எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 7

NNK-41

Moderator

அகம் 7​

420805777_397064856212700_1428467242205632627_n.jpg

“மலர் எப்படி ம்ம்…. நல்லா இருக்கீயா டா?” தடுமாறி வந்தன வார்த்தைகள். தன்னையே நொந்துக்கொண்டான் நிலவன். இயல்பாககூட தங்கையிடம் பேச முடியவில்லை. இப்பொழுது அவள் பட்டத்துன்பம் அறிந்தபின் அக்கறையாக பேசுவதற்குகூட நா ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே என்ற குற்ற உணர்வு அவனை ஆட்கொண்டது. ஆனால் அவளுக்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை போலும்​

“ஓ… இப்போதான் என் ஞாபகம் வந்துச்சா ண்ணா?” இயல்பாக கேட்க​

“இல்லடா நேத்து நீ டையர்டா இருப்பனு மாறன்கிட்ட கால் பண்ணி பேசினேன். அவரும் அதைதான் சொன்னார். நீ படுக்க போயிட்டனு” நிலவன் விளக்கம் கொடுக்க​

“ஓ… நெடுமரம்கிட்ட பேசினீயா?” என்றவளின் விளிப்பில் சற்று அதிர்ந்தாலும் நிலவனுக்கு சந்தோஷமாக இருந்தது. தங்கையின் குரலில் வந்த பேதங்களை கண்டு கொண்டதன் பலனாக அவன் கண்களில் நீர் படலம். உரிமையாக கோபப்படுகிறாள்… நையாண்டி பேசுகிறாள்… கூடவே குரலில் சிறு துள்ளல் வேறு. நெகிழ்ந்து போனான் நிலவன்.​

மறுபுறம் சத்தம் ஏதும் கேட்காததால் மலருக்கு குழப்பம் வந்து விட்டது. அதிகப்படியாக உரிமை எடுத்துக்கொண்டு விட்டோமோ? என்றும் இல்லாமல் இன்று ஏன் இப்படி பேசினேன்? ஐயோ கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தை பிடிக்கிறாளே என்று எண்ணிவிட்டாரோ?​

“ண்ணா..” நலிந்த குரலில் மலர் அழைக்க​

கணவன் நிலை கண்டு கைபேசியை பறித்தாள் மஞ்சரி. “என்னை எல்லாம் ஞாபகம் இருக்கா மலர்?” எதிர்பாராவிதமாக அண்ணியின் குரல் கேட்டதும் பயந்து போன மலர்​

“யாரு அண்ணியா!! ஐயோ அண்ணி!! ஸாரி அண்ணி.. இனி அண்ணன்கிட்ட உரிமை எடுத்து பேச மாட்டேன். ஏன்னு தெரியல மேபி தூரத்துல இருப்பதால… இல்ல இல்ல என் நிலை தெரியாம கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டேன். ஸாரி அண்ணி… ரொம்ப ஸாரி”​

மலரின் புலம்பல்களை கேட்ட மஞ்சரிக்கு ஐயோவென்றிருந்தது. என்ன பெண்ணிவள்? என் அண்ணனிடம் எனக்கு பேச உரிமை இருக்கிறது என்று சொல்லாமல் இப்படி நடுங்குகிறாளே என்ற எண்ணத்துடன் கணவனை பார்க்க…. அவனோ இடிந்துபோய் நின்றிருந்தான். அவனும் கேட்டுவிட்டான் போலும். மஞ்சரியால் இரு உள்ளங்களின் தவிப்பை சகித்து கொள்ள முடியவில்லை.​

இதுநாள் வரை கணவனின் சந்தோஷம் மட்டுமே தன் கடமை என சுயநலமாய் இருந்ததை நினைத்து வருந்தினாள் மஞ்சரி. பாவம் இவள். பேச முயற்சித்திருக்கலாம்... அடடா!! சிந்தனையில் அவ லைனில் இருப்பதை மறந்துட்டேனே!! இந்நேரம் அவள் என்னென்ன யோசித்திருப்பாளோ என்ற எண்ணம் வர​

