எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பூவுக்குள் காதல் வாசம் - டீசர்

NNK65

New member
சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவளை பின்னால் இருந்து அணைத்து தன் புறமாக திருப்பியவன் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.

எதிர்பாராத தாக்குதலில் இருந்து முறுக்கிக் கொண்டு விலக முயன்றவளை முற்றாக தன் ஆளுகைக்குள் எடுத்திருந்தவனின் கண்கள், துறுதுறுக்கும் அவள் விழி வீச்சில் சொக்கி நிற்க, அவன் பார்வையிலும் இதழ்களில் ஆழுகையிலும் மெதுவாக அவள் இமைகள் மூடிக் கொண்டன.

அவனது அதிரடியில் முதலில் படபடத்த அவள் இதயமோ அவன் ஆளுகைக்குள் சரணடைய, உள்ளுக்குள் ஆழமாக புதைந்திருந்த காதலால் அவன் அருகாமையை, அவன் வாசனையை தன்னுள் பதியம் போட்டு அவனுள் இன்னும் இன்னும் மூழ்கி விடவே பேரவா கொண்டது.

சில நிமிடங்கள் கடந்து அவள் இதழை விடுவித்து அடுத்த முத்தத்தை நெற்றியில் வைத்து அவளைத் தன் பிடியில் இருந்து தளர்த்த சட்டென்று விலகியவள் மெதுவாக முனுமுனுத்தாள், "ட்ராகன்" என்று.

"யெஸ்.. உன்னோட ட்ராகன். உன்னையும் உன் காதலையும் எனக்கே எனக்காகன்னு மொத்தமா எனக்குள்ள சுருட்டி வெச்சிக்க ஆசைப்படுற உன்னோட ட்ராகன்" என்றவன் அறையை விட்டு வெளியேற திகைத்து நின்றாள் அந்த ட்ராகனின் டோல்!



 
Top