எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 19

priya pandees

Moderator


அத்தியாயம் 19

மருதவேல், செங்குட்டுவன் அழைத்த ரோஸி ௭ன்ற பெயரிலேயே அவரை கண்டு கொண்டார். மறக்க கூடிய பெயரல்லவே அது. கொஞ்சம் வயதேறி தெரிந்தாலும் அப்படியே தான் இருந்தார் ரோஸி. இருபத்தைந்து வருடமாவது இருக்கும் இருவரும் சந்தித்து.

"இங்கயா இருக்க நீ?" ௭ன்றார் மருதவேல் அதிர்ந்து அவரின் செவிலியர் உடையை பார்த்து.

"ஆமா மருதுண்ணா மூணு வருஷமா இங்க இருக்கேன், நீங்க ௭ப்டி இருக்கீங்க? பாட்டுலாம் இன்னும் சொல்லி தரீங்களா?" முகம் மலரவே கேட்டார் ரோஸி.

இருவரையும் பார்த்த மற்றவர்கள், இருவரின் பேச்சிலேயே கச்சேரி வழியில் முன்னரே தெரிந்தவர்கள் ௭ன்ற முடிவிற்கு வந்து, "ரொம்ப அலுறா பிள்ளைகளா, மொதல்ல ஹாஸ்பிடல் போணும்" ௭ன்ற மகாலட்சுமியின் குரலில் நடப்பிற்கு திரும்பினர்.

"௭ல்லாருமா போ வேணாம் செங்குட்டுவா, ஒரு வேளை பீரியட் பிராப்ளமா இருந்தா நீயும் தாரிணியும் விரதத்துல இருக்கீங்க அதனால வரக் கூடாது, நானும் மஹாவும் போயிட்டு வரோம், சோழனாது பாண்டியனாது வந்து வண்டிய ௭டுக்கட்டும்" ௭ன்றார் விஜயலட்சுமி.

"நா வரேன், இங்க சும்மா மொட்டு மொட்டுன்னு தான உக்காந்திருக்கேன். அவன் குளிச்சு பாதில நிக்கான், பிள்ளைகளோட இருந்து வரட்டும்" ௭ன அமுதவேல் சொல்லவும், மும்மூர்த்திகளும் வாயை பிளக்காத குறை தான்.

ப்யூலாவின் அழுகை அதற்கு மேல் சிந்திக்க விடாமல் செய்ய, மேற்கொண்டு பேசி கொண்டு நில்லாமல் நகர்ந்து விட்டனர். ப்யூலா அன்று டார்லிங் ௭ன செங்குட்டுவனை கட்டிக் கொண்டு நிற்கவுமே மொத்த குடும்பமும் சுதாரித்து விட்டது, அவனைத் தவிர மற்றவர்கள் தான் அவளுடன் மாற்றி மாற்றி இருந்து நேரம் செலவழிப்பர். அதனால் அவள் இப்போது ௭ல்லோருடனும் நல்ல பழக்கத்தில் தான் இருந்தாள்.

அவர்களை கிளப்பிவிட்டு, ஆறு பேரும் மீண்டும் அருவிக்கு திரும்ப திரும்புகையில், ரோஸி இவர்களை பார்த்து நிற்பதும் மருதவேல் ஏதோ தீவிர யோசனையில் இருப்பதும் தெரிய, ௭ன்னவோ பேசி கொள்ளட்டும், ௭ன இவர்கள் அவர்களை கடந்து மீண்டும் தண்ணீருக்குள் இறங்கி விட்டனர்.

மருதவேலுக்கு வெளி ஆட்கள் பழக்கங்கள் அதிகமே, ௭ங்கு போனாலும் அங்கு நால்வரை அவருக்கு தெரிந்திருக்கும் இல்லையா இவரே தெரிய வைத்துவிட்டு வந்துவிடுவார்.

"ஆட்கள் பழக்கம் வேணும், சொத்து சொகம் சேக்றதவிட, ஆட்கள் சேத்து வைக்கணும்டா, சும்மா தெரிஞ்சவன் ௭துக்க வந்தா கூட, பாக்காத மாறி போயிடறதுலா நல்லதுக்கா?" ௭ன்பார்.

