய முடியும் .கொஞ்சம் அடக்கிதான வாசிப்பாங்க.”


“ ஆமாண்டா எல்லாரும் இப்படியே சொல்லிட்டு உட்கார்ந்திருந்தா அப்புறம் என்னைக்கு தான் பிரச்சனைக்கு முடிவு தெரியுமாம் .


இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துடலாம் .நீ வா “என்று முன்னால் நடக்க ,சற்று பதட்டத்தோடு சஞ்சய் அவன் பின்னால் சென்றான்.


இன்னும் கூட அங்கே வந்து கொண்டிருந்த மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டிருந்தனர் அந்த மாணவர்கள்.


ஒரு பெண்ணின் கைப்பிடித்து வம்பு செய்து கொண்டிருக்க யோசிக்காமல் அங்கே சென்றவன் பளார் என்று கன்னத்தில் அறைந்திருந்தான்.


சற்று நேரத்தில் எல்லாம் இரண்டு பிரிவினருக்கும் அங்கே சண்டை வர ஆரம்பித்திருந்தது .


அந்த சண்டை சற்று நேரத்தில் பெரிய அளவில் ஆரம்பிக்க மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர்.


சின்னதாக ஆரம்பித்து சண்டை பெரியதாக ஆரம்பிக்க ,இரண்டு கோஸ்டி மோதல் பெரியதாகவே வர ஆரம்பித்தது.


ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர் .


அதே நேரத்தில் தான் அங்கே சரண்யா தன்னுடைய தோழியர்களோடு வந்தது.


இங்கே தகராறு பார்த்தவள் திகைத்து நின்றிருந்தாள்.


நடுநாயகமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நந்தனின் மேல் தான் பார்வை இருந்தது. பார்வை மட்டுமல்ல பயமும் கூட அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.


நிலா அருகில் நின்று சரண்யாவை இழுத்துக் கொண்டு நகர ,”என்ன இது இப்படி அடிச்சுக்கிறாங்க “என்று பயத்தோடு கேட்டபடியே சரண்யா நகர்ந்து கொண்டிருந்தாள்.


“ சீனியர் ,ஜூனியர் பசங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை.. நம்ம அந்த பக்கம் போக வேண்டாம் .நம்ம நம்மளோட கிளாசுக்கு போகலாம் வா” என்று அழைக்க.. செல்லாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா .


சற்று நேரத்தில் எல்லாம் அங்கே சண்டையை விலக்கி விட , ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை ஒரு புறத்தில் நிறுத்தி இருந்தனர்.


ரகளை செய்த மாணவர்களின் தாய் ,தந்தையரை காலேஜுக்கு வர சொல்லி தகவல் சொல்ல ஆரம்பிக்க, சற்றும் பயம் இல்லாமல் தான் நந்தா நின்று இருந்தான்.


அங்கு என்ன நடந்தது என சாட்சி கேட்பதற்காக சிலரை அழைக்க யாருமே முன் வந்திருக்கவில்லை.


சரண்யா நின்றவள் இன்னமும் கூட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


சற்று நேரத்தில் எல்லாம் அங்கே காலேஜ் டீனாக இருந்தவர் முன்னாள் வந்து கேட்டுக் கொண்டிருந்தார்.


“ இங்க ரகளை நடந்ததை எல்லாரும் பார்த்து இருக்கீங்க அது எனக்கு நல்லது தெரியும்.


மாணவர்களுடைய சக்தி பெருசுதான் .ஒருத்தரை ஒருத்தர் அவ்வளவு சீக்கிரம் மாட்டி விட மாட்டீங்க.


அதுவும் எனக்கு நல்லா தெரியும் ஆனா இதையே இதே இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தா நல்லா இருக்காது .அதனால இன்னைக்கு எனக்கு தெளிவா தெரிஞ்சாகணும் .


இந்த ரகளை ஈடுபட்டவங்களை நிச்சயமாக சும்மா விடப்போவதில்லை.


தப்புன்னு தெரிஞ்சா நிச்சயமா யோசிக்காமல் டிசி கூட கொடுத்திடுவேன் .சொல்லுங்க என்ன பிரச்சனை நடந்தது’ என்று கேட்க ஒரு மாணவி முன்னாள் வந்து பேசினாள்.


“ஈவ்டீசிங் பண்ணறாங்க.. பணம் கேட்டு டார்ச்சர் பண்றாங்க. ரெண்டு பொண்ணுங்கள கைநீட்டி அடிக்க கூட செஞ்சிட்டாங்க. அதுதான் நடந்தது பிறகு என்ன ஆச்சுன்னு தெரியல. ஏன் சண்டை நடந்ததுன்னு தெரியல” என்று சொல்ல..” வேறு யாராவது சொல்றீங்களா “என்று கேட்க சரண்யா முன்னாள் வந்து நின்றவள் யோசிக்காமல் நந்தாவிற்கு நேராக கையை நீட்டினாள்.


“ இவர் அடித்துக்கொண்டு இருந்தத தான் நான் பார்த்தேன். இங்க என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது .இவர்தான் ரகளையில் ஈடுபட்டார்னு நினைக்கிறேன் “என்று சொல்ல அதிர்ச்சியாக சரண்யாவை பார்த்துக் கொண்டிருந்தான்.


அந்த காலேஜ் சற்று ஸ்ட்ரிட்டானது தான்.


எதை வேண்டுமானாலும் மன்னிப்பார்கள் ஆனால் ஈவ்டீசிங் என்ற ஒன்றை அங்கே ஆதரிப்பது கிடையாது.

கிட்டத்தட்ட பத்து மாணவர்கள் சேர்ந்து நின்றிருந்தால் அப்போதே அந்த நிமிடமே கூட்டத்தை பிரித்து விட வேண்டும் இது ரூலாகவே அங்கு இருந்தது.


இவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி என்றால் அடுத்ததாக அவர் சொன்னது அதைவிட பேரதிர்ச்சியாக இருந்தது .


“நந்தா உன்னோட அம்மா அப்பா ரெண்டு பேர்த்தையும் இங்க வர சொல்லு. இன்னமும் இங்க ரகளை பண்ணின அத்தனை பசங்களுமே நேரா என்னோட ஆபீஸ் ரூம் வாங்க.


அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்க பெற்றோர்கள் எல்லாரும் இங்கு இருக்கணும்.


சும்மா தூரமா இருந்து வரேன். நான் ஹாஸ்டல்ல தங்கி இருக்கிறேன். இந்த மாதிரி எந்த பதிலும் சொல்ல கூடாது. எப்ப அம்மா ,அப்பா வந்து என்ன பார்க்கிறாங்களோ அதுக்கு பிறகு கிளாஸ் ரூம்குள்ள போனா போதும். அதுக்கு முன்னாடி யாரையுமே கிளாஸ் ரூமுக்குள்ள விடக்கூடாது புரிந்ததா “என்று ப்ரொபஷரை பார்த்து ஙொல்ல அவர் சரி என்பது போல தலையாட்டினார் .


“உடனே அவங்க அவங்க அம்மா அப்பாவை வர சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு நகர இப்போது இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது.


நந்தாவுக்கு காலையில் தாயாரிடம் பேசியது ஞாபகத்தில் வர ,அப்படியே நெற்றியை பிடித்தபடி அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டான்.


சற்று தயக்கத்தோடு தன்னுடைய தந்தைக்கு அழைத்து பேசினான்.


“ இங்க காலேஜ்ல ஒரு பிரச்சனையாகிடுச்சு .உங்கள ஆபீஸ் ரூம்பிற்கு வர சொல்லி இருக்காங்க .வர முடியுமா” என்று தயங்கி கேட்க, அவருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை .


“என்ன ஆச்சு நீ ரகளைல பண்ற பையன் எல்லாம் இல்லையே.. ஏதாவது பிரச்சனையா .ரொம்ப முக்கியமான விஷயமா “என்று கேட்க ,”ஆமாம்பா உடனே வாங்க “என்று கூறி போனை வைத்தான் .


கோபம் எல்லாம் சரண்யாவின் மேல் திரும்புயது இப்போது..


‘ என்ன பொண்ணு இவ எதுக்காக இப்படி திரும்பத் திரும்ப என்னையவே டார்கெட் வச்சு மாட்டி விடறா’ என நினைத்தபடியே அங்கேயே அமர்ந்திருந்தான். அருகே சஞ்சய் பதட்டமாகவே நின்று இருந்தான்.அவரின் மேல் எந்த புகாரும் இல்லை.


“சாரிடா என்னால தான் இத்தனை பிரச்சனை ஆகிடுச்சு. நான் உன்ன கூப்பிட்டு இருக்க கூடாது “என்று சொல்ல, “பரவாயில்ல விடு என்றைக்கு ஆனாலும் இந்த விஷயம் பெரிய பிரச்சனையாக முடியும் என்பது எனக்கு ஏற்கனவே நல்லா தெரியும். “


அத்தனை ரகளை நடந்திருந்தும் சஞ்சய் அந்த கூட்டத்தில் நந்தாவுக்கு துணையாக நின்று இருந்தோமே இவனின் பெயர் ஏனோ வெளியே வரவே இல்லை .


சஞ்சய் அப்படி ஒரு ரகளையில் ஈடுபட்டான் என்று யாருமே சொல்லவும் இல்லை.


நந்தாவிற்கு அருகில் தான் அவனும் நின்றது. டீன் வந்து என்ன என்று கேட்கும் போது “இவனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இந்த ரகளையில் கலந்துக்கவும் இல்லை .ஃப்ரெண்ட் என்பதால் பக்கத்தில் இருக்கிறான்” என்று இவனை நகர்த்தி விட்டிருந்தான் நந்தா.


அதுவே சஞ்சய்க்கு என்னவோ போல் இருந்தது .அந்த வருத்தத்தோடு தான் அவன் அருகே நின்றிருந்தது.


“ வெயிட் பண்ணலாம் அப்பா வந்து பேசின பிறகு பார்க்கலாம்.


டிசி விசயம் தான் பயமா இருக்குது .அந்த அளவுக்கு எல்லாம் டீப்பா போக மாட்டாங்க. எனக்கு தெரியும். அதுவும் இல்லாம இந்த மூணு வருஷத்துல ரெண்டு வருஷம் நான் தான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்திருக்கிறேன். அதனால அவ்வளவு சீக்கிரம் என்னை வெளியே அனுப்ப மாட்டாங்க. வெயிட் பண்ணலாம் என்று சொல்லி தைரியமாகவே அமர்ந்திருந்தான் நந்தா.


தந்தை வரவுமே நேராக ஆபிஸ் ரூம்பிற்கு அழைத்துச் செல்ல அங்கே இவரை பார்க்கவும் வரிசையாக கம்ப்ளைன்ட் வாசிக்க ஆரம்பித்தார்.


“நந்தா ரொம்ப நல்ல பையன் தான் .ரெண்டு வருஷமா நல்ல மார்க் எடுத்திருக்கிறார். இன்னும் நிறையவே சொல்லிட்டே போகலாம். ஆனால் இப்போ சமீபத்துல அவன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது .


இன்னைக்கு வெளியில ஏதோ ஈவ்டிசிங் பண்ணினார்கள் என்று சொல்லி ரகளை நடந்திருக்கு .


உங்க பையன் தான் முன்னாடி நின்னு எல்லாத்தையும் அடிச்சிருக்கிறான் .அதுக்கு பார்த்த சாட்சியும் இருக்குது” என்று சொல்ல சற்று அதிர்ச்சியாக தான் மகனை திரும்பிப் பார்த்தது.


“ என்ன நந்தா என்ன இதெல்லாம் ..”என்று சுரேந்தர் கேட்க ,”அப்பா வந்து” என்று தயங்கியபடி நிறுத்த ..


“இந்த ஒரு முறை மட்டும் தான் மன்னிக்க முடியும் .இன்னொரு முறை இதுபோல ஏதாவது செஞ்சா நிச்சயமா டிசியை கையில கொடுத்து அனுப்பிடுவோம் .


இது ரகளை பண்றதுக்கான இடம் கிடையாது. படிக்க வருகிற இடம் .அதுவும் டாக்டருக்கு படிக்கிற ஒரு பையனுக்கு எந்த அளவுக்கு பொறுமை இருக்கணும் .


இப்படி கோபமா அடிச்சுக்கிட்டு உருண்டா நல்லாவா இருக்குது..”


“சாரி சார் நான் என்னன்னு விசாரிக்கிறேன்”.


“ விசாரிங்க ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா இன்னொரு முறை இதுபோல ஏதாவது பிளாக் மார்க் வர மாதிரி எந்த ஒரு விஷயமும் வரக்கூடாது.


இன்னொரு முறை உங்க பையனோட பேர் அடிபட்டதுன்னா நிச்சயமா யோசிக்க மாட்டேன் .டிசி கொடுத்திடுவேன்.அதுக்கு பிறகு எங்கேயுமே படிக்க முடியாது புரிஞ்சுதா .இப்போ கிளம்புங்க” என்று சொல்ல தந்தையோடு சற்று பதட்டமாக வெளியேறினான்.


“என்ன நந்தா இதெல்லாம்..” என்று கேட்க.. “அப்பா இங்க டிரக் யூஸ் பண்றாங்கப்பா. அது சம்பந்தமா பேசிகிட்டு இருக்கும்போதே அது ரகளையில முடிஞ்சிடுச்சு.”


“ உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. ஏன் இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கிற”.


“ இல்லப்பா பாதிக்கப்படுவதும் என் போல மாணவர்கள் தானே உங்களுக்கு சொன்னா புரியாதுப்பா .


நிறைய பேரு படிக்கறதுக்கு வராங்க .ஆனா தவறான பாதையில வாழ்க்கையை தொலைச்சிடுறாங்களே”.


“ அதுக்கு அவங்க தான் பொறுப்பேற்றுக்க முடியும் நந்தா.. நீ என்ன செய்ய முடியும். ஏன் இப்படி எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்குற..


இன்னொரு முறை இப்படி ஆபிஸ் ரூம் வரைக்கும் என்னை வரவழைக்காத.. நான் உன் மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன் .


இனிமே இது போல பிரச்சினை வராதுன்னு நம்புறேன். புரியுதா’.


“ ஓகே பா ..சாரி பா.. இனி இது போல எந்த பிரச்சனையும் வராது “என்று சொல்ல ,”சரி இப்போ நீ என்ன செய்யப் போற..*


“ கிளாஸ்க்கு போகணும் பா”.


“ இல்ல இன்னைக்கு நீ எங்கேயும் போக வேண்டாம். என் பின்னாடி கிளம்பி வா” என்று அழைத்துக் கொண்டு நகர்ந்தார்.


அதே நேரத்தில் அங்கே சரண்யாவை நிலா மட்டுமல்ல அவளுடைய கல்லூரி தோழிகள் அனைவருமே திட்டிக் கொண்டிருந்தனர் .


“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்குது. எதுக்காக நந்தாவைமாட்டிவிட்ட.. அங்கே என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா ..


அந்த பசங்க அவங்க ஏற்கனவே டிரக் யூஸ் பண்ணி இருப்பாங்க போல இருக்கு .


பொண்ணுங்களை அடிச்சு வேற விட்டிருக்கிறார்கள் .அதுவும் காசு கேட்டு.. இதெல்லாம் எந்த வகையில நியாயம் .


அதை ஏன்னு கேட்க போனப்பதான் அங்க தகராறு நடந்துச்சு .நீ என்னடான்னா தப்பு செய்யாதவனை ஈசியா மாற்றிவிட்டுட்டு வந்திருக்கிற.. அதுவும் ஈவ்டீசிங் அவன்தான் பண்ணினான்னு வேற சொல்லிட்டு வந்து இருக்கிற.. ஏன் இப்படி எல்லாம் செய்ற சரண்யா .”


“உனக்கு என்ன தெரியும். நான் பார்த்தது வரைக்கும் தப்புன்னு தோணுச்சு .அத அப்படியே சொல்லிட்டு வந்தேன் .”


“என்ன தப்பை பார்த்த.. நீ வரும் போது சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு முன்னாடி நடந்தது ஏதாவது உனக்கு தெரியுமா” என்று ஒரு மனைவி எகிற ,”இத பாரு தெரியாம சொல்லிட்டேன் போதுமா “என்று சொல்ல ..”என்னது சாரி கேக்குறியா. ஒருவேளை டிசியை கொடுத்து வெளியே அனுப்பிட்டா அந்த சீனியரோட லைஃப் போயிடும் தெரியுமா”.


“ எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு அப்போ என்ன சரின்னு பட்டதோ அதை அப்படியே சொன்னேன் .


இதுக்கு மேல இதை பத்தி யாரும் என்கிட்ட பேச வேண்டாம் “என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் சரண்யா.

 

NNK-15

Moderator
7

நான்கு நாட்கள் முடிவடைந்து இருந்தது .இன்னமும் கூட நந்தாவிற்கு மனது ஆறவில்லை .

இப்போது சரண்யாவை நினைத்தாலும் கோபம் கோபமாக வந்தது .

அவள் செய்து வைத்த காரியம் அப்படி.. நல்ல வேளை இவனிடமும் இவனது தந்தையிடமும் லெட்டர் எழுதி கேட்டதோடு சரி .அதற்கு மேல் பெரியதாக கேட்கவில்லை.

இந்த நான்கு நாட்களுமே சரண்யாவை பார்க்க கூட அவனுக்கு தோன்றவில்லை.

“ வேண்டாம் ..இவ எனக்கு இனி வேண்டாம் .மொத்தமாக அவளை மறக்க நினைத்தான்.

நினைத்தானே தவிர அவனால் இந்த நிமிடம் வரை முடியவில்லை.

இன்றைக்கு முக்கியமான ஒரு டெஸ்ட் எழுத வேண்டி இருந்தது.

மொத்த பேரும் எக்ஸாம் ஹாலுக்குள் எழுதிக் கொண்டிருக்க இவன் எழுத அமர்ந்த நேரத்திலிருந்து மறுபடியும் சரண்யாவின் ஞாபகம் தான்.

அவள் அன்றைக்கு செய்த துரோகம் இதுவே திரும்பத் திரும்ப அவன் கண் முன்னால் வர, சட்டென தேர்வு பேப்பரை மூடி வைத்தவன் எதுவும் எழுதாமல் வேகமாக எழுந்து வெளியேறினான் .

அவனுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த சஞ்சய் அவனை பார்த்தவுடன் ஒன்றும் புரியாமல் சென்றவனையை திரும்பி பார்த்தபடி யோசிக்காமல் அவனும் கூட பேப்பரை மடித்து வைத்துவிட்டு நண்பனின் பின்னால் வேகமாக ஓடினான்.

நேராக வெளியே சென்றவன் பின்னால் இருந்த கிரவுண்டுக்குள் சென்று தலையை பிடித்தபடி அமர்ந்து இருக்க.. சில நிமிடங்களிலேயே “நந்தா நந்தா” என அழைத்தபடி அவன் பின்னால் ஓடி வந்தவன் அவன் அருகே அமர்ந்து,”என்ன செஞ்சுகிட்டு இருக்கற.. நீ செய்யறது உனக்கு புரியுதா .

எதுக்காக இப்ப டெஸ்ட் பேப்பரை எழுதாமல் மூடி வைத்துவிட்டு வந்த” என்று கேட்க ..”உன்னை யார் என் பின்னாடி வர சொன்னது .

நீ முதல்ல எழுந்து போ “என்று திரும்ப இவனிடம் சாட்டினான்.

“ அதுதான் நானும் முடி வெச்சிட்டு வந்துட்டேனே ..இனி எப்படி மறுபடியும் அந்த ஹாலுக்குள்ள விடுவாங்க .

நான் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்குது . நந்தா நான் உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கிறேன்.

நீ நடந்து கொள்வது எதுவுமே சரி இல்லை .சதா சர்வ நேரமும் எதையோ இழந்தது போல உட்கார்ந்திருக்கற.. எனக்கு ஒன்னும் புரியல நந்தா..

பிரச்சனை முடிஞ்சிடுச்சு புரியுதா. மறுபடியும் அன்றைக்கு நடந்ததையே யோசிச்சுகிட்டு இருக்கிறயா”.

“ எதுக்காக டா அவ என்னை அப்படி மாட்டிவிட்டா.. எனக்கு அது புரியவே இல்லை .

அது இன்னுமும் மண்டைக்குள்ள திரும்பத் திரும்ப கேள்வி கேட்டுகிட்டே இருக்குது .நான் அவளை என்ன பண்ணினேன் .

பின்னாடி போனேன் .அவளை உயிருக்குயிரா விரும்புறேன்னு சொன்னேன் .அதை தாண்டி நான் அவளை என்ன பண்ணேன் சொல்லு” என்று நண்பனின் சட்டையை கொத்தாக பிடிக்க,

“ நீ எதுக்கு இவ்வளவு கோபப்படுற . இந்த கோபம் நல்லது இல்ல .அதுவும் நீ இருக்கிற இந்த டாக்டர் துறைக்கு இந்த கோபம் எதிரி புரியுதா.

இப்ப என்ன தெரியாம கூட சொல்லி இருக்கலாம்ல. உன் மேல இருந்த ஏதோ ஒரு கோபம்..

எப்பொழுதும் உன்னை பத்தி தப்பா தான நினைச்சு சுத்திக்கிட்டு இருக்கிறா.. அன்னைக்கு அதுதான் நடந்திருக்கும்.

அவள பத்தி யோசிக்க வேண்டியது இல்ல .நந்தா மொத்தமா இதை விட்டு வெளியே வந்தா மட்டும் தான் நிம்மதியா இருக்க முடியும் .

எதிர்காலம் எல்லாத்தையும் ஒரு பொண்ணுக்காக மொத்தத்தையும் விட்டுட்டு நிற்பாயா? இல்லை நிற்க போறியா .அதையாவது சொல்லு.. “

“அப்படி இல்ல சஞ்சய் “.

“பின்ன எப்படி ஒரு பொண்ணு உன்னை இன்னைக்கு எக்ஸாம் எழுத விடாமல் தடுக்கிறான்னா யார் மேல தப்பு .உன் மேலயா அவ மேலயா “.

நீ செய்யறது உனக்கு புரியலையா .நான் உன்கிட்ட பல டைம் சொல்லிட்டேன். நீ உன்னை மாத்தியே ஆகணும்.

இதுக்கு அப்புறமும் அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டு உன் லைஃப் கேள்விக்குறியாக்க போறியா..

அப்படி என்ன அந்த பொண்ணு கிட்ட பார்த்த.. இன்றைக்கோடு இது முடியலை..

இன்னமும் நாள் இருக்கு .நீ இன்னும் போக வேண்டியது நிறைய இருக்குது. படிப்பை முடி உனக்குன்னு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக்கோ..

உன் அப்பா ஆசைப்பட்ட மாதிரி பெரிய சர்ஜன் ஆகு.. உன்னை நீ முதலில் ப்ரூஃப் பண்ணு. அதுக்கு பிறகு அவ கிட்ட போகலாம் .

அந்த சரண்யாவை என்ன நாளைக்கே கல்யாணம் பண்ணி கொடுக்க போறாங்களா.. அவ உனக்கு தான்னா அது என்னைக்குமே மாறாது புரியுதா .

உன்னை நிரூபிச்ச பிறகு அவ முன்னாடி போய் நில்லு .நீ தான் என்னோட மனைவி அன்னையில இருந்து உன்ன தான் நான் ஃபாலோ பண்றேன்னு சொல்லு. கல்யாணம் பண்ணிக்கோ ஆனா ப்ளீஸ் இப்ப படிக்கிற நேரம் இதெல்லாம் வேண்டாம்.

அவ சரின்னு சொன்னா மட்டும் இப்போ என்ன ஆகிட போகுது 24 மணி நேரம் அவளை கூப்பிட்டுக்கிட்டா சுத்த போற.. இல்ல தானே .

எப்பவும் போல நீ படிக்க போற.. என்ன வாரத்துல இரண்டு நாள்ங்கிறது எக்ஸ்ட்ரா ரெண்டு நாள் போய் பார்ப்ப.. பேசுவ..

உன் காதல் உண்மையானதாக இருந்தால் அது எவ்வளவு தூரம் பிரிவை சந்திச்சாலும் உன்னை ஒருநாள் சேர்த்து வைக்கும் உன்னோட அன்பை புரிஞ்சுக்குவா.. நந்தா நான் உன்கிட்ட தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் “ என்று கேட்க..

“புரியுதுடா “.

“இன்னைக்கு மாதிரி இன்னமும் திரும்பத் திரும்ப செய்தேன்னா நிச்சியமா நீ பாஸ் ஆகமாட்ட மறுபடியும் முதல்ல இருந்து படிக்க வேண்டியதா இருக்கும் .

அப்படி ஒரு நிலைமை உனக்கு வரக்கூடாது. நீ எனக்கு பிராமிஸ் பண்ணி கொடு.

இனி சரண்யாவை பற்றி எப்பவும் யோசிக்க மாட்டேன். இனி எப்பவும் அவளை பார்த்து பேச மாட்டேன். டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்லு .”

“இதுக்கு என்னால பதில் சொல்ல முடியாது சஞ்சய். ஒருவேளை பாக்கணும்னு தோணி போனாலும் போவேன்”.

“ இது ரொம்ப தப்பு நந்தா உன்னை நீ மாத்தி தான் ஆகணும்‌ வேற வழியே கிடையாது.

எனக்கு உன்னுடைய எதிர்காலம் முக்கியம் .ஒரு பெண்ணால் உன்னுடைய எதிர்காலம் கெடறது என்னால ஏத்துக்க முடியாது .ப்ளீஸ் புரிஞ்சுக்கோ .

நான் உன்னோட பிரண்டு தானே ..உன்னோட நல்லது மட்டும் தான் யோசிப்பேன் .அவ உனக்கானவளா இருந்தா நிச்சயமா எவ்வளவு நாள் ஆனாலும் சரி உன்கிட்ட வருவா.. இயற்கை அத தானா செய்யும் புரியுதா.

இன்னைக்கு வேணும்னா உன்னை தப்பா நினைச்சி இருக்கலாம் .ஆனா அது எப்பவுமே நடக்காது .

நிச்சயமா ஒரு நாள் நீ நல்லவன்னு புரிஞ்சுகிட்டு உன் முன்னாடி வந்து நிற்பா புரியுதா.”

