Padma rahavi
Moderator
கவிதா சென்ற பிறகு சிவகர்ணிகா அறைக்குச் சென்று அமர்ந்தாள்.
இப்போது தான் வாழ்க்கை தொடங்கி சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் இதென்ன இப்படி ஒரு பிரச்சனை! அவன் உயிரோடு இருந்தாலாவது சாதாரண கல்லூரிக் காதல் என்று கடந்து விடலாம்.
யோசித்துப் பார்த்தால் அவள் அன்று அவனை கடுமையாக பேசியதே அவனைப் பார்த்த இறுதி நாள். அதன் பின் அவனைப் பார்க்கவில்லை.
அதன் பின் வேதிகா இறப்பு நிகழ அவனை மறந்தே விட்டாள். இது சாதாரண விஷயம் என்று சிவனந்தனிடம் கூறலாமா இல்லை மறந்து விடலாமா?
இப்படி பலவாறாக குழப்பிக் கொண்டிருந்த சிவகர்ணிகா மாலை சிவனந்தன் வந்ததைக் கூட கவனிக்க வில்லை.
ஹேய் பொண்டாட்டி என்ன மேடம்கு அப்படி யோசனை என்னைக் கூட கவனிக்காம!
அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசக்கூட அவளால் முடியவில்லை.
அது வந்து லேசா தலைவலி என்றாள்.
அவளை குறுகுறுவென்று பார்த்த சிவனந்தன்,
சீரியல் ரொம்ப பார்ப்பியா கர்ணி என்றான்.
என்னது?
இல்லை சீரியல்ல தான் புருஷனை அவாய்ட் பண்ணனும்னா தலைவலினு சொல்லுவாங்க என்றான்.
அவனை முறைத்தவள், உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா என்றாள்.
கேளு!
உங்க தம்பி எப்படி எப்ப இறந்தாரு என்றாள்.
அவள் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு வேளை உண்மை தெரிந்து விட்டதோ? என்று அவன் உள்ளம் பதறியது. தெரிந்தால் இவ்வளவு சாதாரணமாகவா பேசுவாள்!
அவன் பதில் கூறாமல் இருந்தது அவளுக்கு பதட்டத்தை கூட்டியது.
தற்கொலை அப்படி ஏதும் கூறக் கூடாது என்று அவள் மனம் வேண்டிக்கொண்டே இருந்தது.
சொல்லுங்க. சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான் கேக்கறேன் என்றாள்.
சற்று தயக்கத்துடன் தொடங்கினான்.
அது ஒரு பொண்ணால
அவளுக்கு நா உலர்ந்தது.
என்னது? காதல் தோல்வியா திக்கித் திணறி கேட்டாள்.
இல்லை. அந்த பொண்ணு காதலிக்கல போல. இவன் தான் காதலிச்சிருக்கான்.
அப்புறம்? அவளின் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது.
இவளோ நல்ல பையனை அவள் ஏன் வேணாம்னு சொன்னான்னு புரில என்றான் கோவத்தோடு.
நல்ல பையனா இருந்தா போதுமா? காதல் வந்தா தானே பண்ண முடியும் என்றாள்.
நல்ல பையன், நல்ல வசதி, வீட்ல மாமனார் மாமியார் யாரும் இல்லை இதுக்கு மேல ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்?
முதல் முறையாக அவனை வித்தியாசமாக பார்த்தாள்.
அப்ப ஒரு பொண்ணுக்குத் தேவை இதான்னு நினைக்கிறீங்களா?
இல்லனு சொல்றியா?
சரி. எத்தனையோ பிஸ்னஸ்ல பெரியவங்க எல்லாம் அவங்க பொண்ணை உங்களுக்குத் தர தயாரா இருந்தப்ப நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணீங்க? அவங்களை கல்யாணம் பண்ணிருந்தா பிஸ்னஸ்கும் உதவியா இருக்கும். நல்ல வசதி வேற என்று கேட்டாள்
என்ன பேசுற நீ? வாழ்க்கைக்கு இதா தேவை! காதல் வேணாமா? அது உன் கிட்ட தானே எனக்கு வந்துச்சு. என்று பேசிக் கொண்டே சென்றவன் தன் தவறு உணர்ந்து நிறுத்தினான்.
அது வரை அவன் பேசுவதைக் கேட்டவள்,
இப்ப சொல்லுங்க அந்த பொண்ணு பண்ணதுல என்ன தப்பு?
அது வந்து! என்ன இருந்தாலும் கொஞ்சம் பழகியாவது பாத்திருக்கலாம் என்றான்.
அவன் தம்பி மீது இருக்கும் பாசம் அவளுக்குப் புரிந்தது.
சரி என் கேள்விக்கு இன்னும் பதில் வரலையே. அவரு எப்படி இறந்தாரு.
இவ எதுக்கு அதையே கேக்கறா என்று கடுப்பானான்.
