எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீக்கமற நிறைந்தாய் உயிரே 1

NNK 75

Moderator
நீக்கமற நிறைந்தாய் உயிரே 1



மார்கழி பனியில் தெருவில் இருந்த மாரியம்மன் கோவிலில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அந்த சிறிய ஓட்டு வீட்டின் உள்ளே இருந்து திருப்பாவை பாடல் ஆறாம் திருமொழி பாடலான,

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்..


ஆயிரம் யானைகள் புடை சூழ என்னை பெண் கேட்டு நாராயணன் வருகிறான் என்ற செய்தியை கேட்ட ஊர் மக்கள் வழி எங்கும் தோரணங்கள் கட்டி பொன்னால் செய்த குடங்களை வைத்து அலங்கரித்தும் இருந்ததை நான் கனவில் கண்டேன் தோழி என ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாடலின் வரியில் மெய் சிலிர்த்து நின்றிருந்தாள் பெண்ணவள்.

ஆனால் அவ்வரியில் உள்ள உண்மையில் விரக்தியான புன்னகை தான் வந்தது.

இப்படி ஊரே அழைத்து தனக்கு திருமணம் செய்து வைக்க எந்த சொந்த பந்தம் உள்ளது.. அதுவும் இல்லாமல் ஆயிரம் யானைகள் இல்லாமல் ஆயிரம் பேரை அழைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள யார் முன் வருவார்..

யாருமில்லாத அனாதையாய் வாழ்ந்து வருபவளுக்கு யார் இதையெல்லாம் செய்ய முன் வருவார்கள்.

கண் மூடி அந்த கிருஷ்ணனிடம் நின்றவள்,

"உலகாளும் பரம்பொருளே யாவுமாய் நிற்பவனே நீயே துணை.." என இருகரத்தையும் தூக்கி வணங்கியவள் பூஜையை முடித்து விட்டு சமையல் கட்டிற்கு சென்றாள்.

ஒருத்திக்கு பெரிதாய் என்ன செய்வது என புரியவில்லை.. இது தினமும் நடக்கும் நிகழ்வு தான்.. பெரிதாய் சாப்பாட்டில் விருப்பம் இல்லையென்றாலும் வயிறு என்று ஒன்று உள்ளதே அதற்கு எதாவது குடுத்தால் தானே என்று நிலையில் எதையாவது சமைத்து சாப்பிட்டு விட்டு செல்வாள்.. இன்றோ வேற எதையும் யோசிக்கும் நிலை இல்லாமல் சேமியாவில் ஒரு கேரட் ரெண்டு பீன்ஸ் வெங்காயம் ஒன்று பச்சை மிளகாய் இரண்டு என எல்லாவற்றையும் போட்டு கிச்சடி செய்து சாப்பிட்டு விட்டு சென்றாள் நன்விழி.

ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லாரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பேராசிரியை அவள்.. அவள் ஆசைப்பட்டு இந்த வேலைக்கு வந்தாள்.

ஏனோ யாருமில்லாத அவளுக்கு மாணவர்களுடன் இருக்கும் அந்த நேரம் தான் பொன்னான நேரம்.

அதுவும் நட்பு என்று யாரையும் தன் அருகில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டாள்.. பட்ட அடியும் வலியும் வேதனையும் இன்னமும் மனதோரம் மிச்சமிருந்தது போல் யாரிடமும் பேச மாட்டாள்.

ஆனால் அவளின் வகுப்புக்களை எந்த ஒரு மாணவரும் புறக்கணிக்க மாட்டார்கள்.

யாரிடமும் பேசவில்லை என்றாலும் அவளுக்கென கொடுத்த வேலைகளை திறம்பட செய்வதில் வல்லவள்.. அது போல் அவள் ஒரு முறை பாடம் எடுத்தாள் போதும் அதை வைத்தே தேர்வு எழுதி வென்ற மாணவர்களும் இங்கே உண்டு.

அத்தனை தெளிவாய் பாடத்தின் கருப்பொருளை உணர்த்துவாள்.

மாணவர்களுக்கு அவளை பிடித்தாலும் ஒரு அளவுக்கு மேல் யாரையும் தன் அருகில் நெருங்க விடாதவளை இன்னமுமாய் தான் பிடித்து போனது.

யாரிடமும் எந்த விதமான ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல் பாடத்தில் எப்பொழுது சந்தேகம் கேட்டாலும் முகம் சுளிக்காமல் சொல்லி கொடுப்பாள்.

தியரியாக சொல்லிக் கொடுப்பதை செயல்முறையில் சொல்லிகொடுத்து மாணவர்களை முன்னேற்றம் பெற செய்வாள்.

அந்த கல்லாரியில் நன்விழி என்றால் தெரியாத மாணவர்கள் ஒருவரும் இல்லை.

அவளுடைய டிபார்ட்மெண்ட் இல்லையென்றாலும் தனக்கு தெரிந்த பாடத்தை மாணவர்களுக்கு விளக்குவதே அவளின் நிம்மதிக்கான மருந்து.

