எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள் - கதை திரி 6

NNK-50

Moderator
1706964383977.jpeg

ஆதவன் நிர்மலா திருமணம் மிக எளிமையாகக் கோவிலில் நடந்தது, நிர்மலாவின் பெற்றோர் சொன்னது போலவே மகளுக்குக் கொஞ்சம் நகைகள் போட்டுச் சீர்வரிசை கொடுத்தனர், அதோடு அவர்களிடம் அவள் கொடுத்திருந்த அவளின் சம்பளத்தை அப்படியே அவளிடம் கொடுத்துவிட்டனர்.

திருமணம் எளிமையாக நடந்ததில் இருவருக்குமே கொஞ்சம் எரிச்சல் இருந்தது ஆனால் யாரிடம் காண்பிக்க என்றுதான் தெரியவில்லை, திருமணம் முடிந்து கோவில் மண்டபத்திலேயே உணவும் முடிந்திருக்க அருகில் இருந்த உறவுகள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர், மற்றவர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர் அவர்களுக்கு இளைப்பாறவேண்டிய ஏற்பாடுகளை அதிவீரன் பார்த்துக்கொண்டான்.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர், விளக்கேற்றிப் பால் பழம் கொடுத்து அனைவரும் ஆளுக்கொரு மூலையில் கால்நீட்டி அமர்ந்துவிட்டனர்.

இரவு உணவுக்கு இன்னும் நேரமிருக்க “வா வீட்டைக் காட்டுகிறேன்” என்று தம்பி மனைவியை அழைத்துச்சென்றாள் ஆதிலட்சுமி, கீழே அடுக்களை இரண்டு அறைகள், பின்பக்கம் தோட்டம் என்று மிகவும் அழகாக இருந்தது.

அதோடு அடுக்கலையை ஒட்டிப் பின்பக்கம் சின்னதாக வராண்டா இருந்தது மூங்கில் நாற்காலிகள் கிடக்க நல்ல நிழலும் இருந்தது, மல்லி பந்தல் ஒன்று அங்கிருந்த தூணில் படர்ந்து மேலேறுவதும் அழகாகக் கண்களை நிறைத்தது.

பின்னில் நல்ல விசாலமான தோட்டம் நிறைய காய்கறிகள் பவிழமல்லி செம்பருத்தி துளசி என்று நிறைய வகை மலர்ச்செடிகளும் தென்னை மா, கொய்யா என்று மரங்களும் நிறைந்து நின்றது, ஹாலின் ஒரு மூலையில் இருந்த படிகள் ஏறி மேலே அழைத்துச் சென்றாள்.

நடுவில் ஹால் போல இடம் விரிந்து கிடக்க இரண்டு மூலையில் இரண்டு அறைகள் இருந்தது, ஒன்று தெருவைப் பார்ப்பதுபோல மற்றோன்று தோட்டத்தைப் பார்ப்பதைப் போல முதலில் இருந்த அறையைத் திறந்த ஆதிலட்சுமி “இதுதான் உங்க ரூம்” என்றாள்.

ஆர்வமாக உள்ளே நுழைந்தாள் நிர்மலா அறை நல்ல பெரிதாக இருந்தது, கட்டில் தேவையான பொருட்கள் என்று நல்ல பெரிய ஜன்னல்கள் மற்றும் ஒரு பால்கனி, தெருவில் போவோர் வருவோரை பார்க்கலாம் அட்டாச்ட் பாத்ரூமுடன் நன்றாக இருந்தது.

அந்தப் பக்கம் இருந்த அறையும் இதே அளவு இதே போல ஆனால் அதன் ஜன்னலும் பால்கனியும் தோட்டத்தைப் பார்த்து இருந்தது, கலைநயம் மிக்க பொருட்கள் நிறைந்து மிகவும் நேர்த்தியாக மனதிற்கு ஒரு அமைதியை தந்தது.

கீழே இருந்து படர்ந்து வந்த முல்லைக்கொடி பால்கனியின் ஒரு மூலையில் பந்தலாக விரிந்து கிடக்க அதன் நிழலில் ஒரு மர ஊஞ்சல் அழகாக ஆடியது, அதைப் பார்த்ததும் நிர்மலாவின் முகமே மாறிவிட்டது.

‘இந்த அறையும் பால்கனியும் ஊஞ்சலும் முல்லைப்பந்தலும் ஏன் அங்கு இல்லை, இவர்தானே மூத்தவர் இந்த அறையை இவர் எடுத்திருக்கலாமே” என்று எரிச்சல் மண்டியது.

