எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அத்தியாயம் 07

NNK-29

Moderator

அத்தியாயம் 7​

காலையில் தேவா விழித்து பார்க்கும் பொழுது அவனின் கையணைவில் சாரு உறங்குவது தெரிந்தது. குழந்தை போல் உதட்டை பிளந்து உறங்கிக்கொண்டிருந்தவளை ரசித்தவன் அவளை உளுக்கினான்.​

அதில் உறக்கம் கலைந்தவள் மணியை பார்க்க அது ஆறு என காட்டியது. “தேவ்! நைட்டும் தூங்க விடல… இப்பவும் இவ்வளவு சீக்கிரம் எழுப்புறீங்க?” என அவனை இன்னும் இறுக்கிக்கொண்டவள் தூக்கத்தை தொடர்ந்தாள்.​

சிரிப்புடன் அவளின் நுதலில் இதழ்பதித்தவன் “குட் மார்னிங் தூங்கமூஞ்சி! காலைல கோவிலுக்கு போகணும்னு சொன்னது மறந்துடுச்சா?” என அவளை எழுப்புவதை தொடர்ந்தான். நேற்றே செல்வராணி காலையில் அருகில் இருக்கும் கோவில் ஏதாவதிற்கு சென்று அர்ச்சனை பண்ண சொல்லி சென்றிருந்தார்.​

“நீங்க போய் குளிச்சிட்டு வந்து எழுப்புங்க…” என அவனை விட்டுவிட்டு போர்வையை இழுத்துக் மூடிக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள்.​

அவனும் குளித்துவிட்டு வர சாருமதி எழுந்து அமர்ந்திருந்தாள். “நான் வேணும்னா குளிக்க ஹெல்ப் பண்ணட்டுமா மதி?” உல்லாசமாக கேட்டவனின் கேள்விக்கு நாக்கை துருத்திகாட்டியவள் குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள்.​

குளித்துவிட்டு அவள் வெளியே வர தேவா கிளம்பி வெளியேறியிருந்தான். கதவை தாழ்போட்டு புடவையை அணிந்தவள், பின் தாழ்பாளை நீக்கிவிட்டு கண்ணாடி முன் வந்து நின்றாள். காதோரம் இருந்த முடிகளை எடுத்து க்ளிப்பில் அடக்கி அப்படியே முதுகில் படரவிட்டு, சிறிதளவு மேக்கப் போட்டவள் கண்ணாடியில் அவளின் தோற்றத்தை பார்த்து திருப்தியடைந்தாள்.​

பின் அருகிலிருந்த குங்கும சிமிழை கையில் எடுக்கும் பொழுது தேவா உள்ளே நுழைந்தான். சேலையில் அழகாக தயராகியவளிடம் வந்தவன், அவளின் கையில் இருந்த குங்குமத்தை வாங்கி அவனே அவளின் வகிட்டில் வைக்க, இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று தீண்டி நின்றது. கண்களின் வழியே இருவரின் மனதையும் படிக்க முயன்றுக்கொண்டிருந்தனர்.​

வெளியே கேட்ட சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவர்கள் புறப்பட்டு வரவேற்பறைக்கு வந்தனர். சாருமதிக்கு அனைவரையும் பார்க்கவே வெட்கமாக இருந்தது. அப்படியே கோவிலுக்கு சென்றுவிடலாம் என்று நழுவ பார்த்தாள்.​

ஆனால் ஜெயந்தி, “போய் விளக்கேத்திட்டு வா சாரு. காஃபி குடிச்சிட்டு கோவிலுக்கு கிளம்புவீங்க” என்றார். விளக்கேற்றி இருவரும் சாமி கும்பிட்டு வர, அவர்களின் கையில் காஃபியை கொடுத்தார் ஜெயந்தி. சோபாவில் அமர்ந்து அருந்தியவாரே, “என்னமா யாரையும் காணோம்?” என சுற்றிப்பார்த்து சாருமதி கேட்டாள். அங்கே யாருமில்லாதது அவளின் தயக்கத்தை விரட்டியது.​

