எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம் _1

Status
Not open for further replies.
என்ன ஆரம்பத்துலயே ஹீரோவை அடிச்சு படுகக வச்சுட்டீங்க???.. இனியோட அம்மா என்ன பன்னாங்க???... ஏன் அப்பா கிட்ட பேசுறது இல்லை???... அப்படி என்ன சொல்லிருப்பான்???
 

NNK-70

Moderator
என்ன ஆரம்பத்துலயே ஹீரோவை அடிச்சு படுகக வச்சுட்டீங்க???.. இனியோட அம்மா என்ன பன்னாங்க???... ஏன் அப்பா கிட்ட பேசுறது இல்லை???... அப்படி என்ன சொல்லிருப்பான்???
எல்லா கேள்விக்கும் கூடிய விரைவில் பதில் தரேன் சிஸ். கருத்துக்கு நன்றி.
 

admin

Administrator
Staff member

தீராத காதல் தேனாக மோத-NNK70​

அத்தியாயம் 1​

‘கீச் கீச்’ எனும் ரீங்கார ஓசையுடன் ஆதவனின் வருகையை வரவேற்றுக்கொண்டிருந்தன அழகிய இளங்குருவிகள்.​

அந்த இயற்கையின் குழலிசையில் லயித்துப் பின் மெல்ல மெல்ல தன் விழிகளைத் திறந்தான் அவன்.​

கருப்பு நிற டிராக் பேண்ட் மற்றும் வெள்ளை நிற டி ஷர்ட் சகிதமாகக் காலை நேர ஓட்டப்பயிற்சிக்கு ஆயுத்தமானான்.​

பகலவனின் ஒளிக்கீற்றைப் போன்று பிரகாசமாகப் புன்னகை சிந்தியவனின் உற்சாகம் தாமாகவே அனைவரிடமும் தொற்றிக் கொண்டது.​

“என்ன மேன் இன்னைக்கு இவ்ளோ ப்ரைட்டா இருக்க” என்றார் அவனுடன் தினமும் நடைபயிற்சி வரும் எழுபது வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர்.​

அதற்கும் அட்டகாசமான புன்னகை ஒன்றை பதிலாகத் தந்தவன். நத்திங் ஸ்பெஷல் அங்கிள் என்றான் தன் தலைமுடியை அழுந்தக் கோதிக்கொண்டே.​

நல்லவேலை நீ ப்ரொபசர் (professor)​

ஆகல, இல்லைனா எல்லா பொண்ணுங்களுக்கும் பாடத்த மறந்திட்டு, உன்ன சிரிக்க சொல்லிப் பாத்துட்டே இருந்திருப்பாங்க என்றான் அந்த முதிய நபரின் மகன் பரத்.​

‘ஹாஹாஹா’ என்று பலமாகச் சிரித்தவன், மெல்லமாகப் பரத்தின் தோளில் தட்டினான். உங்கள விட நான் ஒன்னும் பெரிய ஹேண்சம் இல்ல ப்ரொபசர் பரத் என்றான் குறும்பாக.​

இத அடிக்கடி உன் அக்காகிட்ட சொல்லுப்பா. எப்போபாத்தாலும் என்னைய அங்கிள் ஆகிடீங்கன்னு சொல்லிச் சொல்லி வெறுப்பேத்திட்டு இருக்கா, நானும் அதை நம்பி டெய்லி ஜாகிங் போயிட்டுருக்கேன் என்றான் பரத் போலி வருத்தத்துடன்.​

அட, ஒரு பேச்சிக்கு சொன்னா உடனே, ‘இளமை திரும்புதே’ன்னு பாட ஆரம்பிச்சிடுவிங்களே பரத் அங்கிள் என்றவனை ஏகமாக முறைத்து நின்றான் பரத்.​

இவ்வாறு அதிகாலை நேரம் உற்சாகமாகக் கடக்க, குளியலறையிலிருந்து வெளிப்பட்டவன், தன் முன்னே இருந்த காக்கி உடையைச் சரிபார்த்து அணிந்து கொண்டு காவல் நிலையம் விரைந்தான்.​

