எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -11

Padma rahavi

Moderator
சிவகர்ணிகாவால் நம்பவே முடியவில்லை. தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு மாதத்திற்கு முன்பு யாராவது அடுத்த மாதத்தில் நீ காதலிப்பாய், திருமணம் செய்து கொள்வாய் என்று கூறியிருந்தால் சிரித்தருப்பாள். ஆனால் இன்று உச்சி வகிட்டின் குங்குமமும், தாலியும் அவளுக்கு திருமணம் ஆயிற்று என்று உறுதி செய்தது.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கண்களிலும் இது நாங்க எதிர் பார்த்தது தானே என்ற கேலி தெரிந்தது. மாயவோ வெளிப்படையாகவே,

எனக்கு தெரியும்டி. நீ பெரிய கோல்மால்னு. ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை னு அமுக்குனியாட்டம் இருந்துட்டு எவ்ளோ பெரிய வேலை பண்ணிருக்க. இதுக்குத்தான் அமைதியா இருக்கிறவங்களை நம்பவே கூடாது என்று இடுப்பில் கிள்ளினாள்.

சிவகர்ணிகாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

திருமணத்தை கொஞ்சம் தள்ளியாவது வைத்திருக்கலாம். எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.

சிவனந்தனோ விடாமல் பேசி மறு மாதமே முகூர்த்தம் குறித்து விட்டான்.

சிவகர்ணிகாவின் பெற்றோரை தன்னுடன் தங்க அழைத்தான். அவர்கள் மறுத்து விட்டனர். அவனும் வற்புறுத்தாமல் விட்டு விட்டான்.

திருமணத்திற்கு சிவாவின் பெற்றோர் மட்டும் வந்திருந்தனர். அவன் ஓய்வில் இருப்பதால் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என சிவனந்தன் நினைத்தான்.

தேனிலவு கொண்டாட்டத்திற்குப் பிறகு வீடு வந்தனர்.

வசந்திக்கு இவை எல்லாம் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை.

சிவகர்ணிகாவின் பெற்றோர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவர்கள் விஷ்வாவின் படத்தை பார்க்கும் போது சிவனந்தன் முகத்தில் அத்தனை பதட்டம் இருக்கும்.

சிவகர்ணிகா முதன் முதலில் விஷ்வாவின் படத்தை பார்த்த போது சற்று யோசித்தாள். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சற்று குழம்பிய போது,

இவன் இறந்து 3 வருடம் ஆகுது. நீ எங்க பார்திருக்க போற என்று அவளை அடக்கி விட்டான்.

மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏதோ ஒன்றை நினைத்து அவன் பயப்படுகிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

வெகு வருடங்கள் பிறகு இப்போது தன் சிவனந்தன் மகிழ்ச்சியாக உள்ளான். அதை அப்படியே நிலைக்க அவள் அனுதினமும் கடவுளை வேண்டினாள்.

படுக்கையில் இருந்து எழ நினைத்த சிவகர்ணிகாவை எழ முடியாதபடி பின்னங்கழுத்தில் முகம் புதைத்து இறுக்கி அணைத்திருந்தான் சிவனந்தன்.

ஹையோ விடுங்க. மணி 8 ஆகுது என்று சிணுங்கினாள்.

எட்டு தானே ஆகுது. நீ உங்க அம்மா வீட்லயே 9 மணிக்கு தானே எந்திரிப்ப!

அதெல்லாம் முன்னாடி. உங்க அலுவலகத்துல சேர்ந்ததுக்குப் பிறகு 10 மணிக்கு தம்ப வைக்கணுமேனு அடிச்சு புடிச்சு 7 மணிக்கு எல்லாம் எழுவேன் தெரியுமா.

அப்ப நீ சுறுசுறுப்பு ஆனதுக்கு நான் தான் காரணமா என்று கூறிவிட்டு பின் கழுத்தில் அழுத்தமாக முத்திரை பதித்தான்.

முன்னாடி எல்லாம் பத்து மணிக்கு டான்னு அலுவலகம் வர்ற ஆள் இப்ப லேட்டா போனா எல்லாரும் என்ன நினைப்பாங்க என்றாள் சிவகர்ணிகா.

ம்ம். வீட்ல அழகான பொண்டாட்டி சொக்குப்பொடி போட்டு வச்சிருக்கா போலனு நினைப்பாங்க என்றான் சிவனந்தன்.

அதானே ஆம்பளைங்க புத்தி! நீங்க மயங்கிட்டு எங்க மேல பழியை போட்ருவீங்க என்று கூறியவள் அவனை தள்ளிவிட்டு எழுந்தாள்.

விடாமல் அவள் கையைப் பற்றியவன், நேத்து நைட் ஒன்னு கொடுக்கணும்னு நினைச்சேன் மறந்துட்டேன் என்றான்.

நைட் பேச விட்டா தானே என்று முணங்கினாள் சிவகர்ணிகா.

அவளை பின்னிருந்து அணைத்தவன், அவள் கழுத்தில் கண் கூசும் அளவிற்கு ஜொலிக்கும் வைர நெக்லஸ் அணிவித்தான்.

