எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 6

NNK-41

Moderator

அகம் 6​


420663344_751852413535750_4545171569264281197_n.jpg

டைரி​

அந்த ராஸ்கல் என்னை கிஸ் பண்ணதற்கு நான் என்ன செய்வேன். பூமி அக்கா என்ன சொன்னாளோ தெரியாது… அம்மா ரொம்ப பேட் வேர்ட்ல என்னை திட்டிட்டாங்க.​

அம்மா சொன்ன வார்த்தை எல்லாம் ரொம்ப ஹேர்டிஙா இருந்துச்சி. எனக்கு பிடிக்கல அதனால நான் இங்க விவரமா எழுதல.​

வயசுக்க வந்த உடனேயே சோரம் போக அத்தனை ஆசையா என்ற வார்த்தையின் அர்த்தம் முதலில் எனக்கு புரியல. புரிய வந்ததும் முதல் முறை என்மேலேயே எனக்கு பட்சாதாபம் வந்தது. என்னை நினைத்து முதல் முறை கண் கலங்கினேன்.​

நான் என்ன தவறு செய்தேன்? அந்த சுதீஷ் குரங்கு செய்த செயலுக்கு நான் குற்றவாளியாக்கப்பட்டேன். மனம் தாளவில்லை. என்னை நிரூபிக்கும் நிலையில் நான் இருந்தேன். என்னுள் உத்வேகம் வந்தது. அம்மா முகத்தை தீர்க்கமாக பார்த்தேன்.​

என்னடி முறைக்கிற!! கண்ணை நோண்டி எடுத்திருவேன்னு மிரட்டுனாங்க. அதெப்படி முடியும்? கையால் கண்ணை நோண்ட முடியுமா என்ற சந்தேகம் வந்தாலும் அதை ஒரு புறம் தள்ளி வச்சேன். என்னை நிரூபிக்கும் நேரம் இது.​

ஒரு முடிவுடன் சிறு வயதில் சுதிஷ் செய்ததை சொன்னேன். சொல்லும் பொழுதே ஆற்றாமையில் கண்ணீர் வந்தது. சிறுபிள்ளை என்றும் பாராமல் அவன் செய்த செயலை சொல்கையில் உடலெல்லாம் மிளகாய் அரைத்து பூசியதுபோல் எரிந்தது. மனதின் எரிச்சல் தேகத்திற்கு இடம் மாறியது போல.​

சொல்லிவிட்ட திருப்தியுடன் அம்மா முகம் பார்த்தேன். இனி அம்மா எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க என்று நினைச்சேன். நினைச்ச அந்த நொடி அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க. மனம், உடலோடு சேர்ந்து இப்பொழுது கன்னமும் எரிந்தது.​

‘ச்சீ!! நீயெல்லாம் என்ன ஜென்மம்டி’ என்றாங்க… என்ன சொல்றாங்க அம்மா? சுதீஷை பற்றி சொன்னதற்கு இவங்க ஏன் என்னை இப்படி சொல்லுறாங்க? குழப்பத்துல அத்திபூத்தாற்போல வந்த கண்ணீரும் நின்றுடுச்சு. ஏன் என் கேள்வியுடன் அம்மாவை பார்த்தேன்.​

“பூமி அப்பவே சொன்னா… உண்மையை மறைக்க நீ ஏதாவது இப்படி ஒரு கதை கட்டுவேனு சொன்னா… ஏன்டி அக்கா உன்னைவிட மூத்தவதானே… அவ எப்பவாச்சும் இப்படி அசிங்கமா நடந்திருக்காளா?? உன்ன பெத்த வயித்துலதானே அவளையும் பெத்தேன். அவளுக்கு முன்ன உனக்கென்னடி அவசரம்!! ச்சீ!! உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு. போடி என் கண் முன்ன நிக்காத!!”​