“அது என்ன உன் அண்ணனிடம் பேசுவதற்கு என்னிடம் ஸாரி கேட்கிற மலர்!! உன் அண்ணனை நான் என்ன புடவை முந்தானையிலயா முடிஞ்சு வச்சிருக்கேன்? முடிஞ்சி வச்சிருக்கிற உருவமா உன் அண்ணன். ஆறு கஜம் புடவையில ஆறடியை அடக்கி வைக்க முடியுமா?” என்று சொல்ல அதிர்ந்து போனாள் மலர். அண்ணியா தன்னிடம் பகடி பேசுவது..​

“என்னம்மா சத்தத்தை காணோம்?”​

“ஆங்… அது… முடியாதுதான் அண்ணி..” அதிர்ச்சியிலிருந்தவள் எதையோ சொல்லி சமாளிக்க​

“சரி… இந்தா வருண் உன்கிட்ட பேசனுமாம்” அலைபேசியை மகனிடம் கொடுத்துவிட்டு கணவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள். என்னதான் இருந்தாலும் அந்த சின்ன பெண்ணிடம் சகஜமாக பேசியிருக்கலாம். தான் உண்டு தன் கணவன் உண்டு என்று இருந்ததை நினைத்து குற்ற உணர்வுக்குள்ளானாள் மஞ்சரி.​

“த்தை… நீ எங்க கோ? நா ரூம் போய் பாத்து. த்தை நோ… கம் த்தை” வருண் மழலை குரலில் பேச… மற்றதெல்லாம் மறந்துபோனது மலருக்கு.​

“கண்ணா என்னை தேடினீங்களா? அத்தை வேலைக்கு வந்திருக்கேன்டா கண்ணா… “ அவளும் குழந்தையாகி மருமகனுடன் ஒன்றிவிட்டாள்.​

மலரை காலை உணவு உண்பதற்கு அழைக்க வந்த மாறன் காதில் அவளின் சம்பாஷனைகள் அனைத்தும் விழுந்தன. என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறாள் என்ற நினைவுடன் வாசலில் நின்றிருந்தவன்… அவனரியாமல் அவளை நோக்கி சென்று கொண்டிருந்தான்.​

யாரோ வரும் அரவத்தில் திரும்பியவள் மாறனை கண்ட அதிர்ச்சியில் கண்களை விரித்து அவனை பார்க்க… மென்னகை பூண்டவன் காதில் இருக்கும் கைபேசியை பார்த்து​

“நான் பேசலாமா?” மென்மையாக கேட்க​

“எ… என்ன??” கண்கள் அவனின் விரிந்த இதழில் படிந்தன​

“உன் மருமகன்கிட்ட பேசலாமா என்று கேட்டேன்?” அவளின் அகத்தில் நுழைய விழிகளை வாசலாக எண்ணி நுழைய முற்பட்டான்​

“ஆ.. அது… அவன்..” சொல்லி கொண்டிருக்கையில் அவள் கையிலிருந்து கைபேசியை வாங்கியவன் புன்னகையுடன் காதில் வைக்க… அங்கே இச் இச் என்று சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஓ முத்தம் கொடுக்கிறானோ பேசியின் தொடு திரையை காதிலிருந்து எடுத்து பார்க்க… அவளின் செர்ரி இதழ்வரி தொடுதிறையில் அச்சடிக்கப்பட்டிருக்க… தென்றல் தழுவிய உணர்வு அவனுள்​

“ஹாய் சாம்ப்” என்றான்​

“ஹூ ஆர் யூ” சின்னவன் மிரட்ட்​

“மீ மாறன்… மாறன் மாமா”​

“ஓ.. மாமாவா… ஹாய் மாமா” என்று பேச ஆரம்பிக்க… சட்டென அவன் கையிலிருந்து பேசியை வாங்க்கியவள் “கண்ணா அத்தை அப்புறம் கால் பன்றேன். மிஸ் யூடா கண்ணா!! பை!!” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.​

குழந்தைத்தனமான அவள் செய்கைகளை ரசனையுடன் பார்த்திருந்தான் மாறன். இன்றைய விடியல் அவனுக்கு மிக இனிமையாக தோன்றியது.​

