எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீயென் காதலாயிரு -கதை திரி

Status
Not open for further replies.

NNK-79

Moderator

நீயென் காதலாயிரு -டீஸர்​


"டேய் உன்னால எப்படிடா தூங்க முடியுது." என்று நண்பனை உலுக்க, சோம்பல் முறித்து எழுந்தவன், "தூக்கத்துக்கும் காதலுக்கும் என்னடா சம்பந்தம்?" என்றான் இந்திரஜித்.​

நண்பனிடம் பதிலுரைத்தபடி தன் போனில் சில சில்மிஷ வேலையை பார்த்தவன் பல் தேய்க்க சென்றான்.​

பத்து நிமிடத்தில் சந்தோஷ் எண்ணிற்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.​

"புது நம்பரா இருக்கு?" என்று சந்தோஷ் எடுத்ததும் அவன் காது சவ்வு கிழிந்தது. எதிர்புறம் ப்ரியா வஞ்சனையின்றி தன் தோழனை திட்டினாள்.​

"ஏய் எதுக்கு திட்டற ப்ரியா? அவன் என்ன செய்தான்?" என்று அப்பாவியாய் கேட்க, "உன் பிரெண்டை கேளுடா. இன்னொரு முறை அவனை எனக்கு மெஸேஜ் பண்ணினா அவ்ளோ தான் கொலைப் பண்ணிடுவேன்'' என்று கடைசியாக கத்தி போனை துண்டித்தாள்.​

எதிரே மோகனும் சித்ராவும் "யாரு சந்தோஷ் போன்ல ப்ரியாவா? என்னாச்சு?" என்ற ரீதியில் நின்றார்கள்.​

"ஆமா அம்மா. ப்ரியா தான் பேசினா. இவன் என்ன செய்தான்னு தெரியலை. புது நம்பர்லயிருந்து கண்டபடி திட்டறா? இவனுக்கு எப்படி அவ நம்பர் தெரிந்தது? என்ன மெஸேஜ் அனுப்பினான்னு தெரியலையே" என்று குழப்பமாய் இந்தரின் அறைக்கு வந்து கதவை தட்ட, பல் விளக்கிய இந்தரோ, கதவை திறந்து, 'என்ன?' என்பதாக கேட்டான்.​

"ப்ரியா நம்பர் எப்படி கிடைச்சதுடா. அவளுக்கு என்னனு மெஸேஜ் அனுப்பின? தாம்தூம்னு குதிக்கறா? என்னை கண்டமேனிக்கு திட்டறா" என்று கேட்டதும் இந்தர் பற்பசையால் உண்டான நுரையோடு நகைக்க, சிரிப்பை அடக்காமல் வாஷ்பேஷனில் துப்பினான். முகம் அலம்பி வாய் கொப்பளித்து டவலால் துடைத்தபடி, "என்னனு திட்டினா?" என்று ஆர்வமாய் கேட்டான்.​

சித்ராவோ சூடான டீயை ஆற்றி, குடிக்கும் பக்குவத்தில் மைந்தனுக்கு கொடுக்க, அதனை வாங்கி மிடறு மிடறாய் பருகினான்.​

"என்ன திட்டினாளா? ஏன்டா உன் பிரெண்ட் இப்படியிருக்கான். அறிவில்லை என் நம்பர் கிடைச்சா இஷ்டத்துக்கு குட்மார்னிங் சொல்வானா. இவனை எல்லாம் பிரெண்ட்னு சொல்லற? இதுல தங்கை கல்யாணத்துல ஆயிரம் வேலை இருந்தும் இவனை போய் கூட்டிட்டு வர போயிருக்க. இவன் பிரெண்ட்ஷிப்பை இப்பவே கட் பண்ணு. இல்லை நடந்ததை மறந்துட்டு நானே அத்தையிடம் போட்டு கொடுப்பேன்னு சொல்றா. அப்படி என்னடா அனுப்பின." என்றதும் சித்ரா மோகன் அதேயிடத்தில் நிற்கவும், "ஜஸ்ட் குட் மார்னிங் தான்டா அனுப்பினேன்" என்று கூறவும் சித்ராவும் மோகனும் இது நம்பற மாதிரி இல்லையே என்று பார்த்துக் கொண்டார்கள்.​

சித்ராவோ மைந்தன் ஏதோ விளையாட்டு தனமாக என்னவோ அனுப்பியதை பூடகமாக அறிந்து சமையல் கட்டிற்கு செல்ல, மோகனோ, "நான் வாக்கிங் கிளம்பறேன். சின்ன பசங்க சகவாசத்தை முதல்ல விட்டொழிக்கணும்" என்று புலம்பி அகன்றார்.​

இந்தரின் தாய் தந்தை அவ்விடத்தில் இல்லையென்றதும் சந்தோஷோ, "டேய் அவ கத்தற டோன், மீன் மார்க்கட்ல சண்டை வர்ற மாதிரி சத்தமா சவுண்ட் விடறா. என்ன அனுப்பினா?" என்று நண்பன் போனை எடுத்தான்.​

அதில் "ஹாய் டியர் தர்ஷுனி. குட் மார்னிங், நல்லபடியா தூங்கனியா? இல்லை கை அழுத்தம் வலியை தரவும் தூங்கமுடியாம தவிச்சியா?​

என் சாதாரண பிடிக்கே இப்படி முகத்தை வலிக்காட்டினா எப்படி டார்லிங்? உன்னை டைட் ஹக் பண்ணும் போது, கிஸ்..." படிப்பதை நிறுத்திவிட்டு போனை இந்தரிடமே நீட்டினான்.​

"என்னடா க்ரீன் க்ரீனா பேசியிருக்க? இந்தர் இது நீ தானா? டேய் அவளிடம் நேர்ல உதைப்பட போற." என்று சந்தோஷ் கூற, இந்தர் போனை வாங்கி சார்ஜரில் போட்டுவிட்டு, "உதையா நானா? டேய் அவளை நேத்து கைப்பிடிக்கிறப்பவே இன்னொரு கையால அவ போன்லயிருந்து என் நம்பருக்கு கால் பண்ணியது எதுக்கு? உதை வாங்கவா உள்ளத்தை வாங்கடா." என்று கவிதையாக மொழிந்தான்​

டீஸர் பிடிச்சிருக்கா மக்களே... இனி தான் பதிவு வந்திடும். உங்க சப்போர்ட் கொடுங்க‌ உங்க கருத்தை இந்த லிங்க்ல பதிவிடுங்கள்.​


 
Last edited:

NNK-79

Moderator

☆நீயென் காதலாயிரு☆​

அத்தியாயம்-1​

மூன்றடுக்கு கொண்ட திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் வரவேற்பிற்கென்று, ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை குழைக்க, வாசனை திரவியமான பன்னிர்ரோஸை ஊற்றினார். கூடுதலாக சந்தனத்தில் ஜவ்வாதும் கலந்து சிறுவிரலால் எடுத்து நெற்றியில் வைக்கும் பதத்திற்கு கலந்து கொண்டிருந்தார் பானுமதி.​

பானுமதி-சிங்கமுத்து இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வம். முதலில் பிறந்தவன் சந்தோஷ். இரண்டாமானவள் சந்திரா. மூன்றாவது பெண் சந்தியா.​

பானுமதியின் பெரிய மகள் சந்திராவுக்கு தான் திருமணம். அத்திருமணத்திற்கு தான் மண்டபமே உறவுகளால் களைகட்டியது.​

எதிரே கண்ணாடியில் தன் முத்து பல்வரிசையின் இடையில் பூக்குத்தும் ஊசியை வைத்து, மல்லிப்பூவை சூடியவளாக ப்ரியதர்ஷினி தன்னிரு தோளிலும் சரிப்பாதியாக சூடி அழகுப்பார்த்து "அத்தை நான் எப்படியிருக்கேன்?" என்று பானுமதியிடம் கேட்டாள்.​

பானுமதி கணவர் சிங்கமுத்துவின் ஒன்றுவிட்ட தங்கை கவிதாவின் மகளான ப்ரியதர்ஷினியை இந்த அவசரத்திலும் நின்று நிதானமாக அளவிட்டார்.​

"உனக்கென்னடி எதுனாலும் அழகு தான். என் பையன் எடுத்து தந்த பட்டுசேலையில கூடுதலா அழகா தெரியுற" என்று வாய்நிறைய மருமகளாக பாவித்தே பானுமதி கூறினார்.​

பானுமதிக்கு கவிதாவின் மகள் ப்ரியதர்ஷினியை தன் மகன் சந்தோஷிற்கு மணக்க விருப்பம் இருக்கின்றது. அதனாலேயே ப்ரியதர்ஷினி மீது தனி ப்ரியமுண்டு.​

ப்ரியதர்ஷினிக்கு அப்படி எதுவும் எண்ணத்தை வைத்து ஆசை வளர்க்க விருப்பமில்லை. அம்மா கவிதா தந்தையை இழந்தப்பின் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கியதை கண்கூடாக பார்ப்பதால் சின்ன சின்ன ஆசைகளோ, பேராசையோ எதையும் அவளிடம் அணுகவிடுவதில்லை.​

"என்னடி உங்க அக்கா மாமா எப்ப வர்றாங்க? நேத்து ரிஷப்னுக்கு வந்துட்டு, தங்கிட்டு போகாம பைக்ல புருஷனோட கிளம்பிட்டா. ஆரத்தி எடுக்க அவளும் வரவேண்டாமா?" என்று ப்ரியதர்ஷினியின் அக்கா யமுனாவை பற்றி கேட்டார்.​

யமுனாவிற்கு ஆறுமாதத்திற்கு முன் தான் ராஜா என்பவரோடு திருமணம் முடித்து வைத்தார் கவிதா.​

அதனால் ரிஷப்ஷனுக்கு வந்த யமுனா இங்கு தங்காமல் இரவே கணவரோடு சென்றுவிட்டாள். திருமணத்திற்கு அவளை இன்னமும் காணவில்லை.​

ப்ரியாவோ "போன் போட்டு எங்கிருக்கானு கேட்கறேன் அத்தை." என்று பதில் தந்தவளிடம், "ஒரு நிமிஷம் டி. இந்த சந்தனத்தை வரவேற்பில் வச்சி, வந்தவங்களை வாங்கன்னு வாய்நிறைய கூப்பிடு. நான் இந்த புடவை கொசுவத்தை சரிபண்ணிட்டு வந்துடறேன்." என்றதும் சந்தன கிண்ணத்தை எடுத்தவள், கண்ணாடியில் மோதிரவிரலில் சிறிதளவு எடுத்து அளவாய் நெற்றியில் சந்தனத்தை கோடியிழுத்து முடித்தாள்.​

சடுதியில் "ஆ." என்று கண்ணாடி டிரஸிங் டேபிளில் இடித்து கொண்டாள். "ஏன்டி கண்ணை மூடிட்டு ஐ-லைனர் வச்சிட்டு இருக்கறது என் பொண்ணு. நீ என்ன இடிச்சிட்டு இருக்க, சேலைக்கட்டிட்டு பூவச்சிட்டு அழாகாயிருக்க. கண்ணுப்பட்டுடப் போகுது ஒருயிடமா உட்காரு." என்று உரிமையாய் அதட்டும் போட்டார்.​

"அத்தமகளுக்கு கல்யாணம், உட்காரணுமாமே... போங்கத்தை" என்று சந்தன கிண்ணத்தை எடுத்து கொண்டு மண்டப வாசலுக்கு சென்றாள்.​

''நான் போய் இந்த சந்தனத்தை வச்சிட்டு ஷோகேஸ் பொம்மையா உட்கார்ந்துக்கறேன்.'' என்று செல்லும் போது முனங்கினாள்.​

அங்கிருந்த கற்பகமோ "அம்மாடி விலாசினி அங்க தான் இருப்பா. அவளையும் இழுத்துட்டு போ" என்று கூறினார்.​

"கண்டிப்பா சித்தி." என்று ப்ரியதர்ஷனி சிட்டாய் பதிலுரைத்துவிட்டு பறந்திருந்தாள்.​

கற்பகமும் சிங்கமுத்துவின் சித்தி மகள் ஒன்றுவிட்ட தங்கையே.​

கற்பகத்திற்கும் மகள் விலாசினி, மகன் கண்ணன் உண்டு. தங்கை கணவர் ஆறுமுகம் என்றால் சிங்கமுத்துவிற்கு ப்ரியம். கவிதாவின் கணவர் தான் இறைவனடி சேர்ந்தாரே! அதனால் கற்பகத்தின் கணவர் ஆறுமுகம் சற்று நெருக்கமனவர்.​

"கண்ணை திறக்கட்டுமா?" என்று ப்யூட்டிஷனிடம் கேட்டாள் சந்திரா.​

"சேலை கட்டிட்டலாம் பிறகு நகையை போடலாம்" என்று அலங்காரம் செய்ய வந்தவர்கள் தங்கள் பணியை தொடர்ந்தார்கள்.​

சந்தனத்தை ரோஜா, கல்கண்டு இருக்கும் இடத்தில் வைத்தவள் வந்தவர்களை 'வாங்க சித்தப்பா வாங்க மாமா, வாங்கத்தை, வாங்க பெரிம்மா, வாங்க மதினி, என்று வாய்நிறைய தன் அத்தை சொல்லித் தந்தது போலவே அழைத்தாள்.​

சிங்கமுத்துவோ "சந்தோஷை பார்த்தியா ப்ரியா?" என்று தன் பருத்த உருவத்தோடு வந்தார்.​

"இல்லிங்களே மாமா." என்றாள் பணிவாக.​

அங்கே சந்தியா நின்றிருக்க "அப்பா அண்ணன் இந்திரஜித் அண்ணாவை கூட்டிட்டு வர பஸ் ஸ்டாப் போயிருக்கார்." என்றுரைத்தாள்.​

"அட ஆமால... இந்திரஜித் வர்றானோ, சரிம்மா வந்ததும் உங்கண்ணாவை என்னை வந்து பார்க்க சொல்லு" என்று மற்ற பணியை கவனிக்க ஓடினார்.​

முகூர்த்தம் ஒன்பது-பத்து, தற்போது மணி ஆறுமுப்பது என்பதால் ஆளாளுக்கு பம்பரமாய், பட்டாடை உடுத்தி உறவுகளில் கேலி, கிண்டல், பேச்சு என்று ஒவ்வொருத்தராய் வந்து மண்டபத்தின் இருக்கையை நிறைத்தார்கள்.​

"அய்யா... அண்ணன் வந்துடுச்சு" என்றாள் சந்தியா. வாசல் பக்கம் எட்டிபார்த்த ப்ரியதர்ஷினியோ "சந்தோஷ் வந்துட்டாரா?" என்று விழியை உருட்டினாள். பெரிய தங்கை திருமணம் இந்த நேரத்திலும் நண்பனை அழைத்து வர போயிருக்கின்றாரே என்று யாரை அழைத்து வந்தார் என ஆவலாய் தேடினாள்.​

அவள் தேடலை வீணாக்காமல் சந்தோஷ் ஒருவனை கைப்பிடித்து அழைத்து வந்தான்.​

பார்க்க மலையாள நடிகர் போல ஜம்மென்று இருந்தான் அவன். மூக்கும் முழியும் அளவாய் ரசிக்க தூண்டும் விதமாக இருந்தவனை, "இந்திரஜித் இது தான் என் குட்டி தங்கை சந்தியா. இவ என்னோட அத்தை பொண்ணு ப்ரியா. அவ விலாசினி" என்று மூவரையும் வரிசையாக அறிமுகம் செய்தான்.​

"ஆங்.. ப்ரியா இல்லை ப்ரியதர்ஷினி" என்று மாமன் மகனிடம் தன் பெயரை நீட்டி முழக்கினாள்.​

இந்திரஜித் என்பவனோ "ஹலோ ப்ரியா, ஹாய் விலாசனி" என்றான் வேண்டுமென்றே.​

"டேய் விலாசினிடா." என்று சந்தோஷ் காதை கடித்தவனாக இந்தரிடம் கிசுகிசுத்தான்.​

"ஏதோவொன்னு விடுடா. ஏங்க சந்தனம் நீட்டணும், பன்னீர் தெளிங்க" என்று கேட்டு பெறவும், விலாசினி பன்னீரை தெளித்தாள்.​

ப்ரியாவோ 'ஆளைப்பாரு ஏதோவொன்னு விடுனு கலாய்க்கறதை. இவன் பெயரை தப்பு தப்பா உச்சரித்திருக்கணும்' என்று பொறுமியபடி சந்தனத்தை முன் நகர்த்தினாள்.​

"அதென்ன வந்தவங்களை எல்லாம் வாய்நிறைய முறை வச்சி அன்பா கூப்பிட்டு, சந்தனத்தை நீட்டி அழகா சிரிச்சிங்க. எனக்கு மட்டும் உற்றுனு வச்சிட்டு சந்தன கிண்ணத்தை முன்ன நகர்த்தறிங்க. அன்பா சிரிச்சிட்டே எடுத்துக்க சொல்லுங்க" என்று ப்ரியாவிடம் எவ்வாறு வரவேற்பது என்று பாடம் நடத்தினான்.​

சந்தோஷ் அடிக்கடி தன் தோழன் இந்திரஜித்தை பற்றி வீட்டில் குறிப்பிடுவான். கல்லூரி நண்பன் நெருங்கி பழகும் ஒரே ஆள் என்று. அவன் இப்படியொருவனா?! என்ற அதிருப்தியை காட்டினாள் ப்ரியதர்ஷினி.​

ப்ரியதர்ஷினியோ இந்திரஜித்தையும் சந்தோஷையும் மாறிமாறி பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.​

"என்னடா இப்படி பண்ணிட்ட. அவ இப்படி வரவேற்க நிற்கறதே அபூர்வம் இதுல ஓடவச்சிட்டியே." என்று சந்தோஷ் கவலைக் கொண்டான்.​

"அய்யோ அண்ணா அவ யமுனா மதினி, ராஜா அண்ணாவை வரவேற்க ஓடறா" என்று சந்தியா சுட்டிக்காட்டி கூறியதும் நிம்மதியடைந்தான்.​

"ஓகேடா இதான் மாடில இருக்கற ரூமோட கீ. அங்க போய் தயாராகிட்டு வா.'' என்று சாவியை கையில் கொடுத்துவிட்டு சென்றான் சந்தோஷ்.​

இந்திரஜித் கையிலிருந்த சாவியை பேண்ட் பேக்கெட்டில் போட்டு ப்ரியதர்ஷினியை கவனித்தான்.​

"என்ன அக்கா நீயே லேட்டா வந்தா எப்படி? அத்தை பீல் பண்ணாது." என்று இழுத்து இவனை கடந்து சென்றாள்.​

அவள் கடந்திடும் போது ஒரு வித பூவாசம் அவனை ஆட்டுவித்தது.​

பெண்ணவளின் நளினமாய் கட்டிய சேலை, நகை, பூ என்று சேர்ந்து புன்னகையும் உதட்டில் விரிய, அவளை பார்த்துக் கொண்டேயிருக்கும் பேராவல் இதயத்திற்குள் இனித்தது.​

திருமணம் என்றாலே கண்ணுக்கு அழகான மங்கைகளை கண்டு ரசிக்கும் காளையர்கள் கூட்டம் இல்லாமலா?​

தேவலோகத்தின் மங்கைகள் எல்லாம் உலா வருவது இது போன்ற விழாக்களில் தானே.!? மற்ற நேரங்களை விட அதென்னவோ திருமணக்கூட்டம், ஊர் கோவில் திருவிழாக்கூட்டம், என்று இத்யாதியான நாட்களில் பெண்கள் பேரழகு தான்.​

அதனால் தான் என்னவோ பெரும்பாலான குடும்பங்களில் பெண் பார்க்கும் வைபோகம் திருமண மண்டபத்தில் பெண்ணுக்கு தெரியாமலேயே அமைத்துக் கொள்கின்றனர் பெற்றோர்கள்.​

இரு குடும்பங்கள் பேசி முடித்து அதன் பின்னரே சம்மந்தப்பட்டவர்களான மாப்பிள்ளை, பெண்ணை இருவரையும் பெண்பார்க்கும் நிகழ்வில் சந்திக்க வைக்கின்றனர்.​

அப்படி தான் சந்திரா திருமணத்திற்கு வந்தவர்களில், தூரத்து உறவில் இருந்த மதினி ஒருவர், ப்ரியதர்ஷினியை சுட்டிக்காட்டி, "இந்த பொண்ணு என்ன படிச்சிருக்கா? அப்பா அம்மா யாரு? எப்படி சொந்தம்? என்று ஆரம்பித்து என் நாத்தனார் மகனுக்கு பொண்ணு பார்க்கறாங்க இந்த பொண்ணை கேட்டா கட்டி வைப்பாங்களா? கட்டிக்கற முறை தானா?" என்று நேரங்காலமில்லாம் பானுமதியிடமே கேட்டார்.​

வேறு யாரிடமாவது கேட்டிருக்கலாம். மணப்பெண் தாயாருக்கு ஆயிரம் வேலையிருந்தது. ஆனாலும் பானுமதியிடமே கேட்டதும், "அய்யோ மதினி அவளை சந்தோஷுக்கு பேசி வச்சிருக்கு. சந்திரா கல்யாணத்துக்கு பிறகு சந்தோஷுக்கு முடிக்கணும்." என்று இந்த ஆயிரவேலைகளுக்கும் இடையில் பதில் கூறினார்.​

பானுமதி இப்படி கூறவும் கற்பகம் அதனை கேட்டவராக, "ஏங்கண்ணி சந்தியாவுக்கு கல்யாணம் முடிச்சிட்டு தானே சந்தோஷுக்கு கல்யாணம் பண்ணப்போறதா நினைச்சேன்" என்று தன் ஐயத்தை கேட்டார்.​

"அட ஆமாங்க அண்ணி. இப்ப பேசினவங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. நாம பிறவு பார்க்கறதா பேசினா அவங்க முந்திப்பாங்க. அதான் சொல்லி வச்சேன். யாருகண்டா சந்தியா படிப்பு முடிய நேரமிருக்கு. பையன் கல்யாணம் முடிச்சாலும் நல்லா தான் இருக்கும். கவிதாவுக்கும் இரண்டு மகளை கரையேத்தி விட்ட திருப்தியடைவா?" என்று போகின்ற போக்கில் உரைத்துவிட்டு வந்தவர்களை கவனிக்க ஓடினார்.​

மேடையில் ஆளுயறத்துக்கு இருந்த விளக்கை சந்தியா ப்ரியதர்ஷினி ஆளுக்கு ஒன்றை ஏற்றியபடி இருந்தார்கள்.​

இந்திரஜித் தலைகேசத்தை அடக்கி பின்னங்கழுத்தை கோதியபடி, இருவரையும் நெருங்கும் சமயம், "சந்தியா நான் சந்திரா அண்ணியை பார்க்க போறேன். விலாசினி நீ இந்த திரியை ஏத்திடு" என்று ஓடவும் இந்திரஜித்திற்கு காற்று பிடுங்கிய பலூனாக முகம் சோர்ந்தது.​

சந்திராவை அலங்கரித்து சேலையும் கட்டிவிட்டு தேவதையாக ஏசிக்கு பக்கத்திலேய மெத்தையில் வீற்றிருக்க வைத்தார்கள்.​

"ப்ரியா உங்க வீட்லயிருந்து உங்க அம்மா, அக்கா, மாமா வந்துட்டாங்களா?" என்று கேட்டார் பானுமதி.​

"வந்துட்டாங்க அத்தை. அம்மா அக்கா கூடயிருக்கு. இங்க வரச்சொன்னேன். நான் வரலைடி தீர்க்க சுமங்கலி யாராவது கூடயிருக்கட்டும். நான் வந்து ஏதாவதுன்னா மனசு சங்கடமாயிடும். அதோட அக்கா-மாமா தனியா இருக்க நான் பேசிட்டுயிருப்பேன்னு சொல்லிட்டாங்க." என்று சந்திரா மதினிக்கு திருஷ்டி பொட்டுயிட்டு ரசித்தாள்.​

"அதுசரி இன்னமும் உங்கம்மா திருந்தமாட்டா. நாம சொன்னா வாதம் பண்ணுவா. அவளை விட்டு தள்ளு.​

இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரத்தி தட்டு எடுக்கணும்.​

அப்பறம் அது முடியவும், சந்திராவை மேடைக்கு கூப்பிட்டா கைப்பிடிச்சி கூட்டிட்டு வாடி கண்ணு" என்று பானுமதி ப்ரியதர்ஷினி தாடை பிடித்து கொஞ்சி சென்றார்.​

"ஆகட்டும் ஆகட்டும். எல்லாரும் வெளியே போங்க. கசகசன்னு பொண்ணு ரூம்ல" என்று அங்கே ஓடிவிளையாடிய நண்டு சிண்டையெல்லாம் விரட்டினாள்.​

ஏசியறையில் ஒளிந்துக்கொண்டு சுகமாய் ரசித்த பொடிசுகளோ வேறுவழியின்றி வெளியேறினார்கள்.​

ப்யூட்டிஷன்களும் பணத்தை வாங்கிவிட்டு வெளியேற மணப்பெண்ணும் ப்ரியதர்ஷினியும் இருந்தார்கள்.​

மண்டபத்தின் ஒலிப்பெருக்கி உதவியால் மத்தளம் நாதஸ்வரம் என்று செவியை தாக்கியது.​

ஆரத்தி எடுக்கும் நேரம் சந்தியா அழைக்க, மணமகளை விட்டுவிட்டு சிட்டாய் ஓடினாள் ப்ரியா. தன் அக்கா யமுனாவையும் கூடவேயிழுத்து, செய்து வைத்த அலங்கார தட்டு ஒன்றை மாப்பிள்ளையின் முன் சுற்றப்பட்டு பரிசும் பெற்று திரும்பினார்கள்.​

ஆரத்தி எடுத்த தட்டை ஒரு கையில் வைத்தபடி, மறுகையில் பரிசு பெட்டியை பிரிக்க, பரிசுப்பெட்டியோ கீழே விழப்போனது.​

"என்ன அவசரம்? மெதுவா ரூமுக்கு போய் பிரிக்கலாம். தங்கமா கொட்டி கொடுத்திருக்க போறார்." என்றது இந்திரஜித் குரல்.​

"தங்கத்தை நானே எடுத்துப்பேன். உங்க வேலையை பாருங்க" என்று நொடித்தாள் தர்ஷினி.​

தர்ஷினி முகம் கடுகடுக்க, ஏனோ அதுகூட அழகானதாக இந்திரஜித் பார்வைக்கு தெரிந்தது.​

மணமகள் அறைக்கு வந்த ப்ரியதர்ஷினியோ "இன்னும் சிலநேரத்தில சந்திரா சிங்கமுத்து, சந்திரா மகேஷ்வரன்னா மாறப்போறிங்க" என்றதும் சந்திரா வெட்கம் கொள்ளவும், பரிசை காட்டினாள். சின்னதாய் அழகான மேக்கப் கிட் கிடைத்தது.​

அதனை பார்த்து பேசிக்கொண்டிருக்க 'பொண்ணை கூட்டிட்டு வாங்க' என்ற வசனம் மூலைக்கு ஒன்றாக வரவும், அதேகணம் "அம்மா அக்காவை கூட்டிட்டு வரச்சொன்னாங்க." என்று சந்தியா வந்தாள்.​

சந்தியா ப்ரியதர்ஷினி இருவரின் கைபற்றி சந்திரா மெதுவாய் தலைகவிழ்ந்து நடந்துவந்தாள்.​

கெட்டிமேளத்தாளமும் நாதஸ்வர ஒலியையும் மீறி ஆங்காங்கே கூட்டங்களின் பேச்சும் சலசலத்தது.​

"சேலை நல்லாயிருக்கு?"​

"தலையலங்காரம் பரவாயில்லை."​

கொஞ்சம் பொண்ணு உப்பசமா இருக்கோ?"​

மாப்பிள்ளைக்கு கலரான பொண்ணு தான் அமைஞ்சிருக்கு"​

சீக்கிரம் தாலிகட்டுங்கப்பா பந்திக்கு போகணுமா வேண்டாமா?"​

"முகூர்த்த நேரம் நெருங்குது." என்ற இத்யாதியான வார்த்தை மொழிகளை கடந்து அக்னியருகே மணமகன் அருகே அமர்ந்தாள் சந்திரா.​

ஐயர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து கொடுக்க, பூமழைத்தூவ, மகேஷ்வரன் கரங்களால், உறவுகளின் ஆர்ப்பாட்ட சத்தத்தில், கெட்டிமேளம் கெட்டிமேளமென்ற குரல் கொடுத்த அடுத்த நிமிடம் மத்தளம் பெரிசா நாதஸ்வரம் பெரிசா என்று வெளுத்து வாங்கியபடி சத்தத்திற்கு நடுவே, பொன் மாங்கல்யத்தை சந்திராவிற்கு அணிவித்து முடித்தார் மகேஷ்வரன்.​

ஒரு வழியாக முதல் கடமை முடிந்த நிம்மதியில் பானுமதி-சிங்கமுத்து மகளை கண்ணுற்று பூரித்து மகிழ்ந்தனர்.​

இந்திரஜித் பூக்களை தூவியவன் எதிரே மலர்ந்த புன்னகையோடு ப்ரியதர்ஷனியை ஏறிட்டான்.​

அவள் காணும் நேரம் பார்வையை சடுதியில் மாற்றி நண்பனை காண அவனோ மாப்பிள்ளையின் தலையிலிருந்த மஞ்சளரிசியை தட்டிவிட்டு நின்றான்.​

திருமணம் முடிந்ததும் மற்றொரு மேடை தயாராகியிருக்க, அங்கே மணமகன் மணப்பெண்ணை கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அங்கு தான் இனி போட்டோஷூட் நடைப்பெறும் மேலும் வந்தவர்கள் குடும்ப சகிதம் புகைப்படம் எடுக்கவும் பந்திக்கு செல்லவும் கூட்டம் அலைமோதியது.​

அதன் பின் ஏகப்பட்ட இனிய கலாட்டாக்கள், சற்று நேரத்திற்கெல்லாம் பால்பழம் புகட்ட, மணமகள் அறைக்கு புதுமண தம்பதிகளை அழைத்தார்கள்.​

மகேஷ்வரனும் சந்திராவும் பால் பழம் அருந்தும் நேரம் பானுமதி மகளின் கழுத்தில் இருந்த நகையை கவனித்தார்.​

"ஏன் சந்திரா அண்ணன் வாங்கிக்கொடுத்த ஆரம் போடலையா?" என்று மகளின் கழுத்தில் இல்லாததால் பார்த்து கேட்டார். சந்தோஷ் தங்கை திருமணத்திற்கு என்று அவனாக சேர்த்து வைத்து வாங்கிய ஆரம்.​

"ப்யூட்டிஷன் தான் இந்த நகை போடச் சொன்னாங்கம்மா. அந்த நகையை அப்பவே பாக்ஸில போட்டு வச்சிட்டேன்." என்று குறிப்பிட்டாள்.​

பானுமதிக்கு பகீரென்ற உணர்வு மூன்று சவரன் நகை. "எங்கடி வச்ச?" என்று பதறியவர் மருமகன் இருக்க கண்டு இயல்பானார்.​

