எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாலையில் பால் நிலா

zeenath

Member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK15
பாலையில் பால்நிலா
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
நந்தா.. கல்லூரியில் மருத்துவத் துறையில் படிக்கும் இவனுக்கு பார்த்த நிமிடத்தில் இருந்தே காதல் அதே கல்லூரியில் படிக்கும் சைக்காலஜி மாணவியான சரண்யாவின் மீது, புதிதாக கல்லூரியில் சேர்ந்தவளுக்கு உடனே ஒருவன் காதல் என கூறிக்கொண்டு இவள் பின்னால் வருவதை வெறுக்கும் அவள், அவனிடம் கோபத்துடனே நடந்து கொள்கிறாள் இவனைச் சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருப்பதைக் கண்டு, இவனை தப்பானவன் ஆகவும் பொறுக்கியாகவும் நினைத்துக் கொள்கிறாள்.

அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் இவளுக்கு அவன் செய்யும் நல்லவைகள் அனைத்தும் தவறாகவும் பொறுக்கித்தனமாகவுமே தெரிகிறது.. இதனால் அவனை இக்கட்டிலும் மாட்டி விடுகிறாள், காவல்துறைக்கும் கல்லூரியின் முதல்வர் வரைக்கும் செல்லும் இவனுக்கு இவனின் நல்ல பெயரால் வார்னிங்கோடு அனுப்பி வைக்கப்படுகிறான்.. இதனால் அவளின் மீது கோபம் வந்தாலும் வெறுக்க முடியவில்லை அவனுக்கு. நண்பன் சஞ்சயின் சொல்படி சரண்யாவிடம் சென்று தன்னால் அவளுக்கு எந்த தொல்லையும் வராது என்பதை தெளிவுபடுத்தி ஆனால் மனைவி என்ற ஸ்தானத்தில் அவள் மட்டுமே என்பதையும் அவளுக்கு உரைத்து விட்டே வருகிறான்.
கொண்ட காதலில் வெற்றி பெற்றானா? சரண்யாவிற்கு இவனின் மீது இருந்த அபிப்பிராயம் மாறியதா? என்பது கதையில்..
சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰💐🌹
 
Top