எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்_3

Status
Not open for further replies.

NNK-70

Moderator

அத்தியாயம்-3

“என்னடி இது?” என்று ஸ்வேதா இனியின் கையைச் சுட்டிக்காட்டி கேட்கவே, அவளோ ஒன்றும் கூறாமல் அமைதியாக நின்றாள். “ஹே! ஹாட் சாக்லெட் வாங்கிருக்கியா? அவனுக்கா?” என்று விழி விரித்தாள் ஸ்வேதா.

“ஹம்ம்.அவருக்குத் தான் வாங்கியிருக்கேன்” என்றவளின் பதிலில் இன்னுமே அதிர்ந்துதான் போனாள்.

உடனே சுதாரித்த இனி, நீ…நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லடி, பாவாமா இருந்துச்சு. அதான். என்றவளை ஒன்றும் கூற முடியாமல், “விதி யார விட்டுச்சு, சரி வா போகலாம்” என்று இனியுடன் சென்றாள் ஸ்வேதா.

ஆருயிர் தோழியின் இந்தப் புதிய பரிமாணம் அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. சிறுவயதிலருந்தே அவளுக்கு இனியை தெரியும். அமைதியும் மென்மையும் ஒரு சேரப் பெற்றவள். அவள் அழகில் மயங்கி எத்தனையோ பேர் தங்கள் காதலை அவளிடம் சொன்னப்போது நிராகரித்தவள், அதைவிடச் சமீபத்தில் அவள் பணிபுரியும் இந்த மருத்துவமனை உரிமையாளரின் மகன் கூடத் தன் காதலைச் சொன்னபோது ஒரேடியாக மறுத்தவள், இன்று இந்த நொடி இவனிடம் நெருங்குகையில் ஏதோ விபரீதம் நடக்க போகிறதாகவே ஸ்வேதாவின் உள்மனம் கூறியது.

ஸ்வேதாவின் உள்மனம் உரைத்ததைப் போன்றே விபரீதங்கள் நடக்கும் என்பதை அவளே அப்போது அறிந்திருக்கமாட்டாள்.

ஒருவேளை அவள் அறிந்திருந்தால் தன் உயிர்த் தோழியான இனியை எப்பாடுப்பட்டாவது காப்பாற்றியிருப்பாள்.

உள்ளே இனி நுழைந்தபோது அவனை மற்றொரு உயர் மருத்துவர் சந்திரனைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார் அதனால் சத்தமில்லாமல் வெளியேறியிருந்தாள்.

வெளியே வந்தவள் அவனை ஒதுக்கிவிட்டு தன் வழக்கமான பணியைத் தொடர்ந்தாள்.

ஆனால் எதிலுமே அவள் மனம் லயிக்கவில்லை. எதிலும் அவன் முகமே மின்னி மறைய ‘ஹையோடா’ என்றானது அவளுக்கு.

மனம் ஒன்றி எந்த வேலையையும் செய்ய முடியாமல் தவித்தவளோ, ஐந்து திமிடத்திற்கு ஒரு முறை அவன் அறைக்கதவில் உள்ள கண்ணாடி வழியே பார்த்துவிட்டுத் திரும்பி வந்தாள்.

இவை அனைத்தும் ஸ்வேதாவின் பார்வையிலிருந்து தப்பவில்லை, இருப்பினும் அவள் ஏதும் கேட்கவுமில்லை. ஆனால் இதைப் பற்றிக் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அங்கே அறைக்குள் இருந்த சந்திரனுக்கோ தலைக்கால் புரியவில்லை, தன் அருகில் மேஜையிலிருந்த ‘ஹாட் சாக்லெட்டை’ பார்த்தவண்ணம் இருந்தான்.தனக்காக அவள் வாங்கி வந்திருப்பதை அவனால் நம்ப முடியவில்லை. ‘சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டா, நிஜமாவே வாங்கிட்டு வந்திட்டா, சச் எ ஸ்வீட் கேர்ள்’ என்று யோசித்தவன், அந்த இதமான மனநிலையிலேயே உறங்கியும் போனான்.

அன்றைய மாலை நேரம் மிகப் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. நகரின் ஒரத்தில் அமைந்திருந்த அந்தக் காபி ஷாப்பில் ஸ்வதோவும் இனியும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.

