எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 6 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 6​

கதவு தட்ட படும் ஓசையும், அழைப்பு மணியின் கதறளும் கேட்டு மூடிய இமைக்குள் விழி உருளைகளை உருட்டினான் இன்பா.. நேற்று குடித்த போதை இன்னும் தெளியாமல் கண்கள் கட்டி கொண்டு வர, "ம்ம்ம்.. ம்ஹூம்…" என்ற முனகளோடு திரும்பி படுக்க "அண்ணா… அண்ணா.." சத்யா குரல் கேட்டது.​

புருவம் தூக்கி மெல்ல கண் விழித்தவன் எழுந்து பார்க்க தரையில் கிடந்தான். சோஃபா ஒரு மூலையில் இருக்க இவன் ஒரு மூலையில் கிடந்தான். தலைக்கேறிய போதையில் உறக்கம் இல்லாமல் போனது. குறுகிய காலம் என்றாலும் நிலா அதிகமாகவே அவனை ஆக்கிரமித்திருந்தாள். அதன் விளைவு அவள் இல்லாத படுக்கை அறை நரகமாக அவனை கொண்டறு திண்ண, தட்டு தடுமாறி எழுந்து நின்றான். விழிகளை திறக்க முடியவில்லை அவனால். கருந்தேக்கு உடல் வழுவிழந்தது போல நிலை குழைந்தது.​

நிலா கபோர்டை திறந்தவன் அவள் வாசம் வேண்டி அவள் புடவையை எடுத்து தன்னோடு அணைத்து அணைத்து கொண்டான். தரையில் விழுந்தவள் அவள் புடவையை அணைத்து கொண்டே உறங்கி போனான். நீண்ட உறக்கத்திற்கு பிறகு எழுந்தவன் இமைகளை அழுத்தி மூடி திறந்து எழுந்து நடந்தான்.​

பானுமதி, சத்யா, சஞ்சய் வந்திருக்க கதவை திறந்தான் இன்பா.. அவன் மீது வீசிய மதுவின் நெடியில் மூவரும் முகம் சுழித்தனர். பானுமதி அதிர்ச்சியாக அவனை பார்க்க "அண்ணா.. குடிச்சிருக்கியா??" அதே அதிர்ச்சியுடன் கேட்டாள் சத்யா.​

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவன் மூவரையும் அழைக்க "அண்ணி எங்க??" கலவரமாக கேட்க "அவ அவங்க அப்பா வீட்டுக்கு போயிட்டா.." என்றான் உணர்வுகள் செத்த குரலில் நிமிர்ந்து பார்க்காமல்.​

திட்டுக்கிட்டார் பானுமதி "என்ன சொல்ற?? போயிட்டானா?? என்ன அர்த்தம்??" பாலைவனமாக மாறி போன தன் மகன் வாழ்க்கை இனி சோலைவனமாக மாறும் என்ற நம்பிக்கையில் இருந்தவர் இவன் கூறியதை கேட்டு அதிர்ந்தார்.​

"எங்க பர்சனல் விஷயத்துல தலையிடாதீங்க.." என்றவன் சோஃபாவில் அமர்ந்து தலையை பற்றி கொண்டான். தலை வலி உயிரை வாங்கியது.​

கோபம் கொண்டு மகனை முறைத்த பானுமதி "வாங்க போகலாம்.." என்று தன் பிள்ளைகளை அழைத்து கொண்டு நேராக பிரகாஷ் வீட்டுக்கு சென்றார். இன்பா எவ்வளவு குடித்தாலும் அவன் தாய்க்கு மட்டும் தான் அவன் குடித்திருப்பது தெரியும். சத்யா, சஞ்சய்க்கு தன் அண்ணன் குடிப்பான் என்று கூட தெரியாது.​

இரவு எப்போது உறங்கினோம் என்று கூட தெரியாமல் உறங்கி போன நிலா இன்னும் உறங்கி கொண்டிருக்க அவளை பார்த்த பிரகாஷ் அமைதியாக கதவை அடைத்துவிட்டு சென்றார். இன்பா நிலா இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால் இருவருமே வருத்தத்தில் இருக்கின்றனர் என்பது மட்டும் அவருக்கு புரிந்தது. தோளுக்கு மேல் வளர்ந்த பெண், அதுவும் அவள் திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்ன கேட்க தயக்கம் அதனாலே அவர் அமைதியாக இருந்தார்.​

