எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே! 8 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 8​

நிலாவின் காயங்களுக்கு மருந்து போட்டு கொண்டிருந்தான் இன்பா. அவனை அவன் முகத்தை தான் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் நிலா. தன்னை தேடி அவன் இதயம் துடித்த துடிப்பு அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. எனக்காக ஏன் இவன் இவ்வளவு துடிக்க வேண்டும்?? நான் தான் இவனை ஏற்கவே இல்லையே.. ஒரு வார்த்தை கூட அவனிடம் இயல்பாக பேசியது கூட இல்லையே.. பிறகு ஏன் இவனுக்கு என் மீது இத்தனை பிரியம்?? அன்று ஒருநாள் நடந்த கூடலின்னாலா?? மூளையை கசக்கி பிழிந்து யோசித்து கொண்டிருந்தாள்.​

இவ்வளவு கஷ்ட படாமல் ஏன் என்று மனதை கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும் அவளுக்கு..​

போலீஸ் வந்தது தெரிந்து தப்பி ஓட முயன்றவர்களை சுற்றி வலைத்து போலீஸ் இழுத்து செல்ல மன்னவன் மார்பில் அடங்கினாள். தாய் பறவை சூடு தேடும் குட்டி பறவையாக. அவளை அணைத்து கொண்டவன் மனதில் நிம்மதி பரவியது. வீட்டுக்கு போகலாம் என பிரகாஷ் அழைக்க "என் பொண்டாட்டி இனிமே என்கூடவே இருக்கட்டும்" என்று தன்னுடனே அழைத்து வந்துவிட்டான்.​

அவளும் மறுப்பேதும் சொல்லாமல் சுவற்றில் மோதி நின்ற பேட்டரி காரை திருப்பிவிட்டது போல அவனுடனே சென்றாள். வீட்டுக்குள் நுழைந்ததும் "குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்து.." என்றான் அவளை பார்க்காமலே.​

அவள் அசையாமல் அப்படியே நிற்க, தலையை மட்டும் திருப்பி அவளை பார்த்தான். "எதுக்காக எனக்காக வந்திங்க??" பதிலை தெரிந்து கொள்ளும் ஆவலோடு கேட்க "முதல்ல குளி. ப்ளீட் ஓவராகி ட்ரெஸ் ஈரமாகி இருக்கு பாரு.." என்று கூற அவசரமாக தலையை திருப்பி பின் பக்கம் பார்க்க அதிகமாகவே கரையாகி இருந்து. அதன் பின் எதுவும் கேட்காமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.​

குளித்து முடித்து வந்தவளுக்கு தேவையான நாப்கீன்கள் அவள் கிளோஸ்செட்டில் இருக்க மனதில் ஒரு நிம்மதி.. ஈர தலையுடன் இருந்தவள் கூந்தல் உலர்த்தி முடிக்க உணவு தட்டோடு வந்தான் இன்பா. கிட்சடியும் தேங்காய் சட்டினியும் எடுத்து வந்து டீபாயில் வைத்தவன், அவளை அமர வைத்து அவள் காயங்களுக்கு மருந்து போட்டு கொண்டிருந்தான்.​

அவனையே பார்த்தவள் "எதுக்காக என்ன தேடி வந்திங்க??" அவன் விழி பார்த்து கேட்க "இது என்ன கேள்வி? நீ என் பொண்டாட்டி.. உனக்காக நான் வராம வேற யார் வருவா??" அசட்டையாக பதில் கூறியவனின் கவனம் முழுக்க அவள் காயங்களுக்கு மருந்திடுவதில் தான் இருந்தது.​

பெரிதாக அடி ரத்தம், தையல் போடும் அளவுக்கு காயம் இல்லை என்றாலும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது விழுந்து, எதிரில் இருந்த மிஷின்களில் மோதி என சின்ன சின்ன காயங்களும், கழுத்து, முட்டி கை என சிராய்ப்புகளும் இருக்கவே. அதற்கு தான் பார்த்து பார்த்து அரை மணி நேரமாக மருந்து தடவி கொண்டிருக்கிறான்.​

"அப்புறம் ஏன் என்ன என் அப்பா வீட்டுல கொண்டு போய் விட்டிங்க??" கோபத்துடன் கேட்க "அப்போ நீயும் நானும் டிஸ்டர்ப்பா இருந்தோம். நீ உன் வீட்டுல சந்தோஷமா பாதுகாப்பா இருப்பேன்னு நினைச்சேன்.. நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவேன்னு நினைச்சேன்.." என்றவன் கை கழுவி சுத்தம் செய்துவிட்டு வந்து சாப்பாடு ஊட்ட வாங்கி கொள்ளாமல் அவனை முறைத்தவள் "இப்பவும் என்னால உன்ன ஏத்துக்க முடியல.." என்றாள் மனதில் அழும் காதல் குழந்தையின் அழுகையை உணராமல்.​