“இதயச்சந்திரவர்மன் IPS”​

Assistant commissioner of police எனும் பெயர் பலகை மின்ன அவற்றுக்குச் சொந்தமானவனோ அதற்குக் கொஞ்சமும் குறையாத கம்பிரத்தோடும் புன்னகை முகத்தோடும் தன் அலுவலக அறைக்கு நுழைந்தான்.​

“மே ஐ கம் இன் சார்”?என்ற குரல் கேட்டவுடனே, எஸ் கம் இன் என்றான், சந்திரன், சந்துரு என்றழைக்கப்படும் இதயச்சந்திரவர்மன்.​

தன்னை பார்த்துச் சல்யூட் வைத்தவனின் மரியாதையை ஏற்றவன், என்ன ராஜ், என்ன ப்ராப்ளம் என்றான் தனக்கு கீழ் வேலைப் பார்க்கும் இன்ஸ்பெக்டர் ராஜின் முகத்தை ஆராய்ந்துக் கொண்டே.​

உடனே விஷயத்தைக் கண்டுக்கொண்டவனை நினைத்து வியந்தவனோ சற்று தயங்கி தயங்கி செய்தியைக் கூறினான்.​

சார், டிபார்ட்மண்ட்ல அடுத்து எனக்குச் சஸ்பென்ஷன் குடுக்க போறதா ஒரு பேச்சு அடிப்படுது. நானும் அந்த டிச்சர் மிஸ்ஸிங் கேஸ் விஷயமா எல்லா விசாரணையும் பண்ணிட்டேன் ஆனா எந்த முன்னேற்றமும் இல்ல நீங்க எனக்கு ஒரு நாலு நாள் எக்ஸ்ட்ரா டைம் வாங்கி குடுங்க சார் எப்படியாவது ஆள கண்டுபிடிச்சுடுறேன் என்றான் கெஞ்சலாக.​

அவ்வளவு நேரம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சந்திரன், மெல்ல எழுந்து முறுவலித்தான்.ராஜ் உங்க முன்னாடி ஒரு கவர் இருக்கு பாருங்க. அது உங்களுக்குத் தான் டேக் இட் என்றான்.​

அய்யய்யோ! ‘இவருகிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு வந்தா, கையோட சஸ்பென்ஷன் ஆர்டர வாங்கியே வச்சிருக்காரே’ என்று மனதோடு புலம்பியவன், சார்….சார் ப்ளீஸ் ஒரு 2 டேஸ் ஆவது டைம் குடுங்க சார் ப்ளீஸ் என்றான்.​

அதைக் கேட்ட சந்திரனோ, புன்னகை முகம் மாறாது, ச்சில் மேன்! ஏன் இப்படி எமோஷனல் ஆகுற, மொத கவர பிரி என்றான்.அவன் கூறியபடியே உறையைப் பிரித்தவன் இன்பமாய் அதிர்ந்தான்.​

சா…சார்… இது… என்றவன் கையில் இருந்தவற்றை விழியகலாது பார்த்தான்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ரிசார்டின் நுழைவுச்சீட்டு.​

ராஜ், ரொம்ப யோசிக்காதீங்க, இது நீங்க ஃபேமலியோட அந்த ரிசார்ட்ல தங்குறத்துக்கான என்ட்ரி கூப்பன். 2 டேஸ் உங்க மிஸஸ் அண்ட் குழந்தைகளோட நல்லா என்ஜாய் பண்ணுங்க.ரிலாக்ஸ் யுவர்செல்ப். இவ்ளோ டென்ஷன் ஆனா கேஸ் பத்தி ஒரு லீடும் (lead) கிடைக்காது.​

உங்களுக்கு ஆல்ரெடி ஒன் வீக் டைம் வாங்கிருக்கேன். இரண்டு நாள் நல்லா ரெப்பிரஷ் ஆகிட்டு வாங்க. மீதி 5 நாள் ல நீங்கக் கேசையே குளோஸ் பண்ணீடுவீங்க.ஐ க்னோ யுவர் பொடன்ஷியல் (potential) என்றான் அவனுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில்.​

சார், கேஸ் ரொம்ப க்ரிட்டிக்கலா இருக்கப்போ நான் எப்படி சார் ரிசார்ட் போக முடியும் என்ற ராஜை தடுத்து அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக விழி மூடிச் சைகை செய்தான்.​