“ஏன் வருண்கிட்ட ம்ம்ம்.. மாமானு சொன்னீங்க ஸார்?” தயக்கத்துடன் கேட்க​

“உன் மருமகனைவிட… ம்ம்ம்.. வாட் இஸ் ஹிஸ் நேம்… ஹாங் வருண். வருணைவிட எனக்கு எப்படியும் இருபத்தைந்து வயது அதிகம் இருக்கும். அண்ணானு கூப்பிட சொல்ல முடியாதில்லையா..”​

“அங்கிள் என்று” சொல்ல வந்தவள் உதட்டை கடித்துக்கொண்டாள்​

“அதைதான் தமிழில் சொன்னேன். அங்கிள் தமிழில் மாமாதானே? அதுவும் மாறன்.. மாமா ரைமிங் சூப்பரா இருக்குல” என்றவனிடம் ‘சித்தப்பாவையும் அங்கிள் என்றுதான் கூப்பிடுவாங்க’ என்று சொல்ல வந்தவளுக்கு அதை எப்படி இவனிடம் சொல்வதென்று புரியாமல் தவிப்புடன் நின்றிருந்தாள்.​

“காலை உணவு எடுத்துட்டு வேலை செய்யும் இடத்துக்கு கூட்டிட்டு போகலாம் என்று வந்தேன். போகலாமா?” என்று அவன் கேட்க…​

“இல்ல சமையல்காரம்மா கிட்ட சொல்லியிருந்தா அவங்களே வந்து கூப்பிட்டு…” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்​

“ஏன் நான் வந்து கூப்பிட்டதுல என்ன குறைஞ்சி போச்சி? நான் என்ன சாப்பாடுக்கு பதிலா உன்னை சாப்பிட்டுருவேன்னு நினைக்கிறீயா? நான் என்ன பூதம் போலவா இருக்கேன்? இல்ல நான் உன் ரூமுக்கு வரக்கூடாதுனு நினைக்கிறீயா?” சுதி ஏரியிருந்தது குரலில்… அவனை ஏறிட்டு பார்த்தாள்.​

‘ஹப்பா!! எத்தனை கேள்விகள்? சினிமா ஹீரோபோல இருக்கான்… இவனை யாராவது பூதம் என்று சொல்லுவாங்களா? இன்னும் எதுவோ ஒன்று சொன்னானே… ஆங்… அய்யோ நெடுமரமே இது உன் வீடு!! இல்ல… இல்ல… பங்களா!! நான் எப்படி உன்னை வர வேண்டாம்னு சொல்ல முடியும்? ஆனா… அன்று சுதீஷும் இப்படிதான் என் ரூமுக்குள் வந்தான்… ஐயோ ஐயோ ச்சே!! என் புத்தி போகும் இடத்தை பாரு!! யாருக்கு யாரை கம்பேர் பன்றேன்? அவன் எங்கே? இவன் எங்கே?’ என்று மனசாட்சி சாதக பாதக ஆராயும் வேலைகளை செய்ய… இன்னும் அவனை ஆராய்ந்தாள். மூக்கு சிவந்திருந்தது… கோபமாக இருக்கிறான் என்பதை உணர்ந்தவள் தவித்து போனாள்​

“இல்ல அ.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. நா… நான் அப்படி நினைக்கல! நீங்க ரொம்ப ஹேன்சம்… ஹீரோ மாதிரி இருக்கீங்க. பூதம் எல்லாம் இல்ல!” அவசர அவசரமாய் சொன்னவளின் ஆராய்ச்சி பார்வையில் கோபம் எல்லாம் இலவம் பஞ்சாய் பறந்திட…​

“அவங்க பெயர் செல்லம்மா” சற்று நெருங்கி நடந்துக்கொண்டே அவன் சொன்னான்.​

“யாரு?”​

“சமையல்காரம்மா பெயர் செல்லம்மா” என்றான்​

“ஓ..” மீன்குஞ்சு போல் வாய் குவித்தாள்​

“இனி அப்படியே கூப்பிடு!” என்றவனின் குரல் ஏகத்துக்கும் குழைந்திருந்தது. அவளுடன் இணைந்து நடைபயில வெகுவாக விரும்பினான்.​