சந்திரா சொன்னா இடத்தில் நகைப்பெட்டியை தேட அந்த கப்போர்ட் காலியாக வரவேற்றது.​

மகளை தனியாக அழைத்து "நகையை எங்கடி வச்ச?" என்று மெதுவாக கிசுகிசுத்தார்.​

"இந்த கப்போர்ட்ல தான் அம்மா வச்சேன்." என்று கூறி அந்த கப்போர்ட்டை துழாவினாள்.​

வெற்றிடமாக காட்சியளிக்க அன்னையை கண்டு அதிர்வுற்று நின்றாள்.​

பானுமதியோ "நீ டென்ஷன் ஆகாத, நான் தேடறேன்." என்று அனுப்ப சந்திரா தயங்கி கவலையோடு மகேஷ்வரனோடு மேடைக்கு நடந்தாள்.​

பானுமதி அறையில் ஒவ்வொரு கப்போர்டும், ஷெல்பும் தங்கள் கொண்டு வந்த உடைமைகளையும், பெட்டியையும் அலசினார்.​

சந்தியா வரவும் அவளிடம் நகையை தேடக்கூறினாள். எந்தயிடத்திலும் கிடைக்காமல் போகவும், அந்த அறையிலிருந்தவர்களுக்கு கதிகலங்கியது.​

ப்யூட்டிஷன் எடுத்து சென்றனரோ என்ற ஐயம் துளிர்த்தது. நகை காணாமல் இருக்க அவ்விஷயம் ஒவ்வொருத்தராக பரவ ஆரம்பித்தது.​

ப்ரியதர்ஷினிக்கு தெரியவந்ததும், தன் அத்தையிடம் "சத்தமில்லாம தேடுங்க அத்தை. யாராவது அபசகுணமா நினைக்கப்போறாங்க. அதோட மகேஷ்வரன் அண்ணா வீட்டு ஆட்கள் காதுல விழுந்திடப்போகுது" என்று கூறவும் சத்தமில்லாமல் அறையில் பத்து பதினைந்து முறைக்கு மேலாக தேடிவி​

ட்டார்கள்.​

'இங்க யார்யாரு இருந்தா?' என்ற கணக்கெடுப்பில் அன்னியர்கள் பக்கமே கவனம் சென்றது.​

-தொடரும்.​

-NNK79​

நீயென் காதலாயிரு​

வாசகர்கள் உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிட்டு உற்சாகம் தரலாம்.​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-2​

"அந்த ப்யூட்டிஷன் தான் எடுத்துட்டு போயிருப்பா. இப்ப யாரு தங்க நகையை போடுறா அதுயிதுனு சொல்லி கவரிங் செட்டை மாத்திட்டு தங்கத்தை களவாடிட்டு போயிட்டா" என்று கற்பகம் பழிச்சுமத்தினார்.​

"சித்தி பொசுக்குன்னு யார் மேலையும் பழி சுமத்திடாதிங்க. கண்ணால பார்த்து ஊர்ஜிதமாகற வரை, இப்படி நாமளா பழியை வீசறது ரொம்ப தப்பு." என்று கற்பகத்தின் வாயை அடைத்தாள் ப்ரியா.​

சந்தியாவோ "அவங்க தான் அக்கா கூடவேயிருந்தாங்க. இந்த ரூம்ல அக்காவுக்கு அடுத்து, இங்கயே இருந்தது அவங்க தான். நான் ஒரு போன் பண்ணி பார்க்கறேன்" என்று அவசரப்பட்டாள்.​

ப்ரியதர்ஷினி போனை வாங்கி வைத்து, "உடனே போன் போட்டு என்ன கேட்ப? நீங்க என் அக்கா நகையை திருடிட்டிங்களானா?" என்றதும் சந்தியா விழித்தாள். அவள் சொல்வது போல கேட்க முடியாதே.​

சந்தியாவோ "இல்லை ப்ரியா நகையை பார்த்திங்களா....னு..?" என்று இழுத்தாள்.​

"இது கிட்டதட்ட அப்படி தான். பதட்டத்துல தேடினா எப்பவும் கிடைக்காது. பொறுமையா தேடுவோம்." என்று அமைதிப்படுத்த முயன்றாள் ப்ரியா.​

கற்பகமோ "பொறுமையா தேட இதுவொன்னும் கவரிங் நகை இல்லையடிம்மா. தங்க நகை... நேரம் போக போக எல்லாரும் பந்தி முடிச்சி கை நனைச்சி, தாம்பலம் வாங்கிட்டு, வீட்டுக்கு கிளம்புவாங்க. திருடினவங்களும் கமுக்கமா கிளம்பினா நீ இல்லாத நகையை எப்ப தேடி கண்டுபிடிப்ப?​

எங்க தொலைச்சோமோ அங்க தேடணும். இப்படி இருட்டுல தொலைச்சிட்டு வெளிச்சத்துல தேடலாம்னு முடிவுக்கட்டி நகை மொத்தமா போனப்பிறகு தேடினா கிடைக்காது. நகை விக்கிற விலையில மூன்று சவரன் என்ன சும்மாவா? உழைச்சி சேர்த்தவங்களுக்கு இல்லை அருமை தெரியும். அண்ணி என்னவோ சின்னப்பிள்ளை பேச்சையே கேளுங்க" என்று நொடித்து கொண்டார்.​

திருமணம் முடிந்தப்பின் நிம்மதியாக வலம் வரவேண்டிய பானுமதி-துரைசிங்கத்திற்கு இந்த தங்கநகை காணாமல், பெரிய தலைவலியை இழுத்து வைத்தது.​

"இந்த ரூம்லயே இருந்தா சம்பந்தியும் மத்தவங்களும் என்னாச்சுனு கேட்பாங்க. முதல்ல வந்தவங்களை கவனிப்போம்." என்று துரைசிங்கம் கூட்டத்தை களைத்து விட்டார்.​

சந்தியா விலாசினி, ப்ரியதர்ஷினி இம்மூவரிடம் நகைத் தேடுதலை ஒப்படைத்தனர். ஆளாளுக்கு ஒருயிடத்தை அலசினார்கள்.​

திருமணத்திற்கு வந்தவர்களை நிம்மதியாக உபசரித்திடவும் வழியின்றி எண்ணமெல்லாம் காணாமல் போன நகையிலும், இப்படியாகிவிட்டதே என்ற கலக்கத்திலும் சுழன்றது.​

அதென்ன அதிசயமோ அந்த அறையில் நிறைய கப்போர்ட் மற்றும் ஷெல்ப் இருந்தது. இங்கு வந்தப்பொழுது 'ஐ நிறைய ஷெல்ப் இருக்கு. நீட்டா திங்க்ஸை உள்ள வச்சிடலாம்' என்ற குதூகலமிருந்தது. தற்போது அதையே பத்து பதினைந்து முறைக்கு மேல் தேடி களைத்தவர்களுக்கு இந்த ஷெல்ப் இருப்பதே எரிச்சலை தோற்றுவித்தது.​

இந்திரஜித், சந்தோஷ் இருவரும் அடிக்கடி வந்து "கிடைச்சதா?" என்று கேட்க உதடு பிதுங்கி இல்லையென்றனர் பெண்கள்.​

"கதவை தாழிட்டு இங்கிருக்க பைகளை செக் பண்ணிடலாமா?" என்று விலாசினி கேட்க ப்ரியதர்ஷினி ''அப்படி செய்தா நல்லாவாயிருக்கும்' எடுக்காத மத்தவங்க மேல கெட்ட அபிப்ராயமா போகாது?'' என்பதை முன்வைத்தாள்.​

"நாம தேடறோம்னு யாருக்கு தெரியப்போது. கதவை அடைத்து செக் பண்ணிடலாம்" என்று சந்தியா உரைத்தாள்.​

அதுவும் பார்த்திடலாமென்று கதவை தாழிட்டனர்.​

சிலரின் சூட்கேஸை தவிர்த்து பையில் ஜிப்பை திறந்து அலசிபார்த்தனர்.​

துணிகளும் கவரிங் நகையும் காஸ்மெடிக்கும் குவிந்திருந்தது.​

முதுகுப்பை, தோள்பை எல்லாம் ஆராய்ந்து முடித்தனர். "ஆறு சூட்கேஸ் இருக்கு. பட் நம்பர் தெரியாம எப்படி ஓபன் பண்ணறது?" என்றுரைத்தாள் விலாசினி.​

"இந்திரஜித் அண்ணாவுக்கு இந்த மாதிரி நம்பர் லாக் பெட்டியை ஓபன் பண்ணற ட்ரிக்ஸ் தெரியும். ஒருமுறை அண்ணா இந்த மாதிரி நம்பர் மறந்துட்டு சூட்கேஸை திறக்க முடியாம இருந்தப்ப, 'சின்ன ட்ரிக்ஸ் தான்' அப்படின்னு அண்ணாவிடம் சொல்லி ஓபன் பண்ணிருக்கார். இருங்க நான் அவரை கூட்டிட்டு வர்றேன்." என்று ஓடினாள் சந்தியா.​

"என்னவோ பண்ணுங்க. முடிந்தளவு தேடுவோம். எனக்கென்னவோ மனசு சரியில்லை." என்று ப்ரியதர்ஷினி வாடியபடி இருந்தாள்.​

கொஞ்ச நேரத்திலேயே சந்தோஷ், இந்திரஜித் இருவருமே மணப்பெண் அறைக்கு வந்தார்கள்.​

ஐவரை தவிர்த்து யாருமில்லையென்றதும் இந்திரஜித் நண்பனின் அனுமதியோடு மற்ற பெட்டியை திறக்கும் வித்தையை காட்டினான்.​

சின்ன ட்ரிக்ஸ் இதுபோல யு-டூயூப்பில் இவ்வாறான நுணுக்கமான விஷயத்தை கண்டதுண்டு என்று கூறி பெட்டியை திறந்தான்.​

பெட்டியில் நகையிருந்தது. ஆனால் அது பெட்டி உரிமையாளரின் தங்க நகையாக இருக்கவே பயத்தில் தொட்டு கும்பிட்டு மூடிவைத்தனர்.​

ஒவ்வொன்றாய் பார்வையிட, கதவு தட்டும் சப்தம் கேட்டது. இந்திரஜித், சந்தோஷ் உறைந்தனர்.​

"யாரு கதவு தட்டறது? இங்க துணி மாத்தறோம்." என்று சந்தியா குரல் கொடுத்தாள்.​

"நான் தான்டி வந்திருக்கேன். கதவை திற" என்ற பானுமதி குரலில் மெதுவாக எட்டிப்பார்த்து கதவை திறக்க, பானுமதியோடு கற்பகமும் யமுனாவும் வந்தார்.​

"இன்னுமா தேடறிங்க? நீ என்னடா பண்ணற?" என்று மகன் சந்தோஷை கேட்டார்.​

"கதவை லாக் பண்ணிட்டு மத்த பையில தேடிட்டு இருக்கோம் அம்மா." என்றதும், 'கிடைச்சதா?' என்ற பார்வையை வீசினார்.​

'இல்லை' என்று முகமே பறைச்சாற்றியது. வாய் வார்த்தை வேறு தேவையா?​

யமுனாவோ நகை காணாமல் போனது தெரியாமல், "ப்ரியா அவர் கிளம்பறார். உன்னோட லக்கேஜை தந்தா எடுத்துட்டு போவார். நீ தானே வெயிட்டா இருக்கு, நான் பேக்-ஃபேக் எடுத்துக்கறேன்னு சொன்ன?" என்றதும் அந்த நேரம் தான் ப்ரியாவின் சூட்கேஸை இந்திரஜித் திறக்க, "அய்யோ அது என்னோடது" என்று கூற, அதற்குள் விலாசினி மேல் துணியை எடுத்திடவும், இதுவரை ஆட்டம் காட்டிய நகை பளபளத்தது.​

ப்ரியதர்ஷினிக்கோ அதிர்ச்சி என்றால் பானுமதிக்கு உச்சப்பட்ச பேரதிர்ச்சி.​

அங்கிருப்பவர்களில் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்து விழிக்க, பானுமதியோ கற்பகம் இருப்பதால், "அட உன்னிடம் நகை கொடுத்ததை மறந்தே போயிட்டேன்." என்று கூறிவிட்டு விலாசினியிடமே கையில் கொடுத்து "சந்திரா கழுத்தில் போட்டுவிடு" என்று அணிவித்திட கொடுத்து அனுப்பிவிட்டார்.​

ப்ரியதர்ஷினிக்கோ 'என்னிடம் எப்ப தந்தாங்க?' என்ற குழப்பத்தில் நின்றாள்.​

"பாருங்க அண்ணி நான் தான் அப்ப மறந்து ப்ரியாவிடம் கொடுத்தேன். அப்பாடி இப்ப தான் நிம்மதி." என்று நிலைமையை சகஜமாக்கினார் பானுமதி.​

சூட்கேஸை யமுனா எடுத்து கொண்டு நகர்ந்திட, "நான் போய் அண்ணாவிடம் நகை இருக்கற தகவல் சொல்லிடறேன். பரிதவிப்பா இருப்பார்" என்று கற்பகமும் அவ்விடம் விட்டு அகன்றார்.​

தற்போது சந்தோஷ், இந்திரஜித் மற்றும் பானுமதி, சந்தியா, ப்ரியா என ஐவர் மட்டுமிருக்க, "உங்க அக்கா கல்யாணத்துல இன்னும் ஐந்து சவரன் பாக்கி போடணும்னு அவங்க வீட்ல அழுத்தம் கொடுக்க, என் மக நகையில கைவச்சிட்டியா? உண்ட வீட்டுக்கு ரெண்டகமா? என்னடியிது?" என்று பானுமதி அதட்டி கேட்கவும், தான் ஏதேனும் கெட்ட கனவேதும் காண்கின்றோமா? என்ற அச்சத்தில் நின்றாள்.​

"சொல்லுடி?" என்று கை புஜத்தை பற்றி உலுக்கவும், "அத்தை நான் எதுவும் பண்ணலை. நகை எப்படி என் பெட்டில வந்துச்சுனு சத்தியமா தெரியாது. என்னை எப்படி தப்பா நினைச்சு பேசறிங்க. மனசு கஷ்டமாயிருக்கு அத்தை" என்று ஆற்றுமடை திறந்து விட்டது போல கண்ணீரை உகுத்தினாள்.​

"என்னடி நீலிக்கண்ணீர் வடிக்கிற? இந்த சூட்கேஸுக்கு தனி நம்பர் இருக்கு. அது உபயோகிகறவங்களுக்கு மட்டும் தானே தெரியும். அப்படியிருக்க உன் பெட்டியை பூட்டியது யாரு? இந்த நகை இதுல தானே இருந்தது. உன் கண் முன்ன தானே எடுத்தேன்." என்று பானுமதி கோபத்தில் கொதித்தார்.​

இதுவரை அன்புக்காட்டிய உள்ளம் இப்படி பழியை சுமத்தவும் பேச்சற்று நின்றாள்.​

சந்தோஷ், சந்தியா இருவருமே கையை பிசைந்து வேடிக்கை பார்த்தனர்.​

இந்திரஜித்தோ, "ஆன்ட்டி என்னை மாதிரி யாராவது ஓபன் பண்ண தெரிந்தவங்க கூட நகையை எடுத்து தர்ஷினி பெட்டில வச்சிருக்கலாமே. அவ திருடியிருக்க மாட்டா" என்று உதவிக்கு வந்தான்.​

"இங்க பாருங்க தம்பி. நீங்க சொல்லறது வாஸ்தவம் தான். ஆனா அந்தளவுக்கு அறிவு இங்க யாருக்கும் இல்லை. அதுவும் இவ போனிலேயே பேட்டர்ன் நம்பரை அடிக்கடி மாத்தி பிரைவேஸி செட்டிங் எல்லாம் பத்திரமா பார்த்துப்பா. அப்படியிருக்க அவ பெட்டியை அஜாக்கிரதையா தான் வச்சிருப்பாளா?​

இவ பெட்டி நம்பர் இவளுக்கு தான் தெரியும். இவங்க அக்காவுக்கு ஆறு மாசம் முன்ன நடந்த கல்யாணத்துல ஐந்து சவரன் நகை இன்னமும் போடலை. அதுக்கு தான் இப்படி திருடியிருப்பா." என முடிவே கட்டினார்.​

கதவு தட்டும் சத்தம் கேட்க, துரைசிங்கமும் கவிதாவும் வந்தார்கள்.​

கவிதா மகளிடமும் அண்ணன் அண்ணியிடமும் சொல்லிவிட்டு கிளம்ப வந்தார். பாவம் மகள் பழி சுமந்து நிற்பது அறியாமல்....​

சந்தியா கதவை திறக்கவும், "என்னம்மா மருமகளிடம் நகையை கொடுத்து வச்சியா. இப்ப தான் நிம்மதி." என்றார் துரைசிங்கம்.​

பானுமதியோ முகம் இறுக்கமாய் இருக்க, ப்ரியதர்ஷினியோ உயிர் துறந்த வலியை முகத்திலேந்தி நின்றிருந்தாள்.​

கவிதாவோ அண்ணன் மனைவியிடம் வந்து, "யமுனா உண்டாகியிருக்கா மதினி அதனால நான் யமுனாவோடவே கிளம்பறேன்." என்று நல்லவிஷயத்தை கூறினார்.​

இதே முன்பானால், 'அப்படியா சங்கதி. நல்லவிஷயமாச்சே. பார்த்து புள்ளைய கவனிங்க மதினி.' என்று வாழ்த்து கூறி மகிழ்ந்து பேசியிருப்பார். இன்றோ நிலைமை தலைகீழாகயிருக்க, மட்டுப்படுத்திய கோபத்தோடு முகத்தை வேறுபக்கம் திருப்பி அமைதிகாத்தார்.​

துரைசிங்கமோ "தங்கச்சி நல்ல விஷயம் சொல்லிருக்கு இரண்டு பேரும் இப்படி சிலையா இருக்கிங்க? மருமகளே என்னம்மா?" என்று ப்ரியாவை அப்போது தான் கவனித்தார்.​

கவிதாவும் மகளின் கண்ணீரை கண்டு அருகே வந்தார்.​

பானுமதி கணவரிடமும் ப்னியா அண்ணியிடமும், ப்ரியதர்ஷினி நகையை திருடியதாகவும், நகை அவள் பெட்டியிலிருந்ததையும் குறிப்பிட்டார்.​

துரைசிங்கத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "ப்ரியாவிடம் நீயே தந்திருப்ப, இல்லைனா சந்திரா தந்திருந்தா?" என்று கூறினார்.​

"நான் சந்திரா கழுத்துல தான் நகையை போட்டேன். சந்திரா ப்யூட்டிஸன் சொன்னதால இவளிடம் கொடுத்திருந்தா இவளுக்கு தெரியும்ல? நம்மிடம் சொல்லிருக்கலாம்ல. பதறிட்டு தேடிட்டு இருந்தோம். சந்திராவுக்கு நினைவிருக்கும்னா நம்மிடம் சொல்லிருப்பாளே. நகையை ஐ-லைனார் போடறச்ச கழட்டி வச்சிருக்கா. அப்படின்னா இதை ப்ரியா தான் எடுத்திருக்கா?" என்று கூறி யமுனாவிற்கு ஐந்து சவரன் நகையை கொடுக்கும் முடிவில் இருந்ததாக எடுத்துரைத்தார்.​

யமுனாவை கண்டதும் புதுப்பெண் என்று தனியாக நலம் விசாரித்தப்போது, 'எங்கத்தை... எங்க மாமியார் இன்னும் உங்க வீட்லயிருக்கறவங்க ஐந்து சவரன் போடலைனு அதையே கேட்கறாங்க. அம்மாவிடம் எதுவும் சொல்லலை. ப்ரியா தான் நான் பார்த்துக்கறேன்னு சொல்லிருக்கா' என்ற பேச்சை வைத்து, பானுமதியாகவே ப்ரியா அதற்கு தான் திருடியதாக முடிவெடுத்தார்.​

கவிதாவோ "அண்ணி பார்த்து பேசுங்க. எம்புள்ளைங்களுக்கு உழைச்சு சம்பாதிக்க தான் தெரியும். திருடற பழக்கமோ பொய் பேசவோ தெரியாது." என்று கவிதா முதல் முறையாக சத்தமாய் வாய் திறந்தார்.​

"பிள்ளை கொலையே செய்துட்டு வந்தாலும் பெத்தவளுக்கு மகன் தான். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. உங்க பொண்ணை நீங்க உயர்வா நினைச்சிக்கோங்க. அவ பெட்டில, அவ நம்பரை வேற யாருக்காவது சொல்லிருக்காளா? அவ பெட்டில தானே நகை இருந்துச்சு?" என்று பானுமதி குதித்தார்.​

"நீ என்னடி வாய் திறக்காம இருக்க? பதில் சொல்லுடி" என்று மகளை திட்டினார்.​

"இதுவரை அத்தை என்னை திட்டியதே இல்லைம்மா. முதல் முறை என் மேல திருட்டு பழி சுமத்தறாங்க என்னால எப்படிம்மா பேச முடியும்?" என்று உதடு நடுங்க, அழுதவாறு உரைத்தாள்.​

சந்தோஷை இந்திரஜித் முதுகை தட்டி, 'பார்த்துட்டு இருக்க?' என்பதாய் தள்ளினான்.​

"அம்மா... இப்ப இதை அப்படியே விடு. கல்யாணத்துக்கு வந்தவங்களை கவனிங்க. நம்ம நாலு பேருமே இங்க இருக்கோம். கதவும் ரொம்ப நேரமா தட்டிட்டு இருக்காங்க" என்று பானுமதியை துரைசிங்கத்தை மற்றவர்களை கவனிக்க அனுப்பினான்.​

சந்தியாவை 'சந்திரா பக்கமாக நில்' என்று மேடைக்கு அனுப்பினான்.​

கவிதாவோ "இன்னும் என்னடி கல்லு மாதிரி நிற்கற. பழியை சுமந்துட்டு இங்கயே உலாத்தப் போறியா வா" என்று ப்ரியதர்ஷினியை இழுத்து செல்ல, சந்தியா, சந்தோஷ், பானுமதி, துரைசிங்கம் எல்லாம் வேடிக்கை தான் பார்த்தனர். தடுத்து பேசவில்லை. இந்திரஜித் மட்டும் "டேய் அவங்க போறாங்க" என்று கிசுகிசுத்தான்.​

"இங்கயிருந்தா அவளுக்கும் கஷ்டம் தான் போகட்டும். பிறகு பொறுமையா பேசிக்கலாம்." என்று முடித்துக்கொண்டான்.​

கலங்கிய விழிகளோடு தர்ஷினி செல்ல, இந்திரஜித் வாசல் வரை பின்தொடர்ந்து வந்தான். அவனுக்கு தர்ஷினியிடம் என்ன பேசி ஆறுதலுரைக்க என்று துளியும் தெரியவில்லை.​

அன்பாய் அழகாய் ஆரம்பித்த திருமணம், தன் மீது பழியை போட்டு திருப்பி அனுப்ப ப்ரியதர்ஷினி மண்டபத்தை திரும்பியும் பாராது நடந்தாள்.​

-தொடரும்.​

NNK-79​

நீயென் காதலாயிரு.​

ஹலோ ரீடர்ஸ் முகநூல்ல கணக்கு இல்லை. அதனால் அங்கே நன்றி உரைக்கவில்லையென்றால் தவறாக எண்ணாதீர்கள். படிக்கற வாசகர்களுக்கு என்‌ மனம் கனிந்த நன்றிகள்.​

உங்கள் கருத்தை கீழே உள்ள கருத்து திரியில் பதிவிடுங்கள்.​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-3​

திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்பு, கறிவிருந்து, என்று எதற்கும் ப்ரியதர்ஷினி, கவிதா செல்லவில்லை.​

முகத்திலறைந்தது போல திருட்டு பழியை போட்டவர்கள் முன் கறிவிருந்துக்கு செல்ல பிடிக்குமா?​

யமுனா கறிவிருந்துக்கு செல்ல தயாரானவளை கவிதா போக வேண்டாமென்று கூறிவிட்டார். யமுனா 'ஏன்மா எதுக்கும்மா?' என்று வீடியோ போனிலேயே குடைந்தாள்.​

அன்னை முகமும், தங்கை முகமும் சரியில்லையென்றதும் 'என்னாச்சு?' என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள்.​

"நீங்க சொல்லலை அத்தையிடம் போன் போட்டு கேட்கறேன்" என்று பேசவும், கவிதா வாய் திறந்து மண்டபத்தில் நடந்ததை விவரித்தார்.​

இனி உறவு என்பதையே தலைமுழுகியாயிற்று என்றுரைத்தார். அதன் பின் யமுனாவும் தொந்தரவு செய்யவில்லை.​

யமுனா கணவன் ராஜா கூட, "என்னடி உங்க அத்தை மாமா நமக்கு புதுத்துணி எல்லாம் எடுத்து ரிசப்ஷன், கல்யாணம், மறுவீட்டு அழைப்பு கறிவிருந்து எல்லாத்துக்கும் கலந்துக்க சொன்னாங்க. நீ என்ன பொசுக்குன்னு வேண்டாம்னு உட்கார்ந்திருக்க?" என்று கறிவிருந்துக்கு செல்லாமல் இருப்பவளை பார்த்து கேட்டார் ராஜா.​

ஆறுமாதமே முடிந்த திருமண வாழ்வில், கருவுற்றுயிருக்கின்றாள் யமுனா. இந்த நேரம் நடந்தவையை கூறினால் தன் தங்கையை கணவர் நம்புவாரா? என்ற ஐயம் துளிர்க்க "அம்மா தான் உண்டாயிருக்க, ஒருயிடமா இருக்க சொல்லிட்டாங்க. உங்களை மட்டும் என்றால் நீங்க தயங்குவிங்கன்னு ப்ரியாவும் மாமாவை அலைக்கழிக்காத. நானே ப்ரியாணி எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டா" என்று பொய்யுரைத்தாள்.​

கவிதா பெரிய மகளிடம் 'மாப்பிள்ளை ஏதாச்சும் கேட்டாறா?' என்று கேட்க, "அவர் துருவி துருவி கேட்டார். நான் சமாளிச்சிட்டேன் அம்மா" என்றாள்.​

இப்படியொரு பொய் என்பதால் அடுத்த பத்து நிமிடத்தில் தன் தூக்குவாளியில் பக்கெட் பிரியாணி வாங்கி யமுனா குடும்பத்திற்கு கொடுக்க முடிவெடுத்தார் கவிதா.​

பக்கத்து பக்கத்து ஏரியா என்பதால் உடனடியாக ப்ரியாணி வாங்கி தூக்கில் வைத்து கவிதாவே கொண்டு சென்றார்.​

ப்ரியதர்ஷினி மனம் என்னப்பாடு படுமென சொல்லித்தான் தெரியவேண்டுமா? பித்து பிடித்தவள் போல இருந்தாள்.​

யமுனா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் நேரம், ப்ரியதர்ஷினி அப்பொழுது தான் பெரியவளாய் ஆளானாள். அதன் பின் ப்ரியாவுக்கு சேலைக்கட்டி அழகு பார்த்து கொஞ்ச நாளிலேயே கவிதா கணவர் தியாகு இறந்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை ப்ரியாவுக்கு துரைசிங்கம்-பானுமதி ஒரு மாரல் சப்போர்ட்.​

கணவரை இழந்ததால் கண்டிப்போடு பிள்ளைகளை வழிநடத்த கவிதா முடிவெடுத்து அடக்கவொடுக்கமாக நடத்தினார்.​

அதற்கெல்லாம் செல்லம் கொஞ்சுவது போல பானுமதி இருப்பார். அதனாலேயே அதிகளவு நெருக்கமுண்டு.​

இரண்டு மூன்று நிறுத்தத்தில் வீடு என்பதால் நினைத்த நேரம் செல்வாள் ப்ரியா.​

யமுனாவை கட்டிக்கொடுத்த இடம் தான் அரைமணி நேரப்பயணம். கவிதா கடையில் வாங்கிய பக்கெட் பிரியாணி, வறுவல், தொக்கு, பச்சடி, அல்வா என்று கூடவே பழங்களென தன் இரண்டு கட்டப்பையில் வைத்து ஆட்டோ பிடித்து இறங்கினாள்.​

யமுனாவின் கணவர் ராஜா ஒரே பையன் என்பதால் பெற்றோரை தவிர்த்து துளைத்திடும் கேள்விகள் வராது.​

அதுவரை சந்தோஷமாக சமாளிக்க முயன்றார்.​

எத்தனை நாள் சமாளிக்கப் போகின்றாளென்று விதிக்கே தெரியும்.​

ராஜாவின் அம்மாவிற்கு இப்பொழுது தான் பல்செட் கட்டியிருந்தார்கள். அதன் விளைவால் சற்று முகம் வீக்கமிருந்தது. மற்றவரை சந்திக்க கூச்சப்பட்டு திருமணத்திற்கு வரவில்லை. அதனால் 'திருமணம் நல்லபடியாக நடந்ததா?' என விசாரித்து கொண்டார்.​

ராஜா தந்தை பெரிதாக எங்கும் செல்ல விரும்பாதவர். அதோடு சொன்ன சொல்படி நகை நட்டு, பணம் என்பதை எதிர்பார்த்து வராததால் சற்று முறுக்கு காட்டி திரிபவர்.​

அதனால் உணவை கொடுத்துவிட்டு பெரிய மகளிடம் பேசிவிட்டு, வீடு திரும்பும் முடிவில் இருந்தார்.​

ப்ரியா ஒரே அழகை. புலம்பல், வெறித்த திக்கற்ற பார்வை இப்படியே இருப்பதாக கவிதா யமுனாவிடம் கூறினாள்.​

"என் வீட்டுக்காரர் சந்தோஷிற்கு போன் போட்டா தெரிந்திடும் அம்மா." என்று தயங்கினாள்.​

"அதுவா தெரியவந்தா சொல்லு பார்த்துக்கலாம். ஆனா என் மக தப்பு செய்யலை. அதையும் தெளிவா சொல்லிடு" என்று நடையை கட்டினார்.​

யமுனா போன் போட்டு தங்கைக்கு ஆறுதலாக பேச முயலலாம். ஆனால் தங்கை போனை எடுத்தால் தானே?​

ஒரு வாரம் கடந்திருக்கும். சந்தோஷ் பைக்கில் அவனும் அவன் தங்கை சந்தியாவும் வந்திருந்தார்.​

கவிதா மட்டும் வீட்டில் துணியை உலர்த்தினார்.​

அந்நேரம் இருவரும் வந்து சேரவும் சிறுசலமுமின்றி இருவரையும் பார்த்து துணியை பிழிந்தார்.​

"ப்ரியா எங்கத்தை?" என்று வந்தான் சந்தோஷ். அவன் வாய் தான் கேட்டது. கண்கள் அறையெங்கும் அளவிட்டது. கால்கள் சமையல் அறை, படுக்கயறை, மாடிக்கு என்று தாவியது.​

