எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாலையில் பால் நிலா!

கல்லூரி காதலில் தொடங்கும் கதை!!!.. காதலுக்கான அவனின் அடம் பிடித்தது!!!.. அவனை புரிந்து கொள்ளாமல் அவள் செய்யும் சில எரிச்சலை தந்தாலும் அவளையும் கடைசியில் பிடிக்க வைத்து விட்டீர்கள்!!!..

தோழனான சஞ்சய்யை ரொம்ப ரொம்ப பிடித்தது!!... நண்பனுக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்தது மட்டுமில்லாமல், அவன் கவனம் சிதறும் நேரங்களில் அவனின் பொறுப்பையும், கடமையையும் எடுத்துரைத்து செல்ல வேண்டிய பாதையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தும் இடங்கள் அபாரம்!!!..

காதலில் பற்று இருந்தாலும் கல்வியிலும், வேலையிலும் கவனம் செலுத்தி இருவரும் அவரவர் துறைகளில் அழுத்தமான தடம் பதித்தது பிடித்தது!!!...

முதலில் நிதானமாக சென்ற கதை, இறுதியில் அதிவேகத்தில் சென்றது போல் இருந்தது!!!... அவள் அவனை புரிந்து கொள்வதை, அவன் காதலை உணர்வதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்!!!..

அவன் அவளுக்காகவே இருந்தாலும் தனியாக விட்டுச் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!...

சில இருக்கலாம் இருந்தாலும், அழகான நட்பையும், அருமையான காதலையும் காண முடிந்தது!!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

 

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#பாலையில்_பால்_நிலா

நந்தன் ஒருதலையா காதலிக்கும் பெண் சரண்யா….அவளுக்கு அதில் துளியும் விரும்பம் இல்ல…

இருவீட்டார் சம்மதத்துடன் எப்படி அவளை கைப்பிடிக்கறான், அவளின் காதலை பெற்றானா என்பது தான் கதை……

நந்தன், டாக்டருக்கு படிச்சாலும் பொறுமைக்கும் இவனுக்கும் ரொம்ப தூரம்…

கொடுமையை கண்டா பொங்க வேண்டியது, அதை சரண் பார்த்துட்டு அவனுக்கு அவ பொங்கல் வைப்பா🤭🤭🤭🤭🤭….

இப்படி இருந்தா காதல் எப்படி வரும், காண்டு தான் வரும்….

அது தான் அவளுக்கும் வந்தது😂😂😂😂😂….

காண்டு காதலியை, காதலிக்கும் மனைவியாய் மாற்ற கொஞ்ச பொறுமை வேணும்னு அவனும் படிக்க போய்ட்டான், நண்பன் சொல் கேட்டு......

சரண்யா, ரொம்ப பண்றா அப்படினு தோனினாலும், எதை வெச்சி அவனை நம்புவா?????

பார்த்தவுடன் காதல், பின்னாடியே அலைதல், மீதி நேரம் எல்லாம் அநியாயம் கண்டா அடித்தல், பெண்கள் சூலா உலாவுதல் அப்படினு இருந்தா அவளும் தான் என்ன செய்வா????

ஆன சில இடத்தில் இவ பண்ணினதும் தப்பு தான்…..

கடைசில அவன் காதலை உணர்ந்தாலும் அவளோட காதலை நமக்கு உணர்த்த முடியாம போச்சி….

ஹும்ம், ரைட்டருக்கு என்ன கோவமோ அவ மேல😜😜😜😜…..(ஒரு வேலை முரட்டு ஹீரோ ஆர்மியா இருப்பாங்க போல🤔🤔🤔🤔)

சஞ்சய், இவனை சொல்லியே ஆகனும்…

”நட்புனா என்னனு தெரியுமா, சஞ்சய்னா
யார் தெரியுமா”....

இப்ப நந்து டாக்டரா இருக்க முக்கிய காரணம் இவன் தான், அவன் தடுமாறும் போது எல்லாம் இது தான் உன் வழினு காமிச்சு…சரியா வழி நடத்தினவன்👏👏👏👏👏

அழகான நட்பு, காதல் சொல்லும் ஃபீல் குட் கதை🥰🥰🥰🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 
Top