அதில் மகிழ்ந்தவனோ, சந்துரு சார் “தேங் யூ சோ மச்” என்றான் நன்றியுடன்.பதிலுக்குச் சந்திரனிடம் ஒரு புன்னகை மட்டுமே இருந்தது.​

இது தான் இதயச்சந்திரவர்மனின் பிறவி குணம்.அனைத்தையும் அமைதியாகக் கவனித்து, அடுத்தவர்களின் பிரச்சனையைச் சரி செய்யும் பெருங்குணம்.போலீஸ் என்ற சொல்லிற்கே உரிய இறுக்கம் இல்லாதவன்.எப்போதும் புன்னகை முகமாக வலம் வருபவன்.தன் துறையைச் சார்ந்தவர்களுக்கே ஏதாவது தீர்க்க முடியாத சிக்கல் இருந்தால் உடனடியாக ஓடி வந்து உதவி செய்பவன்.பல கைதிகளுக்குத் திருந்தி வாழச் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுப்பவன்.செய்த குற்றத்தை உணர வைத்து அது மீண்டும் நடக்காதவாறு பார்தது கொள்பவன். குற்றம் புரிபவர்களுக்குச் சிம்ம சொப்பனம்.மொத்ததில் அவனொரு நச்சினார்கினியன் (நல்லவனுக்கு மட்டுமே நல்லவன்​

இனி” மா…சீக்கிரம் வாடாக் கண்ணு என்று அழைத்தவாரே உணவு மேஜையில் அனைத்து பதார்த்தங்களையும் அடுக்கத் துவங்கினார் மேகலா, மிருணாளினியின் அத்தை.​

“இதோ வந்துட்டேன்” அத்தை என்று குரல் கொடுத்தவாரே தன் வெள்ளை நிற அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப் சகிதம் இறங்கி வந்தாள் இனி என்று செல்லமாக அழைக்கப்படும் மிருணாளினி.​

தன் செல்ல மருமகளை கண்டவருக்குக் கண்களில் நீர் துளிர்த்தது.வழக்கம்போல் அதைத் தன் புடவை தலைப்பால் மறைத்தவரை இனம் கண்டுகொண்டாள் இனி.​

அடடா, என் செல்ல அத்தைக்கு ஏன் என்ன பாக்குறப்போலாம் கண்ணுல தண்ணி வந்து நிக்குது என்றாள் தன் அத்தையின் கண்களைத் துடைத்துவிட்டு கொண்டே.அது ஒன்னுமில்ல இனி, உன்ன பார்த்தோன எனக்கு என்னோட அண்ணி நியாபகம் வந்திருச்சு என்றார் வருத்தத்துடன்.​

அவர் கூறும்போதே தன் தாயின் முகம் அழையாமலே நினைவுக்கு வந்தது. ‘அம்மா இப்படி பண்ணிட்டு போயிருக்க வேண்டாமே’ என்று மனதோடு வருந்தியவள் அதை வெளிக்காட்டாதவாறு, அத்த, ரொம்ப பசிக்கிது என்றாள் தன் வயிற்றை தடவிக் கொண்டே.​

அதில் சுயம் தெளிந்த மேகலா, இதோ டா இனி கண்ணு, உனக்குப் பிடிச்ச பூரியும் சென்னாவும் பண்ணிருக்கேன் என்றவாறு தட்டில் உணவை வைத்தார்.​

ஒரு துண்டு பூரியை வாயில் வைத்தவளோ, அட! அட!! அட!!! அத்தயோட சமையலே சமையல் தான். ‘செம டேஸ்டி’ என்றாள் சப்புக்கொட்டிக் கொண்டு.​

அவ்வளவு நேரம் அங்கிருந்த இதமான சூழ்நிலை கலையும் வண்ணம் கோபமாக யாரையோ கைப்பேசியில் திட்டிக்கொண்டே உணவு மேஜைக்கு வந்தார் ரத்தினவேல், மிருணாளினியின் தந்தை.​

அண்ணணின் குரல் கேட்ட மேகலா கடகடவென்று அவருக்கு உணவு பரிமாறத் துவங்கினார்.தந்தையை கண்டவுடனே உணவருந்தாது அவ்விடம் விட்டு வெளியேறிருந்தாள் இனி.​