“உன்னோட அப்பாவும் அண்ணனும் கடைக்கு போயிருக்காங்க சாரு. வந்தனா குளிக்க போயிருக்கா” என்று அவளுக்கு பதிலளித்துக்கொண்டே கோமதி வந்தார். சாருவின் முகத்தில் தோன்றிய வர்ணஜால உணர்வுகளை படித்தே அவள் வாழ்க்கையை தொடங்கிவிட்டாள் என்று புரிந்துக்கொண்டனர் ஜெயந்தியும் கோமதியும்.​

பின் இருவரும் கோவிலுக்கு புறபட்டனர். “இந்த மனுஷனை நான் பூவாங்கிட்டு வர சொன்னேன் அத்தை. இன்னும் ஆளை காணோம். பாருங்க கல்யாணம் ஆனவ தலைல பூ இல்லாம வெளிய கிளம்புறா…” என ஜெயந்தி கணேசனைப்பற்றி கோமதியிடம் குறை கூறிக்கொண்டிருந்தார்.​

“விடு ஜெயா. இனிமே அவளோட புருஷன் அவளுக்கு எல்லாம் வாங்கிக்கொடுப்பான்” என காலை உணவு வேலையை பார்க்க சென்றனர்.​

சாருமதி கேட்காமலே கோவில் வாசலில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் அவளுக்கு பூ வாங்கி கொடுத்தான். முகமுழுக்க சிரிப்புடன் வாங்கியவள், “ஹேர்பின் இல்லையே!” என்றாள்.​

“தலைல அப்படியே வெச்சா நிக்காதா?” என்றவனை முறைத்து பார்த்தவள், “ஆமா மண்டைல ஆணி இருக்கு அப்படியே தொங்க விடுங்க…” கிண்டலுடன் சொன்னவள் பக்கத்தில் இருந்த பெட்டிகடையில் ஹேர்பின் வாங்கி வர சொல்லி பூவை வைத்துக்கொண்டாள்.​

காலையில் குங்குமம் வைத்தது, இப்பொழுது அவள் கேளாமலே பூ வாங்கி கொடுப்பது என்று சாருவின் மனதில் காதல் சாரலை பொழிந்தான் தேவா.​

அரக்கு நிறத்தில் சில்க் சாரி தழைய தழைய அணிந்திருக்க நேற்று தேவா அணிந்திருந்த பொன் தாலியுடன் சாருவின் முகம் மின்னி போட்டிபோட்டது.​

தேவாவும் சிவப்பு நிறத்தில் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தான். சட்டையில் முன்னிரண்டு பட்டன் திறந்து அவன் கழுத்தில் மின்னிய தங்கசெயின், மோதிரம் என புது மாப்பிள்ளைக்கான தோற்றம் அவனை பளிச்சென்று காட்டியது.​

அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்த அனைவரும் ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டே சென்றனர்.​

இருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் நல்லபடியாக முடித்து காரில் ஏறினர்.​

அந்நேரம் செல்வராணி அழைக்க, “சொல்லுங்க அத்தை?”​

“.....”​

“ஹ்ம்ம். இப்ப தான் சாமி கும்பிட்டுட்டு திரும்பினோம்”, சாருமதி சகஜமாக செல்வராணியுடன் உரையாடுவதை பார்த்த தேவாவிற்கு இதமாக இருந்தது.​

“....”​

“சரிங்கத்தை. பை” என வைத்தவளை பார்த்தவனிடம், “ஈவ்னிங் முடிஞ்சா வீட்டுக்கு வர சொன்னாங்க தேவ். உங்க ரிலேட்டிவ்ஸ் கிளம்புறாங்களாம்” என்றாள்.​

“என்ன சொன்ன?” என அவளை ஒரு பார்வை பார்க்க,​

“உங்க ரிலேட்டிவ்ஸ்...” என்றவள் நாக்கை கடித்துவிட்டு, “சாரி சாரி நம்ம ரிலேட்டிவ்ஸ்” என்றாள்.​

