எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

🌧️ ஆலியில் நனையும் ஆதவன் !! ☀️ - 7

NNK-34

Moderator
ஆதவன் 7
MergedImages (3).jpg
'பிரபல தமிழ் சினிமா டைரக்டர் ஆதித் மஹாதேவ் திடீர் திருமணம்! தன் முன்னாள் காதலி வர்ஷாவுடன் ரகசிய திருமணம்! திருமணத்தில் நண்பர்கள் உறவினர்கள் என யாரும் கலந்துகொள்ளவில்லை! ஏற்கனவே வேறு ஒருவருடன் இன்று திருமணம் நிச்சயிக்க பட்டியிருந்த நிலையில், வர்ஷா அவசர அவசரமாக ஆதித் மஹாதேவை மணம் முடிக்க காரணம் என்ன? நேற்று வெளியான ஆதித் மஹாதேவின் அந்தரங்க வீடியோவை வைத்து அனைவரும் அவரை ஓரின சேர்க்கையாளர் என்று நினைத்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நடந்த இந்த திடீர் திருமணம் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது?

ஒரு சிலர் இந்த விடீயோ பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த திருமணம் என்று பேசிக்கொண்டிருக்க, ஆதித் மகாதேவின் ரசிகர்கள் அனைவரும் ட்விட்டர் முகப்புத்தகம் போன்ற இணைய தளம் வழியாக இளம் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில்,

இதை குறித்து செய்தியாளர்களுக்கு Mrs வர்ஷா மஹாதேவ் அளித்துள்ள ஆச்சரியமளிக்கும் பேட்டி இதோ,

"நேத்து லீக் ஆன விடீயோ பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறன். அதுக்கும் மேல வேற ஒருத்தரோட இன்னைக்கு கல்யாணம் இருக்கும் பொழுது ஏன் இந்த திடீர் கல்யாணம்ன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்ற பத்திரிகையாளரிடம்,

"நானும் ஆதித்தும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி லவ் பண்ணிட்டு இருந்தோம். நான் ஒரு சாதாரண டான்சர் அண்ட் மிடில் க்ளாஸ் ஃபமிலியை சேர்ந்த பொண்ணு. சோ ரெண்டு பேர் வீட்டுலையும் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கல. ஆதித் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாரு ஆனா எனக்கு என் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்க மனசு வரல, இதனால எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடு வந்துச்சு, சோ நான் தான் ஆதித்தை பிரேக் அப் பண்ணினேன். ஆனா நேத்து வெளியான விடீயோ என் மனசை மாத்திடுச்சு. அவருடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை படுற யாரோ செஞ்ச இழிவான வேலை தான் இதுன்னு எனக்கு பார்த்ததும் புரிஞ்சிடுச்சு. ஆதியை நினைச்சு நான் ரொம்ப கவலை பட்டேன். என் அப்பா அம்மாவோட சந்தோஷத்துக்காக தான் கல்யாணத்துக்கே சம்மதம் சொல்லிருந்தேன். ஆனா இப்படியொரு ஒரு விஷயம் நடந்திருக்கும் பொழுது என்னால ஆதியை விட்டுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியல. என் காதல் என்னை பண்ணவும் விடல. அவரை பத்தி இனிமே யாரும் பேசாதபடி அத்தனை பேர் வாயையும் அடைக்கணும்ன்னு நினைச்சேன், அதான் எதை பத்தியும் யோசிக்காம என் மனசு சொல்றதை மட்டும் கேட்டு, ஆதித்தை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

"ஆனா மேம் இந்த வீடியோ இஷ்யூவை சரி பண்றதுக்காக ஆதித் சாரோட தரப்புல உங்களுக்கு பணம் தரப்பட்டதாகவும், பணத்துக்காக தான் நீங்க அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டதா சிலர் பேசுறாங்களே, அதை பத்தி உங்க கருத்து" என்று கேட்ட பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடி ஒருவித தவிப்புடன் வர்ஷன் நின்றிருக்க,

"எது உண்மையோ அதை தான் சொல்ல முடியும், உங்க கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என அழுத்தமாக கூறிய ஆதித் நிமிர்ந்து, அழ தயாராக இருக்கும் வர்ஷாவின் கலங்கிய விழிகளை பார்த்தவன் என்ன நினைத்தானோ சட்டென்று அவளது கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக நடக்க துவங்கினான்.