அதைக் கவனித்த மேகலாவிற்கோ நெஞ்சம் வலித்தது. தந்தை மகளின் இந்த யுத்தம் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்று அறியாது பரிதவிப்புடன் அண்ணணையே நோக்கியிருந்தார். நடந்த அனைத்தையும் கண்டும் ஒன்றுமே கூறாமால் அவரும் அலுவலகம் புறப்பட்டார்.​

வழியெங்கும் வெளிப்பட்ட பழைய நினைவுகளைப் போராடி தன்னுள்ளே அடக்கிவிட்டிருந்தாள் இனி. அனைத்தும் கனவுப் போல மின்னி மறைந்தது.​

மிருணாளினி. அனைவரும் செல்லமாக ‘இனி’ என்றழைப்பர். மருத்துவ படிப்பை முடித்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஒரு புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில் பணி செய்கிறாள்.யாரிடமும் அதிகம் நெருக்கம் கிடையாது அவளின் பள்ளித் தோழி ஸ்வேதாவை தவிர.​

பேச்சிலும் செயலிலும் அத்தனை மென்மை உடையவள்.அவளின் தந்தை ரத்தினவேல். RV குளோபல் ரிசெர்ச் சென்டர் எனும் பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர். அதுமட்டுமல்லாது, RV மார்கெட்டிங், RV கன்ஸ்ட்ரெக்ஷன்ஸ், RV டிரேடிங் யூனிட் எனத் தனித் தொழில் சாம்ராஜ்யத்தையே நடத்துபவர். ஆனாலும் தந்தை மகளுக்கிடையே எந்த இணக்கமும் கிடையாது. இனி தங்கள் தொழில் எதிலுமே பங்கெடுக்கமாட்டாள். தனக்கும் அதுக்கும் எந்தச் சமந்தமில்லாதது போல நடந்துகொள்வாள்.​

வெள்ளை அங்கியுடன் அந்தப் பிரம்மாண்டமான மருத்துவமனையில் அமைந்துள்ள உள் நோயாளிகள் பிரிவிற்கு நுழைந்தவள், வரிசையாக எல்லா நோயாளிகளையும் பரிசோதித்து அதனை அங்கிருந்த பதிவேட்டில் பதிவு செய்து விட்டுத் தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்குத் திரும்பினாள்.​

அவள் வருகைக்காகவே காத்திருந்த ஸ்வேதா, ‘இனி’ என்று அழைத்தவாரே, இறுக்கி அணைத்து வரவேற்றாள். “வா… வா இனி” உனக்காகத் தான் இவ்ளோ நேரமா வெயிட் பண்ணிடிருக்கேன்.ரொம்ப பசிக்குது கேண்டீன் போலாம் வா என்று அவளை அங்கிருந்த உணவகத்துக்கு அழைத்துச் சென்றாள்.​

இனி க்கு நன்றாகப் புரிந்தது, தன் அத்தைதான் ஸ்வேதாவிற்கு போன் செய்து தான் உண்ணாத தகவலைத் தெரிவித்து இருக்கிறார் என்று. அதனால் மறுப்பு கூறாது அவள் தருவித்திருந்த உணவை உண்டு முடித்து வழக்கமான உரையாடலுக்குச் சென்றனர்.அதற்குள் அவர்கள் நண்பர் பட்டாளமும் ஒன்று கூடியது.​

பேச்சும் கலாட்டாவாகவும் அன்றையபொழுது கழிந்தது. மாலை பணி முடிந்து அவள் செல்ல முற்பட்டபோது அலைபேசி சிணுங்கியது.​

“ஹலோ அங்கிள்” எப்படி இருக்கீங்க என்றாள் அலைபேசியின் எண்ணைச் சரிபார்த்தவாரே.மறுமுனையில், ஐயம் ஃபைன் டா கண்ணா.எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா என்றார் சென்னை சிட்டி கமிஷனர் ரவிபிரசாத்.​