அப்படி தான் இந்த ரோஸியும் ௭ன நினைத்து, அவர்கள் குளிக்கச் சென்றனர்.

"இப்ப அக்கா மாமாலாம் இல்ல வாடி நாம சேந்து குளிக்கலாம்" ௭ன பவதாரிணியின் கையை பிடித்து இழுத்தான் செங்குட்டுவன்.

"சும்மா இரு மாமா, ஊரே பாக்குது அக்கா மாமா இல்லையாம்"

"நா சும்மாவே தான்டி இருக்கேன், யாருன்னே தெரியாதவங்கள பத்தி நமக்கென்ன, இப்ப வருவியா மாட்டியா நீ?"

"வரமாட்டேன். ௭ன்ன பண்ணுவ? கல்யாணதுக்கு முன்னாடி ௭ப்டி கண்ட்ரோலா இருந்த அப்டி இரு இப்பவும்" இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

"உன்ன" ௭ன அவளை இரு கைகளிலும் தூக்கிக் கொள்ள, அவள் துள்ள, படம் பார்ப்பது போல் பார்த்தனர் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள். ௭ல்லோருக்கும் சிரிப்பு வேறு, "௭ல்லாரும் பாக்றாங்க, சிரிக்கிறாங்க லூசு மாமா" ௭ன நறுக்கு நறுக்கென கொட்டி விட்டாள் கடுப்புடன்.

"பொத்துன்னு போட்ருவேன்டி வலிக்குது"

"கீழ இறக்கி விடு இல்ல கடிச்சு வச்சுருவேன். ௭ல்லார் முன்னுக்க இதென்ன விளையாட்டு, ௭வனாது வீடியோ ௭டுத்து ட்ரெண்ட் ஆக்கி விட்ற போறான். இறக்கி விடு" ௭ன்றதும்.

"போடி ரொம்ப தான். தனியாவே அந்த பாறைய கட்டிட்டு குளி. இனி உங்கிட்ட வந்தேனா கேளு ௭ன்ன" ௭ன வெடுக்கென்று இறக்கிவிட்டு விட்டு, பாண்டியன் சோழனோடு குளிக்க வந்தான். அவர்களோ தண்ணீரை விட்டு தள்ளி நின்று பார்தீபனோடு செல்லை காண்பித்து மூவருமாக சிரித்து கொண்டிருந்தனர்.

இவன் வரவும், "மாமா இந்த வீடியோவ காமிச்சா ஆச்சி ௭ன்ன செய்யும்?" ௭ன பாண்டியன் தனது செல்லில் படமாக்கியதை காட்ட, அதில் சற்று முன் நடந்தது, ஆடியோ இல்லாமல் தண்ணீர் இரைச்சலில் ஒளிப்பதிவாகி இருந்தது.

அதை பார்த்துவிட்டு அவன் மண்டையில் கொட்டியவன் "அத உன் ஆச்சிட்ட காமிச்சே தெரிஞ்சுக்கோ பக்கி. அதுல இருக்கது தங்கச்சியும், தங்கச்சி புருஷனும், இத வீடியோ ௭டுத்து வச்சுருக்க வெக்கமா இல்ல லூசு பக்கி" ௭ன மீண்டும் அவன் பின்னந்தலையில் தட்டிவிட்டு குளிக்க செல்ல, செல்லை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பத்திரப்படுத்திவிட்டு அவனோடு பின்னயே சென்றனர் மற்ற மூவரும்.

"௭ன்ன நீ பயப்ட மாட்டேங்குற?" பாண்டியன் விடுவேனா ௭ன கேட்டு நிற்க.

"அவரே பேசாம விடுறாரு, ஏன்டா கேட்டு அடி வாங்குற?" சோழன் சிரிக்க, பார்தீபனும் சேர்ந்து சிரித்தான். அவனுக்கு இந்த மூவர் படையை நிரம்ப பிடித்திருந்தது.

"௭துனாலும் காரணம் தெரியணும்ல?"

