எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 3

S.Theeba

Moderator
தனது மகனை அறிமுகப்படுத்திய பின் சீராளன் தன்னுடன் வந்திருந்த புதியவனையும் அறிமுகப்படுத்தினார்.


யதுநந்தன்​"இவர் யதுநந்தன். உங்கள் புது எம்.டியின் உயிர் நண்பன். நந்தன் கொன்ரக்சன், நந்தன் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் நிறுவனங்களின் எம்.டி." என்று அறிமுகப்படுத்தினார்.அவன் பெயரையும் நிறுவனங்களின் பெயரையும் கேட்டதும் வர்ஷனாவின் மனம் துணுக்குற்றது. அவனைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறாள். கடந்த வருடம் தமிழ்நாட்டின் சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருதைப் பெற்றிருந்தான். இவனுக்கு பெண்கள் என்றாலே ஆகாதாம். இவனிடம் நட்புப் பாராட்டக் கூட பெண்கள் முன்வரமாட்டார்களாம். மீறிச் சென்றால் மூக்குடைபட்டுத் திரும்புவார்களாம். அந்த அளவுக்கு அவனுக்குப் பெண்கள் என்றாலே பிடிக்காதாம்... இவனா அவன்.... என்று மனதிற்குள் எண்ணிப் பார்த்தாள்."இன்று முதல் நம் நிறுவனத்தில் இவரும் பார்ட்னராக இணைந்து கொள்கிறார்." என்று கூறிவிட்டு, மேலும் சில நிறுவனம் சம்பந்தப்பட்ட விடயங்களையும் கூறிவிட்டு அமர்ந்தார் சீராளன். சிவானந்த்தும் எழுந்து சில நிமிடங்கள் பேசினான்.

அத்துடன் கூட்டத்தை முடித்துக் கொண்ட சீராளன், வர்ஷனாவை மட்டும் நிறுத்திவிட்டு மற்றவர்களை அனுப்பி வைத்தார். தன்மகனிடமும் யதுநந்தனிடமும் அவளை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சிவானந்தின் காரியதரிசியாக அவள் பணியாற்றுவாள் என்றும் தெரிவித்தார்.
வர்ஷனா சிவானந்திற்கு கைக்குலுக்கி வரவேற்பு தெரிவித்தாள். யதுநந்தனிற்கும் கைகொடுக்க அவன் புறம் திரும்பினாள். அவனோ தன் இரு கைகளையும் பான்ட் பாக்கெட்டில் விட்டபடி ஒரு விறைப்புடன் நின்றிருந்தான். 'சிடுமூஞ்சி, சிடுமூஞ்சி... கைக்குலுக்கினால் குறைந்து போயிடுவாரோ.....' என்று அவனுக்கு மனதிற்குள் அர்ச்சனை செய்தபடி கைகுவித்து "வெல்கம் சேர்..." என்று கூறினாள். அதற்கும் ஒரு தலையாட்டல் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.


'என்னோட பேசினா முத்து உதிர்ந்திடும் கவனம்....' என்று மனதிற்குள் பேசினாள்.


"ஓகே சிவா.., வா உன் காபினுக்குப் போவோம்" என்று அழைத்துச் சென்றார் சீராளன். அவனிடம் அலுவலகப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சந்தேகம் இருந்தால் தனக்குக் கோல் பண்ணுமாறும் கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். அவர்களுடன் சென்ற வர்ஷனா, அந்த அறையில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து தன் பணியை ஆரம்பித்தாள்.


"மச்சி.... உன்னை நம்பித்தான் நான் இந்த நிறுவனத்தை பொறுப்பெடுத்து இருக்கன். நீ பண்ணின ராச்சர் தாங்கமுடியாமல் தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கன். மச்சி, கொஞ்ச நாளைக்கு நீ என்கூடவே இருந்தா எனக்கு டானிக் குடிச்சமாதிரி இருக்கும்டா......" என்று புலம்பினான் சிவானந்த். அவனுடைய தோளில் ஆதரவாகத் தட்டிய யதுநந்தன் "டேய் மூடுறியா... ரொம்பத்தான் ஓவரா பண்ற... உனக்கு உதவியா இருக்கணும்னு தானே உங்க கொம்பனியில் பார்ட்னரா சேர்ந்துகிட்டன். அப்புறம் என்னால் எப்போதும் உன் கூட இருக்க முடியாது. நான் என் பிஸ்னஸையும் பார்க்கணும். அப்பப்போ வந்து பார்க்கிறன்." என்றான். "மச்சி......."என்று கூறியவாறு வந்து யதுநந்தனைக் கட்டிப் பிடித்தான். "என்னடா... திடீரென பாசம் பொங்குதோ...", "இல்லடா... நீ என் பெஸ்ரிடா..."


