எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

'தாமரை‌ இலை நீர் நீ..' - கதை திரி

Status
Not open for further replies.

Mafa97

Moderator
ஹாய் டியர்ஸ்..💜
நான் யார்னு மறந்து இருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.
(அப்படி தானே..😜)

ஆமாங்க நான் தான் மஃபா..
இதோ புது கதையோட மீண்டும் உங்களை சந்திக்க வந்துவிட்டேன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு..

"தாமரை இலை நீர் நீ.."

கதையின் தலைப்பு நல்லா இருக்கா?

கூடிய சீக்கிரமே கதையின் டீசரோட வரேன்..
😌
 
Last edited:

Mafa97

Moderator
டீசர்...

_ac190010-6296-11e9-bb04-32a78a0b0bbe.jpg

“ம்.. நேரடியாகவே கேட்கிறேன் .
எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?” என்று சிதம்பரம் கேட்க ஏதோ நகைச்சுவை கேட்டது போல் சிரித்தாள் அவள். அனைவரும் அவளை பிசித்திரமாக பார்த்து வைக்க கஷ்டப்பட்டு தனது சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தவள்
“நோ வே மிஸ்டர் சிதம்பரம்.. மன்னிச்சிடுங்க என்னால இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுலயும் நீங்க சொல்ற பையனை முடியவே முடியாது..” என்று வீரமாக பேசியவள் தட்டில் மீதி உணவை வைத்து விட்டு எழுந்து சென்று விட்டாள். எப்போதுமே தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைக்கும் இஷிகா தந்தை என்று வந்து விட்டால் மட்டும் அப்படியே மாறி விடுவாள்.

**********


“ஹலோ மிஸ்டர் தேவ் ஆனந்த்.. வெல்கம்..” என்றபடி தன் முன்னே நின்றவனுக்கு கை கொடுத்தார் சென்னை காவல்துறை உயர் அதிகாரி.
“ ஹலோ சார்..” என்று அவருக்கு கை கொடுத்தவனின் இதழில் எப்போதும் போல் இளம் புன்னகை. காவல் துறையில் இருந்தால் எப்போதும் உர்ரென்று தான் இருக்க வேண்டுமா? இவன் அப்படி இல்லை. யாருடன் பேசினாலும் அவனிடம் சிறு புன்னகை இருந்து கொண்டே தான் இருக்கும். வசீகர கண்ணனின் தோற்றம் கொண்டவன். பெண்கள் ஒரு முறை அவனைப் பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஆணழகன் அவன். அதிலும் போலீஸ் உடையில் தனியாக ஜொலிப்பான். இப்போது தான் சென்னை வந்து ஏ சி பி ஆக பதவி ஏற்கிறான். இத்தனை நாட்கள் வேறு ஊரில் இருந்தவன் நண்பனின் வற்புறுத்தலின் பெயரில் இங்கு மாற்றலாகி வந்திருக்கிறான் .

அவரிடம் விடைபெற்று சென்றவன் தனது வீட்டின் உள்ளே நுழையும் போது “பே..” என்ற சத்தத்தோடு குட்டி உருவம் ஒன்றும் முகத்தில் முகக் கவசம் அணிந்து கொண்டு அவன் முன்னே வந்து குதித்தது. இவனும் பயப்படுவது போல் நடிக்க அந்த குட்டி வாண்டோ “பேட் ப்பா நீங்க.. பயப்படவே இல்லை. சும்மா நடிக்கிறீங்க..” என்று தன் மழலை மொழியில் சொல்ல அவனை தூக்கி சுற்றியவன்
“சாரிடா ஆதி குட்டி. நெக்ஸ்ட் டைம் அப்பா சரியா பண்றேன்..” என்று ஒப்புக் கொண்டான் தனது மகனிடம்..
“குட்..” என்றவாரே தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான் குட்டி ஆதித்யா. நான்கு வயது நிரம்பிய தேவ் ஆனந்தின் செல்ல மகன்.



 

Mafa97

Moderator

அத்தியாயம் 01

"இஷிகா ...இஷிகா..." என்ற கவிதாவின் சத்தமே அந்த வீட்டை அலங்கரித்தது. வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது வேலைகளை செய்து கொண்டிருக்க அந்த வீட்டின் இளவரசி மாத்திரம் இன்னும் தூக்கத்தில் இருந்து கண் விழிக்கவில்லை.
" விடுங்க அத்தை அவ தூங்கட்டும்.. பாவம் சின்ன பொண்ணு தானே.." என்று கூறி அவளுக்கு ஆதரவாக பேசியது வேறு யாரும் இல்லை இஷிகாவின் அண்ணன் மனைவி இளமதி தான் .​

"என்ன அவளுக்கு சப்போர்ட் பண்றியாமம்மா?
நீயும் உன் புருஷனும் தான் அவளுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க.. பொண்ணா லட்சணமா காலையிலேயே எழுந்து வேலையை பாக்குறாளா பாரு ..எப்போ பாரு பசங்க மாதிரியே சுத்த வேண்டியது ..
கல்யாணம் கட்டிப் போற வீட்ல என்ன தான் செய்யப் போறாளோ?"
என தனது மனதில் உள்ள ஆதங்கத்தை புலம்பித் தீர்த்தார் கவிதா..​

இதற்கு மேல் பேசினால் தனக்கும் சேர்த்து தான் திட்டு விழும் என்பதை அறிந்த இளமதி வாயை கப் என்று மூடிக் கொண்டு வேலையில் கவனத்தை செலுத்தினாள். அதற்கு மேல் பொறுக்க முடியாமல்
" இவளை... நான் போனால் தான் எந்திருப்பா.." என்று கோபமாக கூறிய கவிதா கையில் தோசை கரண்டியுடன் மகளின் அறை நோக்கி நடந்தார்..​

அவர் சென்ற நேரம் அவரது செல்ல ராட்சசி அங்கு இல்லை. "எங்கே போனா ..?"
என்று சுற்றும் முற்றும் தேடியவாறு அவர் யோசிக்க குளியல் அறையில் இருந்து குரல் கொடுத்தாள் அவள்..
" மம்மி டென்ஷன் ஆகாத.. நான் நீ போட்ட சத்தத்திலேயே எந்திரிச்சிட்டேன். போய் எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு வை.
இதோ வந்துடறேன்.." என்று அவளது தேன் குரலில் அன்னைக்கு கட்டளையிட வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றார் கவிதா.​

இஷிகா... வயது 25 ஐ கடந்து விட்ட போதும் அவளது சுட்டித்தனத்திற்கு குறைவே இல்லை.
வீட்டில் அனைவருக்கும் செல்லம் தந்தையை தவிர.. அவருக்கும் அவள் மேல் பாசம் இல்லை என்று சொல்லி விட முடியாது. பிள்ளைகள் மேல் பாசம் உள்ளவர் தான் அவர். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்.
அம்மா ,அப்பா, அண்ணா, அண்ணி என அழகான குடும்பம் அவளுடையது ..தந்தை பெயர் சொல்ல கூடிய அளவு வளர்ந்து நிற்கும் தொழிலதிபர். அண்ணன் விமல் தந்தையுடன் தொழிலை பார்த்துக் கொள்கின்றான்.​

கவிதா தான் பெண் பிள்ளையை காலா காலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பார். ஏனெனில் அவர்கள் பட்ட அவமானம் அப்படி.
ஆம் இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் .மூத்தவன் விமல், இரண்டாவது மகள் தான் தீப்தி, மூன்றாவது கடைக் குட்டி இஷிகா..

தீப்தி ஒருவனை காதலித்து அவனுடன் வீட்டை விட்டு சென்று ஆறு வருடங்களும் கடந்து விட்டன. எனவே இவளுக்காவது நல்ல ஒரு வரணாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது கவிதாவின் எண்ணம். ஆனால் அந்த கட்டுக்குள் அடங்குபவளா நம் இஷிகா ..​

திருமணம் என்றாலே தலை தெரிக்க ஓடும் ரகம் அவள். அதற்கு அண்ணனும் அண்ணியும் கூட்டு வேறு.. அதனால் தான் நினைத்ததை செய்து கொண்டு பட்டாம்பூச்சியாக தனது உலகில் சுதந்திரமாக உலா வருகிறாள் அவள்.​

தனது வேலைகளை முடித்து விட்டு கீழே வந்தவள் எல்லோருடனும் சேர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தாள். தந்தையும் அங்கு இருக்கவே அமைதியாக உண்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினாள் பெண்ணவள். அதனை அவதானித்த கவிதா அவளை கேவலமாக பார்த்து ஒரு லுக்கு விட அவரது பார்வைக்கு எல்லாம் அசருபவளா நம் சண்டி ராணி .. அதை தூசு போல் தட்டி விட்டு தந்தை பக்கம் பார்வை செலுத்தினாள்.​

ஏனெனில் நீண்ட நேரமாக அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தார் சிதம்பரம். இருவரது பார்வையும் நேர்கோட்டில் சந்திக்க அப்போதும் அமைதியாகவே இருந்தார் அவர். பெருமூச்சொன்றை இழுத்து விட்ட இஷிகா "எது சொல்றதா இருந்தாலும் சொல்லலாம்.."
என்று யாரிடமோ பேசுவதைப் போல் பேசி வைத்தாள்.​

கவிதாவிற்கு தான் இஷிகா மீது கடும் கோபம் வந்தது தந்தையிடம் இப்படியா பேசுவது என்று..
ஆம் இப்படித் தான் எப்போதும் தந்தையுடன் ஒட்டாமல் தான் பேசுவாள் அவள். எப்போது அக்காவின் காதலை எதிர்த்து அவளை துன்புறுத்தினாரோ அன்றிலிருந்து தந்தையை வெறுக்க ஆரம்பித்து விட்டாள்.
"ம்.. நேரடியாவே கேட்கிறேன் எப்போ கல்யாணம் பண்ணிக்க போற..?"
என்று சிதம்பரம் கேட்க ஏதோ நகைச்சுவையை கேட்டது போல் சிரித்தாள் அவள்..​

அனைவரும் அவளை விசித்திரமாக பார்த்து வைக்க கஷ்டப் பட்டு தனது சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தவள்
" நோ வே மிஸ்டர் சிதம்பரம். மன்னிச்சிடுங்க என்னால இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுலயும் நீங்க சொல்ற பையனை முடியவே முடியாது.."
என்று வீரமாக பேசியவள் தட்டில் மீதி உணவை வைத்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.​

எப்போதுமே தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைக்கும் இஷிகா தந்தை என்று வந்து விட்டால் மட்டும் அப்படியே மாறிவிடுவாள்.. கவிதாவிற்கு தான் யார் பக்கம் நிற்கவென்று தெரியாது போகும். அதுக்கு மேல் அந்த இடத்தில் மௌனமே ஆட்சி செய்தது ..
சிதம்பரம் கோபத்தின் உச்சியில் இருந்தார்.
தனது பேச்சை கேட்டு நடக்காமல் இருக்கும் மகள் மீது அத்தனை கோபம் வந்தது அவருக்கு. வீட்டில் கடை குட்டி என்று சிறு வயதிலேயே அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்ததை நினைத்து இப்போது தன்னை கடந்து கொண்டார் அந்த தந்தை.​

*****************​

"ஹலோ மிஸ்டர். தேவ் ஆனந்த்... வெல்கம்.."
என்ற படி தன் முன்னே நின்றவனுக்கு கை கொடுத்தார் சென்னை காவல்துறை உயர் அதிகாரி .
"ஹலோ சார்.." என்று அவருக்கு கை கொடுத்தவனின் இதழில் எப்போதும் போல் இளம் புன்னகை. காவல் துறையில் இருந்தால் எப்போதும் உர்ரென்று தான் இருக்க வேண்டுமா?
அவன் அப்படி இல்லை.. யாருடன் பேசினாலும் அவனிடம் சிறு புன்னகை இருக்கும். வசீகர கண்ணனின் தோற்றம்.. பெண்கள் ஒரு முறை அவனைப் பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஆணழகன் ..அதிலும் போலீஸ் உடையில் தனியாக ஜொலிப்பான். இப்போது தான் சென்னை வந்து ஏசிபி ஆக பதவி ஏற்கிறான் ..
இத்தனை நாட்கள் வேறு ஊரில் இருந்தவன் நண்பனின் வற்புறுத்தலின் பெயரில் இங்கு மாற்றலாகி வந்திருக்கிறான்.​

அவரிடம் விடை பெற்று சென்றவன் தனது வீட்டில் உள்ளே நுழையும் போது "ப்பே..." என்ற சத்தத்தோடு குட்டி உருவம் ஒன்று முகத்தில் பேய் முகக் கவசம் அணிந்து கொண்டு அவன் முன்னே வந்து குதித்தது. இவனும் பயப்படுவது போல் நடிக்க அந்த குட்டி வாண்டோ
" பேட் ப்பா நீங்க.. பயப்படவே இல்லை ..சும்மா நடிக்கிறீங்க.." என்று தன் மழலை மொழியில் சொல்ல அவனைத் தூக்கி சுற்றியவன்
"சாரிடா ஆதி குட்டி ..நெக்ஸ்ட் டைம் அப்பா சரியா பண்றேன்."
என்று ஒப்புக் கொண்டான்..

"குட்.." என்றவாரே தந்தையின் கண்ணத்தில் முத்தமிட்டான் குட்டி ஆதித்யா.
நான்கு வயது நிரம்பிய தேவ் ஆனந்தின் செல்ல மகன். தங்களுக்கேயான உலகத்தில் இருந்த தந்தை மகன் இருவரையும் "நானும் இங்கே தான் டா இருக்கேன் .." என்ற அர்ணவ்வின் குரல் கலைத்தது.. ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்த தந்தை மகன் இருவரும் " சாரி .."
என்று ஒரே போல் சொல்ல இருவரையும் பார்த்து முறைத்து வைத்தான் அர்னவ்.​

" அப்பா நான் விளையாட போறேன்.." என்று கூறிய ஆதித்யா அவனது கையில் இருந்து இறங்கி சென்று விட்டான் தந்தையும் அவனது தோழனும் பேசிக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் ..
அவனது செயலைக் கண்ட அர்னவ்
" அப்படியே அவங்க அம்மா மாதிரி.. நமக்கு பிரைவசி கொடுத்துட்டு போறான் பாரு பெரிய மனுஷன்.." என்று பெருமிதமாக கூறியவாறு நண்பனை பார்த்தான். அவனது கூற்றை கேட்ட தேவ் ஆனந்தின் கண்கள் கலங்கி போயின. ஆனால் தலை மட்டும் ஆம் என்பது போல் அசைந்தாடியது.
" சாரிடா மச்சான் பழையது எதையும் பேச கூடாதுன்னு நினைச்சேன் ..
முடியலடா.. இப்போ நம்ம கூட விஷ்ணுவும் இருந்திருந்தா ரொம்ப நல்லா இருக்கும் இல்லையா..?"
என பேசிய அர்னவ்வின் கண்களும் கலங்கி போயின. அதனை கேட்ட தேவ் ஆனந்த் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான் ..
அவன் வாழ்வில் நடந்தவைகள் மறக்க கூடியவைகளா என்ன? இதைப் பற்றி அர்னவ் பேசாவிட்டாலும் அடிக்கடி நினைவுகளில் வந்து செல்கின்றன பழையவை அனைத்தும் ..​

அங்கே நீண்ட நேர மௌனம் ..அதை கலைக்க நினைத்த அர்னவ்
" மச்சான் புதுசா எல்லாத்தையும் தொடங்கு ..அடிக்கடி ஆஃபீஸ் பக்கமும் தலையை காட்டு. தனியே சமாளிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குடா .." என அழுத்துக் கொண்டான்.​

ஆம் கல்லூரி படிப்பை முடித்த கையோடு தொழில் தொடங்கி விட்டனர் நண்பர்கள்.
தேவ் ஆனந்த் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்தாலும் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யவும் தயங்கவில்லை .. விஷ்ணுவும் அவர்களது தோழன் தான் ..மூவரும் ஒன்றுக்குள் ஒன்று. எங்கு சென்றாலும் ஒன்றாகத் தான் செல்வார்கள். தேவ் ஆனந்த் மற்றும் விஷ்ணு இருவரும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள்.. சிறு வயதில் இருந்தே தந்தை , தாய் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை.. அர்னவ் மற்றும் அவனின் பெற்றோர் தான் அவர்களுக்கு எல்லாமே. அர்னவ்வின் பெற்றோர்கள் அவனை பார்ப்பது போன்று தான் மற்ற இருவரையும் பார்த்தனர்..​

இருவரும் சிறுவயதில் இருந்தே கிடைத்த வேலையை செய்து கொண்டே தான் தங்களது படிப்பையும் தொடர்ந்தனர். தங்களது தேவைகளை எந்தவித தடங்களும் இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டனர் இருவரும். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த மூவரின் வாழ்விலும் ஒரு பெரும் புயல் அடித்து வாழ்க்கையையே மாற்றி விட்டது..

" என்னடா யோசிக்கிற..? ஆபிஸ் பக்கம் வர்ற ஐடியா இருக்கா இல்லையா ?"
மீண்டும் அர்னவ் தான் பேசினான். அவனைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தவன்
"கண்டிப்பா வருவேன்.. அடிக்கடி வருவேன் ..உன்னை டிஸ்டர்ப் பண்றதுக்காகவே.." என்று கூறி விட்டு கண்ணடித்தான் .​

அதன் பிறகு ஏதேதோ பேசிக் கொண்டனர் நண்பர்கள்.. நீண்ட நாட்களுக்கு பிறகான இருவரின் அழகிய உரையாடல்.. இருவரும் ரசித்து தங்களது நேரத்தை கடத்தினார்கள்.​

தொடரும்...​


கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...

 

Mafa97

Moderator

அத்தியாயம் 02

தனது அலுவலகத்தின் முன் ஸ்கூட்டியை நிறுத்தியவள் உள்ளே செல்ல
"இஷிகா உன்னை மேனேஜர் சந்திக்குறதுக்காக ஆவலா காத்துக்கிட்டு இருக்கார்.."
என்று அலுவலக தோழி ஒருத்தி செய்தி கூறினாள்.
" இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லை. என்னவாம்டி இவனுக்கு.." என்று சலிப்புடன் இஷிகா கேட்க "எனக்கு என்னடி தெரியும். நீயே போய் அந்த ஆளு கிட்ட கேட்டு பாரு .. என்னை விட்டுடு ."
என்று கூறிய தோழியும் சிரித்த படியே கடந்து சென்று விட்டாள்.

அவளுடைய சிரிப்பை கண்டு முறைத்த இஷிகா வேண்டா வெறுப்பாக மேனேஜரை சந்திக்க வேண்டி அவரது அறை நோக்கி சென்றாள் .
அனுமதி கேட்டு இவள் உள்ளே நுழைய வாயில் உள்ள அனைத்து பற்களும் தெரியும் அளவு சிரித்துக் கொண்டு இருந்தான் மேனேஜர் சம்பத் .​

அவனை அப்படி கண்டதுமே எரிச்சலாக இருந்தது .
அவளுடைய மேலதிகாரி என்பதால் அமைதியாக
"குட் மார்னிங் சார் .. என்ன விஷயமா என்னை சந்திக்கனும்னு சொன்னீங்க ?"
என்று கேட்டு வைத்தாள்.​

" முதல்ல உட்காருங்க இஷிகா. ஆறுதலா பேசலாம்.." என்று அவன் சிரித்த படி சொல்ல கடுப்புடன் அவன் முன்னே அமர்ந்தாள் அவள்.
இந்த மேனேஜருக்கு 30 வயது தான் இருக்கும். எந்த பெண்களை கண்டாலும் வழிந்தபடி தான் பேசுவான். அதனால் இந்த அலுவலகத்தில் உள்ள பெண்களுக்கு அவனை கண்டாலே ஆகாது .ஆனால் வெளியில் யாரும் எதுவும் சொல்வது இல்லை ..வேலை முக்கியமே..​

"இஷிகா நம்ம ஏரியாவுக்கு புதுசா ஒரு ஏசிபி வந்து இருக்கிறதா எம்டி சார் சொன்னார் .. உங்களோட அடுத்த வேலை என்னென்னா அவரை ஒரு இன்டர்வியூ எடுக்கணும்.அவரோட இன்டர்வியூ முதல்ல நம்ம பேப்பர்ல தான் வரணும் ...சோ நாளைக்கே ஆக வேண்டிய வேலையை பாருங்க.." என்று மேனேஜர் கூற வேலை என்றதும் குஷியானவள் சரி சரி என்று அனைத்தையும் கேட்டுக் கொண்டு தலையாட்டினாள்.​

அடுத்த நாள் விடிந்ததும் விடியாமலும் கேமராமேன் சுதீப்புடன் தேவ் ஆனந்தின் வீட்டுக்கு முன் போய் நின்றாள் இஷிகா .
அவர்களது மேனேஜர் இன்டர்வியூக்கான அனுமதியை முன்னைய தினமே பெற்றிருந்தமையால் இருவருக்கும் அந்த வேலை மிச்சம். காவலாளியிடம் அனுமதி பெற்ற இருவரும் உள்ளே நுழைய அமைதியான வீடே அவர்களை வரவேற்றது.
" என்னடா யாரையும் காணோம். ஒருவேளை வீட்டில் சார் இல்லையோ?"
என்று சுதீப்பிடம் மெல்ல முணுமுணுக்க
" வாங்க மிஸ் ..
எல்லோரும் வீட்ல தான் இருக்கோம்.." என்ற கம்பீரக் குரல் அவளது பேச்சை இடைநிறுத்தி அந்த திசை பக்கம் பார்க்க வைத்தது .​

உடற்பயிற்சியை இப்போதுதான் முடித்து விட்டு வந்தேன் என்று சொல்லாமல் சொல்லியது அவனது தோற்றம்.
" வாவ் .."
என்று மெல்ல இதழ் அசைத்தாள் இஷிகா.
அருகே இருந்த இரு ஆண்களுக்குமே அவள் கூறிய அந்த 'வாவ்'
கேட்க தேவ் ஆனந்த் மெலிதாக புன்னகைத்தான் என்றால் சுதீப் சங்கடமாக இருவரையும் மாறி மாறி பார்த்தான்.​

"அச்சோ எங்க வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க நீ.."
என்று அவன் இஷிகாவின் காதுக்குள் சொல்ல அப்போது தான் சுய நினைவிற்கு வந்தாள் அவள்.​

இப்போதாவது அவள் வாயை வைத்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம்.
"ஹலோ சார் நீங்க ஹான்ட்சம்மா இருக்கீங்க.. அழகா வேற சிரிக்கிறீங்க ..சைட் அடிக்கிறது ஒன்னும் தப்பு இல்லையே .."
என தேவ் ஆனந்திடமே கேட்டு வைக்க சுதீப்பிற்க்கு தான் எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது..​

ஆனால் "வொய் நாட்.."என்று புன்னகையுடன் கூறிய தேவ் ஆனந்த் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான். இருவரையும் அங்கே இருந்த ஷோபாவில் அமர வைத்தவன் உள்ளே சென்று மூவருக்குமான தேநீரை கையில் ஏந்திய படி வந்து மேஜை மீது வைத்து
"எடுத்துக்கோங்க.."என்று கூறி விட்டு இருவரையும் பார்த்தான்.​

சுதீப் இஷிகாவை பார்க்க அவள் எங்கே இந்த உலகத்தில் இருந்தாள். வெகு தீவிரமாக தேவ் ஆனந்தை சைட் அடித்துக் கொண்டு அல்லவா இருந்தாள். அவளை மனதுக்குள் திட்டி தீர்த்தவன்
" ஹலோ சார் நாங்க ..."
என்று தங்களை அறிமுகம் செய்ய போக
"தெரியும் நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு மேனேஜர் சொன்னார் ..
ஆனா இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல.." என்று தேவ் ஆனந்த் கூற அவனது பதிலில் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து வைத்தனர்.​

அவர்களைப் பார்த்தவன்
"சரி இன்டர்வியூவை ஆரம்பிக்கலாமா? எனக்கு வேலைக்கு போக டைம் ஆகுது.."
என்று கூற அதற்கு மேல் நேரத்தை வீணடிக்காமல் அவனிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள் இஷிகா. சுதீப் அவனை அந்த உடையிலேயே புகைப்படம் எடுக்க நேரம் கடந்து கொண்டே போனது "அப்பா.." என்ற அழைப்போடு ஆதித்யா அங்கு வந்து சேரும் வரை..​

"குட்மார்னிங் செல்லம்.. எந்திரிச்சிட்டீங்களா?"
என்று கூறிய படி அவனை கையில் ஏந்தி கொண்டு தனக்கு முன் இருந்த இருவரையும் பார்த்து "என்னோட பையன்.. ஆதித்யா.." என்று அறிமுகம் செய்து வைத்தான்.​

அதனை கேட்ட நம் இஷிகாவின் குட்டி இதயம் தூள் தூளாக வெடித்து சிதறியது வெளியே யாருக்கும் தெரியவில்லை ..
அவள் முகமே தொடங்கிப் போனது.. இதில் வேறு சுதீப் அவளை பார்த்து இளக்காரமாக புன்னகைத்து வைக்க அவமானமாகிப் போனது அவளுக்கு.. இப்போது சுதீப் தான் "சார் உங்க மனைவி ..அப்புறம் குடும்பத்தை பற்றி எல்லாம் சொன்னீங்கன்னா அதையும் எழுதிடலாம்..."
என்று கேட்க
"இல்ல மிஸ்டர் ..என்னோட பர்சனல் மக்களுக்கு தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன். சோ.." என்று அதை அத்தோடு நிறுத்தினான் தேவ ஆனந்த்.​

" ஓகே சார் ..அப்போ நாங்க கிளம்புறோம் .."
என்று கூறியவன்
இஷிகாவை தலையில் தட்டி வெளியே அழைத்து வந்தான். அவளுக்கு தான் வெட்கமாக இருந்தது..
" கல்யாணமானவரையா சைட் அடிச்சோம்.. அவமானம்.. அவமானம் .."
என்ற புலம்பிய படியே தான் வெளியே வந்தாள்.​

"சரி விடு இஷிகா. இதெல்லாம் சகஜம்."
என்று வெளியே கூறினாலும் வாய்க்குள் தனது புன்னகையை மறைத்துக் கொண்டான் சுதீப் .. "டேய் சும்மா இரு..என்கிட்ட அடி வாங்கி சாகாத.."
என்று கோபமாக அவனை பார்த்து கூறியவள் அவனை அங்கேயே விட்டு விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
சுதீப் தான் பாவம். செய்வது அறியாது அங்கேயே நின்று விட்டான்.​

************​

'அன்னை தெரேசா மன நல காப்பகம்..'
என்ற பெயர் பலகையுடன் கம்பீரமாக நின்றிருந்தது அந்த கட்டிடம் .
மக்களால் பைத்தியம் என்று பெயர் குறிக்கப் பட்ட மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் தாங்கள் யார் என்று கூட தெரியாமல் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தனர்.​

அவர்கள் எனக்கு ஒன்றும் புதிது இல்லை, அவர்கள் என்னை பாதிக்கவும் இல்லை என்பதை போல் அங்கே இருக்கும் நடைபாதை வழியே நடந்த சென்று ஒரு அறையின் முன் நின்றான் தேவ் ஆனந்த் .
அவனை கண்டு செவிலி ஒருவர் வந்து
"நீங்க கூட்டிகிட்டு வந்த அந்த பொண்ணு எதுவுமே சாப்பிட மாட்டேன்றாங்க.. மருந்து கூட வேணாம்னு சொல்லிட்டாங்க.. ரொம்ப அடம் பண்றாங்க சார்.." என்று அடுக்கிக் கொண்டே போக "புது இடம் தானே.. அதனால தான் இப்படி இருக்கா போல.. நான் பாத்துக்கிறேன்.." என்றான் ஒரு பெருமூச்சோடு..​

அவரும் தலையாட்டி விட்டு நகர மெதுவாக அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் கண்டது தலைவிரி கோலமாக அந்த காப்பகத்தின் உடையான பச்சை நிற உடையை அணிந்து கட்டிலில் அமர்ந்திருந்த தீப்தியை தான். அவளை சில ஆண்டுகளாக இப்படித் தான் பார்க்கிறான். அது பழகிப்போன ஒன்று தான் என்றாலும் மனதின் ஓரம் சிறு வலி இருக்கத் தான் செய்கிறது.​

"தீப்தி ..."
என்ற அவனுடைய மெல்லிய அழைப்பில் சடார் என அவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண்ணவள். அவளுக்கு நெருக்கமான குரல் ஆயிற்றே.. அதனால் தலையை உயர்த்திப் பார்த்தாள் போலும். அவளுடைய செயலில் புன்னகைத்தவன்
"ஏன்ம்மா நீ சாப்பிடவே இல்லையாமே.. கொஞ்சம் சாப்பிடுறியா?"
என பணிவாக வினவ சரி என்பதை போல் தலையாட்டினாள் அவள் .​

உடனே செவிலி பெண்ணை அழைத்தவன் உணவை வரவழைத்து தீப்திக்கு ஊட்டி விட்டான் ..
எந்த மறுப்பும் தெரிவிக்காது சமத்தாக உண்டு முடித்தாள். அவன் மாத்திரைகளையும் நீட்ட அதனையும் வாங்கிக் கொண்டாள் அந்த பிள்ளை மனம் கொண்ட பெண்ணவள்.​

"தீப்தி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னைக்கு காலைல என்னை மீட் பண்ண உன்னோட தங்கச்சி இஷிகா வந்திருந்தா.. நீ அவளைப் பற்றி சொன்னதை விட ரொம்ப சுட்டியா இருக்கா.." என்று தேவ் ஆனந்த் கூற தீப்தி இடம் எந்த எதிர்வினையும் இல்லை..​

ஆனாலும் அவன் சொல்வதை நிறுத்தவும் இல்லை .
அவளுக்கு தங்கை என்றால் உயிர் என்பது அவன் அறிந்த விடயமே. எனவே தான் அதை அவளிடம் கூற ஆரம்பித்தான். அவளது ஆழ்மனதிற்கு விடயம் போய் சேருகிறதா இல்லையா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது.
இன்று அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்கிறாளே அதுவே பெரிய வெற்றி தான் அவனுக்கு. முன்பை விட இப்போது தேறி விட்டாள் என்றே கூறலாம்.​

"ஆனா பாரு தீப்தி எனக்கு அவளை அடையாளம் தெரிஞ்சாலும் அவளுக்கு எங்க ரெண்டு பேரையும் தெரியல.. நீ இப்படி இருக்கிறது தெரிஞ்சா என்ன பண்ணுவா, உனக்காக கவலைப் படுவாளா?
இல்லை உங்க அப்பா பண்ணது தான் சரின்னு சொல்லி அவர் பக்கம் நிற்பாளா?" என்று தீப்தியை பார்த்த படி அவன் பேசிக் கொண்டு இருக்க அவளிடம் எந்த மாற்றமும் இல்லை..​

ஆனால் இவன் விடுவதாகவும் இல்லை.
" என்ன இருந்தாலும் உங்க அப்பாக்கு என்னால தான் அழிவு.. எங்க வாழ்க்கையை அழிச்சிட்டு அவர் மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்..? விட மாட்டேன்" என்று பேசியவனின் கண்கள் இப்போது கோபத்தில் சிவந்து இருந்தன..​

' அவர்களது வாழ்க்கை இப்படி இருக்க அவர் மட்டும் தனது குடும்பத்துடன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?' என்பதே அவனது கோபம்.
'எப்படி ஓடியாடி திரிந்த பெண்.
இன்று இந்த நிலையில் இருக்கிறாள். அனைத்துக்கும் அவர் தான் காரணம். காதலித்தது ஒரு பெரும் குற்றமா என்ன? அதற்காக இப்படியெல்லாமா ஒரு தந்தை நடந்து கொள்வார்?' என்பன தேவ் ஆனந்தின் மனக்குமுரல்கள்.​

தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன்
வனதீப்தியின் கைகளை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு
"சீக்கிரமே குணமாகி வந்திடுமா.. ஆதித்யா அம்மா எங்கன்னு கேட்க ஆரம்பிச்சுட்டான்.. அப்பா இல்லாமல் ஒரு குழந்தையை வளர்க்கிறதை விட அம்மா இல்லாமல வளர்க்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு தெரியுமா? திரும்பவும் உங்க அப்பா முன்னாடி சந்தோஷமா வாழ்ந்து காட்டணும்.." என்றான் உணர்ச்சிகரமாக ..​

மேலும் அங்கு இருந்தால் தன்னை மீறி அழுது விடுவோம் என்பதை அறிந்து அந்த இடத்தை விட்டு வேகமாகவே வெளியே வந்து விட்டான் .அவன் சென்றது கூட தெரியாமல் மலங்க மலங்க விழித்தவாறு அமர்ந்திருந்தாள் தீப்தி.​

தொடரும்..​


கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..
உங்கள் கருத்துக்கள் தான் எங்களை ஊக்குவிக்கும்..😊


 

Mafa97

Moderator

அத்தியாயம் 03​

" சிரிக்காத டி .. சொன்னா கேளு எனக்கு கோபம் வருது .."
இஷிகா தான் தனது தோழி ஆர்த்தியை
எச்சரித்துக் கொண்டு இருந்தாள ..
" ஹேய் சாரிடி... சாரீ.. பட் என்னால சிரிப்பை அடக்க முடியல தெரியுமா? கொஞ்சம் சிரிச்சுக்குறேன்டி . ப்ளீஸ்... "
என்ற ஆர்த்தி இஷிக்காவின் முகத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.​

"எதுக்கு இப்படி விருந்து விழுந்து சிரிக்கிற..? அதொன்னும் அவ்வளவு பெரிய சீன் இல்லையாக்கும்.." என்று இஷிகா கோவத்துடன் சொல்ல
"ஆமா ஆமா ..கல்யாணம் ஆனவரை சைட் அடிக்கிறது எல்லாம் பெரிய சீன் இல்லை தான்.."
என்று கூறிய ஆர்த்தி மீண்டும் சிரித்தாள்.​

"முதல்ல அந்த சுதீப் நாயை கொல்லனும்.. அவன் தானே உன்கிட்ட சொன்னான்.. துரோகி.."
அவனையும் சேர்த்து திட்டினாள் இஷிகா..
ஆம் சுதீப் தான் இந்த விடயத்தை தனக்குள் வைத்திருக்க இயலாது ஆர்த்திக்கு அழைத்துக் கூறிவிட்டான் ..​

இன்று தோழியை நேரில் சந்தித்ததும் அதை கூறியே அவளை கலாய்த்தாள் ஆர்த்தி. இதற்கு மேல் முடியாது என்று உணர்ந்த இஷிகா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "ப்ளீஸ் விட்டுடி.. கல்யாணம் ஆனவரை சைட் அடிச்சது எனக்கே கொஞ்சம் வெட்க்கமா தான் இருக்கு .. அதுல நீங்க ரெண்டு பேரும் வேற..போங்கடி.."
என்றாள் ‌‌..
"சரி பாவமா இருக்கிறதால உன்னை விடுறேன்.." என்ற ஆர்த்தி வேறு பேச்சுக்கு தாவினாள்.​

இருவரும் நல்ல நண்பர்கள்.. கல்லூரி முதல் வருடத்தில் இருந்து இன்று வரை அதே மாறாத நட்புடன் தான் பழகி வருகின்றனர்.
ஆர்த்தி இஷிகா போல பணக்கார வீட்டு பிள்ளை இல்லை. ஆனால் தேவையான அளவு சொத்து இருக்கின்ற கௌரவமான குடும்பம் அவளுடையது. ஆர்த்திக்கு இஷிக்காவின் துருதுரு பேச்சும் செயல்களும் அவ்வளவு பிடிக்கும் .
அதனால் அவளை தேடிச் சென்று நட்பு பாராட்டினாள். சுதீப் இஷிகாவின் அலுவலக நண்பன். ஆர்த்தியை இஷிகாவுடன் அடிக்கடி சந்தித்து பேசுவதால் இப்போது அவளுடனும் பேசி பழகி தோழன் ஆகி விட்டான்.​

"ஆர்த்தி எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?"
என்று திடீரென பேச்சின் நடுவே கேட்டு விட்டாள் இஷிகா.
இத்தனை நேரம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தவளுடைய முகம் அப்படியே மாறிப் போனது இஷிக்காவின் கேள்வியில். அதனை கண்டு கொள்ளாமல் "எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்கப் போற? அம்மா அப்பா ரெண்டு பேரும் பாவம் இல்லையா? இருக்க ஒரு பிள்ளை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழனும்னு அவங்களுக்கும் ஆசை இருக்காதா?"
என்று ஆதங்கத்தோடு பேசினாள் இஷிகா.​

" அவங்க சந்தோஷத்துக்காக நான் வேறொருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியும் என்று நீ நினைக்கிறியா ?"
ஆர்த்தியும் விடாது பேசினாள் .
"சரி டி ஒத்துக்கிறேன்.. நீ லவ் பண்றவனும் உன்னை லவ் பண்ணனும் இல்லையா?
எத்தனை நாளைக்கு தான் ஒருத்தருக்காக காத்துக்கிட்டிருக்கிறது.. பேசாம அம்மா அப்பா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டேன்.."
என்றாள் இஷிகா..​

அதனை கேட்ட ஆர்த்தியின் கண்கள் கலங்கி விட்டன. அதை கண்ட இஷிகாவிற்கும் ஒரு மாதிரியாகி போய் விட்டது.
மேலும் ஏதோ பேச போன இஷிக்காவை தடுத்த ஆர்த்தி "வேணாம் எதுவும் பேசாத.. நானாடி முதல்ல போய் அத்தானை காதலிக்கிறேன்னு அவங்க முன்னாடி நின்னேன்.. அம்மா அப்பா, அத்தை மாமா எல்லாரும் தானே சின்ன வயசுல இருந்தே என் மனசுல ஆசையை வளர்த்தாங்க.. அத்தான் உனக்குத் தான்னு அவங்க சொன்னதால தானே நானும் அவர் மேல அதிக ஆசையை வளர்த்துகிட்டேன்.. இப்போ வந்து வேற கல்யாணம் பண்ணிக்க அது இதுன்னா நான் பல்லை காட்டிகிட்டு போய் நிக்கணுமா ?
என்னால முடியாது..."
என நீளமாக பேசி முடித்தாள் அவள் ..​

அவளால் வேறு ஒருவனை திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஒருவன் மீது ஆசை வைத்து விட்டு வேறொருவனை எப்படி மணந்து கொள்வது?​

"ஓகே ..ஓகே.. நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா பாரு உங்க அத்தான் வாயை திறக்கணுமே.. அவர் எதுவுமே சொல்லலைன்னா எப்படி டி ..?
அம்மாவும் அப்பாவும் பாவம் இல்லையா ?"​

அவள் போக்கிலேயே போக நினைத்த இஷிகா மெல்ல பேச்சு கொடுத்தாள்.. ஆர்த்தி அத்தான் என்று கூறும் நபரை இதுவரை கண்டதே இல்லை அவள்.
தனது தோழியின் காதலை மறுக்கும் அவனை பார்க்க நினைக்கவும் இல்லை. ஆனால் இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் தோழியின் வாழ்க்கை தான் கெட்டு விடும் என்பதை உணர்ந்தவள் தனக்குள் ஒரு முடிவு எடுத்துக் கொண்டு மேலும் பேசினாள்.​

" பாவம் தான் என்னை என்ன பண்ண சொல்ற?" என்றாள் கோபமாக ஆர்த்தி .
"சரி கோபப்படாத.. வேணும்னா உன் அத்தான் கிட்ட நான் பேசி பார்க்கவா?"
என்ற இஷிகாவின் கேள்வியில் ஒரு நொடி மலர்ந்த ஆர்த்தியின் முகம் மீண்டும் வாடிப் போனது.. அதை கண்ட ம இஷிகா மீண்டும்
" என்ன சொல்ற..?
அவர் என்ன தான் நினைக்கிறார்னு நாங்களும் தெரிஞ்சுப்போம் ..அப்புறம் ஏதாச்சும் முடிவு எடுக்கலாம் இல்லையா?"
என்று கூற சிறிது நேரம் யோசனை செய்த ஆர்த்தி சரி என்பதை போல் தலையாட்டினாள்.​

"குட் ..அவர் பேர் என்னன்னு சொன்ன?"
என்ற இஷிகாவை இப்போது கேவலமாக பார்த்து வைத்தாள் ஆர்த்தி.
"ஹே சும்மா சொல்லுடி.. எப்ப பாரு அத்தான் பொத்தான்னா எனக்கு என்ன தெரியும்..?"
என்றிட இப்போது ஆர்த்திக்கு வெட்கமாகி போனது..​

" சாரிடி நான் சொன்னதே இல்லைல.. அவர் பெயர் அர்னவ்.." என்று மேலும் ஏதோ சொல்ல போக கை நீட்டி தடுத்தவள்
"போதும் தாயே அவர் புராணம் பாடிறாத.. நான் அவரை கண்டுபிடிச்சு என்னன்னு கேட்டுட்டு வந்து உன்னை மீட் பண்றேன் .."
என்றவாறு எழுந்து சென்றாள்.​

மீண்டும் திரும்பி ஆர்த்தியிடம் வந்து
"அவரோட அட்ரஸை மட்டும் எனக்கு சென்ட் பண்ணிடு.." என்று கூறி விட்ட பறந்து சென்று விட்டாள்.​

***************​

அர்னவ், தேவ் ஆனந்த் இருவரும் தங்கள் அலுவலகத்தில் அமர்ந்து வேலை விஷயமாக பேசிக் கொண்டு இருக்கும் போது ரிசப்ஷனிஸ்ட் அழைத்து அர்னவை சந்திக்க ஒரு பெண் வந்திருப்பதாக கூறினாள். கேள்வி எதுவும் கேட்காது உள்ளே அனுப்புமாறு கூறி விட்டான் அவன். ஆனால் மனதில் யாராக இருக்கும் என்ற கேள்வி தோன்றியது உண்மை தான்.​

" எக்ஸ்கியூஸ் மீ .."
என்ற படி உள்ளே வந்தவளை கண்ட நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
'இவள் எங்கே இங்கே ?'
என்பதை போல் ..
அவர்களை விட அதிர்ச்சி இஷிகாவிற்கு தான் .
தேவ் ஆனந்த்தை அவள் இங்கே எதிர்பார்க்கவில்லை அல்லவா.​

அதனால் அதற்கு மேல் அவள் ஒரு நொடி கூட எடுத்து வைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அவள் விழித்துக் கொண்டு இருக்க "உள்ளே வாங்க.."
என்று அவளை அழைத்தான் அர்னவ்.
இன்று இங்கு வந்த விடயத்தை முடித்தே ஆக வேண்டும் என்று நினைத்தவள் அதற்கு மேல் தாமதிக்காது உள்ளே சென்று அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டாள்‌.​

"நீங்க யாரு ?
என்ன விஷயமா என்னை மீட் பண்ண வந்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
என்று அர்னவ் அவளை தெரியாதது போலவே கேட்டான்‌.​

"ஐ அம் இஷிகா.. ஆர்த்தியோட பிரிண்ட். உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு வந்தேன்.."
என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் தான் வந்த விடயத்தையும் சேர்த்தே கூறினாள்.
ஆர்த்தியின் தோழி என்றதும் எதற்காக அவள் இங்கு வந்திருப்பாள் என்று யூகித்து விட்டான் அர்னவ்.​

தேடி வந்தவளை அவமதிக்காது "சொல்லுங்க என்ன விஷயம்?" என்று தனது விருப்பமின்மையை வெளியே காட்டாமல் கேட்டு வைத்தான்.
திரும்பி அங்கே இருந்த தேவ் ஆனந்தை ஒரு பார்வை பார்த்த இஷிகா
" சார் இது கொஞ்சம் பர்சனல்.." என்று இழுக்க அவள் எதற்கு தயங்குகிறாள் என்பதை புரிந்து கொண்டவன்
"அவன் என்னோட பெஸ்ட் பிரண்ட் தான். அவனுக்கு தெரியாமல் என் லைஃப்ல எதுவும் இல்லை. நீங்க சொல்ல வந்ததை தாராளமா சொல்லலாம்.." என்றான் அவன்.​

அவனே அப்படி கூறி விட்ட பிறகு இவளுக்கு என்ன தயக்கம். அதனால் மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தாள்.. இல்லை இல்லை அவனை குறை சொல்ல ஆரம்பித்தாள் என்று தான் கூற வேண்டும் ..
"எங்க‌ ஆர்த்தி கிட்ட என்ன குறை கண்டீங்க நீங்க?
ஏன் அவளை வேண்டாம்னு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? அவளை போல ஒரு பொண்ணு உங்க லைஃப்ல கிடைக்குமா சொல்லுங்க.. எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சு ஆகணும். என்ன சொல்றீங்க ?
என்ன தான் சார் நினைக்கிறீங்க? அதையாவது சொல்லுங்க.. .." என்று படபடவென பேசினாள் அவள்.​

புது இடம், புது மனிதர்கள் என்றெல்லாம் அவள் கருத்தில் பதியவே இல்லை .
அவளுடைய தோழியின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் யார்? தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்றெல்லாம் பார்க்காமல் அவள் பேசி விட்டாள்.​

"இங்க பாருங்க இஷிகா..
நான் அத்தை மாமா கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டேன் அவங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பாருங்கன்னு. அப்புறம் ஏன் இப்படி அடம் பிடிக்கிறாங்கன்னு தான் எனக்கு தெரியல.. எனக்கு ஆர்த்தி மேல இன்ட்ரஸ்ட் இல்லை ..இதை அவகிட்ட போய் சொல்லுங்க." என்று அர்னவ் தெளிவாகவே தனது முடிவை கூறி விட்டான்.​

" ஏன் சார் ஒரு நாள் கூட வா எனக்காக ஒருத்தி காத்துக்கிட்டு இருக்கான்னு உங்களுக்கு தோணலை?"..
ஆதங்கமாக வெளி வந்தது இஷிகாவின் குரல். இதற்கு அர்னவ் எந்த பதிலும் சொல்லவில்லை ..
அமைதியாகவே இருந்து கொண்டான்‌.​

அவன் ‌‌என்ன நினைக்கிறான் என்று அவனைத் தவிர யாராலும் யூகிக்க முடியாது.
நிர்மலமான முகத்துடன் இருந்தான் அவன். இஷிகா, அர்னவ் ஆகிய இருவரும் பேசுவதை தான் இத்தனை நேரம் ஒரு ஓரமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் தேவ் ஆனந்த். அவனுக்கு ஆர்த்தியையும் தெரியும் ..அவள் அர்னவ் மீது வைத்திருக்கும் காதலும் தெரியும்.​

அந்த அறையில் நீண்ட நேரம் மௌனமே ஆட்சி செய்தது.
"சாரி சிஸ்டர் என்னால அவ கஷ்டப் பட்டு இருந்தா என்னை மன்னிச்சிட சொல்லுங்க.. வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க.. இந்த காலத்துல யாரு சொந்தத்துல கல்யாணம் பண்றாங்க.. அவளோட லைஃப் நான் இல்லைனா ரொம்ப நல்லா இருக்கும் .அதை அவளுக்கு புரிய வைக்க பாருங்க.."
என்று அர்னவ் கூறிக் கொண்டே போக
"தேங்க்யூ சார் எல்லாத்துக்கும். நான் வரேன் .."
என்று அவனது பேச்சை இடைநிறுத்தி விட்டு எழுந்து வெளியே வந்து விட்டாள் ..​

அவளது முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அந்த கோபத்தை அவன் மீது காட்டக் கூடாது என்பதற்காகத் தான் சட்டென அங்கிருந்து எழுந்து வந்து விட்டாள்.
' ஏன் எங்களுக்கு தெரியாதா? அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க.. பெருசா சொல்ல வந்துட்டார். அவர் இல்லைனா அவளோட லைப் நல்லா இருக்குமாம். ச்சே ஏன் தான் இப்படி இருக்காங்களோ?"
என்று புலம்பிக் கொண்டே தான் சென்றாக அவள்.​

அவளுடைய வாய் அசைவையும் முகத்தையும் சிசிடிவி வழியாக கண்ட தேவ் ஆனந்த் அர்னவ் பக்கம் திரும்பி
"உன்னை திட்டிக்கிட்டே போறாடா.." என்றான் சிரித்தவாறு.​

"அவங்களோட கோபம் புரியுது.. முகத்துக்கு நேரா திட்டாம விட்டாங்களே.. அதுவே போதும்.." என்றான் அர்னவ் புன்னகையினூடு.
" சரி சொல்லு நீ என் ஆர்த்தியை அவாய்ட் பண்ற..? என்ன தாண்டா உன் பிரச்சனை .
எனக்கு தெரிஞ்சு உன் மனசுல வேற யாரும் இல்ல. அந்த டைம்ல கூட நீ வேற எந்த பொண்ணையும் சைட் கூட அடிக்க மாட்ட.. ஆர்த்தியை பற்றியும் அடிக்கடி பேசுவ.. அப்புறம் ஏன்டா.?"
என்றான் தேவ் ஆனந்த் விளையாட்டை கைவிட்டவாறு
தீவிரமாக ‌.​

அவனுடைய கேள்வியில் கசந்த புன்னகை ஒன்றை சிந்தியவன் "நம்ம சந்தோஷமா இருந்த காலம் எல்லாம் போச்சுடா. எத்தனை பிரச்சனை இருக்கு எங்களுக்கு. இதுல அவளையும் கஷ்டப் படுத்த நான் விரும்பல.. அவ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருப்பாடா.."
என்றான் வேதனை நிறைந்த முகத்தோடு.​

" லூசாடா நீ.. எங்க லைஃப் இப்படியானதுக்கு நீ ஏன்டா இப்படி இருக்க.. அம்மா அப்பா பாவம் டா. அவங்க உன் லைஃபாவது நல்லா இருக்கனும்னு ஆசைப் படுறாங்க.. இதுல ஆர்த்தி வேற உன்மேல உயிரையே வச்சு இருக்கா.. ஏண்டா எல்லாரையும் கஷ்டப் படுத்துற?".​

கோபம் கவலை என்ற கலவையோடு பேசினான் தேவ் ஆனந்த்.
தங்களால் தான் நண்பன் தனது வாழ்க்கையை இப்படி வாழாமல் இருக்கிறான் என்ற கவலை அவனுக்கு .
ஆனால் அர்னவ் என்னும் கல் கறைவதாக இல்லை..​

மேலும் தேவ் ஆனந்த் ஏதோ கூறப் போக அதற்கு இடையில் அர்னவின் பிஏ அங்கு வந்து விட அத்துடன் அவர்களது பேச்சு நிறுத்தப் பட்டது.​

.....​

காதல் தான் எத்தனை விந்தையானது.. ஒவ்வொருவரது வாழ்விலும் புகுந்து தன் இஷ்டப் படி ஆட்டி வைக்கிறது...
அர்னவ் - ஆர்த்தி இருவருக்கும் மனதளவில் காதல் இருந்தும் ஏனோ விதி அவர்களுடைய வாழ்வில் விளையாடுகிறது.
இணையுமா அந்த காதல் ஜோடி..?​

தொடரும்..​


கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
நண்பர்களே..
அப்போ தானே என்ன குறைகள் நிறைகள் இருக்குனு எங்களுக்குத் தெரியும்..😆

 

Mafa97

Moderator

அத்தியாயம் 04​

இஷிகாவிற்கு மூச்சு விட கூட நேரம் இல்லாமல் வேலைகள் குவிந்து கிடந்தன .​

அதனால் அவள் தோழியுடன் கூட சரியாக பேசவில்லை. அன்று அர்னவுடன் பேசிய பிறகு ஒரு முறை ஆர்த்தியை சந்தித்து அவன் கூறிய அனைத்தினையும் ஒன்று விடாமல் ஒப்பித்து விட்டாள் . அப்போதாவது ஆர்த்தி மனம் மாறி வேறொருவனை திருமணம் செய்து கொள்ளட்டும் என்று தான் இஷிகா அதை செய்தாள் .​

ஆனால் ஆர்த்தியோ வேறு கதை கூறினாள் .​

"அவர் என் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார். அதனால தான் நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறார்.."​

என்று அவள் காதல் போதையில் உளர ' நீ ஏதாவது செய்து கொள்.. ஆளை விடு சாமி ..'​

என்று கூறியவள் தான் இன்று வரை அவளுடன் பேசவில்லை.. கோவம் என்றெல்லாம் இல்லை வேலை அதிகம் என்பதால் நேரம் இல்லை அவ்வளவே.​

இன்று அதிசயமாக வீட்டிற்கு நேர காலத்தோடு வந்தவள் மாலை நேரம் போல் கையில் தேநீர் கோப்பையுடன் வீட்டு தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டாள் . அவள் என்னவோ இங்கிருந்த போதும் எண்ணம் எங்கெங்கோ சென்றது.​

"இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்ற இளமதியின் குரலில் திரும்பி அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் இஷிகா.​

அவளுடைய அந்த புன்னகையே அவளது மனதை இளமதிக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. "என்னம்மா யோசிக்கிட்டு இருக்க..?" என்றாள் அவளுடைய கைகளைப் பிடித்தவாறு இளமதி.​

அவ்வளவு தான் அனைத்தையும் அவளிடம் கொட்டி தீர்க்க தொடங்கி விட்டாள் .​

"ஏன் அண்ணி இந்த லவ்ல இத்தனை கஷ்டம்.. இப்போ பாருங்க அக்கா லவ் பண்ணதால தான் அப்பா அவளை கண்டிச்சார். வீட்டை விட்டும் அனுப்பிட்டார். அதே போல தான் ஆர்த்தி லைஃபும் லவ்னால இப்படி இருக்கு.. ஏன் தான் இந்த லவ் பண்றாங்களோ?" ஆதங்கமாக வெளி வந்தன இஷிக்காவின் வார்த்தைகள்.​

" அப்படி என்ன இருக்குன்னு கேக்குறியே ..உங்க அக்கா அந்த லவ்ல எவ்வளவு உறுதியா இருந்தா, அந்த பையனை எந்த அளவுக்கு நம்பி இருந்தா உங்களை எல்லாம் விட்டுட்டு போயிருப்பாங்க.. அதே தான் ஆர்த்தி லைஃப்லையும்.. அவளுக்கு அந்தப் பையனை தவிர வேறு ஒருத்தனை மனசாலவுள கூட கணவனா பார்க்க முடியல.. இப்படி இருக்க நீ லவ்வ பத்தி எதுவும் தெரியாம இருக்கியே.." என்ற இளமதியின் வார்த்தைகள் இஷிகாவை சிறிது சிந்திக்க வைத்தன..​

மேலும் இளமதியே தான் தொடர்ந்தாள் .​

"இப்போ எங்க லைஃபையும் எடுத்துக்கோ.. உங்க அப்பா அம்மாக்கு தெரியலைன்னாலும் நானும் உன் அண்ணனும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணோம். ஏதோ எங்க அப்பா என் மேல உள்ள பாசத்தினால வீட்டுல பேசி அரேஞ்ச் மேரேஜ் மாதிரி செஞ்சுட்டார். கல்யாணம் பண்ணி நாலு வருஷத்துக்கு மேல் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை. ஆனா உன் அண்ணன் ஒரு தடவை கூட மனசு நோக என்னை பேசினதே இல்லை.. இதுவே அரேஞ்ச் மேரேஜ்னா என்ன எல்லாம் நடந்திருக்கும். கொஞ்சம் யோசிச்சு பாரு.." என்றாள் அவள் பெருமூச்சோடு.​

"அச்சோ சாரி அண்ணி ..நான் ஏதோ தெரியாம ..."​

என்று இஷிகா மன்னிப்பு வேண்டும் குரலில் தொடர.. விடு என்பதை போல் தலையாட்டினாள் இளமதி.​

