எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள் - கதை திரி 3

Status
Not open for further replies.

NNK-50

Moderator
மிஞ்சியின் முத்தங்கள் - 3

1706019915982.jpeg


தாமாதத்திற்கு மன்னிக்க வேண்டும் கொஞ்சம் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தது 🙏🙏 , வாசித்துக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் நட்புக்களே :):)...

*****************************************************************************************************************************************************************
கேட்டின் அருகில் வரும்போதே பார்த்துவிட்டான் வீட்டின் வாயிலில் தன்னை எதிர்ப்பார்த்து நிற்கும் தாயை, புன்னகை அரும்பியது இதழ்களில், கடல் கடந்து வேலைக்குச் செல்லும் வயதானாலும் தாய்க்கு எப்பொழுதும் பிள்ளைகள் சிறு குழந்தைகள் தான்.


வண்டியை நிறுத்திவிட்டு வேக நடையில் அன்னையை நெருங்கியவன் பார்வதியின் தோளில் கையிட்டு அணைத்துக்கொண்டு “என்னம்மா வாசல்லேயே நிக்குறீங்க” என்க.


“ஏன்யா காலைலதான வந்த மதியம் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்கி எழலாம்ல அதுக்குள்ள எங்க போன?” என்றவருக்கு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.


ஹாலில் அமர்ந்திருந்த ராஜவேலு ‘யாரை பார்க்கப் போயிருப்பான் இவ்வளவு அவசரமாக’ என்ற யோசனையோடு அவனைப் பார்த்திருந்தார், தந்தையின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.


இருவருக்குமிடையில் ஆழந்த அமைதி முதலில் இருந்தே தந்தையின் செயல்கள் அவனுக்குப் பிடிப்பதில்லை, தாய்க்காக அவரைச் சகித்துக்கொள்வான் அவ்வளவே வெளிநாட்டிற்கு வேலைக்குப் போனபிறகு பேச்சுக்கள் முன்னிலும் சுருங்கி விட்டது இடைவெளி கூடிவிட்டது.


“இரு அம்மா உனக்காகப் பால் பணியாரம் செஞ்சிருக்கேன் நீ சாப்பிடு டீப்போட்டு வரேன்” என்று உள்ளில் செல்லப் பார்த்தார் பார்வதி அவரைப் பிடித்து அருகில் அமர்த்தியவன் “இருங்கம்மா மதியம் சாப்பிட்டதே வயிறு புல்லா இருக்கு” என்றான்.


அவன் அருகில் அவர் அமரத் தாயின் மடியில் படுத்துக்கொண்டான் மெல்ல அவன் தலையை வருடிக்கொடுத்த பார்வதி “அய்யா போதும் இங்கேயே வந்துடுப்பா” என்று முடிப்பதற்கள்.


“அடியே அறிவு இருக்கா உனக்கு” என்ற ராஜவேலு உடல் விறைக்க எழுந்து நின்றார், அதிவீரன் கவனித்தாலும் அசையாமல் படுத்திருந்தான்.


“ஏங்க!” என்றார் பார்வதி பதட்டமாக “இப்போ அவனுக்கு என்ன வயசாச்சு இன்னும் ஒரு எட்டு பத்து வர்ஷம் போகட்டும் கைநிறைய சம்பளம் அத விட்டுட்டு இங்க வந்து என்ன செய்யப்போறான், சும்மா ஏதாவது பேசாத” என்றார் ஆத்திரத்தோடு.


அவன் திரும்பித் தந்தையை பார்த்தான் அர்த்தத்தோடு அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் வெளியில் சென்றார் ராஜவேலு.


“மா நீ கவலைப்படாத சீக்கிரமாவே இங்கேயே வந்துடுவேன்” என்றான் தாயின் கையை எடுத்து மீண்டும் தலையில் வைத்துக்கொண்டு.


“ஆமா வந்திடு நல்ல ஒரு பொண்ணப்பாத்து கட்டிவெச்சுடனும், உனக்கு எப்படி பொண்ணு வேணும் சொல்லு” என்க அவன் இதழ்கள் அவனின் தேன்மிட்டாயின் நினைவில் விரிந்தது.


எழுந்து அமர்ந்தவன் “சொல்றேன் அடுத்தடவ வரும்போது கண்டிப்பா சொல்றேன்” என்றுவிட்டு தன் அறைக்குச் சென்றான்.


குடும்பத்தின் சுமையைத் தோளில் தாங்கிக்கொள்ளும்போது வெறும் இருபது வயது அதிவீரனுக்கு, திருச்சி மாவட்டம் முசுறியை பூர்விகமாகக் கொண்டவர்கள் அவர்கள்.


