எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அத்தியாயம் 04

NNK-29

Moderator
💘உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!💘 அத்தியாயம் 04
 
NNK-29

Moderator

அத்தியாயம் 4​

அறையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தேவாவிடம் வந்தமர்ந்தார், செல்வராணி.​

“எதாவது சொல்லணுமா ம்மா?” என லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு அன்னையிடம் கேட்டார்.​

“நாளைக்கு வந்தனாவுக்கு முகூர்த்த புடவை எடுக்க போறோம்ல தேவா? அப்படியே அவளுக்கு மாப்பிள்ளை வீட்ல தாலி செயினும் வாங்கிடலாம்னு சொல்லிருக்காங்க” என்றார் தயக்கத்துடன்.​

“நல்ல விஷயம் தானம்மா. இதுக்கு எதுக்கு தயங்குறீங்க?”​

“கல்யாணத்துக்கு மறுநாள் உனக்கும் சாருமதிக்கும் நிச்சயம் இருக்குல தேவா? அதுக்கு சாருமதிக்கு புடவையும் நகையும் நாளைக்கே எடுக்கலாமா? எல்லாரும் இருப்பாங்க தான? சாருவும் அவளே தேர்ந்தெடுப்பாளே?” என மகனிடம் ஆலோசனை கேட்டார்.​

ஆம்! அன்று சாருமதியின் வீட்டில் அரவிந்த்-வந்தனா கல்யாணத்திற்கு மறுநாள் தேவா-சாருவின் நிச்சயத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.​

“இவ்வளவு தானம்மா. எடுத்திடலாம்” என்றவன் தாயின் தயக்கத்தை புரிந்து,​

“அம்மா…அம்மா! என்கிட்டே தேவையான அளவுக்கு பணம் இருக்கு. நீங்க எதுக்கும் கவலை படாதீங்க” என்றான்.​

“சரிப்பா…” என அவர் முடிக்கும் பொழுது அறைக்குள் வந்தனா வந்தாள். அவர்களின் அருகில் அமர்ந்து அன்னையின் மடியில் படுத்துக்கொண்டாள்.​

“இப்ப தான் வந்தனா பொறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள அவளுக்கும் கல்யாண வயசு வந்து, இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணமும் நடக்க போகுது” என்றார் மகளின் தலையை கோதிக்கொண்டு.​

“ஏன்மா? பொண்ணுங்க மட்டும் கல்யாணம் முடிஞ்சதும் மாப்பிள்ளை வீட்டுக்கு போகணும். நாங்களும் உங்க கூடவே இருக்கலாம் தான?” என அன்னையையும் அண்ணனையும் பிரியும் சோகத்தில் கண்கலங்க கேட்டாள்.​

அவள் கலங்குவதை பார்த்து, “ஏன்னா..? பொண்ணுங்க சீக்கிரமா ஒரு இடத்துல பொருந்தி போய்டுவாங்க. இந்த ஆம்பிளைங்களால அதெல்லலாம் முடியாது டா” என கிண்டலாக பேசி பேச்சினை மாற்றினார்.​

__________​

சென்னையில் புகழ்பெற்ற புடவை கடையில் இருகுடும்ப பெண்கள் அனைவரும் கடையையே புரட்டிக்கொண்டிருந்தனர். காலை பத்து மணிப்போல் வந்தவர்கள் பன்னிரெண்டு கடந்தும் புடவை எடுத்தபாடில்லை.​

அன்று சாருமதியின் வீட்டில் பார்த்து பேசியது தான். அதன் பிறகு இன்றுதான் சாருவும் தேவாவும் சந்தித்துக்கொள்கிறார்கள்.​

ஒருவழியாக சாருமதிக்கு அவள் விருப்பட்டப்படி நிச்சயப்பட்டு அமைந்தது. தேவாவிடம் கண்ணசைவில் கேட்டே அதனை தேர்வுசெய்தாள்.​

