எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 13

NNK-64

Moderator

அத்தியாயம் 13​

நிரஞ்சனும் எழிலழகியும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர், அனைவரும் சென்றுவிட்டதால் தனிமையில் சிறிது நேரம் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.​

நேரம் நடுநிசியை நெருங்கி இருக்க “நிரு போகலாம், இப்பவே எனக்கு தூக்கம் வருது” என்றாள் அழகி தூக்க கலக்கத்துடன்.​

“என்ன தூங்க போறியா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, உன்னை நான் தூங்க விட போவதில்லை. வேண்டுமானால் நாம் வீட்டை அடையும் வரை காரின் பின் சீட்டில் படுத்துக் கொண்டு தூங்கு. வீட்டிற்கு சென்றதும் அதற்கும் வாய்ப்பு இல்லை” என்றான் கண்களை சிமிட்டி​

“போங்க நிரு” என்று வெட்கத்தில் தலை குனிந்தாள் அழகி. அவளை ரசித்துக் கொண்டே அவள் கைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்று காரின் பின் பக்க சீட்டில் அவளை படுக்க வைத்தான்.​

அனைவரிடமும் சொல்லிக் கொண்டு பில்லை செட்டில் செய்து விட்டு காரில் ஏறி அமர்ந்தவனுக்கும் தூக்கம் கண்களை சுழற்றியது.​

அழகி பேசிக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, பின் பக்கம் திரும்பி பார்த்தான். அவள் அசதியில் படுத்ததுமே உறங்கி இருந்தாள்.​

சரி பாடலை ஒலிக்க விடலாமா என்று யோசித்தான், மீண்டும் அவளின் தூக்கத்தை கலைக்க விரும்பாமல், காரை ஓட்ட தொடங்கினான். தூக்க கலக்கத்தில் சீட் பெல்டையும் போட மறந்திருந்தான்.​

மெதுவாகவே காரை ஓட்டிக் கொண்டு சென்றவனை பின்னாடி இரண்டு கார்கள் துரத்தின. முதலில் சாதாரணமாக எண்ணி வழி விட்டு சென்றான். ஆனாலும் அந்த கார்கள் அவனையே குறிபார்த்து மோத ஆரம்பித்தது.​

சிறிது நேரம் லாவகமாக ஓட்டி அவர்களிடம் தப்பித்தான். தூக்க கலக்கத்தில் இருந்து வெளியில் வர ஒரு முறை தலையை சிலுப்பிய அந்த கணத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்தான்.​

பின்னாடி வந்த கார் மோதியது போல் இருந்தது. ஒரு கார் மட்டும் வேகமாக இவன் காரை முந்திக் கொண்டு சென்றது. எழிலழகி பின் சீட்டிலிருந்து கீழே காரினுள்ளேயே விழுந்தாள். அதற்குள் அந்த கார்கள் வேகமெடுத்து இவர்களை தாண்டி போய் இருந்தது.​

“கார் சீட்டினுள்ளே விழுந்தாலும் தலையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்தது. என்ன நடந்தது என்று அவளுக்கு விளங்கவே இல்லை. ஏன் தலை வலிக்கிறது, எங்கே இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.​

கார் விபத்திற்குள்ளாயிருப்பதை உணர்ந்தவள், “அய்யோ, நிரு” என்று கத்தினாள். வெளியே வரவே முடியவில்லை. மெல்ல எழுந்து பார்த்தால் முன் சீட்டில் அவள் கணவன் இல்லை, முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது.​

கார் கதவை திறக்க முடியவில்லை. ஜன்னலின் வழியாக அந்த ஆளரவமற்ற சாலையை பார்த்தால், உதவி செய்வதற்கு கூட யாருமில்லையே, நிரு எங்கே? என்று பின்சீட்டிலிருந்து முன்சீட்டிற்கு தன்னை வளைத்து குறுக்கி வந்தாள்.​

முன்பக்கம் உடைந்திருந்த கார் கண்ணாடியின் வழியே எட்டி பார்த்தாள், நிரஞ்சன் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தான். “நிரு” என்று தொண்டை கிழிய கத்தினாள். மயக்கம் வருவது போல் இருந்தது. சமாளித்துக் கொண்டு, அவர்களின் அலைப்பேசி காரிலேயே விழுந்து கிடக்கிறதா? என்று தேடினாள்​

