எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 15

NNK-64

Moderator

அத்தியாயம் 15​

ராஜூ இங்கே என்ன காரணத்திற்காக வந்திருக்கான்? என்று அங்கேயே தயங்கி நிற்கவும், அந்த வழியாக வந்த மதுவந்தி, “உங்களை தேடிவந்தவர் உங்களை பார்க்க காத்திட்டு இருக்கார். அவர் நிறைய நேரம் இங்கேயே இருக்கவும் நம்ம கம்பெனியில் அனுமதி இல்லை. எனவே சீக்கிரம் போய் பேசிவிட்டு வாங்க” என்றாள்​

மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தாள். கண்ணாடி சுவர் என்பதால் அவர்கள் பேசுவது தெரியும் என்றாலும் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாது. அதனால் ராஜூ, “என்ன எழில், என்னை கழட்டி விட்டுட்டு காப்பத்த வந்தவனை கைப்பிடிச்சிட்ட? இப்போ பார்த்தியா என்ன ஆச்சுனு?” என்றான் எள்ளலாக.​

“இஇப்ப எதுக்கு இங்கே வந்திருக்க?” என்றாள் பதட்டத்தை மறைத்தபடி​

“உன் புருஷன் தான் அடிப்பட்டு இருக்கானே. அவன் திரும்பி வருவானோ வரமாட்டானோ தெரியாது. எனக்கு கம்பெனி கொடுக்கலாம் இல்ல? நானும் தான் உன்னை சுத்தி சுத்தி வரேன். திரும்பிக் கூட பார்க்காமல் போய்ட்டே இருக்க. அந்த ஆட்டோ டிரைவர் இன்னிக்கு புண்ணியம் கட்டிக்கிட்டான் போல? அதான் அம்மணி பார்வை என்பக்கம் திரும்பிச்சா?​

ஆமா குதிரைக்கு லாடம் கட்டின மாதிரி அங்கிட்டு இங்கிட்டு எங்கேயும் பார்க்காமல் போனால் எப்படி? நானும் எத்தனை நாளா உன் பின்னாடி சுத்தறது? அதான் உன் ஆபிசில் வச்சே பேசிடலாம்னு இங்கேயே வந்துட்டேன்” என்றான்​

“நீ நீ என்ன சொல்ற? எனக்கு புரியலை. நீ எஎதுக்கு என்னை பாலோ செய்யணும்?” என்றாள் பதட்டமாக.​

“என்ன புரியலையா? என்னை திருமணம் செய்துக்கிறதா சொல்லி பெசண்ட் நகர் கடற்கரையில் காத்திட்டு இருப்ப, நானும் இரண்டு காருக்கு எல்லாம் செலவு செய்து என் நண்பர்களை வரவழைச்சால், நான் என்னவோ கடத்திட்டு போக வந்தவன் மாதிரி வரமாட்டேன் அழிச்சாட்டியம் பண்ணுவ.​

உன்னை காப்பத்தறதா சொல்லி ஒருத்தன் வந்தானே, அவன் மட்டும் காப்பாத்தி உன்னைய பூஜையா பண்ணான். அவனும் தானே உன்னைய… என்று அவன் பேசிக் கொண்டே போக காதை மூடிக் கொண்டாள்.​

“ச்சீ ஏன் இப்படி எல்லாம் பேசறே. உன்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசறத்துக்கு கூட நீ தகுதியானவன் இல்லை” என்றாள் கோபத்துடன் அவளையும் மீறி.​

அவன் எப்படி அவள் கணவனை பேசலாம், அவரும் இந்த இழிவானவனும் ஒண்ணா? அவளுக்கு இதுவரை வந்திராத கோபம் இப்போது வந்தது.​

எழிலழகியைப் பற்றி நன்றாக தெரிந்திருந்த ராஜூ ஒரு கணம் ஸ்தம்பித்து போனான். அவள் பயந்து நடுங்கி அழுவாள். அவளை மிரட்டி தன் ஆசைக்கு இணங்க வைக்கலாம் என்று அவன் நினைத்திருக்க, அவள் அவனிடம் கோபமாக பேசியது மேலும் அவனுக்கு கோபத்தை கிளறியது.​

“என்னடி பேச்சு எல்லாம் ஒரு தினுசா இருக்கு? இன்றைக்கு இரவு நீ உன் வீட்டிலேயே தங்குற, நான் வருவேன்” என்றான் பற்களை கடித்தபடி.​