“ஹ்ம்ம். பழகிக்கோ மதி” என்றவன் வேறேதும் கூறாமல் காரை வீட்டிற்கு செலுத்தினான்.​

__________​

காலை உணவிற்கு இட்லி, பூரி, வடை என அனைத்தையும் தயாரித்து அங்கே பரப்பி வைத்திருந்தனர். சாருவையும் தேவாவையும் தான் முதலில் அமர வைத்தனர். “நீங்க சாப்பிடுங்க நாங்க அடுத்து சாப்பிடுறோம்” என குமரேசன் கூறிவிட்டார்.​

“சாரு! நீ இட்லியே சாப்பிடுவ தான?” என ஜெயந்தி கேட்டார்.​

“ஏன் அத்தை? உங்க மகளுக்கு ஸ்பெஷலா ஏதாவது செய்யபோறீங்களா?” என தேவா கேட்டான்.​

“அப்படிலாம் இல்லை தம்பி. அவ டையட்ன்னு இட்லி, பூரிலாம் அடிக்கடி சாப்பிட மாட்டா. அதான்…” என ஜெயந்தி மழுப்பினார்.​

‘அட கூறுகெட்டவளே பிள்ளை வாழ தொடங்கிருக்கு… இந்நேரம் நல்லா நல்லி எழும்பா ஆக்கிப்போடாமா அவ டையட்ன்னு சொன்னதும் இவளும் சப்போர்ட் பண்ணுறா பாரு’ என ஜெயந்தியை மனதில் நொடித்துக்கொண்ட கோமதி, “அதெல்லாம் சாப்பிடுவா ஜெயா. நீ எடுத்து வை. நல்லா சாப்பிட்டுட்டு அது என்னது? எதோ கேலரியா கோலறியா ?” என்ற கோமதியின் பேச்சை கேட்டு சிரித்த தேவா,​

“கலோரி பாட்டி!” என்றான் சாருவை ஒருபார்வை பார்த்து.​

“ஆமா அது தான் நல்லா சாப்பிட்டுட்டு அதை குறைச்சிடலாம். சரி தான சாரு?” என்றார்.​

பாட்டி புரியாமல் பேச பேச சாருவிற்கு சங்கடமாக இருந்தது. இதில் தேவா வேறு, “நீங்க சொன்னா சரிதான் பாட்டி. மதி நீ டையட்டை விட்டுட்டு நல்லா சாப்பிடு. அப்புறமா கலோரி பர்ன் பண்ணிக்கலாம்” என்றான் நமட்டு சிரிப்புடன்.​

‘ஐயோ நேத்து நைட் சொன்னதை ஞாபகம் வெச்சி போடுத்தாக்குறானே!’ என நெளிந்துக்கொண்டிருந்தவளிடம், “என்ன சாரு?” என மீண்டும் கோமதி கேட்க,​

‘தாய்க்கிழவி உன்ன தனியா கவனிச்சிக்கிறேன்’ என அவளின் பாட்டியை மனதில் வருத்தெடுத்தவள், “ஒன்னுமில்ல பாட்டி…” என சாப்பிட தொடங்கினாள்.​

__________​

மதியம் உண்டுவிட்டு அறையில் ஓய்வெடுக்க வந்திருந்தனர். அந்த அறை சுவற்றில் சாருமதியின் சிறு வயது முதல் கடந்த மாதம் அரவிந்தின் திருமணத்தில் எடுத்த புகைப்படம் வரை சட்டமாக மாட்டப்பட்டிருந்தது.​

அனைத்தையும் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தவனை நோட்டம் விட்டுக்கொண்டே பெட்டியில் அவளுக்கான உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.​

புகைப்படத்தை பார்த்துக்கொண்டே வந்தவன் அங்கே அவளின் யூடியூப் சில்வர் பிலே பட்டன் சுவற்றில் மாட்டியிருந்ததை கண்டான். அதை கையில் எடுக்க சற்று கனமாக இருந்தது.​

“சீக்கிரமே கோல்ட் பட்டன் வாங்க வாழ்த்துகள் மதி!” என்றவன் மீண்டும் அதை அங்கேயே மாட்டினான்.​

