எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 7 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 7​

தன் முன் வந்து நின்றவர்களை பார்த்த நிலா புருவம் நெறிக்க, அவளை பார்த்த மூவரும் "சாரி மேம்.." என்றனர்.​

அவள் புருவம் இடுங்க பார்த்த படியே நிற்க "நாங்க பண்ணது ரொம்ப பெரிய தப்பு. அத புரிஞ்சுக்கிட்டோம் மேம்.. எங்கள மன்னிச்சிருங்க.." என்றான் மூவரில் ஒருவன்.​

மன்னிப்பு கேக்குற அளவுக்கு இவனுக ஒன்னும் அவ்வளவு நல்லவங்க இல்லையே.. என்று நினைத்தவள் "இனிமேயாச்சும் ஒழுங்கா இருங்க.. நல்லா படிங்க.. தேவை இல்லாத வேலைகளை எல்லாம் பாக்காதீங்க.." ஆசிரியராக அறிவுரை கூறி அவள் நகர போக "ஒரு நிமிஷம் மேம்.." என்று நிறுத்தினர்.​

கேள்வியாக அவள் பார்க்க "நீங்க நினைச்சிருந்தா போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து எங்க லைஃப்ப ஸ்பாயில் பண்ணிருக்கலாம்.. ஆனா நீங்க அப்டி நினைக்கல.. அதுக்கு ரொம்ப நன்றி மேம்.." என்று ஒருவன் நிறுத்த, மற்றொருவன் "உங்களுக்கு ரீசென்ட்டா தான் கல்யாணம் ஆச்சுன்னு கேள்வி பட்டேன் அப்டியா மேம்"அன்பொழுக கேட்டவனை சந்தேக கண்களுடன் பார்த்தவளுக்கு தன்னவன் முகம் நினைவில் வந்து நிற்க "ம்ம்.." என்ற தலையசைப்புடன் அங்கிருந்து செல்ல பார்க்க ரவுண்டுகட்டி அவளை நகரவிடாமல் நின்றனர் மூவரும்.​

ஏதோ சரி இல்ல நிலா.. அவள் மூளை அவளுக்கு எடுத்துரைக்க, "அப்போ ஆம்பள ஆசை எப்படி இருக்கும், எப்படியெல்லாம் கட்டில் வித்தை காட்டணும்னு தெரிஞ்சிருக்கும் அப்டித்தானே மேம்.." அவள் உடலில் ஊறிய பார்வையோடு எச்சில் ஒழுக ஒருவன் கேட்க திட்டுக்கிட்டாள் அவள்.​

"என்ன ஒரு பத்து தடவ உன் புருஷன் கூட படுத்திருப்பியா??" இன்னொருவன் கேட்க பளாரென அறைந்தாள் நிலா..​

அறை வாங்கியவன் பற்களை அரைத்து அவள் பிடரி முடியை கொத்தாக பிடித்து "என் மேலையே கம்பளைண்ட் போடுறியா?? உனக்கு இருக்கு டி இன்னைக்கு.." என்று வேகமாக வந்து நின்ற வேனில் ஏற்றி கொண்டு பறந்தனர்.​

அதிக ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் நடந்த கடத்தலை ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் உணர்ந்து சுதாரிக்கும் முன் அவளை தூக்கி கொண்டு சென்றனர். அதில் ஒருவர் நிலாவை அடையாளம் கண்டு கொண்டு பிரகாஷ்க்கு அழைத்து விஷயத்தை கூறினார். அதிர்ந்து போனவர் போலீஸ் படையை தன் மகளை தேட அனுப்பினார். அதோடு இன்பாவிற்கும் விஷயத்தை சொல்ல தன்னவளை தீண்டியவர்களை கொன்று புதைக்க வெறி கொண்டு கிளம்பினான்.​

ஒருவன் வேன் ஓட்ட மூவர் அவளை இருக்கி பிடித்து கொண்டனர். "நீ காலேஜ் வரும் போதே உன்மேல ஒரு கண்ணு டி.. கசங்காத காட்டன் புடவையில்லையே இப்டி இருக்கியே ஒன்னும் இல்லாம அவுத்து பாத்தா எப்டி இருப்பேன்னு.. இன்னைக்கு அவுத்து பாத்துற வேண்டியது தான். நாலு பேரும் காட்டுற பர்ஃபாமென்ஸ்ல யாரு பெஸ்ட்ன்னு நீயே சொல்லு.." அவள் நாடி பற்றி இதழை வருடினான் ஒருவர்.​

