எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 8

NNK046

Moderator

அத்தியாயம் -8​

வேதா கிஷோர் மற்றும் ராமசந்திரன் கடை வீதிக்கு சென்று பேன்சி ட்ரெஸ் காம்பெட்டீஷனிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு இது போல் தலைவர்கள் வேடம் போடுவதற்கு அதற்கு ஏற்றார் போல் துணிகளை வாடகைக்கு விடும் கடையில் இருந்தனர் மூவரும்.​

" இது என்ன கா? ஊர்ல இல்லாத சட்டம் எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க. ரொம்ப அநியாயம் கா இதுலாம். உங்க கிட்ட வாங்குன துணி தான்..! அது புடிக்கல வேற மாத்தி தாங்கனு சொன்னா மறுபடியும் முழு காசு கேக்கறீங்க..!? இதுலாம் ரொம்ப ரொம்ப ஓவர்.ஒழுங்கா பாத்து சொல்லுங்க, அப்றம் மறுபடியும் இங்க வரவே மாட்டோம் "​

" என்னம்மா நீங்க, வாடகை பேசி துணி எடுத்துட்டு போனீங்க இப்போ வேணானு வந்து கொடுக்கறீங்க அதுக்கு நா பொறுப்பு இல்லயே..! மறுபடியும் வேற துணி கேக்கறீங்க அப்போ அதுக்கு நீங்க காசு கொடுத்து தானே ஆகனும். துணி கொடுக்கும் போதே சொல்லிட்டு தான் கொடுத்தோம் ரிட்டர்ன் தந்தா காச திருப்பி தர மாட்டோம்னு."​

" நாங்க தான் வாங்கி அடுத்த நாளே கொடுத்துட்டோமே இத எல்லாம் கணக்குல எடுத்தா எப்படி கா? "​

" ஒரு நாளோ ஒரு வாரமோ அது எல்லாம் எனக்கு தெரியாதும்மா, துணி கொடுக்கும் போதே எல்லாமே சொல்லிட்டேன். இப்போ வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காதீங்க அவளோ தான் சொல்லுவேன் "​

அவரின் பேச்சில் உள்ள காட்டத்தை உணர்ந்தவள் தன்மையாக பேச ஆரம்பித்தாள்,​

" அதுலா புரியுது கா. ஆனா பாருங்க கடைசி நேரத்துல்ல மாத்த வேண்டியதா போயிருச்சு. இப்போ நீங்க துணி தரலைனா என் தம்பினால அந்த காம்பெட்டீஷன்ல கலந்துக்க முடியாது அப்றம் அவன் சோகமாகிருவான். அவன் சோகமா இருக்கறத பாத்து அவங்க அம்மாவும் சோகமாகிருவாங்க அதுனால சமைக்காம படுத்துப்பாங்க அப்றம் என் சித்தப்பூ தானே பசில வாடனும்..!? இப்படி இத்தனை பேர சோகமாகி காய விட்டு வாட விட்டா, அந்த பாவம் எல்லாம் யார புடிக்கும்? உங்க கடைய தானே புடிக்கும்..! அப்றம் உங்களுக்கு சேல்ஸ் கொறஞ்சு கடை நஷ்டத்துல்ல போய் கடைசில இழுத்து மூடுற நிலமை வந்துருச்சினு வெச்சிக்கோங்க அப்றம்..."​

" ஏம்மா.. ஏம்மா..! கொஞ்சம் நிறுத்தும்மா விட்டா நீயே மண்ணள்ளி போட்டு சாபம் கொடுத்துருவ போல? ஏதோ இப்போ தான் கடவுள் புண்ணியத்துல்ல கடை நல்லா போகுது அது பொறுக்கலையா..!? அய்யயயோ.. என்னா பேச்சு பேசுற நீ..? இப்போ என்ன இந்த துணி வேணும் அதானே இந்தா எடுத்துட்டு மொத கிளம்புங்க " என துணியை நீட்ட, அதை ஆர்வமாக பெற்று கொண்ட வேதா,​

" எனக்கு முன்னாடியே தெரியும் கா.. நீங்க ரொம்ப நல்லவங்க கண்டிப்பா எங்க நெலமைய புரிஞ்சி துணி கொடுப்பீங்கனு. வேணா பாருங்க பட்டி தொட்டி எல்லாம் உங்க கடை பேமஸ் ஆகி ஓஹோனு வர போறீங்க இந்த வேதா வாக்கு நிச்சயம் பழிக்கும் " என அவருக்கு புகளாரம் சூட்ட, அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவர்,​