“அதுக்கு நீங்க முதல்ல சப்ஸ்க்ரைப் பண்ணனும்” என வழக்கம் போல் கூறியவளை குறும்பு மின்னும் கண்களில் பார்த்தவன், “சப்ஸ்க்ரைப் தான பண்ணலாமே! பண்ணட்டுமா…?” என அவளை நெருங்கினான்.​

நேற்று சப்ஸ்க்ரைப்பிற்கு அவன் அளித்த விளக்கத்தை நினைவு கூர்ந்து தடுமாறியவள், “யப்பா சாமி உங்க கிட்ட இனிமே சப்ஸ்க்ரைப் கேட்கவே மாட்டேன். ஆளை விடுங்க” என வெளியே ஓடிவிட்டாள்.​

சாதாரண சப்ஸ்க்ரைப் என்று அவனாலும் கடந்துவர முடியவில்லை. ஏனோ அதை சொல்லி அவளிடம் வம்புவளர்க்க ஆடவனின் மனதும் விரும்பியது! ஆனால் இதையே ஒருநாள் சாருமதி சொல்லிகாட்டி அவனை பதற வைக்க போகிறாள் என்று அவன் அறியவில்லை.​

வெளியே வரவேற்பில் துணிகளை மடித்துக்கொண்டே வந்தனாவும் ஜெயந்தியும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று அவளும் பேச்சில் கலந்துக்கொண்டாள்.​

தேவா-சாரு திருமணத்தில் இருந்து வந்தனாவும் சற்று தெளிந்திருந்தாள். அது அவளின் அண்ணன் உடன் இருப்பதாலா? இல்லை சாரு இங்கிருந்து கிளம்பி விடுவாள் என்பதாலா? அது அவளே அறியாத விஷயம். ஆனால், அனைவரிடமும் சிரித்து பேசி சந்தோசமாகவே வலம் வந்தாள்.​

மாலையில் தேவா வீட்டிற்கு சென்றனர் புதுமணதம்பதியர். சில சொந்த பந்தங்கள் அங்கிருக்க அனைவரையும் அவர்களின் முறைசொல்லி சாருமதிக்கு செல்வராணி அறிமுகப்படுத்தினார். அவ்வளவாக உறவுமுறை புரியவில்லை என்றாலும் அனைவருக்கும் முகத்தில் ஒட்டிவைத்த சிரிப்பை கொடுத்தாள்.​

அவர்கள் அனைவரும் அன்று மாலையே கிளம்ப செல்வராணி தனியாக தான் இருந்தார். “நீங்களும் அங்க வாங்க அத்தை” என சாரு அழைத்தாலும் இருக்கட்டும் என்று மறுத்துவிட்டார்.​

அன்றைய இரவும் புதுமண தம்பதியருக்கு மறக்கமுடியாத இனிமையான இரவாகவே கழிந்தது.​

ஒருவாரம் சாருவின் வீட்டில் இருந்தவரை அவளின் பழக்கவழக்கம், அவளுக்கு பிடித்தது என அனைத்தையும் ஓரளவுக்கு தேவா தெரிந்துக்கொண்டான்.​

“இதோ இங்க தான் யூடியூப் வீடியோஸ் எடுப்பேன். இந்த கேமரால தான் ஷூட் பண்ணுவேன்” என அவளும் ஏன் சொல்கிறோம் என தெரியாமலே அனைத்தையும் அவனிடம் பகிர்ந்து கொண்டாள். தேவாவும் அவள் கூறுவது சிறு விஷயமாக இருந்தாலும் புறக்கணிக்காமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.​

ஒருவாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. சாரு தேவா வீட்டிற்கு கிளம்பும் நாளும் வந்தது. மருமகளை அழைத்து செல்ல செல்வராணியும் வந்துவிட்டார்.​

“தேவையானது மட்டும் இப்ப எடுத்துக்கோ மதி. மீதியை பொறுமையா எடுத்துக்கலாம். வந்தனா கூட அப்படித்தான் பண்ணா…” என்ற தேவா பொருட்களை எடுத்துவைக்க உதவினான்.​