அம்மா அப்படி சொன்னதை என்னால் நம்பவே முடியல. ஏன் பூமி என்னை பத்தி தப்பு தப்பா அம்மாக்கிட்ட சொல்லுறா!! அதுல என்ன கிடைக்க போகுது அவளுக்கு. யோசிச்சிட்டு இருக்கும்போதே அம்மா என் முடியை கொத்தா பிடிச்சி இழுத்தாங்க…. அய்யோ என்னால வலி தாங்க முடியல… மண்டையிலிருந்து எத்தனை முடிகள் அவங்க கையில மாட்டியிருந்துச்சோ தெரியாது… ஆனா ரொம்ப வலிச்சது… என்னால தாங்க முடியல… இப்போ எழுதும்போது கூட என் கண்ணுல இருந்து கண்ணீர் வருது.​

அம்மா என்னை ரூம்ல போட்டு அடைச்சிட்டாங்க. நான் வலியில அழுதுக்கிட்டே இருந்தேன். வலி மட்டும்தான் எனக்கு பெருசா தெரிஞ்சது. தனிமை எனக்கு ஒன்னும் புதுசில்ல. நான் என் உலகம் அது போதும் எனக்கு.​

விஷயம் கேள்விப்பட்ட அப்பா ரூம்ல வந்து என்னை ஒரு மாதிரி பார்த்தார். ஏன் என்ன என்று ஒரு வார்த்தை கேட்கல. ஐ டோண்ட் கேர்!! பாசமா பேச போறதில்ல… இதுல இந்த பார்வைக்கு நான் புதுசா அர்த்தம் கண்டுபிடிக்க விரும்பல. முகத்தை திருப்பிக்கிட்டேன்.​

அண்ணா வந்தான். கையில ஏதோ க்ரீம் போல வச்சிருந்தான். கன்னத்துல பூசிவிட்டான். எரிஞ்சாலும் அண்ணன் செயல் மனசுக்கு இதமா இருந்துச்சு. ஆனா அடுத்து அவன் சொன்ன வார்த்தை மனசை கிழிச்சாலும் எனக்கு அழ தோனல.​

“ஏன் மலர் இப்படி பண்ண? நல்ல வேளை வெளி ஆள் யாரும் பார்க்கல… இல்லனா நம்ம குடும்ப கௌரவம் என்னாகிறது?”​

இங்கே யாரும் என்னிடம் விளக்கம் கேட்க தயாராக இல்லை. இவள் இப்படிதான் என்ற பார்வையுடன் வர… வெறுத்துவிட்டது. அன்போ ஆதரவோ எதுவும் எனக்கு வேண்டாம்!!​

சுதந்திர பறவையாக பறக்க நினைக்கவில்லை அதேநேரம் சிறைபறவையாகவும் இருக்க விரும்பவில்லை. ஒரு சாதாரண பெண்ணாக நடமாட விரும்புகிறேன். இனி யார் என்ன சொன்னாலும் செவிடாகி ஊமையாக இருந்துக்கொள்கிறேன். வேண்டாம் வலி கொடுக்கும் இந்த உறவுகள் எதுவும் வேண்டாம்.​

மல்லிகா மிஸ் ஏன் என்னை விட்டுட்டு போனீங்க? எனக்கு ஆட்டிசம் இருக்குனு கண்டுபிடிச்ச நீங்க… என்னை முழுசா புரிஞ்ச்சிக்கிட்ட நீங்க… என்னை உங்க்களோடவே கூட்டிட்டு போயிருக்கலாமே… இனி வாழ்க்கை இப்படிதானா...​

******************​

இன்று அக்காவுக்கு இருபது வயசாகுது. வீடு முழுதும் பலவித வண்ண காகித பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்தது. பியூட்டிஷன் வீட்டுக்கே வந்து அக்காவை அழகு படுத்திக்கிட்டு இருந்தாங்க. அக்காவோட ஃபிரண்ட்ஸ் கூட வந்திருந்தாங்க. ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது.​

இதெல்லாம் பார்க்கும் பொழுது சிறு ஏக்கம் வந்தது. மனதை அடக்கியாச்சு. எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டாலும் அக்காவின் மேல் கொஞ்சம் பொறாமை வரத்தான் செய்தது.​

