எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நறுமுகையின் நிலாகாலம் குறுநாவல் போட்டி முடிவுகள்! 2022

admin

Administrator
Staff member
நறுமுகையின் நிலாகாலம்! 2022
குறுநாவல் போட்டி முடிவுகள்.

அன்பு வாசகர்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் மூன்றே நாட்களில் சிறப்பான முறையில் அதிக வாக்குகளை அளித்த அத்தனை பேருக்கும் என் மனம் கனிந்த நன்றி..
வாசகர்களின் அபரிவிதமான பங்களிப்பு, மீம்ஸ், கருத்து, விமர்சனம் என வழங்கியமை போட்டியின் வெற்றியில் பங்கெடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆக படித்து, கருத்துக்கள் தெரிவித்து, நிறை குறைகளை கூறி ஊக்குவித்து எழுத உந்து சக்தியா இருந்தது நீங்க தான், பேரன்புகள்.
அடுத்து இந்த போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்களுக்கு என்னுடைய பேரன்புகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரோக்கியமான போட்டியாக இருந்தது. பொறாமை இல்லாமல் நட்புறவோடு இந்த பயணத்தை அழகாக கொண்டு செல்ல உதவியது அவர்கள் தான்.
முதல் முறை தளம் ஆரம்பித்து குறுநாவல் போட்டி நடத்தி இருக்கிறோம். ஏதாவது எங்கேயாவது தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.
எடுத்து சொல்லுங்கள் அடுத்த முறை திருத்திக் கொள்கிறோம்.
என்னால் முடிந்த அளவு நேர்மையாக, எல்லோருக்கு சமமாக போட்டியை கொண்டு சென்றதாக தான் நினைக்கிறேன். இவர்கள் தளத்தில் எழுதினால் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வார்கள் என்று, நம்பி வந்து கலந்து கொண்டு தங்கள் கடின உழைப்பையும் நேரத்தையும் செலவிடும் எழுத்தாளர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் தான் இந்த போட்டியைத் தொடங்கினேன். அதன்படி மனதறிந்து தவறுக்கு இடம் கொடுக்காமல் தான் நடந்து கொண்டிருக்கிறேன். நம்பி எழுத வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி.
இப்போது நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த போட்டி முடிவுகள் இதோ.
ஒவ்வொரு கதையும் அருமையா இருந்தது. இந்த போட்டியில் முடிவடைந்த கதைகள் அத்தனையும் வாசகர்களுக்கு பெரிய சவால் என்பதே உண்மை. வாசகர்கள் அதிகமாக தெரிவித்த கருத்து, எந்த கதையை தெரிவது எல்லாமே நல்லா இருக்கிறது என்பது தான். ஆனால் எல்லாருக்கும் பரிசு கொடுப்பது இயலாத காரியம். அதனால் வாசகர்கள் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்கள் இதோ. அதை தவிர மேலும் சிறப்பு பரிசுகள்..

இதுவரை வந்த மொத்த வாக்குகள் - 602

187 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றது..

ப்ரியா பாண்டீஸ் - NNK 44
நிசப்த காதல் - ₹5000

155 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது..

பா. ஷபானா - NNK 11
என் இருளின் நிலவானாள் - ₹3000

143 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றது..

சிராஜூனிநிஷா - NNK 01
என் மேல் விழுந்த மழை துளியே! - ₹2000

முதல் மூன்றில் இரண்டு இடத்தை நறுமுகை தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் பெற்றதன் பொருட்டு வாக்குகளின் அடிப்படையில் இன்னும் ஒரு மூன்றாம் இடம்..

103 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றது..

ஆண்டாள் வெங்கட்ராகவன்
NNK 34 மலரே மௌனமா - ₹2000

கீழ் வரும் கதைகள் சிறந்த பங்களிப்பாற்றிய கதை என்பதன் அடிப்படையில் வாக்குகளை கருத்தில் கொண்டு சிறப்பு பரிசு தலா ₹500 வழங்கப்படும்..

NNK13 பெண்மையின் பேராண்மை - பிரியா சக்தி
98 வாக்குகள்.

NNK15 இதயத்தில் உன் கா(த)ல் தடம் - புவனா மாதேஷ்

84 வாக்குகள்

NNK07 நிசிதரனின் துணைவி -

லட்சுமி பாலாஜி - 75 வாக்குகள்

இதர பிரிவிகள் இன்றி தேர்ந்த கதைகளில் அதிக வியூஸ் பெற்ற கதைகளுக்கான சிறப்பு பரிசாக தலா ₹500 வழங்கப்படும்..

