எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 7

NNK046

Moderator

அத்தியாயம் - 7​

' உன் சந்தோசம் என்ன?' என்று கேட்ட வேதாவிடம் உண்மையில் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை விஷ்ணுவிற்கு. அவள் கேள்வியில் தடுமாறி போனவன் நெற்றி சுறுங்க அவளை ஒரு பார்வை பார்த்து,​

" அத தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ண போற ? " எனக்கேட்க,​

அவன் பதிலில் கடுப்பானவள் அவனை மேலும் முறைத்தாள்.​

" ரொம்ப ஓவரா பண்ணுற மாமா நீ..! நானு பாக்கறேன் காலையில்ல இருந்து எத சொன்னாலும் இப்படி தான் மூஞ்சில அடிச்ச மாறி பேசிட்டு இருக்க ஹாங்..! உன் பின்னாடியே நா சுத்தறனால ரொம்ப இளக்காரமா இருக்கா என்ன பார்த்தா !? எப்போவுமே இந்த வேதா அமைதியாவே போய்ட்டு இருக்க மாட்டா தெரிஞ்சிக்க இதே மாறி இன்னொரு வாட்டி பண்ணனு வையேன் கைய ஒடச்சி அடுப்புல வெச்சிருவேன் ஜாக்கரதை..!"​

பல்லை கடித்து கொண்டு அவள் பேச உண்மையில் பயந்து தான் போனான் விஷ்ணு.​

" முக்கியமான விஷயம் தான் பேச வந்தேன். ஒன்னும் வெட்டி கடலை போட இல்லை. என் பிரண்ட் ஓட தம்பி பி.ஈ மெக்கானிக்கல் ஃபைனல் இயர் படிக்கறான் அவனுக்கு ப்ராஜெக்ட் மாடல் பண்ண கொஞ்சம் ஹெல்ப் வேணுமாம். அதான் உன்கிட்ட கூட்டிட்டு வரலாம்னு பாத்தேன் மாமா "​

புருவம் நெறித்து அவளை கேள்வியாய் பார்த்தான் விஷ்ணு.​

" இங்க பாரு மாமா சும்மா சும்மா இப்படி லுக் விடாத.. நீ ஒன்னும் மணிரத்னம் படம் ஹீரோ இல்லை. நீ பாத்த உடனே நா புரிஞ்சிக்கறதுக்கு வாயில்ல என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்க? இப்போ ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா? ரொம்ப தான் பிகு பண்ணுற !"​

" நான் தான் படிக்கலயே " என்றவன் சங்கடமாய் பார்வையை தாழ்த்தி கொள்ள,​

" அதுனால என்ன? உன்ன நீயே தாழ்த்திகாத மாமா..! படிச்சவங்க எல்லாரும் அறிவாளியும் இல்ல படிக்காதவங்க எல்லாம் முட்டாளும் இல்ல அத மொத புரிஞ்சிக்கோ..! நானு தான் டிகிரி படிச்சிருக்கேன் ஆனா சரியான வேலை கிடைக்காம சும்மா தானே வீட்ல உக்காந்து இருக்கேன். இங்க பாரு மாமா மொதலும் கடைசியுமா ஒன்னு மட்டும் சொல்லறேன் அத நல்லா நியாபகம் வெச்சிக்கோ. நீ சூப்பர், நீ கெத்து, நீ நல்லவன், வல்லவனு சொல்ல எவனும் வர மாட்டான். நம்மகான அங்கீகாரத்த நாம தான் சண்ட போட்டு வாங்கிகனும். இல்லனு வை நீ குனிய குனிய இந்த சமூகம் உன் முதுகுல கதக்களி ஆடும். இன்னொரு வாட்டி உன் வாயில இருந்து நா படிக்கல கடிக்கலனு வந்துச்சி...! அவளோ தான் பாத்துக்க..! சரி நேரம் ஆச்சி நா வீட்டுக்கு போறேன். நைட் பஸ் ஏறிட்டேன்னு அப்போவே அப்பா போன் பண்ணாங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்க.. அந்த பையன்ட்ட உன் நம்பர் தரேன் அவன் போன் பண்ணுவான் பேசிக்க. சும்மா எல்லாம் பண்ணி தராத சரியா? மொத்தமா நாலாயிரம் பேசிருக்கேன். கரெக்ட்டா அமௌன்ட் பேசி வாங்கிக.. நல்லா பண்ணுனனா அவங்க காலேஜ்லயே இந்த மாறி நேரிய ஆள் இருக்காங்க அவங்களுக்கும் பண்ணி தரலாம். சும்மா காசு இல்ல காசு இல்லனு புலம்பாத மாமா கடவுள் கொடுக்கனும்னு நெனச்சா கூரைய பிச்சிட்டு கூட கொடுப்பாராம்..! தைரியமா இரு. மூஞ்ச இப்படி சோகமா வெச்சிக்காத பாக்க சகிக்கல..!" என்றவள் அவன் தாடையை பற்றி இடம் வலமாக ஆட்டி விட்டு பறந்து விட்டாள் பாயும் கணை போல..!​