நகை நட்டோடு ஐந்து ஏக்கர் கரும்புத்தோட்டமும் சீதனமாகக் கொண்டுவந்தார் பார்வதி, தன்னால் தோட்டத்தில் எல்லாம் வேலை செய்ய முடியாது என்று கூறி இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று பிசினெஸ் ஒன்று தொடங்கினார் ராஜவேலு.


தொடங்கிய வேகத்திலேயே அது படுத்துவிட்டது ‘இந்த ஆள் அனைத்தையும் விற்று தின்றுவிடுவார்’ என்று புரிந்துகொண்ட பார்வதியின் தம்பி பார்த்திபன் “நிலத்தை எனக்குக் குத்தகைக்கு கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.


பாக்டரி ஒன்றில் மேனேஜராக இருந்த ராஜவேலு விபத்து ஒன்றில் படுக்கையில் விழுந்தபோது அதிவீரன் பத்தாம் வகுப்பில் இருந்தான், ஆதவன் கல்லூரி முதல் வருடத்திலும் மூத்தவள் ஆதிலட்சுமி கல்லூரி மூன்றாம் வருடத்திலும் இருந்தாள்.


ராஜவேலுவின் சிகிச்சைக்கே பல லக்ஷங்கள் செலவானது இரண்டு வருடங்களைத் தம்பியின் உதவியுடன் எப்படியோ சம்மாளித்த பார்வதி அதற்குமேல் என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாறினார்.


பெண்பிள்ளை திருமணத்திற்கு தயாராகி நிற்கக் கடன் தொகையும் கூடிக்கொண்டே இருந்தது, நிலத்தைப் பணயம் வைத்து மகளின் திருமணத்தை நடத்திவிட்டார் பார்வதி, பார்த்திபன் தாய்மாமனாக முன்னின்று பாதி செலவைப் பார்த்துக்கொண்டார்.


துபாயில் வேலை இருக்கிறது செல்கிறாயா என்று பார்த்திபன் கேட்க “முடியாது” என்று மறுத்துவிட்டான் ஆதவன், காரணம் அவன் காதலி அவளைப் பிரிந்து இருக்க முடியாது.


அதோடு “நீங்கள் வெளிநாடு சென்றுவிட்டாள் இதுதான் சாக்கென்று அணைத்து சுமைகளையும் உங்கள் தலையில் ஏற்றிவிடுவார்கள் போக முடியாது என்று மறுத்துவிடுங்கள்” என்றாள் நிர்மலா.

அவள் சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டான், குடும்பம் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.


ப்ளஸ்டூ முடித்துவிட்டு லிப்ட் மேனேஜ்மேண்ட் கோர்ஸ் படித்துத் துபாய்க்கு சென்றான் அதிவீரன், நினைத்ததைவிட பெரிய சம்பளம் எங்கும் எதிலும் வசதியையும் ஆடம்பரத்தயும் முன்னிறுத்தி வாழும் ஊரில் மின்தூக்கி பழுதுபார்க்கும் என்ஜினீயருக்கு நல்ல மவுசு.


ஆறே வருடத்தில் நிலத்தை மீட்டு கடனை அடைத்து, வீட்டை இடித்துக்கட்டிவிட்டான் வேறு கம்பெனியில் உயர்ந்த சம்பளத்தில் வேலைக்கு மாறிவிட்டான் அனால் அதைப் பற்றி மாமனை தவிர யாரிடமும் சொல்லவில்லை, மிச்சம் பிடித்த பணத்தில் மாமனின் உதவியோடு ஒரு கடையை வாங்கிவிட்டான்.


புதிதாகச் சீட்டாடும் பழக்கத்திற்கு அடிமையான ராஜவேலு கடையில் இருந்தும் மாதா மாதம் செலவுக்கென்று மகன் அனுப்பும் பணத்தில் இருந்தும் எடுத்துக்கொண்டிருந்தார்.


ஆதவன் காதலியின் அறிவுரையின் பேரில் அவனின் சம்பளத்தை அப்படியே சேமிப்பில் வைத்தான், அவர்களுக்கென்று ஒரு வீடு வேண்டுமே நாளைத் தம்பி இது நான் கட்டிய வீடு எனக்குதான் உரிமை என்று கூறிவிட்டால் என்ன செய்ய? ஆகமொத்தம் ஒருவனின் உழைப்பை குடும்பம் அனைத்துப்பக்கம் இருந்தும் சுரண்டியது.