பின் வந்தனாவிற்கான முகூர்த்த புடவையை பார்த்துக்கொண்டிருந்தனர்.​

பெண்கள் இங்கு பார்த்துக்கொண்டிருக்க ஆண்கள் மூவரும் அவர்களுக்கான உடையை தேர்வு செய்ய வேறு தளத்திற்கு சென்றிருந்தனர்.​

இறுதியாக மூன்று புடவைகளை தேர்வு செய்துவிட்டு அரவிந்த் வர பெண்கள் காத்திருந்தனர். அரவிந்த் வந்ததும் அவனின் அன்னை ஜெயந்தி அருகில் நின்றிருந்த வந்தனாவின் அருகில் சென்றான்.​

“இந்த மூணும் செலக்ட் பண்ணிருக்கோம் அரவிந்த். இதுல ஒன்னு நீயும் வந்தனாவுமே உங்களுக்கு பிடிச்சதா பார்த்து எடுங்க” என்ற ஜெயந்தி அருகில் நின்று யோசித்துக்கொண்டிருந்த சாருவை இழுத்தார்.​

அவ்வளவு நேரம் அரவிந்த் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த தேவாவை பார்த்து, ‘அரவிந்த் அண்ணாவை விட இவங்க தான் உயரம். என்ன ஹைட்னு கேட்கணும்’ என நினைத்துக் கொண்டிருந்தவளிடம்,​

“சாரு உன்கிட்ட தான் கேட்கிறேன். என்ன யோசனை?” என அவளின் கையை பிடித்து கேட்டார் ஜெயந்தி.​

“என்…என்னமா என்ன கேட்டிங்க?” என முழித்தவளை பார்த்து முறைத்தவர், “உன்னோட கல்யாணத்துக்கும் இப்பவே புடவை எடுத்திடலாமானு கேட்டேன். ஒரேவேலையா முடியும் தான?” என்றார். உடனே சாருவின் முகம் சுருங்கிவிட்டது.​

அவர்களின் அருகில் நின்றிருந்த தேவாவிற்கும் ஜெயந்தி கூறியது தெளிவாக கேட்க, சாருவை பார்த்தான். அவளும் அவனை பார்த்து பார்வையாலே மறுப்பு தெரிவித்தாள்.​

‘என்ன இவ? வேண்டாம்னா நேரடியா சொல்லாம நம்மள கோர்த்துவிடுறா?’ புருவ மூடிச்சுடன் அவளை பார்த்துக்கொண்டே, “மணி இப்பவே ஒண்ணாக போகுது அத்தை. வந்தனாக்கு எடுத்ததும் நாம போய் சாப்பிடலாம் அப்புறம் மற்றதை பார்க்கலாம்” என ஜெயந்தியிடம் கூறினான் தேவா.​

“சரிப்பா” என்றார் ஜெயந்தி. பின் வந்தனாவிற்கு புடவை எடுத்து முடித்ததும் அனைவரும் அருகில் இருந்த உணவகத்திற்கு சென்றனர்.​

எட்டு இருக்கைகள் கொண்ட டேபிளில் ஒரு பக்க நான்கு இருக்கையில் பெரியவர்கள் அமர்ந்துவிட்டனர். மற்றொரு பக்கம் அரவிந்த், வந்தனா, சாருமதி, தேவா என வரிசையாக அமர்ந்தனர்.​

ஆர்டர் கொடுத்த உணவுகள் வர சிறிது நேரமெடுக்க, “என்னங்க நம்ம சாருவுக்கும் இப்பவே முகூர்த்த புடவை எடுக்கலாமா?” என ஜெயந்தி குமரேசனிடம் கேட்டார்.​

“இப்ப நாம சாப்பிட்டுவிட்டு நகை கடைக்கு போகணும் ஜெயா. மறந்துட்டியா?” என்ற குமரேசனின் கேள்வியில்,​

“சரிங்க. இன்னொரு நாள் சாருவுக்கு பார்க்கலாம்” என ஜெயந்தி முடிக்க சாருவிற்கு ஆசுவாசமாக இருந்தது.​