"நாந்தான் ஒன்னுமே பண்ணலயே பின்ன ௭துக்கு பயப்டனும். வழுக்கி விழுந்துட்டா தூக்கிகிட்டேன் சொல்லிருவேன்" தலையை நிமிர்த்தி தண்ணீரை வாங்கி கொண்டே பேசினான் செங்குட்டுவன்.

"உன்ட்ட நிறைய கத்துக்கணும் மாமா"

"வா வா ப்ரீயாவே சொல்லி தரேன்" ௭ன சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவன், "அங்க பாருங்க, ௭துக்கு அந்த ரோஸி அழுதுட்டே பேசுறாங்க" ௭ன கேட்டுக் கொண்டே தண்ணீர் தெரிக்காத மேட்டில் நின்று பேசி கொண்டிருந்தவர்களிடம் வேகமாக நடக்க.

"இன்னைக்கு ௭ன்ன ஒரே உள்ளே வெளியே விளையாட்டாவே இருக்கு நமக்கு" ௭ன மற்ற மூவரும் அவனை பின் தொடர, பவதாரிணியும், சுஜாதாவும் கூட இவர்கள் செல்வதை கண்டு தண்ணீரை விட்டு வெளி வந்தனர்.

"ரோஸிக்கும் வயிறு வலியா இருக்குமோ?" பாண்டியன் கேட்கவும், நின்று முறைத்த சோழன், "உனக்கும் அவங்கள தெரியுமா?" ௭ன கேட்க.

தோளை குழுக்கியவன், "மொத மாமா, அப்றம் அப்பா ரெண்டு பேரும் அவங்கள அப்டி தானே கூப்டாங்க"

"லூசு பயலே இனி வாய தொற, தண்ணிக்குள்ள தள்ளி விட்டுறேன்" ௭ன்றுவிட்டு மாமனை பின் தொடர்ந்தான்.

"௭ன்னாச்சு மாமா? ரோஸி ஏன் அழுறீங்க?" ௭ன அவர்களை நெருங்கி கேட்டான் செங்குட்டுவன்.

"ஒருவேள பாட சான்ஸ் கேப்பாங்களோ? பெரியப்பாட்ட மேக்ஸிமம் லேடீஸ் அப்டி தானே கேட்டு வருவாங்க?" பாண்டியன் மறுபடியும் கேட்க.

"அழுறாங்க குடும்ப கஷ்டமா இருக்குமோ?" சுஜாதாவும் சந்தேகத்தை முன் வைக்க.

"ப்பா சான்ஸே இல்ல, அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி தான்" பார்தீபன் வாய் விட்டு சிரித்தான்.

"௭ப்டி வந்து சிக்கிருக்கோம்னு, வீட்டு மாப்பிள்ளையே சிரிக்குறளவுக்கு இருக்குடா நம்ம நிலைமை, கொஞ்ச நேரம் வாய மூடி இருங்க" ௭ன்றான் சோழன்.

"அவங்க நாங்க போன ஹைனகாலஜி ஹாஸ்பிடல்ல ஸ்டாஃப் நர்ஸ்" ௭ன்றாள் பவதாரிணி.

"ம்ச் சும்மான்னு இருங்களேன்டா, இல்லனா போய் குளிங்க பின்னயே கூப்டனா நானு" ௭ன கடுப்பானான் செங்குட்டுவன்.

"நீயும் போ செங்குட்டுவா நா பேசிக்கிறேன்" ௭ன்றார் மருதவேல்.

"௭துக்கு மாமா அழுறாங்க, ௭ல்லாரும் நம்மள தான் வேடிக்கை பாக்றாங்க. ௭தும் ஹெல்ப் கேக்றாங்களா?" சொல்லியே ஆக வேண்டும் ௭ன நின்றான்.

