எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாலையில் பால் நிலா

santhinagaraj

Active member
பாலையில் பால் நிலா

விமர்சனம்

கல்லூரி காதல், நட்பு கலந்த பீல் குட் லவ் ஸ்டோரி.

நந்தன் தன் கல்லூரியில் படிக்கும் பெண்ணான சரண்யாவின் மீது ஒரு தலை காதல் கொள்கிறான். ஆனால் அவளுக்கு அந்த காதலில் விருப்பமில்லை.

ஒரு பொண்ணுக்கு காதல் இல்லாம தொடர்ந்து காதல் சொல்லிக்கிட்டு இருந்தா அந்த பொண்ணுக்கு அவன் மேல வெறுப்பு தான் வரும் அதே மாதிரி தான் நந்தன் போயிட்டு அவளை காதலிக்கிறேனு சொல்லும் போது கோவமா பேசிடுவா. இப்படி அவ அவன் காதலை ஏற்காமல் இருக்கிற நேரத்துல காலேஜ்ல நடக்குற எல்லா பிரச்சனைகளிலும் தானே தலைய கொடுத்து அவன் மீது இன்னும் வெறுப்பு வரும்படி நடந்து கொள்கிறான்.

ஒருதலையாக காதலித்து தன்னை சுற்றி வருவதிலேயே வெறுப்பாக இருப்பவள் காலேஜ் அடிதடி ரகலையில் ஈடுபடும்போது இன்னும் கோபம் அதிகமாகி காண்டாகி விடுகிறாள்.

இப்படி அதிக கோபத்திலும் வெறுப்பிலும் இருப்பவளை எப்படி மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் இவர்கள் எப்படி வாழ்க்கையில் சேருகிறார்கள் என்பதை சுவாரசியமாய் கொடுத்த விதம் சூப்பர் 👌👌👌

சில இடங்கள்ல சரண்யா மீது கோபம் வருது இவ ஏன் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இப்படி பண்றா அப்படின்னு..

சஞ்சய் இவனுடைய நட்பு பற்றி சொல்லியே ஆகணும் இப்படி ஒரு நண்பன் கிடைப்பது ரொம்ப பெரிய வரம்.
சரியான நேரத்தில் இவன் கொடுக்கும் அறிவுரையும் அவனுக்கு வாழ்க்கைக்கு காட்டும் வழியும் ரொம்ப சூப்பரா இருந்தது 👏👏👏

முதல் பாதி பொறுமையா நகர்ந்தாலும் அடுத்த பாதி ரொம்ப வேகமா நகர்த்தின மாதிரி இருந்துச்சு

வெறுப்போட கல்யாணம் பண்ணும் சரண்யா நந்தனோட காதலை புரிந்து கொள்கிற விஷயங்களை கொஞ்சம் காதல் சீன்களோடு வைத்திருந்தால் இன்னும் நல்லாவே இருந்திருக்கும்.
அவ்வளவு வெறுப்போடு இருந்தவளுக்கு இறுதியில் வந்த காதல், நம்பிக்கை கடைசி கட்டாயமாக வரவைத்த நம்பிக்கை மாதிரி இருந்தது.


நந்தனோட அம்மா கேரக்டர் ரொம்ப சூப்பரா இருந்தது.

கல்லூரி காலத்தில் ஏற்படும் காதல் தான் பெருசு என்று காதலின் பின்னாடி அலையாமல் தன்னுடைய படிப்பிலும் கவனம் செலுத்தி ஒரு நல்ல நிலைக்கு வந்த விதம் அருமை 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐

( நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு அதை கொஞ்சம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.)
 
Top