எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தித்திக்கும் தேன்ருவி

zeenath

Member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK35
#தித்திக்கும்தேனருவி
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
தேவதிரன் தேனருவி இவர்களோடு இவர்களின் காதலும், கதை முழுவதும் இவர்களின் காதல் பரவி விரிந்து கிடக்கிறது.
தன்னை வேண்டாம் எனச் சொல்லிச் சென்றவனை நினைத்து உருகும் பெண் அவளின் காதல் அலாதி என்றால், அவள் மட்டும் தன் காதல் அல்ல அவளோடு அவளின் அனைத்தும் தன் காதல் என அவள் பெற்றவரின் சம்மதத்திற்காக அவளையே வேண்டாம் என மறுக்கும் தேவ்வின் காதல் வேறு ரகம்
இவர்களின் காதலுக்கு துணையாக இவர்களின் வலிகளை கூடவே இருந்து பார்ப்பவர்களாக பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும். தேனுக்காக தேவ்விடமே வாதாடும் வித்யா, அவனின் காதல் புரிந்து அமைதியாகிறாள். சித்து, சீனியர் அருமையான கதாபாத்திரம் அண்ணனின் காதல் வெற்றி பெற்றால் மட்டுமே தன் காதலை காதலியிடம் உரைப்பது என்ற நிலையில் உறுதியாக நிற்கிறான். வாசு, தேனுவின் அண்ணன் தேவ்வின் உற்ற நண்பன், தங்கையின் மீது அளப்பரியா பாசம் இருந்தாலும் நண்பனின் மீது இவன் கொண்ட நட்பு அருமை. ரகு தேவ் மற்றும் வாசுவின் மற்றொரு நண்பன் வாசுவின் கிராமத்தில் இவனின் பயம் அனைத்தும் சிரிப்பு..
பார்த்துக் கொள்ளாமலேயே ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதல் அபாரம் அதுவும் தேனருவி அவன் அழக்கூடாது என்ற ஒரு வார்த்தையில் தன் அழுகையை கட்டுப்படுத்துவது அனைத்தும் சிறப்பு 👏👏
தன் இன பழக்கவழக்கங்களில் ஊறி இருக்கும் தேனுவின் தந்தை இவர்கள் காதலை அங்கீகரித்தாரா தேவ்வும் அவனின் அருவியும் ஒன்று சேர்ந்தார்களா என்பது கதையில். விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck dear 🥰❤️💐

Thread 'தித்திக்கும் தேனருவி (NNK_35) (கதைத்திரி)' https://www.narumugainovels.com/threads/10474/
 
Top