அலுவலகத்தில் இருக்கும் போதே இப்படி பேசுகிறானே. இவனிடம் தனியாக மாட்டினால்? அவளுக்கு உடல் பதறியது.​

“அது.. அந்த பயம் எப்பவும் இருக்கணும். நீ என் பேச்சை கேட்டு நடந்தால் நாம் இருவரும் உன் புருஷன் வீட்டிலேயே சந்தோசமாக இருக்கலாம். அவனும் ஆஸ்பத்திரிலேயே உயிரோடப்படுத்திருப்பான். நீ என்கிட்ட எதாவது வேலை காட்டினால் அவன் உயிரை எடுக்கவும் தயங்கமாட்டேன்.​

அன்னிக்கே போயிருக்க வேண்டியவன், தப்பிச்சுட்டான்” என்று முணுமுணுத்தான் கழுத்தை வருடிக் கொண்டே​

ராஜூ முணுமுணுத்த வார்த்தைகள் அச்சு பிசகாமல் எழிலழகியின் காதில் விழுந்தது. அப்படி என்றால் அன்று நடந்தது விபத்து இல்லை. அவள் கணவன் உயிருக்கு போராடி பிழைத்து மருத்துவமனையில் இருப்பதற்கு காரணம் இவன் தான்.​

இப்போது இந்த இடத்திலிருந்து இவன் சென்று விட்டால் இவனை பிடிப்பது முடியாத செயல் என்று நொடியில் யோசித்தாள். அவன் இன்னதென்று யோசிக்கும் முன்பே பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.​

இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜூ அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். அந்த வழியாக போனவர்களும் திகைத்துப் போய் கண்ணாடியின் ஊடே பார்த்துக் கொண்டு நின்றிருக்க, எழிலழகி அடுத்த அதிரடியை அங்கே அரங்கேற்றினாள். அங்கே இருந்த நாற்காலியை தூக்கி அவன் மேல் பலமாக வீசினாள்.​

அந்த அறை வாசலில் அனைவரும் கூடி விட்டிருந்தனர். மீரா விஷயம் கேள்விப்பட்டு அறைக்குள் வந்தாள்.​

“எழில், எனிதிங் ப்ராப்ளம்?” என்றாள்.​

“மீரா, உடனடியாக நம்ம செக்யூரிட்டிக்கு போன் செய்து கேட்டை இழுத்து பூட்ட சொல்லு, அப்படியே போலீசிற்கு போன் செய் சீக்கிரம்” என்றாள் அவசரமான குரலில்​

ஏதோ சரியில்லை என்று புரிய, மீரா முதலில் போலீசிற்கு போன் செய்து விட்டாள்.​

எழிலழகி என்ற அப்பாவியிடம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றவன் பின் நிலைமை மோசமாவதை உணர்ந்து அவளை தள்ளி விட்டு ஓட முயன்றான். அங்கே இருந்த ஆண்கள் அவனை வளைத்து பிடித்தனர். மீரா மீண்டும் செக்யூரிட்டிக்கு போன் செய்து கேட்டை பூட்ட சொன்னாள்.​

ராஜூ திமிறியபடி, “ஏய் எழில் என்னை விட சொல்லு, இல்லைனா உன்னை சும்மா விட மாட்டேன்” என்று கத்தினான்.​

எழிலழகியோ கோபத்தின் உச்சியில் இருந்தாள். உயிருக்குயிரான தன் கணவனின் உயிரை எடுக்க துணிந்த இவனை சும்மா விடலமா?​

நிரஞ்சனின் விபத்திற்கு காரணம் இவன் தான் என்று தெரிந்த நொடி பத்ரகாளியாக மாறி இருந்தாள் எழிலழகி.​

“என்னடா பண்ணுவ?” என்று கேட்டபடி அவனை ஓங்கி அறைந்தாள்.​

ஆத்திரம் தீராமல் மீண்டும் அவன் கன்னத்தில் மாறி மாறி அறையவும் அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியாக அவளையே பார்த்திருந்தனர்.​

“எவ்வளவு தைரியம் இருந்தால் விபத்தை ஏற்படுத்தி என் கணவனை கொல்ல திட்டம் போட்டு இருப்ப? அதை என்கிட்டயே வந்து சொல்லி என்னையே மிரட்டுறியா? என் கணவனை கொல்ல வந்த உனக்கு நான் கம்பெனி கொடுக்கணுமா?” என்று கேட்டு எட்டிக் காலால் அவன் உயிர் நாடியில் உதைத்தாள்.​