“சரிடா சரி நீ சொன்ன மாதிரியே கேட்கிறேன் “.

“சரி எனக்கு இது போதும் .நந்தா எழுந்திரு.. பக்கத்துல போய் ஜூஸ் குடிச்சிட்டு மதியத்துக்கு மேல் இருக்கிற கிளாஸை வந்து அட்டென்ட் பண்ணலாம் .*.

ம்..
“இன்னும் என்ன ?மறுபடியும் யோசிக்க ஆரம்பிக்கிற ..”

“கடைசியா ஒரே ஒரு தடவை பார்த்து பேசணும்”.

“ ப்ளீஸ் நந்தா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத ..உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல.

அந்த பொண்ணு உனக்கு செட் ஆக மாட்டா.. கொஞ்ச நாளைக்கு விட்டு பிடி .

ஒருவேளை சுத்தமா அவள பத்தி யோசிக்காம விட்டேனா நீ மறக்க கூட வாய்ப்பு இருக்கு .காலம் இன்னும் நிறைய இருக்குது .

அவளை விட பெஸ்டான நல்ல பொண்ணுங்க ,அழகான பொண்ணுங்க உன்னோட லைஃப்ல வருவாங்க .

அப்போ உன்னோட மனசு மாறலாம்”.

“ வாய்ப்பே கிடையாது சஞ்சய். கடைசி வரைக்கும் எனக்கு அவ தான் ..

அவ தான் என்னோட மனைவியா வரணும் அதுல எந்த மாற்றமும் இல்லை .”

“சின்ன குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கிற ..இது எங்க கொண்டு போய் விடுமோ தெரியல .

அளவுக்கு அதிகமான அன்பு கூட பின்னாடி ஒரு நேரம் பிரச்சனைகளை கொண்டு வந்து விடலாம் .”

“அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் .என்னோட உயிர் போற ஒரு சூழ்நிலை வந்தால் கூட அவ நல்லது மட்டும் தான் நான் யோசிப்பேன்.”

“ கேட்க நல்லா இருக்குது ஆனா நீ நடந்து கொள்வதை பார்க்கும் போது அப்படி தெரியல .

எது எப்படியோ இப்ப என்ன கடைசியா ஒரு தடவ அவள பாக்கணும் .அப்படி தானே தாராளமா போய் பார்த்து பார்க்கலாம் .ஆனா ஒரு விஷயம் நான் உன்கிட்ட தெளிவா சொல்லிடறேன்.

பேசும்போது நான் கூட இருப்பேன் .நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. அவ கிட்ட நானே பேசுறேன் .

எப்பவுமே அவன் உன்ன தொந்தரவு பண்ண மாட்டான். அதே மாதிரி நீயும் எந்த சூழ்நிலையிலும் எப்பவுமே உன் மேல தப்புன்னு யார்கிட்டயும் பேச கூடாதுன்னு சொல்லிட்டு வந்துடலாம் .அவ்வளவுதான் போதுமா.

அதுக்கு பிறகு எப்பவுமே நீ அவளை சந்திக்கக் கூடாது. என் தலையில கை வச்சி சத்தியம் பண்ணு .”

“சஞ்சய் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். பார்க்க மாட்டேன்னா பார்க்க மாட்டேன் நம்பு”.

“ சாரி நான் உன்ன நம்ப தயாராக இல்லை இதைவிட பெருசா ஏதாவது ஒரு பிரச்சனை வந்ததுன்னா அப்ப நீ முன்னாடி போய் நிற்ப..மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்ப.. என்னால முடியாது .இதுக்கு அப்புறம் எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்துக்காகவும் நீ ஆபீஸ் ரூமுக்கு போய் நிற்க கூடாது.

உன் மேல எந்த தப்பான அபிப்பிராயமும் வரக்கூடாது அவ்வளவுதான் .எனக்கு அதுதான் வேணும். ஏற்கனவே இந்த பிரச்சனையால உங்க அப்பா ரொம்பவே மனசு வருத்தப்பட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க.

அவர்கிட்ட என்னால பேச முடியல .நிறைய பேசி சமாதானம் செஞ்சு வச்சிருக்கிறேன் .நீ இருக்கும் போது இப்படி நடக்குதே.. நீ பிரண்டு தானே என்று கேட்கிறார் .

நான் அன்னைக்கு உன்னை கூப்பிட்டு இருக்க கூடாது .என் மேல தான் தப்பு. சின்னதா எங்கேயோ ஆரம்பிச்சு பிரச்சனை பெருசாக்கி.. கடைசில உன் மேல தான் தப்புங்குற மாதிரி கொண்டு வந்து நிற்க வைத்துவிட்டது. எல்லாரும் எல்லா நேரமும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க நந்தா .

எல்லாருமே ஏதாவது ஒரு நேரத்துல மாறத்தான் செய்வாங்க. எல்லாரையும் நல்லவங்க லிஸ்டில் வைத்து பார்க்கவும் முடியாது .

உன் மேல பொறாமை படறவங்க கூட உண்டு புரியுதா.. அந்த பொண்ணு சொல்லாட்டி கூட நம்ம கிளாஸ்லையே யாராவது உன் மேல வெறுப்பா இருக்குறவங்க இதுபோல சொல்லி இருந்தா இன்னும் பிரச்சனை தான் .

நல்லவேளை அது மாதிரி ஆகலை.. எல்லாரும் உன் பக்கம் நின்னாங்க அதனால சின்னதா எச்சரிக்கையோட சரியா போயிடுச்சு..”

“இப்ப நான் என்னதான் செய்யணும் “.

“நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் சார்பில் என்ன பேசணுமோ நான் பேசுறேன் .

நீ என்கூட வந்தா போதும் இனி எப்பவுமே அந்த பொண்ணை நீ பார்க்க வேண்டாம் “.

“சரி உன் இஷ்டம்.”.

“ இன்னைக்கு பார்த்து பேசிடலாம்” என்றவன் சொன்னது போலவே அன்று மாலை சரண்யா வீட்டிற்கு புறப்படும் நேரம் சஞ்சய் அவளுக்கு எதிரில் நின்றான்.

“ ஒரு நிமிஷம் உன்கிட்ட சில வார்த்தை பேசணும் “என்று சொன்னவன் “நந்தா” என்று அழைக்க ..இப்போது திகைத்து சஞ்சய்யை பார்த்தாள்.

“ பயப்பட வேண்டாம் .ரெண்டு ஒரு வார்த்தை தான் பேசினதும் கிளம்பி போயிடுவோம் .”என்று சொன்னவன்.நந்தா அருகே வரும் வரைக்கும் அமைதி காத்து பிறகு பேசினான்.

“ நிறைய நடந்து போச்சு இனிமே அது போல நடக்க கூடாதுன்னு நினைக்கிறேன் .

இனி நந்தா எப்போதுமே உன்னை பார்க்க மாட்டோன். அதே மாதிரி நீயும் எந்த இடத்திலையுமே அவனை தேவை இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையுலேயும் சிக்க வைக்க கூடாது .”

“அப்படி பார்க்காமல் இருந்தால் ரொம்ப சந்தோஷம்” என்று சொன்னவள்.. நடக்க போக “இன்னும் பேசி முடிக்கல” என்று குரல் கொடுத்தான் சஞ்சய் .

“சஞ்சய் அன்னைக்கு நீங்க பஸ் ஸ்டாப்ல என்னை காப்பாத்தி விட்டீங்க .அந்த ஒரு நன்றி கடனுக்காக தான் இவ்வளவு நேரம் பேசினத பொறுமையா கேட்டுகிட்டு இருந்தேன் .

இதுக்கு மேல கேட்க எதுவும் இல்லை .நீங்க சொன்ன விஷயம் ரொம்ப நல்ல விஷயம் தான்.

எப்பவுமே என்னை பாக்காம இருந்தா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நானும் நிம்மதியா இங்க படிப்பை முடிச்சிட்டு போவேன் .

என் வழிக்கு வர வேண்டாம்னு எப்பவுமே உங்க பிரண்டு கிட்ட சொல்லிடுங்க .”.
சஞ்சய் வாய்க்குள் .. “சரியான திமிர் பிடித்தவளா இருப்பா போல இருக்கு. இவகிட்ட என்ன பிடிச்சதுன்னு சுத்துறனு எனக்கு புரியவே இல்ல “என்று சொல்ல..” நீ பேசாம இரு “என்று சஞ்சய்யை அடக்கியவன் .

“இப்ப சொல்றது தான் நல்லா கேட்டுக்கோ .இன்றைக்கு இல்ல என்னைக்குனாலும் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறது நான்தான் .

அதுல உனக்கு எந்த சந்தேகமும் வரத் தேவையில்லை. ஏன் என்னோட பிரண்டு சஞ்சய் சொன்ன மாதிரி இனி உன்னை எப்பவுமே நான் பார்க்க மாட்டேன் .ஆனா பார்க்கும்போது நீ எனக்கு உரிமையானவளா மாறி இருப்ப.. புரியலையா. எனக்கு மனைவியா என் பக்கத்துல இருப்ப “என்று சொன்னவன்.. “சஞ்சய் வா போகலாம் “என்று நடக்க.” அது கனவில் கூட நடக்காது. நிச்சயமா இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு இவளும் தன்னுடைய வஃழியை பார்த்து நடந்தாள்.

அதன் பிறகு நடந்தது எல்லாமே இவளை பொறுத்த வரைக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

சஞ்சய் சொன்னது போலவே நந்தா அதன் பிறகு சரண்யாவை பார்க்கவே இல்லை.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்தால் கூட தெரியாதவன் போல ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு நகர்ந்தான். ஆனால் அந்த பார்வை சொன்ன செய்தி மட்டும் சரண்யாவிற்கு புரியவே இல்லை.

பேசாத வரை சந்தோஷம் என்று நினைத்தவள் தான் அது போலவே நந்தாவும் நடந்து கொண்டான்.

நாட்கள் வாரங்கள் ஆகி வாரங்கள் மாதம் ஆகி வருடங்கள் கூட முடிந்திருந்தது.

கடைசி செமஸ்டரில் நல்ல மதிப்பெண்ணோடு வெளியேறியவன் நேராக மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்தான்.

அவன் வெளிநாடு சென்று விட்டான் என்று தெரியவும் தான் இங்கே சரண்யா சற்றே நிம்மதி அடைந்தாள்.

“இனி பிரச்சனை கிடையாது நிச்சயமா இவனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு வெள்ளைக்காரி கிடைப்பா..

அவளை கல்யாணம் பண்ணிட்டு தான் இங்க வருவான்
.இனி நம்மள பத்தி அவன் யோசிக்க மாட்டான்” என்று தான் இவள் நினைத்தது. ஆனால் நடக்கப்போவது ..அது அல்ல என்பதும் நந்தாவால் ஒருநாள் கதறி அழ போகிறாள் என்பதும் அப்போது அவளுக்கு தெரியவில்லை.
 

NNK-15

Moderator
8

இரண்டு வருட வெளிநாட்டு படிப்பு முடித்து முழு நேர சர்ஜமாக இந்தியா திரும்பியிருந்தான் நந்தா..

படிப்பு ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும் எந்த இடத்திலும் சரண்யாவை மறந்து இருக்கவில்லை.

அவ்வப்போது அவளின் முகம் ஞாபகம் வரம் கூடவே அவள் அன்றைக்கு நடந்து கொண்டதும் ஞாபகம் வந்தது. கடைசியாக பிடிவாதமாக பேசினாலும் அதன் பிறகு அவளை பார்க்காமலேயே விலகி வந்திருந்தான்.

நிச்சயமாக மறுபடியும் சந்திக்கும்போது தன் மேல் இருக்கும் அபிப்ராயம் முழுவதுமாக மாறி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்.

அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டிருந்தான்.

அதற்காக மொத்தமாக சரண்யாவை மறந்து விட்டான் என்றால் கிடையாது .

அவள் இருக்கின்ற அனைத்து சோசியல் மீடியாக்களிலுமே அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

அதனாலோ என்னவோ அவளை பிரிந்தது போல எப்போதும் தோன்றவில்லை இவனுக்கு..

இங்கே சஞ்சய் ..இவனும் கூட டெல்லியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவராக இரண்டு வருடம் மேல் முடித்து இங்கே சிறிய அளவில் கிளினிக் துவங்கி இருந்தான்.

அது மட்டும் அல்லாமல் இன்னும் சில பெரிய மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க பகுதி நேரம் மருத்துவராகவும் இருந்தான் .

வாழ்க்கை வெகு அழகாக வேகமாக நகர்ந்தது .

நந்தா இங்கு வந்த உடனேயே பெரிய மருத்துவமனையில் இவனுக்கு வேலை கிடைத்தது.

சிறந்த மருத்துவன் என்ற பெயர் எளிதாக இவனிடம் வந்து இருந்தது.

இவன் தொட்டால் நிச்சயமாக அந்த பேசன்ட் உயிர்த்தெழுந்து விடுவார் என்கின்ற நம்பிக்கை வரும் அளவிற்கு சிறந்த கைராசியான மருத்துவனாக மற்றவர்களால் பாராட்டப்பட்டான்.

எளிதாக சென்று சரிசமமாக பேசுகின்ற இவனுடைய குணம் இவனை தேடி வருபவர்களை இன்னமும் அதிகப்படுத்தியது.

எப்போதுமே பிசியாக இருந்தான். தன் தந்தையிடம் தெளிவாக சொல்லியிருந்தான்.

உடனடியாக தற்போது ஹாஸ்பிடல் தேவையில்லை என்று..

“ கொஞ்ச நாளைக்கு ட்ரைனிங் மாதிரி போறேன்பா .அப்புறமா பார்த்துக்கலாம்” என்று சொல்லியிருந்தான் .அவரும் சரி என முடிவு செய்திருந்தார் .

தினமும் மாலை இரண்டு மணி நேரம்.. ஜெனரலாக மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரண்யா கூட படிப்பை முடித்து இருந்தாள்.

நந்தா பகுதி நேரமாக பார்க்கின்ற ஒரு மருத்துவமனையில் தான் இவளும் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.
அளவுக்கு அதிகமாக டிப்ரஷனில் இருப்பவர்களுக்கு மருத்துவமனையின் சார்பில் கவுன்சிலிங் தருவது இவளது வேலை.

அவர்களிடம் பேசி மனநிலையை சாதாரணமாக மாற்றுவது அவளுக்கு சிரமமாக இல்லை .மிகவும் விரும்பியே இந்த வேலையை செய்து வந்தாள்.

தினமும் ஏதாவது ஒரு காரணத்தை கொண்டு வருபவர்களிடம் விசாரித்து அதற்கு ஏற்ற சொல்யூஷனை கொடுத்து அனுப்புவது..

தேவையான மருத்துவவரை பரிந்துரை செய்வது என நாட்களாக நகர்ந்து கொண்டிருந்தது .

இவள் வந்து சேர்ந்த மருத்துவமனையில் தான் நந்தா புதியதாக செய்திருக்கிறான் என்பது ஆரம்பத்தில் இவளுக்கு தெரியவில்லை.

வாழ்க்கையே வெறுத்து தற்கொலை முயற்சி செய்பவர்களை அழைத்து பேசி அவர்கள் மனநிலையை மாற்றி புதிய மனிதர்களாக மாற்றி விடுவது,அதிலும் சிறுவயது பெண்கள் சிலர் இவளிடம் வந்து பேசும் போது இவனுக்குமே ஆச்சரியமாக இருக்கும்.

“எக்ஸாம் நினைச்சா பயமா இருக்கு. அந்த பயம் எதுக்காக உயிரோடு இருக்கணும். இந்த வாழ்க்கையே வேண்டாம்னு கூட தோனுது. என்றெல்லாம் சொல்லி கூட மாணவர்கள் வர ஒவ்வொருவருக்குமே தன்னம்பிக்கையை கொடுத்து அவளுடைய துறையில் ஓரளவுக்கு நல்ல பெயரை சம்பாதித்து இருந்தாள்..

என்றைக்கு நந்தா கடைசியாக பேசிவிட்டு சென்றானோ அதன் பிறகு அவனைப் பற்றிய யோசனை எதுவுமே இவள் இடத்தில் கிடையாது.

ஏனென்றால் காலேஜிலிருந்து வெளிநாட்டிற்கு படிக்க சென்ற பிறகு இன்னும் மகிழ்வாகத்தான் உணர்ந்தது. அதன் பிறகு அடுத்த இரண்டு வருட படிப்பை மிகவும் மகிழ்ச்சியோடு படித்தாள்.

படித்து முடியும் போது இந்த மருத்துவமனைக்கு அழைத்து இருக்க.. நேராக வந்து சேர்ந்திருந்தாள்.

இதோ ஒரு வருடம் முடிய போகிறது.. முதலில் ஆறு மாதம் ட்ரைனிங் என அழைத்திருக்க.. அதன் பிறகு இவளை முழு நேர மனநல ஆலோசகராக அப்பாயிண்ட்மெண்ட் செய்திருந்தனர் .

நிறைய வித விதமான மனிதர்களை இங்கே சந்திக்க முடிந்தது.

சிலரோ ஆக்சிடென்ட் பெரிய அளவில் அடிபட்டவர்கள், வாழ்க்கையை வாழ விரும்பாமல் அனைத்தையுமே இழந்து விடுவது போல மனம் உடைந்து இருப்பவர்களுக்கு கூட இவள் ஆறுதலாக கூறும் வார்த்தைகள் பெரிய பலனை தந்தது. இதனாலேயே இவளிடம் பேச நிறைய பேர் காத்திருக்க ஆரம்பித்தனர்.

சரண்யா வேலை செய்த ஹாஸ்பிடலில் சிறப்பு ஆலோசகராக இவனை அப்பாயிண்ட்மெண்ட் செய்திருக்க, அந்த வாரத்தில் இவன் அங்கே இணைந்து கொண்டதற்காக சிறிய பார்ட்டி போல ஏற்பாடு செய்து இருந்தனர் .

அதற்கான அழைப்பு சரணியாவிற்குமே வந்திருந்தது.

போக வேண்டாமா என்கின்ற குழப்பம் நிறையவே இருந்தது இவளுக்கு.. ஏனென்றால் இதுவரை இது போன்ற எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் இவள் சென்றது கிடையாது .
தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பவள் .

அங்கே மருத்துவர்கள், செவிலியர்கள் இன்னமும் அறிமுகமானவர்கள் யார் வந்து இவளை தங்களுடைய வீட்டு பங்க்ஷனுக்கு அழைத்தாலுமே இதுவரை கலந்து கொண்டது இல்லை .

ஏதாவது சொல்லி நகர்ந்து வந்து விடுவாள்.

இன்றைக்கு அழைத்திருக்க நிறைய குழப்பம் இவளுக்குள்..

அங்கே அந்த மருத்துவமனைக்கு சற்று தொலைவில் இருந்த ஒரு ஹோட்டலில் தான் இந்த விருந்து, அறிமுக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மதியநேரம் ஆதலினால் வர முடியாது என்று சொல்லவும் முடியாது.

சரி கூட்டத்தோடு சென்று இணைந்து கொண்டு சிறிது நேரம் பார்த்து விட்டு வந்து விடலாம் என இவளுமே புறப்பட்டு கொண்டிருந்தாள்.

இன்னமும் சில டாக்டர்கள் இவளுக்கு அறிமுகமாகி இருக்க அவர்களோடு இவளும் இணைந்து கொண்டாள் .

“பெருசா நமக்கு எதுவும் வேலை எல்லாம் இருக்காது. சாதாரணமா ஸ்டேஜ் மாதிரி இருக்கும் .

நம்ம டீன் சில வார்த்தைகள் பேசிட்டு அந்த டாக்டரை அறிமுகப்படுத்துவாங்க. பிறகு அவர் ஏதாவது சில வார்த்தைகள் பேசுவாங்க அவ்வளவுதான் .

சிறிது நேரம் பார்த்திட்டு போய் சாப்பிட்டுட்டு கிளம்பி வந்துடலாம் .அதனால டென்ஷன் எல்லாம் ஆக வேண்டாம். அப்புறமா சரண்யா இது மாதிரி சின்ன சின்ன விழாவுக்கு அழைத்தா ப்ளீஸ் வந்து கலந்துக்கோ.

ஏன்னா நாம எல்லாம் ஒரு குடும்பமா தான இங்கே இருக்கிறோம்” என்று சொல்ல, “கட்டாயமாக முயற்சி செய்கிறேன் .ஏனோ ஏதோ ஒரு தயக்கம் இருக்கு..

பெருசா இதுபோல விழாக்களுக்கு செல்ல மனசுக்கு பிடிக்கிறது இல்ல இதுக்கு காரணம் என்னன்னு இதுவரைக்கும் யோசித்தது எல்லாம் இல்ல .
இனி கொஞ்சம் மாத்திக்கிறேன்” என்று சொல்ல..

“ தெரியுமே நீ இப்படித்தான் சொல்லுவேன்னு .அப்புறமா யாரு எப்படி கேட்டாலுமே சமாதானமா பேசுவதற்கு உனக்கு சொல்லியா தரணும்.
நீ தான் சைக்காலஜி படிச்சவ..”

“ அக்கா படிப்புக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இது மனசு சம்பந்தப்பட்டது தானே.. இனி எந்த பங்க்ஷனுக்கு யார் கூப்பிட்டாலும் கட்டாயமா வரேன் சரியா “என்று பேசியப்படியே அங்கே சென்றாள் .

இவர்கள் சொன்னது போல தான் அங்கே நடந்தது .

முதலில் டீன் வந்து பேசியவர் பிறகு நந்தினை அழைக்க.. நந்தனை பார்க்கவுமே இவளுக்கு முதலில் சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. பிறகு ஒரு வாராக சமாளித்துக் கொண்டாள்.

நிச்சயமாக தான் இங்கே பணிபுரிவது அவனுக்கு தெரியாது .

அடுத்ததாக முக்கியமான விஷயம் இன்னமும் தன்னை அவனுக்கு ஞாபகம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான். அதனால் இதைப் பற்றி யோசிக்க தேவையில்லை என நினைத்துக் கொண்டாள்.

அங்கே பேசி முடிக்கவும் நந்தனிடம் ஒவ்வொருவராக சென்று அருகே பேசிவிட்டு வந்தனர்.

அதிலும் அங்கிருந்தவர்கள் இவனை ஆகா ஓகோ என்று புகழும் போது ஆச்சரியமாக தான் இவள் கவனித்தது.

“இது வரைக்கும் கிட்டத்தட்ட 500க்கும் மேல சர்ஜரி பண்ணி இருக்கிறார் .நிறைய திறமையானவர்.

வெளிநாட்டிலேயே வேலை கிடைச்சும் கூட அது வேண்டாம் என்னோட படிப்பு என்னோட மக்களுக்கு தான் பயன்படணும் என்று சொல்லி இங்க வந்திருக்கிறார்” என்று பேசும் போது இவனை எனக்கு தெரியாதா என்பது போல தான் இவள் லுக் விட்டது..

ஏனோ இந்த சில வருடங்களில் இவளுடைய மனநிலை கூட மாறியிருக்கவில்லை .

அன்றைக்கு எந்த அபிப்பிராயத்தில் இவனின் மேல் இருந்தாலோ அதே இப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தது.

‘இவன பத்தி தெரியாதா எந்த அளவுக்கு ஒரு பொண்ணுக்கு விருப்பமில்லை என்று தெரிஞ்சும் லவ் பண்றேன்னு சொல்லி டார்ச்சர் பண்ணினான்.

பின்னாடியே வந்து.. என்னவோ தப்பு பண்ணினவ மாதிரி எனக்கு பீல் பண்ண வச்சவன். இவன் பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்புறம் தான் என்னால நிம்மதியா அங்க தொடர்ந்து படிக்கவே முடிஞ்சது.

இப்ப இங்க வேலைக்கு வந்துட்டா மட்டும் எல்லாமே மாறிடுமா..

நல்ல சர்ஜனா இருக்கலாம். இதுவரைக்கும் எந்த தப்பும் நடக்காமல் இருக்கலாம் .அதுக்காக இவ ரொம்ப நல்லவன் என்று சொல்லிட முடியாதே..

உன்னை பத்தின உண்மை எனக்கு தானே தெரியும்’ மனதிற்குள் நினைக்கபடியே நகர்ந்து இருந்து வேடிக்கை பார்த்தாள்.

உண்மையில் சொல்லப்போனால் அன்றைக்கு அவனுடைய கண்களுக்கு இவள் தட்டுப்படவே இல்லை.

அவனுக்கு தெரியாத அளவிற்கு தன்னை மறைந்து கொண்டாள்.

பங்க்ஷன் முடிந்து உணவருந்தும் நேரம் கூட தன்னுடைய கூடவே வந்தவர்களோடு அதையே பாலோ செய்தாள். எளிதாக நகர்ந்து வந்திருந்தாள்.

அதன் பிறகு அவனை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தான் அவள் நினைத்தது ஆனால் நடந்ததோ வேறு..

அடுத்த சில நாட்களிலேயே சிலருக்கு சர்ஜரி செய்ய சம்மதித்தவன் சர்ஜரி முடியவுமே மிகவும் மனமடைந்து காணப்படுவதை கவனித்தவன் அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று சக டாக்டர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.

நந்தாவோடு கூட இருக்கின்ற மற்றொரு டாக்டர் பதில் கூறினார் .

“நந்தா ப்ரோ நம்ம ஹாஸ்பிடல்லயே புதுசா ஒருத்தரங்க வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள்.

மனநல ஆலோசகரா ஒரு பொண்ணு வேலை செஞ்சுகிட்டு இருக்குது.