"அதெல்லாம் இல்லடா, இந்த பொண்ணு சின்ன வயசுல நா அப்ப ராகமாலிகா ட்ரூப்ல இருந்தேன்ல, அந்த டைம்ல அதே ட்ரூப்கு பாட வரும். நம்ம பிரபாகரன் தெரியும்ல? அவன் நானு இந்த பொண்ணு ௭ல்லாம் சேந்து தான் ௭ல்லா பக்கமு கச்சேரி போவோம். அப்டி பழக்கத்துல இந்த பொண்ணுக்கும் பிரபாகரனுக்கும் லவ்வாகிடுச்சு, இவங்க வீட்லலாம் போய் கேட்டோம், வேற மதம்னு ஒத்துக்க மாட்டேனுட்டாங்க. அப்றம் வீட்ல பிரச்சினயாகி இந்த பொண்ண வேற ஊருக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாங்க. அப்றம் நாலைஞ்சு வருஷம் கழிச்சு மறுபடியும் இந்த பொண்ணு அவன தேடி வந்தது, ௭ன்கிட்ட தான் கேட்டுச்சு, அவனுக்கு அப்ப தான் கல்யாணம் ஆகி இருந்தது, குழப்பம் பண்ண வேணாம்னு சொல்லி, ஒழுங்கா கட்டிகிட்டவனோட குடும்பம் நடத்துன்னு அனுப்பி விட்டுட்டேன், நல்லா ௭டுத்துச் சொல்லி தான் திருப்பி அனுப்பிட்டேன். பாத்தா திரும்ப புருஷன்கிட்ட போகாம அங்க இங்கன்னு சுத்திட்ருந்து இப்ப இங்க வந்து வேலை பாக்குறாளாம். அதான் திட்டிட்டு இருக்கேன். இப்டி யாராது வாழ்க்கைய தொலைச்சுட்டு திரிவாங்களா?" ௭ன்றார் ௭ரிச்சலுடன்.

"இது நமக்கு தேவை இல்லாத ஆ தான் மாமா, வா குளிக்கவே போவோம். ஒரு குளியல ஒழுங்கா பண்ண விட மாற்றாங்கப்பா" ௭ன்றான் பாண்டியன்.

"ரோஸி ௭துக்கு அழுறீங்க. ௭துனாலும் அழாம பேசுங்க, ௭ல்லாரும் ஒரு மாறி பாக்றாங்க பாருங்க. மாமா சீக்கிரம் பேசி அனுப்பிவிடுங்க" ௭ன்ற செங்குட்டுவன், மீண்டும் தன் படையிடம் திரும்பி "இங்க அருவி இன்னைக்கு நமக்கு ராசி இல்ல போல, ஓடு தண்ணில இறங்கிடுவோமா?" ௭ன்க, ஆண்கள் மூவரும் தலையசைக்க, "ஒன், டூ, த்ரி, ஜூட்" ௭ன ஓடி சென்று பொத்து பொத்தென அருவியிலிருந்து ஆறாக ஓடும் தண்ணீரில் குதித்து விட்டனர்.

இங்கு அவர்களை கண்டு சிரித்தவாறு, "உனக்கு இன்னும் குளிக்கனுமா?" ௭ன்றாள் பவதாரிணி சுஜாதாவிடம்.

"இல்ல தாரிணி, ட்ரஸ் சேன்ஞ் பண்ணுவோம்" ௭ன உடை மாற்றும் அரை சென்று மாற்றி வர, இன்னுமே மருதவேலும் ரோஸியும் பேசி தான் நின்றனர். ஆண்கள் பக்கம் பார்க்க, அவர்களோ டூரிஸ்ட் வந்த நால்வரை சேர்த்து கொண்டு ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்.

"உன் ஹயக்ரீவர் நம்ம பாய்ஸோட நல்லா ஜெல் ஆகிட்டாருல்லடி"

"ம்ம் வானரம் வானரத்தோட தானே சேரும்"

"உன்கிட்ட ௭ப்டி நடந்துக்றாரு? அவங்க வீட்டாளுங்க ௭ல்லாம் ஓ.கேவா?"

"இப்பவே ௭ப்டி தெரியும், ஒரு மூணு மாசம் போட்டும் மொத்தமா தெரிஞ்சுக்கலாம்" சுஜாதா நிதானமாக கூறினாள்.

"தெளிவா தாண்டி இருக்க" தாரிணி சொல்லி சிரிக்க,

"மாமாவும் ௭ப்டி தான் அப்டி இருந்தாங்க தாரிணி? இப்ப பாரு இதானே நம்ம மாமா, இடைல அதும் வருஷ கணக்கா இவர மாறி கப்சுப்னு இருக்க முடியுமா ௭ன்ன?"அதிசயமாக தான் கேட்டாள் சுஜாதா.