சில நிமிட தேடலுக்கு பிறகு நிரஞ்சனின் அலைப்பேசி கிடைத்துவிட, அதை ஆன் செய்து 108 க்கு போன் செய்து, “காப்பாத்துங்க” என்று குழறியபடி சொல்லிவிட்டு மயங்கி சரிந்தாள்.​

எழிலழகி கண் விழித்த போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.​

அவள் விழித்ததை பார்த்த செவிலியர், உடனே சென்று மருத்துவரை அழைத்து வந்தாள்.​

“ஹலாே மிஸ், உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு, எங்கெல்லாம் வலி இருக்கு” என்று கேட்டார்.​

“நிரு எங்கே? என் கணவர் எங்கே?” என்றாள் திக்கி திணறி.​

“அவர் ஐசியூவில் இருக்கார், உங்களை பார்த்துக் கொள்ள யாரு இருக்காங்க, யாருக்கு அழைக்கணும்” என்று கேட்டார்.​

“சற்று நேரம் யோசித்தாள், அவனுக்கு என்று யாருமில்லை, அவளுக்கு இருந்தும் இல்லாதது போலத்தான். பார்வதி அம்மா தன் மகளுக்கு பிரசவ காலம் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்? யாரை அழைக்க சொல்வாள்?” உதட்டை பிதுக்கி யாருமில்லை என்பது போல் தலையசைத்தாள்.​

“சரி உங்கள் கணவர் எங்கே வேலை செய்துக் கொண்டிருந்தார்?” என்று கேட்டார் மருத்துவ செலவுகளை யாரிடம் கேட்பது என்று யோசித்துக் கொண்டே.​

“அவரும் டாக்டர் தான்” என்றவள் அவன் பணிபுரியும் மருத்துவமனையின் பெயரை சொன்னாள்​

“ஓகே, அந்த மருத்துவமனையில் எனக்கு சிலரை தெரியும், நான் அழைச்சு அவர்களுக்கு தகவல் சொல்கிறேன்” என்றார்.​

“அவருக்கு என்ன ஆச்சு?” என்றாள் தவிப்புடன்​

“தலையில் பலமாக அடிப்பட்டிருக்கு, சீட்பெல்ட் போட்டிருந்தால் இந்த அளவிற்கு அடிப்பட்டிருக்காது. அதிகமாக ரத்தம் போயிருக்கு. இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கண்காணிப்பில் வைத்து இருக்கோம்” என்றார்.​

“டாக்டர்” என்று கத்தினாள், அவரை எப்படியாவது காப்பாத்திடுங்க. அப்படி உங்களால் முடியலைனா என்னையும் கொன்னு அவரோடவே அனுப்பிடுங்க” என்று கதறி அழுதாள்.​

அவள் கழுத்திலிருந்த புது தாலிக் கயிற்றை பார்த்த மருத்துவரும் வருந்தினார். கவலைப்படாதே அம்மா, நாங்க எங்களால் முடிந்த முயற்சியை கட்டாயம் செய்வோம்” என்று அவள் கைகளை ஆதரவாக அழுத்தி விட்டு சென்றார்.​

“நிரு, இந்த உலகத்தை எதிர்த்து வாழ பழகு, வேலைக்கு போ என்று சொன்னீங்களே, என்னை மொத்தமாக விட்டுட்டு போகத்தான் இப்படி எல்லாம் பேசனீங்களா? நீங்க உயிருடன் வந்தால் தான் நான் உயிரோடு இருப்பேன். எனக்காக நீங்க நலமாகி வரணும். கடவுளே என் கணவனை காப்பாற்று” என்று கதறி அழுதாள்.​

அவளின் அழுகை அங்கிருந்த செவிலியர்களின் கண்களையும் கலங்க செய்தது.​

மறுநாள் விடிந்ததும் நிரஞ்சனின் மருத்துவமனையில் அவனுடன் பணிபுரியும் மருத்துவர், செவிலியர்கள், ஊழியர்கள், அவனின் பேஷன்டுகள் என்று ஒரு படையே அங்கு வந்து விட்டிருந்தது.​