அங்கே ஒருத்தி இருப்பதையே மறந்து விட்டனர் இருவரும். அவர்கள் இருவரின் நட்பும் அந்தளவுக்கு உறுதியாகவும் ஆழமானதாகவும் இருந்தது. இருவரும் சிறுவயது முதல் ஒன்றாகவே படித்தவர்கள். மேற்படிப்புக்காக யதுநந்தன் லண்டன் சென்றபோது அவனது நிழலாகக் கூடவே சென்றான் சிவானந்த். இருவரும் அங்கே ஒரு சிறு ஃபிளாட் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து படித்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யதுநந்தனுக்கு ஒன்றென்றால் சிவானந்த்தால் தாங்கமுடியாது. அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டான். யதுநந்தனுக்கும் சிவானந்த் மீது அவ்வாறான ஒரு நட்பே.


"ஓகே மச்சி, பார்த்துக்கடா. . . எனக்கு சைட்டில் ஒரு வேலையிருக்கு. அப்படியே ஆபிஸ் போயிடுறன். நாளைக்கு வாறன். ஆல் த பெஸ்ட் மச்சி..... நான் கிளம்பறன். பை" என்று கூறிவிட்டு யதுநந்தன் கிளம்பினான்.அவன் ஒரு தடவையாவது தன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டானா என்று பேதையவள் தவமாய் தவமிருந்தாள். ம்ஹூம்... அவன் திரும்பினால்தானே. போகும் போது கூட ஒரு பார்வை பார்க்கவில்லை. சிடுமூஞ்சி, ஓரங்குட்டான்.... என்று தனக்குத் தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.நண்பனின் நட்பு எப்போதும் போல் மனதிற்குப் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்க அவன் சென்றதும் சிவானந்த் தன் அலுவலகப் பணியை ஆரம்பித்தான். அவளுக்கும் சில வேலைகளைப் பணித்ததும் தன் வேலையில் மூழ்கிப் போனாள் வர்ஷனா.
ந இருக்கும்டா......" என்று புலம்பினான் சிவானந்த். அவனுடைய தோளில் ஆதரவாகத் தட்டிய யதுநந்தன் "டேய் மூடுறியா... ரொம்பத்தான் ஓவரா பண்ற... உனக்கு உதவியா இருக்கணும்னு தானே உங்க கொம்பனியில் பார்ட்னரா சேர்ந்துகிட்டன். அப்புறம் என்னால் எப்போதும் உன் கூட இருக்க முடியாது. நான் என் பிஸ்னஸையும் பார்க்கணும். அப்பப்போ வந்து பார்க்கிறன்." என்றான். "மச்சி......."என்று கூறியவாறு வந்து யதுநந்தனைக் கட்டிப் பிடித்தான். "என்னடா... திடீரென பாசம் பொங்குதோ...", "இல்லடா... நீ என் பெஸ்ரிடா..."
அங்கே ஒருத்தி இருப்பதையே மறந்து விட்டனர் இருவரும். அவர்கள் இருவரின் நட்பும் அந்தளவுக்கு உறுதியாகவும் ஆழமானதாகவும் இருந்தது. இருவரும் சிறுவயது முதல் ஒன்றாகவே படித்தவர்கள். மேற்படிப்புக்காக யதுநந்தன் லண்டன் சென்றபோது அவனது நிழலாகக் கூடவே சென்றான் சிவானந்த். இருவரும் அங்கே ஒரு சிறு ஃபிளாட் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து படித்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யதுநந்தனுக்கு ஒன்றென்றால் சிவானந்த்தால் தாங்கமுடியாது. அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டான். யதுநந்தனுக்கும் சிவானந்த் மீது அவ்வாறான ஒரு நட்பே.
"ஓகே மச்சி, பார்த்துக்கடா. . . எனக்கு சைட்டில் ஒரு வேலையிருக்கு. அப்படியே ஆபிஸ் போயிடுறன். நாளைக்கு வாறன். ஆல் த பெஸ்ட் மச்சி..... நான் கிளம்பறன். பை" என்று கூறிவிட்டு யதுநந்தன் கிளம்பினான்.
அவன் ஒரு தடவையாவது தன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டானா என்று பேதையவள் தவமாய் தவமிருந்தாள். ம்ஹூம்... அவன் திரும்பினால்தானே. போகும் போது கூட ஒரு பார்வை பார்க்கவில்லை.
சிடுமூஞ்சி, ஓரங்குட்டான்.... என்று தனக்குத் தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

நண்பனின் நட்பு எப்போதும் போல் மனதிற்குப் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்க அவன் சென்றதும் சிவானந்த் தன் அலுவலகப் பணியை ஆரம்பித்தான். அவளுக்கும் சில வேலைகளைப் பணித்ததும் தன் வேலைகளில் மூழ்கிப் போனாள்.
 
Top