ஆனால் மாணவர்களிடம் நல்ல பெயர் வாங்கியவளை மற்ற பேராசிரியர்களுக்கு பிடிக்காமல் போனால் அதில் ஆச்சர்யம் தான் என்ன.

அவள் மேல் யாரும் எந்த ஒரு பழியையும் சுமத்த முடியாது.. தான் உண்டு தன் வேலை உண்டு என்பவளை வலுக்கட்டாயமாக வம்பிழுப்பதை அங்கே சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தன் வேலையை செவ்வென செய்யும் பெண் மாயாவி இவள்.

அதுவும் அங்கிருந்த மற்றவர்களுக்கு அவளை எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் இருந்தது.. அவளை அப்படி யார் பாதுகாக்கிறார்கள் என்பது யாரும் அறியாத ரகசியம் கூடவே.

ஆனால் அவளின் நிழல் போல் அவளின் பாதுகாப்பும் உள்ளது.

அதுவும் அவளை பற்றிய எந்த ஒரு கம்ப்ளைன்டும் அந்த கல்லூரி நிர்வாகம் எடுத்துக் கொள்வதில்லை.. அவளின் மேல் தவறாய் வர்ணம் பூசுபவர்களை தான் அது அதிகமாய் பாதிக்கிறது.

சிலர் அது தெரிந்து கொண்டு விலகினாலும் சிலரோ போட்டி பொறாமையில் இன்னம் அவளை சாடி கொண்டிருக்கிறார்கள்.

அன்று கல்லாரிக்கு வந்தவளை முதல்வர் அழைத்ததாக வந்து அட்டெண்டர் சொல்லிவிட்டு செல்ல இவளும் எதற்காக என்று யோசித்தபடி சென்றாள்.

முதல்வர் தணிகாசலம் என்று பெயர் பலகை பொதிந்திருந்த அறைக்கதவை திறந்து,

"எக்ஸ்க்யூஸ் மீ சார்.." என்று அழைத்தபடி உள்ளே சென்றாள்.

" எஸ் கம்மின்.." என்றபடி தலைநிமிர்ந்த அந்த நடுத்தர வயதுடையோர் அவளென்றதும் அந்த முகத்தில் சிறியதாய் புன்னகை அரும்பியது.

"சார் கூப்பிட்டீங்க ன்னு சொன்னாங்க.." என்றபடி அளவாய் புன்னகைத்து அங்கே நின்றாள்.

"வாங்க நன்விழி சிட்டவுன்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.. இப்போ நேரமிருக்கா இல்லை ஈவ்னிங் பேசலாமா.." என்றார் மலர்ந்த முகத்துடன்.

" பரவாயில்லை சொல்லுங்க சார்.." என்றாள் மென்மையாய்.

"கொஞ்சம் பர்சனல் மா.. இத்தனை நாளா நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொல்லிருக்காங்க.. அது தான் கேட்டேன்.. ஆனா உங்களுக்கு தான் பர்சன்ல் இங்கே பேச பிடிக்காதே.. அது தான் ஈவ்னிங் வீட்டுக்கு வந்தீங்கன்னா பேசலாம்.." என்றார் அதே புன்னகை மாறாது.

அவர் கூறிய பதிலில் பெண்ணவள் முகத்தில் பல மாற்றங்கள் வந்து போக சற்று யோசித்தபடி,

"சரிங்க சார் நான் ஈவ்னிங் வரேன்.." என்றபடி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அவள் வாசலை தொடும் நொடியில், "பிறந்த நாள் வாழ்த்துக்கள் நன்விழி.." என்ற தணிகாசலத்தின் வாழ்த்தில் ஸ்ட்ரைக் ஆகி அப்படியே நின்று விட்டாள்.

" சார்.." என்றாள் மெல்ல திரும்பி.

அவரோ அதே புன்னகை மாறாது, "நீ மறந்திருக்கலாம் மா.. ஆனா நாங்க எப்பவும் மறக்க முடியாது இந்த நாளை.. எனிவே பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. அப்பறம் இதை உன்கிட்ட தர சொல்லி உத்தரவு.. எனக்கு தெரியும் இதை நீ வாங்க மாட்டேன்னு.. ஏன் இதை கொடுத்தவங்களுக்கும் தெரியும்.. ஆனா இன்னைக்கு உன்னோட பிறந்த நாளாச்சே.. இது உன்கிட்ட சேரனும்னு கொடுத்தவங்களோட பேராசை.. " என்று ஒரு கவரை கொடுத்தார்.

அதை தன் நடுங்கும் கரங்களால் வாங்கியவளின் பொன்னிற தேகம் சிலிர்த்த நொடி ஏனோ அவளில் உண்டான புத்துயிர் மனதின் அடி ஆழத்தில் புதைந்த பாசத்தை மீட்டெடுக்க போதுமானதாய் இருந்தது.