பத்திரிகையாளர்களை அங்கே வர வைத்ததே அவன் தான் இருந்தும் அவளது கண்ணீர் அவனை என்னவோ செய்ய அதற்கு மேல் அங்கு நிற்க விரும்பாதவன் விறு விறுவென தன் வர்ஷாவை இழுத்துக்கொண்டு தனது காரின் அருகே சென்ற நேரம் அவனை விடாமல் சார் சார் என்றபடி மைக்கை தூக்கிக்கொண்டு அவன் பின்னால் வந்த நிருபர்களுள் ஒருவன்,

"ப்ளீஸ் சார் ஒன் லாஸ்ட் கொஸ்டின்" என்று கெஞ்சுதலாக கேட்க, அவனை சலிப்புடன் பார்த்த ஆதித்,

"கோ அகட்" என்றான் நிமிர்வாக.

"இன்னைக்கு அவங்களுக்கு நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்தி, அவங்களோட ஃபேமிலியை மீறி மேம் உங்களை கல்யாணம் பண்ணி இருக்காங்க, அவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க" என்ற நிருபரின் கேள்விக்கு ஒரு கணம் வர்ஷாவை பார்த்துவிட்டு தனது பதிலுக்காக காத்திருக்கும் அனைவரையும் பார்த்தவன்,

"எல்லாருடைய எதிர்ப்பையும் தாண்டி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட வர்ஷாவோட காதலை பார்க்கும்போது எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கு.

காதலர்கள் வேணும்ன்னா தோற்கலாம், காதல் என்னைக்கும் தோற்காதுன்னு என்னுடைய படங்கள்ல பல தடவை நான் சொல்லி இருக்கேன். ஆனா வர்ஷா மாதிரி ஒரு காதலி கிடைச்சா காதலும் தோற்காது காதலர்களும் தோற்கமாட்டாங்க. தேங்க்யூ கைஸ்" என்றவன் வர்ஷாவை காரில் ஏறுமாறு கண்ணைக் காட்டி விட்டு தானும் ஏறிக்கொள்ள, ஆதித்தின் கார் சென்ற அடுத்த நிமிடமே திருமண மண்டபத்தை விட்டு ப்ரஜன் மற்றும் அவனது குடும்பத்தினர் கோபமாக வெளியே வர அவர்களை பிடித்து கொண்ட நிருபர்களுக்கு ஒருவர்,

"உங்களை விட்டுட்டு Mrs வர்ஷா ஆதித் சாரை கல்யாணம் பண்ணிகிட்டத்துக்கு என்ன கரணம் இருக்கும்ன்னு நினைக்கிறீங்க" என்று கேட்க, "நோ கமெண்ட்ஸ்" என்று ப்ரஜன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட வர்ஷா மீது கடும் கோபத்தில் இருந்த பிரஜனின் தாயோ, "எல்லாம் பணம் பண்ற வேலை சார். காசுக்கு ஆடுறவை தானே அதான் என் பையனை விட வசதியானவனை பார்த்ததும் காசை வாங்கிட்டு கழுத்தை நீட்டிட்டா, நாளைக்கே பாருங்க இவனை விட வசதியானவனை பிடிச்சதும் அவன் கூட போயிருவா அந்த பொண்ணோட புத்தியே அதான். அப்பா அம்மா சரியா வளர்க்கல" தங்களுக்கு பின்னால் தளர்ந்த நடையுடன் வந்த வர்ஷாவின் தாய் தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தபடி வார்த்தைகளை விஷமாய் கொட்ட, ஏற்கனவே நிரோஷா இன்று அனுப்பிய வீடியோவால் மனதளவில் பாதி மரித்திருந்தவர்கள், வர்ஷாவின் செயலால் மொத்தமாக நொறுங்கிவிட்டார்கள். ஆனாலும் நாங்கள் விடமாட்டோம் என்பது போல இவர்களையும் மைக்குடன் நெருங்கிய பத்திரிகையாளர்கள், "உங்க பொண்ணோட கல்யாணத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க" என்று கேட்கவும் தன் கரம் உயர்த்தி தடுத்த வர்ஷாவின் அன்னை,

"எங்களுக்கு பிள்ளைங்கன்னு யாரும் கிடையாது. ஆக யாரு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்களுக்கு என்ன" என்றவர் கலங்கிய விழிகளுமாய் தளர்ந்த நடையுடன் செல்லும் காட்சி டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க, அதை கண்களில் நீர் வடிய பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவின் தோள் வளைவில் தன் நாடியை பதித்து,