‘என்னோட ரூம்ல இருக்க குண்டூசில இருந்து கட்டில்ல விரிக்குற போர்வை வரைக்கும் எனக்கு தேவையானது தான்!’ என தொண்டைவரை வந்த வார்த்தைகளை முழுங்கியவள் “சரி!” என்று அவசியமானதை மட்டும் எடுத்துக்கொண்டாள்.​

பெட்டிகள் அனைத்தையும் அரவிந்தன் வண்டியில் ஏற்றிவைத்தான்.​

“சரியான நேரத்துக்கு சாப்பிடணும். மறக்காம மாத்திரையை போடணும் கோம்ஸ்” என்றாள் கண்கள் கலங்க, “சரிடா சாரு. புகுந்த வீட்டுக்கு போறப்ப கண்கலங்காம கிளம்பணும்” என அவளின் கன்னத்தை வழித்து கூறினார் கோமதி.​

“அம்மா, சும்மா பாட்டி கூட சண்டை போடகூடாது!” என தாயை மிரட்டியவள், “அப்பா, ஒழுங்கா டெய்லி வாக்கிங் போகணும்!” என தந்தையிடம் கரிசனத்துடன் கூறினாள்.​

“டேய் அண்ணா, ஃபாஸ்ட் ஃபூட் நிறைய சாப்பிட தொடங்கிடாத!” என அக்கரையுடன் அண்ணனை அதட்டியவள், “அண்ணி இனிமே எல்லையாரையும் நீங்க தான் பார்த்துக்கணும்” என வந்தனாவிடம் பொறுப்பை ஒப்படைத்தாள்.​

ஓர் வீட்டில் பிறந்து வளர்ந்து அந்த உறவுகளிடம் உணர்வுகளுடன் பிணைக்க பட்டியிருப்பவளை அடுத்த வீட்டிற்கு அனுப்புவது எவ்வளவு கடினம்!​

தேவாவும் அவர்களின் நிலையை உணர்ந்திருந்தான். வந்தனாவை பிரியும் பொழுது அவர்களுக்கும் அப்படி தானே இருந்தது.​

அமைதியாக தன் மனைவியின் செயல்களை பார்த்து கொண்டிருந்தான். இனி இந்த அன்பு, கண்டிப்பு, பரிவு எல்லாம் எனக்கே என்று அவனின் மனம் துள்ளிகுதித்தது.​

ஒருவழியாக பிரிவுதுயரில் அனைவரையும் சரிகட்டி சாருவுடன் அவன் வீட்டிற்கு கிளம்பினான் தேவா.​

__________​

கல்யாணத்திற்கான விடுமுறை முடிந்து இருவரும் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.​

இரவின் தனிமையில், “கொலுசை எதுக்கு மதி கழட்டுன?” என கேட்டுக்கொண்டே அவளுள் புதைந்தான். அவனின் மனம் அந்த கொலுசின் ஓசையை விரும்பியது.​

“நான் என்ன மோகினி டான்ஸா ஆடுறேன். கொலுசு டெய்லி போடுறதுக்கு? ஏரோபிக்கு அதெல்லாம் செட் ஆகாது தேவ்” என்றவள் அவனிடம் நெருங்கினாள்.​

திருமண வாழ்க்கைக்கு தேவா-சாரு இருவரும் ஓரளவு பழகிக்கொண்டார்கள். காலையில் தொடங்கி மாலை வரை வேலை என்று செல்பவர்கள், அதன்பின் அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் என நாட்கள் சென்றது.​

செல்வராணியும் எதுவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. முடிந்தளவு அவருக்கு தேவையான உதவியை சாருமதியும் செய்துவிடுவாள்.​

சாருமதி யூடியூப்பிற்கு வீடியோ எடுப்பது, எடிட்டிங் செய்வது, போஸ்ட் போடுவது, கமெண்ட் போடுவது என வந்துவிட்டால் மட்டும் தேவாவை கூட மறந்து செயலில் ஒன்றிவிடுவாள். அந்த சமயத்தில் மட்டும் தேவா கடுப்புடன் முறுக்கி கொள்வான். ஆனாலும் உடனே சமாதானமாகி விடுவான்.​