அறையில் நுழைந்தவன் கட்டிலில் சரிந்தான் மூடிய இமைகளின் உள்ளே வஞ்சியின் முகம், எங்கோ தனிமையில் கிடந்து குடும்பத்திற்காக உழைக்கும் அணைத்து மனங்களிலும் வாழ்வதற்கான பிடிப்பை கொடுக்கும் ஏதேனும் ஒரு பிடித்தம் இருக்கும்.


அந்தப் பிடித்தம் அதிவீரனுக்கு கொடிமலராகிப்போனாள் ஒவ்வொரு நாளின் விடியலிலும் அந்த நாளைக் கடக்க உந்துசக்தியாக இருப்பது அவளின் நினைவுகள்.


இப்படி ஒருவன் தன்னை நினைத்து ஏங்குவது அவளுக்குத் தெரியுமா! என்றேனும் அவளுக்குத் தன்னை பிடிக்க வாய்ப்பிருக்கிறதா ஒன்றும் தெரியவில்லை, அவள்மீதான விருப்பமும் நேசமும் பெரும் விருட்சமாக வளர்ந்து அவனுள் கிளைபரப்பி நிற்கிறது.


இன்னும் மூன்று வருடங்களை அவள் நினைவுகளுடன் மட்டுமே கடக்க வேண்டும் அதன் பிறகும் பெண் கேட்டால் உடனே கொடுத்துவிடுவார்களா என்று தெரியாது என்றாலும் கொடிமலர் தன்னுடையவள் அவளை எப்படியும் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தீவிரம் அவனிடம் இருந்தது.


தம்பியைப் பார்க்கத் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் வந்துவிட்டாள் ஆதிலட்சுமி அனைவருக்கும் வாங்கி வாங்கிவந்த பொருட்களைக் கடைப்பரப்பிவிட்டான்.


அக்காளுக்கு இரண்டும் பெண்பிள்ளைகள், ஏதோ அவளே பெண்பிள்ளைதான் வேண்டும் என்று தவம் இருந்து பெற்றுக்கொண்டதை போல அவளைக் குடைந்துகொண்டே இருப்பான் அவள் கணவன் முருகன்.


அவன் என்ன பேசினாலும் அமைதியாகக் கடந்து அவனுக்குச் சண்டை போட வாய்ப்பைத் தராமல் தப்பித்துக்கொள்வாள் ஆதிலட்சுமி, காரணம் தந்தையை அவள் நம்புவதில்லை தாய் ஒரு அப்பாவி, மூத்த தம்பி ஆதவன் தந்தையை விட மோசம்.


அவனுக்குத் தாயை பற்றியோ தமைக்கையை பற்றியோ இந்த வீட்டைப் பற்றியோ கவலை இல்லை, ஏன் அவளின் திருமணத்திற்குக்கூட அனைத்தயும் அதிவீரன்தானே செய்தான்.


அருகிலே இருக்கிறானே ஆபத்திற்கு உதவுவான் என்று அழைக்க முடியாது கொஞ்சம் அனுசரித்துப்போ என்று அக்காளுக்கு அறிவுரையை ஆரம்பித்துவிடுவான் அவன் இருக்கும் பக்கமே அவள் போவதில்லை.


அதிவீரன் மட்டுமே அவளுக்கு உறுதுணை என்றாலும் அவன் செவிகளில் தன்னுடைய துயரங்கள் எட்டாமல் பார்த்துக்கொள்வாள் ஆதிலட்சுமி.இந்தக் குடும்பத்திற்காக நிறைய செய்கிறான் தனக்கு திருமணத்திற்கு வாங்கிய கடன் அனைத்தையும் அடைத்துவிட்டு நகைகள் குறைந்துவிட்டதென்று மாமியார் சொல்லக்கேட்டவன் அடுத்தமுறை சிறப்பாக நகைகள் செய்துகொண்டுவந்தான்.


தாய் மாமனாகத் தன் பிள்ளைகளுக்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறான் எங்கோ தூர தேசத்தில் கிடப்பவனிடம் இவர்களின் முட்டாள் தனங்களை கூறி வேதனைப்படுத்த விரும்பவில்லை அவள்.


அக்காளின் கணவன் என்றெல்லாம் பார்க்கமாட்டான் கோபம் வந்தால் யாராக இருப்பினும் அவனுடைய அணுகுமுறை ஒன்றுதான்.