மேக்ஸிமம் அங்க போறவங்க எல்லாமே அவங்களோட தாழ்வு மனப்பான்மைய விட்டுட்டு இயல்புக்கு மாறிடறாங்க .அந்த அளவுக்கு சிறப்பா பேசுறதா சொல்லிக்கிறாங்க. உங்களுக்கு தெரியாது .போன வாரத்துல ஒரு படிக்கிற பொண்ணு எக்ஸாமில் கலந்துக்க பயந்து மருந்து குடிச்சுடுச்சு.. ஒரு வழியா காப்பாத்திட்டோம்.. ஆனா அந்த பொண்ணோட மனநிலை மாறலை. எவ்வளவோ சொல்லி பார்த்தோம் .அவங்க அம்மா, அப்பா அழுதது எதுவுமே வேலைக்காகல .ஆனா அந்த பொண்ணோட மனநிலை ஒரே மாதிரி தான் இருந்தது . மறுபடியும் ஏதாவது செஞ்சுக்கவேன். எனக்கு வாழ பிடிக்கல .எனக்கு படிக்க பிடிக்கவில்லை என்று 1008 புலம்பல் .எங்களாலே ஒன்னும் செய்ய முடியல. கடைசியா அந்த பொண்ணு கிட்ட தான் நாங்க அனுப்பி வைத்தோம். என்ன ஆச்சரியம் எப்படியும் பத்து கவுன்சிலிங்காவது தேவைப்படும் அப்படின்னு நினைச்சு தான் சொல்லி அனுப்பினது .ஆனா அதெல்லாம் தேவையே இல்ல ஒரே ஒரு முறை பேசிட்டு வரும்போது அந்த பொண்ணோட முகத்தில் அத்தனை தைரியம் தன்னம்பிக்கை .முகம் மழர்ச்சி அடைஞ்சு வந்தா.. அது மட்டுமல்ல அதுக்கு பிறகும் கூட நாலு கவுன்சிலிங் கரெக்டா முடிச்சிட்டு இப்போ அந்த பொண்ணு எக்ஸாம் எழுதி நல்ல மார்க்கோட பாஸ் ஆகி வந்திருக்கிறா.. அந்த அளவுக்கு தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய திறமையான ஆட்கள் எல்லாம் நம்ம மருத்துவமனையில் இருக்கிறாங்க தெரியுமா.” என்று சொல்ல..” அப்படியா அப்படின்னா சரி. நான் என்னோட பேசண்டை அவங்க கிட்ட அனுப்பி வைக்கிறேன். முடிஞ்சா ஒரு முறை பார்த்து பேசுறேன் .அவங்களோட பிரச்சனை என்னன்னு சொல்றத விடவும் நான் போய் சொன்னா சரியா இருக்கும் இல்லையா “என்று கூறியவன் அன்றைக்கு சரண்யா இருக்கின்ற இடத்தை தேடி சென்றான்.

ஆனால் அன்று சரண்யாவை பார்க்க முடியவில்லை .அவள் அன்றைக்கு சற்று சீக்கிரமாகவே வீட்டிற்கு புறப்பட்டு சென்றிருந்தாள்.

அடுத்த நாள் அங்கே வேலைக்கு வந்த போது இவளுக்கு உதவியாளராக இருந்த பெண்மணி இவள் வரவும் கூறினார்.

“ டாக்டர் நந்தா உங்களை பார்க்க வந்தாங்க” என்று சொல்ல முதலில் சற்று பதட்டம் தான் இவளை தொற்றியது.

“ அப்படின்னா என்னை மறக்கலையா. நம்ம யார்னு தெரிந்து நம்மள தேடி வந்துட்டானா. மறுபடியும் முதல்ல இருந்தா “என்பது போல யோசிக்க..” என்ன சரண்யா யோசிக்கிறீங்க” என்று கேட்க ,”இல்ல ஏதாவது சொன்னாங்களா”.

“ அப்படி இல்ல நார்மலா தான் ரெண்டு ஒரு வார்த்தை பேசினாங்க .நந்தாவை எல்லாத்துக்கும் நல்லா தெரியும்.

இங்கே வந்து சேர்ந்த நாளிலிருந்து பார்க்கிற எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லா பேசுவாரு .”

“அப்படியா உன்கிட்ட எதுவும் சொன்னாரா” என்று தயங்கிய படியே கேட்க..” பெருசா எதுவும் சொல்லல .நிறைய பேருக்கு நல்லா கவுன்சிலிங் கொடுக்கறையாம். அதை பத்தி பேசி இருப்பாங்க போல இருக்கு .ஒரு முறை பார்த்து வாழ்த்திட்டு போலாம்னு நினைச்சுட்டு வந்தேன் அப்படின்னு சொன்னாரு .அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும் .ஆனால் என்ன செய்யறது அவர் வந்த நேரம் நீங்க இங்க இல்ல .நான் சொல்லி அனுப்பி இருக்கிறேன். நிச்சயமா மறுபடியும் வந்து பார்ப்பார்னு நினைக்கிறேன் “என்று சொல்ல சற்று படபடப்பாகத்தான் இருந்தது .ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடவில்லை .

அதன் பிறகு அவன் சுத்தமாகவே இவளை மறந்திருந்தான்.

ஏன் இவளுடைய பெயரைக் கூட அன்றைக்கு விசாரித்து இருக்கவில்லை .அதனால் இவளாக இருக்கும் என்கின்ற எண்ணம் கூட இல்லை.

அவனுக்கு அவனுடைய வேலையே சரியாக இருந்தது.

யாராவது கேட்டு வந்தால் கவுன்சிலிங்ற்காக இவளிடம் அனுப்பி வைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தான் .

“நந்தா சார் அனுப்பினார்கள்” என்று யாராவது வந்து சொன்னாலே சற்று பதட்டம் இவளுக்கு வரத்தான் செய்தது. ஆனால் அது எல்லாமே கடந்து வர பழகி இருந்தாள்.

அன்றைக்கு வார விடுமுறை நாள் .நந்தா தன்னுடைய நண்பர்கள் அனைவரையுமே பார்க்க ஆசைப்பட்டான்.

அனைவரையும் ஒரு ஹோட்டலுக்கு வர சொல்லி இருக்க.. சஞ்சய் நேரத்தோடு அங்கே வந்து இணைந்து கொண்டான்.

“ எப்படி இருக்கிற சஞ்சய் .எப்படி போகுது லைஃப்.”

“ ரொம்ப நல்லாவே போய்கிட்டு இருக்குது .என்ன சொல்ல நான் ரொம்ப பிசியாவே இருக்குறேன் .”

“என்னடா இப்படி மொட்டையா சொல்ற.

“ பின்ன என்னடா வித விதமா நோய் வருது .ஒரு காய்ச்சல் வந்தா கூட முன்ன மாதிரி எல்லாம் இல்ல .

குறைஞ்சது ஒரு வாரம் இல்லாம விடுவதே இல்லை. அடிஷனலா இருமல் மூச்சு விட சிரமபடறது.. என்னென்னமோ புதுசு புதுசா வருது .

புதுசு புதுசா அப்டேட் ஆகிக்கிட்டே இருக்கணும் போல இருக்குது. பரபரன்னு ஓடிக்கிட்டு இருக்குறேன் .

எப்பவுமே பிஸி தான். ஆட்கள் ஹாஸ்பிடலுக்கு போறதும் குறைகிறது இல்ல .

நமக்கும் ஓய்வு இல்லை என்கிற மாதிரி ஆயிடுச்சு . ஒன்னும் சொல்றதுக்கு இல்ல .”

“என்னடா சலிச்சுக்கிற “.

“பின்னே என்ன நந்தா.. ஆர்வமாகத்தான் படிச்சோம் .நிறைய சாதிக்கணும் நிறைய செய்யணும்னு எல்லாம் யோசிச்சோம் .

ஆனா இப்போ இங்க வந்ததுக்கு பிறகு ஒவ்வொரு மனிதனுடைய உடல்நிலை, மனநிலை இதெல்லாம் பார்க்கும் போது எதுக்காக டாக்டருக்கு படிச்சோம்னு சமயத்துல தோணுது .

நம்மளும் சராசரியா ஏதாவது ஒரு டிகிரி படிச்சிட்டு ஏதாவது ஒரு வேலையை செஞ்சிருக்கலாமே அப்படின்னு தோணுது .”

“என்னடா ஏன் இப்படி சலிச்சுக்கிற .”

“தெரியல சில சமயம் நல்லாவே நம்ம வேலை செய்கிறோம்.. ஆனால் அதையும் மீறி இறப்பை போகும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது.”

“ என்ன ஆச்சு.. ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்குற..”

“ போன வாரம் ஒரு பேஷண்ட் வந்து இருந்தாங்க .ரொம்ப பீவரோட .நானும் என்னால முடிஞ்ச எல்லா ட்ரீட்மென்ட்டும் பண்ணினேன் .

ஆனா மேல் சிகிச்சைக்காக ஹாஸ்பிடல் போய் ஆக வேண்டிய சூழ்நிலை..

அவங்களால பணம் செலவு பண்ண முடியாது அதனால கவர்மெண்ட் ஹாஸ்பிடல் எழுதி கொடுத்தேன் .

எல்லாமே சரியா தான் போச்சு ஆனால் என்ன செய்யறது அவங்களுக்கு வாழ கொடுத்து வைக்கல போல இருக்குது .இறந்துட்டாங்க அது ரொம்ப மனசு டிஸ்டர்ப் பண்ணிடுச்சு.”

“ டேய் வாழ்க்கைன்னு இருந்தா இறப்பு நிச்சயம் ..எனைக்காவது ஒருநாள் இறந்து தானே ஆகணும் .

வந்தவங்க எல்லாம் இங்கேயே தங்கனும்னு நினைச்சா ஆகிடுமா.. பிறப்பு எப்படியோ அதே மாதிரி இறப்பும் உண்மைதானே ..”

“அப்படி கிடையாது வந்து உனக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது.*

“சஞ்சய் ஏன் இவ்வளவு சாப்டா ஆகிட்ட.. முன்னாடியெல்லாம் இப்படி இல்லையே. நிதர்சனம் நிறைய பேசுவ..”

“ உண்மைதான் நிறைய பேசுவேன் .ஆனா இப்ப எல்லாம் …என்ன சொல்றது.. விடு.

சரி உன்னோடது எப்படி போயிட்டு இருக்குது .”

“உனக்கு தான் தெரியுமே ஆல்ரெடி நான் சர்ஜன்.. சோ பெரும்பாலும் இந்த துறையில் ரிஸ்க் அதிகம் தான் .

சில நேரங்களில் பிழைக்க வாய்ப்பு இல்லாம கூட போகலாம் .ஆனாலும் மனசு தளர விடக்கூடாது.

நான் ஒன்னும் கடவுள் கிடையாது .இத நிறைய பேர் கிட்ட சொல்லி இருக்கிறேன். என்னால என்ன முடியுமோ எல்லாத்தையுமே செய்வேன்.

வாழ்வு சாவு கடவுள் கையில்.. அந்த கடவுள் கிட்ட நீங்களும் பிரார்த்தனை பண்ணுங்க அப்படின்னு..

இதுவரைக்கும் எதுவும் மனசு சங்கடப்படற மாதிரி நடக்கல. அது ஒன்னு தான் இப்போதைக்கு ஆறுதல்.

பியூச்சர்ல என்ன வேணும்னாலும் நடக்கலாம். இப்போதைக்கு இட்ஸ் ஓகே.. இது தான் என்னோட துறை..

நான் ஆசையா தேர்ந்தெடுத்த படிப்பு இது. என்னோட பெஸ்ட் கொடுக்கணும் ..கொடுப்பேன்..

என்ன ஒரு விஷயம் தான் மனசுக்கு சில நேரம் உருத்தலா இருக்கும்”.

“ என்னடா என்ன ஆச்சு “.

“இந்த சர்ஜரி பண்ண லட்சக்கணக்குல ஆகுது .சில நேரங்களில் ரொம்பவே கையில பணம் இல்லை என்று வந்து நிக்கும் போது மனசு வருத்தமா இருக்குது .

இதுல மிடில் கிளாஸ் ரொம்ப பாவம்தான். மத்தபடி பணம் இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை .

நிச்சயமாக கடைசி வரைக்கும் எல்லாருக்கும் நல்லதே செய்வேன் .”

“சரி நந்தா அப்பா தான் ஹாஸ்பிடல் கட்டி தரேன்னு சொன்னாச்களே.. என்ன ஆச்சு”.

“ அப்பா இப்பவும் சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க .நான் தான் பிடி கொடுக்காமல், கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு நினைக்கிறேன். சோ அதனால இப்போதைக்கு இல்லை .

எல்லாமே ஒரு 35 வயசுக்கு மேல தான் அத பத்தி யோசிக்கணும் .”

“என்னடா இது ஐந்தாண்டு திட்டம் மாதிரி ரொம்ப பெருசாவே இருக்கும் போல இருக்கு .”

“ஆமாண்டா எல்லாத்துக்கும் ஒரு கோல் வேணும்ல ..என்னோட கோல் இது .

35 வயசு வரைக்கும் சிறப்பா எவ்வளவு சர்ஜரி செய்ய முடியுமோ செய்யணும்.

அதுக்கு பிறகு நமக்குன்னு ஒரு கிளினிக் ஆரம்பிக்கணும். அதுவும் கூட நான் மட்டும் அங்கே இருக்கக் கூடாது.

இருக்கறதுல பெஸ்ட்டான டாக்டரை வேலைக்கு அமர்த்தனும் அப்படின்னு நிறைய இருக்குது .எல்லாமே செய்யணும்.

ஓகே நீ சொல்லு சஞ்சய் உன்னோட லைஃப் எப்படி போயிட்டு இருக்குது .

படிக்கும் போதே முடியவும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசினாங்க ஆனா இதுவரைக்கும் அது சம்பந்தமாக எதுவும் நீ சொன்னது இல்ல.”

“ ஓ.. இப்போ என்கிட்ட வரியா என்ன சொல்றது”.

“ என்ன சொல்றதுன்னா கல்யாணம் எப்போ பண்ணிக்க போற ..அதை கேட்டேன்”.

“ டேய் நந்தா இருக்கிற வேலையில புதுசா இன்னொரு கமிட்மெண்ட்குள்ள போற மனநிலை இப்ப இல்ல..
கடைசி வரைக்கும் டாக்டராகவே இருந்துட்டு வாழ்க்கை முடிச்சுக்கலாம்னு தோணுது. எதிலுமே இன்ட்ரெஸ்ட் இல்ல”.

“ என்ன சஞ்சய் திடீர்னு சாமியார் மாதிரி பேசுற.. முன்னாடி எல்லாம் சொல்லுவ.. அம்மா ,அப்பா பார்க்கிற பொண்ண கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் பேசுவ..”

“ இல்லன்னு சொல்லல ஆனா இந்த மெடிக்கல் பீல்டுக்குள்ள வந்த பிறகு தான் பார்க்கும் போது சலிப்பா இருக்குது .

என்ன பெருசா கல்யாணம் பண்ணி வாழ்ந்திட போறோம் அப்படின்னு கூட தோணுது “.

“அதெல்லாம் ரொம்ப தப்பு நண்பா.. அப்படி எதையாவது எண்ணத்தை வளத்துக்க கூடாது .உனக்கு நல்ல பொண்ணு சீக்கிரமா கிடைப்பா..”

“சரி என்னோடத விடு.. உன்னோடது என்ன அப்டேட் ..நீ என்ன யோசித்து வைத்திருக்கிற..”

அம்மா ஏற்கனவே சொல்லிட்டு இருந்தாங்க. நீ வெளிநாட்டிலிருந்து படிச்சு முடிச்சு வரவுமே உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு பேசிகிட்டு இருந்தாங்க .”

“ஆமாண்டா பேசிகிட்டு இருந்தாங்க .சீக்கிரமாகவே கல்யாணம் பண்ணனும் .அவங்களோட ஆசையை நிறைவேற்றி வைக்கணும்”.

“ அப்போ எங்களுக்கு ஒரு கல்யாண விருந்து இருக்குது அப்படித்தானே .பொண்ணு யாரு ?”.

‘பொண்ணு யாரா இருக்கும்னு நினைக்கிற..”

“ எனக்கு தெரியலையே நீ சொல்லு .சொல்லு தெரிஞ்சுக்கிறேன்”.

“ வேற யாரு.. ஏற்கனவே சொன்னது தான் ..உனக்கு தான் தெரியுமே ..

கல்யாணம் ஒன்னு பண்ணினா பொண்ணு நிச்சியமா சரண்யாவா தான் இருப்பா.. அவளுக்கு கல்யாணம் இன்னும் ஆகல .எனக்கு நல்லா தெரியும் “.

“டேய் அப்படின்னா நீ இன்னும் மறக்கவே இல்லையா..”

“24 மணி நேரமும் அவளோட ஞாபகத்துல தான் இருக்கிறேன். இதுல எப்படி மறப்பேனு நினைக்கிற..

நான் ஸ்டெடியான ஒரு நிலைமைக்கு வரவும் அவளை போய் கேக்கணும்னு நினைச்சிருக்கிறேன் .சீக்கிரமா போகணும் “.

“அப்படின்னா இங்க வந்த பிறகு நீ அவளை பார்த்தாயா “என்று சஞ்சய் கேட்க ..”இதுவரை நிச்சயமாக வீடு மாறலை.. அதே இடத்தில் தான் இருப்பா.. ஒருமுறை போய் பார்த்தா தெரிஞ்சிரும் .”

“நீ இங்க வந்து கிட்டத்தட்ட ரொம்ப நாள் ஆகப் போகுது இதுவரைக்கும் நீ அவளை பார்க்கவில்லையா? “

“ஏன் கேக்குற.. நிஜமாகவே தினமுமே ஏதாவது ஒரு வேலை இருந்தது. அந்த வேலையைத் தாண்டி அவளை தேடி போக எனக்கு முதல்ல நேரமில்லை அதுதான் காரணம் .நிச்சயமாக போய் பார்க்கணும்.”

“அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாட்டி என்ன செய்வ..”

“முன்னாடி நடந்ததை எல்லாம் இன்னமுமா அதையே நெனச்சுக்கிட்டு இருப்பான்னு நினைக்கிறாயா .

“நிச்சயமா மனசு மாறி இருக்கும்டா.. வருஷம் கடந்து போச்சு. இப்ப கொஞ்சம் மெச்சூரிட்டி வந்திருக்காது.
அன்னைக்கு நடந்ததுவேற..

இனி நடக்க போறதெல்லாம் யோசிக்கும் போது அவளுக்கு தெரியாதா .

நான் எப்படிப்பட்டவன்னு இன்னுமுமே புரிஞ்சுக்கலைன்னா எப்படியாம்”.

“ அப்படி சொல்றியா “.

“ஆமாண்டா எப்பவுமே அவ முகம் தான் இன்னுமே என் கண்ணுக்குள்ளே இருக்குது. அந்த கண்ணு மட்டும் எப்பவுமே ஏதோ ஒன்னு சொல்றது போலவே தோணும் . நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.”

“ஓகே ஓகே.. என்ன சொல்ல வரேன்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு .முன்னாடி சொன்ன மாதிரியே இப்பவும் என்கிட்ட உதவி கேட்கிற..”

“ புரியலடா என்ன சொல்ல வர்ற “.

“இப்ப என்ன அந்த பொண்ண பத்தி அம்மா அப்பா காதுல நான் சொல்லி வைக்கணும்னு எதிர்பார்க்கிறியா.. அப்படின்னா சொல்லு நான் சொல்லிடறேன். உங்க பையனுக்கு இந்த பொண்ண ரொம்ப பிடிக்கும்.. அந்த பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க அப்படின்னு “.

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை .நானே பார்த்துக்கொள்கிறேன். அது மட்டும் இல்ல இங்க வந்த நாளிலிருந்து வேலை சரியா இருக்குது..

அம்மா இந்த கல்யாண பேச்ச ஆரம்பிக்கும் போது சொல்லிடுவேன் .

நான் என்னோட காதலுக்காக.. என்னோட எதிர்காலத்துக்காக நான் தான் போராடனும். நான் யாருடைய உதவியையும் எப்பவுமே கேக்க மாட்டேன் .”

“ஓகே டா தெரியாம சொல்லிட்டேன் .ஆள விடு சரியா .”

“சரி நான் இன்னொரு விஷயத்தை சொல்லிடுறேன் இன்றைக்கு எல்லாரும் வந்திருக்கிறார்கள்.

எல்லோரையும் பார்த்து பேசிட்டோம் .எல்லாருமே ஒரு அளவுக்கு செட்டில் ஆகிட்டாங்க அவங்க அவங்க ஊர்ல சிலர் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல எதிர்காலத்தை அழகா அமைச்சுக்கிட்டாங்க.

எல்லாரையும் வாரவாரம் வாங்கன்னா கஷ்டம்.. வர மாட்டாங்க .ரொம்ப நாள் கழிச்சு கெட் டூ கெதர் மாதிரி இன்னைக்கு எல்லாத்தையுமே பார்த்து பேசிட்டோம் .ஆனா இதே மாதிரி நீயும் நானும் எப்பவாவது ஒரு தடவைதான் பார்த்து பேசணும்னு ஏதாவது கட்டாயம் இருக்குதா சஞ்சய் .”

“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு நல்லா தெரியுது. என்னோட பெஸ்ட் பிரண்ட் நீ.. நாம அடிக்கடி பார்க்கலாம் பேசலாம் வாரத்துக்கு ஒரு நாள் கட்டாயமா எல்லாத்தையுமே ஒதுக்கி வச்சிட்டு நாம சந்திக்கலாம் சரியா .அது மட்டும் இல்ல. எப்ப வேணும்
னாலும் நான் எங்க இருக்கிறனோ அங்கே என்னை தேடி வர முழு உரிமை உனக்கு இருக்குது .”

“ அதே மாதிரி தான் நானும் ..உனக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னாலோ இல்ல வேற எதற்காக நீ கூப்பிட்டாலும் நிச்சயமா நானும் உடனே வருவேன்.”

“ ஹப்பா.. இந்த ஒரு வார்த்தைக்காக எவ்வளவு பேச வேண்டியது இருக்கு”என்று சொல்லி சிரிக்க மகிழ்ச்சியோடு புறப்பட்டனர்.


 

NNK-15

Moderator
9

வேலை முடிந்து வரும் போதே கோபமாக உள்ளே நுழைந்தாள் சரண்யா .

“என்ன காரியத்தை பண்ணி வச்சிருக்கறீங்க ப்பா..நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்ல”.

“ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. இதெல்லாம் அந்தந்த நேரம் காலத்தில சரியா நடக்கணும். இல்லன்னா சரி வராது பாப்பா.”

“அப்பா உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல .என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா..

எதுக்காக இப்படி எல்லாம் செய்றீங்க. முன்னாடி ஜாதகத்தை கொண்டு போய் புரோக்கர் கிட்ட கொடுக்க போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க .

அதெல்லாம் சரி வராது வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தேன். இன்னைக்கு பார்த்தா மேட்ரிமோனியில் போய் பதிவு பண்ணி வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன சொன்னா புரியும் .எனக்கு தெரியல.”

“ பாப்பா உனக்கும் வயசாகுது அது தெரியுதா.. காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாமா .

நீ ஆசைப்பட்ட மாதிரியே ரெண்டு டிகிரி படிக்க வச்சேன். வேலைக்கு போகணும்னு கேட்ட.. சரி அதுக்கும் சம்மதிச்சேன்.

இதோ ஒரு வருஷம் முடியப்போகுது .இதுக்கு மேல ஏன் லேட் பண்ணனும். இப்ப இருந்து பார்த்தா தான நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும் .”

“அப்பா உங்களுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல. இப்ப என்ன அவசரம் கல்யாணத்துக்கு ..”

“எங்களுக்கு வயசு ஆகிட்டே போகுது .அது உனக்கு தெரியுதா .நீ இந்த விஷயத்துல தலையிடாத பாப்பா..

கல்யாணத்துக்கு பதிவு பண்ணினா நாளைக்கேவா கல்யாணம் பண்ணி கொடுத்து அனுப்ப போறேன்.

நல்ல பையனா இருக்கணும். பழக்கவழக்கம் நல்லதா இருக்கணும். இப்படி நிறைய..

எல்லாமே சரியா வந்தா மட்டும்தான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன் புரியுதா..”

“அப்பா கிட்ட ஏன் சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிற சரண்யா . அப்பா சொல்றது தான் கரெக்ட் .

நான் தான் போய் பதிவு பண்ணுங்கன்னு சொன்னேன்”.

“ உங்கள் வேலை தானா இது..என்னவோ செய்யுங்க நான் சொன்னா எதைத்தான் நீங்க கேட்க போறீங்க .

யாராவது சும்மா சும்மா பொண்ணு பார்க்க வரேன்னு வீட்டு வாசலுக்கு வரட்டும். அப்புறம் இருக்குது”.

“அப்படியெல்லாம் யாரையும் வர விட மாட்டோம் .அவங்கள விசாரிச்சு அவங்களோட குடும்பம் அவங்களோட வேலை எல்லாத்தையுமே பார்த்து பிடிச்சிருந்தா..

உனக்கு செட் ஆகும்னு எங்களுக்கு தோணினா மட்டும் தான் வீட்டுக்கு வர சொல்லுவோம் .

மத்தபடி வாய்ப்பு இல்லை .அது மட்டும் இல்ல போட்டோவை பார்த்து பிடிச்சு எல்லா பொருத்தமும் சரியா இருந்து எங்க மனசுக்கு திருப்தியா இருந்தா மட்டும்தான் வீடு வரைக்கும் பொண்ணு பாக்கறதுக்காக வரவழைப்போம் .

அதனால நீ அதை பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம் .”

“எத கேட்டாலும் எல்லாத்துக்குமே சரியா ஒரு பதிலை மட்டும் வச்சுக்கோங்க. என்னமோ செய்யுங்கம்மா .

நான் உங்களோட விஷயத்துல தலையிடலை” என்று சொன்னபடி நகர்ந்தால் சரண்யா.

அதே நேரத்தில் நந்தா சரியாக இவளுடைய ப்ரொபைலை எடுத்துக்கொண்டு தாயாருக்கு அருகே வந்தான்.

“ மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் “என்று தயங்கி நிறுத்த ..மகனை மேலும் கீழுமாக பார்த்தவர்..

“ என்னடா மெல்ல பக்கத்துல வந்து உட்கார்ந்து ஐஸ் வைக்கிற மாதிரி இருக்குது. என்ன சொல்ல போற..”

“ நான் சொன்னா நீங்க கோச்சுக்க கூடாதுமா”.

“ கோச்சுக்கலை.. ஆமாம் உன் மேல நான் எதுக்கு கோவிக்க போறேன் “.