இஷிகாவிற்கு தான் வருத்தமாக இருந்தது.. ஏதேதோ பேசி அண்ணியின் மனதை காயப் படுத்தி விட்டோம் என்று.. அவர்களுக்கு குழந்தை இல்லாததை உறவினர்கள் அரசல் புரசலாக பேச ஆரம்பித்து விட்டனர்.​

விசேஷ வீடுகளில் குத்தி காட்டுவதும் உண்டு.. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் ஆயிற்று .​

இதற்கு மேல் கடவுள் விட்ட வழி என்று விட்டு விட்டனர்.​

இப்போது இளமதி இஷிகா கவலைப் படுவதை கண்டு அவளது மனதை மாற்ற எண்ணி "இஷி உனக்கு இதுவரைக்கும் யாரு மேலையும் லவ் வந்ததே இல்லையா ?"​

என்றாள் ஒருவித ஆர்வத்தோடு.​

"லவ் எல்லாம் வந்ததில்லை. பட் க்ரஷ் இருந்தது..ஸ்கூல் டைம்ல, அப்புறம் அப்பப்ப யாராவது ஸ்மார்ட்டா இருந்தா சைட் அடிச்சிப்பேன்.."​

என்று கூறிக் கொண்டே போன இஷிகா இடையில் நிறுத்தி இளமதி முகம் பார்த்தாள்.​

அவளும் இவளுடைய கதையை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருப்பதை கண்டு​

" அண்ணி இப்போ ரீசண்ட்டா கூட ஒருத்தரை சைட் அடிச்சேனா.. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பையன் கூட இருக்கான். அது தெரியாம நான் வேற.."​

என்று சோகமாக கூறினாள் .​

அவளுடைய கதையை கேட்ட இளமதியால் தான் தன்னுடைய சிரிப்பை கட்டுப் படுத்த முடியவில்லை.​

" போயும் போயும் கல்யாணம் ஆனவரையா...? உன் நிலைமை இப்படி ஆச்சே இஷி.."​

என்று பேச்சின் நடுவே சிரிக்கவும் தவறவில்லை அவள்..​

" அண்ணி.." என்றாள் இஷிகா சினுங்களாக..​

தூரத்தில் அவர்கள் இருவரும் பேசுவதைக் கண்டு என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க வந்த விமலும் இதை கேட்டு சிரிக்க அதற்கு மேல் அண்ணன் அண்ணி மேல் விளையாட்டுக்கு கூட கோபத்தை வெளிப் படுத்தாது அவளும் உடன் சேர்ந்து சிரித்தாள்.​

தனக்கு காதல் வரவில்லை என்று சொன்னவள் தான் ஒருவன் பின்னால் காதலுக்காக அழையப் போகிறாள் ..​

அனைத்தும் விதியின் செயல்.​

**************​

"எத்தனை நாளைக்கு தான் இப்படி குடிச்சிட்டு வீட்டுக்கு வர போற?" என்ற தாயின் கேள்வியில் அவரை நிமிர்ந்து பார்த்தான் அபிமன்யு. "இப்போ என்னை பார்த்தா குடிச்சிட்டு வந்தவன் மாதிரியா இருக்கு?"..​

கடுமையான வெளிவந்தன அவனுடைய வார்த்தைகள்..​

"நீ இப்ப குடிக்கலைன்னாலும் தொடர்ந்து குடிச்சிட்டு தானே இருக்க.. இதுதான் ஒரு நல்ல பிசினஸ்மேனனுக்கு அழகா? வெளியே தெரிஞ்சா பேப்பர் அது இதுன்னு போட்டு நார் அடிச்சிடுவானுங்க.." என அவனுக்கு குறையாத கோபத்துடன் வேதநாயகியும் சத்தம் போட்டார் ..​

அன்னையின் சொல்லில் இருந்த உண்மை புரிய அவன் அமைதியாக இருந்தான் ..அவரை எதிர்த்து எதுவும் பேசவில்லை .​

"ஒரு பொண்ணுக்காக இப்படி உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்கிறியே.. உன்னை என்னதான்டா சொல்றது.. கேட்டா ஊரே சிரிக்கும்.. உலகத்தில் பொண்ணுங்களே இல்லையா என்ன? அவ போனா இன்னொருத்தினு வாழ வேண்டியது தானே.. எந்த காலத்துல வாழ்ற நீ..?" என்று மேலும் அவரே பேசினார்.​

ஒரு தாயாக தன் மகன் இப்படி வாழ்வதை பார்க்க முடியாமல் பேசினார் அவர் .​

"உனக்கு என்னம்மா தெரியும் காதலை பற்றி.. அவ எனக்கு இல்லைன்னு தெரிஞ்சாலும் அவ மேல உள காதல் துளி அளவு கூட குறையல. என் கண் முன்னாடி அவள் வாழ்ந்திருந்தா நான் சந்தோஷப் பட்டு இருப்பேன்.. இப்போ அவ எங்க இருக்காருன்னு தெரியல.. எங்க இருந்தாலும் சந்தோஷமா இருப்பா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்புறம் என்னை என் போக்கில் விட்டுடுங்க.. நான் அவள் நினைவுகளோட இப்படியே வாழ்ந்துடுறேன்.. ப்ளீஸ்.."​

என்று ஆதங்கமாக பேசி முடித்தான் அபிமன்யு ..​

'காதல் தோல்வியில் பைத்தியமாகி விட்டானா ?'​

என அவனது அன்னையே யோசிக்கும் அளவு இருந்தது அவனுடைய பேச்சு.​

"ஏன்டா இப்படி இருக்க..?​

நல்ல ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம் இல்லையா ..​

ஒருத்தன் என்னடான்னா காதல் தோல்வினு உலறிக்கிட்டு லைஃபை நாசமாக்குறான். இன்னொருத்தன் என்னடான்னா ஒன்னுக்கும் உதவாத கேமராவை தூக்கிட்டு அலையுறான்.. நான் பெத்தது ரெண்டுமே சரியில்லை.." என்று சத்தமாகவே புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் வேதநாயகி.​

தாய் நிலையை பார்த்து கவலையாக இருந்த போதும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் இன்னும் அவன் அவனவளை மறக்கவில்லை ..​

உண்மையான காதல் அவனுடையது.​

அவள் இப்போது அவனுடன் இல்லா விட்டாலும் அவள் மீதான அவனது காதல் என்றுமே மாறாது.​

அபிமன்மையை விட்டு சற்று தள்ளி வந்த வேதநாயகியின் முகம் மாறியது.​

தனது கையில் இருந்த அலைபேசியில் சில எண்களை தட்டி விட்டு காதில் வைத்தார். நீண்ட அழைப்பிற்கு பின்னரே மறு பக்கத்தில் இருந்து பதில் வந்தது.​

" ஹலோ.. உங்களை மீட் பண்ணனும் ..."​

"இல்லை.. இல்லை.. இன்னைக்கு மீட் பண்ணனும்.."​

" சரி நீங்க சொன்ன இடத்துக்கு வந்துடுறேன்.."​

" ஓகே.. வச்சுடுறேன்..."​

மறுபக்கம் என்ன கூறப் பட்டதோ அவருடைய முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.​

அன்றே மாலையே வேதநாயகி அந்த நபரை சந்திக்க வேண்டும் என்று ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் காத்திருந்தார்.​

சில நிமிட காத்திருப்பதற்குப் பின் அவரும் வந்து விட​

"வாங்க அண்ணா.. உங்க கூட பேசி ரொம்ப நாளாச்சு.."​

என்று புன்னகை முகத்துடன் அவரை வரவேற்றார் வேதநாயகி.​

" ஆமாம்மா...​

சொல்லு என்ன விஷயமா என்னை அவசரமா சந்திக்கணும்னு சொன்னே? ஏதாவது பிராப்ளமா?"​

என்று கேட்டார் சிதம்பரம்..​

இஷிகாவின் தந்தை..​

" இப்போதைக்கு எந்த பிராப்ளமும் இல்லை .. ஆனால் இதற்கு அப்புறம் வந்துடக் கூடாது என்று தான் உங்க கிட்ட பேச வந்தேன்.." என பீடிகை போட சிதம்பரம் பரபரப்பாக அவரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்..​

மீண்டும் வேதநாயகியே பேச ஆரம்பித்தார் ..​

"அபிமன்யு வரவர ரொம்ப குடிக்கிறான் அண்ணா.. எனக்கு பயமா இருக்கு. அவன் முழு குடிகாரனாவே மாறிடுவான்னு.. ஏன்னு கேட்டா காதல் தோல்வினு ஒரு காரணத்தையும் வச்சுக்கிட்டு இருக்கான். ஒரு அம்மாவா என்னால அவனை பார்க்க முடியலை..." என்றவரின் கண்கள் கலங்கி போயின.​

" ஐயோ என்னம்மா நீ அவன் நல்ல பையன்.. அப்படி முழு குடிகாரனா எல்லாம் மாற மாட்டான்.. அப்புறம் இதுக்கு எல்லாம் ஒரே வழி தான் இருக்கு.. சீக்கிரமே அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அப்போ எல்லாம் சரியாகிடும் .."​

என சிதம்பரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்ட சந்தோஷத்தில் பேச வேதநாயகியும் கிடைத்த வாய்ப்பை விடக் கூடாது என்ற முடிவோடு தனது நடிப்பை தொடர்ந்தார்.​

"ஆமாண்ணா நீங்க சொல்றது என்னவோ சரி தான்.. அதுலயும் வெளியே இருந்து எதுக்கு பொண்ணு எடுத்துக்கிட்டு. நம்ம ஊஷிக்காவை அபிமன்யுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சா என்ன அண்ணா?.."​

என்றார் சிதம்பரத்திடம் கேள்வியாக..​

சிதம்பரம் உடனே பதில் சொல்லவில்லை..​

என்ன இருந்தாலும் மகள் வாழ்க்கை அல்லவா. எனவே தீவிரமாக தனக்குள் யோசனை செய்தார் அவர்.​

" என்ன அண்ணா அவ்ளோ யோசிக்கிறீங்க..​

உங்க ஒரு பொண்ணால தான் என் பையனோட வாழ்க்கை இப்படி ஆச்சு. அதை ஈடு கட்டனும்னா உங்களோட அடுத்த பொண்ணை கொடுக்கலாமே.. அவனுக்கும் இஷிக்காவை பிடிக்கும் தானே.. சின்ன வயசுல இருந்து அவ கூட தானே அதிகமா இருப்பான். நான் கூட இஷிகாவை தான் லவ் பண்றான்னு நினைச்சேன் .​

பார்த்தா தீப்தியை லவ் பண்ணி இருக்கான்.​

எல்லாமே விதி.. எங்களால என்ன பண்ண முடியும் ..."​

என வேதநாயகி பேச பேச மூத்த மகள் மேல் இருந்த கோபத்தில் "சரிம்மா எல்லாமே என் பெரிய பொண்ணோல வந்தது தான் . அதனால என் இரண்டாவது பொண்ணு இஷிகா அபிமன்யுவிற்கு தான்..இதுல எந்த மாற்றமும் இல்லை.." என வாக்கு கொடுத்தார் சிதம்பரம்.​

முன்பும் இப்படித் தான் ..தீப்தியிடம் எதுவும் கேட்காது அவளுக்கும் திருமணம் பேசினார்.​

இன்று இஷிகா விடயத்திலும் இதையே தான் செய்கிறார்.​

ஆனால் அவர் அறியாத விடயம் அவரது இரண்டாவது மகள் அதி புத்திசாலி என்பது தான்.​

அவர் சொன்னதுமே அவள் தலையாட்டி விடவா போகிறாள்?​

அவருடைய கூற்றை கேட்ட வேதநாயகி தான் எதையோ சாதித்து விட்ட திருப்தியில் அவரிடம் இருந்து விடை பெற்று சென்றார்..​

சிதம்பரமும் வேதநாயகியின் கணவரான கண்ணனும் தோழர்கள்.. வேதநாயகியை தனது சொந்த தங்கையாகவே நினைத்துக் கொண்டு தான் சிதம்பரம் பழகினார் .​

இடையில் புற்றுநோய் காரணமாக கண்ணன் இறந்து விட அந்த உறவு மேலும் பலப்பெற்றது ..தொழிலை வேதநாயகிக்கு கற்றுக் கொடுத்து உடன் இருந்தார் ஒரு அண்ணனாக.​

இதனாலே இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் அதிக நெருக்கம் உருவானது.​

தீப்தி அதிகம் பேச மாட்டாள் என்பதால் வேதநாயகியின் புதல்வர்களான அபிமன்யுவும் சுதீப்பும் இஷிகாவுடன் தான் நட்பு பாராட்டினர்..​

இதில் எப்போதும் அமைதியாக இருக்கும் தீப்தி அபிமன்யுவிற்கு காதலும் உண்டானது ..​

இன்றுவரை அவள் மீதான​

அவனது காதல் தூய்மையாக பாதுகாப்பாக தான் இருக்கிறது .​

இதனிடையே அவன் இஷிகாவை மனைவியாக ஏற்பானா?​

இல்லை இஷிகா தான் அவனை கனவனாக ஏற்பாளா?​

தொடரும்....​



 

Mafa97

Moderator

அத்தியாயம் 05​

அன்று ஞாயிறு என்பதால் மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் தேவ் ஆனந்த். நீண்ட நாட்களாகவே ஆதித்யா தந்தையிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.. ஆனால் வேலை சுமை காரணமாக தேவ் ஆனந்தால் அசைய முடியவில்லை. இன்று அவனுக்கு ஓய்வு கிடைத்து விட மகனுடைய சந்தோஷத்திற்காகவும் அவனுக்கு மன நிம்மதி தேவைப் பட்டதாலும் மகனை அழைத்துக் கொண்டு பைக்கில் கிளம்பி விட்டான்.​

இதில் ஆதித்யாவுக்கு தான் ஏக குஷி.. தந்தையுடன் பைக் பயணம் செல்வது என்றால் அவனுக்கு அத்தனை பிடிக்கும் ..
பைக்கும் காற்றை கிழித்துக் கொண்டு வேகமாக செல்ல தன்னை கட்டுப் படுத்த முடியாத குட்டி ஆதித்யாவும் "ஹூ..ஹூ.."
என்று சத்தம் போட்ட படி வந்தான்.​

தேவ் ஆனந்திற்கு வேறு என்ன வேண்டும்.. மகனின் சந்தோஷம் தானே அவனுக்கு முக்கியம். அவனுக்காக தானே அத்தனையும் செய்து கொண்டு இருக்கிறான். யாரும் அற்ற சாலையில் மனதுக்கு பிடித்தவர்களுடன் ஒரு நீண்ட தூர பயணம் ...
அந்த தருணத்தை ஆழ்ந்து அனுபவித்தான் தேவங ஆனந்த்.​

சிறிது தூரம் சென்ற பிறகு பாதையோரத்தில் இருந்த இளநீர் கடையை கண்டு விட்ட ஆதித்யா "அப்பா இளநீ ...இளநீ .."
என்று என்று சத்தம் போட்டு வண்டியை நிறுத்த கூறினான்.​

மகன் சொல்லிய பிறகு மறுப்பானா என்ன தேவ் ஆனந்த். பைக்கை நிறுத்தி தனக்கும் மகனுக்குமாக இளநீரை பெற்றுக் கொண்டவன் நிமிர்ந்து பார்க்க அங்கே ஓரமாக நின்று அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த இஷிகா அவனது கண்களுக்கு தென்பட்டாள்.​

'இவ இங்கே என்ன பண்றா?'
என்று வெளிப்படையாகவே முனுமுனுத்தான் அவன்.. யாரும் அதிகம் சென்றுவராத சாலையில் இவள் என்ன செய்கிறாள் என்று யோசனை செய்தவன் அவளிடமே கேட்கலாம் என்று அருகே சென்றான் .
அவன் தன்னை நோக்கி வருவது அவளுக்கு தெரிந்த போதும் அலைபேசிக்குள் இருந்து தலையை உயர்த்தவில்லை இஷிகா.​

அவன் வந்ததிலிருந்து அனைத்தையும் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
ஆனால் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. காரணம் வேறொன்றும் இல்லை.. திருமணமானவன் என்று தெரியாமல் சைட் அடித்து அதை அவனிடமே கூறியும் விட்டாளே.. அதனால் தோன்றிய வெட்கம் தான் இது ..​

அவனும் அவளுடைய நிலையை புரிந்து கொண்டான் போலும்.. தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன் அவள் அருகில் நெருக்கமாக சென்று
" யாரும் இல்லாத இடத்தில் உனக்கு என்ன வேலை?"
என மெல்லிய குரலில் கேட்க்க தனது நடிப்பை கை விட்டவள்
அவனைப் பார்த்து
"யாரும் இல்லாத இடத்தில் உங்களுக்கு என்ன வேலையோ அதே வேலை தான் எனக்கும்.." என்றாள் துடுக்காக.​

அவளது பேச்சில் கோபம் வர பல்லை கடித்தவன்
" லூசா நீ.. இங்க இருக்க ரெண்டு ஆம்பளங்களையும் நம்பி இந்த இடத்தில் தனியா நிக்கிற..?"
என்று கூறியவன் அங்கே இளநீர் விற்பனை செய்யும் இரு ஆண்களையும் பார்த்தான்.​

அவளுக்கும் அதே பயம் தான்.. ஆனால் வேறு வழி இல்லையே. அன்று அவனுடைய வீட்டில் சுதீப்பை விட்டுச் சென்றதற்கு இன்று அவன் அவளை இப்படி நடுரோட்டில் விட்டு விட்டு சென்று விட்டான் ..
அவன் மீண்டும் தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறாள்.. ஏனெனில் தோழனை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும் ..இதை அவனிடம் சொல்லவா முடியும்?​

எந்த பதிலும் சொல்லாது அமைதியாக நின்று கொண்டாள் இஷிகா.
"வாயைத் திறந்து பேசு.. எப்போதும் லொட லொடனு பேசுற அந்த வாய்க்கு என்னாச்சு?"
என்றான் கடுப்பாக .. அதில் அவனை ஊன்றி பார்த்தவள்
" நீங்க யார் சார் என்னை கேள்வி கேட்க?
நான் எங்க வேணா போவேன்.. எங்க வேணா நிப்பேன்.. என்ன வேணா செய்வேன்.."
என்றாள் அதிகாரமாக..​

அவளுடைய வாய் அப்படி பேசினாலும் பார்வை என்னவோ 'என்னை பற்றி உனக்கு எப்படி தெரியும்?' என்ற கேள்வி கேட்டது. அவளுடைய பார்வையின் அர்த்தம் போலீஸ்காரனுக்கா புரியாது.. அவசரப்பட்டு வாயை விட்ட தனது மடத்தனத்தை நொந்து கொண்டவன் அவளுடைய பார்வைக்கு பதில் அளிக்காமல் அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினான்.​

"ஒரு போலீஸ்காரனா இந்த மாதிரி இடத்தில ஒரு பொண்ணு நிற்கிறது பற்றி கேட்கலாம் இல்லையா? அதனால தான் கேட்டேன்.." என்று பதில் கூறியவன் அவளை விட்டு மகனிடம் சென்று பேச்சு கொடுத்தான்.
அவன் கூறியதற்கு எதுவும் பேசாது தந்தை மகன் இருவரையும் தான் பார்த்திருந்தாள் அவள்.​

இஷிகா தன்னை பார்ப்பதை உணர்ந்த ஆதித்யா தந்தைக்கு தெரிந்தவளாக இருக்கும் என நினைத்து
"ஹாய் ஆன்ட்டி.." என்றான் சிறு புன்னகையோடு.. அந்த குழந்தையின் சிரிப்பு அவளுக்கு யாரையோ நினைவு படுத்தியது. ஆனால் யார் என்று தான் அவளது மூளைக்கு சட்டெனப் படவில்லை..

பதிலுக்கு அவளும் சிரித்து வைத்தாள்.
அவனிடம் செல், பேசு என்று மனது கூற அவன் அருகே சென்று
"உங்க பேர் என்ன செல்லம்?"
என பேச்சை ஆரம்பித்தாள்..​

அன்று தேவ் ஆனந்த் மகனின் பெயரைக் கூறியிருந்தாலும் அவனுடன் பேச்சை தொடங்குவதற்காகவே கேட்டு வைத்தாள் இஷிகா.
"என்னோட பேரு ஆதித்யா.. உங்க பேர்?"
ன்று ஆதித்யாவும் பேச இருவரும் தங்களுக்குள் சிறிது நேரம் பேசிக் கொண்டனர் ..​

அவனுடன் பேசும் போது ஏனோ அவ்வளவு சந்தோஷமாக இருந்தது இஷிக்காவிற்கு.. அவன் தன்னுடனயே இருந்து விட மாட்டானா என்ற எண்ணம் கூட அவளுள் தோன்றியது உண்மையே.​

"ஆதி குட்டி போலாமா?" என்று தேவ் ஆனந்த் கேட்கும் வரை இருவரும் பேசுவதை நிறுத்தவில்லை. இருவருக்குமே பேச்சு இடையில் நிறுத்தப் பட்டது கவலையை உண்டாக்க அவர்களது முகம் வாடிப் போனது ..
தேவ் ஆனந்திற்கு தான் இருவரின் செயல்பாடுகளின் ஒற்றுமையை கண்டு கண்களை இருவரிடம் இருந்தும் அகற்ற முடியவில்லை..

" ஆன்ட்டி நீங்க ஏன் தனியா நிக்கிறீங்க? எங்க கூட வர்றீங்களா?" அவளை பிரிய மனம் இல்லாது ஆதித்யா கேட்டு விட தேவ் ஆனந்த் மற்றும் இஷிக்காவிற்க்கு தான் சங்கடமாகிப் போனது.. அவளுக்கும் அவர்களுடன் செல்ல விருப்பம் தான் .ஆனால் அவன் அழைக்காமல் எப்படி செல்வது என்று தேவ் ஆனந்தை கேள்வியாக பார்த்தாள்.​

இதற்கு மேல் அவளை ஒரு வார்த்தை அழைக்கா விட்டால் மகன் மேலும் மேலும் ஏதாவது பேசுவான், கேள்வி கேட்பான் என்பதால்
" ஆதி குட்டி சொல்ற மாதிரி எங்க கூட வர்றதுன்னா வரலாம்.." என்றான் எங்கோ பார்த்தபடி..​

அவர்கள் சென்ற பிறகு இந்த இடத்தில் இருப்பதும் சரியில்லை என்பதால் ஆதித்யாவை பார்த்து "உனக்காக வர்றேன்டா கண்ணா.." என்றாள் சத்தமாக..
அவள் கூறியது கேட்காததைப் போலவே வந்து பைக்கை எடுத்தான் தேவ் ஆனந்த்..​

மீண்டும் அழகிய நீண்ட தூர பயணம்.. இந்த பயணம் இஷிகாவிற்கும் பிடித்திருந்தது.. அவள் இறங்க வேண்டிய இடத்தை கேட்டு அவளை இறக்கி விட்டவன் சென்று விட்டான்.. ஆதித்யா தான் அவள் மறையும் வரை கை காட்டிய படியே சென்றான். அவளுக்கும் அவனை பிரிவது வருத்தமாக தான் இருந்தது.. மீண்டும் அவனை சந்திக்க வேண்டும் என்று உறுதி எடுத்தவள் வீட்டுக்கு திரும்பி சென்றாள்...​

********************​

அன்னை தெரேசா மனநிலை காப்பகத்தில் இருந்து தேவ் ஆனந்திற்கு அழைப்பு வர வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வேக வேகமாக அங்கே கிளம்பிச் சென்றான்.​

ஏன் அழைத்தார்கள்?
ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ ?
தீப்திக்கு என்ன ஆனது?​

இப்படி பல கேள்விகள் அவனுள்ளே..
பதட்டத்துடன் அவன் உள்ளே செல்ல மருத்துவர் அவனை புன்னகையுடன் வரவேற்றார். இவனுக்கு தான் பதிலுக்கு சிரிக்க கூட தோன்றவில்லை.
"உட்காருங்க சார்..
தீப்தி விஷயமா உங்க கூட பேசணும். அதனால தான் அவசரமா வர சொன்னேன்.." என்று அவர் தனது பேச்சை தொடங்க இவனுக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை..​

" ஏன் சார் ஏதாவது பிராப்ளமா? இப்ப முன்ன மாதிரி இல்லையே.. ரொம்பவே நல்லா தானே நடந்துக்குறா? அப்படி ஏதாவதுனா சொல்லுங்க.. எங்க ட்ரீட்மென்ட் பண்ணனும்னாலும் சொல்லுங்க. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நான் பார்த்துக்கிறேன்.."
அவன் பேச பேச அவனுடைய பதற்றம் எதிரே இருப்பவருக்கு அப்பட்டமாக தெரிந்தது ..​

"ஏன் சார் பதற்றப்படுறீங்க.. முதல்ல நீங்க ஃப்ரீயா இருங்க. நான் சொல்ல வர்றதை முழுசா கேட்டுட்டு அப்புறம் நீங்க என்ன செய்யணும்னு முடிவு எடுக்கலாம்.." என்றார் மருத்துவர்.
என்ன தான் அவர் சொல்ல வருகிறார் பார்ப்போம் என நினைத்து அமைதியாக இருந்து கொண்டான் அவன்.​

" நீங்க சொன்னது சரிதான் சார். தீப்தி முன்ன மாதிரி இல்ல. கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றாங்க.. அவங்க பிஹேவியஸ்ல மாற்றம் தெரியுது.
இதுல நல்ல விஷயம் என்னன்னா இந்த மாற்றம் ரொம்ப நல்லது.. கூடிய சீக்கிரமே அவங்களை குணப் படுத்திடலாம்.."
என அவர் கூற இப்போது தான் உயிரே வந்தது போல இருந்தது தேவ் ஆனந்திற்கு.​

அவளை குணப் படுத்தி விடலாம் என்று முன்பு அவளை கவனித்துக் கொண்ட மருத்துவர்களும் கூறியது தான் .
ஆனால் இப்போது முன்பை விட அவள் தேறி விட்டாள் என்று கேட்கையிலேயே அவளை குணப்படுத்த முடியும் என்ற முழு நம்பிக்கையும் வந்து விட்டது அவனுக்கு..​

யாருக்காக இல்லை என்றாலும் அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திய அவளுடைய தந்தைக்காகவும், அம்மா எங்கே என்று கேட்க ஆரம்பித்திருக்கும் ஆதித்யாவிற்காகவும் அவள் இதிலிருந்து மீண்டு வர வேண்டும்.​

"மனசலவுள பாதிக்கப் பட்ட ஒருத்தரை முழுசா குணப் படுத்துறது ரொம்பவே கஷ்டம்.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசை மாத்தி பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.. இப்போது தீப்தி 70% க்யூர் ஆயிட்டாங்க ..
அதனால அவங்க கிட்ட நிறைய பேசுங்க . மீண்டு வரணும்ன்ற ஆசையை அவங்களுக்குள்ள கொண்டு வாங்க . எல்லாம் தானாவே நடக்கும் .."
மருத்துவரின் பேச்சை கேட்டவன் மேலும் அவரிடம் தனக்கு இருந்த சில சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டான்..​

இங்கு வந்த போது இருந்த அவனுடைய மனநிலைக்கும் இப்போது இருக்கும் அவனுடைய மனநிலைக்கும் எத்தனை வித்தியாசம்..
சிறு பிள்ளை போல் துள்ளி குதிக்க தோன்றியது அவனுக்கு.​

தேவ் ஆனந்துக்கு இருந்த சந்தோஷத்தில் தூரத்திலிருந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த இஷிக்காவை அவன் கவனிக்க மறந்து விட்டான். இஷிகா
புதிதாக ஒரு தொடர் எழுத ஆரம்பித்து இருந்தாள். அது என்னவென்றால் மனநலம் 'பாதிக்கப் பட்டவர்களின் முந்தைய நிலை என்ன ?
இப்போது எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் வாழ்வில் என்ன தான் நடந்தது ?'என ஒரு விளக்கம் தான்..​

அதற்காக வேண்டிய சில நாட்களாகவே இங்கு வந்து கொண்டு இருக்கிறாள அவள். இன்று பேசிய படி இருந்தவளின் கண்களுக்கு குதூகல மனநிலையுடன் செல்லும் தேவ் ஆனந்த் தென்பட்டு விட்டான். 'அவன் வந்த நோக்கம் என்னவாக இருக்கும்?' மனது கேள்வி கேட்டு குடைந்தது அவளை..​

யாரிடம் சென்று கேட்க முடியும்? அதை விட இங்கு இப்படியான தகவல்களை எல்லாம் அவ்வளவு எளிதில் கூறி விட மாட்டார்கள். 'அச்சோ இஷி எதுக்கு யார்கிட்டயாவது கேட்டுக்கிட்டு நம்ம தான் கொஞ்ச நாளைக்கு இங்க வருவோமே.. கண்டு பிடிச்சிடலாம்..' என தனக்குத் தானே கூறிக் கொண்டவள் தனது வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டாள்.​

*********************​

"இஷிகாம்மா எங்கடா இருக்க? அப்பா உன் கூட பேசணுமா.. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு.."என்று அவளுடைய அன்னை தான அவளுக்கு அழைத்து விடயத்தை கூறினார். அவர் கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் என வாயை திறந்தவளை
" அம்மாக்காக வந்துடு ப்ளீஸ் டா.. என்ன இருந்தாலும் அவர் உன் அப்பா.."
என அன்னை மேலும் பேச அவருடைய குரலில் இருந்த கெஞ்சலே அவளை வேறு எதுவும் பேச விடவில்லை.
' அப்படி என்ன தான் பேசிவிடப் போகிறார். என்ன இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.' என்ற மனநிலையில் தான் அவள் வீட்டுக்கு கிளம்பி சென்றாள்.​

இவள் எப்படி கூலாக கிளம்பிச் செல்ல அவளது தந்தையும் அவளது தலையில் இடியை இறக்கவே காத்துக் கொண்டிருந்தார்.
அவள் வரும் வரை முழு வீடுமே காத்துக் கொண்டிருந்தது என்று தான் அவளுக்கு தோன்றியது. பொதுவாக அவளுடைய அண்ணன் அதிகம் வீட்டில் இருப்பதில்லை. இன்று அவன் கூட அவள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.​

" என்னம்மா ஏதோ பேசணும்னு வர சொன்னீங்க.."
என்று கேட்ட படியே உள்ளே சென்றவள் சோபாவில் அமர்ந்து கொண்டு அனைவரதும் முகம் பார்த்தாள்.
அவளுடைய அண்ணி இளமதி அவளை பாவமாக பார்ப்பது போல் தான் தோன்றியது அவளுக்கு. அது ஏன் என ஆராயும் முன்னமே அவளது தலையில் சட்டென இடியை இறக்கினார் சிதம்பரம்.​

"உனக்கு வர்ற மாசம் கல்யாணம். பையன் வேற யாரும் இல்லை. நம்ம அபிமன்யு தான். கல்யாணத்துக்கு ரெடியாகிடு.." என அவர் ஏதோ செய்தி வசிப்பவரை போல பேசிக் கொண்டே போனார் ..​

மறுத்து பேசப் போனவளை தடுத்தது அவளது அன்னையின் குரல்..
" இதுக்கு நீ முடியாதுன்னு சொன்னா உங்க அக்கா வீட்ட விட்டு போன மாதிரி தாராளமா போகலாம்..
அதுக்கு அப்புறம் என்ன உயிரோடவே பார்க்க முடியாது.. எல்லாம் உன் இஷ்டம்.." என அவர் பேச அன்னையின் பேச்சிலேயே உறைந்து போய் விட்டாள் இஷிகா..​

தொடரும்....​


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்😘😘

 

Mafa97

Moderator

அத்தியாயம் 06​

"இஷிகா என்ன இதெல்லாம் நீ ஏன் அமைதியா இருக்க?
உனக்கு என்னை புடிக்கலைன்னு சொல்லிட வேண்டியது தானே.."​

அபிமன்யு தன்னுடைய கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் இஷிகாவிடம் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தான். அவளோ அவனது முகத்தை அமைதியாக பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.​

அவனாக தான் அவளுக்கு அழைத்து 'உன்னை சந்திக்க வேண்டும் என்றான் '.
அதனால் அவளும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காது அவனை காண வந்து விட்டாள்.
ஆனால் அவன் தான் இஷிகாவை சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருந்தான் .​

"என்ன இஷிகா நான் மட்டும் தான் பேசுறேன்..நீ எதுவும் பேச மாட்டேங்குற..? என்ன தான் செய்யலாம்னு நினைச்சுட்டு இருக்க? எனக்கு சுத்தமா புரியலை..".
அவளது அமைதி அவனை மேலும் கோபமூட்ட அவளிடம் கோபமாகவே கேட்டான்..​

ஆனால் அதற்கும் இஷிகா அமைதியாக தான் இருந்தாள்.
" இஷிகா நீ என்னை கோபப் படுத்தாதே.. கல்யாணம் வேணாம்னு வாயை திறந்து சொல்ல வேண்டியது தானே.. நான் உங்க அக்காவை தான் காதலிச்சேன்.. உன்னை இல்லை. புரியுதா உனக்கு ?"
என கோபத்தில் பேசிக் கொண்டே போனான் அபிமன்யு.​

"இது தெரியுமே எனக்கு ..
ஆனால் லேட்டா தான் தெரியும். முன்னாடியே தெரிஞ்சு இருந்தா ரெண்டு பேரையும் நானே சேர்த்து வச்சிருப்பேன். அது உங்க பேட் லக்.. "
அவள் வாயை திறந்து பேசினாள் ..
இப்போது அமைதியாக இருப்பது அபிமன்யுவின் முறையானது.​

"அதை விட ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா,
இந்த கல்யாணத்தை உங்களால் கூட நிறுத்த முடியும். எனக்கும் உங்களுக்கும் தானே கல்யாணம்னு சொன்னாங்க."
என்றாள் இஷிகா துடுக்காக..​

" என்னோட அம்மா என்னென்னமோ சொல்லி என்னை பயமுறுத்துறாங்க.. கல்யாணம் பண்ணலைனா அவங்க தற்கொலை பண்ணிப்பாங்களாம் ..இப்போ சொல்லு என்னால என்ன பண்ண முடியும்?
நீ தான் இந்த கல்யாணத்தை நிறுத்தணும்.."
அவனும் அவளுக்கு காரணத்தை விளக்கமாக கூறினான்.​

அதற்கு அவனை பார்த்து இளக்காரமாக புன்னகைத்தவள் "எப்பவுமே எங்க அப்பா தான் என்னை மிரட்டுவார். ஆனா இந்த தடவை ஒரு சேஞ்ச்சா இருக்கட்டும்னு எங்க அம்மா அவங்களை உயிரோடவே பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்னாலையும் எதுவுமே பண்ண முடியல.. பட் உங்களை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவும் எனக்கு இல்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். ஏதாவது ஒரு வழி இல்லாமலா போகப் போகுது .."
என அவனுக்கு சொல்வது போன்று தனக்கும் ஆறுதல் கூறிக் கொண்டாள் அவள்.​

அவனுக்கு இது அதிர்ச்சியான தகவல் தான்..
இஷிகாவின் தாய் எப்போதும் அவள் பக்கம் தான் நிற்பார். ஆனால் இன்று இந்த விடயத்தில் மட்டும் ஏன் இத்தனை பிடிவாதம் அவருக்கு என்பது இவனை யோசிக்க வைத்தது.​


"என்ன யோசிக்கிறீங்க? கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது ..ஏதாவது செஞ்சு தடுக்கலாம். சோ ஃப்ரீயா இருங்க.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்..ரொம்ப குடிக்கிறீங்களாம் அதையும் குறைச்சுக்கோங்க .உடம்புக்கு நல்லது இல்லை.."
என அவனிடம் கூறியவள் கனத்த மனதுடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.​

எது நடந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் கூறுபவள் இன்று தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முடிவு எடுக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டு இருக்கிறாள்.
அபிமன்யு நல்லவன் தான். அழகானவனும் கூட .
ஆனால் ஏனோ அவளுக்கு அவன் மீது எந்த ஈடுபாடும் தோன்றவில்லை.
அவன் தன்னுடைய அக்காவை தான் இன்றுவரை காதலித்துக் கொண்டு இருக்கிறான் என்பது அவள் அறிந்ததே.​

இதே மனநிலையுடன் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாது அருகே இருந்த சிறுவர் பூங்காவிற்கு சென்றாள்.. அப்படியாவது அளது மனது ஆறுதல் அடையுமா என்ற எதிர்பார்ப்போடு.. அந்த இடத்தில் கேட்ட குழந்தைகளின் சத்தம் மெல்ல மெல்ல அவளுடைய மனதை மாற்றியது. "எது வேண்டுமானாலும் நடக்கட்டும். எல்லாம் படைத்தவன் கையில் தான் உள்ளது" என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள்.​

"ஹாய் ஆன்ட்டி .."
என்ற மழலை குரலில் சட்டென திரும்பி பார்த்தாள் இஷிகா. அவளுக்கா அந்த குரல் மறந்து போகும் ..
மீண்டும் அவனை சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தவளுக்கு இடையில் இந்த திருமண பிரச்சினை வந்து விட்டதே ..​

"ஹாய் டா செல்லம் .எப்படி இருக்கீங்க? என்ன இந்த பக்கம்?" என அவனை கண்ட சந்தோஷத்தில் கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றாள். "போங்க நான் கோபம்.."
என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இரு கைகளையும் கட்டிய படி சொன்னான் ஆதித்யா..​

" ஏன்டா செல்லம் ..?"
என்றாள் சிறு குழந்தை போல் இஷிகாவும்..
" நீங்க என்னை பார்க்க வரவே இல்லை.. நான் தேடினேன் தெரியுமா ?"
அவன் வாயை பிதுக்கிக் கொண்டு
சொல்ல அது அவளை கவர்ந்தது.​

அவனை தூக்கி அணைத்துக் கொண்டவள்
"அச்சோ சாரிடா குட்டி.. ஆன்ட்டிக்கு கொஞ்சம் பிரச்சனை. அதனால் தான் உன்னை பார்க்க வர முடியல. மன்னிச்சுடுடா செல்லம்.."
என்று அவனை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்தாள்.​

ஒரு வழியாக அவனும் சமாதானமாகி விட்டான் ..
சிறு பிள்ளை தானே.. பிறகு இருவரையும் கையில் பிடிக்க முடியவில்லை ..அவனுடைய அன்றாட கதைகளை அவளிடம் கூறத் தொடங்கியவன் அவளை கூட இடையில் பேசவிடவில்லை.​

'இவன் என்னடா இது நம்மளையே மிஞ்சிட்டான் .ரொம்ப பேசுறான். ஆனா அவன் அப்பன் என்னடான்னா அளந்து அளரந்து பேசுறான் . கஞ்சப்பயன்..' மனதுக்குள் அவனது தந்தையை திட்டவும் மறக்கவில்லை அவள்.​

இப்படி அவள் விளையாட்டாக நினைத்தாலும் ஆதித்யாவின் கதையில் ஏதோ ஒன்று அவளை உறுத்தியது. அவனுடைய பேச்சை ஊன்று கவனிக்க தொடங்கினாள் இஷிகா.
ஆதித்யா மேலும் பேசிக் கொண்டே போக அப்போது தான் அவளுக்கு அந்த விடயம் புரிந்தது.​

ஆம் அவனது பேச்சில் அவனும் அவனுடைய தந்தையும் தான் கதாபாத்திரங்கள்.. தாயைப் பற்றி அவன் எதுவுமே கூறவில்லை..
ஏன் ?
ஏன்?
அவளுக்கு ஆதித்யாவிடம் கேட்க வேண்டும் போலவே இருந்தது. ஆனால் கேட்ட பிறகு குழந்தை மனதில் ஏக்கம் வந்து விட்டால் என்ன செய்வது என தோன்ற அந்த கேள்வியை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டாள்.​

அப்போது அந்த இடத்திற்கு ஆதித்யாவை தேடி அர்னவ் வந்தான். நீண்ட நேரமாக அவனை காணவில்லை என்பதால் தேடி வந்து விட்டான் ..அவன் பின்னே தேவ் ஆனந்தும் வர
"ஆண்ட்டி அப்பா வந்துட்டாங்க நான் போறேன் ..."
என்று ஆதித்யா கூற பெரியவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள் இஷிகா ..​

உண்மையில் அவளுக்கு அர்னவ் மீது அதிக கோபம் இருந்தது. அதனால் அவனை அவள் பார்ப்பதை தவிர்த்து தேவ் ஆனந்த பக்கம் திரும்பி
"உங்க கூட கொஞ்சம் பேசணுமே.." என்றாள் .
அவன் திரும்பி அர்னவை பார்க்க 'எனக்கு எதுவும் தெரியாது' என்ற முக பாவனையுடன் ஆதித்யாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டான் அவன்.​

அவன் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்து இருக்க 'நீதானே பேச வேண்டும் என்றாய். நீயே பேசு.' என்பதை போல் நின்றிருந்தான் அவன்.
" நான் கேட்கிறது தப்பா கூட இருக்கலாம். ஆனா மனசுல உறுத்துகிட்டே இருக்கு . அதனால கேட்டு முடிச்சுடறேன்.."
என பீடிகை போட்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க அதற்கும் எந்தவித அசைவும் இல்லை அவனிடம் .​

பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியே விட்டவள் அவனை நேரில் பார்த்து
" ஆதித்யா ஓட அம்மா எங்கே?" என்றாள் நேரடியாகவே ..
அவளிடம் இருந்து இந்த கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை போலும். ஒரே ஒரு நொடி அவன் முகத்தில் சிறு தடுமாற்றம் வந்து போனது..​

ஆனால் அதை அவள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
" இப்போ உங்களுக்கு அது எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?"
தீர்க்கமாக வெளி வந்தன அவனுடைய வார்த்தைகள். இப்போது அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அது உண்மையும் கூட. அவளுக்கு எதற்கு அந்த தகவல்.. ஆனால் கேட்டு விட்டாளே..

" இல்லை சும்மா தெரிஞ்சுக்கத் தான் ..ஆதித்யா இதுவரை என் கிட்ட அவங்க அம்மாவை பற்றி சொன்னதே இல்லை. அதனால தான் .."
என்று இழுக்க
" அவ இப்போ அவன் கூட இல்லை.." என அவன் சட்டென பதில் அளித்தான் .அவனது பதிலில் நம் இஷிக்காவிற்கு தான் மேலும் சந்தேகம் தோன்றியது.​

"கூட இல்லைனா பிரிஞ்சுட்டாங்களா? இல்லை உயிரோடவே இல்லையா?"
என்று யோசிக்காமல் அவள் கேட்டு விட அவனுக்குத் தான் அவள் மீது கோபம் வந்தது ‌‌...
இயலாமையால் ஏற்படும் கோபமோ ?​

"ஏன் இப்போ உனக்கு என்ன வேணும்? என்னோட ஃபேமிலி விஷயம் எல்லாம் உனக்கு எதுக்கு. ஆதித்யாவை உன் கூட பேச விட்டது என் தப்பு தான் .. இனிமேல் அவனை சந்திக்க முயற்சி பண்ணாதே சொல்லிட்டேன் ..மீறி அவனை பார்க்க முயற்சி பண்ணா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.." என்றான் அவன் படபடவென்று.​

"ஆமா இப்போ மட்டும் மனுஷனா தான் இருக்காங்க "
என்று அவனுக்கு கேட்கும் படி முனு முனுத்தவள் மேலும்
"ஹலோ என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ..?
ஏதோ அழகா இருக்கீங்கன்னு ஒரு தடவை சைட் அடிச்சிட்டேன் ..அதுவும் நீங்க கல்யாணமானவர் என்று தெரியாம தான்.. அதுக்காக என்னை எப்படி வேணா நினைச்சுப்பீங்களா? ஆதித்யா அம்மா இல்லாம கஷ்டப் படுவான்னு தான் கேட்டேன்.. உங்க மேல ஒன்னும் ஆசைப் பட்டு உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு எல்லாம் கேட்கல .."
என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினாள் அவள்..​

அவனோ கல் போன்று நின்று கொண்டு இருந்தான் எந்த அசைவும் இன்றி ..
தேவ ஆனந்த் பேசாமல் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவள்
"நீங்க எதுக்கும் பயப்படாதீங்க சார்.. இன்னும் 15 நாள்ல எனக்கு கல்யாணம் . அப்படி ஒன்னும் உங்களை தூக்கிட்டு போயிட மாட்டேன். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நான் ஆதி‌ குட்டிய பார்க்க வர்றேன்.. அப்போ என்னை பார்க்க விடுவீங்க தானே.. இப்போ நான் போயிட்டு வரேன்.."
என்று கோபத்தில் மூக்கு சிவக்க பேசிவிட்டு அவனைத் தான்டி சென்று விட்டாள்.​

இங்கு வந்தால் மனம் அமைதி அடையும் என்று பார்க்க அவன் மேலும் அவளுடைய மனதை நோகடித்து விட்டான்.​

அவன் தான் அவள் சென்ற பிறகு அப்படியே நின்று இருந்தான்.
ஆதித்யாவை மற்ற சிறுவர்களுடன் விளையாட விட்டு தேவ் ஆனந்தை தேடி அந்த இடத்திற்கு வந்தான் அர்னவ்.
" மச்சான் என்ன ஆச்சு..? ஏன் இப்படி இங்கே நின்னுகிட்டு இருக்க?"
என அவன் கேட்ட பின்பு தான் அவளது பேச்சின் தாக்கத்திலிருந்து வெளியே வந்தான்..
" ஒன்னும் இல்லை போகலாம்..' என்று அவன் நழுவ பார்க்க
" ஓகே உன்னால சொல்ல முடியலைனா சொல்ல வேண்டாம்.." என்றான் அர்னவ் ஒரு மாதிரி குரலில்.​

அதன் பிறகு எப்படி அவனால் மறைக்க முடியும் தனது தோழனிடம் ..
அவளுடனான உரையாடலை ஒன்று விடாமல் கூறினான் தேவ் ஆனந்த்.
" பாவம் டா அவ அக்கா பையன் கூட பேச வேண்டாம் என்று எப்படி நீ சொல்லலாம் ..அது தெரியாததுனால தான் இப்படி பேசிட்டு போறா.
ஒரு வேலை ஆதித்யா அவ அக்கா பையன் தான்னு தெரிஞ்சா உன் கதை அவ்வளவு தான்.." சிரிப்பினூடே கூறினான் அர்னவ்.​

ஆனால் தேவ் ஆனந்த் யோசனையாக அவனை பார்த்து
" அவளுக்கு கல்யாணம்னு சொன்னாடா..அது எப்படி இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பிக்ஸ் பண்ணுவாங்க.. ஒருவேளை தீப்திக்கு மாதிரியே இவளுக்கும் அவங்க அப்பா பிடிக்காத கல்யாணம் பண்ணி வைக்க போறாரா?" என்றான்.​

"லூசா டா நீ அவளுக்கு பிடிக்கலைன்னா உன்கிட்ட இப்படி சொல்லிட்டு போவாளா?
சும்மா அதையே யோசிக்கிறத விட்டுட்டு வா போகலாம்.." என்று அவனுடைய தோளை தொட்டு திருப்ப அர்னவின் கையை தட்டி விட்டவன்
" இல்லைடா இதைப் பற்றி விசாரிக்கணும் ...புடிச்ச கல்யாணமா இருந்தாலும் சரி புடிக்காத கல்யாணமா இருந்தாலும் சரி இந்த கல்யாணம் நடக்கக் கூடாது.. அவளோட அப்பா ஆசைப் பட்டது என்னைக்குமே நடக்கக் கூடாது ..எங்களோட நிம்மதியை அழிச்சவன் நிம்மதியா தூங்கலாமா சொல்லு?"
என்றான் அர்னவை பார்த்து கேள்வியாக ..
இதற்கு என்ன பதில் சொல்வது என்று அர்னவிற்கு தான் தெரியவில்லை.​

தொடரும்...​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 07​

தீப்த்தியின் முன் அமர்ந்திருந்தான் தேவ் ஆனந்த். நீண்ட நேரமாக அமைதியாக இருந்தவன் திடீரென "உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம்.. உனக்கு தெரியாது இல்லையா ?
அப்புறம் மாப்பிள்ளை யார் தெரியுமா?"
என்று பேசிக் கொண்டே போனான்.
அவளிடம் இருந்து பதில் கிடைக்காது என தெரிந்தும் கேள்விகளை கேட்டான் அவன்.​

மீண்டும் அவனே
" உனக்காக உங்க அப்பா ஒரு மாப்பிள்ளை பார்த்தாரே அதே மாப்பிள்ளை தான் உன் தங்கச்சிக்கும் பார்த்திருக்கார்.. அவளும் சம்மதம் சொல்லிட்டாள்.. இன்னும் ஐந்து நாள் தான் இருக்கு கல்யாணத்திற்கு.." என்றான் ஒருவித நக்கல் குரலில்.​

தீப்த்தியிடம் ஒரு சின்ன அசைவு அவ்வளவே.. அவனைக் கூட அவள் பார்க்கவில்லை.
அவளது எதிரில் இருந்த சுவற்றை வெறித்து பார்த்த படி இருந்தாள். ஆம் அன்று இஷிகா அவனுடன் பேசிச் சென்ற பிறகு அனைத்தையும் விசாரித்து அறிந்து கொண்டான் அவன். அதில் கிடைத்த செய்திகளே அவன் சற்று முன்னர் தீப்த்தியிடம் கூறியது.​

மேலும் சற்று நேரம் தீப்த்தியிடம் ஆதித்யா பற்றி பேசினான். அவனுடைய புகைப்படங்களையும் அவளுக்கு காண்பித்தான். மகனுக்காகவாவது எழுந்து வந்து விட மாட்டாளா என்ற நட்பாசை தான் ..
நீண்ட நேரம் ஆதித்யாவின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தீப்த்தி தலையை உயர்த்தி தேவ் ஆனந்தை கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.
என்ன சொல்ல நினைக்கிறாளோ?​

அவளை அப்படி பார்த்ததும் அவனுக்கும் அழுகை வந்து விட்டது. அதனை மறைத்துக் கொண்டவன் அவளது தலையை வருடி விட்டு வெளியேறி விட்டான்.
அவனுள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு நிச்சயம் சிதம்பரத்தை அழிக்கும் ..​

ஏதோ தோன்ற அங்கிருந்த படியே இஷிக்காவிற்கு அழைத்தான் அவன்.
அவளை பற்றி விசாரிக்க சொன்ன போது அவளுடைய அலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டான் அவன். நீண்ட நேரத்திற்கு பின் மற்றைய பக்கம் "ஹலோ.."
என்ற மெல்லிய குரல் அவனது காதில் கேட்டது .
தேவ் ஆனந்திற்கு சிறிது சந்தேகம் தோன்றிற்று. உண்மையில் இது இஷிகா தானா என்று..​

" ஹலோ ஐ அம் தேவ் ஆனந்த்.." என்றான் கம்பீரமாக.
" சொல்லுங்க சார் என்னோட நம்பர் எப்படி உங்ககிட்ட ..அப்புறம் என்ன விஷயமா என்னை கூப்பிட்டீங்க ?"
என்றாள் அதே மெல்லிய குரலில். என்ன பேச அவளுக்கு அழைத்தோம் என்பதை மறந்து "ஏன் உனக்கு என்ன ஆச்சு.? வாய்ஸ் ஏன் ஒரு மாதிரியா இருக்கு..?"
என்றான் அடுக்கடுக்காக.​

அவனது அக்கறையான பேச்சில் அவளுக்கு கோபம் தான் வந்தது.
"யார் சார் நீங்க ?
எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்கவா ஃபோன் பண்ணீங்க ..?
சொல்ல வேண்டியதை சொல்லிட்டு கட் பண்ணுங்க.." அவளும் படபடவென பதில் சொன்னாள்.​

அப்போது தான் அவனுக்கு உண்மை நிலை உறைத்தது போலும்.
" இந்த கல்யாணத்துல இஷ்டம் தானா ?
இல்லை பிடிக்காமல் கல்யாணம் பண்ணிக்க போறியா?"
தனது பழைய குரலில் பேசினான் அவன்.​

அவன் அப்படி கேட்டதும் இஷிக்காவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. உண்மையில் அவளுக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை தான். ஆனால் இதை அவனிடம் எப்படி சொல்வது?
இவன் யார் இதையெல்லாம் அவனிடம் அவள் சொல்ல?