"பெர்பெக்ட் ஸ்க்ரீன் ப்ளே, பெர்பெக்ட் ஆக்டிங் இல்ல" தனது வெப்பமான மூச்சுக்காற்று அவளது செவியை தீண்ட விஷமமாய் கூறினான் ஆதித். அதை கேட்ட பெண்ணவளோ பேசவும் இல்லை அசையவும் இல்லை, காலில் வேரூன்ற நின்ற இடத்திலே அப்படியே நின்றிருந்தாள். தான் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் அதுவும் சுய விருப்பத்துடன். அப்படியிருக்கும் பொழுது அவனிடம் எதுவும் பேசத் தோன்றாது மௌனமாக கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

"இப்படி அழுதுட்டே இருக்கிறதுனால எதுவுமே மாறப் போறதில்ல. நீ எனக்கு செஞ்ச பாவத்துக்கு உனக்கு தண்டனை கொடுத்திருக்கிறேன் அவ்வளவுதான். சோ நீ ஏதோ எந்த தப்பும் பண்ணாத மாதிரியும் நான் உன்னை கொடுமைப்படுத்துற மாதிரியும் அழுதுட்டே அப்பாவி போல் முகத்தை வச்சுக்கிட்டு நடிச்சிட்டு இருக்காத.

உன் அடிப்பெல்லாம் என்கிட்ட வேலைக்காகாது" என்றவன் தன் அறையில் உள்ள சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வர்ஷாவை பார்த்து,

"ஃபர்ஸ்ட் டேயா இருந்தா என்ன? ஃபர்ஸ்ட் நைட் இருந்தா என்ன? அதான் தாலி கட்டியாச்சே" என்று மிக மிக நிதானமாக கூறியவன் அவளது அதிர்ந்த விழிகளை பார்த்து வன்மமாய் சிரித்தான்.

"ஷாக் ஆகி எந்த பிரயோஜனமும் இல்லை, ஏற்கனவே நான் உன்கிட்ட பேசினது தான். என் வாழ்க்கையை கெடுத்தது நீ. அதை சரி பண்ண போறதும் நீதான். எப்படி சரி பண்றதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். நான் கேட்டதை கொடுத்துத்திட்டு நீ போயிட்டே இருக்கலாம்" என்றவன் பயத்தில் வெளிறிய அவளது முகத்தை கண்டு உள்ளுக்குள் வன்மமாய் ரசித்தபடி,

"கமான் ஃபாஸ்ட் எல்லாமே நீ தான் பண்ண போற, என் சுண்டு விரல் கூட உன் மேல படாது. மனைவியாவே இருந்தாலும் விருப்பமில்லாத ஒரு பொண்ண தொடுறது என்னை பொறுத்த வர கற்பழிப்புக்கு சமம் அதை என்னைக்குமே இந்த ஆதித் பண்ண மாட்டான். சோ எல்லாமே நீ தான் பண்ண போற" என்றவன் 'எல்லாமே' என்னும் வார்த்தையை அழுத்தி சொல்லி, "சீக்கிரம், இப்படியே நின்னு என் டைமை வேஸ்ட் பண்ணாத, ஐ டோன்ட் வாண்ட் டு வேஸ்ட் அ சிங்கிள் செகண்ட். கமான் உன் ட்ரெஸை ரிமூவ் பண்ணு" கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு வர்ஷாவை பார்த்து கட்டளையாக கூறினான்.

"சார் ப்ளீஸ்" கரங்களைக் கூப்பி கெஞ்சினாள்.

"ஏ ஜஸ்ட் ஸ்டாப் இட்" என்று பயங்கரமாக கர்ஜித்தவன், தான் போட்ட சத்தத்தில் தேகம் அதிர நின்றிருந்த அவளின் அதிர்ந்த விழிகளை பார்த்து,

"இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம். சீக்கிரம் நான் சொன்னத செய், எல்லாத்தையும் ரிமூவ் பண்ணு, உன் உடம்புல ஒரு பொட்டு துணி இருக்க கூடாது, ம்ம் செய்" பற்களை கடித்த படி அதட்டினான் ஆதித்.

"ப்ளீஸ்" உதடு துடிக்க கெஞ்சியவளை அனல் தெறிக்க பார்த்தவன்,

"கெஞ்சி எந்த பிரயோஜனமும் இல்லை, சொன்னத செய் இல்லன்னா உன் அப்பா அம்மாவோட உயிர் இப்பவே போகும்" என்ற ஆதித் தனது அலைபேசியை தன் கையில் எடுத்த மறுகணம், கரங்கள் நடுங்க தன் புடவை மீது கை வைத்தாள் வர்ஷா.

அவள் அணிந்திருந்த புடவை அவளது தோள் விட்டு நழுவவும் திரும்பி நின்று கொண்ட ஆதித் மறந்தும் கூட அவள் பக்கம் திரும்பவில்லை.