பின் உணவுகள் வந்தவுடன் அனைவரும் உண்ண தொடங்கினர். அரவிந்த், வந்தனா மெல்லிய குரலில் அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.​

“உனக்கு ஏதாவது பிடிக்கலைன்னா நீ தான் அதை சொல்லணும் மதி” என்று தேவா கூறியது காதில் விழுந்தாலும் எதுவும் கூறாமல் சாப்பிட்டவளை பார்த்து கடுப்பானவன்,​

“நீ என்ன நினைச்சிட்டு இருக்கனு… நீ சொன்னதான தெரியும். ஒவ்வொரு முறையும் உன்னோட கண்ணை பார்த்து என்னால முடிவெடுக்க முடியாது” என்றான் அழுத்தமாக.​

“அது…சாரி! இனிமே அப்படி நடக்காது” என்றவள் தண்ணீரை எடுத்து குடித்தாள்.​

எதிரிலிருப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் பேசுவது மட்டுமே தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை.​

“சரி சொல்லு. உனக்கு என்ன பிரச்சனை? கல்யாணத்தை தனித்தனியே வைக்க சொன்ன! இப்ப புடவை எடுக்கவும் இவ்வளவு தயங்குற?” என கேட்டேவிட்டான்.​

கோமதி பாட்டி, “எல்லாரும் பேசாம சீக்கிரம் சாப்பிடுங்க. அடுத்த வேலை பார்க்கணும்ல” என்று அரவிந்த், தேவா இருவரையும் பார்த்து கூறினார்.​

அதற்குமேல் தேவா சாருவிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. சாருவும் தப்பித்தால் போதும் என்று கோமதியுடனே ஓட்டிக்கொண்டு நகைகடைக்கு சென்றாள்.​

அங்கு சென்றதும் வந்தனாவிற்கு முதலில் தாலி செயினை பார்த்தனர். அவர்களின் முறைப்படி தாலியை தங்கச்செயினில் போடுவது தான் வழக்கம். எனவே முதலில் அதை பார்த்து எடுத்தனர்.​

பின் செல்வராணி, “தேவா-சாரு நிச்சயத்துக்கும் நாங்க நகை எடுக்கணும். இப்பவே உங்க பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி பார்க்கலாமா?” என அவர்களை பார்த்துக்கேட்டார்.​

“அது உங்க விருப்பம் தான். உங்க மருமகளுக்கு என்ன செய்யணுமா நீங்க செய்யுங்க” என்ற கோமதி சாருவிடம்,​

“உனக்கு பிடிச்சதா பாரு டா. நான் அங்க கொஞ்சநேரம் உட்காருறேன்” என நகர்ந்தார்.​

“நாமளும் தேவாவுக்கு மோதிரம் போடனுமே ஜெயா. அந்த தம்பியோட அளவு கேட்டுட்டு எடுக்கலாம்” என தேவாவின் அளவை கேட்டுவிட்டு இருவரும் அரவிந்துடன் வேறு பக்கம் நகர்ந்தனர்.​

சாருமதி அவ்வளவு சீக்கிரத்தில் நகை எடுக்கமாட்டாள், எனவே ஜெயந்தியும் கோமதியும் கலண்டுக்கொண்டனர். அதுவும் இது தேவாவின் வீட்டு முறையில் எடுப்பது. அவர்கள் கருத்து கூறமுடியாது என்று நாகரீகமாக நகர்ந்திருந்தனர்.​

“அது… அத்தை. நான் தங்கநகை அவ்வளவா போடமாட்டேன். எனக்கு என்ன எடுக்குறதுன்னு தெரியல. நீங்களே எடுங்களேன்” என முழித்தவளை பார்த்தவர், “அவ்வளவு தான? நானும் வந்தனாவுமே உதவி பண்ணுறோம்” என்று அங்கிருந்த நகைகளை ஒவ்வொன்றாக காட்டினார்.​

சாருவின் வேலைக்கு அதிகளவில் நகை அணியமுடியாது. அவளுக்கும் நகையின்மீது அவ்வளவு விருப்பங்கள் இருந்தது இல்லை.​