" எனக்கு அபிமன்யுவை ரொம்பவே பிடிக்கும் சார்.. அதனால தான் அவரை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. அது சரி இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?"
அவன் மீது இருந்த கோபத்தில் சட்டென சொல்லி விட்டாள்..
" அதுவும் உண்மை தான். எனக்கு எதுக்கு இதெல்லாம்.." என்று கூறியவன் அழைப்பை துண்டித்து அப்படியே அமர்ந்து தான் அடுத்த செய்ய வேண்டியதை சிந்திக்கலானான்.​

இங்கு இஷிக்காகவோ தனது அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
'இவன் ஏன் திடீரென அழைத்தான்? ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்டான்?' என்ற கேள்விகள் அவளுள் எழுந்தாலும் அதை அதற்கு மேல் அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை.​

இன்னும் ஐந்து நாட்களில் திருமணம் என்ற நிலையில் என்ன செய்வது என தெரியாமல் தனது அறையில் ஆழ்ந்த யோசனையில் இருந்தவளைத் தான் அழைத்து பேசினான் தேவ் ஆனந்த் .
அன்று அவளுடைய தாய்
' நீ திருமணம் செய்து கொள்ளா விடில் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று எப்போது அவளிடம் கூறினாரோ அன்றிலிருந்து அவருடன் அவள் பேசவில்லை. அவராக பல முறை அவளுடன் பேச முயற்சி செய்த போதும் இஷிகா பிடி கொடுப்பதாக இல்லை .
அம்மாவே இப்படி செய்ததைத் தான் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இப்போது வரை அவளுக்கு ஆறுதலாக இருப்பது அண்ணி ஒருத்தி தான்..​

இளமதியும் விமலிடம் கெஞ்சி கூட பார்த்து விட்டாள்.
ஆனால் 'அப்பாவும் அம்மாவும் ஒரே முடிவில் இருக்கும் போது நான் என்ன செய்ய முடியும் .?
இதில் வேறு அபிமன்யு ரொம்ப நல்லவன் . அவனை கல்யாணம் பண்ண நம்ம பொண்ணு நல்லா இருப்பா'
என்றதோடு முடித்துக் கொண்டான் அவன் ..
இதற்கு மேல் இரு பெண்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இதில் அபிமன்யு வேறு அடிக்கடி அவளுக்கு அழைத்து 'எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடு '
என்று கூறிக் கொண்டு இருக்கிறான்.​

யோசித்து யோசித்து தலையே வெடித்து விடும் போல் இருந்தது. என்ன செய்யலாம் என்று அவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்திருக்க அவளது அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தனர் ஆர்த்தி இளமதி இருவரும்.​

"ஹே வா ஆர்த்தி எப்போ வந்த?" என்று முகத்தில் புன்னகையை வரவழைத்தவள் தோழி உடன் பேச ஆரம்பித்தாள்.
"நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க.. சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்.."
என்று கூறிய இளமதி தோழிகள் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு சென்று விட்டாள் ..​

அவள் அங்கிருந்து மறைந்ததும்
"நீ அபிமன்யு அண்ணாவை கல்யாணம் பண்ணிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. அது எப்படி இவ்ளோ சீக்கிரம் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டீங்க?
ஆமா பெரிய இடத்தில் இதெல்லாம் சாதாரணமான மேட்டர் ஆச்சே.."
என ஆர்த்தி தன் போக்கில் பேசிக் கொண்டே போக
" ஏய் நிறுத்தடி நானே செம்ம கடுப்புல இருக்கேன்.. நீ எரிகிற நெருப்புல எண்ணெயை ஊத்தாம அமைதியா இரு.." என்றாள் இஷிகா.​

அவளுடைய பேச்சில் தான் அவளை நிமிர்ந்து பார்த்தாள் ஆர்த்தி. தோழி சட்டென திருமணம் என்று தன்னிடம் அறிவித்த கோபத்தில் தான் வந்தாள் ஆர்த்தி. அதனால் தான் யோசிக்காமல் ஏதேதோ பேசியும் விட்டாள்.​

இப்போது இஷிகாவை பார்க்க அவளுடைய முகம் வாடிப் போய் இருந்தது.
"இஷி என்னடி ஆச்சு? ஏன் உன் முகமே சரியில்லாமல் போச்சு ..சாரி நான் ஏதோ தெரியாம பேசிட்டேன் .."
என தோழியின் முகவாட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மன்னிப்பு வேண்டினாள் ஆர்த்தி.​

தன்னால் தோழி கவலைப் படுவதை உணர்ந்த இஷிகா முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு
" ஐயோ உன் மேல் எந்த தப்பும் இல்லை.. இது வேற.."
என ஆரம்பித்தவள் அன்று முதல் தற்போது வரை நடந்த அனைத்தையும் கூறினாள்.​

எல்லாவற்றையும் கேட்டு முடித்த ஆர்த்திக்கும் தோழியின் நிலையை எண்ணி கவலையாக இருந்தது.
" இப்போ என்னடி பண்ண போற? அதுக்காக இரண்டு பேருக்குமே பிடிக்காத கல்யாணத்தை எப்படி பண்ணிக்கிறது?" ஆர்த்தியும் தன் பங்கிற்கு யோசிக்கலானாள்.​

"விடு ஆர்த்தி கடவுள் என்ன நினைச்சு இருக்காருன்னு தெரியாது ..
நடக்கிறது அது பாட்டுல நடக்கட்டும்.." என்றாள் இஷிகா.
அவளுடைய இந்த தோற்றம் ஆர்த்திக்கு முற்றிலும் புதிது .
"ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? எல்லாம் நல்லதாவே நடக்கும்.. நீ மட்டும் இப்படி மூஞ்ச தூக்கி வெச்சிட்டு இருக்காதடி. பார்க் கஷ்டமா இருக்கு. இந்த ஆன்ட்டி ஏன் திடீர்னு எப்படி பிஹேவ் பண்றாங்கன்னு தான் சுத்தமா புரியல .."
என்ற ஆர்த்தியின் முகம் சோகத்தை தத்தெடுத்து இருந்தது. இதை கேட்ட இஷிகாவிற்கும் கவலையாகத் தான் இருந்தது.​

எப்போதும் தன் பக்கம் நிற்கும் தாய் இன்று தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் தனக்கு எதிராக நிற்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அப்போது தோழிகள் இருவருக்குமான தேநீர் கோப்பைகளுடன் உள்ளே வந்தாள் இளமதி.
இருவருடைய முகமும் வாடி இருப்பதை கண்டவள்
" என்னால் முடிஞ்சதை பண்ணிட்டேன்.. இதுக்கு மேல என்னாலையும் முடியல .
அவர் கூட என் பேச்சைக் கேட்கிறதா இல்லை .."
என்று வருத்தத்துடன் கூறினாள்.​

" என்ன நடக்குதோ அதுவே நடந்துட்டு போகட்டும். இதுக்கு மேல இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம்.."
என அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் இஷிகா.
மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரே தவிர எதுவும் பேசவில்லை இஷிகாவின் பேச்சுக்கு மதிப்பளித்து. மேலும் அவர்கள் பேசி எதுவும் மாறப் போவதும் இல்லையே.​

*******************​

சுதீப் காரை செலுத்திய படி அருகே இருந்த அண்ணனை பார்த்தான். தான் யார் என்று கூட தெரியாத அளவுக்கு குடித்திருந்தான் அபிமன்யு.
ஒரு மனிதனை காதல் எப்படி எல்லாம் மாற்றும் என்பதை தனது அண்ணன் விடயத்தில் தான் அவன் கண்டிருக்கிறான்.​

மதுவின் பக்கம் அவனது கண் பார்வை கூட செல்லாது .
ஆனால் இன்று தன்னை மறக்கும் அளவிற்கு தினமும் குடிக்கிறான். வீட்டுக்கு அழைத்து வந்த சுதீப் குளியலறைக்குள் இழுத்துச் சென்று சவர் அடியில் அபிமன்யுவை நிறுத்தி நீரை திறந்து விட மெல்ல மெல்ல அவனது போதை தெளிந்தது.​

சிறிது நேரம் அப்படியே விட்டவன் அண்ணனை பார்த்து
"குளிச்சிட்டு வா உன் கூட கொஞ்சம் பேசணும்.." என கூறி விட்டு வெளியே வந்து அவன் வருகைக்காக காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து அபிமன்யு தலையை துவட்டியபடி வெளியே வந்தான்.. அவனுக்கு தம்பியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க கூட வெட்கமாக இருந்தது. அவனுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நாமே இப்படி அவன் முன்னால் நடந்து கொள்கிறோம் என்ற நினைவு அவனை கொன்றது. ஆனால் அதற்காகவெல்லாம் அவனால் இந்த பழக்கத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது.​

காரணம் அவள்.. தீப்த்தியின் எண்ணம் அவனை வாட்டி வதைக்கிறது.. அந்த நேரம் அவனது தனிமைக்கு துணையாக இருப்பது இந்த குடிப்பழக்கம் தான்.​

" உட்கார்.." என்று அபிமன்யு முகத்தில் வந்து போன உணர்வுகளை பார்த்துக் கொண்டே கூறினான் சுதீப்.
ஆனால் அபிமன்யு தம்பியின் முகத்தை பார்க்கவில்லை .
"இன்னும் ஐந்து நாளில் கல்யாணத்தை வச்சுட்டு ஏன் குடிச்சு உடம்பை கெடுத்துகிற..?இஷிகாவுக்கு குடிக்குற ஆம்பளைங்களை கண்டாலே பிடிக்காது.."
என்று தனது பேச்சை ஆரம்பித்தான் சுதீப்.​

இப்போது தம்பியை நேராக பார்த்த அபிமன்யு
"இஷிகா..இஷிகானு பின்னாடியே சுத்துறியே அவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது உன்னால கண்டுபிடிக்க முடியலையா?"
என்றான் கடுப்பாக..​

"ஓ..அவளைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியுமே.. இப்போ கூட உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல அவளுக்கு துளி அளவு கூட இஷ்டமில்லை.. இருந்தாலும் என்ன பண்ண அவ உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருப்பா.. அதனால இந்த கல்யாணம் நடந்து தான் ஆகணும். உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்.."
அண்ணனுக்கு பதிலளிக்கும் விதமாக பேசினான் சுதீப்.​

"என்னடா பேசுற?
ஏன்டா எல்லாருமே இப்படி இருக்கீங்க ..ரெண்டு பேருக்குமே பிடிக்காத கல்யாணம் நடக்கத் தான் வேணுமா ?
அம்மா வேற தற்கொலை அது இதுன்னு சொல்லி பயமுறுத்துறாங்க .."
என்றான் அபிமன்யு தன் பங்கேற்கு சலிப்பாக..​

" அம்மா மேலே எனக்கு எப்பவுமே நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. ஆனால் உன்னோட இந்த கல்யாண விஷயத்துல மட்டும் அவங்க எடுத்த முடிவை நான் ஆதரிக்கிறேன் .
உனக்கான சரியான ஜோடி இஷிகா தான்.
நீ என்ன பண்ணாலும் இந்த கல்யாணம் நடந்தே தீரும்.."
என்று அண்ணனிடம் அறிவிப்பு போல் கூறி விட்டு அவனைப் பார்த்து கண்களையும் சிமிட்டு விட்டே வெளியே சென்றான் சுதீப்.​

அபிமன்யுவிற்கு எஞ்சி இருந்த சிறு போதையும் சட்டென இறங்கி விட்டது ..எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கும் தாயும் தம்பியும் இவன் திருமண விடயத்தில் மட்டும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்ற கேள்வி அவனுள்..​

தொடரும்...​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 08​

இன்று அவருடைய திருமண நாள். மனது படபடவென அடித்துக் கொண்டது இஷிகாவிற்கு ..
பதுமை போல் அமர்ந்திருந்தவள் அருகில் வந்தமர்ந்த இளமதி "பார்க்கவே தேவதை மாதிரி இருக்க.. ஆனா என்னால உன்னை ரசிக்கத் தான் முடியல.. பயமா இருக்குடா உன்னோட லைஃபை நினைச்சு.."
என்று கண்கள் கலங்க பேசினாள்.​

இஷிகாவால் இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவளுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை.. ஆனால் அவள் அருகில் இருந்த ஆர்த்தி தான்
"இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல. பேசாம இங்கே இருந்து தப்பிச்சு போயிடு.. உனக்கு நாங்க ஹெல்ப் பண்றோம்.." என வேறு வழியில்லாமல் கூறினாள்.​

அவளை திரும்பி முறைத்து பார்த்த இஷிகா
"இப்படி ஓடிப் போகணும்னா நான் எப்பவோ போய் இருப்பேன்.. நான் போன அப்புறம் எங்க அம்மா ஏதாச்சும் பண்ணிட்டாங்கன்னா என்ன பண்றது ..
பேசாம இந்த கல்யாணத்தை பண்ணிப்போம். வேற வழியே இல்லை .
இது தான் அந்த கடவுள் தொடக்கம் என்னை சுத்தி உள்ளவங்களோட விருப்பம்னா அதை அப்படியே விட்டுடுவோம்.." என்றாள் விரக்தியாக. அவளது பேச்சை கேட்ட இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அமைதியாக இருந்தனர்.​

அப்போது உள்ளே வந்த கவிதா "அம்மாடி இளமதி நம்ம இஷிகாவை அழைச்சிட்டு வர சொல்றாங்க.."
என்று மருமகளிடம் கூறினாலும் அவரது பார்வை என்னவோ மகளிடம் தான் இருந்தது.
இந்த கோலத்தில் மகளைப் பார்த்தும் வாரி அனைத்து கொள்ள முடியாத தனது நிலையை எண்ணி வருந்தினாலும் அவளை கண்குளிர கண்டு ரசித்தார் அந்த தாய்..​

இஷிகா தான் அவருடன் பேசுவதே இல்லையே. இப்போது அருகில் செல்ல போய் அவள் ஏதாவது கூறி விட்டால் இந்த நேரத்தில் இருவருக்கும் தானே அது சங்கடம். எனவே அமைதியாக இருந்து கொண்டார் அவர்.
" இதோ அத்தை.. நீங்க முன்னாடி போங்க நாங்க ரெண்டு பேரும் அழைச்சிட்டு வரோம்.."
என்று கூறி அத்தையை அனுப்பி வைத்த இளமதி இஷிக்காவை பார்த்தாள்.
அவளும் போகலாம் என்று தலையசைக்க கனத்த மனதுடன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றனர் இளமதி ஆர்த்தி இருவரும்.​

வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் அத்தனை அழகாக இருந்தாள் இஷிகா. அவளை அங்கிருந்த அனைத்து கண்களும் பார்த்த போதும் அவள் தலையைக் கூட நிமிர்த்தவில்லை ..
மணமகன் அருகே வந்தவள் யாரையும் பார்க்காது சபையை நோக்கி ஒரு வணக்கம் வைத்து விட்டு உட்காரப் போக அவளது தோளை தொட்டாள் இளமதி.. அதை மெல்ல விலக்கி விட்டு தன் போக்கில் மணமகன் அருகில் அமர்ந்து ஐயர் கூறியதை செய்ய தொடங்கினாள் இஷிகா.​

"கெட்டி மேளம்... கெட்டி மேளம்.." என்ற ஐயரின் குரலை அடுத்து இஷிக்காவின் கழுத்தில் தாலி ஏறியது..
தனது எதிர்காலத்தை நினைத்து இரு கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டாள் பெண் அவள்.
மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது.​

" என்னாச்சு என்னை கட்டிக்கிறதுக்கு கசக்குதா என்ன?'
என்ற குரல் அவளுடைய காதலில் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் இஷிகா. அவனே தான்... தேவ் ஆனந்த்..எப்படி இவன் இந்த இடத்தில்?
'ஐயோ கடவுளே அப்ப அபிமன்யு எங்கே? என்ன தான் நடக்குது இங்கே ?'என்று மனதில் பல கேள்விகள் ஓட அவனுக்கு எந்த பதிலும் சொல்லாது பரபரப்பாக சபையை சுற்றிப் பார்த்தாள் அவள்.​

அவளைப் போலவே தான் ஆர்த்தியும் இளமதியும் எதுவும் தெரியாது முழித்துக் கொண்டு நின்றிருந்தனர் ..
திரும்பி தந்தையை பார்த்தாள். அவர் முகத்தை கடுகடுவென வைத்திருக்க இதில் ஏதோ இருக்கிறது , அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள் இஷிகா.​

"என்னம்மா எனக்கு பதில் சொல்லாம எல்லா பக்கமும் பாக்குற ?
என்னடா அபிமன்யுவ காணோம்னு தேடுறியா?"
என்று மேலும் அவள் அருகில் நெருங்கி பேசினான் தேவ் ஆனந்த். இவளுக்குத் தான் குழப்பமாக இருந்தது. இதில் இவன் வேறு அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு நச்சரிக்கிறான்.​

இவனுக்கு பதில் சொல்வதா தன் வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று அவள் தெரிந்து கொள்வதா? 'அவளது அண்ணன் கூட இவனை எதிர்த்துப் பேசவில்லை..ஏன்?' அதற்கு மேல் அவளுக்கு யோசிக்கக் கூட நேரம் இருக்கவில்லை.. ஐயரும் ஒவ்வொன்றாக கூற இவளும் அவனுடன் சேர்ந்து கடமைக்கு என்று அனைத்தையும் செய்து கொண்டு இருந்தாள்.​

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளும் படி ஐயர் கூறிட முதலில் அன்னையிடம் சென்றவள் அவரை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் தான் எத்தனை அர்த்தங்கள். அவளுடைய பார்வை வீச்சை தாங்க முடியாமல் தலையை தாழ்த்திக் கொண்டார் கவிதா.​

" ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை" என்ற தேவ் ஆனந்த் அவளையும் இழுத்துக் கொண்டு அவருடைய காலில் விழுந்து எழுந்தான்.
" நல்லா இருங்க." என்றவரின் கண்கள் கலங்கி விட்டன..
இஷிகா அதற்கு மேல் நகராமல் இருக்க அவளுடைய கையை பிடித்து இழுத்துக் கொண்டு சிதம்பரம் அருகே சென்றான் தேவ் ஆனந்த்.
சிதம்பரத்திற்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் சபையோரின் முன் காட்டி விட முடியாதே..எனவே அமைதியாக நின்றிருந்தார் அவர்.​

" என்ன மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ற ஐடியா இருக்கா என்ன ?"
என்று மெல்லிய குரலில் நக்கலாகவே கேட்டான்.அவனது அருகில் இருந்த இஷிகாவிற்கு அவனுடைய பேச்சு நன்றாகவே காதில் விழுந்தது. அவள் தந்தையையும் தனது திடீர் கனவனையும் மாறி மாறி பார்த்தாள் சிறு பிள்ளை போல். சிதம்பரம் பதில் பேசவில்லை. மேலும் அவனே தான் தொடர்ந்தான்.​

" என்னடா இவன் என் முதல் பொண்ணோட கல்யாணத்தையும் நிறுத்தினான் ..இப்போ இரண்டாவது பொண்ணோட கல்யாணத்தையும் நிறுத்திட்டான்னு பாக்குறீங்களா? இந்த நிமிஷத்துல இருந்து உங்க கெட்ட காலம் ஆரம்பிச்சிருச்சுனு நினைச்சுக்கோங்க.. அவ்வளவு சீக்கிரமாக உங்களை விட்டடுட மாட்டேன்.. "
என கூறி கண் அடித்தவன் அவன் பேச்சில் திகைத்து நின்ற மனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக சிதம்பரத்தின் காலில் விழுந்தான்.. அவரும் கடமைக்கு என்று ஆசீர்வதித்தார் இருவரையும்.​

அதற்கு மேல் அவன் அந்த இடத்தில் நொடி நேரம் கூட தாமதிக்கவில்லை.
அங்கு சிதம்பரத்தின் அருகில் நின்ற அபிமன்யுவின் தாய் மற்றும் சுதீப் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அவளுடைய பிடித்த கையை விடாது வெளியே அழைத்து வந்தான். இஷிகாவும் வேறு வழி இல்லாமல் அவனது பின்னால் சென்றாள்.​

அங்கிருந்த யாராலும் எதுவும் அவனுடன் பேச முடியவில்லை. ஏனெனில் இப்போது அனைத்தும் தேவ் ஆனந்த் பக்கம் அல்லவா இருக்கிறது. அவனுடன் செல்லும் தங்கள் வீட்டு பெண்ணை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர எதிர்த்து ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசவில்லை.​

அங்கிருந்து அவளுடன் வெளியேறியவன் வந்து நின்றது அவனுடைய வீட்டில் தான். அவனுக்கு முன்பே அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தான் அர்னவ். விடயம் கேள்விப்பட்டவன் நண்பன் மேல் கடும் கோபத்தில் இருந்தான் .
அங்கு அவனை எதிர்பார்க்காத தேவ் ஆனந்த் "என்னடா மச்சான இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கே?"
என்றான் இயல்பாக எதுவும் நடவாதது போல்.​

அவனுடைய கேள்வியின் மேலும் கோபம் அடைந்த அர்னவ்
"ம் ...உனக்கு ஆர்த்தி எடுக்கலாம்னு வந்து இருக்கேன்.." என்று நக்கலா கூறி விட்டு நண்பனின் அருகில் நின்ற இஷிகாவை பார்த்தான். அவளோ இன்னும் திகைப்பில் இருந்து மீளவில்லை..​

" சரி விடு மச்சான் வா உள்ளே போகலாம் "
என்ற தேவ் ஆனந்த் இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். மூன்று பேரும் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்திருந்தனர்.
மௌனம்... மௌனம்...​

தேவ் ஆனந்த் நடந்தவை பற்றி கூறுவான் என அர்னவ் பார்த்திருக்க ,
அர்னவ் ஏதாவது கேட்டால் சொல்லிக் கொள்ளலாம் என்று தேவ் ஆனந்த் காத்திருந்தான். இருவரும் ஏதாவது பேசினால் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம் என அமைதியாக இருந்தாள் இஷிகா.​

இதற்கு மேல் தாங்க முடியாது என்று உணர்ந்த அர்னவ்
" என்ன வேலைடா பார்த்திருக்க.. லூசா நீ?
போலீஸ்காரன் பண்ற வேலையாடா இது.."
என்று கோபத்தில் மாறி மாறி கேள்வி கேட்டான் நண்பனிடம்.​

" டேய் என்னடா நீ கேள்வி கேக்குற? போலீஸ்காரன் கல்யாணம் பண்ணக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா என்ன?
ஒரு பொண்ணை கல்யாணம் தானடா பண்ணேன் ..
இதுல என்ன தப்பு இருக்கு?"
என்று தேவ் ஆனந்த் கேட்க முடிந்த மட்டும் நண்பனை முறைத்தான் அர்னவ்.
" சரிடா நீ கல்யாணம் பண்ணது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் இப்படி பண்ணி இருக்க வேண்டும் ..
சரி அதை விடு இந்த பொண்ணுக்கு நடக்க இருந்த கல்யாணம் என்ன ஆச்சு?"
மேலும் நண்பனிடம் கேள்வி கேட்டான் அர்னவ்.​

" மாப்பிள்ளையை தூக்கிட்டேன்.. அந்த இடத்தில நான் உட்கார்ந்துட்டேன். சிம்பிள் மச்சி.." என்று கூறியவன் கூலாக சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். இதுவரை நேரமும் அமைதியாக இருந்த இஷிகா என்ற சிலைக்கு இப்போது தான் உயிர் வந்தது.. அமர்ந்த இடத்தில் இருந்து பட்டென்று எழுந்தவள் தேவ் ஆனந்த் முன் வந்து
" அபிமன்யுவை என்ன பண்ணீங்க? அவருக்கு என்ன ஆச்சு ?"
என்று படபடவென கேள்வி கேட்டாள் அவள்.

இஷிகாவின் தவிப்பை ரசித்தவன் மெல்லியதாக புன்னகைத்தான். அவள் அன்று ரசித்த அதே புன்னகை. ஆனால் இன்று அவர்களுக்கு அது கசந்தது .
"நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க எதுவும் சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்? ஓஹோ நீங்க அவரை கடத்தினதுனால தான் அத்தை,அப்பா, சுதீப், அண்ணானு எல்லாருமே அமைதியா இருந்தாங்களா?"
என அவளே கேள்வியும் கேட்டு அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள்.​

" மச்சான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு ..உனக்கும் அவங்க அப்பாவுக்கும் இருக்கிற பகையில நீ இந்த பொண்ணை இடையில இழுத்தது பெரிய தப்பு.அதுவும் அந்த பொண்ணோட லைஃப் மேட்டர்.. என்னை கேட்டா நீ பண்ணது பெரிய தப்பு மச்சி.."
ஒரு சிறந்த தோழனாக அறிவுரை கூறினான் அர்னவ்.​

"என்ன சொல்றாரு அவர்?
என் அப்பா மேல உள்ள கோபத்தில் தான் என்னை கல்யாணம் பண்ணீங்களா? அப்புறம் ...அப்புறம் ..ஏதோ அப்பாகிட்ட சொன்னீங்க .
உங்க பெரிய பொண்ணோட கல்யாணத்தை நிறுத்தினேன் இப்போ இரண்டாவது பொண்ணோட கல்யாணத்தையும் நிறுத்துறேன்னு..அப்படின்னா என்ன அர்த்தம்?
என் அக்கா எங்கே? என்ன நடந்தது அவளுக்கு?
இங்க என்ன தான் நடக்குது?"
என்று மனதில் உள்ள அனைத்து கேள்விகளையும் கேட்டாள் இஷிகா.​

கண்களில் இருந்து கண்ணீர் துடைக்க துடைக்க வழிந்து கொண்டு இருந்தது அவளுக்கு..அர்னவிற்கு அவளை அப்படி பார்க்க பாவமாகத் தான் இருந்தது.. எதுவும் தெரியாமல் மாட்டிக் கொண்டிருக்கும் அவளை என்ன ஆறுதல் வார்த்தை கூறி தேற்றலாம் என்று அவனுக்கு தெரியவில்லை..
ஆனால் இது அனைத்துக்கும் சொந்தக்காரனான தேவ் ஆனந்த் அமைதியாக நின்று அவளது அழுகையை ரசித்துக் கொண்டிருந்தான்...​

தொடரும்...​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 09​

தேவ் ஆனந்தால் எந்த வேலையையும் முழு மனதுடன் செய்ய முடியவில்லை.
எப்போதும் இஷிக்காவின் திருமணத்தை பற்றிய எண்ணம் தான் அவனுள் ஓடிக்கொண்டிருந்தது. அவளுடைய திருமணத்தை தடுத்து நிறுத்தி சிதம்பரத்தை சபையோர் முன்னிலையில் தலை குனிய வைக்க வேண்டும் என்பதே அவனது ஆசை.​

எப்படி திருமணத்தை நிறுத்தலாம் என பல விதமாக யோசனை செய்தவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.
தானே அவளை திருமணம் செய்து கொண்டால் காலம் உள்ள காலம் வரை சிதம்பரத்தை தான் நினைத்த படி ஆட்டி வைக்கலாம் என்ற யோசனை அவனுக்கு தோன்ற குதூகலமானான் அவன்.
தோழனிடம் இதைப் பற்றி கூறினால் அவன் இப்படி எதுவும் செய்ய விட மாட்டான் என்பதை அறிந்தவன் அவனுக்கு தெரியாமலே அனைத்தையும் செய்ய ஆரம்பித்தான்.​

ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து திருமணத்தன்று காலை அபிமன்யுவை தூக்கி விட்டான். சுதீப்பும்அவனுடைய அன்னையும் அபிமன்யுவை தேடுவதை கண்டவன் இது தான் சரியான தருணம் என்பதை உணர்ந்து அவர்கள் அருகே சென்று பேச்சு கொடுத்தான்.​

"ஹலோ சுதீப் என்ன தேடுறீங்க?"
என்று தேவ் ஆனந்த் பேச
"ஹலோ சார் நீங்க என்ன இந்த பக்கம்?? ஓஹ்..சாரி சார் அங்கிள் இன்வைட் பண்ணாரா ?
உள்ளே வாங்க ..."
என்று அந்த அவசரத்திலும் அவனை வரவேற்றான் சுதீப். "இருக்கட்டும் சுதீப் உங்க கூட கொஞ்சம் பேசணுமே.. இப்பவே பேசுனா நல்லா இருக்கும்.."
என்று கூறியவன் சுதீப் மற்றும் அவனுடைய தாயின் முகத்தையும் மாறி மாறி பார்த்தான்..​

" இல்லை சார்.. இந்த டைம்ல பேசுறதுனா கொஞ்சம் கஷ்டம்.." என்று சுதீப் இழுக்க
"உங்க அண்ணன், அதாவது கல்யாண மாப்பிள்ளையை காணும் அப்படித் தானே.."
எனக் கூறிய தேவ் ஆனந்த் தன் எதிரே இருந்த இருவரையும் பார்த்து புருவங்களை உயர்த்தினான்.​

அவர்களோ அவனது கூற்றைக் கேட்டு ஆடிப் போய் விட்டனர். இன்னும் அபிமன்யுவை காணவில்லை என்ற விடயம் சிதம்பரத்திற்கு கூட தெரியாது. இவ்வாறு இருக்கையில் இவன் வந்து உண்மை அனைத்தையும் தெரிந்ததை போல பேசினால் இருவருக்கும் எப்படி இருக்கும்? அன்னை மகன் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்ன பேசுவது என்று தெரியவில்லை அவர்களுக்கு.​

" ஓகே இப்போ உங்க கூட பேசலாமா? அப்புறம் பொண்ணோட அப்பா சிதம்பரம் கூடவும் பேசணும் .அவரையும் அழிச்சிட்டு வரீங்களா?"
என்று தேவ் ஆனந்த் கூற ஒரு நொடி அன்னையின் முகம் பார்த்த சுதீப் நேரே சிதம்பரத்தை தேடிச் சென்றான்.​

" வாங்க அவங்க வரும் வரை நாங்க ரெண்டு பேரும் அப்படி போய் உட்காரலாம்."
என்ற தேவ் ஆனந்த் மணமகன் அரை நோக்கி வேதநாயகியை அழைத்துச் சென்றான். அவரும் படபடக்கும் மனதுடன் அவனது பின்னே சென்றார் ..
அடுத்த சில நிமிடங்களில் சிதம்பரத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தான் சுதீப்.
மணமகன் அறையில் தேவ் ஆனந்தை சற்றும் எதிர்பார்க்காத சிதம்பரம் திகைத்துப் போய் அறை வாயிலேயே நின்று விட்டார்.
" என்ன மிஸ்டர் சிதம்பரம்..
என்னை இந்த இடத்தில் எதிர்பார்க்கல போல ..."
என்ற தேவ் ஆனந்த் அவரை பார்த்து நக்கலாக சிரித்து வைத்தான்.​

அவரும் அவனுக்கு சலைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் பொருட்டு
"நான் உங்களை இந்த கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணவே இல்லையே.. அதனால தான் திடீர்னு உங்களை கண்டதும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்.."என்றார் பதிலுக்கு.​

சிதம்பரத்தின் பதிலை கேட்டு மெதுவாக புன்னகைத்தவன் " நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் ..
ஏன்னா எனக்கு டைம் இல்லை பாருங்க.."
என்றவாறு அங்கு இருந்த மூவருடைய முகத்தையும் பார்த்தான்.. அவர்களது முகம் குழப்பத்தில் இருந்தது ..​

"கல்யாண மாப்பிள்ளை காணும். இது உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் சிதம்பரம் ?"
என்று தேவ் ஆனந்த் நேரடியாக சிதம்பரத்திடம் கேட்டு விட்டு அவரது முகத்தைப் பார்த்தான். அதில் அதிர்ந்தவர் அவன் சொன்னது உண்மை தானா என்று அறிவதற்காக வேதநாயகி சுதீப் இருவருடைய முகத்தையும் பார்த்தார். அவர்கள் இது வரை அவரிடம் சொல்லாமல் மறைத்ததால் அவருடைய முகம் பார்க்காமல் தலை குனிந்தவாறு நின்று இருந்தனர். அதிலேயே அவன் சொல்வது உண்மை தான் என்பதை உணர்ந்து கொண்ட சிதம்பரம் நேரடியாகவே அவனுடன் பேச ஆரம்பித்தார்.​

"உனக்கு என்னதான் வேணும். அபிமன்யு எங்கே? அவனை என்ன தான் பண்ண?"
என்றார் கோபமாக.
"ஐயோ என்ன சார் கேக்குறீங்க.. எனக்கும் அபிமன்யுவுக்கும் எந்த பகையும் இல்லையே.. அதனால அவரை பத்திரமா தான் ஒரு இடத்தில் வச்சிருக்கேன்.இப்போ எனக்கு உங்களால ஒரு காரியம் ஆகணும். அது முடிஞ்ச அப்புறம் அவர் உங்க கிட்ட பத்திரமா வந்து சேருவார்.."
என்ற தேவ் ஆனந்தை மற்ற மூவரும்
'என்ன தான் உனக்கு வேண்டும்? சொல்லித் தொலை' என்பது போல் கேள்வியாக பார்த்தனர்.​

அவர்களது பார்வையில் இருந்த கேள்வியை புரிந்து கொண்டவன் "இஷிக்காவை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுங்க .
அதுக்கு அப்புறம் உங்க அபிமன்யு உங்க கிட்ட வந்துருவார் ..சிம்பிள்.." என்று அவர்களுடைய தலையில் சத்தம் இன்றி இடியை இறக்கினான்.

"டேய்.. உன்னை உட்கார வச்சு பேசினா நீ உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போவியா.. இங்கே இருந்து வெளியே போறியா இல்லை கழுத்தை புடிச்சு வெளியே தள்ளவா?"
என்றார் சிதம்பரம் கோபமாக மரியாதையை கை விட்டவாறு. இருந்த இடத்திலிருந்து எழுந்த தேவ் ஆனந்த்
"மிஸ்டர் சிதம்பரம் கோபத்தில் ஒரு விஷயத்தை மறந்துட்டீங்களே.. உங்க ஆள் இன்னும் என் கஸ்டடியில் தான் இருக்கார். நீங்க போட்ற ஒவ்வொரு சத்தத்துக்கும் அவருக்கு தான் அடி விழுந்துகிட்டே இருக்கும்.. எப்படி வசதி?"
என்றவன் அபிமன்யுவை தனது ஆட்கள் சுற்றி இருக்கும் புகைப்படத்தை காட்டினான்..​

அபிமன்யுவை சுற்றி இருந்தவர்கள் தலையில் அதிக முடி ,கை மற்றும் கழுத்தில் சங்கிலி, நீண்ட நாட்களாக வளர்க்கப்பட்ட தாடி, பருமனான உடல் என்று பார்க்கவே பயங்கரமாக காட்சி அளித்தனர் ..
அதனை கண்ட வேதநாயகி பதறி விட்டார்.
எவ்வளவு தான் பணத்தாசை இருந்தாலும் அவனுடைய கையில் இருப்பது அவர் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகன் அல்லவா..​

" இப்போ உங்களுக்கு என்ன வேணும் ? என் பையனை விட்டுடுங்க.."
என்றவர் கண்கள் கலங்கி போயின ..
அவரை சிறு புன்னகையோடு பார்த்தவன்
" எனக்கு வேற என்ன வேணும். அதான் அப்பவே சொல்லிட்டேனே.. இஷிகாவை இங்க இப்போ உங்க எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணனும்.. அவ்வளவு தான்.. நீங்க கல்யாணம் பண்ணி தரலைன்னா அவளையும் தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவேன். அப்புறம் இந்த கல்யாணமும் நின்னுடும். அபிமன்யுவும் உங்களுக்கு கிடைக்க மாட்டார் .அதனால முறைப் படி கல்யாணம் பண்ணிக் கொடுங்க ..ப்ரோப்ளம் சால்வ்ட்.." என்றான் அமைதியாக..​

மற்ற மூவருக்கும் அவன் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.. எனவே அமைதியாக அவனுடைய கோரிக்கைக்கு சரி என தலையாட்டி வைத்தார்கள்.அதன் பிறகு அனைத்தும் அவன் நினைத்தபடியே நடந்து முடிந்தது..​

எல்லாவற்றையும் இஷிகா மற்றும் அர்னவ்விடம் சொல்லி முடித்தவன் "இப்போ அபிமன்யுவை அவங்க கிட்ட அனுப்பி வச்சாச்சு.. எனக்கும் அவருக்கும் தான் எந்த பிரச்சனையும் இல்லையே..சோ அவருக்கு ஒரு கீறல் கூட விழலை.. இப்போ எல்லாம் சுமூகமா முடிஞ்சிடுச்சு.."
என்றான் சோம்பல் முறித்தவாறு.​

அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து காரியத்தை முடித்து இருக்கிறான்.. இவனுடன் சென்று எப்படி வாதிடுவது ..
எனவே எதுவும் பேசாமல் அப்படியே சோபாவில் அமர்ந்து கொண்டாள் இஷிகா. அர்னவ்வும் ஒன்றும் பேசவில்லை.. நண்பனை முறைத்து விட்டு வெளியே சென்று விட்டான்..​

" போடா.. போ எப்படியும் திரும்பி இங்கே தானே வருவ ..அப்ப பார்த்துகிறேன்.." என்று சத்தமாக அர்னவ்விற்கு கேட்கும் படி கூறியவன் இஷிகா பக்கம் திரும்பி ஒரு அறையை கைநீட்டி காட்டி "அதோ அது தான் உன்னோட ரூம்.. அப்பறம் முக்கியமான விஷயம்.. அங்க கபோர்டுல உனக்கு தேவையான எல்லாம் இருக்கு. இப்போ போட்டுகிட்டு இருக்க டிரஸ் நகை எல்லாம் அப்படியே ஒரு பேக்ல போட்டு என்கிட்ட கொடுத்திடு. உங்க வீட்டுக்கு அதை பத்திரமா அனுப்பி வைக்கணும்..அது நமக்கு தேவை இல்லை.." என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.​

அனைத்தையும் கனகச்சிதமாக செய்து முடித்து விட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியும் விட்டு அவன் சென்று விட்டான் .
ஆனால் இஷிகா தான் அவன் மேல் கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்தாள்.
அவனை எதிர்த்து அவளால் பேச முடியாமல் எல்லாம் இல்லை. இப்போது அவனை எதிர்த்து வாதிடும் நிலையில் அவள் இல்லை அவ்வளவு தான்..
நிச்சயம் ஒருநாள் அவள் கேட்கும் கேள்விகளுக்கு அதன் பதில் கூறியே ஆக வேண்டும். அவளுக்கு யோசிக்க நேரம் தேவைப் பட்டது ..​

அவள்
மனதில் பல கேள்விகள் தோன்றிக் கொண்டே இருந்தன..
' இவனது முதல் மனைவி எங்கே? உயிருடன் தான் இருக்கிறாரா? இல்லையா? ஒருவேளை உயிருடன் இருந்து இவனை தேடி வந்து விட்டால்?
இவளைத்தான் தவறாக பேசுவாளா? இவள் எடுத்துக் கூறினால் கேட்கும் நிலையில் அவள் இருப்பாளா? தனது அக்கா தீப்தி பற்றியும் அவன் பேசினானே.. ஒருவேளை அவனுக்கும் தனது அக்கா காணாமல் போனதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?' என பல கேள்விகள்.​

மேலும் ' ஆதித்யா வந்து நீ ஏன் என் வீட்டில் என் அம்மாவின் இடத்தில் இருக்கிறாய்?' என்று கேட்டு விட்டால் எப்படி அவனுக்கு பதில் கூறுவாள் அவள்..
பதில் தெரியாத கேள்விகள் பல.. எல்லாவற்றிற்கும் அவன் தான் காரணம்.. அவன் மேல் தான் கோபம் பெருகிக் கொண்டே போனது இஷிகாவிற்கு..​

' பேசாமல் அவனைக் கொன்றால் தான் என்ன?'
என்று கூட தோன்றியது அந்த பேதை பெண்ணுக்கு.
அங்கிருந்து எழுந்து அவன் காட்டிய அறைக்குள் சென்றவள் திகைத்துப் போனாள்.
அவளுக்கு தேவையான அணைத்தும் அந்த அறையில் இருந்தன. அவள் அணியும் அதே வகையான ஆடைகள், அதுவும் அவளுடைய அளவில் சரியாகவே இருந்தன .
"இவனை ..."
என அவளால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது..​

எவ்வளவு தூரம் அவன் இந்த திருமணத்தை நிறுத்தி அவளை இந்த வீட்டுக்கு அழைத்து வர திட்டம் தீட்டியிருக்கிறான் என்று நினைத்தாலே அவளுக்கு தலைவலி அதிகமானதே தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.. அதற்கு மேல் எதுவும் சிந்திக்காமல் அதில் இருந்து ஒரு ஆடையை எடுத்து அணிந்து விட்டு அப்படியே தூங்கிப் போனாள் பெண் அவள். இப்போது அவளுக்கு தேவை அமைதியான ஒரு தூக்கம் மட்டுமே..தூக்கி எழுந்தால் மனது சற்று நிம்மதி அடையலாம் என்று தோன்ற தூங்கிப் போனாள் இஷிகா.​

தொடரும்...​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 10​

இஷிகாவிற்கும் தேவ் ஆனந்திற்கும் திருமணம் முடிந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது..​

அந்த வீட்டில் முக்கியமான ஒரு ஆளாகவே மாறி விட்டாள்​

அவள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த போதும் போகப்போக பழகி விட்டது அந்த சூழல் அவளுக்கு. அதற்கு முக்கிய காரணம் ஆதித்யா என்ற அந்த குழந்தை தான். அவனுக்கு இவள் அந்த வீட்டில் இருப்பதே மிகப் பெரிய சந்தோஷம் .சிறு பிள்ளை அல்லவா... அவள் யார் என்றெல்லாம் அவன் ஆராயவில்லை.​

' சித்தி' என்று தேவ் ஆனந்த் அவனுக்கு அறிமுகப் படுத்தி வைக்க அன்றிலிருந்து அவள் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான் குட்டி ஆதித்யா. முன்னமே இருவரும் அறிமுகமாகி இருப்பதால் எந்த சிரமமும் இன்றி அவர்கள் இருவரும் ஒட்டிக்கொண்டனர். அவனுக்கு தாய் இல்லை என்ற குறை நீங்கிவிட அவளுடன் தனது நேரத்தை இனிமையாக கடத்லினான் அவன்.​

என்ன இருந்த போதும் தேவ் ஆனந்தை கண்டால் மட்டும் இஷிக்காவின் இரத்தம் கொதித்து எழும்.​

அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கும் தன்னை நினைத்து வெட்கமாக இருக்கும் அவளுக்கு. அவனைக் கண்டால் தன்னால் முடிந்த மட்டும் அவனை முறைத்து விட்டே நகர்ந்து செல்வாள் பெண்ணவள். அவனும் அவளை கண்டு கொள்வதே இல்லை.​

திருமணத்தன்று அவளுடன் பேசியதோடு சரி. அதற்கு மேல் அவன் தேவைக்கு கூட அவளுடன் பேசவில்லை. அவளிடம் எந்த தேவையும் அவனுக்கு இல்லை என்பதால் தான் இது சாத்தியம் ஆயிற்று..​

மேலும் ஆதித்யா அவளுடனே ஒட்டிக் கொண்டு திரிவதால் ஆதித்யாவை கவனிக்கும் வேலையும் அவனுக்கு இல்லை. எனவே குதூகலமாக தனது நாட்களை கடத்திக் கொண்டு இருந்தான் தேவ் ஆனந்த்.​

ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அர்னவ் தேவ் ஆனந்தின் வீட்டுக்கு வந்து ஆதித்யாவை பார்த்து விட்டு செல்வான்.ஆனால் இன்னும் தேவ் ஆனந்துடன் அவன் பேசவில்லை. தோழன் தன்னிடம் கூறாமல் இவ்வளவு பெரிய காரியத்தை செய்து விட்டானே என்ற கவலை அவனுக்கு. அர்னவ் பேசாதது மட்டுமே தேவ் ஆனந்துக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை. தோழனுடன் பேசுவதற்கு அவன் எவ்வளவு முயற்சி செய்த போதும் அர்னவ் பிடி கொடுக்கவில்லை. எனவே தேவ் ஆனந்தும் அதிகம் வற்புறுத்தாது அவன் போக்கிலேயே சென்று அவனை எப்படியாவது பேச வைக்கலாம் என நினைத்து அமைதியாக இருந்து கொண்டான்.​

எப்போதும் போல் இன்றும் இஷிகா ஆதித்யாவை தயார் செய்து தேவ் ஆனந்துடன் அனுப்பி விட்டு தானும் கிளம்பி வேலைக்கு சென்றாள். அந்த அலுவலகமே அவளுக்கு வெறுமையாக காட்சியளிப்பது போல் ஒரு உணர்வு.. காரணம் அவளுடைய நெருங்கிய தோழன் சுதீப் இப்போது அவளுடன் இல்லை. அவருடைய திருமணத்திற்கு பிறகு அவன் இங்கு வேலையை விட்டுவிட்டு தனது சொந்த கம்பெனியில் உள்ள வேலைகளை கவனித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான் ..​

அது ஒரு வகையில் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்த போதும் மனதின் ஓரம் சிறு கவலையும் இருக்கத் தான் செய்தது. தன்னுடனே நிழல் போல சுற்றிக் கொண்டு இருந்தவன் இப்போது தன்னுடன் இல்லை என்பது அவளுக்கு வேதனை தான். எப்போதும் போல் அவன் அவளுடன் பேசினாலாவது மனதுக்கு சிறு ஆறுதலாக இருக்கும். ஆனால் அவன் பேசுவதும் இல்லை.. அவளுக்காக நேரம் செலவிடுவதுமில்லை.​

இவளாக அவனுக்கு அழைத்தால் தான் உண்டு.. அப்படி அழைத்தாலும் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு​

' எனக்கு வேலை இருக்கிறது. பிறகு பேசுகிறேன்' எனக் கூறி அழைப்பை துண்டித்து விடுவான் சுதீப்.​

பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டவள் அலுவலகத்தில் உள்ளே நுழைந்தாள். அவளது வருகைக்காகவே காத்திருந்தது போல மேனேஜர் அவளை அழைத்து அவளுடைய வேலை பற்றி விசாரித்தார். அவளுடைய திருமணத்தாலும் அவளுக்கு இருந்த மன உளைச்சலாலும் அவளுடைய வேலைகளை கூட அவளால் சரியாக கவனிக்க முடியவில்லை.​

" சாரி சார் என்னால சரியான டைம்ல வேலையை முடிக்க முடியல. இந்த கிழமைக்குள்ள முடிச்சு கொடுத்திடுவேன்.. என்னை நம்புங்க.."​

என்று அவரிடம் மன்னிப்பு கேட்டவள் வேலையை முடித்து தருவதாக வாக்குறுதியும் அளித்தாள்.​

அவள் எப்போதும் தனது வேலையை கனகச்சிதமாக முடிப்பதால் அவரும் எதுவும் கூறாது சரி என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.​

அங்கிருந்து வெளியே வந்த இஷிகா தான் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை மனதுக்குள் குறித்துக் கொண்டாள்.​

பாதியில் விட்ட வேலையான மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய தகவல்களை சேகரிக்கும் வேலையை தொடர எண்ணி அன்னை தெரேசா மனநிலை காப்பகம் நோக்கி அன்று மாலை நேரம் சென்றாள்.​

அங்கு தனக்கு இருந்த வேலைகளை முடித்தவள் வெளியே வரும் போது தேவ் ஆனந்த் உள்ளே வருவதை கண்டாள் இஷிகா .​

அவன் கண்ணில் படாமல் மறைந்து நின்றவளுக்கு அன்றும் அவனை இங்கு கண்ட நினைவு வந்து சென்றது.​

' இந்த மனுஷன் எங்க என்ன பண்றார் ?​

அன்னைக்கும் இருந்தாரே.. இங்கு அடிக்கடி வருவார் போல ..இதை இப்படி விடக்கூடாது.. கண்டுபிடிச்சே ஆகணும் ..'​

என்று தனக்குள் பேசிக் கொண்டவள் அவன் கவனத்தை ஈர்க்காமல் அவனது பின்னே அவனைத் தொடர்ந்து சென்றாள்.​

அவனும் ஒரு அறை முன் நின்று அங்கு இருந்து வெளியே வந்த ஒரு செவிலி பெண்ணிடம் சிறிது நேரம் பேசினான் .​

அப்படி அவன் என்ன தான் பேசுகிறான் என்று கேட்கலாம் என பார்த்தாலும் அவளுக்கும் அவனுக்கும் இருந்த இடைவெளி அதற்கு ஒத்துழைக்கவில்லை. "ச்சே..ஒன்னுமே கேட்க மாட்டேங்குது.. என்ன தான் பேசுறாங்களோ.."​

என கோபத்தில் கூறியவள் அவனை விட்டு பார்வையை அகற்றவில்லை ..​

தேவ் ஆனந்த் அந்த செவிலி பெண்ணுடன் பேசி விட்டு அறை கதவை திறந்து உள்ளே சென்று விட்டான்.​

வேகமாக சென்று அறை வாயிலில் நின்று கொண்டாள் இஷிகா.​

தன்னை யாராவது பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு கதவில் காதை வைத்து உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்டாள்.​

"ம்ஹூம்.. எதுவுமே கேட்கல.." என புலம்பியவள் மெல்ல கதவை திறந்து உள்ளே பார்த்தாள்.​

அவளது நல்ல நேரமோ என்னவோ அவன் முதுகுப்புறம் தான் கதவின் பக்கம் இருந்தது.​

கதவு திறந்த சத்தமும் அவனுக்கு கேட்காத காரணத்தால் அவன் இவளை கவனிக்கவில்லை. தலைமுடியை விரித்து போட்டு ஒரு பெண் கட்டிலில் இருப்பது அவளுக்கு தெரிந்தது. ஆனால் முகம் தான் சரியாக தெரியவில்லை. முடியும் முகத்தை மறைத்ததாலும் தூரத்தில் இருப்பதாலும் முகம் தெளிவாக தெரியவில்லை அவளுக்கு. அதற்கு மேல் அவள் ஆராயவும் இல்லை..​

இவனுக்கு இந்த பெண் என்ன உறவாக இருக்கும் என்பதே அவளுள் தோன்றிய கேள்வி.​

" நீ இப்படியே தான் இருக்க போறியா? குணமாகி எங்ககிட்ட வரணும்னு உனக்கு ஐடியாவே இல்லையா?"​

என்று தேவ் ஆனந்த் பேசியது அவளுக்கு நன்றாகவே கேட்டது.​

" ஹையா... இப்போ நல்லா கேக்குது.." என்று முணுமுணுத்தவள் அவன் மேலும் என்ன பேசுகிறான் என்று கேட்க தனது காதை தீட்டிக் கொண்டாள்.​

"இது யாரா இருக்கும்? அவர் பொண்டாட்டியா இருக்குமோ? ஐயோ அவ பொண்டாட்டினா அப்போ நான் யார்? அந்த பொண்ணு குணமாகி வந்துட்டா என்னோட நிலைமை என்ன? கடவுளே..! ரெண்டு பொண்டாட்டியும் ஒரே வீட்டில் இருந்தா கேவலமா இருக்குமே.. ஊர் உலகம் எங்களை பற்றி என்ன பேசும்? அதை விட கன்றாவி என்னன்ன ரெண்டு பேரையுமே இந்த மனுஷன் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணாருன்னா.. ச்சீ ச்சீ கற்பனையே இவ்வளோ கேவலமா இருக்கு.. விடக்கூடாது ஒன்னு அவ இருக்கணும், இல்லை அந்த வீட்டில நான் இருக்கணும்..ம்.. ஐடியா எனக்குத் தான் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையே. பேசாமல் இதுதான் தருணம்னு டைவர்ஸ் வாங்கிட்டு நாம வெளியே போகலாம்.. கரெக்ட். இது தான் சூப்பர் ஐடியா." என பைத்தியம் போல ஏதேதோ பேசி தனக்குள் திட்டமும் தீட்டிக் கொண்டாள் இஷிகா.​

இவள் இப்படி புலம்புவதை அங்குள்ள யாராவது கண்டிருந்தால் ஏதோ ஒரு பைத்தியம் தான் பாதுகாப்பையும் மீறி அறையில் இருந்து வெளியே வந்து விட்டது என நினைத்து மீண்டும் ஒரு அறையில் அடைத்து விடுவார்கள்..அவளது நல்ல நேரம் அப்படி அவள் புலம்பியதை யாரும் கேட்கவில்லை.​

தேவ் ஆனந்த் மீண்டும் பேச இவளது கற்பனை இடையில் நின்றது.​

"ஆதித்யா , அர்னவ் , நான் எல்லோருமே உன்னோட வருகைக்காக தான் காத்துகிட்டு இருக்கோம். டாக்டர் கூட சொல்லிட்டார் உனக்கு சீக்கிரமே குணமாகிடும் என்று.. அதுக்கு நீயும் ஒத்துழைக்கணும் இல்லையா?"​

என அவன் தீப்தியிடம் பேச எப்போதும் போல் அவளிடம் எந்த பதிலும் இல்லை..​

இன்று அவள் தலையைக்கூட உயர்த்தி அவனை பார்க்கவில்லை. அப்படி அவள் பார்த்து இருந்தாலாவது அது தனது அக்கா தான் என்பதை கண்டிருப்பாள் இஷிகா.​

அக்கா தங்கை இருவரும் சந்திக்க இன்னும் சரியான நேரத்தை கடவுள் அமைக்கவில்லை போலும். ஆகையால் இஷிகா அது தீப்தி தான் என்பதை அறியவில்லை.​

"நீ பேசமாட்ட.. இருந்தாலும் நான் பேசுறேன்.. நீ கேட்டுகிட்டு இருக்க.. அதுவே எனக்கு போதும் ..​

இஷிகா நம்ம வீட்ல நல்லாவே பொருந்தி போயிட்டா.. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை தெரியுமா? அவளோட வாய்க்கு கல்யாணம் ஆகி இரண்டாவது நாள்ல என்னை விட்டுட்டு போயிடுவான்னு நினைச்சேன்.ஆனா அவள் அப்படி போகல ..​

ஆதித்யா கூட அவள்னா உயிரையே கொடுக்குற அளவுக்கு பாசம் வெச்சிருக்கான். அவளும் அப்படித் தான். என்னை கண்டுக்கலனாலும் பையன் மேல பாசமா தான் இருக்கா. ஆனா ஒன்னு ஆதித்யாவுக்கு அவளை சித்தி னு தான் அறிமுகப்படுத்தி வச்சிருக்கேன் ..​

ஏன்னா நீ தானே அவனுக்கு அம்மா. நீ திரும்பி வந்த அப்புறம் எந்த குழப்பமுமே வரக்கூடாது. அதுக்காகத் தான் ..​

அவ சித்தி தான், நீதான் அவனோட அம்மானு அவனுக்கு புரியணும் .. அப்போ எந்தவித பிராப்ளமும் வராது.."​

என்று நீளமாகவே பேசினான் தேவ் ஆனந்த்.​

இதை வெளியே நின்று கேட்டுக் கொண்டே இருந்த இஷிகாவிற்கு தான் ஏதோ போல இருந்தது. மேலும் அவன் முன்னே இருப்பது அவன் மனைவி தான் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்தது. தேவ் ஆனந்த் தன்னை பற்றி என்ன பேச போகிறான் என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அவன் கடைசியாக கூறிய ஆதித்யாவிற்கு இவள் சித்தி தான் என்ற வசனம் ஏதோ மனதை பாரமாக்கியது.​

ஆதித்யா என்றால் கொள்ளை பிரியும் இஷிக்காவிற்கு. ஒரு தாய் போல் தான் அவனைப் பார்த்துக் கொள்கிறாள் அவள்.. இந்த ஒரு மாத காலமாக அவனுடன் பழகிய நாட்கள் அவள் கண் முன்னே தோன்றி மறைந்தன. அவளது கண்களில் கண்ணீர் நிரம்பி போயிற்று.​

அவளுக்கு நன்றாகவே தெரியும் அவள் ஆதித்யாவிற்கு சித்தி தான் என்று .​

ஆனால் அதை தேவ் ஆனந்தின் வாயால் கேட்கும் போது தான் வேதனையாக இருந்தது ..​

இதில் வேறு ஆதித்யாவின் தாய் உயிருடன் இருக்கிறாள். அவள் வந்து விட்டால் ஆதித்யாவை இவளிடம் இருந்து பிரித்து விடுவாள் அல்லவா.. அதை நினைக்கும் போதே மனதுக்குள் ஏதோ செய்தது இஷிக்காவிற்கு. அது ஒரு புறம் என்றால் முதல் மனைவி இருக்கும் போது தேவ் ஆனந்த் இவளது தாலி கட்டி இருக்கிறான்.. தனது தந்தை மேல் இருக்கும் கோபத்தில் என்றாலும் இவளது வாழ்க்கையில் அவன் விளையாடியது மாபெரும் குற்றம் அல்லவா..​

தேவ் ஆனந்த் மீது கோபம்.. ஆதித்யா தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்ற பயம்... அவனது முதல் மனைவியின் இன்றைய நிலையை நினைத்து கவலை... என அனைத்தும் சேர்ந்து அவளை சோர்வடைய செய்தது. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் கனத்த மனதுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் இஷிகா.. இன்று இனிமையாக ஆரம்பித்த அவளுடைய பொழுது இப்படி மாறிப் போகும் என அவள் சிறிதும் நினைத்து இருக்கவில்லை..​

இதற்கு மேல் அவளுடைய வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பது அவளுக்கு தெரியவும் இல்லை..​

தொடரும்...​



 

Mafa97

Moderator

அத்தியாயம் 11​

பாரமேறிய மனதுடன் வீட்டுக்கு வந்த இஷிகா தனது அறையில் அடைந்து கொண்டாள். பள்ளி முடிந்து வந்த ஆதித்யா அவளை தேடி அறைக்கே சென்று விட்டான்.
"சித்தி உங்களை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? நீங்க இங்க இருக்கீங்களா?"
என்று கேட்டவாறு வந்தவன் கட்டிலில் அமர்ந்து யோசனை செய்து கொண்டிருந்த இஷிக்காவின் கைகளை பிடித்துக் கொண்டான் ..
அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவனையும் அவன் பிடித்திருந்த தனது கைகளையும் மாறி மாறி பார்த்தாள் இஷிகா.​

இனிமேல் இந்த ஆதித்யா அவளுக்கு சொந்தமில்லை. அவனுடைய அன்னை உயிருடன் தான் இருக்கிறாள். இன்றோ நாளையோ அவள் வந்து குழந்தையை இஷிகாவிடம் இருந்து பிரித்து விடக் கூடும். ஆதித்யாவை பிரிய வேண்டும் என்ற செய்தி அவளை கொல்லாமல் கொன்றது.​

இஷிகாவின் செய்கையை புரியாமல் பார்த்த ஆதித்யாவோ "என்ன சித்தி எதுவும் பேசாம என்னையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"
என்றான் கேள்வியாக. எப்போதும் தன்னை கண்டவுடன் சிரித்து பேசுபவள் இன்று இப்படி அமைதியாக இருப்பதை கண்டவன் என்னவென்று தெரிந்து கொள்ளவே அவ்வாறு கேட்டான். அதில் சுய உணர்வு பெற்றவள் உடனே அவனை சமாளிக்கும் விதமாக "சித்திக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு கண்ணா. நீங்க போய் விளையாடுறீங்களா?" என்று பொய் கூறினாள்.
அவள் கூறியது உண்மை தான் என்று நம்பிய அந்த சிறு பிள்ளை "அச்சோ தலைவலியா? மாத்திரை போட்டிங்களா ?
நான் தலையை பிடிச்சு விடட்டா? உங்க தலைவலி குறைஞ்சிடும்.." என்றான் பெரிய மனிதன் போல்.

