யாரோ அவன் யாரோ இவள்
டீசர் 1
திவி எப்போது வீட்டிற்கு வருகிறாள், எங்குச் செல்கிறாள் எதுவுமே யாருக்கும் சொல்லமாட்டாள். காலை உணவு மட்டுமே வீட்டில் அதுவும் சுபத்ராவின் கட்டாயத்தால் மற்றபடி காலையில் செல்பவள் இரவு தான் வருவாள். அவளிடம் பேச வேண்டுமென்றால் இப்படி சாப்பிட வரும்போது வேளையாள் மூலம் தெரியப்படுத்த வேண்டும் அல்லது வாட்ஸாப்பில் குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அப்போதும் அவள் தான் சுபத்ரா இருக்குமிடம் சென்று பேசுவாள் அதுவும் ஓரிரு வார்த்தைக்கு மேல் இருக்காது.
ஆனால் தந்தையிடம் மட்டும் கொஞ்சம் ஒட்டுதல் காட்டுவாள். தினமும் காலைத் தந்தையை சந்திக்காமல் எங்கும் செல்வதில்லை. வீட்டில் இருந்தால் வீட்டிலே பார்த்துவிடுவாள், இல்லையென்றால் அலுவலகம் சென்று பார்த்துவிட்டுத் தான் செல்வாள். அதுவும் பணம் வாங்கவா பாசமாகவா என அவளுக்கு மட்டும் தான் வெளிச்சம்.
மகளின் இந்தப் போக்கை மாற்ற முடியாமல் மகளின் மீதுள்ள பாசத்தால் மினி சுபத்ராவுக்கான மினி சுதாகர் தேடும் பணியில் இறங்கி விட்டார் சுதாகர்.
இன்று சுபத்ரா தன்னை பார்க்க வருமாறு கூறவும் அவளைச் சந்திக்க வந்துள்ளாள்.
“மீ கூப்பிட்டிங்களா??”
“ஆமாடா. உன்ன மீட் பண்ணவே முடியலடா அதான்.”
“நீங்க வீட்டிலேயே இல்லயே மீ அப்புறம் என்னை எப்படி பார்க்க முடியும்??”
“திவிபேபி மம்மி கொஞ்சம் பிஸிடா”
“ஓ.கே சொல்லுங்க.”
“திவிபேபி டேடி உனக்கு அலையன்ஸ் பார்க்கனும் சொன்னார். எனக்கு நம்ம லீலா பையன் ராகுல் தான் உனக்கு மேட்ச் ஆவானு தோனுது. நீ என்ன நினைக்கிற??”
“நாட் இன்ரஸ்டடு” எனப் பட்டுனு சொல்லிவிட்டாள்.
“என்னடா இப்படி சொல்லுற… உங்க டேடி அவர போலவே பார்ப்பார்… ஆனா ராகுல் தான் உன்ன போலப் பார்ட்டி கிளப்னு எல்லாத்துக்கும் உன்கூட வந்து உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவான்”
“மீ… அல்ரெடி ஐ டோல்டு யூ… ஐம் நாட் இன்ரஸ்ட்டு… நாட் ஒன்லி ராகுல்…. ஐ நீட் டைம்… நொவ் ஐம் நாட் ரெடி ஃபார் மேரேஜ்.”
“நீ ராகுல் கூடக் கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணி பாரு… கண்டிப்பா உனக்குப் பிடிக்கும்”
“5 மினிட்ஸ் வேஸ்ட்… லீவ் இட்…எனிதிங் எல்ஸ்” எனக் கேட்டவாரே அறையை விட்டு வெளியேறியவள் வீட்டில் உபயோகிக்கும் செறுப்பை மாற்றுவிட்டு டியூன் லண்டன் (dune london) பிராண்ட் செறுப்பை மாற்றித் தனது அஸ்டன் மார்டின் (aston martin DBX) காரினை எடுத்துக்கொண்டு பறந்தாள்.