*****************​

“செல்லம்மா உங்களை எப்படி செல்லமா கூப்பிடறது?” சாப்பாடு மேஜையில் அமர்ந்திருந்த வசந்தன் வடையை கடித்துக்கொண்டே கேட்க​

“செல்லம்மாதான்..” உணவை மேஜையில் அடுக்கிக்கொண்டே செல்லம்மா சொல்ல​

“அதான் செல்லம்மா அதைதான் எப்படி செல்லமா சுருக்கி கூப்பிடறது?” மறுபடியும் கேட்க​

“இருக்கிறதே தம்மாத்துண்டு பேரு… அத்தையே எப்படி சுருக்கிறது? செல்லுனு போக சொல்லுவியா இல்ல செல்லானு சொல்லி செல்லாகாசா ஆக்கப்பாக்கிறீயா?” செல்லம்மா அதிரடியாய் கேட்க​

“வாவ்… தமிழ் உன் வாயில் புகுந்து என்னமா விளையாடுது?” சிலாகித்தான்​

“எங்கனையும் பூந்து விள்ளாடல தம்பி… இதுதான் நம்ம தமிழு! எப்புடி பேசினாலும் ஜம்முனு இருக்கும்”​

“ஆமா ஆமா செல்லம்மா போடுற வடை போல ஜம்முனு இருக்கும்”​

“ந்தா… ஐஸ் வக்காத தம்பி… டிசம்பர் குளிருல ஜலதோஷம் பிடிச்சிக்க போகுது!’​

“அது என்ன? கண்ணுல வந்தா கண்ணீர் மூக்குல வந்தா மட்டும் ஜலதோஷம்? மூக்கு மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு அதுக்கு தோஷம் வர?” வசந்தன் மறுபடியும் ஆரம்பிக்க​

“அதுக்கு நான் பதில் சொல்லவா ண்ணா?” என்று வந்தாள் மலர்.​

“ஐயோ நான் அண்ணா இல்ல மேடம்!” அலறினான்.​

“அதை விடுங்க!! உங்களோட நான் பழகினா எனக்கு தோஷம் வந்திரும் ஒத்துக்குறீங்களா?”​

“அதெப்படி வரும்?”​

“அதுக்கு பெயர்தான் பழக்கதோஷம். எப்புடி?” புருவம் உயர்த்தினாள். வசந்தன் தலையை சொரிய. மாறனும் செல்லாம்மாவும் சிரித்துக்கொண்டனர்.​

*************​

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன

உன் மனதில் மனதில் மனதில் உள்ள

முதல் வரி என்ன

முதல் வரி என்ன

காரின் ப்ளேயரில் பாடல் ஓடிக்கொண்டிருக்க… ஓட்டிக்கொண்டிருந்தவனும் சேர்ந்து பாடினான். அவன் அருகில் வசந்தன் பவ்யமாக அமர்ந்திருந்தான். நேற்றைய அதிர்ச்சி இன்று இல்லை போலும். மாறனின் புது அவதாரத்தை உள்வாங்கி கொண்டிருந்தான் அவன்.​

கண்ணாடி ஊடே மலரின் முகத்தை பார்த்தான் மாறன். ஒவ்வொரு நாளும் அவளுக்காக யோசித்து செயல்படுகிறான். அவளின் பிடித்தம் அனைத்தையும் மறுபடியும் அறிமுகப்படுத்துகிறான். குறுக்கே கௌஷிக் வாந்தா போல இடையே தன்னை உணர்வாளா என்ற நப்பாசையும் அதில் உண்டு.​

அவளுக்கு பிடித்த ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் அவளுள் ஏதேனும் மாற்றங்களை தருவித்திருக்கிறதா என்று ஆராய்ந்தான். அவளோ கொடைக்கானலில் கொட்டிக்கிடந்த இயற்கை அழகில் லயித்திருந்தாள். பெருமூச்சுடன் சாலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.​

