எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 4

NNK-41

Moderator

அகம் 4​

டைரி​

அன்று பள்ளி விடுமுறை நாள். எனக்கு பிடிக்காத நாளும் கூட. மிஸ்ஸை என்னால் பார்க்க முடியாதே. மனம் சோர்வடையும் அதன் பெயர் ஏக்கம் என்று மிஸ் சொன்னாங்க. ஆனா இன்று அந்த ஏக்கத்துக்கு விடுமுறை போலும். மிஸ் வீட்டுக்கு வந்திருந்தாங்க,​

நான் ஓடிச்சென்று அவங்களை அணைச்சிக்கிட்டேன். அம்மா அப்பா என்னை விசித்திரமா பார்த்தாங்க. மிஸ் சொல்லிக்கொடுத்ததை அவங்ககிட்ட விளக்கினேன். அப்பா முகம் மாறி போனார். அம்மா மிஸ்ஸை பார்த்து எங்க குடும்பத்துல இந்த கட்டிப்பிடிக்கிற பழக்கம் எல்லாம் இல்லை என்று சொன்னாங்க.​

அது உணர்ச்சியின் வெளிப்பாடு குடும்ப வழக்கத்தில் சேருமா? தோன்றியதை மிஸ்ஸிடம் வினவினேன். சட்டென அம்மா என்னை கிள்ளினார். வலித்தது. அப்பா அம்மாவை முறைத்தார். குரலை செருமிய மிஸ் என்னை எங்கேயோ அழைத்து செல்ல அனுமதி கோரினார்,​

நான் மிஸ்ஸோடு வெளியே போக போகிறேனா?? ஹை… ஜாலி.. ஜாலி!! என்னை உடை மாற்ற சொல்லி அனுப்பியர்வர்கள் பின்பு ஏதோ பேசிக்கொண்டனர்.​

விறுவிறுவென கிளம்பினேன், எனக்கு பிடித்தமான நீல நிற ஃபிராக் போட்டுக்கொண்டேன். ஓடிவந்து மிஸ் பக்கத்தில் நின்ற பொழுது அம்மாவின் முகம் இறுகியிருந்தது. என்னை வெறிக்க பார்த்தார். ஏன்?​

“இவளை பெத்ததுக்கு இன்னும் நான் என்னென்ன படனுமோ!” என்று தலையில் அடித்துக்கொண்டார். மிஸ் முகம் சிவந்திருந்தது. அப்பா முகம் கலங்கியிருந்தது. என்னை வெளியே அனுப்ப விருப்பமில்லையோ? ஐயோ!! நான் மிஸ்ஸோடு போக முடியாதா? மிஸ்ஸின் கையை இறுக பற்றிக்கொண்டேன்.​

என்னை பார்த்த மிஸ் இந்த உடையில் நான் பார்க்க பொம்மை போல் இருப்பதாக சொன்னாங்க. மற்றதெல்லாம் மறந்து போச்சு எனக்கு. ஐ லவ் மை மிஸ்.​

மிஸ்ஸோட வெளியே போறேன் என்ற சந்தோஷத்தில் ஷூ போட மறந்துட்டு மறுபடியும் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள்ளே பேச்சு சத்தம் கேட்டுச்சு.​

*********************​

“என்னம்மா அந்த டீச்சர் இப்படி சொல்லிட்டு போறாங்க!! அப்படினா மலருக்கு பைத்தியமா?” பூமிகா அதிர்ந்து கேட்க​

“பூமிகா!!” குரல் உயர்த்தினார் நீலகண்டன்.​

“அவளை ஏன் சத்தம் போடுறீங்க… பெரியவ கேட்டதுல என்ன தப்பு? சின்னவளுக்கு மூளை வளர்ச்சி குறைவுனுதானே அவங்க சொன்னாங்க?” பெரியவளை பெற்ற அதே கருவறையில் வந்தவள்தான் சின்னவளும் என்ற பாசம் துளியும் இல்லை சாவித்திரியின் பேச்சில்.​“அவங்க அப்படி சொல்லல. சும்மா வாய்க்கு வந்ததை உளறாதே சாவி!! அவளுக்கு நிறைய விஷயங்கள் புரிவதற்கு சிரமப்படுறா… அதனால் நிறைய சந்தேகங்கள் கேட்கிறாளாம். ஆட்டிசமா இருக்குமோ என்ற சந்தேகத்தில்தான் டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போறதுக்கு பெர்மிஷன் கேட்க வந்திருந்தாங்க”​