சந்தியாவோ நின்றயிடத்திலிருந்து அண்ணனை தான் அளவிட்டாள்.​

எங்கும் ப்ரியதர்ஷினி இல்லை என்றதும் அத்தையிடம் திரும்ப வந்து "அவயெங்கத்தை?" என்றான்.​

"அவ செத்து ஒரு வாரம் ஆகுதுப்பா. இப்ப வந்து கேட்கற? உன் தங்கச்சி கல்யாண நாள் அன்னைக்கு தானே உங்கம்மா சவமா என்னோட அனுப்பினா. உனக்கு தெரியாதா? நீயும் அங்க தானே இருந்த" என்று கூறவும் சந்தோஷிற்கு தலைகுனிவாய் போனது.​

"அத்தை அந்த நேரம் எது பேசினாலும் தப்பா போகும். கல்யாண மண்டபத்துல பிரச்சனை பெரிசாக வேண்டாம்னு தான் அமைதியா இருந்தேன்.​

அடுத்தடுத்த நாள் சந்திராவை நல்லபடியா அனுப்பற வரை வேலையிருந்தது அத்தை. சந்திராவை அனுப்பிட்டு நேரா இங்க தான் வர்றேன். ப்ரியா எங்கத்தை?" என்று தவிப்பாய் கேட்டான்.​

"நல்லதுப்பா. சந்திரா நல்லப்படியா புகுந்த வீட்டுக்கு போயிட்டாளா? ரொம்ப சந்தோஷம். என் மக இரண்டு நாள் முன்ன தான் அனாதையா வேலைக்கு போறேன்னு கிளம்பிட்டா. இனி இங்க எப்ப வருவாளோ?! அவளா மனசு வைக்கணும். அவ மனசு தான் செத்துடுச்சு. இல்லையில்லை கொன்னுட்டிங்க" என்று சேலை முந்தானையில் வாயை மூடி அழுது அறைக்குள் அடைந்தார்.​

சந்தோஷ் தலையிலடித்தபடி பின் தொடர்ந்து "எங்கத்தை இருக்கா. அத்தை ப்ளிஸ்" என்று அவர் அமர்ந்திருந்த பாதமருகே மண்டியிட்டு கேட்டான்.​

"எம்பொண்ணு நிம்மதி எனக்கு முக்கியம் சந்தோஷ். தயவு செய்து பழிச்சுமத்தியதோட விட்டுடுங்க. நீ தேடிப்போய் புதுசா வேற பிரச்சனையை இழுத்துடாத. அதுக்கும் எங்க மேல பழிப்போட்டாளும் போடுவாங்க. இங்கயிருந்து கிளம்புப்பா" என்றவர் கையெடுத்து கும்பிட, சந்தோஷ் செய்வதறியாது நின்றான்.​

"அண்ணா போலாம்" என்று சந்தியா கூப்பிட, சந்தோஷ் துவண்டவனாய் வெளியேறினான்.​

கவிதா கதவை அடைத்து வைத்துவிட்டு மகள் இல்லாத அறையை வெறித்தார்.​

ப்ரியதர்ஷினி, சந்திரா திருமணத்திற்கு அணிந்த பட்டுப்புடவை இன்னமும் மெத்தையிலேயே இருக்க, அதனை எடுத்து முகத்தில் வைத்து கண்ணீர் வடித்தார்.​

தனியாக குழந்தை சென்னை மாநகரத்தில் என்ன செய்கின்றாளோ? தங்கயிடம், உணவு, எல்லாம் அவளே பார்த்துக் கொள்வதாக கூறி பள்ளியில் படித்த தோழியை நம்பி கிளம்பிவிட்டாள்.​

அங்க சுதா என்பவளை மட்டுமே தெரியும்? அவளுக்கு படிப்பு வரவில்லையென்று பன்னிரண்டாவது முடித்ததும் கட்டி கொடுத்தார்கள். அவளை நம்பி சென்று எங்கே தங்குவளோ? எப்படி சாப்பிடுவாளோ? இங்கனயே இருந்த இரண்டு நாளாய் பச்சை தண்ணியை தான் குடித்தாள். அன்ன ஆகாரமே தான் ஊட்டி விட்டப்பிறகு சாப்பிட்டவள், அங்க போய் சாப்பிடாம கொள்ளாம தனியா இருப்பாளோ" என்று கேட்டதற்கெல்லாம், "அம்மா... முன்ன இங்கிருந்து வேலைக்கு போக முடிவெடுத்தேன்.​

காரணம்... நம்ம சுற்றி சொந்தங்கள் இருக்கு, தனியா உன்னை அக்காவை விட்டு வெளியூருக்கு போகணுமானு யோசித்தேன். இனி சொந்தம் எதுவுமில்லைம்மா. அக்காவுக்கு நகை வாங்கணும், இங்கயே இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது. புரிஞ்சுக்கோம்மா. நான் ஒன்னும் சாகமாட்டேன். தனியா வாழ கத்துக்கறேன். அவ்ளோ தான்" என்று பிடிவாதம் பிடித்து பெட்டியை கட்டிவிட்டாள்.​

கண்ணீரை துடைக்க துடைக்க அமுதசுரபி போல வரவும், மகளுக்கு கை தானாக அலைப்பேசி வழியாக எண்ணை தொடர்பு கொண்டாள்.​

"ப்ரியா எப்படிடி இருக்க?" என்று கேட்கவும் குரலே கவிதா அழுததை காட்டி கொடுத்தது.​

"அம்மா இன்னும் எத்தனை நாளுக்கு என்னை நினைச்சி அழுவ? இங்க வந்து சுதா மூலமா வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கிட்டேன். மெஸ்ல சாப்பிடறேன். வேலையும் கிடைச்சிடுச்சு. நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்." என்றாள் அன்னையை குளிர்விக்கும் பொருட்டு.​

"அதுக்குள்ள எப்படிடி வேலை கிடைக்கும்?" என்று தேம்பினார்.​

போனையே பார்த்து "மரியாதைக்குரிய வேலை தான்மா. தி.நகர்ல சேல்ஸ் கேர்ள். இது தற்காலிக வேலை தான். படிச்ச படிப்புக்கு வேற வேலை கிடைக்கறவரை இந்த கடையில இருப்பேன்." என்றுரைத்தாள்.​

தடுக்கி விழுந்தால் ஆயிரம் கடை. இதில் பெரிய கடையில் வேண்டுமென்றால் ஒப்பந்தமாக கையெழுத்து போட்டு இருக்க வேண்டும். இது அளவில் சிறிய கடையே. சுதா அங்கு தான் பணிப்புரிகின்றாள்‌ அதனால் எந்தவிதமான ஒப்பந்தமின்றி கடையில் சேர்ந்துவிட்டாள். கடையில் சேர்ந்ததும் சுதாவோடு தங்குமிடம் கேட்டு பக்கத்திலேயே ஒரு வுமன்ஸ் ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டாள். உணவெல்லாம் மெஸ்ஸிலேயே பார்த்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளாள்.​

"சரிம்மா எப்ப பிடிக்கலைனாலும் வீட்டுக்கு வாம்மா." என்று நலன் விசாரித்து போனை வைத்தார்.​

சந்தோஷ் வந்ததை உரைத்திட மனம் வரவில்லை. பானுமதி அப்படி மண்டபத்தில் பேசும் போது சிலையாக நின்றியிருந்தான்.​

அப்படிப்பட்டவன் வந்து சென்றதை எதற்கு உரைக்க வேண்டும்? என் மகளுக்கு எந்த ஆசையும் இனியும் வளர தேவையில்லை என்று முடிவெடுத்தார் கவிதா.​

ஒருபக்கம் முடிவெடுத்தால் போதுமா? அங்கே அவன் கேட்க வேண்டுமே?!​

சந்தோஷ் சந்தியாவை வீட்டில் விட்டுவிட்டு மாடிக்கு வந்தான்.​

அங்கே இந்திரஜித் அங்குமிங்கும் நடந்தவன், சந்தோஷை கண்டு ஓடிவந்தான். "தர்ஷினியை பார்த்தியா? எப்படியிருக்கா? பேசினியா? என்று தொடர்வண்டியாய் வினா தொடுத்தான்.​

சந்தோஷ் மறுப்பாய் தலையசைத்து, "அவ அங்க இல்லைடா. எங்கப்போனானு தெரியலை. அத்தை என்னிடம் சொல்லக்கூடாதுனு உறுதியா இருக்காங்க." என்றான்.​

இந்திரஜித்தின் இதயம் பலமிழந்து போனது. எப்படியாவது அவளை சந்தோஷ் சந்திப்பான், பேசுவான் என்றல்லவா எண்ணினான்.​

பழைய ஒட்டுறவு சந்தோஷிடம் வந்தால், தன் மனதை பறித்தவளிடம் நட்பாகிட துடித்தான்.​

'கண்டதும் காதல்' எல்லாம் நகைப்பிற்குரிய விஷயமாக கருதியவன் இந்திரஜித். சந்தோஷ் அடிக்கடி சந்தியா சந்திராவை பற்றி பேசும் போது ப்ரியதர்ஷினி விலாசினியை பற்றியும் பேசுவான்.​

விலாசினி எட்டியிருந்து பழகும் குணம். ப்ரியதர்ஷினி அறந்தவாலு. என்னிடம் எங்கள் வீட்டு ஆட்களிடமும் உரிமையாக வந்து பழகும் கொள்ளைக்காரி என்பான்.​

அதனால் தான் வந்ததும் ப்ரியாவை காணும் ஆவலில் அவளை போலவே வாய் துடுக்குடன் பேச ஆரம்பித்தான் இந்திரஜித்.​

ப்ரியாவிற்கு எடுத்ததும் இப்படி பேசினால் ஒதுங்கிக் கொண்டாள். ஒருவேளை சந்தோஷ் அறிமுகம் செய்து இரண்டு முன்று சந்திப்பில் பேசியப்பின் துடுக்காய் விளையாட்டாய் வார்த்தை விழுந்தால் மல்லுக்கு நின்று, கூடகூட பேசியிருப்பாள்.​

அவளது அமைதி தன்னிடம் மட்டும் முகம் திருப்ப, ஏன் என்ற காரணத்தோடு அவளையே விழுங்கினான்.​

சின்ன சின்ன முகமாற்றம், சிரிப்பு, அவள் வந்தவர்களை உபசரித்த விதம், என்று ஒவ்வொரு துளியாய் ரசிக்க ஆரம்பித்தான்.​

மனம் அவள் பின்னால் முழுதும் சென்றதை அறியாது.​

ஒரு பெண் பார்க்கும் நிகழ்வில் சட்டென 'பொண்ணை பிடித்திருக்காப்பா?' என்ற தரகர் வினாவிற்கு பெண்பார்க்கும் படலத்தில் கலந்துக்கொண்ட யாவருக்கும் திருப்தி வந்தால் எப்படி நிறைவாக மணக்க சம்மதிப்பார்களோ அவ்வாறு தான் இந்திரஜித் மனம் எண்ணியது.​

ப்ரியதர்ஷினியை விரும்ப ஆரம்பித்து மணக்க எண்ணி கனவுகளை காண ஆரம்பித்தான்.​

சந்தோஷின் அன்னை பானுமதி, ப்ரியதர்ஷினியை பார்த்து, அன்பை கொள்ளையடித்தால் என்றால் மகிழலாம். நகையை கொள்ளையடித்ததாக திருட்டு பட்டம் கட்டியதால் அவள் துவள, அங்கிருந்து சிலையாக சந்தோஷ் வேடிக்கை பார்க்க, இந்திரஜித் மனம் ஒப்பவில்லை.​

எந்தகணம் அவளுக்காக சொந்தங்கள் வாய் திறக்காத போது அவனாக பேசினானோ அப்பொழுதே அவன் மனம் மொத்தமாய் உறுதிபூண்டது.​

ப்ரியதர்ஷினியை தன்னவளாக மாற்றிடும் முடிவை. ஆனால் அவளோ வீட்டிலிருப்பாளென்று எண்ணியிருக்க, ப்ரியாவை காணோம் என்றதை இந்திரஜித்தால் ஏற்கமுடியவில்லை.​

இங்கயே இருந்தவரை நண்பனை துளைத்தெடுத்து விட்டான். 'அந்த பொண்ணை பார்க்கணும்டா. பாவமா இருக்குடா. என்ன பண்ணறா? ஏதுனு ஒரு எட்டு போய் கேட்போம்' என்றான்.​

இந்திரஜித் எண்ணத்தை உணர்ந்ததால், சந்தோஷும் சங்கடத்தோடு சென்ற அத்தை மகளை காண தங்கையை அழைத்து வந்தான்.​

அப்படியிருந்தும் சிட்டாய் எங்கோ சென்றதாக கூற, கறிவிருந்து முடித்து சந்திரா​

சென்ற, அடுத்த நாளே ப்ரியதர்ஷனி வீட்டுக்கு வந்தவனுக்கு ஏமாற்றமே.​

-தொடரும்.​

NNK 79​

நீயென் காதலாயிரு​

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் நன்றி.​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-4​

சந்தோஷ் போனில் 'உன்னிடம் பேசணும் விலாசினி' என்று அனுப்பியதற்கு 'சரி காலேஜ் விட்டதும் மாலை சந்திப்போம்' என்று பதில் அனுப்பினாள் விலாசினி.​

அவன் தன்னை காண வந்ததே அதிசயம். இதில் தன்னிடம் என்ன பேசப்போகின்றார் என்று தயங்கி நடந்து வந்தவளிடம் சந்தோஷ் இந்திரஜித் இருவரும் எதிரே வந்தனர்.​

சாலையில் நின்று பேசுவதற்கு பதிலாக ஒரு சின்ன காபி ஷாப்பில் அமர்ந்தனர்.​

அப்படியொன்றும் பிரைவேஸி பேசும் இடமல்ல. இந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் உண்டு. தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால் அன்னையிடம் கூட வீட்டில் போட்டு தரலாம். என்னவொரு பிளஸ் என்றால் அவள் பேசப்போவது மாமன் மகனிடம் தான். யாரும் போட்டு தந்தாலும் கவலையில்லை.​

இந்திரஜித் அமைதியாக வேடிக்கை பார்க்க, சந்தோஷ் தடுமாறினான்.​

ப்ரியதர்ஷினியிடம் நன்றாக பேசும் சந்தோஷிற்கு விலாசினியிடம் தயக்கமிருந்தது.​

இந்திரஜித் பொறுமை காற்றில் பறந்து, "ஏங்க ப்ரியா எங்கயிருக்கா? போன்ல பேசினிங்களா? என்று கேட்டு விட்டான்.​

"என்னனு தெரியலங்க. அவளுக்கு போன் பண்ணினா ரிங்கே போகலை. இந்த லீவுல தான் நேர்ல போய் பார்த்து விசாரிக்கணும்னு இருந்தேன்.​

யமுனாவிடம் போன் பண்ணி கேட்டதுக்கு பானு அத்தைக்கும் ப்ரியாவுக்கு சண்டை. இனி ஒட்டுறவு என்பது எங்களுக்கு வேண்டாம்னு அம்மா முடிவெடுத்திருக்காங்க. ப்ரியா இங்க இல்லை வேலைக்கு எங்கயோ போனதா மட்டும் பேசினா." என்று கூறவும் சந்தோஷ் அமைதியாக இருந்தான்.​

"வேறெதும் சொல்லலையா?" என்று இந்திரஜித்தே கேட்டான்.​

"இல்லைங்க ஏன்?" என்றவள் சந்தோஷின் முகத்தை பார்த்து "இவர் ஏன் உம்முனு இருக்கார்?" என்று கேட்டாள்.​

சந்தோஷ் திருமண மண்டபத்தில் நடந்த களோபரம் விலாசினிக்கு தெரியாததால் அதை கூற வர, இந்திரஜித் அவன் கையை பிடித்து அழுத்தி தலையை மறுப்பாய் அசைத்தான். நண்பன் பகிரவேண்டாமென்ற செய்தியை உடல்மொழியால் வெளிப்படுத்த, "சரி நீ கிளம்பு. நேரமாகப்போகுது" என்று கைகடிகாரத்தை பார்த்துரைத்தான் சந்தோஷ்.​

இந்திரஜித்தோ "ப்ரியதர்ஷினியை பத்தி டீடெய்ல் தெரிந்தா உடனே சொல்லும்மா எங்கயிருக்கா? என்ன பண்ணறானு." என்று எழுந்தார்கள்.​

"சரிங்க" என்றவள் சந்தோஷின் வாடிய முகத்தை கண்டு புறப்பட்டாள்.​

அவளுக்கும் பானுமதி அத்தைக்கு ப்ரியாவை சந்தோஷிற்கு மணக்க ஆசையுண்டு என்ற அளவிற்கு தெரியும். அதனால் சந்தோஷ் கவலையை தன் கவலை போல பாவித்தாள்​

சந்தோஷை விட அருகிலிருந்தவன் முகம் இன்னமும் வாடி வதங்கியிருந்தது.​

சந்தோஷ் பைக்கில் இந்திரஜித் பின்னால் அமர்ந்தவன், "எங்கடா போயிருப்பா?" என்று கேட்டான்.​

"நமக்கு தெரிந்தது இந்த திருச்சி. இதை தவிர்த்து எங்கடா யோசிக்க? வெளியூர்னா தூத்துக்குடி பக்கம் தெரிந்தவங்க இருக்காங்க. ஆனா சொந்தமே வேண்டாம்னு யோசித்தா எங்க போவா?" என்று வெதும்பியபடி பதில் தந்தான் சந்தோஷ்.​

"ஏன்டா... அவங்க அக்கா கன்சீவா இருந்தாங்களே. அவங்களிடம் கேட்டுப் பார்க்கலாமே. ஒருவேளை அங்க தெரியவரலாம்?" என்று கேட்டதும் சந்தோஷோ தலையாட்டி மறுத்தான்.​

"சந்தியாவை கூட்டிட்டு அன்னைக்கு வீட்டுக்கு போனதுக்கே தங்கச்சி அம்மா அப்பாவிடம் போட்டுக் கொடுத்துட்டா. அம்மா ஒரே திட்டு. அவ சந்திரா கல்யாணத்தையே நிறுத்தியிருப்பா. தேவையில்லாம இனி அங்க போகாத. அவளை மனசுல வச்சிட்டு சுத்தாதனு கண்டிப்பா சொல்லிட்டாங்க" என்று பானுமதி திட்டியதை உரைத்தான்.​

"எனக்காக கடைசியா ப்ரியதர்ஷினியோட அக்காவிடம் மட்டும் கேட்கலாம். போன்ல வேண்டாம் நேர்ல போய் விசாரிச்சிக்கலாம். ப்ளீஸ்டா." என்று இந்திரஜித் வற்புறுத்த, இதுவரை இந்திரஜித் தன்னிடம் மட்டுமில்லை யாரிடமும் கெஞ்சியதில்லை என்றதால் யமுனாவை பார்க்க இருசக்கர வாகனத்தை யாமுனாவின் மாமியார் வீட்டுபக்கம் திருப்பினார்கள்.​

இந்திரஜித் திருச்சிக்கு வந்தது நண்பனின் தங்கை திருமணத்திற்காக. இன்னமும் இங்கேயே இருக்க முடியுமா? அதனால் விலாசினியிடம் கேட்டாயிற்று, அடுத்து யமுனாவிடம் கேட்டுவிட்டு, அங்கேயும் பதில் இல்லையென்றால் தனது ஊருக்கு திரும்ப வேண்டும்.​

அன்னை தந்தை வேறு போன் போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். 'என்னடா திருச்சி ஊர் பிடிச்சி அங்கயே சுத்தறியா?' என கேலி செய்து 'எப்ப வருவ?' என்ற வினா தொடுத்தபடி இருக்கின்றனர்.​

'வர்றேன் அம்மா வர்றேன் அம்மா' என்று எத்தனை முறை உதிர்ப்பது. இந்திரஜித்தும் தனது உத்தியோகத்தை விடுத்தல்லவா வந்திருக்கின்றான்.​

யமுனா வீட்டில் அவள் கணவர் ராஜா இல்லை, அதே போல மாமனார் ரத்னவேலும் இல்லையென்று தெரிந்தது.​

யமுனா திருமணத்தில் சந்தோஷை ராஜாவின் தாய் பார்த்ததால் அறிமுகம் எளிதானது.​

ராஜா தாயார் விசாலாட்சி சந்திரா திருமணம் பற்றி விசாரிக்க, சந்தோஷ் யமுனாவை பார்த்து அவள் அத்தையிடம் நாசூக்காய் பதிலுரைத்தான்.​

யமுனா மாமியார் தங்களை நல்லபடியாக வரவேற்றதிலேயே அவர்களுக்கு மண்டபத்தில் நடந்த விஷயம் தெரியாததுயென புரிந்து, அதற்கு தகுந்தது போல நலம் விசாரித்து பேசினான்.​

"ப்ரியதர்ஷினி எங்க யமுனா. போன் போட்டா எடுக்கலை?" என்று கேட்க, காபி பலகாரம் என்று தட்டில் வைத்து உபசரித்து முகத்தை இறுக்கமாக வைத்தவள், "அவ வேலைக்கு வெளியூர் போயிட்டா சந்தோஷ்." என்றாள் மொட்டையாக.​

"இந்தா பேசிட்டு இருங்க. பாத்ரூம் போயிட்டு வர்றேன்" என்று விசாலாட்சி செல்லவும், அவர்கள் தலை மறையவும் "இங்கிருந்து போயிடுங்க சந்தோஷ். என் தங்கை பட்ட வேதனை போதும். இங்க நீங்க பழி சுமத்தியது எதுவும் தெரியாது. தேவையில்லாம அதை தெரியவச்சி என் வாழ்க்கையை கெடுத்துடாதிங்க. என் தங்கை நகையை திருடலை." என்று பொங்கினாள்.​

சந்தோஷிற்கும் யமுனாவிற்கும் மாச வித்தியாசமே. அதனால் இருவருமே பெயரிட்டு அழைத்து கொள்வார்கள்.​

"இங்க பாரு யமுனா. நான் ப்ரியாவை சந்தேகப்படலை. அவயெங்க?" என்று கேட்டான்.​

"அவளை எதுக்கு தேடறிங்க. சந்தேகப்பட்டாலும் படலைனாலும் அந்த இடத்துல வாயை மூடி நின்றதா அம்மா சொன்னாங்க. போதும் இனி ப்ரியா அவ வாழ்க்கையை வாழ்வா தொல்லைப் பண்ணாதிங்க. அவயொன்னும் உங்களை மனசுல வச்சிட்டு திரியலை. பானுமதி அத்தை மருமகளேனு பேசுவாங்க. அவளும் அன்பா பழகுவா. அவ்ளோ தான்.​

இங்கிருந்து போங்க" என்று விரட்டாத குறையாக பேசினாள் யமுனா.​

இந்திரஜித் இடைப்புகுந்து, "ஓகே கிளம்பறோம். ப்ரியதர்ஷினி எங்கனு சொல்லுங்க. மீதியை அவளிடம் பேசிக்கறோம்" என்று நகராமல் நின்றான்.​

"எதுக்கு ப்ரியாவை தேடறிங்க தம்பி. அவ தான் சென்னையில வேலைனு போயிட்டாளே." என்று இந்திரஜித் பேசியதை கேட்டபடி வந்தார் விசாலாட்சி.​

"சென்னையில எங்க பெரிம்மா?" என்று கேட்க, "ஏதோ துணிகடையில டிசைனரா வேலை பார்க்கறதா சொன்னாளே. அம்மாடி மருமகளே சென்னையில எந்த ஏரியா?" என்று உட்கார முடியாமல் பேச கடினப்பட்டார்.​

"நீங்க ஏன் அத்தை கஷ்டப்படறிங்க? நான் சொல்லிக்கறேன். நீங்க போய் தூங்குங்க. சந்தோஷுக்கு டைம் ஆச்சாம் கிளம்பறானாம்" என்று கூறினாள். இங்கு மாமியாரிடம் டிசைனராக உள்ளதாக பொய் கூறியிருந்தாள் யமுனா.​

சேல்ஸ் கேர்ள் என்றால் அதற்கும் எட்டுக்கட்டிடலாம்.​

சாமர்த்தியமாக கிளம்ப கூறியவளை எண்ணி வறட்டு சிரிப்பை உதிர்த்து எழுந்தான் சந்தோஷ்.​

வாசல்வரை வழியனுப்ப மாமியார் உரைத்திடவும் முந்தானையை இடையில் முடித்து வந்தாள்.​

"இங்க பாருங்க அவ சென்னையில இருக்கா. அவ்ளோ தான். அவளை நிம்மதியா இருக்க விடுங்க. உங்களால தான் நம்பரை கூட மாத்திட்டா. இனி வீட்டுக்கு வராதிங்க." என்று கையெடுத்து கும்பிட்டாள் யமுனா.​

சந்தோஷோ நண்பனை காண "போலாம் சந்தோஷ்" என்று இந்திரஜித் பைக்கை உயிர்பித்தான்.​

இருசக்கர வாகனத்தில் சென்றபடி "சென்னையில எங்கனு தேடறது டா?" என்று சந்தோஷ் கேட்டான்.​

"அந்த ஆன்ட்டி சென்னையில துணிகடையில டிசைனர் சொன்னாங்க. சோ ஏதோ பொட்டிக் கடையில இருக்கலாம். மோஸ்டா பேமஸான துணிகடையா இருக்கற ஏரியால தேடலாம்." என்று தெம்பானான்.​

"என்னவோ நீ சொல்லற? கடல்ல குண்டூசி தேடுற நிலைமையா இருக்கும்." என்று சந்தோஷ் கூறினான்.​

அன்று இரவே திருச்சியிலிருந்து ஏசி பஸ்ஸில் சென்னைக்கு புறப்பட படிக்கட்டில் ஏறினான் இந்திரஜித்.​

சந்தோஷ் அப்பொழுது கூட ''முடிவே பண்ணிட்டியா?" என்ற வார்த்தையை நண்பனிடம் கேட்டான்.​

இந்திரஜித் அதற்கு ஆமென்பதாக தலையாட்டி முடித்தான்.​

"எதுக்கும் விலாசினியிடம் கேட்டுட்டேயிரு. ஏதாவது சொன்னா தகவல் கொடு. அப்பறம் யமுனா அவங்களிடமும் கேட்டுப்பாரு.​

விலாசினி வீட்ல உங்கம்மா தான் நகையை கொடுத்து வச்சதா சொன்னதால விலாசினி எப்பவாது போன் பேசினா ப்ரியா எடுக்க வாய்ப்புண்டு." என்று முதுகுப்பையை தோளில் சுமந்து நண்பனை அணைத்து விடுவித்து பேருந்துக்குள் நடந்து ஜன்னல் இருக்கையில் அமர்ந்தான்.​

சந்தோஷ் ஜன்னல் பக்கம் வந்து "போனதும் போன் பண்ணுடா" என்றான்.​

இந்திரஜித் சரியென்று கூற கொஞ்ச நேரத்தில் பேருந்து புறப்பட்டது. ஹெட்செட்டில் மெல்லிசை பாடலை கேட்டபடி இந்திரஜித் சென்னைக்கு பயணத்தை ஆரம்பித்தான்.​

சென்னை புதுயிடமல்ல, பிறந்து வளர்ந்து, பள்ளிப்படிப்பு, கல்லூரி இதோ தற்போது உத்தியோகம் முதல் எல்லாம் அங்கு தான். அதனால் சென்னை என்றதும் ஒரு திருப்தி.​

என்ன தான் சென்னை என்று அறிந்தப்பின் ஒரு மகிழ்ச்சி கிட்டினாலும், சந்தோஷ் கூறியது போல கடலில் குண்டூசி தேடுவதற்கு சமம்.​

எப்படியும் தேடி பார்த்திடும் முடிவில் மெய் தேடல் ஆரம்பமானது.​

யாரை தேடி வருகின்றானோ அவளோ, கால்கடுக்க காலையிலிருந்து பணியில் நின்றபடி, ஆடை வாங்க வருபவர்களுக்கு உடையை எடுத்து காட்டி சோர்ந்து போனாள். சேல்ஸ் கேர்ள் பணியில் காலையிலிருந்து நிற்பது பழக்கமில்லாது அவதியுற்றாள்.​

மனமோ வேறு பணிக்கு தேடுதலை தொடுத்து அலைப்பேசியில் நோண்டிக் கொண்டிருந்தாள்.​

சாப்பாட்டை கூட மறந்தவளாக படுத்திருந்தாள். போனை பார்த்தபடி இருக்க, யமுனா அழைத்தாள்.​

"சொல்லுக்கா எப்படியிருக்க?" என்று கேட்டு எழுந்தமர்ந்தாள்.​

"சாப்பிட்டியா?" என்றதும் அங்கிருந்த பார்சல் தோசையை பிரித்தாள். மெஸ் உணவு அந்தளவு பிடிக்கவில்லை. வெளியே வாங்கிவந்திருந்தாள்​

"சாப்பிட்டுட்டு இருக்கேன்" என்று கூறவும், யமுனா தங்கையிடம் "உன்னை தேடி சந்தோஷ் வந்தான்." என்றுரைத்தாள்.​

"ம்ம் நேத்தே நீ சொன்ன சந்தோஷ் சந்தியா வந்ததை" என்று தோசையை பிய்த்து சிறு சிறு விள்ளையாக விழுங்கினாள்.​

யமுனாவோ "அது நம்ம வீட்டுக்கு அன்னைக்கு வந்தாங்க. இன்னிக்கு என் வீட்டுக்கு சந்தோஷும் அவன் பிரெண்ட் சேர்ந்து வந்தாங்க" என்றதும் ப்ரியதர்ஷினி வாயருகே கொண்டு போன உணவை நிறுத்தினாள்.​

"இந்திரஜித்? கல்யாண வீட்ல வந்திருந்தாரே அவரா?" என்று கேட்டாள் ப்ரியா.​

"ம்ம் அவரே தான்" என்றதும் ப்ரியா கைகள் உணவை துழாவியது.​

"என் மாமியார் சென்னையில இருப்பதா சொல்லிட்டாங்க. பட் தி.நகர்னு தெரியாது. நீ சேல்ஸ் கேர்ள் என்பதை கூட சொல்லலை. டிரஸ் டிசைனர் என்று சொல்லிட்டு இருந்தாங்க." என்றதும் விரக்தியாக சிரித்தாள் ப்ரியா.​

கொஞ்ச காலம் டெய்லரிங் கோர்ஸில் டிசைனிங் கற்றுக்கொண்டது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் அதெல்லாம் எந்த மூலைக்கு? என்னவோ எங்கே இருக்கேன்னு சொல்லலையே அது போதும் என்பதாக பெருமூச்சு வெளியிட்டாள்.​

"நீ சாப்பிட்டியா?" என்று அக்காவை கேட்டாள்.​

"உங்க மாமா இன்னமும் வரலை. அம்மாவிடம் பேசிட்டு வெயிட்டு பண்ணுவேன். மாமா வந்திடுவார். பிறகு தான் சாப்பிடணும்" என்றாள்.​

"ஏன் வாயும் வயிறுமா இருக்க சீக்கிரமா சாப்பிட என்னவாம்?" என்று தங்கை என்பதை தாண்டி அக்காவை கடிந்தாள்.​