“ஆதி அவன் ரசனைக்கு இந்த வீட்டைக் கட்டினான், மாடல் சொன்னப்போ எல்லார்க்கும் பிடிச்சது, இந்த ஊஞ்சல் மாதிரி அந்த ரூம்லயும் போடுறேன் சொன்னான், ஆதவனுக்கு அதெல்லாம் பெருசா இஷடமில்லை நான் என்ன சின்னப் பிள்ளையா ஊஞ்சல் ஆட… வேண்டாம்னு சொல்லிட்டான், அவனுக்கு ரசனையே இல்ல” என்றவள்.

“ஆதி ரொம்ப ரசனையானவன் ஒவ்வொரு விஷயத்தையும் அவ்ளோ ரசிச்சு செய்வான்” என்று தம்பியின் பெருமை பேசினாள்.

“இவன் கட்டிய வீடு என்பதால் இவன் இஷ்டமா” என்று மனதில் யோசனை ஓட அதோடு சேர்ந்து வேறு யோசனையும் ஓடியது நிர்மலாவுக்கு.

‘எதற்க்காக நாம் இந்த வீட்டை விட்டுப் போக வேண்டும் சேர்த்துவைத்த காசுக்கு ஒருவீடு வாங்கி வாடகைக்கு விட்டுவிட்டு இங்கேயே இருந்துவிடலாம், அதோடு இந்த அறையை எப்படியாவது எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டாள்.

உறவுகளில் சிலர் மாலை புறப்பட்டனர், சிலர் இரவு புறப்படுவதாக இருந்தது அனைவருக்கும் இரவுணவு வெளியிலிருந்து வாங்கிவரப்பட்டு அதன்பிறகு அனைவரையும் வழியனுப்பி வைத்தனர்.

முதலிரவு அறை உறவுப் பிள்ளைகள் கைவண்ணத்தில் மனம் வீசியது, ஆதிலட்சுமி நிர்மலாவை அவர்கள் அறையில் விட்டுக் கீழே வந்தாள், அதிவீரன் அவன் அறையின் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து அவனின் தேன்மிட்டாயின் நினைவில் இளையராஜாவின் இன்னிசையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அறைக்குள் நுழைந்த நிர்மலா வரிசையாகப் புகார் படித்தாள் ‘ஏன் அப்படி இல்லை இப்படி இல்லை அவர் உங்களுக்கு இளையவர் உங்கள் உரிமையை விடாதீர்கள்’ அப்படி இப்படி என்று அவனுக்கு மூளைச்சலவை செய்துகொண்டிருந்தாள், சும்மாவே அவளிடம் ஆடிக்கொண்டிருக்கும் ஆதவனின் தலை மனைவி தந்த சுகத்தில் மொத்தமாக அவள் கையில் குழவிக்கல்லாக ஆடியது.

மறுவீடு, சொந்தங்களின் வீட்டில் விருந்து என்று நாட்கள் பறந்தது திருமணம் முடிந்து பத்து தினங்கள் கடந்திருக்க அடுத்தநாள் முதல் வேலைக்குச் செல்ல வேண்டும் இருவருமே, வந்த நாள் முதல் நிர்மலா அடுப்படி பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை காலைக் காப்பி எடுக்க மட்டுமே செல்லுவாள் மற்றபடி அவள் அந்தத் திசை பக்கமே போவதில்லை.

மறுநாளும் அப்படியே… காலை எழுந்து அலுவலகம் செல்லத் தயாராகிவந்தாள், காலை உணவு மேசையில் இருக்க மகனுக்கும் மருமகளுக்கும் மதிய உணவைப் பாத்திரத்தில் கட்டிக்கொண்டிருந்தார் பார்வதி, காலை ஆறு மணியிலிருந்து அதிவீரன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

சாப்பிட வந்து அமர்ந்தவர்கள் படுக்கையறையின் கொஞ்சல்களை கொஞ்சம் இங்கேயும் தொடர்ந்தனர், அனைவரையும் அமரவைத்து உணவு பரிமாறிய பார்வதியை தன் அருகில் பிடித்து அமர்த்திய அதிவீரன் “மா ஒரு பத்துமணிபோல ரெடி ஆகுங்க எம்பஸி போகணும்” என்றான்.

“எம்பஸியா! எதுக்குப்பா நீ துபாய் போகும்போதுதானே அங்க போன இப்போ எதுக்கு மறுபடியும்” என்று பார்வதி கேட்க.

“அது எனக்காகப் போனது இது உங்களுக்காக” என்றான்.

“எனக்கா! நா எதுக்கு?” என்றார் அவர்.

அனைவரின் பார்வையும் அவன்மீது ‘என்ன சொல்லப் போகிறான்’ என்று பார்த்திருந்தது.

“எனக்கு அங்க சாப்பாடு எல்லாம் கஷ்டமா இருக்கு ஒரு வர்ஷம் என்கூட வந்து நில்லுங்க” என்க ராஜவேலுவுக்கு புரையேறிவிட்டது.

