எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக - அத்தியாயம் 10

NNK-64

Moderator

அத்தியாயம் 10​


வீட்டிற்குள் நுழையும் போதே, “ஏய் நில்லு”என்று அதட்டினார் முருகேசன்.​

எழிலழகியோ அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்து அப்படியே நின்றாள். வேலையை விட்டு வெளியேறியது இவருக்கு தெரிந்து இருக்குமோ? என்று தயக்கத்துடன் தலை குனிந்து நின்றாள்.​

“இப்போது யாருடைய காரில் வந்து இறங்கினாய்? யார் அவன்?” என்றார் அவள் தலை முடியை கொத்தாக பிடித்து​

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், “சொல்லுடி யார் அவன்? அன்னிக்கும் இதே கார்ல தான் உன்னை ஒருவன் கொண்டு வந்து விட்டுட்டு போனான், அவன் தானே இப்போது வந்ததும்?” என்று கேட்டார் பல்லை கடித்து கொண்டு.​

அவள் ஆமாம் என்பது போல தலையை குனிந்துக் கொள்ள, “ஆத்தாள மாதிரி ஊர்சுத்திட்டு இருக்கியா? நான் கல்யாணம் செய்துக்கோனு சொன்னால் வேணாம்னு வீராப்பா சொல்லிட்டு இப்போ ஆம்பளைங்க கூட சுத்தறியா?​

எத்தனை நாளா நடக்குது இது? அவன் கூட ஊர் சுத்திட்டு இருந்தால் எவன் உன்னைய வேலையில் வச்சிருப்பான்?” என்று அவர் இஷ்டத்திற்கு வார்த்தைகளை விட எழிலழகி மெல்ல வாய் திறந்தாள்.​

“அப்பா” என்று சொல்லும் போது அவள் வாயில் மேல் தன் முஷ்டியால் குத்தினார் “அப்பான்னு சொல்லாதே சனியனே, இன்னிக்கு வரைக்கும் நீ எனக்கு பொறந்தவ தானானு எனக்கு தெரியல” என்றார்​

மனம் உடைந்து சுக்குநூறாக வெடித்தது போல் இருந்தது. தாயின் மேல் சந்தேகப்பட்டு துன்புறுத்தியது வரை அவளுக்கு தெரிந்தது தான், ஆனால் தன் பிறப்பின் மேலேயே இப்படி ஒரு வன்மம் வைத்திருப்பார் என்று கனவிலும் அவள் நினைத்திருக்க வில்லை. சித்தியின் முன்பு கூனி குறுகி போனாள், தந்தை என்றவனை நினைத்து வெறுத்து போனாள் எழிலழகி.​

“நிர்மலா மேடம் எனக்கு ஃபோன் செய்து எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. ஒரே அறையில் நீயும் அவனும் கட்டிப்பிடிச்சிட்டு இருந்ததை பார்த்து விட்டு உன்னை வேலையிலிருந்து துரத்தி விட்டாங்களாமே. அப்பவும் வெட்கமே இல்லாமல் சொகுசா அவன் கூட சிரிச்சிட்டே காரில் வந்து இறங்கி வந்திருக்க என்றால் உனக்கு என்னவொரு நெஞ்சழுத்தம் இருக்கணும்?” என்று கர்ஜித்தார்.​

“ஐயோ என்னங்க கன்றாவி இதெல்லாம், நீங்கள் இவளை சந்தேகப்பட்டு பேசும் போது எல்லாம் அப்படி எல்லாம் இருக்காதுனு நினைச்சேனே! இவள் இப்படி பட்ட பொண்ணா? வீட்டோட மூத்த பெண் இப்படி இருந்தால், என் பெண்ணை யார் கட்டுவா?” என்று ஒப்பாரி வைத்தாள் யமுனா.​

“எத்தனை நாளாடி நடக்குது இது?” என்று எழிலை பார்த்து கேட்டாள் யமுனா.​

“சித்தி” என்று அவள் வாய் திறந்து எதையோ சொல்ல வர, “அவளை ஏன் கேட்குற, என்னை கேளு சொல்றேன்” என்று இடை புகுந்தார் முருகேசன்.​

“நாலு மாசம் முன்னாடி என் நண்பன் செல்வத்துக்கு இவளை கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செஞ்சப்ப வீட்டை விட்டு ஓடி போனாளே, அன்றைக்கு அவன் தான் இவளை அர்த்தராத்திரியில் விட்டுட்டு போனான்” என்றார்.​