அவர்காட்டிய பெரிய நகைகள் அனைத்தையும் புறந்தள்ளியவள் பூ டாலர் பதித்த சிறிய நெக்லஸ் ஒன்றை தேர்வுசெய்தாள்.​

ஜெயந்தியும் குமரேசனும் தேவாவை அழைத்து மோதிரம் காண்பித்து தேர்வு செய்து வாங்கிய பின் சாருவின் அருகில் சென்றனர்.​

“இதுவே போதுமா?” என்று செல்வராணி கேட்டுக்கொண்டிருக்க, “அவள் நகை எடுக்குறதே பெருசு அண்ணி. அவ இது எடுத்ததே எனக்கு ஆச்சர்யமா இருக்கு…” என்றார் ஜெயந்தி செல்வராணியிடம்.​

பின் ஒருவாறு அனைவரும் பேசி முடிவெடுத்து சாருமதி தேர்ந்தெடுத்ததையே அவளுக்கு வாங்கிவிட்டு அவரவரின் வீட்டிற்கு புறபட்டனர்.​

__________​

அன்று சந்தித்த அதே ரெஸ்டாரெண்டில் தேவாவும் சாருவும் அமர்ந்திருந்தனர்.​

“சொல்லு உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு வித்தியாசமா நடந்துக்கிற?” என சாருவிடம் கோபத்துடன் கேட்டான் தேவா.​

‘உனக்கு ஒன்று பிடிக்கவில்லையா! அதை நீ தான் தெளிவாக கூறவேண்டும்’ என்றிருப்பவனிடம் அவளின் முடிவுகளை தன்னைவைத்து கூற வைப்பதாக உணர்ந்தான்.​

‘அண்ணனின் திருமணத்தால் தான் தங்களின் திருமணம் நடைபெறுகிறது!’ என்ற எண்ணம் சாருமதியின் அடிமனதில் வேர்பிடித்திருந்தது. அதுவே அவளின் பேச்சிலும் வெளிப்பட்டது.​

“அது…அவங்க கல்யாணத்தால தான நம்ம கல்யாணம் முடிவாகியிருக்கு…? அதுவுமில்லாம அவங்களுக்குனு குறிச்ச முகூர்த்தம்! அவங்களுக்கு டிரஸ் எடுக்க போற நாள்னு எல்லாத்துலயும் அவங்களுக்கான நேரத்துல நாம எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாதிரி எனக்கு தோணுது அதுதான்…” அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் கூறினாள்.​

சாருமதியுமே ‘நம் முடிவுகளை இப்படி அடுத்தவரிடம் சொல்லி நடத்திக்கொள்கிறோம்’ என்று நினைத்து தவித்திருந்தாள். ஆனால், ‘இங்கே அடுத்தவர் என்றிருப்பது அவளவன் தான்!’ என்பதை பேதை உணரவில்லை.​

‘கடவுளே இந்த பொண்ணுங்க இவ்வளவு யோசிப்பாங்களா?’ என திணறித்தான் போனான் தேவா. “நான் ஸ்டாக் மார்கெட்ல ஸ்டாக் வாங்குறதுக்கு கூட இவ்வளவு யோசிக்க மாட்டேன் மதி. நீ எவ்வளவு யோசிக்கிற?” என வாய்விட்டே கேட்டுவிட்டான்.​

“நீங்க தான் சொன்னீங்களே… நமக்கான தருணங்கள்! நமக்கு மட்டும் சொந்தமா இருக்கணும்னு. அதே மாதிரி தான்… இதுவும்” என அவள் சொல்ல உதடு பிரியாத சிரிப்புடன் அவளை பார்த்தான் தேவா. அதை பார்த்தவள் சற்று நிம்மதியுற்றாள்.​

“அதை நீயே உங்க வீட்ல சொல்லலாமே மதி?” என அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.​