“மலருக்கு ஆட்டிசம் இல்ல அப்பா. அவளுக்கு பைத்தியம். அன்னைக்கு கூட பானையை போட்டு உடைச்சா!! அம்மாக்கு தெரியும். அப்புறம் வலினாகூட என்னானு தெரியல... அண்ணாகிட்ட கூட கெட்ட வார்த்தை பேசினாளாம். எங்ககிட்ட அவ பேசுறதே இல்ல. அவளுக்குள்ள அவ பேசிக்கிறா சிரிச்சிக்கிறா… அப்போ அவ பைத்தியம்தானே? நான் சரியாதான் சொன்னேன்… அவ பைத்தியம்தான்!!” பூமிகா அடித்து சொல்ல​

“ஏய் பூமிகா!! இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தேனா கண்டிப்பா ஒரு நாள் என் கையால நீ அறை வாங்குறது நிச்சயம் பார்த்துக்கோ!!” நீலகண்டன் கண்டிக்க​

“நல்லா இருக்கே நீங்க பேசுறது!! பைத்தியத்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு இவ மேல கைய வச்சீங்க…. நான் சும்மா இருக்க மாட்டேன் ஆமா!!” சாவித்திரி வரிந்துக்கட்டிக்கொண்டு வர​

“ஏன் இப்படி பேசுற சாவி… அவளும் நம் மகதானே… பார்க்கப்போனா நாமதான் அவகிட்ட இருக்கிற வித்தியாசத்தை கண்டு பிடிச்சிருக்கனும்” துயரத்துடன் நீலகண்டன் சொல்ல​

“ஏன் எனக்கு வேற வேலை இல்லனு நினைக்கிறீங்களா? உங்களுக்கு பரவாயில்ல. காலைல வேலைக்கு போனா சாயந்திரம் வேலை முடிஞ்சிடும்… எனக்கு என்ன அப்படியா? தூங்குற நேரத்தை தவிற மத்த நேரம் ஓய்வா இருக்கிறதை பார்த்திருக்கீங்களா?? நல்லா கேள்வி கேட்பீங்களே!!” கையில் சிலம்பு மட்டும்தான் இல்லை. கண்ணகியின் ஆவிதான் அவருள் புகுந்துவிட்டதோ என பயந்தே போனார் நீலகண்டன்.​

*****************​

கேட்ட அனைத்தையும் மிஸ்ஸிடம் ஒப்பித்தேன். பைத்தியம் என்றால் என்ன என்று கேட்டேன். புன்னகையுடன் கேட்டவரின் முகம் மாறியது. என்னை பார்த்தார். புன்னைகைத்தார். பின்பு என் தலையை கோதிவிட்டு ஒரு இடத்துக்கு அழைத்து சென்றார். அந்த இடம் பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு… ஒரு பூங்கா போல.​

அங்கே மிஸ் மல்லிகா போல ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க பெயர் மிஸ் ஜானகி. என்னை பார்த்து கை விரிச்சி வா என்று சொன்னாங்க. மிஸ்ஸை பார்த்தேன். போ என்று சொன்னாங்க. ஆனா நான் போகலை மிஸ் பின்னால ஒளிஞ்சிக்கிட்டேன்.​

மிஸ் என்னை அவங்க பக்கத்துல உட்கார சொன்னாங்க. நான் மிஸ் பக்கத்திலேயே உட்கார்ந்துக்கிட்டேன். ஒரு மணி நேரமா மிஸ் ஜானகி என்கிட்ட பல கேள்விகள் கேட்டாங்க. பதில் சொன்னேன்.​

அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க ஒரு டாக்டர் என்று. எனக்கு சாக்லட் கொடுத்தாங்க… எனக்கு உடனே காலுக்கு டிரீட்மண்ட் கொடுத்த டாக்டர் ஞாபகம் வந்துச்சு. மிஸ் ஜானகி கிட்ட அதை பத்தி சொன்னேன். அப்புறம் ஐஸ்கிரீம் கொடுத்தாங்க. சுதீஷ் பத்தி சொன்னேன். அவன்தான் எனக்கு முதன் முதல்ல கண்ணீர் வர வச்சத பெருமையா சொன்னேன்.​

மிஸ் மல்லிகா கண்ணீர் விட்டாங்க. அன்னைக்கு நான் அழுததை நினைச்சு கவலை வந்திருச்சி போல. உடனே நான் மிஸ்ஸை சமாதானம் செய்தேன். 'எனக்கு அப்போ வலிச்சது இப்போ இல்லனு' சொன்னேன். ‘அதுக்கில்ல மா’ என்று சொல்லிட்டு டீச்சர் என்னை அணைச்சிக்கிட்டாங்க. நானும்தான்.​

***********************​

எனக்கு பைத்தியம் இல்லையாம். பைத்தியம் என்றால் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று அர்த்தமாம். இன்னும் வேறு என்னென்னவோ சொன்னாங்க டீச்சர். எனக்கு ஆரம்ப நிலை ஆட்டிசமாம். எதையும் புரிந்துக்கொள்ள எனக்கு சிறு அவகாசம் தேவையாம்.​

அன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் என்னை டாக்டர் ஜானகியிடம் அழைத்து செல்வாங்க மிஸ். ஞாபகசக்தி அதிகரிக்க சில பயிற்சிகளும் சத்தான சாப்பாடையும் கொடுத்தாங்க. அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தாங்க. நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.​

ஆனால் வீட்டுக்கு வந்தா என்னுடன் பேச யாரும் இல்லாததால். நான்… என் புத்தகம்… என் உலகம் என்று என்னை சுருக்கி கொண்டேன். அக்கா என்னை பார்த்த ஆ.. ஊ என்று கத்தி பயமுடுத்துவா… சில நேரங்களில் பல்லி, கரப்பான் பூச்சிகளை என் மேல் தூக்கி போட்டுருவா… நான் பயத்துல நின்ற இடத்திலேயே பாத்ரூம் போயிடுவேன். இதனால பல தடவை அம்மாவிடம் அடி வாங்கியிருக்கேன். வசவுகளும் கூட.​

அம்மாக்கும் அக்காக்கும் என்னை கண்டாலே பிடிக்கல. அப்பாக்கு என்னிடம் பேசவே நேரம் இல்ல. அண்ணன் அவன் படிப்பு அவன் உலகம். தங்கையாகூட என்னை அவன் சேர்த்துக்கல. எனக்கு மட்டும் ஏன் இந்த ஆட்டிசம் வந்தது? இதுல என் தவறு என்ன இருக்கு? நான் கேட்டேனா?​

**********************​

மிஸ் மல்லிகா இப்போ மிசஸ் மல்லிகா ஆகிட்டாங்க. வேறு மாநிலத்துக்கு மாற்றாலாகி போய்ட்டாங்க. அண்ணா கல்லூரிக்கு போயிட்டான். பூமிகா இப்போ ப்லஸ் டூ படிச்சி முடிச்சிட்டா. நான் பத்தாவது படிக்கிறேன். இப்போ எல்லாம் எனக்கு ட்ரீட்மெண்ட் எடுப்பதில்லை. ஆரம்ப நிலை ஆட்டிசம் என்பதால் தெளிவு வந்திடுச்சி என்று சொன்னாங்க. கூட்டிட்டு போக யாருக்கும் நேரமில்லாததால் கூட இருக்கலாம்.​

நான் பெரியவளாகிவிட்டேன். அம்மாவிடம் சொன்னேன். ஆச்சரியபட்டார். எப்படி தெரியும் என்று வினவினார். அது எனக்கே தெரியும் படிப்பு அதை எனக்கு சொல்லி கொடுத்தது. அம்மாவும் சரி அக்காவும் சரி எனக்கு சொல்லி கொடுக்கல. மிஸ் மல்லிகா கிளம்புவதற்கு முன் பல விஷயங்கள் எனக்கு தெளிவு படுத்தியிருந்தாங்க. ஒரு பெண் பூப்படைவதிலிருந்து குட் டச் பேட் டச் வரை சொல்லியிருந்தாங்க.​