" நீ பொழச்சுக்குவம்மா " என்றார் சின்ன சிரிப்போடு.​

மற்ற சாமான்களையும் வாங்கி கொண்டு வர அப்படியே ஹோட்டலில் இரவு உணவை முடித்து கொண்டனர் மூவரும். கிஷோருக்கு தூக்கத்தில் கண்கள் சொருகியது.​

" சித்தப்பூ குட்டி தூங்கி வழியறான். நீங்க அவன வீட்டுக்கு கூட்டிட்டு போங்க எனக்கு இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கனும், வாங்கிட்டு நா பஸ் புடிச்சி வந்தறேன்"​

" வேற என்னம்மா வாங்கனும். சொல்லு நாம வாங்கிட்டு ஒட்டுக்காவே கிளம்பிறலாம் "​

" அட சித்தப்பூ சொன்னா கேளு..! நா தான் வரேன்னு சொல்லறேன்ல நீ கெளம்பு நா ஒன்னும் சின்ன பாப்பா இல்ல எல்லா வழியும் எனக்கு தெரியும். ஒரு சின்ன வேலை தான் முடிச்சிட்டு வந்துறேன். " என்றவள் முதல் வேலையாக அவரை கிளப்பி விட்டு தான் ஓய்ந்தாள்.​

தன் போனை எடுத்து மணியை பார்த்தாள், இரவு எட்டு என காட்டியது. விஷ்ணு அவன் வேலையை முடித்து வரும் நேரம் இது . கடைவீதிக்கு அருகில் தான் அவன் வேலை செய்யும் ஷோரூம் உள்ளது. அவனை பார்த்து விட்டு செல்லலாம் என்று மனதில் திட்டம் தீட்டியவள் அதற்கு முதல் படியாக ராமசந்திரனை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.​

எப்பொழுதும் வேலை முடித்து விட்டு வந்து பஸ் ஸ்டாப் அருகில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்பது விஷ்ணுவின் வழக்கம். அதனால் அவனை காண அங்கு சென்றிருந்தாள்.​

அவள் வந்த சிறிது நேரத்திலேயே விஷ்ணுவும் வந்து விட, தூரமாக தள்ளி நின்று அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.​

இது போல் பல முறை இங்கு வந்து அவன் அறியாமலேயே அவனை பார்த்து ரசித்திருக்கிறாள் தான்..! முன்பெல்லாம் அவனை கண்டாலே ஒரு வித வெட்கம், பயம், அச்சம் என இன்று போலவே தூரத்திலே நின்று விடுவாள் . வாயாடி பெண் தான் ஆனால் ஏனோ அவனை பார்த்தாள் மட்டும் வாயடைத்து போய் நின்று விட்டுவாள்.​

தானாக போய் பேசினால் எங்கே அவன் தன்னை நிராகரித்து விடுவானோ, அல்லது தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்ற பயம் அவளை ஆட்டுவிக்க தவிப்பாக அவள் நாட்களை கடத்தி கொண்டிருந்தாள்.​

ஒரு ஆண் தான் காதலிப்பதை வெகு சாதரணமாக வெளிய சொல்லி விடலாம் ஏன் அந்த காதலை கைப்பற்ற தன் காதலிக்கு அன்பு தொல்லைகள் கூட கொடுக்கலாம் அதை எல்லாம் அன்பின் வெளிப்பாடாக ஹீரோயிஸமாக பார்க்கும் நம் சமூகம் அதையேவே ஒரு பெண் செய்தாள் அவளை ஒழுக்கத்தை கேள்வி குறி ஆக்குகிறது.​

ஆண் பெண் இருவருக்கும் உணர்வு என்பது சமம் தானே. ஒரு பெண்ணாய் வந்து தன் ப்ரியத்தை வெளிப்படுத்துவது என்பதை ஏனோ இன்னும் இந்த சமூகம் ஒற்று கொள்வதில்லை. பெண் என்பவள் அமைதியானவள், அடக்கமானவள், அன்பானவள் என இந்த சமூகம் தானே ஒரு கொட்பாட்டை வகுத்து பெண்கள் மீது திணித்துள்ளது என்பது தான் உண்மை..!​

மேலோட்டமாக பார்த்தால் பலருக்கு இது புரியாது. சில விஷயங்களை ஆழ்ந்து பார்க்கும் பொழுது தெரிய வரும். ரோட்டில் தவறாக வந்த வண்டியை சுட்டுக்காட்டி ஒரு ஆண் சண்டை போட்டால் அவன் தைரியமானவன், இதே ஒரு பெண் செய்தாள் அவள் பஜாரி..! இப்படி சொல்வதும் ஒரு பெண் தான் என்பதே இங்கு அவலம்.​

