எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 5

NNK-41

Moderator

அகம் 5​

இப்பொழுதைய நெடுமாறனுக்கும் அப்பொழுதைய ஆதித்ய நெடுமாறனுக்கும் ஒன்றல்ல இரண்டல்ல நூறு வித்தியாசங்கள் சொல்லலாம்.​

அப்பொழுதையவனுக்கு குடும்ப கௌரவமே பிரதானம். சாஸ்த்திரங்கள் பாரம்பரியம் என்ற நம்பிக்கையில் ஊரிப்போன குடும்பத்தின் மூத்த வாரிசு. அவனுக்கடுத்து தம்பியும் தங்கையும் இருந்தாலும் எல்லாவற்றிட்கும் இவனுக்குதான் முதல் உரிமை. முன்னோர்களின் சொத்தின் மூலம் வந்த பணத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு பல தொழில்களில் முதலீடு செய்து பொருளீட்டுபவன்.​

தொழிலதிபன் என்பதால் யாரையும் சட்டென நம்பிவிட மாட்டான். பணம் அதிகம் இருப்பதால் ஒருவன் தன்னை நெருங்க முனைந்தால் அவர்களின் உள்நோக்கத்தை அறிந்தபின் அதன் சாதக பாதகங்களை கணக்கீட்டு அவர்களிடம் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்வான். சுருக்கமாக சொல்லவதென்றால் சந்தேகம் எனும் குணம் அவனை ஆட்கொண்டிருந்தது. அக்குணத்தால் பல கண்ணுக்கு தெரியாத விரோதிகளையும் சம்பாதித்து வைத்திருந்தான்.​

இக்குணங்களால் அவன் இழந்தவை பல. திரும்பபெற முடியாத செல்வங்கள், மனித மனது, நம்பிக்கை என்று பட்டியல் நீளும்… அதில் இதோ அவன் கண்முன் நின்றிருக்கும் மலரினியாழும் ஒருத்தி.​

இப்பொழுது அவனுக்கு தன்னவளை அன்பால் குளிப்பாட்ட வேண்டும். அவள்மேல் தனக்கிருக்கும் அளவில்லா காதலை மழைச்சாரல் போல் ஸ்பரிசிக்க வைக்க வேண்டும். அதற்கு முதலாக அவளிடமிருக்கும் தயக்கங்களையும் பயத்தையும் விட்டு அவளை வெளிக்கொணர வேண்டும். அது அத்தனை சுலபமல்ல என்பதை அவனும் அறிவான்.​

ஆட்டிசம்.. அதன் தாக்கத்தினால் ஒரு காரியத்தை தொடங்குவாதாக இருந்தாலும் சரி அல்லது எந்த காரியம் என்பதாக இருந்தாலும் சரி அவற்றை பல கோணங்க்களில் சிந்தித்த பிறகே அவளால் செயல்படுத்த முடியும். காரியதாமதமும் இதனால்தான்.​

சில வேளைகளில் இவளது மனத்தின் வேகத்துக்கு ஏற்றவாறு செயல்களில் வேகம் இருக்காது. அவளை புரிந்து அனுசரணையாக இருப்பவர்களிடம் தயக்கம் காட்ட மாட்டாள். அதுவும்கூட நம்பிக்கை வந்தால் மட்டுமே.​

முதலில் அவளுக்கு தன் மேல் நம்பிக்கை வர வைக்க வேண்டும் என்று நினைத்தவனின் மனம் கனமானது. இன்று வந்த ஞானோதயம் ஏனோ அன்று தன்னிடம் இல்லாமல் போனதை எண்ணி குற்ற உணர்வுக்குள்ளானான். ஆனால் முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவனின் அசையா பார்வை அவளை என்னவோ செய்ய​

“என் பெயர் மலரினியாழ். ஷார்ட்டா மலர் என்று கூப்பிடுவாங்க” என்றதும் இவன் மலர்ந்தான்.​

“நைஸ்… டீச்சரும் ஃபிளவர் போலதான் இருக்கீங்க” என்றவனை அவள் விழி உயர்த்தி பார்க்க​

“மென்மையாக இருக்கீங்க என்ற அர்தத்தில் சொன்னேன்… உண்மைதானே?” என்று சமாளித்தவன். இனி பேசும்பொழுது இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டவன்​

“நான் ஆ… நெடுமாறன்” என்றவன் மனமோ ‘மறுபடியும் சொதப்ப பார்த்தியேடா!!’ என்று அலர… பேச்சை நிறுத்தி மென்னகைத்தான்.​