அவன் அப்படி அக்கறையாக கேட்டதும் இஷிகாவிற்கு அழுகையே வந்து விட்டது. இவனையா அவள் விட்டுச் செல்ல வேண்டும் ?.
அவளுடைய கண்களில் கண்ணீரைக் கண்ட ஆதித்யா "ஐயோ ஏன் அழுவுறீங்க ?
ரொம்ப வலிக்குதா?"
என்றான் மீண்டும் அதே அக்கறையுடன் ..​

"இல்லைடா கண்ணா.. எல்லாம் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்.. சித்தி தூங்கி எழுந்துக்கவா? நீங்க போய் விளையாடுறீங்களா?"
என கேட்டிட இவனும்
" சரி சித்தி நல்லா தூங்குங்க .."
என்றவன் வெளியே சென்று விட்டான் ..​

அவன் வெளியேறியதும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் வெளியேறியது இஷிகாவிற்கு.. இவன் இன்னொருவரின் குழந்தை என்பதை தாண்டி அவனுக்கும் அவளுக்கும் ஒரு இனம் புரியாத பந்தம் உருவாகி விட்டது ..அது எப்படி என்று தான் அவளுக்கு தெரியவில்லை ..அழுதவாரே தன்னை அறியாமல் தூங்கிப் போனாள் இஷிகா.​

அன்று தேவ் ஆனந்த் வீட்டிற்கு வர சற்று தாமதமாகி விட்டது. இப்போதெல்லாம் அவன் தனது வேலைகளை முடித்து விட்டு நிம்மதியாகவே வீடு வந்து சேர்வான்.
காரணம் ஆதித்யாவை பார்த்துக் கொள்ள இஷிகா என்ற ஜீவன் இருக்கிறாள் என்ற நம்பிக்கை தான்.
அவன் வீட்டிற்குள் நுழையும் போது எப்போதும் இஷிகா ஆதித்யா இருவருடைய சிரிப்பும் பேச்சு சத்தமும் தான் அவன் காதுகளில் கேட்கும் .
ஆனால் இன்று அவன் காதுகளுக்கு இருவருடைய சத்தமும் கேட்கவில்லை..​

தனது கண்களால் சுற்றி இருவரையும் தான் தேடினான். அவன்
கண்களுக்கு அவர்கள் தென்படவில்லை .
" எங்கே போனாங்க இரண்டு பேரும் ?
எப்பவும் கேட்கிற சத்தம் இன்னைக்கு கேட்கலையே.. ஒருவேளை வெளியே போய் இருப்பாங்களா ?
ஆனா ஆதிகுட்டி என்கிட்ட சொல்லாம எங்கேயும் போகமாட்டானே ..."
என்று அவனுடைய எண்ணம் எங்கெங்கோ சென்றது..​

' உள்ளே சென்று பார்க்கலாம்'என நினைத்து சென்றவனுடைய கண்களுக்கு பட்டது என்னவோ தனியாக அமர்ந்து இரு கண்ணத்திலும் கைகளை வைத்து யோசனை செய்து கொண்டிருந்த ஆதித்யா தான். அடுத்து அவனது கண்கள் தேடியது அவளைத் தான்.
ஆனால் அவள் இல்லை அந்த இடத்தில் .
சமையலறை வாயிலில் வேலைக்கார பெண்மணி கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தார் .
"என்ன ஆச்சு?
நீங்க இன்னும் போகலையா?"
என அவரிடம் தேவ் ஆனந்த் கேட்டான். காரணம் அவர் வேலைகளை இந்த நேரத்திற்கெல்லாம் முடித்துவிட்டு சென்று விடுவது வழக்கம்..​

" அது வந்து சார் .இஷிகாம்மா மேலே இருக்காங்க..தம்பி தனியா இருக்கான்னு காவலுக்கு இருந்தேன்.."
என்றார் கோர்வையாக அவர்.
" சரி நீங்க போகலாம்.." என்று அவன் கூறியதும் சென்று விட்டார்.

தந்தை வந்து இவ்வளவு பேசியும் கூட ஆதித்யா தனது நிலையில் இருந்து மாறவில்லை .அவன் அருகே சென்றவன்
"ஆதி குட்டி என்ன இப்படி யோசிக்கிறீங்க பெரிய மனுஷன் போல ?"
என்றான் அவனது தலையை தடவியவாறு ..​

"ம.சித்திக்கு தலைவலியாம்.. பாவம் அவங்க.. பார்க்கவே கஷ்டமா இருக்கு.. அழுதாங்க தெரியுமா?"
என்றான் அந்த சிறு பிள்ளை கவலையோடு.
" அழுதாங்களா ?"
என்று கேட்டான் தேவ் ஆனந்த் மீண்டும் யோசனையோடு..​

"ஆமாப்பா .. அவங்க முகம் சிவந்து வீங்கி இருந்துச்சு.. என் முன்னாடி தான் அழுதாங்க.. பாவம் .."
என்றான் குழந்தையும்.
'ஒரு சின்ன தலைவலிக்கு அழுவாளா? பார்க்க என்னமோ பெரிய ஆளாட்டம் இருக்கா.. வாயும் இருக்கு.. இதுக்கெல்லாமா அழுவா? அப்படி இல்லைனா வேற ஏதாச்சும் இருக்குமோ? விசாரிப்போம் .."
என தனக்குள் பேசிக் கொண்டவன் முதலில் சோகமாக இருக்கும் மகனை வழிக்கு கொண்டு வந்தான். சித்தியின் நிலை மறந்து தந்தையுடன் சிரித்து விளையாடி மகிழ்ந்தான் ஆதித்யா குட்டி..​

இரவு உணவின் போதும் இஷிகா கீழே வரவில்லை.
எனவே ஆதித்யாவிற்கு உணவை ஊட்டி விட்டு இன்று தன்னுடனே தூங்க வைத்தான் தேவ் ஆனந்த்.
இஷிகா இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளுடன் தான் ஆதித்யா இரவில் தூங்குவான். இன்று அவளை தொந்தரவு செய்யாமல் சமத்தாக தந்தையுடன் இருந்து கொண்டான் அவன்.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் தாமதமாகவே எழுந்து கொண்டனர் தந்தை மகன் இருவரும். எழுந்ததிலிருந்து தேவ் ஆனந்திற்கு இஷிக்காவின் எண்ணம் தான் ..
எனவே வேக வேகமாக தனது வேலைகளை முடித்தவன் மகனையும் தயார் படுத்தி கீழே அழைத்து வந்தான்.
வீடு முழுவதும் இஷிகாவை தான் தேடினான்.
அவனது தேடலுக்கு விடையாக ஹாலில் உள்ள சோபாவில் தான் அவளும் அமர்ந்திருந்தாள். அவளது முகம் என்னவோ இன்னும் யோசனையில் தான் இருந்தது.​

" சித்தி.." என்ற கூவலோடு அவளை கண்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டான் ஆதித்யா. அவனை பதிலுக்கு அனைத்தவள் நெற்றியில் முத்தமிட்டாள்.​

வாகாக அவளது மடியில் அமர்ந்து நேற்று சொல்லாமல் விட்ட கதைகளை அவளிடம் கூறிக்கொண்டு இருந்தான் ஆதித்யா.
இஷிகா அவனுடைய கதைகளை கேட்டாளா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் "ம்..ம்.." மட்டும் சொல்ல மறக்கவில்லை அவள்.​

தேவ் ஆனந்தின் போலீஸ் கண்களுக்கா அவளுடைய நிலை தெரியாமல் போகும். கதை கேட்பது போல் அவளுடைய பாவனை இருந்தாலும் அவளது எண்ணம் இங்கில்லை என்பதை கண்டு கொண்டான் அந்த போலீஸ்காரன். அதனை தனக்குள் குறித்துக் கொண்டவன் அங்கிருந்து அகன்று விட்டான்..​

வழமை போல ஆதித்யாவை பார்க்க வீட்டிற்கு வந்த அர்னவ் தேவ் ஆனந்திடம் பேசாது அவனை முறைத்து விட்டு சென்றான்.. இன்று வீட்டில் வைத்து ஆதித்யாவுடன் பேசாமல் அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் ..
இதுதான் சரியான சந்தர்ப்பம் என எண்ணியவன் மனதுக்குள் நண்பனுக்கு நன்றி தெரிவித்து விட்டு இஷிகாவை தேடிச் சென்றான் ..​

அவன் வந்ததை கூட அறியாது தனது சிந்தனையில் மூழ்கி இருந்தாள் பெண்ணவள்..
"ம்க்கும்.."
என தொண்டையை செருமி அவளுடைய மோனநிலையை களைத்தான் தேவ் ஆனந்த்.
ஒரு நொடி தலையை உயர்த்தி அவனுடைய முகத்தை பார்த்தவள் மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.​

அதில் பல்லை கடித்தவன் அவள் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அவளையை தான் பார்த்திருந்தான். இருவரும் வீட்டிற்கு வெளியே இருக்கும் சிறு தோட்டத்தில் அமர்ந்திருந்தனர். காற்று வீசும் போதெல்லாம் அவளுடைய விரித்து போடப்பட்டிருந்த கூந்தல் காற்றின் திசைக்கு ஏற்ப ஆடி அசைந்து.. சிறு முடிக்கற்றைகள் அவளுடைய முகத்தில் விழுந்து அதன் அழகை மறைத்தன..​

அதை ஒதுக்கி விட அவனுடைய கைகள் பரபரத்த போதும் அவனை அப்படி செய்ய விடாமல் அவனுடைய மூளை எச்சரிக்கை செய்தது ..
அதனை கேட்டு அமைதியாக அவளை பார்க்கும் வேலையை மட்டும் செய்தான் அவன். தேவ் ஆனந்த் நீண்ட நேரமாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை அவதானித்த இஷிகாவிற்கு கோபம் தான் வந்தது..​

"ச்சே.. ஏன் இப்படி பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?"
என்று சற்றே குரலை உயர்த்தி கேட்டாள் இஷிகா.
"ம்‌ நீ தான் வேணும்.. கேட்டா கொடுத்துடுவியா என்ன?".. சற்று நக்கலாகவே பதிலளித்தான் தேவ் ஆனந்த்.
"என்ன?
என்ன சொன்னீங்க?"
என மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்க
"என்னம்மா உனக்கு காது கேட்காதா? எல்லாம் ஒரு தடவை தான் சொல்ல முடியும்.." என்றான் வீம்பாக..​

அவன் தன்னிடம் வம்பு வளர்க்கவே வந்திருக்கிறான் என புரிந்து கொண்டு அமைதியாகி விட்டாள் இஷிகா.
அவனோ மேலும் விடாது
"ம் சொல்லு ஏன் ஒரு மாதிரியா இருக்க? ஆதித்யா கூடவும் ஒழுங்கா பேசல நீ ..
ஏன் ..என்ன ஆச்சு?"
என்றான் கேள்வியாக.​

ஆதித்யாவின் பெயரை கேட்டதும் மீண்டும் அவள் கண்கள் கலங்கி விட்டன .
அதை அவதானித்தவன் ஏதோ பேச வாயெடுக்கும் முன்னமே அவள் பேசினாள்.​

"நான ஏன் ஆதித்யா கூட ஒழுங்கா பேசணும்?
அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?"
என அவனுக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே கேள்வி கேட்டாள்..
தேவ் ஆனந்திற்கும் ஏதோ யோசனை தோன்ற
"புரியலை.. என்ன சம்பந்தம்னு கேட்டால்?"
என்றான் புரியாததை போல்..​

"நீங்க தானே என் கழுத்துல தாலி கட்டுனீங்க ?
அதுவும் என் இஷ்டம் இல்லாம.. அப்படி இருக்க நான் ஏன் உங்க பையனை பார்த்துக்கணும்? அவன் கூட பேசணும்? எனக்கு இஷ்டம் இல்லை..
நீங்களே புரிஞ்சு உங்க பையனை என்கிட்ட இருந்து பிரிச்சு வைங்க.. இல்லைனா நானே அவனை என்கிட்டே இருந்து பரிக்க வேண்டி இருக்கும் .." என்றாள் மனதை கல்லாக்கிக் கொண்டு ..​

அவளை பற்றியா தேவ் ஆனந்திற்கு தெரியாது.. அவளுக்கும் ஆதித்யா விற்கும் இடையில் இருக்கும் அந்த உறவு எப்படி பட்டது என்பது அவன் அறிந்ததே.. இவ்வாறு இருக்கும் போது ஏன் இவள் இப்படி பேசுகிறாள் என்பது தான் அவனை யோசிக்க வைத்தது..​

அவளது வாயில் இருந்து வரவழைக்க நினைத்தவன்
"நீ என் ஃவைப்..அவன் என் பையன் ..அவனை பார்த்துக்குறது உன்னோட கடமை தானே ..
நீ தானே நல்லபடியா பாத்துக்கணும்.. அம்மா இல்லாத பையன் வேற.."
என அவன் மேலும் பேசப்போக "போதும்.."
என்ற படி எழுந்து நின்றாள் இஷிகா.​

அவனோ அமைதியாக அவளைத் தான் பார்த்திருந்தான்.
"போதும் இதுக்கு மேலயும் பொய் சொல்லாதீங்க ..அவனுக்கு ஏன் அம்மா இல்லை.?
அவன்கிட்ட சொல்லுங்க உன்னோட அம்மா மனநலம் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்கனு..
அவனும் தெரிஞ்சுக்கணும் தானே தன்னோட அப்பா எப்படிப் பட்டவர்னு.. அம்மா பைத்தியமானதும் அவங்களை விட்டுட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்காங்கனு..ச்சே உலகத்துல உள்ள எல்லா ஆம்பளைங்களும் இப்படித் தான்..முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது என்னை கல்யாணம் பண்ணி இருக்கீங்க.. வெக்கமா இல்ல உங்களுக்கு..? என்னை விடுங்க..பாவம் தானே அந்த பொண்ணு..ஏன் அவங்க பைத்தியம்ன்றதால உங்களோட ஆசைகளை நிறைவேத்திக்க முடியலையா?..."
என அவள் பேசி முடிக்கவில்லை பளார் என்று கன்னத்தில் அறைந்திருந்தான்.​

" இதுக்கு மேல பேசின தொலைச்சிடுவேன் ..."
என்று அவளை கை நீட்டி எச்சரித்தவன் விறுவிறுவென அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான் ..போகும் அவனை கன்னத்தில் கைவைத்த படி பார்த்துக் கொண்டிருந்தாள் இஷிகா...​

தொடரும்..​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 12​

இஷிகா அவன் அடித்துவிட்டு சென்ற பிறகும் அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தாள். அவன் ஏன் அவளை அடித்தான் என்பது கூட அவளுக்கு தெரியாது. உள்ளே சென்ற தேவ் ஆனந்த் அதே வேகத்தில் திரும்பி வந்து காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.. அவள் ஒருத்தி அங்கு இருப்பதை அவன் கண்டு கொள்ளவே இல்லை.. அவளுக்கு அவன் மேல் இன்னும் கோபம் தான் கூடிக் கொண்டே சென்றது. அவளை அடிக்க அவனுக்கு என்னை உரிமை இருக்கின்றது? கோபத்தில் அதே இடத்தில் இருந்து கொண்டாள் அவள்..​

சிறிது நேரத்தில் ஆதித்யாவையும் அழைத்து கொண்டு வந்து விட்டான் அர்னவ்.
ஆனால் இன்னும் தேவ் ஆனந்த் வீட்டுக்கு வந்த பாடில்லை. ஆதித்யா இஷிகா இருவரும் இரவு உணவையும் முடித்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது உள்ளே வந்தான் தேவ் ஆனந்த். அவன் மட்டும் வரவில்லை.
உடன் ஒரு பெண்ணும் வந்திருந்தாள்.
'யார் இவள் ?'
என்ற கேள்வி மனதில் தோன்ற அவள் அருகே இருக்கும் பெண்ணை உற்று நோக்கினாள். அந்த பெண்ணை பார்த்தவளுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்து போயின. அவளை அறியாமலே அவளுடைய உதடுகள்
" அக்கா.."
என்று முனுமுனுத்தன ..​

அவளது சத்தத்தில் வாசல் பக்கம் பார்த்த ஆதித்யாவும் அதிர்ந்து விட்டான். அவன் புகைப்படத்தை மட்டுமே பார்த்த அந்த முகம். 'இதுதான் உன் அம்மா' என தேவ் ஆனந்த் கூறிய போது
'ரொம்ப அழகா இருக்காங்க' என அவன் கூறியதும் அவனுடைய நினைவில் வந்து போனது. 'இத்தனை நாள் இல்லாத தாய் என்று எப்படி?' என தோன்றிய போதும் அன்னையை நேரில் கண்ட சந்தோஷத்தில்
"அம்மா ..என் அம்மா ."
என சொல்லிக் கொண்டு ஓடினான் அந்த சிறுவன்.
அவன் என் அம்மா என்று சொன்னதை கேட்ட இஷிகாவின் தலையில் இடியே விழுந்த உணர்வு ..​

"அம்மாவா?"
என்று முனுமுனுத்தவள் எழுந்து நின்றாள்.. அப்படியானால் அவள் நேற்று பார்த்தது அவளுடைய அக்காவையா? ஆதித்யாவின் தாய் அவளுடைய அக்கா என்றால் அக்காவின் கணவரையா அவள் திருமணம் செய்து இருக்கிறாள்? அந்த சில நொடிகளுக்குள் பலவிதமான கேள்விகள் அவள் மூளைக்குள்..​

இப்போது அவள் அக்கா கிடைத்ததற்கு சந்தோஷப் படுவதா? தன்னுடைய கணவன் தான் தனது அக்காவுக்கும் கணவன் என நினைத்து கவலைப்படுவதா?
என்றே தெரியவில்லை.. கண்கள் கலங்கி விட்டன.. எதற்கெடுத்தாலும் இப்போது அவள் அழுது வடிகிறாள்.
அதற்காக தன்னை திட்டிக் கொண்டாள் அவள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. உண்மையில் அவளுடைய இயல்பு அதுவும் இல்லை..​

இவள் இங்கு இப்படி இருக்க அங்கு தனது தாயை நேரில் கண்ட சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. தந்தையிடம் சென்றவன்
"இவங்க நிஜமாகவே என் அம்மா தானா?
இவ்வளவு நாள் எங்கிருந்தாங்க? இப்போ தான் என்னை பார்க்க தோனிச்சாமா?"
என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டான்.​

மகனை பாசமாக பார்த்தவன்
"இது உன் அம்மாவே தான்.
இனிமேல் இவங்க இந்த வீட்டில் தான் உன் கூடவே இருக்க போறாங்க.. இப்ப சந்தோஷமா?"
என்று கூறியவன் தீப்தியின் முகம் பார்த்தான் ..
அவளோ யாரையும் பார்க்காது தன் முன்னே இருந்த சுவற்றை தான் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"தீப்தி உன் பையன் ஆதித்யா..
பேசுமா "
என்று மென்மையாக ஒலித்தது தேவ் ஆனந்தின் குரல்.. ம்ஹூம் அவளிடம் அசைவே இல்லை..​

தாயை ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் முகம் கூம்பி விட்டது அவளுடைய செய்கையில். அதை கவனித்த தேவ் ஆனந்த் அவசரமாக மகன் முன் குனிந்து "ஆதி அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை . முதல்ல அவங்க தூங்கி எழுந்துக்கட்டும் ..அதுக்கு அப்புறம் அவங்க கிட்ட பேசலாம்.. விளையாடலாம்.. ஓகேவா ?"
என்று கேட்டிட அவனும் கவலை தோய்ந்த முகத்துடன் சரி என தலையை ஆட்டினான்.​

அதில் புன்னகைத்த தேவ் ஆனந்த் "குட் நீ என் வளர்ப்புடா..." என்று கூறி ஆதித்யாவின் கன்னத்தில் தட்டி விட்டு எழுந்து நின்றவனின் பார்வை இப்போது சென்றது இஷிக்காகிடம்..
அவள் ஏதோ புரியாத மொழியில் படம் பார்ப்பவள் போல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" இது உன் அக்கா தானே.. ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்குறே.. எதுவும் பேசாமல் சிலை மாதிரி நின்னுட்டு இருக்க.." என்றான் அவளிடம் கடுமையாக ..
அவள் என்ன பதில் தான் சொல்வாள்?
அவன் அவளிடம் இருந்து என்னதான் எதிர்பார்க்கிறான்?​

இஷிகா எதுவும் பேசாததால் மீண்டும் அவனே
"இப்போ இவ தூங்கட்டும்.. நீயும் நாளைக்கு பேசிக்கோ..."
என்று கூறிவிட்டு ஒரு அறைக்குள் தீப்தியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்... இத்தனை நேரம் வெளியே இருந்த ஒரு பெண்ணும் அவர்கள் சென்ற அறைக்குள் செல்ல அது தீப்தியை பார்த்துக் கொள்ள வந்த பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தாள் இஷிகா.​

ஆதித்யா ஓடி வந்து 'சித்தி..' என்ற கூவளோடு அவளை அணைத்துக் கொள்ள சிறிது நேரத்திற்கு அனைத்தையும் மறந்து விட்டு அவனை கவனித்துக் கொள்ள முடிவு செய்தாள் அவள். இப்போது தான் அவளுக்கு புரிந்தது தான் ஏன் ஆதித்யா மேல் இவ்வளவு பாசம் வைத்தோம் என்று. என்ன இருந்தாலும் அவன் அவளுடைய அக்காவின் குழந்தை அல்லவா?
அவளுடைய இரத்தம் தானே அவன் ..எப்படி பாசம் இல்லாமல் போகும் ?​

"சித்தி அம்மாக்கு என்ன ஆச்சு? என்கிட்ட அவங்க பேசவே இல்லை. அவங்களுக்கு என்னை பிடிக்கலையா? அதனால தான் என்னை பார்க்க இத்தனை நாள் வராமல் இருந்தாங்களா?"
என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டான் அந்த இளம் சிட்டு.. என்ன இருந்தாலும் அவன் சிறு பிள்ளை தானே.. தன் தாய் தன்னிடம் பேசாமல் சென்றது அவனை மிகவும் பாதித்து இருந்தது.. அதனால் தான் சித்தி இடம் வந்து கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான்..​

என்ன என்று சிறுவனுக்கு பதில் சொல்வாள் இஷிகா..
தாய் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்ற உண்மையை இந்த சிறு பிள்ளையிடம் சொல்லவா முடியும்?
எனவே
"அப்படி இல்லைடா.. என்னோட ஆதியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் ..அவங்களுக்கு டிராவல் பண்ண டயர்டா இருக்கும். நாளைக்கு ஓடி வந்து உன்கிட்ட பேசுவாங்க பாரு.. இப்போ டைம் ஆச்சு வா நம்ம போய் தூங்கலாம்.." என அவனை சமாதானம் செய்தாள் அவள்..​

"ம்.."
என்று ஆதித்யாவும் தலையாட்டினான் கவலையோடு... அவனை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றவள் மடியில் போட்டு தூங்க வைத்தாள் தன்னுடைய குழந்தை போல். அவன் தூங்கிய பிறகும் அவனையே தான் பார்த்திருந்தாள் அவள்.
இத்தனை நாட்களாக அவள் பாசத்தை ஊற்றி வளர்த்தது அவளுடைய அக்கா குழந்தையையா?
"இப்போ இவனையும் அக்காவையும் அம்மாகிட்ட காட்டினா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க? அதுவும் ஆதித்யா குட்டி நம்ம குடும்பத்தோட முதல் வாரிசு.."
என அவள் மனம் கற்பனை செய்து கொண்டிருந்தது அதன் பாட்டிற்கு..​

*************​

"டேய் உனக்கு என்ன பைத்தியமா? இப்போ எதுக்கு நீ தீப்தியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்க..?" அர்னவ் தான் தொலைபேசியில் தேவ் ஆனந்தை சத்தம் போட்டுக் கொண்டு இருந்தான்.
என்ன தான் நண்பன் தன்னுடன் பேசவில்லை என்றாலும் தீப்தியை வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதை நண்பனிடம் சொல்வது தனது கடமை என உணர்ந்த தேவ் ஆனந்த் அர்னவிற்கு இரவுடன் இரவாக அழைத்து விடயத்தை கூறி விட்டான்.. அதற்குத் தான் இப்படி சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறான் அவன். பேசியும் பதில் எதுவும் எதிர்பக்கத்தில் இருந்து வராததால் மீண்டும் "என்னடா பேசாம இருக்க? இப்போ தீப்தியை வீட்டுக்கு அழைத்து வர அளவுக்கு என்ன அவசரம் உனக்கு? புத்தி கித்தி கெட்டு போச்சா உனக்கு ?"
என்றான் கோபத்தில் அர்னவ்.​

இப்போது தான் வாயை திறந்தான் தேவ் ஆனந்த் ..
"அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு நான் நினைச்சது இப்போ இல்ல. ரொம்ப நாளாவே இது என் மண்டைகுள்ள ஓடிக்கிட்டே இருக்கு.. அந்த சூழலை விட்டு வெளியே வந்தா சீக்கிரமாகவே குணமாகிடுவான்னு தோனிகிட்டே இருக்கு எனக்கு.
அதனால தான் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டேன்.." என நண்பனுக்கு விளக்கம் கூறினான் அவன்..​

" சொல்றதை கேளு.. உனக்கும் இஷிகாக்கும் இன்னும் எதுவும் நல்லாவே அமையல.. அதுக்குள்ள ஏன் தீப்தியை வீட்டுக்கு அழிச்சிட்டு வந்து இருக்கன்றது தான் என்னோட கேள்வி.. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருக்கலாம் இல்லையா.."
என சிறந்த ஒரு நண்பனாக பேசினான் அர்னவ்..​

அவன் கூறுவதில் இருந்த உன்னை தெளிவாக புறிய அமைதியாக இருந்து கொண்டான் தேவ் ஆனந்த்.. இஷிகாவின் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.. ஏற்கனவே தாம் தூம் என்று குதித்தவள் இப்போது என்ன செய்ய காத்திருக்கிறார்களோ.. கடவுள் ஒருவனுக்கே வெளிச்சம்..​

எதிர் பக்கத்தில் அமைதியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அர்னவ மேலும் பேசினான்.
"இது உன் லைஃப்.. உனக்கே என்ன செய்யணும்னு தெரியும் இருந்தாலும் ஒரு நண்பனா சொல்றேன். இஷிக்கா ரொம்ப கோபக்காரி... கூடவே பிடிவாதமும் ஜாஸ்தியா இருக்கு.. சொந்த அக்காவே ஆனாலும் இந்த நிலைமையில் பொண்ணுங்க எப்படி யோசிப்பாங்கன்னு சொல்லவும் முடியாது.. இதுல நீ வேற கட்டாயத் தாலி கட்டின மாதிரி தாலி கட்டி அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து வச்சிருக்கே.. இன்னும் ரெண்டு பேருக்கும் எதுவும் செட் ஆகல.. இஷிகா வேற என்ன பண்ண காத்திருக்காளோ. பொறுமையா இரு...கோபத்துல ஏதாவது சொல்லிடாத .. இஷிகா அவங்க வீட்டுக்கு கோவிச்சுக்கிட்டு போனா பெரிய பிரச்சினையாகும்..அது தீப்திக்கு தான் ஆபத்து.. புரிஞ்சுதா?"
என நீண்ட நேரம் தோழனுக்கு அறிவுரை கூறிவிட்டே அழைப்பை துண்டித்தான் அர்னவ்.​

அவன் சொல்வதில் இருந்த உண்மை புரிய தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான் தேவ் ஆனந்த்..
அவசரப் பட்டு தீப்தியை இங்கு அழைத்து வந்து விட்டோமோ என்று இப்போது தோன்றியது அவனுக்கு. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவன் நிம்மதியாக தூங்கி விட்டான்.​

ஆனால் இஷிக்கா என்ற ஜீவன் தான் தூக்கம் இன்றி தவித்தாள். அவளால் எதையும் சிந்திக்க முடியவில்லை.. நாளை என்ன நடக்குமோ என்ற பயமே அவளை தூங்க விடவில்லை ..
அதை விட தேவ் ஆனந்தின் மேல் கோபம் கூடிக் கொண்டே போனது பெண்ணவளுக்கு.​

தொடரும்....​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 13​

இரவு முழுவதும் தூங்காமல் யோசனை செய்ததால் முகமே சிவந்து போயிருந்தது. அவளைப் பார்த்தாலே சொல்லி விடலாம். அவளுக்கு ஏதோ பிரச்சனை , அதனை தலையில் போட்டுக் கொண்டு திரிகிறாள் என்று. அப்படி ஒரு தோற்றம் அவளிடம்.​

ஆதித்யாவை எழுப்பி அவனை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்தாள் அவள் .
"சித்தி அம்மா வந்து இருக்காங்க.. நான் ஸ்கூல் போகவே வேணுமா?".. அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் .அவனுக்கு அவனது கவலை. தாயுடன் இன்றாவது பேசலாம் என அவன் நினைத்திருக்க இப்படி அவனை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பினால் அவன் என்ன தான் செய்ய... அதனால் கேட்டே விட்டான்..​

" ஆதிகுட்டி சமத்து பிள்ளை தானே. அம்மா இந்நேரம் தூங்கிக்கிட்டு இருப்பாங்கடா. சோ ஸ்கூல் முடிஞ்சு வந்து அம்மா கூட பேசலாம் , விளையாடலாம் . அவங்க கூடவே இருக்கலாம். சரியா? இப்போ ஸ்கூலுக்கு போறீங்களா ?" என்று கூறி அவனை சமாதானம் செய்தாள்..​

அவள் கூறியதை கேட்டு அவனும் சரி என தலையாட்டினான். அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் தேவ் ஆனந்த்.. அவனை கண்ட இஷிகாவின் கண்கள் விரிந்து கொண்டன.
காரணம் இதுவரை அவன் அவளுடைய அறைக்கு வந்ததே இல்லை .
இன்று அவளிடம் முறையாக அனுமதி கூட கேட்காமல் வரவும் அவளுக்கு அதிர்ச்சியாகி விட்டது.​

அவனை கண்டது தான் தாமதம் "அப்பா.." என்று கூவலோடு தன்னை தூக்குமாறு கைகளை நீட்டினான் ஆதித்யா. மகனை அனைத்து தூக்கிக் கொண்ட தேவ் ஆனந்தின் பார்வை முழுவதும் மனைவி மேல் தான் இருந்தது. அவளுடைய முகத்தை வைத்தே அவளது மனநிலையை புரிந்து கொண்டான் அவன்..​

அவளை அப்படி பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ செய்தது.. எப்படி எல்லாம் துள்ளித் திரிந்த பெண் அவள் ..
அவனை திருமணம் முடித்ததால் தான் அவளுக்கு இந்த நிலை.. இப்போது அவன் பேசினால் கேட்கும் நிலையில் அவளும் இல்லை.. அவளுக்கு விளக்கம் சொல்லும் நிலையில் அவனும் இல்லை என்பதே நிதர்சனம். அவன் தன்னைத் தான் பார்க்கிறான் என்று அறிந்த போதும் அவனை அவள் பார்க்கவில்லை..
தன் போக்கில் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அவள்.​

" ஆதி ஸ்கூலுக்கு லேட் ஆச்சு.. அப்பாவை கூட்டிட்டு சீக்கிரமா போங்க .."
என்றாள் குழந்தையிடம் அவள்.. தேவ் ஆனந்தத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறினாள்..
அவனுக்கா புரியாமல் போகும்.. அவனும் அவளுக்கு பதிலளிக்கும் விதமாக
" எனக்கும் டைம் இல்லடா கண்ணா.. இங்கே இருந்து சில விடியா முகங்களை பார்க்கிறதை விட வெளியே போறது நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப நல்லது. .."
என்று கூறியவன் மகனை தூக்கிக் கொண்டே சென்று விட்டான்..​

" என்னோட முகத்துக்கு என்ன குறைச்சல்.. வந்துட்டாரு கருத்து சொல்ல.."
என்று கோபத்தில் முனமுழுத்தவள் ஆதித்யாவை வழி அனுப்புவதற்காக அவர்கள் பின்னே சென்றாள்.. அவளது பேச்சைக் கேட்டு இதழோரம் சிறு புன்னகை தோன்றத் தான் செய்தது தேவ் ஆனந்துக்கு..​

அவர்கள் சென்ற பிறகும் கூட இஷிகா வெளியே செல்லவில்லை.. தீப்தியை சந்திக்க வேண்டும் என்பதற்காக இன்று விடுமுறை எடுத்துக் கொண்டு சரியான தருணம் வரும் வரை காத்திருந்தாள்.
மதிய நேரம் போல் தீப்தியை பார்த்துக் கொள்வதற்காக வந்திருக்கும் பெண்ணை சந்தித்து அவரிடம் அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்றாள் அவள்..​

இஷிகா போகும் போது தீப்தி ஒரு பொம்மையை கைகளில் வைத்துக் கொண்டு அதனை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடன் பிறந்தவளை நேரில் சந்திக்கிறாள் இஷிகா.. ஆறு வருடங்கள் என்பது எவ்வளவு பெரிய இடைவெளி.
இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இப்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் போது கூட அக்காவிற்கு இஷிகாவை அடையாளம் தெரியவில்லை என்பது தான் ..​

"அவளுக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி தனது குழந்தையை கூட அடையாளம் தெரியாத நிலையில் இருக்கிறாள்? "
என பல கேள்விகள் அவளிடம்..யாரிடம் தான் கேட்க முடியும் .
அரவம் உணர்ந்தோ என்னவோ தான் இருந்த நிலையில் இருந்து தலையை உயர்த்தி பார்த்தாள் தீப்தி.. இதற்காகத் தான் காத்திருந்ததைப் போல அவளிடம் விரைந்து சென்ற இஷிகா
" அக்கா ..அக்கா.. என்னை உனக்கு அடையாளம் தெரியலையா ? நான் தான் உன்னோடு செல்ல தங்கச்சி.. ஏன்கா இப்படி பாக்குற ? பேசு ..ஒரு வார்த்தையாவது என்கிட்ட பேசு.." என அவளுடைய கைகளை பிடித்தபடி கெஞ்சினாள் தங்கை அவள்.​

ஆனால் அவளுடைய பேச்சிற்கு எந்த பலனும் இருக்கவில்லை.. "நீங்க எவ்வளவு தான் பேசினாலும் தீப்தி ஒரு வார்த்தை கூட பேச மாட்டா.." என்று கூறிய படி அந்த அறைக்குள் நுழைந்தான் அர்னவ் ‌.
தீப்தியை வீட்டுக்கு அழைத்து வந்ததாக தேவ் ஆனந்த் கூறிய பிறகு அவளை நேரில் பார்த்துவிட்டு செல்வதற்காக வந்திருந்தான் அவன் ..​

அர்னவ் உள்ளே வரும் போது தான் இஷிக்கா தீப்தியிடம் பேசிக் கொண்டு இருந்தாள்..
"ஏன் இப்படி இருக்கா...எதுவுமே பேசாமல் ..?இவளை இப்படி பார்க்க முடியல.. என்ன தான் நடந்தது அவளுக்கு?"
என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் அவள்..
இவனாவது பதில் சொல்லிவிட மாட்டானா என்ற எதிர்பார்ப்போடு தான் அவள் கேட்டாள்.​

"எனக்கும் உன்னோட கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆசையாத் தான் இருக்கு ..
பட் இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது ..
என்னை மன்னிச்சிடுமா.. இப்போ நீ தான் அவளை பக்கத்துல இருந்து நல்லா பாத்துக்கணும். சீக்கிரமே குணமாக்கிடலாம்னு டாக்டர் எல்லாம் சொல்றாங்க..பார்க்கலாம். இப்போதைக்கு அது ஒன்னு தான் ஆறுதல் .."
என அர்னவ் பேச அவனைத் தான் பார்த்திருந்தாள் இஷிகா..​

அவளை பார்க்க அவனுக்கே பாவமாகிப் போனது.. ஆனால் தேவ் ஆனந்த் தான் அவளிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும்.. இவன் சொல்வது முறை இல்லை என்பதால் அமைதியாக இருந்து கொண்டான்..
" அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும் .."
என்றபடி தீப்தியை கவனித்துக் கொள்ளும் பெண்மணி உள்ளே வர இவர்கள் இருவரும் பேச்சை இடையில் நிறுத்தி விட்டு வெளியேறினர்.​

********************​

அபிமன்யுவின் அலுவலகத்தில் வேலைகள் எல்லாம் வழமை போல் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அவன் மட்டும் ஏதோ யோசனை செய்தபடியே அமர்ந்திருந்தான். அப்போது உள்ளே வந்த சுதீப்பும் அவனை ஆராய்ச்சியாகத் தான் பார்த்தான்.. தான் வந்து நீண்ட நேரமாகியும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்பதால் தான் இந்த பார்வை.. அப்படியே தான் அடுத்த சில வினாடிகளும் கடந்தன..​

இதற்கு மேல் முடியாது என உணர்ந்த சுதீப்
" அண்ணா என்ன தான் யோசிச்சிட்டு இருக்க ?
நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா? இந்த அளவுக்கா கெயார்லஸ்ஸா இருப்ப?"
என்று கேட்டு விட்டான்.. அவனுடைய பேச்சு சத்தத்தில் தான் சுய உணர்வு பெற்றான் அபிமன்யு .​

"என்ன கேட்ட?"
என சுதீப்பை பார்த்து கேட்டு வைக்க அவன் அண்ணனை கொலை வெறியோடு பார்த்தான்.. "சரி சொல்லு என்ன தான் யோசிச்சிட்டு இருந்த?
நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா ? " மீண்டும் சுதீப்பே பேசினான்.​

" அது ஒன்னும் இல்லை..விடு.."என்று கூறி சமாளித்தான் அபிமன்யு.. ஆனால் சுதீப் விட்டுவிடுவதாக இல்லை போலும்.. மீண்டும் மீண்டும் என்னவென்று கேட்டு அண்ணனை நச்சரித்தான்.. இவனுடைய தொல்லை தாங்க முடியாத அபிமன்யு தன்னுடைய வாயை திறந்து பேசினான்..​

" அது... அது.. இஷிகா எப்படி கல்யாணம் பண்ணா என்ன .. அவ போய் ஒரு மாசம் வேற ஆச்சு.. யாருமே அவளை போய் பார்க்கல. அந்த அளவுக்கு அவ என்ன தான் பண்ணா? நீ கூட அவளை அவாய்ட் பண்ற.. இதெல்லாம் நல்லா இல்லடா பாவம் அவ சின்ன பொண்ணு வேற.."
என தனது மனதில் இருந்த கவலையை கூறினான் தனது தம்பியிடம்.​

அவனது பேச்சை கேட்டதும் சுதீப்பிற்கு கூட இஷாவின் நினைவு வந்து விட்டது. ஆம் இவனும் அவளைக் கண்டு கொள்ளவே இல்லையே. அவளாக எத்தனை முறை இவனுக்கு அழைத்த போதும் இவன் சரியாக பதிலளிக்கவே இல்லை.. அபிமன்யு சொல்வதும் உண்மை தானே ..
இந்த திருமணத்தில் இஷிகாவின் பங்கு பூஜ்ஜியமே.. அப்படி இருக்க அவளை வருத்துவது சரி இல்லை தானே..​

" என்னடா நான் சொல்றது உண்மை தானே?"
என்றான் தம்பி யோசனை செய்வதை கண்ட அபிமன்யு. சுதீப் எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டான்..
" சரி போனது போனதாகவே இருக்கட்டும். அவ வீட்டாளுங்களுக்கு தான் அவளை பற்றிய அக்கறை இல்லை ..ஆனா எனக்கு இருக்கு ..
இன்னைக்கு அவளை அவளோட வீட்ல போய் சந்திக்க போறேன்.. நீயும் கூட வர்றதாக இருந்தால் வரலாம்.." என்று தான் இத்தனை நேரம் யோசனை செய்து எடுத்த முடிவை தீர்க்கமாக கூறி விட்டான் அபிமன்யு.

தோழியை நேரில் சென்று சந்திக்க வேண்டும் போல் இருக்க அவனும் வருவதாக ஒப்புக்கொண்டான் ..
தனது அண்ணனின் திருமணம் நின்று விட்டது என்ற கவலையில் தான் அவன் இஷிகாவிடம் சரியாக பேசவில்லை. அவள் மேல் எந்த தவறும் இல்லை என்பதை அவன் நன்கு அறிவான். ஆனால் ஏனோ அவனால் அவளிடம் முகம் கொடுத்து பேச முடியவில்லை. இன்றாவது அவளிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்ற முடிவோடு தான் அவளை சந்திக்க அபிமன்யுவுடன் வருவதாக ஒத்துக் கொண்டான்.​

அன்று மாலையை அலுவலகத்தில் இருந்து இருவரும் நேரே தேவ் ஆனந்தின் வீட்டுக்குத் தான் சென்றனர் ..
அவர்கள் அங்கு சென்றபோது இஷிகா ஆதித்யாவுடன் தோட்டத்தில் தான் அமர்ந்திருந்தாள்.
அவளது முழு கவனமும் கதை சொல்லிக் கொண்டிருக்கும் ஆதித்யா மேல் தான் இருந்தது..​

அதனால் அவள் இவர்களை கவனிக்கவில்லை..
அவள் அருகே சென்ற சுதீப் ஆதித்யாவிடம் எதுவும் பேச வேண்டாம் என்று சைகை காட்டிவிட்டு பின்னால் நின்று அவளுடைய கண்களை கைகள் கொண்டு மூடினான் .
அவனது இந்த செய்கைக்கு கூட அவளிடம் அசைவு இல்லை.. இவனது எதிர்பார்ப்பிற்கு மாறாக அவளது கண்களை மூடி இருந்த அவனது கைகள் ஈரத்தை உணர்ந்தன.. திடுக்கிட்டு தான் போய் விட்டான் அவன்..
பட்டென கைகளை அவளிடம் இருந்து பிரித்து எடுத்தவன் "இஷி.." என்றது தான் தாமதம் பாய்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள் பெண் அவள்..​

தனது தோழனை தவிர வேறு யார் இப்படி செய்யக்கூடும் என்பதை அறிந்த இஷிகா 'இன்றாவது அவன் தன்னை சந்திக்க வந்தானே' என்ற எண்ணத்தில் தான் வார்த்தைகள் அற்றுக் போனவளாய் கண்ணீர் சிந்தினாள்.​

நீண்ட நாட்களாக தனக்குள் அடக்கி வைத்திருந்த கவலை, துன்பம், வேதனை எல்லாவற்றையும் அவனிடம் கண்ணீராக கொட்டி தீர்த்தாள்..
அவளைப் பார்க்க வேதனையாக இருந்தது சுதீப்பிற்கு.
ஆறுதலாக தானும் அவளை அனைத்தவன் அப்போது தான் கண்டான் தூரத்திலிருந்து இவர்களையே பார்த்தபடி இருந்த தேவ் ஆனந்தை.. தோழியாக இருந்த போதும் அவள் இப்போது வேறொருவரின் மனைவி அல்லவா.. அதுவும் அவளது கணவன் முன்னிலையில் இப்படி இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது அவனுக்கு..​

அவளை மெல்ல அவன் விடுவிக்க போக அதில் சுய உணர்வு பெற்ற இஷிகா அவனை விட்டு விலகி பட் பட்டென்று அவனது இரு தோள்களிலும் அடிக்க தொடங்கி விட்டாள்..
" அடியே ராட்சசி விடுடி என்னை.. வலிக்குது.. புரியுது.. இப்ப புரியுது.. உன்னை பார்க்க வராதது என் தப்புதான் ..பேசாததும் என் தப்புதான்..
. ..மன்னிச்சிடு.."
அவளது அடிகளை வாங்கிக் கொண்டே பேசினான் சுதீப்.​

இருவரையும் பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் அபிமன்யு..
"அண்ணா ..காப்பாத்துடா .."
என்று கூறிய பிறகே அவனை அவதானித்தாள் இஷிகா.. சுதீப்பை அடிப்பதை நிறுத்தி விட்டு திரும்பியவள்
" நீங்களும் வந்து இருக்கீங்களா?நான் கவனிக்கவே இல்லை.. மன்னிச்சிடுங்க.. சரி உள்ளே வாங்க.. "
என்று அபிமன்யுவை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்.​

அவளுடைய பின்னால் அபிமன்யு செல்ல இத்தனை நேரமும் ஏதோ புரியாத மொழியில் படம் பார்ப்பது போல் பார்த்திருந்த ஆதித்யாவை கைகளில் அள்ளிக் கொண்டு சுதீப்பும் அவர்கள் பின்னே சென்றான். ஆதித்யாவும் வாகாக அவன் கைகளில் பொருந்திக் கொண்டான்..​

தொடரும்..​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 14​

சுதீப்பின் கைகளில் சமத்தாக அமர்ந்து கொண்டாலும் ஆதித்யாவிற்கு இவர்கள் யாராக இருக்கும் என்ற கேள்வி தோன்ற தான் செய்தது. அதனால்
"அங்கிள் நீங்க யாரு ? சித்தியை எப்படி உங்களுக்கு தெரியும்?" என்று சுதீப்பின் முகத்தை பார்த்து கேட்டு விட்டான் சிறுவன்.​

அவன் கேள்வி கேட்ட அழகில் புன்னகைத்த சுதீப்
" நான் உன் சித்தியோட ஃப்ரெண்ட். பேரு சுதீப் .."
எனக் கூறியவாறு அவனுடைய மூக்கை ஒரு கையால் பிடித்து ஆட்டினான்.
" அப்போ நான் எப்படி உங்களை கூப்பிடுறது? சித்திக்கு ஃப்ரண்ட் அப்படின்னா எனக்கும் பிரண்ட் தானே ..
ம்.. ஐடியா மச்சான் என்று கூப்பிடட்டா ?"
என்றான் ஆதித்யா பெரிய மனிதன் போல்.​

"டேய் என்னடா பொசுக்குன்னு மச்சான்னு சொல்லிட்ட.. நான் உன்னை விட வயசுல ரொம்ப பெரியவன்டா.."
என்று சுதீப் அதிர்ச்சியாக கூறினான்..
ஹா..ஹா.. என சிரித்து வைத்த ஆதித்யா
"எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும் மச்சான்னு கூப்பிட. ஆனா இதுவரை யாருமே எனக்கு அப்படி கிடைக்கல.. இன்னைக்கு நீங்க கிடைச்சிட்டீங்க.. சரி பரவால்ல உங்களுக்கு வேணாம்னா நான் அப்படி கூப்பிடல."
என முதலில் சந்தோஷமாக கூறியவன் கடைசி வசனத்தை கவலை போல் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினான்.​

அவனது நடிப்பை புரிந்து கொண்ட சுதீப்
"நீ கில்லாடி டா .. சரி போனா போகுது என்னை நீ ஆசைப்படுற மாதிரியே கூப்பிடு.."
என அனுமதி வழங்கினான்.. அதில் குதூகலமான ஆதித்யா சுதீப் கழுத்தை கட்டிக்கொண்டு அதனுடைய கன்னத்தில் முத்தம் வைத்தான்.​

இவை அனைத்தும் நடந்தது என்னவோ இருவரும் ஹாலுக்கு வந்து சேரும் வரை தான். மற்ற மூவருமே இவர்களது பிணைப்பைத் தான் வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.. அவர்களை திசை திருப்ப எண்ணிய சுதீப்
" என்னம்மா முதன்முதலா உன் வீட்டுக்கு உன்னை பார்க்க வந்திருக்கோம்.. வாங்கன்னு கூப்பிட்டு உபசரிக்கிற ஐடியாவே இல்லையா உனக்கு.."
என்று கிண்டலாக கேட்க அவனை முறைத்த இஷிகா அபிமன்யு புறம் திரும்பி
" நீங்க உட்காருங்க.." என்று கூறியவாறு திடீரென திரும்பி தேவ் ஆனந்தை பார்த்தாள்..​

அவளுடைய கண்களில் சொல்ல முடியாத அளவு பயம் தென்பட்டது.. ஆம் பயமே தான். திருமணத்தன்று அபிமன்யுவை கடத்தியவன் இன்று என்ன செய்ய காத்திருக்கிறானோ என்ற பயம்.. வீட்டிற்கு தேடி வந்தவர்களை அவமதித்து விடுவானோ என்ற பயம்.
அதைவிட அதிக பயம் என்னவென்றால் அபிமன்யு யாருக்காக இத்தனை நாள் மனதில் காதலை வைத்து ஏங்கிக் கொண்டு இருக்கிறானோ அவள் இந்த வீட்டில் தான் இருக்கிறாள்.. அவளை கண்டதும் அவனுடைய செய்கை என்னவாக இருக்குமோ என்ற பயம்..​

இந்த தேவ் ஆனந்த் தான் அக்கா தங்கை இவருடைய கணவன் என்று தெரிந்தால் சுதீப்பை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்ற பயம்.
இப்படி பலவிதமான எண்ணங்கள் பெண்ணவள் மனதுக்குள்‌.​

அவளுடைய பயத்துக்கு மாறாக தேவ் ஆனந்த் ஆண்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தவாறு
" உட்காருங்க.."
என்றது மட்டும் அல்லாது இவள்புறம் திரும்பி
"இஷிகா குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா.."
என்று கூறினான்.
மயக்கம் வராத குறைதான் அவளுக்கு..​

இவனா எப்படி பேசுகிறான்.. அவனுக்கு அவளுடன் இப்படி மென்மையாக பேசவெல்லாம் தெரியுமா என்ன?
அதே யோசனை உடன் உள்ளே சென்றவள் வேலை செய்யும் பெண்ணுடன் சேர்ந்து நொறுக்கு தீனி மற்றும் காபி கப்புகளுடன் வெளியே வந்தாள்.
அவள் வரும் போது மூவரும் ஏதேதோ பேசிய சிரித்துக் கொண்டு இருப்பது அவளது கண்களுக்கு தெரிந்தது. அவர்களது முகத்தை கூர்ந்து கவனித்தாள். ஆனால் இவளது பயத்திற்கு மாறாக அவர்கள் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்..​

"நீயும் உட்காரு"
என்று கூறியவனா தன் அருகே சோபாவில் தட்டி காட்டினான். மறைமுகமாக 'என் பக்கத்தில் தான் நீ அமர வேண்டும்' என்கிறான். புரிந்து விட்டது அவளுக்கு. எதிர்த்து எதுவும் பேசாமல் உரிமையாக அவன் அருகில் உட்கார்ந்து கொண்டாள். இல்லை என்றால் அதற்கும் ஏதாவது சொல்வானே..​

" எப்படி இருக்க இஷிகா?"
என பேச்சை ஆரம்பித்தான் அபிமன்யு.
சந்தோஷமாகவா இருக்கிறாள் அவள்.. ஆம் என்று பொய் சொல்லவும் முடியாது.. இல்லை என்று உண்மையை சொன்னால் அவர்கள் கவலைப்பட கூடும்.. எனவே இரண்டிற்கும் பொதுவாக தலையை ஆட்டி வைத்தாள அவள்..​

"ம்.. ஆனால் அத்தை உன்னை பார்க்க வந்திருக்கலாம். எத்தனை நாளைக்குத் தான் மாமா பேச்சை கேட்டுகிட்டு இப்படியே இருக்க போறாங்களாம்.. அவங்களுக்கும் சுயமா யோசிக்க முடியும் தானே. என்னன்னு நான் சொல்ல.. மாமாவோட பிடிவாதத்துல அவரோட ரெண்டு பொண்ணுங்களும் அவருக்கு இல்லாம போச்சு.. "என்று கூறி பெருமூச்சு விட்டான் அபிமன்யு.​

அந்த கூற்றை ஆதரிப்பது போல் தலையாட்டி வைத்தான் சுதீப். "விடுங்க அம்மாக்கு என் மேல இன்னும் கோபம் போல.. அதனால தான் அவங்க என்னை பார்க்க முயற்சிக்கவே இல்ல.. நானாவது போய் பார்த்து பேசி இருக்கணும். நானும் போகல. அது என்னோட தப்பு தான் . அவங்களை மட்டும் குறை சொல்லி இப்போ என்ன நடக்கப்போகுது.." என்ற இஷிகாவின் கண்கள் வீட்டின் நினைவில் கலங்கி விட்டன.​

அவளுடைய அருகில் இருந்த தேவ் ஆனந்த் ஆதரவாக அவளுடைய கைகளை பற்றினான்.. அதில் தலை சுற்றி விழாத குறை தான் இஷிகா.. 'என்னடா இவன் இன்னைக்கு இவ்வளவு நடிக்கிறான்..'
என்று தான் தோன்றியது அவளுக்கு ...​

"ஏ.. என்ன இஷி நீ சின்ன பொண்ணு மாதிரி ஆஊன்னா அழ ஆரம்பிச்சிடுற... டேய் ஆதி உன் சித்தி சின்ன பொண்ணா?"
என்று ஓரமாக விளையாடிக் கொண்டிருந்த ஆதித்யாவையும் துணைக்கு அழைத்து பேசினான்.​

"ஆ என்ன மச்சான்..." என்றபடி ஆதித்யா அவனை நோக்கி வர ஆதித்யாவின் பேச்சில் அங்கே சிரிப்பலை தோன்றியது ..
அழுது கொண்டிருந்த இஷிகாவும் தன்னை மறந்து சிரித்தாள்.​

அப்போது தீப்தியின் அறைக்குள் ஏதோ ஒரு சத்தம் கேட்க யாரையும் பொருட்படுத்தாது வேகமாக அந்த அறை நோக்கி ஓடினான் தேவ் ஆனந்த்..
அபிமன்யுவிற்கும் சுதிப்பிற்கும் எதுவும் புரியவில்லை. இவன் ஏன் ஒரு சிறு சத்தத்திற்கு இப்படி ஓடுகிறான் என்று தான் அவர்களுக்கு தோன்றியது. ஆதித்யாவும் தந்தையின் பின்னால் போக பார்க்கையில் வேலை செய்யும் பெண்மணி ஓடிவந்து அவனைத் தூக்கிக் கொண்டு அவனுடன் பேச்சு கொடுத்தவாரே வெளியே சென்று விட்டார். அவருடைய பேச்சுக்கு பதில் பேச்சு பேசியவனுக்கு இது மறந்தே போனது என்று தான் சொல்ல வேண்டும்.​

அதையும் கவனித்துக் கொண்டிருந்த சகோதரர்கள் திரும்பி இஷிகாவை தான் பார்த்தனர் கேள்வியாக. அவர்களுக்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லையே. அவளது முகம் இருண்டு போய் இருந்தது.​

இவர்களிடம் அவள் என்னவென்று கூறுவாள்..
தீப்தியை இவர்கள் இப்போது கண்டால் அடுத்து என்ன நடக்கும் என்ற எண்ணம் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
"என்ன ஆச்சு இஷிகா?
தேவ் ஏன் இப்படி ஓடுறார் ..அதுவும் இல்லாம நீயும் ஏன் ஒரு மாதிரியா இருக்க‌. அங்க என்ன சத்தம் ?"
என அபிமன்யு கேட்டும் அவஹ் பதில் பேசவில்லை..​

இது சரிவராது என உணர்ந்த சுதீப் எழுந்து அந்த அறை நோக்கி சென்றான்.
அவன் பின்னே அபிமன்யுவும் எழுந்து கொள்ள
"ஐயோ சுதிப் எங்க போற? வேணாம் அங்கே போகாதே.. ப்ளீஸ் சொன்னா கேளு .."
என்று சத்தம் போட்டாள இஷிகா.​

அவளுக்கு இருவரையும் எப்படியாவது அந்த அறைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும் அவ்வளவே..
இவர்கள் இப்போதைக்கு தீப்தியை சந்திக்காமல் இருப்பதுதான் நல்லது என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய இந்த பதட்டம் சகோதரர்கள் இருவருடைய சந்தேகத்தை தான் மேலும் தூண்டியது.. எனவே அவளது பேச்சை கண்டு கொள்ளாமல் அந்த அறையை நோக்கி இவர்களும் வேகமாக சென்றனர்.​

"ச்சே.."என்று கூறியவள் கையை காற்றில் வீசிய படி வேறு வழி இல்லாமல் அவர்கள் பின்னே தயங்கி தயங்கி சென்றாள்.​

அங்கு ஒரு பெண் தலைவிரி கோலமாக எல்லா பொருட்களையும் தூக்கி எறிந்து கொண்டு இருப்பதைத் தான் அபிமன்யூ சுதீப் இருவரும் கண்டனர். அது யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. காரணம் அவளுடைய முடி அவளது முகத்தை முழுதாகவே மறைத்திருந்தது..​

அந்தப் பெண்ணை தேவ் ஆனந்தால் தனியாக சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தான்.. பார்த்ததுமே அப் பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியும். தீப்தியை பார்த்துக் கொள்வதற்காக வந்திருக்கும் பெண் மயக்க ஊசி ஒன்றை கையில் பிடித்த வண்ணம் நின்றிருந்தார்..