“அச்சச்சோ” என்ன அங்கிள் பெரிய வார்த்தைலாம் சொல்லுறீங்க, ஜஸ்ட் ஆர்டர் மீ என்றாள்.அதில் புன்னகைத்தவர், “இனி” மா ஒரு எமர்ஜென்சி கேஸ், நம்ம பய தான். ஒரு அட்டம்டு மர்டர், கொஞ்சம் சீரியஸ் தான். உங்க ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்திட்டிருக்கேன்.நீ கொஞ்சம் இன்னக்கு மட்டும் அங்க இருந்து அவன கவனிச்சிக்கனும் என்றார்.​

அதில் பதறியவள், அங்கிள் ஆர் யூ ஒகே? என்றாள். அவரோ, எனக்கு ஒன்னுமில்லை டா கண்ணா. ஐம் ஆல் ரைட். பயல நினைச்சா தான் பயமா இருக்கு. ப்ளட் லாஸ் வேற.நீ கொஞ்சம் அவன பார்த்துகிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும் என்றார் வேண்டுதலாக, அதில் வருந்தியவள், அங்கிள் நான் இங்க தான் இருக்கேன் நீங்க வாங்க பாத்துக்கலாம்.அவருக்கு ஒன்னும் ஆகாது என்றவள், அவனுடைய ரத்த வகையைக் கேட்டறிந்தாள்.​

ரேர் ப்ளட் குரூப் தான் பட் என்னோட ப்ளட் குரூப் சேம் தான் அங்கிள், தேவைப்பட்டா நானே டொனேட் பண்ணிடுறேன்.அவரோட நேம் அப்புறம் மத்த டீடயல்ஸ் சொல்லுங்க இப்போவே பார்ம் (form) ஃபில் பண்ணி ரெடியா வச்சிடுறேன். நீங்க வந்தவுடனே ப்ரொசிஜர் ஸ்டார்ட் பண்ணிரலாம் என்றாள்.​

பேரு சந்திரன்… சாரி சாரி இதயச்சந்திரவர்மன். வயசு 33. என்று அவள் கேட்ட இதர தகவல்களைத் தந்தார்.அந்தப் பெயரைக் கேட்டவளுக்கோ சொல்ல முடியாத ஓர் உணர்வு ஏற்பட்டது.​

அவனுக்காகக் காத்திருக்க துவங்கினாள்.​

அடுத்த சில நிமிடங்களில் கமிஷனர் ரவி பிரசாதின் கார் புயல் போல உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்த மருத்துவமனை ஊழியர்கள்​

விரைந்து சென்று இரத்த சகிதமாக இருந்தவனை ஸ்ட்ரெக்சரில் ஏற்றினர்.​

அங்கு விரைந்த இனி, அங்கிள் நான் பார்த்துக்குறேன். டோன்ட் வொரி என்றவாரே முதல் முறையாக அவனைக் கண்டாள். ஆறடி ஆண் மகன் இரத்த குவியலில் கிடப்பதைக் கண்டு பதைபதைத்தாள். அவனின் கன்னங்களை மெதுவாகத் தட்டிக் கொண்டே பேச்சுக் கொடுத்தாள்.​

சார்… ப்ளீஸ் லுக் அட் மீ…சார்…. மிஸ்டர் இதய்.நீங்க ஹாஸ்பிட்டல் வந்தாச்சு. இனிமே பயப்பட தேவை யில்ல.ஜஸ்ட் லுக் அட் மீ இதய் மிஸ்டர் இதய்… யூ ஆர் ஒகே.என்ன பாருங்க, தைரியமா இருங்க, ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கப் போறாங்க. ஸ்டே ஸ்டராங் இதய் என்று அவனுக்கு அவள் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் மெல்ல மெல்ல அவன் செவியடைந்தது.​

மிகுந்த சிரமத்திற்கிடையே மெல்ல விழிகளைத் திறந்தவன், அவளைப் பார்த்து மென் புன்னகை ஒன்றை சிந்தினான்.பதிலுக்குப் புன்னகைத்தவளை தன் அருகில் வருமாறு சைகை செய்தான்.​

யோசித்தவாரே அவன் முகம் அருகே குனிந்தவளிடம் ஏதோ சொல்ல, அதைக் கேட்டவுடன் அவனை அப்பட்டமாக முறைக்கத் தொடங்கினாள் மிருணாளினி.​

 
Status
Not open for further replies.
Top