எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலவே வெண்ணிலவே! NNK 70

Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple review

#நிலாக்காலம்

#நிலவே வெண்ணிலவே!


கதைக்கரு அருமை டியர்.. எடுத்ததுல இருந்து முடிச்சுட்டு தான் மத்த வேலையை பார்த்தேன்..

நிலன் - இவனை மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைச்சா செமையா இருக்கும் ஆனா கிடைக்கறது என்னவோ பிரகாஷ் மாதிரி தான்.. என்னமோ பண்ணி தொலைனு விட்டறது.. ஆனா காலம் போன காலத்துல புரிஞ்சுக்கறது..

வெண்ணிலா - இவளை என்ன சொல்றதுனு தெரில.. ஒருத்தருக்கு நடந்தா அதே தனக்கும் நடக்கும்னு நினைச்ச இவளோ மனநிலை😒😒😒 அதைய மாற்ற நிலன் பட்டபாடு ஸ்ஸ்ப்பா முடில..

வான்மதி - இவளோட கடந்த காலத்துல ஒரு ஆணால வேதனை அடைந்திருந்தாலும் நிகழ்காலம் அருமையா மாறிடுச்சு அதுக்கு காரணமும் ஒரு ஆண்மகன் தான்..

உலகத்துல எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இல்ல.. ஐந்து விரலும் என்ன ஒன்னாவே இருக்கு..

நந்தன் - இவன் காதலும் பொறுமையா காத்திருந்த காத்திருப்பும் வீண் போகல.. கடைசில அவன் ஆசைப்பட்ட காதலும் கை கூடிருச்சு..

பத்பநாதன் - கமலம் : கதைல இவங்க கொஞ்ச இடம் வந்தாலும் அவ்வளவு நிறைவு.. யாரு சொல்லியும் திருந்தாத ஜோதி கமலம் பாட்டியோட பேச்சை கேட்டு திருந்துனது தான் பிளஸ் பாயிண்ட்டு.

மொத்தத்துல அனைத்து கதாப்பாத்திரமும் அருமை டியர்.. எல்லாத்துக்கும் முக்கியத்துவம் குடுத்தது நல்லா இருந்துச்சு.

குழந்தைகளோட மனநிலைக்கு காரணமே அவங்க குடும்பம் தான்.. வெண்ணிலாவோட குடும்பத்துல இருந்த பிரச்சனையே அவளோட மனநிலைக்கும் காரணம் 💯💯💯.

டாக்டர் ரஞ்சினி மாதிரி அப்பப்ப நம்ம மனநிலையை தெளிவு பண்ண ஒருத்தர் இருந்தா கஷ்ட காலத்துலயும் அதையை கடந்து போயிரலாம்.. ஆனா கிடைக்கறது என்னவோ அந்த மனநிலையை இன்னும் மோசமாக்கற ஆட்கள் தான்..

கடைசியில நிலனின் வெண்ணிலாவா மாறிட்டா நம்ம நிலாவும்.. மொத்தத்துல கதை ரொம்ற நிறைவு..

போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍
 

Aathirai Mohan

Moderator
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டியர்..........:giggle: 🙏நன்றின்னு வார்த்தைகளால சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கு.🥰 இந்தக் கதைய நான் எழுதி முடிக்கறதுக்குள்ள பல போராட்டங்கள், இன்னல்கள், இடைஞ்சல்கள்ன்னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எங்க தொடர முடியாமப் போய்டுமோன்னு ரொம்பக் கவலைப்பட்டேன்.😞

ஆனா, பிரஷா டியர் போட்டி முடியற நேரத்துல நிறைய டைம் கொடுத்து எக்ஸ்டெண்ட் பண்ணாங்க.😃 இதுதான் நமக்குக் கிடைச்ச வாய்ப்புன்னு, கடைசி நிமிஷம் வரைக்கும் எப்படியாவது எழுதி முடிச்சிடணும்னு, ஒரு வேகத்துல லாஸ்ட் மினிட்ல வெற்றிகரமாக எழுதி முடிச்சிட்டேன். 😎