பெரிதாக அலட்டி கொள்ளாமல் அவள் வாயில் உணவை திணித்தவன் "எனக்கு தெரியும்.." என்றான்.​

இருவரிடயேயும் அமைதி. "அப்புறம் ஏன் கட்டி புடிச்சேன்னு கேக்க போறிங்களா??" என்றவளை பார்த்தவன் "இல்ல நிலா.. என்னால உன்ன புரிஞ்சுக்க முடியும். நான் உன் புருஷங்குற ஆசைல பாசத்துல என்ன நீ கட்டி புடிக்கல. ஆள் அரவம் இல்லாத காட்டுல தனியா விட பட்டவன் பல நாட்கள் கழிச்சு யாரோ ஒரு மனுஷன பாக்கும் போது அவனுக்கு எப்படி இருக்குமோ அப்டி தான் உனக்கு இன்னைக்கு என்ன பார்த்தப்ப இருந்திருக்கும். அதனால தான் ஓடி வந்து ஹக் பண்ணிக்கிட்ட.." என்றான்.​

அது உண்மை தான். ஆனாலும் அவன் மீது ஏற்பட்டுள்ள இனம் புரியாத உணர்வுக்கு பெயர் என்ன என்று அவள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.​

சில நிமிடங்கள் அமைதியாக கடந்து செல்ல "என்னால உங்கள ஏத்துக்க முடியல.." என்றாள் மனதில் வலியுடன்.​

நிமிர்ந்து அவளை பார்த்தவன் "சரி.." என்று முழுமையாக ஊட்டி முடித்து எழுந்தான்.​

"நீ என்ன விரும்பு, விரும்பாம போ.. ஏத்துக்கோ ஏத்துக்காம போ.. எனக்கு அத பத்தி கவலை இல்ல.. ஆனா என் கூடவே இரு.. அது போதும் எனக்கு.." என்றுவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.​

"எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. ஆனா உனக்கு என்ன பிடிக்கணும்னு நான் எதிர்பார்க்குறது சரியான்னு தெரியல.. ஆனா எதிர் பார்க்கிறேன்.." என்றான் அவள் பூ முகம் பார்த்து. அவள் அவனை அழுத்தமாய் பார்த்திருக்க அவனோ அங்கிருந்து சென்றான்.​

ஏதேதோ யோசனைகள் எண்ணத்தை அலைக்கழித்தாலும் உடல் ஓய்வை தேடியது. படுக்கையில் விழ போன சமயம் ரிங்க்டோனை வெளியிட்டது இன்பாவின் அலைபேசி. அவன் இல்லை என்பதால் தயக்கதோடு போனை எடுத்து அழைப்பை ஏற்க எதிமுனையில் சத்யா.​

"ஹலோ.. அண்ணா… என்ன நடக்குது இங்க?? அண்ணி எங்க ண்ணா?? ஏதேதோ சொல்றாங்க?? அண்ணிய ஏன் தனியா அவங்க வீட்டுக்கு அனுப்புன??" பதற்றத்தில் அவள் பேசி கொண்டே போக, "சத்யா.." என்றான் நிலா.​

பதற்றத்தில் நிலையில்லாமல் தவித்தவள் நிலாவின் குரல் கேட்டு அமைதி அடைந்தாள். "அ.. அண்ணி.. நீங்க நல்லா இருக்கீங்களா?? உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. எங்க இருக்கீங்க அண்ணி?? அண்ணன் எங்க?? உங்க கூட தான் அண்ணன் இருக்கா??" மீண்டும் அவள் கேள்வியாக கேட்க "என்ன பேச விடு.." என்றாள் சிறு புன்னகையுடன்.​

சத்யா எதிர் முனையில் அமைதியாக இருக்க "நான் நல்லா இருக்கேன்.. உன் அண்ணன் கூட வீட்டுல தான் இருக்கேன். அவர் கீழ போயிருக்காரு.." பொறுமையாக கூறினாள்.​

நிம்மதி பெரு மூச்சு விட்ட சத்யா "என்னாச்சு அண்ணி?? ஏன் இப்படியெல்லாம்??" தளர்ந்த குரலில் கேட்க "அவங்க என் ஸ்டுடென்ட் தான்.. அவங்க மேல நான் கம்பளைண்ட் போட்டிருந்தேன். அதனால தான் பழி வாங்க.. இப்படியெல்லாம்.." என்று முடிக்காமல் நிறுத்த,​

"என்கிட்ட கொடு சத்யா.." என்று பானு போனை வாங்கி கொண்டார்.​

"அம்மாடி.." என்று அவர் எதிர் முனையில் அழ "எனக்கு ஒன்னும் இல்ல அத்த.. ப்ளீஸ் அழாதீங்க.." என்றாள் உண்மையான அன்புடன்.​

"இன்பா எங்க??" என்று கேட்க "அவர் இப்போ தான் எனக்கு சாப்பாடு கொடுத்திட்டு போனாரு.. கீழ தான் இருப்பாரு.." என்றாள்.​