“இல்லம்மா வந்து..டைம் போகலை..அது தான் அப்படியே பொண்ணுங்களோட போட்டோவ பார்த்தேன் “.

“பொண்ணுங்களோட போட்டோவை பார்த்தயா..புரியலை..எதுல”.

“வெப்சைட்ல ..”

“என்ன வெப்சைட்ல.. என்ன பார்த்த.. எனக்கு புரியிற மாதிரி சொல்றியா..”

“வந்து மா மேட்ரிமோனியில் தான் போட்டோஸ் பாத்துகிட்டு இருந்தேன் .”

“ஓஹோ ஆக கடைசியில் நீயே வாய் திறந்து கேட்டுட்ட அப்படித்தானே ..”

“அம்மா நான் என்னம்மா கேட்டேன் .நான் எதுவுமே கேட்கலையே “.

“டேய் இப்ப நைசா வந்து உட்கார்ந்து நீ கேக்கல”.

“ என்ன கேட்டேன் நீங்களே சொல்லுங்களேன் “.

“என்ன போட்டு வாங்கறையா..”

“அம்மா “.

“என்ன டா..பொண்ண நான் பார்த்து இருக்கிறேன் ‌அந்த பொண்ண நீங்க எனக்கு பாக்கறீங்களா அதைத்தானே சொல்ல வந்த..”

“ ஐயோ அப்படியெல்லாம் இல்லவே இல்லையே.. கொஞ்சம் பொண்ணுங்களோட போட்டோ பார்த்தேன் .அழகாக இருந்தாங்க. அதனாலதான்”.

“ டேய் நம்பிட்டேன் டா .எந்த பொண்ணு முதலில் போட்டோ காட்டு ..பாக்கலாம்.. பொண்ணு அழகா இருக்கிறாளா இல்லையா அப்படிங்கிறத நான் பாத்துட்டு சொல்றேன்.”

“ அப்படின்னா சரி ..என்னை அப்புறமா ஓட்டக்கூடாது .”

“இனி எனக்கு இது மட்டும் தான் வேலை .நீ முதல்ல பொண்ண காட்டு .அப்புறமா என்ன பண்றதுன்னு நான் முடிவு பண்ணுகிறேன் “என்று மகனுக்கு அருகில் வந்து அமர்ந்து கையை நீட்ட தயங்கியபடி போனை எடுத்துக்காட்டினான்.

“பொண்ணு என்ன பண்ணறா” என்று கேட்டபடியே விவரங்களை படித்தபடி வந்தவர்.. கடைசியாக படிப்பை பார்த்துவிட்டு ..”எல்லாம் சரி நல்ல படிப்பு தான் படிச்சிருக்கறா.. உனக்கு பொறுத்தமா இருக்கும்ணு தான் தோணுது.

நீயும் டாக்டரா இருக்குற.. இந்த பொண்ணு சைக்காலஜி கிட்டத்தட்ட உன்னோட ஃபீல்டு மாதிரி வேலை தான் .

சரி ரெண்டு பேருமே வேலைக்கு போகும் போது பொருத்தமெல்லாம் சரியாதான்
இருக்கும் .

உண்மைய சொல்லுடா நிஜமா இந்த பொண்ண புடிச்சிருக்கா இல்ல என் பிபி ஏத்தறதுக்காக இந்த போட்டோவை எடுத்துட்டு வந்து காட்டுறியா.

உன்னை நம்ப முடியாது. உனக்கு எப்பவுமே விளையாட்டு ஜாஸ்தி .

என்னை வம்பு இழுத்து பாக்குறதுல உனக்கு அத்தனை சந்தோஷம் .”

“அம்மா இதிலெல்லாமா விளையாடுவாங்க சீரியஸ்ஸா எனக்கு இந்த பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு. வேணும்னா டிரை பண்ணி பாருங்களேன்.”

“ ஒரு வேளை ஜாதகம் சரியில்லைன்னா என்னடா செய்வ ..”

“அம்மா இந்த காலத்துல ஜாதகம் எல்லாம் நீங்க பாப்பிங்களா “.

“ஹலோ நாம பார்க்கிறோமோ இல்லையோ அது மேட்டர் கிடையாது .

பொண்ணு வீட்ல பாப்பாங்கல்ல அப்போ நாம ஜாதகம் கொடுக்கணும் தானே.”

“ எனக்கு என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது இந்த பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு ..வேணும்னா பாருங்க “.

“பொண்ண பாருங்கன்னு சொல்லி காட்டிட்ட.. இதுக்கு பிறகு நாங்க பேசாம இருந்தா அவ்வளவுதான் .உனக்கு என்ன இந்த பொண்ணு பிடிச்சிருக்கு அவ்வளவு தானே ..இரு பார்த்து பேசி முடிச்சிடலாம்.

உன்னை எல்லாம் குறை சொல்ல எந்த ஒரு காரணமுமே கிடைக்காது .அப்படி இருக்கும் போது உன்னை யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா .நான் இன்னைக்கு அப்பா கிட்ட பேசுறேன்”.

“ அம்மா ப்ளீஸ் இன்னொரு விஷயம் உங்க கிட்ட சொல்லிடுறேன்.”

“ என்ன நந்தா “.

“நான் தான் இந்த பொண்ண காட்டினேன்னு நீ அப்பாகிட்ட சொல்ல கூடாது.”

“ அப்படியா அப்புறம் வேற ஏதாவது கண்டிஷன் இருக்கா சொல்லு அதையும் கேட்டு தெரிஞ்சுக்கிறேன் “.

“அம்மா “.

“டேய் நீ எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பாருங்கன்னு சொன்னதே எனக்கு அத்தனை சந்தோஷம்.

காலகாலத்தில் கல்யாணம் முடிச்சு குழந்தை ,குட்டி, குடும்பமா இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா .

எனக்கெல்லாம் உன் வயசுல உனக்கே அஞ்சு வயசு ஆயிடுச்சு தெரியுமா .நீதான் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு யோசிக்கிற”.

“ம்மா.. அதுதான் பொண்ண கொண்டு வந்து கண்ணுல காட்டிட்டேனே.. இனி எதுக்காக நீங்க தாமதிக்கணும் .தாராளமா பொண்ண பாத்து பேசலாம்”.

“ஒரே ஒரு விஷயம் தான் கேட்கிறேன் சொல்லிடு. நந்தா நிஜமா சொல்லு .இந்த பொண்ண இப்ப தான் பார்த்தியா.. இல்ல ஏற்கனவே உனக்கு தெரியுமா .”

“ஏன் உங்களுக்கு என் மேல எப்பவுமே சந்தேகம் “.

“இல்லை டா காலேஜ் படிக்கும் போதே எனக்கு சந்தேகம் இருந்தது .ஆனால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற மாதிரி நீ பாட்டுக்கு காலேஜ் முடிச்சுட்டு மேல் படிப்புக்கு அங்க போயிட்ட ..

அங்க போன பிறகு கூட நிறைய நாள் யோசித்து இருக்கிறேன்.

அங்கிருந்து ஏதாவது ஒரு பொண்ண இழுத்துட்டு வந்து முன்னாடி நிக்க போறேன்னு..

ஆனா அது மாதிரி எதுவுமே ஆகல .கூட இருந்த பொண்ணுங்களை பத்தி விசாரிக்கும் போது கூட அவங்க எல்லாம் கேர்ள் பிரண்டு என்று ஈஸியா சொல்லி முடிச்சிட்ட..

இப்போ மறுபடியும் இங்க வந்திருக்கிற ..ஒரு பொண்ண பார்த்து புடிச்சிருக்குன்னு கேக்குற ..

உண்மைய சொல்லு .இந்த பொண்ணு ஏற்கனவே முன்னாடி உனக்கு தெரியுமா”.

“ அம்மா இப்போ இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா.. உங்க பையன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான் .

நீங்க அதுக்கு என்ன செய்யணும் .அதை செய்யுங்க. இது பக்கா அரேஞ்ச் மேரேஜ் நீங்க பார்த்து வைக்கிற கல்யாணம் புரிஞ்சுதா”.

“ புரியுது .ரொம்ப நல்லா புரியுது ஊர் உலகத்துக்கு நான் இப்படி சொல்லணும் .ஆனா இது அப்படி இல்ல அப்படித்தானே..”

“ சும்மா போட்டு வாங்காதீங்கம்மா .நீங்க என்ன கேட்டாலும் என் வாயிலிருந்து எந்த பதிலும் வராது.

உங்களுக்கு பிடித்திருந்தால் பாருங்க இல்லனா ஆளை விடுங்க .இப்போதைக்கு கல்யாணத்தை பத்தி நோ ஐடியா.

நான் என்னோட வேலைய பாத்துட்டு போறேன் .ஜஸ்ட் கேட்டேன் .அவ்வளவுதான் “.

“நீ சம்மதித்ததே போதும் ..எனக்கு என்ன எந்த பொண்ணை நீ கை காட்டறையோ அந்த பெண்ணை அழைச்சிட்டு வந்து பாத்துக்குவேன்.

இந்த பையன் கூட இருந்து இருந்து ரொம்ப ரோதனையா போச்சு .எனக்கு ஒரு மருமகளை அழைச்சிட்டு வந்து அவளை என்னோட மகள் மாதிரி நான் பாத்துக்குவேன் .ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்கிறது அதுதான்”.

“ அம்மா இப்படி எல்லாம் யோசிக்காத.. எந்த மருமகளும் மாமியாரை அம்மாவா பார்ப்பது கிடையாது .”

“சும்மா சொல்லாதடா நிறைய பேர் அது மாதிரி இருக்கிறாங்க. அவ எப்படி இருந்தாலும் சரி அவளை அப்படியே நான் ஏத்துக்குவேன் .

அப்போ அவளுக்கு என்னை பிடிக்கும் தானே ..”

“அம்மா என் செல்ல அம்மா.. உன்னை பிடிக்காம யாருக்காவது இருக்குமா .பாரு எனக்கே உன்ன ரொம்ப புடிச்சிருக்குதே “.

“போடா சும்மா எப்ப பாத்தாலும் கிண்டல் பேசிக்கிட்டு ..சரி இன்னைக்கு அப்பா வரவும் முக்கியமான வேலையே இது தான் ..சரியா ..”

“பொருத்தம் இல்லாட்டி கூட சரி செய்ய வைக்கணும். அவ்வளவுதான் .மத்தத பாத்துக்கோங்க. அப்புறமா முக்கியமான ஒரு விஷயம் எல்லா பேச்சுவார்த்தையும் முடிஞ்சு பொண்ணை எனக்கு நிச்சயம் பண்ண முடிவு பண்றீங்களோ அன்னைக்கு நான் வந்து பார்ப்பேன் .அதுக்கு முன்னாடி எல்லாம் யாரையும் வந்து பார்க்க மாட்டேன் .ஓகே வா .”

“இது என்னடா புதுசா இருக்கு அந்த பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்லி இருக்குற ..

பாக்கறதுல உனக்கு என்ன பிரச்சனையாம்? “

“அதெல்லாம் சொல்ல முடியாது ஆர்வத்துல அந்த பொண்ணு என்ன எதிர்பார்த்துகிட்டு இருக்கணும் .

நான் அந்த பொண்ணு முன்னாடி போய் நிற்கும்போது பிரமிச்சு போகணும் .”

“ என்னமோ போடா நீ சொல்றது எதுவும் புரியல .ஆனா நீ அந்த பொண்ண விரும்புறேன்னு எனக்கு தோணுது .கவலையே படாத ..நான் கண்டுபிடிக்கிறேன் .ரெண்டே நாள் அப்புறம் இருக்குது உனக்கு கச்சேரி .பாத்துக்கோ..”

“ என்னமா சண்டை போட போறியா .”

“சண்டை எல்லாம் போட மாட்டேன் .பேசும் போது கேட்டுக்கோ “என்று நகர்ந்து இருந்தார்.

அன்றைக்கு சரண்யா வீட்டிற்கு செல்லும்போது தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இவளை வரவேற்றார் .

“பாப்பா உனக்கு தெரியுமா.. புதுசா ஒரு ஜாதகம் வந்து இருக்குது .உனக்கு அந்த ஜாதகத்தை பொருத்தம் சரியா இருக்கான்னு பார்த்தோம்.

நிஜமாவே பொருத்தம் அவ்வளவு நல்லா இருக்குது. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணினா ரொம்ப நல்லா இருப்பீங்கன்னு ஜோசியக்காரர் சொன்னார்.”

“அப்பா என்ன சொல்றீங்க எனக்கு புரியல.”

“ மேட்ரிமோனியில பதிவு பண்ணி இருந்தேன்ல.. இன்றைக்கு ஒருத்தங்க போன் பண்ணி பேசினாங்க .

ஜாதகம் அனுப்பி வைக்கிறோம் உங்க பொண்ணோட ஜாதகத்தை எங்களுக்கு கொடுங்க . பொருத்தம் சரியா இருந்தா மேற்கொண்டு பார்த்து பேசலாம்னு சொன்னாங்க.

நானும் சரின்னு அனுப்பி வச்சேன் .இப்பதான் போன் பண்ணி சொன்னாங்க .பொருத்தம் ரொம்ப நல்லா இருக்குதாம்.

அதுலயும் மாங்கல்ய பொருத்தம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குதாம்.

இந்த மாதிரி பொருத்தம் ஆயிரத்தில் ஒருத்தங்களுக்கு தான் அமையும் .நாங்க உங்க பொண்ண வந்து பார்க்கணும் எப்ப வரலாம்னு கேட்டிருக்காங்க .

நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல..”

“ அப்பா முதல்ல ஒரு விஷயம் சொல்லட்டுமா ..பொண்ணு வந்து பார்க்கிறது எல்லாம் இரண்டாவது விஷயம் .

முதல்ல நீங்க பையன் என்ன பண்றான்.. வீடு, வாசல் எப்படி? அவங்கள பத்தின மொத்த டீடைல்லையும் விசாரிச்சிட்டு உங்களுக்கு திருப்தியாக இருந்ததுனா சொல்லுங்க .

அது மட்டும் இல்ல அவங்க சொல்ற தகவல் பொய்யா கூட இருக்கலாம் .

வேற யாரையாவது விட்டு இன்னும் கொஞ்சம் நல்லா விசாரிச்ச பிறகு எந்த முடிவுக்கு வேணும்னாலும் வாங்க சரியா.

சட்டுனு ஒருத்தங்க சொன்னாங்கன்னு வீட்டுக்கு வர சொல்லுவீங்களா .”

“ஐயோ இல்ல பாப்பா..நான் ஏற்கனவே அவங்க கிட்ட நீ சொன்னத தான் சொல்லி இருக்கிறேன்.

நீ இப்படித்தான் சொல்லுவேன்னு எனக்கு நல்லா தெரியும் .அதனாலதான்”.

“ ஓகே பா நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க .உங்க ஆர்வத்தை தடை செய்ய எனக்கு விருப்பம் இல்ல.

தாராளமா மேற்கொண்டு பேசுங்க .ஒன்னும் பிரச்சனை இல்ல “என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அடுத்த நாள் மாலையில் சற்று யோசனையோடு காணப்பட வேலை முடித்து வந்தவள்.. தந்தையின் முகத்தை பார்த்தவர்களுக்கு உள்ளுக்குள் சிறு மகிழ்ச்சி குமிழிமிட்டது.

“ அப்பா எப்படியோ இந்த இடம் செட்டாகல போல இருக்குது. அப்பா முகத்தை பார்த்தாலே தெரியுது .1008 யோசனையில் உட்கார்ந்திருக்கிறார்கள் .

இத இப்படியே மறக்க வெச்சிடனும்.” நினைத்தபடி ஒன்றும் தெரியாதவள் போல .. சமையல் அறையை பார்த்து “அம்மா எனக்கும் அப்பாவுக்கும் காபி வேணும் .எடுத்துட்டு வரீங்களா “என்று கேட்டபடி தந்தைக்கு அருகே சென்று அமர்ந்தாள்.

“ ஏன் இப்படி யோசனையோடு இருக்கிறீங்க .இந்த இடம் சரியில்லையா. பையன் சரியில்லைன்னு சொன்னாங்களா .

ஏன் இப்படி முகத்தை சோகமா வச்சிருக்கீங்க. இந்த பையன் இல்லாட்டி இன்ன ஊர்ல மாப்பிள்ளைகளுக்கா பஞ்சம்..

எத்தனை பேர் பொண்ணு கிடைக்காம சுத்தறாங்க தெரியுமா .எனக்கு அந்த மாதிரி நிறைய பேர தெரியும் .அதனால நீங்க கவலையே படாதீங்க.

இந்த இடம் இல்லாட்டி நல்ல இடமா மறுபடியும் வரும் “என்று தந்தைக்கு ஆறுதல் சொல்ல..

“ அது இல்ல பாப்பா. இது வேற விஷயம் .”

“என்ன வேற விஷயம் .எனக்கு புரியல .”தாயார் காபியோடு சிரித்த முகமாக வந்தார்.

“அப்பா போய் பார்த்துட்டு வந்தாங்க .உங்க அப்பாவுக்கு ரொம்ப திருப்தி தான். பையனை பத்தி எந்த பிரச்சினையும் இல்ல .

அவங்க குடும்பமும் ரொம்ப பாரம்பரியமான குடும்பம். எல்லாத்தையுமே விசாரிச்ச பிறகு ரொம்ப சந்தோஷம் தான் ஆனா கொஞ்சம் தயங்குகிறார்கள் .”

“என்னப்பா சொல்றீங்க. என்ன தயக்கம் .எனக்கு புரியல .”

“என்ன பாப்பா அவங்க ரொம்ப வசதியானவங்களா இருக்கிறாங்க .

நிறைய சொத்து பத்து இருக்குது . அவங்கள வச்சு பார்க்கும்போது நமக்கு அதுல ஒரு பர்சன்டேஜ் கூட இல்லை.

அதுதான் யோசனையா இருக்குது. எதுக்காக நம்ம வசதியான இடத்துல பொண்ண குடுத்துட்டு பின்னாடி ஏதாவது பிரச்சனை ஆனா நாம கையை பிசஞ்சிட்டு நிக்கணும். அதுதான் யோசிக்கிறேன்”.

“ அப்புறம் என்னப்பா வேண்டாம்னு சொல்லிடுங்க. உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது .அதனால இந்த இடம் சரி வராது .

உங்க தகுதிக்கேத்த மாதிரி பொண்ணை பார்த்துக்கோங்கன்னு சொல்லிடுங்க “என்று சொல்ல..,

“அப்படித்தான் சொல்லணும்னு நினைச்சேன் பாப்பா .ஆனா அவங்க விடறது மாதிரி இல்லை. .

உங்க பொண்ணோட ஜாதகம் மாதிரி சிறப்பா எதுவும் பொருந்தி வரல .அதனால உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைக்கணும்.

நாங்க வரதட்சணை இது அதுன்னு எதுவும் கேட்க மாட்டோம் . உங்களோட பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தா போதும்.

உங்களுக்கு என்ன விருப்பமோ அதை கொடுத்தால் போதும் .இல்லை எதுவுமே முடியாட்டி கூட பிரச்சனை இல்ல .

நாங்க நகை போட்டு பொண்ணை கூப்பிட்டுக்கிறோம் .என்ன சொல்றீங்க அப்படின்னு அந்த அம்மா கேட்டாங்க .

அவங்கள பார்க்கும்போது ரொம்ப நல்லவங்களா தான் இருக்கிறார்கள் .அதுதான் யோசிச்சிகிட்டே இருக்கிறேன் .

அவங்க கிட்ட யோசிச்சு சொல்றேன்னுட்டு இங்க வந்தேன் .ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் என்னால ஒரு முடிவும் எடுக்க முடியல .

உன்னை ஏதாவது கேட்டுட்டு பதில் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.”

“அப்பா வெரி சிம்பிள்.. தகுதிக்கு மீறி வேண்டாம் பா..பின்னாடி ஏதாவது ஒரு பிரச்சனையில போய் சிக்க வேண்டாம். அதனால் இது வேண்டாம்னு சொல்லிடுங்க .
வேற இடம் பார்த்துக்கலாம் “.

“அப்படின்னா சொல்ற.. ஆனா அவங்க வீட்டு ஆட்களை பார்க்கும் போது நல்லவங்களா இருக்காங்க .அதுமட்டுமல்ல பையன் வேற நல்ல படிப்பு படிச்சிருக்கறாப்படி.”.

“இப்ப என்னதான் சொல்ல வரீங்க .”

“இன்னொரு முறை அவங்க கிட்ட பேசிப் பார்க்கலாம்னு தோணுது பிடிச்சிருந்தா ஓகே சொல்லிடுவேன் .”

“சரி பா.. மாப்பிள்ளை போட்டோ அவர் எங்க வேலை செய்றாரு அந்த டீடைல்ஸ் எல்லாம் குடுங்க .நானும் கூட எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி விசாரிக்க சொல்றேன்”.

“ சரிடா இரு தரேன் “என்று நகர்ந்தார் .

அதன் பிறகு இருந்த வேலையில் இவள் சுத்தமாக மறந்து விட்டாள்.

அவளுடைய தந்தையும் அது சம்பந்தமாக எதுவும் பேசவில்லை.

திடீரென்று இரண்டு நாட்கள் கழித்து இவள் புறப்படுகையில் நிறுத்தியவர் .”இன்றைக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் கேளு சரண்யா .

மாப்பிளையோட அம்மா ,அப்பா இரண்டு பேரும் வந்து பார்க்க போறதா சொல்லி இருக்காங்க. மாப்பிள்ளையும் வருவார் என்று நினைக்கிறேன் .


ஒரு தடவை பார்த்துட்டு போயிடு “.

“என்னப்பா ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க .ஏன் இப்படி செய்றீங்க .எனக்கு புரியவே இல்லை .

காலையில் ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கும் போது இப்படி வந்து பேசினா என்ன அர்த்தம் .”

“ம்மா..எனக்காக…ப்ளீஸ் வரச்சொல்லிட்டேன்.”

“சரி பா” கோபமாக சொன்னபடி நகர்ந்தாள்.


 

NNK-15

Moderator
10

சுரேந்தர் ,கௌரி இருவருமே 10 மணி எனும் போது வந்திருந்தனர் .

நந்தா வந்திருக்கவில்லை. காலையிலேயே ஒரு சர்ஜரிக்காக அவனை அழைத்து இருக்க விடியற்காலை எழுத்து சென்றவன் இன்னமும் வந்திருக்கவில்லை.

இடையே போன் செய்ய அட்டென்ட் செய்யவும் இல்லை.

“ சர்ஜரிக்காக போயிருக்கிறான். இதுல இடையில நீ கூப்பிட்டு அவனை டென்ஷன் பண்ணுவியா .

வேலை முடிஞ்சா அவனே வருவான் .இனி அவனை தொந்தரவு செய்யக்கூடாது. வா நீயும் நானும் போய் பொண்ண பாத்துட்டு வரலாம். நமக்கு பிடித்தாலே அவன் ஓகே தான் சொல்லுவான்.”என்று இவளை அழைத்து வந்திருந்தார் .

இங்கே சரண்யாவை அருகே அமர வைத்து பேசிக்கொண்டு இருந்தார் கௌரி.

“ நீ எந்த காலேஜ்ல படிச்ச” என்று கேட்க ..அவள் சொல்லவும் இவருக்கு புரிந்து விட்டது .

“அப்படியா என்னோட பையன் கூட அந்த காலேஜ்ல தான் படிச்சான்” என்று சொல்லவும்.. இப்போதுதான் இவளுக்குமே தோன்றியது ,இதுவரையிலும் மாப்பிள்ளையின் பெயரைக் கூட கேட்கவில்லை என்று..

“ உங்க பையன் பேரு என்ன? “தயங்கி நிறுத்த .”என்னங்க நம்ம கண்ணாவோட பேரு கூட தெரியலைன்னு சொல்றா” என்று கணவனை பார்த்து கேட்க ,இவ்ளோ கண்ணா என்பது பெயர் போல இருக்கிறது என முடிவு செய்து கொண்டாள்.

கௌரி கண்ணா, செல்லம் என்று சமயத்திற்கு எந்த பெயர் வருகிறதோ அப்படித்தான் மகனை அழைப்பது..

தந்தையும் மகனும் நண்பர்கள் போல பழகினாலுமே இவளுக்கும் அவனுக்கும் இருக்கும் பாண்டிங் வேறு விதமானது .

மகனை அழைத்து கலாய்ப்பதில் இருந்து அவனை கண்ணும் கருத்துமாக பார்ப்பது வரை எல்லாமே கௌரியின் வேலை மட்டும் அல்ல அது கடமையாகவும் நினைப்பார்.

“காலேஜ்ல எந்த பேட்ச் “என்று தயங்கி கேட்க ..”உன்ன விட மூன்று வருஷம் முன்னாடி படிச்சவன் “என்று சொல்லவும் இவளும் சரி என தலையாட்டிக் கொண்டாள்.

அங்கே ஆர்ட்ஸ் மட்டும் அல்ல மெடிக்கல், இன்ஜினியரிங் என்று இருக்க இதில் ஏதோ ஒரு துறையில் படித்திருக்கிறான் என முடிவு செய்தவள் அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்கவில்லை.

அவரிடம் பேச அவளுக்கு சுலபமாக இருந்தது. இருவரும் சிறிது நேரத்தில் அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.

நீண்ட நேரம் வரை பேசியவர்.. “சரி யோசிச்சு சொல்லுமா ..
நாங்க வசதி தான் இல்லன்னு சொல்ல மாட்டோம் .

அதுக்காக அந்த காரணத்தை வைத்து நிராகரிக்க வேண்டாம். நான் சராசரியான பொண்ணு தான் .

என் வீட்டுக்கு வரப்போற பொண்ணு மருமகளா இருக்கணும்னு நினைக்க மாட்டேன்.மகளா இருக்கணும்.
எனக்கு நம்பிக்கை இருக்கு.
.
என்னோட பையன் ரொம்ப சாஃப்ட் ..சண்டை போட எல்லாம் தெரியாது . உன்னை ரொம்ப நல்லாவே பார்த்துக்குவான்” என்று சொன்னவர் புறப்பட்டனர்.