அவளின் பேச்சியில் அவன் தான் உறைந்து போனான் கள் உண்ட வண்டு போல..!​

ஏதோ வயது கோளாறில் தன் பின்னால் சுற்றுகிறாள் என்று தான் நினைத்திருந்தான். ஆனால் அவளின் பேச்சும், சமூகத்தின் மீதுள்ள அவளின் பார்வையும் அவளை அறிவுள்ள பெண்ணாக காட்டியது.​

அதுவும் தன் பண தேவையை புரிந்து கொண்டு தனக்கு உதவி செய்ய நினைப்பவளை உதாசினப்படுத்துவது போல் பேசியது தவறு என தோன்றியது.​

வீட்டிற்கு வந்த வேதாவிற்கு வேலை தலைக்கு மேல் இருந்தது.​

காலையில் இருந்து விஷ்ணுவின் பின்னாலேயே சுற்றி அவனை பற்றி யோசித்தே நேரம் கடந்திருக்க. வீட்டிற்கு வரும் தாயை நினைத்து அடி வயிறு கலங்கியது.​

வாஷ்மெஷினில் காலையில் போட்ட துணி காய போடாமல் அப்படியே கிடந்தது. தனியாக சமைத்து சாப்பிட சோம்பேறி தனம் பட்டவள் நூடுல்ஸ், சிப்ஸ், பிஸ்கேட், பால் பிரேட் வைத்தே அன்றயே பொழுதை கடத்தி இருந்தாள். அந்த குப்பை எல்லாம் ஹாலில் அப்படியே கிடக்க சாப்பிட்ட பிளேட், டீ டம்பளர், வடசட்டி எல்லாம் சிங்கை நிறைத்திருந்தது.​

முதல் வேலையாக வீட்டை ஒரு கூட்டு கூட்டி ஒழுங்கு படுத்தியவள், அடுத்து சாமான்களை விழக்கி, துணியை காய போட்டு வந்து சற்று நேரம் ஓய்வெடுக்க​

வீட்டின் அழைப்பு மணி அடித்தது.​

தலையை சற்று கலைத்து விட்டு, வராத கொட்டாவியை வர வைத்து கொண்டு வேண்டும் என்றே தாமதமாக வந்து கதவை திறந்தாள்.​

" கதவ நீக்க இவளோ நேரமா? " வந்ததும் வராததுமாக பொறிய ஆரம்பித்தார் விஜயா.​

"தூங்கிட்டேன்ம்மா.." என்றாள் ராகம் இழுத்த வாரே.​

" சும்மா நடிக்காத..! பத்து நிமிஷம் முன்னாடி தான் வாட்ஸாப்ல ஆன்லைன் காட்டுச்சு " என்றவர் வீட்டை ஆராய தொடங்கினார்.​

விஜயாவிற்கு எப்பொழுதும் வீடு சுத்த பத்தமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அவ்வளவு தான் ஆடி தீர்த்து விடுவார். அதனால் தான் அவர்கள் வருவதற்கு முன்பே வேதா அத்தனை வேலையும் செய்தது. இருப்பினும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்ப்பவர் போல் குறையை தான் முதலில் கண்டுபிடிப்பார்.​

அவரின் திட்டில் இருந்து தப்புவதற்கு தான் வேதா தூங்குவது போல் மலுப்பி கொண்டிருந்தாள். ஆனால் அப்பொழுதும் விஜயா அவளை விடுவதாய் இல்லை.​

" என்ன இது துணி எல்லாம் மடிக்காம அப்படியே கிடக்குது!?​

காய வெச்சி எடுத்த வத்தல் எல்லாம் இன்னும் டப்பால மாத்தி வைக்காம இருக்க!?​

பிஸ்கெட் பிரிச்சு சாப்பிட்டா பிரிட்ஜ்ல எடுத்து வைனு எத்தனை தடவ சொல்றது? என்ன தான் பண்ண காலையில இருந்து? ஒரு வேளையும் செய்யாம..!!"​

இந்த அம்மாகளிடம் தான் ஒரு சூப்பர் பவர் இருக்கிறது எத்தனை வேலை செய்தாலும் நாம் செய்யாத வேலை மட்டும் தான் கண்ணிற்கு பளீச்சென்று தெரியும்..!​