அவன் முகத்திலே உமிழ்ந்தாள் நிலா. முகத்தில் தெரித்த எச்சில் துளிகளை துடைத்து கொண்டவன் இதே மாதிரி நானும் உன்னோட இந்த அழகான முகத்துல.." என்று நிறுத்தி அருவருப்பாய் சிரித்தான்.​

மற்ற மூவரும் எல்லாக சிரித்தனர். "டேய்.. நம்ம மேம் பூலோக பாஞ்சாலி டா.."​

"எப்படி??"​

"நாம நாலு பேர்.. அவ புருஷன் ஒரு ஐஞ்சு பேர். அப்போ சரிதானே.." என்று சொல்ல எக்காளம் இட்டு சிரித்தனர்.​

"சரியா சொன்ன மச்சான்.." கூட்டமாக வந்த ஹைனாக்கல் போல எக்காலம் இட்டு சிரித்தனர் வெறி கொண்ட சிங்கத்திற்கு இறையாக போவது தெரியாமல்.​

பெண்ணவள் ஒருத்தியை கட்டி வைத்து நான்கு பேர் சேர்த்து தங்கள் ஆண்மையை நிரூப்பிக்க போவதாக எக்காலம் இடுவது உலக அழிவின் ஆரம்பம் என்று எங்கோ படித்தது நிலா நினைவில் வந்து நின்றது. கண்ணீர் விட்ட போதும் அவர்களிடம் கெஞ்சவில்லை அவள். எந்த சூழ்நிலையிலும் என்னை காத்து கொள்வேன். இல்லாமல் போனால் என்னையே அழித்து கொள்வேன்.. அதற்கு முன் என்னை சுற்றி நிற்கும் நரிகளை வதம் செய்து தீருவேன்.. என்று கை கால்கள் உதைத்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்.​

ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான். காட்டு எருமைகள் போல நால்வர் அவளை இருக்கி பிடித்திருந்தனர். காட்டன் மில் வந்து நின்ற வேனில் இருந்து குண்டு கட்டாக தூக்கி செல்ல பட்டாள் நிலா. கால்களை உதைத்து அருகில் இருந்தவனை எட்டி எட்டி உதைக்க அவனோ "என்ன டி ரொம்ப துல்ர. கொஞ்ச நேரத்துல எப்படி அடங்குறேன்னு பாரு.." என்று பழைய பஞ்சு மெத்தையின் மீது அவளை கிடத்தினர்.​

சுற்றி நின்ற நால்வரையும் கண்டவளுக்கு உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் வெளியே "மரியாதையா என்ன விட்டுடுங்க.. என் அப்பா போலீஸ் கமிஷனர் தெரியும்ல.." என்று மிரட்ட சில நொடிகள் அமைதியாக இருந்த நால்வரும் எக்காளமிட்டு சிரித்தனர்.​

"எங்க அப்பா யாருன்னு உங்களுக்கே தெரியும். நான் சொல்ல வேண்டியது இல்ல.." என்றவன் "அமைதியா இருந்தா அனுபவிச்சுட்டு விட்டுடுவோம்.. இல்ல.. நாஸ்தி ஆகிடுவ.." நாக்கு மடக்கி மிரட்டினான்.​

"என் மேல கை வச்ச.. என் புருஷன் உன்ன உரு தெரியாம அழிச்சிருவான்.. இன்பா.. இன்பா பாண்டியன்.. என் புருஷன்.. இந்நேரம் என்ன தேடி வந்திட்டு இருப்பான்.." தன்னவனை பெருமையாக கூற இன்பா என்ற பெயரை கேட்டு மூவரும் அதிர்ந்தனர்.​

இன்பாவை பற்றி தெரியாதா என்ன அவர்களுக்கு. தங்கள் பலமாக நினைக்கும் தங்கள் தந்தையே இன்பாவிடம் அடங்கி போவார்களே.. பணம் மட்டும் அல்லாது பயமும் அவனிடம் கொண்டவர்கள் அல்லவா..​

அதிர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, இது தான் சமயம் என அவர்கள் கவன சிதறலை பயன் படுத்தி கொண்டு எழுந்து ஓடினாள்.​

"ஹேய்.. ஓடுறாடா.. அவள புடிங்கடா.." என்று விரட்டி கொண்டு ஓட மின்னலென சந்து பொந்தில் பாய்ந்து ஓடினாள். அவர்கள் கைக்கு சிக்காமல் ஓடியவள் ஒரு கட்டத்தில் எட்டடி சுவரில் மோதி நின்றாள். அவளுக்கு முன் எட்டடி சுவர், அவளுக்கு பின் சதை தின்னும் நரிகள் என வகையாக மாட்டி கொள்ள, சிரித்தனர் நால்வரும்.​