"பாத்து பத்திரமா இரு மா.. நாளைக்கு வீட்டுக்கு வரேன். அப்போ பேசிக்கலாம்.." என்றார் பானு.​

"வாங்க அத்த.." இன்முகமாக கூறியவள் இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு இணைப்பை துண்டித்தாள். போனை வைத்து விட்டு படுத்து கொண்டாள். கண்கள் சொருக அப்படியே உறங்கி போனாள். அவள் உறங்கிய பின் வந்த இன்பா அவள் முகம் பார்த்த படி அவள் அருகில் படுத்து கொண்டான்.​

எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்க அவனும் உறங்கி போனான் அவள் மேல் கை போட்ட படி.​

"ஒரு சின்ன வேலைய உங்களால ஒழுங்கா செய்ய முடிலே.. நீங்க என்ன டா பெரிய ரௌடி.." தமிழ் கலந்த ஹிந்தியில் திட்டி கொண்டிருந்தான் அனுராக்..​

"இல்ல சார்.. அவ புருஷனும் அப்பனும் வந்துட்டாங்க.."இழுவையாக கூறினான் அடியாள் ஒருவன். அவனை முறைத்த படி எழுந்து வந்த அனுராக் அவன் கண்ணத்திலே பளாரென அறைந்தான்.​

"வெக்கமா இல்லே உங்களுக்கு.. இப்டி சொல்ல. பெரிய டான்ன்னு சொல்றிங்க. போலீஸ் எங்க கைலன்னு சொன்னிங்க?? அப்புறம் எப்டி டா அவள தேடி ஒரு படையியே அவள தேடி வந்திச்சு.?? எல்லாம் பேச்சு மட்டும் தான் செயல்ல ஒன்னும் இல்லை.." என்று கத்தினான்.​

அணைவரும் தலை குனிந்து நிற்க, போலீஸ் ஒருவர் "டைம் ஆச்சு.. யாரவது பாத்துற போறாங்க.." என்று எச்சரிக்க, எதிரில் நின்ற தன் ஆட்களை முறைத்தவன் "என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. அந்த போலீஸ்க்காரன் பொண்ணு சாவணும்.. இல்ல நான் ஜெயில்ல இருந்து வந்ததும் நீங்க ச​

செத்துருவிங்க.." என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றான்.​

தன் சிறை அறையில் சென்று அமர்ந்தவனை பார்த்துவிட்டு சிறை அறையின் இரும்பு கம்பி கதவை மூடி பூட்டிவிட்டு சென்றார் ஒரு போலீஸ். சுற்றி யாரேனும் தன்னை பார்க்கிறார்களா என்று பார்த்து கொண்டே அந்த போலீஸ் அங்கிருந்து சென்றார். சிறை உடையில் முகம் கடு கடுக்க அமர்ந்திருந்தான் அனுராக். "எங்க போனாலும் உன்ன விட மாட்டேன் டி.. உன் சாவு என் கைல தான். உன்ன கொன்னுட்டு தான் என் புள்ளைக்கு திதி கொடுப்பேன்.." என்று பற்களை அறைத்தான்.​

நிலாவின் தந்தையை பற்றி மட்டுமே அறிந்த அவனுக்கு, அவள் கணவனை பற்றி தெரியாமல் போனது. அவன் தன்னிடம் தீர்க்க வேண்டிய கணக்கே இன்னும் குறையாக இருக்க அவன் மனைவியை நெருங்கினாள் அவன் ஆட்டம் எப்படி இருக்கும் என அறியாமல் சிறையில் அமர்ந்து பிதற்றி கொண்டிருந்தான்.​

உண்மை தெரியாமல் தன்னை ஏற்க மறுக்கும் மனைவி, அணைத்து உண்மையும் தெரிந்து பழி உணர்ச்சி வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கும் தாய், பழி தீர்த்து கொள்ள துடிப்பவனை கட்டு படுத்தி அமைதி அடைய வைக்கும் மாமனார். இவர்களை தாண்டி தன் பழைய கணக்கை தீர்த்து, தன் மனைவியை காப்பாற்றி வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்வானா இன்பா??​

தொடரும்…​

 

Mathykarthy

Well-known member
அனுராக் இவன் தான் வில்லனா... அந்த காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் இவனோட ஆளுங்களா...🤔 பையனுக்காக நிலாவை பழி வாங்க நினைக்குறான் இவன் அப்பாவுக்காக இவனை பழி வாங்க இன்பா கத்துக்கிட்டு இருக்கான்...
இதுக்காக தான் பானு பையனைப் பிரிந்து இருந்துருக்காங்க... 😒
 

Advi

Well-known member
இந்த அனு என்ன அணுகுண்டு மாதிரி இப்படி இருக்கான்😳😳😳😳😳

இன்பா வாழ்க்கையில் முன்னாடி என்ன நடந்தது?????
 
Top