“எங்க வீட்ல நான் எதாவது சொன்னா, அபாசகுணமா பேசாதனு சொல்லுறாங்க…” என மூக்கை சுருக்கி உதட்டை சுழித்து சொல்லியவளை பார்க்க இப்பொழுது சுவாரஸ்யமாக இருந்தது.​

“அன்னைக்கு நம்ம நிச்சயத்துக்கும் தான புடவை நகையெல்லாம் எடுத்தாங்க?” என கிடுக்கிப்பிடி போட்டான்.​

“அ…அது… நிச்சயத்துக்கு தான!” என்று திணறியவளை பார்த்து,​

“எல்லாமே நாம நினைக்கிறதுல தான் இருக்கு மதி!” என்றான் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன். அதற்கு அவள் பதில் எதுவும் கூறாமல் அமைதியை கடைபிடித்தாள்.​

“சரி விடு. இனி எதுனாலும் என்கிட்ட சொல்லு நாம பார்த்துக்கலாம்” என தேவா கூறியதும்,​

அவன் ‘நாம்!’ என குறிப்பிட்டது யானைபலத்தை கொடுத்ததுபோல் உணர்ந்தவள், “ஓகே” என்று சொல்லிவிட்டு,​

“உங்க ஹைட் என்ன?” திடீரென்று கேட்டாள்.​

“ஆறடி எதுக்கு கேட்குற?” என புருவம் உயர்த்தி கேட்டான்.​

“எங்க அரவிந்த் அண்ணாவை விட நீங்க ஹைட் அதிகம். அதான் கேட்டேன். அப்படியே உங்க வெயிட்?” என கேட்க,​

“ஏன்? உன்னோட ஏரோபிக் சென்டருக்கு ஆள் எடுக்குறியா?” என்றான் கடுப்புடன்.​

“சொல்லுங்க சொல்லுங்க… ப்ளீஸ்”​

“எழுபத்தி ஐஞ்சு” என்று அவன் முடிதத்தும்,​

உடனே அவனின் ஹெயிட்டையும் வைட்டையும் கூகுளில் போட்டு பார்த்து, “ஓகே. பரவால… பிஎம்ஐ(BMI) நார்மலா தான் இருக்கு. இதுக்கு மேல வெயிட் ஏத்தாதீங்க...” என்று கூறியவளை முறைத்து பார்த்தான்.​

“ஆமா நீ யூடியூப்ல அவ்ளோ பேசுறீயே? எப்பவும் டையட்ல தான் இருப்பியா?” என அவனின் மூளையை குடைந்த சந்தேகத்தை கேட்டான்.​

“ச்ச ச்ச எப்பவும் இருக்கமாட்டேன். ஆனா அடிக்கடி ஏதாவது புதுசு புதுசா டயட் முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன்”​

“இப்படி அடிக்கடி டயட் இருந்தா உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா?” என்றான் அக்கறையுடன்.​

அவனின் கனிவான பேச்சில், “அதெல்லாம் நான் பார்த்துப்பேன்” என்று சிறிதுநேரம் பேசிட்டுவிடு இருவரும் கிளம்பினர்.​

இரவில் தனிமையில் அவர்களின் உரையாடலை நினைத்தபோது தான், ‘அவங்க கல்யாணத்தால தான நம்ம கல்யாணம் முடிவாகியிருக்கு…’ என்று சாருமதி கூறியது தேவாவிற்கு நினைவு வந்தது.​

அவளின் தற்போதைய மனநிலையை ஓரளவிற்கு கணித்தவன்,​

‘இதைப்பற்றி மதியிடம் தெளிவாக பேச வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டான்.​

__________​

நாட்கள் யாருக்கும் காத்திராமல் காலில் சக்கரம் கட்டியதை போல் வேகமாக செல்ல, இருமாதங்கள் கடந்து அரவிந்த்-வந்தனாவின் வரவேற்பிற்கான நாளும் அழகாக புலர்ந்தது.​

“இன்னும் கிளம்பாம என்ன சாரு பண்ணிட்டு இருக்க? நீ தான அங்க போய் வந்தனாவை மேடைக்கு கூட்டிட்டு வரணும். அரவிந்த் மேடைக்கு ஏறிட்டான்” தாம்பூல பைகளை சரிபார்த்துக்கொண்டே கத்திக்கொண்டிருந்தார் கோமதி.​