"எங்க சாப்பிடலாம்னு உட்கார்ந்தா மாமனார் ஏதாவது பேசிடறார். இந்த நகையை எவன் கண்டுபிடிச்சான். முன்கூட்டியே எங்களால இவ்ளோ தான் போடமுடியும்னு சொல்லி கல்யாணம் பண்ணிருக்கலாம். எப்பபாரு இப்படியே ஏமாத்திட்டாங்களேனு ராகம் பாடறார். அவர் இருக்கறப்ப சாப்பாட்டுல கை வைக்க முடியுதா? அதானால உங்க மாமா வந்தப்பிறகு லேட்டா என்றாலும் சேர்ந்து சாப்பிடறேன். அதுக்குள்ள என் மாமனார் தூங்க போயிடுவார்" என்று மனக்குமறலை கொட்டினாள்.​

"இரண்டு நாள்ல அம்மா நகையை கொண்டாந்துடும். சும்மா வீட்ல ஓரமா இருந்துட்டு வாயில்லாத பூச்சியா ஆடாத. கல்யாணம் பண்ணின நகையை போட்டு வீட்டுக்கு வந்தது, முழுதா அந்த வீட்டு பொண்ணு என்ற உரிமையோட தான்.​

உரிமையா எடுத்து போட்டு சாப்பிடு. உன் புருஷன் வெளியே போய் வேலை பார்த்தா, நீ வீட்லயே வேலை பார்க்கற. சும்மாவா பாத்திரம் தேய்த்து, துணி துவைச்சி, வீட்டை சுத்தமா வச்சிட்டு, பெரியவங்களுக்கு ஒத்தாசையா கூடயிருக்கறது, அதோட வயிற்றுல பிள்ளையை சுமக்குற. வீட்டுக்கு வாரிசு தர்ற மருமகளை தாங்கணும். சும்மாவா குழந்தை வானத்துலயிருந்து குதிக்கும். உன் உசுரும் மறுபிறப்பு. அதனால சங்கடபடாம வாழு, லேட் நைட்ல சாப்பிடாத" என்று அதட்டினாள்.​

"சரிடி. நீ உடலை கவனிச்சுக்கோ. அந்த சந்தோஷ் அவன் பிரெண்ட் வந்ததை அம்மாவிடம் சொல்லவா?" என்று கேட்டாள்.​

"வேண்டாம். அம்மாவுக்கு தெரிந்தா புலம்பும். சந்தோஷ் சந்தியா வந்ததையே என்னிடம் சொல்லாம தவிர்க்கறாங்க.​

இப்ப சந்தோஷ் இந்திரஜித் அங்க வந்ததை தெரியப்படுத்த வேண்டாம். நீ உன் வேலையை பாரு. உன் மாமியாரா அம்மாவிடம் சொல்லிட்டா ஆமா அம்மா மறந்துட்டேன்னு சொல்லிடு." என்று கூறினாள்.​

"யமுனா" என்ற ராஜா குரல் கொடுக்க, "மாமா வந்துட்டார் போய் என்னனு பாரு" என்று அணைத்து கொண்டாள்.​

சாப்பிட்ட கை காய்ந்திருக்க கை அலம்பினாள் ப்ரியதர்ஷினி..​

சந்தோஷ் ஏன் என்னை தேடறான். அவன் என்னை தேட அவசியமேயில்லையே. இந்த இந்திரஜித் எதுக்கு ஊருக்கு போகாம இன்னமும் சந்தோஷ் கூட சுத்தறார்? இந்நேரம் கூட அத்தை என்னை களவானியா தானே நினைச்சிட்டு இருப்பாங்க?' என்ற எண்ணம் தோன்ற, தலையணையை கட்டிக்கொண்டாள். பொசுக்கென்ற கண்ணீர் தலையணையை ஈரமாக்கியது.​

அன்று மண்டபத்தில் சந்தோஷ் வாய் திறக்கவில்லை. ஆனால் இந்திரஜித் எனக்காக வந்து பேசினான். 'அவ திருடியிருக்க மாட்டா' என்றானே, அவனுக்கு எப்படி என் மீது நல்லபிப்ராயம் வந்தது? அத்தை என்னோட குணம் தெரிந்தவங்க. அவங்களே பழியை சுமத்த, இந்தர் மட்டும் என் மேல பழியை சுமத்தலை' என்று எண்ணியவளுக்​

கு சிறு நிம்மதி வரவும் அப்படியே துயில் கொண்டாள். அது வேலையின் அலுப்பில் தானாக கிடைத்த வரம்.​

-தொடரும்.​

NNK-79​

-நீயென் காதலாயிரு.​

Comments below link la solunga friends​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-5​

கோடம்பாக்கத்திலிருக்கும் தன் வீட்டு கேட்டை திறக்க, இந்திரஜித் தந்தை மோகன் வெளி பால்கனியில் பேப்பர் படித்து கொண்டிருந்தவர், பேப்பரை சற்று இறக்கி மைந்தனை கண்டார்.​

"சித்ரா பையன் வந்துட்டான்." என்று குரல் கொடுத்தார்.​

''மணி ஐந்து ஆகுது. இப்பவே ஏன் அப்பா எழுந்துக்கறிங்க?" என்று காலை இறுக்கி பிடித்த ஷூவை கழற்றினான்.​

"வாக்கிங் போகணும்னு நியூஇயருக்கு எடுத்த சபதம் என்னாகறது? இப்ப எழுந்தா தானே மெதுவா ரவுண்ட் அடிச்சி நடக்கலாம்" என்று கூறினார் தந்தை மோகன்.​

அதற்குள் சித்ரா இருவருக்கும் காபியை எடுத்து வந்து நீட்டினார்.​

பிரயாணம் செய்து வந்த களைப்பு, உடனடியாக அந்த காபியை வாங்கிக்கொண்டு பருகினான்.​

இரண்டு மடக்கு குடித்து முடித்து, "அம்மா, அப்பா வாக்கிங் போறாருனு நினைச்சியா? நீ கொடுத்த காபியை குடிச்சிட்டு நம்ம பிரௌவுனியை இழுத்துட்டு காலையில வாக்கிங் வர்ற லேடிஸை சைட் அடிக்கிறார்.​

அதோட கொஞ்ச தூரம் தான் நடக்கறார். பிறகு அந்த பார்க் இருக்குல அங்க உட்கார்ந்து ஜிம்ல பழகின ஆன்ட்டி கூட கடலை வறுக்கறார்." என்று தன் பங்கிற்கு வந்ததும் வத்தி வைத்து தன் கடமை முடிந்ததாக வீட்டிற்குள் சென்றான்.​

"டேய் டேய் வந்ததும் பொய் பேசறான். இவனை திருச்சிலயே இருந்துக்க சொல்லிருக்கணும்.​

நான் சின்ன பொண்ணை சைட் அடிப்பேனா சித்ரா? இந்த வயசுல செய்யற காரியமா? வாக்கிங் வர்றவங்க எல்லாமே உன் வயசு பொம்பளைங்கம்மா. சும்மா கிராஸ் பண்ணறச்ச சிரிப்பாங்க. நான் பதிலுக்கு ஒரு மரியாதைக்கு சிரிப்பேன். அதை தப்பா சொல்லறான்." என்று கூறவும் சித்ராவோ காலியான காபி கோப்பையை பிடுங்கினார்.​

"இது தெரியாம தான் காபி போட்டு வாக்கிங் அனுப்பறேன். இனி வாக்கிங் ஜாக்கிங் எங்கயும் போகாதிங்க" என்று மிரட்டிவிட்டு சித்ரா கிச்சனுக்குள் நுழைந்தார்.​

"சித்ரா சித்ரா அவன் சொல்லறதை நம்பறியே." என்று மோகன் பின்னாலே சென்றார்.​

சித்ரா-மோகன் இருவருமே மனம் ஒன்றிய ஆதர்ஷ தம்பதிகள். அதனால் நல்ல புரிதலும், சண்டையும் வராதென்ற அர்த்தமில்லை.​

நொடிக்கொரு சண்டை உண்டு, இருவரும் புரியாமல் சண்டையிடுவார்கள். ஆனால் முடிவில் புரிந்துக்கொண்ட அன்போடு விட்டுக்கொடுப்பார்கள்.​

சண்டையை பெரிதாக ஊதி தள்ள மாட்டார்கள். சண்டை முடிந்து அரைமணி நேரத்திற்குள் சுமூகமான பேச்சு வார்த்தையில் தங்களை மாற்றிப்பார்கள்.​

இந்திரஜித் கொளுத்தி போட்டதால் சித்ராவை சமாதானம் செய்து, மோகன் மைந்தன் அறைக்கு படையெடுத்தார்.​

இந்திரஜித் தலையை துவட்டியபடி வந்தவன் தந்தையை கண்டு விளுக்கென்று நகைத்தான்.​

"ஏன்டா போற போக்குல கொளுத்தி போடற, என்னைக்காவது வெடி வெடிச்சா அப்ப தெரியும்" என்று கடிந்தார்.​

"எங்க வெடிக்கவே மாட்டேங்குது" என்றவன் பனியன் அணிய துவங்கினான்.​

"வேலைக்கு கிளம்பறியா? அதுவும் இவ்ளோ குயிக்கா? ரெஸ்ட் எடுக்கலையாடா?" என்றார் மோகன்.​

"ஏகப்பட்ட வேலையிருக்குப்பா." என்று சட்டை பட்டனை போட்டான்.​

"மணி ஆறரை தானடா ஆகுது" என்றதும், "ம்ம்." என்றவன் தலை வாறியவன், தந்தையிடம் திரும்பி, "ஏன்ப்பா? அம்மாவும் நீங்களும் ரிலேஷன் தானே?" என்றான் இந்திரஜித்.​

"என்னடா இத்தனை காலத்துக்கு பிறகு கேட்கற?" என்று மீசையை தடவியபடி கண்ணாடியில் மகனுக்கு போட்டியாக அழகை கூட்டினார்.​

"அப்பா நீங்களும் அம்மாவும் சின்ன வயசுலயிருந்தப்ப, அம்மா மேல நீங்க திருட்டு பழி போட்டிருந்தா அம்மா உங்களை கல்யாணம் பண்ணிருப்பாங்க?" என்று கேட்டவனை விசித்திரமாக மேலிருந்து கீழாக அலசினார்.​

"ஏன்டா ஏன்...? நான் ஏன் அவ மேல திருட்டு பழி போடப்போறேன்? உனக்கென்ன எங்களை பிரிக்கற மாதிரியே கேள்வி கேட்கற?" என்று புரியாது கேட்டார்.​

"சந்தோஷ் வீட்டு கல்யாணத்துல என்னடா நடந்துச்சு?" என்று சித்ரா முறுகலாய் நாலு நெய் தோசையை சுட்டு, மகனுக்கு தட்டில் இரண்டு வகை சட்டினியை வைத்து அறைக்கு வந்தார்.​

"வாவ் அம்மா எப்படி?" என்றான்.​

"தோசையா? என் கேள்வியா?" என்று புருவம் உயர்த்தி கேட்டார் சித்ரா.​

"இரண்டும் அம்மா? சட்டுனு தோசை சுட்டு எனக்காக கொண்டு வந்து என் பசியை தீர்க்கறிங்க. அப்படியே என் கேள்வி எங்கிருந்து வந்ததுனு கரெக்டா யோசித்து பாயிண்ட்டை பிடிக்கறிங்க. பயங்கர ஜீனியஸ் அம்மா நீங்க.​

இவ்ளோ அறிவை வச்சிட்டு அப்பாவை எப்படி தான் மேரேஜ் பண்ணினிங்களோ?" என்று வாறினான்.​

"எங்களை ஓட்டறது விடுடா. சந்தோஷ் தங்கச்சி கல்யாணம் நல்லபடியா முடிந்ததா? என்ன திருட்டு பழி? சந்திரா மேல மாப்பிள்ளை வீட்ல திருட்டு பழி போட்டாங்களா?" என்றார் சித்ரா.​

"இல்லைம்மா, இது வேற" என்று சந்தோஷின் அத்தை மகள் ப்ரியதர்ஷினியை பற்றி ஆதியும் அந்தமுமாய் அவன் கண்டதிலிருந்து விவரித்தான்.​

"டேய் சந்தோஷ் அத்தை பொண்ணை நீ சைட் அடிச்சிருக்கியா? அவன் உன்னை திட்டலையாடா?" என்று மோகன் பதறினார். அதற்கு சற்றும் டென்ஷனாகாத சித்ரா, "இப்ப சந்தோஷிற்கு இல்லாத கவலை அந்த பொண்ணு ப்ரியதர்ஷினி மேல உனக்கென்ன ஆர்வம்?" என்று சித்ரா கேட்டதும் இந்திரஜித் மடமடவென தோசையை விழுங்கியவன் மெதுவாக மெல்ல ஆரம்பித்தான்.​

சித்ரா மகனுக்கு ஊட்டியபடி, "மென்னுட்டே ஆன்சர் பண்ணு" என்று ஊக்கினார்.​

"லவ் அட் பஸ்ட் சைட்" என்றவன் நீரை பருகினான்.​

"இந்த விஷயம் சந்தோஷுக்கு தெரியுமா?" என்றார் சித்ரா. காதல் வந்ததால் நட்பு பாதிக்கப் போகின்றதென்ற கவலையில் கேட்டார்.​

இந்திரஜித்தோ "அவன் ப்ரியதர்ஷினியை விரும்பலைம்மா. அதனால என் விருப்பத்தை மதிக்கறான்.​

ஆனா இந்த இடைப்பட்ட திருட்டு பழியில் தர்ஷினி மனசு ஒடிஞ்சி போய் சென்னைக்கு வேலை தேடி போயிட்டா. ஐ மீன் இங்க வந்திருக்கா" என்றான் வாயெல்லாம் பல்லாக.​

"இப்ப அவளை பார்க்க தான் காலையிலயே அரக்கபறக்க கிளம்பறியா?" என்று மோகன் கேட்டார்.​

"அவ சென்னையில இருக்கா, ஆனா எங்கயிருக்கானு தெரியாது." மீண்டும் நீரை பருகி முடித்து அன்னையின் சேலையில் வாயை துடைத்தான்.​

"நிச்சயம் அந்த பொண்ணு டிரஸ் டிசைனரான வேலையை பார்க்க மாட்டா. வேற வேலையில இருக்கணும். என்னதான் டிரஸ் டிசைனிங்ல பெயர் வாங்கின ஸ்டூடெண்டாவே இருந்தாலும் இங்க சென்னையில படிச்சதுக்கு ஏற்ற வேலையா உடனே அமையாதுடா கண்ணா." என்று நிதர்சனத்தை உரைத்தார் சித்ரா.​

"அம்மா வேலையை விடுங்க. அவ திருடியிருப்பானு அவங்க அத்தை பழிசுமத்தியிருக்காங்க. சின்னதுல இருந்து பார்த்து வளர்ந்தபொண்ணு மேலயே பழிசுமத்தியிருக்காங்க.​

ஆனா நீங்க அதை பத்தி எதுவும் பேசலை. உங்களுக்கு அவ மேல டவுட் வரலையா?" என்று கேட்டான்.​

"என் பையன் அழகை மட்டும் பார்த்து விரும்ப மாட்டான். அதை தாண்டி அவளிடம் நல்ல குணத்தையும் தேடியிருப்பான். அப்படியிருக்க பொண்ணு நல்லப்பொண்ணுனு யார் வந்து சொல்லணும்? என் பையனுக்கு தெரியாதா?" என்று தாடைபிடித்து கொஞ்சினார். அதோட "அவங்க அத்தை சின்னதுலயிருந்து வளர்த்து பழிசுமத்திட்டாங்கன்னா அதுக்கு காரணம்... அதுக்கு காரணம்" என்று மகனின் பிபியை ஏற்றினார்.​

"அம்மா ப்ளீஸ். என்ன காரணமாயிருக்கும்" என்று கேட்டான்.​

"என்ன காரணம்னா? அவ சந்தோஷ் அம்மாவுக்கு மருமகளா போகக்கூடாதுனு கடவுளோட எண்ணம்.​

கடவுளுக்கு இந்திரஜித்தோட அம்மாவான சித்ராவுக்கு தான் மருமகளா வரணும்னு ஆசையாம்." என்று கூறவும் இந்திரஜித் அன்னை கன்னம் பற்றினான்.​

"எஸ்... அம்மா எவ்ளோ ஈஸியா சொல்லிட்ட. இதான் இதே தான். எனக்குள்ள ஏன் அவங்க தப்பா எடுத்துக்கிட்டாங்கன்னு ஒரே குழப்பம்.​

இந்நேரம் இந்த மிஸ்டேக் நடக்கலைனா அவங்க நிச்சயமா ப்ரியதர்ஷினியை எனக்கு கட்டிக்கொடுக்க யோசிக்கப்பாங்க. இப்ப மிஸ்டேக் எதுல ஆரம்பிச்சதுனு தெரிந்தா கூட இனி ப்ரியாதர்ஷினி சந்தோஷோட மேரேஜிக்கு ஓகே சொல்லமாட்டா. யாகூகூகூ" என்று கத்தி அன்னையை தட்டாமாலையாக சுற்றினான்.​

"டேய் என் பொண்டாட்டியை விடுடா" என்று உரிமைப் போராட்டம் செய்தார் மோகன்.‌​

‌‌​

இந்திரஜித்தோ "என் பொண்டாட்டி வரட்டும் நிறுத்தாம சுத்தி வோர்ல்ட் ரெக்கார்ட் பண்ணறேன்" என்று கனவுகளோடு பேசினான்.​

சித்ரா மோகன் இருவரும் மகனை ஆச்சரியமாக பார்த்தனர்.​

"ஓஹ்ஓஹ் சாரிம்மா. சாரிப்பா" என்றான் தன் ஆர்ப்பரிப்பை அடக்கியப்படி.​

"அவ்ளோ பிடிச்சிருக்காடா?" என்று மோகன் கேட்கவும் சித்ராவோ "அவன் முகமே பிரகாசமா இருக்கு இதுல தனியா கேள்வி கேட்கறிங்க. ப்ரியா போட்டோ இருக்காடா?" என்று கேட்டதும் போனை துழாவினான்.​

"சந்தன கலர் சேலையில் இருக்காளே அவ தான், எப்படியிருக்கா?" என்று காட்டினான்.​

"டேய் அம்சமாயிருக்காடா. சீக்கிரம் தேடி கண்டுபிடி" என்று அன்னை கூறவும் லேசான முறுவல் 'அவளை எங்கே தேடுவதென்ற மலைப்பு மீண்டும் எட்டிப் பார்த்தது.​

"என்னடா எப்படி கண்டுபிடிக்கறதுன்னு யோசிக்கறியா?" என்று கேட்டதும் ஆமென்றான்.​

"ஏன்டா அவ அக்கா வீட்டுக்கு போயிருக்க, அம்மாவை பார்த்திருக்க இன்னிக்கு கிடைக்கலைனாலும் என்னைக்காவது நீ விரும்பறதை நாங்களே வந்து சொல்லி பொண்ணு கேட்போம்டா. எதையும் யோசிக்காத. வேலைக்கு கிளம்பு" என்று தெம்பூட்டி சென்றார்.​

மணி எட்டாகியிருந்தது அன்னை பேசிய மொழியில் ஆனந்தமாய் வேலைக்கு இருசக்கர வாகனத்தை எடுத்து கிளம்பினான்.​

மகன் சென்றதும் சித்ராவும் மோகனும் ஒருவரை ஒருவர் பார்த்து "சீக்கிரம் நல்லது நடக்கணும்ங்க. ஒத்த புள்ளையா போயிட்டான். அவனுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்ந்தா தானே நமக்கும் திருப்தி." என்று சித்ரா பேச, "எப்பவும் மீனாட்சி ராஜ்ஜியம் தான். சொக்கநாதன் தலையாட்டிட்டு இருப்பேனாக்கும். எப்ப கல்யாணம் வச்சாலும் வகை வகையா குழந்தையை பெத்து கொடுக்க சொல்லு. கடைக்கு கூட்டிட்டு போய் நான் பேரன் பேத்தியை கொஞ்சிக்கறேன்." என்று கூறி மகனை போலவே மகனின் திருமணத்தை நடத்த பல கனவுகளோடு இருந்தார்கள்.​

இங்கு தன் வரவை வைத்து ஒரு குடும்பமே மகிழும் என்பதை அறியாமல் மெஸ்ஸில் உணவு பிடிக்காமல் வேறு வழியின்றி தன் வயிற்றை நிரப்பினாள் ப்ரியதர்ஷினி.​

போனை எடுத்து வேலைக்கு போட்ட இடத்தில் இன்டர்வியு வரச்சொன்னார்களா என்று பார்த்தாள். எதுவும் உவகை தரும் மெயில் வரவில்லை.​

சாப்பிட்டதும் அரக்கபறக்க கடைக்கு வந்தாள்.​

'அன்வர் ரெடிமேட் ஷோரூம்' கடைக்குள் நுழைந்தாள். அப்பொழுது தான் கடையை திறந்திருக்க, ஒவ்வொரு பொம்மையாக வெளியே எடுத்து வைக்க உதவினாள்.​

ஆணியில் மாட்டிய உடைகளை விலைபட்டியலோடு வெளியே மாட்டி தூசியை தட்டினாள். கடையின் உள்ள அட்டைப்பெட்டியை எடுத்து ஓரமாக வைத்து நடைபாதையை பெருக்கினாள்.​

பொலிவான முகம் சுறுசுறுப்பாய் வேலை செய்ய, எந்த ஓனருக்கு தான் பணி செய்பவளை பிடிக்காது? காலையிலயே சூடான தேனீர் வரவும் அதனை வாங்கி ப்ரியதர்ஷினி முன் நீட்டி "டீ குடிச்சிட்டு வேலையை பாரும்மா" என்று சலுகையாக கூறினார் அன்வர் பாய்.​

மனம் நெகிழ்ந்து போனது. இங்கு வந்த இந்த இடைப்பட்ட நாளில், அன்னை காட்டும் கரிசனம் போல நிகழ்வது இதுவே முதல்முறை.​

ஆனந்தப்பெருக்கோடு வாங்கி நன்றியுரைத்தாள்.​

காபி கப்பை வெளியே போடும் நேரம், கோடம்பாக்கதுதிலிருந்து தி.நகர் வழியே இந்திரஜித் வண்டி ராக்கெட் வேகத்தில் சென்றது.​

இந்திரஜித் சிறு கடையில் வேலை பார்க்கும் பெண்ணை சரியாக கவனிக்கவில்லை. அதே போல இருக்கும் துன்பத்திற்கு மத்தியில் போவோர் வருவோரை ப்ரியாவும் வேடிக்கை பார்க்கவில்லை. கண்ணாம்பூச்சி ஆட்டத்தை நடத்திவிட்டு இறைவனவன் அவனும் வேடிக்கை காண முன்னிருக்கையை பிடித்துக்கொண்டார்.​

இனி இவர்களை சந்திக்க வைக்க போ​

கும் ஹிந்து வேலை செய்ய வேண்டியது இவர்களை படைத்த இறைவனே.​

-தொடரும்.​

NNK-79​

நீயென் காதலாயிரு​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-6​

இருபது நாட்களுக்கு மேலாக, இந்திரஜித் தெரிந்தவர் தெரியாதவர் என்று, டிரஸ் டிசைனரை வேலைக்கு அமர்த்தும் இடங்களில் எல்லாம் ஒரு அலசு அலசிவிட்டான்.​

அதிலும் வேலை செய்யும் இடங்களில் சென்று 'ப்ரியா' என்ற டிசைனரை இருக்க, ஓடிச்சென்று பார்த்து ஏமாந்தது எல்லாம் ஏமாற்றத்தின் உச்சம்.​

பாவம் ப்ரியா என்றால் ஆயிரத்தெட்டு பெயர்களை கொண்டவர்கள் நடமாடுவதை காலதாமதமாய் உணர்ந்து சோர்ந்துப்போனான்.​

இந்திரஜித் இதில் கூடுதலாக சந்தோஷை போனிலேயே தொந்தரவு கொடுத்திருந்தான்.​

அதன் காரணமாக சந்தோஷ் விலாசினி வீட்டிற்கு படையெடுத்து ப்ரியாவின் அலைப்பேசி எண்ணிற்கு அழைக்க வற்புறுத்தினான்.​

பழைய எண் முற்றிலும் தொடர்பில் இல்லையென்றதும், அத்தையிடமோ,​

போன் போட்டு அவளை விசாரிக்க நச்சரித்தான்.​

"ஏன் இப்படி பண்ணறிங்க? என்னாச்சு? அவ உங்களிடம் ரொம்ப க்ளோஸ் ஆச்சே. என்ன சண்டை வந்தது?" என்ற ஏகப்பட்ட கேள்விக்கு "அவளிடம் பேசிட்டு சொல்லறேன் விலாசினி அத்தையிடம் அவ எங்கயிருக்கா? என்ன போன் நம்பர் யூஸ் பண்ணறானு கேட்டு சொல்லு" என்று குடைந்தெடுத்தான்.​

எப்பொழுதும் வீட்டுக்கு வந்தால் சோபாவில் இருந்த இடத்திலிருந்து அசையாத சந்தோஷ், சில நாட்களாக போனில் மகளிடம் பேசுகின்றான். இன்று மகளை அவசரமாக கைபற்றி மாடிக்கு அழைத்து நீண்ட நேரம் கதைப்பது கற்பகத்திற்கு உவப்பானதாகயில்லை.​

கீழியிருந்து "விலாசினி விலாசினி விலாசினி" என்று ஏலமிட்டு விட்டார்.​

அவள் "வர்றேன் அம்மா" என்று கத்திவிட்டு சந்தோஷிடமே பேசிக்கொண்டிருக்க கற்பகத்திற்கு சலிப்பு மூட்ட மூட்டுவலியோடு மாடிக்கு படியேறி வந்தார்.​

"ஏன்டி கூப்பிட்டுட்டே இருக்கேன். வந்தா என்ன? இந்த துணி மணி மடிச்சி வைக்கலாம்ல? மாடில தான் பேசணுமா?" என்று நாசூக்காய் திட்டி தொலைத்தார்.​

கற்பகம் அத்தை வந்ததும் சந்தோஷிற்கு ப்ரியதர்ஷினியை பற்றி கேட்க தயக்கம் பிறக்கவும், நழுவியபடி புறப்படுவதாக கீழிறிங்கினான்.​

சந்தோஷ் சென்றதும் கற்பகம் மகளை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்.​

"ஏன்டி அத்தனை முறை கூப்பிடறேன். அவனிடம் என்ன பேச்சு?" என்று திட்ட துவங்கினார்.​

"இல்லைம்மா சந்தோஷ் ப்ரியாவை பத்தி கேட்டார். ப்ரியா நம்பர் சுவிட்ச் ஆப் என்று வருதாம்." என்று தலைசொரிந்து சொல்லி முடித்தாள்.​

"முன்ன உனக்கு நல்ல நாள் அதுவுமா மட்டும் வாழ்த்து சொல்வான்.​

வரவர ரொம்ப நேரம் கால் பண்ணி மணிக்கணக்குல பேசறிங்க,​

பொது இடத்துல பார்த்தா கூட தெரிந்தவங்கன்னு காட்டிக்காம நழுவுவான். இப்ப அப்பா இல்லாத நேரமா பார்த்து மாடிக்கு கைபிடிச்சி இழுத்துட்டு போறான்.​

எனக்கு இதெல்லாம் சரியா தோணலை விலாசினி.​

பானுமதி அண்ணியும் சிங்கமுத்து அண்ணாவும் ப்ரியதர்ஷினியை எந்தளவு தலையில தூக்கி வச்சி ஆடினாங்கன்னு தெரியும் தானே? இப்ப என்ன காரணமோ தலையிலருந்த மண்சட்டி மாதிரி தூர வீசிட்டாங்க. அவளும் மனசொடிந்து போயிருக்கா. என்ன ஏதுனு ஒன்னும் தெரியலை.​

இந்த லட்சணத்துல சந்தோஷ் வந்து இப்படி பழகறான். நாளைக்கு ஊரும் உலகமும் நாக்கு மேல பல்லை போட்டு பேசும்.​

செல்லமா மருமகளா பார்த்து வளர்த்தவளையே என்ன சொன்னாங்களோ? அவ கறிவிருந்துக்கும் மறுவீட்டு அழைப்புக்கும் வரலை.​

நீ எல்லாம் எந்த மூலைக்கு? எதுக்கும் சந்தோஷோட பார்த்து இரு. உங்கப்பாவை சொரிந்து விடாதே. அப்பறம் அந்தாளு தாம்தூம்னு குதிப்பாரு." என்று அறிவுரைக் கூற விலாசினியோ 'இப்ப என்ன செய்துட்டாங்க. இந்த அம்மா பக்கம் பக்கமா அறிவுரையை அள்ளி வீசறாங்க. சந்தோஷ் என்னை கண்டாளே ஓடியொளிவாறு. அவர் எதுக்கு என் மேல வேற தாட்ஸோட பழகப்போறார் ' என்று அன்னை பேசியதுக்கு தலையாட்டியபடி சிந்தித்தாள்.​

ஒரு மாதம் நிறைவடையும் நேரம் இந்திரஜித் சந்தோஷை துருவி விசாரிக்க, மீண்டும் விலாசினி முன் சந்தோஷ் நின்றான்.​

"விலாசினியிடம் ப்ளிஸ் அத்தை வீட்டுக்கு போய் ப்ரியாவிடம் பேசணும்னு நம்பர் மட்டும் வாங்கிட்டு வா. எவ்ளோ நேரம் உன்னை சந்திக்க வெயிட் பண்ணறேன் தெரியுமா? கொஞ்சம் உதவினா என்னவாம்" என்று உரிமையாக கடிந்தான்.​

"பச் சந்தோஷ் புரிந்துக்கோங்க அம்மா என்னவோ உங்களையும் என்னையும் சம்மந்தப்படுத்தி யாராவது பேசிடுவாங்கன்னு பயப்படறாங்க. நீங்க என்னடானா அடிக்கடி வந்து என்னிடம் ப்ரியாவை பத்தி கேட்கறிங்க.​

ஏன் இதுக்கு முன்ன என்னைக்காவது என்னிடம் இப்படி கால் கடுக்க நின்று காத்திருந்து பேசியிருக்கிங்களா? நான் எப்பவும் சைட் கேரக்டர் தானே. உதவிப்பண்ணுனு வந்து கேட்கறிங்க. என்னதான் உதவிப்பண்ணணும். அவளுக்கும் உங்களுக்கும் என்ன சண்டை? அதையும் சொல்லமாட்டிங்க. நான் என்ன உங்க இரண்டு பேருக்கும் நடுவுல தூதா இருக்கணுமா?" என்று இதுநாள் வரை பேசாதவன், தன்னிடம் பேச ஆசைப்பட்ட விலாசினிக்கு அவன் ப்ரியாவை வைத்தே பேசியதால் சலிப்படைந்தாள்.​