ஆனால் தேவ் ஆனந்தால் மட்டும் அவளை தனியாக சமாளிக்க முடியவில்லை.. எனவே இவர்கள் புறம் திரும்பியவன்
"அபிமன்யு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா .. ஊசி போட்ட உடனே தூங்கிடுவா.."
என்றான்.
எனவே சுதீப் அனுமன்யு இருவரும் அவனுக்கு உதவி செய்ய மயக்க ஊசியை தீப்தி உடலினுள் செலுத்தினர்.. ஓரிரண்டு வினாடிகளில் மயங்கி தேவ் ஆனந்தின் தோள் மேக சாய்ந்தாள்.​

அவளை கட்டிலில் கிடத்திய தேவ் ஆனந்த் முகத்தை மறைத்திருந்த முடியையும் அகற்றி விட்டான் மென்மையாக ..
அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவிற்கு தன் நெஞ்சமே அடைத்து விட்டது போல் ஒரு உணர்வு.. கால்கள் தரையில் நிற்காமல் அதன் செயலை இழந்தன ..
எனவே அவனிடம் தடுமாற்றம் தென்பட்டது..​

"தீப்தி.."
என மெல்ல தனக்குள் முனுமுனுத்தவன் அருகே இருந்த சுதீப்பை பாய்ந்து பிடித்துக் கொண்டான்.. அண்ணனின் மாற்றத்தை உணர்ந்த சுதீப் அப் பெண்ணை திரும்பிப் பார்க்க அவனுக்கும் இது அதிர்ச்சி தான்.. உடனே சந்தேகத்துடன் திரும்பி இஷிகாவை தான் பார்த்தான்.. அவளோ என்ன சொல்வது என தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்று இருந்தாள்..​

தொடரும்..​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 15​

" மச்சி லேட் ஆச்சு இன்னும் என்னடா பண்ற?"
என்று வெளியே நின்றபடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் தேவ் ஆனந்த்.
" டேய் வந்துட்டேன் டா கத்தாத..." என்றவாரே கையில் வண்டி சாவியை சுழற்சியை படி வந்து சேர்ந்தான் விஷ்ணு..​

" வா சீக்கிரம் போலாம் லேட் ஆச்சு.. அவன் வேற நம்மளை திட்டுவான்?.." என்ற தேவ் ஆனந்த் விஷ்ணுவின் கையில் இருந்த வண்டி சாவியை பிடுங்கி தானே வண்டியை எடுத்தான். இருவருக்கும் என்று சொந்தமாக கார் இருந்த போதும் இருவருக்கும் பைக் பயணம் என்றால் அத்தனை இஷ்டம்.​

இப்போது அவர்கள் படித்து முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து இருந்த தருணம் அது .
விஷ்ணு ,தேவ் ஆனந்த் , அர்னவ் மூவரும் சேர்ந்து தங்களுக்கு பிடித்த தொழிலை செய்தாலும் தேவ் ஆனந்தின் எண்ணம் முழுவதும் அவனது போலீஸ் கனவிலேயே இருந்தது.. நண்பர்களும் அவனுக்கு பக்க பலமாக இருப்பதால் இப்போது அதற்கான பரீட்சை வரை எழுதி விட்டான் அவன்..​

நண்பர்கள் இருவரும் ஏதேதோ பேசிய படியே அலுவலகம் வந்து சேர்ந்தனர் ..
"நில்லுங்கடா ரெண்டு பேரும்.. ஆபீஸ் வர டைம் ஆ இது..? நான் மட்டும் இங்கே இருந்து கஷ்டப் படணும். நீங்க ரெண்டு பேரும் ஜாலியா வர்றீங்களா?" என பொய் கோபத்துடன் கூறியவாறு வழியை மறைத்த படி நின்று இருந்தான் அர்னவ்..​

" சாரிடா மச்சி... சாரி.." என்று கூறி அவனை சமாதானப் படுத்திய இருவரும் அவனை தூக்கி கொண்டே அலுவலகத்தின் உள் நுழைந்தனர்.. அந்த அலுவலகத்தில் இருந்த மொத்த ஊழியர்களுமே இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர் சிறு புன்னகையோடு. இது எப்போதும் நடக்கும் ஒன்று தான். அவர்கள் மூவருடைய கலாட்டாவை இந்த அலுவலகமே கண்டு ரசிக்கும். மூவரும் சேர்ந்தால் அந்த இடமே கலகலவென எப்போதும் சிரிப்பு சத்தத்துடன் தான் இருக்கும்..​

இப்படியே அவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருக்க இடையில் விஷ்ணுவிடம் மட்டும் ஏதோ ஒரு வித்தியாசம் தோன்ற ஆரம்பித்து விட்டது போல் ஒரு உணர்வு மற்றவர்களுக்கு.
தனியாக சென்று அலைபேசியில் பேசுவது, இவர்களது சேட்டையில் அதிகம் கலந்து கொள்ளாமல் தனியாக ஏதோ சிந்தித்துக் கொண்டு இருப்பது என்று சிறு சிறு மாற்றங்களை இருவருமே விஷ்ணுவிடம் அவதானித்தனர்.​

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் போல் மூவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது விஷ்ணுவிற்கு ஒரு அழைப்பு வர மற்ற இருவரையும் ஒருமுறை தயக்கமாக பார்த்து விட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் அவன். இதனை கண்டு
"டேய் மச்சான் இவனை விடக் கூடாது இன்னைக்கு ..
என்ன விஷயம்னு கேட்டே ஆகணும்.."
என அர்னவ் கூற
அதற்கு தேவ் ஆனந்தும் சரியென தலையசைத்தான்..​

சிறிது நேரம் கழித்து விஷ்ணு உள்ளே வர "என்னடா எங்க கிட்ட சொல்லாம நீ மட்டும் என்ன பண்ணிட்டு இருக்க ?
எங்க கிட்ட சொல்லனும்னு உனக்கு தோணவே இல்லையா?
இல்ல சொல்ல தேவை இல்லைனு விட்டுட்டியா?"
என பேச்சை ஆரம்பித்து வைத்தான் தேவ் ஆனந்த்..​

இவர்கள் இப்படி கேட்பார்கள் என்பதை அறிந்திடாத விஷ்ணுவிடம் ஒரு சிறு தடம் மாற்றம் இருக்கத்தான் செய்தது. அதனையும் அவதானித்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. அதற்கு மேல் பேசுவது முறை அல்ல என்று அறிந்த தேவ் ஆனந்த் அமைதியாக இருக்க அர்னவ் தான் மீண்டும் பேசினான்.​

"அச்சோ விடு மச்சி ஒருவேளை நம்மகிட்ட சொல்லக் கூடாத பர்சனலோ என்னவோ ...என்ன தான் ஃப்ரண்டா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே.." என்றான் அவன் நக்கலாக.
"டேய் என்னடா நீங்க.. இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கு கஷ்டமா இருக்கு.. என்னன்னு கேட்டா நான் சொல்லப் போறேன். இதுக்கு எல்லாம் இப்படியா பேசுவ.?"
என்ற விஷ்ணுவிற்கு ஏனோ அவர்களது பேச்சில் கவலை தோன்று விட்டது.

மூவரும் தங்களுக்கு இடையில் எந்த விஷயங்களையும் இதுவரை மறைத்தது இல்லை ..
ஆனால் இன்று இந்த விடயத்தை மறைத்ததை எண்ணி விஷ்ணுவிற்கு இப்போது வேதனையாக இருந்தது.
அவனது கேள்விக்கு இருவதும் பதில் பேசவில்லை..​

" என்கூட பேச மாட்டீங்களா? சரி நானே என்னன்னு சொல்லிடுறேன் ..அப்புறம் என்னோட பேசுவீங்க தானே." என்று மீண்டும் விஷ்ணுவே பேசினான் .. ம்ஹூம்அதற்கும் பதில் இல்லை..​

"சரி சொல்றேன் கேட்டுக்கோங்க.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு நினைக்கிறேன் டா.." என்று விஷ்ணு தயங்கிய படியே சொல்ல மற்ற இருவரும்
"என்ன லவ் பண்றேன்னு நினைக்கிறியா?" என கோரசாக கேட்டு வைத்தனர்.. அதில் பயந்த விஷ்ணு ஆம் என்று பாவமாக தலையை அசைத்து வைத்தான்.​

" சரி சொல்லு என்னன்னு பார்க்கலாம் .." என்று கூறிய படி கதை கேட்பதற்காக வேண்டி வாகாக அமர்ந்து கொண்டான் தேவ் ஆனந்த்..​

"அன்னைக்கு ஒரு நாள் வீட்ல தனியா இருக்க போர் அடிக்குதுன்னு சொல்லி பக்கத்துல இருக்குற பார்க்குக்கு போனேன்டா....."
என்று ஆரம்பித்தவனை இடை நிறுத்திய அர்னவ்
"தனியா வா ..அப்போ தேவ எங்க போனான்?"
என்று கேள்வி வேறு கேட்டு வைத்தான்..​

" டேய் லூசு நான் டெல்லி போனேன் தானே அந்த நாளை சொல்றானா இருக்கும் .. விடு அவன் கதையை சொல்லி முடிக்கட்டும்.." என்றான் தேவ் ஆனந்த்.
" ம்..ம்..சொல்லு சொல்லு.." என்ற அர்னவ் அதன் பிறகு அமைதியாக இருந்து கொண்டான்.​

"அன்னைக்கு அங்கே ஒரு ஃபோன் கீழே விழுந்து இருந்துச்சு. யாரோடதுன்னு தெரியல . சுத்தி பார்த்தேன் அங்கே யாரையும் காணோம். என்ன பண்றதுன்னு தெரியாம ஃபோனை ஆன் பண்ணி பார்த்தேன். வால்பேப்பர்ல ரெண்டு பொண்ணுங்க இருக்குற ஃபோட்டோ தான் இருந்துச்சு. இருந்த இடத்துலயே வச்சுட்டு போகலாம்னு நினைக்கும் போதே அதுக்கு ஒரு கால் வந்துச்சு. ஒரு பொண்ணு தான் பேசுனா.. அது அவளோட ஃபோன் தானாம்..அவ வந்து அந்த ஃபோனை வாங்கிக்கும் வரைக்கும் அந்த இடத்திலேயே கொஞ்சம் நிற்க முடியுமானு கேட்கவும் நானும் சரின்னு சொல்லிட்டேன்.. அப்புறமா அவ வந்து அந்த ஃபோனை வாங்கிகிட்டு தாங்ஸ் சொல்லிட்டு போனா..​

இப்படி இருக்க அடுத்த நாளும் அவளை அதே பார்க்குல மீட் பண்ணேன் ..
ஏனோ அவளை பார்க்கும் போது மனசுக்கு நெருக்கமான ஒரு உறவு போல தோணுச்சு.. என்னன்னு சொல்ல தெரியலை.. அவளோட நம்பரை நானே கேட்டு வாங்கிட்டேன்.. பட் ஒரு ஃபிரண்டா தான் வாங்கினேன்.. ரெண்டு பேரும் ஃபோன்ல பேச ஆரம்பிச்சோம்.. அது போக போக ஒரு மாதிரி.. ... எப்படி மச்சான் சொல்றது... அவளை புடிச்சிருக்கு. அவளுக்கும் என்னை புடிச்சிருக்குனு தான் நினைக்கிறேன்.. உங்ககிட்டையும் எப்படி சொல்றதுன்னு தெரியல. அதனால தான் டா சொல்லாம விட்டுட்டேன்.."
என்று தனது மொத்த காதல் கதையையும் கூறி முடித்தான் விஷ்ணு.​

அவன் கூறும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த இருவரும் அதன் பிறகு தான் பேச ஆரம்பித்தனர்.
"மச்சான் நீ அந்த பொண்ணை லவ் பண்ற டா.. அது உனக்கு புரியுதா இல்லை புரியாத மாதிரி இருக்கியா? முதல்ல உன்னோட லவ்வ அந்த பொண்ணு கிட்ட சொல்லு . அவளும் உனக்கு ஓகே சொல்லிட்டான்னா அர்னவ் ஓட அம்மா அப்பா கிட்ட சொல்லி அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேட்க சொல்லுவோம்." என தேவ் ஆனந்த் கூற அர்னவ்வும் அதற்கு ஆமோதிப்பாக தலையாட்டினான் ..​

"இன்னைக்கே பேசி பார்க்கிறேன்.. கண்டிப்பா அவ ஓகே தான் சொல்லுவா. ஏன்னா அவ பேச்சிலேயே அவளோட மனசு புரியுது.. பார்க்கலாம் என்ன சொல்றான்னு.. அப்புறம் சாரிடா உங்க கிட்ட சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை..அதனால தான் சொல்லல.." என்று விஷ்ணு தாங்கிய படியே பேச மற்ற இருவரும் தாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவனது சந்தோஷம் தான் தங்களுக்கு முக்கியம் என்றும் கூறி அவனை சமாதானம் செய்தனர்..​

"அதெல்லாம் சரி ..அந்த பொண்ணோட பெயரையாவது சொல்லுடா பார்க்கலாம் .."
என்று இடையில் கேட்டு வைத்தான் அர்னவ்..
" சாரி டா பேரு தீப்தி .."என்ற விஷ்ணு அவளுடைய புகைப்படத்தையும் நண்பர்களுக்கு காண்பித்தான்.​

அன்று இரவே தீப்தியிடம் தன் மனதில் உள்ள காதலை விஷ்ணு கூற அவளும் தயக்கம் நீங்கி வெளிப்படையாக அவளது விருப்பத்தை தெரிவித்தாள்.
" பட் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் தீப்தி..இப்போ தான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்.. அதுல கொஞ்சம் முன்னேற காலம் தேவைப்படுது.. நீ வேற பெரிய இடத்து பொண்ணு.. உங்க அப்பா கிட்ட தைரியமா பொண்ணு கேட்பதற்காவது தொழில்ல முன்னேறனும்.. உன்னால அதுவரை எனக்காக காத்துட்டு இருக்க முடியுமா ?"
என்று தனது உண்மை நிலையை தீப்தியிடம் விளக்கமாக கூறினான் விஷ்ணு.​

அதற்கு அவள்
" எனக்கு பணம் எல்லாம் பெரிசு இல்ல விஷ்ணு.. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வசதி பார்த்து நான் உங்க கூட பழகலை.. பணத்தைப் பற்றி அப்புறம் பார்த்துக்கலாம் ..முதல்ல அப்பா கிட்ட பேசணும் . ஆனா எனக்கு அப்பான்னா ரொம்ப பயம். நீங்க தான் வீட்ல வந்து பொண்ணு கேட்கணும். கண்டிப்பா அப்பா ஓகே தான் சொல்வார்னு நான் நினைக்கிறேன். உங்களுக்கும் எந்த குறையும் இல்லையே. அதனால எங்க வீட்ல வேணாம்னு சொல்ற மாட்டாங்க. நம்பிக்கையோட வந்து பொண்ணு கேளுங்க.. இப்பவே வந்து கேட்டாலும் எனக்கு ஓகே தான். ஆனால் உங்களுக்காக நீங்க முன்னேறும் வரை காத்துகிட்டு இருக்க நான் தயாரா இருக்கேன்.." என்று தன் காதலை வேறு விதமான வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள்.​

அவளுடைய இத்தகைய வார்த்தைகள் அவனை சீக்கிரம் முன்னேற உற்சாகப்படுத்தியது என்றால் பொய்யில்லை.. அவளுக்காகவாவது தொழிலில் முன்னேற வேண்டும் என்று எண்ணினான் அவன்.​

எப்படியும் தங்கள் காதலுக்கு தீர்த்தியின் தந்தை சரி என்று சொல்லி விடுவார் என்று நினைத்த விஷ்ணு அதன் பிறகு சந்தோஷமாக தீப்தியியுடன் தனது பொழுதுகளை கழித்தான்..​

தொடரும்..​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 16​

விஷ்ணு தன் காதலுடன் சேர்த்து தொழிலும் முன்னேறிக் கொண்டு இருந்தான். தேவ் ஆனந்தும் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது கனவை நினைவாக்கும் நாளுக்காக பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தான் ..​

இப்படி இவர்களது வாழ்க்கையில் எங்குமே மகிழ்ச்சி தான் என்று இருக்க இடையில் வில்லனாக வந்து சேர்ந்தார் தீப்தியின் தந்தை சிதம்பரம்.​

மகளின் காதல் பற்றிய செய்தி அவரது காதுக்கு வந்ததும் கொதித்து போய் விட்டார் அவர். தான் பெற்ற மகள் தன்னை மீறி இப்படி ஒரு காரியம் செய்திருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.​

வெளியில் அவர் கேள்விப்பட்ட விடயத்தை மகளிடமே கேட்டு உறுதி செய்து கொள்ள எண்ணிய சிதம்பரம் ஒரு நாள் தீப்தியை பிடித்துக் கொண்டார்..​

" அம்மாடி அப்பா உன்னை பற்றி வெளியில கேள்விப் பட்டது எல்லாம் உண்மை தானா ?"​

என்று அவர் கேட்க தீப்திக்கும் அவர் கேட்க வருவது புரிந்து விட்டது..​

எனவே அவள் நேரடியாகவே பதில் பேச ஆரம்பித்தாள்.​

" அப்பா விஷ்ணு ரொம்ப நல்லவர்.. அவரும் அவரோட ஃப்ரண்ட்ஸும் சேர்ந்து ஒரு பிஸ்னஸை சக்சஸ் ஃபுல்லா செஞ்சுகிட்டு இருக்காங்க. அவரு என்கிட்ட கொஞ்ச நாள் டைம் கேட்டார் ப்பா ..​

தொழில்ல முன்னேறிட்டு உங்ககிட்ட வந்து பொண்ணு கேட்கிறதா சொல்லி இருக்காரு.." என்று தன் காதலன் மீது இருந்த நம்பிக்கையில் தந்தையிடம் சந்தோஷமாகவே கூறினாள் தீப்தி.​

அவள் கூறுவது அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த சிதம்பரத்திற்கு உள்ளுக்குள் கோபம் பெருகிக்கொண்டே சென்றது. அதனை வெளியில் மகள் மீது காட்ட முடியாமல் அடக்கிக் கொண்டு இருந்தார் அவர். தந்தையின் நிலை புரியாத தீப்த்தியோ​

"என்னப்பா யோசிக்கிறீங்க..? அவரை ஒரு தடவை மீட் பண்ணி பாக்குறீங்களா ?​

உங்களுக்கும் ரொம்ப புடிச்சி போகும் .."​

என்று மேலும் பேசினாள்.

இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாத சிதம்பரம் தனது வாயை திறந்து பேச ஆரம்பித்தார். "நீ சொல்றது எல்லாம் சரிதான்.. நான் விஷ்ணுவை பற்றி எல்லா விஷயங்களையும் விசாரிச்சிட்டேன். அவருக்கு அம்மா அப்பா இல்லையாமே .. அனாதைனு சொல்லி வெளியே பேசிக்கிறாங்க.. அது உண்மை தானே .."​

என்று சிதம்பரம் அவளை பார்த்து கேட்க அவளுக்கு திக் என்றானது.​

இதற்கு அவள் என்ன பதில் சொல்வார் .?​

அவளுக்கு வேண்டுமானால் அவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கலாம். அவனுடைய காதல் மட்டுமே அவளுக்கு போதுமானதாக இருக்கலாம் .​

ஆனால் அவளுடைய குடும்பத்திற்கு அது போதாதே. சென்னையில் முக்கிய புள்ளியாக இருக்கும் சிதம்பரத்தின் மருமகன் பற்றி அனைவரும் விசாரிக்கக் கூடும் ..​

தொழிலில் கூட அவருக்கு அவன் ஈடாக இல்லை. இதில் அவனுக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை ..இப்படி ஒருவனை அவர் தனது மருமகனாக ஏற்றுக் கொள்வாரா என்ன?​

தீப்தியிடம் அவர் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.​

என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவும் இல்லை. எனவே அமைதியாக நின்று இருந்தாளே தவிர ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை.. இதுவரை அவளுடைய காதல் பற்றி தங்கையிடம் கூட அவள் கூறி இருக்கவில்லை.​

"தீப்தி எனக்கு இருக்கிற சொத்து எல்லாமே உங்க மூணு பேருக்கு மட்டும் தான். உங்களுக்காக தான் நான் ஓடி ஓடி உழைக்கிறேன். நீங்க மூணு பேரும் நல்லா இருக்கணும் என்றது மட்டும் தான் என்னோட எதிர்பார்ப்பு.. இப்படி இருக்கும் போது நீ ஒருத்தரை காதலிக்கிறேன்னு வந்து நிக்குறே.. இப்போ ஒரு சராசரி அப்பாவா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?" என்று கேள்வியாக அவளைப் பார்த்தார்.​

இப்போது தீப்திக்கு மனது படபடவென அடித்துக் கொண்டது. அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று . எப்போதும் தீப்தி தந்தையை எதிர்த்து பேசும் ரகம் இல்லை.. இஷிகா தான் தொனதொன என்று பேசிக்கொண்டு இருப்பாள். ஆனால் தீப்தி வீட்டில் தாய் தந்தை அண்ணன் சொல்வது அனைத்தையும் கேட்டு நடக்கும் அமைதியான குடும்பப் பெண்..​

"என்னை மன்னிச்சிடுமா.. உன்னோட காதலுக்கு என்னால ஓகே சொல்ல முடியாது. என்னோட மருமகன் என்னோட அந்தஸ்துக்கு ஏற்றவனா அழகான குடும்பம் உள்ளவனா இருக்கணும். இது தான் என்னோட எதிர்பார்ப்பு. இப்போ நீ ஆசைப்பட்ட பையன் இதுல ரெண்டுலயுமே வரமாட்டான். அப்போ நான் என்ன செய்யட்டும்?​

அதனால நான் இப்போ ஒரு முடிவு எடுத்து இருக்கேன். அந்த பையன் கூட நீ கொஞ்ச நாள் தான் பழகி இருப்ப.. ஆனா 22 வருஷமா வளர்த்த உன் அப்பா அம்மா உனக்கு முக்கியமா இருந்தா நீ நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்குவ.... "​

என்று தீர்க்கமாக கூறியவர் அவளைஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றார்.​

தீப்திக்கு தான் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. அன்று இரவு முழுவதும் அழுது கொண்டே தான் இருந்தாள். அடுத்த நாள் காலையிலே விஷ்ணுவிற்கு அழைத்து தந்தை கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிவிட்டாள் தீப்தி. எப்படியாவது தந்தையிடம் வந்து தன்னை பெண் கேட்குமாறு கூறினாள். நண்பர்களிடம் பேசிவிட்டு ஒரு முடிவு சொல்வதாக கூறினான் விஷ்ணு.​

அவன் கூறியபடியே தனது நண்பர்களுடன் பேசியவன் அடுத்த இரண்டு நாட்களிலேயே அர்னவின் தாய் தந்தை உடனும் தனது தோழர்களுடனும் பெண் கேட்டு தீப்தியின் வீட்டுக்கு வந்து விட்டான்..​

அன்று வீட்டில் இஷிகா மட்டும் இருக்கவில்லை. மற்ற வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அங்கு தான் இருந்தனர்.​

இப்படி வீட்டிற்கு பெண் கேட்டு வருவார்கள் என்று சிதம்பரம் நினைக்கவில்லை போலும். அவரிடம் சிறு தடுமாற்றம் இருக்கவே செய்தது. எப்போதும் தனது பேச்சை கேட்டு நடக்கும் மகள இந்த விடயத்தை அன்றோடு விட்டு இருப்பாள் என்று எண்ணினார் அவர் .​

ஆனால் இவர்கள் இங்கு வந்து விட்டார்கள்.. இப்போது எப்படியாவது இவர்களை இங்கிருந்து அனுப்ப வேண்டும். அது தான் அவரது ஒரே குறிக்கோளாக இருந்தது.​

அர்னவின் தாய் தந்தை இருவரும் முறையாக தீப்தியை பெண் கேட்க கொதித்து எழுந்து விட்டார் சிதம்பரம்.​

" என்ன சார் நீங்க ..பெரியவங்க தானே. இப்படி சின்ன பசங்க பேச்சைக் கேட்டு எங்க வீடு தேடி வந்து இருக்கீங்களே.. உங்களுக்கு கூச்சமாவே இல்லையா ? இந்த பையனோட தகுதி என்ன என் பொண்ணோட தகுதி என்ன? என் பொண்ணை நான் ராணி மாதிரி வளர்த்து வெச்சிருக்கேன். ஆனா அதேபோல இந்த பையனால என் பொண்ணை பார்த்துக்க முடியுமா என்ன?" என்று அவர் கேள்வியாக நிறுத்தினார் அவர்.​

தான் அவமானப் பட்டாலும் பரவாயில்லை.. தனக்காக வேண்டி வந்த தன் தோழனின் தாய் தந்தை அவமானப்படுவது விஷ்ணுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இங்கு வந்ததிலிருந்து அமைதியாக இருந்தவன் இப்போது முதல் முறையாக வாய் திரந்தான் .​

"என்னை மன்னிச்சிடுங்க சார். நான் இப்போ பேசுறது உங்களை அவமதிக்கிறது போல இருக்கலாம். ஆனா நான் இப்போ பேசியே ஆகணும்.. சின்ன வயசுல இருந்து அனாதை ஆசிரமத்தில் தான் நாங்க ரெண்டு பேரும் வளர்ந்தோம். எங்களுக்கு எல்லாமுமா இருந்தது அர்னவோட அம்மா அப்பா இரண்டு பேரும் தான். அன்னையிலிருந்து இன்னை வரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் அம்மா அப்பா என்று தான் நாங்கள் கூப்பிடுவோம்.. அப்படிப் பட்டவங்களை நீங்க இப்படி பேசுறது எனக்கு பிடிக்கல.​

உங்களுக்கு என்னை தானே பிடிக்கல அப்போ என்னை திட்டுங்க ..ஏன் அவங்களை அவமதிக்கிற மாதிரி பேசுறீங்க. உங்க கிட்ட கோடி கோடியா பணம் இருக்கலாம். அதுக்காக என்ன வேணா பேசுவீங்களா ? உங்க பொண்ணை எனக்கு புடிச்சிருக்கு. உங்க பொண்ணுக்கும் என்னை பிடிச்சிருக்கு.. நான் எங்கே கூப்பிட்டாலும் அவ என் கூட வருவா. ஆனா அது முறை இல்லை. உங்களுடைய சம்பந்தத்தோட தான் இந்த கல்யாணம் நடக்கணும். அதுக்காகத் தான் இவ்வளவு தூரம் நாங்க கஷ்ட படறோம்." என்று தன் மனதில் உள்ளதை பேசினான் விஷ்ணு.. அடுத்த சில நிமிடங்கள் அங்கு அமைதியே..​

இதற்கு மேல் தான் அமைதியாக இருப்பது முறை அல்ல என்று உணர்ந்த தீப்தி தந்தையின் அருகே சென்று "அப்பா அவர் ரொம்ப நல்லவர். எனக்காக எது வேணாலும் செய்வார்." என்று தந்தையிடம் மெல்லிய குரலில் பேச அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. எனவே தனது தாயின் முகத்தை பாவமாக பார்த்தாள் தீப்தி.​

கவிதாவிற்கோ விஷ்ணுவை பிடித்திருந்தது.. எனவே அவரும் தனது கணவன் அருகில் சென்று "என்னங்க நீங்க ..?​

பார்க்க ரொம்ப நல்ல பையனா தெரியுறான்..​

நம்ம அந்தஸ்துக்கு இல்லைனா என்ன இப்படி வீட்டுக்கு வர நல்ல பையனை விட்டுடலாமா? இதுல நம்ம பொண்ணுக்கும் வேற ரொம்ப பிடிச்சிருக்கு. அவளோட சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்.." என்று மகளுக்காக வேண்டி பேசினார் அவர்..​

நீண்ட நேரத்திற்கு பிறகு இப்போது தான் சிதம்பரம் வாயை திறந்தார். "சரி அப்போ அந்தப் பையனை நம்ம வீட்டோட மாப்பிள்ளையா வர சொல்லு.. என் பொண்ணோட சொத்து எல்லாம அவளுக்கு பிரிச்சு கொடுக்கிறேன். இங்க இருந்தே நம்ம பிசினஸை பார்க்க சொல்லு.. முடியுமா அவரால?"​

என்று மனைவியிடம் கேள்வி கேட்டவர் தனது புருவத்தை உயர்த்தி விஷ்ணுவைப் பார்த்தார்.​

அவருக்கு நன்றாகவே தெரியும் விஷ்ணு அவருடைய இந்த கண்டிஷனுக்கு ஒப்புக்கொள்ள மாட்டான் என்று. அதனால் தான் இப்படி தான் மகளின் காதலுக்கு விருப்பம் தெரிவிப்பதாக வெளியில் காட்டிக் கொண்டு இப்படி பேசினார்..​

பாவம் அவரது வீட்டினருக்கு தான் இது புரியவில்லை. ஆனால் வந்திருந்தவர்களுக்கு அவரது அணுகுமுறை நன்றாகவே புரிந்தது.​

தேவ் ஆனந்த் மற்றும் அர்னவ் இருவரும் பார்வையாளர்களாகவே இருந்து விட்டனர் .​

விஷ்ணுவின் விஷயத்தில் அவன் தான் பேசி முடிவெடுக்க வேண்டும் என்பது அவர்களது கருத்து. இடையில் இவர்கள் ஏதாவது பேசப்போய் இந்த திருமணம் நின்று விட்டால் நண்பனின் நிலை அதனால் அமைதியாக இருந்து விட்டனர்.​

இருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்ட விஷ்ணு​

"சாரி சார் எனக்கு உங்க பொண்ணு முக்கியம்தான். அவளுக்காக எது வேணாலும் செய்வேன். ஆனா என்னோட சுயமரியாதையை இழக்குற எந்த வேலையும் நான் செய்ய மாட்டேன். எனக்கு என்ன சார் நான் சுயமா தொழில் செய்றேன். என்னை நம்பி வர்ற பொண்ணே கண் கலங்காம கடைசி வரை காப்பாத்துற சக்தி என்கிட்ட இருக்கு. இடையில எதுக்கு சார் உங்க சொத்து.. உங்களோட பணத்தை நீங்களே வச்சுக்கோங்க.. நான் வரேன் சார்.."​

என்று அவரிடம் தைரியமாக நேருக்கு நேர் பேசியவன்‌ திரும்பி அவனுடன் வந்தவர்களை பார்த்து "அப்பா அம்மா வாங்க போகலாம்.. நீங்களும் வாங்க டா .."என்று கூறி தீப்தியை கூட பார்க்காது வெளியேறி விட்டான்.​

சிதம்பரம் சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறை தான் ..​

அவர் நினைத்தது போல வீடு தேடி வந்தவனை வெளியே அனுப்பி விட்டார். அதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இவர் வெளியே போ என்று சொல்லாமல் அவனே சென்று விட்டான்..​

விஷ்ணுவின் கோபம் குறையுமா? அப்படி குறையா விட்டால் தீப்தி யின் நிலை?​

தொடரும்...​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 17​

இப்படியே ஒரு மாத காலம் கடந்து சென்று விட்டது. தேவ் ஆனந்தும் தொழில் நிமித்தமாக சென்னையை விட்டு கிளம்பி விட்டான்.
விஷ்ணுவாக தீப்திக்கு அழைத்து இதுவரை பேசவே இல்லை ..
தீப்தி அழைத்த போதும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்து விடுவான்.. அவனுக்கு அவள் மீது எல்லாம் கோபம் இல்லை.. அவளுடைய தந்தை மீது தான் அவனுடைய கோபம் இருந்தது. தான் தாய் தந்தையாக மதிக்கும் அர்னவின் பெற்றோரை அவர் அவமதித்தது இவனுக்கு வேதனையாக இருந்தது ..எனவே அந்த கோபத்தை தான் தீப்தி மேல் காட்டினான்.​

இப்படி இருக்கையில் ஒரு நாள் தீப்தி விஷ்ணுவிற்கு அழைத்தாள்.
"விஷ்ணு ஏன் இப்படி என்கூட பேசாம இருக்கீங்க? நான் இப்ப எவ்வளவு பெரிய பிரச்சினைல இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?
எங்க அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார் .. இன்னும் கொஞ்சம் நாள்ள கல்யாணம் அது இதுன்னு பேசிகிட்டு இருக்கார். மாப்பிள்ளை வேற யாரும் இல்ல எங்களோட ஃபேமிலி ஃப்ரெண்ட் அபிமன்யு தான்..​

அபிமன்யுவ எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும்... அவரை வேணாம்னு காரணம் சொல்றதுக்கு எந்தவித குறையும் அவர்கிட்ட இல்ல .. அதனால என்னால வீட்ல பேச முடியாது.. வந்து என்னை கூட்டிட்டு போங்க. அவ்வளவு தான் சொல்லிட்டேன்.." என்று கூறியவள் மற்றைய பக்கம் விஷ்ணு என்ன பேசுகிறான் என்று கூட கேட்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.​

அப்போதிலிருந்து விஷ்ணுவிற்கு அதே யோசனை தான்.. என்ன செய்வது என்று அவனால் யோசிக்கக்கூட முடியவில்லை. இப்படி அவளை அழைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் சென்று திருமணம் முடிப்பதில் அவனுக்கு விருப்பமில்லை. பெரியோர்களின் ஆசியுடன் அவர்களுடைய வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் அவனது எண்ணம். ஏற்கனவே அனாதை ஆசிரமத்தில் தனியாக வளர்ந்தவன் அவன். இதில் அவனது திருமண வாழ்க்கை‌ வேறு தனியாக அமைய வேண்டுமா என்பது தான் அவனது யோசனை..​

இப்போது இவை அனைத்தையும் தேவ் ஆனந்திடம் கூறி அவனை குழப்ப விரும்பாது அர்னவ்விடம் மட்டும் தனது பிரச்சினையை கூறினான் விஷ்ணு. அதற்கு அர்னவ் கூறிய ஒரே வழி தீப்தி கூறியது போல் அவளை அழைத்துக் கொண்டு சென்று பதிவு திருமணம் செய்வது தான். ஆனால் இதில் விஷ்ணுவிற்கு உடன்பாடு இல்லை ..எனவே அமைதியாக என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் அவன்..​

*******​

இங்கு திருமணம் என்று கூறியதில் இருந்தே தீப்த்தியின் முகம் சரி இல்லாததைக் கண்ட இஷிகா தனது அக்காவிடம் என்னவென்று விசாரித்தாள். அவளுக்கு தான் விஷ்ணுவின் கதை எதுவுமே தெரியாதே. அவள் கேட்டது தான் தாமதம் அவர்களுடைய காதல் கதை தொடக்கம் விஷ்ணு அவளை பெண் கேட்டு வீட்டுக்கு வந்தது வரை அனைத்தையும் தங்கையிடம் கொட்டி தீர்த்தாள் தீப்தி ..​

"என்ன அக்கா சொல்ற இவ்வளவு நடந்து இருக்கா? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லல.."
என்று கவலை கோபம் இரண்டும் கலந்த உணர்வுடன் கூறிய இஷிகா அடுத்த நொடியே சென்று தந்தையிடம் பேசினாள்.​

" அப்பா என்னப்பா இதெல்லாம். அக்கா தான் வேறு ஒருத்தரை பிடிச்சு இருக்கான்னு சொல்றா இல்ல. எதுக்காக அபிமன்யுவை இடையே இழுத்து அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க.. ப்ளீஸ் பா அவளோட சந்தோஷம் தானே நமக்கு முக்கியம். காசு பணம் எல்லாம் முக்கியமா?
அது இன்னைக்கு இருக்கும் நாளைக்கு போகும்..​

நல்ல மனுஷங்க தான் முக்கியம். அபிமன்யு ரொம்ப நல்லவர் தான். நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மனசு ஒத்துப் போகாத வாழ்க்கையில என்னப்பா இருக்கு? இந்த கல்யாண வாழ்க்கையில அபிமன்யுவுக்கும் சந்தோஷம் இருக்காது.. நம்ம அக்காவுக்கும் சந்தோஷம் இருக்காது.. ப்ளீஸ் பா.. எனக்காக அக்காவோட காதலுக்கு ஓகே சொல்லுங்க .."
என்று தந்தையிடம் கெஞ்சினாள்
இஷிகா..​

"என்னம்மா உன் அக்கா பேசியே நான் ஒத்துக்கல.. இப்போ நீ வந்து அவளுக்கு வக்காலத்து வாங்குறியா? நீங்க எவ்வளவு தான் சொன்னாலும் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறதா இல்ல ..
அந்த பையனோட அந்தஸ்துக்கும் நம்ம அந்தஸ்துக்கும் செட்டே ஆகாது. இதுல அந்த பையனை என் வீட்டு மாப்பிள்ளையா ஏத்துக்கணுமா என்ன?
உங்க அக்காவுக்கு அப்படி ஒரு ஆசை இருந்தா அதை தூக்கி போட சொல்லு.. என்னோட பேச்சைக் கேட்டு நடக்கிறதா இருந்தா இந்த வீட்ல இருக்க சொல்லு.. இல்லைனாலும் ஒரு பிரச்சனையும் இல்லை.. வீட்டை விட்டு போக சொல்லு.." என்று கரராக கூறியவர் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்..​

இப்போது அக்கா தங்கை இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே அடுத்த முயற்சியாக அபிமன்யுவிடம் பேச சென்றனர் இருவரும்.
ஆனால் அபிமன்யு சொன்ன கதையோ வேறு. 'ஆம் அவன் சிறு வயதில் இருந்தே தீப்த்தியை காதலிக்கிறானாம்.. அவள் என்றால் அவனுக்கு உயிராம்.
இவ்வளவு சீக்கிரம் அவர்களுடைய திருமணம் நடக்கும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லையாம்.. '​

இந்த விடயம் அக்கா தங்கை இருவருக்கும் புதிது ..
இதற்கு மேல் அவனிடம் பேசி என்ன செய்ய .
எனவே அமைதியாக வீடு திரும்பிய இருவரும் மீண்டும் தந்தையிடம் பேசவே முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாறாக இருந்தார் அவர்களுடைய தந்தை..​

தீப்தியை தனியாக சந்தித்த சிதம்பரம்
" இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு கல்யாணம் நடக்க போகுது. இதுக்கு மேல நீ அந்த விஷ்ணு தான் வேணும்னு சுத்திக்கிட்டு இருந்தேன்னா உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் .
அந்தப் பையனோட மூச்சை நிறுத்திடுவேன் .
என்னம்மா அப்படி பாக்குற இந்த அப்பா நல்லவன் என்று நினைச்சுக்கிட்டு இருந்தியா? நான் நல்லவன் தான்.​

எனக்கு யாரும் கெட்டது செய்யாதவரை நல்லவன் தான்.. இப்போ அந்த அனாதை பையன் கண் வச்சு இருக்கிறது இந்த சிதம்பரத்தோட பொண்ணு மேல. அவன் அப்படியே உயிரோட நல்லா இருக்கணும்னா உன்னை மறந்துவிட்டு அவனோட தொழிலை பார்த்துகிட்டு நல்ல ஒரு பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிட்டு வாழ சொல்லு.. அப்படி இல்லைன்னா அவன் உயிருக்கு தான் ஆபத்து.. அதைவிட ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா நான் இப்ப சொன்னது உனக்குள்ளயே வச்சுக்கிறது தான் உனக்கும் நல்லது அந்த பையனுக்கும் நல்லது... வெளியே சொன்னா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்.."
என்று எச்சரித்தார் அவர்..​

தீப்திக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. தந்தை இப்படியெல்லாம் பேசுவாரா?
அவளுடைய தந்தையா இது? அவளால் எண்ணிப் பார்க்க கூட முடியவில்லை.. அவள் மட்டுமா அதிர்ச்சி அடைந்தாள். இவை அனைத்தையும் தூணுக்கு பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்த இஷிகாவும் சேர்ந்து‌ அல்லவா அதிர்ச்சியடைந்தாள்..​

இதுவரை காலமும் அவளுக்கு அவளுடைய தந்தை தான் நாயகன்.. ஆனால் இன்று அந்த நாயகன் அவள் கண் முன்னாலே வில்லனாகிப் போனது ஏனோ?.
அன்றிலிருந்து தான் அவள் தந்தையை விட்டு விலக ஆரம்பித்தாள்..​

இதற்கு மேல் அக்கா தங்கை இருவரும் திருமணத்தை நிறுத்துவது பற்றி பேசவே இல்லை. தந்தை மிரட்டியதை பற்றி தங்கையிடம் வாய் திறக்கவில்லை தீப்தி.
அதே போல் இஷிகாவும் தனக்கு அந்த விடயம் தெரிந்ததை போல் காட்டிக் கொள்ளவும் இல்லை.​

திருமணநாள் நெருங்க நெருங்க தீப்தி யின் முகம் கவலையில் வாடிக் கொண்டே சென்றது.. முகத்தில் சிரிப்பே இல்லை. கல்யாண பெண்ணிற்கான கலையும் இல்லை அவளிடம்.​

தந்தைக்குப் பயந்து அக்கா அபிமன்யுவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்த இஷிக்காவிற்கு திருமணத்தன்று இரவு அக்காவை காணவில்லை என்ற செய்தி தான் வந்து சேர்ந்தது..
உண்மையில் தனது அக்கா இப்படி செய்யக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அமைதியின் உருவான தனது அக்காவா இப்படி செய்தாள்? இல்லை தந்தை தான் ஏதாவது செய்து விட்டாரா என்று கூட யோசித்தாள் இஷிகா.​

அவர்களுடைய வீடு திருமண கலையிலிருந்து இறுதி சடங்கு நடந்த வீட்டை போல் மாறிவிட்டது. சிதம்பரம் தான் கோபத்தின் உச்சகட்டத்தில் இருந்தார் தன்னை ஏமாற்றிவிட்டு சென்ற மகளை எண்ணி.​

********************​

"ஏன்டா இப்படி பண்றீங்க?
இப்போ அவளை கடத்திட்டு வந்து இருக்கீங்களே.. அவ அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமா. பேசாம கொண்டு போய் அவங்க வீட்டிலேயே விட்டுட்டு வந்துடுங்கடா.." என்று நண்பர்கள் இருவரிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தான் விஷ்ணு.​

"ஏன் விஷ்ணு இப்படி பேசுறீங்க. நான் தான் தேவ் அண்ணா கிட்ட சொல்லி என்னை கூட்டிட்டு வர சொன்னேன்.. அவங்க ஒன்னும் என்னை கடத்திட்டு வரல. உங்களுக்கு இஷ்டம்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்படி இல்லன்னா தனியாவே எங்க அண்ணன்ங்க கூட இருந்துக்குறேன்.. என்ன அண்ணா என்னை பார்த்துப்பீங்க தானே.." என்று முதலில் விஷ்ணுவிடம் கோபத்தில் சத்தம் போட்டவள் தேவ் ஆனந்திடமும் அர்னவிடமும் திரும்பி சம்மதம் கேட்டாள் தீப்தி.​

தங்கை என்று ஒருத்தி இல்லாது இருந்த இரு அண்ணன்களும் அவளை உடனே தங்கள் தங்கையாக தத்தெடுத்துக் கொண்டனர்.
" சரிமா அவனுக்கு பிடிக்கலைன்னா என்ன.. நீ எங்க கூட இருந்துக்கோ.. உனக்கு ஒரு நல்ல பையனா பார்த்து நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.."
என்று நக்கலாக கூறிய தேவ் ஆனந்த் அப்படியே சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.​

விஷ்ணு இந்த விடயம் பற்றி தேவ் ஆனந்திடம் கூறாதே என்று அர்னவிடம் கூறினாலும் அர்ணவால் அப்படி இருக்க முடியவில்லை ..எனவே நண்பனுக்கு அழைத்து இங்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்து விடயங்கள் பற்றியும் கூறி விட்டான்.​

தேவ் ஆனந்தும் இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு நண்பனுக்காக இங்கே வந்து தீப்தியுடன் பேசி அவளுடைய சம்மதத்துடன் அவளை இங்கு அழைத்து வந்து விட்டான்.​

எப்படியோ விஷ்னுவை பேசி பேசியே கரைத்த இருவரும் அர்னவின் பெற்றோர் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்..
திருமணம் முடிந்த கையோடு இருவரையும் அழைத்துக் கொண்டு தான் இருக்கும் ஊருக்கு சென்று விட்டான் தேவ் ஆனந்த்.​

இங்கு உள்ள தொழிலை தான் பார்த்துக் கொள்வதாக அர்னவ் கூறிய பிறகு தான் இந்த முடிவை எடுத்தனர் ..
ஏனெனில் தீப்த்தியின் தந்தை இந்த சென்னையில் பெரிய புள்ளி. எனவே அவருடைய கண் படும் இடத்தில் இவர்கள் இருவரும் இருப்பது நல்லதல்ல என்று உணர்ந்த தேவ் ஆனந்த் அவர்களை தன்னுடைய இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டான்..
சிறிது காலம் சென்ற பிறகு அனைத்தும் மாறக்கூடும் என்று எண்ணினான் அவன்..​

தொடரும்
....





 

Mafa97

Moderator

அத்தியாயம் 18​

இப்படியே காலங்கள் கடந்து செல்ல தீப்தி ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.. அவர்களோ அந்த புது வரவை கொண்டாடி தீர்த்து விட்டனர். ஆதித்யா என்ற பெயர் சூட்டி அழகு பார்த்தனர் தோழர்கள் மூவரும்.
அனாதையாக இதுவரை இருந்தவர்களுக்கு அந்த குழந்தை ஒரு வரம் அல்லவா..​

அன்பான கணவன், அழகான குழந்தை, சொந்த தங்கை போல் பார்த்துக் கொள்ளும் அண்ணன்கள் என்று
எத்தனை சந்தோஷங்கள் இருந்தாலும் தீப்திக்கு எப்போதுமே தன் வீட்டு நினைவு தான்.
அவர்களும் தன்னுடன் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவள் நினைக்காத நாளே இல்லை.​

அதிலும் அடிக்கடி இஷிகா பற்றிய எண்ணம் தான்..
அவளுக்காக தந்தையிடம் போராடிய தங்கையிடம் கூட சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி வந்ததை நினைத்து அவளுக்கு வேதனையாக தான் இருக்கும். 'இப்படி செய்து விட்டேனே.. அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள்?' என்று அடிக்கடி விஷ்ணுவிடம் அவள் கூறி வருந்துவது உண்டு.​

இஷிகா அப்படி, ..
இஷிகா இப்படி.. அவளுக்கு இது பிடிக்கும்.. இது பிடிக்காது.. அவளது பழக்க வழக்கங்கள் என அனைத்தையுமே அடிக்கடி அவள் விஷ்ணுவிடமும் கூறிக் கொண்டு இருப்பாள்.. அப்படி விஷ்ணுவிடம் கூறும் போது சில வேலை தேவ் ஆனந்தும் உடன் இருப்பான்..
அதிலேயே இஷிகா மேல் சிறு ஈர்ப்பு தேவ் ஆனந்திற்கு தோன்ற ஆரம்பித்தது..​

ஒரு நாள் தீப்தியிடம் அவளுடைய புகைப்படத்தையும் கேட்டு பார்த்து விட்டான்.. அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் அவளை பின்பற்ற ஆரம்பித்தவன் அவளுடைய நாளாந்த வேலைகளையும் கவனிக்க ஆரம்பித்தான்..
இது ஏன் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. இஷிகா பற்றிய செய்தி அவனுக்கு தெரிய வேண்டும் என்ற அவா இருந்து கொண்டே இருந்தது அவனுள்.​

அர்னவ் மாதத்தில் ஒருமுறை வந்து ஆதித்யாவையும் நண்பர்களையும் பார்த்து விட்டு செல்வான்..
அன்று ஆதித்யாவின் இரண்டாவது பிறந்தநாள். எனவே அர்னவ் அவர்களை சந்திக்க வந்திருந்தான்..
அன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழித்தவர்கள் அடுத்த நாள் வெளியே சென்று ஊரை சுற்றி பார்க்கலாம் என்று திட்டம் தீட்டினர்.​

இவர்களுடைய எண்ணம் இப்படியாக இருக்க அவர்களை படைத்த கடவுளுடைய எண்ணம் வேறாக இருந்தது.
எல்லோரும் சேர்ந்து வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்து இருக்க முக்கியமான வேலை இருப்பதாக சொல்லிக் கொண்டு அர்னவ் அலுவலகம் கிளம்பி விட்டான்.​

மற்றவர்கள் தயாராகி இருக்க அப்போது தேவ் ஆனந்துக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதை எடுத்து காதல் வைத்தவனின் முகம் தீவிரமாக மாறியது.
திரும்பி விஷ்ணுவை பார்த்தவன் "சாரிடா மச்சான் நீங்க ரெண்டு பேரும் குழந்தையோட பத்திரமா வெளியே போயிட்டு வாங்க.. எனக்கு முக்கியமான வேலை வந்துருச்சு.. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ஒரு திருடனை பிடிச்சிருக்காங்க.. அவன் ஒன்னும் சின்ன திருடன் இல்லடா.. கோடிக்கணக்கில் திருடுறவன்.. சோ நா அங்க போயே ஆகணும்.. அவனை நான் தான் ஹேண்டில் பண்ணனும்.. சாரிடா மச்சான்.. குழந்தை பத்திரம்.." என்று கூறி விட்டே அங்கிருந்து சென்றான்.​

அப்போதுதான் அவன் தனது நண்பனை பார்த்த கடைசி தருணம்.. விஷ்ணுவின் முகத்தில் அத்தனை சந்தோஷம் ..
அனைத்தும் கிடைத்து விட்ட மகிழ்ச்சி அவனது முகத்தில் தெரிந்தது.. இந்த ஜென்மத்திற்கு இது போதும் என்று நினைத்தானோ என்னவோ.. இந்த உலகை விட்டு விடை பெற்று விட்டான் அவன்.​

தேவ் ஆனந்த் அந்த திருடனை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கும் போது விஷ்ணுவிடமிருந்து அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
எந்த பெரிய வேலையில் இருந்தாலும் நண்பனின் அழைப்பு வந்தால் அதை உடனே எடுத்து பேசுவது இவனின் வழக்கம். அதே போல் இன்றும் காதில் வைத்தவன் "சொல்லுடா மச்சான்.. வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டீங்களா?"
என்று தான் கேட்டான் ..​

ஆனால் அந்தப் பக்கம் எந்த பதிலும் இல்லை..
மீண்டும் இவனே
" ஹலோ பேசுடா .."
என்று கூற அந்தப் பக்கம் இருந்து ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.​

"சார்.. இந்த ஃபோனோட சொந்தக்காரங்க வந்த கார் இங்கே ஆக்சிடென்ட் ஆகி இருக்கு.. உடனே இந்த இடத்துக்கு வாங்க.." என்று கூறி விட்டு அந்த அழைப்பை துண்டிக்கப் பட்டது..
ஒரு நொடி தேவ் ஆனந்தின் உலகமே நின்று விட்டதை போல ஒரு உணர்வு ..
போட்டது போட்டபடி இருக்க வேகமாக அந்தப் பெண் கூறிய இடத்திற்கு சென்றான் ‌..​

அவன் அங்கு செல்ல முன்னமே அந்த பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் அங்கு சென்று அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து இருந்தனர். இவனை கண்டதும் மரியாதை செய்தவர்கள் இவன் ஏன் இந்த இடத்திற்கு வந்தான் என்று கேள்வியாக பார்த்தனர்..​

ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் இவன் இல்லை.. பதட்டத்துடன்
"இங்க ஆக்சிடென்ட் ஆகி இருந்தவங்க இப்போ எங்க?' என்று கேட்டான்.
" ஏன் சார் இப்படி கேக்குறீங்க? ஏதாவது பிரச்சனையா? அவங்களை இதோ பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வச்சிருக்கோம்.
காரை பார்த்தா பெருசா ஒன்னும் அடி இல்லாத போல இருக்கு.. ஆனா அவங்களுக்கு ரொம்ப காயம்.." என்று அந்த பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பதிலளித்தார்.​

அதை பதட்டத்துடன் கேட்டு கொண்டு இருந்தவன்
"ஆமா..ஆமா.. அவன் என்னோட ஃபிரண்ட்.. எந்த ஹாஸ்பிடல் ?"
என்ற விசாரித்தவன் அவர்களுடைய பதிலை கூட எதிர்பாராமல் வேகமாக நடந்தான்..
அவனுடைய பின்னால் அங்கு இருந்த அதிகாரிகளும் மருத்துவமனையின் பெயரை சொல்லிக் கொண்டே சென்றனர்.​

எவ்வளவு வேகமாக சென்ற போதும் அங்கு சென்று அவன் கண்டது நண்பனின் உயிரற்ற உடலை தான் ..
உடைந்து போய் விட்டான் தேவ் ஆனந்த்.
அவனுக்கு தெரிந்த காலத்தில் இருந்து உடன் இருந்த நண்பன் அல்லவா விஷ்ணு.
இருவரும் அனாதை ஆசிரமத்தில் ஒன்றாகவே வளர்ந்தார்கள். ஒன்றாகவே படித்தார்கள்.. இன்று ஒன்றாகவே தொழில் கூட செய்யும் அளவிற்கு நெருங்கியவர்கள்.​

இப்படி அவன் தன்னை இடையில் விட்டு செல்வான் என்று தேவ் ஆனந்த் எதிர்பார்க்கவில்லை போலும் ..
தான் என்ன பதவியில் இருக்கிறோம் என்ன உடை அணிந்து இருக்கிறோம் என்று கூட அவன் யோசிக்கவில்லை .
அந்த ஹாஸ்பிடல் வராண்டாவில் சரிந்து அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டான் அவன்.
" ஏன்டா என்னை விட்டுப் போன.. ஏண்டா என்ன விட்டு போன.. நான் தனியா இருக்கனும் டா.."
என்ற வார்த்தையை தவிர அவனிடமிருந்து வேறு வார்த்தை எதுவும் வெளிவரவில்லை.​

அவனுக்கு கீழே வேலை செய்யும் அதிகாரிகள் அனைவரும் அவனுடைய இந்த தோற்றத்தை பார்த்து அப்படியே ஆடிப் போய் விட்டனர். எப்போதும் கம்பீரமாக பார்க்கும் தங்கள் மேலதிகாரி இப்படி சிறு குழந்தை போல் அழுவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்காக அவனிடம் சென்று சமாதானப் படுத்துவதற்கும் அங்கு யாருக்கும் தைரியம் இருக்கவில்லை..​

ஒரு வைத்தியர் மட்டும் அவன் அருகே வந்து அவனது தோளை தொட்டு
"சார் இது உங்களுக்கு யாரு?" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் பேசினார். அழுது கொண்டே அவரிடம்
"இவன் என்னோட ஃபிரண்ட்."
என்று தேவ் ஆனந்த் கூற
"சாரி சார்..உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ..பட் இப்போ உங்களால முடியுமா ..?"
என்று தயங்கிய படியே அந்த வைத்தியர் கேட்டார்.​

இதற்கு மேல் தான் இப்படி இருந்தால் சரிவராது என உணர்ந்தவன் கண்களை துடைத்துக் கொண்டு
" ஓகே போகலாம்.."
என்று அவருடைய பின்னால் சென்றான்.. அங்கே ஒரு பெண்ணின் மடியில் அமர்ந்து கையில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான் ஆதித்யா .​

அப்போது தான் அவனுக்கு ஆதித்யாவின் நினைவே வந்தது.. ஓடிச்சென்று அவனை அவருடைய கையில் இருந்து தூக்கியவன் அவனுக்கு முத்தம் மழை பொழிந்தான் ..
" டேய் கண்ணா உன்னை மறந்தே போயிட்டேன் டா.. நீ நல்லா இருக்க இல்ல.. அது போதும் டா எனக்கு.. உனக்கு எதுவும் ஆகலியே.." என்று சிறு குழந்தையிடம் குழந்தையாகவே மாறி கேட்டான் அவன்.​

அப்போது அங்கே இருந்த பெண்
"சார் ஆதித்யா பாப்பா என்கிட்ட தான் இருந்துச்சு..
குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு தான் போன்ங்க..
எனக்கும் இப்போ தான் ஆக்ஸிடென்ட்னு ஒரு பொண்ணு ஃபோன் பண்ணி சொல்லுச்சு..
உங்க கிட்ட கூட சொல்லாம நான் பதட்டமா இங்கே வந்துட்டேன்.." என்று கூறினார்..
அப்போது தான் அவரை பார்த்தான் தேவ் ஆனந்த்..
அது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்..
கெட்டதிலும் நல்லது என்னவென்றால் ஆதித்யாவை அவர்கள் இந்த பெண்ணிடம் விட்டு சென்றது தான்..​

மீண்டும் அந்த மருத்துவர்
"சார்..ஒரு முக்கியமான விஷயம்.."
என்று இழுக்க மீண்டும் பதட்டமாகி விட்டான் தேவ் ஆனந்த்..​

" என்ன சார் சொல்லுங்க ..?"
என்று படபடவென அவன் கேட்க அவனது தோளை தொட்டவர்
"நான் சொன்னா நீங்க வருத்தப்படுவீங்க.. ஆனா என்னால சொல்லாம இருக்க முடியல.. இந்த பையனோட அம்மாவுக்கு சுயநினைவு வரல.. இன்னும் அவங்க மயக்கத்தில் தான் இருக்காங்க .. இப்படியே இருந்தால் அவங்க கோமாவுக்கு கூட போகலாம் .. அவங்க தலைல பலமா அடிபட்டு இருக்கு.
ஆனா சார் உங்களோட போலீஸ்காரங்களோட தகவல் படி பார்த்தால் அந்த கார் ஒரு உயிரை எடுக்குற அளவு சேதமா இல்லை.. அடுத்தது அந்த பொண்ணோட தலைல கட்டையால யாரோ பலமா அடிச்சது போல இருக்கு ..எனக்கு என்னமோ இது ஆக்சிடென்ட் தான்னு தோணல சார்.. எதுக்கு நீங்க கொஞ்சம் விசாரிச்சு பாருங்க.."
என்று கூறி விட்டு மருத்துவர் சென்று விட்டார்.​

தேவ் ஆனந்துக்கு ஒரே யோசனையாக இருந்தது.. இப்போது அவனால் இது பற்றி சிந்திக்க கூட முடியவில்லை. முதலில் நண்பனுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்க வேண்டும் என்று தான் அவனுக்கு தோன்றியது.. உடனே அர்னவுக்கு அழைத்து அழுது கொண்டே நடந்தவற்றை கூறினான்..​

அவனும் சென்று அடுத்த நாளே தாய் தந்தையை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டான். அதன் பிறகு அனைத்தையும் அர்னவ் தான் பார்த்துக் கொண்டான். குழந்தையும் பசிக்காக அழ என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.. அர்னவின் தாய் தான் குழந்தையின் பொறுப்பை முழுதாக ஏற்றுக் கொண்டார்..​

தீப்தியும் கண் திறக்கவில்லை.. அவள் இரண்டு நாட்களில் கண் விழிக்கவில்லை என்றால் கோமாவிற்கு சென்று விடுவாள் என்று வைத்தியர்கள் வேறு சொல்ல இவர்கள் பயந்து போய் விட்டனர்..
கனத்த மனதுடன் சிறு வயதில் இருந்து கூடவே இருந்த நண்பனுக்கு இறுதிக் கடமையை முடித்தனர் மற்ற இருவரும்..​

********​

அவன் அனைத்தையும் கூறி முடியும் வரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தனர் அபிமன்யு, சுதீப், இஷிகா மூவரும்..​

"இது எல்லாத்துக்கும் உங்க அப்பா தான் காரணம்.. அவர் தான் இப்படி எல்லாம் பண்ணி இருக்கணும். அவரோட கண்ணுல படக்கூடாதுன்னு தானே நான் இவங்களை கூட்டிட்டு தூரமா போனேன். அப்ப கூட அவருக்கு என்ன?
ஏன் இப்படி பணத்தாசை பிடிச்சு அழையுறீங்க..
அவரோட திமிரை அடக்கனும.. அதனால தான் கல்யாணம் அன்னைக்கே உன்னையும் தூக்கினேன்.. அவர் அவமானப்படனும்.. தலை குனிஞ்சு நிக்கணும் ..இப்ப நேரடியாவே என்கிட்ட விளையாடலாம்.. முடிஞ்சா உங்க அப்பாவ என்கிட்ட இருந்து காப்பாத்திக்கோ"
என்று இஷிகாவை பார்த்து கோபமாக பேசினான்..​

அவனது பேச்சில் சுய உணர்வு பெற்றவள்
திகைத்து போய் நின்றிருந்தாள்..
"எங்க அப்பா அப்படி பண்ணி இருக்க மாட்டார்.
பெத்த பொண்ண யாராவது இப்படி பண்ணுவாங்களா.. உங்களோட போலிஸ் மூளை இப்படி தான் கேவலமா வேலை செய்யும்.."
என்று சத்தம் போட்டாள் இஷிகா.​

"ஏய்.." என்று தேவ் ஆனந்த் அவளை அடிக்க வர இடையில் புகுந்தான் அபிமன்யு.
"சார் கூல்..அவ ஏதோ .. விடுங்க பார்த்துக்கலாம்.. முதல் தீப்தி மை பற்றி யோசிப்போம்.. அப்பறம் மற்றதை பார்க்கலாம்.."
என்று அபிமன்யு அமைதியாக பேச அவனுடைய கூற்றுக்கு சரியென தலை அசைத்தனர் கனவன் மனைவி இருவரும்..​

தொடரும்...