அந்த இடமே நிசப்தமானது, ராஜூ தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினான். இவளை புள்ளைபூச்சி என்று நினைத்து அவள் அலுவலகத்திற்குள் வந்து மிரட்டியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அவளை பயமுறுத்துவதற்காக சொன்ன வார்த்தைகள் இப்போது அவனுக்கே வினையாகி போனது.​

தன்னையே நினைத்து நொந்தவனால் இப்போது தப்பிக்கக் கூட முடியாமல் வலியில் தொய்ந்து அமர்ந்தான்.​

எழிலழகி ஆத்திரம் தாங்காமல் மூச்சு வாங்க அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அங்கே காவல் அதிகாரிகள் வந்து என்ன வென்று விசாரித்தனர்.​

“என்னோட கணவரை கொல்ல முயற்சி செய்திருக்கிறான். உயிர் பிழைத்த அவரை மீண்டும் கொன்று விடுவேன் என்று என்னை மிரட்டி எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறான். இவனை அத்தனை வழக்கிலும் போட்டு சிறையில் தள்ளுங்க. எங்கே வேண்டுமானாலும் வந்து சாட்சி சொல்றேன்” என்றாள் அழுத்தமான குரலில்.​

“வெரி குட், அவன் மிரட்டினால் பயப்படாமல் சமயோசிதமா பிடிச்சி வச்சி தகவலும் கொடுத்திருக்கீங்க. உங்க தைரியத்தை பாராட்டுகிறேன்” என்றார் காவல் அதிகாரி மெச்சுதலாக.​

காவல் துறை அதிகாரி எழிலழகியிடம் ஒரு கம்ளெய்ண்டை எழுதி வாங்கிக் கொண்டு ராஜூவை கைது செய்து அழைத்து சென்றார்.​

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் அவள் கொஞ்ச நேரத்தில் செய்திருந்த செயலால் அனைவருமே அவளை ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தபடி பேச்சற்று நின்று கொண்டிருந்தனர்.​

மீரா தான் முதலில் கைத்தட்டினாள். அதைப்பார்த்து மற்றவர்களும் அவளுக்காக கைத்தட்டினர்.​

“எழிலழகி எவ்வளவு தைரியமாக இந்த விஷயத்தை கையாண்டிருக்கிறாள். எல்லோரும் அவளைப் பார்த்து கற்று கொள்ளுங்க” என்றாள் மீரா மற்ற பெண்களை பார்த்து.​

என்ன நானா? நான் தைரியமான பெண்ணா? சிரிப்பே வந்து விட்டது எழிலழகிக்கு.​

சிரித்துக் கொண்டே தன் இருப்பிடத்திற்கு சென்றாள்.​

அடுத்த நாளில் இருந்து அங்கிருந்த அனைவருமே அவளுக்கு மரியாதை கொடுத்து பழகினர்.​

அவளை சீண்டிக் கொண்டிருந்த பாஸ்கரும் சேகரும் அவள் எதாவது வேலையாக சென்றால் கூட, அவளை கண்ணெடுத்தும் பார்க்காமல் மிகுந்த மரியாதையுடன் பதில் சொன்னார்கள்.​

இப்போது ஒன்று புரிந்தது, குனிய குனியத் தான் குட்டுவார்கள். எப்போது நிமிர்கிறோமோ அப்போது குட்டுவதை நிறுத்தி விடுவார்கள்.​

அதற்கு பின்பு வந்த நாட்களில் அனைவரிடமும் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.​

மீரா அன்று விடுமுறை எடுத்திருந்ததால், அவள் சார்பாக அலுவலகத்தில் நடக்கும் வாடிக்கையாளர்கள் கூட்டத்திற்கு எழிலழகி சென்றிருந்தாள். இந்த முறையும் அவளுக்கு இருக்கை இல்லாமல் இருந்தது.​

அங்கே செல்வநாயகமும் அப்போது தான் வந்து அமர்ந்திருந்தார்.​

“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ, இந்த வரிசையில் பெண்கள் அமர்ந்திருக்கிறதால் நானும் இங்கே உட்காரலாம் என்று இருக்கேன். நீங்க கொஞ்சம் எழுந்து ஆண்கள் அமர்ந்திருக்கிற பக்கமாய் உட்காரீங்களா?” என்றாள் அழுத்தமான குரலில்.​