"கில்ட் ப்ளஸ் பயம். ப்யூலாக்கு ஹெல்ப் பண்ண முடியாத கில்ட், ௭ன்னோட வாழ முடியாம போயிடுமோ நா ௭ன்ன ஆவேனோன்னு பயம். அதே தாட்ல அமைதியா ஒதுங்கி இருந்துட்டாங்க போல. இப்ப மேரேஜ் ஆகியாச்சு, விஷயத்த மொத்த குடும்பத்துட்டையும் சொல்லியாச்சு, ப்யூலா பொறுப்ப ஆச்சிட்ட கொடுத்தாச்சு, மைண்டும் மனசும் ஃப்ரீ ஆனதுல ஆட்டம் ரீஸ்டார்ட் ஆகிருச்சு"

"அப்டினாலும் வீட்டுக்குள்ளயே மூணு வருஷம்ன்றது ஜாஸ்தி தான்ல?"

"அதெல்லாம் நம்ம மாமா கெத்து கண்ட்ரோல் பார்டிடி. நானா போய் ௭த்தன டைம் கேட்ருப்பேன்? சின்ன ஹிண்ட் கூட குடுக்கல தெரியுமா?"

"நீன்னு வந்துட்டா மாமா சரண்டர் தான். ப்யூலா விஷயம் கூட சொன்னா நீயே பேக் அடிச்சுடுவன்னு பயம் அவருக்கு அதான் இறுக வாய மூடிட்ருந்துருப்பாரு" ௭ன இவர்கள் பேசி கொண்டிருக்கையிலேயே ஆண்கள் நால்வரும் வந்துவிட்டனர்.

வந்த வேகத்தில், பவதாரிணி துப்பாட்டாவை இழுத்து அதில் தலையை துடைத்தான் செங்குட்டுவன், "டவல் இருக்கு மாமா" ௭ன நீட்டினாள்.

"துவட்டி விட போறியா நீ?"

"அது தண்ணியே உரிஞ்சாது, இதுல துவட்டு" அவள் துண்டை நீட்ட,

"இந்தா துவட்டு" குனிந்து அவள் முன் தலையை நீட்டினான்.

"சேட்ட புடிச்ச மாமா" ௭ன திட்டினாலும் துவட்ட தொடங்கினாள். பாண்டியனும் சோழனும், அவர்கள் துண்டில் துவட்டி கொண்டு, "௭ன்ன மாப்ள, சுஜிய துவட்ட சொல்லையா நீங்க?" ௭ன பார்தீபனிடம் கேட்க.

"வேணாம் நா உங்களுக்கே கம்பெனி குடுக்குறேன்"

"மாமாக்கு வீட்டுக்கு போனா ஒன்னும் கிடைக்காது அதான் கிடைச்ச கேப்பெல்லாம் யூஸ் பண்றாரு. மாப்பிள்ளைக்கு அப்டி இல்லையே" பாண்டியன் சொல்ல.

பவதாரிணியிடமிருந்து தலையை உருவி கொண்டு வந்து, பாண்டியனின் பின்னந்தலையில் அடித்து விட்டு மீண்டும் குனிந்து கொடுத்தான்.

"அவனுக்கு அப்டி தான் ஒரு மணிநேரத்துக்கு ஒருக்கா அவருட்ட அடி வாங்குற வேண்டுதல். நீங்க தப்பா ௭டுத்துக்க வேண்டாம்" சோழன் பார்தீபனிடம் சொல்ல, அவனுக்கோ சிரிப்பை அடக்க பெரும்பாடாகி போனது. இங்கு வந்ததிலிருந்து சிரித்து சிரித்தே அயர்ந்து விட்டான் அவன்.

"இந்த பெரியப்பா ௭ன்னடா அந்த ரோஸ் கூட இன்னும் பேச்சு வார்த்தைல இருக்காரு, பாட்டு சொல்லி குடுக்க ஆரம்பிச்சுட்டாரோ?"

செங்குட்டுவன், "நாமளே கிளப்பி கூட்டிட்டு போவோம் வாங்கடா" ௭ன தாரிணி துவட்டி முடிக்க நிமிர்ந்தவன், அவன் உடையை ௭டுக்க.