டூட்டி செல்ல யூனிபோர்ம் மாற்றியவர் முன் வந்து நின்றார் பானுமதி. "வா.. பானு.." வரவழைத்த புன்னகையுடன் அவர் அழைக்க "ஏன் இப்படி எங்க வாழ்க்கைல விளையாடுறீங்க?? நாங்க உங்களுக்கு என்ன பாவம் பண்ணோம்.." கண்ணீருடன் அவர் கேட்க, "நான் சொல்றத முதல்ல கேளு.. பசங்க முன்னாடி இப்டி எமோஷனல் ஆகாத.." என்றவர் மாதவியை அழைத்து சத்யா சஞ்சயை அழைத்து செல்ல கூறினார்.​

அவர்கள் சென்ற பின் "உங்களால தான் என் புருஷன இழந்தேன். எங்களுக்கு எல்லாமுமா இருந்த என் புள்ளையவும் உங்க வழிக்கே கொண்டு போயிட்டிங்க.. அவன் மேல பாசம் இருக்க மாதிரி நடிச்சீங்க.. அவனும் நம்புனான்.. உங்க பொண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க.. இனிமேயாவது என் புள்ள நிம்மதியா வாழுவான்னு நினைச்சேன்.. ஆனா இப்டி மோசம் பண்ணிட்டிங்களே.. என் புள்ள கூட உங்க பொண்ண வாழ வைக்க உங்களுக்கு விருப்பம் இல்லைங்குறப்ப ஏன் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க??" கோபத்திலும் ஆற்றமையிலும் பொறிந்து தள்ளினார் பானுமதி கண்ணீருடன்.​

"நான் சொல்ற முதலில் கேளு பானு.." குரல் உயர்த்தி அவரை அடக்கிய பிரகாஷ் "அவங்க ஒன்னும் சின்ன புள்ளைங்க இல்ல.. பக்குவபட்டவங்க.. அவங்களுக்கு நல்லது கெட்டது நாம சொல்லி தர வேண்டியது இல்லை. புருஷன் பொண்டாட்டி பிரச்சனைக்குள்ள நாம போக வேண்டாம் பானு. அவங்களே சரி பண்ணிக்கட்டும்.. இப்போ வரைக்கும் அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கும் தெரியாது" என்று நிறுத்தியவர்​

"என் பொண்ணுக்கு கொஞ்சம் கூட இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. ஆனா அவளுக்கு தெரியாது அவ பிறக்குறதுக்கு முன்னாடியே இன்பா அவளுக்காக பிறந்தவன்னு.. அத அவ புரிஞ்சுக்குவா.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. நீயும் அத நம்பு…அவங்க பிரச்சனை கை மீறி போகும் போது நான் பாத்துக்குறேன். நீ கொஞ்சம் பொறுமையா இரு.. மாற்றம் எல்லாம் ஒரே நாள்ல வந்திராது பானு.." பொறுமையாக எடுத்துறைக்க அமைதியாக கேட்டு கொண்டார் பானுமதி.​

"நீ ஏன் இன்பாவ விட்டு தள்ளி இருக்க, நான் ஏன் உன்ன கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு உனக்கே தெரியும். எல்லாம் தெரிஞ்சும் நீ இப்டி ஆவேச படுறது நல்லது இல்ல மா.." தன்மையாக கூறினார்.​

பானுமதி அமைதியாக அவரை பார்த்து "என் புள்ள வாழ்க்கை எப்டி எப்டியோ போயிருச்சு.. இனிமேயாவது அவன் நல்லா இருக்கணும். பொண்டாட்டி புள்ளைங்க கூட நல்லா இருக்கணும்.." ஈன்றவளாக அவள் ஆசையை கூற "நிச்சயமா அது நடக்கும். இன்பா நான் தூக்கி வளர்த்த புள்ள. என் மருமகன். அவன நான் பாத்துக்குறேன்.. அவன் மேல எனக்கு அக்கறை இருக்கு.." என்றார்.​