“அடிப்பாவி, ஏன்யா என்கிட்ட முன்னாடியே சொல்லல? அவனை சும்மாவா விட்ட?” என்றாள் யமுனா​

“நான் என்னத்த கண்டேன், விருப்பம் இல்லாத கல்யாணம், போலீஸ் கேஸ் னு சொல்லி என்னை ஏமாற்றிட்டான், இவ அவன் கூடவே விரும்பி தான் போயிருக்கானு இப்போ இல்ல தெரியுது!” என்றார் முருகேசன்​

“விரும்பி ஓடி வந்தவளை ஏன் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனான், அதுவும் அர்த்தராத்திரியில்?” என்றாள் யமுனா கேள்வியாக.​

“அட இவ யாருடி கூறு கெட்டவ, கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருந்திருந்தால் அவன் ஏன் திரும்ப விடப் போறான். அன்னைக்கே வேலையை முடிச்சிருப்பான், அப்பப்ப இவளை பார்த்திட்டு போறான்” என்று ஒரு தகப்பன் சொல்லக் கூடாத வார்த்தைகளை எல்லாம் முருகேசன் சொல்லிக் கொண்டே போக எழிலழகி இதை எல்லாம் காதில் கேட்க முடியாமல் தன் இரு கைகளாலும் காதை பொத்திக் கொண்டாள்​

“அப்போ புள்ளை உண்டாயிருக்குமோ” என்று யமுனா மேவாயில் கை வைத்தபடி கேட்டாள்.​

“என்ன கர்மமோ, நாளைக்கே ஒரு டாக்டரிடம் காண்பித்து விடணும், அப்படி எதாச்சும் இருந்தால் காதும் காதும் வைத்த மாதிரி கலைச்சி விட்டுட்டு செல்வம் தலையில் கட்டிட வேண்டியது தான்” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டே போக, கதறி அழுதபடி தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.​

“எவ்வளவு தருவாராம் உங்கள் நண்பர்? அதை வச்சு சந்திரிகா கல்யாணத்தை முடிச்சுடணும், சொல்லிட்டேன் “ என்றாள் யமுனா​

‘சே என்ன மாதிரியான ஜந்துக்கள் இவர்கள், என்ன நடந்தது என்று என்னிடம் விசாரித்து தெரிந்து கொள்ளாமல் என்னை பேசவும் விடாமல், இவர்களே பேசி ஒரு முடிவுக்கு வந்தால் எப்படி?​

இப்படி கேள்வியும் பதிலும் அவர்களே பேசி பேசி தான், இன்று என் பக்க நியாயத்தை சொல்லக் கூட தெரியாமல் விழிக்கின்றேன், இவ்வளவு இழிவாக பேசியபின்பு எப்படி இவர்கள் முகத்தில் முழிப்பது’ என்று தனக்குள் எண்ணி அழுது கரைந்தாள்.​

என்னால் நிரஞ்சனுக்கும் அவப்பெயர் வரக்கூடாது, இப்போதே உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன? என்று அவள் நினைத்த நொடி அவளின் அலைபேசி அலறியது.​

இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசனையுடன் அதை எடுத்து பார்த்தாள். அதில் அவளின் ஆபத்பாந்தவன் நிரஞ்சன்!​

காதலை இருவரும் ஒருவாறு வெளிப்படுத்திக் கொண்டதால் நிரஞ்சன் சந்தோஷமாக இருந்தான். படுத்தால் தூக்கம் வராமல் அவளை பற்றிய நினைவுகள் அவனை அலைக்கழித்தது.​

படுக்கையில் புரண்டவன், அவளுக்கும் இதே மாதிரி தூக்கம் வராமல் இருக்குமோ என்று தோன்ற, காதலனாய் அவளின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது.​

எனவே அவளுக்கு அழைத்து காதல் இணைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தான்.​

“ஹலாே, நிரு…” என்றாள் கமறலான குரலில்​

“ஏய் அழகி, என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு? என்னாச்சுடா?” என்றான் பதட்டமாக​

“நிரு, இந்த வீட்டில் இனி ஒரு போதும் இருக்கமாட்டேன், நாளைக்கே என்னை கூட்டிட்டு போய் திருமணம் செய்துக்கறீங்களா? இல்லைனா நான் இப்பவே வெளியே வரட்டுமா?​