அவன் பெயரை கேட்டதுமே அவளுக்கு அவன் உயரம்தான் நினைவில் வந்தது. பெயருக்கு ஏத்தமாதிரி நெடுமரம் போலத்தான் இருக்கான். மனதோடு கிண்டல் செய்துக்கொண்டாள்.​

அவள் கண்களில் தெரிந்த பளபளப்பு அவள் எதையோ நினைத்து சிரிக்கிறாள் என்று உணர்ந்தவன்… எதுவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே என்னவென புருவம் உயர்த்த சற்று தடுமாறியவள்​

“அது… ம்ம்.. நான் ஒரு விஷயம் சொல்லனும். உங்களுக்கு தெரியுமா என்று தெரியல..” அவள் பீடிகை போட… தன்னை உணர்கிறாளோ என்ற எண்ணத்தில் அவன் முகம் ஆர்வமானது.​

“எனக்கு ஆட்டிசம் இருக்கு.. அதனால”​

“ஸோ வாட்? இதெல்லாம் ஒரு விஷயமா!! இது தெரியாமலா உன்னை டீச்சரா அப்பாய்ண்ட் பண்ணியிருக்கேன்?” பட்டென அவன் சொல்லிவிட… சற்று அதிர்ந்துதான் போனாள்.​

‘இதென்ன இத்தனை நேரமாக டீச்சரம்மா என்றவன் திடீரென ஒருமையில் பேசுகிறானே’ என்று நினைத்தவளுக்கு அச்சம் வர கொஞ்சமாக பேச ஆரம்பித்தவள் மறுபடியும் அமைதி எனும் கூட்டுக்குள் புகுந்துக்கொண்டாள்.​

அவன் எதிர்பார்த்தது வேறு எதுவோ ஒன்று… அவ்வளவு சீக்கிரத்தில் அவளால் தன்னை உணர முடியாது என்று தெரிந்தாலும்… ஆசை கொண்ட மனதின் எதிர்பார்ப்பை அவனால் அடக்க இயலவில்லை. குரலை உயர்த்திவிட்டான். இப்பொழுது அவள் நிலை கண்டு தவித்து போனான்.​

‘போச்சி! போச்சி! டேய் ஆதித்யா நீ உன் கன்ட்ரோல்லயே இல்லடா!! ப்ச்.. கொஞ்சமாச்சும் பேச ஆரம்பிச்சா. உன் அவசர புத்தியால இப்போ பயந்து போய்ட்டா! போடா டேய்!!’ மனசாட்சி காரிதுப்ப அதற்கு எதிராக அவன் கண்களோ அவளை யாசித்துக்கொண்டிருந்தன.​

‘எப்போடி என்னை நீ உணர்வ… வந்த முதல் நாளே என்னை தலை குப்புற விழ வைக்கிறீயேடி!! ஒரு காலத்தில் பொறுமையில்லாதவன் இப்பொழுது தன்னவளுக்காக பொறுமை காக்க வேண்டிய நிலையில் இருந்தான். சற்று நிதானித்தவன்… நிலைமையை சகஜமாக்க எண்ணி பேச்சை வேறு திக்கில் கொண்டு செல்ல நினைத்து வசந்தனை பார்க்க…​

அவன் வாயை பிளந்துக்கொண்டு சிலைபோல் நின்றிருந்ததை பார்த்ததும் நெடுமாறனுக்கு சிரிப்பு வந்து விட்டது. கண்டிப்பாக சற்றுமுன் தன்னுடைய இன்னொரு பரிணாமத்தை கண்டதின் பிரதிபலிப்பு இது என்று நினைத்துக்கொண்டவன் சிரிப்பை வாய்க்குள் விழுங்கிக்கொண்டான்.​

“என்ன வசந்தன்… வரவேற்பிலிருந்து டீச்சரை விருந்து உபசரிப்பு வரைக்கும் நானே செய்யனுமா? செகரட்டரியா இருந்துட்டு இந்த வேலைகளையும் செய்யனுமானு யோசிக்கிறதுபோல இருக்கே? அப்படித்தானோ??” நெடுமாறன் தாடையை தடவிக்கொண்டே கேட்க… வசந்தன் என்ற சிலைக்கு உயிர் வந்தது. மறுக்க அவன் முனைய… மலர் முந்திக்கொண்டாள்​