“இதோ பாட்டி இந்த லெஹங்கவோட துப்பட்டாவை மட்டும் பின் பண்ணிட்டா அவ்ளோ தான்” என்றவள் மடிப்பு கலையாமல் அவளின் தோழி ஸ்வர்ணமுகியின் உதவியுடன் பின் செய்துவிட்டு கண்ணாடியில் பார்த்தாள்.​

இளஞ்சிவப்பு நிறத்தில் தங்கநிற வேலைப்பாடுடன் இருந்த உடையில் தேவதை போல் ஜொலித்தாள் சாருமதி. “அழகா இருக்க சாரு! இப்பவே உனக்கு கல்யாணக்கலை வந்துடுச்சி” என்று கோமதி நெட்டி முறித்தார்.​

அதில் வெட்கம் கொண்ட சாருமதி, “நாங்க வந்தனா அண்ணியை கூப்பிடப்போறோம் பாட்டி” என ஓடியேவிட்டாள்.​

உறவுபெண்களின் மத்தியில் மணப்பெண்ணிற்குரிய சர்வ அலங்காரத்துடன் பதுமையாக இருந்தாள் வந்தனா. அந்த அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற சாருமதி,​

“அண்ணி அழகா இருக்கீங்க!” என்ற பாராட்டுடன், “உங்களுக்காக தான் அண்ணா மேடையில் வெய்ட்டிங் வாங்க போகலாம்” என வந்தனாவின் கைபிடித்து அழைத்துச்சென்றாள்.​

அங்கிருந்த உறவுகள் “இவள் தான் தேவாவிற்கு பார்த்திருக்கும் பெண்” என அவர்களுக்குள் சலசலத்தது சாருவிற்கு நன்றாகவே கேட்க படப்படப்பானது அவளின் இதயம்.​

மேடையில் அரவிந்தனின் அருகில் வந்தனாவை நிற்கவைத்து, இருவரையும் கிண்டல் செய்துவிட்டு கீழே இறங்கினாள். பின் அவளின் சின்ன பாட்டி காந்திமதியின் அருகில் ஸ்வர்ணமுகியுடன் சென்று அமர்ந்துக்கொண்டாள்.​

மேடையின் அருகில் கீழே நின்று அரவிந்த்-வந்தனா இருவரின் தோற்றத்தையும் ஜோடி பொருத்தையும் அகமகிழ பார்த்துக்கொண்டிருந்தான் தேவா.​

நாவல்பழ நிறத்தில் சட்டையணிந்து அதை கைமுட்டிவரை மடக்கிவிட்டு கருப்புநிற கால்சாராயில் ஆண்மையின் இலக்கணமாக நின்று அவனின் செல்ல தங்கையும் வருங்கால மச்சானையும் மனநிறைவுடன் பார்த்துக்கொண்டிருந்த தேவாவை தான் சாருமதியும் பார்த்து(ரசித்து)க் கொண்டிருந்தாள்.​

அவனின் அருகில் வந்த செல்வராணி ஏதோ சொல்ல, ‘சரி!’ என்னும் விதமாக தலையை ஆட்டிய தேவா, வலக்கையில் உள்ள காப்பை முறுக்கிக்கொண்டே வரிசைகட்டி நின்ற வேலையை கவனிக்க சென்றான்.​

அவனையே நோட்டமிட்டு கொண்டிருந்த சாருவிற்கு சப்பென்று ஆகியது. ‘அவன் பார்க்க வேண்டும் என்று மெனக்கெட்டு அலங்காரம் செய்தால் அவன் கண்டுக்கக்கூட இல்லை!’ என்று அவனை மனதிற்குள் அர்ச்சித்தாள்.​

சாருமதி வந்தனாவின் அறைக்குள் செல்லும் பொழுதே அவளுக்கு தெரியாமல் அவளை பார்த்து ரசித்தவனை பற்றி மங்கைக்குத்தான் தெரியவில்லை.​