வசீகரன் கம்பெனிஸ் என்ற பத்தடுக்கு மாடியின் மேல் உள்ள அலுவலகத்தில் ஒருவனின் குரல் உரக்க ஒலித்தது.

"வாட்ஸ் ராங் வித் யூ சார்லஸ்.. மிஸ்டர் அமுதன் நீங்க என்ன நினைச்சி இதை இப்படி பண்ணீங்க.. உங்களுக்கு யாரு அந்த அதிகாரத்தை தந்தது.. திஸ் ஈஸ் மை கம்பெனி.. ஐ ஆம் ஆன் ஏ ஓனர்.. ஆனா என்னை கேட்காம எதுக்காக அந்த ஆர்டரை கேன்சல் பண்ண சொன்னீங்க..

ஒன் வீக் இல்லைன்னு சொல்லவும் கம்பெனியை உங்களுக்கு எழுதி கொடுத்துட்டு போயிட்டேனா.. என்ன தைரியம் இருந்தால் என் கம்பெனியில் தரமில்லாத பொருளை யூஸ் பண்ணிருப்பீங்க.. இனி நீங்க இந்த வேலையில் இருக்க வேணாம்.. சார்லஸ் இவரோட டிஸ்மிஸ் ஆர்டரை ரெடி பண்ணிடுங்க.." என்றவன் வேறு எதையும் காது கொடுத்து கேட்காமல் அங்கிருந்து சென்றான் அவன் வசீகரன்.

பணத்தில் பிறந்து கோடிகளில் புரண்டு வளர்ந்தவன்.

ஆனால் கஷ்டங்களை தெரிந்து கொண்டு வளர்ந்தவன்.. எப்படி புத்தர் அரச குடும்பத்தில் பிறந்து கஷ்ட நஷ்டங்களை தெரிந்து கொண்டு அரச வாழ்க்கையை துறந்து வந்தாரோ அது போல தான் பணக்கார வாழ்க்கையை துறக்கவில்லை.. ஆனால் ஏழை எளிய வறியவர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான்.

அவன் அலுவலகத்தை விட்டு வெளியே வரும் நொடியில் அவனின் அலைபேசி சத்தமிட அதை எடுத்து காதுக்கு கொடுத்தவனின் செவிகளுக்கு விருந்தாய் ஒரு குரல் மெல்லினமாய் ஒலித்தது.


செம்பருத்தி மலர் போலே
சொக்க வெள்ளி மணி போலே
கண்ணும் ரெண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடிமேல் வா..
பாட்டு தமிழ்பாட்டு பாட
அதை கேட்டு பூவிழி
இமை மூடியே சின்ன
பூவே கண்ணுறங்கு..


அந்த பாடலில் நடந்து கொண்டிருந்தவனின் கால்கள் அப்படியே நின்றுவிட்டது.. அவனின் கண்களில் அளவில்லாத மகிழ்ச்சி பூக்க அவனின் இதழ்கள்,

" ஹனி..." என்று மென்மையாய் உச்சரித்தது.


ஹாய் மக்களே நீக்கமற நிறைந்தாய் உயிரே இது ஒரு காதல் கதை தான் பா.. நம் வாழ்வில் நாம் எத்தனையோ காதலை கண்டிருப்போம்.. பெற்றவர்களின் காதல் சகோதர காதல் பிள்ளைகளில் மேல் காதல் அதுபோல் இதுவும் ஒரு வகையான காதல் தான்.

பெண்ணவளின் மேல் தீராத காதல் கொண்ட நாயகன்.. யார் தனக்கு உதவுகிறார்கள் என்பதை அறியாத நாயகி.. அதுவும் நட்பு சொந்தம் என எதுவும் வேண்டாம் என அனைத்தையும் துறந்து வாழ்பவள் ஆடவனின் காதலை உணர்வாளா..? அப்படியே உணர்ந்தாலும் இணை சேர்வார்களா..?

பொறுத்திருந்து தான் பார்ப்போமே இந்த இணைகளின் காதல் காவியத்தை..

நாயகன் : வசீகரன்
நாயகி : நன்விழி
 

Attachments

  • ei0Z7UT23407.jpg
    ei0Z7UT23407.jpg
    530.9 KB · Views: 0

Saranyakumar

Active member
வாழ்த்துகள் சிஸ் 😍😍😍ஹீரோ,ஹீரோயின் பேர் நல்லாயிருக்கு 😍😍😍
 
பெயர்கள் ரொம்ப அழகா தேர்ந்தெடுத்துருக்கீங்க!!... அருமையான ஆரம்பம்!!.. ஏன் அவ தனியா இருக்கா???... அப்படி என்ன வலி அவளுக்கு!!...
 

Advi

Well-known member
விழியை பாதுகாப்பது வசி தானோ....

இவ தான் பிரிஞ்சி வந்து இருக்கா, சொந்தம் இருக்காங்க போலவே.....
 
Top