ஏனோ மாப்பிள்ளையை பார்க்கவில்லை ஆனால் அந்த குடும்பத்தின் மீது நல்ல அபிப்பிராயம் வந்திருந்தது.

தந்தையிடம் கூட சொல்லிவிட்டு சென்றாள்..”சரிப்பா நல்ல நாள் பார்த்து வந்து பார்த்துட்டு போக சொல்லுங்க .மாப்பிள்ளையை இன்னும் பார்க்கல .பார்த்த பிறகு முடிவு பண்ணிக்கலாம்” என்று சொல்ல ,இவர் சரி என்று வேக வேகமாக அடுத்து செய்ய வேண்டியதை கவனிக்க ஆரம்பித்தார் .

குறிப்பிட்ட நன்னாளில் நிச்சயம் செய்து கொள்ளலாம் என முடித்து இருக்க ,அன்றைக்கு வருகிறார்கள் என்று தெரியவும் தான் தாயாரிடம் வந்து பேச்சு கொடுத்தாள்.

“ மாப்பிள்ளை போட்டோ ஏதோ தந்து இருக்கிறதா சொன்னிங்களே மா..”

“ சரியா போச்சு உன் மொபைலுக்கு அனுப்பி இருந்தேன் .நீ இன்னும் பார்க்கலையா .”

“மொபைலுக்கா எப்போ?” என்று கேட்க ..”எடுத்து பாரு.. எப்ப இந்த பேச்சு வார்த்தை ஆரம்பிச்சாங்களோ அப்பவே உனக்கு அனுப்பியாச்சு .

நீ இன்னும் பார்க்காம இருந்துட்டு.. இப்ப வந்து கேக்கறியா “என்று சொல்லிவிட்டு நகர ,வேகமாக மொபைலில் எடுத்து தேட ஏற்கனவே நாட்கள் கடந்து இருக்க அந்த போட்டோ ஓபன் செய்ய முடியவில்லை.

“சுத்தம் சரி இன்னைக்கு தான் வராங்களே வந்த பிறகு பார்த்துக்கலாம் “என்று அமைதியானாள்.

தாய் தந்தையரும் நிறைய விசாரித்து சரி என்று சொல்லி இருக்க ,நிச்சயமாக தவறாகாது என முடிவுக்கு வந்திருந்தாள் .

அதனால் மாப்பிள்ளையின் முகம் பார்க்கவில்லை என்றோ போட்டோவில் கூட பார்க்கவில்லை என்பது பெரியதாக அவளுக்கு தோன்றவில்லை .

‘யாராக இருந்தாலும் சரி அப்பா அம்மா பார்த்த அவங்கள கல்யாணம் பண்ணிக்கணும். இதுதானே யோசித்தது அதனால எந்த தயக்கமும் இல்லாமல் ஏத்துக்கலாம். ‘என்று முடிவு செய்திருக்க ,அதன் பிறகு அவளுக்கு பெரியதாக எதுவும் தெரியவில்லை .

நிச்சயத்தை சிறு பங்க்ஷன் போல வீட்டில் நடத்த முடிவு செய்திருக்க ,இவர்கள் பக்கத்து உறவினர்கள் நிறைய பேர் வந்திருந்தனர் .

சரியாக சொன்ன நேரத்திற்கு மாப்பிள்ளை அவர்களுடைய முக்கிய உறவினர்கள் என அவர்களும் அவர்கள் பங்கிற்கு 50 பேர் வரைக்கும் வர வீடே விழாக்கோலம் பூண்டது.

மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் என்று சொல்லவும் சற்று ஆர்வம் அதிகமானது இவளுக்குள்..

யாராக இருக்கும் இதுவரையிலும் மாப்பிள்ளையை பார்த்தது இல்லை .

அதுவே ஒரு படபடப்பை தந்தது.. இவளுடைய நண்பர்கள் நிறைய பேர் இங்கே வந்து இருக்க நிலா கூட வந்திருந்தாள்.

அவளுமே “நீ சொல்லவே இல்லல்ல.. நான் ஏற்கனவே உன்கிட்ட கேட்டேன் .முதல் முறை பார்த்தப்போ..

அதுக்கு பிறகு நீ என்னவோ எதிரி மாதிரி நடத்தின.. கடைசியில பாத்தா இன்னைக்கு நிச்சயம் வரைக்கும் வந்துடுச்சுல்ல” என்று சொல்லும் போது இவளுக்கு எதுவுமே புரியவில்லை.

திரு திரு என விழித்தாள் .”நீ சொல்ற எதுவுமே எனக்கு புரியல .என்ன சொல்ற .. தெளிவா சொன்னா நல்லா இருக்கும் “.

“புரியலையா இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்ல உன்னை கூப்பிட்டு மாப்பிள்ளை முன்னாடி நிறுத்துவாங்க .

அப்ப பார்த்துட்டு சொல்லு எதுவுமே தெரியாதவளாட்டம் எப்படித்தான் இருக்க முடியுதோ” என்று நகர யோசனையோடு அமர்ந்திருந்தாள் .

சற்று நேரத்தில் எல்லாம் இவளை இவளுடைய உறவினர்கள் அழைத்துச் செல்ல,நேராகச் சென்று அங்கே சபையில் இருந்த அனைவருக்கும் வணக்கம் சொல்ல ,”அதெல்லாம் ஒன்னும் அவசியம் இல்லமா. இங்கே வந்து பக்கத்துல உட்காரு “என்று கௌரி தனக்கு அருகே அமர்ந்து கொண்டார். அமைதியாக வந்தவள் அவருக்கு அருகே அமர்ந்து தலையை குனிந்து படபடப்பாக அமர்ந்திருக்க ..”என்ன நீ என்னோட பையனோட முகத்தை பார்க்கவே மாட்டியா..

பக்கத்துல தான் இருக்கிறான்.நிமிர்ந்து பாரு” என்று சொல்ல.. சற்று திரும்பி பார்த்தாள். அங்கே அமர்ந்திருந்தது நந்தா .ஒரு நிமிடம் திக் என்ற ஒரு பயப்பந்து தொண்டைக்குள் இறங்கியது போல இருந்தது.

நந்தா அருகே இருந்த சஞ்சய்யோடு ஏதோ குனிந்து பேசிக் கொண்டிருந்தான்.

நடந்தது எல்லாமே இவளுக்கு தெரியுமே.. அத்தனை பிரச்சனை முடிந்திருந்தது.

அப்படி என்றால் தன்னை பழி வாங்குவதற்காக மறுபடியும் இங்கே வந்த அமர்ந்திருக்கிறானா என்று தோன்ற அந்த பயத்தோடு அவனை கவனித்தாள்.

சிறிது நேரம் சஞ்சயிடம் பேசியவன் சற்று இவள் புறமாக திரும்பி லேசாக கண்ணடித்த படி அருகே நிமிர்ந்து அமர, அவனுடைய கை இவளுடைய தோள் மீது லேசாக உரசியது.ஒரு தீப்பொறி உடலெங்கும் பரவுவது போல உணர்வு தோன்ற ,சற்றே நகர்ந்தபடி கௌரியை பார்த்தாள்.

அவரும் மகிழ்ச்சியாக இவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார் .

“உண்மையை சொல்லு ..ஏற்கனவே என்னோட பையன் உனக்கு தெரியும் தானே..

அவன் கிட்ட நிறைய முறை கேள்வி கேட்டிருக்கிறேன் .இதுவரைக்கும் சொல்லவே இல்ல. ஒரே காலேஜின்னு நீ சொன்ன பிறகுதான் எனக்கே ஒரு அளவிற்கு புரிந்தது .

என் பையன் ரொம்ப சாஃப்ட்.. நிச்சயமா உன்ன தங்க தட்டுல வச்சு தாங்குவான் .நீ பயப்பட வேண்டிய தேவையே இல்லை.”
ஏதேதோ பேசிக் கொண்டிருக்க எதுவுமே கவனத்தில் பதியவில்லை.

தன்னை பழி வாங்கத்தான் இவன் திருமணம் முடிக்கப் போகிறான் என்கின்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

அதே பதட்டத்தோடு அமர்ந்திருக்க இப்போது அடுத்த சந்தேகம் துளிர் விட ஆரம்பித்தது .

‘உண்மையில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறானா அல்லது திருமண மேடை வரை அழைத்துச் சென்று கடைசி நேரத்தில் முடியாது என திருமணத்தை நிறுத்த போகிறானா..

என்ன காரணத்திற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் .’என்று இன்னொரு மனம் கேள்வி கேட்க, திகைப்போடு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.

அடுத்து ஒரு மணி நேரம் என்ன நடந்தது என்று கேட்டால் இவளுடைய ஞாபகத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .

அந்த அளவிற்கு எதிலுமே கவனம் பதியவில்லை .

அருகே இருவரையும் அமர வைத்து நிச்சயம் பேசி நாள் குறித்து, தாம்பூலம் இருவரும் மாற்றிக்கொள்ள ஏதோ ஒரு பொம்மை போல அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவ்வப்போது அருகே நந்தா சிறு சிறு சீண்டல் செய்து கொண்டிருக்க எதுவுமே இவளுடைய மனதில் பதியவில்லை .

திகைப்போடு அப்படியே அமர்ந்து இருந்தாள்.

அந்த சபையில் தன்னுடைய தந்தையிடம் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கு அவளுடைய மனம் இடம் தரவில்லை .

தந்தையை இத்தனை கூட்டத்தில் தலை குனிய விடக் கூடாது என முடிவு செய்தவள்.. “எதா இருந்தாலும் சரி நிச்சயம் முடியவும் நந்தா கிட்ட பேசிக்கலாம் . அவன் என்ன மனசுக்குள்ள நினைச்சுட்டு இருக்கிறான் அப்படிங்கிறத கேட்டு புரிந்து கொள்ளலாம் .பிறகு என்ன செய்யலாம்னு முடிவு செய்யலாம் “என தீர்மானத்திற்கு வர சற்று இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தாள்.

விருந்து கூட ஹோட்டலில் ஆர்டர் செய்திருக்க .விருந்து பரிமாற ஆரம்பித்தனர் .

இருவரையும் அருகருகே அமர வைத்து உணவு பரிமாற ஆரம்பிக்க அமைதியாக அமர்ந்திருந்தாள் .

நந்தாவின் மனநிலை வேறாக இருந்தது .

இத்தனை நாள் காத்திருந்தவன் அல்லவா இவளது கரம் பிடிக்க..

அன்றைக்கு எந்த அளவில் காதலில் இருந்தானோ அதே காதல் இன்றளவும் குறையாமல் இருந்தது அவளின் மேல்..

அன்றைக்கு புரியாமல் நடந்து கொள்கிறாள் என்றுதான் நினைத்தானே தவிர அதை தாண்டி வேறு எதுவும் நினைத்தது கிடையாது.

அருகருகே அமர வைத்த நேரத்திலிருந்து சிறு சிறு சீண்டல்கள் ,சிறு தொடுகைகள் என அவன் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான்.

இதோ பந்தியில் அமர்ந்திருக்கும் நேரம் கூட யோசிக்காமல் அவள் தட்டில் இருந்த உணவை எடுத்து சாப்பிட திகைத்தபடி இவள் தான் அவனது முகத்தை பார்க்கும்படி ஆகியது .

“என்ன பார்க்கிற.. உனக்கு வேணும்னா இந்த இலையில் இருந்து நீ தாராளமா எடுத்துக்கலாம் .நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்று சொன்னபடியே கண்ணடிக்க, ‘இவன் என்னைக்குமே மாற மாட்டான் ‘என்று நினைத்தபடியே, அங்கே அமர்ந்திருப்பவர்கள் தன்னை கவனிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு மெல்ல புன்னகைத்தாள் .

“என்ன ஆச்சு நீ நல்லா பேசுவேண்ணு கேள்விப்பட்டேன் .ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குற.. வந்த நேரத்தில் இருந்து ரொம்ப அமைதியாக இருக்கிற ..என்ன சரண்யா பேசு” என்று சொல்ல அதற்கும் கூட இவளிடம் பதில் இல்லை.

ஓரளவுக்கு ஒவ்வொருவராக புறப்பட ஆரம்பிக்கும் போது நந்தா எங்கே என கவனித்தால் சரண்யா .

நந்தா சரண்யாவின் தாய் தந்தையரோடு பேசியபடி அமர்ந்து இருந்தான்.

இயல்பாக சிரித்து பேச அவனுடைய தோற்றம் இவளை கவர்ந்தாலுமே ..ஏனோ இவள் தீர்மானித்து வைத்த பழைய நந்தா தான் இவளது கண்களுக்கு முன்னால் வந்து சென்றான்.

சற்று நேரம் பேசியவன் பிறகு அவனுடைய உறவினர்கள் ஒவ்வொருவராக புறப்பட,இவனுமே வேகமாக ஒவ்வொருவரிடமும் விடை பெற்று கிளம்பியவன் கடைசியாக சரண்யாவிற்கு அருகே வந்து ..”இப்பதான் உங்க அப்பாகிட்ட பேசினேன் .எங்க வேலை செய்றன்னு சொன்னாங்க .

எனக்கு ஆச்சரியமா இருக்குது. உன்கிட்ட நிறைய பேசணும் நாளைக்கு நான் உன்னை அங்க வந்து பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு நகர, அமைதியாக அவனை கவனித்தாள் .

அவனுக்கு அடுத்ததாக வந்த சஞ்சய் “வாழ்த்துக்கள் சரண்யா ஒரு வழியா நந்தாவோட காத்திருப்பு வீண் போகல .

அவன் ஆசைப்பட்ட மாதிரியே உன்னை கல்யாணம் பண்ணிக்க போறான் .இனி நந்தாவோட குடிமி உங்க கையில தான்னு நினைக்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது .ஆல் த பெஸ்ட் .உங்க ரெண்டு பேரோட லைஃப் நல்லா இருக்கும்” என்றவன் விடை பெற்று புறப்பட அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சொன்னது போலவே அடுத்த நாள் இவள் இருந்த இடத்திற்கு வந்திருந்தான்.

“ஏற்கனவே நான் அன்றைக்கு உன்னை பார்க்க வந்தேன். ஆனா நீன்னு தெரியாது.. அப்படின்னா உனக்கு என்னை தெரியும் தானே .

நான் இங்க வந்து சேர்ந்த அன்னைக்கு அறிமுக பார்ட்டி மாதிரி கொடுத்திருந்தாங்க .அங்க நீ வந்திருந்த அப்படித்தானே “என்று கேட்க அமைதியாக அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ என்ன பேசவே மாட்டேங்குற.. இந்த ஹாஸ்பிடல்ல உனக்கு எவ்ளோ நல்ல பேரு தெரியுமா. எனக்கு கேட்கும் போது அத்தனை சந்தோஷமா இருக்குது .

நானும் கூட ஓரளவுக்கு சாதித்து இருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன் .நிறைய சர்ஜரி செய்றேன். இதுவரைக்கும் எதுவுமே ஃபெயிலியர் ஆகல.

ஒரு வகையில நீயும் கிட்டத்தட்ட இதே ஃபீல்டு தான்.” இப்போதுமே அமைதியாக தான் பார்த்துக் கொண்டிருந்தது.

“ஏன் அமைதியா இருக்கிற சரண்யா .ஏதாவது பேசு” என்று சொல்லவும்.. “இந்த கல்யாணம் எதுக்காக ?என்னை பழிவாங்கவா” என்று மனதில் உள்ளதை கேட்டு விட்டாள்.

முதலில் ஒன்றும் புரியாமல் திகைத்தபடி பார்த்தவன் பிறகு.. “நீ என்ன சொல்றன்னு எனக்கு தெரியல. என்ன கேள்வி இது. எதுக்காக நான் உன்னை பழி வாங்கணும்..”

“காலேஜ்ல நடந்ததை நான் இன்னும் மறக்கல .நீயும் மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன் .

அதுக்காகத்தானே இந்த கல்யாணம் ..பழி வாங்க கல்யாணம் பண்ணிக்கிறியா.. இல்ல கல்யாண மண்டபம் வரைக்கும் வந்து விட்டுட்டு போக போறியா.” வேக வேகமாக கேள்வி கேட்க ,

”சைக்காலஜி ஸ்டூடண்ட் தான நீ..நிறைய பேருக்கு நல்ல விதமா கவுன்சிலிங் கொடுக்கறையாம்..

நிறைய பேரோட உயிரை கூட நீ காப்பாற்றி கொடுத்தயாம்.. கேட்கும் போது எனக்கு அத்தனை சந்தோஷமா இருந்தது .ஆனா இதெல்லாம் மத்தவங்களுக்கு தான் போல இருக்கு .

சுயமா எதையுமே யோசிக்க மாட்டியா .அது என்ன மத்தவங்க விஷயத்தில் கரெக்டா இருக்கிற நீ என்னை பத்தி மட்டும் எப்பவுமே தப்பாவே யோசிக்கிறது.

சரி அப்படியே நீ நினைக்கிறது போலவே இருக்கட்டும். அதுதான் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்குதாமே உனக்கும் எனக்கும்..”

“அப்படின்னா நீ ஜாதகத்துலயும் விளையாண்டு இருக்கிற..”

“ அப்படியா!! என்னை பத்தி உனக்கு எப்பவுமே நல்ல விதமா யோசிக்கவே தெரியாதா.

சரி நீ நினைக்கிற மாதிரியே நினைச்சுக்கோ ..ஏன் பழிவாங்கறேனா இல்ல வச்சு வாழ போறேனான்னு கல்யாணம் பண்ணி தான் பார்த்துட்டு முடிவு செய்.. “
சொன்னவன் அமைதியாக அவள் எதிரில் அமர்ந்திருந்தான்.

அவளுமே அமைதியாக அமர்ந்திருந்தால்.. பேச்சு வார்த்தை என்பது இருவருக்கும் நடுவே நீண்ட நேரம் வரையிலுமே இல்லை .

அவ்வப்போது அவன் முகத்தை யோசனையோடு பார்ப்பதும் பிறகு அமைதியாக அமர்ந்து கொள்ளுவதுமாக சரண்யா இருக்க , நந்தாவும் அவளின் முகத்தை அவ்வப்போது பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை .

கடைசியாக எழுந்தவன் “உனக்கு என் மனச எப்படி சொல்லி புரிய வைக்க போறேன்னு தெரியல .

நீ சீக்கிரமா புரிஞ்சிக்குவேன்னு நம்பறேன் .இந்த கல்யாணம் விளையாட்டு கல்யாணமோ உன்னை பழி வாங்குறதுக்காக பார்த்து முடிவு பண்ணின கல்யாணமோ கிடையாது

என்னோட அம்மா.. என்னோட அம்மா கிட்ட நீ ஏற்கனவே பேசி இருப்ப.. அவங்கள பார்த்த பிறகு கூடவுமா என் மேல உனக்கு சந்தேகம் வருது .
அப்படி வந்தால் இந்த கல்யாணம் பண்றதோட அர்த்தமே ஒன்னும் இல்லாம போயிடும் சரண்யா.

உன்னை பொருத்தவரைக்கும் உன்னோட அப்பா, அம்மா முடிவு செய்யற மாப்பிள்ளையை கல்யாணம் செய்வேன்னு சொன்ன..

இன்னைக்கு அவங்க என்னை முடிவு செஞ்சிருக்காங்க. இத்தனை சந்தேகத்தோட நம்ம வாழ்க்கை பயணம் தொடர வேண்டுமா அப்படிங்கிற கேள்வி எனக்கே இப்ப வந்துருச்சு .

நீயே முடிவு பண்ணிக்கோ.. ஒரு வேளை இது சரிவராதுன்னு தோணுச்சுன்னா, யோசிக்கவே வேண்டாம் .

இந்த கல்யாணத்தை நீயே ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நிறுத்திடு” என்றவன் கோபமாக எழுந்து வெளியேறி இருந்தான்.

முதலில் அவனிடம் பேசிப் பார்க்க வேண்டும் அவனுடைய மனநிலை தெரிந்து கொண்டு அவனையே கல்யாணத்தை நிறுத்த சொல்ல வேண்டும் என்று இவள் நினைத்திருக்க, அவனோ மொத்தப் பொறுப்பையும் இவளிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறி இருந்தான்.

ஏதோ யோசனை ,ஏதேதோ குழப்பம் , இந்த மனநிலையோடு தான் வீட்டிற்கு சென்றது .ஆனால் அங்கே வேறு விதமாக இவளுடைய தாய் ,தந்தை இருந்தனர்.

இவளுடைய திருமணத்திற்கு என்று என்னென்ன வாங்க வேண்டும்.

எப்படி எல்லாம் திருமணம் முடிக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே போட ஆரம்பித்திருந்தன
ர் மகிழ்ச்சியோடு..

அவர்களின் மகிழ்ச்சியான மனநிலையை பார்க்கும் போது என்ன ஆகிவிடும் பார்த்து விடலாமே என்கின்ற மனநிலை தோன்ற நந்தாவை பற்றி சற்று நல்ல விதமாக யோசித்துப் பார்க்க ஆரம்பித்தால் சரண்யா.


 

NNK-15

Moderator
11

அன்றைய நாளுக்கு பிறகு நந்தா இவளிடம் வந்து பேசவில்லை .

நாட்கள் வேகமாக நகர்ந்தது. கூடவே திருமண ஏற்பாடும்..

பெரிய திருமண மண்டபம் ஒரு உறவுகளையும் விடக்கூடாது என கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட பத்திரிகை அடித்து இருந்தனர்.

தெரிந்தவர் ,அறிமுகமானவர், உறவினர்கள் என அத்தனை பேருக்குமே சரண்யாவின் தந்தை பத்திரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.

அதுபோலதான் நந்தாவின் வீட்டிலும் நடந்தது .

நிறைய கூட்டத்தை எதிர்பார்த்து இருக்க அதற்கு ஏற்றார் போல பெரிய மண்டபமாக புக் செய்தனர் .

கல்யாண வேலை யாருக்கும் சிரமமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே மேரேஜ் ஆர்கனைசிங் சென்டரிற்கு மொத்தமாகவே பணத்தை கொடுத்து ஏற்பாடுகளை செய்ய சொல்லி இருக்க ..இவர்களுக்கு பெரியதாக எந்த வேலையும் இல்லை .

உடைத்தேர்வுக்கு என ஒரு நாள் பிரபல துணி கடைக்கு சென்று இருவருக்கும் உடை வாங்கி விட்டு வந்தனர் .

அப்போதும் கூட நந்தா வந்து இருக்கவில்லை .

சர்ஜரி இருப்பதாக சொல்லி ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தான்.

இவளும் பெரியதாக கண்டு கொள்ளவில்லை .எதையும் கேட்கவும் இல்லை .

இவளுமே ஹாஸ்பிடலில் வேலையில் இருக்க நந்தாவின் முக்கியத்துவம் என்ன என்று தெரியும்.

இவள் வேலை செய்கின்ற ஹாஸ்பிடலிற்கு நந்தா சென்று வருவது போலவே.. இன்னமும் சில ஹாஸ்பிடலுக்கு சென்று வருகிறான் எனும் போது எப்போதுமே பிசியாக இருக்க கூடியவன் என்பது புரிய, அதையே நந்தாவின் தாயாரிடமும் சொன்னாள்.

“ அவர் ரொம்ப பிஸி அத்தை.. ஹாஸ்பிடல்ல எப்பவுமே வேலை இருக்கும் . செக்கப் பண்றது, அப்புறம் சர்ஜரி..

சர்ஜரிக்கு பிறகும் கூட அவங்களோட உடல் நலனை கவனிக்கிறது என்று நிறைய இருக்கும் அத்தை அதனால வரலைன்னா பிரச்சனை இல்லை “பொறுப்பான மருமகளாக பேச ,அவருக்குமே அத்தனை சந்தோஷம் .

“தெரியும் நான் இத தான் எதிர்பார்த்தேன் .ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து கொண்டாலே போதும் .

நிறைய பிரச்சனைகள் வராது..அவனுக்கு வீடு தான் உலகம். இனி அந்த உலகத்துக்குள்ள நீயும் இருப்ப” என்று சொல்ல சரி என்பது போல தலையாட்டினாள்.

இதோ இதோ வரப்போகிறது என நினைப்பதற்கு முன்பாகவே திருமண நாளும் நெருங்கியிருந்தது.

விடிந்தால் திருமணம் என்கின்ற நிலையில் இப்போதுமே இவளுக்கு சற்று சந்தேகமாகத்தான் இருந்தது.

“ இந்த திருமணம் நடக்குமா? நடக்காதா ஒரு வேலை கடைசி நேரத்தில் பிடிக்கவில்லை என்று விலகிவிடுவானா..” இப்படி என்று 100 சந்தேகம் இருந்தது.

நந்தாவின் முகத்தை பார்க்கையில் அவன் இயல்பாக இருந்தான். மகிழ்ச்சியாக இருந்தான்.முகமே பூரித்து இருப்பது போல தோன்ற தனக்குள் சமாதானமும் செய்து கொண்டாள்.

“நாம தேவை இல்லாம பயந்துக்குறோம் .அவன் தெளிவாகத்தான் இருக்கிறான். உண்மையிலேயே இந்த கல்யாணம் நல்ல விதமா நடக்கப்போகுது.

கல்யாணத்துக்கு பிறகு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியல ஆனா இன்றைக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நடக்கும் .”இவள் முடிவு செய்து கொண்டாள் .

கல்யாணத்திற்கு முந்தைய நாளில் வரவேற்பு போல வைத்தனர்.

கல்லூரி நண்பர்கள் மொத்த பேருமே அங்கே வந்திருந்தனர்.

பத்தாததற்கு ஒரு புறமாக நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

உச்ச ஸ்தானியில் மியூசிக் அலறிக் கொண்டிருக்க ..கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் என ஆளுக்கொரு பக்கமாக நடனமாடிக் கொண்டிருந்தனர் .

இங்கே வரவேற்பு நிகழ்ச்சிக்காக நிறுத்தி இருந்த இவர்களை பார்க்கப் போனவர்களுமே தங்களுக்கு தெரிந்த சிறு சிறு ஸ்டெப்களை ஆடியப்படியே கொண்டு வந்த ஃகிப்ட்டை கொடுத்து விட்டு வந்தனர் .