“செகரட்டரியா?? அப்போ நீங்க டிரைவர் இல்லையா அண்ணா??” அவள் சொன்ன விஷயத்தை கேட்டதும் அலறிவிட்டான் வசந்தன்.​

“மேடம்!! என்ன மேடம்… என்னை பார்க்க டிரைவர் மாதிரியா தெரியுது?” ஆற்றாமையுடன் அவன் கேட்க​

“அது வந்து ண்ணா என் லக்கேஜ் எல்லாம் டிக்கில வச்சிட்டு எனக்காக கார் கதவை எல்லாம் திறந்து வச்சீங்களா… அதான் நீங்க டிரைவர்னு நினைச்சிட்டேன்…”​

‘இந்த அப்பாவிய வச்சிக்கிட்டு..’ மனதில் மலரை நினைத்து புலம்பியவன் இவற்றையெல்லாம் செய்ய சொன்ன நெடுமாறனை வறுத்தெடுத்தான்… ஜாக்கிரதையாக மனதோடு.​

“ஓ… இது எல்லாம் டிரைவரோட வேலையா மேடம்? இதுகூட எனக்கு தெரியல பாருங்க. பரவாயில்ல இன்னைக்கி டீச்சர்கிட்ட இருந்து புதுசா ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்” சிரித்துக்கொண்டே சொல்ல… அதில் உள்ள உள்குத்து அறியாமல் வெள்ளந்தியாக சிரித்தாள் மலர்.​

வசந்தனை முறைக்க முயன்றான் நெடுமாறன்.. ஆனால் முடிந்தால்தானே. அவனால்தானே தன்னவள் எல்லாவற்றையும் மறந்து சிரிக்கிறாள். அவளின் சந்தோஷம்… புன்னகை… அதுதானே அவன் வேண்டுவது. கொசுறாக வசந்தன்மேல் கொஞ்சம் பொறாமையும் வந்து எட்டி பார்த்தது.​

“டீச்சருக்கு பசி எல்லாம் வருமா என்று கேளு வசந்தன். நான் கேட்டா இல்லனு சொல்லிட போறாங்க?” என்றவனிடம் இல்லையென்று தலையாட்டினாள். அவன் கண்கள் இடுங்கின. கைகளை கட்டிக்கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான் நெடுமாறன்.​

‘ஹப்பா என்ன பார்வை இது… ஏன் இந்த பார்வை என்னை தடுமாற வைக்கிறது? அந்த பார்வையில் என்ன இருக்கிறது? இவன் பதில் சொல்லாமல் விடப்போவதில்லை போல இருக்கே!’ தவிப்புடன் மலரின் கண்கள் வசந்தனை நோக்க… அவன் அலைபேசியுடன் ஐக்கியமாகியிருந்தான்.​

“பஸ்ல வ..வரும்போது ம்ம்.. டீ.. டீ குடிச்சேன்” தடுமாறி சொல்லி முடித்தாள்.​

“ஓ.. அப்போ டீச்சர் ஒரு சாதகப்பட்சினு சொல்லுறீங்க! வெறும் நீருண்டு வாழ்ந்திடுவீங்களோ!!”​

“அடுத்த தடவை நிலவன் உன்னை பார்க்கும் போது, இதுதான் என் தங்கச்சியை வேலை வாங்கும் லட்சணமா என்று கேட்டா நான் என்னன்னு சொல்ல? வெறும் நீர் குடிச்சி வாழுறானு சொல்லனுமா? நிலவன் நம்புவானா? உணவு கொடுக்க முடியாத கிராதகன்னு என்னை பார்த்து சொல்ல மாட்டானா? இல்ல அப்படிதான் சொல்லனும்னு டீச்சர் ஆசை படுறீங்களோ?”​

“இல்ல… அப்படி எல்லாம் இல்ல… ஏன் இ.. இப்படி சொல்லுறீங்க? கஷ்டமா இருக்கு” சொன்னவளின் முகம் கசங்கியிருந்தது. சொன்னவளை இழுத்து அணைத்து ‘எல்லாம் உனக்காகத்தான் டி’ என்று சொல்ல மனம் பேராவல் கொண்டது. கைகளை பாக்கெட்டில் அடக்கியவன் வாயை மூடிக்கொண்டு தலையை திருப்பிக்கொண்டான்.​