அங்கிருந்த மருத்துவரோ, “நேற்று எங்களுக்கென்று யாருமில்லை என்று சொன்னாயேம்மா, இப்போது இந்த மருத்துவமனையே நிரம்பி வழிகிறது பார்” என்றார் கனிவுடன் அவளைப் பார்த்து.​

வந்தவர்கள் எல்லாம் அவளைப் பார்த்து ஆறுதல் கூறினர், “எவ்வளவு செலவானாலும் கவலைப்படாதீங்க, அத்தனை செலவையும் எங்கள் மருத்துவமனையே பார்த்துக் கொள்ளும், எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் கேளுங்க” என்று ஒரு மருத்துவர் அவளிடம் கூறி தன் அட்டையை அவளிடம் தந்தார்.​

வந்தவர்கள் அனைவருமே நிரஞ்சனின் புகழ் பாடினர். அப்படிப்பட்ட நல்லவனுக்கு தவறாய் எதுவும் நடந்து விடாது என்று ஆறுதல் கூறினர். அப்போது தான் எழிலழகிக்கு நிரஞ்சனின் அருமை முழுமையாக தெரிந்தது.​

இத்தனை நல்லவனையா கடவுள் எனக்கு கணவனாக கொடுத்திருக்கிறார்? இதுவரை என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஆண்கள் எல்லாம் மோசமாக இருந்தனர். அதனால் தான் கடவுள் அதற்கெல்லாம் ஈடு செய்யும் வகையில் இந்த ஆபத்பாந்தவனை எனக்காக அனுப்பி வைத்தாரா?​

அப்படி அனுப்பி வைத்தவர், ஏன் இவ்வளவு சீக்கிரம் அவரை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார்? கடவுள் மேல் கோபம் வந்தது, கண்ணீர் ஆறாக பெருகியது.​

நாட்கள் வாரங்களாக உருண்டோடியது.​

மருத்துவர் அவளிடம் வந்து, “நீங்க டிஸ்சார்ஜ் ஆகலாம்” என்றார்.​

“என் கணவர்?” என்றாள் அழகி கேள்வியாக அவரை பார்த்து.​

“அவருக்கு தலையில் பலமாக அடிப்பட்டதால் நினைவில்லாமல் இருக்கார். அவர் கண்விழித்ததும் தான் மேற்கொண்டு சிகிச்சை தரமுடியும், அதற்கு சில வாரங்களோ மாதங்களோ கூட ஆகலாம்” என்றார்.​

“நானும் அப்போ அவருடனே இருக்கேன்” என்றாள் அழகி.​

“இல்லைம்மா, புரிஞ்சுக்கோ. அவர் கொஞ்சமாவது நடமாடினால் நீ அவருக்கு உதவி செய்யலாம். அவர் ஒரு ஆப்ஜெக்ட் போல இருப்பார். இங்கிருக்கிற செவிலியர்கள் பார்த்துப்பாங்க.​

வேணும்னா நீங்க பகலில் உங்க வேலை எல்லாம் முடிச்சிட்டு, இரவில் வந்து இங்கே தங்கிக்கோங்க” என்றார்​

பகலில் எனக்கென்ன வேலை இருக்கிறது என்று விட்டேற்றியாக நினைத்தவளுக்கு கணவன் கடைசியாக அவளிடம் கேட்டுக் கொண்டது நினைவில் வந்தது. ஐடி கம்பெனிக்கு வேலைக்கு போய் திறமையை வளர்த்துக் கொள் என்று சொன்னாரே.​

அவர் நலமாகி வீட்டிற்கு வருவதற்குள், நான் திமிரழகியாக மாறி அவரை வீட்டிற்கு அழைத்து போகணும் என்று மனதில் தீர்மானத்துக் கொண்டு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தாள்.​

