எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரத்த ரங்கோலி 6

Status
Not open for further replies.

NNK-105

Moderator
ரத்த ரங்கோலி 6

பவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு பக்கம் ஆதி மறுபக்கம் கைலாஷ். இருவரும் பவனை முறைத்தபடி இருந்தனர்.

கடந்த இரண்டு மணி நேரமாக ஆதியும் கைலாசும் பேசியதில் காதில் ரத்தம் வராத குறைதான்.

“பவன் கடைசியா என்ன சொல்ற?” கைலாஷ் அதட்டலாகக் கேட்டான்.

“ உன் நல்லதுக்காக தானே சொல்லுறோம்?” ஆதியின் ஆதங்க குரல்

பவன் நிமிர்ந்து அமர்ந்து மூச்சை இழுத்துவிட்டான். தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

ஆதியை தீர்க்கமாகப் பார்த்தவன் “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என ஒவ்வொரு வார்த்தையும் கடித்துத் துப்பினான்.

“டேய் …” என ஆதி தொடங்க

“நீ லவ் பண்ற பொண்ணு வீட்ல நான் தங்கினா .. பாக்கிறவன் என்ன நினைப்பான்? எதிர்காலத்தில் நமக்கே இது பிரச்சனையா வரலாம்”

“ஊர் என்ன சொன்னா என்ன .. நாம எதுக்கு கவலைப்படணும்? நான் எதுவும் நினைக்க மாட்டேன் ” ஆதியின் வாதம்

பவன் மறுப்பாகத் தலையசைத்தான் “எனக்கு கவலை இருக்கு. உங்க ரெண்டுபேர் வாழ்க்கையும் நல்லா இருக்கணும்”.

“இது என்ன புது கதை? .. யாரை லவ் பண்ற ஆதி?”கைலாஷ் ஒன்றும் புரியாமல் பேய் முழி முழித்தான்.

“இருடா இவன் வேற நடுல” என இருவரும் அவனைக் கவனிக்காமல் அடக்க ..

இருக்கும் பிரச்சனையில் இது வேறா? என கைலாஷ் அலுத்துக் கொண்டான். பிறகு அது அவன் வாழ்க்கை என விட்டுவிட்டான். ஆனால் யாரை காதலிக்கிறான் என்று தெரியவில்லை. காரணம் கைலாசிற்கு முன்பே ஆதி இங்கு வந்து வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தான்.

பவன் “ஆதி என்னால இங்க இருந்து வர முடியாது. நான் அப்பா இருந்த வீட்லதான் இருப்பேன். இதுதான் என் முடிவு. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லாத. அதுல எந்த பலனும் இல்ல” என்றுவிட்டான்.

ஆதிக்குப் பவன் மேல் கீறலாய் சந்தேகம் உதயமானது.

பவன் கைலாஷ் பக்கம் திரும்பினான் “கைலாஷ் நான் அப்பாவோட தொழிலை தொடரத்தான் போறேன். தயவுசெய்து விட்டுடு. பூமி அங்கிள் வர வேண்டாம். நானே எல்லாம் பாத்துக்கிறேன். எனக்கு இதைத் தவிர வேற எதுவும் தெரியாது”

“உனக்கு எதாவது ஆபத்து வரலாம். வேண்டா டா” கைலாஷ் பதிலளிக்க

“யாராலையும் எதுவும் மாத்த முடியாது .. நடக்கிறது நடக்கட்டும்” விரக்தியாகப் பவன் பதில் சொன்னான். அவன் அப்பாவின் இழப்பின் தாக்கம் இப்படிப் பேசுகிறான் என மற்ற இருவரும் நினைத்தனர்.

“கான்டிராக்ட் ரின்யூ செய்யனும் அதுக்கு இன்னும் எவ்வளவோ வேலை இருக்கு”

“கொலை நடந்ததால வில்லங்கமான இடம்னு யாருமே கான்டராக்ட் எடுக்க வரல .. சுலபமா கான்டிராக்ட் ரின்யூ ஆகிடுச்சி” விரிந்த புன்னகையுடன் பவன் சொல்ல .. கைலாஷ் ஆச்சரியமாகப் பார்த்தான்.

இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என ஆதியும் கைலாசும் கிளம்ப எத்தனிக்க .. இருவர் தோள் மீதும் கை போட்டு பவன் நிறுத்தினான். பின்பு இருவருக்கும் பொதுவாக “சாரி” என்றான்.

“உன் சாரியை நீயே வெச்சிக்க”என ஆதி காற்றில் எதையோ பிடித்து பவனின் சட்டைப் பையில் போடுவது போல பாவனைக் காட்ட மூவரும் சிரித்துவிட்டனர்.

கடிகாரத்தைப் பார்த்த கைலாஷ் “கோகிலா பெங்களூரில் இருந்து இன்னிக்கு வரா .. ஸ்டேஷனுக்கு ரிசீவ் பண்ண போகணும் .. நான் கிளம்பறேன்”

“வாவ்“

“சூப்பர்”

என நண்பர்கள் சந்தோஷத்தை வெளிக்காட்டினர்.

பல நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் முகத்தில் மனதார மகிழ்ச்சி தாண்டவமாடியது.

“எத்தனை நாள் இங்க கோகிலா இருப்பா? அவளைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?” பவன் ஆர்வமாய் கேட்டான்.

“அடுத்த ஒரு மாசம் இங்கதான் இருப்பா. வீட்டுக்கு வா டா” என கைலாஷ் அழைத்தான்.

“கண்டிப்பா வரேன். அப்படியே அண்ணி சமையல் சாப்பிடணும்”

“எனக்கும் .. எனக்கும் ” என ஆதியும் சேர்ந்து கொண்டான்.

“சரி நீங்களே ஒரு நாள் முடிவு பண்ணி சொல்லுங்க அன்றைக்கு எல்லாரும் எங்க வீட்டுக்கு லஞ்சுக்கு வந்திடுங்க .. ஆதி, அம்மா அஸ்வின் எல்லாரையும் கூடிட்டு வந்திடு. ஒரு நாள் முழுக்க என்ஜாய் பண்ணலாம் ” என்றது தான் தாமதம்

பவனும் ஆதியும் “டபுள் ஓகே” என்றனர்.

கைலாஷ் அரக்கப்பரக்கக் கிளம்பினான்.

ஆதி “நல்லா யோசி” என மீண்டும் ஆலாபனை தொடங்க

பவன் பெரிய கும்பிடு போட்டுக் கிளம்பு எனச் செய்கை செய்தான்.

ஆதி கிளம்பியதும் அபூர்வாவிடம் தொலைப்பேசியில் அனைத்தையும் கூறி முடித்தான்.

“சரி விடு ஆதி .. நாம என்ன செய்ய முடியும் ரொம்பவும் கம்பெல் பண்ண முடியாது” என்றாள்

“ஆனா அந்த இன்ஸ்பெக்டர் நாலு தடவை போன் பண்ணிட்டார்”

“பாரு நீ ஜேம்ஸ் பாண்ட் இல்ல .. கண்டுபிடிக்க வேண்டியது போலீஸ் வேலை .. என்னால முடியாதுனு உடனே சொல்லாத போலீசை பகைக்க வேண்டாம் .. டிரை பண்றேனு சொல்லிவை .. அதையே கண்டின்யூ பண்ணு … ஒரு கட்டத்துல அவரே அலுத்துப் போய் உன்ன கேட்க மாட்டார்” எனச் சொல்லி சிரித்தாள்.

“சரி டா .. நீ வெர்க் பண்ண மூவி இன்னிக்கு ரிலீஸ்ல .. பப்ளிக் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?”

“செமயா போகுது டா .. இன்னிக்கு நைட் ஷோ .. நானும் நீயும் சேர்ந்து பாக்கப் போறோம் சரியா”

“கரும்பு தின்னக் கூலியா?” காதலுடன் குழைவாகப் பேசினான்

“சரி சரி ஓவரா வழிஞ்சது போதும் நேரா பீ.வி.ஆர் தேட்டருக்கு வந்திடு.. நான் அங்க இருப்பேன்”

“ஒகே பேபி .. லவ் யூ” என போன் மூலமாக முத்த மழை பொழிந்தான்.