தலையை திருப்பிக்கொண்டானே தவிற உணர்வுகளை அடக்க இயலவில்லை. நான்கு வருடங்கள் கழித்து தன்னவளை அருகில்… வெகு அருகில் கான்கிறான். பேயாட்டம் போடும் உணர்வுகளை கட்டுபடுத்த இயலவில்லை. கட்டுபடுத்தி பழக்கமும் இல்லை. புதிய மனிதனாக அவளுக்காக மாறியவனால் சில விஷயங்களை தள்ளி வைக்க முடியவில்லை. ‘இவ வேற செம்ம அழகா இருந்து கொல்லுறா..’​

“அண்ணா எனக்கு பசிக்கிது… ஸார் சாப்பாடு கொடுப்பாரா?” அவனின் கோபம் அவளை தாக்கியது போலும். மறைமுகமாக வசந்தனை பார்த்து சொன்னதுதான் தாமதம்… சடாரென அவளை திரும்பி பார்த்தான் மாறன். அந்த கண்களில் தெரிந்த சந்தோஷம் அவளை கட்டிபோட்டது.​

எதனால் இந்த மலர்ச்சி இவனுக்குள். என்னை இவன் என்னவோ செய்கிறான். அவனின் பழுப்பு விழிகள் அவளை சிறைபிடிக்க ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.​

நெஞ்சில் படபடப்பு அவன் விழி விட்ட அம்பினால். அம்பு சரியாக நெஞ்சை குத்தியதால் அழையா விருந்தாளியாய் வரவிருந்த ரத்தம் கன்னத்தில் குடிக்கொண்டது.​

*****************​

“நிலவா… மலரை எங்கே அனுப்பியிருக்க?”​

“ஏன்? எதுக்கு?”​

“பெத்தவ நான் தெரிஞ்சிக்க கூடாதா?”​

“ஓ… பரவாயில்ல தெரிஞ்சிக்க வேணாம்”​

“அண்ணா அம்மாக்கு பதில் சொன்னாதான் என்ன? அம்மா என்ன போய் பார்க்கவா போறாங்க?”​

“அதானே சரியா சொன்ன பூமி! போய் பார்க்கவா போறீங்க!! அப்புறம் என்னாத்துக்கு அக்கறை இருக்கிறது [போல பேச்சு?”​

“இல்லடா நிலவா நம்ம பூமி கல்யாணத்துக்கு அவளுக்கு பிடிச்ச மாதிரி புடவை எடுக்கனும்ல..”​

“அதெல்லாம் தேவையில்ல… இந்து பாசம் பாயாசம் எல்லாம் எந்த மாதிரி பாய்சன்னு எனக்கு தெரியும். உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்… என்னை மீறி ஏதாவது பிளான் பண்ணீங்க… இந்த நிலவன் யார்னு அப்போ உங்களுக்கு தெரியும்” சொன்னவன் விறுவிறுவென அறைக்குள் புகுந்துக்கொள்ள விழி பிதுங்கி நின்றனர் சாவித்திரியும் பூமிகாவும்.​

“என்னமா இது? இப்போ என்ன பண்ண? அவரோட சித்தப்பா பையன் கட்டுனா மலரைதான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறானாம். மலரை சம்மதிக்க வைக்கிறது உன் பாடுனு சொல்லிட்டார். அவ ஃபோனுக்கு போட்டா ரீச்சாக மாட்டிக்கிது!!” பூமிகா புலம்ப​

“அதான்டி நிலவன் திடீர்னு இப்படி பண்ணுவான்னு எனக்கென்ன தெரியும்! இப்போ என்னடி பன்றது?” சாவித்திரியும் புலம்ப… அவர்களின் புலம்பல்களை கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் மஞ்சரி.​

“ஏம்மா இந்த அண்ணியை நம்ம கைக்குள்ள போட்டா என்ன?” பூமி புது திட்டம் தீட்ட​

“யாரு? இந்த ஊமைகுசும்பியா? இவ ஒன்னும் கர்சீப் இல்லடி கைக்குள்ள போட… இவ ஜகஜாலக்கில்லாடி. நிலவனை ஆட்டுவிக்கிற கயிறு”​

“ப்ச்!! போம்மா ஆடு விகிறவ மாடு விக்கறவனு சொல்லிக்கிட்டு. நமக்கு காரியம் ஆகனும்னா இந்த அண்ணியை பிடிச்சாதான் சரி”​

“அப்படினு சொல்லுற… இரு இரு அவ ரூம்மிலிருந்து வெளிய வரட்டும்” என்று சாவித்திரி சொல்லி முடிக்க… அறையிலிருந்து வெளியே வந்தாள் மஞ்சரி. அவளும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் இவர்களின் ஸ்ம்பாஷனைகளை. ஆனால் மகளும் மாமியாரும் கிசுகிசுத்த்து அவளுக்கு விளங்கவில்லை. எதுவாக இருந்தாலும் பூனைக்குட்டி வெகு நேரம் பெட்டிக்குள் இருக்காது என்பது அவளுக்கு தெரியும்.​