இருவரிடத்திலும் அப்படியொரு அமைதி. முதலில் அந்த அமைதியை ஸ்வேதாவே உடைத்தாள்.

“என்ன இனி, என்னாச்சு உனக்கு, வர வர நீ சரியில்லன்னு எனக்குத் தோணுது” என்றாள் பட்டென்று.

அதைக் கேட்ட இனியின் கண்களில் பொல பொலவெனக் கண்ணீர் வந்தது. இருந்தும் விடாதவள், “பார்த்த இரண்டு நாலுள்ள அவன் உன்ன எந்த வகையில இம்பிரஸ் பண்ணான்? இல்ல ரெண்டே நாலுள்ள கவுந்தடிச்சு விழுகுற அளவுக்கு நீ அவ்ளோ வீக் ஆ” என்றாள் ஆதங்கத்துடன்.

இனியிடம் எந்தப் பதிலும் இல்லை. அவள் அழுகையை மட்டும் நிறுத்தவேயில்லை.

பதிலேதும் இல்லாமல் அழுதுக் கொண்டேயிருந்த தன் உயிர்த்தோழியைப் பார்க்கப் பாவமாக இருந்தது ஸ்வேதாவிற்கு.

“ஸ்டாப் இட் இடியட்” என்று அவளுக்குக் கேட்கும் வகையில் கத்தினாள்.அதில் அதிர்ந்து பின் மெல்ல தன் கண்களைத் துடைத்துவிட்டு ஸ்வேதாவை நோக்கினாள் இனி.

“ச…சாரி ஸ்வே” என்றாள் விழிகளில் நீருடன். “இங்க பாரு இனி, நான் மத்த ப்ரண்ட்ஸ் மாதிரி எல்லாம் கிடையாது, உன் மனசுல சின்ன சலனம் வந்தாக் கூட அதை என்கரேஜ் பண்ணி கலாய்க்க முடியாது மாறாக அதைச் சரிசெய்யுற பொறுப்பு எனக்கு இருக்கு.

நீ நடந்ததெல்லாம் மறந்துட்டீயா? இல்ல எது நடந்தாலும் பரவால்லன்னு நினைக்கிறியா? நான் வேணும்னா எல்லாத்தையும் நியாபகப்படுத்தி விடவா? என்றாள் அடங்காக் கோபத்துடன்.

தோழியின் கூற்றில், குற்றயுணர்ச்சி அடைந்தாள் இனி. மீண்டும் கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்தது.

அவளின் கண்ணீரைக் கண்ட ஸ்வேதாவிற்கு மனது வலித்தது. வாலிப பெண்ணனொருத்தியின் மனதினை அணைப் போட்டுத் தடுக்கும் இந்தத் தலைவிதியை நிந்தித்தாள். மெல்ல அவள் கண்களைத் துடைத்துவிட்டு, கைகளை ஆதரவாகப் பற்றினாள்.

அவள் கைகளைப் பிடித்தவுடன் மீண்டும் அழுகை உடைப்பெடுத்தது.

ச…சாரி ஸ்வே….ரொம்ப ரொம்ப சாரி…தப்பு தான் ரொம்ப ரொம்ப தப்பு தான்…நடந்தத மறந்தது என்னோட தப்புதான். எப்படி எந்த நிமஷம் இப்படி ஆச்சுன்னு தெரில, ஆபத்தான நிலமைல ஹாஸ்பிட்லுக்கு வந்தப்போக் கூட முகத்தில் அப்படியொரு ஸ்மைல், அவரோட முகத்த பார்த்தா ஒரு வித அமைதி கிடைக்குது.

கிரிட்டிகல்லான (Critical) ஆன நேரத்துலக் கூட அப்படியொரு கான்பிடன்ஸ். இந்தச் சிரிப்பா, அமைதியா, கம்பீரமா இல்ல கான்பிடன்ஸா எந்த ஒன்னு என்ன இம்பிரஸ் பண்ணுச்சுன்னு தெரில. பட் ஐயம் கோயிங் க்ரேசி வென் ஐ சீ ஹிம்(but I'm going crazy when I see him)

என்று தன் மனத்தில் உள்ளதைப் போட்டுடைத்தாள் இனி.