அவள் வெட்க புன்னகையுடன் “லவ் யூ டூ” என்றுவிட்டு போனை வைத்தாள்.

ஆதி “இன்று குரூப் ஸ்ட்டிஸ். இரவு வீட்டுக்கு வர மாட்டேன்” என்று தன் அம்மாவிடம் சொல்லிவிட்டான்.

இரவு தன் காதலியுடன் படத்தைப் பார்த்தான். அபூர்வா தான் படத்தில் எப்படியெல்லாம் வேலை செய்தாள் என்பதை விவரித்தாள்.

ஆதியால் அவளின் திறமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. மனதார பாராட்டினான். தனியே படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிட வேண்டாம் என்றான்.

திரையரங்கின் கடைசி இருக்கை என்பதால் யார் கவனத்தையும் கவராதபடி அவளை அணைத்து முத்தமிட்டான். அவளும் முத்தமிட்டு அவனை சடுதியில் தள்ளினாள்.கைலாஷ் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

“அப்பா” என கோகிலா அழைக்கவும். பூமிநாதன் நெகிழ்ச்சியில் கண்கலங்கிவிட்டார். தன் மகளை அணைத்து அவள் தலையை வருடியபடி “எப்படி இருக்க கண்ணம்மா?” என உணர்ச்சி கொப்பளிக்க வினவினார் . அப்பாக்களுக்கே பெண்பிள்ளைகள் மேல் தனியொரு பாசம். அதுவும் கடைக்குட்டி என்றால் கேட்வே தேவையில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கோகிலா தன் வீட்டினருடன் இனிமையாக நேரத்தை செலவிட மனநிறைவாக உணர்ந்தாள். அண்ணன் அண்ணி குழந்தை மற்றும் அப்பாவுடன் பேசி பேசி சிரித்து வீடே கலகலத்தது. வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம்.

கோகிலா வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். தன் வீடுதான் பல ஆண்டுகளாக இங்கே வசித்தவள்தான். ஆயினும் இங்கு சில மாற்றங்கள் இருந்ததை அவள் கண்கள் தவறவிடவில்லை.

தன் அப்பாவின் நெருங்கிய நண்பர்களின் மறைவு கோகிலாவிற்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இங்கு நடந்தவை அனைத்தும் அவளுக்குத் தெரியும். சசி உடனுக்கு உடன் தொலைப்பேசியில் நடந்தவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தாள். இரண்டு நண்பர்களும் தன் தந்தையின் வாழ்க்கையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று அவளுக்கு நன்கு தெரியும்.

வீட்டிற்கு வெளியிலிருந்து பல இடங்களில் சீசி கேமரா பொருத்தப் பட்டிருந்தது. இருப்பினும் இத்தனை கேமராகளை அவள் எதிர்பார்க்கவில்லை.

கோகிலா“இதென்ன பிக்பாஸ் வீடா? இத்தன கேமரா எதுக்கு? வீட்டுக்கு வெளில மட்டும் போதாதா? ” எனக் கேட்டாள்

“இதெல்லாம் உன் அண்ணன் வேலை”முணுமுணுப்பாக சசி பதிலளித்தாள். இதில் அவளுக்கு உடன்பாடு இல்லை எனப் புரிந்தது.

“அண்ணா பாத்ரூம் வழியா கொலைகாரன் வந்திட்டா?” என்ன செய்வ?”

“அங்கேயும் கேமரா… ” எனச் சொல்லவும்

மற்ற இரு பெண்களும் சிரித்துவிட

தன்னை இருவரும் கேலி செய்கின்றனர் என்று அப்போது தான் புரிந்தது.

கோகிலாவிற்கு இத்தனை கேமரா தேவையா? என மீண்டும் கேட்க தோன்றியது ஆனால் அண்ணன் செய்தால் அதில் விஷயம் இருக்கும் என விட்டுவிட்டாள்.

“நான் ஆபீஸ் போன சமயத்துல எதாவது பிரச்சனைனா என்ன செய்ய அதான்” என கைலாஷ் தன்னிலை விளக்கினான்.