“அம்மா மஞ்சரி இங்க கொஞ்சம் வாம்மா” சாவித்திரி அழைக்க… விரைவிலேயே பூனை வெளிவந்த சந்தோஷத்தில் புன்னகையுடன் மாமியாரை நோக்கி சென்றாள்.​

“வாம்மா இப்படி உட்காரு. அடுப்படியே கதியா கிடக்கிற… கொஞ்சம் ஓய்வெடு மா” அக்கறை கரைபுரண்டோடியது வார்த்தையில்.​

“உங்க மகன் ரொம்ப மோசம் அத்தை. பார்க்கப்போனா அவர்தான் சொல்லியிருக்கனும். நானும் அதைதான் சொல்லனும்னு நினைச்சேன் த்தை..” என்றவளின் பேச்சில் தங்களின் திட்டம் நிறைவேறப்போவதில் உற்சாமாகினர் இருவரும்.​

“ஆமாமா நிலவன் எதையும் சொல்ல மாட்டிக்கிறான். நீயே சொல்லுமா” சாவித்திரி உசுப்ப…​

“சரி த்தை.. இதோ பாரு புவி புகுந்த வீட்டுக்கு போக போற… உன் மாமியார் என் மாமியார் போல நல்லவங்களா இருப்பாங்களானு தெரியாது. கல்யாணம் வேற கிட்ட வந்திடுச்சு. இனி அத்தைகிட்ட சமையல் கத்துக்கோ. நானே சொல்லி கொடுத்திடுவேன். ஆனா அத்தை என்ன ஓய்வெடுக்க சொல்லிட்டாங்க பாரு” என்றுவிட்டு எழுந்தவள்​

“பூமி கல்யாணத்துக்கு நகையெல்லாத்தையும் பாலிஷ் பண்ணனும்னு சொன்னார். நான் போயிட்டு வரேன் த்தை” என்றுவிட்டு அறைக்குள் நுழைய… அங்கே அவள் கணவன் அவளை காதலுடன் பார்க்க… பதிலாக அவளும் மந்தகாச புன்னகையுடன் சுண்டி இழுத்தாள் அவனை.​

******************​

“வசந்தன் நாளைக்கு காலையில டீச்சரை அழைச்சிட்டு ஸ்டூடன்ஸ் கிட்ட அறிமுகப்படுத்திடு” சாப்பிட்டுக்கொண்டே மாறன் சொல்ல​

“சரி ஸார்”​

“இங்கே வேலை செய்வதற்கான அக்ரீமண்ட்ல சைன் வாங்கியாச்சா?”​

“இ.. இல்ல ஸார்”​

“ஏன் நல்ல நேரம் பார்ப்பீயா என்ன?”​

“இல்ல அவங்க ரெஸ்ட் எடுத்திட்டு வந்த பிறகு பார்த்துக்கலாம்னு..”​

“அதான் பார்தாச்சே..”​

“இல்ல ஸார் அது வந்து..”​

“எது வந்துச்சு?”​

“இல்ல ஒன்னும் வரல”​

“வராத ஒன்னுக்கு ஏன் காத்திருக்க? எதையும் உடனே செஞ்சிடனும்னு தெரியாதா உனக்கு. இப்போ உன்கிட்ட நான் பேசுறத பார்த்து பயந்திட்டு டீச்சரம்மா உன் வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம்னு போய்ட்டாங்கனா என்ன செய்வ?”​

“பாவம் அண்ணா… அவரை விட்டுருங்க… நான் அப்படி எல்லாம் ஓடி போக மாட்டேன்!” சினுங்கலுடன் வந்தது குரல். அதில் ஈர்க்கப்பட்ட மாறன் தன் வசமிழந்தான்.​

“என்மேல் நம்பிக்கை வந்திடுச்சா இனியாழ்” ஆழ்ந்து வந்த குரலில் தடுமாறினாள் மலர். அவளால் தலை நிமிர முடியவில்லை. அந்த அழைப்பு… வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டது. உடலில் பரவச உணர்வொன்று தாக்கியது… ஏனென்று புரியவில்லை அவளுக்கு. தகித்த உணர்வோடு தவித்த கண்களால் அவனை நோக்கினாள்.​