எல்லா விஷயத்திலும் அக்கா அதிஷ்டசாலிதான். சிறிதளவுக்கு இல்லாவிடிலும் தேவையான அளவுக்குகூட ஏங்கும் என் அவல நிலை யாருக்கும் வரக்கூடாது. சந்தோஷத்திலிருந்து அன்பு வரைக்கும் எனக்கு எல்லாம் எட்டாக்கனிதான் ஆனால் அவளுக்கோ எல்லாமே வெற்றிகனிதான்.​

ச்சே!! கூடாது… கூடாது!! எதையும் எதிர்பார்ககூடாது. எதிர்பார்ப்பு வீழ்ச்சிக்கு முதல் படி என்று மிஸ் சொல்லியிருக்காங்க. அல்பமாக நினைத்த என் மனதை அடக்கிக்கொண்டேன்.​

அக்காவோட பிரண்ட்ஸ் எல்லாம் அண்ணனை காட்டி ஏதோ சொல்லி சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அண்ணன் அடிக்கடி வீட்டை அளந்து கொண்டிருந்தான். அவனும் அடிக்கடி ஓரக்கண்ணால் பொண்ணுங்களை பார்த்துக்கொண்டிருந்தான். எனக்கு சுவாரசியமா இருந்திச்சு.​

திடுமென அம்மா என் கையை பிடிச்சி இழுத்து ரூம்க்குள்ள அடைச்சி வச்சிட்டாங்க. ஏன்னு தெரியல. தெரிஞ்சக்கவும் ஆசை படல… என் ரூம் எனக்கு சொர்கமாதான் தெரிஞ்சது. இதோ இப்போகூட நடந்ததையெல்லாம் டைரில எழுதும்போது ரொம்ப ரிலீவ்வா ஃபீல் பன்றேன்.​

அரை மணி நேரம் கழிச்சு அம்மா கதவை திறந்தாங்க. ஹாலுக்கு வரச்சொன்னாங்க. எல்லோரும் வாழ்த்து பாடல் பாடிக்கிட்டு இருந்தாங்க. எட்டி பார்த்தேன். யாரோ கேக் வெட்டிக்கிட்டு இருந்தாங்க. அக்கா எங்கே போனா? ஏன் வேறு யாரோ வந்து நம்ம வீட்டுல கேக் வெட்டுறாங்க?​

யார்கிட்ட கேட்கலாம்? சுத்தி முத்தி பார்த்தேன். அண்ணா அருகில் சென்று கேட்டேன். அண்ணன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினான். எனக்கு புரியல. பின்வாசலுக்கு என்னை கூட்டிட்டு வந்த அண்ணன் அது பூமிகாதான்… மேக் ஓவர் பண்ணியிருக்கா என்று சொன்னான். என்ன ஓவரா மேக் பண்ணிட்டாங்க என்று சொல்லி சிரிச்சிட்டு போய்ட்டான்.​

அக்காவை பார்த்தேன். அடையாளமே தெரியல. சாதாரணமாகவே அழகாதான் இருப்பா. அதனாலயே அவளுக்கு நிறைய லவ் லெட்டர்ஸ் கிடைக்கும். ஏன் சிலர் என்கிட்ட கூட கொடுத்து தூது வேல பார்க்க சொன்னாங்க. அதை இன்னும் நான் பத்திரமா வச்சிருக்கேன். இதை கொடுத்தா கொடுக்கா என்னை கொட்டுவா. தேவையா எனக்கு? வேணவே வேணாம்!! அதை எல்லாம் ஒரு புக்குல பத்திரமா வச்சிருக்கேன்.​

எல்லோரும் சாப்பிட ஆரம்பிச்சாங்க. பாட்டு சத்தம் காதை பிளந்தது. நான் என் ரூமுக்குள்ள போய்ட்டேன். காதில் ஹெட் செட் போட்டுட்டு ஹாரிஸ் ஜெயராஜ் பாடலை கேட்க ஆரம்பித்தேன்.​

‘மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே… தூர சிகரங்களில் பன்னீர் துளைக்கும் அருவிகளே…’ ஹரிஹரன் குழைய மனமும் சேர்ந்து குழைந்தது. கொஞ்ச நேரத்துல யாரோ என்னை பின் பக்கமா வந்து அணைக்க… கொஞ்ச நேரம் நான் ஃப்ரீஸ் ஆகிட்டேன். பயம் வந்து என் நெஞ்சை அடைச்சிட்டு போல.​