மற்றபடி இருவருக்கும் வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல் சலசலப்பில்லாமல் அமைதியாக செல்ல தொடங்கியது.​

_________​

காந்திமதியின் வீட்டில் தான் அனைவரும் கூடியிருந்தனர். திருமணம் முடிந்து மூன்று வாரம் சென்று தான் அவர்கள் வீட்டிற்கு விருந்திற்கு செல்ல இருவருக்கும் நேரம் கிடைத்தது.​

இருவீட்டில் உள்ள அனைவருமே சென்றிருந்தனர். அனைவரும் மதியவுணவு உண்டு முடித்து சாவகாசமாக அமர்ந்திருந்தனர்.​

“என்ன மாமா? உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? இந்த மதி குடும்பத்துல வந்து பொண்ணு எடுத்திருக்கீங்க?” என கிண்டல் செய்தனர் காந்துமதியின் பேரன்கள்.​

இருவரும் காலேஜ் படிப்பவர்கள். சாருவிற்கு தம்பி முறை. அவர்களின் பேச்சில் வெகுண்டவள், “எனக்கு என்னடா குறை?” என்றாள்.​

“ஹான். உன்ன வெச்சிக்கிட்டு ஒரு பிரியாணி நிம்மதியா சாப்பிடமுடியுமா?” என நக்கலாக கேட்டனர்.​

“ஏன்? அவளுக்கு பிரியாணி பிடிக்கும் தான?” சாருவைப்பற்றி அவன் அறிந்ததை வைத்து தேவா கேட்டான்.​

“அதெல்லாம் பிடிக்கும் மாமா. ஆனா பிரியாணி சாப்பிட்டதும் ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது! நைட் நேரம் பரோட்டா சாப்பிட கூடாதுன்னு சாப்பாட்டுக்கே அவ்வளவு ரூல்ஸ் பேசுவா” என கிண்டலுடன் சொன்னார்கள்.​

“டேய் ஓவரா பேசாத… பிரியாணியே கனமான சாப்பாடு. அதை சாப்பிட்டுட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டா… எல்லா கொழுப்பும் கரையாம அப்படியே நம்ம உடம்புல சேர்ந்து செரிமானத்தை தடுக்கும். அது மட்டுமில்லை, நைட் நேரம் லைட் ஃபூட் தான் சாப்பிடணும். அப்ப தான் செரிமானம் எளிதாகும். அதுக்கு தான் பரோட்டா வேணாம்னு சொல்லுவேன்” என சாருவும் அவள் பிடியில் நின்றாள்.​

“சும்மா… சும்மா… நீ ஒரு நுட்ரிஷியன்னு ப்ரூவ் பண்ணாத சாருக்கா” சாருவிடம் சொல்லிவிட்டு, “இப்ப தான கல்யாணம் ஆகிருக்கு போக போக தெரியும். ஆல் தி பெஸ்ட் மாமா” என தேவாவிடம் கைக்குலுக்கினவர்களை பார்த்து சாருமதி மேலும் முறைத்தாள்.​

“என்ன பண்ணுறது? எல்லாம் விதி! இந்த மதியை வெச்சி தான் விதியை வெல்லனும்” என சாருமதியை சுட்டிக்காட்டி தேவா சொல்ல அங்கே சிரிப்பலை எழுந்தது. “நைட் என்கிட்ட வருவீங்க தான? அப்ப இருக்கு உங்களுக்கு” என தேவாவின் காதில் மெதுவாக கூறினாள்.​

சிறியவர்கள் இங்கே பேசுக்கொண்டிருக்க அங்கே காந்திமதி, “எனக்கு இந்த தம்பியை பார்கிறப்ப நம்ம சாருக்குனே பிறந்த மாதிரி இருந்தது அக்கா. இப்ப அவங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு” என்று அவர்களை பார்த்துக்கொண்டே அவரின் மகிழ்ச்சியை கோமதியிடம் பகிர்ந்துக்கொண்டார்.​