அமைதியாக இருந்த அறையில் அவள் குரல் கணீரென்று ஒலிக்கவும், அனைவருமே அவள்பக்கம் திரும்பி பார்த்தனர். உட்கார்ந்திருந்தவனுக்கு தான் வெட்கமாகி போய்விட, சட்டென்று எழுந்தான்.​

“தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு மிடுக்குடன் அமர்ந்தாள்.​

எதிரில் இருப்பவன் கால் உண்மையிலேயே எதிர்பாராத விதமாக அவள் கால் மேல் பட, தன்னுடைய ஹீல்ஸ் காலால் அவன் காலை ஓங்கி மிதித்தாள்.​

அவன் கத்தக்கூட முடியாமல் அவளை வலியுடன் பார்க்க, “சாரி, தெரியாமல் பட்டுட்டுச்சு” என்றாள். ஆனால் அவள் முகம் அதற்காக வருந்தியது போல் இல்லை.​

மீட்டிங் முடிந்ததும் செல்வநாயகம் அவளிடம் பேசினார். “எப்படி இருக்கே எழில். உனக்கு நம்ம அலுவலகத்தில் எந்த துறையில் என்ன பொறுப்பில் வேலை செய்ய விருப்பமோ நீ செய்யலாம்.​

இதை நான் நிரஞ்சனுக்காக சொல்லவில்லை. உன் திறமையை பார்த்து தான் சொல்றேன். உன்னிடம் ஒரு ஆளுமை தன்மையை சற்றுமுன் தான் கண்டு கொண்டேன். உன்னை மேலாளராக பதவி உயர்வு செய்திருக்கிறேன், துறையை மட்டும் நீயே தேர்ந்தெடு” என்றார்.​

“தேங்க்ஸ் சார், இங்கே நான் மீராவின் பொறுப்பையே பார்த்துக் கொள்கிறேன். கூடுதலாக நான் உங்க மற்ற தொழிற்சாலையில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் வேலையிடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது இதர பிரச்சனைகளை கண்டறிந்து அதை தீர்க்க நினைக்கிறேன். அதற்கு ஏற்றாற் போல் ஒரு வேலையை அமைத்து தாங்க” என்றாள்.​

“சபாஷ், உன் புருஷனும் இதைத்தான் என்னிடம் சொன்னான். உன்னை என்னுடைய அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தலைமை தொழிலாளர் நலன் அதிகாரியாக நியமிக்கிறேன். நீ நம்முடைய அனைத்து கிளைகளிலும் கமிட்டியை உருவாக்கி அவர்களின் பிரச்சனையை கண்டறிந்து அதை சரி செய்.​

யார் மேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதை நீ செயல்படுத்தக் கூடிய அனைத்து அதிகாரத்தையும் உனக்கு தருகிறேன். இனி நம்முடைய கம்பெனியில் யாருக்கும் யாராலும் எந்த தொல்லையும் இருக்க கூடாது” என்றார்.​

“கண்டிப்பாக” என்றாள் புன்னகையுடன்.​

“சரி நம்ம ஆபிசிற்கு தினமும் எப்படி வர்ற? ஏனென்றால் நீ மற்ற கிளைகளுக்கம் அடிக்கடி போக வேண்டி இருக்கும், எனவே உனக்கு ஆபிஸ் காரை தரச் சொல்கிறேன். தனியாக டிரைவர் போட முடியாது என்பதால் சீக்கிரமே கார் ஓட்ட கற்றுக் கொள்” என்றார்.​

“ஓகே சார்” என்றாள் எழிலழகி​

வெளியே வந்த செல்வநாயகம், அலுவலக ஊழியர்களை அழைத்து எழிலழகியின் புதிய பொறுப்பைப் பற்றி விவரித்தார். இதுவரை யாராவது யாரிடமாவது சில்மிஷம் செய்திருந்தால் இத்தோடு நிறுத்திக்கோங்க. எழில் கவனத்திற்கு வந்தால், அவங்க யாருனு பார்க்காமல் வேலையை விட்டு தூக்கிடுவாங்க” என்றார்.​

அங்கே இருந்த சில ஆண்களின் முகம் கறுத்தது. பெண்களின் முகம் பிரகாசம் ஆகியது.​

“ப்ரண்டஸ், என்னை வேற்று ஆளாக பார்க்காமல் உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் என்னிடம் தயங்காமல் சொல்லுங்க. உங்களை பற்றிய எந்த தனிப்பட்ட விவரத்தையோ, உங்கள் புகாரைப்பற்றியோ நான் யாரிடமும் தெரிவிக்க மாட்டேன். இது சத்தியம்.​

