எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 5 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 5​

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இன்பா நிலா இருவரும் ஒரே வீட்டில் இருந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. விரும்பாத மனைவியுடன் கலந்து விட்டோமே என்று அவனும், அவனை துளியும் எனக்கு பிடிக்காது வெறுக்கிறேன். ஆனாலும் அவன் தீண்டல் எனக்கு இனித்ததே. அவன் நெருக்கமும், கருவிழி பார்வையும் உயிர் சென்று தாக்கியதே, பெண்மையின் பூக்களை மலர செய்ததே. முழு மனதோடு தானே அவனுடன் இழைந்தேன், இசைந்தேன், கரைந்தேன். அப்படியானால் அவன் மீது எனக்கு இருந்த உணர்வுக்கு பெயர் என்ன?? காதலா?? நிச்சயம் இல்லை. காமமா?? என்று கேட்க அவளிடம் பதில் இல்லை.​

மன வேதனையுடன் ஏற்று கொண்டாள். காமம் கொண்டு, வயதின் தேவைக்கும் உடல் ஆசைக்கு இழைந்தேன் என்று. தன்னை நினைத்து அறுவருத்தாள். காதல் கொண்டு சங்கமிக்கும் உறவில் காமம் ஒன்றை மட்டும் கொண்டு ஆடவனை ஏற்றேனே.. என்று நினைத்து நினைத்து தன்னையே வெறுத்தாள். நிமிர்ந்து கூட இன்பாவை அவள் பார்க்கவில்லை. கண் கட்டு வித்தை போல இரண்டு நாட்கள் ஓடி சென்றிருந்தது.​

கல்லூரியிலும் நாட்டம் இல்லாமல் வழக்கமான புத்துணர்ச்சி இல்லாமல் சோர்ந்து கிடந்தாள். அவளை பார்த்த இன்பாவிற்கு குற்றவுணர்ச்சி இன்னும் அதிகமானது. எதுவாக இருந்தாலும் அவளிடம் என்று பேசியே தீர வேண்டும் என்று நினைத்தவன் மாலை அவளுக்காக கல்லூரி வாசலில் காத்திருந்தான். அவனை அங்கு எதிர் பார்த்திராதவள் விழி விரிந்து பார்க்க, அவளை பார்த்தான். அவனிடம் வந்து நின்றவளிடம் "வண்டில ஏறு.." என்றான் சன்னமான குரலில்.​

அமைதியாக வண்டியில் ஏறி கொண்டாள். அரை மணி நேரம் பயணம் வரை இருவருமே பேசி கொள்ளவில்லை. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கடற்கரை ஓரம் வண்டியை நிறுத்தியவன் அவளுக்கு எதிரில் நின்று அவளை பார்க்க, அவன் விழி வீச்சு தாங்க முடியாமல் தாமரையாய் தலை குனிந்தாள்.​

"உனக்கு என்ன பிரச்சனை நிலா?? ஏன் இப்டி பேய் புடிச்ச மாதிரி இருக்க??" வெயிலில் பட படவென வெடிக்கும் விதையாக இருந்தவள் இப்படி எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்கிறாளே என்று அவன் கேட்க அவளிடம் பதில் இல்லை.​

"உனக்கிட்ட தான் கேக்குறேன் சொல்லு டி.." அவள் நாடி பற்றி நிமிர்த்த அவள் கண்கள் கண்ணீரால் பள பளத்தது. குருவாளால் இதயத்தை கூறு நூறாக அருத்தது போல உணர்ந்தான் தன்னவள் கண்ணீரால்.​

"நான் உன்ன தொட கூடாதா?? உனக்கு பிடிக்கலையா?? மொரட்டு தனமா நடந்துகிட்டேனா?? நான் உன் புருஷன் தானே நிலா.." வருத்தமாக கேட்க இப்போதும் அமைதியாக நின்றாள்.​