பல கதைகள்க்கு வரவேற்பு இருந்தாலும், என்னுடைய கதைக்கு சில பேர் மட்டுமே கருத்துக்கள் தந்தாங்க, அதே மாதிரி லைக் பண்ணாங்க.😊 அப்போவெல்லாம் ரொம்ப ஏக்கமா இருக்கும். ஆனா, நீங்க இப்போ கொடுத்திருக்க ரிவ்யூல என்னோட ஒட்டுமொத்த ஏக்கத்துக்கும் ஒரு ஃபுல்ஸ்டாப் வச்ச மாதிரி இருக்கு.🥰😍

எழுத்தாளர்கள் ஏங்கறதே நம்ம கதையை படிச்சு, யாராவது ரெண்டு வார்த்தை சொல்லமாட்டாங்களா? அது நெகட்டிவ்வா இருந்தாலும் பரவாயில்லன்னு தான். ☺️ஏன்னா, அப்போதான் நம்ம எழுத்துல என்ன தப்புன்னு தெரிஞ்சு அதை சரிபண்ணிக்கலாம். அப்படி தான் இப்பவும் நினைக்கிறேன்.😊

ரொம்ப சந்தோஷம் டியர்.😌☺️ இது மாதிரி விமர்சனங்கள் தான், உண்மையாலுமே எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிற மிகப்பெரிய பரிசு.🥰 அது கிடைச்சது ரொம்ப ரொம்ப ஹேப்பி............. தேங்க் யூ சோ மச் அகைன் டியர்.........:giggle:🙏🥰🥰
 

yugarasha

Member
#rasha_review 33

#நிலவே_வெண்நிலவே

#NNK70

லாஸ்ட் மினிட்ல சிக்சர்6️⃣ அடிச்சு🏏 வின் பண்ற மாதிரி, லாஸ்ட் மினிட்ல கதை முடிச்சு போட்டிக்குள்ள வந்தீங்க🥰🥰🥰. உங்க கதையின் கரு சிறது ஆனால் ரொம்பவே தெளிவா அதை காட்டி இருக்கிங்க💓💓💓.

நிலன் 💙💙💙வெண்ணிலா ரொம்ப சூப்பர் ஜோடி, நிலன் மனநலம் பற்றி படித்ததால் இவ்வளவு பொறுமையா இல்ல அவன் இயல்பே அதானா🤔🤔🤔??? என்ன அழகா ஒவ்வொன்னுக்கும் விளக்கம் கொடுத்து அவளை மனம் மாற்றுகிறான்🥺🥺.

வெண்ணிலா பாவம் தான் குடும்பத்தில நடந்த சம்பவம்☹️☹️ உறவுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை இதானால் யாரிலும் நம்பிக்கை இல்லாம இருந்தாள். 😔😔😔அதன் விளைவு நிலன் கஷ்டப்பட வேண்டியதாக போயிட்டுது😣😣😣.

வாண்மதி 💜நந்தன் அழகான ஜோடி, நந்தனும் ஒரு ஆண் தேவதை என்று சொல்லாமல் சொல்லிட்டிங்க🤩🤩🤩. அவளின் வாழ்க்கையின் கசப்பு பக்கங்களை மறக்க வைத்து அவளையும் வாழ வைக்கும் ஆண்கள் எத்தனை பேர் உள்ளாங்க😍😍😍. நந்தனுக்கு ஏற்பட்ட காதல் ரொம்பவே சிறப்பானது.😘😘

ஆனா லாஸ்டல நான் எதிர் பார்காத டுவிஸ்ட் சந்திராவின் திருமணம்😎😎. வெண்ணிலா மனம் மாற வேண்டும் என்பதற்காக இந்த மாற்றமா இல்லை வாழ்கைக்கு துணை வேண்டும் என்பதற்காக இந்த மாற்றமான்டு புரியல்ல 🤔🤔பட் பல பேருக்கு உதாரணமாக இருந்து இருக்காங்க என்று மட்டும் புரிகிறது😜😜😜.

