எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயப்பூவே

S. Sivagnanalakshmi

Well-known member
இதயப்பூவே கதை சுவாரஸ்யமாக போனது. கதையில் கல்யாணம் பின்பு காதல் சண்டை குறும்பு துரோகம் சஸ்பென்ஸ் கலந்து அருமையான காதல் கதை. இரு ஜோடிகள் அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் வம்படியாக நடந்த திருமணம் ஆனாலும் இரு ஜோடியும் மதிக்கிறார்கள். பூபேஷ் நிலா இரண்டு பேரும் சண்டை பாசம் இரண்டு கலந்த ஜோடி. பூவிழி இதய வர்மன் இரண்டு பேரும் பூவிழி அன்பாக அவனை பார்த்து கொள்கிறாள் வர்மன் அனுபவிக்கிறான். முதல் ஜோடிக்கு அவர்களே வில்லங்கம். இரண்டாவது ஜோடிக்கு பூஜா வில்லி. சத்யா பால் சாமி அவனோட மனைவி அக்கா மாமா அத்தை ஷ்ரவன் செம. வர்மன் அப்பா வில்லனாக இருந்து நம்மை கலங்கடிக்கிறார். இரு ஜோடிகளின் பிரச்சினை திருப்பங்கள் என சுவாரஸ்யமாக கொண்டு போயிருப்பது சூப்பர். முடிவு அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
 
Top