எந்திரம் போல அவன் சொன்னதை செய்தவள், அசையாமல் கண்களில் கண்ணீர் வடிய அப்படியே நிற்க,

"என்ன ரிமூவ் பண்ணிட்டியா?" உணர்வுகளை தொலைத்த குரலில் வினவினான்.

"ம்" என்றாள் விசும்பலுடன்.

"கண்ணாடி முன்னாடி போய் நில்லு" கட்டளையாக கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்டு ஒன்றும் புரியாது குழம்பி நின்ற வர்ஷா, "போயிட்டியா" என்ற அவனது மிரட்டும் குரலைக் கேட்டு பயந்தவள், அவன் சொன்னதை அப்படியே செய்தாள்.

"கண்ணாடியில் உன்னை இப்படி பார்க்கும்போது எப்படி ஃபீல் பண்ற வர்ஷா?" கொஞ்சமும் தயக்கம் இன்றி அமைதியாக கேட்க, அதிர்ந்த பெண்ணவளுக்கு அவன் கேட்ட கேள்வியில் உடம்பெல்லாம் நடுங்கி விட்டது.

"ஒரு மாதிரி கூச்சமா, அவமானமா இருக்கு இல்ல" மீண்டும் அதே நிதானத்துடன் கேட்டான்.

இந்த முறை மௌனமாகவெல்லாம் அவள் இருக்கவில்லை தலை தானாக அசைய ஆமாம் என்றாள்.

"எனக்கும் தான், நேத்துல இருந்து இன்னைக்கு இந்த செகண்ட் வர நான் அப்படி தான் பீல் பண்ணிட்டு இருக்கேன்" இதை சொல்லும் பொழுதே வலியின் மிகுதியால் ஆதித்தின் குரல் உடைந்து கண்கள் எல்லாம் கலங்கிவிட, இதைக் கேட்ட வர்ஷா அழுதே விட்டாள்.

"நாலு செவுத்துக்குள்ள, நான் தாலி கட்டுன புருஷன் தான், இருந்து நான் உன்னை பார்க்க கூட இல்ல, நீ மட்டும் தான் உன்னை பார்த்துட்டு இருக்க, அப்படி இருந்தும் உனக்கு அவமானமா இருக்கே, என்னுடைய அந்த வீடியோ அதை அத்தனை பேரும் பார்த்து இருக்காங்க. அதுவும் நான் செய்யாத ஒன்னு. எனக்கு எப்படி ஃபீல் ஆகுது தெரியுமா? எல்லாரும் முன்னாடியும் நிர்வாணமா நிக்க விட்டது போல உடம்பெல்லாம் தக தகன்னு நெருப்பு பட்டது போல எரியுது" என்று பற்களை கடித்த படி கூறியவன், நீண்ட பெருமூச்சை வெளியிட்டு,

"உன் மேல எனக்கு அவ்வளவு ஆத்திரம் இருக்கு, நான் நினைச்சா உன்னை என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஆனாலும் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கறதுக்கு எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. ஆனா நீ கொஞ்சம் கூட யோசிக்காம என் லைஃபையே அழிச்சிட்டியே. என் வாழ்க்கையையும் கெடுத்து, உன் வாழ்க்கையையும் கெடுத்து" என்ற ஆதித்திற்கு அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு நிற்க முடியாது போக அறையின் கதவை திறந்து அடித்து சாற்றிவிட்டு வேகமாக சென்று விட, அப்படியே தரையில் மடிந்தமர்ந்த வர்ஷா,

"ஏன் நிரோ இப்படி பண்ணின?" என வாய்விட்டே கதறி அழுதாள்
.
 
Last edited:

Shamugasree

Well-known member
Adith ku ❤️❤️❤️
Palivanganum nu ennam irunthalum avan character ah tholaikama avan morals ah meerama avan valiya azhaga puriya vechutan. Ketatha koduthutu poite irukalam nu etha mean pannuran. Baby venum solrano🤔. Baby ah koduthutu poidu nu solvano. Varsha kathai fulla ipdi azhuthute Tha irukapora pola. Niro enna video anupina?
 

Advi

Well-known member
இந்த நிரோ கொரங்கு என்ன வீடியோ அனுப்பி இருக்கு?????

அது ஒருத்தி ஆசைக்காக குடும்பமே பாவம் அவமான பட்டு நிக்குது......

ஏதோ ஆதி அப்படிக்கரதில் ஓகே....

இதுவே விநாயக் போல ஆள்களிடம் வர்ஷா சிக்கி இருந்தா..?????

அவனோட வலியை தான் உணர்த்தரான்.....

