சிறிது நேரத்திற்கு, முன்பாகத் தான், தன்னுடன் பணிபுரியும், சகப் பெண்கள், தன்னை இழிவுபடுத்திய போது, அழுதவளோ, இப்போது, இவனுடைய ஏளனப் பார்வையையும், சிரிப்பையும், கருத்தில் கொள்ளாமல், அங்கேயிருந்த, அந்த நிகழ்ச்சியை, நடத்துபவரிடம்,”சார்! எப்போ இன்டர்வியூவை, ஸ்டார்ட் பண்ணனும்?” என்று வினவினாள் ஹாரண்யா.
தன்னை அவமானப்படுத்தி விட்டு, அருகிலிருந்த நபரிடம், அவள் பேசியதைக் கண்டு, மோஹித்தின் முகமோ, கருத்துச் சிறுத்துப் போனது.
அதைக் கவனிக்காத, அவளது முதலாளியோ,”ஹீரோ சார், ரெடியாக இருந்தால், உடனே ஆரம்பிச்சிடலாம்” என்றுரைத்து விட்டு, அவனைப் பார்த்தார்.
“ம்ஹூம். ஐ யம் ரெடி சார்” என்று அவரிடம் கூறி விட்டு, ஹாரண்யாவை முறைத்துப், பார்த்தான் மோஹித்.
அவளோ,‘நீ எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள். அதை நான், கருத்தில் எடுத்துக், கொள்ளப் போவதில்லை!!’ என்று தோள் குலுக்கலுடன், தான் அவனை, நேர்காணல் செய்யப் போகும், இடத்தையும், அங்கேயிருக்கும் பொருட்களையும், ஒரு தடவை, ஆராய்ந்து பார்த்துக் கொண்டாள் ஹாரண்யா.