“என்ன! அவளைக் கூட்டிட்டு போறியா? அவ வந்துட்டா இங்க எல்லாம் யார் பாத்துக்குறது” என்றார் உடனே.

“ஏன் அதான் அண்ணி வந்துட்டாங்களே அவங்க புருஷனுக்கு என்ன வேணும்னு பாத்து செய்யமாட்டாங்களா” என்றான் அண்ணனை ஆழ்ந்து பார்த்து.

“என்னம்மா மருமகளை மகமாதிரி பாத்துக்குற… எனக்காக வரச்சொன்னா யோசிக்கிற” என்றவனை க்ரோதத்தோடு பார்த்திருந்தாள் நிர்மலா, கணவன் மனைவி இருவருக்கும் புரிந்தது தங்களைத்தான் சொல்கிறான் என்று.

அலுவலகம் செல்லும் வழியில் நிர்மலாவிடம் “இன்னைக்கு சாய்ந்திரத்துல இருந்து வீட்ல நீயும் வேலை செய், அம்மா மட்டும் செய்றாங்க அதைத்தான் அவன் சொல்றான்” என்றான் ஆதவன்.

“ஆபிஸ் போயிட்டு வரும்போதே டயர்டா இருக்கும், நீங்களும் ராத்திரி தூங்கவிடுறதில்லை அப்பறம் எப்படி” என்றாள் கொஞ்சலாக அவன் மயங்கிவிடுவான் என்ற நம்பிக்கையில்.

“உனக்கு அவனைப் பத்தி தெரியாது சொன்னதை செஞ்சுடுவான், ஆதிக்கு அம்மான்னா ரொம்ப இஷ்டம் அவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப்பார்த்து செய்வான், அம்மாவை அங்க கூட்டிட்டு போயிட்டான்னா அஞ்சு பைசா கூட வீட்டுக்கு வராது அதை நல்லா ஞாபகம் வெச்சுக்கோ” என்று எதைச் சொன்னால் அவளுக்கு உடனே புரியுமோ அதைச் சொன்னான், அன்றிலிருந்து வீட்டில் பார்வதிக்கு பெரிதாக இல்லையென்றாலும் உதவினாள்.

மருமகள் வந்தவுடன் அவளிடம் அனைத்தையும் கொடுத்துவிட்டு கால்நீட்டி அமரும் ரகம் இல்லை பார்வதி, அதிவீரனும் அப்படி நினைக்கவில்லை என்றாலும் தன் தாயை அவர் என்னவோ வேலைக்காரியை நடத்துவதை போலச் செயல்படுவது அவனுக்குப் பிடிக்கவில்லை.

வீட்டில் சமையல் வேலை மட்டுமே பார்வதியுடையது மற்றபடி வேலைக்கு ஆள் வைத்துவிட்டான் மூன்று வருடம் முன்பே, சமையல் மட்டும் பார்வதிக்கு யாரிடமும் கொடுக்க விருப்பமில்லை அதனால் அவரே தன் குடும்பத்திற்கு சமைப்பதை தொடர்ந்தார்.

“எண்னா மலரு கண்ணு பரதநாட்டியம் ஆடுது” என்ற கயல்விழியை முறைத்த கொடிமலர் “பேசாம வாடி” என்று ஏமாற்றத்தோடு சென்றுகொண்டிருந்தாள்.

“ஒய்…” என்ற குரலில் தன்னாலே அவள் பாதங்கள் சைகிள் மிதிப்பதை நிறுத்தியது, ஆர்வமாகப் பின்னில் திரும்பிப் பார்த்தவளை நோக்கி வந்தவன் “தேன்மிட்டாய்…” என்றான் ஒரு பாக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு.

இன்று சுடிதாரில் இருந்தாள் லாவெண்டர் நிறத்தில் வெள்ளை புள்ளிகள் சிதறிக்கிடந்தது அவளுக்கு மிக அழகாக இருந்தது, ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்தனர்.

அவன் விழிகளில் ரசனை நிறைந்தது “தேன்மிட்டாய் வேணுமா” என்றான் கையில் வைத்திருந்ததை காட்டி “வேண்டாம்” என்று மறுப்பாகச் சிரம் ஆட விழிகள் நிலம் பார்த்தது.

“தேன்மிட்டாய் பிடிக்கலையா நாக்குடுக்குறதால பிடிக்கலையா” என்றவனை நிமிர்ந்து பார்த்த விழிகளில் அவனுக்கான பதில் இருந்தது ‘இரண்டுமே பிடிக்குமென்று’ அதே வசீகரிக்கும் புன்னகையோடு அவளை நெருங்கியவன் சைக்கிளின் முன்னில் இருந்த பாஸ்கெட்டில் தேன்மிட்டாய் பாக்கெட்டை வைத்தான்.