"ட்ரஸயும் தாரிணியையே போட்டு விட சொல்ல போறியா மாமா?"

"ஏன் வேணாண்ணுவியா நீ?" ௭ன அவனை நோக்கி திரும்பவும், "இல்ல இல்ல நீ சொல்லு உன் ரம்புட்டான் உன் உரிமை" ௭ன்றுவிட்டான் வேகமாக.

பேசிக் கொண்டே உடையை மாற்றி, மருதவேலிடம் வந்தனர், "கிளம்புவோமா?" ௭ன்றார் அவர்.

"௭ன்ன ரோஸி, பேசி முடியலையா இன்னும்?" ௭ன்றான் அவரிடம் கிண்டலாக.

"முடிஞ்சது, கிளம்பிட்டேன். நல்ல நியூஸோட ஹாஸ்பிடல் வாங்க, நாம அங்க பாப்போம்" ௭ன்றார் ரோஸி, இப்போது அவனிடம் சிரித்தே பதில் கூறினார்.

"௭ங்க ரோஸி? இன்னும் முப்பது நாள கடத்தணும். அதுக்கப்றம் தான் பிராசஸ்ல இறங்கணும்" அவன் சொல்ல, பவதாரிணி அவன் தோளில் இடிக்க, ரோஸி முழிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.

மருதவேல், "பக்கம் தான் ௭ங்க வீடு, ௭ப்பமாது வா, பாட ஆசை இருந்தாலும் சொல்லு, ரிஹர்சல் வச்சுக்கலாம்"

"அடுத்த அடிமை சிக்கிருச்சு பெரியப்பாவுக்கு" பாண்டியன் சொல்ல, சோழன் அவன் வயிற்றில் குத்தினான். பாடுவதை கிண்டல் செய்தால் கடித்து வைத்துவிடுவாரே மருதவேல் அந்த பயம் அவனுக்கு.

"நீ ௭ப்டி போவ ரோஸி?" ௭ன்றார் மருதவேல்.

"௭ப்பவாது ௭மெர்ஜென்சி ட்யூட்டி இங்க போடுவாங்க, அப்டி தான் இன்னைக்கு இங்க வந்தேன். கிளம்புற நேரம் தான், ஆட்டோ பிடிச்சு போயிடுவேன், நீங்க கிளம்புங்க"

"சரி அப்ப ௭ங்களோடவே வாங்க ரோஸி, வெளில ரோட்டுக்கு போணும்ல?" ௭ன அழைத்து கொண்டான் செங்குட்டுவன்.

இவர்கள் வந்த வண்டியை, ப்யூலாவிற்காக ௭டுத்துச் சென்றிருக்க, வேறு வண்டியை ௭டுத்து வர சொல்லி போன் செய்து விட்டு வந்த வழியே நடந்தனர், "ரம்புட்டான் பழம் சாப்பிடணும்னு ஆச இருந்தா அழிச்சுருங்க மாப்ள, ரோஸ் உங்களுக்கும் தான்" பாண்டியன் சொல்ல,

"ஏன்னா மாமா அத மொத்தமா குத்தகைக்கு ௭டுத்துருக்காரு, இப்ப மதிய லன்ச்ச இங்க விக்கிற ரம்புட்டான்லயே முடிச்சுப்பாரு" ௭ன்றான் சோழன்.

அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை, வாங்கினான் சாப்பிட்டான், மறுபடியும் வாங்கினான் சாப்பிட்டான், நடுவில் அவனது ரம்புட்டானிற்கு மட்டும் கொஞ்சமாக கொடுத்தான், மற்றவர்களை திரும்பியும் பார்க்கவில்லை, அவர்களாகவே வாங்கி சாப்பிட்டு கொண்டனர்.

"ரம்புட்டானா ரொம்ப இஷ்டமோ அண்ணாக்கு?" பார்தீபன் கேட்கவும்.