“செம்மையா இருக்கடி மை அழகி” என்று காதில் குரல் கேட்டதும்… அது சுதீஷ் என்று புறிய எனக்கு சில வினாடிகள் தேவைப்பட்டது. உணர்ந்ததும் சட்டென நான் எழ.. அதை அவன் எதிர்பார்க்கவில்லை போலும்… என் தலை அவன் மோவாயை இடித்துவிட… கீழே விழப்போனவனை அனிச்சையாக தாங்கி பிடித்தேன். அது எவ்வளவு பெரிய தவறு… அந்த குரங்கு என்னை இழுத்து முத்தமிட்டுவிட்டது.​

ச்சீ!! ரொம்ப ரொம்ப அருவருப்பா இருந்ததால சாப்பிட்டதெல்லாம் வாந்தியாக வந்திடுச்சு. என்ன ஒரே சந்தோஷம் என்றால் அதை அவன் முகத்திலே எடுத்ததுதான்.​

“ஹேய் ச்சீ!!” அவன் அலரவும் கதவு திறக்கவும் சரியாக இருந்தது. மாமாதான் சுதீஷை தேடி வந்திருந்தார். அவருக்கு சுதீஷ் இங்கிருப்பது எப்படி தெரியும் என்பதெல்லாம் நான் யோசிக்கவில்லை.​

ஓடிப்போய் அவரை அணைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரம் என்னை சமாதானப்படுத்தியவர் அடுத்து என் கைகளை பிடித்துக்கொண்டவர் அவர் கண்களில் ஒற்றிக்கொண்டார்.​

நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டார். எனக்கு ஒன்னும் புரியல. எதுக்கு மன்னிப்பு கேட்கிறார்? இவரிடம் சொல்லனுமா வேண்டாவா நான் யோசித்தேன். சொந்த குடும்பமே நம்பாத பட்சத்தில் இவர் மட்டும் நம்புவாரா? தயக்கத்துடன் அவரை பார்க்க…​

மாமா பேச ஆரம்பித்தார். சுதீஷுக்கு என் மேல் தீவிர காதலாம். நான் பெரியவளானதிலிருந்து பைத்தியமாக இருக்கிறானாம். இதை பற்றி இன்று வீட்டில் பேச போவதாக சொல்ல… சொன்னதை உள்வாங்கிக்கொண்ட என்னால் சட்டென என்ன செய்வதென்று தெரியவில்லை. சாதக பாதகங்களை யோசிக்க அவகாசமில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. சுதீஷ் அவன் நல்லவனல்ல. மாமாவுக்கு தெரிந்து இரண்டு வருடங்கள் ஆனால் என் சிறுவயதில் அவன் செய்த செயல் எல்லாம் என்னவென்று சொல்ல. அவன் நல்லவனல்ல என்பது மட்டும் என் அடிமனது உருவேற்றி கொண்டது.​

இங்கு நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மாமா மன்றாடினார். ஹ்ம்… சொன்னாலும் நம்பவா போகிறார்கள். இதை நான் மாமாவிடம் சொல்லவில்லை. முகத்தை சுத்தம் படுத்திகொண்டு வந்த சுதீஷை அழைத்துக்கொண்டு மாமா சென்று விட்டார்.​

நானும் அறையை சுத்தம் செய்துவிட்டு குளித்துவிட்டு கட்டிலில் அமர்ந்துவிட்டேன். வெளியே பிறந்தநாள் கொண்டாட்டம் என் மனதிலோ சுதீஷை நினைத்து திண்டாட்டம். அடுத்த முறை மறுபடியும் அவன் வாலாட்ட மாட்டான் என்று என்ன நிச்சயம். ச்சே!! மாமாவிடம் அவனை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கனும். பரவாயில்ல… அடுத்த தடவை கண்டிப்பா சொல்லிடனும். முடிவெடுத்த்தும் படுத்துவிட்டேன்.​