ஏற்று கொண்டார் பானுமதி. "குழந்தைகள கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ.. இன்பா நிலாவ நான் பாத்துக்குறேன்.." என்று உறுதியளிக்க அவர் வார்த்தைகளை நம்பி சத்யா சஞ்சய்வுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.​

என்ன நடக்கிறது என்று புரியாமல் சத்யா சஞ்சய் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.​

வாடி போன கணவர் முகத்தை கண்ட மாதவி "நிலாகிட்ட நான் பேசுறேங்க.." என்றார்.​

"வேண்டாம் மாதவி.. என்ன பிரச்சனைண்ணே தெரியாம நாம என்ன பேச முடியும். ரெண்டு மூணு நாள் ஆகட்டும் பாக்கலாம்.." என்றவர் உண்ண விருப்பம் இல்லாமல் டூட்டிக்கு சென்றார்.​

அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக இன்பாவை அலைபேசியில் அழைக்க, அவனும் அழைப்பை ஏற்றான். "என்ன பிரச்சனை இன்பா உங்களுக்குள்ள??" என்று கேட்க அமைதியே பதிலாக கிடைத்தது அவருக்கு.​

"இப்டி நீ அமைதியா இருக்கது நல்லது இல்ல.. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருக்குறது நல்லது இல்ல. நான் அவ்ளோ தான் சொல்வேன்.. அதுக்கு மேல உங்க விருப்பம்" என்று இணைப்பை துண்டிக்க போக "நான் நிலாவுக்கு டிவைஸ் கொடுத்தர்றேன்.. நீங்க அவள கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க.." என்று இணைப்பை துண்டிக்க அதிர்ந்து போனார் பிரகாஷ்.​

டிவைஸ்சா?? நீங்க டிவைஸ் பண்ணிட்டு போறதுக்காக டா நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்.. " மகளை நினைத்து உள்ளம் கலங்கினான் காக்கி சட்டைக்குள் இருந்த அன்பு தந்தை.​

அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள் நிலா. ராசாத்தி மடியில் தலை வைத்து படுத்திருந்தவளின் எண்ணங்கள் முழுக்க தன்னவனை சுற்றி சுற்றி வந்தது. அவனை பிடிக்கவில்லை என்று தான் சொன்ன வார்த்தையும், ரேப் பண்ணேன்னு சொல்றியா? என்று அவன் கேட்ட வார்த்தையும் மாறி மாறி மனதில் ஓடி கொண்டே இருந்தது. என்ன தான் என் மனதில் இருக்கிறது என்று அவளுக்கு விளங்கவில்லை. ஆண்மை துணை தேடி, இளமை தேவையை தீர்த்து கொள்ள அவனிடம் சரணடைந்துவிட்டேன் என்ற எண்ணத்தை விட்டு அவள் வெளியே வரும் வரை அவள் மனம் அவளுக்கே புரிய போவது இல்லை தான்.​

மாலை வீட்டின் பின் பக்க வராண்டாவில் நடந்து கொண்டிருந்தவளுக்கு காலுக்கு இடையில் ஏதோ கச கசப்பு. அடி வயிற்றில் கல்லை கட்டி தொங்க விட்டது போன்ற உணர்வு. உணர்ந்து கொண்டாள் மாத சுழற்சியை. இருக்குற டென்சன்ல இது வேற என்று சலித்து கொண்டவள் அறைக்கு வந்து கபோர்டை திறந்து பார்க்க ஒரே ஒரு நாப்கீன் தான் இருந்தது. தற்சமயம் அதை எடுத்து பயன் படுத்தி கொண்டவள் டிவி சீரியலில் கவனத்தை நுழைத்து கொண்டிருந்த தன் தாயிடம் "நாப்கீன் வேற இல்லையா மா.." என்று கேட்க திடுக்கிட்டு திரும்பி பார்த்தார் மாதவி.​

"ஏன் மா அப்டி பாக்குற?? நாப்கின் வேற இல்லையா??" மீண்டும் கேட்க "நீ வச்சிருந்தா தான் இருக்கும்.." பட்டும் படாமலும் பதில் கூறினார்.​

மாத விலக்கு அவர்கள் நெருக்கமான வாழ்க்கையை கூற ஏமாற்றமாய் வந்து விழுந்தது வார்த்தைகள். அவர்கள் பிரச்சனை தெரியாமல் சீரியல் அம்மா போல எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் மாதவி.​