நீங்க என்னை ஏத்துப்பீங்களா? இப்படி பட்ட குடும்பத்து பெண்ணா என்று என்னை ஒதுக்கிடுவீங்களா?” என்று அவள் நிறுத்தாமல் மனதில் தோன்றியதை எல்லாம் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.​

ஏதோ வீட்டில் பிரச்சனை என்று புரிந்தது, “அழகி, ரிலாக்ஸ்டா, முதல்ல தண்ணி குடிச்சிட்டு வா, நான் லைனில் காத்திருக்கேன், அதன் பிறகு என்ன நடந்தது என்று பொறுமையாக சொல்லு” என்றான்​

அவளும் அவன் சொல்வதை கேட்கும் கிளிபிள்ளையாக நீரை அருந்திவிட்டு வந்து அலைப்பேசியை எடுத்தாள், “இப்ப சொல்லு என்ன ஆச்சு” என்றான் நிரஞ்சன்.​

அழுதுக் கொண்டே அவள் தந்தை முருகேசன் சொன்னதை திக்கி திணறி சொல்லி முடித்தாள்.​

பெற்ற மகளை இப்படியெல்லாம் ஒரு தகப்பன் பேசுவானா? மனைவி மேல் இருந்த வன்மத்தை அவரின் மகளிடம் காண்பிக்கிறார் போலும், இவரால் தான் அழகியின் தாய் இறந்திருக்ககூடும் என்று சரியாக கணித்தான் நிரஞ்சன்.​

“அழகி, நீ அழாமல் நிம்மதியாக தூங்கு. காலையில் குளித்து நல்ல புடைவை கட்டி தயாராக இரு, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் நிரஞ்சன்.​

என்ன செய்ய போகிறான் என்று தெரியாது ஆனால் அவளை கட்டாயம் கைவிடமாட்டான் என்று நம்பிக்கை தோன்றியதால் பெருமூச்சு எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.​

“சரி நான் அழைப்பை துண்டிக்கிறேன், குட் நைட்” என்று சொன்னான்.​

அவளும் அலைபேசியை அணைத்துவிட்டு தூங்கினாள். மறுநாள் காலையில் அவள் எழுந்த போதே வெளியே சத்தம் கேட்டது, நிரஞ்சன் வந்து விட்டானா என்று பார்த்தாள்.​

வந்தது செல்வமும் அவன் சொந்தங்களும். முருகேசன் இரவே செல்வத்திடம் பேசி காலையில் வீட்டிலேயே திருமணம் என்று சொல்லி விட்டிருந்தார்.​

காலம் கடத்தினால் எழில் மறுபடியும் எங்காவது ஓடிச் சென்றுவிட்டால் என்ன செய்வது? அவளுடன் காரில் வந்தவனை பார்த்தால் வலிமையானவன் போல் இருக்கிறது. அவனிடம் எல்லாம் சண்டையிட்டு கொண்டிருக்க முடியாது என பலமாக யோசித்து இரவோடு இரவாக அனைத்து ஏற்பாட்டையும் செய்திருந்தார்​

யமுனா எழிலழகியின் அறைக்குள் வந்தாள், “என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கே, மாப்பிள்ளை தயாராகி காத்திருக்கார். சீக்கிரம் இந்த புடவையை கட்டிட்டு மணமேடைக்கு வா. நம்ம வீட்டிலேயே உனக்கு திருமணம்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.​

அதிர்ந்து போனாள் எழிலழகி, நிரஞ்சனுக்கு அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. அவனும் தயாராகத்தானே இருக்க சொன்னான் என்று எண்ணியபடி குளித்து தயாரானாள்.​

தொடர்ந்து நிரஞ்சனுக்கு அழைத்து சோர்ந்து போனாள், வெளி வாசலையே நொடிக்கொருமுறை பார்த்து பார்த்து கலங்கினாள்.​

உள்ளே வந்த யமுனாவும் சந்திரிகாவும் அவளை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றனர். அங்கே ஐயர் மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்க, செல்வம் மணமேடையில் அமர்ந்திருந்தான். கலக்கத்துடன் வெளி வாசலை பார்த்தாள். நிரஞ்சன் வந்திருக்கவில்லை.​

யமுனா அவளின் தோளில் அழுத்தம் கொடுத்து மணமேடையில் அமர வைத்தாள், செல்வம் அவளைப் பார்த்து ஹிஹி என்று பல்லைக் காட்டினான்.​