கையை கட்டி விலாசினியின் மூக்கு விடைக்கும் பேச்சை கேட்டவன் "உன்னிடம் தான் உரிமையா கேட்க முடியும் விலாசினி. ஏன்னா எனக்கு உன்னை தான் பிடிக்கும். ப்ரியாவிடம் இருந்தளவு உன்கூட நான் பேசியதில்லை. பேசாம இருக்கறதால உன்னை காதலிக்கலைனும், அவளிடம் ஓயாம பேசியதால அவளை காதலிக்கறேன்னும் அர்த்தமில்லை. நான் உன்னை விரும்பறேன். அவ நட்பை மதிக்கறேன். ரொம்ப நாளா இதை சொல்லணும்னு இருந்தேன். உன்னை மாதிரியே எனக்கும் தயக்கமிருந்தது. இன்னிக்கு நீ பேசியதுல அது உடைஞ்சிடுச்சு. காதலுக்கு தான் தூது போகணும்னு இல்லை‌. நட்புக்கும் தூது போகலாம்" என்று கூறிவிட்டு அவள் ஸ்தம்பித்து நின்ற மௌன கோலத்தை கலைக்காமல் அவ்விடம் விட்டு பைக்கை உதைத்து கிளம்பிவிட்டான்.​

விலாசினிக்கோ 'நான் இப்படி பண்ணிருக்க கூடாது. ப்ரியாவை சந்தோஷ் விரும்பாதப்போது நான் இப்படி பண்ணிருக்கவே கூடாது.​

சந்தோஷ் என்னை விரும்பறார் என்னை... ஆஹ் என்னை தான் விரும்பறார்' என்று அவள் மனம் மெதுமெதுவாய் அந்த ஆனந்தத்தை உள்வாங்கி மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் சமயம் சந்தோஷ் இருசக்கரவாகனத்தில் பறந்துவிட்டதை தாமதமாக புத்திக்கு தெரிந்தது.​

இன்னிக்கு எப்படியாவது சித்தி வீட்டுக்கு போய் ப்ரியா எங்கன்னு கேட்டு பார்க்கணும்.​

ஒரு வேளை இவர் என்னை விரும்பறதா சொன்னதும் ப்ரியாவுக்கு கோபமாகி இவரிடம் பேசாம ஓடிட்டாளா? என்ற எண்ணம் தோன்றவும் ப்ரியதர்ஷினியை காண வேண்டும் என்ற உந்துதல் மனதை ஆக்கிரமித்தது.​

நேராக வீட்டிற்கு சென்று அன்னையிடம் சித்தி வீட்டுக்கு போக வேண்டி உள்ளது ப்ரியாவிடம் தன் கல்லூரி புத்தகம் ஒன்று கொடுத்திருப்பதாக கூறினாள்.​

கற்பகமோ முதலில் போக வேண்டாமென்று முடிவெடுக்க, கவிதா என்றாவது ஏன் விருந்துக்கு வரலை என்று கேட்டார்களா? என்று நொடித்து கொள்வாரோயென மகளோடு புறப்பட்டார்.​

ஒரு பக்கம் சந்தோஷ் காதலை உரைத்திருக்க, அதனை மனதிற்குள் எடுத்து செல்லாமல் ப்ரியதர்ஷினிக்கும் சந்தோஷிற்கும் சண்டையென்ன அறிந்தப்பின் எந்த விஷயமானாலும் மனதிற்குள் எடுத்து செல்வோமென முடிவுடன் இருந்தாள் விலாசினி.​

சந்தோஷிற்கு ஊரிலேயே வேலை. அதனால் போனில் இந்திரஜித்திடம் ''இன்னிக்கு ப்ரியதர்ஷினியை பத்தி பேசறப்ப விலாசினியிடம் என் காதலை சொல்லிட்டேன் இந்தர். ஆனா அவ கண்ணுல சந்தோஷம் பொங்கினாலும் அடுத்த செகண்ட் மறைச்சிட்டா.​

என்னவோ நானும் அங்க நிற்காம வந்துட்டேன். இப்ப விலாசினி என்ன மைண்ட் செட்ல இருக்கானு தெரியலை. இதுல ப்ரியாவை பத்தி அத்தையிடம் கேட்பானு உறுதியா சொல்ல முடியலைடா.​

இந்த லட்சணத்துல நீ அவளை விரும்பறதை சொன்னா ப்ரியா அக்சப்ட் பண்ணுவாளா? டவுட் தானடா. அதோட உங்க வீட்ல இந்த நகை விஷயத்தை எப்படி சொல்வ?" என்று எதிர்மறையான பதிலாக கூறினான் சந்தோஷ்.​

அனைத்தும் கேட்ட இந்தரோ, "சந்தோஷ் எதுக்கு இப்படி எதிர்மறையா பேசற? எங்கப்பா அம்மாவிடம் தர்ஷினியை பத்தி க்ளியரா பேசிட்டேன். அவங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு. அவங்களுக்கு நான் விரும்பற விஷயமும் தெரியும். என் தேர்வு என்னைக்கும் தவறானதா இருக்காதுனு எங்கம்மா நம்பறாங்க.​

உன் லவ்வர் விலாசினி தர்ஷினியோட அம்மாவிடம் அவ எங்கயிருக்க என்ன பண்ணறா எதுனாலும் சொல்லாட்டி பரவாயில்லை. எனக்கானவள் ப்ரியதர்ஷினினு நான் நம்பறேன்.​

ப்ரியதர்ஷினி என் காதலை உடனே ஓகே சொல்லமாட்டா. அதுவும் உன் பிரெண்ட் என்றதால என்னை அலைய வைப்பா. அக்சப்ட் பண்ணற வரை படுத்தி எடுப்பா.​

எதுனாலும் முடிவுல தர்ஷினி பாஸிடிவ் பதில் தருவா. என்ன இந்த பிராஸஸ் எல்லாம் நடக்க நேரமெடுக்குது. அதான் கவலையாயிருக்கு. மத்தபடி இந்த நகை மேட்டர் பத்தி எனக்கு எந்த ஒபீனியனும் இல்லை.​

இந்த நகையை யாரோ வேண்டுமென்றே ப்ரியதர்ஷினி சூட்கேஸ்ல வச்சிருக்காங்க. அது யாருனு ஏதாவது யோசித்து பாரு. ப்ரியதர்ஷினியை பிடிக்காதவங்க உங்க வீட்ல யாராவது இருக்காங்களா? உங்க கற்பகம் அத்தை முதல் விலாசினி வரை ப்ரியாவிடம் பேசறப்ப எல்லாம் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டாங்க." என்றுரைக்க, ''அத்தையா? விலாசினியா'' என்று சந்தோஷ் ஒருபக்கம் அதிர்ச்சியாக உச்சரித்தான்.​

"நான் யார் மேலயும் கன்பார்ம் பண்ணி பழியை போடலைடா அதிருப்தியா இருந்தது போல தெரிந்தது. அவ்ளோ தான்.​

பழியை களைந்துட்டா ப்ரியதர்ஷினி கொஞ்சம் பெட்டரா இருப்பா. எதுக்கும் யார் அவ சூட்கேஸ்ல போட்டதுனு யோசிடா." என்று இந்திரஜித் கூறவும் சந்தோஷிற்கு இந்த சந்தேகம் சிலர் மீது திரும்பியது.​

இந்திரஜித் போனை அணைத்து விட்டு, "தர்ஷினி எங்கடி போன?" என்று உச்சஸ்தாதியில் அந்த தெருவே திரும்பி பார்க்க கத்தினான். சிலர் திரும்பி பார்த்து நடையை காட்டினார்கள். அதெல்லாம் இந்திரஜித் கண்டுக்கவேயில்லை.​

அப்பொழுது தான் அதே தெருவுக்கு வலது பக்கமிருந்த தெருவில் தள்ளுவண்டி கடையில் உணவை வாங்கிவிட்டு பணத்தை தந்த தர்ஷினியோ தன்னை சுற்றி அங்குமிங்கும் பார்வையால் அலசினாள்.​

தன்னுடன் வேலை பார்க்கும் சுதாவோ "என்ன ப்ரியா" என்றதும், "இல்லை சுதா யாரோ என்னை கூப்பிட்டது போல இருக்கு" என்றுரைத்தாள்.​

"யாரு கூப்பிடுவா? நீயே சென்னைக்கு புதுசு. கடைக்கும் இப்ப தான் வேலையில சேர்ந்த. உன்னை யாருக்கு தெரியும்." என்றாள் கூட வந்த சுதா.​

"இல்லை சுதா கேட்டுச்சு. யாரோ ரொம்ப நெருக்கமானவங்க கூப்பிடற மாதிரி" என்று எட்டு திசையிலும் பார்வையை செலுத்தினாள்.​

"யாரும் இல்லை. எல்லாம் அவங்கவங்க வேலையில இருக்காங்க. வா சீக்கிரம் சாப்பிட்டு கடைக்கு போகணும். சின்ன கடை ஆனா சாப்பிட கூட நேரம் போதாது. ஆளுங்க துணி வாங்கறாங்களோ இல்லையோ இந்த துணி இருக்கா?அந்த துணி இருக்கானு அலப்பறை கிளப்புவாங்க.​

கடைசில இந்த டிஸைன்ல அந்த கலர் வேண்டும். அந்த கலர்ல இந்த டிஸைன் கிடைக்குமானு கேட்டு நம்ம வாயால இல்லனு சொல்ல வச்சி ஓடிடுவாங்க. நம்ம வேலையை பார்ப்போம் ப்ரியதர்ஷினி." என்றதும் பணியில் தனக்கு சீனியர் என்றதில் வருத்தம் கலந்த சுதா பேச்சானாலும் சகித்து கொண்டாள்.​

ப்ரியா சகித்து தான் வாழவேண்டும். இன்னும் அவளுக்கு நல்ல சம்பளம் வேலை என்று கிடைக்கவில்லையே.​

தனக்கான விடியலை தே​

டி தடையை உடைக்கும் பிம்பத்தில் தர்ஷினி தவித்திருந்தாள்.​

-தொடரும்​

NNK-79​

நீயென் காதலாயிரு​

இரண்டு பேர் தான் லைக் கமெண்ட்ஸ் பண்ணறிங்க பிரெண்ட்ஸ்.‌தேங்கயூ​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-7​

இந்திரஜித் முகம் எப்பொழுதும் மலர்ந்த முகமாக இருக்கும். சில நாட்களாக முகம் புன்முறுவலை மறந்திருந்தது.​

சரியாக சொல்ல போனால் ப்ரியாதர்ஷினியை கண்ட நாள் முதல், காதல் அரும்பிய நாளிலிருந்து இப்படி தான் திரிக்கின்றான்.​

அவசர அவசரமாய் கிளம்பிய மகனிடம் மோகன் மெதுவாக பைக் சாவியை எடுத்து கொடுக்க அதனை பெற்று தன் கால்சட்டை பாக்கெட்டில் திணித்தான்.​

"சாப்பிடாம ஸாக்ஸ் போட்டுட்ட இந்தர்" என்று சித்ரா வந்தார்.​

"பசிக்கலைம்மா" என்று பதில் தந்தான்.​

"பசிக்காட்டியும் இரண்டு தோசையை உள்ள தள்ளுறது" என்று மோகன் மைந்தனை ஏறிட்டு கூற, "எனக்கு அவசரமா போகணும்" என்றான்.​

"அப்படியென்னடா அவசரம்?" என்று மோகன் கேட்டதும் ஷூ லேஸை இறுக கட்டி முடித்து, "ஆபிஸ்ல க்ளைன்ட் மீட்டிங். மார்னிங்கே என்னோட வேலையை மீட்டிங்ல டிஸ்பிளே பண்ணி விளக்கணும். ஆல்ரெடி எல்லாம் போல்டர்ல பேக்கப் ரெடி பண்ணிட்டேன்‌. நான் போய் ப்ரஜக்டர்ல எக்ஸ்பிளைன் பண்ணணும். எப்பவும் போற டைம் என்றால் டென்ஷனாகும். அதனால குயிக்கா போறேன். இந்த பிராஜெக்ட் மட்டும் நான் கரெக்டா டீமிடம் புரிய வச்சிட்டா என்னோட சேலரி மாறும். அதோட பதவியுயர்வு கிடைக்கும்" என்று பேசியவன் முதுகுப்பையை எடுத்தான்.​

"அதுக்கு எதுக்குடா சோர்வா இருக்க? சந்தோஷமா கிளம்பலாமே" என்று மோகன் கேட்டதும், தந்தையை பார்த்து வெளியேற முயன்றான்.​

"பதில் சொல்லிட்டு போடா. என்ன பிரச்சனை உனக்கு. நீ விரும்பற பொண்ணு பத்தி டீடெய்ல் கிடைக்கலை அவ்ளோ தானே? அதுக்கு அப்பா அம்மா என்ன செய்தோம். எங்களிடம் முன்ன மாதிரி பேசாம நறுக்கு தெரித்து பேசற," என்று கேட்டார்.​

மகனின் மௌவுனம் அவரை வதைத்தது. அதனால் இன்று அலுவலகம் கிளம்புபவனிடம் நிறுத்தி வினா தொடுத்தார்.​

"ஆபிஸ் கிளம்பறப்ப குவஸ்டின் கேட்காதிங்க. ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். இதுல உங்க கேள்வி துளைகள் வேற. என்னை கொஞ்ச நாளா தனியா விடுங்க" என்று எரிந்து விழுந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றான்.​

மோகனோ சித்ராவை தீர்க்கமாய் பார்த்துவிட்டு அவரும் இடத்தை காலிசெய்தார். நேரத்திற்கு பணிக்கு செல்வது மைந்தன் இந்திரஜித் மட்டுமில்லையே இவரும் ஒரு அலுவலகத்தில் கணக்கெழுதும் பணியில் இருக்கின்றாரே.​

சித்ரா தான் அப்பாவிற்கும் மகனுக்கும் நடுவே பாவப்பட்ட ஜீவனாய் நின்றிருந்தார்.​

தந்தையிடம் முகத்திருப்பலை காட்டிவிட்டு இந்திரஜித்திற்கு மனம் கேட்கவில்லை.​

பைக் கண்ணாடியில் தன் முகத்தை கண்டவனுக்கு, தந்தையிடம் பேசிய அதே முகபாவணை தெரிய? தன் முகம் உற்றென்று இருப்பதை அறிந்து அவனையே அவன் கடிந்தான்.​

எதிர்பாரா விதமாக கோடம்பாக்கம் தாண்டி மாம்பலம் செல்லும் நேரம் ஒரு கார் அதிவேகமாக வந்திட, மழையில் தேங்கிய தண்ணீர் மேலே அடித்து சென்றது.​

இந்திரஜித் அப்படியொன்றும் கெட்டவார்த்தை பேசமாட்டான். ஆனால் அக்கணம் கண்மண் தெரியாமல் ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை சரளமாக வந்து விழுந்தது.​

போவோர் வருவோர் தன்னையே பார்த்து கடந்து செல்லவும், வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.​

அலுவலக மீட்டிங்கிற்கு இப்படி சேரும் சகதியுமாக செல்ல இயலாது. அதனால் தண்ணீர் பாட்டிலால் கைக்குட்டையை வைத்து துடைத்தான். கால் சட்டை ஒரளவு கருப்பு வண்ணமென்பதால் லேசான ஈரத்தை தவிர்த்து சேறு காணாமல் துடைத்திருக்க, சட்டை சாண்டில் நிறம் கறை படிந்த துடைத்த பொழுதும் அப்படியே சுவடு பதிந்திருந்தது.​

'தந்தையிடம் முகம் திருப்பி வந்ததற்கு கடவுள் கொடுக்கும் தண்டனை' என்று மனசாட்சி கேலி செய்தது.​

தற்போது இதை பற்றி ஆராயும் எண்ணத்தை ஒதுக்கி வைத்து மின்னல் வேகத்தில் சிந்தித்தான்.​

வீட்டிற்கு சென்று உடை மாற்ற நிச்சயம் கால் மணி நேரம் பிடிக்கும். அதற்கு பக்கத்தில் புது சட்டை அளவு சொல்லி வாங்கிடலாம். எப்படியும் மடமடவென வாங்கிடும் ஆள் தான் இந்திரஜித். காலை நேரமென்பதால் ஐந்து நிமிடத்தில் டிஸ்பிளேவில் இருக்கும் உடையை வாங்கி பில் போட ஐந்து நிமிடம் ஆகலாம். இந்திரஜித் வாங்கிய சட்டை தேவையற்றதாக ஒதுக்க மாட்டான். எப்படியும் அலுவலகத்திற்கு போட்டு கொள்ள உதவுமென கடையை தேடினான்.​

இந்திரஜித்திற்கு நன்றாக தெரியும். மாம்பலத்தில் பெரிய பெரிய கடையில் நுழைந்து வெளிவரவே பத்து பதினைந்து நிமிடம் தாண்டி எடுத்துக் கொள்ளும். அதனால் நின்றிருந்த இடத்திலிருந்து நாலாப்பக்கம் விழிகளை உருட்டினான்.​

ஒரு துணி கடையின் முன் தான் அணிந்திருக்கும் பேண்டிற்கு தோதாக சட்டையை அணிந்த பொம்மை மனிதன் இருக்க, அந்த கடைக்குள் நுழைந்தான்.​

"என்ன சார் வேண்டும்?" என்று ஆண் குரல் பில் போடும் இடத்தில் கேட்க, ''மீடியம் சைஸ் ஷர்ட் சார். அதோ அந்த மாடல் பொம்மை போட்டிருக்கறது." என்று சுட்டிக்காட்டினான்.​

"தங்கச்சி கஷ்டமருக்கு இந்த மாடல் டிரஸ் எடுத்து காட்டு" என்று அந்த மனிதன் எடுத்துரைக்க, "ஓ..ஓகே ச..சார்" என்றது சாட்சாத் திணறி தத்தளித்தவள் ப்ரியதர்ஷினி என்று தனியாக கூற வேண்டியதில்லை.​

ப்ரியதர்ஷினியை கண்டவனோ உடலுக்கு உயிர் வந்தது போல, முகமெங்கும் மலர்ச்சியோடு உதடு விரிந்து மென்னகைத்தான்.​

இத்தனை நாள் பிணமாக நடமாடினாய் என்று கூறினால் தகும். அப்படியிருந்தவன் அவளருகே வந்து "தர்ஷினி" என்று வரவும், "ப்ரியா அவருக்கு மீடியம் சைஸ் ஷர்ட், இதோ இந்த யெல்லோ கலர் மாடல்மா. எடுத்து காட்டு முதல் கஸ்டமர்." என்று குறிப்பிட்டு கூறவும் இந்திரஜித் நிதானித்தான்.​

'இந்த இடம் ப்ரியதர்ஷினியின் பணியிடம். ஏதேனும் பெர்சனல் பேசிடாதே என்று தெளிவடைந்து அவள் பின் தொடர்ந்தான்.​

கைகளை பிசைந்து மனதில் இந்திரஜித்தை அர்ச்சித்து உடையை எடுத்து காட்டினாள்.​

கடை உரிமையாளர் மறுபக்கம் திரும்பியிருக்க, "தயவு செய்து டிரஸ் வாங்கிட்டு கிளம்புங்க. ஏதாவது கேட்டு என் உசுரை வாங்காதிங்க." என்று அவன் செவிக்கு எட்டும் விதமாக மெதுவாய் முனங்கினாள்.​

"தர்ஷூ ஏன் பழியை சுமந்துட்டு இங்க வந்துட்ட?" என்றான்.​

"ஆரம்பிக்காதனு சொன்னேன். இது நான் வேலை செய்யற இடம். தயவு செய்து கிளம்பு" என்று ஷர்ட் எடுத்து போட்டாள்.​

அவள் எடுத்து போட்ட ஆடையை பார்த்து, "இத்தனை நாள் உன்னை தேடிட்டு இருந்தேன். நீ எங்கன்னு உன் அம்மாவிடம் சந்தோஷ், சந்தியா மூலமா கேட்டு பார்த்தேன்.​

பச் உங்க அம்மா எதுவும் மூச்சு விடலை. உங்கக்காவிடம் நானும் சந்தோஷும் அவங்க வீட்டுக்கு போய் கேட்டோம். சென்னையில இருப்பதா சொன்னாங்க. எத்தனை கடையில ப்ரியா என்ற டிரஸ் டிசைனரை தேடி ஏறியிறங்கியிருக்கேன் தெரியுமா?​

நீ இங்க பக்கத்துலயே இருந்திருக்க. அதுவும் சேல்ஸ் கேர்ளா" என்று அவளை ஆராய்ந்தவன் கண்கள் கலங்கியது.​

"பச் அதுக்கென்ன. இதான் என் நிலைமை" என்று முகம் திருப்பினாள்.​

"என்ன ப்ரியா வேற டிரஸ் எடுத்துகாட்டு." என்ற குரலில் அதே பிராண்டில் வெவ்வேறு கலரை எடுத்து காட்டினாள்.​

இந்திரஜித் ஒவ்வொன்றாய் மெதுவாக புரட்டி அவளை அடிக்கடி தழுவும் பார்வையை பார்த்து வைக்க ப்ரியதர்ஷினி தவித்து நின்றாள்.​

இதில் இந்திரஜித் போன் வேறு அலறியது.​

சந்தடி சாக்கில் போன் அழைப்பை ஏற்று, காதில் வைத்து நிதானமாக பேசினான்.​

மறுபக்கம் பணியிடத்தில் வேலை செய்யும் தோழன் ஒருவனோ "எங்கடா இருக்க மீட்டிங் கால் மணி நேரத்துல ஆரம்பிக்க போகுது. இன்னமும் ஆளைக்காணோம்." என்றதும் இந்திரஜித்தோ, "மச்சி மச்சி எனக்கு ஆக்சிடெண்ட்டா. அதனால உடனே வரமுடியாது. என் கம்பியூட்டர்ல மீட்டிங்கு தேவையான எல்லாம் தயாராயிருக்கு. கொஞ்சம் எனக்கு பதிலா நீயே மீட்டிங் அட்டன் பண்ணுடா. மேனேஜரிடம் எனக்கு ஆக்சிடெண்ட் என்று சொல்லிடு. நானே போன் பண்ணறதா இனபார்ம் பண்ணிடுடா. பாஸ்வோர்ட் இப்ப செண்ட் பண்ணறேன்" என்று பொய்களை அள்ளி வீசி பேச விடாமல் உரைத்தான்.​

ப்ரியதர்ஷினி பொய் பேசுபவனை வாய்பிளந்து உற்று நோக்கினாள்.​

"என்னம்மா கஸ்டமருக்கு எடுத்து போடு" என்று கடை உரிமையாளர் வந்து பேசவும், போனை மூடி "நான் அப்பறம் பேசறேன் வை டா" என்று துண்டித்து இந்த மாடல்ல மீடியம் சைஸ் ஒன்னு, லார்ஜ் சைஸ்ல ஒன்னு பில் போடுங்க ப்ரியா" என்றான்.​

"ப்ரியானு கூப்பிடாத" என்று பற்கடித்து பேச, "தர்ஷும்மா எனக்கும் ப்ரியா வேண்டாம். தர்ஷவே நல்லாயிருகாகு.​

உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னிக்கு மட்டும் மீட்டிங் அட்டன் பண்ணி, பிராஜக்ட் எக்ஸ்பிளைன் பண்ணினா சம்பள உயர்வு கிடைக்கும். ஏன் வெளிநாட்டுக்கு போக கூட வாய்ப்புண்டு. ஆனா அதை தூக்கி போட்டுட்டு இங்க உன்னிடம் பேசிட்டு இருக்கேன். பிகாஸ்..." என்று இடைவெளியிட்டு அவளை உற்று நோக்கினான்.​

அவன் துண்டித்து பேசிய வார்த்தை தொக்கி நிற்க, ப்ரியதர்ஷினியோ பில் போட அவன் பின்னால் தொடர்ந்தாள். 'என்ன பிகாஸ்' என்னனு சொல்லிட்டு போகலை என்று தவித்தாள்.​

"என்ன சார் சேரு சட்டையில பட்டுடுச்சா." என்று லேசான ஈரத்தை வைத்து கேட்டார் கடை முதலாளி.​

"ஆமா சார்" என்று பில் போடும் இடத்தில் நின்றான் இந்திரஜித்.​

"எங்க சார் கார் பைக்ல வர்றவங்க சல்சல்னு போறாங்க. தண்ணி தேங்கியிருந்தா அடுத்தவங்க மேல படும்னு யோசிக்க மாட்டேங்கறாங்க." என்று பில் போட்டு பணத்தை தேய்க்கும் மெஷினில் இந்தரின் கார்டை தேய்த்தார்.​

"முதல்ல நான் கூட கார் காரனை திட்டிட்டேன் சார். ஆன இப்ப கடவுளா பார்க்கறேன். எனக்கு தேவையானதை கண் முன்ன காட்டிட்டார். எல்லா புகழும் இறைவனுக்கே" என்று கூற ''மாஷா அல்லா" என்று கடைக்காரர் கூறி கார்டை திருப்பி தந்து விட, இரண்டடி நடந்து சென்றவன் கடை உரிமையாளர் பார்க்கவில்லையென்றதும் ப்ரியதர்ஷினியிடம் ஒரு கள்ளச்சிரிப்பில் விடைப்பெறுதலை விழியம்புகளால் துளைத்து சென்றான்.​

இந்திரஜித்திற்கு இன்றைய நாள் கடுகடுப்பாய் ஆரம்பித்தாலும், அவன் மனதை கொள்ளையடித்தவளை விதி தரிசிக்க வைத்த நிறைவோடு இருந்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக நாயகி திரிந்தாள்.​

ப்ரியதர்ஷினிக்கு ஏன் தான் இத்தனை பெரிய சென்னை மாநகரத்துல இவன் கண்ணுல நான் அகப்பட்டேனோ, இவன் பார்வையும் பேச்சும் ஒன்னும் சரியில்லை.​

இன்னிக்கே வேறயிடத்துல வேலை தேடி ஓடிடலாமா?! என்றவள் மனம் கெக்கரித்தது.​

நீ ஒன்னும் பணக்காரியில்லை. மிடில் கிளாஸ் பொண்ணு. உன்னால் முன்ன இருந்த இடத்துலயிருந்து சட்டுனு இங்க வந்து என்ன வேலையென்றாலும் பார்க்க முயன்றதற்கு முக்கிய காரணம் பழியை விட்டு விலகி வந்தது மட்டுமல்ல, எந்த இடத்திலும் கௌரவம் குறையாது அதேகணம் தன் மானத்தோடு வாழும் உழைப்பை நம்பிதான்.​

உழைப்பு என்றால் இந்த வேலை அவளது படிப்புக்கு குறைவு. ஆனால் தேவைக்கு எது கிடைக்கின்றதோ அந்த வேலையை செய்யும் கட்டாயத்தின் விளிம்பில் நிற்கின்றாய் என்றது மனம்.​

உண்மை தான் சொந்த வீடு என்பதாலும் ஓரளவு வீட்டை சுற்றி காய்கறி பழங்களென்று தினசரிக்கு ஏதோ தயாராகிடும். முன்பு வேலை பார்த்த இடம் கணக்கெழுதும் பணி. சம்பளம் 12,000 கிடைத்திருந்தது. ஆனால் பழியை சுமந்து, வலியை தாங்கி வாழ அவ்விடம் ஏற்காமல் சென்னைக்கு 6,000 சம்பளத்திற்கு சேல்ஸ் கேர்ளாக மாறிவிட்டாள். அது மாமாவின் சிபாரிசால் கிடைத்த படி.​

சொல்லப்போனால் இங்கே கிடைத்த பணிக்கு தக்க பொருந்திக் கொண்டாள். மற்ற எந்தவொரு எண்ணத்திற்குள்ளும் சிக்கி ஆழியில் புதையவில்லை.​

அது பாசமென்னும் பள்ளத்தாக்காக இருந்தாலும் சரி. அன்பென்ற வழியில் சந்தோஷத்திடம் பழகுவதும் கூட விட்டொழித்தாள். இதில் புதிதாக இந்திரஜித் பார்வையும் பேச்சும் சிரிப்பும் தினுசாக தாக்கியது. அவன் உச்சரித்த 'பிகாஸ்...' என்ற வார்த்தைக்கு​

பிறகு 'பிகாஸ் ஐ லவ் யூ' என்ற வார்த்தை கோர்த்திடுமோயென்று அஞ்சினாள்.​

-தொடரும்.​

NNK-79​

நீயென் காதலாயிரு​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-8​

இந்திரஜித் சென்றப்பின் அன்றைய நாள் ப்ரியதர்ஷினிக்கு சோர்வாய் தான் நகர்ந்தது.​

அதற்கு நேர்மாறாக அலுவலகம் கூட செல்லாமல் சந்தோஷிற்கு போனில் அழைத்தான்.​

"சந்தோஷ் தர்ஷியை பார்த்துட்டேன்டா." என்று அனுமான் 'கண்டேன் சீதையை' என்று ராமரிடம் கூறியது போல சுருங்க கூறி மகிழ்ச்சியை பகிர்ந்தான்.​

சந்தோஷிற்கு நிம்மதி வந்தது. "எங்கடாயிருக்கா? என் மேல கோபமா இருக்காளா?" என்று தயக்கமாய் கேட்டான்.​

"சந்தோஷ் அவ யார் மேலயும் கோபப்பட்ட மாதிரி தெரியலை. மனசொடிஞ்சி போனதா தான் தெரியறா.​

அப்பறம் நான் அவளிடம் தனிப்பட்டு எதுவும் பேசலை. அவ ஒரு கடையில சேல்ஸ் கேர்ளா இருக்கா. ரொம்ப நேரம் இருந்தா, இருக்கற வேலை போயிடுமோயென்ற பயம் அவ கண்ணுல பார்த்தேன். அதனால ஏன் பழியை சுமந்துட்டு இருந்தனு மட்டும் கேட்டேன். அவ அதுக்கு கூட சரியா பதில் தரலை.​

நான் இப்ப வீட்டுக்கு ரிட்டர்ன் போறேன். அவ வீட்டுக்கு திரும்பறப்ப தனியா பேசிக்கறேன். கடையில வியாபார நேரம் என்று ஒதுங்கிட்டேன். அதோட என்னை பார்த்தா அவ திணறுறா, கொஞ்சம் நிதானமாகட்டும்." என்று மடமடவென மொழிந்தான். அவன் பேசிய வேகம் இத்தனை நாள் தேடலில் பெற்ற சோர்வை நீக்கியது.​

"பக்கத்து ஏரியாவா டா. எங்ககெங்கயோ தேடி அலைந்த. கடைசில உன் பக்கத்துல தான் இருக்கா.​

நான் இப்ப உடனே வரமுடியாது இந்தர். இரண்டு நாள்ல சனி கிழமை வருது. அப்ப சென்னை வர்றேன்.​

இந்தர்... நீ ப்ரியாவை விரும்பறதை அவளிடம் சொல்லிட்டியா?" என்று அவசரமாய் கேட்டான் சந்தோஷ்.​

"ஏன்டா இந்த சிட்டுவேஷன்ல முதல்ல எதை சொல்லறது? அவ திருட்டு பழி சுமந்து இங்க வந்திருக்கா. முதல்ல அதுக்கு யார் காரணம்னு பார்க்கணும். அவளிடம் முதல்ல தெரிந்த பையனா பேசி பார்க்கறேன். மேபீ நான் பேசற தோரணையே என் காதலை சொல்லிடும். ஆனாலும் வாய் திறந்து சொல்ல மாட்டேன்.​

