எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜீவன்யா

S. Sivagnanalakshmi

Well-known member
ஜீவன்யா கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். தலைப்பு ஏற்ற கதை. ஜிவானந்தன் இனியா இணைந்து ஜீவன்யா செம தலைப்பு. ஜிவானந்தன் இனியா பெற்றோர் பார்த்து முடிவு பண்ண திருமணம். ஜிவானந்தன் இவனுக்கு அன்பை எப்படி காண்பிக்க தெரியாமல் இருக்கிறான் மனைவியுடன் அவளின் செயல்களை பாராட்ட தெரியாமல் இருக்கலாம். ஆனால் நல்ல கணவன் அவனின் அன்பை சமையல் செய்து கொடுப்பது அவளுக்கு தேவையாதை செய்து தருவது செயல் மூலம் உணர்த்துகிறான்.அவளை படிக்க வைப்பது இருசக்கர வாகனம் சேர்த்து விடுவது பாட்டு கிளாஸ் அனுப்புவது என்று செயல் மூலம் காட்டுவது சூப்பர். அவளும் அவனின் லட்சியமான சினிமா எடுப்பது மூன்று வருடம் வேலைக்கு போக முடியாது பின்னர் சினிமா சான்ஸ் கிடைக்கவில்லை பார்க்கலாம் என்பதை அவனுக்கு உறுதுணையாக இருப்பது சிரமங்கள் கொடுக்காமல் அன்பை பகிர்வது சூப்பர். அண்ணி அக்கா மாமி மூன்று பேரும் சினிமா வேண்டாம் என்றும் அவனை தப்பான வழிக்கு சென்று விடுவான் சொல்வதை கண்டுக்காமல் விடுவதும் சூப்பர். கிசுகிசு வரும் போது அதை பொருட்டாக நினைக்காமல் விடுவதும் சூப்பர். கணவன் மனைவி புரிந்து அன்பாக இருந்தால் எந்த சூழ்நிலையும் சந்தோஷமாக வாழலாம்.மனைவியை பாடவைத்து அழகு பார்த்ததும் சூப்பர் சகி. என்பதை அழகாக சொல்லியிருக்கீங்க சகி. கதை அருமை வாழ்த்துக்கள் சகி வாழ்க வளமுடன்
 
Top