நிழலில் நிறுத்தயிருந்த தன்னுடைய புல்லட்டை ஸ்டார்ட் செய்துவிட்டு “ஊருக்குப் போறேன்” என்றான் அவளைப்பார்த்து, கொடிமலர் பார்த்து நிற்க மெல்ல மெல்ல நீங்கி ஒரு சிறு புள்ளியாக மறைந்துபோனான்.

சென்ற முறை அவளிடம் சொல்லமுடியாமல் சென்றிருந்தான் இந்த முறை சொல்லியும் மனதில் மிகுந்த பாரம், மாமாவிடம் சொல்லிவைப்போமா என்ற சிந்தனையும் மனதில் ஓடியது, கொஞ்சம் நேரம் தனிமை தேவை என்று தோன்ற பாண்டிச்சேரிக்கு வண்டியை விட்டான்.

சென்னை பாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக்கிடக்கும் கிராமங்களில் ஒன்று கிளியனூர் கொடிமலரின் சொந்தவூர், அங்கிருந்து பதினைந்து நிமிட தூரத்தில் இருக்கிறது சேமங்கலம் அதிவீரனின் ஊர்.

இவர்கள் ஊரிலிருந்து அதிகம் போனால் அரைமணி நேரத்தில் புதுச்சேரி கடற்கரையை அடைந்துவிடலாம், கூட்ரோடில் பிரிந்து புதுவை செல்லும் சாலையில் திரும்பியவனின் விழிகள் கூர்மையானது தன்னை கடந்துசென்ற காரை ஓட்டிச்சென்ற நபரைப் பார்த்து.

ராஜவேலு காரை ஓட்டிக்கொண்டிருந்தார் ‘இவருக்குக் கார் ஓட்டத் தெரியுமா’ என்று அதிர்ச்சியோடு பார்த்தவன், தன்னை மீட்டுக்கொண்டு இடைவெளிவிட்டு அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தான்.

இடையஞ்சாவடிக்கு சென்ற வண்டி அந்த ஊரின் உள்ளே நுழைந்து நான்கு தெரு தள்ளியிருந்த தெரிவில் நுழைந்தது, அடக்கமாகச் சிறிதாக இருந்த வீட்டின் முன் வண்டியை நிறுத்திக் கையில் பெரிய கவரோடு இறங்கினார் ராஜவேலு.

தன் மனதில் எழும் சந்தேகம் உண்மையாக இருக்கக் கூடாது என்ற பதட்டத்தோடு அந்த வீட்டின் முன் சென்று நின்றவன் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன்செய்து கேட்டைத் திறந்து உள்ளே சென்றான்.

வாயில் தாழிடப்படாமல் வெறுமனே சாற்றிவைக்கப்பட்டிருந்தது, ஒருமுறை அதைத் தட்டிவிட்டு காத்திருக்க “யார்” என்ற கேள்வியோடு வந்துநின்றார் ராஜவேலு.
 
கடவுளே என்னவா இருக்குமோ!??... நல்ல இடத்துல வந்து முடிச்சுருக்கீங்க நீங்க!!!... அடுத்த எபி சீக்கிரம் போடுங்க!!!
 

Advi

Well-known member
ஆமா உன் புருஷன் கட்டினான் பாரு வீட்டை....

உங்க கல்யாணத்துக்கு கூட செலவு பண்ணாம அடுத்தவங்க காசில் வாழ நினைக்கும் நீ எல்லாம் என்ன தான் ஜென்மாமோ.....

சரி, உன் அம்மா அப்பாக்கே ஒன்னும் செய்யல..,.

நினைச்சா மாதிரியே செகண்ட் சேனல் தான்😳😳😳😳😳😳

வேலு🤬🤬🤬🤬🤬🤬
 

NNK-50

Moderator
ஆமா உன் புருஷன் கட்டினான் பாரு வீட்டை....

உங்க கல்யாணத்துக்கு கூட செலவு பண்ணாம அடுத்தவங்க காசில் வாழ நினைக்கும் நீ எல்லாம் என்ன தான் ஜென்மாமோ.....

சரி, உன் அம்மா அப்பாக்கே ஒன்னும் செய்யல..,.

நினைச்சா மாதிரியே செகண்ட் சேனல் தான்😳😳😳😳😳😳

வேலு🤬🤬🤬🤬🤬🤬
நன்றி சகி 🥰🥰
 

Saranyakumar

Active member
நிர்மலா மாதிரி பெண்கள் நிறைய வீடுகளில் இருக்கிறார்கள் ராஜவேலு யார் வீட்டுக்கு வந்துரூக்கார் 🤔🤔
 

NNK-50

Moderator
நிர்மலா மாதிரி பெண்கள் நிறைய வீடுகளில் இருக்கிறார்கள் ராஜவேலு யார் வீட்டுக்கு வந்துரூக்கார் 🤔🤔
ஆம் சகி நன்றி 🥰🥰
 
Top