"இனிமே எங்க மேம் ஓடுவீங்க??" எல்லாக ஒருவன் கேட்க மற்றொருவன் "சும்மா சொல்ல கூடாது.. நல்லாவே ஓடுறிங்க.. ஆனா என்ன வகையா மாட்டி கிட்டிங்க.. அச்சோ பாவம்.. ஏன் எவ்ளோ ஓட்டம்.. கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா எங்களுக்கும் சுகம் உங்களுக்கு சுகம்.. என்றவனை எரித்துவிடும் அக்னி கண்களோடு பார்த்தாள்.​

"அப்டி பாத்தா பயந்திருவோமா?? அவ்ளோ அருவருப்பா இருந்தா கொஞ்ச நேரம் உன் புருஷன் கூட இருந்ததா நினைச்சுக்கோ.." என்று கூறியவனை நோக்கி ஓடினாள்.​

என்ன டா நம்மள பாத்து ஓடியாரா.. என்றவர்கள் சுதரிக்கும் முன் வேகமாக சுவர் பக்கம் ஓடி சுவரில் எம்பி குதித்து ஏறினாள் எட்டடி சுவரில். நால்வரும் ஆவேன்று பார்த்தனர் அவளை. சிறு வயது முதல் ஆர்மி பள்ளியில் படித்து பள்ளியிலே சிறந்த அத்லெட்டாக கோலோச்சியவளுக்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லையே.. ஆனால் நிலாவை பற்றி அவர்களுக்கு தான் தெரியாமல் போனது.​

அதிர்ந்து நின்றவர்கள் "இவள சும்மா விட கூடாது டா.. கொண்ணு போடணும்.. இல்ல.. நம்மள பத்தி இவ புருஷன்கிட்டையும், அப்பன்கிட்டயும் சொல்லுவா.. புடிங்கடா அவள.." என்று நால்வரும் மீண்டும் துரத்த பாய்ந்து ஓடினாள்.​

அதே நேரம் தன்னவள் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் பைத்தியக்காரன் போல சுற்றி வந்தான் இன்பா.. நான் உன்ன உன் வீட்டுக்கு போன்னு அனுப்பியிருக்க கூடாது. என் கைக்குள்ளே உன்ன வச்சிருந்திருக்கனும் எல்லாமே என் தப்பு தான்டி.. நிலா.. எங்க மா இருக்க?? தவிப்பாய் அவளை தேட அவன் அலைபேசி ஹை டெசிபலில் அலறியது.​

வண்டியை நிறுத்தாமல் அழைப்பை ஏற்று பேசினான். எதிர் முனையில் பேசிய பிரகாஷ் cctv கேமராவில் நிலாவின் இருப்பிடம் தெரிந்து உள்ளது என்று கூறி காட்டன் மில்லில் அவள் இருக்கிறாள் என்று கூறினார். இது போதுமே அவனுக்கு. சினம் கொண்ட வேங்கையாக பாய்ந்தான். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு கேமராக்களை கண்காணித்து கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்கு மில்லில் வைக்கப்பட்ட கேமராவில் நிலாவின் முகம் தெரிய அது போதுமே இவர்களுக்கு. போலீஸ் படையுடன் மகளை மீட்க தந்தையும், தனி ஒருவனாக தன்னவளை மீட்க இன்பாவும் விரைந்தனர்.​

இது தெரியாமல் நிலா தன் மானத்தையும் உயிரையும் காத்து கொள்ள பெரிய பெரிய இயந்திரங்களின் சந்துக்குள் புகுந்து ஓடினாள். இறுதியாக மில்லைவிட்டு வெளியே ஓடி வர சைரன் சத்தத்துடன் போலீஸ் வாகனங்களும், அவர்களுக்கு முன்பாக அரிமாவை போல வந்தான் இன்பா.​

தன்னவனை கண்ட பின் தான் அவளுக்கு உயிரே வந்தது. இதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த அழுகை உடைப்பெடுக்க கேவலுடன் தன்னவனை நோக்கி ஓடினாள். வந்த வேகத்தில் வண்டியை கீழே போட்டவன் தன்னவளை நோக்கி ஓட, உன்ன பிடிக்கல.. எதுவுமே பிடிக்கல.. என்ற அவளின் வார்த்தைகள் நினைவில் வந்து நிற்க வேகம் குறைத்து நின்று விட்டான்.​