ஐயர் தாலியை எடுத்து செல்வத்திடம் கொடுக்க, அவன் அதை கையில் வாங்குவதற்குள் யாரோ அதை அவனிடமிருந்து பிடுங்கியிருந்தனர், யாரென்று அவள் நிமிர்ந்து பார்ப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் கழுத்தில் தாலி ஏறி இருந்தது.​

ஐயோ! யார் கட்டியது என்று பதறி போய் பக்கவாட்டாக பார்த்தாள், அங்கே அவளருகில் நிரஞ்சன் அமர்ந்திருந்தான்.​

நிரஞ்சன் எதிர்பார்க்காத நேரத்தில் செல்வத்தை இழுத்து பக்கவாட்டாக தள்ளியிருப்பான் போலும். அவன் திருப்பி போட்ட தவளை போல அதிர்ச்சியுடன் விழுந்து கிடந்தான்.​

என்ன நடக்கிறது என்று அங்கிருந்தவர்கள் கிரகிப்பதற்குள் அனைத்தும் நடந்தேறிவிட்டிருந்தது. ஏனெனில் அங்கே புதிதாக யாரும் உள்ளே வரவில்லை. ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தவர்களை தவிர யாரையும் உள்ளே விடக்கூடாது என்று முருகேசன் சொல்லியிருந்தார்.​

செல்வத்தின் குடும்பம் தட்டு வரிசையுடன் உள்ளே நுழையும்போதே நிரஞ்சன் சூழ்நிலையை புரிந்துக் கொண்டான். கூட்டத்தோடு கூட்டமாக நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.​

அதனால் தான் எழிலழகியின் அழைப்பை அவனால் ஏற்க முடியவில்லை. சரியாக தாலிக் கட்டும் நேரம் அட்சதை போடுவது போல முன்னால் வந்து அனைத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடித்திருந்தான்.​

எழிலழகிக்கு அப்போது தான் உயிர் வந்தது போல பெருமூச்சு விட்டாள். அவளை பார்த்து முறைத்தான் நிரஞ்சன். “நான் வரலைனால் அந்த செல்வத்தை கல்யாணம் பண்ணியிருப்ப அப்படித்தானே” என்றான் கோபமாக​

அவள் பதில் சொல்வதற்குள் அங்கே அனைவரும் ஆளாளுக்கு கத்த தொடங்கியிருந்தனர்.​

“என்ன தைரியம் இருந்தால் எங்க வீட்டு திருமணத்தை நிறுத்திட்டு, என் பெண்ணை கல்யாணம் பண்ணியிருப்ப?”என்று கத்தினார் முருகேசன்.​

“இங்கேயே எல்லாவற்றையும் பேச நான் தயார், ஆனால் என் மனைவியின் கவுரவமும் இதில் அடங்கி இருப்பதால் தனியாக பேச நினைக்கிறேன்.​

பெரிய மனிதர்கள் சில பேர் ஒரு அறைக்குள் என்னை அழைத்து பேசினால் பதில் தர தயாராய் இருக்கேன்” என்றான் நிரஞ்சன் நெஞ்சை நிமிர்த்தி.​

“கழுத்தில் தாலி கட்டியாச்சு, என்ன பண்ண முடியும், அந்த தம்பி என்னதான் சொல்றாருனு பார்ப்போம், வாங்கப்பா” என்றார் ஒரு பெரியவர்.​

அதைக் கேட்டதும் இனி எழிலழகி தனக்கு இல்லை என்று புரிந்துவிட செல்வம், முருகேசனை முறைத்து விட்டு, “என்னை இரண்டு முறை கூப்பிட்டு வச்சு அவமானப் படுத்தியிருக்க முருகேசா, உன்னை சும்மாவே விடமாட்டேன்” என்று கறுவி விட்டு வெளியேறினான்.​

பெரியவர்கள் சில பேர் அங்கிருந்த அறைக்குள் நுழைந்ததும் நிரஞ்சனும் அவர்கள் பின்னால் சென்றான். முருகேசனும் வேண்டா வெறுப்பாக உள்ளே சென்றார்.​

அழகியை பார்த்தது முதல் நேற்று நடந்தது வரை சொல்லி முடித்தான் நிரஞ்சன். தாமோதரனுக்கு அலைப்பேசியில் அழைத்து முந்தைய நாள் நடந்த பிரச்சனையை பற்றி பேச்சு கொடுத்து, அவர் பேசும் போது அலைபேசியின் ஸ்பீக்கரை இயக்கினான்.​