ஸ்வேதாவிற்கு அவள் நிலமை நன்று புரிந்தது இருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலை.

“இத காதல்ன்னு என்னால சொல்ல முடியல ஸ்வே, என்னன்னே தெரியாத ஒரு உணர்வு. அவர பார்த்தோன உள்ள ஏதோ ஒன்னு ஆச்சு. அவ்வேளாதான். இந்தப் பிடித்தம் இதோடவே போயிடட்டும்ன்னு தான் நினைக்கிறேன். நான் ஒரு தூர துர்பாக்கியசாலி. எனக்குத் துதான் வாழ்க்கைல எதுக்குமே உரிமையில்லையே, எனக்கும் காதலுக்கும் ரொம்பே தூரம்” என்று வலிமிகுந்த குரலில் சொன்னாள் இனி.

“சரி இந்த விஷயத்த இத்தோடு விட்ரலாம் இனி” என்றாள் ஸ்வேதா விரக்தியாக. அதை ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தாள் இனி.

இருவரும் வாகனம் நிறுத்ததிற்கு வந்து தத்தம் வாகனத்தை எடுத்துனர்.

அப்போது தன் இருச்சக்கர வாகனத்திலிருந்து இறங்கி வேகவேகமாக வந்த ஸ்வேதாவோ, இனியை இறுக்கி அணைத்து “ஸாரி டி…உனக்கு அவன பிடிச்சிருக்குன்னு நல்லாவே தெரியுது பட் உன்னால அவன உன் வாழ்க்கைல என்னைக்குமே இணைச்சுக்க முடியாதுன்னு தான் இப்போவே இத விட்ற சொன்னேன். உனக்கு இருக்குற அதே வலி எனக்கும் இருக்குடி, ஒரு ப்ரெண்டா என்னால ஒன்னுமே என் ‘இனி’க்காகப் பண்ண முடியலன்னு வருத்தமா இருக்குடி. நீ அன்னைக்கு கொஞ்சம் அவசரபடாம நிதானமா இருந்திருக்கலாம்” என்ற ஸ்வேதாவின் கண்களும் தாமாகக் கலங்கின.

“ஹே ஸ்வே! நீ எதுக்குடி கண்ணு கலங்குற, என் தலைவிதிக்கு நீ எந்த வகையில் பொறுப்பாக முடியும்?” என்றாள் வேதனையுடன். அதில்ல …இனி... என்று அவள் ஏதோ பேசத் துவங்கும் முன்னரே, ஷ்!…. “எதுவும் பேசாத, இத இப்படியே விட்டுட்டு அடுத்த வேலைய பாக்கலாம் வா” என்று அவளைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்திருந்தாள் இனி.

இந்தப் பாசப் பிணைப்பு ஒன்று தானே இனியை எப்போதும் தாங்கிப் பிடிப்பது. ஸ்வேதாவின் இந்த அரவணைப்பு மட்டுமே அவளுக்கு இருக்கும் ஒரு பெரிய ஆதரவு. அவள் இன்னுமும் நடமாடி கொண்டிருக்கிறாள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஸ்வோதவும், இனியின் அத்தை மேகலா மட்டுமே.

வீட்டுக்குள் நுழைந்தவளோ எதுவும் பேசாமல் தன் அறைக்குள் நுழைந்து பொத்தெனப் படுக்கையில் விழுந்தாள். கண்ணீர் மட்டும் வற்றாமல் வழிந்தது. ‘நான் உன்ன பார்த்திருக்க கூடாது இதய், நான் பாட்டுக்குச் சிவனேன்னு என் வேலையைப் பார்த்திட்டு இருந்தேன். ஒரே ஒரு சிரிப்பால என்ன ஏதோ பண்ணி இப்படி அழுக விட்டுட்டல, ஏன்டா என் வாழ்க்கையில வந்த, ஒரு ரெண்டு நாலுள்ள என்ன பைத்தியம் பிடிக்க வைச்சுட்ட, யாராவது கேட்டாக் கூடக் கைகொட்டிச்