'சத்தமா சிரிக்காத, இப்படி உக்காராத, அண்ணனுக்கு விட்டு கொடு ' என பெண் அடிமை தனம் வீட்டில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது..!​

இந்த கோட்பாட்டுகளிற்க்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவள் வேதா.​

நம் வாழ்கை நம் கையில் என்னும் மந்திரத்தை நம்புபவள்..!​

விஷ்ணு டீயை கிளாசில் வாங்கி விட்டு திரும்பி நகர அவன் மேல் வந்து இடித்தான் ஒருவன். விஷ்ணு கையில் வைத்திருந்த டீ அவன் மேல்கொட்டி விட,​

" யோவ்வ் கண்ண என்ன பொடனிலயா வச்சு இருக்க!? " என்றவன் பளார் என விஷ்ணுவின் கன்னத்தில் அறைந்திருந்தான்.​

ஏற்கனவே சூடான டீ அவன் மேல் கொட்டியத்தில் தடுமாறி நின்றவன் இந்த அடியை சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.​

சற்று சுதாரித்து விஷ்ணு பேசுவதற்குள் சண்டைக்கு பாய்ந்து விட்டாள் வேதா.​

" இப்போ எதுக்குடா அவர மேல கை வெச்ச? தெரியாம தான கொட்டினாங்க "​

" என்னது டாவா?? யாருடி நீ..? "​

" நான் யாரா இருந்தா உனக்கு என்னடா எவளோ தைரியம் இருந்தா இவர அடிப்ப உன்ன.. " என்றவள் அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட அருகில் இருந்த ஸ்டூலில் மோதி விழுந்தவனின் கையில் அடிப்பட்டது.​

" ஏய்ய்ய்ய்..! கேவலம் பொம்பள நீ. என் மேலயே கை வைக்கறயா ! " என்றவன் ஆவேசமாக எழுந்து அவளை தாக்க முற்ப்பட,​

" முடிஞ்சா கை வைடா பாப்போம் "​

சண்டைக்கு நான் தயார் என்பது போல் முறுக்கி கொண்டு நின்றாள் வேதா.​

சட்டென்ன இடைபுகுந்து அவனை தடுத்து நிறுத்தினான் விஷ்ணு.​

" ண்ணா மன்னிச்சிருங்க ண்ணா ஏதோ தெரியாம சொல்லிட்டா சின்ன பொண்ணு "​

அவன் பேச்சில் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள் வேதா. அவனிற்காக தானே பேசினோம். இவன் என்னடா வென்றால் கோழை போல் சட்டென்ன மன்னிப்பு கேட்கிறான் ..!? ஏற்கனவே இருந்த கோவம் இப்பொழுது பன்மடங்காக விஷ்ணுவின் மேல் மாறியாது. அவனை தீ பார்வை பார்த்தவள் ஆவவேசமாக அடுத்து பேச வாய் எடுப்பதற்குள், தரதரவென அவள் கைபிடித்து வெளியே இழுத்து சென்றான் விஷ்ணு.​

" ப்ச்.. என்ன விடு, மாமா என்ன விடுனு சொல்லறேன்ல" என்றவள் அவள் கையை உதற அவனோ அவளை விடுவதாய் இல்லை. இரண்டு கையையும்இன்னும் சேர்ந்து இழுத்து பிடித்து கொண்டான்.​

" யோவ்வ் என்ன விடுயா லூசு..! கொஞ்சம் கூட ரோஷமே இல்லல உனக்கு எல்லாம்..!! உனக்காக பேசுனேன் பாரு என் புத்திய செருப்பால அடிக்கனும் இப்படி பயந்து போய் அவன் கிட்ட இருந்து ஓடி வர கொஞ்சம் கூட வெக்கமா இல்ல..!அந்த மாறி ஆளுங்க கிட்ட எல்லாம் பேசுற விதத்துல்ல பேசுனா தான் சரிப்பட்டு வரும். என்ன விடுங்கறேன்ல..!" இருந்த கோவத்தில் வார்த்தையை அள்ளி வீசினாள் வேதா..!​

அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பிற்கு தான் அவளை அழைத்து வந்திருந்தான்.​

அங்கிருந்து கல் பெஞ்சில் அமரந்தவன் ரெண்டு கைகளையும் நாடியில் பதித்தவாரு தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டான்.​

இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை.​

" மாமா உன்ன தான் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லு..! இப்போ எதுக்கு என்ன இழுத்துட்டு வந்த!? " சத்தமாகவே வந்தது அவள் குரல்.​

ஆழ்ந்து மூச்சு எடுத்தவன் மெல்ல நிமிர்ந்து அவளை ஏறிட்டு பார்த்தான்.​

காளி போல் அவனை தான் முறைத்து கொண்டிருந்தாள்.​

வேலையில் இருந்து களைத்து போய் வருபவனிற்கு இரவில் அருந்தும் அந்த டீ தான் புத்துணர்வு தரும். அதுவும் இன்று இல்லாமல் போக அங்கு நடந்த கலோபரத்தில் மொத தெம்பையும் இழந்தவன் போல் சோர்ந்து அமர்ந்திருந்தான்.​

"அவன் என்ன பெரிய இவனா கொஞ்சம் கூட யோசிக்காம அத்தனை பேர் முன்னாடி கை வைக்கறான். நீயும் அப்படியே மரம் மாறி நிக்கற? அவன ஒரு வார்த்த கேக்காம அவன் கிட்டயே மன்னிப்பு கேட்டுட்டு வர என்ன தான் நெனச்சிட்டு இருக்க உன் மனசுல..!?"​

அவனிடம் இருந்து நியாயமான பதிலை பெறாமல் விடுவதாய் இல்லை அவள்.​

" கோவப்படுறது, ரோஷப்படுறதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும் வேதா.. அதுலாம் என்கிட்ட இல்ல "​

விட்டேத்தியாய் அவனிடம் இருந்து வந்த பதில் அவளை இன்னும் சினமூட்டியது.​

" என்ன உளற!? நாம தப்பு பண்ணாத போ நாம ஏன் பணிஞ்சு போனோம்!? "​

" இள ரத்தம் அதுனால கொத்திக்கற.. இந்த மாறி நா நேரியா பாத்துட்டேன். ஆமா நீ இங்க தனியா என்ன பண்ணுற? உன்ன யார் நடுவுல வர சொன்னது? மொத்தல்ல அவன் யாருனு உனக்கு தெரியுமா? அவன பாத்தாலே ஏதோ ரவுடி பையன் மாறி இருக்கான். முடிஞ்சா கை வை பாப்போம்னு சவால் விடுற? அவன் அடிச்சா நீ தாங்குவியா? இது என்ன சினிமாவா அவன் அடிக்க வந்த உடனே பத்து பேர் வந்து உன்ன காப்பாத்த? நம்மள சுத்தி எத்தனை பேர் நின்னாங்க யாராவுது ஒருத்தராவுது நம்ம பக்கம் வந்து பேசுனாங்களா? இது தான் உண்மை இது தான் உலகம். சோசியல் மீடியால ஆயிரம் வசனம் பேசுவாங்க ஆனா நேர்ல நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கி போறவங்க தான் ஜாஸ்தி..! அவனால உனக்கு ஏதாச்சி பிரச்னை வந்தா என்ன பண்ணுவ!? "​

"போலீஸ் கிட்ட போவோம். சும்மா பயந்துட்டே எல்லாம் என்னால வாழ்ந்துட்டு இருக்க முடியாது "​

"போலீஸா?" என்றவன் சின்ன சிரிப்பை சிந்திவிட்டு,​

" நீ என்ன சி.எம் பொண்ணா? உன்ன இருவதி நாலு மணி நேரம் காவ காக்க? போலீஸ் ஸ்டேஷன் எந்த பக்கம் இருக்குனாவுது உனக்கு தெரியுமா? உண்மையான போலீஸ்ட்ட மொத பேசி பாரு அதுக்கு இவனுங்களயே சமாளிச்சிட்டு போயிரலாம்னு தோணும். இப்போ நா மன்னிப்பு கேட்டேனா அதோட அந்த பிரச்சனை முடிஞ்சிது. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு இதுல கண்டவனையும் பகைச்சிக்கிட்டு என்னால வாழ முடியாது. என்ன நம்பிதான் என் குடும்பமே இருக்கு. பாத்த உனக்கே இப்படி கோவம் வருதுனா அடி வாங்கி அவன் கிட்ட மன்னிப்பு கேட்ட எனக்கு எவளோ அவமானமா இருக்கும்..! நானு மனுஷன் தானே எனக்கும் எல்லா உணர்வும் இருக்குல..! ஆனா என் உணர்வுகள உண்மையா வெளிப்படுதற சொகுசு வாழ்க்கையை நா ஒன்னும் வாழல. எனக்கு மேல வேலை செய்றவன் என்ன மட்டம் தட்டுவான் வாய மூடிட்டு தான் இருக்கனும் ஏனா எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம். இந்த மாறி டீ கொட்டுனதுக்கு எல்லாம் யாரும் சண்டைக்கு நிக்க மாட்டாங்க அப்படி நிக்கறாங்கனா எல்லாம் தெரிஞ்சு துணிஞ்சு வரான்னு தான் அர்த்தம் அவன மாறி என்ன ஆனாலும் பரவாலனு சண்டைக்கு போக முடியாது. பிரச்னைனு வந்தா அத சமாளிக்க என்கிட்ட ஆளும் இல்ல பணமும் நேரமும் இல்ல. "​