முதல்ல அவ மனசுல இருக்கற கவலையை களைந்துடணும். இரண்டாவது தான் என் காதலை சொல்லி சம்மதம் வாங்கணும்.​

ஆமா நீ விலாசினியிடம் காதலை சொன்னதுக்கு என்ன ரிசல்ட் வந்துச்சு?" என்று கேட்டான் இந்தர்.​

"அவளா, ஆபிஸ் பக்கமா வந்தா. நானும் உங்களை விரும்பறேன். ஆனா நீங்க ப்ரியாவை விரும்பறதா நினைச்சிட்டு ஒதுங்கிட்டேன்னு சொன்னா.​

ப்ரியா மேல திருட்டு பழி வரலைனா நீங்க அவளை தான் விரும்பியிருப்பிங்களானு கேட்டா.​

அப்படியில்லை அதுக்கு முன்னவே விரும்பறேன்னு சொல்லவும், 'எனிவே ப்ரியா இங்கிருந்து போகவும் தான் நான் உங்க கண்ணுக்கு தெரிந்திருக்கேன்னு பேசறா.​

இத்தனை நாள் அவளை பார்க்க வந்ததையோ, அவளை பார்த்து ஜொள்ளுவிட்டதையோ அவளுக்கு புரியலை. எனக்கு இந்த கண்ணால பேசறது வரலை " என்று பேசவும், இந்திரஜித்திடம் பெரிய மௌவுனம்.​

சந்தோஷ் பேசிக்கொண்டே சென்றவன் நண்பன் தன்னை கேலி கிண்டல் எதுவும் செய்யாமல் இருக்க, "இந்தர்" என்றதும், "ஆஹ் சந்தோஷ் லைன்ல இருக்கேன்" என்றான்.​

"என்னடா யோசிக்கற? சத்தமேயில்லை நான் பேசியதை கேட்டியா? இல்லை தர்ஷூ கூட டூயட்ல பாரீன் போயிட்டியா" என்று சிரிப்பாய் கேட்டான்.​

இந்திரஜித்திற்கு துளியும் கேலி கிண்டல் என்று அக்கணம் பேச தோன்றவில்லை."சந்தோஷ் ப்ரியா திருட்டு பழி சுமந்தா யாருக்கு பெனிபிட் என்று யோசி. அதோட அவ சூட்கேஸ் லாக்கர் நம்பரை தெரிந்தவங்க தான் ப்ரியா மேல பழி விழுணும்னு பிளான் பண்ணிருப்பாங்க.​

நான் ப்ரியாவை ஈவினிங் ஆர் நைட் சந்திப்பேன். அவளிடம் கேட்டுக்கறேன். போனை வைக்கிறேன்டா வீட்டுக்கு வந்துட்டேன் அம்மாவிடம் அவங்க மருமகளை பார்த்ததை ஷேர் பண்ணணும்" என்று கூற, சந்தோஷ் "ஓகேடா" என்று வைத்தான்.​

சந்தோஷ் மனம் இந்தர் பேச்சில் சுழன்றது. ப்ரியாவிற்கு பழியை சுமந்து துரத்தி விட்டால் யாருக்கு பெனிவிட்?' என்று யோசிக்க, தன் ஆருயிர் காதலி விலாசினியாக இருக்குமா? என்ற அதிர்ச்சி தான் அவனுக்குள் முதலில் தாக்கியது.​

ப்ரியா இல்லாமல் தினமும் தாய் பானுமதி புலம்புவது அவன் அறிந்ததே. தந்தையும் இந்த பிள்ளை இப்படி நடந்தாளானு இன்னமும் அதிர்ச்சியா இருக்கு. மருமகளா தானே பார்த்தோம்' என்று வார்த்தைக்கு வார்த்தை கூறுவதை சந்தோஷ் இந்த இடைப்பட்ட நாட்களில் கேட்டிருக்கின்றான்.​

அப்படியென்றால் தன்னை விரும்பிய விலாசினிக்கு 'தான் ப்ரியாவை விரும்புவதாக எண்ணி, ப்ரியா மீது கோபமிருந்து திருட்டு பழியை சுமத்தியிருப்பாளா?' என்றதும் சந்தோஷ் இதயம் சுருக்கென தைத்தது.​

தான் காதலித்த பெண் அப்படியா? என்ற ஒன்று விதிர்க்க வைத்தது.​

ப்ரியாவிற்கு இந்த பழி காலம் முழுக்க கூடாதென்று தோன்றியது.​

அதனால் விலாசினியிடமே கேட்டுவிட முடிவெடுத்தான்.​

இந்திரஜித் தன் நண்பனின் காதலில் ஆட்டம் காண வைத்தது மட்டுமில்லாமல் தாயையும் பிடித்து உலுக்கியபடி ஹாலில் நடனமாடினான்.​

"என்னடா மீட்டிங் போகணும். அவசரம் அதுயிதுனு சலிச்சிட்டு அப்பாவிடம் கோச்சிட்டு போன. இப்ப ஆடிட்டு பாடிட்டு வர்ற? ஆமா இதென்ன சட்டையில சேரு? அச்சோ" என்று சித்ரா கவனிக்க, "கறை நல்லது மம்மி." என்று ஆங்கில பாடலுக்கு ஏற்ப அன்னையின் கையை பிடித்து சுழற்றி ஆடவைத்தான்.​

"என்ன புது சட்டை வாங்கியிருக்க?" என்று கடை பெயரை கண்டு மைந்தனின் முகத்தை கவனிக்க, "இந்தர் என்ன சந்தோஷமான விஷயமா?" என்றதும் "யூ ஆர் பிரிலியண்ட் மம்மி. என்ன விஷயம்னு கண்டுபிடி" என்று அன்னையை உட்கார வைத்து அன்னையின் முகத்தை பார்க்க சித்ராவோ "என் மகன் கொஞ்ச நாளா தர்ஷினி தர்ஷினினு ஒருத்தியை தேடி சோர்ந்துட்டு சுத்தனான். இப்ப 'பளிச் பளிச்'சுனு முகமிருக்குன்னா? என் மருமகளை எங்கயாவது சந்திச்சிருப்ப" என்று நடந்தவையை யூகித்து புட்டு புட்டு வைத்தார்.‌​

‌ "என் ஸ்வீட் ஹார்ட் மம்மி. தர்ஷினியை பார்த்துட்டேன், கொஞ்சம் போல பேசிட்டேன். ஆனா நிறைய பேசணும் மம்மி. இப்ப பேச முடியாது. துணி கடையில சேல்ஸ் கேர்ளா இருக்கா" என்றவன் குரல் தயக்கத்தை தாங்கியிருந்தது.​

என்ன தான் காதல் என்றாலும் துணிக்கடையில் வேலை பார்ப்பவள் மருமகளா? என்ற முகதூக்கல் வந்துவிட்டால்? அந்த பயத்தோடு அன்னையை ஏறிட்டான்.​

"சந்தோஷ் என்னிடம் போன்ல அவ வேற ஏதோ அக்கவுன்ட் சம்மந்தமா வேலை பார்ப்பதா சொன்னான். இப்ப சேல்ஸ் கேர்ள்னா எந்தளவு பாதிப்படைந்து இங்க வந்து சேர்ந்திருப்பா?" என்று மைந்தனுக்கு ஏற்ற அன்னையாக கேட்டதும் தான் இந்தருக்கு மூச்சு வந்தது.​

"ஆமா அம்மா. அவ அங்க 12000 சம்பளத்துல கணக்கெழுதுற வேலை பார்த்தா. இதே சென்னை என்றால் அதிக சம்பளம் கிடைச்சிருக்கும். சொந்த வீடு உறவுகள் இருக்க பாதுகாப்பா வர்ற சம்பளம் போதும்னு வாழ்ந்தா. இப்ப அங்க இருக்க பிடிக்காம ரோஷப்பட்டு 6000-7000 சேல்ஸ் கேர்ள் வேலைக்கு வந்துட்டா.​

கூடிய சீக்கிரம் அவ மேல பழியை போட்டவங்க யாருனு கண்டுபிடிச்சி, என் லவ்வை அவ அக்சப்ட் பண்ண வச்சி, கல்யாணம் பண்ணி நம்ம வீட்ல என் கூடவே வச்சிக்கணும்.​

அதோட அவளுக்கு இங்க நல்ல வேலையும் தேடிதரணும். அவ என் காதலை அக்சப்ட் பண்ணிப்பாளாம்மா?" என்று எதிர்பார்ப்போடு அன்னையை கேட்டு நின்றான்.​

சித்ரா என்ன சொல்லிவிடப் போகின்றார். எல்லா அன்னையும் போல தன் மகன் எண்ணியது ஈடேற ஆசைக்கொண்டவராக "கண்டிப்பா என் பையனோட காதலை மறுப்பாளா?" என்று நெட்டி முறித்தார்.​

இந்திரஜித் சோபாவில் சாய்ந்தவனாக விட்டத்தை பார்த்து, 'மறுக்க வாய்ப்பிருக்கு' என்று மனதிலேயே கூறிக்கொண்டான்.​

ஆபிஸில் சொன்ன பொய்யிற்காக, வீட்டிலிருந்த மெடிக்கல் கிட் வைத்து, பெயருக்கு ஒரு கட்டு போட்டு அதனை போட்டோ எடுத்து அவனது தலைமை அதிகாரிக்கு அனுப்பிவிட்டு, காலாட்டி முந்திரி வறுவலை கொரித்தான்.​

அக்கணம் அலுவலகம் முடிந்து மோகன் மகனை கண்டு பதட்டமாய் வந்தார்.​

"என்னடா ஆச்சு. காலையில சிடுசிடுன்னு கிளம்பறப்பவே நினைச்சேன்" என்று மகனின் கையை தீண்ட, அவனோ முந்திரியை வாயில் வைத்து, வலது கை கட்டை பிரித்து காட்டினான்.​

"ஒன்னும் ஆகலையா?" என்று நிம்மதியடைந்த மோகன் மகன் தன்னை பதட்டமாக்கியதை எண்ணி, "எதுக்கு இப்படி பண்ணிட்டு திரியற? முகத்தை தூக்கிட்டு, அடிப்பட்டதாக நடிச்சிட்டு" என்றார்.​

"அப்பா உங்களுக்கும் எனக்கும் டிரஸ் வாங்கியிருக்கேன்" என்று சம்மந்தமேயில்லாமல் மகன் பேசவும், "டேய் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ என்ன பேசற. காதலிச்சா, காதலிக்கறவனும் அவனை சுத்தியிருக்கறவங்களையும் சந்தோஷமா மாத்தணும். இப்படி உம்முனு இருந்தா நல்லாவேயில்லை. அதுவும் நீ அப்படியிருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. காலையிலயிருந்து உன் முகம் டல்லாயிருக்க, என்னால வேலை செய்ய முடியலைடா" என்று ஆதங்கமாய் தன்னிலையை பதிவு செய்தார்.​

உண்மை தானே ஒரே மகன் தங்கள் வாழ்வில் அனைத்து சந்தோஷத்தையும் ஈடுகட்ட பிறந்தவன். இப்படி காதலென்று அவன் முகம் வாட்டம் கொண்டால் தந்தை விரும்புவாரா?​

"அப்பா இனி உம்முனு இருக்க மாட்டேன். இந்த டிரஸ் உங்க மருமகளை பார்க்க வச்சது. இந்த டிரஸ் உங்க மருமகளிடம் பேச வைக்க வாங்கியது." என்று இரண்டு சட்டையை எடுத்து காட்டினான்.​

மோகன் அந்த உடையை வாங்கி தன் மீது வைத்து, "மருமக டிசைன் பண்ணின டிரஸாடா?" என்று கேட்டு பார்க்க, "அதெல்லாம் இல்லை' என்று நடந்தவையை விவரித்தான்.​

மோகன் மொத்தமாய் கேட்டுவிட்டு, "சட்டை டிஸைன் சுமாரா இருந்தப்பவே நினைச்சேன். இது கம்பெனி காரன் தயாரித்த சட்டைனு.​

ஆமா எங்க மருமக வேலை செய்யறா?" என்று கேட்கவும் அந்த துணிக்கடையின் கவரை எடுத்து காட்டினான்.​

"பேஷ் பேஷ் ஒருநாள் நேர்ல சந்திச்சு பேசணும்." என்றார் மோகன்.​

துணி கவரை தள்ளி வைத்தவன், "முதல்ல நான் பேசணும், பழகணும், அவ என்ன மனநிலையில இருக்கானு தெரிந்துக்கணும். என் காதலை அவ ஒத்துக்கணும், என்னை ஏத்துக்கணும், அப்பறம் பொறுமையா உங்களை கூட்டிட்டு போறேன்." என்று ஆயாசமாக கூறினான்.​

மோகன் மனைவி சித்ராவை பார்த்து 'என்னம்மா இது?' என்ற ரீதியில் கையை நீட்டி கேட்க, "பையன் சொன்னா சரியா இருக்கும்ங்க" என்றார் சித்ரா.​

அதன் பின் "இதென்னடா கையில கட்டு நாளைக்கு ஆபிஸுக்கு இந்த கட்டு போட்டுட்டு போகணுமா?" என்று தன் கையில் கட்டு போட்டு பார்த்து அப்பாவியாய் மனைவியிடம் 'எனக்கு நல்லாயிருக்கா?' என்ற பாவணையில் பார்க்க, 'சும்மாயிருங்க கையில கட்டுப்போட்டுட்டு' என்று எடுத்துவிட்டார் சித்ரா.​

"பொய் சொல்லிட்டேன் அதை ஸ்மூத்தா மெயின்டெயின் பண்ணணும். இல்லைனா முக்கியமான மீட்டிங் ஏன்டா வரலைனு கழுத்தை பிடிப்பாங்க. பதில் சொல்லி நாக்கு தள்ளிடும். அதுக்கு ஒரு கையால கஷ்டப்பட்டு ஒரு வாரம் லீவு கேட்டு வீட்ல இருக்க வேண்டியது தான்." என்று தந்தையை பார்த்து கண்சிமிட்டினான்.​

இவன் 'ஜகஜாலகேடிம்மா' என்று மனைவியிடம் பேசி சிரித்து நேரம் கழித்தார்கள்.​

மணி ஒன்பதாக, முப்பாட்டன் காலத்து கடிகாரம் ஒன்பது தடவை சத்தமிட்டு அடங்கியது.​

இந்திரஜித்தோ, வேகவேகமாய் எழுந்து, "அம்மா நான் அவளை போய் பார்த்துட்டு வர்றேன். பத்து மணிக்கு கடை மூடறதா பக்கத்துல கேட்டு தெரிந்துக்கிட்டேன்." என்று அவசரமாய் சிகையை கையால் கோதினான்.​

"டேய் இந்த கட்டு தேவையா?" என்று கேட்டார் மோகன்.​

"இருக்கட்டும் அப்பா. என்ன ரியாக்ஷன் தர்றானு பார்க்கறேன். மனசுல துளியூண்டு நான் இருந்தா பதறுவளே" என்று வலது கையை கட்டுப்போட்டு முடிச்சிட்டான்.​

"அதெல்லாம் இந்நேரம் பதறிட்டு தான் இருப்பா. உன்னை இங்க பார்த்து காலையிலருந்து கவலையா சுத்திட்டு இருப்பா" என்று மோகன் சிரிக்க, "உங்களை வந்து வச்சிக்கறேன்." என்று ஓட்டமெடுத்தான்.​

தன் பைக்கை உதைத்து ப்ரியதர்ஷினி இருக்கும் கடைக்கு விரைந்தான்.​

அவன் வந்து சேர நேரம் பிடித்தது. தி.நகர் மாம்பலம் என்றால் கூட்டத்திற்கு குறைச்சலில்லையே. பைக்கை சந்து பொந்தில் விட்டு தன்னவள் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து சேர அப்பொழுது தான் ஒவ்வொரு பொம்மையாக கடைக்குள் எடுத்து வைத்தார் காலையில் சந்தித்த மனிதர்.​

ப்ரியதர்ஷினி முகம் இறுக உடல்நிலை சரியில்லாதவள் போல அங்கிருப்பதை அறிந்துக்கொண்டு அவளுக்காக காத்திருந்தான்.​

மணி பத்தாகவும் கைப்பையை எடுத்து, கூட வேலை பார்க்கும் சுதாவிடம் கையசைத்து தனியாக நடந்தாள். சுதா அவள் வீட்டிற்கு வேறு பக்கம் செல்ல தர்ஷினி மறுபக்கம் நடந்தாள்.​

"நான் வேண்டுமின்னா டிராப் பண்ணவா தர்ஷி?" என்று பைக்கில் அருகே வரவும் அவன் வருகையை எதிர்பார்த்தவள் போல மெதுவாக அவன் பக்கம் திரும்பினாள்.​

-தொடரும்.​

-NNK-79​

நீயென் காதலாயிரு​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-9​

வேண்டாவெறுப்பாய் திட்டி தீர்க்கும் முடிவோடு திரும்பியவளின் பார்வை இந்திரஜித்தின் வலது கை கட்டால் திட்ட வந்த வார்த்தைகள் மாயமாகி "என்னாச்சு?" என்று உயிரே போனது போல துடித்தாள்.​

அவளது உடல்மொழியே அவனுக்காக கவலைக் கொள்வதை அப்பட்டமாக எடுத்துரைக்க, இந்தரஜித் ஆனந்தமாய் வலது கையை பார்த்து "ஒன்னும் ஆகலை தர்ஷி. காலையில சொன்ன பொய்காக ஆக்டிங். ஆனா நீ பதறிட்டு கண்கலங்க தவிக்கறப்ப எனக்கெதுனாலும் பரவாயில்லைனு தோணுது.'' என்றான் ரசனையாக.​

அவன் என்னவோ காதல் வசனம் பேசி ரசித்திருக்க, போன கோபம் பாதி வழியில் நின்று அதிவேகமாய் அவனை திட்ட வார்த்தை அம்புகளாக விழுந்தது.​

"அறிவிருக்கா உனக்கு? எது எதுல விளையாடணும்னு இல்லை. ஆளும் மூஞ்சியும்.​

என்னடா வேணும் உனக்கு? ஒரு நாள் கூட பேசி பழகாத பொண்ணுக்கிட்ட நீயா வந்து பேசிட்டு நிற்கற?" என்று 'ரோடு' என்றும் பாராமல் கத்தினாள்.​

அங்கே அவ்வழியை கடந்த பலரும் இருவரை தான் திரும்பி திரும்பி பார்த்து தேமேயென்று சென்றார்கள்.​

"நிதானமே பிரதானம். ஏன் இப்படி பதறிட்டு இருக்க. நான் உன் மாமன் மகனோட பிரெண்ட் தானே? எனக்கு என்ன ஆனா உனக்கென்னம்மா? ஏதோ காலையில பார்த்தோம். சந்தோஷ் தேடச்சொன்னானு ப்ரியா என்ற பொண்ணு டிரஸ் டிசைனரா இருக்கானு தேடி அலைந்தேன்.​

காலையில பார்க்கவும் வியாபரம் செய்யற கடையில பேச வேண்டாம்னு போயிட்டேன். இப்ப வந்து நலம் விசாரிக்கலாம்னா தாம் தூம்னு குதிக்கற?" என்று பேசவும் சந்தோஷிற்காக தான் என்னை தேடினானா? ஆனால் இவன் பார்வை பேச்சு? என்றவளின் சிந்தனை தடுமாறியது.​

இந்திரஜித் பேசவும் அமைதியாகி நடக்கவும், "எதுக்கு பழியை சுமந்துட்டு வந்துட்ட? அங்கயே இருந்து நான் நகையை எடுக்கலைனு வாதிட வேண்டியது தானே? நீ பாட்டுக்கு கல்யாண வீட்லயிருந்து புறப்பட்டுட்ட?" என்று பேசவும், ப்ரியதர்ஷினி நின்றாள்.​

இந்திரஜித் அருகே வந்து, "ரொம்ப தேங்க்ஸ் அங்க சந்தோஷ் கூட வாய் திறந்து எனக்காக பேசலை. நீங்க அவ திருடலைனு என் மேல நம்பிக்கையா பேசியதற்கு. அதுக்காக இங்க சந்தோஷ் தேட சொன்னதுக்காக என்னை தேடி அலைந்திருக்க வேண்டாம்.​

என்னை என் போக்குல விட்டுடுங்க. நான் திருடலைனு என் மனசாட்சிக்கு தெரிந்தா போதும். அதை சந்தோஷிற்காக நிரூபிக்கணும்னு இல்லை.​

இப்படி பப்ளிக்ல என்னிடம் வந்து பேசாதிங்க. எனக்கு பிடிக்கலை.​

இந்த சந்திப்பு இன்னியோட முடியட்டும். அன்னைக்கு எனக்காக பேசியதுக்கு தேங்க்ஸ்." என்று வணக்கம் வைத்து நடந்தாள்.​

இந்திரஜித் அவளை நடக்கவிட்டு பைக்கை உயிர்பித்தான்.​

திரும்பி பார்க்க கூடாதென்று மனதில் வலுத்துக்கொண்டு நடந்தாள். ஆனாலும் அவள் பின்னால் இந்தர் வருவது உள்ளுணர்வால் அறிந்திருந்தாள்.​

சங்கடமான உணர்வு எவ்வாறு கூறுவதென்று ப்ரியதர்ஷினிக்கே தெரியவில்லை.​

வேகமாய் நடந்து தங்கியிருக்கும் வுமன் ஹாஸ்டலுக்குள் நுழைந்து கேட்டை பூட்டும் நோக்கத்தில் அப்படியே இந்திரஜித் இருக்கின்றானா என்று தேடுவதை முகத்தில் காட்டிக்காமல் விழியால் நாலாபக்கமும் அலசினாள்.​

இந்திரஜித் அந்த தெருவில் இல்லை என்றதும் சிறு ஏமாற்றம் கொண்டது மனம்.​

அவன் வரவேண்டுமென்று எதிர்பார்த்தாயா? என்றது மூளை.​

மனமோ பதில் அளிக்க கூட முடியாமல் சோர்ந்து போய் நேராக அறைக்கு சென்றாள்.​

மதியமே சாப்பிடவில்லை தொண்டைக்குள் உணவு இறங்கவில்லை. மாலையில் பிரட் வாங்கியிருக்க அதில் சக்கரையை போட்டு விழுங்கினாள்.​

இரண்டு பிரட் இறங்கவும் மூன்றாவதை உள்ளுக்குள் தள்ள முடியவில்லை. நன்றாக அன்னையின் கையால் குழைவான சாதம் சூடான குழம்பு, தொட்டுக்க காய்கறி என்று சாப்பிட்டு பழகியிருக்க, இந்த பிரட் எல்லாம் வாயுக்கு சுவை சேர்க்கவில்லை.​

ஏதோ வெறும் வயிற்றோடு இருந்தால் வயிற்றுவலி வந்துவிடும். இங்கே இதயமிருக்கும் இடமே உச்சபட்ச வலியை கொடுக்க, வயிற்று வலியை வேறு இழுத்து வைப்பானேன் என்று சிறிதளவு வயிற்றை நிறைத்து கொண்டாள்.​

இந்திரஜித் தன்னை பார்த்ததை எப்படியும் சந்தோஷிடம் உரைத்திருப்பான். சந்தோஷ் தன்னை பார்க்க வருவானா? அவன் அன்றே சிலையாக நின்றான். இன்று மட்டும் நான் திருடவில்லையென்று அறிந்து ஓடிவருவானா என்ன?​

இரவெல்லாம் இந்திரஜித்தின் புண்ணியத்தில் உறக்கம் தாமதமாக வந்தது.​

அடுத்த நாள் விழிக்கும் நேரம் இந்திரஜித் என்பவனை மறந்து வேலைக்கு புறப்பட்டாள்.​

காட்டன் உடை, மெஸ்ஸில் சூடான டீ, உப்புமா என்று கிடைத்ததை உண்டுவிட்டு வேலை செய்யும் கடையை நோக்கி நடந்தாள். இதுவொரு வசதி நடந்தே வேலைக்கு வந்திடலாம்.​

என்னதான் அரத பழைய இடமென்று சின்ன இடத்தில் தங்க வசதியும் சுவையற்ற மெஸ்ஸும் கிடைத்தாலும், பணிக்கு செல்ல விரும்பியிருந்தாள்.​

பழக்கப்படாத வேலை, ஆனாலும் வண்ண வண்ண உடைகளை எடுத்து காட்டி வாடிக்கையாளரை கண்டு நேரம் ஓடிவிடுகிறது. என்ன கால் கடுக்க நிற்பது தான் கால்வலியை கொடுக்கிறது.​

அந்த கால்வலி தான் திருட்டு பழி சுமத்திய அத்தையின் அன்பு மாறியதை மறக்க, உறங்கவும் வழிவகுக்கிறது.​

அங்கே இவளுக்கு முன்னால் இந்திரஜித் நின்றிருந்தான். கடைஉரிமையாளரிடம், "நேத்து வாங்கிட்டு போன சட்டை எங்கப்பாவுக்கு பிடிச்சிருக்கு சார் அவருக்கு கல்யாண நாள் வருது. பட்ஜெட்டும் எனக்கேத்தது போல இருக்கவும் இங்கயே வாங்கிடலாம்னு வந்துட்டேன்." என்று பேசினான்.​

"நல்லது தம்பி. தம்பி நேத்து கைல கட்டுயில்லையே. என்னாச்சு?" என்று அக்கறையாய் விசாரித்தார்.​

"நேத்து விழுந்துட்டேன் சார். சட்டையில கறை பட்டப்பவே உஷாரா இருந்திருக்கணும். ரிட்டர்ன் போறப்ப விழுந்துட்டேன். நல்ல வேளை ஒன்னும் ஆகலை." என்று பேசியவன், "அண்ண சட்டை வாங்கிட்டு வந்துடறேன்" என்று ப்ரியாவை பார்த்து உரிமையாளரிடம் நழுவினான்.​

ப்ரியா இருக்குமிடம் வந்து ரெடிமேட் ஷர்ட் கேட்டான்.​

"திரும்ப எதுக்கு வந்த?" என்று பற்கடித்து கேட்டாள்.​

"இதென்ன கதையா இருக்கு. இது உன் கடையில்லை. நீ வேலை பார்க்குற. நான் இங்க ஷர்ட் வாங்க வந்தேன். எங்கப்பாவுக்கு கல்யாண நாள் வருது." என்று சின்சியராக ஷர்டை தேர்ந்தெடுத்தான்.​

அவன் கூறுவது அப்பட்டமான பொய். தன்னை காண தான் இப்படி முதல் வாடிக்கையாளராக வந்து நிற்பது புரிந்தது. கேட்டால் மட்டும் இல்லை என்று சாதிப்பான்.​

கடுகடு முகத்தோடு ஷர்ட் எடுத்து தந்துவிட்டு நின்றாள்.​

"அப்பாவுக்கு நான் செலக்ட் பண்ணி எடுத்துக்கறேன். எனக்கு நீ செலக்ட் பண்ணிடறியா தர்ஷி?" என்று சில்மிஷமாய் கேட்டான்.​

மௌவுனமாய் துணியை எடுத்து போட்டு விலையும் சைஸ்ஸும் சொல்லி "வேற டிசைன் பார்க்கறிங்களா சார்" என்று காது கேளாதவளாக பவ்வியமாக கேட்டாள்.​

"இந்த டிசைன் தான் வேண்டும். ஆனா என் சைஸ்கு பெர்பெக்டா பொருந்தணும்." என்றதும் அவன் பேச்சு என்னவோ துணியிலிருக்க கண்கள் அவளை தான் களவாடிக் கொண்டிருந்தது.​

"சந்தோஷோட அத்தை பொண்ணு நான். தயவு செய்து என்னிடம் இப்படி பார்வை வீசாதிங்க" என்று குரல் உசத்தி கூறினாள்.​

"என்ன பார்வை?" என்று தெரியாதவன் போல கேட்டதும், தனக்கு பின்னாலிருந்த கண்ணாடி பிம்பத்தை காட்டி இதுல உங்க கண்ணை பாருங்க. அதுல கண்ட ரசனையும் வழியுது." என்று கூறிவிட்டு "சார் இதை செலக்ட் பண்ணிட்டார்." என்று கைக்கு கிடைத்ததை வாங்கிவிட்டதாக பில் போட அனுப்பினாள்.​

"என்னை விரட்டுறதுலயே இருக்க? ம்ம்ம் எங்க அம்மாவுக்கு ஒரு சேலை வேண்டும். அதையும் எடுத்து கொடு. ஏய் சேலையை இப்படி ஏனோ தானோனு எடுக்காத. எங்கமம்மி காட்டன் சேலை ரப்பா இருக்கற மாதிரி கட்டுவாங்க. அதுல ஒரு கெத்து இருக்கும்." என்று விவரித்தான்.​

ப்ரியதர்ஷினி அவன் கூறியதை கேட்டு எடுக்க திரும்பும் நேரம், நீ கூட காட்டன் சுடி தான் போடுற? காட்டன் தான் பிடிக்குமா?" என்று கையை தடவியபடி கேட்டான்.​

எதற்கும் பதில் அளிக்காமல் திமிரோடு ஒரு சேலையை மட்டும் எடுத்து பில் போட அனுப்பிவிட்டாள்.​

இரண்டு மூன்று வினா தொடுத்து சீண்டி பார்த்தான். ப்ரியதர்ஷினி சுத்தமாய் கண்டுக்கவில்லை. அதன் பலன் அலுவலகம் செல்லும் நேரமும் நெருங்க பில் போட்டு பெற்றுக்கொண்டான். அலுவலகத்திற்கு எடுத்து செல்லும் தனது முதுகுப்பையில் உடைகளை பில் போட்டு எடுத்து வைத்தவன் "வர்றேங்க" என்று பொதுவாய் கூறிவிட்டு சென்றான்.​

அன்வர் இந்திரஜித் சென்றதும் ப்ரியதர்ஷினி அருகே வந்து, "நாளையிலருந்து நீ வேலைக்கு வரவேண்டாம்மா." என்று குண்டைத்தூக்கி போட்டார்.​

"சார்?" என்று கவலையோடு குரல் எழுப்ப, நானும் இரண்டு நாளா பார்க்கறேன். நீ சரியில்லைம்மா. அந்த தம்பி இம்புட்டு காலையில வரணும்னு அவசியமில்லை. அதை மீறி கடை திறக்கறப்பவே வந்து கால் கடுக்க நின்று வியாபாரம் பண்ணிட்டு போறார். காரணம் என் கடை துணியில்லை. இங்க நின்று வியாபாரம் செய்யற உன்னால தான்னு நேத்தே புரிஞ்சுக்கிட்டேன்.​

ஆமாம்மா. நீ நேத்து காலையில இவரை பார்த்ததிலருந்து தனியா தவிச்ச, இன்னிக்கு கதிகலங்கி நின்ற, எல்லாம் பூதக்கண்ணாடில பார்க்காம தெரியுது.​

எதுக்கும்மா அவன் துரத்தணும். பார்க்க நல்லப்பையனா தெரியறான்." என்று இந்திரஜித்திற்கு உதவினார் அவர்.​