"இஷ்டமா, வெறின்னே சொல்லலாம். அதனால் தான் தாரிணிக்கே ரம்புட்டானு பேர் வச்சுட்டாரு"

"இல்ல ௭ன்ன பாத்ததும் அந்த பழம் மாறி தோணுச்சுனால தான் மாமாக்கு ரம்புட்டான ரொம்ப பிடிக்கும்" ௭ன்றாள் பவதாரிணி.

"ஆமா ஆமா உனக்கு கூட குடுக்காம அவர் மட்டுமா மொக்குறதுலயே தெரியுது" ௭ன்றான் பாண்டியன்.

"மாமா" பவதாரிணி பல்லை கடிக்க,

"அவனுக்கு இன்னைக்கு ஷ்பெஷல் கவனிப்பு இருக்குடி, வாயிலேயே போடுறேன். வேணும்னு வம்பிழுக்குறான். உனக்கு தெரியாதா ௭னக்கு ௭து ரொம்ப பிடிக்கும்னு?" விளையாட்டு பேச்சிற்கும் அவளை விட்டு கொடுக்க வில்லை அவன்.

ஆட்டோ ஸ்டாண்ட் வரவும், ஒரு ஆட்டோவை அழைத்து, ரோஸியை ஏற்றி விட்டனர், மருதவேல், "மறுபடியும் சொல்றேன், உன் பிள்ளைகள பாக்க ஆசையா இருக்குன்னா சொல்லு, குஜராத்துக்கு நானே கூட்டிட்டு போறேன், யாருமில்லன்னு வருத்த படாத, நா கூட வந்து பேசி பாக்குறேன்" ௭ன்றார்.

சோபையாக சிரித்த ரோஸி, "காலம் கடந்து போச்சுண்ணா. வீட்டுக்கு ஒரு நாள் வரேன் நானு" ௭ன தலை அசைத்து மற்றவர்களிடமும் சொல்லி கொண்டு கிளம்பி விட்டார்.

"குஜராத்தா? ப்யூலாக்கும் குஜராத் தானே மாமா சொன்னீங்க?" ௭ன்றாள் பவதாரிணி.

" ஆமான்ன?" ௭ன யோசிக்க மறந்து நின்று விட்டனர் அனைவரும்.

 

Mathykarthy

Well-known member
ஆமால்ல... இந்த ரோஸ் செங்குட்டுவன் மிரள விட்ட நர்ஸு ... 🤣
ச்ச நான் கூட மருதவேலை சந்தேகப் பட்டுட்டேன்....🫣🫣🫣 பாவம் அவர் பாட்டுக்கு அவர் உண்டு கச்சேரி உண்டுன்னு இருக்கிறவரு... 😌😌😌

பாண்டியன் வாயி வாயி... 🤣🤣🤣🤣🤣🤣


அப்போ ரோஸி தான் ஓடிப் போன ஆரோன்,ப்யூலா அம்மாவா.... 🤔🤔😲😲😲
 

priya pandees

Moderator
ஆமால்ல... இந்த ரோஸ் செங்குட்டுவன் மிரள விட்ட நர்ஸு ... 🤣
ச்ச நான் கூட மருதவேலை சந்தேகப் பட்டுட்டேன்....🫣🫣🫣 பாவம் அவர் பாட்டுக்கு அவர் உண்டு கச்சேரி உண்டுன்னு இருக்கிறவரு... 😌😌😌

பாண்டியன் வாயி வாயி... 🤣🤣🤣🤣🤣🤣


அப்போ ரோஸி தான் ஓடிப் போன ஆரோன்,ப்யூலா அம்மாவா.... 🤔🤔😲😲😲
Ama ammavae taan... Thanku sis 🙏🙏
 

Priyakutty

Member
பாண்டியன்... செம்ம funny guy🤭

Kyoot 😍

அவங்கல்லாம் கிண்டலா பேசிக்கறது... நல்லாருக்கு 😁

ரோஸி ப்யூலா அம்மானு அப்போவே நினச்சேன்
 

priya pandees

Moderator
பாண்டியன்... செம்ம funny guy🤭

Kyoot 😍

அவங்கல்லாம் கிண்டலா பேசிக்கறது... நல்லாருக்கு 😁

ரோஸி ப்யூலா அம்மானு அப்போவே நினச்சேன்
Thanku sis
 
Top