அவனின் பழுப்பு விழிகள் பரந்து விரிந்து அவளை உள்வாங்கி கொண்டிருந்தது. விரிந்த விழிகளை வெகு ரசனையாக பார்த்தாள். அவள் ரசிப்பதை அவனும் உணர்ந்தே இருந்தான். கண்களை தாழ்த்திக்கொண்டவனின் உதட்டோரம் கள்ள புன்னகை எட்டி பார்த்தது. உதட்டை துடைப்பதுபோல் நாசூக்காய் மறைத்துக்கொண்டான்.​

“டீச்சருக்கு எங்க ஊரு சாப்பாடு பிடிக்கலையோ?” அலைபேசியை பார்த்துக்கொண்டே அவன் கேட்க… புரையேறியது அவளுக்கு. மல்லிகை மொட்டு விழிகள் படபடத்தன. பச்சரிசி பற்கள் ஆரஞ்சு சுளை உதடுகளை கடித்துக்கொண்டன. அடிக்கண்ணால் பார்வையிட்டு கொண்டிருந்தவனின் நெஞ்சம் விம்மி நின்றது. உணர்வுகள் தாறுமாறாய் ஆட்டம் போட… அடக்க வழியின்றி நீரை பருகி அடக்க முயன்றான்.​

முயற்சி முயற்சியாக மட்டும் நின்றுக்கொண்டன. குளிரினால் சிவந்த அவள் கன்னங்கள் என்று என்னைக்கண்டு சிவக்கும்? என்னுள் வந்த தீ உனக்குள் என்று வரும் பெண்ணே… என் காலம் இப்படியே கழிந்து முடிந்து விடுமா?? இந்த ஆதித்யாவை எப்பொழுது உணர்வாய் இனியாழ்!!! இருவருக்கு நடுவில் இருக்கும் இந்த மதில்சுவரை என்று தகர்ப்பாய்?? அவன் மனம் ஏங்கி தவித்தது.​

தவிக்க வைத்தவனும் அவனே இப்பொழுது தவிப்பவனும் அவனே.​

 

NNK-41

Moderator
என்ன நடந்து இருக்கும்... waiting for your next epi ❤️❤️❤️
அச்சச்சோ சொல்லிட்டா கதை முடிஞ்சிடும்... அடுத்த எபியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தெரிய வரும்.. நன்றி டியர்:love:
❤️💞
 
இவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா???... எப்படி???... அவளுக்கு நியாபகம் இல்லையா???... இந்த அக்காவும், அம்மாவும்🤦🏻‍♀️
 

NNK-41

Moderator
இவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா???... எப்படி???... அவளுக்கு நியாபகம் இல்லையா???... இந்த அக்காவும், அம்மாவும்🤦🏻‍♀️
ஆமாம் டியர்... அவன் வாழ்வில் தென்றலாய் வந்தவ... அவன் ஒரு லூசுபய.. விட்டுட்டு இப்போ புலம்புறான். அவ ரொம்ப பாவம் ங்க😔
😔
 

Advi

Well-known member
அந்த டீச்சர் ஓட சம்மந்த பட்டு இருப்பானா என்ன?????

நிலவன் & மஞ்சரி understanding சூப்பர் 🥰🥰🥰🥰🥰

சாவி & பூமி என்ன வில்லத்தனம்😬😬😬😬😏
 

NNK-41

Moderator
அந்த டீச்சர் ஓட சம்மந்த பட்டு இருப்பானா என்ன?????

நிலவன் & மஞ்சரி understanding சூப்பர் 🥰🥰🥰🥰🥰

சாவி & பூமி என்ன வில்லத்தனம்😬😬😬😬😏
இருக்கு ஆனா இல்ல டியர். எனக்கும் நிலவன் மஞ்சரி பிடிச்சிருக்கு. அதுங்க்க ரெண்டும் சுத்த வேஸ்ட் டியர்:love:
:love:
 

kalai karthi

Well-known member
மஞ்சரி செம . பூமியும் அம்மாவும் பிசாசு. ஆதி நல்ல வேண்டும் உனக்கு
 

NNK-41

Moderator
மஞ்சரி செம . பூமியும் அம்மாவும் பிசாசு. ஆதி நல்ல வேண்டும் உனக்கு
எனக்கும் மஞ்சரி ரொம்ப பிடிக்கும். இந்த பிசாசுங்களுக்கு நடுவுலதான் மலரோட வாழ்வு:(
 
Top