அப்பொழுதுதான் சுதீஷ் செய்த காரியத்தின் விபரீதம் புரிந்தது. இன்னுமே அதை நினைக்கையில் உடல் நடுங்குகிறது. இனி எல்லோரிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.​

அம்மாவிடம் சில மாறுதல்கள் தென்பட்டன. அவர் கண்களில் முதன் முதலில் பாசத்தை கண்டேன். ஆட்டிசம் இருப்பதால் எங்கே நான் பூப்படைய மாட்டேன் என்ற கவலை அவருக்கு இருந்ததாம். பூமி அக்கா பன்னிரண்டு வயதில் பெரிய மனுஷியாகிட்டாளாம். அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டேன். பாவம் அம்மா.​

*****************​

மஞ்சள் நீரில் நீராட்டினர். குச்சி வீடு கட்ட சுதீஷ் வந்தான். என்னை பார்த்துக்கொண்டே ஓலை பின்னினான். யாரும் பார்க்கா வன்னம் கண்ணடித்தான். அழகி என்று கூப்பிட்டான். என் மாமா வந்து என்னை மருமகளே மருமகளே என்று அழைத்து கொண்டாடினார். புன்னகைத்து கொண்டேன்.​

‘என் அப்பாவிடம் மட்டும் பூக்கும் இந்த குறிஞ்சி இதழ் என்னிடம் கதை பேசாதோ?’ என்று கவிதையா சொன்னான். ஏனோ அவனைக்கண்டால் எனக்கு பயம் வந்தது. பார்வையால் அண்ணனை தேடினேன். எப்படி என்று தெரியல மறு வினாடி அண்ணன் என் அருகில் இருந்தான். ஜீ பும் பா பூதம் போல் புஃப் என்று மாயமானான் சுதிஷ்.​

மாமா கிளம்பும் நாளன்று சுதிஷ் என்னை நெருங்கினான். தொண்டைக்குள் பயப்பந்து அடைத்துக்கொண்டது. வெளிப்படையாகவே என் உடல் நடுங்கியது. ‘மானை போல மிரளுற’ என்றான். யாராவது என்னை காப்பாற்றனும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.​

‘டேய் வாடா கிளம்பலாம்’ மாமாவின் குரல் கேட்டது. நான் எட்டி பார்க்க முனைகையில் சட்டென என்னை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு சென்று விட்டான் சுதிஷ் அந்த எருமை மாடு.​

அவன் சென்றதும் ‘ச்சீ!!’ என்று கன்னத்தை துடைக்க ‘ச்சீ!!’ என்ற ஒரு குரல் கூடவே கேட்டது. திரும்பி பார்த்தால் பூமிகா நின்று கொண்டிருந்தாள்.​


 
Last edited:

NNK-41

Moderator
Avan panninathukku ivalai paarththu yeen ippadi sollanum????

Saavi & boomi😬😬😬😬
இந்த பூமிக்கு தங்கை மேல பழி போடுறதுக்கு இது ஒரு சாக்கு. :mad:
 
பூமிகா அமைதியா இருந்தாலே வீட்டுல பிரச்சினை குறைஞ்சிடும்!!!... இந்த அம்மா கொஞ்சம் கூட எதையும் யோசிக்கவே மாட்டாங்களா!!???.... மல்லிகா மிஸ்😍
 

NNK-41

Moderator
பூமிகா அமைதியா இருந்தாலே வீட்டுல பிரச்சினை குறைஞ்சிடும்!!!... இந்த அம்மா கொஞ்சம் கூட எதையும் யோசிக்கவே மாட்டாங்களா!!???.... மல்லிகா மிஸ்😍
பூமிகாவாவது அடங்குறதாவது... அதெல்லாம் அவ அகராதியில இல்ல. மலருக்கு கிடைச்ச தேவதை மல்லிகா மிஸ்:love:
 

NNK-41

Moderator
சுதிஷ்😡😡😡பூமிகா 🤬🤬மல்லிகா மிஸ் சூப்பர்😍😍😍
தாமதமாக பதில் சொல்வதற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி டியர்:love:
:love::love:
 
Top