"உன்கிட்ட கேட்டேன் பாரு.." என்று நினைத்தவள் காசு எடுத்து கொண்டு மெடிக்கல் சென்றாள். அப்போது அவளுக்கு முன்னால் அவள் கண்டித்த அவள் வகுப்பு மாணவர்கள் மூவர் வந்து நிற்க கொஞ்சமும் பயமும் இல்லாமல் ஏறிட்டு பார்த்தாள். தங்களுக்குள் சிரித்து கொண்ட மூவரும் அவளை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கொண்டு பறந்தனர்.​

இது எதுவும் தெரியாமல் தன்னவள் நினைவில் மூழ்கி இருந்தவன் "என்ன ஆனாலும் சரி. என்னவளை விட்டு நான் பிரிய போவது இல்லை. அவளுக்கு தானே என்னை பிடிக்கவில்லை. எனக்கு அவளை பிடிக்கிறதே.. அவளுடன் தான் இருப்பேன்.. என்னுடன் தான் அவள் இருக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றாள் கண்கள் மூடி படுத்து கொள்ளட்டும், பலவந்தமாகவே இருந்தாலும் என்னவள் தானே.. என்ன புரிந்து கொள்ளட்டும். அவள் இல்லாமல் நான் இல்லை.." முழு ஆண்டி ஹீரோவாக மாட்டி போனவன் பைக்கை எடுத்து கொண்டு பறந்தான்.​

கால்ல விழுந்தாவது என் பொண்டாட்டிய நான் கூட்டிட்டு வரேன்.. இல்லை குண்டு கட்டா தூக்கிட்டு வர்றேன்.. எவன் கேப்பான் என்ன?? அவ இல்லாம என்னால வாழ முடியே முடியாது.. கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு அவ இல்லாம. அந்த அளவுக்கு அவளுக்கு அடிமையாகிட்டேன்.. பரவாயில்ல என் பொண்டாட்டி தானே.. மனதை தேற்றி கொண்டவன் வெண்ணிலவு வானத்தை விட்டு விலகுவதா கூடவே கூடாது. கரிய என் வானில் விடி வெள்ளியாக முளைத்த என்னவள் என் நிலா..​

என்ன ஆனாலும் தன் மனைவியை அழைத்து வர நினைத்து அவன் செல்ல, நான்கு கயவர்களுக்கு நடுவில் தன் மானத்தை காக்க போராடி கொண்டிருந்தாள் நிலா.​

புயலென வீட்டுக்குள் நுழைந்த இன்பா "நிலா எங்க??" என்று கேட்க அவன் வந்த வேகத்தில் மிரண்டு நின்ற மாதவி "க.. கடைக்கு போயிருக்கா.." என்றார்.​

அந்நேரம் அவன் அலைபேசி அழைக்க அதன் முகப்பு திரையில் பிரகாஷ் பெயர்.. எதிர் முனையில் அவர் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்தவன் முகம் நொடியில் செந்தனலாக மாற "என் பொண்டாட்டிக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டேன்.. " என்று கர்ஜித்தான் பிடரி செழித்த அரிமாவாய்….​

தொடரும்..​

 

Advi

Well-known member
Super da, இது தான் டா உன் கிட்ட எதிர்பார்த்தேன்🤩🤩🤩🤩🤩

அப்படியே போய் தூக்கிட்டு வந்துரு.....

அச்சோ கடத்திட்டாங்க😳😳😳😳😳
 

Mathykarthy

Well-known member
இன்பா அப்பா இறந்ததுக்கு பிரகாஷ் தான் காரணமா 😳😳😳

பிரகாஷ் இன்பாகிட்ட கேட்டதுக்கு உங்க பொண்ணுகிட்டயே நீங்க பேசி இருக்கலாமே...
அவளுக்கு பிடிக்கல ன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி வச்சுட்டு எதையுமே சொல்லாம அவளா புரிஞ்சுக்கட்டும் ன்னா எப்படி
... 😬😬😬😬😬

நிலா இப்படி போய் மாட்டிக்கிட்டாளே... 😰😰😰😰
 
Top