விஜயா பூஜையை ஆரம்பிக்க அவள் அறைக்குள் சென்று விட்டாள் வேதா.​

வேதாவிற்கு விஜயாவின் வசவு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தினம் தினம் கேட்டு கேட்டு அவளிற்கு அழுத்து போய் விட்டது. வழக்கம் போல் அவளிற்கு பிடித்த ஹாரிஷ் ஜெய்ராஜ் பாட்டுகளை இயர் போனில் கேட்டு கொண்டே கண்ணை மூடினாள் அவள்.​

மறுநாள் காலையிலேயே அவள் சித்தப்பூவுடன் சண்டை கட்டி கொண்டிருந்தாள் வேதா. கிஷோருக்கு நாளை ஸ்கூலில் பேன்சி டிரஸ் காம்பெட்டீஷன். அதற்காக காந்தி தாத்தா வேஷம் போட்டு விட முடிவு செய்து அனைத்து பொருட்களும் வாங்கி வைத்தாயிற்று. நேற்று இரவு அவனிற்கு ஒரு முறை அனைத்தையும் போட்டு பார்த்து ஒத்திகை பார்த்தனர். கிஷோருக்கு அந்த வேடம் சுத்தமாக பிடிக்க வில்லை. இந்த வேஷம் வேண்டாம் என்று அழுதவனை இரண்டு அடி போட்டு படுக்க வைத்து விட்டார் சகுந்தலா. ஆதலால் காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக வேதாவிடம் குற்ற பத்திரிக்கை வாசித்து விட்டு தான் சென்றிருக்கிறான். அவன் பற்றி வைத்த நெருப்பு தான் இப்பொழுது புகைந்து கொண்டிருந்தது.​

" அது எப்படி நீங்க அவனுக்கு தாத்தா வேசம் போடலாம் இதுல தடி வேற கொடுத்து புடிச்சி நிக்க சொல்லி இருக்கீங்க? அவன் கிளாஸ் கேர்ள்ஸ் எல்லாம் பாத்தா சிரிக்க மாட்டாங்க ஒரு வயசு புள்ளைக்கு இப்படி மன உளைச்சல் உண்டு பண்ணுறீங்களே இதுலா நியாயமா?"​

" அப்போ வேற என்ன வேசம் போட்டறதாம்? நீயே சொல்லேன் " ராமசந்திரம் கேட்க.​

" போஸ்..! தி கிரேட் சுபாஷ் சந்திர போஸ்..!!" என்றாள் கெத்தாக.​

" அடியே..! திரும்ப எல்லாம் என்னால கட வீதிக்கு அலைய முடியாது. செத்த நேரம் கம்முனு இரு. நீ இருக்கற தைரியத்துல்ல தான் அவன் ஆடிட்டு இருக்கான் " என்ற சகுந்தலா அவள் மண்டையில் குட்டு வைக்க அதை எல்லாம் அவள் கண்டு கொள்ளவில்லை.​

" பரவால சாய்ந்தரம் அவன் வந்த உடனே அவன கூட்டிட்டு நானு சித்தப்பூவும் போய்ட்டு வந்துறோம் " என்றாள் முடிவாக.​

" என்ன சித்தப்பூ உனக்கு ஓகே தானே? " என்றவள் ராமசந்திரனை பார்க்க அவரோ சகுந்தலாவை பார்த்தார்.​

" என்னமோ பண்ணுங்க..!" என்றவர் உள்ளே எழுந்து சென்றுவிட​

"அப்போ கண்டிப்பா போறோம். கெட் ரெடி சித்தப்பூ சாயந்தரம் ரெடியா இருங்க. அப்படியே எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் இருக்கு அதயும் முடிச்சிறேன். "​

" பாக்கறேன் டா இன்னிக்கு கடை சரக்கு வேற லிஸ்ட் எழுதி கொடுக்கனும் "​

"ஆஆங்.. அதுல முடியாது. என்ன நீ இப்படி பேசுற? எந்த வேலையா இருந்தாலும் இந்த வேல முடிச்சிட்டு தான். எங்களோட வந்து தான் ஆகனும் புரிஞ்சிதா "​

வழக்கம் போல் அதிகார தோரனையில் ரூல்ஸ் பேசி கொண்டிருந்த வேதாவின் முதுகுலையே ஒன்று வைத்தார் விஜயா.​

" வாய அடக்கி பேசுடி..! எத்தனை தடவ சொல்லி இருக்கேன் இப்படி மரியாதை இல்லாம பேசாதனு எல்லாம் நீங்க கொடுக்கற இடம் தான் ண்ணா " என்றார் ராமசந்திரனை பார்த்து.​

" எவளோ இடம் கொடுத்து இருக்கீங்க சித்தப்பூ ஒரு பத்து செண்டு தேறுமா? "​

அவள் நக்கலடிக்க அதற்கும் ஒரு அடியை வைத்த விஜயா,​

" பேச்ச பாருங்க, இவ வயசுல நான் எல்லாம் கல்யாணம் முடிச்சி குடும்பத்த பாத்துட்டு இருந்தேன். இவ என்னடானா இன்னும் சின்ன புள்ள மாறி கிஷோர் கூட சேந்துகிட்டு உங்கள ஏச்சிட்டு இருக்கா"​