தேவா செல்லுமிடமே சாருவின் கண்களும் சென்றுக்கொண்டிருந்தது. அவளின் அருகில் இருந்த காந்திமதி, “சாரு!” சற்று அதட்டலுடன் கூப்பிட்டவர், “சும்மா அந்த தம்பியையே பார்க்காத! எல்லாரும் உங்க ரெண்டு பேரை தான் கவனிச்சிக்கிட்டு இருப்பாங்க”​

“மணமக்களை விட்டுட்டு, எங்களை எதுக்கு கவனிக்க போறாங்க பாட்டி?” அறியபிள்ளையாய் சாரு வினவ,​

“அடுத்து நீங்க தான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க. அதனால எல்லாரோட கண்ணும் உங்களை சுத்திதான் இருக்கும். நீங்க ரெண்டு பேர் பார்க்குறீங்களா, பேசிக்குறீங்களான்னு உத்து உத்து பார்ப்பாங்க” என்று நிதர்சனத்தை கூறி பேத்தியை வேறு வேலையில் ஆழ்த்தினார்.​

நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஒன்றாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். தேவா-சாரு இருவரையும் கூட சேர்த்து நிற்கவைத்து ஓரிரு புகைப்படம் எடுத்தனர்.​

__________​

“எழுந்திரி சாரு. மணி நாலாகுது. புடவை கட்டி கிளம்ப நேரமாகும்” என ஜெயந்தி சாருவை தட்டி எழுப்பிவிட்டார். எழுந்தவள் பல்துலக்கி வந்துவிட்டு, “அம்மா காஃபி வேணும்” என்றாள் சோம்பலை முறித்துக்கொண்டு,​

“இது என்ன ஹோட்டலா ஆர்டர் பண்ணி வாங்குறதுக்கு?” என அதட்டலுடன் கேட்ட ஜெயந்தி,​

“கீழே வெச்சிருப்பங்க சாரு. நீ வேணும்னா போய் எடுத்துட்டு வரியா? அப்பா கீழ தான் இருக்காங்க” என்றார்.​

இரவுடையின் மேல் ஒரு துப்பட்டாவை கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டவள், “சரி ம்மா” என்று கீழே சென்றாள். அங்கு ஒரு ஃபில்டரில் காஃபி வைத்திருந்தனர்.​

மேடையில் நேற்று செய்த அலங்காரங்கள் கலைக்கப்பட்டு காலையில் திருமணத்திற்கு தேவையான அலங்காரம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அதனை அருகில் இருந்து தேவா தான் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.​

தூரத்தில் இருந்தே அவளை பார்த்தவன் வேட்டியை மடித்துக்கட்டுக்கொண்டு அவளிடம் விரைந்தான்.​

அவனின் செய்கைகளை ரசித்தவளிடம் வந்து, “உங்க அண்ணவோட கல்யாணத்துல உனக்கு வேற வேலையே இல்லையா மதி? நேத்துல இருந்து என்னையே பார்த்துட்டு இருக்க?” என நக்கலுடன் கேட்டு அவளின் கையில் காஃபியை திணித்தான்.​

மனதில் அவளின் ரசிப்பு அவனுக்கு இனித்தாலும் சுற்றம் உணர்ந்து சற்று பதறதான் செய்தான்.​

காஃபியை ஒரு மிடறு அருந்தியவள், “நான் உங்களை பார்த்தேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அப்ப நீங்களும் என்னை பார்த்தீங்க தான?” என்று எதிர்பார்ப்புடன் எதிர்கேள்வி கேட்டாள்.​

தூங்கியெழுந்து முடியை இறுக்கிகொண்டை போட்டிருந்தவள் இரவுடையிலே அழகிய ஓவியமாக காட்சியளித்தாள். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “கல்யாண வீடியோ வரும்ல அதுல பார்த்து தெரிஞ்சிக்கோ” என்று கூறியவன் தானும் காஃபியை அருந்தினான்.​