சிரிப்பாங்க ரெண்டு நாலுள்ள காதலான்னு, ஆனா நீ என் கைப்பிடிச்ச அந்த நொடி இதுவரை என் வாழ்க்கையில நான் உணராத அமைதியையும் நம்பிக்கையையும் கொடுத்துக்சின்னு நான் யார்கிட்ட போய்ச் சொல்லுவேன்’ என்ற கதறி தீர்த்தாள். அவன்மீது பிடித்தம் என்பதை விட வெறும் இரண்டே நாளில் தன்னை ஒரேடியாக மாற்றி விட்ட இந்தப் புது நேசத்தின் மீது வெறுப்பாய் இருந்தது அவளுக்கு. “ வெறும் இரண்டு நாலுள்ள அவன்கிட்ட விழுகுற அளவுக்கு அவ்ளோ வீக்கா இனி நீ” என்றத் தோழியின் வார்த்தை அவளைப் பலமாகத் தாக்கியது. பெண்ணாகிய தான் ஓரிரு நாட்களிலே ஆடவன் மீது அடைந்த தடுமாற்றத்தை நினைத்து வெட்கினாள். “ச்சே, இவ்ளோ பலகீனமான ஆளா நானு” என்று சுயவெறுப்புக் கொண்டாள். ஆனால் எத்தனை பேர் காதலைச் சொன்னபோதும் வராத இந்தத் தடுமாற்றம், ஆண்மகனின் அந்த ஒற்றைச் சிரிப்பிலும், சிறுத்தொடுகையிலும் வந்ததை உணர்ந்தவள், அந்த நேசம் அவன்மீது மட்டுமே தோன்ற கூடியது என்றும் அவனுக்கே அவனுக்காகத் தான் தோன்றியது என்பதை அந்த நொடி உணர மறந்தாள்.

ஆம்! காதலென்பது அந்த ஒரு கணநோடி நேர உணர்வு தானே காதல் திடீரென வெடிக்கும் பெரும் பிரளயம் தானே, இவரின் பேரில் இவருக்குதான் ஏற்படும் என்று எந்தவொரு திட்டமிடலும் இல்லாத நிகழ்வு தானே, காதல் நேரம் காலத்திற்கு அப்பாற்ப்பட்டது. பல ஆண்டுகள் பலகியவர்களிடம் வராத நேசம் கூட நொடி பொழுதில் முன்பின் அறியாதோரிடம் வந்துவிடும். இதுக்கு இனி மட்டும் விதிவிலக்கல்லவே!

பெண்ணவளோ இங்கு அழுகையில் கரைந்திட, அதையறியாத ஆணவனோ காதல் வானில் சிறகடித்துப் பறக்கத் துவங்கினான்.

‘மிருணாளினி, நைஸ் நேம், அழகான கண்ணு ஆனா அதுல ஒரு சோகம் எப்பவுமே ஒட்டிகிட்டு இருக்கே, யாருக்கும் அது தெரியாம போகலாம் பட் எனக்குத் தெரியுதே! சோகமா இருக்குறப்போவே இவ்வளவு அழகா இருக்காளே, சிரிச்சா எப்படி இருக்கும்? காலம் முழுக்க உன்ன சிரிக்க வைச்சு பாத்துக்குறேன், நான் உன்கூட இருக்கிறப்போ நீ எப்பவுமே சிரிச்சு சந்தோஷமா இருக்கனும்’ என்று

தனக்குள்ளே பிதற்றியபடியிருந்தான் சந்திரன்.

தன் எண்ணம் போகும் போக்கு அவனுக்கு இன்பதர்ச்சியைத் தந்தது. அவனும் கண்டவுடனே காதல் கொண்டவனாயிற்றே அதனால் தானே அவளைக் கண்டவுடன் கையை இறுக்க பற்றியிருந்தான். ‘அப்போ பிடிச்ச உன் கைய இனிமேல் எப்பவுமே விடமாட்டேன்’ எனத் தனக்குத் தானே உறுதியேற்றுக் கொண்டான்.

ஒரு உயிர் அங்கே தவித்திருக்க மற்றொரு உயிர் இங்கே தனித்திருக்க, காலம் ஆடும் பகடை ஆட்டத்தில் சூது வென்று, பற்றியக் கையை விடாமல் தொடர்வானா இவன்? அனைத்துமே விதியின் வசம் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்ள வெகுநாட்கள் இல்லை.

 
Last edited:
Status
Not open for further replies.
Top