"ஏதாவது சொல்லு டி.." குரல் உயர்த்தி ஹை டெசிபலில்​

கத்த "எனக்கு பிடிக்கல.." என்றாள் நெற்றி பொட்டில் அடித்தாற் போல்.​

சில்லு நூறாய் சிதறி போனான் இன்பா.. இந்த வார்த்தையை தானே அவளிடம் கேட்க கூடாது என்று நினைத்தான்.​

"என்ன பிடிக்கல?? தெளிவா சொல்லு. என்ன பிடிக்கலையா?? அன்னைக்கு நமக்குள்ள நடந்தது பிடிக்கலையா??" தெளிவாக கேட்க "எதுவுமே எனக்கு பிடிக்கல.. என்னையே எனக்கு பிடிக்கல.. போதுமா.." ஆங்காரமாய் கண்ணீர் தழுக்கென்று கொட்ட கூறியவள் அங்கிருந்து செல்ல பார்க்க அவள் கரம் பற்றி நிறுத்தினான்.​

கண்ணம் வழிந்த கண்ணீரோடு, அவனை பார்க்க "அன்னைக்கு நான் தொட்டதும், முத்தம் கொடுத்ததும், அப்புறம் நடந்ததும் உனக்கு பிடிக்கலையா??" இதயம் யானையாய் கணக்க கேட்டான். அதற்கு அவளிடம் பதில் இல்லை.​

பிடித்ததே.. அவன் தீண்டல், முத்தம், ஆண்மையின் வேகம் என அனைத்தையும் விரும்பினாளே.. ஆனாலும் பதில் சொல்லாமல் நிற்க "அப்போ உனக்கு பிடிக்காம நான் உன்ன ரேப் பண்ணிருக்கேன்னு சொல்றியா??" அழுத்தம் திருத்தமாக கேட்க அதிர்ந்தாள் அவள்.​

"என்னது பலவந்தமா?? நிச்சயம் இல்லை. நானும் விரும்பினேனே.. அவனுடன் இழைந்தேனே. நானும் முத்தமிட்டேனே.. ஆண்மை ஆட்டத்தில் கண்கள் சொருகி கட்டி அணைத்து முழுமையாய் அவனை ஏற்றேனே பிறகு எப்படி அது பலவந்தம் ஆகும்.. நிச்சயம் இல்லை.." மனதால் துடித்தாலும் ஒரு வார்த்தை அவள் திருவாய் திறந்து வரவில்லை. இவ்வளவு யோசித்தவளுக்கு அவனை விரும்பி ஏற்றது உரைக்காமல் போனது தான் பரிதாபம்.​

அவள் அமைதி அவனை மேலும் மேலும் வெறியேற்ற, அவள் கரம் விடுத்து வண்டியில் ஏறி கிக்கரை உதைக்க அது ஒரே உதையில் உயிர் பெற்று கொண்டது. ப்ரெக் பிடித்து கொண்டு ஆக்சிலேட்டரை திருகினான். நச்சு புகையை கக்கி கொண்டு நின்ற வண்டியின் மீது மொத்த கோபத்தையும் காட்டினான். அவனை வெறித்து பார்த்தவள் அமைதியாய் அவனுடன் ஏறி கொள்ள பறந்தது பைக். இருவரிடையியும் கடும் அமைதி​

நிலவ வண்டியை நிறுத்தி இறங்கு என்றான் இன்பா.​

இறங்கியவள் எதிரில் இருந்த அவள் வீட்டை கண்டு அதிர்ந்து போனாள். அதே அதிர்ச்சியுடன் அவனை பார்க்க "சீக்கிரமே டிவைஸ் பேப்பர் சைன் பண்ணி அனுப்புறேன்.. உன் திங்க்ஸ் எல்லாம் எப்போ தோணுதோ அப்போ வந்து எடுத்துக்க. இனிமே உன் வாழ்க்கைல நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. நடந்ததுக்கு காரணம் நான் தான். என்ன மன்னிச்சிரு.." அவள் விழி பார்த்து கூறியவன் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்ல சிலையாக உறைந்து நின்றாள் நிலா..​