அவன் பேச்சில் திகைத்து போனவள்,​

"இவளோ ஏன் மாமா நீ யோசிக்கற? அவன் மேல தான் தப்பு இது ஒரு சின்ன பிரச்னை தானே..!"​

"யோசிக்கனும் வேதா அதுவும் என்ன மாறி கேக்க நாதி இல்லாதவங்க எல்லாம் ஆயிரம் தடவ யோசிக்கனும்..​

என் உலகம் ரொம்ப சின்னது வேதா அதுலா என்னோட தனிப்பட்ட ஆச பாசம் கோவம்
விருப்பு வெறுப்புக்கு எல்லாம் இடமே இல்ல"​

அவனின் குரலும் அவனின் பார்வையும் அவள் மனதை பிசைந்தது. நாம் தான் தேவை இல்லாமல் பிரச்னையை பெரிது பண்ணி விட்டோமோ என குற்ற உணர்ச்சி எழ கண்ணீர் முட்டி கொண்டு வந்தது வேதாவிற்கு.​

 
Last edited:

santhinagaraj

Active member
வேதாக்கு இருக்கிற அந்த தைரியம் கூட என் விஷ்ணுகு இல்லை ஒரு சின்ன விஷயத்துக்கு இவன் ஏன் இவ்வளவு பெருசா யோசிக்கிறான்.

தப்பே செய்யாத போது இவன் ஏன் அடங்கிப் போனான் பணம் இல்லன்னா தப்பு செய்யலனாலும் அடங்கி தான் போகணுமா ???
 

Shamugasree

Well-known member
vedha Vishnu mela vecha kadhal ipdi sandai poda vaikuthu. Ana Vishnu valarntha soolnilai and vazhura valkai avana porumai and amaithiya iruka vaikuthu. Ana ivlo irangi poi mannipu ketkanuma. Prachanaiya angaye mudika vera vali illaiyo
 

NNK046

Moderator
வேதாக்கு இருக்கிற அந்த தைரியம் கூட என் விஷ்ணுகு இல்லை ஒரு சின்ன விஷயத்துக்கு இவன் ஏன் இவ்வளவு பெருசா யோசிக்கிறான்.

தப்பே செய்யாத போது இவன் ஏன் அடங்கிப் போனான் பணம் இல்லன்னா தப்பு செய்யலனாலும் அடங்கி தான் போகணுமா ???
நன்றி ❤️
 

Mathykarthy

Well-known member
பிரச்சனையை கண்டு ஒதுங்கி போறது தப்பு இல்லை.... ஆனா இவ்வளவு கழிவிறக்கம் வேணாம் விஷ்ணு.... இப்படியே இருந்தா எல்லாரும் ஏறி மிதிச்சுட்டுப் போயிடுவாங்க... 😔
தகுதிக்கு ஏத்த தனிப்பட்ட சின்ன சின்ன ஆசைகள், கோபம், ஏக்கம் எல்லாம் தப்பு இல்லை எதுவுமே இல்லாம வாழ ரோபோ வா....
 

NNK046

Moderator
பிரச்சனையை கண்டு ஒதுங்கி போறது தப்பு இல்லை.... ஆனா இவ்வளவு கழிவிறக்கம் வேணாம் விஷ்ணு.... இப்படியே இருந்தா எல்லாரும் ஏறி மிதிச்சுட்டுப் போயிடுவாங்க... 😔
தகுதிக்கு ஏத்த தனிப்பட்ட சின்ன சின்ன ஆசைகள், கோபம், ஏக்கம் எல்லாம் தப்பு இல்லை எதுவுமே இல்லாம வாழ ரோபோ வா....
Nandri.. 😍
 
Top