“சரி டாக்டர், நீங்க சொன்ன மாதிரி நான் இரவு நேரங்களிலும், ஞாயிற்று கிழமைகளிலும் அவரை வந்து பார்த்துக் கொள்கிறேன், அவர் கண்விழித்தாலோ, எதாவது அசைவு தெரிந்தாலோ உடனே எனக்கு தெரிவியுங்கள்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.​

ஆட்டோவில் சென்று வீட்டை அடைந்தாள். விருந்துக்கு கிளம்பும் போது அவன் போக வேண்டாம் என்று அவளிடம் வம்பிழுத்தது நினைவில் வந்து கண்ணை கரித்தது.​

“நீங்க சொல்றதை நான் அப்படியே கேட்டு இருக்கணும் நிரு, எல்லாம் என்னால் தான் என்று கட்டிலில் விழுந்து கதறி அழுதாள்.​

முழுதாக மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் மாறிப்போன திருமண வாழ்க்கையை எண்ணி அழுவதா? தன்னை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்ட காதல் கணவனை நினைத்து அழுவதா? என்று அழுது கரைந்தாள். தேற்றுவாறின்றி அழுதவள் பின் கண்களை துடைத்துக் கொண்டாள்.​

நான் எதற்காக அழணும்? அவர் இன்னமும் உயிருடன் தானே இருக்கிறார்? கட்டாயம் நலமாகி வந்து விடுவார், அவர் வரும்வரை அவருக்காக காத்திருப்பேன் என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டு, முகத்தை கழுவி சாமிக்கு விளக்கேற்றினாள்.​

எளிதாக சமைத்து சாப்பிட்டு விட்டு, இரவு மீண்டும் நிரஞ்சன் இருக்கும் அறைக்கு சென்று அவன் கட்டிலின் அருகே நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு அவன் கைகளை பிடித்தபடி “சீக்கிரம் எழுந்து வந்துடுங்க நிரு” என்று ஜபம் போல இரவு முழுக்க சொல்லிக் கொண்டிருந்தாள்.​

காலை விடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு சென்று குளித்து தயாராகினாள். மதிய உணவிற்கும் சேர்த்து ஒரே உணவாக தயாரித்து டிபன் பாக்சில் போட்டுக் அடைத்தாள். அதை தன் கைப்பையில் வைத்து எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டியவள் ஏற்கனவே நிரஞ்சன் அறிமுகம் செய்திருந்த ஆட்டோ டிரைவரை வரவழைத்து ஆட்டோவில் ஏறினாள்.​

எங்கே செல்லவேண்டும் என்று பார்த்த ஆட்டோ ஓட்டுனரிடம், “அவள் முன்னாடி வேலை செய்த ஐடி நிறுவனத்தின் விலாசத்தை சொன்னாள். ஆட்டோ அந்த ஐடி நிறுவனம் நோக்கி சென்றது. அவள் பின்னால் ஒரு கார் அவளை தொடர்ந்தது.​

(தொடரும்)​

 
யாரு இப்படி பன்னது??... இதுல என்ன பிளான் இருக்கும்னு தெரிலையே!!... இப்போ யாரு கார் பின்னாடி???... யாரா இருக்கும்???
 

Mathykarthy

Well-known member
பாவம் நிரு... 🙁
அழகி இனி தைரியத்தோட இருந்து தானே ஆகணும்.. அவ தானே நிருவையும் பார்த்துக்கணும்....

யார் அந்த எதிரிங்க.... 🤔
 

NNK-64

Moderator
பாவம் நிரு... 🙁
அழகி இனி தைரியத்தோட இருந்து தானே ஆகணும்.. அவ தானே நிருவையும் பார்த்துக்கணும்....

யார் அந்த எதிரிங்க.... 🤔
ஆமா சிஸ். எதிரிங்க அடுத்த எபிசோடில். நன்றி சிஸ் 🥰
 

Advi

Well-known member
அச்சோ நிரு😱😱😱😱😱

அந்த ராஜ் ஆ தான் இருக்கணும்னு தோணுது
 

santhinagaraj

Active member
அச்சோ நிரு ஆகக்கூடாது 😔😔😔

அழகிய யாரு மறுபடியும் துரத்துறது 🙄🙄
அந்த ராஜ் ஆ இல்ல செல்வமா????
 
Top