எவ்வளவு நேரம் அப்படியே நின்றளோ தெரியாது.. கீ கொடுத்த பொம்மை போல வீட்டிற்குள் வந்தவளை கேள்வியாக பார்த்தார் மாதவி. "நிலா.. என்ன டி தனியா வந்திருக்க?? உன் புருஷன் எங்க??" வாசலை பார்த்த படி கேட்க பதில் சொல்லாமல் வாடிய முகத்துடன் தன் அறைக்குள் சென்றுவிட்டாள். அவள் அமைதி மாதவி வயிற்றில் புளியை கரைத்தது. ராசாத்தியிடம் இது பற்றி கூற "இவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னே தெரிஞ்சுக்க முடியல மாதவி.. நீ கேள்வி கேட்டு அவள தொந்தரவு பண்ணாத. நாளைக்கு பேசிக்கலாம்.." என்று முடித்து கொண்டார்.​

பிரகாஷ் வர அவரிடமும் கவலையாக கூறினார் மாதவி. இருவருக்கும் இடையில் முட்டல் மோதல் இருக்கிறது என்று தான் அவருக்கு தெரியுமே.. தன் மகளிடம் மனம் விட்டு பேச நினைத்து "நிலாக்கு சாப்பாடு எடுத்திட்டு வா.." என்றார். கேள்வியாக கணவரை பார்த்த மாதவி எதுவும் கேட்டு கொள்ளாமல் மூன்று இட்டலியும் சாம்பாரும் எடுத்து வர அதை பெற்று கொண்டு மகள் அறைக்கு சென்றார் பிரகாஷ்.​

ஜன்னலை வெறித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள் நிலா. கதவு திறக்க படும் ஓசை கேட்டும் அமைதியாக இருந்தவள் "நிலா.." என்று தந்தையின் குரலில் திரும்பினாள். அவள் அருகில் வந்து அமர்ந்தவர் எதுவும் கேட்டாமல் இட்டலியை துண்டாக்கி சாம்பாரில் முக்கி ஊட்ட மறுக்காமல் வாங்கி கொண்டாள். முழுவதுமாக உண்டு முடித்தவளுக்கு தண்ணீர் கொடுத்தவர் "என்னாச்சு டா??" சாந்தமாக கேட்டார்.​

தண்ணீர் வடிந்த இதழை துடைத்து கொண்டவள் "தெரியல ப்பா.. குழப்பமா இருக்கு.." என்றாள் தெளிவில்லாத மனநிலையுடன். மகளை அழுத்தமாக பார்த்தவர் "அப்பா எது பண்ணாலும் அது உன் நல்லதுக்கு தான் நிலா.. உனக்கு இன்பாவ கொஞ்சம் கூட பிடிக்கலைன்னு தெரிஞ்சும் நான் உன்ன அவனுக்கு கல்யாணம் பண்ணிச்சேன்.. அவன் நிச்சயமா உன்ன நல்லா பாத்துக்குவான்னு. அந்த நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருக்கு.. நீயும் அவனை நம்பு.." என்று எழுந்தார்.​

"நல்லது கெட்டத பிரிச்சு பாக்குற அளவுக்கு நான் உன்ன வளர்திருக்கேன்.. அதுக்கு அப்புறம் உன் விருப்பம்.." என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.​

மீண்டும் குழப்பம் அவளுக்கு. உறக்கம் தொலைத்து கண்கள் மூடி படுத்து கொண்டாள்.​

இன்பா நிலை அதற்கு மேல். அவள் வாசம் இல்லாத படுக்கை அவனுக்கு நெருப்பாக சுட்டது. அவள் வாசம் தேடி கவிழ்ந்து படுத்து தலையணையை அணைத்து கொண்டான். புசு புசு பஞ்சு தலையணை கூட பாறை போல அழுத்தியது அவனுக்கு. பூந்தேகக்காரியின் உடல் மென்மைக்கு முன் இந்த தலையணை எல்லாம் நிற்க கூட முடியாமல் போனது.​