“சாரி நிரஞ்சன், என் மனைவியோட சந்தேகப்புத்தியால் உங்களுக்கும் எழிலுக்கும் பிரச்சனை, அவளோட சார்பாக உங்க இரண்டு பேர் கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். எழில் ரொம்ப நல்ல பொண்ணு, நான் மன்னிப்பு கேட்டதாக சொல்லுப்பா” என்று போனை வைத்தார்.​

இந்த முருகேசனுக்கு தன் மனைவி சித்ரா மேல் ஆரம்பத்திலிருந்து சந்தேகம் இருந்திருக்கு, அவர் மேல் உள்ள கோபத்தை குழந்தையிலிருந்தே எழிலழகி மேல் காட்டி வந்திருக்கார். வயதான ஒருத்தரை பணத்திற்காக விலை பேசிய ஒருவனிடம் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்றி இருக்கிறேன்.​

இப்போ சொல்லுங்க, நான் செய்தது தவறா?” என்றான் அழுத்தமான குரலில்.​

அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிய அங்கே சற்று நேரம் மெளனம் நிலவியது.​

“அதுக்காக நான் இத்தனை நாளாக வளர்த்து படிக்க வைத்த என் பெண்ணை இவன் என் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துப்பானா? வயது இருக்கும் வரை சம்பாதித்து அவளை படிக்க வைத்தேன், என் குடும்பமே இப்போ எழிலின் சம்பாத்தியத்தை நம்பி தான் இருக்கு.​

ஒரு வேலையிலும் உருப்படியாக இல்லாமல் சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தால் நானும் என்னதான் செய்யட்டும்?” என்று எகிறினார் முருகேசன்.​

“என்ன பேசற முருகேசா, பெண்ணை படிக்கவைக்கிறது உன்னோட கடமை, அதுக்காக திருமணம் செய்துக்காமல் உனக்கே உழைச்சு போட சொல்றீயா, நீயும் ஆளு நல்லா தானே இருக்க? போய் எதாவது வாட்ச்மேன் வேலைக்கு போக வேண்டியது தானே, அதுவும் அந்த பெண்ணை தான் உனக்கு பொறந்தவளாக நீ நினைக்கவே இல்லையே, அவள் ஏன் உனக்கு சம்பாரிச்சு தரணும்?” என்றார் ஒரு பெரியவர்.​

பதில் பேச முடியாமல் திணறினார் முருகேசன்.​

“என்ன இருந்தாலும் என் மனைவியை அவர் படிக்க வைத்திருக்கிறார், அதனால் அவர் பெண் சந்திரகா மற்றும் மகன் சுரேஷ் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். மற்ற செலவுகளை அவரும் அவர் மனைவியும் பார்த்துக் கொள்ளட்டும்” என்று முடித்தான்​

“படிச்ச தம்பி, அதான் எல்லாம் கரெக்டா பேசுது, சரிப்பா நீ உன் பெண்டாட்டியை அழைச்சிட்டு போ” என்றார் அந்த பெரியவர்.​

“என்னை மீறி அவள் போயிடுவாளா?” என்று கர்ஜித்த முருகேசன் எழிலழகியிடம் வந்தார்.​

“இத்தனை நாளாக உன்னை பெத்து வளர்த்த இந்த அப்பாவிற்கு மதிப்பு கொடுத்து நீ இங்கேயே இருந்தால் தான், உன்னை எனக்கு பிறந்த பெண்ணாக நான் ஏற்றுக் கொள்வேன்” என்றார்​

சற்று நேரம் அங்கே மெளனம், நிரஞ்சன் எழிலழகியை அழுத்தமாக பார்த்திருந்தான். இப்போதாவது தைரியமாக பேசுவாளா?​

(தொடரும்)​

 

Attachments

  • NNK-64.jpg
    NNK-64.jpg
    198 KB · Views: 0
இப்பையாவது வாயை திறந்து பேசனும்!!!... அவன் வரலைன்னா என்ன செஞ்சிருப்பா!!... அவன் சரியாதான் கேக்குறான்!!... என்ன தான் பன்றான்னு பார்க்கலாம்!!!..
 