"தனக்கிருக்கும் கவலைக்கு மடமடவென வெள்ளமாய் தன் தாய் தந்தை பற்றி உரைத்தாள்.​

மொத்தமாய் உரைத்துவிட்டு நின்றவளிடம், மீண்டும் 'இனி இங்க வேலைக்கு வரவேண்டாம்மா" என்றார்‌ அதே கறார் குரலில்.​

"சார் திருடினு நினைச்சி துரத்தறிங்களா?" என்றாள் வருத்தமாய். இரண்டு மாதம் ஆனதில் ஓரளவு விரைவில் கிட்டிய நற்பெயர் சிதைந்துவிட்டதா? என்று கவலையானாள்.​

"இல்லைம்மா படிச்ச பொண்ணு அதுக்கு ஏற்ற வேலை பார்க்கணும். படிக்காத பொண்ணுங்க இப்படி சேல்ஸ் கேர்ளா வேலை பார்த்தா கரெக்டா வரும். அவங்களுக்கு படிச்ச வேலை கிடைக்காது. இந்த மாதிரி கிடைச்சா தானே உண்டு. அப்படி பார்த்தா உன் வேலை இன்னொரு படிக்காத பொண்ணுக்கு உதவும்" என்று கூறவும் ப்ரியதர்ஷினி கையை பிசைந்து நின்றாள்.​

கடை உரிமையாளர் அன்வரோ, "கவலைப்படாதம்மா எனக்கு தெரிந்த இடத்துல வேலை சொல்லி பார்க்கறேன். நிச்சயம் வேலை கிடைக்கும்.​

நமக்கும் நாலு பெரிய மனுஷங்க தெரியும்மா. இல்லைனா இந்த தி.நகர்ல இத்தனை கடையிருக்கறப்ப நம்ம கடை ஓடுமா. எல்லாம் ரெகுலர் கஷ்டமர் இருக்கறது தான்." என்றவர் கடையில் கல்லாப்பெட்டியில் ஓரமாய் விசிட்டிங் கார்டாக இருந்ததில் அவர் தேடும் கார்டை எடுத்தார்.​

அதிலிருந்த பத்து இலக்க எண்ணிற்கு அழைப்பை தொடுத்தார்.​

முதலில் நலம் விசாரித்து, பேசிவிட்டு ப்ரியதர்ஷினிக்கு வேலை கேட்டு வைத்தார். ப்ரியதர்ஷினிக்கு திகைப்புடன் நோட்டமிட்டாள். அன்வர் பாய் உருது மொழியில் பேசிக்கொண்டிருக்க, தன்னோடு வேலைப்பார்க்கும் மற்றவர்கள் வருவதை கண்டு முறுவல் புரிந்தாள்.​

அன்வரோ கடைசியாக 'மாஷா அல்லாஹ்' என்று கூறி போன் துண்டிப்பை முடித்தார்.​

இந்த அட்ரஸ்ல போய் பாரும்மா. வேலை கொடுக்கறாங்க. அக்கவுண்ட்ஸ் தானே?" என்று கேட்க வேகமாய் தலையாட்டினாள்.​

"சரிம்மா இன்னியோட இங்கயிருக்கறவங்களிடம் சொல்லிடு" என்று கூற, ஆனந்த கண்ணீரோட "சாதி மதம் எல்லாம் ஒன்னுமேயில்லைனு இந்த மாதிரி மனிதாபிமானத்தோட மனிதர்கள் தங்களுக்கு உதவி செய்யறதால தான் தெரியுது. ரொம்ப நன்றி சார்" என்று கும்பிட்டாள்.​

"அட வேலைக்கு போய் பாரும்மா. அப்பறம் நன்றி சொல்லு" என்று அவளை அனுப்பி வைத்தார்.​

ப்ரியதர்ஷினி ஒரு சிறிய வட்டத்தில் ஊருக்குள் இருந்தவள். இன்று அந்த ஊரை தாண்டி, சென்னை வந்து பலதரப்பட்ட மக்கள் புழங்கும் இடத்தில் அவள் மனிதர்களின் மனதை சம்பாதித்து இருக்கின்றாள்.​

அதை எண்ணவே பெருமிதம் பொங்கியது. தன் வாழ்க்கை வட்டம் பெரிதாக பல நல்ல மனிதரை சந்திக்க வாய்ப்புண்டு என்று நம்பினா​

ள்.​

அன்றைய பொழுது மிகவும் ரம்மியமாக சென்றது என்றால் அது மிகையல்ல.​

-தொடரும்.​

-NNK79​

நீயென் காதலாயிரு​

ஹாய் கதை லிங்க் முகநூல்ல ஷேர் பண்ண முடியலை. யாராவது ஷேர் பண்ணினாலும் ஓகே.​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

 
Last edited by a moderator:

admin

Administrator
Staff member
 

admin

Administrator
Staff member

அத்தியாயம்-10​

இந்திரஜித் ப்ரியதர்ஷினி வேலை பார்க்கும் கடைக்கு வெளியே, இரவு அவளை தேடி வர, கடை அடைத்தும் அவள் அங்கேயில்லை‌.​

நகம் கடித்தபடி தூரத்தில் இருந்தவனுக்கு அவள் தங்கிருந்த இடம் தேடி வந்தான்.​

இரவு நேரம் பெண்கள் தங்கும் இடத்தில் இந்திரஜித் நெடுநேரம் இருக்க முடியுமா? அதனால் முகம் வாடி திரும்பிவிட்டான்.​

வீட்டிற்கு வந்து ஒரே புலம்பல். இதில் சந்தோஷிடம் பேச, அவனோ 'ம்ம்ம்' என்று 'ம்' கொட்டினானே தவிர வேறெதும் பேசவில்லை.​

இந்திரஜித்தே "என்னடா 'உம்' கொட்டிட்டு இருக்க? உன் குரலும் டல்லாயிருக்கு?" என்று கேட்டான்.​

சந்தோஷ் அதே சோர்வான குரலில் "விலாசினியிடம் மீட் பண்ணலாமானு கேட்டு சந்திச்சேன். அவளும் சந்தோஷமா வந்தா.​

நான் அவளிடம் 'ப்ரியாவை விரும்பறதா நினைச்சி உனக்கு ப்ரியா மேல கோபமிருந்ததா'னு கேட்டேன். விலா மறைக்காம 'ஆமா ரொம்ப கோபமா வரும்'னு சொன்னா.​

அடுத்து 'எந்தளவு கோபம்?' என்று கேட்டேன். அவ எதுவும் சொல்லாம யோசித்தா. அவ யோசிக்கவும் நான் உடனே 'நகையை எடுத்து ப்ரியா சூட்கேஸ்ல வச்சி அவ மேல பழியை சுமத்தற அளவுக்கு கோபமா'னு கேட்டுட்டேன்டா. அவ நான் அப்படி பேசவும் கோச்சிக்கிட்டா" என்று ஸ்ருதி குறைந்து பதில் தந்தான்.​

"என்ன சொன்னாங்க உன் லவ்வர்." என்று நக்கலாய் கேட்டான்.​

"என்ன சொல்வா? நகை காணாம போனதால ப்ரியா மேல பழி வந்து, அவ போனதே நீங்க சொல்லி தான் தெரியும். இதுல நானே அவமேல பழி போடுவேனா? இதான் நீங்க என்னை காதலிச்ச லட்சணம். அப்படின்னு நடையை கட்டிட்டு வேகமா போயிட்டா." என்று கூறியதும் இந்திரஜித்தோ அமைதிக்காத்தான்.​

சந்தோஷ் இயல்புக்கு திரும்பி "சரி நான் நாளைக்கு சென்னை வர்றேன். ப்ரியாவோட பேசிட்டு அவ மனசை நோகடிச்சதுக்கு மன்னிப்பு கேட்கணும்." என்றதும் இந்திரஜித் தொலைப்பேசி பேச்சிற்கு வந்தான்.​

"ஆஹ் வா வா." என்று அணைத்து விட்டான்.​

'விலாசினி நகையை எடுத்து ஒளிச்சி வச்சிருப்பாளா? ஆனா நகை பழி போட்டதால தான் பிரிவு வந்ததே அவளுக்கு சந்தோஷ் சொல்லி தான் தெரியும்னா? அப்ப யாரு? இல்லை விலாசினியே நடிக்கறளா?' என்று சிந்திக்க, மறுபக்கம் போனை வைத்த சந்தோஷும் 'நான் காதலிக்கற விலாசினி அப்படிப்பட்டவளா? சே, அப்படியெல்லாம் இருக்காது. ப்ரியாவை நான் விரும்பறேன்னு ஒதுங்கி நின்றவ, நானா தானே இப்ப காதலிப்பதா சொன்னேன். அவளா நெருங்கலையே என்று தலையை தாங்கி கொண்டான்.​

இந்நாள் வரை காதலை கூறாத வலியென்றால், இப்பொழுது காதலை உரைத்து இப்படியொரு குழப்பம். ஒரு வேளை விலாசினி செய்யாத போது அவளிடம் இப்படி கேட்டிருந்தால், அவளை பொறுத்தவரை அளவுக்கு அதிகமாக தன் பேச்சு காயப்படுத்தியிருக்குமே என்று வருந்தினான்.​

இவனின் சிந்தனையை ஆக்கிரமித்த விலாசினியும், 'காதலிச்சா என்ன வேண்ணா பேசுவாரா? நான் ஏன் அவ மேல பழி சுமத்தணும். எவ்ளோ ஆசையா இருந்தேன். அவரா வந்து விரும்பறதா சொல்லும் போது. இப்படி நெஞ்சை அறுக்கற மாதிரி கேட்டுட்டாரே.' என்று குமறி குமறி அழுதாள்.​

அப்பொழுது சந்தோஷ் தங்கை சந்தியாவும், தன் அண்ணன் கண்ணன் இருவரும் பைக்கில் வந்தார்கள்.​

கையில் திருமண ஆல்பம் இருந்தது. ஜன்னல் வழியே பார்த்துவிட்டு அவசரமாய் கண்ணீரை துடைத்தாள்.​

கற்பகம் வாசலில் வரவேற்று சிற்றுண்டி கொடுத்து உபசரித்து, "நேத்தே அண்ணியிடம் கேட்டேன். கல்யாண ஆல்பம் வந்துடுச்சானு. கொண்டா சந்தியா பார்ப்போம்." என்று வாங்கி பார்த்தார்.​

சந்தோஷ் பேசிய பேச்சை ஒதுக்கிவிட்டு கல்யாண ஆல்பத்தை பார்க்க அன்னையருகே அமர்ந்தாள் விலாசினி.​

ஆல்பத்தில் சந்தியா, சந்தோஷ், ப்ரியதர்ஷினி, சந்திரா, விலாசினி, கண்ணன் என்று ஆறு பேர் கொண்ட புகைப்படங்களே முதலில் கண்ணை பறித்தது.​

விலாசினிக்கு ப்ரியா புகைப்படம் கண்டதும் சிறு எரிச்சல் மண்டியது.​

வேகமாய் பக்கத்தை திருப்ப, ப்ரியா இல்லாத ரிசப்ஷன் புகைப்படமேயில்லை எனலாம். திருமணம் முடியும் வரை எல்லா படத்திலும் முக்கால்வாசி சந்திராவோடு இணைந்து நின்றிருந்தாள்.​

சந்தியா கூட சில நேரம் ஆளைக்காணோம். ப்ரியா தான் பத்திரமாய் மொய் கவர், கோல்டு, கிப்ட என்று அனைத்தும் வாங்கி பையை பத்திரமாக பானுமதியிடம் ஒப்படைத்தது.​

அப்படிப்பட்டவளை எப்படி பழி சுமந்தவளாக மாறி சண்டையிட்டனரோ? ப்ரியா திருடுபவள் அல்ல, அப்படியென்றால் பழிசுமத்தியது யாராக இருக்கும்.' என்ற சிந்தனை வேரிட்டபடி தான் புகைப்படத்தை அங்குலம் அங்குலமாக பார்த்தாள்.​

தன் தாய் கற்பகம் ப்ரியாவை முறைத்து நிற்பது கண்ணில்படவும், அதே சமயம், "இனி வர்ற போட்டோ எல்லாம் ப்ரியாவை காணோம். அப்ப தான் வெளியே போயிட்டாளா?" என்று கற்பகம் சந்தியாவிடம் வினா தொடுத்து கேட்டார்.​

"ஆமா அத்தை. நகையால ஒரு அக்கப்போர் வந்துச்சே அப்ப கிளம்பிட்டா. இனி வர்ற போட்டோல ப்ரியா இருக்க மாட்டா. எங்க அக்காவோட மாமியார் கூட ஆல்பம் பார்த்து கேட்டாங்க. அந்த பொண்ணு எங்க கல்யாணம் முடிஞ்சி போட்டோவுல அவ்வளவா காணோம்னு.​

அம்மா என்ன சொல்லறது என்று வயிற்றுவலினு ஒதுங்கிட்டானு சமாளிச்சாங்க." என்று சந்தியா பதில் தரவும், கற்பகம் 'உம்கும்' என்று சலித்தார்.​

விலாசினிக்கு தன் தாய் ஏதேனும் ப்ரியா மீது அதிருப்தி அடைந்தாரா? நானாவது சந்தோஷ் அத்தான் ப்ரியா கூடவே சுத்துவதால் அடிக்கடி தனியாக வந்து சந்தியாவிடம் நின்றேன். என்னை விட அம்மா தான் மணப்பெண் அறையில் வாசமிட்டது. அப்படியென்றால்?' என்ற சந்தேகத்தோடு அன்னையை காண, சந்தியாவோ "அத்தை விலாசினி போட்டோ தனியா கேட்டிங்களாமே. போட்டோக்காரர் கொடுத்தார்" என்று கொடுத்தாள்.​

"ஏன்டிம்மா தனியா எம்பொண்ணை எதுக்கு எடுப்பாங்க? எல்லாம் கல்யாணத்துக்கு தரகரிடம் காட்ட பொண்ணு போட்டோ கேட்கறாங்க. உங்கண்ணாவுக்கு கட்டிக்கொடுக்க ஆசைப்பட்டேன். அவன் தான் ப்ரியா பின்னாடி சுத்தறான். நாளைக்கு அவளை பார்க்க சென்னைக்கு போறானாமே? உங்கம்மா சொல்லி ஒரே புலம்பல்.​

என்ன தான் பிரச்சனை? நகையை முதல்ல காணோம். பிறகு ப்ரியாவிடம் கொடுத்ததா உங்கம்மா தான் சொன்னாங்க. பிறகு அந்த நேரம் எந்த சண்டையும் வேண்டாம்னு சூழ்நிலையை சமாளிச்சேன். ப்ரியா தான் எடுத்தானு விருந்து அன்னிக்கு 'ப்ரியா வீட்ல ஏன் வரலை'னு கேட்க அண்ணி கண்ணு கலங்கி ஒப்பாரி வைக்கிறாங்க. சரி என்னவோ இரண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு விஷயத்தை ஆறப்போட்டா தன்னால சரியாகிடும்னு பார்த்தா, 'உன் அண்ணன் ஒரு திருட்டு கழுதை பின்னாடி ஓடுறான்'னு அண்ணி தினமும் போன் பண்ணி புலம்பறாங்க. ஏன் உங்கண்ணாவுக்கு வேற பொண்ணே கண்ணுல தெரியலையா?" என்று கேட்டார்.​

சந்தியாவோ ஆல்பத்தை பத்திரப்படுத்தி மூடிவைத்து, "அதெல்லாம் அவனிடம் பலதடவை அம்மா சொல்லிட்டாங்க அத்தை. அவன் எங்க எங்க பேச்சை கேட்கறான். ப்ரியா ப்ரியானு அவ பின்னாடி சுத்தறான்." என்று ஆற்றாமையோடு பேசினாள்.​

வீட்டில் பானுமதி சிங்கமுத்துவிடம் நிறைய வாக்கு வாதம் செய்துவிட்டான் சந்தோஷ். அதன் பிரதிபலிப்பே சந்தியா பேச்சு.​

"என்னமோமா, தரகரிடம் விலாசினி போட்டோ கொடுத்து மாப்பிள்ளை தேடலாம்னு உங்க மாமா சொன்னார். அதனால தனியா போட்டோ எடுத்தது." என்று கவரை பத்திரப்படுத்திட சென்றார்.​

விலாசினி வேறொரு சிந்தனையோடு அறைக்குள் அடைந்திட, கண்ணனோ "நமக்கு எப்போ கல்யாணம் சந்தியா" என்று அவளை நெருங்கினான்.​

"ஆசை தோசை முதல்ல விலாசினி அண்ணிக்கு கல்யாணம் நடக்கும் அப்பறம் தான் நமக்கு. நான் செகண்ட் இயர் படிக்கிறேன் தெரியுமா தெரியாதா?" என்று கண்ணனிடமிருந்து தள்ளி வந்தாள்.​

"சின்ன பொண்ணு ஆனா விவரம் தான்." என்று தன்னிடமிருந்து தள்ளி தள்ளி செல்பவளை கண்டு புன்னகைத்தான்.​

அதன் பின் கண்ணன் கூடவே திரும்பி பைக்கில் புறப்பட்டாள் சந்தியா.​

வீட்டில் தந்தை இன்னமும் வராததால், கற்பகம் விலாசினி தனியாக இருக்க, "ஏன் அம்மா ப்ரியா நகை திருடியிருப்பானு நீ நம்பறியா?" என்றாள்.​

"எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ? யாருக்குடி தெரியும்? நமக்கேன் வம்பு" என்று இரவு சப்பாத்தி செய்ய மாவு பிசைவதற்கு செல்ல பின்னாடியே சென்றாள் விலாசினி.​

"உனக்கு சந்தோஷை ப்ரியா பின்னாடி சுத்தறது பிடிக்கலை. அதனால அவ மேல பழி சுமத்தினியா?" என்று தன் அன்னை என்றும் பாராது கேட்டாள்.​

எதிரே துவண்டிருப்பது தன் காதலன் சந்தோஷ் அல்லவா! அதற்காக தாயிடம் மல்லுக்கட்டி வார்த்தையை பிடுங்க ஆரம்பித்தாள்.​

"என்ன பேச்சுடி இது. பழி சுமத்தறாங்களா பழி. எனக்கு சந்தோஷ் அவ பின்னாடி போறது பிடிக்காது. உன்னை அவனுக்கு கட்டி வைச்சி, சந்தியாவை கண்ணனுக்கு கட்டி வைச்சி பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்க நினைச்சேன். ஆனா சந்தோஷ் அவ பின்னாடி போறான் என்ன செய்ய? அவ்ளோ தான்னு கை கழுவிட்டு உனக்கு மாப்பிள்ளை தேடறோம்" என்று பேசாமல் எழுந்து விட்டார்.​

தந்தை ஆறுமுகம் வரவும் விலாசினி மேற்கொண்டு பேசவும் தயங்கி நாளை கேட்டுப்போமென விஷயத்தை தள்ளிப்போட்டாள்.​

எப்படியும் சந்தோஷ் நாளை ப்ரியாவை பார்க்க போவதால் தானும் நாளை அன்னையிடம் விலாவரியாக கேட்போம். அப்படி இதற்கெல்லாம் காரணம் அன்னையாக இருந்தால்? என்று என்னும் போதே விலாசினி மனம் கதறியது.​

சந்தோஷை பிடிக்கும் ஆனால் அவனுக்கு ப்ரியாவை பழிசுமத்திய இந்த வீட்டில் காலடி வைப்பானா? காலடி வைக்கவே யோசிப்பவன் தன்னை மணப்பானா? முதலில் அவன் தன்னை சந்தேகிப்பது நியாயமா? என்று கடைசியாக அவன் கேட்ட விஷயத்தில் நின்றாள்.​

யாராகயிருந்தாலும் இப்படி ஐயம் வருவது இயல்பென மனம் எடுத்துரைக்க சந்தோஷ் மீதுயிருந்த கோபம் ஓடியது. ஆனால் அன்னை மீது காரணமற்ற கோபம் உள்ளத்தில் படர்ந்தது.​

___​

அடுத்த நாள் காலை கடைப்பக்கம் வரவும் கடை உரிமையாளர் அன்வரோ, "என்ன தம்பி கடையில துணியை தேடாம பொண்ணை தேடறிங்களே. தப்பு தம்பி ஊர்விட்டு ஊர் வந்து பிழைக்க பார்க்கற பொண்ணிடம் பின்னாடி சுத்தறது. அதுவும் நீங்க அவளோட அத்தை பையனோட பிரெண்ட். இப்படி பண்ணறது நல்லாவாயிருக்கு?" என்றதும் தன் குட்டு வெளிப்பட்டதால் கடைக்காரரிடம் பேசமுடியாது நின்றான் இந்திரஜித்.​

"இனி இங்க துணி வாங்க வராதிங்க தம்பி" என்று கூறவும் இந்திரஜித் ப்ரியதர்ஷினியை காண அவளோ இந்தர் இருப்பதை கவனிக்காதது போல மற்றவரிடம் நன்றாகவே சிரித்து பேசி வேலையை கவனித்தாள்.​

இந்திரஜித் மெதுவாக கடையிலிருந்து வெளிவந்துவிட்டான். இன்று இந்தருக்கு அலுவலகம் விடுமுறை.​

இன்னும் இரண்டு மணி நேரத்தில் சந்தோஷ் வந்துவிடுவான் அப்பொழுது தர்ஷூவை பார்ப்போமென வீட்டுக்கு நடையை கட்டினான்.​

இந்திரஜித் போனதும் தான் ப்ரியதர்ஷினி நிம்மதியானாள்.​

"தேங்க்ஸ் சார். நீங்க கண்டிக்காம இருந்தா அவர் திரும்ப திரும்ப இங்கயே சுத்திட்டு இருப்பார்.​

எனக்காக அப்பா ஸ்தானத்துலயிருந்து யாரும் இதுவரை பேசியதில்லை.​

நீங்க தான் முதல் முறை இப்படி பேசறிங்க. இதை என் வாழ்வில் நான் மறக்க மாட்டேன். நீங்க வேலைக்கு ரெகமெண்ட் பண்ணி கொடுத்த இடத்தில நல்ல பெயர் வாங்கி உங்களுக்கு களங்கம் வராம பார்த்துப்பேன்." என்று நன்றி தெரிவித்தாள்.​

"பெரிய பெரிய வார்த்தை பேசாதம்மா. எனக்கும் இரண்டு மகள்கள் இருக்காங்க. அதனால பார்க்குற பொண்ணுங்க மகளா தான் கண்ணுக்கு தெரியறாங்க. அந்த அல்லா உனக்கு நல்லதே செய்வார்.​

நீ தினமும் கும்பிடற கடவுளை நம்பும்மா.​

எப்பம்மா அங்க வேலைக்கு வரச்சொன்னாங்க?" என்று கேட்டார்.​

"மூன்று நாள் இருக்கு சார். வர்ற புதன் தான் வரச்சொன்னாங்க. அதுவரை சும்மா தானே இருப்பேன். இங்க வந்து வேலை பார்க்கறேன் சார்" என்றாள் பணிவாக.​

"ஆகட்டும்மா" என்று அனுப்பி வைத்தார். கூடுதலாக இதுவரை வேலை பார்த்ததற்கு சம்பள பணத்தையும் கணக்கிட துவங்கினார்.​

மதியம் போல சந்தோஷ் வந்து சேரவும், இந்திரஜித் அவனை அழைத்து வந்து கடை முன் நிறுத்தினான்.​

இந்திரஜித் நிற்பதை பார்த்து கண்டுக்காத ப்ரியதர்ஷினி, சந்தோஷ் வந்து நிற்கவும், கடைமுதலாளியை தான் பார்த்தாள்.​

அவரோ 'இதுயாரு?' என்பதாக பார்வையால் கேட்டுமுடிக்க, "சந்தோஷ் சார் என்னோட மாமா பையன். அத்தை இவனுக்கு தான் என்னை கட்டி வைக்க நினைச்சாங்க. நான் அவனிடம் பேசிட்டு வர்றேன் சார். இனி என் வாழ்க்கையில தலையிட வேண்டாம்னு சொல்லிட்டு வர்றேன் சார்" என்றுரைத்தாள்.​

அன்வரோ உணவு நேரமென்பதால் சலுகை கொடுத்தார்.​

ப்ரியா சென்றதும் அருகேயிருந்த தோழிகளோ, எட்டி எட்டி பார்த்து சாப்பிட சென்றார்கள்.​

அன்வர் பாய் பெரும்பாலும் இளகிய மனம் கொண்டவர். தன்னிடம் வந்தவருக்கு உதவும் குணமுடையவர். அதனால் தற்போது பணிக்கு வந்த ப்ரியாவிடம் காட்டும் அக்கறையை தரம் பிரிக்கவில்லை.​

உதவு குணம் கொண்டவருக்கு புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்ன? பழைய ஆட்களென்ன? இரண்டும் சமம் தானே.​

சந்தோஷ் இருக்குமிடம் வந்தவள், "என்ன சந்தோஷ்? எதுக்கு இங்க வந்த?" என்று கடுகடுவென கேட்டாள்.​

"நீ தான் சொல்லணும் ப்ரியா. இங்க ஏன் வந்த? எதுக்கு கஷ்டபடணும்? அங்க பழி சுமத்தினாலும் நீ பாட்டுக்கு உன் வேலைக்கு போயிட்டு வரவேண்டியது தானே. அப்பா சேர்த்துவிட்ட வேலைனு தானே வேண்டாம்னு உதறிட்ட?" என்று கேட்டான்.​

"இதில் என்ன சந்தேகம். ஒதுங்கணும்னு முடிவான பிறகு மொத்தமா வந்துடணும். அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நகை காணோம்னு என் மேல பழிசுமத்தி பார்த்தாச்சு. அதே மனசுல வச்சிட்டு நாளைக்கு கடையில ஏதாவது காணோம்னா என்னை தான் சந்தேகத்தோட பார்ப்பிங்க. வரவு செலவு கணக்கெழுதற வேலை. பணம் கொடுக்கல் வாங்கல்னு இருந்து அதுவா காணாம போனாலும் என்னை மாமா ஒர் பார்வை பார்த்துட்டா? என் மனசு செத்துடும். ஒவ்வொரு முறையும் தீக்குளிக்க முடியுமா சொல்லு?​

அதான் எதுக்கு வம்புனு நான் மொத்தமா வந்துட்டேன். இந்த வேலை எனக்கு பிடிச்சிருக்கு. இந்த இடம் எனக்கு பிடிச்சிருக்கு. இங்கிருக்கற மனுஷங்க ரொம்ப பிடிக்குது.​

என்ன தான் காலம் காலமா பழகி அன்பானவங்க பழியை போடறது ஒரு ரகம்னா, என்னிடம் கொஞ்ச நாள் பழக்கத்துல நான் எதனால இங்க வந்து வேலை பார்க்கறேன்னு தெரிந்தும் எனக்கு உதவி செய்யற அன்பானவங்களும் இங்க இருக்காங்க." என்றுரைத்தாள்.​

"எங்கப்பா அம்மாவை யோசிக்கற? என்னை யோசிக்கலை." என்று கேட்டான் சந்தோஷ்.​

ப்ரியாவோ "ஒருவிதத்துல இந்த பிரிவு உனக்கு சாதகமா போகும் சந்தோஷ். அத்தை மாமாவுக்கு என்னை அவங்க வீட்டு மருமகளா பார்க்க ரொம்ப ஆசை. இப்ப அது நடக்காது. இதை பயன்படுத்தி நீ விலாசினி விரும்பறதை சொல்லி கல்யாணத்தை முடிக்கலாம்.​

எத்தனை நாளைக்கு தான் என்னை பார்க்க வர்ற மாதிரி அவளை ரூட் விடுவ?​

அவ என்ன தாட்ஸ்ல இருக்காளோ? பட் இந்த சந்தர்ப்பத்தை விடாத. அத்தை மாமாவிடம் பேசி அவளை மேரேஜ் பண்ணிடு.​

நான் உன் பிரெண்ட் எப்பவும் பிரெண்டா தான் இருக்க ஆசைப்படுவேன். என் நலனை நான் பார்த்துப்பேன்." என்றாள்.​

இந்தருக்கோ எதற்கு இத்தனை விரக்தி இவளுக்கு? என்று கோபம் முளைத்தது.​

"உனக்கு உன் மேல பழியை சுமத்தியது யாருனு தெரியும் அப்படி தானே?" என்று கேட்டான் சந்தோஷ்.​

ப்ரியா நொடியில் பேசா மடந்தையானாள்.​

தன்னை சமனிலைப்படுத்தி, "தெரியும். ஆனா அதை உன்னிடம் சொல்ல எனக்கு இ்ஷ்டமில்லை." என்றாள் தர்ஷி.​

"அப்போ விலாசினி தான் இதை செய்தாளா?" என்று கேட்டதும் ப்ரியா முகம் கோபமானது.​

"முட்டாள்தனமா பேசாத சந்தோஷ். நீ அவளை விரும்பற. அப்படியிருக்கறப்ப அவமேல பழிசுமத்தாதே. ஒரு இடத்துல கெட்டது நடந்தா அதை யார் செய்தானு பார்க்கறப்ப, தவறு செய்தவங்களை அடையாளம் காணறதை விட ரொம்ப முக்கியமான விஷயம், நம்ம மேல அன்பு செலுத்தற நம்பிக்கையான ஆட்களை சந்தேகப்படக்கூடாது.​

இதே மாதிரி அவளிடம் கேட்டு தொலைக்காத. பிறகு உன் காதல் சொல்லாமலே... புட்டுக்கு... 'புட்டுக்கும்' என்று கூற வந்து நிறுத்திவிட்டாள்.​

"வேண்டாம் என் வாயால எதையும் உச்சரிக்க மாட்டேன். அப்பறம் தாதஸ்து தேவதைகள் வந்துடப்போகுது.​

என்னை பத்தி யோசிக்கறதை விட்டுட்டு, ஒழுங்கு மரியாதையா உன் காதலை சொல்லி அத்தை மாமாவிடம் பேசி விலாசினியை கல்யாணம் பண்ணற வழியை பாரு. அங்கிருந்து வந்துட்டான். எல்லாம் இவனை சொல்லணும்" என்று அருகேயிருந்த இந்திரஜித்தையும் திட்டினாள்.​

சந்தோஷ் 'விலாசினி இல்லைனா யாரு?' என்ற குழப்பமான முகத்தோடு நிற்க, ப்ரியதர்ஷினி திரும்பி செல்லும் முடிவோடு இரண்டெட்டு எடுத்து வைத்தாள்.​

அவளை பாய்ந்து வந்து கரம் பற்றினான் இந்திரஜித்.​

"எங்க ஓடற? அவன் லைப்பை விட்டு தள்ளு. எனக்கு ஒரு முடிவை சொல்லு. நீ என்னை விரும்பறியா?" என்று அவள் கரத்தை பிடித்திருப்பதிலும், வார்த்தையிலும் அழுத்தமாய் கேட்டான்.​