“என்ன மாப்ள… அதான் அந்த மூணு ஏக்கர் கரும்பு தோட்டத்தை மீட்டுட்டியே அதுல இவளுக்கு ஒரு ஏக்கர் பங்கு இருக்குல்ல அதை இப்போவே குடுத்துடு, அதோட உன் அண்ணனும் நீயும் காட்டைப் பாக்கபோறதில்லை அதால நாச்சொல்ற விலைக்கு உங்க இடத்தையும் எனக்குக் குடுத்துடுங்க, நாக்கரும்பு போடலாம்னு இருக்கேன்” என்றான் முருகன்.


பார்வதி மகளைத் திரும்பிப் பார்த்தார், அவள் கையைப் பிசைந்தாள் என்ன செய்ய என்று.


“ஏன் மாமா நாங்க போட்டா கரும்பு வளராதா” என்றான் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து.


“நீ எங்கயோ வெளிநாட்டுல இருக்க உன் அண்ணனுக்கு இதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல அதோட ஒரு ஏக்கரை தனியா வெச்சுகிட்டு நா என்ன செய்ய மொத்தமா எனக்கே கொடுத்துடு” என்றான் முருகன்.


“ஹ்ம்ம்… நிலத்துக்குப் பதிலா பணமா குடுத்துடுறோம் மாமா, தனி தனியா பிரிக்க எனக்கு விருப்பமில்லை” என்றான் கூர்மையாக.


“அதெப்படி அப்படி சொல்லுவ எனக்கு நிலமாதான் வேணும்” என்றான் முருகன், விவாதம் சூடுபிடிப்பதை அறிந்த பார்வதி பதட்டத்தோடு மகனைப் பார்க்க அதிவீரன் நிதானித்தான்.


வந்தவுடனே பிரச்சனை வேண்டாம் அதுவும் தங்கள் வீட்டிற்கு அவன் வந்திருக்கும்போது அவமானப்படுத்தியதாக இருக்க வேண்டாம் என்று நினைத்தவன் “இதைப்பத்தி அப்புறம் பேசலாம்” என்றுவிட்டு அக்காள் மகள்களை வெளியில் அழைத்துசென்றுவிட்டான்.


இரவு வீட்டிற்கு வந்தபோது வேறொரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது முருகன் மனைவி மக்களை இங்கே விட்டு வீட்டிற்கு சென்றிருந்தான்.


ஆதவன் நிர்மலா காதல் விஷயம் வீட்டில் சொல்லப்பட்டுவிட்டது ராஜவேலுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை, அவர்கள் வேறு ஆட்கள் என்பது ஒரு காரணம் வசதியில் மிகவும் கீழே என்பது மற்றொரு காரணம்.


“அவளுக்கு வேலை இருக்கிறது இரண்டு பேரும் சம்பாதிக்கிறோம் அது போதும்” என்றான் அவன்.


‘இவனுடைய சம்பாத்தியமே இந்தக் குடும்பத்திற்கு பிரோயோஜனம் செய்வதில்லை இதில் அவளுக்கு வேலை இருந்து மட்டும் என்ன செய்ய’ என்ற எண்ணம்தான் அனைவருக்கும் என்றாலும் பார்வதியும் ஆதிலக்ஷ்மியும் ஒன்றும் கூறவில்லை.


அவன் வாழ்வு அவனே முடிவு செய்யட்டும் என்று அமைதியாக நின்றுவிட்டனர், அப்பாவும் மகனும் மட்டும் பெரிதாக விவாதம் செய்தனர்.


“என்னடா காதல் வீட்ல சொல்றவனை கட்டிக்காம அவளே புருஷன தேடிக்கறான்னா அவ எப்படிப்பட்ட ஒழுக்கம் கெட்டவளா இருப்பா அப்படிபட்டவளை இந்தக் குடும்பத்துக்குள்ள விட முடியாது” என்ற ராஜவேலுவின் குரல் வெளியில் வீதிவரை கேட்டது, அங்கும் இங்கும் சிலர் எட்டிப்பார்ப்பதை உணர்ந்தவன் வீட்டிற்குள் நுழைந்து கதவடைதான்.


“அவ வெறுங்கையை வீசிட்டு வரப்போறா, உன் அக்காக்கு நல்லா சீர் செஞ்சுதான் கல்யாணம் செஞ்சோம் அதுல பாதிகூட கொண்டுவரலனா சொந்தகாரங்க முன்னாடி நமக்குத்தான் அவமானம் இதெல்லாம் சரியா வராது” என்றார் ராஜவேலு.


“நா அவளை மட்டும்தான் கல்யாணம் செஞ்சுப்பேன் உங்களுக்குப் பிடிக்கலைன்னா நாங்க தனியா போய்க்கிறோம்” என்றான் வீம்பாக.