அந்த கூட்டத்தில் ஏற்கனவே கல்லூரியில் படித்த போது.. எந்த மாணவனை தாக்கி அடித்தானோ ,அவர்களது கேங் கூட மொத்தமாக வந்திருந்தனர்.

இவள் ஆச்சரியமாக கவனித்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அன்றைக்கு நடந்த பிரச்சனை ..அதன் பிறகு நடந்தது எல்லாமே இவளுக்கு தெரியுமே..

அவ்வளவு தூரம் சண்டையிட்டவர்கள் திரும்ப மறுபடியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்திருக்க, நடந்ததோ வேறு ..

வந்தவர்கள் பெரிய கேக் ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தனர் .

இவனிடம் கொடுத்து கேக் வெட்ட சொன்னவர்கள் சரண்யாவிற்கு ஊட்டி விட சொல்லி அதே போல் சரண்யாவை இவனுக்கு ஊட்டி விட சொல்லி ,ஏக கலாட்டா செய்து கொண்டிருந்தனர்.

யாரை அடித்தானோ அந்த சீனியர் மாணவன் நந்தாவை இறுக கட்டி அணைத்து..

“ அன்றைக்கு மட்டும் நீ அடிக்கலைன்னா நான் இன்றைக்கு இப்படி இருந்திருக்க மாட்டேனோ என்னவோ ..

ஒரு வழியா வெளியே தெரிஞ்சதனால தான் என் வீட்டுலயும் என்னை கண்டிஷன் பண்ணினாங்க .நானும் அந்த பழக்கத்திலிருந்து முழுசா வெளியே வர முடிஞ்சது..

இன்றைக்கு சமுதாயத்தில் நானும் ஒரு டாக்டர்.. அதுக்கு முழுக்க முழுக்க நீ தான் காரணம் .

என்னைக்குமே உன்னை நான் மறக்க மாட்டேன் “என்று இருக அனைத்தபடி சொன்னவன் சரண்யாவிற்குமே வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அவர்கள் இறங்க, அடுத்ததாக இவளது தோழியர் அனைவருமே மேடை ஏறி இறந்தனர்.

நேரம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது .

நிற்பதற்கு கூட நேரமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்க ,சஞ்சய் அவனுடைய நண்பர்கள் பட்டாளத்தோடு வந்தவன்.

“ என்னடா இந்த ப்ரீ வெட்டிங் சூட் ..போஸ்ட் வெட்டிங் ஷூட்டுன்னு தனித்தனியாக போட்டோ எடுத்து தள்ளிக்கிட்டு இருக்காங்க.

எங்க உனக்கெல்லாம் அந்த மாதிரி எதுவும் செய்யலையா என்ன ?”என்று கேட்க ..

“டேய் இருக்கிற நேரத்துக்கு வேலை சரியா இருக்குது. இன்னும் 48 மணி நேரம் கொடுத்தால் கூட நேரம் எனக்கு பத்தாது போல இருக்கு.

அந்த அளவுக்கு பிசியா சுத்திக்கிட்டு இருக்குறேன். இதுல போட்டோ எடுக்க எல்லாமா நேரத்தை செலவு பண்ணுவாங்க .. அதுக்கெல்லாம் நோ சான்ஸ்” என்று சொல்ல..

“ என்ன சரண்யா நீயாவது கேட்க கூடாதா.. இதெல்லாம் ஸ்வீட் மெமரி இல்லையா .

இந்த மாதிரி எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டா தானே நாளைக்கு உங்களோட வாரிசுகளுக்கு அத காட்டி பெருமையா சொல்லிக்க முடியும் “என்று சஞ்சய் கூற, “டேய்
நீயும் வந்து ஆரம்பிச்சு வைக்காத புரிஞ்சுதா. நேரம் கிடைச்சா கட்டாயமாக அதை எல்லாம் செய்யலாம்.”

“ எப்ப நேரம் கிடைக்கும் அதையும் சொல்லுடா “.

“சஞ்சய் கல்யாணம் முடிஞ்ச நாலு நாள்ல நேரா ஹனிமூனுக்கு புறப்பட போறோம் .

ஹனிமூன் முடிஞ்சு வந்த பிறகுதான் எது வேணும்னாலும் செய்ய முடியும்..மறுபடி ஹாஸ்பிடல்..

இதுவே அதிகம் .. இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது.”.

“ஹப்பா ஒரு வழியா உன் வாயால கேட்டாச்சு. இந்தா” என்று ஒரு டிக்கெட்டை எடுத்து நீட்டினான் .

“என்ன இது “என்று நந்தா கேட்க..” உங்க ஹனிமனுக்கான டிக்கெட் ..மாலத்தீவுக்கு 15 நாளைக்கு.. போய் தங்கி சுத்தி பார்த்துட்டு வருவதற்கான டிக்கெட் . இது நம்ம பிரண்டு கேங்ல இருக்குற எல்லாருமே சேர்ந்து ஏற்பாடு பண்ணினது மறக்காம போயிட்டு வாங்க. ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் “என்று நகர்ந்தான் .

இரவு 12:00 மணி வரையிலுமே அந்த வரவேற்பு நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது.

பிறகு ஒருவராக இருவரையுமே தங்களது அறைக்குள் அனுப்பி வைத்தனர் .

அமைதியாக நகர போக அருகே நின்றிருந்த சரண்யாவிடம்.. “தேங்க்ஸ் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவியோன்னு ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன்.

சந்தேகம் எல்லாம் தீந்துருச்சா இன்னமும் பாக்கி ஏதாவது இருக்கா “என்று கேட்க அவனது முகத்தை பார்த்தவள்..

“ எனக்கு தெரியல ..இந்த நிமிஷம் வரைக்கும் நோ ஐடியா.”

“அப்படின்னா இன்னமும் என் பெயரில் உனக்கு நம்பிக்கை வரல அப்படித்தானே .”

“அப்படி இல்ல ஆனா அதே நேரத்துல நம்பிக்கை வந்ததாகவும் சொல்லிட முடியாது. வாழ்ந்து பார்த்து தெரிஞ்சுக்க போறேன் “என்று சொல்லி லேசாக சிரிக்க அந்த புன்னகை இவனையுமே ஓட்டிக் கொண்டது .

“அதெல்லாம் அமோகமாக வாழ்வோம் .100 வருஷம் ஆயிரம் வருஷம் வரைக்கும்.. குட் நைட் “என்று சொல்ல புன்னகையோடு நகர்ந்தால் சரண்யா.

முகூர்த்தம் காலை 10 மணிக்கு என்று சொல்லி இருக்க நிதானமாக ஏழு மணிக்கு எழுந்து அலங்காரம் செய்ய தயாராக அமர்ந்திருந்தாள் சரண்யா .

கூட்டம் நிறையவே வந்திருந்தது .

ஒவ்வொருவராக சரண்யாவிடம் வந்து வாழ்த்துக்களை கூறி சென்றனர் .

இதில் மாப்பிள்ளை பக்கத்தில் இருந்த உறவினர்களுமே அடிக்கடி பெண்ணை பார்க்க வந்தனர் .

அனைவருக்குமே ஒரு சிறு புன்னகையை பரிசாக கொடுத்துக் கொண்டிருந்தாள் சரண்யா.

10 மணி எனும் போதும் மணவரையில் இவளை அமர வைக்க, தாலி கட்டிய கடைசி நொடி வரையிலும் சிறு பதட்டம் இவளது மனதிற்குள் இருக்கத்தான் செய்தது .

குறித்த நேரத்தில் மகிழ்ச்சியோடும்,நிறைவோடும் இவளுடைய சங்குகழுத்தில் மங்கலநாணை பூட்டினான்.

அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் வரிசையாக நடந்து கொண்டு இருந்தது .

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து உறவினர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி..
வந்து வாழ்த்த வந்தவர்களை இன் முகத்தோடு பேசி அனுப்பி என இருவருமே பிசியாக இருந்தனர் .

எந்த இடத்திலுமே சரண்யாவை விட்டுக் கொடுக்கவில்லை.

சிறிது நேரம் தனிமை கிடைத்தால் கூட மெல்ல கை பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான்.

அதுவே சொல்லியது இவள் மேல் இருக்கும் அக்கறையை.. எல்லாவற்றையும் பிரமிப்போடும் சற்றும் கலக்கத்தோடும் தான் இவள் கவனித்தது.

மதியம் எண்ணெய் தேய்ப்பு முடிந்து முதலில் மணமகள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அங்கிருந்து திரும்ப மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல, அங்கு நந்தாவின் வீட்டிற்கு சென்ற பிறகுதான் இவளுக்கு புரிந்தது அவனின் உயரம் என்ன என்று …

வீட்டின் பிரம்மாண்டம் இவளை பயப்படுத்த ,அருகில் இருந்த நந்தா அவளது கையை பிடித்து ஆறுதல் படுத்தினான்.

“பயப்பட எதுவும் இல்லை இதுதான் நம்மோட வீடு. நீ பார்த்ததில்ல இல்லையா .”என்று கேட்க சற்று பிரமிப்போடு இவனைப் பார்த்தாள் .

“இவ்வளவு பெரிய வீடு.. எல்லாமே அப்பா சம்பாதித்தது.. என்னது இல்ல .

நான் இப்பதான் சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கிறேன். எனக்கும் கூட ஆசை இருக்குது. இதைவிட பிரம்மாண்டமா ஒரு வீடு நமக்கே நமக்காக கட்டணும்னு” என்று சொல்லவும் லேசாக புன்னகைத்தாள்.

ஆராத்தி கொண்டு இவர்களை வரவேற்ற கெளரி நேராக பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.

“விளக்கேத்துமா.. இனி இதுதான் உன்னோட வீடு இங்க உனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை . உனக்கு என்ன வேணுமோ தயங்காமல் என்கிட்ட கேட்கலாம் .
இரு நந்தாவை வர சொல்றேன்” என்று நகர்ந்தார்.

சிறிது நேரத்தில் நந்தா அங்கே வந்திருந்தான் .விளக்கேற்றியவள் தீபாரதனை காட்டிவிட்டு யோசனையோடு இவன் புறமாக திரும்ப ,அருகே வந்தவன் தொட்டு கும்பிட்டு விட்டு நெற்றியில் திருநீறு வைத்தவன்.” வா அம்மா சொன்னாங்க .உனக்கு வீட்டை சுத்தி காட்ட சொல்லி ..

உன் வீட்டில் இருந்து வர இன்னமும் ஒரு மணி நேரம் ஆகுமாம்” என்று சொல்லி அழைத்துச் சென்றான் .

ஏற்கனவே அங்கே உறவுக்காரர்கள் நிறைய பேர் அமர்ந்திருந்தனர் .

அவர்களை இவளுக்கு அறிமுகப்படுத்தியவன் பிறகு இவளை கைப்பிடித்து அழைத்துச் செல்ல, அமைதியாக அவனைப் பின் தொடர்ந்தாள் .

வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று காட்டிக்கொண்டிருந்தான் .பிறகு மாடியில் தங்களுடைய அறையை காட்டுவதற்கு அழைத்து சென்றான்.

மாடியில் பெரிய ஹால் ,பெட்ரூம் இரண்டு ,சிறிய அளவிலான கிச்சன், பிரிட்ஜ் என சகலமும் இருந்தது .

அமைதியாக அவனை பின் தொடர ஒவ்வொன்றையுமே காட்டியபடி அழைத்துச் சென்றான் .

நேராக தன்னுடைய அறைக்கு சென்றவன் கதவை திறந்து இவளை உள்ளே அழைத்துச் செல்ல ,”இது தான் நம்முடைய ரூம்..பிடிச்சிருக்குதா ..

உனக்கு ஏதாவது புதுசா இதை சேஞ்ச் பண்ணனும்னாலும் சொல்லிடு .அது போல செஞ்சு தந்திடறேன் .இனி உன்னோட விருப்பம் தான் என்னோட விருப்பம்…”
இவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு வர ,சட்டென போனை அட்டென்ட் செய்தவன் .”இதோ இதோ கீழ வந்துட்டேன்மா ..சரண்யாவை அழைச்சிட்டு வரணுமா “என்று கேட்க ..தாயார் சொன்ன பதிலைக் கேட்டவன் .இவள் புறமாக திரும்பி “நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறதுனா எடு.. டாக்டர் லைன்ல சிலர் வந்திருக்கிறார்கள் .அவர்களை பார்த்து பேசிட்டு வரேன் .”

“இல்ல நானும் கூட வரேன்..தனியா என்ன செய்யறது..”

“அப்படின்னா சரி வா அப்புறமா இங்க வந்துக்கலாம் “என்று அழைத்துச் செல்ல.. கூடவே நகர்ந்தாள்.

கீழே செல்லவும் வந்திருந்த டாக்டர்கள் இவனை வாழ்த்தி கலகலப்பாக பேச ஆரம்பித்திருந்தனர் .

அமைதியாக அருகே அமர்ந்து இருந்தாள்.

ஆறு மணியை தாண்டிய போது சரண்யாவின் தாய் ,தந்தை இன்னமும் கொஞ்சம் உறவினர்கள் வந்திருந்தனர்.

இவளுக்கு சீர் என்று நிறையவே வாங்கி வந்திருந்தார்.

இதை பார்த்த கௌரி “என்ன சம்பந்தியம்மா நான் தான் உங்ககிட்ட சொன்னேன்ல ..
சீர் செய்யண்ணு எதுவும் பெருசா செலவு செய்ய வேண்டாம் .
எல்லாமே இங்கே இருக்குதுன்னு ..”

“ இருக்கிறது ஒரு பொண்ணு.. அவளுக்கு தான்னு எல்லாமே சேர்த்து வச்சோம். அவளுக்காக வாங்கினது மட்டும்தான் எடுத்துட்டு வந்தோம்.”என்று சொல்ல.. அதுவே ஒரு லாரி நிறைய பொருட்கள் இருந்தது.

இதையெல்லாம் மறுபடியும் அரேஞ்ச் பண்ணனுமா என்பது போல தான் தோன்றியது கௌரிக்கு..

இரவு விருந்து மாப்பிள்ளை வீட்டில் கோலாகலமாக துவங்கியது..

அன்றைக்கே நல்ல நாள் என்று முகூர்த்தம் குறித்திருக்க இரவு இவளை அலங்காரம் செய்ய ஆரம்பித்தனர்.

நிறைய கேலி ,கிண்டல் என ஒருபுறம் பேசிக் கொண்டிருக்க முகம் சிவந்தபடியே அமர்ந்திருந்தாள்.

ஒரு வழியாக 11 மணி எனும் போது இவளை நந்தாவின் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

அரை தூக்கத்தோடு தான் சரண்யா அறைக்குள் சென்றது.

நேற்றிலிருந்து என்ன நடந்தது என யோசித்தால் எதுவுமே புரியவில்லை.

பரபரப்பாக நாள் நகர்ந்திருந்தது . அறைக்குள் தயங்கியபடி நுழைய..இவள் உள்ளே வருவதற்கு முன்பாகவே வாசல் வரைக்கும் வந்து அழைத்துச் சென்றான்.

இவளுடைய மனம் அடித்துக் கொண்டது .

என்ன வர போகிறதோ என்று..

ஏனென்றால் இந்த நிமிடம் வரையிலுமே அவளுக்கு நம்பிக்கை வந்திருக்கவில்லை.

ஏதோ ஒரு நெருடல் மனதுக்குள் சுழன்று கொண்டு தான் இருந்தது.

பொறுப்பாக கதவை அடைத்தவன் இவருக்கு அருகே வந்த அமர்ந்து..” ரொம்ப டயர்டா இருக்குதா “என கேட்டபடி கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அருகே வைக்க..”ஆமாம்”.
“ நேத்து நைட்டும் தூங்குறதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு .
ஒரு நாலு மணி நேரம் நீ தூங்கி இருப்பியா “என்று கேட்க இல்லை என்பது போல தலையாட்ட ..”எனக்கும் தூக்கமே வரல .விடிய விடிய சிவராத்திரி தான். தூக்கம் வந்தா தூங்கு. பதட்டப்பட வேண்டாம் “என்று சொல்ல..”சரி என்பது போல தலையாட்டி சென்றவள் படுத்த சில நொடிகளிலேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று இருந்தாள்.

சற்று நேரம் அமைதியாக அவளை பார்த்தவன் அருகே வந்து லேசாக அவளது நெற்றியில் முத்தமிட்டப்படியே “எப்ப பதட்டம் இல்லாமல் இங்க உன்னால நிம்மதியா தூங்க முடியுதோ ‌ அப்பவே உன் மனசு என்னை ஏத்துக்க ஆரம்பிச்சிருச்சுன்னு தெரியுது சரண்யா.

எனக்கு இது போதும். நிஜமா ஒரு நாள் என் மனச புரிஞ்சுக்குவ.. நாம நல்லபடியா வாழ்வோம்” என்று சொன்னபடியே அருகே படுத்தவன் கண்ணயர்ந்தான்

அடுத்த நாள் காலையில குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டி இருந்தது.

காலை முதலே பரபரப்பாக நேரம் நகர்ந்தது .

குலதெய்வ கோயிலுக்கு சரண்யாவின் தாய், தந்தை இவர்கள் இன்னும் சில உறவுகள் என சென்று பொங்கல் வைத்து பூஜை முடித்து வர அன்றைய நாள் அப்படியே கழிந்து இருந்தது .

இன்றைக்கும் கூட மிகவும் கலைத்து
இருந்தவள் வழக்கம் போல வந்த உடனேயே தூங்கி இருந்தாள்.

அடுத்த நாள் மாலையில் ஹனிமனுக்காக புறப்பட வேண்டி இருக்க.. அடுத்த நாள் காலையிலிருந்து என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என பார்த்து பார்த்து பேக் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

 

NNK-15

Moderator
12

திருமணம் முடிந்த நாளில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறாள் சரண்யா .

நந்தன் இவளிடம் காட்டிய,அன்பை, கவனிப்பை , தன்னுடைய எண்ணம் தவறு என்பதை ஓரளவுக்கு புரிய ஆரம்பித்து இருந்தது.

அதனாலேயே தற்போது நந்தனிடம் இலகுவாக பேச முடிந்தது .

மதியம் இவள் பேக் செய்து கொண்டு இருந்த போது உள்ளே வரவுமே அவனைப் பார்த்தவள் யோசனையோடு.. “நீங்க ஓகே தானே ..உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது செய்யுதா.. முகம் டல்லா தெரியுது “என்று கேட்க நந்தனுக்கு வானத்தில் பறப்பது போல தான் இருந்தது .

வேகமாக அருகே வந்தவன் லேசாக அவளை தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான் .

“லேசா பீவரைசா இருக்குது. இந்த அலைச்சல் சேரல போல இருக்கு .கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு வாரத்தில் இருந்து கொஞ்சம் வேலை அதிகம் .

அது மட்டும் இல்ல.. கல்யாணம் டைம்ல சரியா தூங்கல அடுத்தடுத்து பங்க்ஷன்.. சொந்தக்காரங்க வீடு,விருந்துன்னு சுத்துனது சேரலை போல இருக்கு.

மாத்திரை போட்டு இருக்கிறேன் .தேங்க்ஸ் சரண்யா நீ என்னை கவனிக்க ஆரம்பிச்சுட்ட ..உனக்கு புரியுதா என்னோட சின்ன மாற்றம் கூட உனக்கு தெரியுது .

அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது “என்று சொல்ல அணைத்து இருந்தவனின் மூச்சுக்காற்று கூட வெப்பமாக இவளது மேனியில் மோதியது.

கையை எடுத்து நெற்றியில் வைத்து பார்க்க.. லேசாக சூடு தெரிய ..”காய்ச்சல் இருக்குது நாம அவ்வளவு தூரம் போக முடியுமா .ஏதாவது பிரச்சனைனா இந்த டிரிப்பை கொஞ்சம் தள்ளி கூட போட்டுக்கலாம்.இப்ப போகணும்னு ஒன்னும் கட்டாயம் இல்லை “என்று சொல்ல ..

“அதெல்லாம் ஒன்னும் இல்ல லேசான காய்ச்சல் தான் .டயர்டு.. வேற ஒன்னும் இல்ல. நம்ம கிளம்பிக்கலாம் .அங்க போய் பார்த்துக்கலாம்” என்று சொன்னவன் புன்னகையோடு வெளியேறினான்.

வீட்டில் உள்ள அனைவரிடமும் விடைபெற்று ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஏர்போர்ட்டுக்கு சென்று இருந்தனர் .

நந்தாவின் முகத்தில் மட்டுமல்ல சரண்யாவின் முகத்திலுமே அத்தனை மகிழ்ச்சி .

ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் லேசான புன்னகையோடு அமர்ந்து கொண்டிருந்தனர் .

நிறைய பேச வேண்டும் என ஆசை இருந்தது .ஆனால் என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியவில்லை .

ஏதோ ஒரு மந்தகாசமான மனநிலையில் இருவரும் இருந்தனர் .

சரியான நேரத்திற்கு விமானத்திலிருந்து இவர்கள் அங்கே சென்று இறங்க, ஏற்கனவே இவர்களுக்காக புக் செய்து இருந்த ரெசார்டுக்கு சென்றனர்.

ரெசார்ட்டின் பிரம்மாண்டமே பார்க்க அவ்வளவு அழகாக நேர்த்தியாக இருந்தது.

இவர்களுடைய ரூம்பை வந்து பார்க்க ..அத்தனை அழகு..

புதிதாக திருமணம் முடித்துவிட்டு வந்தவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கி இருந்தனர் .

அறையை சுற்றிப் பார்த்தவர்களுக்கு வெட்கம் ஒரு புறம் போட்டி போட அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“என்ன சரண்யா ரொம்ப டயர்டா இருக்குதா ..முதல்ல சாப்பிட்டுட்டு வந்துடலாம்.

கொஞ்ச நேரம் முன்னாடி எதையாவது வேடிக்கை பார்த்துட்டு ஒரு மணி நேரம் கழிச்சு இங்க வந்தா போதும் தானே “என்று கேட்க ..அதற்கும் கூட இவளிடம் பதில் இல்லை. மெல்ல தலையாட்டினாள்..

“ ஓகே டிரஸ் சேஞ்ச் பண்றதுன்னா பண்ணிக்கோ கிளம்பலாம் “என்று இவனுமே தயாராகி வர ,மனைவியை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.

காஃபி இன்னும் கொஞ்சம் ஸ்னாக்ஸ் என சாப்பிட்டு விட்டு இவளது கரம் பற்றி சற்று தூரம் வரைக்கும் ரிசார்டிற்கு பின்புறத்தில் இருந்த கடற்கரையில் மெல்ல நடை பயில.. ஆர்வமாக சரண்யா கவனித்துக் கொண்டு வந்தாள்.

நந்தாவை பார்த்து..” ஏற்கனவே நீங்க இங்க வந்திருக்கிறீர்களா” என்று கேள்வி கேட்க ..”ஆமா முன்னாடி படிக்கும் போது ஒருமுறை சஞ்சய் கூட வந்திருக்கிறேன் .

இந்த இடம் ரொம்ப ரொம்ப அழகு .இந்த மாலத்தீவே அழகுதான் . ஒவ்வொரு இடமும் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும் .

அதுவும் ஹனிமூன் கப்பிள்ஸ்க்கு சுற்றி பார்க்க இங்கு நிறையவே இருக்குது.

அப்ப தனியா தான் வந்தேன் .ஆனா அப்பவே நான் சஞ்சய் கிட்ட சொன்னேன் .கல்யாணத்துக்கு பிறகு இங்க தான் ஹனிமனுக்கு வரணும்னு அவன் ஞாபகம் வச்சுக்கிட்டு டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்திருக்கிறான் “என்று சொல்லி சிரிக்க ..இவளுமே புன்னகையோடு அவனை பின்தொடர்ந்தாள்.

அறைக்குள் வரவும் “இன்றைக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் நாளையில இருந்து இங்க இருக்கிற ஒவ்வொரு இடத்தையும் சுத்தி பார்க்கிறோம் .ஓகேவா “என்று சொல்ல.. அதற்குமே இவள் புன்னகைத்து வைக்க,

“என்னடா இவன் ஹனிமுனுக்கு பொண்டாட்டியை கூப்பிட்டுட்டு வந்துட்டு சுத்தி காட்டுறேன்னு சொல்றானேன்னு பார்த்து சிரிக்கிறியா” என்று கேட்க,

“ அதெல்லாம் இல்லையே” என்று வேகமாக பதில் அளித்தாள்.

“ பயப்படாத ரெண்டு வேலையுமே கரெக்டா நடக்கும்.. ஹனிமூனும் நடக்கும் கூடவே இந்த சுத்தி பார்க்கற வேலையும் நடக்கும் .பிறகு ஒரு நாள் பீல் பண்ண கூடாதுல்ல..

ஹனிமூனுக்கு கூப்பிட்டுட்டு போயி ரூம்பை மட்டும் தான் சுற்றி காட்டினார் .வேற எந்த இடத்துக்குமே அழைச்சிட்டு போகலைன்னு யார்கிட்டயும் சொல்லிட கூடாதுல்ல .அதனால தான் “என்று சொன்னபடியே அருகே அவள் தோளின் மீது கை போட்டபடி நெருங்கி வர ,அவளையும் அறியாமல் உள்ளுக்குள் மின்சாரம் பாயத்தான் செய்தது.

அது மட்டுமல்ல அன்றைக்கு நிறையவே இரண்டு பேரும் பேசினார்கள் .

நந்தாவை பற்றி பேச ஆரம்பித்து அப்படியே இவளை பற்றியும் சில கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டான்.

இவன் கேட்க கேட்க சிரித்தபடியே பதில் கூற..”என்னடா இவன் பாட்டுக்கு இன்டர்வியூக்கு வந்த பொண்ணு கிட்ட விசாரிக்கிற மாதிரி விசாரிக்கறானேன்னு பார்க்காத ..இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தான் உனக்கு லீவ்.. நாளையிலிருந்து உன்னோட நேரம் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான்.” என்று சொல்ல, லேசாக முகம் சிவக்க ஆரம்பிக்க அதை மறைத்தபடி “என்ன நந்தா ரொம்ப வாய் பேசுற மாதிரி இருக்குது “என்று கேட்க ..”இதைவிட நிறையவே பேசுவேன்..”