என்னங்க இது! போன வாரம் தானே தங்க ஆரம் வாங்கி கொடுத்தீங்க. இது என்ன இப்ப! நான் கேட்டேனா?

கேட்டா தான் வாங்கி தரணுமா என்ன! ஊர்ல மத்த பொண்டாட்டி எல்லாம் பாரு. புருஷன் வாங்கி தர மாட்டானானு இருகாங்க. நீ என்னன்னா வாங்கி கொடுத்தா திட்ற!

வருஷத்துக்கு ஒரு தடவ ரெண்டு தடவனா பரவாயில்லை. இதென்ன வாரா வாரம்! ஏதோ தப்பை மறைக்க ஐஸ் வைக்கிற மாதிரி என்று கூறி சிரித்து விட்டு சென்றாள் சிவகர்ணிகா.

அவள் சாதாரணமாக கூறினாலும் அவளின் இறுதி வரி அவனைக் கூறியது போலவே அவனுக்குத் தோன்றியது. எத்தனை நாட்கள் இப்படியே ஓட்ட முடியும். இதற்கு முடிவு எப்போது என்று நினைத்து பெருமூச்சு விட்டான் சிவகர்ணிகா.

சிவனந்தன் அலுவலகம் சென்றதும் சிறிது நேரம் வாசுகியிடம் பேசியவள், வசந்தி வந்து அழைத்ததும் ஹாலுக்குச் சென்றாள்.

திருமணத்திற்கு வர முடியாத சிவகர்ணிகாவின் தோழி கவிதா வந்திருந்தாள்.

சற்று நேரம் பழைய கதை எல்லாம் பேசிய பின் வீட்டை சுற்றிக் கட்டினாள்.

ஹாலில் மாட்டியிருந்த விஷ்வாவின் புகைபடத்தைப் பார்த்த கவிதா அதிர்ச்சியடைந்தாள்.

ஹேய் சிவா! இது யாரு என்றாள்.

இது என் ஹஸ்பண்ட் தம்பி டி. பேரு விஷ்வா. 3 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாராம்.

ஏய். நிஜமாவே உனக்கு யாருன்னு தெரிலையா டி.

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனா யாருனு ஞாபகம் வரல டி.

லூசு. நாம காலேஜ் படிக்கும் போது உனக்கு லவ் லெட்டர் குடுத்தானே. நீ போற இடமெல்லாம் எப்படி சுத்துனான்.

ஒரு நாள் நீ காதலிக்கலன்னா செத்து போயிருவேன்னு மிரட்டுனான். உனக்கு ஞாபகம் இல்லையா?

கல்லூரி படிக்கும் போது சற்று வயது குறைவாக, முகம் வேறு மாதிரி இருந்தது போல் தோன்றியது அவளுக்கு. அவள் பெரியதாக அவனை கண்டுகொள்ளாததால் அவன் முகம் கூட நினைவில் இல்லை. ஆனால் இறுதியாக அவனை பார்த்து

" உன் மேல எல்லாம் இந்த ஜென்மத்துல லவ் வராது. நீ செத்தா கூட கவலைப் பட மாட்டேன்" என்று கூறியது நினைவு வந்தது.

அதன் பிறகு அவனைப் பார்க்கவில்லை. எனவே திருந்தி விட்டான் போல என்று இவளே நினைத்துக் கொண்டு அவனை மறந்தே விட்டாள்.

இவன் இறந்துருப்பான் என்று நினைக்கக் கூட இல்லை. எப்போது இறந்திருப்பான்? எப்படி இறந்திருப்பான்? உண்மையாகவே அக்சிடென்ட்டா இல்லை வேறு எதுவும் இருக்குமா?

அவள் உள்ளம் படபடத்தது. நாக்கு மேலன்னத்தோடு ஓட்டிக் கொண்டது.

இது சிவானந்தனுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும்? இப்போது இவன் காட்டும் காதல் அப்படியே இருக்குமா? இதை அவனிடம் சொல்லலாமா வேண்டாமா?

அவள் தலை கிறுக்கிறுக்கத் தொடங்கியது.
 

Kalijana

Member
😄😄😄
 

Attachments

  • MEME-20221014-022131.jpg
    MEME-20221014-022131.jpg
    220.7 KB · Views: 0
  • MEME-20221014-022447.jpg
    MEME-20221014-022447.jpg
    249.6 KB · Views: 0
  • MEME-20221014-023040.jpg
    MEME-20221014-023040.jpg
    266.2 KB · Views: 0

Kalijana

Member
🥺
 

Attachments

  • MEME-20221015-110511.jpg
    MEME-20221015-110511.jpg
    200.9 KB · Views: 0
  • MEME-20221015-110948.jpg
    MEME-20221015-110948.jpg
    250.5 KB · Views: 0
  • MEME-20221015-110048.jpg
    MEME-20221015-110048.jpg
    275 KB · Views: 0
  • MEME-20221015-105237.jpg
    MEME-20221015-105237.jpg
    251.6 KB · Views: 0
  • MEME-20221015-104809.jpg
    MEME-20221015-104809.jpg
    189.9 KB · Views: 0
Top