“அப்பாவை பார்த்தீங்களா?”​

“அவர் சமையல் வேலையை மேற்பார்வை பார்க்க போனார்” என்றவன் ஆட்கள் எழுந்து வருவதை பார்த்து,​

“சீக்கிரமா காஃபி குடிச்சிட்டு மேல போ மதி. எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க” என அவளை எச்சரித்தான்.​

“நாம ஒண்ணும் தப்பு பண்ணலையே!” என்றவளை தலை சரித்து பார்த்து,​

“அவங்களுக்கு தேவையில்லாம நாம கண்டன்ட் கொடுக்க வேண்டாமே! யூடியூப் வெச்சிருக்க உனக்கு தெரியாததா?” என்று சிரித்தவனிடம்,​

“ஆமாம்மா… அப்படியே சப்ஸ்க்ரைப் பண்ணிட்டீங்க பாருங்க…” என்று அலுத்துக்கொண்டு அன்னைக்கும் பாட்டிக்குமான காஃபியுடன் மேலே ஏறினாள்.​

சின்னசிரிப்புடன் தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டே திருமண வேலையை கவனிக்க சென்றான், தேவா.​ 

Mathykarthy

Well-known member
சாரு ரொம்ப அதிகமா திங்க் பன்றா.... கல்யாண பேச்சை ஆரம்பிச்சது இவங்க பாட்டி தானே.... இவளோட விருப்பத்தை அவங்ககிட்டயே சொல்லலாமே....🤔🤔🤔

சாரு தேவா ஜோடி தான் மாப்பிள்ளை பொண்ணை விட கலக்குறாங்க.... 😍😍😍😍😍😍😍
 
santhinagaraj

Active member
கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை விட சாரு தேவா தான் ஸ்கோர் பண்றாங்க சூப்பர்.

இவ ஸ்டோரி முடியிற வரைக்கும் தேவா கிட்ட சப்ஸ்கிரைப் பத்தி கேட்டுட்டே இருப்பா போல
 
NNK-29

Moderator
சாரு ரொம்ப அதிகமா திங்க் பன்றா.... கல்யாண பேச்சை ஆரம்பிச்சது இவங்க பாட்டி தானே.... இவளோட விருப்பத்தை அவங்ககிட்டயே சொல்லலாமே....🤔🤔🤔

சாரு தேவா ஜோடி தான் மாப்பிள்ளை பொண்ணை விட கலக்குறாங்க.... 😍😍😍😍😍😍😍
யெஸ் dear சாரு ரொம்ப யோசிக்கிறா😢 அவளோட make அப்படி😜 அதான் அவங்க வீட்ல தடை போடுற மாதிரி ஏதாவது பேசினாலே அபாசகுணமா பேசாதன்னு சொல்லுறாங்களே😢

நன்றி dear❤️❤️❤️
 
NNK-29

Moderator
கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை விட சாரு தேவா தான் ஸ்கோர் பண்றாங்க சூப்பர்.

இவ ஸ்டோரி முடியிற வரைக்கும் தேவா கிட்ட சப்ஸ்கிரைப் பத்தி கேட்டுட்டே இருப்பா போல
Subscribe பண்ண வைக்கமா விட மாட்டா போல😂😂😂 நன்றி dear❤️
 
Advi

சின்னசிரிப்புடன் தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டே திருமண வேலையை கவனிக்க சென்றான், தேவா.​எதார்த்தமான எதிர்பார்ப்பு தானே மதி கிட்ட இருக்கறது.....

தன்னோட ஸ்பெஷல் டே தங்களுக்கு மட்டுமே இருக்கறதா இருக்கணும்னு நினைப்பா தானே.....

தேவா எப்பவும் அண்ணானா இருக்கணும்னு இல்ல....

கொஞ்சமே கொஞ்சம் காதலான இருக்கலாம் தப்பு இல்ல....
 
NNK-29

Moderator
எதார்த்தமான எதிர்பார்ப்பு தானே மதி கிட்ட இருக்கறது.....

Top