அது எனக்கும் சரியா தெரியாது. அன்னிக்கு முழுக்க ரொம்ப அப்செட்டா இருந்தான்னு அவன் நண்பர்கள் சொன்னாங்க. அந்த பொண்ணு திட்டிட்டான்னு. அன்னிக்கு ராத்திரி அவனும் அவன் நண்பன் சிவாவும் கார்ல வரும் போது விபத்து ஆகி இறந்துட்டான். அவன் தான் கார் ஓட்டிருக்கான்.
வார்த்தைகள் ஏதும் முற்றுபெறாமல் பேசிக்கொண்டு இருந்தான். அவன் முகத்தில் தெரிந்த வேதனை அவளை மேலும் குற்றவுணர்ச்சி ஆக்கியது.
அந்த பொண்ணு யாருனு உங்களுக்குத் தெரியுமா?
தெரிஞ்சா இப்படி இருக்க மாட்டேன். அது தெரிஞ்சவன் சிவா மட்டும் தான். மத்தவங்களுக்கு பொண்ணு யாருனு தெரில. சிவா கோமால இருந்து இப்ப தான் முழிச்சிருக்கான். கொஞ்ச நாள்ல தெரிஞ்சிரும். தெரிஞ்சதும் இப்படிப்பட்ட பையனை ஏன் வேணாம்னு சொன்னான்னு அவளை நேருக்கு நேர் கேக்காம விடமாட்டேன் என்றான் கண்களில் அனல் பறக்க.
சிவகர்ணிகாவின் உடலில் கிலி பரவியது. கிடைத்த நல்ல வாழ்க்கை நீடிக்காதோ என்று பயமே வந்து விட்டது. மேலும் அவன் இறந்த நாள் பற்றி கேட்க அவளுக்கு தோன்றினாலும் அவனின் கோபத்தைக் கண்டு பயந்து விட்டாள்.
அதன் பின் அவன் வேறு உலகில் சஞ்சரிப்பது போல் அவளுக்குத் தோன்றியது. இவளிடம் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது அவளுக்கும் நிம்மதியாக இருந்தது.
மறுநாள் அவன் அலுவலகம் சென்றதும் மெதுவாக வசந்தியிடம் பேச்சு கொடுத்தாள்.
அவன் இறந்த தேதி பற்றி அவளுக்கும் சரியாகத் தெரியவில்லை. ஒரு முடிவுடன் சிவனந்தன் கோப்புகள் வைத்திருக்கும் அறையை திறந்தாள்.
விஷ்வாவின் கோப்பை எடுத்தவள் வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தாள். அதில் விஷ்வாவின் இறப்புச் சான்றிதழ் இருந்தது.
08-09-2016 என்று இருந்தது.
தான் கல்லூரி இறுதி ஆண்டு பயின்ற வருடம். தான் கடுமையாக நடந்து கொண்ட அன்று இரவு தான் இது நிகழ்ந்து இருக்குமோ?
மீண்டும் தேதியைப் பார்த்தவள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள்
இது எப்படி சாத்தியம்!
வேதிகா இறந்ததும் இதே தினம்! விபத்து! குடித்து விட்டு கார் ஓட்டியவன் மோதியதால் அவள் இறந்தாள்.
அப்படியெனில் தன் அக்காவை இடித்து கொன்றவன் விஷ்வாவா?
எதிரே மோதிய ஆளும் இறந்து விட்டதால் அவர்கள் குடும்பத்தை பார்க்க சிவகர்ணிகா பெற்றோர் விரும்பவில்லை. என்ன கேட்டாலும் போன தன் பிள்ளை வருமா என்ற வேதனையுடன் போலீஸ் கேஸ் ஆக்காமல் விட்டு விட்டனர். இல்லையெனில் சிவனந்தனைப் பற்றி தெரிந்திருக்கும்.
நினைக்க நினைக்க அவளுக்கு ரத்தம் கொதித்தது. இது சிவனந்தனுக்கு தெரியாமல் இருக்குமா? ஏமாற்றி விட்டான் என்று ஆத்திரமாக வந்தது.
தன் அக்கா சாவிற்கு தானே காரணமாகி விட்டோமே! தான் நடந்து கொண்ட விதத்தால் அல்லவா அவன் குடித்து விட்டு தாறு மாறாக வண்டி ஓட்டி ஏதும் அறியாத வேதிகா சென்று விட்டாள். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சிவனந்தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்த சிவா, சில பேச்சுக்களுக்கு பிறகு விஷ்வா காதலித்த பெண் அன்று நடந்து கொண்டதைக் கூறினான்.
அவன் கூறக் கூற கண்களில் கோபம் ஏறியது சிவனந்தனுக்கு.
சிவா. அந்த பொண்ணு யாரு? போட்டோ காட்டு.
கல்லூரி பயிலும் போது எடுத்த போட்டோவை காட்டினான் சிவா.
அதில் சுடிதார் போட்டு குறும்புச் சிரிப்போடு சிரித்துக் கொண்டிருந்தாள் சிவகர்ணிகா.
இப்போது அதிர்வது சிவனந்தன் முறையாயிற்று.