“ டாக்டர் சார் இந்த வேலை இங்கே ஆகாது.. இப்படி எல்லாம் பேசினா.”

“பேசினா என்ன செய்வ .. சொல்லேன் கேட்க்கறேன்.”..

“அடுத்த முறை இது மாதிரி பேசாத மாதிரி வாயை பிடிச்சு கடிச்சு வச்சுருவேன்” என்று சொல்லி சிரிக்க, அவளோடு இவனுமே இணைந்து சிரித்தான்.

“என்னையவே வெட்கப்பட வச்சிடுவ போல இருக்குது. சான்சே இல்ல சரண்யா.பேக் டூ ஃபார்முக்கு வந்துட்ட போல இருக்கு .அப்போ மாமா தான் லேட்டா” என்று சொன்னபடியே சட்டையை மடக்கி விட்டபடி அவளுக்கு அருகே நெருங்கி வர ,ஆர்வம் மட்டும் இல்ல பதட்டமும் அவளிடத்தில் நிறையவே இருந்தது.

நிறைய பேசி நிறைய சிரிப்பு பேசிக்கொண்டு இருக்கும்போதே தன்னை அறியாமல் கண்ணை மூடி தூக்கி சரிந்து இருந்தால் சரண்யா.

இவனுக்குள் அத்தனை புன்னகை ..படுக்கையில் படுக்க வைத்து ,தோளில் சாய வைத்து கண் மூட அன்றைக்கு இருவருக்கும் அப்படி ஒரு நிம்மதியான உறக்கம் .

கணவன் மனைவியாக உறவு துவங்கா விட்டாலுமே இரவருக்கும் நடுவே அந்த நெருக்கம் வந்திருந்தது.

அடுத்த நாள் காலையில் கண்விழித்த போது அணைத்தபடி தான் தூங்கிக் கொண்டிருந்தான் நந்தா.

கண்விழித்தவள் அவனது முகத்தையே பார்க்க.. குழந்தைத்தனமான முகம் இப்போது நிறையவே பிடித்தது. இவளை வசிகரித்தது .

மெல்ல அருகே நெருங்கியவள் அவனது கன்னத்தை கையால் தொட்டு பார்க்க ,அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பது புரிய ,அவனுக்கு அருகே வந்தவள் அவனது கன்னத்தில் லேசாக முத்தம் வைக்க ,முத்தம் வைத்த அந்த நொடியே இவளை இருக அணைத்து இருந்தான்.

கண்களை மெல்ல திறந்து பார்த்து கண்ணடித்து சிரிக்க இவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது .

“போங்க நந்தா இது சீட்டிங்.. தூங்குற மாதிரி காலையில ஆக்டிங் பண்றீங்களா “என்று அவனின் மார்பில் இரண்டு அடியை வைக்க ,அவளது கையை இறுக பற்றியவன்.. “காலையில் எந்திரிக்கும்போது இப்படி ஒரு ட்ரீட்ட நானுமே எதிர்பார்க்கலையே ..தேங்க்ஸ் சரண்யா .இந்த நாள் ரொம்ப அழகா இருக்குது .”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது போனில் அழைப்பு வந்தது .

“அம்மா “என்று சொல்ல..” நானும் பேசணும் நந்தா” என்று குரல் கொடுத்தாள்.

“ என்னம்மா நேத்து போன் பண்ணவே இல்ல .”

“பின்ன என்னடா.. ஹனிமூனுக்கு போய் இருக்கற..தொந்தரவு பண்ணக்கூடாது என்று நினைத்தேன் .ஆனா இன்னைக்கு என்னவோ நிறைய மிஸ் பண்ற மாதிரி தோணுச்சு. காலைல உன் கிட்ட பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்சு.”

“இதுக்குதான் இன்னோரு குழந்தையை பெத்துக்கணும்னு சொன்னது. நீங்க தான் கேட்கவே இல்லை..நான் எத்தனை தடவை கேட்டேன். எனக்கு தம்பியோ ,தங்கச்சியோ வேணும்னு ..”

“ரொம்ப வாய் பேசாதடா.. நீ வேணும்னா ஒன்னு செய். சரியா பத்தாவது மாசத்துல குழந்தையை பெற்றுக் கொடு..நான் பார்த்து வளர்த்துக்கிறேன் சரியா. அதற்கு அப்புறம் உன்னை தொந்தரவு பண்ணவே மாட்டேன் .நான் என் பேரன் கூடவோ பேத்தி கூடவோ நேரத்தை செலவு செய்வேன். சரி எங்கேயாவது வெளியே அழைச்சிட்டு போறியா இல்ல ரூமபை மட்டும் தான் சுத்தி காட்டிட்டு இருக்கியா..”

“ என்னமா போட்டு வாங்குறியா இந்த வேலையெல்லாம் இங்க ஆகாது. நான் எல்லா இடத்தையும் சுத்தி காட்டுவேன். எந்த இடத்தையும் மிஸ் பண்ண மாட்டேன் .உங்க மருமக கிட்ட பேசுறீங்களா..”

“கொடுடா நியாயமா அவளுக்கு தான் போன் பண்ணி இருக்கணும்..போனா போகட்டும் மகனா போயிட்டேன்னு தான் உனக்கு கூப்பிட்டேன்..”

“சரி சரி நம்பிட்டேன் “என்று சரண்யாவிடம் போனை நீட்ட ..”ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க “என்று கேட்க ..”நான் ரொம்ப நல்லா இருக்கிறேன். நீ எப்படி இருக்கிற .. எங்கேயாவது அழைச்சிட்டு போறானா இல்லை என்கிட்ட பொய் சொல்றானா”.

“ அதெல்லாம் இல்லத்த.. எல்லா இடத்துக்கும் அழைச்சிட்டு போறாங்க .”

“சரிடா உடம்பை பாத்துக்கோ.. சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க .சுத்தி பாக்குறேன்னு ரெண்டு பேரும் சாப்பிடாம சுத்திக்கிட்டு இருக்க வேண்டாம் .

இந்த நந்தா பையனை நம்ப முடியாது. எதையாவது யோசிச்சு சுத்த ஆரம்பிச்சானா அவனுக்கு உலகம் மறந்திடும்..சரியா. சாப்பிடணும் “.

“சரி அத்தை “.

“எனக்கு அது போதும் .சரி இனி போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் . நாளைக்கு தான் கூப்பிடுவேன். அவன் கிட்டயும் சொல்லிடுமா..”

“பயப்படாதீங்கமா.. எந்தெந்த இடத்துக்கு போறேனோ அந்தந்த இடத்தை பத்தின அப்டேட் அப்பப்ப அனுப்பி வைக்கிறேன். ஸ்டேட்டஸ் வைக்கிறேன் பார்த்துக்கோங்கள்..”

“போடா வாயாடி” என்று ஃபோனை வைக்க.. காலையிலேயே அத்தனை நிறைவாக இருந்தது.

இருவருமே காலை ஒன்பது மணி எனும் போது சுற்றி பார்க்க புறப்பட்டு இருந்தனர்.

அன்றைக்கு எங்கே போகிறோம் என்று கேட்க ..குறிப்பிட ஒரு தீவின் பெயரை சொன்னவன்” அந்த தீவில் எல்லா இடமும் செமையா இருக்கும். நிறைய சாப்பிட கிடைக்கும் .

அப்புறம் நிறைய பொருட்கள் வாங்கணும்னாலும் வாங்கிக்கலாம் .ரொம்ப அழகா இருக்கும். இன்றைக்கு நம்ம அங்க போகலாம் .

நாளைக்கு இன்னொரு இடத்துக்கு அழைச்சிட்டு போறேன் .

அங்க மசாஜ் ,ஸ்பா மாதிரி நிறைய இருக்கும் .அங்கேயும் போகலாம்.”

“ வேணாம் நந்தா..” என்று வேகமாக சொல்ல ,”ஹேய் நான் உன்கூட தான் இருக்கிறேன். நீ ஏன் பயந்துக்கிற ..உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் “என்று சொன்னபடியே அவளை தன்னோடு அருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.

காலையிலேயே அழைத்து சென்றவன் ஒவ்வொரு இடமாக சுற்றிவிட்டு விரும்பிய உணவுகளை உண்டு மாலை ஆறு மணிக்கு வருவது போல பார்த்துக் கொண்டான்.

இன்றைக்கு நந்தனுக்கு மட்டுமல்ல சரண்யாவிற்குமே ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது.

அறைக்கு வந்து சிறு குளியல் போட்டு சற்று நேரம் பின்புறத்தில் இருந்த பீச்சில் நடந்து விட்டு இரவு எட்டு மணிக்கு உள்ளே வந்தனர்

இரவு உணவு உண்டு விட்டு படுக்கையில் அமரும் போது தான் நந்தனை கவனித்தாள்.

முகம் மிகவும் சோர்வாக தெரிய “என்ன நந்து முகம் ரொம்ப சோர்வா தெரியுது” என்று கேட்க,

“ ஆமா கொஞ்சம் டயர்டா தெரியுது “என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனையும் அறியாமல் வாந்தி வருவது போல இருக்க வேகமாக பாத்ரூமுக்குள் ஓடினான்..

பாத்ரூம் கதவைப் பூட்டு இருக்க வெளியே நின்றவளுக்கு பதற்றம் தொற்றி கொண்டது.

“ நந்தா என்ன செய்யுது .என்ன பண்றீங்க “என சத்தம் கொடுக்க,” மதியம் சாப்பிட்டது ஏதோ சரியில்ல போல இருக்குது சரண்யா .உடம்புக்கு ஒத்துக்கல. வாமிட் அதிகமா இருக்குது “என்று சொன்னவன் பிறகும் கூட அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தான்.

முகம் எல்லாம் சேர்த்து கண்கள் கலங்கி அவனைப் பார்க்கவே இவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது .

“ரொம்ப முடியலையா பக்கத்துல எதாவது ஹாஸ்பிடலுக்கு போலாமா ‘என்று கேட்டபடியே அவனை தொட்டுப் பார்க்க.. அப்போதுதான் அந்த மாற்றம் இவளுக்கு தெரிந்தது .

உடல் அனலாக கொதிக்க ஆரம்பித்திருந்தது .

“என்ன ஆச்சு.. ஃபீவர் அடிக்குது” என்று பதட்டமாக கேட்க ,”ஆமா பூட் பாய்சன் ஆகி இருக்கும் போல இருக்கு .அதனால வந்த பீவர் என்று நினைக்கிறேன். இரு பக்கத்தில் ஏதாவது ஹாஸ்பிடல் இருந்தா போய் பாத்துட்டு வந்திடறேன் “என்று சொல்ல , இவளுக்குமே பதட்டம் தொற்றி கொண்டது.

“வேண்டாம் தனியா எங்கேயும் போக வேண்டாம். நான் உங்க கூட வரேன் .”என்று சொல்ல..

“ இல்ல பரவால்ல. நான் ஏற்கனவே இங்க வந்திருக்கிறேன் சரண்யா .நீ எதற்காக இந்நேரத்துக்கு வெளியே சுத்தணும்.

ரூம்ல பத்திரமா இரு .சாவி தான் ரெண்டு கொடுத்து இருக்காங்கல்ல ..என்கிட்ட ஒன்னு இருக்குதே .நான் கரெக்டா உள்ளே வந்துடுவேன்” என்று சொன்னபடி இவளை அங்கேயே விட்டுவிட்டு.. “பயப்படாத ரொம்ப நேரம் ஆகாது நேரமாகற மாதிரி தோணுச்சுன்னா நான் திரும்ப உடனே வந்துடுறேன்” என்று கூறினான்.

சற்று பதட்டமாக தான் இவளுக்கு இருந்தது..தன்னை அறியாமல் போனில் அழைக்க “ இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் போல இருக்கு .இங்க நிறைய கூட்டமா இருக்குது .”

“உங்களுக்கு எப்படி இருக்குது காய்ச்சல் குறைஞ்சது மாதிரி இருக்குதா இல்ல அப்படியே தான் இருக்குதா..”

“ இன்னமும் நாலு பேஷண்ட் இருக்காங்க .பார்த்துட்டு அடுத்தது நான் தான் போகணும் .சீக்கிரமா வந்துடுவேன் … இப்பவே 10 மணியை தாண்டிடுச்சு .தூக்கம் வந்தா தூங்கு..”

ம்..என்றாள்.

பதினோரு மணிக்கு நந்தா திரும்பி வந்திருந்தான் .

நந்தா வரவுமே பதட்டமாக அவனுக்கு அருகே சென்றாள்.

அவளுடைய பதட்டம் இவனை மிகவும் பாதித்தது.

“ ஐ அம் சாரி. உன்னை ரொம்ப பதட்டப்பட வைக்கிறனா “என்று சொல்ல ,”அதெல்லாம் ஒன்னும் இல்ல .உங்களுக்கு ஒன்னும் இல்ல தானே.. என்ன சொன்னாங்க “.

“இப்போதைக்கு மாத்திரை மருந்து கொடுத்து இருக்காங்க. இப்போ ஓகே தான் ..

சாரி சரண்யா இன்றைக்கு ரக்ஷமறக்க முடியாத நாளா மாத்தணும்னு ஆசைப்பட்டேன் .உண்மையிலேயே அப்படித்தான் மாறிடுச்சு போல இருக்கு .பீவரோட வந்திருக்கு ஐ அம் சாரி.. “என்று சொல்லுவன் அவளை அருகே இழுத்து நெற்றியில் முத்தம் வைக்க ,உதட்டில் வெப்பம் அவளுக்குள் ஊடுருவியது.

தன்னை அறியாமல் இரண்டு கைகளையும் கொண்டு அவனது கன்னத்தில் வைத்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“பயப்படற மாதிரி எதுவும் இருக்காது படு “என்று சொன்னவன் அருகே படுத்துக்கொள்ள ..நீண்ட நேரம் வரையிலுமே புரண்டு கொண்டிருந்தவள் மெல்ல கண்ணயற இவனுமே மெல்ல கண் மூடினான்.

இரவு லேட் ஆக தூங்கியதாலோ என்னவோ காலையில் விழித்து பார்த்த போது நந்தா அருகே இல்லை .

நேரம் பார்த்தபடி போனில் நந்தாவிற்கு போனில் அழைக்க ..ரிங் சென்று கொண்டிருந்ததே தவிர அட்டென்ட் செய்யவில்லை.

மீண்டும் மீண்டும் முயற்சி
செய்து கொண்டிருக்க.. ஒரு கட்டத்தில் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

ஒன்றும் புரியாமல் அருகே எங்கேயாவது சென்றிருப்பான்..வந்து விடுவான் என்று நினைத்தபடி அமர்ந்திருந்தாள்.
 

NNK-15

Moderator
13


சரண்யா அதிர்ச்சியாக அந்த இடத்தில் அமர்ந்து இருந்தாள்.


இன்னும் நம்ப முடியவில்லை. நந்தா இவளை விட்டுவிட்டு சென்றிருந்தான்.


முழுவதுமாக ..தன்னந்தனியாக வந்த இடத்தில் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் விட்டு விட்டு சென்றிருந்தான்.


கடைசியாக இவள் நினைத்தது தான் நடந்திருந்தது .


தன்னை சரியாக பழி வாங்கி விட்டான் என்று நினைத்தவளுக்கு அவளையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது .


திருமணம் முடிந்த நாளிலிருந்து இந்த ஒரு வாரம் வரையிலுமே அவனை கவனித்துக் கொண்டிருக்கிறாள் .


எந்த இடத்திலுமே இவளை விட்டு விடவில்லை .அத்தனை கவனமாக, பாதுகாப்பாக உனக்கு நான் இருக்கிறேன் என்பது போல் நடந்து கொண்டவன் .


சற்றும் யோசிக்காமல் இப்படி ஒரு காரியம் செய்தது இவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


இவளுக்கு புரியவில்லை.. காலையில் எழுந்து தேடியவள் வந்துவிடுவான் என்கின்ற நம்பிக்கையில் 11 மணி வரை நேரத்தை கடத்தினாள்.


அதன் பிறகும் வரவில்லை எனவும் வேகமாக மறுபடியும் அவனது ஃபோனிற்கு அழைத்துப் பேச இப்போதும் சுவிட்ச் ஆஃப் என்று வந்து கொண்டிருந்தது .


எதுவுமே புரியாமல் இருந்த அந்த நேரத்தில் தான் ரூம் சர்வீஸுக்காக வாசலில் கதவை தட்டும் சத்தம் கேட்க ,அவன் தான் வந்து விட்டான் என்கின்ற ஆர்வத்தில் வேகமாக சென்று கதவை திறந்தாள் .


வெளியே நின்றது அந்த ரெசார்ட்டின் ஊழியர்.


“ மேம் உங்ககிட்ட சார் ஒரு தகவல் சொல்ல சொன்னாங்க. நீங்க இன்னமும் 10 நாளைக்கு இந்த ரெசார்ட் ரூம் புக் ஆகி இருக்கு .


பத்து நாள் வரைக்கும் நீங்க விருப்பப்பட்டால் தாராளமா தங்கி இங்கு இருக்கிற இடத்தை எல்லாம் சுத்தி பார்த்துக்கலாம் .


சார் இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டு போனாங்க “என்று சொல்ல முதலில் ஒன்றுமே புரியவில்லை .


“என்ன சொல்றீங்க.. நீங்க சொல்ற எதுவுமே எனக்கு புரியல “என்று கேட்க..


“ இப்போ சாப்பிட உங்களுக்கு என்ன எடுத்துட்டு வரணும்” என்று அடுத்த கேள்வியை கேட்டார் .


இன்னமுமே நடந்ததை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியாமல் “ நந்தா என்ன சொல்லிட்டு போனாரு..

அவர்தான் சொன்னாரா” என்று வேகமாக கேட்க ..


“மேம் எனக்கு அவரை நல்லா தெரியும் .ஏற்கனவே முன்னமே பார்த்திருக்கிறோம் .


அது மட்டுமல்ல தனியா என்னை சந்தித்து இதோ பாருங்க “என்று ஒரு லெட்டரை எடுத்து இவள் புறமாக நீட்டி” இத உங்ககிட்ட கொடுக்க சொல்லி இருக்கிறார் .இதை படிச்சு பார்த்துட்டு முடிவு பண்ணுங்க. இப்ப நான் சாப்பிட என்ன எடுத்துட்டு வரணும் .அதை சொல்லுங்க . மெனு சொன்னீங்கன்னா நான் அனுப்பி வச்சிடுவேன் “என்று சொல்ல ..


“இப்ப எனக்கு பசிக்கல .எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்” என்று சொன்னவள் வேகமாக லெட்டரை வாங்கி பிரித்தாள். ரூம் சர்வீஸ் செய்பவர் சற்று நேரம் நின்று பார்த்து விட்டு வேகமாக நகர்ந்து செல்ல.. வேகமாக கதவை அடைத்தவள் பதட்டத்தோடு லெட்டரை பிரித்தாள்.


இப்போதும் அவளால் நம்ப முடியவில்லை .


தன்னிடம் விளையாடுகிறான் என்று நினைத்தால் ..இங்கே அருகில் எங்கேயோ ஒளிந்து கொண்டு தன்னை பயப்படுத்தி பார்க்கிறான் என நினைத்தபடியே லெட்டரை பிரிக்க.. “என்ன பார்க்கிற நீ நெனச்சது தான் கரெக்ட் .


நான் உன்னை பழிவாங்கறதுக்காக தான் இந்த கல்யாணம் பண்ணினேன்.


கல்யாணத்துக்கு முன்னாடி முதல் நாள் எங்கேயாவது கிளம்பி போயிடனும்னு தான் யோசிச்சேன் .ஆனா அப்படி செஞ்சா அது பழி வாங்குன கணக்கில் சேராது.


கல்யாணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை ஓடிட்டான் அப்படி என்கிற பெயர்தான் வரும் .


அது சரி வராதுன்னு தோணுச்சு அடுத்ததா கல்யாண மேடையில் வைத்து இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்னா..


அப்ப கூட உனக்கு அந்த இடத்துல வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ண சான்ஸ் இருக்கு .அதையும் தடுக்கணும்னு யோசிச்சேன் .


அப்புறம் தான் இந்த ஐடியா கரெக்டா இருக்குன்னு தோணுச்சு .


மணமேடை வரைக்கும் உன்னை அழைச்சிட்டு வந்து கல்யாணம் பண்ணி இதோ ஹனிமூனுக்கு அழைச்சிட்டு வந்தாச்சு .


இப்ப இந்த இடத்துல நான் காணாமல் போனேன்னு வச்சுக்கோயேன்.. உன்னை விட்டுட்டு போனேன்னு வச்சுக்கோயேன்.


இனி யாரு உன்னை திரும்பவும் கல்யாணம் பண்ணிக்குவாங்க .நீ கடைசி வரைக்கும் தனியா தான் இருக்கணும் .


நடந்தத தினம் தினம் நினைச்சு நீ கதறி அழணும் .அதுதான் என்னோட ஆசை .


அதுக்காக தான் இப்படி ஒரு காரியத்தை பண்ணினேன். இனி எப்பவுமே உன்னோட லைஃப்ல நான் வரமாட்டேன்.


முன்னாடி சொன்னதுதான் இன்னும் பத்து நாள் டைம் இருக்கு .


நீ தாராளமா இந்த தீவை முழுக்க சந்தோஷமா சுற்றிப் பார்க்கலாம் .அப்புறமா உன்னோட பாஸ்போர்ட் விசா எல்லாமே எங்க எடுத்து வச்சியோ அதே இடத்துல தான் இருக்கு .எடுத்துட்டு போய்கோ..


நான் என்னோட திங்க்ஸ் எல்லாத்தையுமே எடுத்துட்டு கிளம்பிட்டேன் .இனி நான் உன்னை எப்பவுமே பார்க்க மாட்டேன் .குட் பாய்’ மொட்டையாக முடித்து இருக்க.. அது இவனின் கையெழுத்து என்பது தெளிவாக புரிந்தது.


அதிர்ச்சியோடு அப்படியே அமர்ந்து இருந்தாள். இன்னமும் நம்ப முடியவில்லை .


நந்தா தனக்கு துரோகம் செய்து விட்டான் என்பதை..


திருமணத்தின் கடைசி நிமிடம் வரையிலுமே அவன் மேல் நம்பிக்கை வரவில்லை தான்..


நிறைய சந்தேகத்தோடு தான் அவனை பார்த்தது .ஆனால் இன்றைக்கு நடந்தது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை .


இப்போது என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.


வேகமாக சென்று இவள் வைத்திருந்த பாஸ்போர்ட் வைத்திருந்த அந்த இடத்தை பார்க்க இவளுடையது மட்டும் தனியாக இருந்தது .


இன்னும் பத்து நாள் கழித்து செல்வதற்கான டிக்கெட் இருந்தது .


ஒன்றுமே புரியாமல் வேகமாக நந்தாவின் உடைமைகள் இருக்கும் டிராவை ஓபன் செய்து பார்க்க ..எதுவுமே இல்லை .அவனுடைய பெட்டி முதற்கொண்டு..


உண்மையிலேயே அவளை அம்போயென விட்டு விட்டு சென்றிருந்தான்.


தெரியாத ஊரில் தெரியாத இடத்தில் தனியாக விட்டு விட்டு செல்கிறான் என்றால் எப்படிப்பட்ட அரக்கனாக இருப்பான் என ஒரு நிமிடம் மனம் யோசிக்க இன்னொரு மனமோ அதை முழுவதுமாக மறுத்தது.


“அப்படியெல்லாம் இருக்காது இவனுக்கு ஏதோ பிரச்சனை.. ஏனோ வேணும்னே தன் மேல் பழி சொல்லி விலகிப் போக நினைக்கிறான்.


நான் உன்னை விடமாட்டேன் நந்தா.. எனக்கு நியாயம் கிடைச்சாகணும் .


நீ கையில வச்சு விளையாடுற பொம்மை நான் இல்ல .நீ எங்க இருந்தாலும் சரி இன்னமும் 24 நாலு மணி நேரம் முடியறதுக்குள்ள உன் முன்னாடி நிப்பேன்.


எனக்கு நீ பதில் சொல்லி ஆகணும். உன் சட்டையை பிடித்து கேக்காம விட போறது இல்ல “என்று முடிவு செய்தவள் வேகமாக அடுத்த பிளைட்டிற்கான டிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தான்.


அழுகை ,பயம் என எல்லாமே போட்டி போட தைரியமாகவே அங்கிருந்து புறப்பட்டாள் சரண்யா .


ரூம்பை காலி செய்தவள் மொத்த உடைமைகளையும் கால் டாக்ஸியில் ஏற்றியபடி நேராக ஏர்போர்ட்டுக்குள் சரணடைந்திருந்தாள்.


அடுத்து இன்னும் சில மணி நேரங்களில் புறப்பட தயாராக இருந்த ஃபிளைட்டிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.


யாரை கேட்டால் இவனைப் பற்றிய முழு தகவல் கிடைக்கும் என யோசிக்க எதுவுமே இவளின் மனதிற்கு தோன்றவில்லை .


இப்போது நேராக ஊருக்கு சென்ற பிறகு எங்கே செல்வது.. தாயாரின் வீட்டுக்கா ..அல்லது மாமியாரின் வீட்டிற்கா..


யாரிடம் சென்று நியாயம் கேட்பது .ஒன்றுமே புரியாமல் நெற்றியில் கை வைத்த படி அமர்ந்திருந்தாள்.


காலை முதலே இன்னமும் சாப்பிட்டு இருக்க வில்லை.


சாப்பிடும் எண்ணம் துளி கூட அவளிடத்தில் இல்லை .


ஏதா இருந்தாலும் அவனைப் பார்த்த பிறகு தான் என முடிவு செய்திருந்தாள்.


அவனின் மேல் அத்தனை கோபம் வந்தது.


‘பார்க்கும் போது உனக்கு இருக்குது .நிச்சயமா உன்னை சும்மா விடமாட்டேன்.’ மனதிற்குள் திரும்பத் திரும்ப உருப்பட்டுக் கொண்டாள்.


ப்ளைட்டில் ஏறியவள் நேராக வந்து இறங்கியவள் ஏர்போட் லாபியில் அமர்ந்திருந்தாள்.


அத்தனை குழப்பம் ..’இப்போது என்ன செய்வது’ என்று யோசிக்க..” அப்போதுதான் சஞ்சய்யின் ஞாபகம் வந்தது வேகமாக .