" பண்ணி தான் வைங்களேன் கல்யாணம்..! நானா உங்கள வேண்டாம்னு சொன்னேன். அப்றம் ஃபார் யூவர் கைண்ட் இன்ஃபோர்மேஷன் மை டியர் மாதாஜி. நம்ம உடம்புக்கு தான் வயசாகுதே தவர நம்ம மனசுக்கு கிடையாது. எனக்கு என்ன சந்தோசம் தருதோ அத தான் நான் பண்ணுறேன், எப்பவும் பண்ணுவேன். உங்களுக்கு அது புடிக்கலைனா நான் ஒன்னும் பண்ண முடியாது ஜி..!" என்றவள் அதற்கு மேல் அங்கு இருந்தாள் பூசை நிச்சயம் என வீட்டிற்குள் ஓடி விட்டாள்.​

" கொழுப்பு கொழுப்பு உடம்பெல்லாம் கொழுப்பு..! பாருங்க ண்ணா எப்படி பேசிட்டு போறானு. கொஞ்சம் கூட வாய் அடக்கமே இல்ல. பட்டு பட்டுனு பேசவேண்டியது. இவள நெனச்சாலே எனக்கு நெஞ்செல்லாம் அடைக்குது..! நம்ம வீட்டுல இருக்கற வரைக்கும் சரி வேற வீட்டுக்கு போற புள்ள, இப்படி கால நேரம் பாக்காம எங்கயாவுது வாயவிட்டானா காலம் பூரா அவள யாரு தூக்கி சொமக்கறது?? எப்பவுமே அவளுக்கு புடிச்ச மாறியே எல்லாம் நடக்குமா? புடிக்காத மாறி சூழ்நிலை வந்தாலும் அத பக்குவமா கொண்டு போற திறமையும் பொறுமையும் வேணும்ல எடுத்து எரிஞ்சு பேசிட்டா எல்லாம் முடிஞ்சுதா? இவள பெத்த கடனுக்கு நா வாய மூடிட்டு போறேன். நாளைக்கு எல்லாரும் அப்படி இருப்பாங்கனு எதிர்ப்பாக்க முடியுமா?எங்க இருந்து தான் இவளுக்கு இப்படி ஒரு பிடிவாதம் வந்துச்சோ தெரில. இல்ல நான் தான் செரியா வளக்காம விட்டுடேனானும் புரில " என்றவர் வேதாவின் எதிர்காலத்தை நினைத்து கலங்கி போய் நின்றார்.​

 
Last edited:

Mathykarthy

Well-known member
விஜயா சூப்பர்... எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க.... 🤣🤣🤣 வேதாக்கு ஏத்த மம்மி தான்...😝

வேதா விளையாட்டா இருந்தாலும் பொறுப்பாவும் இருக்கா... விஷ்ணு நிலையை புரிஞ்சுக்கிட்டு பேசுறதும் உதவுறதும் ஸுப்பர் 🥰
 

NNK046

Moderator
விஜயா சூப்பர்... எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க.... 🤣🤣🤣 வேதாக்கு ஏத்த மம்மி தான்...😝

வேதா விளையாட்டா இருந்தாலும் பொறுப்பாவும் இருக்கா... விஷ்ணு நிலையை புரிஞ்சுக்கிட்டு பேசுறதும் உதவுறதும் ஸுப்பர் 🥰
நன்றி டியர் 😍😍😍
 

Shamugasree

Well-known member
Vijaya ma romba feel pannathenga. Vedha porupana pullatha. Enga epdi nadanthukanum nu avaluku theriyum. Summa veetula cleaning la korai sollite irukama ponnu manasula enna irukunu therinjukonga.
 

santhinagaraj

Well-known member
வேதாக்கு ஏத்த மம்மி தான் விஜயா எப்படி அவ செய்யாத வேலையை எல்லாம் கண்டுபிடிக்கறாங்க பாருங்க 😂😂😂

வேதா கேரக்டர் செம 👌👌👌
 

NNK046

Moderator
வேதாக்கு ஏத்த மம்மி தான் விஜயா எப்படி அவ செய்யாத வேலையை எல்லாம் கண்டுபிடிக்கறாங்க பாருங்க 😂😂😂

வேதா கேரக்டர் செம 👌👌👌
நன்றி டியர்.. 😍😍😍
 

Advi

Well-known member
பாரேன் எப்படி எல்லாம் ஐடியா தர🤩🤩🤩🤩

சூப்பர் டா நீ❤️❤️❤️❤️
 
Top