NNK06 நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் (72K) அஞ்யுகா ஸ்ரீ


NNK47 உனக்கென மட்டும் வாழும் இதயம(டா)டி (30k) பி.பானு

NNK71 வஞ்சம் தீர்த்தாயோ காதலே (15K) ஹபி


அறிமுக எழுத்தாளர் விருது

நறுமுகையின் நிலாகாலம் குறுநாவல் போட்டியில் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் கீழ்க்கண்டவர்களுக்கு சிறப்பு பரிசு தலா ₹500

காதல் சோதனை NNK27 கவிதாஞ்சலி


நிலவை களவாடும் முகிலேனே!!
NNK43 சுஜி அன்பு

விழிகளின் வழி(லி)யே! NNK35 LUFA

உயிரே உயிர்த்தேன் உன்னாலே

NNK66 பா. நிரஞ்சனா தேவி

முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கு மட்டுமின்றி சிறப்பு பரிசு, அறிமுக எழுத்தாளர் மற்றும் வியூ அடிப்படையில் பரிசும் பெற்றவர்களுக்கு "ப்ரஷா பதிப்பகம்" சார்பாக போட்டியில் கலந்து கொண்ட கதை புத்தகமாக போட்டுக் கொடுக்கப்படும். அது அவர்களின் விரும்பும் பொருட்டு. அதே நேரம் எந்த தவணையில் போடுவது என்பதை பின்னர் எழுத்தாளர்களிடம் அறிவிப்போம்.

போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் வெற்றியாளர்கள் தான், அதன் அடிப்படையில் பங்கு பற்றி அனைவருக்கும் E-சான்றிதழ் வழங்கப்படும் அது மட்டும் இன்றி வெற்றி பெற்றவர்களுக்கான சீல்ட் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.. (Shield - முதல் மூன்று இடம், அறிமுக எழுத்தாளர்கள், வாசகர்கள் சார்பாக வெற்றி பெற்றவர்கள்)

சிறப்பு பரிசில்கள்

சிறந்த விமர்சகர்

ரஷாழினி

ஜீனத் சபீஹா
S. அமிர்தா சேஷாத்ரி
சுதா பிரியா
சாஹித்யா வருண்
கௌரி. சீ
சித்ரா கணேசன்
Chithrasarasvathi

அப்சரஸ் பீனா லோகநாதன்

சிறந்த மீம்ஸ் கிரேட்டர்

மு.சிவஸ்ரீ

கி.சித்ரா கிருஷ்ணா
ஜன்னத் ஃபிர்தௌஸ்
சரண்யா சத்யநாராயணன்


சிறந்த ஊக்குவிப்பாளர்
விதமாக நறுமுக தளத்தினுள் தங்கள் பங்களிப்பை ஆற்றியவர்கள்.


சிவஞானலட்சுமி
ஷண்முகஸ்ரீ சுதாகரன்
இந்திரா காந்தி
மதுஷிகா

பெருவாரியான கதைகளை படித்து விமர்சனம் கருத்து மீம்ஸ் என தங்கள் அபரிவிதமான ஒத்துழைப்பை வழங்கி ஊக்குவித்த அனைவருக்கும் ப்ரஷா பதிப்பகத்தின் சார்பாக எம் பதிப்பக வெளியீடுகளும், E-சான்றிதழ், சீலட் என்பன அனுப்பி வைக்கப்படும்.

மேலும் தங்கள் ஒத்துழைப்பு, பங்கு பெற்றிட ஊக்குவிப்பு, மற்றுமன்றி மேலான ஆசியும் வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மீண்டும் ஒரு போட்டியில் இதைவிட அதிகமான சிறப்பு பரிசுகளோடு சந்திக்கிறேன்.

அன்புடன்
ப்ரஷா.
Screenshot_20221031-235842_Samsung Internet.jpg
 
Last edited by a moderator:

zeenath

Active member
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. சிறந்த விமர்சிகராக என்னை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி 🥰❤️💞
 
வெற்றி பெற்றவர்களுக்கும்,கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 💐💐💐

Thank you admin for mentioning my name😍😍
 

Priyakutty

Active member
போட்டியில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ப்பா... 🥰🥰💞🤝
 

Vidhushini_

Member
கலந்து கொண்டவர்கள் & வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் 👏👏👏
 

S. Sivagnanalakshmi

Well-known member
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ப்ரஷா dear க்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 💐💐💐💐
 
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எனக்கும் கிடைத்த சிறந்த விமர்சன பரிசுக்கு நன்றிகள் 💐💐💐💐💐
சூப்பர்.......
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தோழி 🤩🤩💐💐💕💕👏👏👏👍👍👍👍👍.....
 

Mathushi

Active member
Congratulations to all the nila writer winners 💐❤️
Sirantha ukkuvipalar aga eanaium select panathu ku thanks pirasha ka💐😍
 
Top