“அதுவும் சரிதான்” என அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.பவன் குப்பை கிடங்கில் இருந்த அலுவலக அறையில் இருந்த மூன்று நாற்காலிகளை எடுத்துவிட்டு பெரியதாக தனக்கான ஒரே ஒரு நாற்காலியை மட்டும் போட்டுக் கொண்டான்.

மூவர் அமர்ந்த நாற்காலியில் அமரும் தகுதி தனக்கில்லை என விளக்கம் கொடுத்தான். அங்கிருந்தவர்கள் எத்தனை நல்ல குணம் என அவனுக்கு மனதார பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.

மூன்று நண்பர்கள் புகைப்படத்தை எடுத்துவிட நினைத்தான். ஆனால் உடனே செய்தால் சந்தேகம் ஏற்படும் என விட்டுவிட்டான்.

இனி பூமிநாதன் இங்கு வரக் கூடாது என முடிவெடுத்தான். கைலாஷிடம் எதையாவது சொல்லி அவரை வர விடாமல் செய்வது ஒன்றும் பெரிய காரியமில்லை.

பின்பு பவன் போன் செய்தான் “அந்த செல்வா ஜெயிலைவிட்டு வெளி வரக் கூடாது. பணம் செலவானாலும் பரவாயில்லை” என்றான்.

மறுபுறம் ஏதோ பேசியதற்குச் சரி என்றவன் “பேங்க வழியா வேண்டாம். எல்லாமே கேஷ் டிரான்ஸ்சேக்ஷனா இருக்கணும்” என்றுவிட்டு போனை வைத்தான்.

அப்போது “பவன் சார் உங்களை பார்க்க கதிரேசன் வந்திருக்காங்க” என்றான் காரியதரிசி.

“உள்ள அனுப்புங்க” என்றான்

குழலோசை யாழ்யோசை விட இனிதாக இருந்தது “பவன் சார்” என்னும் வார்த்தைகள். புளகாங்கிதமாகிப் போனான். எத்தனை வருடக் கனவு இந்த நாற்காலியும் இந்த பதவியும். ஒவ்வொரு காயாகச் சரியான நேரத்தில் மிகச் சரியாக நகர்த்தி இவ்விடத்தை அடைந்துள்ளான்.

கதிரேசன் பவனை சந்திக்க வந்தான். இருவரும் எதையும் பேசவில்லை. உடனே பவன் அவனைக் குப்பை கிடங்கின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே உடைந்த பயனற்ற பென்சில், கிரையான் (crayon), பேட்டரி, பழைய உடைந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் எனக் குவிந்து கிடந்தன. வந்தவன் சில பொருட்களைச் சோதித்தான்.

பின்பு தன்னுடன் வந்தவனைக் கண்டு தலையசைத்தான். அவன் அவற்றை எடைப் பார்த்து அதற்கான பணத்தைப் பவனிடம் கொடுத்தான். பின்பு பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டன.

இவை அனைவர் முன்னும் நடந்த சாதாரண நிகழ்வு. எப்பொழுதும் வரும் அதே லாரி அதே மனிதர் என அவர்கள் நினைத்தனர்.

ஆனால் புது லாரிக்கு அடையாளம் தெரியக் கூடாது என பழையபடி பெயின்ட் அடித்தது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்.

பழைய மனிதர்தான் ஆனால் பணம் என்னும் சாயத்தைப் பூசிக் கொண்டு வந்துள்ளார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என யாருக்கும் தெரியாது.

பவன் கதிரேசனுடன் அறைக்கு வந்தான். அவன் மேலும் பெரிய பையில் பணத்தை கொடுத்தான்.

அனைவரும் மறுசுழற்சிக்காக அவை கொண்டு செல்லப்படுகிறது என நினைத்தனர். ஆனால் அது வேறு காட்டுப் பாதையில் சென்றது.

அது தமிழ்நாட்டிற்கும் ஆந்திராவிற்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதி. அங்கே வெளி உலகம் அறியா வண்ணம் ஒரு தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது. அங்குச் சட்டவிரோதமாகக் கள்ளத் துப்பாக்கிகளுக்காக தோட்டாக்கள் தயாரிக்கப்படுகின்றன.தொடரும் ..

 
Status
Not open for further replies.
Top