ஆனால் அதற்கான நடவடிக்கையை நான் கண்டிப்பாக எடுத்து, அந்த பிரச்சனையை சரி செய்வேன். இது உறுதி” என்றாள்​

அனைவரும் அதைக் கேட்டு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மறுநாள் வேலைக்கு வந்திருந்த மீரா இதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.​

“எழில், என்னைவிட நீ திறமையாக வேலை செய்து, மற்ற பெண்களுக்கும் வழிக்காட்டியாக இருப்பாய் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்று அவளை கட்டிக் கொண்டாள் மீரா​

ராஜூவோ விசாரணையின் போது போலீஸ் அதிகாரியிடம், “சார் நான் அந்த பெண்ணை அப்படி மிரட்டினால் பயந்து என் வழிக்கு வந்து விடுவாள் என்று தான் பயமுறுத்தி பார்த்தேன். சத்தியமாக டாக்டர் நிரஞ்சனோட விபத்துக்கும் எனக்கும் சம்மந்தமில்லை சார், என்னை நம்புங்க ப்ளீஸ்​

அப்படி நான் கொலை முயற்சி செய்திருந்தால் எப்படி தைரியமாக அவள் அலுவலகத்திற்கே வந்து அவளிடமே சொல்லுவேன், ” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.​

(தொடரும்)​

 

Attachments

  • Screenshot 2024-01-23 184906.jpg
    Screenshot 2024-01-23 184906.jpg
    96.1 KB · Views: 1
இப்பையாவது தைரியம் வந்ததே!!... சூப்பரா சொன்னீங்க நம்ம பயப்படற வரைக்கும் தான் அவங்க தைரியமா இருப்பாங்க!!... உண்மையாவே இவன் பன்னலையா!??... அப்போ யாரா இருக்கும்???... நிரஞ்சன் சீன்லையே வரல🤔🤔
 

NNK-64

Moderator
இப்பையாவது தைரியம் வந்ததே!!... சூப்பரா சொன்னீங்க நம்ம பயப்படற வரைக்கும் தான் அவங்க தைரியமா இருப்பாங்க!!... உண்மையாவே இவன் பன்னலையா!??... அப்போ யாரா இருக்கும்???... நிரஞ்சன் சீன்லையே வரல🤔🤔
நிரு அடுத்த எபிசோடில் வருவான் சிஸ். நன்றி 💖
 

Mathykarthy

Well-known member
எழிலழகி சூப்பர்.... இப்போவும் பயந்து போகாம தைரியமா நடந்துக்கிட்டா....😍😍😍 இனி யாரும் அவகிட்ட வாலாட்ட முடியாது...
ராஜீ இல்லைனா நிருவை accident பண்ணது யாரு.....🤔
 

NNK-64

Moderator
எழிலழகி சூப்பர்.... இப்போவும் பயந்து போகாம தைரியமா நடந்துக்கிட்டா....😍😍😍 இனி யாரும் அவகிட்ட வாலாட்ட முடியாது...
ராஜீ இல்லைனா நிருவை accident பண்ணது யாரு.....🤔
Ans in upcoming epi , Thank you sis ❤️💞
 

santhinagaraj

Well-known member
ஒரு வழியா இப்பவாது எழிலழகிக்கு தைரியம் வந்துச்சே.
அவளோட பிரச்சனையை மட்டுமின்றி அடுத்தவங்களோட பிரச்சினையும் தீர்த்து வைக்கிற அளவுக்கு எழிலழகி திமிர் அழகியா மாறிட்டா சூப்பர் 👏👏👏👏
 

NNK-64

Moderator
ஒரு வழியா இப்பவாது எழிலழகிக்கு தைரியம் வந்துச்சே.
அவளோட பிரச்சனையை மட்டுமின்றி அடுத்தவங்களோட பிரச்சினையும் தீர்த்து வைக்கிற அளவுக்கு எழிலழகி திமிர் அழகியா மாறிட்டா சூப்பர் 👏👏👏👏
Thank you sis 💕🙏🏻❤️
 

Saranyakumar

Active member
அப்பாடா ஒருவழியாக திமிரழகி வந்துட்டாங்க 😍😍😍நிருக்கு என்ன ஆச்சு 🥺🥺
 
Top