சும்மா மிரட்டிப்பார்க்கவே இந்த வசனம் தனிக்குடித்தனம் எல்லாம் நிர்மலா ஒத்துக்கொள்ளமாட்டாள், இரண்டுபேரும் கிடைக்கும் சம்பளத்தை அப்படியே செலவு செய்யாமல் வைக்கவேண்டுமானால் இந்தக் குடும்பத்தில் இருந்தாலே நடக்கும்.


“அப்படிலாம் செய்ய முடியாது இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒதுக்கமாட்டேன்” என்று அவர் நிற்க.


“அப்போ நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குறோம்” என்றான் மகன்.


பிள்ளைகளை மேலே அறைக்குப் போகசொன்ன அதிவீரன் “வாழப்போறவன் அவன்தானே? பிடிச்சுருக்குன்னு சொல்றான் நடத்திக்கொடுங்க” என்றான் தந்தையிடம்.


அப்படி இப்படி என்று இறுதியாக ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை ராஜவேலுக்கு, அந்த வாரத்திலேயே நல்ல நாள் பார்த்து அவர்கள் வீட்டிற்கு செல்வது என்று முடிவு செய்துகொண்டனர்.ஆனால் அந்த நொடி மனதில் தீர்மானித்துக்கொண்டான் ‘எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய கொடிமலர் இது போன்ற பேச்சுக்களை கேட்கக் கூடாது தனக்கு அவளின் மீது விருப்பம் என்பதை சொல்லாமலே அவளைத் தன் வாழ்க்கை துணையாக அழைத்துவர வேண்டும் என்று’.
 
Last edited:
எவ்வளவு சுயநலமான அண்ணன்!!... அப்பா அதுக்கும் மேல!!!... நிர்மலா நீயெல்லாம் நல்லா வருவ மா!!... சீக்கிரம் கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அவன் சந்தோஷமா இருக்கட்டும்!!..
 

Advi

Well-known member
இது எல்லாம் ஒரு குடும்பமா🤦🤦🤦🤦🤦

எப்ப டேய் ஆதவா நீ எல்லாம் அவளோ தெளிவு😬😬😬😬😬

வேலு நீ வெளங்காதவன இருந்துட்டு, அவனை எதுக்கு முறக்கற 🙄🙄🙄🙄🙄

இப்படி குடும்பத்திற்காக இருந்தவனையா எல்லாரும் மதிக்கல🥺🥺🥺🥺🥺
 

NNK-50

Moderator
எவ்வளவு சுயநலமான அண்ணன்!!... அப்பா அதுக்கும் மேல!!!... நிர்மலா நீயெல்லாம் நல்லா வருவ மா!!... சீக்கிரம் கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அவன் சந்தோஷமா இருக்கட்டும்!!..
நன்றி சகி ❤️❤️
 

NNK-50

Moderator
இது எல்லாம் ஒரு குடும்பமா🤦🤦🤦🤦🤦

எப்ப டேய் ஆதவா நீ எல்லாம் அவளோ தெளிவு😬😬😬😬😬

வேலு நீ வெளங்காதவன இருந்துட்டு, அவனை எதுக்கு முறக்கற 🙄🙄🙄🙄🙄

இப்படி குடும்பத்திற்காக இருந்தவனையா எல்லாரும் மதிக்கல🥺🥺🥺🥺🥺
நன்றி சகி நன்றி ❤️❤️❤️
 

Mathykarthy

Well-known member
எதுக்கும் உதவாத அப்பா... சுயநலமான அண்ணன்.. இதுல அவனை மாதிரியே ஒருத்தியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரான்... பேராசை பிடிச்ச அக்கா புருஷன் ன்னு சுத்தி எல்லாம் வில்லங்கமாவே இருக்கு அதிக்கு... மொத்த குடும்பத்தையும் தாங்குறவன் மேல அம்மா அக்கா தவிர யாருக்கும் உண்மையான பாசம் இல்லை.... 😔😔😔
 
Last edited:

NNK-50

Moderator
எதுக்கும் உதவாத அப்பா... சுயநலமான அண்ணன்.. இதுல அவனை மாதிரியே ஒருத்தியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரான்... பேராசை பிடிச்ச அக்கா புருஷன் ன்னு சுத்தி எல்லாம் வில்லங்கமாவே இருக்கு அதிக்கு... மொத்த குடும்பத்தையும் தாங்குறவன் மேல அம்மா அக்கா தவிர யாருக்கும் உண்மையான பாசம் இல்லை.... 😔😔😔
ஆமாம் சகி நன்றி 🥰🥰
 
Status
Not open for further replies.
Top