அவளை காணாமல் துடித்த துடிப்பெல்லாம் அவள் பூ முகம் கண்ட பின் அடங்கி போக, அவள் வெறுப்பு மனதில் வந்து நின்றது. ஓடி வந்தவளும் அப்படியே நிற்க இருவருக்கும் இடையில் சில அடி தூரத்தில் நின்று தவித்து கொண்டிருந்தது அவர்கள் மனதில் பிறந்த காதல் குழந்தை.​

கர்வம், திமிர், ஈகோ.. அனைத்தும் மனம் கொண்ட மனைவின் காலுக்கு கீழ் தானே.. அதை உணர்ந்து கொண்டவன் பார்வையால் அவளிடம் தன் காதலை எடுத்து கூற, சொல்லாமலே உணர்ந்து கொண்டவள் கண்ணீரால் மன்னிப்பு கேட்க இரு கரம் விரித்து தன்னவளை அழைத்தான்.​

கேவலோடு ஓடி வந்தவள் வேகத்தில் அவன் மீது பாய்ந்து கட்டி கொண்டாள். அவள் பாய்ந்த வேகத்தில் ஓரடி பின்னால் நகர்ந்த இன்பா மெல்ல அவளை அணைத்தான். அழுகையுடன் அவள் மன்னவன் இரும்பு கரங்களுக்கு அணைந்து கொண்டாள். மன்னவன் மார்பில் முகம் புதைத்து கேவி கேவி அழுதாள். அவன் முதுகு வலைத்து அணைத்து கொண்டவள் "என்ன விட்டு போகாத இன்பா.." அழுகையுடனே கூறினாள்.​

அவள் அழுகையை தாங்கி கொள்ள முடியாமல் இதழ் கவ்வி முத்தமிட்டு மொத்த அழுகை கேவலை தனக்குள் உறுஞ்சி கொண்டான். இனி ஒரு பிரிவும் மன கசப்பும் நமக்குள் வேண்டாமடி கண்ணம்மா.. என்று தன்னவளை இருக்கி அணைத்து கொண்டான்.​

மகளையும் மருமகனையும் கண்ட பிரகாஷ் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. போலீஸ் சைரன் கேட்டு ஓட பார்த்தவர்களை சுற்றி வலைத்து பிடித்து ஜீப்பில் ஏற்றினர் காவல் துறையினர். நரகம் என்ற ஒன்று எப்படி இருக்கும் என்று இனி தான் அவர்களுக்கு தெரியும்….​

தொடரும்…​

 
சில விஷயங்கள் ஏத்துக்குற மாதிரி இல்லை!!!... நமக்காக வந்துருக்கானேன்னு பாசம் வரலாம், நம்ம காயப்படுத்திட்டோம்னு குற்றவுணர்ச்சி வரலாம் ஆனால் காதலை புரிஞ்சுக்கிட்டான்னு சொன்னா நம்ப முடியலை!!!... இன்பாவை ஏன் இவளுக்கு நியாபகம் இல்லை???
 

Advi

Well-known member
அவள் எப்படி அதுக்குள்ள காதலை உணர்ந்தாள்????
 

Mathykarthy

Well-known member
படிக்கிற பசங்களா இவனுங்க சரியான பொறுக்கிங்க... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
நிலா துணிச்சலா அவங்ககிட்ட இருந்து தப்ப முயன்றது சூப்பர்..
இன்பாவும், போலீஸும் சரியான நேரத்துக்கு வந்துட்டாங்க
.... இவனுங்களை நல்லா கவனிக்கணும்....😈
 

NNK-82

Moderator
சில விஷயங்கள் ஏத்துக்குற மாதிரி இல்லை!!!... நமக்காக வந்துருக்கானேன்னு பாசம் வரலாம், நம்ம காயப்படுத்திட்டோம்னு குற்றவுணர்ச்சி வரலாம் ஆனால் காதலை புரிஞ்சுக்கிட்டான்னு சொன்னா நம்ப முடியலை!!!... இன்பாவை ஏன் இவளுக்கு நியாபகம் இல்லை???
வாசகர்கள் புரிதலுக்காக நான் சொன்னது. இன்னும் நிலா இன்பாவ ஏத்துக்கல. பொறுமையா படிங்க ☺️
 

NNK-82

Moderator
அவள் எப்படி அதுக்குள்ள காதலை உணர்ந்தாள்????
இன்னும் இருக்கு படிங்க.. உங்க புரிதளுக்காக நான் சொன்னது தான் அது ☺️
 
Top