ஆனால் மறுநாள் என் வாழ்க்கையே திசை மாறி போகும் நாளாகி போனது. வீட்டில் ஒரே கூச்சல். அம்மாவும் அக்காவும் அப்பாவிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். என்ன ஆனது என்று அறையிலிருந்து எட்டி பார்க்க முனைந்தேன்… அண்ணன் என் அறை வாசலில் நின்றிருந்தான். என்ன்வென அவனிடம் சைகையில் கேட்டேன்.​

நேற்று சுதீஷ் உன் அறைக்கு வாந்தானா என்று கேட்டான். ஆமாம் அந்த ராஸ்கல் வந்தான் என்று பொருமினேன். அண்ணன் என் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தான். உனக்கு அவனை பிடிக்காதா என்று வேறு கேட்க… சக்தியிருந்தால் அவனை கொன்றுவிடுவேன் என்று நான் புகைய… அண்ணன் முகத்தில் அதிர்ச்சி.​

அம்மா என்னை பார்த்ததும் வேகமா வந்து அசிங்கமான வார்த்தைகள் கொண்டு திட்டினாங்க. இன்றுதான் முதன் முறையாக நான் என்னையே சபித்துக்கொண்டேன். நான் ஏன் பிறந்தேன்? என்னை கருவிலே கொன்றிருக்கலாமே?​

அண்ணன் அத்தனை எடுத்து சொல்லியும் அம்மா கேட்டுக்கொள்ளவில்லை. அக்கா சொன்னதை மட்டும் கேட்டுக்கிட்டாங்க. அப்பா என்னை பார்கக்கூட விரும்பல. என்ன என்று தெரியாமல் வசவு வாங்குவது எத்தனை கொடுமை தெரியுமா? ஒரு கட்டத்துக்கு மேல் திட்டிக்கொண்டிருந்த அம்மா அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. யாராலயும் தடுக்க முடியல. என்னால வலியை தாங்கிக்க முடியல. என்னை கொன்னாதான் அம்மாவால நிம்மதியா இருக்க முடியும்னு சொன்னாங்க.​

எனக்கு அது நிம்மதி தரும் என்ற நிலைக்கு நான் போய்ட்டேன். ‘என்னை கொன்னுடுங்க நான் நிம்மதியா போயிடுறேன்’ என்றேன். சட்டென அண்ணா வந்து என் கை பிடிச்சி இழுத்தான். என் உடல் தளர்ந்தது. அவன் மேலேயே மயங்கி சரிந்தேன். நேற்று மதியம் சாப்பிட்டதுதான். அதுவும் வாந்தியாக வந்துவிட… காலையில் எழுந்தது முதல் பசி வயிறை கிள்ளியது. ஆனால் வயிற்றுக்கு ஈய உணவு கிடைக்கவில்லை மாறாக அம்மாவின் ஈயத்தை காய்த்து ஊற்றிய சொற்கள் அனுகுண்டாய் என்னை தாக்கிவிட மயக்கமுற்றேன்.​

கண்விழிக்கும் போது நான் மருத்துவமனையில் இருந்தேன். கையில் செலைன் போடப்படிருந்த்து. ப்ச்!! இன்னும் சாகாமல்தான் இருக்கேன். டாக்டர் என்னை வந்து பரிசோதித்தார். சாவு ஒன்றுதான் என் வலிக்கு நிவாரணம் என்று என் மனதில் பதிந்து விட்டது. டாக்டரின் கையை பிடித்தேன் எனக்கு சாகனும் போல இருக்கு என்றேன்.​

என்னமா இது சின்ன வலிக்கு எல்லாம் சாவாங்களா? பைத்தியம் பைத்தியம்.. என்று புன்னகைத்துவிட்டு சென்றுவிட்டார். கடைசியில் நான் பைத்தியமாகி விட்டேனா??​

அன்றே வீட்டுக்கு வந்துட்டேன். அண்ணன் அழைச்சிட்டு வந்தான். அப்பா ஹாலில் அமர்ந்திருந்தார். ஒரு காலத்தில் அப்பா என்னிடம் அன்பாய் இருந்தது ஞாபகத்துக்கு வந்தது. கண்கள் கலங்கியது. மிகவும் பலகீனமாகிவிட்டேன் போல. என்னை அவர் அருகில் அமர சொன்னார். ஏன் ப்பா அம்மா இப்படி என்று அழுகையுடன் காரணம் கேட்டேன்.​