கோமதியும் அவர்களின் அந்நியோனியத்தையும் கவனித்து கொண்டு தான் வருகிறார். ‘காதல் திருமணமா? இல்லை நாம் பார்த்த திருமணமா?’ என்று வியக்கும் வண்ணம் இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதல் வந்திருந்தது.​

செல்வராணியிடம், “வீட்டுக்கு போய் ரெண்டு பேருக்கும் சுற்றி போடு மா” என்று தவறாமல் சொன்னார் கோமதி. செல்வராணியும் அதனை சிரிப்புடன் ஆமோதித்தார்.​

விருந்து முடிந்து அவர்கள் கிளம்பும் சமயம், அவர்களை ஆசீர்வதித்து ஒரு தட்டில் பூ, பழம், மஞ்சள், குங்குமம், இருவருக்கும் புது துணிகள் என வைத்து கொடுத்தனர்.​

“அடிக்கடி ரெண்டு பேரும் வாங்க” என்ற அன்பு கட்டளையுடனே காந்திமதி அவர்களுக்கு விடைகொடுத்தார்.​

__________​

அன்று காலையில் குளித்துவிட்டு வேலைக்கு கிளம்பாமல் சாதாரண உடையில் இருந்தவளிடம், “இன்னைக்கு உனக்கு லீவா மதி? கிளம்பாம இருக்க?”​

முகத்தை சுருக்கி, “இன்னும் மூணு நாளைக்கு லீவ்” என்றாள் வயிற்றை பிடித்துக்கொண்டு.​

அவளின் நிலையை உணர்ந்தவன், தலையை கோதி அவளின் நெற்றியில் முத்தமிட்டு, “ரெஸ்ட் எடு...” என்றான்.​

அன்றிரவு அறையில் கீழேயே பாய்விரித்து படுக்கப்போனவளிடம், “ஹேய். என்னடி பண்ணுற? எங்க வீட்ல இந்த மாதிரி தனியா படுக்குற பழக்கம்லாம் இல்லை. மேலேயே படு மதி” என்றான்.​

“ஹலோ மிஸ்டர் தேவ்! எங்க வீட்லயும் இந்த பழக்கம் இல்லை. ஆனா இந்த மாதிரி நேரத்துல பெட்டை விட தரைல படுக்குறது தான் எனக்கு பிடிக்கும்” என்று பாயை விரித்து படுத்துக்கொண்டாள்.​

சிறிது நேரத்தில் தேவாவும் அவளின் அருகில் படுக்க, “அடப்பாவி நானே வயிருவலின்னு இருக்கேன். என்கிட்ட வர…” என்று அவனை தள்ள முயன்றவளிடம்,​

“கல்யாணம் ஆனதுல இருந்து பக்கத்துலேயே படுத்துட்டேன் மதி. தனியா படுக்க ஒருமாதிரி இருக்கு. நீ தூங்கு உனக்கு தொல்லை கொடுக்கமாட்டேன்” என அவளை மென்மையாய் அணைத்துக்கொண்டான்.​

அதுநாள் வரை காதலாக, மோகமாக, ஆசையாக அணைத்திருந்தவனின் அணைப்பில் கரைந்தவள் இப்பொழுது அவனின் ஆறுதலான, இதமான அணைப்பில் உருகிவிட்டாள் பாவை!​

இப்படியே அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது.​ 
Last edited:

NNK-29

Moderator
Ethuvarai nallaathaan erukku....kurukka karadi yethuvum vittraatheenga writer madam 😛😛😛😛
நன்றி dear❤️❤️❤️ கரடி அளவுக்கெல்லாம் போகாது😜😜😜 நம்புங்க dear😅😅😅
 

Advi

Well-known member
சூப்பர் சூப்பர் நல்லா எதார்த்தமா கொண்டு போறிங்க ஜி .....

இனி தான் கலகம் எல்லாமா
 

NNK-29

Moderator
சூப்பர் சூப்பர் நல்லா எதார்த்தமா கொண்டு போறிங்க ஜி .....

இனி தான் கலகம் எல்லாமா
ரொம்ப நன்றி dear❤️❤️❤️ கலகம்😜😜😜
 
Top