எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விதிகள் பிழையானால்

santhinagaraj

Active member
விதிகள் பிழையானால்

விமர்சனம்

விதி என்ற பெயரில் சதியின் காரணமாக தன் வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டம் நிறைந்த கதை.

ஆண்கள் தாங்கள் சொல்வது தான் சரி தங்கள் வீட்டில் தாங்கள் தான் மேலோங்கி நிற்க வேண்டும் என்று பெண் பிள்ளையை பாரமாக நினைக்கும் தந்தை, தனக்கு போட்டியாகவும் தொல்லையாகவும் நினைக்கும் அண்ணன் இவர்களின் சதி அறியாமல், தந்தை மற்றும் அண்ணனை நம்பி திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பெண் சந்திக்கும் பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை.

புகுந்த வீட்டில் சுயநலம் மிக்க மாமியாரின் கொடுமைகள் குத்தல் பேச்சுகள் ஏராளம். இப்படி அப்பா அண்ணன் மாமியார்னு அத்தனை உறவுகளும் பொய்த்துபோக, தனக்காக தன் கணவன் இருப்பான் என்று நம்பிக்கையோடு இருக்கும்போது
நம்பி இருக்கும் அந்த உறவும் பொய்யாகிப் போவது கொடுமை.

ஒரு மனிதன் இவ்வளவு சுயநலமாகவும்
சோம்பேறித்தனமாகவுமா இருப்பான் என்று நினைக்கிற அளவு இருந்தது ரகுவின் செயல். தந்தை வீட்டிலேயே சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் பெண் புகுந்த வீட்டில் தான் கணவனின் சோம்பேறித்தனத்தால் மாமியாரிடமும் சுற்றதாரிடமும் ஏச்சு பேச்சு வாங்கி தன் சுயமரியாதையை இழந்து குடும்ப வாழ்க்கையில் அழுத்தமான மனநிலைக்கு தள்ளப்படுகிறாள்.

நிச்சயமா இவ்வளவு மன அழுத்தத்துல இந்த பெண் ஏதாவது ஒரு தவறான முடிவு எடுக்கும் என்று தான் நினைச்சேன் ஆனா உன் ஒரு பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் அதனால் அவள் பெரும் நம்பிக்கை இவற்றை ரொம்ப அருமையா விளக்கி இருக்காங்க சூப்பர்.

திருமணம் முடித்து வைத்தாச்சு உன் வீட்டில் நீதான் வாழ வேண்டும் கணவன் எப்படி இருந்தாலும் பொறுத்துக் கொண்டு வாழு என்று சொல்லும் அண்ணன் தந்தை இவர்களிடையே அவளுக்கு உறுதுணையாக இருக்கும் தாய், மற்றும் சில உறவுகள் மூலம் ஒரு சிறு நம்பிக்கை கொடுத்தது ரொம்ப அருமையா இருந்தது.

தெய்வவோட உணர்வுகளை ஒவ்வொரு வார்த்தையிலயும் ரொம்ப அருமையா உணர்த்திய விதம் சூப்பர்
அவள் அவ்வளவு கஷ்டங்களையும் கடந்து வந்து அவள் பெரும் வெற்றி ரொம்ப சூப்பரா யதார்த்தமா இருந்தது.

தமிழ் பாடல்கள், பொன்மொழிகள், பழமொழிகள்,திருக்குறள் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொன்ன தமிழ் பாடல் கருத்துக்கள் ரொம்பவும் அருமையா இருந்தது 👌👌

படிக்க படிக்க கதையில் வரும் ஒவ்வொரு கேரக்டர் மேலயும் அவ்வளவு கோவம் வந்துச்சு.

சமூகத்தில் பெண்களுக்கான இன்றியமையாத கருத்துக்கள் நிறைந்த கதை சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:

NNK-27

Moderator
வாவ் 😍😍😍 சூப்பரோ சூப்பர் பா 👍

வாவ்😍😍 சூப்பரோ சூப்பர் பா 👍 காலையில் எழுந்து வந்ததும் அவ்ளோ பெரிய Happy news 😍 ரொம்ப சந்தோஷமா இருக்கு 😍Thank you for such a sweet review 😍 கதை உங்களுக்குப் பிடித்ததில் ரொம்பவும் சந்தோஷம் பா 👍
 
Top