‘இவ ரசிக்கிறதை பார்த்தா இனி மரத்துடனும் பறவையுடனும் பேச்சு வார்த்தை நடத்திடுவா போல… நடமாடும் குல்முஹர் போல இருந்துட்டு மனுசனை கொல்லுறா. அவளுக்கேத்த பாட்டை தேடி எடுத்து போட்டா… பாவி கண்டுக்க மாட்டிக்கிறா!! என் அவஸ்த்தை இவளுக்கு எப்போ புரியுமோ??’ மனதோடு முனுமுனுத்து கொண்டான்.​

வசந்தன் ஏதோ கேட்க… அவனுக்கு பதில் சொல்லி கொண்டிருக்கையில் பாடல் இடைஞ்சலாக இருக்க… சத்தத்தை குறைத்தவன் பேச முனைகையில் அவன் காதில் வண்டின் ரீங்காரமாய் அவளின் ஹம்மிங் வந்து நுழைந்தது.​

கண்கள் மின்ன வசந்தனை பார்த்தவன் “ஹம்மிங் பன்றா” என்று வாயசைக்க.. ஆமோதிப்பாய் அவனும் தலையசைத்தான். பாடல் தொடர்ந்தது​

என்னை விடவும் என்னை அறிந்தும்

யாரி நீ என்று கேட்காதே

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்

என்னையும் கவிஞன் ஆக்காதே

குல்முகர் மலரே குல்முகர் மலரே

கொல்ல பார்க்காதே

உன் துப்பட்டாவில் என்னை

கட்டி தூக்கில் போடாதே

பாடல் முடிந்ததும் என்ன நினைத்தாளோ பக்கென சிரித்துக் விட்டாள்.​

“ஜோக்கை பகிர்ந்துக்கலாம் தப்பில்லை” என்ற மாறனை பார்த்ததும் சிரிப்பு நின்றுவிட… பார்வையை தாழ்த்திக்கொண்டு “ஸாரி..” என்றாள் மென்மையாக​

“ஸாரி என்ற சொல்லுக்கா டீச்சர் சிரிச்சீங்க?” புருவம் உயர்த்தி மாறன் கேட்க​

“இல்ல… இந்த பாட்டுல வரும் வார்தைகளை கேட்டதும் சிரிப்பு வந்திடுச்சி அதான்…”​

“சொல்லுங்க மேடம் நாங்களும் கேட்டு சிரிக்கிறோம்” வசந்தன் உசுப்ப​

“அது வந்துண்ணா..”​

“ஐயோ நான் அண்ணன் இல்ல மேடம்” எப்பொழுதும் போல அவன் அலற​

“ப்ச்!! டீச்சரை சொல்ல விடு வசந்தன்..” கண்ணாடியூடு அவளை பார்க்க​

“அந்த துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதேனு வருதுல… அது கேட்டு சிரிப்பு வந்திடுச்சி. நார்மலி பெண்கள்தானே மனமுடைந்து துப்பட்டாவில் தூக்கு போட்டுக்குவாங்க. இந்த பாட்டுல உல்ட்டாவா சொல்லுறாங்களேனு சிரிப்பு வந்திடுச்சி”​

அவள் பேச்சு கேட்டு வசந்தன் சிரித்தான். மாறனால் சிரிக்க முடியவில்லை. மனதில் ஏதோ ஒன்று இடறியது. இது என்ன மாதிரியான ஆராய்ச்சி. சாதாரணமாக சொல்கிறாளா இல்ல மனமுடைந்து… அதற்கு மேல் அவனால் யோசிக்க முடியவில்லை. உடலில் மெல்லிய நடுக்கம் உருவானது. உள்ளங்கைகள் பிசுபிசுத்தன. சிறு வினாடிகளில் தன்னை சுதாகரித்தவன்​

“அது அப்படி இல்ல இனியாழ். மலர் என்றாலே மென்மைதானே! மென்மை கொண்ட மலரை காதலியாக எண்ணி தன்னை காதலால் கொலை செய்வதாக சொல்லுகிறான் காதலன். அவனை பற்றி அறிந்தும் அவனை யார் என்று கேட்கிறாளே அது எத்தனை கொடுமை தெரியுமா??” என்றவன் அத்துடன் அமைதியாகி விட்டான்.​

அவளும் எதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். அவனின் விளக்கம் அவளை என்னவோ செய்தது.​