 

Mafa97

Moderator

அத்தியாயம் 19​

இஷிகா இப்போது தான் திருமணம் முடித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறாள் என்று கூறலாம். அவளது அக்கா தீப்தி, அக்காவுடைய மகன் என இருவருடனும் அவள் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். முன்பை விட இஷிகாவிற்கு இப்போது வேலை அதிகமாக இருந்தது .. ஆதித்யாவை கவனித்துக் கொள்வதுடன் அக்காவையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவளுக்கு ..
கட்டாயம் என்பதை விட அந்தப் பணியை அவள் விரும்பியே செய்தாள்.​

சில வருடங்களாக தனது அக்காவை ஒருமுறையாவது சந்தித்து விட மாட்டோமா என ஏங்கிக் கொண்டு இருந்தவளுக்கு இப்போது அவள் உடன் இருப்பது அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் கவலை என்னவென்றால் தான் அவளுடன் இருந்தும் தன்னை உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் அக்கா இருக்கிறாளே என்பது தான்.​

விதியின் செயலை என்னவென்று சொல்வது.
' அக்கா சீக்கிரமே குணமாகி விட வேண்டும்' என்று தினமும் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள் அவள். மருத்துவர்களும் அவள் குணமாகி விடுவாள் என்று கூறிக் கொண்டு தான் இருக்கின்றனர் ..
ஆனால் நடந்த பாடு தான் இல்லை.​

அன்று இரவு ஆதித்யா நேர காலத்துடன் தூங்கி விட்டான். அவனை கழுத்து வரை நன்றாக போர்த்தி விட்டு நெற்றியில் முத்தம் கொடுத்தவள் வெளியே வந்து அக்காவையும் பார்த்தாள். அவளும் தூங்கி இருக்க மெல்ல நடந்து தோட்டப் பக்கம் சென்றாள் இஷிகா.​

அவளுக்கு முன்னமே அந்த இடத்தில் தேவ் ஆனந்த் அமர்ந்து வானில் தெரியும் முழு நிலவை ரசித்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் வேறு பக்கம் திரும்பி செல்ல போனவளை தேவ் ஆனந்தின் குரல் தடுத்து நிறுத்தியது.​

"நான் தனியா தான் இருக்கேன் நீயும் வந்தா நிலாவை சேர்ந்தே ரசிக்கலாம்.."
என்று அவன் கிண்டல் போல் கூற கோபத்துடன் அவனை திரும்பி முறைத்தாள் இஷிகா.
" எப்போ பாரு என்னை சீண்டிக் கிட்டே இருக்க வேண்டியது.. நான் வாயை திறந்தா தாங்க மாட்டார்.. ஒரு நாள் இருக்கு இந்த மனுஷனுக்கு .."என்று தனக்குள் முனுமுனுத்தாலும் அவனிடம் செல்ல மறக்கவில்லை.​

"வா உட்கார்.."
என்று கூறியவாறு அவள் அமர தனது அருகில் இடம் கொடுத்தான்.
அந்த இடத்தில் இயற்கையின் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இருக்கவில்லை.
இருவரும் தாங்கள் அறியாமலேயே தங்களுடைய துணையின் அருகாமையை உள்ளுக்குள் ரசித்தனர்.​

இஷிகா தான் அடிக்கடி அவனை பார்ப்பதும் மீண்டும் நிலவை பார்ப்பதுமாக இருந்தாள். அவளுடைய இந்த செய்கையை கண்டு கொண்டவன்
"என்கிட்ட ஏதாச்சும் கேட்கணுமா? அப்படி மனசுல ஏதாவது இருந்தா கேட்டு முடிச்சிடு.
பதில் சொல்ல நான் ரெடியா இருக்கேன்.." என்றான் மெல்லிய குரலில்..​

" இல்லையே.. நான் என்ன கேட்கணும் உங்ககிட்ட ..?"
என்று மீண்டும் அவனிடம் கேள்வி கேட்டாள் அவள்.
அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்
" உண்மையை சொல்லு.. என்கிட்ட எதுவும் கேட்க உனக்கு தோணவே இல்லையா?"
என்றான் ஆழ்ந்த குரலில்.​

அவன் அப்படி கேட்டதும் இஷிகா தனது பார்வையை தாழ்த்திக் கொண்டாள். ஆம் அவளுக்கு அவனிடம் நிறைய விஷயங்கள் கேட்க வேண்டி இருந்தது.
எப்படி கேட்பது என்று தான் தெரியவில்லை.​

அவனது மனதை புரிந்து கொண்டவன் போல்
"சும்மா கேளு சொல்றேன்.."என்றான் மீண்டும்.
"அது ..அது வந்து...
ஏன் நீங்க என் கிட்ட முன்னாடியே இதை பற்றி சொல்லல..?"
என்றாள் இஷிகா தயங்கிய படியே.
"எதைப் பற்றி சொல்லணும்..
என்னன்னு தெளிவா கேளு.."
அவனுக்கு அவள் என்ன கேட்க வருகிறாள் என்று தெரிந்தாலும் அவளுடன் விளையாடி பார்க்க எண்ணி இப்படி கூறினான்.​

"வேற என்ன உங்க கிட்ட கேட்க போறேன்..
அக்கா உங்க கூட தான் இருக்காங்கன்னு ஏன் என்கிட்ட சொல்லல.. ஆதித்யா என்னோட அக்கா பையன்னு ஏன் சொல்லல.. அது மட்டுமா.."
என்று இடையில் நிறுத்தியவள் அவனை பார்த்தாள்.​

'சொல்லி முடித்து விடு..' என்பது போல் பார்த்திருந்தான்.
எனவே மீண்டும் அவளே தொடர்ந்தாள்..
"நீங்க என்னை கல்யாணம் பண்ணனும்னா என்கிட்ட நேரடியா சொல்லி இருக்கலாம்.. உண்மையை சொல்லி இருந்தா நானே உங்களை கல்யாணம் பண்ணி இருப்பேன்.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு அபிமன்யுவை கல்யாணம் பண்ண இஷ்டமே இல்லை. அவர் கிட்ட கூட போய் சொல்லி பார்த்தேன்.. அவருக்கும் இஷ்டம் இல்லை தான். ஆனா எங்க அப்பாவும் அவங்க அம்மாவும் சேர்ந்து மிரட்டி தான் கல்யாணத்தை நடத்தவே தீர்மானிச்சாங்க..
அதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா நீங்க என்னோட அக்கா புருஷன்னு நான் தப்பா நினைச்சுட்டேன் ..
எத்தனை நாள் அதுக்காக அழுது இருப்பேன் தெரியுமா.. ஏற்கனவே கல்யாணம் பண்ண ஒருத்தர் என்னோட இஷ்டமே இல்லாமல் கல்யாணம் பண்ணது ஒரு வேதனை.. அப்றம் என்னோட அக்கா புருஷனே என்னை கல்யாணம் பண்ணி இருக்காருன்றது அடுத்த வேதனை.. அதுலயும் அக்கா உயிரோடவே இருக்கும் போது என்னை கல்யாணம் பண்ணி இருக்காருன்னா கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்களா.. எவ்வளவு மன கஷ்டங்களை நான் அனுபவிச்சு இருப்பேன். இதையெல்லாம் முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாம்.. சொல்லி இருந்தா உங்களுக்கு சப்போர்ட்டிவா இருந்திருப்பேனே தவிர உங்க மேல வன்மத்தை வளர்த்திருக்க மாட்டேன்."
என்று கூறி முடித்தாள் எங்கோ பார்த்துக் கொண்டு..​

இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்த அனைத்தையும் அவனிடம் கொட்டி தீர்த்து விட்டாள்
இஷிகா.
"என்ன சொன்ன?
என் மேல் வன்மத்தை வளர்த்து வச்சிருக்கியா ?" இத்தனை நேரம்
அவள் கூறிய அனைத்தையும் விட்டு விட்டு கடைசியாக அவள் கூறிய வாக்கியத்தை பிடித்துக் கொண்டான் அவன்.​

'இவன் என்ன லூசா?' என்ற ரீதியில் தான் அவள் அவனைப் பார்த்து வைத்தாள்.
"ஆமா இப்போது தான் ரொம்ப முக்கியமாக்கும்.. நான் இவ்வளவு நேரம் என்ன பேசினேன்.. நீங்க எதை புடிச்சிட்டு தொங்குறீங்க பாத்தீங்களா? பேசாம நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.."
என்று இஷிகா கூறியதும் அவனுக்கு சிரிப்பே வந்து விட்டது..​

"என்ன சொல்லு சொல்ற.. நான் எப்போவாச்சும் தீப்தி என்னோட வைஃப்ன்னு சொல்லி இருக்கேனா? சொல்லு உன் கிட்ட சொல்லி இருக்கேனா?"
என்று இஷிகாவை நேராக பார்த்து கேள்வி கேட்டான் தேவ் ஆனந்த்.​

அவளும் சிறிது நேரம் யோசித்து விட்டு இல்லை என்றே தலையசைத்தாள்.
"ஆமா உன்கிட்ட நான் சொல்லல.. அதேபோல ஆதித்யா என் பையன்னும் நான் சொல்லல. நான் இதுக்கு முன்ன கல்யாணம் ஆனவன்னும் உன்கிட்ட சொல்லல.. அப்புறம் நீயா அதை எல்லாம் நினைச்சதுக்கு நான் எப்படிள்மா பொறுப்பாக முடியும் ?
உன் மனசை தொட்டு சொல்லு.. இதுக்கு எல்லாம் நானா பொறுப்பு?" என்றான் தேவ் ஆனந்த்..​

ஆம் அவன் சொல்வதும் உண்மை‌ தானே..
ஆனால் அதை ஒத்துக் கொள்ள முடியாமல்
"அப்படின்னா நீங்க என்கிட்ட சொல்லி இருக்கணும்.. நீங்க ஆதித்யாவை அறிமுகப் படுத்தப் போது என் பையன்னு தான் அறிமுகப் படுத்தினீங்க.. அப்புறம் நான் என்ன நினைக்கிறது..
ஆதித்யா உங்க பையன்னா உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைச்சேன்.. அது என்னோட தப்பா? சும்மா சும்மா என்னையே குறை சொல்லாதீங்க.. இதுல உங்க தப்பும் இருக்கு..."
என்று தன்னை அவன் குறை கூறியது பிடிக்காமல் அவன் மீதும் பாதி தப்பை சுமத்தினாள் பெண்ணவள்.​

"சரி சரி இதுல ரெண்டு பேரோட தப்பும் இருக்கு.
சோ இதை இப்படியே விட்டுடலாம்.
இப்போ உனக்கு என் மேல எந்த டவுட்டும் இல்லை தானே.. நான் கட்ட பிம்மச்சாரிம்மா.. நூறு சதவீதம் இதை நம்பலாம்.."என்றான் விளையாட்டு போல்..
அவன் எப்படி சொன்னதும் ஏனோ இஷிகாவிற்கு சிறிது வெட்கம் தோன்றவே செய்தது..
அதை அவனுக்கு காட்டாமல் இருக்க வேறு பக்கம் திரும்பியவள்
"எனக்கு உங்க மேல இன்னும் கோபம் இருக்கு.."என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்..​

இதற்கு மேல் இங்கே இருந்தால் அவனிடம் செல்லும் அவளுடைய மனதை தடுக்க யாராலும் முடியாது என்பது அவள் அறிந்ததே..
எனவே அதில் இருந்து தப்பிக்கும் பொருட்டு வேகமாகவே சென்று விட்டாள் அவள்..
அவனுக்கு அவளுடைய மனநிலை புரிந்து தான் இருந்தது.. எனவே இந்த தருணத்தை ரசித்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் வெளியே அமைதியாக இருந்து கொண்டான்..​

***********​

அன்று ஞாயிற்றுக்கிழமை..
தேவ் ஆனந்த், ஆதித்யா, இஷிகா மூவரும் வீட்டில் தான் இருந்தனர்..
அவர்களை சந்திக்க வேண்டி அர்னவும் வந்திருந்தான்..
அனைவரும் பேசி சிரித்த போதும் ஏனோ அர்னவ் உடன் சகஜமாக பழக இஷிகாவால் முடியவில்லை. அவள் என்ன முயற்சித்தாலும் தனது தோழி ஆர்த்தியின் முகம் தான் கண் முன்னே வந்து சென்றது.
இஷிகாவிற்கு அழைத்த ஆர்த்தி இன்று தீப்த்தியை பார்க்க வீட்டிற்கு வருவதாக வேறு கூறி இருந்தாள். இதனிடையே அர்னவ்வும் இங்கே இருக்க தோழி வந்தால் என்ன நடக்கும்மோ என்பது தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது இஷிகாவிற்கு.​

அக்கா தன்னுடன் இருப்பதை பற்றி யாரிடம் கூறுவது என்று தெரியாத இஷிகா முதலில் ஆர்த்தி இடம் தான் கூறினாள். அதனை கேட்டு சந்தோஷப் பட்ட ஆர்த்தியும் ஞாயிற்றுக்கிழமை தீப்தியை பார்க்க வருவதாக கூறி இருந்தாள்.​

"இஷி..இஷி.."என்று இஷிக்காவை அழைத்தபடி உள்ளே வந்து சேர்ந்தாள் ஆர்த்தி..
தோழியை கண்ட மகிழ்ச்சியில் வாசலுக்கே சென்று அவளை வரவேற்றாள் இஷிகா.
"வாடி உன்னை கண்டு ரொம்ப நாளாச்சு.. அக்காவை பார்க்கவாவது உனக்கு இங்கே வர தோணிச்சே..."
என்று கூறினாலும் மாத்தி தோழியை கண்ட மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது..​

தோழிகள் இருவரும் பேசிக் கொண்டு உள்ளே வர அப்போது தான் அங்கே அர்னவ் இருப்பதை கண்டாள் ஆர்த்தி.
சிரித்துக் கொண்டே வந்தவளுடைய முகம் அவனைக் கண்டதும் நொடியில் வாடி போனது..​

அர்னவ்வும் ஆர்த்தியை இத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
எனவே அவளுடைய முக மாற்றத்தையும் அவன் கண்டு கொண்டான்.
இருவருக்கும் இது சங்கடமான நிலை தான்.
அதனை உணர்ந்து கொண்ட இஷிகா
"வாடி நாம முதல்ல போய் அக்காவை பார்த்துட்டு வரலாம்.." என்று தோழியை உள்ளே அழைத்துச் சென்றாள்.
அர்னவ் போகும் ஆர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.​

தொடரும்...

 

Mafa97

Moderator

அத்தியாயம் 20​

ஆர்த்தி அந்த இடத்தை விட்டு சென்ற பிறகும் அவளுடைய வார்த்தைகளில் இருந்த வீரியம் அர்னவ்வை நிலைகுலையச் செய்ய தவறவில்லை. அவள் கூறிய வார்த்தைகள் அப்படி இத்தனை நாள் அவள் இருந்த வேதனை அனைத்தையும் அவனைக் கண்ட நொடி கொட்டி தீர்த்து விட்டாள் பெண் அவள்..​

என்னடா மச்சான் ஒரு மாதிரியா இருக்க என்ற தேவ ஆனந்த் அர்னவ்வின் வாடிய முகத்தைக் கண்டு கேட்டான்.
ஒன்னும் இல்ல விடு பாத்துக்கலாம் என்று நண்பனுக்கு பதில் கூறினாலும் அவனுடைய முகத்தில் இருந்த யோசனை வகைகள் இன்னும் மாறவில்லை.​

எத மச்சான் பாத்துக்கலாம்னு சொல்ற கார்த்தி ஓட கல்யாணத்தை நீயே முன்னறிந்து நடத்தி வைக்க போறியா அப்படின்னு சொல்லு கூட நானும் வரேன் ஆச்சு நல்லபடியா கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் என்று நண்பனே கிண்டல் செய்யும் விதமாக பேசினான் தேவ் ஆனந்த்.​

டேய் நானே கோவத்துல இருக்கேன் பேசாம போய்டுடா.
என்ற அர்னவ் அமைதியாக கண் மூடிக் கொண்டான்.
அவனது கண்ணுக்குள் சற்று முன் நடந்தவைகள் படமாக ஓட ஆரம்பித்தன.​

தீப்தியை பார்த்து விட்டு வெளியே வந்த ஆர்த்தி அண்ணாவின் பக்கம் பார்வை கூட செலுத்தாது வெளியே செல்ல எத்தனிக்கும் போது ஆர்த்தி என்ன வீட்டுக்கு வந்துட்டு எதுவும் சாப்பிடாமல் போறீங்க.. ஏதாச்சும் சாப்பிட்டுட்டு உங்க பிரண்டோட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு நிதானமா போங்க.. என்றும் தேவ் ஆனந்த் அவளை தடுத்து நிறுத்தினான்.​

அவன் சொன்ன பிறகு அந்த இடத்தை விட்டு செல்வது அழகில்லை என்பதை உணர்ந்த ஆர்த்தி மெல்ல நடந்து சென்று அங்கு அவர்கள் முன் அமர்ந்தாள்.
அவள் பின்னால் வந்த இஷிகாவும் அங்கே தான் அமர்ந்தாள்.​

"உன்னோட லைஃப் எப்படி மா போகுது.?" என்று
அக்கறையுடன் தான் கேட்டான் தேவ் ஆனந்த்.
ஆனால் அவனது இந்த கேள்வி இஷிகாவிற்கு பிடிக்கவில்லை.
அர்னவ் முன் வைத்து அவன் இப்படி கேட்டது தான் அவளுடைய கோபத்துக்கு காரணம்
எனவே கணவனை முறைத்து பார்த்தாள்.அவள் முறைப்பதை அவன் கண்டாலும் நண்பனுக்காக வேண்டி இப்போது பேச ஆரம்பித்தான்.​

அர்னவ் மனதில் ஆர்த்தி இருப்பாள் என்று அவன் நம்பினான்.ஆனால் ஏன் அவன் வெளியே செல்ல சொல்லாமல் இருக்கிறான் என்று தான் தெரியவில்லை.​

"ம் போகுது அண்.. சார்.."
என அவனுக்கு என்ன உறவு சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் ஆர்த்தி.
அவளுடைய தடுமாற்றத்தை கண்டு சிரித்த தேவ் ஆனந்த்
"அண்ணான்னே கூப்பிடுமா..
இதோ இவனை கூட நீ அண்ணான்னு கூப்பிடலாம்..என்னோட ஃப்ரெண்ட் தான்.."
என்று தனக்கு முன்னால் இருந்த அர்னவ்வை கை நீட்டி காண்பித்தான்.​

"டேய்..."
என்று அர்னவ் பதறியே விட்டான்.
அவனது இந்த நிலை சிரிப்பை வர வைத்த போதும் அதனை உள்ளுக்குள் அடக்கி கொண்டவன்
"ஏன்டா மச்சான்?"
என்றான் வெகுளி போல்.​

"அது வந்து அவ என்னோட அத்தை பொண்ணு டா..
சோ நான் அண்ணா ஆக முடியாதே.. அதனால் தான்..."
என்று ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி முடித்தான் அர்னவ்.​

"ஓ.. அப்படின்னா சரி டா..
ம் நீ சொல்லு மா அடுத்ததா ஃலைப்ல என்ன ப்ளான் வச்சு இருக்க.. கல்யாணம் எல்லாம் எப்படி.. வயசு வேற ஏறிகிட்டே போகுதே.."
என்று அடித்தளம் போட்டான் அவன்.​

இஷிகா மனதுக்குள் கணவனை வறுத்து எடுத்தாள்.
"இவர் என்ன லூசா.. இப்போ போய் இதெல்லாம் எதுக்கு பேசுறார்.
வீட்டுக்கு வந்த பொண்ணு கிட்ட இப்படியா பேசுறது.."
என்று தனக்குள் முனுமுனுத்தாள் அவள்.​

ஆனால் ஆர்த்தி அவனுக்கு பதில் கூறினாள்.
அர்னவ்விற்கும் சேர்த்தே தான் பதில் பேச ஆரம்பித்தாள் அவள்.
"வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க அண்ணா..
உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா சொல்லுங்க.."
என்று அவள் கூற அர்னவ் சடாரென்று நிமிர்ந்து அவளை பார்த்தான்.ஆனால் அவள் அவன் பக்கம் பார்க்வே இல்லை.​

"ஏம்மா நீ யாரையும் லவ் பண்ணவே இல்லையா?"
தேவ் ஆனந்த்தும் விடுவதாக இல்லை.
"லவ்வா?"
என்று விரக்தியாக புன்னகைத்தவள் மீண்டும்
"லவ் பண்ணேன்..
பட் தப்பான ஒருத்தரை லவ் பண்ணிட்டேன்..அது தான் நான் பண்ண பெரிய தப்பு..யாருமே இந்த காலத்துல ஒருத்தரோட உண்மையான காதலை புரிஞ்சுக்கவே மாட்டாங்க.. அப்போவே அவங்க காதல் செத்துப் போயிடும்..அது போல தான் என்னோட காதலும் செத்துப் போச்சு.. நானும் தான்..என்னோட உண்மை காதலை புரிஞ்சுக்காதவங்களுக்காக நான் ஏன் காத்துகிட்டு இருக்கனும்.அதனால தான் அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டேன்.. கூடிய சீக்கிரமே கல்யாணம் நடக்கும்.. நீங்களும் வந்துடுங்க.."
என்று நீண்டதாக பேசியவள் வெளியே சென்று விட்டாள்..​

இவை தான் அர்னவ்வின் கண்களுக்குள் படமாக ஓடிக் கொண்டிருந்தன.
மீண்டும் தேவ் ஆனந்த் அவனது மோன நிலையை கலைத்தான்.
"டேய் உண்மைய சொல்லு.. உனக்கு ஆர்த்தியை புடிக்கவே இல்லையா.. அப்படின்னா சொல்லு. நான் இதை இத்தோட விடுறேன்.. ஆனா மச்சான் உனக்கும் ஒரு ஃலைப் இருக்கு. அதை மறந்துடாத.. அம்மா அப்பா வேற நீ கல்யாணம் பண்ணனும்னு சொல்லிகிட்டே இருக்காங்க.."
என்று தேவ் ஆனந்த் கூற கண்களை திறந்து அவனை பார்த்த அர்னவ் ஒரு சில நொடிகள் எதுவும் பேசவில்லை.​

அதன் பிறகு அவனே நண்பனை நேராக பார்த்து பேச ஆரம்பித்தான்.
"எனக்கு அவளை புடிக்கும் டா..
அதுவும் சின்ன வயசுல இருந்தே புடிக்கும். அவ படிக்கனும்.. படிக்கிற பொண்ணோட மனசை கெடுக்க கூடாதுனு தான் அப்போ அவளை புடிக்காத மாதிரி நடந்துகிட்டேன்..
அப்பறம் அவ காலேஜ் படிக்கும் போது சொல்லலாம்னு பார்த்தா அதுக்குள்ள தான் விஷ்ணு கல்யாணம், பிரச்சினை எல்லாம் நடந்தது.. அதுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டுட்டேன்..
அவனோட குடும்பம் இப்படி இருக்குற நேரத்துல நான் எப்படி டா சந்தோஷமா இருக்க மூடியும்?
அப்படியே ஆர்த்தி பாவம்னு கல்யாணம் பண்ணா நான் அவளுக்காக டைம் ஒதுக்க மாட்டேன்.. இதை யோசிச்சே அவளை விட்டு தூரமா போவேன்.. அதுக்காக தான் அவளை வேண்டாம்னு சொன்னேன். வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணா அவளாச்சும் சந்தோசமா இருப்பா.
அதுவே எனக்கு போதும்டா.. நான் அவளோட காதலுக்கு தகுதியானவன் இல்லைடா.."
என்று பேசி முடித்தவனின் கண்கள் கலங்கி இருந்தன.. அவனை பார்க்கவே தேவ் ஆனந்த்திற்கு பாவமாக இருந்தது.​

ஆனால் அதை விட அவன் மேல் கோபமும் வந்தது. எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறான் என்று தான் தோன்றியது.​

"டேய் நீ என்ன லூசா.. அதுக்கும் இதுக்கும் என்ன டா சம்பந்தம்..
விஷ்ணுவுக்கு கடவுள் கொடுத்தது அவ்வளவு தான். அதுக்காக நீ ஏன்டா .. அந்த பொண்ணையும் கஷ்ட படுத்தி நீயும் கஷ்ட படுற..
அதுலயும் விஷ்ணு சந்தோஷமா வாழ்ந்துட்டு தான் இந்த உலகத்தை விட்டு போனான்.
சோ இப்போ உன்னோட ஃலைப்பை பாரு.." என சிறந்த நண்பனாக அறிவுரை கூறினான் தேவ் ஆனந்த்..​

"பார்க்கலாம் விடு.. நான் வர்றேன் டா.."
என்று கூறியவனுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. எனவே நண்பனிடம் இருந்து விடை பெற்று சென்றான் அர்னவ்..
இப்போது தான் தேவ் ஆனந்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது..
இனி மேல் அர்னவ் வாழ்க்கை சீராகி விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது அவனுக்கு...​

******************​

"ஹலோ...அம்மா.."
இஷிகாவின் குரல் மென்மையாக ஒலித்தது.
அவளுக்கு அன்னையிடம் பேச வேண்டும் போல் இருக்க உடனே அழைத்து விட்டாள்.
ஆனால் அந்தப் பக்கம் அமைதி மட்டுமே.
"என்னம்மா என்கூட பேசவே மாட்டியா?
அந்த அளவுக்கு நான் என்னம்மா பண்ணேன். நடந்த விஷயத்துல என் தப்பு என்ன இருக்குன்னு சொல்லுங்க.. அதுக்கு அப்பறம் நான் உங்க பக்கமே வர மாட்டேன்.
அப்பா தான் அப்படின்னா நீயும் ஏன்மா என்னை கஷ்டப் படுத்துற.."
என்று மீண்டும் இஷிகாவே பேசினாள். அவளுடைய குரலில் அத்தனை வேதனை..​

இப்போது தான் அவளது தாய் வாயை திறந்தார்.
"அம்மாடி இஷிகா.. உன் மேல அம்மாக்கு எந்த கோபமும் இல்லை.
அப்பாவ மீறி உன் கிட்ட பேச தான் முடியல.. நீ கூட பேசல. அதனால தான்
நீயும் உங்க அக்காவை போல அப்படியே எங்களை எல்லாம் மறந்துட்டியோன்னு நினைச்சேன்.."
என அவர் வேதனையில் பேச இஷிகாவிற்கு அப்போது தான் அக்கா பற்றி ‌நினைவு வந்தது..​

"அம்மா உன்னை பார்க்கனும் போல இருக்கு.. ஏதாச்சும் கோவிலுக்கு வரியா..?
அப்பா கிட்ட சொல்லாம வா.."
என்று அன்னையிடம் கோரிக்கை வைத்தாள் இஷிகா.
அலைபேசியில் இவ்வளவு பெரிய விடயத்தை கூறுவதை விட
நேரில் சொன்னால் தான் நன்றாக இருக்கும் என்பது அவள் எண்ணம்..எனவே தான் அவ்வாறு கேட்டாள்..​

"சரிம்மா.. நான் பார்த்துட்டு சொல்றேன்.."
என்றவர் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்..​

தொடரும்....








 

Mafa97

Moderator

அத்தியாயம் 21​

நீண்ட நாள் பேசாத மகள் இன்று அழைத்து தன்னை பார்க்க விரும்புவதாக கூறியதும் அந்த நொடியே தனது மகளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அந்த தாய்க்கு .
ஆனால் திடீரென்று கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறினால் தனது கணவர் சந்தேகப்படுவார் என்று எண்ணியவர் அடுத்த நாள் பார்க்க வருவதாக அவளிடம் கூறினார்.​

தாய் அழைத்து நாளை வருவதாக கூறியதில் இருந்து காலும் கையும் ஓடவில்லை இஷிகாவிற்கு.
அக்கா பற்றிய உண்மையை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது தாயை சந்திக்க போகும் மகிழ்ச்சி ஒரு பக்கம் என அவளது முகம் பளிச்சென்று இருந்தது. அவளுடைய முக மாற்றத்தை கண்ட தேவ் ஆனந்திற்க்கு சந்தேகம் வந்த போதும் அவன் அதை கண்டு கொள்ளவில்லை. எப்படியோ அவள் சந்தோஷமாக இருந்தால் சரி என்று விட்டு விட்டான் அவன்.​

இப்போது தனது தாயின் வருகைக்காக கோவில் வாசலில் காத்துக் கிடந்தாள் இஷிகா.
அவரைக் கண்டதும் பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டவள் "அம்மா என்னை மன்னிச்சிடுங்க.." என்று அழவே ஆரம்பித்து விட்டாள். "என்னடி இது சின்ன பிள்ளையாட்டம் அழுதுகிட்டு ..
நீ தான் இந்த கல்யாணத்துல எந்த தப்பும் பண்ணவே இல்லன்னு அம்மா நேத்தே உனக்கு சொன்னேன்ல.. அப்புறம் எதுக்காக அழுதுகிட்டு இருக்க? சரி கண்ணை தொடைச்சிட்டு வா சாமி கும்பிட்டுட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து பேசலாம்.." என்று சிறு பிள்ளை போல் அழும் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் கவிதா.​

தாயும் மகளும் ஒன்றிணைந்து கடவுளை வணங்கி விட்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்து கொண்டனர் .
இஷிக்காவின் முகத்தை நிதானமாக அளவிட்ட அவளது தாய்
" என்னம்மா சந்தோஷமா இருக்கியா?"
என்று கேட்டார்.
அவர் அப்படி கேட்டதும் சிறு தடுமாற்றுத்துடன்
"அம்மா நான் சந்தோஷமா இருக்கேன். அதுல என்ன உனக்கு சந்தேகம்? என்னை பார்த்தாலே தெரியலையா நான் சந்தோஷமா தான் இருக்கேன்னு.." என்று கூறி வைத்தாள்.​

தாய் அறியாத விடயமா என்ன?
"நீ சொல்ற போல நீ சந்தோஷமா இருக்கிற மாதிரி எனக்கு தோணல. மனசுக்குள்ள ஏதோ வச்சுக்கிட்டு கவலை பட்ற. அது என்னனு இந்த அம்மா கிட்ட சொல்லு.. என்னால அந்த கஷ்டத்தை போக்க முடியலைனாலும் உனக்காக கடவுள் கிட்டயாவது வேண்டிப் பேன் ..சொல்லுடா " என்றார் அவர் ஒரு தாயாக.​

"அது ..அது வந்தும்மா.. அக்காவை பற்றி உனக்கு எந்த தகவலும் தெரியாது இல்லையா?
அவ இந்த வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் என்ன ஆனா, சந்தோஷமா இருக்காங்களா இல்லையா?, குழந்தை குட்டினு அவ வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கா? இப்படி எதுவும் உங்க யாருக்கும் தெரியாது அப்படித் தானே .."
என்று அன்னையைப் பார்த்து கேள்வி கேட்டாள் இஷிகா.​

அவளை விசித்திரமாக பார்த்த கவிதா
"என்னடி நீ .. உன்னை பற்றி பேசுவனு பார்த்தேன் .
இப்போ உன் அக்காவை பற்றி பேசுற ..
ஆனா ஒன்னு அவளை பற்றி மட்டும் என்கிட்ட பேசாத. எங்களையெல்லாம் ஏமாத்திட்டு ஓடிப் போனவ தானே அவ..எப்படி இருந்தா எனக்கு என்ன .
உன் விஷயத்துல நான் கோபப்படவே மாட்டேன். ஏன்னா உன்னோட கல்யாணம் உன் இஷ்டம் இல்லாமல் நடந்தது.. ஆனா அவ அப்படி இல்லையே. கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணதுக்கு அப்புறம் எங்களை எல்லாம் தலைகுனிய வச்சிட்டு ஓடிப் போனவ தானே அவ.. நாங்க எவ்வளவு கூனி குறுகி நின்னோம்..நீயும் பார்த்த தானே. அவளால தான் இந்த அபிமன்யு இன்னைக்கு வரைக்கும் கல்யாணமே பண்ணிக்காம இருக்கான். அதையாவது நீ யோசிச்சு பார்த்தியா? அதுக்காகத் தான் அந்த அபிமன்யு பையன் உன்னை கல்யாணம் பண்ணாவாவது நல்லா இருப்பான்னு தான், நீ அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் ஃபோர்ஸ் பண்ணேன்.." என கோபமாக பதில் அளித்தார் அவர்.​

"அம்மா நீ சொல்றது எல்லாம் சரி தான்.
அக்கா யார்கிட்டயும் சொல்லாம கல்யாணத்தன்னைக்கு ஓடிப் போனது தப்பு தான்.. நான் இல்லைனு சொல்லல.. ஆனா அக்கா போய் ஆறு வருஷத்துக்கு மேல ஆச்சு. யாராவது அவ இருக்காளா இல்லையான்னு கூட தேடி பார்க்கலை..
அந்த அளவுக்கா பெத்த பொண்ணு மேல கோபமா இருப்பீங்க.?
அடுத்த விஷயம் என்னன்னா அக்கா புடிக்கலைன்னு சொன்ன கல்யாத்தை தான் எல்லாரும் சேர்ந்து ஃபோர்ஸ் பண்ணீங்க..
அவ காதலிச்ச பையனையே கல்யாணம் பண்ணி வச்சிருந்தா அவங்க சந்தோஷமா இருந்து இருப்பாங்க தானே.. நீங்க தான் அவங்கள பிரிச்சு வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ண ரெடியாகுனீங்க. அதனால தான் அக்கா போனாங்க.. அக்கா மேல நூறு சதவீதம் சரி இருக்கனு நான் சொல்லமா. ஆனா அதே போல நூறு சதவீதம் பிழையும் இல்லை.. நீங்க ஒத்துக்கலைனாலும் அது தான் உண்மை.. " என்று தனது தாய்க்கு அக்காவின் நிலையை புரிய வைக்க முயன்றாள் இஷிகா.​

"நீ என்ன வேணா சொல்லு.. ஆனா கல்யாணத்தன்னைக்கு உன்னோட அக்கா ஓடிப் போனது தப்பு தான் "
என்றார் கவிதா.
" சரி மா அக்கா மேலயே தப்பு இருக்கட்டும்.. இப்போ அக்கா என்ன செய்றாங்கன்னு உனக்கு தெரியாது தானே.." என்று கேள்வியாக தனது அன்னையை இஷிகா பார்க்க
"தெரியாது.. அவள் எக்கேடு கேட்டுப் போனால் எனக்கு என்ன.. நீ வந்த விஷயத்தை மட்டும் பேசு.." என்றார் அவளது அன்னை கடும் கோபத்தோடு.​

" சரி மா உன்னை கோபப்படுத்தல விடு ..ஆனா அக்கா இப்போ இருக்கிற நிலையை நீ பார்த்தா உயிரையே விட்டுடுவ ..."
என்றாள இஷிகா எங்கோ பார்த்துக் கொண்டு..
" அப்படி என்ன நிலைமையில் உங்க அக்கா இருக்கா ?
நான் உயிரை விட்ற அளவுக்கு.. அது எல்லாம் சரி நீ எங்க அவளைப் பார்த்த ?"
என்று மகவிடமே கேள்வி கேட்டார் கவிதா.​

அவர் அப்படி கேட்டதும் அக்காவை பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறி விட்டாள் இஷிகா.
அவள் பேசி முடிக்கும் வரை குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்த கவிதா கண்களில் கண்ணீர் ..
தான் பெற்ற பிள்ளை எங்கோ நன்றாக இருக்கிறாள் என்று தான் அவர் இதுவரை நாள் நினைத்துக் கொண்டிருந்தார் ..
அவள் மேல் மலையளவு கோபம் இருந்தாலும் தனது பிள்ளை கெட்டுப் போகட்டும் என்று அவர் என்றும் நினைத்தது இல்லை. இன்று மகள் இப்படி ஒரு நிலையில் இருக்கிறாள் என்று கேட்டதும் பதறியே விட்டார் அந்த தாய்.​

"என்னடி சொல்ற ..?
என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படி இருக்கா..
நீங்க யாருமே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் பார்க்கவே இல்லையா? ஏன் இத்தனை நாள் என்கிட்ட சொல்லாம மறைச்ச? நீ அன்னைக்கே சொல்லி இருந்தா என் பொண்ணை பார்த்திருப்பேனே.
வா இப்பவே போகலாம். என் பொண்ணை நான் பார்த்தே ஆகணும்."
என்று படபடத்தார் அவர்.​

அழும் தனது அன்னையை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாது அவருடைய கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டவள்
" அம்மா அழாதமா.. எனக்கு உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல ..அதை விட நானே பெரிய குழப்பத்துல இருந்தேன்.. அதனால தான் உன் கிட்ட சொல்ல சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்துக்கிட்டு இருந்தேன். சரி வா அக்காவை போய் பார்க்கலாம்.. ஆனா அக்கா எங்க இருக்கிறான்னு அப்பாவுக்கு எக்காரணம் கொண்டும் தெரியக் கூடாது.. அப்படி தெரிஞ்சது என் புருஷன் என்னை கொன்றுவாரு.. அவருக்கு அப்பாவை ஏனோ பிடிக்கலை.. ஒருவேளை அக்காவோட கல்யாணத்தை அவர் வேண்டாம் என்று சொன்னதாலவோ என்னவோ.." என்று கூறினாள்..​

அப்போதும் சமாதானமாகாத தனது அன்னையை சமாதானப் படுத்த வேண்டும் என்பதற்காக இப்போது ஆதித்யா பற்றி கூற ஆரம்பித்தாள்.
"நீ நம்ம ஆதித்யா குட்டியை பார்க்கணுமே.. அப்படியே நம்ம குடும்பத்துக்கு ஜாடையில இருப்பான்.. எப்பவும் பேசிக்கிட்டே என் கைய புடிச்சு சுத்திகிட்டு இருப்பான். சித்தி சித்தினூ என் கூடவே தான் இருப்பான்.
நீ அவனைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷப் படுவ.. ஆதி குட்டியை பார்த்தா அப்பாவும் மனசு மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கு.. ஆனா அவனை அப்பாகிட்ட காட்டுறதுக்கு முன்னாடி என் புருஷன் கிட்ட பர்மிஷன் வாங்கணும்.. அதை பிறகு பார்த்துக்கலாம்.. நீ வாம்மா வீட்டுக்கு போய் அக்காவையும் பையனையும் பார்க்கலாம்.."
என்று கூறியவள் தாயை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றாள்..​

இவர்கள் இருவரும் செல்லும் போது தேவ் ஆனந்தும் வீட்டில் தான் இருந்தான்.
இவரை கண்டதும் எழுந்து வணக்கம் வைத்தவன்
"வாங்க அத்தை இப்போ தான் நம்ம வீட்டுக்கு வர உங்களுக்கு வழி தெரிஞ்சுதா..?"
என்று சகஜமாக பேசினான். இஷிகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.. தனது தாயை அழைத்து வந்ததற்கு இவன் திட்டுவான் என்று அவள் எதிர்பார்த்து இருக்க இவன் வேறு மாதிரி நடந்து கொள்கிறானே என்ற எண்ணம் தான் அவளுல்..​

அவளை பொறுத்தவரை அவன் ஒரு புரியாத புதிர் தான்.. எந்த நேரம் எப்படி இருப்பான், எப்படி பேசுவான் என்று கூட அவளுக்கு இன்னும் தெரியாது.
எனவே அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவளது பார்வையை உணர்ந்தவன்
"என்ன இஷி இப்படி பார்த்துட்டு இருக்க ..
அம்மாவை நிக்க வச்சே வெளியே அனுப்புறதா உத்தேசமா?"
என்றான் கிண்டலாக..
" ஐயோ சாரிமா ..உள்ளே வா.." என்று அவரை வரவேற்று பொறுப்பாக அவருக்கு குடிக்க காபியும் போட்டுக் கொண்டு வந்தாள்.​

தனது மகளின் பொறுப்பான செய்கையை கண்டவருக்கு சிரிப்பு தான் வந்தது..
வீட்டில் இருக்கும் போது எந்த வேலையும் செய்யாமல் அம்மாவிடமும் அண்ணியிடமும் வேலை வாங்கிக் கொண்டிருப்பவள் இன்று அவளது வீடு என்று வந்ததும் தன்னை இப்படி கவனிக்கிறாளே என்று தான் தோன்றியது அவருக்கு.​

"ஆதித்யா எங்கே?"
என்று கணவனை நேரடியாக பார்த்து இஷிகா கேட்க
" இதோ இங்கே தான் விளையாடிகிட்டு இருந்தான்.." என்றவன் "ஆதி ..ஆதி.." என்று அழைத்தான்.​

"இதோ வந்துட்டேன் பா .."
என்று கூறிக் கொண்டே வேகமாக ஓடி வந்த சிறுவனை ஆர்வமாக பார்த்தார் கவிதா.
அவரது குடும்பத்தின் முதல் வாரிசு அல்லவா அவன். அப்படியே தூக்கி அனைத்து கொஞ்ச கைகள் பரபரத்தன அவருக்கு. எப்படி அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் பாவமாக பார்த்தார் அவர் .​

அதனை புரிந்து கொண்ட தேவ் ஆனந்த்
"கண்ணா இவங்க யாருன்னு தெரியுதா ?"
என்று மகனிடம் கேள்வி கேட்க அவனும் அப்போது தான் அங்கே இருந்தவரை கண்டான்.
நாடியில் கைவைத்து சிறிது நேரம் யோசித்து பார்த்தான் .
ம்ஹூம் அவரைக் கண்டதாக அவனுக்கு ஞாபகம் இல்லை.. எனவே மீண்டும் தந்தையை பார்த்தவன் "இல்லையே ப்பா. எனக்கு இவங்க யாருன்னு தெரியாது.." என்றான் உதட்டை பிதுக்கி.​

"என் செல்லக்குட்டிக்கு இது யாருன்னு தெரியாது இல்லையா? இவங்க யாருன்னா உன்னோட பாட்டி.. அதாவது உன்னோட அம்மாவோட அப்புறம் சித்தியோட அம்மா தான் இவங்க.. இப்ப யாருன்னு தெரியுதா ?
இனிமே நீ இவங்களை பாட்டினு தான் கூப்பிடனும் ஓகேவா.." என்று ஆதித்யாவிற்கு சொல்லிக் கொடுத்தான் அவன்.​

பாட்டி என்ற சொல்லில் குஷியான ஆதித்யா
"எனக்கு பாட்டியும் இருக்காங்களா? ஜாலி ஜாலி ..இனிமே எனக்கு பாட்டி இருக்காங்கன்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நான் சொல்வேனே.. " என்று கூறி குதூகலித்தவன் தானாக போய் கவிதாவின் மடியில் அமர்ந்து கொண்டான்.​

இதற்கு மேல் என்ன வேண்டும் கவிதாவிற்க்கு.. தனது முதல் பேரக் குழந்தை இப்போது தன்னுடைய கையில்.. ஆனால் வளர்ந்து நிற்கிறான் ..அவ்வளவு தான் வித்தியாசம். அவனது வளர்ச்சியை தான் கண்கூடாக காணவில்லை என்ற கவலை இருந்த போதும் இப்போதாவது அவனை கண்டோமே என்ற சந்தோஷம் தான் மேலோங்கி இருந்தது..
சிறிது நேரம் பாட்டியும் பேரனும் தங்களது உலகில் சஞ்கரித்துக் கொண்டிருந்தனர்..​

"அம்மா நீ வீட்டுக்கு போகணும்.. லேட் ஆச்சு. அப்பா உன்னை தேடுவார்.. அதுக்குள்ள அக்காவை பார்த்துட்டு போகலாமே .."
என்று அன்னைக்கு ஞாபகமூட்டினாள்.
அப்பா என்ற சொல்லில் தேவ் ஆனந்தின் முகம் கடுமையாக மாறியதை கவனித்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. பேரனின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு மகளை பார்க்க கனத்த மனதுடன் அவள் இருக்கும் அறை நோக்கி சென்றார்.​

ஒரு தாய் தனது மகளை இப்படியா பார்க்க வேண்டும்? அவருக்கு நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது.
மகளிடம் பல வார்த்தைகள் அவர் பேசிய போதும் அதற்கு பதிலாக ஒரு வார்த்தை கூட தீப்தி பேசவில்லை.. அழுது புலம்பி விட்டார் கவிதா.
தாயை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் முளித்துக் கொண்டு நின்றாள் இஷிகா.​

அவளுடைய கண்களிலும் கண்ணீர்.
அப்போது உள்ளே வந்த தேவ் ஆனந்த் அவளது தோளில் ஆதரவாக கை வைத்தவன் அவளது காதுக்குள்
"விடு உங்க அம்மா அழுது முடிச்சிடட்டும் ..
அவங்களோட கவலை அவங்களுக்கு.. எல்லாம் சரியாகிடும் பாத்துக்கலாம்.." என்று ஆறுதல் கூறியவன் அவளை கையோடு வெளியே அழைத்து சென்றான்.. தாய்க்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து விட்டு.​

தொடரும்..​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 22​

முந்தைய நாள் மழையில் ஆட்டம் போட்டதால் இஷிகா ஆதித்யா இருவருக்கும் நன்றாகவே காய்ச்சல் அடித்தது. தேவ் ஆனந்த் எவ்வளவு கூறியும் இருவரும் கேட்பதாக இல்லை ..
எனவே அவர்கள் இருவரையும் அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டான் அவன் .
அது தான் அவனுக்கு இன்று வினையாகி போனது .
அடித்து இழுத்து வந்து இருக்கலாம் என்று இப்போது தான் தோன்றியது அவனுக்கு.. ஏனென்றால் இருவரும் காய்ச்சல் என்று படுத்து விட்டதால் அவன் தான் இருவரையும் கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயம்.​

இப்போது கூட மருந்தின் வீரியத்தால் ஆதித்யா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
இஷிகாவிற்கு லேசாக காய்ச்சல் விட்டிருந்தது .
அதனால் அவள் மெது மெதுவாக எழுந்து நடமாட ஆரம்பித்து இருந்தாள்.
இரவு உணவையும் ஏனோதானோ என்று கொறித்து விட்டு தூங்குவதற்கு தனது அறைக்குள் நுழைந்தாள் அவள் .
தேவ் ஆனந்தும் அவள் பின்னால் அறைக்குள் நுழைந்தான்.​

அவனும் தன்னுடன் அறைக்குள் வருவதை கண்டவள் கண்களை முடிந்த மட்டும் விரித்து அவனைப் பார்த்தாள்.
அவளது பார்வையை உணர்ந்து கொண்டவன்
"என்ன அப்படி பார்க்கிற?" என்று கேள்வி கேட்டான் .
"அது ஒன்னும் இல்ல.. நீங்க என்ன என் பின்னாடி வர்றீங்க ?"
என்று தயங்கிய படியே தேவ் ஆனந்திடம் கேட்டாள் இஷிகா.​

"என்ன உன் பின்னாடி வர்றேனா? நான் ஒன்னும் உன் பின்னாடி வரல. தூங்குறதுக்காக ரூமுக்குள்ள வரேன்.. நீ முன்னாடி போனதுக்கு நான் பொறுப்பாக முடியாது.."..
சிறிது நக்கலாகவே பதில் அளித்தான் அவன். அவனது இந்த பதில் அவளுக்கு கோபத்தை வரவழைத்தது.​

"இது என்னோட ரூம். நீங்க தான் என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்க. புரியுதா உங்களுக்கு?"
என்று அவனுக்கு சூடாகவே பதில் கூறினாள் இஷிகா .
"என்னது உன்னோட ரூமா ?
இது என்னோட வீடு.. அதை முதல்ல ஞாபகம் வச்சுக்கோ.. நான் எங்க வேணா தூங்குவேன்.. உனக்கு என்ன?" என்றவன் அவளை விலக்கிவிட்டு அவளுக்கு முன்னமே அறைக்குள் வந்தான்.​

அவனுக்கு அவளுடைய கோபம் பிடித்திருந்தது போலும்.. அவளுடன் வாயாடுவதை அவன் ரசித்தான்.. எனவே அவளை மேலும் கோபப்படுத்தி பேச வைத்தான் அவன்.​

"எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு.. நான் உங்களோட வைஃப். அதனால இது என்னோட வீடும் தான். நானும் எங்க வேணா தூங்குவேன்.. இது என்னோட ரூம். இப்போ நீங்க வெளியே போகலாம்.."
என்று அவளும் இந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடினாள்.​

அவளது பதிலை கேட்டு லேசாக புன்னகைத்தவன்
"நீ என்னோட பொண்டாட்டியா? நான் மறந்தே போயிட்டேன்.. ஞாபகப் படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.."
என்று அவளது கண்களை பார்த்து அவன் கூற அவனது அந்த பொண்டாட்டி என்ற வார்த்தை அவளை ஏதோ செய்வது.​

அவள் சொல்லும் போது தோன்றாத உணர்வு இப்போது அவன் சொல்லும்போது தோன்றியது பெண்ணவளுக்கு. எனவே சிவந்த முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அவள்.​

அதனை கண்டு கொண்ட கள்வன் அவன்
"அப்றம் நீ ஒரு விஷயத்தை மறந்துட்டேம்மா.. அது என்னன்னா புருஷனும் பொண்டாட்டியும் ஒரே ரூம்ல தான் தூங்குவாங்க.
நாம ரெண்டு பேரும் மட்டும் தான் வேறு வேறு ரூம்ல தூங்குறோம்.
சோ இன்னைல இருந்தே அதை பழக்கப் படுத்திக்கலாம் புரிஞ்சுதா..வா வந்து தூங்கு.." என்று சிறு பிள்ளைக்கு போல் அவன் கூற அதற்கு மேல அவனுடன் பேச முடியாமல் வந்து கட்டிலில் அமர்ந்தாள் இஷிகா.​

அவளுக்கு பேச முடியாமல் எல்லாம் இல்லை. இப்போது அவளுடைய நாணம் அவளை பேசவிடாமல் தடுத்தது அவ்வளவே.
ஆதித்யா நடுவில் தூங்க அவனது இருபுறமும் தேவ் ஆனந்த் இஷிகா இருவரும் படுத்துக் கொண்டார்கள்.
அவளுக்கு தான் தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது .ஆனால் அவன் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தான்.​

"ஏன் இன்னைக்கு மட்டும் இங்க தூங்குறீங்க..?"
என்று மெல்ல கேள்வி கேட்டுப் பார்த்தாள் இஷிகா.
" என்னது இன்னைக்கு மட்டும்
தூங்குறேனா? நேத்தும் இங்கே தான் தூங்கினேன்."
என்றான் அவளுடைய கேள்விக்கு.​

"என்னது நேத்தும் இங்கே தூங்கினீங்களா?
அது எப்போ..?"
என்று கேட்ட இஷிக்காவின் கண்கள் சாசர் போல் விரிந்து கொண்டன.. இது அவளுக்கு தெரியாதே.​

"உனக்கு எங்க தெரிய போகுது. நீதான் நேத்து காய்ச்சல்ன்னு படுத்துக்கிட்டியே.. உங்க ரெண்டு பேரையும் பாக்குறதுக்காக தான் இங்க தூங்கினேன் ..ஆனா இனிமே இங்க தூங்குறதா தான் முடிவு எடுத்து இருக்கேன்.. உனக்கு இஷ்டம்னாலும் இல்லைனாலும் நான் இங்கேதான்."
என்று கராராக பதில் கூறினான் தேவ் ஆனந்த்.​

"ஓஹோ ..."
என்று மட்டும் தான் அவளால் கூற முடிந்தது.
"சரி இப்ப பேசாம கண்ணை மூடி தூங்கு.. "
என்று கூறியவன் மீண்டும் தனது கண்களை மூடிக் கொண்டான்.
ஆனால் அவள் விடுவதாக இல்லை.
" நீங்க எப்படி இங்க தூங்குவீங்க. இங்கே தான் ஆதித்யா இருக்கானே."
என்று அவள் கூறியது தான் தாமதம் படக்கென எழுந்து அமர்ந்தான் தேவ் ஆனந்த் .​

"ஹேய்.. நீ என்ன சொன்ன ?
ஆதி இருக்கானா.. சரி அவன் இருக்கட்டுமே .அதுக்கு என்ன வந்தது ..
நாம ரெண்டு பேரும் என்ன அவன் பார்க்க கூடாது ஏதாச்சுமா பண்ண போறோம் ..
என்னோட வாயை கிளறாம தூங்குறியா ப்ளீஸ் ..
இதுக்கு மேல நான் பேசுனா தப்பா போயிடும். தூங்கு ..."
என்று ஒரு மாதிரி குரலில் அவன் கூற ஏன் தான் இப்படி கேட்டோமோ என்று இஷிகாவிற்கு வெட்கமாகி விட்டது.​

பட்டென அவளும் அவனை பார்க்காது கண்களை மூடிக்கொண்டாள்.
அவள் கண்களை மூடியதும் அவனுக்கு சாதகமாகிப் போனது. அவளுடைய அழகிய முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான் தேவ் ஆனந்த் .
வெட்கத்தில் அவள் முகம் சிவந்திருந்தது..
அதனை பார்க்க பார்க்க அவனுக்கு என்னென்னவோ தோன்றியது ..
உள்ளுக்குள் அதை ரசிக்க ஆரம்பித்தான் அவன்.
ஆனால் இடையில் ஆதித்யா இருப்பதால் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான் தேவ் ஆனந்த்.​

இருவரும் எப்போது தான் தூங்கினார்கள் என்று தெரியவில்லை.. அடுத்த நாள் காலை யாருக்கு எப்படியோ தேவ் ஆனந்துக்கு இனிமையாக இருந்தது.
ஏனென்றால் அன்று அவனை தூக்கத்திலிருந்து எழுப்பியது அவனுடைய தேவதை அல்லவா.​

அதுவும் அவள் அவனை அழைத்த விதம் அப்படி இருந்தது.
" ஆனந்த் ..ஆனந்த்.. எந்திரிங்க. டைம் ஆச்சு.." என்று அவள் கூறியது அவனுக்கு இப்போதும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் தூக்கத்தில் இருப்பதால் உணர மாட்டான் என்று தான் அவள் அந்த பெயரை உச்சரித்தாளோ என்னவோ.. எப்படியோ அவனுக்கு அது சந்தோஷத்தை கொடுத்தது.​

ஆதித்யா மருந்தின் காரணமாக இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தான். தேவ் ஆனந்தின் கையில் காபி கப்பை கொடுத்த இஷிகா அவனது முகத்தைப் பார்த்து கொண்டு நிற்க
" என்ன ஏதாச்சும் என்கிட்ட சொல்லனுமா?" என்று அவளை சரியாக புரிந்து கொண்டு அவளிடம் கேட்டான் அவன்..​

"அது .. அது வந்து..."
என்று அவள் இழுத்து கூற அவள் ஏதோ விபரீதமாகத்தான் சொல்லப் போகிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன்
" தயங்காம சொல்லு.. என்கிட்ட தானே.."
என்று அவளை ஊக்குவித்தான்.​

"நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ?"
என்று மேலும் அவள் தயங்க 'இல்லை '
எனும் விதமாக அவன் தலையாட்டினான் ..
அவன் அப்படி கூறிவிட்டாலும் இஷிக்காவிற்கு தான் ஏதோ பயமாகவே இருந்தது அவனிடம் இந்த விடயத்தை கூறுவதற்கு.
சரி என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் அவனது முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.​

"இப்போ ஆதித்யாவுக்கு அம்மா யாருன்னு தெரிஞ்சு போச்சு. அக்காவையும் சீக்கிரமே குணப்படுத்திடலாம் .."
என்று கூறி இடையில் நிறுத்தினாள் அவள்.
என்ன தான் கூற வருகிறாள் என்று அவனால் கூட யூகிக்க முடியவில்லை.. ஆனால் அவள் தயங்குவதைக் கண்டு ஏதோ பெரிதாகத்தான் கூற போகிறாள் என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது..​

எனவே ஒரு கையால் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டவன் "என்ன இருந்தாலும் தயங்காம சொல்லுமா.."
என்று மென்மையாக கூறினான். அவனுடைய அந்தக் குரலும் அவனது கை கொடுத்த இதமும் அவளை பேச வைத்தது.​

"அது வந்து.. இப்போ ஆதித்யாவோட மனசுல அப்பான்னு பதிஞ்சு இருக்கிறது நீங்க தானே.. அதை நான் தப்புன்னு சொல்லல.. இத்தனை வருஷமா நீங்க தன் வளர்த்தீங்க. அதனால அதுல எந்த தப்பும் இல்லை .. ஆனால் அக்கா இப்போ கண் முன்னாடி இருக்கும் போது அவன் அக்காவ அம்மான்னு சொல்றதும் அதேபோல உங்களை அப்பானு சொல்றதும் எனக்கு என்னவோ போல இருக்கு.. இதுல ஏதாச்சும் தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க ..எனக்கு சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்.. நாங்க இதை பெரிசு படுத்தலனாலும் சொசைட்டி தப்பா தான் நினைப்பாங்க.." என்று தயக்கமாக கூறி முடித்தாள் பெண் அவள்.​

அவள் கூறியதில் இருந்த உண்மை அவனுக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் இப்போது எப்படி ஆதித்யாவிடம் சென்று என்னை அப்பா என்று அழைக்காதே என அவன் கூறுவான்.. அவன் இதை முன்னமே யோசித்து இருக்க வேண்டும்.. ஏனென்றால் தீப்தி உயிருடன் தானே இருக்கிறாள். அவள் என்றாவது ஆதித்யாவின் கண் முன்னால் வந்து நிற்பாள் என்பது இவன் அறிந்த விடயமே.​

அவளை அம்மா என்று அழைத்து இவனை அப்பா என்று அழைத்தால் அது அவர்கள் இருவருக்கும் சங்கடத்தை தான் கொடுக்கும்.. அதே போல் சமூகத்தின் பார்வையிலும் தப்பாகத் தான் தோன்றி விடும். இது ஏன் இவனுக்கு முன்னமே தோன்றவில்லை.​

தான் பிடித்திருந்த இஷிகாவின் கைகளில் அழுத்தம் கொடுத்தவன் "நீ சொல்றது எனக்கு நல்லாவே புரியுது.. அதை நான் யோசிக்கவே இல்லை. இப்போ அவன் கிட்ட போய் எப்படி நான் சொல்றது.. இதுக்கும் ஏதாச்சும் சொலுஷன் சொல்லு."
என்று அவளிடமே அதை விட்டு விட்டான் அவன்.​

"இப்போ உங்களை அப்பா என்று சொல்லி கூப்பிடாதன்னு
அவன் கிட்ட சொல்ல முடியாது. ஏன்னா அவன் சின்ன பையன். ஆனா ஒன்னும் பண்ணலாம். விஷ்ணு மாமாவை இவங்க தான் உன்னோட அப்பானு சொல்லி அவன் கிட்ட அறிமுகப் படுத்தலாம். அவங்களோட கல்யாண ஃபோட்டோவை அவன் கிட்ட காட்டலாம். அதே போல என்னையும் அம்மானு கூப்பிட சொல்லலாம்.. என்னை சித்தினும் உங்களை அப்பானும் கூப்பிடறது ஏதோ போல இருக்கு.. என்னையும் அம்ன்னு கூப்பிட்டா எனக்கும் சந்தோஷமா இருக்கும்.. இல்லையா ?"
என்று அவள் தன்மையாக கூற தனது ஒரு கையில் இருந்த காபி கப்பை அருகில் வைத்தவன் பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டான்..​

அவன் இப்படி செய்யக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவளுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.
"தேங்க்யூ ..தேங்க்யூ சோ மச்.. நீ சொன்ன மாதிரி இந்த பிரச்சினையே சோல்வ் பண்ணலாம்.. உன்னையும் அம்மான்னு சொல்லிக் கொடுக்கலாம்.. விஷ்ணு தான் அவனோட உண்மையான அப்பான்னு அவனுக்கு அறிமுகப்படுத்தலாம் ..
அதைவிட சந்தோஷம் என்னன்னா நீ அவனை உன்னோட பையன் மாதிரியே பாத்துக்குற.. அது எனக்கு மனசுக்கு நிறைவாய் இருக்கு.. தேங்க்யூ டி.." என்று அவன் உணர்ச்சி வசப்பட்டு பேச அவனது அந்த 'டி' அவளுக்கும் பிடித்து தான் இருந்தது.. அது உரிமையின் வெளிப்பாடு அல்லவா.
தன்னுடையவளை மட்டும் தானே 'டி' என்று அழைக்க முடியும்..​

ஆறுதலாக தானும் அவனை அனைத்து கொண்டவள்
" நீங்க ஒன்னை மறந்துட்டீங்க. உங்களை விட ஆதி குட்டி மேல எனக்கு தான் உரிமை அதிகம். அவன் என்னோட அக்கா பையன். சோ அவனை அம்மா வை விட மேல நான் பாத்துப்பேன். இது என் அம்மா மேல சத்தியம் ..
எனக்கு எத்தனை குழந்தைகள் வந்தாலும் அவன் தான் என்னோட முதல் குழந்தை.. இது என்னைக்குமே மாறாது.." என்று கண் கலங்கியவாறு கூறினாள் இஷிகா.​

அவளது பேச்சைக் கேட்டு அவளை விடுவித்தவன் அவளது நாடியில் கை வைத்து அவளை தன்னை நோக்கி பார்க்க செய்தான்.
" ரொம்ப நன்றி.. ஆனா ஒரு முக்கியமான விஷயம்.. நமக்கு எத்தனை குழந்தைகள் வேணும்னு நீ நினைக்கிற..?"
என்று அவன் சிரிக்காமல் கேட்க அவளுக்கு அப்போது தான்
அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தது.
இப்போது அவனிடம் அவள் என்ன பதில் கூறுவாள்?
எனவே அவனது கைகளை தட்டி விட்டவள் அந்த இடத்தை விட்டு ஓடியே சென்று விட்டாள் ‌​

அவனும் விடாது
"எனக்கு எத்தனை குழந்தைகள் என்றாலும் ஓகே.. நீ இப்பவே முடிவு சொல்லணும்னு இல்ல.. இன்னைக்கு நைட்டுக்குள்ள சொன்னா போதும்.. அப்றம் நான் எல்லாத்தையும் பார்த்துப்பேன்.." என சிரிப்பினூடே சத்தமாக கூற அவளுக்கு மேலும் வெட்கமாகி விட்டது ..​

" ச்சீ போங்க.." என்று திரும்பி நின்று அவனைப் பார்த்து கூறியவள் தனது அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்..
நீண்ட நாட்களுக்கு பிறகு சத்தமாக சிரித்தான் தேவ் ஆனந்த். அவனுக்கு ஏதோ வானில் பறப்பது போன்ற உணர்வு ..அவனுடைய வாழ்க்கையும் அழகாக மாறுவதைப் போல ஒரு தோற்றம் அவனுக்கு..
இஷிகா என்றால் அவனுக்கு அத்தனை இஷ்டம்.
அதை அவன் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறான் தனது செய்கையில்..​

தொடரும்....​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 23​

"எல்லாரும் எங்க போக கிளம்பிட்டீங்க?"
என்று கேட்டபடியே வீட்டின் உள்ளே நுழைந்தார் சிதம்பரம். அவரை அந்த நேரத்தில் இங்கு எதிர்பார்க்காத கவிதா திரும்பி மகனின் முகத்தை கேள்வியாக பார்த்தார்.
விமலும் தந்தை இந்த நேரத்தில் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை போலும், அவனும் அதே கேள்வியோடு தான் தாயின் முகத்தை பார்த்தான்.​

" என்ன நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அம்மாவும் மகனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறீங்க?
எங்க தான் போகப் போறீங்க?"
என்று மீண்டும் அவர் கேள்வி எழுப்பினார்.
"கோவிலுக்கு போகலாம்னு ரெடியாகி இருக்கோம். நீங்களும் வரிங்களா?" என்று கவிதா தான் இப்போது அவருக்கு பதில் கூறினார்.​

" ஓ அதை சொல்ல வேண்டியது தானே.. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டா நான் என்ன நினைக்கட்டும்.. சரி கவனமா போயிட்டு வந்துடுங்க.."
என்று கூறிய சிதம்பரம் தனது அறைக்குள் புகுந்து கொண்டார்.​

கவிதாவிற்கு தான் ஆச்சரியமாக இருந்தது.
'இவர் ‌உடனே எல்லாம் இப்படி அனுமதி கொடுக்கும் ரகம் கிடையாதே' என்று மனதில் நினைத்தவர் மகனையும் மருமகளையும் அழைத்து கொண்டு இஷிகாவின் வீடு நோக்கி சென்றார்.​

ஆம் அவர்கள் தீப்தியை பார்ப்பதற்காக தான் கிளம்பி தயாராகி இருந்தனர்.
கவிதா அன்று தீப்தியை சந்தித்து விட்டு வந்ததற்கு பிறகு ஏதோ ஒரு யோசனையுடன் தான் நாட்களை கட்த்தினார். அவரை அவதானித்த இளமதி "என்ன அத்தை ஏதாச்சும் பிரச்சினையா?"
என்று கேட்டிட மனதில் உள்ள பாரத்தை மருமகளிடம் இறக்கி வைக்க நினைத்தவர் அவளிடம் தீப்தி பற்றிய உண்மையை கூறி விட்டார்.​

தீப்தியை இளமதிக்கு தெரியாது தான்.
அவள் திருமணமாகி இந்த வீட்டிற்கு வரும்போது தீப்தி இங்கு இல்லை. ஆனால் கணவன், மாமியார், இஷிகா ஆகியோரின் வாய்மொழி மூலமாக அவளை பற்றி கேள்வி பட்டு இருக்கிறாள்.
இப்போது அவளுக்கும் தீப்தி கிடைத்து விட்டதில் சந்தோஷம் தான். ஆனால் அவள் இப்போது இருக்கும் நிலை தான் இளமதியை கவலைக்கு உள்ளாக்கியது.​

இந்த விடயம் சிதம்பரத்திற்கு தெரியக் கூடாது என்றும் கவிதா மருமகளிடம் சொல்ல அவளும் சரியென தலையாட்டியவள் அன்றே கணவனிடமும் விடயத்தை கூறினாள்.அவனுக்கோ அவனது மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. அப்படி ஒரு சந்தோசம் அவனுக்கு.​

தாயிடம் சென்று அப்போதே தங்கையை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தான் விமல். அவளை இங்கே அழைத்து வந்து வைத்தியம் பார்க்கலாம் என்றும் அவன் தாயிடம் கூற அவரோ மறுத்து விட்டார்..
சிதம்பரம் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதை மகனுக்கு எடுத்து கூற அப்போது தான் அவனுக்கு தந்தையின் நினைவே வந்தது. அதற்கு பிறகு அவனும் எதுவும் பேசவில்லை.
ஆனால் தீப்தியை பார்க்க வேண்டும் என்று மட்டும் கூறினான்.​

அதற்கு கவிதா சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்கும் படி கூறி விட்டு தான் மட்டும் இடையிடையே சென்று தீப்தியை பார்த்து விட்டு வருவார். அன்னையிடம் தங்கையை பற்றி கேட்டுக் கொள்வதோடு முடித்து கொள்வான் விமல்.​

இன்று அவனையும் அழைத்து கொண்டு செல்ல முடிவு எடுத்த கவிதா தயாராகி இருக்கும் போது தான் திடீரென்று வீட்டிற்கு வந்து நின்றார் சிதம்பரம்.
ஆனால் அவர் அனுமதி கொடுத்தது அவருக்கு ஆச்சரியமே..​

அவர்கள் இஷிகாவின் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவர்கள் பின்னோடே வந்து நின்றார் சிதம்பரம்.
இதை அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
கவிதாவிற்கு பயத்தில் உயிரே போய்விடும் போல் இருந்தது.
என்ன சொல்லி அவரை சமாளிக்கலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருக்க விமலோ தந்தையை கண்ட பயத்தை எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
அவன் இஷிகா போன்று எல்லாம் இல்லை. தந்தை சொல்லே மந்திரம் என்று வாழும் ரகம் அவன்.​

அங்கு இருந்த இஷிகாவை
பார்த்தவர்
" என்னம்மா வீட்டுக்கு வந்த மனுஷனே வான்னு சொல்லி கூப்பிட கூட உனக்கு வாய் வரலையா?
இப்படியா உன்னை உங்க அம்மா வளத்து வச்சிருக்கா?"
என்று அவளிடம் நேரடியாக பேச அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
அவளுடைய தந்தை இப்படிப் பட்டவர் இல்லையே ..​

ஆனாலும் முகத்தில் எதையும் காட்டாமல்
"உள்ள வாங்க.. நீங்க தான் எங்க வீட்டுக்கு எல்லாம் வர மாட்டீங்களே. அதனால் தான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன் . வேற ஒன்னும் இல்லை.." என்று அவருக்கு பதிலடி கொடுத்தாள் இஷிகா ..
மனதுக்குள் மகளை மெச்சிக் கொண்டவர்
வெளியே எதுவும் பேசாமல் அவளுடைய வீட்டை சுற்றி நோட்டமிட்டார்.​

"எல்லாரும் இங்க இருக்கீங்க.. உன் மூத்த பொண்ணு தீப்தி மட்டும் இல்ல ..
அவளையும் வர சொல்லு, பார்த்துட்டு போயிடலாம்.." என்று மனைவியை பார்த்து அவர் கேட்க அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் அவர் இங்கே வந்திருக்கிறார் என்பது அங்கு இருந்தவர்களுக்கு புரிந்து போனது.​

"என்ன மாமனாரே இவ்வளவு தெரிஞ்சிக்கிட்டு இங்கே வந்த நீங்க உங்க பொண்ணு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறான்றதை தெரிஞ்சுக்காம விட்டுட்டீங்களா என்ன?
இது நம்புற மாதிரி இல்லையே.." என்று நக்கல் தொணியில் பேசியவாறு ஆதித்யா வை கையில் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தான் தேவ் ஆனந்த்.​

அவனுடைய கேள்விக்கு பதில் கூறாது அசராமல் அமர்ந்திருந்தவர் அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்த ஆதித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அதையும் அவதானித்த தேவ் ஆனந்த்
"என்ன பாக்குறீங்க.. இவன் யாருனா?
இவன் தான் உங்க குடும்பத்தோட முதல் வாரிசு.. எப்படி டா இவன் மட்டும் மிஸ் ஆனான்னு யோசிக்கிறீங்களா?
என்ன ரொம்ப கவலையா இருக்கா.?"
என்றபடி அவருக்கு முன்னால் வந்து அமர்ந்தவன் ஆதித்யாவை தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டான். அவனது குரலில் அத்தனை நக்கல்.​

அவன் இப்படி தனது குடும்பத்தின் முன்னால் வைத்து பேசவும் அவருக்கு ஒரு மாதிரியாகி விட்டது.
"என்ன சார் உங்க போலீஸ் புத்தி உங்களை விட்டு போகாது போலவே.. என்னென்னமோ பேசுறீங்க.."
என அவரும் அவனுக்கு பதிலடி கொடுத்தார்.​

"ஓ சாரி மாமனாரே.. நீங்க என் வீட்டுக்கு என்னோட மாமனாரா வந்திருக்கீங்க இல்லையா.
அதனால உங்க கூட இப்போ எதுவும் பேச முடியாது.."
என்று கூறி விட்டு திரும்பி அங்கே இன்னும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தவர்களை பார்த்தான்.​

"ஐயோ ஏன் அத்தை நின்னுகிட்டு இருக்கீங்க? உட்காருங்க..நீங்களும் தான் மச்சான். முதல் முறையா வீட்டுக்கு வந்து இருக்கீங்க. இப்படி நின்னுகிட்டு இருக்கலாமா? உட்காருங்க.. ஓ உங்க அப்பா என்ன சொல்றாருன்னு பாக்கறீங்களா?"என்று கேள்வியாக நிறுத்திவிட்டு மீண்டும் அவனே பதில் சொல்ல ஆரம்பித்தான்.​

"பயப்படாதீங்க அவரு ஒன்னும் சொல்ல மாட்டார்.. அதான் அவரே நம்ம வீடு தேடி வந்திருக்காரே.. உங்களை மட்டும் என்ன சொல்ல போறாரு.."
என்று கூறி அந்த சூழலை சகஜமாக்கினான் அவன்.​

சிறிது நேரத்திற்கு அங்கு அமைதியே நிலவியது.
அதை கலைக்கும் முகமாக ஆதித்யா தான் கவிதா விடம்
"இவங்க எல்லாம் யாரு பாட்டி?"
என்று அங்கு இருந்த புதியவர்களை காட்டி கேட்டான்.
கவிதாவும் அவனுக்கு அவர்களை அறிமுகப் படுத்தி வைத்தார்.​

தேவ் ஆனந்த் சிதம்பரத்திடம் திரும்பி
"வாங்க மாமா தீப்தியை பார்த்துட்டு வரலாம்."
என்று அவரை அழைக்க மறுப்பு எதுவும் கூறாது அவன் பின்னே சென்றார் அவர்.​

தீப்தி யின் அறைக்கு அவரை அழைத்து சென்றவன் அவளுடைய நிலையை காட்டினான்..
அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்று அவளையே வெறித்துக் கொண்டிருந்தார்.
அவரது காதுக்கருகில் குனிந்த தேவ் ஆனந்த்
"என்ன உசுரோட இருக்காளேன்னு பாக்குறீங்களா?
இல்ல அவளோட இந்த நிலைமைக்கு சந்தோஷப்படுறீங்களா.. இனிமேல் நான் இருக்கிற வரைக்கும் அவளை யாராலும் தொட முடியாது.. அதேபோல பழைய நிலைக்கு அவளை கொண்டு வருவேன்.. நல்ல ஒரு ஃலைப்ப அவளுக்கு அமைச்சு கொடுப்பேன். இத யாராலும் தடுக்க முடியாது.."
என்று ஒருவித தீவிர குரலில் கூறினான்.​

"அவ என்னோட பொண்ணு.. இனி அவள் என் பொறுப்பு. நான் அவளை பத்திரமா பாத்துப்பேன். நீங்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.. "என்று அவர் தேவ் ஆனந்தை நிமிர்ந்து பார்த்து கூற சத்தமாக சிரித்தான் அவன்.​

"ரொம்ப நல்லா நடிக்கிறீங்களே..
உங்க அக்கறைக்கு நன்றி..இத்தனை நாள் நான் தானே பாத்துக்கிட்டேன் . இதுக்கு மேலேயும் நானே பார்த்துக்கிறேன்.."
என்று கூறியவன் அங்கு நின்ற மனைவியை திரும்பி பார்த்து
"உங்க அக்காவை நீ பார்த்துக்க மாட்டியா?"
என்று கேட்டான்..​

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஏனெனில் ஏனெனில் அவளுடைய தந்தையின் செய்கைகள் வித்தியாசமாக இருந்தன.
அக்காவின் மேல் தீரா கோபத்தில் இருந்தவர் இன்று அவளை பார்த்துக் கொள்வதாக சொன்னால் அவளுக்கு சந்தேகம் தோன்றத்தானே செய்யும்..​

'ஒரு வேளை தனது கணவன் தந்தை பற்றி சொல்வது உண்மையா இருக்குமோ?'
என்று யோசிக்கவும் செய்தாள் பெண்ணவள்.
"என்ன இஷி உங்க அக்காவை பார்த்துக்க மாட்டியா?"
மீண்டும் அவன் மனைவியிடம் கேட்க
இப்போது பதில் கூறினாள் இஷிகா.​

ஆனால் கணவனுக்கு இல்லை..
தந்தைக்கு நேரடியாக பதில் கூறினாள்.
"அக்காவையும் பையனையும் நாங்களே பார்த்துக்குறோம்..
நீங்க அடிக்கடி வந்து பார்த்துட்டு மட்டும் போங்க.."
என்று அவள் கூறிவிட எதுவும் பேசாது வெளியேறினார் சிதம்பரம்..​

மனைவியின் நிலையை புரிந்து கொண்ட தேவ் ஆனந்த் அவள் அருகே வந்து அவளுடைய கைகளை பிடித்து அதில் அழுத்தம் கொடுத்தான்.​

தொடரும்..​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 24​

நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் கடந்து கொண்டே சென்றன. கூடுதல் சந்தோஷம் என்னவென்றால்
இப்போது தீப்தியின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தென்பட ஆரம்பித்து இருந்தன.
ஆம் அவள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்.​

இதற்க்கு இஷிகாவின் கவனிப்பும் ஒரு காரணம் என்றால் பொய்யில்லை. அக்காவை தன்னுடைய குழந்தை போல் பார்த்துக் கொண்டாள் அவள்.
தீப்திக்கு சுற்றியுள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய அளவு இப்போது தெளிவு பிறந்து இருந்தது. எனவே தனது மகனுடனும் தங்கையுடனும் தனது காலத்தை செலவழிக்க தொடங்கினாள் அவள்.​

இஷிகாவின் குடும்பம் அடிக்கடி அவளது வீட்டுக்கு வந்து தீப்த்தியையும் ஆதித்யாவையும் பார்த்து விட்டு செல்ல தவறுவதில்லை.
ஆனால் சிதம்பரம் மட்டும் அன்று இங்கிருந்து சென்ற பிறகு வரவேயில்லை.​

அபிமன்யுவும் சுதீப்பும் கூட தீப்தியை பார்ப்பதற்காக இங்கு வருவதுண்டு .
அப்போதெல்லாம் அபிமன்யுவின் பார்வை தீப்தி யின் மேல் விழும் போது ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்து கொண்டான் தேவ் ஆனந்த். எனவே அவனை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான். தீப்தி மேல் முன்பு இருந்த காதல் இப்போதும் இருக்குமா என்பது தான் தேவ் ஆனந்தின் சந்தேகம்.​

அப்படி அந்த காதல் இன்னும் உயிரோடு இருந்தால் தானே இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டான் அவன்.​

அன்றும் அப்படித் தான் அபிமன்யு சுதீப் இருவரும் அங்கு வந்திருந்தனர்.
அவர்கள் வந்த சிறிது நேரத்திலேயே தீப்தி மகனுடன் தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும் வரை அபிமன்யுவின் பார்வை அவளை விட்டு இம்மியளவும் கூட நகரவில்லை. அதை உணர்ந்து கொண்ட தேவ் ஆனந்த் இன்றே இது பற்றி அபிமன்யுவிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான் ..​

எனவே அவர்கள் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு செல்வதற்காக எழுந்த போது
" அபிமன்யு உங்க கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்.. இப்ப முடியுமா ?"
என்று தேவ் ஆனந்த் வினவ என்னவோ ஏதோ வென்ற பயத்துடனே முடியும் என்பது போல் தலையாட்டினான் அபிமன்யு.​

சுதிப்பும் அதை புரிந்து கொண்டவன்
போல் "நான் இவங்க கூட பேசிகிட்டு இருக்கேன் ..நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு வாங்க.." என்று ஒதுங்கி கொண்டான். உண்மையை சொல்லப் போனால் அவனுக்கும் அதே எண்ணம் தான்.. அண்ணனின் பார்வை தீப்தி மேல் காதலாக விழுவதை அவனும் உணர்ந்து தான் இருந்தான்.​

அவளும் இப்போது கணவனுடன் இல்லை.. அண்ணனும் இன்று வரை அவள் நினைவுகளுடனேயே தனியாக தான் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட சுதீப் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் நினைத்தான்.
அப்படி இருக்கையில் இதையே தான் தேவ் ஆனந்தும் நினைக்கிறான் என்பதை தேவ் ஆனந்த்தின் பார்வை அபிமன்யுவின் மேல் ஆராய்ச்சியாக விழுவதை வைத்து உணர்ந்து கொண்டான் சுதீப்.​

அதை அவன் ஒரு நாள் தேவ் ஆனந்துக்கு அழைத்து கூறவும் மறக்கவில்லை. சுதீப் கூறியதற்கு 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று மட்டுமே பதில் அளித்தான் தேவங ஆனந்த்.
எனவே இப்போது அவன் அதைப் பற்றித் தான் பேசப் போகிறான் என்பதை உணர்ந்து கொண்ட சுதீப் தானாக இருவரையும் விட்டு விலகிக் கொண்டான்.​

இருவரும் தோட்டத்திற்கு வந்து சிறிது நேரம் ஆகியும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முதலில் அபிமன்யு தான்
"சார் ஏதோ பேசணும்னு சொன்னீங்க. என்ன விஷயமா என்கிட்ட பேசணும்?"
என்று பேச்சை ஆரம்பித்தான்.​

"அபிமன்யு இந்த சார் எல்லாம் வேணாமே.. என்னையும் உங்க ஃபிரண்டா நினைச்சுக்கோங்க. தேவ்னே என்னை கூப்பிடலாம்.. ஓகேவா ?"
என்று அவன் அபிமன்யுவை பார்த்து கேட்க அபிமன்யுவும் சரி என்பது போல் தலையசைத்து வைத்தான்.​

அதன் பிறகு தேவ் ஆனந்த் அபிமன்யுவை
நேருக்கு நேர் பார்த்து
"உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நீங்க இதுக்கு உண்மையை மட்டும் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.. மனசுல எதையாவது வச்சுக்கிட்டு நான் கேக்குறதுக்கு நீங்க உண்மையான பதில் சொல்லலைன்னா ரொம்ப கஷ்டமா போயிடும். சோ மனசை தொறந்து பதில் சொல்லுங்க.." என்று பீடிகை போட அபிமன்யுவிற்கு திக் திக் என்று ஆனது.​

சிறிது பயம் கலந்த முகத்துடன் தேவ் ஆனந்தை பார்த்தவன்
" சா.. தேவ் நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல. கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் "
என்றான் அபிமன்யு.​

"ஓகே நேரடியாக விஷயத்திற்கு வரேன்..நீங்க தீப்தி மேல் வைத்திருந்த காதல் இன்னும் மாறாம அப்படியே தான் இருக்கா?" என்று தேவ் ஆனந்த் கேட்க எந்தவித தயக்கமும் இன்றி அபிமன்யுவிடமிருந்து பதில் வந்தது.​

"ஆமா அன்னைக்கு எந்த அளவுக்கு அவ மேல காதல் இருந்துச்சோ இன்னைக்கும் அதே அளவு காதல் அவ மேல எனக்கு இருக்கு. ஒரு கடுகளவு கூட அது குறையல. உங்களுக்கு எப்படி அத சொல்றதுன்னு எனக்கு தெரியல. அவ எந்த நிலைமையில எப்படி இருந்தாலும் அவளை முழு மனசோட ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். ஆதித்யாவையும் சேர்த்து தான் சொல்றேன்.. அவன் என் பையன் போல தான்.. போல என்ன பையனே தான்.. அதுல எந்த சந்தேகமும் வேண்டாம் .."
என்று விளக்கம் கூறினான் அபிமன்யு.​

தேவ் ஆனந்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் ஒருவர் மீது காதல் வைக்க முடியுமா?
தான் காது காதலித்துக் கொண்டு இருக்கும் போதே வேறொருவரை காதலித்து திருமண மேடை வரை வந்த தங்கள் திருமணத்தை நிறுத்தி விட்டு சென்ற ஒரு பெண்ணை அதுவும் அவளுடைய கணவன் இறந்து கையில் ஒரு குழந்தை யுடன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணை ஒரு ஆணால் இன்றுவரை துளி அளவு கூட குறையாத காதலுடன் பார்க்க முடியுமா.?
முடிகிறதே..இங்கு இதோ அவன் கண் முன்னே ஒருவன் நிற்கிறானே.​

அபிமன்யுவை பார்க்கும் போது வியப்பாகவும் இருந்தது.. அதே சமயம் அவனுடைய நிலையை கண்டு பாவமாகவும் இருந்தது. எத்தனை நாட்கள் இந்த காதல் இல்லாமல் ஏங்கி இருப்பான்.. ஆறு வருடங்களை கடந்த நிலையிலும் ஒருத்திக்காக வேறு ஒரு பெண்ணை மனதால் கூட தீண்டாமல் இருக்கும் இப்படிப் பட்ட ஆண்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்களா என்பது ஆச்சரியமே.​

இப்போது தேவ் ஆனந்திற்கு பேச்சு வரவில்லை.. தொண்டையை செருமிக் கொண்டவன் அபிமன்யுவை பார்த்து
"நான் இப்போ ஏன் இதை பற்றி கேட்கிறேன்னு யோசிக்கிறீங்களா?" என்று கேட்க இல்லை என்பது போல் தலையசைத்த அபிமன்யு
"நான் இங்க வரும் போது எல்லாம் தீப்தியை பார்க்கிற பார்வையை நீங்க அவதானித்திருப்பீங்க என்று நினைக்கிறேன். அதனால கூட இந்த கேள்வி உங்க கிட்ட இருந்து வரலாம் இல்லையா?"
என்றான்.. அதற்கு தேவ் ஆனந்தும் ஆம் என்பது போல் தலையை அசைத்து வைத்தான்.​

"தேவ் நீங்க என்னை பற்றி தப்பா நினைக்கிறீங்களோ என்னவோ.. ஆனா ஒன்னு தீப்த்திய கல்யாணம் பண்ணிக்கணும். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா அதுக்கு அவ ஒத்துப்பாளான்னு தெரியல.. என்ன பண்றதுன்னும் எனக்கு தெரியல.. நீங்க இது பற்றி கேக்கலனாலும் நானே இன்னும் கொஞ்ச நாள்ல உங்ககிட்ட பேசி இருப்பேன்.
இப்போ அவளுக்கு எல்லாமா இருக்கிறது நீங்க மட்டும் தான். உங்க கிட்ட தான் அதைப் பற்றி நான் பேசணும் ..
ப்ளீஸ் என்னோட காதலை எனக்கு கொடுத்துட்றீங்களா?
அவளை நான் கண் கலங்காம பாத்துப்பேன்.." என்று கண்களில் கண்ணீருடன் கையேந்தி தேவ் ஆனந்திடம் காதல் பிச்சை கேட்டான் அபிமன்யு..​

தேவ் ஆனந்திற்கே சங்கடமாகி போனது ..என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அதற்கு இடையில் அங்கு வேகமாக வந்த இஷிகா
"ஐயோ அபிமன்யு.. என்ன இது நீங்க எதுக்காகவும் யோசிக்காதீங்க. இப்படி ஒரு காதலை எங்க அக்கா அனுபவிக்கனும்.. அவ சந்தோஷமா இருக்கணும். உங்களுடைய காதல் நிறைவேறனும்.
சோ இவர் என்ன சொன்னாலும் பரவாயில்லை நான் சேர்த்து வைக்கிறேன் உங்க காதலை.. என்னோட அக்காவை உங்க கையிலேயே ஒப்படைக்கிறேன். போதுமா.. அக்காவே வேணாம்னு சொன்னாலும் உங்க கூட சேர்த்து வைக்கிறது என்னோட பொறுப்பு.. என்னை நம்புகிறீர்களா?" என்று கேட்டாள்.​

இவள் எங்கே இங்கு வந்தாள் என்று தான் பார்த்தான் தேவ் ஆனந்த்.
" என்ன ஆனந்த் பேசாம இருக்கீங்க?. அபிமன்யு ரொம்ப நல்லவர். அவருக்கு அக்காவை கல்யாணம் பண்ணி கொடுத்தா அவ சந்தோஷமா இருப்பா..நீங்க என்ன சொல்றீங்க?"
என்று இஷிகா தேவ் ஆனந்தை பார்த்து கேட்க அவனுக்கோ அவள் ஆனந்த் என்று அழைத்தது ஒரு வகை சந்தோஷம் என்றால் அவன் யோசித்தது போலவே அவளும் யோசித்தது மறு சந்தோஷம்.​

"நீயே சொல்லிட்ட அதுக்கு அப்புறம் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. எனக்கு மனசுல இந்த ஐடியா இருந்ததுனால தானே அவர்கிட்ட இன்னைக்கு நான் கேட்டேன். சோ அதுக்கான வேலையை அடுத்து தான் ஆரம்பிக்கணும். அதுக்கு முன்னாடி முழுசா தீப்தி குணமாகனும்.
அதுவரை அவ என் வீட்டில் என் பாதுகாப்புல தான் இருக்கணும். அவ சம்மதத்தோடு தான் உங்க கூட வரணும்.. அப்படி இல்லைனா என்னால எதுவும் பண்ண முடியாது.. மன்னிச்சிடுங்க அபிமன்யு.."
என்றான் தேவ் ஆனந்த்.​

அதற்க்கு சிறு புன்னகை ஒன்றை வெளியிட்ட அபிமன்யு
"அவளோட காதலுக்காக எத்தனை வருஷங்கள் ஆனாலும் காத்திருப்பேன் .."
என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டு சென்று விட்டான்.​

கணவன் மனைவி இருவருக்கும் அவனை பார்க்க வியப்பாகத் தான் இருந்தது. இப்படி ஒரு காதலா?
அதை தேவ் ஆனந்திடம் கேட்கவும் செய்தாள் இஷிகா.​

அவளுடைய இரு கைகளையும் தனது கைகளுக்குள் பொத்தி வைத்து கண்டவன்
"ஆமா இஷி
அபிமன்யு ஓட காதலை பார்க்கும் போது ஆச்சரியமா தான் இருக்கு. அதே சமயம் பொறாமையாவும் இருக்கு.. இப்படி ஒரு மனுஷனால இந்த காலத்துல இருக்க முடியுமா? தீப்தி அவரை கல்யாணம் பண்ணா ரொம்ப சந்தோஷமா இருப்பா.
அதே போல இன்னொரு விஷயம் அபிமன்யு ஓட காதலை போல என்னோட காதலும் இருக்குமா என்று சொல்லத் தெரியாது. ஆனா கடைசி வரை உன்னை மட்டும் மனசுல நினைச்சுட்டு இருப்பேன். அது மட்டும் உண்மை.." என்று தனது காதலையும் மறைமுகமாகவே அவளிடம் தெரிவித்தான் தேவ் ஆனந்த்.​

அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்ட இஷிகா
"அந்த அளவு காதல் என் மேல வைக்கலனாலும் பரவாயில்லை. ஆனால் என்னை தவிர வேறு யாரையும் நீங்க பார்க்கவே கூடாது.
நான் செத்தாலும் நீங்க தனியாவே என்னோட நினைவுகளோடவே இருந்துடனும்..வேற கல்யாணம் பண்ணிக்க கூடாது. அதுக்கு ஓகேனா உங்களோட காதல நான் ஏத்துகிறேன்.. என்ன சொல்றீங்க?" என்று கண்ணடித்து சிறு சிரிப்புடன் அவள் கேட்க
தனது கை வளைவுக்குள் அவளை இறுக்கிக் கொண்டவன் அவளுடைய இரு கண்களிலும் மாறி மாறி முத்தம் வைத்தான்.​

அப்படியே அவனது முத்தத்தில் கிறங்கி போய் நின்றாள இஷிகா.
"வாயாடி நீ செத்தாலும் வேற யாரையும் மனசால கூட நினைக்க மாட்டேன்.. போதுமா?"
என்று சிரித்துக் கொண்டே தேவ் ஆனந்த் கேட்க போதும் என்பது போல் தலையாட்டினாள் இஷிகா.​

"எப்படியோ என் காதலையும் சொல்லிட்டேன்..கடவுளே.."என்று தேவ் ஆனந்த் வானத்தை பார்த்து கூற சிரிப்புடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் பெண்ணவள்.​

அவனும் அவளை பார்த்து சிரிக்க இருவருடைய சிரிப்பு சத்தமும் அந்த இடத்தை நிறைத்தது.​

தொடரும்...

 

Jothiliya

Member
அருமை 👌👌👌👌👌அபிமன்யு தீபத்திமேல் வைத்துள்ள காதல் அற்புதம் அருமை 👌👌👌👌👏👏👏👏❤❤❤❤🌺🌺🌺
 

Mafa97

Moderator

அத்தியாயம் 25​

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாகவே எழுந்து
வேலைகளை செய்து கொண்டிருந்தாள் இஷிகா. வால்
பிடித்தது போன்று அவள் பின்னாலேயே ஆதித்யாவும் தேவ் ஆனந்தும் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர்.
இவற்றையெல்லாம் பார்த்தபடி ஹாலில் உள்ள சோபாவில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள் தீப்தி.​

தன்னைச் சுற்றி நடப்பவைகள் யாவும் அவளுக்கு தெரிந்த போது அவள் முதல் முதலாக கேட்ட வார்த்தை கணவன் எங்கே என்பது தான்.
தேவ் ஆனந்தும் சுற்றி வளைக்காது அன்று நடந்ததை அவளிடம் கூறி விட்டான்.
இவர்கள் எதிர்பார்த்தபடி அவள் ஒன்றும் அழவில்லை.. கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவும் இல்லை. ஆனால் அழுத்தமாக இருந்தாள்.​

இதனை அவர்கள் மருத்துவரிடம் கூறிய போது அவளை தனியே விடுவது ஆபத்து என்றும்
எப்பொழுதும் அவளுடன் யாராவது இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூற அன்றிலிருந்து அவளுடன் யாரோ ஒருவர் இருப்பது வழக்கமாகி விட்டது.​

அவளைப் பார்க்க அவள் வீட்டிலிருந்து யாராவது வந்தால் ஓரிரு வார்த்தைகளை பேசுவாள் அவ்வளவே ,
அதன் பிறகு அவளிடம் அமைதி தான்.
இதுவே அவர்களுக்கு பெரிது என்பதால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் விட்டு விட்டனர்.​

"ஏன் இப்போ ரெண்டு பேரும் என் பின்னாடி சுத்திட்டு இருக்கீங்க.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா.?"
என்று கோபம் போய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
இல்லை என்பது போல் அவர்கள் இருவரும் தலையை ஆட்டி வைக்க சிரிப்புதான் வந்தது அவளுக்கு.​

"சரி அப்படின்னா என்னோட சேர்ந்து சமைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணுங்க சீக்கிரமே சமைச்சு முடிச்சிடலாம்.."
என்று இஷிகா சொன்னது தான் தாமதம் தந்தை மகன் இருவரும் சடசடவென்று வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.​

ஆதித்யா "அம்மா இது ஓகேவா? அம்மா இதை செய்யவா?" என்று அடிக்கடி அவளிடம் கேட்டு கேட்டு வேலைகளை செய்தான்.
ஆம் இப்போதெல்லாம் ஆதித்யா தீப்தி, இஷிகா இருவரையும் அம்மா என்றே அழைக்க ஆரம்பித்து இருந்தான்.
அவன் அம்மா என்று அழைக்கும் போதெல்லாம் இஷிகாவிற்கு வானில் பறப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
அப்படி ஒரு சந்தோஷம் அவளுக்கு.​

தேவ் ஆனந்த் வேலை செய்வதை விட மனைவியின் அழகை ரசிப்பதிலேயே கவனம் செலுத்தினான்.
அது அவளுக்கு கூச்சத்தை வரவழைத்த போதும் இனிமையான அனுபவமாக இருந்ததால் அவன் போக்கிலேயே அவனை விட்டு விட்டாள் அவள்.​

ஆதித்யாவின் கவனத்தை கவராது
மெல்ல இஷிகாவின் பக்கம் வந்தவன்
"என்ன பொண்டாட்டி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்குறது போல தெரியுது.. எதாச்சும் ஸ்பெசலா?"
என்று மெல்லிய குரலில் அவள் காதுக்குள் அவன் சொல்ல கையில் இருந்த கத்தியை அவனை நோக்கி காட்டியவள்
கண்களாலேயே மிரட்டினாள்.​

"என்னடி மெரட்டுற?
இது சரியில்லை சொல்லிட்டேன்.."
என்று அவளிடம் கூறி விட்டு "ஆதி கண்ணா.."
என மகனை அழைத்தான்.
அவனும் "என்னப்பா.. சொல்லுங்க.." என்று கூறினான்.
"உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?" என்று தேவ் ஆனந்த் கேட்க இஷிக்காவிற்கு திக் என்றானது.​

' என்னடா இவன் சிறு பிள்ளையிடம் போய் இப்படி எல்லாம் கேட்டு வைக்கிறனே' என்று தான் தோன்றியது அவளுக்கு.
ஆதித்யாவும் எதுவும் யோசிக்காது பட்டென
"எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்..
என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தம்பி தங்கச்சி இருக்காங்க.. எனக்கு மட்டும் இல்ல.. "என்று கூறி விட்டான்.
அவனுக்கு என்ன தெரியும்.
சிறு பிள்ளை தானே‌..​

"அச்சோ.. நீ கவலை படாதே கண்ணா. உனக்கு ஒரு தங்கச்சி பாப்பாவ ரெடி பண்ணா போச்சு.."
என்று கூறினாலும் பார்வை என்னவோ மனைவியிடம் தான் இருந்தது.
இஷிகாவிற்கு தான் வெட்க்கமாக இருந்தது.​

"சும்மா கண்டதையும் பேசாம வேலையை பாருங்க.. பையன் முன்னாடி என்ன பேசுறதுன்னு கூட தெரியாது.." இன்று தனது வெட்கத்தை மறைத்துக் கொண்டு அதனைத் திட்டி வைத்தாள் பெண்ணவள்.​

இப்படியே கூத்தும் கும்மாளமுமாக சமைத்து முடித்தவர்கள் குடும்பமாக சேர்ந்து உணவை உண்டனர். தீப்தி தானே உணவை பரிமாறி உண்ணவும் பழகி இருந்தாள்.
உணவு வேலையின் போதும் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டே இருந்தனர்.. இடையிடையே தீப்தியையும் பேச்சின் நடுவே இழுத்துக் கொள்ளவும் மறக்கவில்லை அவர்கள்.​

அன்று மாலை அர்னவ் ஆர்த்தி இருவரும் ஜோடியாக வீட்டிற்கு வந்தனர்.
அவர்களையே தான் அதிர்ச்சியாக பார்த்திருந்தனர் இஷிகா தேவ் ஆனந்த் இருவரும்..
" என்னடா இப்படி காணாததை கண்ட மாதிரி பார்த்துகிட்டு இருக்க உள்ளே வான்னு கூட சொல்லாம.."
என்று கேட்டபடியே வந்து அமர்ந்தான் அர்னவ்.​

"பின்ன இல்லையா? நீயும் ஆர்த்தியும் சேர்ந்து வீட்டுக்கு வந்து இருக்கீங்க.. இது அதிசயம் தானே.. அதனால தான் இப்படி பார்த்துட்டு இருந்தோம்."
என்று கிண்டல் செய்தான் தேவ் ஆனந்த்.
" ஆமா டா.. அதை சொல்லத்தான் இப்போ வீட்டுக்கு வந்தோம்.
ஃபோன்ல சொல்லி இருக்கலாம். ஆனா நேர்ல சொல்றது போல வராதே.."என்று ஆரம்பித்த அர்னவ் அங்கு இருந்தவர்களின் முகம் பார்த்தான்.
எல்லோரும் அவன் என்ன சொல்ல போகிறேன் என்று தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.​

"அன்னைக்கு ஆர்த்தி இங்க வச்சு என்னை திட்டிட்டு போனதுக்கு அப்புறம் எனக்கு மனசே சரியில்லடா.. சோ யோசிச்சு பார்த்துட்டு அடுத்த நாளே அத்தை மாமா கிட்ட போய் ஆர்த்தியை எனக்கே கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு பொண்ணு கேட்டுட்டேன் டா.. அவங்களும் நான் எப்படா ஓகே சொல்லுவேன்னு பாத்துட்டு இருந்து இருப்பாங்க போல. உடனே ஓகே மாப்ள எப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு கேட்டாங்க டா.. எங்க அப்பா அம்மாக்கு ஒரே சந்தோஷம்.. சீக்கிரமே கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு வீட்ல பேசிகிட்டு இருக்காங்க. அதான் உன்னை பார்த்து நேர்ல சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.."
என்று மூச்சு விடாமல் கூறியவன் ஆர்த்தியின் முகம் பார்க்க அவளோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.​

"ஏண்டி இப்படி முறைக்கிற ..சரி எல்லாத்தையும் சொல்லி தொலைக்கிறேன்.. மொறக்க மட்டும் செய்யாத. கேவலமா இருக்கு.." என்று அவளை கலாய்த்தவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
"அத்தை மாமா கூட ஓகே சொல்லிட்டாங்க டா. ஆனா இவ இருக்காளே.. கல்நெஞ்சகாரி முடியவே முடியாதுனு சொல்லிட்டா.
கெஞ்சி பார்த்தேன். கேட்கவே இல்லை. வேணாம்னே சொல்றா. வேற வழி இல்லாம கால்ல விழுந்துட்டேன்டா... அப்பறம் தான் ஓகே சொன்னா.."என்று கூறியவர் பெருமூச்சு விட்டான் அவன்.​

அவன் கூறியதை கேட்டது ஆனால் இருவரும் அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்..
"என்ன என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா.. காதலுக்காக என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு பார்த்தியா .. உனக்கும் இருக்கு மச்சான் சிரிக்காத.."என்ற நண்பனை திட்டியவனிடம் தாங்களும் தங்களுடைய காதலை பகிர்ந்து கொண்டதை கூறினான் தேவ் ஆனந்த்.
மேலும் தீப்தி அபிமன்யு பற்றியும் தேவ் ஆனந்த் கூற அர்னவ்விற்கு உண்மையில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.​

"ரொம்ப சந்தோஷமா இருக்கு டா.. எல்லாரோட ஃலைபும் அழகா மாறுது.. ஆனால் விஷ்ணு தான் இல்லை..
விஷ்ணு இல்லாத குறை தெரியாமல் ஆதித்யாவை பார்த்துக்கணும்.. அப்புறம் நம்ம தீப்திக்கும் அபிமன்யு போல ஒருத்தர் கிடைக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எல்லாம் நல்ல படியா முடியனும்னு கடவுளை வேண்டிக்குவோம்.." என்று அடி மனதில் இருந்து கூறினான் அர்னவ்.​

"சரி நீங்க பேசிட்டு இருங்க நான் சாப்பிடுறதுக்கு ஏதாவது எடுத்துட்டு வரேன் ." என்ற இஷிகா ஆர்த்தியையும் உடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சமயலறை சென்று விட்டாள்.​

அவர்கள் அந்த இடத்தை விட்டு மறைந்த பிறகு
"மச்சான் எல்லாம் நல்லபடியா நடக்குது.. அதுக்காக இப்படியே விட்டு விடக்கூடாது.. எனக்கு இன்னும் சிதம்பரத்து மேல இருந்து சந்தேகம் குறையவே இல்லை. அவர் ஏதாவது பண்ணக்கூடும் அதனால நாம ஜாக்கிரதையாவே இருக்கணும்.. விஷ்ணுவோட இறப்புக்கு அவர் பதில் சொல்லியே ஆகணும்.. நான் அவரை மன்னித்து விடுறதா இல்ல.." என்றான் தீவிரமான குரலில் தேவ் ஆனந்த்.​

"சரிடா நாம எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வச்சுட்டே இருக்கணும்.. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.
ஆனா ஆதித்யா பத்திரம். அவன் நம்ம விஷ்ணுவோட வாரிசு.. சோ அவனை தான் ஏதாவது பண்ண முயற்சிப்பார்.
நம்ம ஜாக்கிரதையா இருக்கணும்.."
பதிலுக்கு அர்னவ்வும் மனதில் இருப்பதை கூறினான்.​

"ம்ம்.." என்ற தேவ் ஆனந்தின்
யோசனை என்னவோ சிதம்பரம் பற்றியதாகத் தான் இருந்தது.
' தீப்தி இங்கிருப்பது தெரிந்தும் ஏன் அவர் அமைதியாக இருக்கிறார்..?'
இப்போது சில நாட்களாக அவனுள் தோன்றிக் கொண்டிருக்கும் கேள்விதான் இது.
அவர் ஏதோ உள்ளுக்குள் திட்டம் தீட்டிக் கொண்டு தான் இருக்கிறார் என்று உறுதியாக நம்பினான் அவன்.​

'என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.. ' என் மனதில் கொண்டவன் அர்னவ்வுடன் வேறு விஷயங்கள் பற்றி பேச ஆரம்பித்து விட்டான்..​

மனைவிக்காகவேணும் அவரை மன்னிக்கும் மனநிலையில் தேவ் ஆனந்த் இல்லை என்பது தான் உண்மை..
பார்க்கலாம் விதி அவர்களுக்காக என்ன வைத்து காத்திருக்கிறது என்று.​

தொடரும்...