NNK-64

Moderator
இப்பையாவது வாயை திறந்து பேசனும்!!!... அவன் வரலைன்னா என்ன செஞ்சிருப்பா!!... அவன் சரியாதான் கேக்குறான்!!... என்ன தான் பன்றான்னு பார்க்கலாம்!!!..
yes you are correct sis, thank you 🥰
 

santhinagaraj

Active member
இந்த எழில் ஏன் இவ்வளவு அமைதியா இருக்கா அந்த முருகேசன் அவ்வளவு பேசும்போது ஒரு வார்த்தை எதிர்த்து பேசி இருக்கலாம்ல.

நிரஞ்சன் சரியான நேரத்துக்கு வரலைன்னா எழில் அந்த செல்வத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பாளா? அவன் கேக்குறதுக்கு சரிதானே.

கல்யாணம் ஆகி நிரஞ்சன் மனைவியா ஆன பிறகும் இப்பவும் அமைதியாக இருந்தால் எப்படி
 

NNK-64

Moderator
இந்த எழில் ஏன் இவ்வளவு அமைதியா இருக்கா அந்த முருகேசன் அவ்வளவு பேசும்போது ஒரு வார்த்தை எதிர்த்து பேசி இருக்கலாம்ல.

நிரஞ்சன் சரியான நேரத்துக்கு வரலைன்னா எழில் அந்த செல்வத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பாளா? அவன் கேக்குறதுக்கு சரிதானே.

கல்யாணம் ஆகி நிரஞ்சன் மனைவியா ஆன பிறகும் இப்பவும் அமைதியாக இருந்தால் எப்படி
Pesuva sis, 💕🙏🏻
 

Mathykarthy

Well-known member
முருகேசன் 🤬🤬🤬🤬🤬 இவரெல்லாம் ஒரு அப்பாவா.... எவ்ளோ கேவலமா நடந்துக்கிறாரு.... 😈😈😈😈😈😈😈

நிரஞ்சன் சரியான நேரத்துல வந்ததால அவனோட அழகியை காப்பாத்தி கல்யாணமும் முடிஞ்சுடுச்சு...😊😊😊🤗🤗🤗🤗

நிரஞ்சன் பக்கத்துல இருந்தாலே தைரியம் வந்துடும் இப்போ கல்யாணம் வேற ஆயிடுச்சு... அழகி அப்பாவுக்கு பதில் குடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு....🤩🙃
 

Advi

Well-known member
தயவு செய்து பேசு மா இப்பவாது ....

இப்ப அவன் கூட போனா, உன் அம்மா பேரு கேட்டு போகும்னு யோசிக்காதே ......

இப்ப மட்டும் என்ன உன் அம்மாவை நல்லாவா பேசரர் உன் அப்பா.....

நீ இனியாவது நல்லா வாழு, அதை தந்த நிருவை ஏமாத்திராதா.....
 

NNK-64

Moderator
முருகேசன் 🤬🤬🤬🤬🤬 இவரெல்லாம் ஒரு அப்பாவா.... எவ்ளோ கேவலமா நடந்துக்கிறாரு.... 😈😈😈😈😈😈😈

நிரஞ்சன் சரியான நேரத்துல வந்ததால அவனோட அழகியை காப்பாத்தி கல்யாணமும் முடிஞ்சுடுச்சு...😊😊😊🤗🤗🤗🤗

நிரஞ்சன் பக்கத்துல இருந்தாலே தைரியம் வந்துடும் இப்போ கல்யாணம் வேற ஆயிடுச்சு... அழகி அப்பாவுக்கு பதில் குடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு....🤩🙃
கரெக்ட் சிஸ், நன்றி 💞💕
 

NNK-64

Moderator
தயவு செய்து பேசு மா இப்பவாது ....

இப்ப அவன் கூட போனா, உன் அம்மா பேரு கேட்டு போகும்னு யோசிக்காதே ......

இப்ப மட்டும் என்ன உன் அம்மாவை நல்லாவா பேசரர் உன் அப்பா.....

நீ இனியாவது நல்லா வாழு, அதை தந்த நிருவை ஏமாத்திரா

தயவு செய்து பேசு மா இப்பவாது ....

இப்ப அவன் கூட போனா, உன் அம்மா பேரு கேட்டு போகும்னு யோசிக்காதே ......

இப்ப மட்டும் என்ன உன் அம்மாவை நல்லாவா பேசரர் உன் அப்பா.....

நீ இனியாவது நல்லா வாழு, அதை தந்த நிருவை ஏமாத்திராதா.....
Thank you 💕🙏🏻
 
Top