அவள் வந்த பிறகு மறந்து போயிருந்த குடியை கையில் எடுத்தான். மூக்கு முட்ட முட்ட குடித்தான். கலப்பு இல்லாமல் பாட்டிளோடு அப்படியே தனக்குள் சரித்தான். கழுத்து வரை மது நிரம்பியது. விழிகள் செவ்வானமாய் சிவந்து போனது. பாட்டிளோடு சோஃபாவில் சரிந்தான். தன்னிலை மறக்கும் அளவுக்கு அவன் குடித்ததே அவளை மறக்க தான். தன்னையும் மறந்தான் போதையில். ஆனால் அவளை மட்டும் மறக்கவே இல்லை. நினைவிலும் நிஜத்திலும் அவள் தான் இருந்தாள்.​

போதையில் மங்கிய விழிகளில் அவன் பிம்பம் நிழலாடியது. "என்ன உனக்கு தெரியலையா நிலா.. நான் உன் மாயன் டி.. என்ன மறந்து போயிட்டியா??" நிழலாக தெரிந்த அவள் நினைவோடு பேசினான்.​

"மாயான்னு சுத்தி சுத்தி வந்தியே​

டி.. என்ன தெரியலையா உனக்கு.. ஏன் டி என்ன விட்டு போன?? நானே போக சொன்னாலும் நான் உன் பொண்டாட்டி டா.. உன்ன விட்டு எங்க டா நான் போவேன் கருவா பயலேன்னு ரெண்டு அறை கொடுத்திருக்கலாமே நிலா.. போன்னு சொன்னதும் போயிட்டியேடி.. நான் பாவம் இல்லையா?? மறுபடியும் என்ன தவிக்க விட்டுட்டியே டி.. பொண்டாட்டி.. நீ வேணும் டி.. மூச்சு முட்ட கட்டி அணைக்க வேணும் டி நீ.. ஆசை தீர கொஞ்சனும் டி உன்ன.. உன் உடம்ப பிச்சு திண்ணனும் டி.. என்கிட்ட வந்திரு நிலா.." புலம்பி தீர்த்தான்.​

சிறு வயதில் ஏற்பட்ட அறிமுகம் காதலாய் அரும்பி அவளுக்காக காத்திருந்து கரம் பற்றி இருக்கிறான். அவள் தான் கால ஓட்டத்தில் அவனை மறந்துவிட்டாள். விதியோ சதியோ அன்று அவனை நீண்ட காலத்துக்கு பிறகு பார்க்கும் போது கெட்டவனாக தீயவனாக அறிமுகம் ஆகிவிட்டான். ஆனாலும் ஆள் மனம் கொண்ட காதல், அவள் மனதில் விதையாய் புதைந்திருந்த காதல் விருட்சமாய் வளருமா??​

தொடரும்…​

 

Advi

Well-known member
என்ன டா நீ, அவளுக்கு தான் ஒன்னும் தெரியல....

அதனால் இப்படி பேசிட்டா, அதுக்குன்னு இப்படி விட்டு வருவா?????

நிலா நீயும் கொஞ்சம் யோசிச்சி பேசு.....பாவம் தானே அவனும்....

அந்த வார்த்தைகள் எப்படி அவனை hurt பண்ணி இருக்கு பார்த்தியா.....
 

Mathykarthy

Well-known member
இவளுக்கு பிடிக்கலன்ற வார்த்தையைத் தவிர வேற எதுவும் தெரியாது போல... 😤😤😤😤😤😤
ஒன்னு பேசி hurt பண்றா இல்லைனா பேசாம hurt பண்றா...
எப்போ தான் இன்பாவை புரிஞ்சுக்கப் போறாளோ... 😞😞😞
 
Top