 

Jothiliya

Member
எல்லோர் வாழ்க்கையும் சந்தோசமாக இருக்கு இருந்தும் சிதம்பரம் என்ன செய்ய போறாரோ அவர்கள் நினைப்பது போல் 🤔🤔🤔🌺🌺🌺
 

Mafa97

Moderator

அத்தியாயம் 26​

அன்று வீட்டிற்கு வந்த தாயிடம் அபிமன்யு தீப்தியின் மேல் வைத்திருக்கும் காதலை பற்றி பேசினாள் இஷிகா.
அவருக்கோ அத்தனை மகிழ்ச்சி. எப்படியாவது மகளது வாழ்க்கை சீராக வேண்டும் என்று தான் அவர் நினைக்கிறார். அதுவும் அபிமன்யு போன்ற ஒரு நல்லவனுடைய கையில் அவள் கிடைப்பது பாக்கியம் அல்லவா.​

உடனே அவரும் மகிழ்ச்சியுடன் சரி என்று கூறி விட்டு திடீரென்று முகம்வாடி போனவராய் இஷிகாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.
"என்னம்மா திடீர்னு முகம் இப்படி மாறி போச்சு.? ஏதாவது பிரச்சனையா?"
என்று கவலையோடு கேட்டாள் இஷிகா.​

" கவலை தான்.
ஆனா எதை சொல்ல சொல்ற. ஒன்னு உங்க அக்கா இதுக்கு சம்மதம் சொல்லணும்.. அடுத்தது உங்க அப்பா என்ன நினைக்கிறார் என்று தெரியாதே.. ஆனா ஒன்னு அவர் என்ன சொன்னாலும் இந்த கல்யாணத்துல அபிமன்யுவுக்கும் தீப்திக்கும் விருப்பம் இருந்தால் அவரை மீறியாவது இந்த கல்யாணத்தை நான் நடத்தி வைப்பேன்.."
என்றார் தீவிரமான குரலில்.​

" எனக்கும் அதே யோசனை தான் மா..
அப்பா என்ன சொன்னாலும் அதுல எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனா அக்கா என்ன சொல்வாலோன்ற பயம் எனக்கு மனசுக்குள்ள இருந்துகிட்டே இருக்கு.. அக்கா கிட்ட எப்படி பேசுறதுன்னுமா தெரியலை.. அவளே இப்ப தான் தேறி வந்து இருக்கா.
இதுல நாங்க புதுசா இன்னொரு கல்யாணம் அது இதுன்னு பேச போய் அவ ஏதாவது பண்ணிக்கிட்டா என்னம்மா பண்றது.. பயமா இருக்கு. அதுலயும் இவர் வேற அக்கா ஓகே சொன்னா தான் கல்யாணம் என்று சொல்லிட்டாரு.. அபிமன்யுவை நினைச்சாலும் பாவமா இருக்கு. எத்தனை வருஷம் தான் அக்காவோட காதலுக்காக அவரு வெயிட் பண்ணுவாரு .ஒரே குழப்பமா இருக்குமா .."
என்று தன் பங்கிற்கு இஷிகாவும் கவலைப் பட்டாள்..

இஷிக்காவின் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்ட அவளுடைய தாய்
"எதுவும் யோசிக்காதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு நடக்க வேண்டிய காரியத்தை பார்க்கிறது தான் புத்திசாலித்தனம். இப்பவே போய் உன் அக்கா கிட்ட பேசி பார்க்கலாம்.." என்று கூறி மகளை அழைத்துக் கொண்டு தீப்தி இருக்கும் இடத்தை நோக்கி படபடக்கும் மனதுடன் சென்றார் அவர் .​

தீப்தியோ ஏதோ தீவிர யோசனையின் அமர்ந்திருந்தாள். "அக்கா.."
என்றபடி அவள் அருகில் சென்று நின்ற இஷிக்காவை நிமிர்ந்து பார்த்தவள்
"வா இஷி உக்காரு .." என்ற தன் அருகே இருக்கும் இடத்தை காட்டி விட்டு தனது தாயையும் பார்த்து "வாங்கம்மா நீங்களும் உட்காருங்க.." என்று கூறினாள்.​

அவள் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்ட தாய் மகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல்.​

ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட கவிதா "அம்மாடி தீப்தி உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.. இதை நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியாது. ஆனால் இது உன்னோட நல்லதுக்காகவே தவிர வேற ஒன்னுக்கும் இல்லை .உன்னை நாங்க யாரும் வற்புறுத்த மாட்டோம். உனக்கு புடிச்சா மட்டும் தான் இது எல்லாம் நடக்கும்.." என்று பீடிகை போட்டார்.​

உண்மையில் தீப்திக்கு இவர் என்ன கூற வருகிறார் என்று தெரியவில்லை. எனவே அவள் எதுவும் புரியாத முக பாவனையுடன் தாயை பார்த்துக் கொண்டு இருந்தாள். பெருமூச்சொன்றை வெளியிட்ட கவிதா
"ஆறு வருஷத்துக்கு முன்னாடி உனக்கும் அபிமன்யுக்கும் தான் கல்யாணம்னு பேசி வச்சிருந்தோம். உண்மைய சொல்லப் போனா எனக்கும் அபிமன்யுவை ரொம்ப பிடிக்கும். அவன் ரொம்ப நல்ல பையன். ஆனா கல்யாணம் அன்னைக்கே நீ அவனை தலை குனிய வச்சுட்டு போயிட்ட. ஆனாலும் அவனோட அந்த காதல் குறையவே இல்லை. இப்போ கூட அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கான்.. நீ என்னம்மா சொல்ற?" என்று எப்படி பேசுவது என தெரியாமல் ஏதோ ஒருவாறு வாய்க்கு வந்ததை கூறி முடித்தார் கவிதா.​

தீப்தியிடம் அமைதி மட்டுமே. தாய்க்கு அவள் எந்த பதிலும் சொல்லவும் இல்லை அவள் முகத்தில் எந்த விதமான மாற்றமும் இருக்கவில்லை. அவள் ஒத்துக் கொள்வாள் என்று நம்பிக்கை இப்போது இஷிகாவிற்கு துளி அளவு கூட இல்லை.​

ஏனெனில் தீப்தி இருக்கும் நிலை அப்படி..
அக்கா கோபப் பட்டு இருந்தாலாவது மனது சமாதானமாகி இருக்கும். ஆனால் இவள் என்னவென்றால் எந்தவித முகமாற்றமும் இல்லாது இப்படி சிலை போல இருப்பது நல்லதல்ல தான் தோன்றியது இஷிகாவிற்கு.​

மீண்டும் கவிதாவே
"ஏன் தீப்தி எதுவும் பேசாம இருக்க.? உனக்கு அபிமன்யுவை பிடிக்கலையா ?"
என்று மெல்லிய குரலில் கேட்டார் . இதற்கு மேல் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது சரி இல்லை என்பதை உணர்ந்து கொண்ட தீப்தி "என்னம்மா உங்களுக்கு நான் பாரமா இருக்கேனா. அதுக்காகத் தான் என்னை இப்படி கல்யாணம் பண்ணி கொடுக்கிற முடிவுக்கு வந்திருக்கீங்களா? உங்க எல்லாருக்கும் நான் பாரமா இருந்தா இப்பவே சொல்லிடுங்க. இந்த வீட்டை விட்டு என் பையனையும் கூட்டிகிட்டு நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போறேன்.." என்று சூடாகவே பதில் கூறினாள் அவள்.​

"அக்கா என்ன பேசுற நீ ..
நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு பாரமா இருக்கீங்கன்னு நாங்க எப்பயாவது உனக்கு சொன்னோமா..? சரி அதையெல்லாம் விடு.
நீ இப்படி பேசுறியே .
என்னோட வீட்டுக்காரர் எத்தனை வருஷமா உன்னை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டார். அவரோட பையனாவே ஆதித்யாவை வளர்த்திருக்கிறார். எதை வச்சு நீ பாரமா இருக்கேன்னு சொல்ற. தேவ் இதை கேட்டா என்ன நினைப்பார். அபிமன்யு உன் மேல சொல்ல முடியாத அளவுக்கு அன்பு வச்சிருக்கார்.
அப்போ கூட தேவ் நீ ஓகே சொன்னா தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிட்டார். அப்படிப் பட்ட மனுஷனுக்கு நீ பாரமாக இருக்கியா? பேசுறதை பார்த்து பேசு .."
என்று கோபத்தில் சத்தம் போட்டாள் இஷிகா.​

அப்போது தான் அவள் பேசியதன் அர்த்தம் புரிந்தது தீப்திக்கு.
எதுவும் பேசாது தலையை குனிந்து கொண்டாள் அவள். ஏனெனில் அவள் பேசியது பிழை தானே.. அவள் பாரமாக இருக்கிறாள என்றால் அன்றே அவளையும் அவளுடைய பிள்ளையையும் தூக்கி எறிந்து இருப்பார்களே இவர்கள்.
அப்படி செய்யாது தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும் என்பது தானே இவர்களது எண்ணம்..
அதை தான் தவறாக பேசியது தன்னுடைய பிழை தானே என்பதை உணர்ந்து கொண்டாள் தீப்தி.​

"என்ன அக்கா இப்ப புரியுதா.? இனிமேல் இப்படி பேசாதே. உனக்கு ஒன்னு தெரியுமா ?
இந்த காலத்துல அபிமன்யு மாதிரி யாரு காதலிக்கிறாங்க..?
உருகி
உருகி காதலிச்சவளை விட்டுட்டு பணத்துக்காக வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு போற காலம் இது. ஆனா அபிமன்யு நீ கல்யாணம் அன்னைக்கு ஏமாத்திட்டு போய் ஊர் முன்னாடி தலை குனிஞ்சு நின்னார்.
அப்போ கூட அவர் உன் மேல வச்ச காதல் குறையவே இல்லை.
இன்னைக்கு நீ இப்படியான ஒரு நிலைமையில் கைல குழந்தையை வச்சு இருந்தும் கூட அவர் உன்னை முழு மனசோட காதலிக்கிறார். எங்களுக்காக இல்லை என்றாலும் அவரோட காதலுக்காகவாவது நீ அவரை ஏத்துக்கனும்.
இது தான் என்னோட ஆசை . உண்மைய சொல்லப் போனால் என்னோட ஆசை மட்டும் இல்ல அம்மாவும் சரி தேவ்வும் சரி இதையே தான் விரும்புறாங்க. ஆனால் உன்னோட சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காதுன்னு தேவ் சொல்லிட்டாரு. சோ நீ தாராளமா யோசிச்சுட்டு ஒரு நல்ல முடிவா எடு. உன்னோட முடிவுக்கு நாங்க எல்லாரும் கட்டுப்படுவோம்."
என்று இஷிகா பேச பேச அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள் தீப்தி.​

அவளுடைய அமைதியும், அவளது நெற்றி சுருக்கமும் அவள் யோசிக்க ஆரம்பித்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்தியது இஷிகாவிற்கு.
எனவே அவளே யோசித்து ஒரு முடிவு எடுக்கட்டும் என்று விட்டுவிட்டு அன்னையை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றாள் அவள்.​

"இதெல்லாம் சரியா வரும்னு நினைக்கிறியா இஷி.. " என கவிதா இஷிகாவை பார்த்து கேட்டார்.
"தெரியலைமா ஏதோ நடக்கிறது நடக்கட்டும் விடு பார்த்துக்கலாம்.." என்று அன்னையை தான் சமாதானப் படுத்தினாள் அவள்.​

******************​

"அண்ணா என் பையன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டான்..
அதுவும் உங்க பொண்ணு தீப்தியை தான் கல்யாணம் பண்ணிப்பானாம். வேற ஒரு பொண்ணை மனசால கூட நினைக்க மாட்டானாம். நீங்க என்ன அண்ணா சொல்றீங்க?.."
என்று சிதம்பரத்திடம் கேட்டது வேறு யாரும் இல்லை அபிமன்யுவின் தாய் வேதநாயகி தான்.​

ஆனால் சிதம்பரம் எதுவும் பேசவில்லை.அமைதியாகவே இருந்தார்.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வேதநாயகி
"ஆனா ஒன்னு அண்ணா..அவ நம்மையெல்லாம் ஏமாத்திட்டு போக முன்னாடி அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் .
அவதான் என் வீட்டு மருமகளா வரணும்னு நான் நினைச்சேன்.
ஆனா இப்போ ஏனோ உறுத்தலா இருக்கு.. ஒரு வேளை அவளோட பையன் ஆதித்யாவால வந்த உறுத்தலா இருக்குமோ?"
என்று சொல்லி யோசனை செய்வது போல் கடைக்கண்ணால் சிதம்பரத்தை பார்த்தார் வேதநாயகி.​

ஆதித்யாவின் பெயரைக் கேட்டதும் கண்கள் இரண்டும் கோவை பழம் போல் சிவந்து விட்டன சிதம்பரத்திற்கு.
"ச்சே.. அவன் ஒருத்தன்.
அவனோட அப்பன் மாதிரியே வந்து பொறந்து இருக்கான்.. அவனை பார்க்கவே கோபம் கோபமா வருது.
அவனை கொண்ணுட்டு நம்ம பொண்ண அபிமன்யுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்.. நீ என்னம்மா சொல்ற? ஆதித்யா என்ற ஒருத்தன் இல்லைன்னா உனக்கு தீப்தியை மருமகளா ஏத்துக் சம்மதமா?"
என்று வேதநாயகியிடம் கேட்டார் சிதம்பரம்.​

இந்த செய்தி வேதநாயகிக்கு கசக்கவா செய்யும்..
"உங்க இஷ்டம் போல பண்ணுங்கண்ணா..
நான் எப்பவுமே உங்க பக்கம் தான்.."
என்று அவர் அன்பான குரலில் பேச சிதம்பரம் உடன்பிறவா தங்கையின் சொல்லை கேட்டு உள்ளம் குளிர்ந்து போனார்.​

"நீயாவது என் பக்கம் நிக்குறியே..ச்நதோஷம்மா..அந்த பையன் எல்லாம் என் வீட்டு வாரிசா‌.. எவனுக்கோ பிறந்தவன் எல்லாம் என் வீட்டு வாரிசாகிட முடியுமா.
சசே கேட்கவே காது எல்லாம் கூசுது..அவனை ஏதாவது பண்ணா தான் என்னோட ஆத்திரம் அடங்கும்.. அவங்க அப்பன் போன இடத்துக்கே அவனையும் அனுப்பி விட வேண்டியது தான்.."
என்றவரின் முகத்தில் இருந்தது எல்லாம் பக்கா வில்லத்தனம் மட்டுமே..​

அதை கேட்டு வேதநாயகியும் புன்னகைத்தாள்.. அவளுக்கும் அது தானே வேண்டும்..​

தொடரும்...





 

Mafa97

Moderator

அத்தியாயம் 27​

அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களும் தீப்தி வீட்டில் இருந்த யாரிடமும் பேசவில்லை.. எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்துக் கொண்டு இருப்பது போன்று தான் இருந்தது அவளது தோற்றம்.​

இஷிக்காவும் தனது அக்கா சிந்தித்து ஒரு நல்ல முடிவாக எடுக்கட்டும் என்று அப்படியே அவளை விட்டு விட்டாள்.​

ஆனால் இந்த விடயம் எதுவும் தேவ் ஆனந்துக்கு தெரியாதே. எனவே அவன் வீட்டிடம் இதைப் பற்றி விசாரிப்பதற்கு முன் தனது மனைவியிடம் என்னவானது என்று விசாரித்து பார்த்தான்.​

"அது ஒன்னும் இல்லைங்க .​

நானும் அம்மாவும் அக்கா கிட்ட அபிமன்யு பற்றி பேசி பார்த்தோம். அவரும் பாவம் இல்லையா? எத்தனை நாளைக்கு தான் இவளுக்காக காத்துகிட்டு இருப்பார். விஷ்ணு மாமாவும் திரும்ப வரப்போறதில்லை. அவளுக்கும் பெருசா ஒன்னும் வயசு இல்லை தானே. அவளோட நீ​

மீதிக்காலத்தை கழிப்பதற்கு ஒரு நல்ல துணை தேவை இல்லையா? அதனால தான் அவகிட்ட அமைதியா பேசி பார்த்தேன். நான் பேசினதுக்கு அப்புறம் தான் இப்படி ஏதோ யோசனைல சுத்திட்டு இருக்கா.​

விடுங்க ரெண்டு மூணு நாளைக்கு நல்லா யோசிச்சுட்டு ஏதாவது ஒரு நல்ல பதிலை சொல்லட்டும்.. எதுவா இருந்தாலும் அவளோட முடிவு தான் கடைசி முடிவு. ஆனா என்ன அபிமன்யு தான் பாவம். நம்மலாள எதுவும் பண்ண முடியாது. .."​

என்று கவலையோடு பேசியவள் முகத்தை கையில் தாங்கினான் தேவ் ஆனந்த்.​

"விடும்மா இதையெல்லாம் யோசிச்சுகிட்டே இருக்காத. எல்லாம் நல்லபடியா நடக்கும். இது எல்லாம் கடவுளோட முடிவு தானே. நம்மால எதையும் மாற்ற முடியாது. சோ கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு அவர் போக்கிலேயே விட வேண்டியது தான்.. உங்க அக்கா வாழ்க்கை நல்லபடியாக அமையும் அதை நல்லபடியாக அமைத்துக் கொடுப்பேன். சோ நீ என்னை மட்டும் கவனி.. நான் பாவம் இல்லையா? அதை விட்டுவிட்டு வேற எதையும் இந்த மண்டைக்குள்ள போட்டு குழப்பிக்கிட்டு இருக்காதே.." என்று கூறி அவன் கண்ணடிக்க வெட்கத்தினால் முகம் சிவந்தாள் இஷிகா..​

கவலையுடன் இருந்த அவளுடைய மனநிலை அவனது செய்கையில் சந்தோஷமாக மாறிப் போனது.. அது தானே அவனுக்கு வேண்டும். மனைவியின் மலர்ந்த முகத்தை கண்டு புன்னகைத்தவன் அவளையும் அழைத்துக் கொண்டு ஆதித்யா விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றான்..​

ஆதித்யாவை பார்க்க பார்க்க அவனுக்கு தனது நண்பனின் நினைவு தான் வந்து போனது. ஏனோ சில நாட்களாகவே ஆதித்யாவிற்கு ஏதோ ஆபத்து வரப்போவது போல் அவனது மனது அடித்துக் கொண்டே இருந்தது.​

இதற்கு முன்னெல்லாம் அவனுக்கு அப்படி இருந்ததே இல்லை .​

எனவே அதை அவனால் தூரப் போடவும் முடியவில்லை.​

விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து கணவனின் முகம் மாறி போவதை கண்ட இஷிகா அவனது தோள் தொட்டு "என்ன ஆதித்யாவைப் பார்த்து அப்படி முகத்தை வச்சுக்கிறீங்க.. ஏதாவது பிரச்சனையா?" என்று நேரடியாகவே கேட்டு விட்டாள்.​

அவள் அப்படி கேட்ட பின்பு தான் தான் வெளிப்படையாக கவலையை காட்டுவதை உணர்ந்தவன்​

"அப்படி எல்லாம் இல்லையே ..எனக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது .."​

என்று ஏதோ கூறி சமாளித்தான் அவன் .​

ஆனால் அவளுக்கு கணவனின் முக மாற்றம் நன்றாகவே தெரிந்தது ..​

எனவே அவளும் இதை இப்படியே விடுவதாக இல்லை.​

"நீங்க பொய் சொல்றீங்க. உங்களோட முகத்தில் இருந்த சிரிப்பு ஆதித்யாவை கண்டதும் அப்படியே மறைஞ்சு போச்சு. ஏன் அவனுக்கு ஏதாவது பிரச்சனையா?​

என்னவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க. அவன் என் பையன். எனக்கும் அவனை பற்றி தெரிஞ்சுக்குற உரிமை இருக்கு. எதா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்க"​

என்று கோபமாக பேசினாள் இஷிகா .​

அவளது கோபம் நியாயம் தானே என்பதை உணர்ந்த தேவ் ஆனந்த்​

அவளிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் அடுத்த நிமிடமே மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு அவளிடம் பேசினான்.​

"இஷி எப்படி சொல்றதுன்னு தெரியல ..ஆதித்யாவுக்கு ஏதும் நடக்க போறது போலவே என்னோட உள் மனசு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கு. எனக்கு இதுக்கு முன்னாடி எல்லாம் இப்படி இருந்தது இல்லை.​

ஆனா இப்போ ரெண்டு மூணு நாளாவே என்னோட மனசு சரியில்ல.. ஏதோ கெட்டது நடக்க போறது போலவே சொல்லிக்கிட்டு இருக்கு.​

அதுவும் ஆதித்யாவுக்கு தான் ஏதோ நடக்க போறது போலவே இருக்கு.. அது என்னன்னு எனக்கு சுத்தமா தெரியல.. நான் இப்படி நினைக்கிறது சரியா பிழையான்னு கூட தெரியல.. அதனால தான் உன்கிட்டயும் சொல்லி உன்னையும் குழப்பாம நானே மனசுக்குள்ள அதை வச்சுக்கிட்டேன்.. "​

என்றான் கவலையான குரலில் தேவ் ஆனந்த்.​

"அப்படி எல்லாம் எதுவும் நம்ம ஆதித்யாவுக்கு நடக்காது. நீங்க நடக்கவும் விட மாட்டீங்க அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. . சோ எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காமல் நிம்மதியா இருங்க.. "​

என்று அவனுக்கு ஆறுதல் கூறிய இஷிக்காவின் மனதும் இப்போது படபடவென அடித்துக் கொண்டது.​

ஏனெனில் உண்மையில் அவன் கூறியது போல ஆதித்யாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதன் பிறகு அவர்களது நிலை?​

ஆதித்யா இல்லாத ஒரு வாழ்க்கையை அவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.​

ஆனாலும் அவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.​

அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு இப்போது அவள் தான் உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தாள்.​

*********​

"டேய் சொன்ன வேலையை டைமுக்கு முடிச்சிருங்க.. இதுல ஏதாவது சொதப்புனீங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு."​

என்று கூறிய சிதம்பரத்திற்கு சரி என்பது போல் தலையை அசைத்து வைத்தனர் அடியார்கள் போன்று இருந்த இரண்டு நபர்கள்.​

"இதோ இந்த ஃபோட்டோல இருக்கிறது தான் நீங்க கடத்த வேண்டிய பையன் .​

வெளியே யாருக்கும் தெரியாமல் நைசா அவனை தூக்கிட்டு வர வேண்டியது உங்களோட பொறுப்பு. இதுல எதுவும் குழப்பம் பண்ண கூடாது. நான் சொன்னதை தவிர இதுல வேற ஏதாவது நடந்துச்சு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.. என்னைப் பற்றி உங்களுக்கே தெரியும்.."​

என்று மீண்டும் வீர வசனம் பேசியவர் ஆதித்யாவின் புகைப்படம் ஒன்றை அவர்களுடைய கையில் கொடுத்தார் .​

அவர் கொடுத்த புகைப்படத்தை வாங்கிக் கொண்ட அடியாள் ஒருவன் "சரி சார் எந்த குழப்பமும் வராமல் நீங்க சொன்ன வேலையை கனகச்சிதமா முடிச்சிட்ரோம்." என சிதம்பரத்திற்கு வாக்குறுதி அளித்தான்.​

'ம்..ம்.. எல்லா வேலையும் சரியா முடிப்பேன்ற நம்பிக்கையோட நான் நிம்மதியா இருக்கேன்..நீங்க வேலைய முடிச்சதும் நான் பேசின பணத்தை உங்களுக்கு கொடுத்துடுவேன்.. இப்போ இதை அட்வான்ஸ்ஸா வச்சுக்கோங்க.. வேலை முடித்ததும் மீதி பணம் உங்க கைக்கு வந்து சேரும்.." என்றவர் ஒரு கட்டுப் பணத்தை அங்கு இருந்த அடியாள் ஒருவனின் கையில் வைத்தார்.​

அவனுக்கு ஏக சந்தோஷம்.. சிறுவன் ஒருவனை கடத்த போகிறோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதளவும் கூட இல்லாமல் கையில் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு வாயில் இருந்த அனைத்து பற்களையும் காட்டி சிரித்தான் அந்த அரக்கன். அவர்களுக்கா மனம் என்ற ஒன்று இருக்கப் போகிறது கவலை படுவதற்கு..​

தனது குடும்ப வாரிசையே அழிக்க துடிக்கும் சிதம்பரத்தை விடவா அவர்கள் கொடியவர்கள்?​

அவர்கள் வெறும் பணத்திற்காக வேலை செய்பவர்கள் அல்லவா. ஆனால் சிதம்பரம் அப்படி இல்லையே.​

எப்படித் தான் இதுபோன்று சில மனிதர்களுக்கு மனது கேவலமாக படைக்கப் பட்டிருக்கிறதோ தெரியவில்லை...​

தொடரும்..​

 

Mafa97

Moderator

அத்தியாயம் 28​

ஆதித்யாவை யாரும் அறியா வண்ணம் தினமும் பின் தொடர்ந்து கொண்டே இருந்தனர் சிதம்பரம் நியமித்த அடியாட்கள். ஆனால் அவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் ஒன்று அமையவே இல்லை. காரணம் ஆதித்யா எங்கும் தனியாக வெளியே செல்வது இல்லை. சொல்லப்போனால் வேலை செய்பவர்களுடன் கூட தேவ் ஆனந்த் அவனை விடுவது இல்லை. ஏனெனில் தேவ் ஆனந்திற்கு பயம். மகனிற்கு ஏதோ ஒன்று நடக்கப்போவதாக அவனது உள் மனம் கூறிக்கொண்டே இருந்ததால் அவன் ஆதித்யாவை எங்கும் தனியாக விடுவது இல்லை. உடன் யாராவது இருப்பது போலவே பார்த்துக் கொண்டான்.​

அப்படி தான் அன்று பாடசாலை விடுமுறை என்பதால் காலையில் இருந்து தன்னை வெளியே அழைத்து செல்லும் படி இஷிகாவை நச்சரித்து கொண்டே இருந்தான் ஆதித்யா.
அவளுக்கும் அன்று தேவ் ஆனந்த் கூறியதில் இருந்தே பயம். எனவே அவனிடம் முடியாது என்று மறுத்து கொண்டே இருந்தாள் அவள்.​

"ப்ளீஸ் மா.. என்னை வெளியே எங்கேயாவது கூட்டிட்டு போங்க..எனக்கு வீட்டுக்குள்ள இருக்கவே போர் அடிக்குது.. அப்படி என்னை கூட்டிட்டு போகலைனா நான் உங்க கூட பேச மாட்டேன். நீங்க பேட் அம்மா போங்க.."
என்று அவளிடம் கெஞ்சியும் , கோபித்தும் பார்த்து விட்டான் சிறுவன்.​

ஆனால் அவளுக்கு அவனை வெளியே அழைத்து செல்வதற்கு அப்படி ஒரு பயம் .
அவளையும் மீறி ஏதாவது நடந்து விட்டால் அவளால் என்ன செய்ய முடியும்.?
இப்போது அவன் கோபித்துக் கொண்ட காரணத்தால் தயக்கத்துடனே கணவனுக்கு அழைத்து விடயத்தை கூறினாள் இஷிகா.​

பலமுறை அறிவுரை கூறி விட்டே இருவரையும் வெளியே சென்று வர அனுமதி வழங்கினான்.
அனைத்திற்கும் ஆதித்யாவும் இஷிக்காவும் சரி சரி என்று தலையசைத்து வைத்தனர்.​

மாலை நேரம் போல் தனது ஸ்கூட்டியில்
ஆதித்யாவை வைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டாள் இஷிகா.
சிறிது நேரத்திலேயே அவர்களுடைய பயணம் அவர்களுக்கு சுவாரசியம் அழித்துவிட்டது.. எனவே சுற்றுப்புற சூழல் மறக்க இருவரும் ஆனந்தமாக அந்த மாலைப் பொழுதை கழிக்க ஆரம்பித்தனர்.​

'எனக்கு அது வேண்டும்.. எனக்கு இது வேண்டும் '
என்று அடம் பிடித்து வாங்கி சாப்பிட்டான் ஆதித்யா.
அவர்கள் வீட்டில் இருந்து வெளியாகிய சிறிது நேரத்தில் இருந்தே அவர்களை பின் தொடர ஆரம்பித்துவிட்டனர் சிதம்பரத்தின் அடியாட்கள்.
இது எதையும் அறியாத இஷிகா, ஆதித்யா இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டும் பாதையோரம் வாங்கிய உணவுகளை இன்பமாக கொரித்துக் கொண்டும இருந்தனர்..​

இஷிக்காவுடன் ஆதித்யா இருப்பதைக் கண்ட அந்த அடியாட்கள் இப்போதுதான் அவனைக் கடத்துவதற்கு சரியான தருணம் என்பதை புரிந்து கொண்டு இருவரையும் சேர்த்தே கடத்த முடிவு செய்தனர்.
இப்படி இஷிகாவுடன் ஆதித்யா வெளியே வந்திருப்பது பற்றி சிதம்பரத்திற்கு அழைத்து கூறிய அடியாட்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் அறிவுரை கேட்க அவரோ மகளையும் சேர்த்தே கடத்த கூறினார்.​

மேலும் " அவளையும் சேர்த்தே கடத்துங்க.
அப்படி இல்லைனா அந்த ஆதித்யாவை நம்ம எப்பவுமே கடத்த முடியாது.
ஏன்னா அந்த தேவ் ஆனந்த் அவனுக்கு காவலா இருக்கான். சோ இது தான் சரியான தருணம்.. ஆனா ஒன்னு நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க அவ என்னோட பொண்ணு. அவளுக்கு ஒரு சின்ன கீரல் கூட படக்கூடாது சொல்லிட்டேன்.. உங்க கவனம் எல்லாம் அந்த பையன் தான் இருக்கணும்.. "
என்று வேறு கூறி வைத்தார்.​

சிதம்பரம் கூறியதை மனதில் வைத்துக் கொண்ட அடியாட்கள்
ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் வைத்து இருவரையும் மெதுவாக கடத்தி விட்டனர்.
மயக்க மருந்து உபயோகித்ததால் இருவரும் நல்ல மயக்கத்தில் இருந்தனர்.​

இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த அடியாட்கள் சென்று நின்ற இடம் வேதநாயகியின் கெஸ்ட் ஹவுஸ்.
"ஒரு வழியா கடத்திட்டீங்க. எத்தனை நாள் தான் காத்துகிட்டு இருக்கிறது இந்த சின்ன பையனை கடத்துறதுக்கு.."
என்று கூறிய வேதநாயகியின் கண்களில் அப்படி ஒரு சீற்றம்.​

அங்கு இன்னும் சிதம்பரம் வந்திருக்கவில்லை..
எழுந்து கொண்டால் இருவரும் சத்தம் போடுவார்கள் என்பதனால் இருவரையும் ஒரு கதிரையில் வைத்து கட்டி விட்டு வாயையும் அடைத்து வைத்திருந்தனர்.
அடியாட்களை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு வேதநாயகி வெளியே சென்று விட்டாள்.​

அப்போது மெல்ல மெல்ல மயக்கம் கழைந்து சுயநினைவுக்கு வந்தாள் இஷிகா. எழுந்தவளுக்கு அப்போதுதான் தோன்றியது தான் எங்கு இருக்கிறோம் என்று..
பயத்துடன் மெல்ல திரும்பி ஆதித்யா இருக்கிறானா என்று பார்த்தாள்.
ஆம் அவளுக்கு பக்கத்தில் ஒரு கதிரையில் வைத்து கட்டப்பட்டு இருந்தான் சிறுவன்.​

இப்போது அவளுக்கு யார் கடத்தி இருப்பார்கள் என்ற கேள்வி தான் முதலில் தோன்றியது..
ஆனால் யாரிடம் சென்று கேட்க..
அவளிடம் எப்படியும் இருக்க வாய்ப்பில்லை..
அடியாட்களிடம் சென்று தான் கேட்க வேண்டும். ஆனால் அந்த அடியாட்கள் அவள் எழுந்து கொண்டதை இன்னும் கவனிக்கவில்லை.​

மீண்டும் மெதுவாக கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
எப்படி தான் இங்கு இருப்பதை தேவ் ஆனந்துக்கு தெரிவிப்பது என்று அவளுடைய மனது பட படவென அடித்துக் கொண்டது.​

அப்போது வெளியே அவளுக்கு பரிச்சயமான குரல் கேட்டது. யாருடையதாக இருக்கும் என்று காதை தீட்டி கேட்க ஆரம்பித்தாள் பெண்ணவள்.
அந்தக் குரலை கேட்டவளுக்கு ஒரு நொடி உலகமே நின்றது போல ஒரு உணர்வு.​

எத்தனை முறை அவளது கணவன் கூறி இருப்பான்.
ஒருமுறை கூட அவள் நம்பவில்லையே.. இப்போது தான் அதற்காக வருந்தினாள் அவள்.
ஆனால் காலம் கடந்து விட்டதே..
ஆம் அவள் கேட்டது அவளுடைய தந்தையின் குரலே.. உடன் வேதநாயகி உடையதும்..​

'அவரும் தந்தையுடன் கூட்டா?' என்று யோசிக்க யோசிக்க பயத்தில் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
'கடவுளே எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை..குழந்தையை எப்படியாவது காப்பாத்து..'
என்று வேண்டிக் கொண்டாள் அவள்.​

பேசிக்கொண்டே உள்ளே வந்த தந்தையை கண்களில் கண்ணீருடனும் ஒருங்கே கோபத்துடனும் பார்த்தாள் இஷிகா.
அவளைக் கண்டதும் ஒரு நொடி அறிந்தவர் தன்னை சமாளித்துக் கொண்டு
"என்னம்மா மயக்கம் தெளிஞ்சிருச்சா.. சரி இதுக்கு மேல என்கிட்ட மறைச்சு என்ன ஆகப்போகுது.. எனக்கு இந்த பையன் வேணும்.. அவனை விட்டுட்டு நீ போகலாம்.. உன்னை எதுவும் பண்ண மாட்டேன்.."என்று கூற அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு..​

"நீங்க எல்லாம் மனுஷனா..
ஒரு சின்ன பையனை போய் கடத்தி இருக்கீங்களே.. எதுக்காக இப்படி வெறி பிடிச்சு அலையறீங்க..
இத்தனை நாள் நல்லவன் மாதிரி எங்க கிட்ட நடிச்சிட்டு இருந்தீங்களா? என் புருஷன் எத்தனை தடவை என்கிட்ட சொன்னார் தெரியுமா நீங்க மோசமானவர்னு. ஆனா நான் தான் கேட்கல.. ச்சே.."
குரலை உயர்த்தி பேசினாள் அவள்.​

"ஏய் சத்தம் போடாதே.. என்ன நானும் பாத்துகிட்டே இருக்கேன் அப்பான்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி பேசிக்கிட்டு இருக்க." என்று இப்போது பேசியது வேதநாயகி.​

அவளை பார்த்து இளக்காரமாக சிரித்தவள்
"ச்சீ ..நீ வாயை மூடு. நீ எல்லாம் ஒரு பொம்பளையா? இப்படி கடத்தல் அது இதுன்னு அழையுற.? நீயும் ஒரு தாய் தானே.. இந்த சின்ன பையனை கொல்ல துடிக்கிறீங்களே. வெக்கமா இல்ல.." என்றாளஅவள்.

அவள் பேசியதில் கோபம் ஏற்பட பளார் என அவளுடைய கன்னத்தில் அறைந்தாள் வேதநாயகி.
அவள் அடித்ததில் இஷிகாவின் உதடு கிழிந்து இரத்தம் வெளியே எட்டிப் பார்த்தது..​

"ஏய் என்ன விட்டா ஓவரா பேசிகிட்டே போறே..
இதுக்கு எப்படி துடிக்கிறியே உன்னோட அக்காவோட இந்த நிலைமைக்கு காரணம் நாங்கதான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவ..
உன்னோட விஷ்ணு மாமா சாக காரணமும் நாங்க தான்.
பாருங்க அண்ணா எதுவும் தெரியாத பச்சை புள்ளையாய் இருக்கா.."
என்று முதலில் இஷிகாவிடம் பேசியவள் பின்னர் திரும்பி சிதம்பரத்திடம் பேசிவிட்டு கல கல வென சிரித்தாள்.​

அவள் கூறிய செய்தியை கேட்ட இஷிகாவிற்கு தொண்டை அடைத்து கொண்டது..
இவர்கள் இத்தனை கொடியவர்களா?​

சிரித்து முடித்தவள் அடியாட்களை அழைத்து
"ரெண்டு பேரோட கைகட்டையும் கலட்டி விட்டுட்டு இவளை மட்டும் அங்கே இருக்கிற இன்னொரு ரூம்ல போய் அடைங்க.."என்று கூறினாள்.​

அவளை முறைத்துக் பார்த்த இஷிகா அந்த அறையில் இருந்து தப்பிக்க ஏதாவது வழிகள் இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் கண்களால் ஆராய்ந்தாள்.
ம்ஹூம் வழி எதுவும் இருக்கவில்லை.​

ஆனால் உடைந்த கதிரைகள்
மட்டும் நிறைந்து இருந்தன.
அடியாள் அவளுடைய கை கட்டை அவிழ்த்து விட்டதும் அவனை தள்ளி விட்டு அதில் இருந்த கதிரையின் உடைந்த கால் ஒன்றை எடுத்தவள் அங்கிருந்தவர்களை தாருமாறாக தாக்க ஆரம்பித்தாள்.​

இவள் இப்படி செய்வாள் என்பதை அறிந்திராதவர்கள் அவளை கட்டுப்படுத்த தெரியாமல் தடுமாறினர். அதனால் அவர்கள் மீது ஒன்று இரண்டு அடிகளும் விழுந்தன.​

"டேய்..என்னடா ஒரு பொம்பள கையால அடி வாங்கிட்டு இருக்கீங்க.. திருப்பி அடிங்கடா அவளை.."
என வேதநாயகி கூற திடுக்கிட்டு திரும்பி பார்த்தார் சிதம்பரம்..
"அவ என் பொண்ணு தங்கச்சி.."
என்று அவர் கூறவும் மறக்கவில்லை..​

"இன்னும் என்ன அண்ணா பொண்ணு பொண்ணுனுகிட்டு.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எப்படி பேசினா பார்த்தீங்க தானே..
பேசாம விடுங்க.. ரெண்டு அடி பட்டால் தான் வாயை மூடிகிட்டு ஓரமா உட்காருவா.." என்று வேதநாயகி கூற அவர் கூறுவதும் சரிதான் என்பது போல் அமைதியாக இருந்தார் சிதம்பரம்.​

வேதநாயகி கூறிய பிறகும் சும்மாவா இருப்பார்கள் இந்த அடியாட்கள்..
திரும்பி அடி வெளுத்து விட்டனர்..
அவர்களை எதிர்க்க இதற்கு முடியாத பெண்ணவளோ
"ப்ளீஸ்பா விட்டுடுங்கப்பா வலிக்குது ...பையனை விட்டுடுங்கப்பா.. அவன் நம்ம வீட்டோட முதல் வாரிசு.. அவனைப் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா ப்ளீஸ் பா.. சின்ன பையன் பாவம் ஒண்ணுமே தெரியாதவன்.. அவனோட அப்பா வேணும்னா அக்காவை கூட்டிட்டு போய் இருக்கலாம் ஆனா அவன் ஒண்ணுமே தெரியாதவன் பா விட்டுடுங்க.."
என்று தந்தையிடம் கெஞ்சினாள்.​

அதற்கு மேல் ஒரு பெண்ணால் என்னதான் செய்த விட முடியும்..
இப்போது தான் ஒரு பெண்ணாக இருப்பதை அவள் வெறுத்தாள் என்றே கூறலாம்..​

மகள் எப்படி கெஞ்சியதும் தந்தை பாசம் சிறிது எட்டிப் பார்க்கத்தான் செய்தது அவருக்கு..
வேதநாயகியிடம் திரும்பியவர்
"தங்கச்சி விட்டுடுவோம் அவளை..
என் பொண்ணு என் கண் முன்னாடி அடி வாங்குறது என்னால பாக்க முடியல.." என்று கூற அவரைப் பார்த்து உதட்டை பிதுக்கியவர்
"போதும் போதும்.."அடியாட்களிடம் கூறினார்.​

அதற்குள் அவர்கள் அடித்த அடி தாங்க முடியாமல் மயக்க நிலைக்கே சென்று விட்டாள் பெண் அவள்..​

தொடரும்..

 

Mafa97

Moderator

அத்தியாயம் 29​

இஷிகா மிகவும் சிரமப்பட்டு
தன் கண்கள் இரண்டையும் மெதுவாக திறந்து பார்த்தாள்.
அப்போது அவளை சுற்றி அவளுடைய முழு குடும்பமும் நின்று இருந்தது ,
தந்தையை தவிர..
ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் திரு திருவென விழித்தவள் திடீரென்று ஞாபகம் வந்தவளாக "ஆதி..ஆதித்யா .." என்று அங்கிருந்தவர்களை பார்த்து தயக்கத்துடன் கேட்டாள்.​

அப்போது அவள் அருகில் வந்த அவளுடைய தாய் அவளது கையை பற்றி கொண்டு
"அவன் பத்திரமா இருக்கான்.. நீ கவலைப்படாம இரு.. அவனுக்கு எதுவும் ஆகல.." என்று மென்மையான குரலில் கூறினார்..
"இல்.. இல்லை .. நான் நம்ப மாட்டேன்..என.. எனக்கு அவனை பார்க்கணும்.."
என்று கண்களில் கண்ணீருடன் பேச முடியாமல் பேசினாள் இஷிகா.​

"அச்சோ இஷி.. ஆதிக்கு எதுவும் ஆகல ..நீ ஏன் அப்படி யோசிக்கிற? இரு அவனை கூட்டிட்டு வர சொல்றேன்.."
என்று பேசிய அவளுடைய அண்ணன் வெளியே சென்று ஆதித்யாவையும் தேவ் ஆனந்தையும் அழைத்து வந்தான்.​

கணவனின் கையில் இருந்த மகனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள் இஷிகா. அவனுக்கு ஏதாவது ஆகி விட்டதா என்று அவள் கண்கள் அவனை மேலிருந்து கீழ் ஆராய்ந்தன.. ஆனால் அப்படி எதுவும் இல்லை.. அவன் நன்றாக தான் இருக்கிறான்..
அவளுக்கு இப்போது தான் உயிரே வந்தது.
அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தால் அவள் மட்டும் இந்த பூமியில் இருந்து என்ன செய்ய..
அவனுக்காக அவளது உயிரை கூட கொடுக்க தயாராக இருந்தாளே‌‌
...​

அந்த நிலமைக்கு அவளை கொண்டு வந்த தந்தையை நினைக்கையில் இப்போதும் அவளுக்கு கோபம் வந்தது.
அப்போது தான் அவளுக்கு இன்னொன்றும் நினைவில் வந்தது.
'அவள் தான் அவர்கள் அடித்த அடியில் மயங்கி விட்டாளே..
பிறகு எப்படி இங்கே..
ஆதித்யாவும் நன்றாக இருக்கிறானே..? எப்படி..?'​

அவளை இப்படி கண்டதும் ஆதித்யாவும் பதறி விட்டான்..
தந்தையின் கையில் இருந்து இறங்கி அவள் அருகே வந்தவன்
"அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க?"
என்று இஷிகாவிடமே கேள்வி கேட்டான்.​

அவள் எதுவும் பேசவில்லை. அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் தான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் கூறாததால் தந்தையை திரும்பி பார்த்தவன்
"அப்பா அம்மாக்கு என்ன ஆச்சு?
ஏன் இப்படி இருக்காங்க?"
என்று த்நதையிடமே கேட்டான்.​

"அம்மாக்கு ஒன்னும் இல்லை டா கண்ணா..
பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க..
அதுல சரியான அடி. ரெண்டு நாள்ல எல்லாம் சரியாகிடும்.
நாம ரெண்டு பேரும் அம்மாவை நல்லா பாத்துக்கலாம்..சரியா.."
என்று மகனின் தலையை தடவிய படி தேவ் ஆனந்த் கூற சரி என்பது போல் தலையாட்டினான் ஆதித்யா.​

இஷிகாவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு
"அம்மா ரெஸ்ட் எடுங்க. நான் வெளியே இருக்கேன்.." என்று பெரிய மனிதன் போல் கூறியவன் வெளியே செல்ல கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கு இருந்த அனைவரும் வெளியே சென்றனர்..​

கணவனை பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள் இஷிகா..
அவங அருகே சென்று அமர்ந்த தேவ் ஆனந்த்
அவனுடைய கைகளை எடுத்து தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன்
"ஏன் என்னை பார்க்காம கண்ணை மூடிக்கிற? உன்னை காப்பாத்த வரலன்னு கோவமா.. இல்ல இவ்வளவு தூரம் வர விட்டுட்டனேனு வருத்தமா இருக்கா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.​

அவனது கேள்வியில் கண்களை திறந்தவள் கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்து இல்லை எனும் விதமாக தலையை ஆட்டி வைத்தாள்..
"அப்பறம் என்ன?" என்றான் கேள்வியாக அவன்.
"இல்லை ஆதிக்கு எதாவது ஆகி இருந்தா .. அதை நினைக்கவே பயமா இருக்கு..
அப்போ அவனை காப்பாத்த முடியாம நான் பட்ட பாடு இருக்கே.. ஐயோ இப்போ நினைச்சாலும் கை கால் எல்லாம் நடுங்குது.."
என்று கூறியவளின் உடம்பே நடுங்கியது பயத்தில்.​

ஆதரவாக அவளது தலையை வருடி விட்டவன்
"அது தான் எதுவும் ஆக விடலையேமா.. நான் தான் வந்து காப்பாத்திட்டேனே.. ஆனா உன்னை தான் இப்படி படுக்க வச்சுட்டேன்.
கொஞ்சம் முன்னாடி வந்து இருக்கனும்.. அப்படி வந்து இருந்தா உன்னை இப்படி படுக்க வச்சு இருக்க மாட்டேன்..சாரிடா.."என்று அவளிடம் மன்னிப்பு வேண்டினான் தேவ் ஆனந்த்.​

"ஐயோ சாரி எல்லாம் எதுக்கு கேக்குறீங்க.. அது தான் வந்து காப்பாத்திட்டீங்களே.. நான் மயங்கினதுக்கு அப்பறம் என்ன நடந்துச்சு..?
அந்த கேவலமான பிறவிகளை என்ன தான் பண்ணீங்க.?"
என்று அடுக்கடுக்கே கேள்வி கேட்டாள் இஷிகா..​

"நீ ஃபோன் பண்ணி கேட்டதும் வேணாம்னும் சொல்ல முடியல.
பையன் ஆசையா கேக்குறானேன்னு விட்டுட்டேன்.
ஆனா மனசுக்குள்ள ஏதோ உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்துச்சு..
அதனால கான்ஸ்டபிள் ஒருத்தரை நீங்க போன இடத்துக்கே அனுப்பி வச்சேன்.. அவர் தான் உங்களை இந்த ஆளுங்க கடத்திட்டாங்கனு சொன்னார்..
நான் அந்த நிமிஷம் ஆடிப் போயிட்டேன்..
அவர் கிட்ட உங்களை ஃபாலோ பண்ண சொல்லிட்டு நானும் பின்னாடியே வந்தேன்..ஆனா அவங்க உன் மேல கை வைப்பாங்கனு நான் கனவுல கூட நினைக்கலை டா
... அந்த கான்ஸ்டபிள் கும் உள்ள வரமுடியாது.. ஒரு வேளை அவங்க அவரை கண்டுட்டாங்கனா எல்லாம் கெட்டு போயிடும்.. அதனால் தான் இப்படி ஆச்சு.."
என்ற தேவ் ஆனந்த் தன் பேச்சை இடையில் நிறுத்தி அவள் முகம் பார்த்தான்.​

அவளோ அவன் சொல்வதை தான் கேட்டு கொண்டு இருந்தாள்..
அவளுடைய கைகளை எடுத்து அதில் இதழ் பதித்தவன்
"உன்னை அந்த நிலையில பார்த்ததும் உயிரே போயிடுச்சு தெரியுமா?
சத்தியமா என்னால் அதுக்கு மேல ஒன்னுமே யோசிக்க முடியாம போச்சு...கூட வந்தவங்க தான் மத்த வேலை எல்லாம் பார்த்துக்கிட்டாங்க.."என்றான் உடல் நடுங்க..​

இப்போது அவளுடைய கண்கள் இரண்டும் அவனை காதலாக
பார்த்தன.
"உன்னோட அப்பா..." என்று அவன் ஆரம்பிக்க அவள் முறைத்து பார்த்ததில் இடை நிறுத்தி விட்டு
"இல்லை.... அந்த ஆள் இப்போ என் கஷ்டடில. போலிஸ் ஸ்டேஷன், கோட் னு போனா இருக்குற பண பலத்தால் ரெண்டே நாளில் வெளியே வந்துடுவாங்க.. அதான் நானே அவங்களை கவனிக்க முடிவு பண்ணிட்டேன்.." என்று கூறி முடித்தான்..​

இப்போது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது..

*************
பத்து நாட்களுக்கு பிறகு...​

இஷிகா முழுதும் குணமடைந்து நன்றாக இருந்தாள்..
இன்றோடு அவள் தந்தை இறந்த செய்தி வந்து ஐந்து நாட்கள் கடந்து விட்டன..
'ஆம் அவளது தந்தையும் அபிமன்யுவின் தாயும் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே மரணம்' என்ற செய்தி தான் அவர்களது காதுக்கு வந்தது..​

ஊருக்காக வேண்டி வேண்டா வெறுப்பாக இறுதி கடமைகளை முடித்து வைத்தனர் குடும்பத்தினர்..​

அபிமன்யு தான் உடைந்து போய் விட்டான்.
தன் தாய் எப்படி இருக்கக்கூடும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை..
ஆனால் சுதீப்பிற்கு அப்படி இல்லை ..
அவனுக்கு நன்றாகவே தெரியும் அவனது தாய் எப்படிப் பட்டவர் என்று ..
தீப்தி யின் இந்த நிலைக்கும் அவளுடைய கணவனது மரணத்துக்கும் காரணம் அவர் தான் என்று அவன் அறிந்திருக்கவில்லை.​

இப்போது அனைவரும் இஷிகாவின் வீட்டில் அமர்ந்திருந்தனர்..
தீப்தியும் அங்குதான் இருந்தாள்.
இஷிகா மெல்ல குனிந்து கணவனின் காதுக்குள்
ஏதோ கூற அவன் சரி என்பது போல் தலையாட்டிவிட்டு அனைவரையும் நிமிர்ந்து பார்த்தான்.​

"தீப்தி எல்லாரையும் வச்சுக்கிட்டு உன்கிட்ட கேக்குறேன்.. நீ என்னதான் சொல்ற அபிமன்யுவை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு உனக்கு சம்மதமா?" என்று இன்று நேரடியாக கேட்டதும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.​

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவளுடைய தாயும்
" இங்க பாருமா கடவுள் சிலருக்கு வாழ்க்கையில் இரண்டு சான்ஸ் தருவார்.. அதுல நீயும் ஒருத்தி.. முதல் வாழ்க்கை இப்படி ஆச்சு என்றதுக்காக இரண்டாவது தேடி வர அழகான வாழ்க்கையும் எட்டி உதைக்க கூடாது.
நீயா யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடு..
அடுத்தது கெட்டது நடந்து வீட்டில சீக்கிரமே ஒரு நல்லது நடந்தா நல்லா இருக்கும்..
ஆனா இங்க ஏற்கனவே ஒரு நல்லது தான் நடந்திருக்கு.
அதுல நீயும் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா சந்தோஷம் இரண்டும் மடங்கா போயிடும். நீ என்னம்மா சொல்ற..?"
என்றார் தன் பங்கிற்கு..​

நீண்ட நேரம் யோசித்தவள்
"சரி உங்க விருப்பப்படியே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன். ஆனா அபிமன்யு கிட்ட நான் தனியா பேசணும்.."
என்றாள் அவள்..​

அங்கு இருந்தவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். ஆனால் அந்த சந்தோஷம் அபிமன்யுவிடம் மட்டும் இல்லை.. அவள் என்ன கூறப்போகிறாளோ என்ற எண்ணம் அவளுள் ஓடிக்கொண்டே இருந்தது.​

அவனை தனியாக சந்தித்த தீப்தி
" உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டு அன்னைக்கு ஏமாத்திட்டு ஓடிப்போனது என்னோட தப்பு தான். அதுக்காக தானோ தெரியாது என்னோட வாழ்க்கை இப்படி மாறி போச்சு... இப்போ இந்த கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எனக்கு சம்மதம்.. ஆனா ஒன்னு மத்தவங்க நினைக்கிற மாதிரி என்னால சீக்கிரமாக உங்களோடு சேர்ந்து வாழ முடியாது. என்னோட மனசு மாறனும் .
அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்றுன் எனக்கு தெரியாது.
சோ நீங்க காத்துகிட்டு இருக்கனும்.
நான் கொஞ்சம் கொஞ்சமா மாறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்படி அந்த நம்பிக்கை உங்களுக்கும் இருந்தால் நீங்க சொல்ற டேட்ல கல்யாணம் பண்ணிக்கலாம்.."
என்று கூறி நிறுத்தி விட்டு அவனுடைய முகம் பார்த்தாள்.​

எப்போதும் போல அவனது முகத்தில் அந்த இளம் புன்னகை.
"எத்தனையோ வருஷங்களாக உன்னோட காதலுக்காக காத்துகிட்டு இருக்கேன். அதேபோல இன்னும் காத்துக்கிட்டு இருப்பேன். ஆனா என்ன ஒரு சந்தோஷம்.. நீ என் பக்கத்திலேயே இருக்க.. என்னோட மனைவியா இருக்க. அந்த சந்தோஷமே என்னோட வாழ்க்கையில கடைசி வரைக்கும் போதுமானது என்று நான் நினைக்கிறேன்.."
என்றான் காதலாக..​

அவனுடைய சொற்கள் தீப்தியை மெய்சிலிர்க்க வைத்தது..
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் காலம் அவளுடைய மனதை மாற்றுகிறதா என்று.. மேலும் அவனுடைய காதலுக்கு இந்த காலம் என்ன பதில் சொல்லப் போகிறது என்று..​

.....முற்றும்....​

 

Orot

New member
В ДАННОЙ ПОСТЕ СОБРАНЫ НАИБОЛЕЕ АКТУАЛЬНЫЕ ССЫЛОЧКИ И ПЕРЕХОДНИКИ СВЕРХУ ПЛОЩАДКУ кракен СВЕРХУ 2025 СПИСОК КРУГЛЫХ ДОСТУПНЫХ ССЫЛОК ЧТОБЫ ВХОДА НА KRAKЕN: 1) Официальная ссылка (взята из наставлении с площадки КРАКEН): https://krkn20.xyz Вставьте на строку TOR БРАУЗЕРА!!! 2) Служебное зеркалo КРАКЕH: https://kr22
 
Status
Not open for further replies.
Top