அவனின் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள்.திருமணத்திற்கு வந்தவன் இவளுக்கு தன்னுடைய நம்பர் இன்னமும் சில நண்பர்களின் நம்பரை கொடுத்து விட்டு சென்றிருந்தான்.


“நாங்க எல்லோருமே எப்பவுமே காண்டாக்ட்ல இருக்குறவங்க தான். எப்போ யாரை கூப்பிட்டாலுமே உடனே லைனுக்கு வருவோம் .


ஏதாவது பிரச்சனை என்றாலும் சரி இல்ல ஏதாவது எமர்ஜென்சியா உதவி வேணும்னாலும் சரி.எப்ப வேணும்னாலும் அழைத்து ஹெல்த் கேக்கலாம்” என்று தந்திருக்க.. நிறைய தயக்கத்திற்கு பிறகு சஞ்சய் நம்பருக்கு அழைத்தாள்.


முதலில் ரீங்கில் அட்டென்ட் செய்தவன்” ஹலோ சரண்யா ஹவ் ஆர் யூ? எப்படி இருக்கிறீங்க. என்ன ரெண்டு பேரும் காலைல என்னை கலாய்க்க வந்துட்டீங்களா” என்று மகிழ்ச்சியோடு குரல் கொடுக்க.. இவளுக்கு பேசுவதற்கு குரலே எழவில்லை.


“ஹலோ சரண்யா தானே ..என்ன ஆச்சு ஏதாவது பேசுங்க. நந்தா பக்கத்துல இருக்கிறயா.. என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா “என்று மறுபடியும் கேட்க..


“ உங்க பிரண்ட காணோம். இப்ப அவர் எங்க இருப்பார்” என்று கேட்க முதலில் ஒன்றுமே புரியவில்லை..


“என்ன சொல்ற சரண்யா.. காணோம்னா என்ன அர்த்தம். உன் கூட தானே வந்தான்.


ரெண்டு பேரும் தானே சேர்ந்து இருப்பீங்க .இன்னும் பத்து நாளைக்கு அங்க ரூம் புக் பண்ணி இருக்கிறோமே…


அதுக்குள்ள காணோம்னா என்ன அர்த்தம் “.


“அதுதான் எனக்கும் தெரியல ஹோட்டல்ல தன்னந்தனியா விட்டுட்டு அவன் பாட்டுக்கு அவனோட பெட்டி படுக்கையை கட்டிட்டு எங்கேயோ போயிட்டான்.


இந்த நிமிஷம் வரைக்கும் நோ ஐடியா .எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல .யாரை கேட்கறதுன்னு தெரியல.


இப்போ நிறைய யோசனைக்குப் பிறகு உனக்கு போன் பண்ணி இருக்கிறேன். எனக்கு நந்தா எங்க இருக்கிறான்னு தெரிஞ்சாகணும் .

இன்னமும் கொஞ்ச நேரத்துல”.


‘ ஓகே சரண்யா நீ எங்க இருக்கிற ..அதை முதல்ல சொல்லு .ஏதாவது உதவி வேண்டுமா? சொன்னேன்னா பக்கத்தில் யார் இருக்கிறார்களோ நான் அனுப்பி வைக்கிறேன். பயப்பட வேண்டாம். “


“ இப்போ நான் ஊருக்கே வந்தாச்சு .ஏர்போர்ட்டில் உட்கார்ந்து இருக்கிறேன் .இப்ப நான் எங்க போறதுன்னு தெரியலை .


அம்மா வீட்டுக்கு போகணுமா இல்ல அத்தை வீட்டுக்கு போகணுமா இல்ல இந்த நந்தா எங்க இருக்கறான்னு தேடி போகனுமா எதுவுமே புரியல.


பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குது “குரலே சற்று கரகரப்பாக வர ..குரலைக் கேட்டவன்” சரி பதட்டப்பட வேண்டாம் .நான் பக்கத்துல தான் இருக்கிறேன் .என்னோட கிளினிக் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்குது .ஒரு.. ஒரு மணி நேரம் அங்கேயே வெயிட் பண்ணு .


நான் நேரா உன்னை வந்து பிக் பண்ணிக்கிறேன்‌ எங்க போறேன்னு அப்புறமா முடிவு பண்ணிக்கலாம் .”


“அதுக்கு முன்னாடி உன் பிரண்டு எங்க இருக்கிறான்னு கேட்டுட்டு நீ என்னை கூப்பிட வா..


நேரா உன் பிரண்டு முன்னாடி என்னை கொண்டு போய் நிறுத்தணும். இதுதான் நான் உன்கிட்ட கேக்கற ஹெல்ப் ..முடியுமா “.


“ நான் போன் பண்ணி பார்க்கறேன். அவன் பொறுப்பானவன் .அப்படி எல்லாம் தப்பு செய்கிற ஆள் கிடையாது .”


“தயவுசெய்து இன்னும் உன் பிரண்டுக்காக சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காத.. அவன் செஞ்சு வச்ச காரியம் எப்படிப்பட்டது தெரியுமா..”


“ ப்ளீஸ் சரண்யா பதட்டபட வேண்டாம். நான் இன்னமும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடறேன் .


நான் வந்த பிறகு பேசிக்கலாம் நிச்சயமாக என்ன நடந்தது என்று அவனை பார்த்து கேட்டு தெரிஞ்சுக்கலாம் “என்று போனை வைக்க ..


இப்போதுமே பதட்டம் நிறையவே இவளிடம் இருக்க..

என்ன ஆச்சு எதுக்காக இப்படி பண்ணினான் என்கின்ற கேள்வியும் பெரியதாகவே இருந்தது.சஞ்சய்க்காக காத்திருக்க ஆரம்பித்தாள் சரண்யா.
 

NNK-15

Moderator
14


“நந்தா எங்க இருக்கிற “போனை அட்டென்ட் செய்தவுடன் கேட்ட கேள்வி இதுதான் .


“சஞ்சய் நீயா.. சரண்யா உன்கிட்ட பேசினாளா “என்று கேட்க..


‘ அது இப்போ உனக்கு தேவை இல்லை .நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கிற .எங்க இருக்கிற.. முதல்ல நான் இப்போ உன்னை வந்து பார்த்தாகணும் சொல்லு” என்று சொல்ல ..நந்தாவோ சரண்யா நிச்சயமாக சஞ்சய்க்கு அருகில் இருப்பாள் என்று யோசிக்கவில்லை .


தன்னுடைய லட்டரை படித்த பிறகு நிச்சயமாக அவள் தாயாரின் விட்டிருக்கோ அல்லது தன் தாயாரிடமோ சென்றிருப்பாள்.


அதனால் யோசிக்காமல்” நான் ஹாஸ்பிடல்ல இருக்கிறேன்” என்று சொல்ல..” எந்த ஹாஸ்பிடல்ல “என்று கேட்க..உடனே பதில் இவனிடமிருந்து வந்தது.


ஹாஸ்பிடலின் பெயரை சொல்லவும் “சரி நான் இப்போ உன்னை வந்து பார்க்கிறேன்.” என்று சொல்ல ..


“வந்து என்ன பேச போற ..நீ என்ன கேட்டாலும் என்கிட்ட பதில் கிடையாது. நான் ஏற்கனவே என்னோட முடிவை தெளிவாக சொல்லிட்டேன்.


சரண்யா சம்பந்தப்பட்டது ஏதாவது கேட்கிறதா இருந்தா ஐ அம் சாரி நான் உன்கிட்ட பேச தயாரா இல்லை .”


“நான் அதை பத்தி பேசல போதுமா .இப்போ வரேன் அங்கே இரு “என்று போனை வைத்தவன் திரும்பி சரண்யாவை பார்க்க ..அவள் யோசிக்காமல் “நானும் உங்க கூட இப்ப வரேன் “என்று சொன்னபடியே புறப்பட்டாள்.


அடுத்த அரை மணி நேரத்தில் நந்தா இருந்த ஹாஸ்பிடலில் வண்டி நின்றது .


உள்ளே நுழைந்த உடனேயே மறுபடியும் நந்தாவை அழைக்க.. நந்தா இருக்கின்ற அறை நம்பரை கூறினான்.


இப்போதும் கூட ஒன்றுமே புரியவில்லை. ஒரு வேளை ஏதாவது சர்ஜரிக்காக அவசரமாக புறப்பட்டு வந்திருப்பான் என்று தான் சஞ்சய்க்கு தோன்றியது. ஆனால் சரண்யாவிற்கு வேறு விதமாக தோன்றியது.


ஹாஸ்பிடல் வந்ததும் குறிப்பிட்ட அறையில் நம்பருக்கு எதிரே வந்து நின்றவன் கதவை தட்ட ..


சற்று ஓரமாக நகர்ந்து நின்று கொண்டால் சரண்யா .


“நீங்க முதல்ல முன்னாடி போய் பேசுங்க.. பின்னாடி வரேன்”என்று சொல்ல.. சரி என்பது போல தலையாட்டிவிட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் .


அங்கே பேசன்ட் படுப்பதற்காக இருந்த பெட்டில் நந்தா சோர்வாக படுத்திருந்தான்.


இவனை பார்க்கவும் வேகமாக எழுந்து அமர.. ரூம்பை சுற்றி பார்த்தவன்” என்ன நடந்துகிட்டு இருக்குது . எதுக்காக நீ வந்து படுத்து இருக்கிற “என்று கோபமாக கேட்க..


“முதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு .சரண்யா எங்க? அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா தானே” என்று கேட்க..


“ உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் யாரு?


மீடியேட்டர் வேலையா செஞ்சுகிட்டு இருக்கிறேன் .நந்தா முதல்ல எனக்கு உண்மைய சொல்லு .உடம்புக்கு என்ன ஆச்சு .கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு பொண்ண நிராதரவா விட்டுட்டு வந்து இருக்கிற..


இது உன்னுடைய நேச்சரே கிடையாது .”

இதுதான் நான்னு தயவு செய்து கதை சொல்லாத ..ஏன்னா உன்னை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ஆரம்பத்திலிருந்து இந்த நிமிஷம் வரைக்குமே நல்லா தெரியும் .


அந்த பொண்ணு கிட்ட என்ன சொன்ன.. பழி வாங்கறீயா.. இத என்னை நம்ப சொல்றியா. என்ன நடந்துகிட்டு இருக்குது .அதை சொல்லு முதல்ல” என்று சொல்லவும் அருகே இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து இவனிடம் நீட்டினான்.


“இத கொஞ்சம் படிச்சு பாரு. என் உடம்புக்கு இப்படின்னு தெரிஞ்ச பிறகு நான் எப்படி அவ கூட இருக்க முடியும் .”இவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே சட்டென சரண்யா உள்ளே நுழைந்திருந்தாள்.


வேகமாக மருத்துவ அறிக்கை வாங்கி படித்த முடித்ததுமே பளார் என நந்தனின் கன்னத்தில் அறைந்து இருந்தாள்.


அதிர்ந்தது நந்தா மட்டுமல்ல சஞ்சையும் கூடத்தான்.


“ ஓகே ரெண்டு பேரும் பேசுங்க. நான் வெளியே வெயிட் பண்றேன் “என்று சஞ்சய் நகர்ந்து வெளியேற ..கையை கட்டியபடி நந்தனையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் .


“எதுக்காக இப்படி ஒரு முடிவை எடுத்திங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..


கல்யாணத்து அன்றைக்கு கடைசி நிமிஷத்துல நீ கல்யாணத்தை நிறுத்தி இருந்தால் கூட என்னை பழி வாங்கறதா நினைத்திருப்பேன்.


இந்த ஒரு வாரம் நான் உன்னை பார்த்திருக்கிறேன். உன் கண்ணுல ஒவ்வொரு நிமிஷமும் என்னை பார்க்கும்போது தெரிஞ்ச அந்த காதல் பொய் கிடையாது.


அது பொய் என்று திரும்பத் திரும்ப என்கிட்ட நடிக்காத.. இது ஒரு சின்ன விஷயம்.


இதுக்காகவா என்னை விட்டுட்டு இவ்வளவு தூரம் வரலவ.. இதுல ஒன்னும் பயப்படற மாதிரி எதுவும் போடலையே .”


“நல்லா படிச்சு பாரு..”


“ என்ன நல்லா படிச்சு பாக்கணும் .நீ டாக்டர் தானே உனக்கு தெரியாதா. எந்த கண்டிஷன்ல இருந்தா என்ன நடக்கும்னு .


நான் தெளிவா பாத்துட்டேன் கல்லீரல்ல ஏதோ சின்ன அளவுல கட்டி மாதிரி இருக்குன்னு சொல்லி இருக்காங்க.


அதை கவனிக்காமல் விட்டால் பின்னாடி கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்காங்க .


இது ஸ்டார்டிங் ஸ்டேஜ் தானே அப்படிங்கிறப்போ ஈஸியா ஆபரேஷன் செஞ்சாலே சரி ஆகிடுமே .அப்புறம் ஏன்?


இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.”


“எனக்கு.. எனக்கு பயமா இருக்கு சரண்யா .நான் உன்ன ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணினேன் .இல்லன்னு சொல்லல ..நாளைக்கு எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா..

நீ பால் நிலா மாதிரி சரண்யா

இப்ப இருக்குற கண்டிஷன்ல நான் ஒரு பாலைவனம்..

இங்க நீ வந்தாலுமே பிரயோஜனம் இல்ல.”


“பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டு இருக்காத.. இன்னொரு தடவை இது மாதிரி உளறினா என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது.


ஏன் வாழ்க்கையே முடிச்சு போனவன் மாதிரி பேசிகிட்டு இருக்கற.. உனக்கு ஒன்னும் வயசாகிடவில்லை..

எந்த சூழ்நிலை வந்தாலும் சரி உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.


அது எப்படி நீயே முடிவு பண்ணலாம்…என்னை தனியா விட்டுடுவேன்னு..உன்னோட காதல் நிச்சயமா எப்பவுமே என்ன தனியா நிறுத்தாது புரியுதா..


உன்னோட உடம்புக்கு என்ன ஆனாலும் சரி நிச்சயமா எனக்காக என் மேல நீ வச்சிருக்க காதலுக்காக போராடுவ.. எனக்கு நிறைய நம்பிக்கை இருக்குது.


நல்ல டாக்டரா பார்த்து கன்சல்ட் பண்ணலாம் .தயவு செய்து இந்த மாதிரி இன்னொரு முறை கிறுக்குத்தனம் எதையும் பண்ணாத ..அது எப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் நடுக்காட்டில் விட்ட மாதிரி விட்டுட்டு வர உனக்கு முடிந்தது. அப்படி பண்ணினால் நான் உன்ன வெறுத்துடுவேன்னு நினைக்கிறாயா?


எப்படி வெறுப்பேன்னு நீ முடிவு பண்ணலாம். எங்க போனாலும் பின்னாடியே துரத்திட்டு வந்து கேள்வி கேட்க மாட்டேன்னு எப்படி நீ முடிவு பண்ணின..”

கேட்டபடி அங்கேயே அமர்ந்து அழ ஆரம்பிக்க.. இப்போது நந்தா “ ப்ளீஸ் சரண்யா அழாத.. என்னால தாங்க முடியாது.”


“ முன்னாடி எப்படியோ தெரியாது. ஆனா இந்த ஒரு வாரம் உன்னை பார்த்த பிறகு ஐ லவ் யூ .உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்குது .ஒவ்வொரு நிமிஷமும் உன்னோட முகத்தை ரசிக்கிறேன் . உன்னை பத்தி மட்டும் தான் இந்த ஒரு வாரமா யோசிக்கிறேன் .


உன்னை பற்றி தெரிந்து கொள்வதற்காக அத்தனை சோசியல் மீடியாவையும் பார்க்கறேன்.


நீ ஈசியா தூக்கி வீசலாம்னு முடிவு பண்ணிட்டல்ல.. அதுவும் எவ்வளவு அழகா சொல்ற.. உன் அம்மா வீட்டுக்கு போனாலும் சரி இல்ல எங்க போனாலும் சரியா .என்ன பைத்தியக்காரத்தனம்..


ஒருவேளை உன் இடத்தில் நான் இருந்திருந்தால் நீ என்னை இப்படித்தான் கை கழுவிட்டு விட்டுட்டு ஓடி இருப்பியா ‌சொல்லு” என்று கேட்க ..


“சரண்யா அப்படியெல்லாம் இல்ல “.


“போதும் இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசாதே “என்று சொன்னவள் ஆவேமாக எழுந்து வேகமாக அருகே வந்தவள் உதடு, கண் ,முகம் என பாராமல் முத்த மழை பொழிய ஆரம்பித்தாள்.


ஒரு கட்டத்திற்கு மேல் நந்தாவாலேயே தடுக்க முடியவில்லை .


அவளுடைய அன்பு அவனுக்குமே புரிந்தது .சட்டென அவளை தன்னோடு இருக அணைத்தவன் “இனி இது மாதிரி செய்ய மாட்டேன்” என்று சொல்ல..” இத பாரு அத்தை என்னை பார்க்க முதன் முதலில் வரும் பொழுது சொன்னாங்க. மாங்கல்ய பலம் எனக்கு நிறைய இருக்குது அப்படின்னு..


என்னோட மாங்கல்ய பலம். உன்னோட காதல் நிச்சயமா காப்பாத்தும் .இதெல்லாம் ஒன்றுமே இல்லை .


இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு ஒரு நாள் நீயும் நானும் இத சொல்லி சிரிக்க தான் போறோம்” என்று சொல்ல.. “உன்னோட வார்த்தையை நான் நம்புகிறேன் “என்று சொன்னபடியே சரண்யாவை இன்னும் இருக்குமாக அணைத்து கொண்டான்.


தலைசிறந்த மருத்துவன் தான். மருத்துவ துறையில் அடுத்தடுத்து வரும் முன்னேற்றம் எல்லாவற்றையும் கண் கூடாக நேரில் பார்த்தவன் தான் ஆனாலும் தனக்கு என்று வரும் போது பயம் வரத்தானே செய்கிறது..


அந்த பயமே கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்திருந்தது..


இவர்களது சண்டை அடங்கவும் வெளியில் இருந்த சஞ்சய் குரல் கொடுத்தான்.”உள்ளை வரலாமா “என்று கேட்க வேகமாக “வா சஞ்சய் “என்று குரல் கொடுத்தபடி சற்று நகர்ந்து நின்றான் நந்தா.


இப்போதும் கூட அவன் கை வளையத்திற்குள் அவனை இடுப்போடு அணைத்த படி தான் நின்று இருந்தாள் சரண்யா .


“அப்பா பேசி முடிச்சாச்சா பிரச்சனை எல்லாம் சால்வ் ஆகிடுச்சா ..இங்கே என்ன சொன்னாங்க .இது மட்டும் தான் பார்த்தியா ..


எதுக்காக அவ்வளவு அவசரமாக ஓடி வந்த இப்ப எனக்கு நீ காரணத்தை சொல்லு” என்று கேட்க நந்தா சற்று தயங்கியபடி பேச ஆரம்பித்தான் .


“கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி இருந்தே லைட்டா காய்ச்சல் என்ன சாப்பிட்டாலுமே வாந்தி ஆரம்பத்தில் லேசா தான் இருந்தது .


நானும் பெருசா கண்டுக்கல.. வேலை அதிகம் நேரா நேரத்துக்கு சரியா சாப்பிட முடியல .இப்படி நிறைய பிறகு கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கி நைட்டுமே காய்ச்சல் கொஞ்சம் அதிகமா இருந்த மாதிரி இருந்தது.


அப்போதும் கூட எனக்கு பெருசா தவறா தோணல. அங்கிருந்து நாங்க ஹனிமூன் புறப்பட்டு போயிட்டோம் .


அங்கே போன அன்றைக்கு நிறையவே வாந்தி.. பத்தாததற்கு வாந்தி மட்டுமல்ல ரத்தமும் சேர்ந்து வாந்தில வரவும் எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு .


அதுக்கு மேல வெயிட் பண்ணினா வேற ஏதாவது ப்ராப்ளம் ஆயிடும்னு தோணுனதால அன்னிக்கு நைட்டு சரண்யாவை பிடிவாதமா அந்த ஹோட்டலை விட்டுட்டு ஹாஸ்பிடல் கிளம்பி போனேன் .கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன் .


மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் தான்..போனதுமே புரிஞ்சுகிட்டு நான் என்னென்ன டெஸ்ட் வேணும்னு கேட்டேனோ எல்லாமே வேக வேகமா செஞ்சு அனுப்பி வச்சாங்க .


நான் டாக்டர்ங்கிறதால சொல்லிட்டு வந்திருந்தேன் .ரிப்போர்ட் வரவும் எனக்கு அனுப்பி வைங்கன்னு கிட்டத்தட்ட மிட்நைட் ரெண்டு மணிக்கு மேல தான் வாட்ஸ்சப்ல ரிப்போர்ட் வந்தது .பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன் நிச்சயமா கேன்சரா இருந்து ஏதாவது ஆகிட்டா சரண்யாவோட நிலைமை..


பிடிவாதமா துரத்தி துரத்தி காதலிச்சேன். இப்ப கல்யாணமும் பண்ணிக்கிட்டேன் .ஆனா இப்படி ஒன்னு ஆகும்னு நான் எப்பவுமே எதிர்பார்க்கவே இல்ல.


எனக்கு ஏதாவது ஒன்னு ஆகிட்டா.. அவளை தனியா விட்டுட்டு போக விருப்பமில்லை அதனாலதான் இப்படி அவசரத்தனமா ஒரு முடிவு எடுத்தேன் .


நான் இப்படி சொல்லி விலகி வந்துட்டா.. ஏற்கனவே கல்யாணம் ஆகற அந்த கடைசி நிமிஷம் வரைக்கும் சரண்யாவுக்கு என் மேல துளி கூட நம்பிக்கை கிடையாது.” என்று சொல்ல சரண்யா அவனின் முகத்தைப் பார்த்து முறைத்தபடி நின்று இருக்க..அதுதான் சாரி கேட்டுட்டேன்ல.. “


“இனி என்ன ஆனாலும் பரவால்ல .

நான் உன் கூட இருப்பேன் .என்னவா இருந்தாலும் சரி சேர்ந்து போராடலாம் சரியா” என்று சொல்ல லேசாக புன்னகைத்தான் நந்தா.


சரியாக ஆறு மாதம் கடந்திருந்தது .அன்றைக்கு அதனை பிரச்சனையோடு இங்கே வந்தவர்கள் அடுத்த ஒரு வாரத்தில் ஆபரேஷன் முடிந்திருக்க நந்தா முழு ஓய்வில் இருந்தான்.


கிட்டத்தட்ட ஒரு மாதம் வரியிலுமே வீட்டில் ரெஸ்ட் எடுத்தவன். அடுத்தடுத்து டிரிட்மெண்டிற்கு செல்ல பெரியதாக பயப்படும்படி எதுவும் இல்லை .


ஆரம்பத்தில் பார்த்ததினால் இனி பயம் இல்லை என்று சொல்லி இவனை அனுப்பி வைக்க.. நிறையவே நிம்மதி பெருமூச்சோடு வீட்டிற்கு வந்திருந்தான். கிட்டத்தட்ட திருமணம் முடிந்து இரண்டு மாதம் கழித்து இவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்து இருந்தான் நந்தா.


காதல்.. காதல்..காதல் திகட்டத் திகட்ட காதல் ..


ஒரு நிமிடமும் சரண்யாவை விட்டு அகலவில்லை .அவளும் கூட அதே போல் தான் இருந்தாள்.


இவர்கள் சண்டையிட்டார்கள் என்று யாராவது சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அதுபோல இருந்தது இவர்களது வாழ்க்கை.


நேரம் 11 மணி நெருங்கிக் கொண்டிருக்க.. வேகமாக சரண்யாவை தேடி அவளுக்கு உதவிக்கு இருக்கும் பெண் அழைத்தாள்.


“ சார் வந்திருக்கிறார்கள் “என்று சொல்ல..” மணி சரியா 11 ஆயிடுச்சா ..உங்க சார் கிட்ட சொல்லு . பேசன்ட் கிட்ட பேசிட்டு இருக்கறேன். என்னால பார்க்க முடியாதுன்னு..”


“ மேம் இந்த விளையாட்டுக்கு நான் வரல. சார் கிட்ட நான் சொன்னாலும் கேட்கப்போவதில்லை .அடுத்த நிமிஷத்திலேயே உள்ள வருவாங்க..நீங்களே பேசிக்கோங்க “என்று சொல்லிவிட்டு நகர ..அடுத்த நொடியே நந்தா உள்ளே நுழைந்தான் .


“என்ன நந்தா பேசன்ட் கிட்ட பேசிட்டு இருக்கறேன் தெரியாதா .ஏன் தினமும் இப்படி பண்றீங்க .என்னால பதில் சொல்ல முடியல தெரியுமா..” என்று சினுங்க..


“சரி நீயும் கரெக்டா இருக்கணும்ல ..இந்த மாதிரி நேரத்துல” என்று சொன்னபடியே கையில் இருந்த ஜூஸை எடுத்து அவளிடம் நீட்டினான்.


“இத குடி.. மாசமா இருக்குற பொண்ணு நேரத்துக்கு சத்தான ஃபுட் எடுத்துக்க வேண்டாமா” என்று கேட்க ..”ரொம்ப தான் எனக்கு இதை பார்த்தாலே வாந்தி வாந்தியா வருது.


குடிக்க கூடாதுன்னு சொல்லிதான வீட்ல மறந்து வச்சுட்டு வந்தேன்”.


“ அதனாலதான் நான் ஞாபகமா எடுத்துட்டு வந்தேன் .இந்தா குடி.. ரெண்டு குழந்தையை வயித்துல சுமக்கிற.. அப்போ அதுக்கு ஏத்த மாதிரி சாப்பிடணும்ல “என்று சொல்ல.. “உங்களை” என்று திட்டியபடியே குடிக்க ஆரம்பித்தாள்.


இனி இவர்களது வாழ்க்கை எனும் சோலையில் பால் நிலா எப்போதும் தென்றலாய் காதல் மொழி பேசும்..


முற்றும். 
Status
Not open for further replies.
Top