மாமா காலையில் ஃபோன் செய்து அம்மாவிடம் பேசியிருக்கார். சுதீஷும் நானும் காதலிக்கிறோமாம். அதனால் சின்னதாக பூ வைத்து நிச்சயம் செய்ய கேட்டிருக்கிறாராம். குழப்பமடைந்தேன் ஆனால் அதிர்ச்சியடையவில்லை. என்னை பந்து போல எல்லோரும் உருட்ட ஆரம்பித்துவிட்டனர் என்பதை உணர்ந்து கொண்டேன்.​

அண்ணா என் மனதில் உள்ளதை சொல் என்று சொன்னான். சொன்னால் மட்டும் கேட்டு விடவா போகிறார்கள்? அப்பா கவலையுடன் பேசினார். அண்ணா அக்கா பற்றி அவருக்கு கவலை இல்லையாம். என்னை எப்படி கரைசேர்ப்பது என்ற கவலையில் இருந்தாராம்.​

நான் என்ன காற்றில் ஆடும் படகா? உயிருள்ள மனுஷி என்று இவர்களுக்கு தெரியவில்லை போலும்… ஆனால் அவரோ மேலும் பேசினார். இந்த சம்பந்தத்தில் ஒரு நன்மை இருக்கிறதாம். என் பெரிய குறை அதாவது ஆட்டிசம் என்ற நோய் அடிப்பட்டுவிட்டதாம். தாய்மாமன் என்பதால் என் குறையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.​

ஆட்டிசத்தை புற்று நோய் போல பேசினார். மனம் வலித்தது. யாரும் என்னிடம் அபிப்பிராயம் கேட்கவில்லை. என்ன நடந்தது என்று கேட்கவில்லை. சுதீஷை காதலிக்கிறாயா என்று கேட்கவில்லை. குடும்பத்தில் ஒருத்தியாக எண்ணி இருந்தால் தானே இதை எல்லாம் கேட்டிருப்பார்கள்… நான்தான் கழிந்து போக வேண்டிய பொருளாச்சே!! கண்ணீர் வரவில்லை… மரத்து போனது மனது… வாழ்க்கையை வெறுத்துவிட்டேன். ஜடமானேன்.​

 
ஓருத்தர் கூட உறுதுணையா இல்லை!!... அந்த மாமா எவ்வளவு நேக்கா பொய் சொல்லியிருக்கிறார்???? அடுத்து என்ன பன்ன போறாங்களோ??
 

Advi

Well-known member
Achcho yeen ippadi😣😣😣😣😣

Paavam illaiyaa ava, peththa ammave ippadi seithaa😢😢😢😢😢😢

Nilavan koodavaa?????

Savi & boomi, yuck😡😡😡😡😡
 

NNK-41

Moderator
ஓருத்தர் கூட உறுதுணையா இல்லை!!... அந்த மாமா எவ்வளவு நேக்கா பொய் சொல்லியிருக்கிறார்???? அடுத்து என்ன பன்ன போறாங்களோ??
அவங்க கண்ணுக்கு இவ குணம் சரியில்லாதவ... இதுல மேய்ன் கல்பிரிட் பூமிகா. இவ வாயிருந்து ஊமை. வருவாள்... நன்றி டியர்:love:
 

NNK-41

Moderator
Achcho yeen ippadi😣😣😣😣😣

Paavam illaiyaa ava, peththa ammave ippadi seithaa😢😢😢😢😢😢

Nilavan koodavaa?????

Savi & boomi, yuck😡😡😡😡😡
ஆமாம் டியர். மத்தவங்களை விட நிலவன் கொஞ்சம் பரவாயில்ல... ஆனா அவனும் என்ன செய்வான் மலர் பேச்சுக்கு மதிப்பில்ல... இவங்க கண்ணுக்கு அவளோட குறைதான் பெருசா தெரியிது☹️
☹️☹️
 
Top