*********************​

பள்ளிகூடத்துக்கு அழைத்து செல்வார்கள் என்று அவள் நினைத்திருக்க வந்து சேர்ந்ததுவோ ஒரு அழகிய பூஞ்சோலையின் நடுவே வீற்றிருக்கும் ஒரு தொடர் வீட்டுக்கு. பெயரும் மலர்வனம். மலரும் பூப்போல் அவள் முகமும் விகசித்தது. கார் நின்றதும் யாரையும் கண்டுக்கொள்ளாமல் இறங்கி விட்டாள்.​

குழந்தைகளின் சத்தம் எங்கிருந்தோ கேட்டது. கால்கள் சத்தம் வந்த திசை நோக்கி செல்ல… நாசியில் உணவின் நறுமணம் வந்து வேறு பக்கம் இழுத்தது. இரண்டுக்கும் நடுவே திண்டாடியவள் நின்றுவிட்டாள்.​

“இனியாழ்..” காதின் அருகே மாறன் மென்மையாக அழைக்க… அவளுக்கு கண்ணீர் வந்தது. நேற்று இங்கு வந்ததிலிருந்து எதோ ஒர் உணர்வில் தாக்கப்படுகிறாள். தனக்கு பிடித்தவைகள் அனைத்தும் கிட்டுவதுபோல் ஒரு தோற்றம். மாயையோ அல்லது கற்பனையோ அவள் அறியாள்.​

தடாகத்தில் தள்ளாடும் தாமரைபோல் தளும்பி நின்றிருந்தாள். முதுகின் பின்னே இரண்டு சிறகுகள் முளைத்ததுபோல் பரவசம். ஏங்கி கிடைக்காத ஒன்று கிட்டியதுபோல் உணர்ந்தாள். அவளின் முகபாவங்களை அவதனித்துக்கொண்டிருந்த மாறனுக்கும் கண்களில் மெல்லிய நீர்வரி.​

தன் ஆள்காட்டி விரல்கொண்டு அவள் முகத்தை திருப்பிய மாறன் ஓர் இடத்தை சுட்டி காட்டினான். குளத்தில் மேல் தளும்பும் பௌர்ணமி நிலவின் பிம்பம் அவள் விழிகளில். அதில் சொர்க வாசலை கண்டதுபோல் பரவசமானான். தன் தொடுகையை அவள் வெறுக்கவில்லை என்று மனம் கூத்தாட… அடுத்த வினாடியே உணர்ந்தாளா என்று தெரியவில்லையே என்ற குழப்பம் வந்தமர்ந்தது.​

அவன் சுட்டிகாட்டியது ஓர் அழகிய வீடு. என்றோ அவள் கனவில் வந்துபோனதுபோல் தோன்றியது அவளுக்கு. சின்ட்ரெல்லா கதைபோல் விசித்திரமாக இருந்தது. விழிவிரித்து மாறனை பார்த்தாள்.​

அவன் கண்கள் எதையோ சொல்ல முயல்கின்றன. குழந்தைகளுக்கு பாடம் சொல்ல வந்தவள்தான்… அவளே குழந்தையாய் மிழற்றினாள். அவள் உதடுகள் அசைந்தன. வார்த்தைகள் புரியவில்லை அவனுக்கு.​

“என்ன இனியாழ்?” என்று அவன் கேட்க… தெளிவாய் சொன்னாள்​

“யார் நீங்க?”​

அகம் திறக்க விழிச்சாவி​

 

NNK-41

Moderator
அருமையான எபி!!... இவனை இவள் மறந்துட்டாளா???... இன்ட்ரெஸ்டிங்!!..
அவளின் நினைவுகள் அவளின் டைரியேலேயே தங்க்கிவிட்டது. மிக்க நன்றி டியர்:love:
 

Advi

Well-known member
இவனை மறந்துட்டா போலவே.....கவிதையா இருக்கு ஜி 🥰🥰🥰❤️❤️
 

NNK-41

Moderator
இவனை மறந்துட்டா போலவே.....கவிதையா இருக்கு ஜி 🥰🥰🥰❤️❤️
அவ நினைவுகள் டைரியோட மட்டுமோ... மிக்க நன்றி டியர்:love:
🥰😘😍
 
Top