அமைதியான ஒரு அழகான குடும்ப கதை🥰🥰, எல்லா உறவுகளும் கிடைத்தை பாச வெள்ளத்தில் வளரும் நாயகன்❤️❤️, பாசமான உறவுகள் இருந்தும் பார்வைக்கு பாசம் இல்லாமல் 💔💔வாழும் நாயகி, இவங்களின் இணைவே #நிலவே_வெண்நிலவே.

ரஞ்சினி மனோ தத்துவ டாக்டரா இருந்து நண்பியின் மனதை படிக்க முடயாமல் இருந்திட்டா😂😂😂. அதை சரி பண்ண பல்லாயிரம் மைல் கடந்து நிலன் வரவேண்டி உள்ளது😇😇😇.

ரொம்ப அழகாக கதையை கொண்டு போய முடிச்சிட்டிங்க😜😜😜. பெண்களின வாழ்கையில கணவன் என்பவன் தப்பானவனா இருந்தால் படும் கஷ்டத்தை காட்டிட்டிங்க😡😡. சந்திராவே. வான்மதியோ இன்னொரு வாழ்க்கைக்கு தயாரானது நிறைய போருக்கு உதாரணமாகும்🤩🤩. நிலா காலம் நிலவே வெண்ணிலவே நீங்களும் ஒரு வகையான கருத்தை தெருவித்து இருக்கிங்க👍👍

இந்த போட்டியில் 🌺🌺வெற்றி🌺🌺 பெற 💐💐வாழ்த்துக்கள்💐💐 .

இந்த கதை படிக்க விரும்பினால் லிங்👇

 

Aathirai Mohan

Moderator
வாவ்.... வாவ்...... வாவ்............:love:
என்ன சொல்ல? ஏது சொல்ல? சொல்ல ஒரு வார்த்தை இல்லன்னு பாட்டு தான் பாடத் தோணுது டியர்.....:love:🥰

ரொம்ப ஹேப்பி டியர்.......🥰 இது என்னுடைய ரெண்டாவது ரிவியூ.😊 ரெண்டுமே ஹார்ட்ட டச் பண்ணிடுச்சு.
எப்ப கதை போஸ்ட் பண்ணாலும் நீங்க எனக்கு கண்டிப்பா கமெண்ட் கொடுப்பீங்க. அதுவே எனக்கு ஒரு ஊக்கமா இருந்துச்சு.😊 ஏன்னா, என்னுடைய கதையையும் படிக்கிறாங்கப்பான்னு ஒரு சந்தோஷம் இருந்துச்சு.😌 எல்லா கதைகளுக்கும் நிறைய கமெண்ட்ஸூம், லைக்கும் பிச்சிக்கும். ஆனா, நம்ம கதைய ஒரு சிலரைத் தவிர யாருமே கண்டுக்கலையேன்னு ஒரு ஏக்கமும், வருத்தமும் இருந்துட்டே தான் இருந்துச்சு.😊

அதே மாதிரி கடைசி நிமிஷத்துல தான் கதையை முடிக்க வேண்டியதாகவும் இருந்துச்சு. பர்சனலா நிறைய பிரச்சினைகள். கதையைப் போடவே முடியாதுன்னு தான் இருந்துச்சு. பிரஷா டேட் எக்ஸ்டெண்ட் பண்ணதால தான் இது சாத்தியமாச்சு.😌🥰

கடைசியா முழுக்கதையையும் படிச்சுட்டு நீங்க கொடுத்திருக்க ரிவியூ ஒருவித சந்தோஷத்தைக் கொடுக்குது மா. ரொம்ப ரொம்ப நன்றி டியர் உங்கள அழகான, பொறுமையான விமர்சனத்துக்கு……..🥰:love:😘🙌👍👌🙏🙏
 

Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#நிலவே_வெண்ணிலவே

குடும்பம் + காதல் கதை.....

வெண்ணிலா - நம்ம ஹீரோயின், டாக்டர் உம் கூட...

ஆன எதிலும் பயம், முக்கியமா கல்யாண வாழ்க்கை மீது🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

இவ வீட்டில் யாருக்கும் மண வாழ்க்கை நல்ல இல்லனு, எங்க இவளுக்கும் அப்படியே நடந்துடுமோனு பயம்.....