ஆன வர்ஷா நிலையில் அவ ரொம்ப பாவம் தான்.....

தொங்கச்சியை பண்ணினா கேவலமா வேலைக்கு இவ மாட்டிட்டா
 

NNK-34

Moderator
Adith ku ❤️❤️❤️
Palivanganum nu ennam irunthalum avan character ah tholaikama avan morals ah meerama avan valiya azhaga puriya vechutan. Ketatha koduthutu poite irukalam nu etha mean pannuran. Baby venum solrano🤔. Baby ah koduthutu poidu nu solvano. Varsha kathai fulla ipdi azhuthute Tha irukapora pola. Niro enna video anupina?
Thank u so much dr .
Konja scenes ku apuram normal aagidalaam pa .
Niro enna video anupunaanu seekiram therinjikalaam da
 

NNK-34

Moderator
இந்த நிரோ கொரங்கு என்ன வீடியோ அனுப்பி இருக்கு?????

அது ஒருத்தி ஆசைக்காக குடும்பமே பாவம் அவமான பட்டு நிக்குது......

ஏதோ ஆதி அப்படிக்கரதில் ஓகே....

இதுவே விநாயக் போல ஆள்களிடம் வர்ஷா சிக்கி இருந்தா..?????

அவனோட வலியை தான் உணர்த்தரான்.....

ஆன வர்ஷா நிலையில் அவ ரொம்ப பாவம் தான்.....

தொங்கச்சியை பண்ணினா கேவலமா வேலைக்கு இவ மாட்டிட்டா
Seekiram therinjikalaam da 😂
Ava yosikaama pannina vishayam pavam rendu per life la problem create panniduchu
Varsha romba pavam dr but sariyagidum da
Athuvum volunteer ah poi matikita
Thank u so much dr
 

kalai karthi

Well-known member
வர்ஷாவுக்கு ஆதித் தன் நிலைமை புரிய வைத்து விட்டான். செம. நிரோஷா இவளை😡😡😡
 

NNK-34

Moderator
வர்ஷாவுக்கு ஆதித் தன் நிலைமை புரிய வைத்து விட்டான். செம. நிரோஷா இவளை😡😡😡
Thank you so much dr.
Avalai enna pannalaamnu seekiram parkalam da
 

Mathykarthy

Well-known member
ஆதித் 🥰🥰🥰 தன்னோட வலியை அவமானத்தை வர்ஷாவுக்கு அழகா புரிய வச்சுட்டான்....
அவ்வளவு கோபத்துலயும் வெறுப்புலயும் அவளை காயப்படுத்தினாலும் அவனுக்குள்ள இருக்குற பண்பு பிடிச்சுருக்கு... 💕

நிரோ பண்ணின தப்பால பெத்தவங்களும் அவமானப் பட்டு அக்கா வாழ்க்கையும் மாறிப் போயிடுச்சு... இவ எங்கயோ இருந்துகிட்டு வீடியோ அனுப்புறா.... எங்க போனா...🙄 விநாயக் அடுத்து என்ன செய்யப் போறானோ... அவனுக்கு இவங்க ட்வின்ஸ் னு தெரியுமா... 🤔
 

NNK-34

Moderator
ஆதித் 🥰🥰🥰 தன்னோட வலியை அவமானத்தை வர்ஷாவுக்கு அழகா புரிய வச்சுட்டான்....
அவ்வளவு கோபத்துலயும் வெறுப்புலயும் அவளை காயப்படுத்தினாலும் அவனுக்குள்ள இருக்குற பண்பு பிடிச்சுருக்கு... 💕

நிரோ பண்ணின தப்பால பெத்தவங்களும் அவமானப் பட்டு அக்கா வாழ்க்கையும் மாறிப் போயிடுச்சு... இவ எங்கயோ இருந்துகிட்டு வீடியோ அனுப்புறா.... எங்க போனா...🙄 விநாயக் அடுத்து என்ன செய்யப் போறானோ... அவனுக்கு இவங்க ட்வின்ஸ் னு தெரியுமா... 🤔
Thank u so much pa .
Ungoda ellam kelvikum seekiram vidaiyoda varen dr .
 

NNK-34

Moderator
பன்றதையும் பன்னிட்டு வீடியோ வேற அனுப்புறாலா அவ???... ஆதித் பாவம்!!... வர்ஷா உண்மையை சொல்லிருக்கலாம்🤦🏻‍♀️!!...
Yes dr aathith varsha rendu perum paavam thaan . Patanthutu unmaiya sollama vittuta ippo ethuvum seiyya mudiyama nikiraa iva thaan romba paavam dr.
Thank u so much de
 
Top