அதை களைவாலா??????

நிலன் - மிஸ்டர் பெர்பெக்ட், இவன் கிட்ட எந்த குற்றம் குறையும் இல்ல.....

நிலா ஓட ஃபேமிலிக்கு அப்படியே எதிர், அதனாலோ என்னவோ ரொம்ப பாஸிட்டிவ் மைண்ட் பையன்.....

இவனோட நிலாவை கைப்பிடிக்க என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறான், ஆன அது எல்லாத்தையும் ஒரு சொல்லில் ஒன்னும் இல்லாம செய்து விட்டரா நிலா🙄🙄🙄🙄

இவன் காதல் கைகூடியதா??????

வான்மதி - உண்மையா இவளை தான் எனக்கு ரொம்ப பிடிச்சது, நிலா போல இல்லாம பக்குவபட்டவ....

முன் வாழ்க்கை சரி இல்லைனாலும், நந்தன் ஓட வரவு இவ வாழ்க்கையை ரொம்ப அழகா மாற்றி காட்டுது🥰🥰🥰🥰🥰

ரமணி பாட்டி - சிங்கபெண் தான்🥰🥰🥰

பிரகாஷ் & ஜோதி - ஜோதி இயல்பிலேயே கெட்டவங்க கிடையாது, புருசன் காதல் தனக்கு இல்லனு தெரிஞ்சா எந்த பெண் தான் அமைதியா இருப்பா......

ஏதேதோ தப்புக்கள் செய்தாலும், கடைசில ஓகே ஆயிடாங்க....

இதை பிரகாஷ் முன்னாடியே செய்து இருக்கலாம்....

பத்மநாதன் & கமலா - கியூட் தாத்தா பாட்டி❤️❤️❤️❤️❤️

ரஞ்சி - சோ ஸ்வீட் 🤩🤩🤩🤩

இந்த கதையில் கொஞ்சம் ஆக்வேர்ட் ஆ தெரிஞ்ச ஒரு விசயம், சந்திரா அம்மா ஓட திருமணம் தான்....

அது தப்புன்னு சொல்ல வரல, ஆன இன்ஸ்டன்ட் ஆ நடந்த ஃபீல்...

வெண்ணிலா ஓட மன மாற்றம் படி படியா இருக்கற மாதிரி காட்டி இருக்கலாம் ரைட்டர் ஜி....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி💐💐💐💐
 

Aathirai Mohan

Moderator
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்... :love:🥰🙏🙏

இது என்னுடைய கதைக்கான மூன்றாவது விமர்சனம். ஒவ்வொரு கேரக்டர்ஸையும் ரொம்ப அழகா படிச்சு, ரசிச்சு சொன்னவிதம் அருமை.... :love: 🥰👌 இதை நான் எதிர்பார்க்கல..

வெண்ணிலா மனமாற்றம் கொஞ்சம் அடைஞ்சாலும், அவளுடைய மனசு திரும்பவும் முருங்கை மரம் ஏறிடும். எல்லாரும் ஒரு கட்டத்துல அவங்கவங்க வாழ்க்கைய பார்க்க ஆரம்பிச்சதும் தான், தன்னுடைய தவறும், தனிமைபட்டதும் தெரியவரும். அப்போதுதான், உண்மைய உணருவாள். அப்படித்தான் கதையை கொண்டு போயிருப்பேன்.

அதே போல், சந்திராவுக்கும் ஒரு கட்டத்தில் தன்னுடைய தப்பால் தான் வெண்ணிலாவும் இப்படி இருக்கிறாள் என்றொரு எண்ணமும், ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் போது, அதை ஏன் தவறவிட வேண்டும் என்றொரு எண்ணம். அதனால் தான் அவருடைய முடிவும் அப்படி.

கதையை விமர்சனம் செய்ததற்க்கு ரொம்ப நன்றி சிஸ்டர்...:love:
🥰:giggle::giggle:🙏🙏🙏
 
Top