'இந்நாள் வரை பார்வை பேச்சு தினுசாக உள்ளதென ஒரு கணக்கில் தன்னை அவன் 'சைட்' அடிப்பதாக நினைத்திருக்க, இப்படி சந்தோஷ் எதிரே 'காதலிக்கின்றாயா?' என்றதும் ப்ரியதர்ஷினிக்கு நடுக்கம் கூடியது.​

சந்தோஷ் உறவுக்காரன் என்றால் கூட தொட்டு பேச அனுமதித்தது இல்லை. இப்படி உரிமையாய் கையை பிடித்து வம்பிழுக்கும் இந்திரஜித்தை கண்டு அதிர்ந்தவளாக தர்ஷினி நின்றாள்.​

-தொடரும்.​

-NNK79​

நீயென் காதலாயிரு​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-11​

இந்திரஜிதின் பார்வைக்கு பதில் சொல்லாமல் விடுவிக்க போவதில்லையென்ற நிலையில் சந்தோஷை விடுவிக்க கூற சொன்னாள்.​

அவனோ "என்னை தான் இனி உன் லைப்ல தலையிடாதனு சொல்லிட்டியே. நான் என் பிரெண்டை தடுக்க மாட்டேன்.​

அவனுக்கு நீயே பதில் சொல்லு. அவன் உன்னை பார்க்க தான் சந்திரா கல்யாணத்துக்கே வந்தான்." என்று அதிர்ச்சி தரவும் ப்ரியதர்ஷினியோ கூடுதல் திகைப்போடு இந்தரை ஏறிட்டாள்.​

சந்தோஷே தொடர்ந்து காரணம் உரைத்தான் "நான் உன்னை பத்தி பேசிட்டே இருக்கவும், 'அதென்னடா உன் லவ்வர் பத்தி பேசறப்ப எல்லாம் ப்ரியா ப்ரியா ப்ரியானு ஜெபிக்கற யாரு அது?'னு கேட்டான். உன் போட்டோ காட்டினேன்.​

அதுக்காக எல்லாம் காலேஜ் படிக்கறப்ப தேடி வரலை. அவனுக்கு மேரேஜ் பார்க்கறப்ப யாரு மாதிரி பொண்ணு பார்க்கணும்னு அவங்க அம்மா கேட்டதும் உன் முகம் தான் பளிச்சுனு நினைவு வந்துச்சாம். என்னிடம் அவளை இரண்டு தடவை போட்டோல பார்த்ததும் ஏன்டா அந்த செகண்ட் உன் அத்தை பொண்ணு முகம் நினைவு வரணும்னு கேட்டான்.​

எனக்கு என்ன தெரியும்?னு கிண்டலா கடந்துட்டு பத்திரிக்கை வைக்கிறப்ப, 'உன் பெரிய தங்கை சந்திரா கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவேன்னு சொன்னான்.​

காரணம் உன்னை பார்க்கற ஆவல். அதனால தான் வந்ததும் வராததும் உன்னை வம்பிழுக்க பார்த்தான்.​

உன்னோட பேச பழக ட்ரை பண்ணினான்.​

நீ அவனிடம் முகம் திருப்பிட்டு நம்ம சொந்தங்களை வெல்கம் பண்ணியதும் அவன் உன்னையே தான் பாலோவ் பண்ணிட்டு இருந்தான்." என்று இந்திரஜித் காதலிப்பதற்காகவே வந்ததை எடுத்துரைத்தான்.​

அதனை கேட்ட ப்ரியதர்ஷினிக்கு சுறுசுறுவென்ற கோபம் மூண்டது.​

இதுவரை கையை உதறி உருவ முயன்றவள், "அசிங்கமாயில்லை சந்தோஷ். அவன் என்னை விரும்ப தான் இங்க வந்ததேனு சொல்லற, இதே சந்தியாவை இந்திரஜித் விரும்ப வந்திருந்தா இப்படியா சந்தோஷப்பட்டு வேடிக்கை பார்ப்ப? நான் என்றதும் கேவலமா போச்சா? என்னை இவனுக்கு கோர்த்துவிடற" என்று கத்தினாள்.​

"சே அப்படியில்லை ப்ரியா. அவனும் நானும் பிரெண்ட்ஸ். நீயும் நானும் பிரெண்ட்ஸ். அதனால உங்க கூட்டணி நல்லாயிருக்கும்னு நினைச்சேன்." என்று மறுத்து பேச, ப்ரிய்வோ கோபமாய் நின்றாள்.​

இதில் இந்திரஜித்தோ "ஏய் இதே நல்லா பேசி பழகிட்டு இருக்கறப்ப, சந்தோஷ் நீயா எனக்கொரு மாப்பிள்ளையை செலக்ட் பண்ணுடானு சொல்லி அவன் 'என் பிரெண்ட் இந்திரஜித் இருக்கான் ரொம்ப நல்லவன்'னு உங்க வீட்ல பேசினா, நீயும் உங்க வீட்லயும் யோசித்திருக்க மாட்டிங்க? அப்படி தான் சந்தோஷ் நினைச்சது. இந்த கோர்த்துவிடற வேலையில்லை." என்று நண்பனுக்காக வக்காளத்து வாங்கினான் இந்திரஜித். அப்பொழுதும் ப்ரியா கையை விடவில்லை.​

"நீ பேசாத. என்னையே பாலோவ் பண்ணிட்டு இருந்ததால தான் நான் நகையை எடுக்கலைனு உனக்கு அக்கியூரெண்டா தெரிந்திருக்கு. இல்லைனா நீயும் அங்கிருந்தவங்களை போல திருடினு நினைச்சி கை கழுவியிருப்ப. பட் நான் திருடலைனு தெரியவும் என் கையை பிடிச்சிட்டு உயிரை வாங்கற. விடுடா கையை" என்று மரியாதையை காற்றில் பறக்க விட்டு திட்டினாள்.​

அதற்குள் துணி கடை உரிமையாளர் அன்வர் வந்துவிட்டார்.​

"என்னம்மா என்னாச்சு. என்ன தம்பி உங்க சொந்தக்கார பொண்ணு என்பதால தான் பேச அனுமதிச்சது.​

இப்படி அந்த தம்பி கையை பிடிக்க விட்டு வேடிக்கை பார்க்கறிங்க. தம்பி கையை விடுங்க, கையை விடுங்கனு சொல்லறேன்ல" என்று அதட்டவும் கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்திரஜித் கையை விடுவித்தான்.​

அடுத்த நிமிடம் ப்ரியதர்ஷினி கைகள் வலியில் இருந்து முகம் சுணங்கி கையை நீவினாள். அன்வர் பாயை பார்த்து ஒரு நன்றியை விழியால் உரைத்திடவும் மறக்கவில்லை.​

"சார் எனக்கு ஒரு விஷயத்தை க்ளியர் பண்ண சொல்லுங்க. நகையை இவ மேல பழிச்சுமத்தியது யாருனு அவளுக்கு தெரியும். ஆனா சொல்லமாட்டேங்கிறா?" என்று சந்தோஷ் கூறவும், அன்வர் ப்ரியாவை பார்க்க, "யாருனு தெரிந்து என்ன பண்ணப்போறான் சார். எனக்கு கூடயிருக்க வேண்டிய தருணம் என் பிரெண்ட் சந்தோஷ் வாயை மூடிட்டான். இப்ப வந்து என்ன செய்வானாம். அவனை போக சொல்லிடுங்க சார்" என்று கூறிவிட்டு அன்வர் பின்னால் நின்றாள்.​

"அப்ப பிரச்சனை வேண்டாம்னு தவிர்க்க பார்த்தேன் பாய். இவ மேல நான் பழிசுமத்தினேனா?" என்று சந்தோஷ் தன் தோழி, அன்று அவள் பக்கமில்லையென்று தன்னை தவறாக எண்ணிவிட்டாலே என்று வருந்தினான்.​

"யா அல்லா நடந்ததை பேசி என்ன மாறப்போகுது. நடக்கப்போற விஷயத்தை பாருங்க. அவ இனி நல்லபடியா வேலை பார்த்து வாழ்ந்தா போதும். நீங்க கிளம்புங்க" என்று முடிக்க பார்த்தார்.​

இதுவரை தன்னவளை முறைத்து பார்வையாலே அனலை தெளித்தவன், "நடந்ததை பேச வேண்டாம் சார். நடக்கபோறதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க. அவ என்னை விரும்பறாளா இல்லையானு." என்று தேங்காய் உடைப்பது போல இந்திரஜித் கேட்டதும் "சார் நான் கடைக்கு போறேன். யாருனு தெரியாதவனிடம் தேவையில்லாத பதில் சொல்ல எனக்கு அவசியமில்லை" என்று கிளம்பினாள்.​

"தர்ஷி ஓடாத. பதில் சொல்லிட்டு போ." என்ற இந்தரின் குரல் அவளை இம்மியும் அசைக்கவில்லை.​

பிற்பாதி நேரங்கள் எப்படி கழிந்தது என்று இறைவனுக்கே வெளிச்சம்.​

"இரவு அன்வர் பாயே தங்கிருக்கும் இடம் வரை வந்து விட்டு சென்றார்." சந்தோஷோ அன்றிரவு இந்திரஜித் வீட்டில் தங்கினான்.​

இருவரும் உம்மென்று ஒருவர் முகத்தை ஒருவர் தரிசிக்க மோகன் நுழைந்தார்.​

"மருமகளை பார்த்திங்களா? என்ன சொன்னா?" என்று கேட்டவரிடம், "அப்பா ஆல்ரெடி அம்மாவிடம் சொல்லிட்டேன். நீங்க வேற இம்சை பண்ணாதிங்க. அவளுக்கு நான் யாருனே தெரியாதவன்னு சிலிர்த்துட்டு போறா" என்று கடுகடுத்தான்.​

வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மோகனோ, "தம்பி அப்பா சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கா. அவளும் உன்னை போலவே ஐடி முடிச்சிருக்கா. இப்ப அவளுக்கு வரன் தேடறாங்க. உனக்கு ஓகேனா சொல்லு. நாளைக்கே பொண்ணு பார்க்க போவோம்.​

உனக்குன்னு ஒருத்தியை நீயேன் தேடற நாங்களே பார்த்துக்கறோம். நீ ஏன் கஷ்டப்படற? அம்மா சொந்தத்துல கூட அவளோட ஒன்னுவிட்ட தம்பி பொண்ணு..." என்று பேசிக்கொண்டு செல்ல, "அப்பா நிறுத்தறிங்களா? எனக்கு லாஸ்ட் டைம் என்ன சொன்னிங்க. நீயா எங்களுக்கு மருமகளை பாருடானு சுதந்திரம் தந்திங்க. நானும் மேட்ரிமோனி முழுக்க அலசிட்டேன். என்னால தர்ஷியை தவிர யாரையும் யோசிக்க முடியலை. கண்ணை மூடினா அவ மட்டும் தான் நினைப்புல வர்றா.​

அதனால தான் சந்தோஷிடம் என் மனசை திறந்து பேசியது.​

அவனும் ப்ரியாவை நான் தான் மேரேஜ் செய்யறதா அம்மா அப்பா கனவு காணறாங்க. அவங்களோட ஆசை இடிந்துப்போகும்னு புலம்பியவனுக்கு, நான் ப்ரியதர்ஷினியை மேரேஜ் பண்ண மனபூர்வமா ஓகே சொன்னதும் தான் அவனும் எப்படியும் ப்ரியாவுக்கு வேறயொருத்தனை அத்தை பார்க்கறதுக்கு நானே உனக்கு கட்டிவைக்க பேசறேன்னு சொன்னான். இப்ப இவங்களுக்குள் போராட்டம் என்றால் என் காதல் அந்தரத்துல உலாத்தணுமா?​

எனக்கு தர்ஷு வேணும். அவளா நானானு பார்த்துக்கறேன். நான் யாரை கல்யாணம் பண்ணறேன்னு நான் முடிவுப் பண்ணறேன். இனி நீங்க வேற பொண்ணை தேடாதிங்க. அங்கவை வேணுமா? சங்கவை வேணுமானு வர்றார்" என்று முடிவாக பேசி போர்வையில் நீட்டி நிமிரவும் சந்தோஷை கவனித்தார் மோகன்.​

இந்திரஜித் தீவிரமா மாறிவிட்டான் என்பது சந்தோஷிற்கு புரிந்தது.​

இதென்ன மாற்றமோ? தாய் தந்தை இருவருமே சொந்த மகளாக மருமகளாக ப்ரியதர்ஷினியை பார்த்தார்கள்.​

சந்தோஷோ சந்தியா, சந்திரா என்ற இருதங்கைகளை போல ப்ரியதர்ஷினியையும் சிறுவயதில் பார்த்துவிட்டான்.​

‌ தங்கை என்று பொய் கூறமாட்டான். அதே கணம் காதல், திருமணம் என்ற இத்யாதி கோட்டிலும் அவளை வைத்து யோசிக்கவும் பதறியது.​

தோழி என்ற ஸ்தானத்தில் தான் பாந்தமாய் பொருந்திப்போனாள்.​

தன்னை சுற்றி விலாசினி அண்ணன் கண்ணனை தவிர்த்து அனைவருமே பெண்கள். இதில் விலாசினி முதலிலிருந்தே எட்டி பழகிடுவாள். யமுனா அண்ணி தன்னை விட பெரியவர். அதனால் மதிப்புண்டு.​

தங்கைகள் இருவரை விட வாய் துடுக்கோடு பேசுவது ப்ரியா என்பதால், எந்நேரமும் ப்ரியாவோடு சேர்ந்து மற்றவர்களை ஓட்டுவான். எங்கேனும் செல்வதாகட்டும் கண்ணன் ஊரிலில் உள்ள அவன் நண்பர்களோடு செல்ல, கல்லூரியை சென்னையில் முடித்த சந்தோஷிற்கு கண்ணனின் நட்பு குறைவாய் கிடைத்தது.​

ப்ரியா மட்டுமே எங்கேனும் முந்தி ஓடி அழைத்து செல்வாள்​

பானுமதிக்கும் சிங்கமுத்துவிற்கும் கூட 'மருமகள் தானே ஒன்றாக செல்லட்டும்' என்று மகிழ்வார்கள்.​

ஆனால் தங்கையாகவும் காதலியாகவும் பார்க்க இயலாதவளிடம் தோழமையாக பேசுவதை ப்ரியாவும் உணர்ந்தாள்.​

அதோடு சந்தோஷ் விலாசினியை குறுகுறுவென பார்க்க, காதலிக்கின்றானென்ற வரை அறிந்தவள் ப்ரியா.​

மருமகளாக அந்த வீட்டுக்கு போகாவிட்டாலும் அன்பு அளவில்லாமல் செலுத்த, பள்ளத்தை நோக்கி பாயும் நதியாக சென்றவளை தான் பழிச்சுமத்தியது காலத்தின் சதி.​

சந்தோஷிற்கு இருதலை கொள்ளி நிலை. தோழி ப்ரியாவா? காதலி விலாசினியா? இருவரையும் அவன் சமமாக மதிக்கின்றான். ப்ரியாவிடம் அன்பு செலுத்துகின்றான் விலாசினியை காதலிக்கின்றான்.​

தன் மிச்ச வாழ்வு விலாசினி என்று எண்ணுபவனுக்கு தன் தோழியை பழிசுமத்தி விரட்டியது காதலியாக இருந்தால் மிச்ச வாழ்வு நன்றாக அமையுமா? அந்த பெரிய கேள்வியே குடைந்துக்கொண்டிருக்க, இந்திரஜித் வேறு ப்ரியாவை இம்சித்து காதலிப்பது நேரிலேயே பார்த்தாயிற்று.​

இனி ப்ரியதர்ஷினியை தொல்லை செய்யாதே என்று வேண்டுக்கோல் வைத்தாலும் கேட்பானா? என்பது ஐயமே.​

எப்படியாவது மன்னிப்பு கேட்டு தன் தோழியாக எப்பவும் போல பேசுவாளென்று வந்தால், அன்று பேசாமல் அமைதி காத்து அவளுக்கு வலியை ஏற்படுத்தியதால், அவளோ இன்று தன்னை ஒதுக்குகின்றாள்.​

எப்படியாவது இந்திரஜித் காதலை ஏற்றுவிட்டால் அவன் புரியவைப்பானென்று ஒரு மனம் அடித்து கூறியது.​

இந்திரஜித் எந்த விஷயத்திலும் தோற்கும் ரகமல்ல. காதலில் மட்டும் தோற்றிடுவானா? என்ன ப்ரியதர்ஷினியை எளிதில் காதல் வலைக்குள் இழுக்க முடியாது. எல்லாம் முடிந்து எப்பொழுது பதில் கிடைக்குமோ என்று சிந்தித்தவனுக்கு அவனையறியாது நித்திராதேவி அணைத்து கொண்டாள்.​

இங்கு கை தடத்திற்கு மருந்திட்டாள் ப்ரியதர்ஷினி. "ப்ப்பா பார்க்க தான் அழகனா இருக்கான். கையை பிடிக்கிறதுல எத்தனை அழுத்தம் சரியான அரக்கன். லவ் பண்ணுனு டார்ச்சர் பண்ணறான்.​

அவனுக்கு சம்மதம் சொன்னால் தான் என்ன? என்ற ரீதியில் மூளை யோசிக்க, மனமோ 'தேவையில்லாத ஆணி சந்தோஷை வளைக்க முடியலைனு இவனை பிடிச்சிக்கிட்டதா யாராவது சொல்வாங்க. ஏன் அத்தையே சொல்வாங்க' என்றதும் இதயம் துவண்டது.​

ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. தன் வாழ்வு தலைகீழாக மாறிவிட்டது. பழியை யார் தூக்கி போட்டாலும் உறவுகள் உடைந்தப்பின் எதையும் மாற்றயியலாதே என்று அடிநெஞ்சம் கதறியது.​

இப்படி பழியை தூக்கி போட்டு அவப்பெயரை கொடுத்து தன்னை அந்த குடுபத்தோடு ஒதுக்க வேண்டுமென்று நினைப்பதற்கு உண்மையை உரைத்து தன்னிடம் வெளிப்படுத்தியிருந்தால் கூட ப்ரியதர்ஷினி புன்னகை முகமாக அக்குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பாள்.​

எவ்வித பாதிப்பின்றி அனைத்தும் சுமூகமாக கூட கடந்திருப்பாள். சந்திரா திருமணத்தை போல கலந்துக் கொள்ளாவிட்டாலும், அடுத்து சந்தோஷ்-விலாசினி திருமணத்தில், அக்கா யமுனாவை போல வந்து விட்டு உடனே சென்றிருப்பாள்.​

அடுத்து கண்ணன் சந்தியா திருமணத்திற்கு எப்படியும் எங்கயாவது இதே போல வேலைக்கு ஊர்விட்டு வந்து வேலை பார்த்து திருமணத்திற்கு விடுமுறை கிடைக்கவில்லையென்று பொய் பேசி, தவிர்த்து, இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வீட்டு அன்பை துண்டித்திருப்பாள்.​

நொடியில் வாலறுந்த பல்லியாக துண்டித்து துடித்திருக்க மாட்டோமென விழிநீர் வெம்மை கன்னத்தில் சுட்டது.​

-தொடரும்.​

-NNK79​

நீயென் காதலாயிரு​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-12​

ஞாயிறு அதுவும் இந்திரஜித் நன்றாக இழுத்து போர்த்தி உறங்கியிருந்தான். நேற்றெல்லாம் போர்வை போர்த்தி படுத்துவிட்டானே தவிர நீண்ட சிந்தனைக்குள் தான் முழ்கியிருந்தான்.​

அதனால் காலை இன்னமும் கண் திறக்காது இருந்தான். சந்தோஷிற்கு அந்த உறக்கம் ஆச்சரியத்தை தந்தது.​

"டேய் உன்னால எப்படிடா தூங்க முடியுது." என்று நண்பனை உலுக்க, சோம்பல் முறித்து எழுந்தவன், "தூக்கத்துக்கும் காதலுக்கும் என்னடா சம்பந்தம்?" என்றான்.​

நண்பனிடம் பதிலுரைத்தபடி தன் போனில் சில சில்மிஷ வேலையை பார்த்தவன் பல் தேய்க்க சென்றான்.​

பத்து நிமிடத்தில் சந்தோஷ் எண்ணிற்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.​

"புது நம்பரா இருக்கு?" என்று சந்தோஷ் எடுத்ததும் அவன் காது சவ்வு கிழிந்தது. எதிர்புறம் ப்ரியா வஞ்சனையின்றி தன் தோழனை திட்டினாள்.​

"ஏய் எதுக்கு திட்டற ப்ரியா? அவன் என்ன செய்தான்?" என்று அப்பாவியாய் கேட்க, "உன் பிரெண்டை கேளுடா. இன்னொரு முறை அவன் எனக்கு மெஸேஜ் பண்ணினா அவ்ளோ தான் கொலைப் பண்ணிடுவேன்'' என்று கடைசியாக கத்தி போனை துண்டித்தாள்.​

எதிரே மோகனும் சித்ராவும் "யாரு சந்தோஷ் போன்ல ப்ரியாவா? என்னாச்சு?" என்ற ரீதியில் நின்றார்கள்.​

"ஆமா ஆன்ட்டி. ப்ரியா தான் பேசினா. இவன் என்ன செய்தான்னு தெரியலை. புது நம்பர்லயிருந்து கண்டபடி திட்டறா? இவனுக்கு எப்படி அவ நம்பர் தெரிந்தது? என்ன மெஸேஜ் அனுப்பினான்னு தெரியலையே" என்று குழப்பமாய் இந்தரின் அறைக்கு வந்து கதவை தட்ட, பல் விளக்கிய இந்தரோ, கதவை திறந்து, 'என்ன?' என்பதாக கேட்டான்.​

"ப்ரியா நம்பர் எப்படி கிடைச்சதுடா. அவளுக்கு என்னனு மெஸேஜ் அனுப்பின? தாம்தூம்னு குதிக்கறா? என்னை கண்டமேனிக்கு திட்டறா" என்று கேட்டதும் இந்தர் பற்பசையால் உண்டான நுரையோடு நகைக்க, சிரிப்பை அடக்காமல் வாஷ்பேஷனில் துப்பினான். முகம் அலம்பி வாய் கொப்பளித்து டவலால் துடைத்தபடி, "என்னனு திட்டினா?" என்று ஆர்வமாய் கேட்டான்.​

சித்ராவோ சூடான டீயை ஆற்றி, குடிக்கும் பக்குவத்தில் மைந்தனுக்கு கொடுக்க, அதனை வாங்கி மிடறு மிடறாய் பருகினான்.​

"என்ன திட்டினாளா? ஏன்டா உன் பிரெண்ட் இப்படியிருக்கான். அறிவில்லை என் நம்பர் கிடைச்சா இஷ்டத்துக்கு குட்மார்னிங் சொல்வானா. இவனை எல்லாம் பிரெண்ட்னு சொல்லற? இதுல தங்கை கல்யாணத்துல ஆயிரம் வேலை இருந்தும் இவனை போய் கூட்டிட்டு வர போயிருக்க. இவன் பிரெண்ட்ஷிப்பை இப்பவே கட் பண்ணு. இல்லை நடந்ததை மறந்துட்டு நானே அத்தையிடம் போட்டு கொடுப்பேன்னு சொல்றா. அப்படி என்னடா அனுப்பின." என்றதும் சித்ரா மோகன் அதேயிடத்தில் நிற்கவும், "ஜஸ்ட் குட் மார்னிங் தான்டா அனுப்பினேன்" என்று நல்ல பிள்ளையாக கூறவும் சித்ராவும் மோகனும் இது நம்பற மாதிரி இல்லையே என்று பார்த்துக் கொண்டார்கள்.​

சித்ராவோ மைந்தன் ஏதோ விளையாட்டு தனமாக என்னவோ அனுப்பியதை பூடகமாக அறிந்து சமையல் கட்டிற்கு செல்ல, மோகனோ, "நான் வாக்கிங் கிளம்பறேன். சின்ன பசங்க சகவாசத்தை முதல்ல விட்டொழிக்கணும்" என்று புலம்பி அகன்றார்.​

இந்தரின் தாய் தந்தை அவ்விடத்தில் இல்லையென்றதும் சந்தோஷோ, "டேய் அவ கத்தற டோன், மீன் மார்க்கட்ல சண்டை வர்ற மாதிரி சத்தமா சவுண்ட் விடறா. என்ன அனுப்பினா?" என்று நண்பன் போனை எடுத்தான்.​

அதில் "ஹாய் டியர் தர்ஷுனி குட்டி. குட் மார்னிங், நல்லபடியா தூங்கனியா? இல்லை நான் உன் கை பிடிச்ச அழுத்தம் வலியை தரவும், நைட்டெல்லாம் என் நினைப்பால தூங்கமுடியாம தவிச்சியா?​

என் சாதாரண பிடிக்கே இப்படி முகத்தில வலிக்காட்டினா எப்படி டார்லிங்? உன்னை டைட் ஹக் பண்ணும் போது, கிஸ்..." படிப்பதை நிறுத்திவிட்டு போனை இந்தரிடமே நீட்டினான்.​

"என்னடா க்ரீன் க்ரீனா பேசியிருக்க? இந்தர் இது நீ தானா? டேய் அவளிடம் நேர்ல உதைப்பட போற." என்று சந்தோஷ் கூற, இந்தர் போனை வாங்கி சார்ஜரில் போட்டுவிட்டு, "உதையா? நானா? டேய் அவளை நேத்து கைப்பிடிக்கிறப்பவே இன்னொரு கையால அவ போன்லயிருந்து என் நம்பருக்கு கால் பண்ணியது எதுக்கு? உதை வாங்கவா, அவஉள்ளத்தை வாங்கடா." என்று கவிதையாக மொழிந்தான்.​

சந்தோஷோ "எனக்கென்னவோ டவுட்டா இருக்குடா. ப்ரியா எல்லாம் அவபின்னாடி சுத்தற பசங்களை கூப்பிட்டு வச்சி செவுள்ல விடுவா. ஸ்கூல் படிக்கறப்ப என் பிரெண்ட் சுந்தர் பிரப்போஸ் பண்ணினான்டா. அவளே அவனை அடிப்பின்னிட்டா.​

எதுக்கோ பையனை பார்த்துக்கோங்க அம்மா" என்று சித்ராவிடம் முடித்தான்.​

சித்ரா சமைத்து வைத்த பூரியும் மசாலாவும் செய்து வைத்திருக்க, அதனை வெளுத்து வாங்கும் முடிவோடு காலை உணவு அமைந்தது இந்தருக்கு.​

சந்தோஷோ பூரியை கையில் வைத்து "பூரின்னா ப்ரியா உயிரை விடுவா. ஏதோ மெஸ் சாப்பாடு எல்லாம் எப்படி தான் சாப்பிடறாளோ? எங்கத்தை சமைச்சதை தவிர வேறயெங்கையும் அவ ருசித்து சாப்பிட மாட்டா. எங்க வீட்டு கல்யாணத்துல தேவையேயில்லாம பழிசுமந்துட்டு அவ இப்ப கஷ்டப்படறா? விலாசினி பழியை போட்டாளோனு ஒரு பக்கம் சந்தேகம் வருது. ஆனா நேத்து ப்ரியா அவளிடம் இப்படி பேசி தொலைக்காத அப்படின்னு சொல்லறா.​

வேற யாராயிருக்கும்னு ஒரு முடிவுக்கு வரமுடியலை." என்று வருந்தினான்.​

சந்தோஷ் பேசவும் பூரியை சுவைக்க வாயருகே கொண்டு சென்ற இந்தரோ, டிபன் பாக்ஸில் நான்கைந்து பூரியை பார்சல் செய்ய ஆரம்பித்தான்.​

"என்னடா ஞாயிறு அதுவுமா டிபன் கட்டற? என்று சித்ரா வந்தார்.​

" எப்படியும் சந்தோஷ் கிளம்பும்போது பிரியாவை சந்திக்கணும்னு சொல்லிட்டு இருந்தான். அப்படியே நானும் சந்தோஷ் கூட போய் பிரியாவிடம் பேசுவேன் அந்த நேரம் வெறும் கையோட போறதுக்கு பதில் பூரியை கொடுப்பேன்." என்றவன் சந்தோஷ் பக்கம் திரும்பி "ப்ரியா மேல யார் பழிதூக்கி போட்டா என்பது தெரிந்துக்கற வரை நான் அவளை விரும்பறதை யாரிடமும் சொல்லாத. முக்கியமா விலாசினியிடம்." என்று கூறியதும் சந்தோஷ் தலையாட்டினான்.​

தன் நண்பனுக்கு விலாசினி மீது சந்தேகம் உதித்திருப்பது புரிந்துக்கொண்டான் சந்தோஷ். ஆனால் அவள் அப்படியில்லை என்று வாய் திறக்க முடியாமல் தலையாட்டலோடு முடித்து கொண்டான்.​

மோகன் வாக்கிங் முடித்து வந்திருக்க, இந்தர் தாய் சித்ரா இருவரிடமும் தன் ஷோல்டர் பையை மாட்டி கொண்டு விடைப்பெற்றான் சந்தோஷ்.​

"இவனை கூட்டிட்டு உங்க மருமகளை பார்த்துட்டு, பேசிட்டு பிறகு இவனை டிராப் பண்ணிட்டு வர்றேன் அம்மா" என்று இந்தர் கூறவும் மோகனோ, "டிபன் பாக்ஸ் பத்திரம் டா. உன் மேல இருக்கற கோபத்துல டிபன்பாக்ஸை தூக்கியெறிய போறா. அது உன்னோட பெயர் சூட்டுவிழாவுக்கு மண்டபத்தில் விழா கொண்டாடினோம். அப்ப வந்தவங்களுக்கு எங்கப்பா ரிட்டர்ன் கிப்டா அந்த காலத்துலயே கொடுத்தது." என்று முன்னெச்சரிக்கையாக கூறவும் இந்தரோ அன்னை தந்தையை உறுத்துவிட்டு பறந்திருந்தான்.​

சாலையில் வேகமாக செல்லவும் காற்றில் இந்தரின் கேசம் அலைபாய்ந்தது. "பார்த்தியாடா எங்கம்மா அப்பாவுக்கு நான் அடிவாங்கினாலும் ஓகே. டிபன் பாக்ஸுக்கு எதுவும் ஆகக்கூடாதாம்." என்று கேலியாக பயணித்தான்.​

ப்ரியதர்ஷினி தங்கியிருக்கும் இடத்திலிருந்து அவள் பணிக்கு செல்லும் பாதையில் நின்றிருந்தார்கள்.​

சந்தோஷ் தன் அத்தை மகளுக்காக முதுகுப்பையோட தவமிருந்தான்.​

இந்திரஜித்தோ காலையிலேயே குட்டி குட்டி சமோசா வாங்கி திண்றுக்கொண்டிருக்க, அங்கே நடை வியாபாரமாக கீசெயின் விற்றுக் கொண்டிருந்தவன் இந்தர் கண்முன்னால் வந்து வந்து ஏதேனும் வாங்க கூறி இம்சித்தான்.​

‌ இந்தரோ இரு சிவப்பு இதயம் தொங்கும் விதமாக இருந்ததை வாங்கினான்.​

பணத்தை வாலெட்டிலிருந்து எடுத்து கொடுத்தவன், கீசெயின் வாங்கும் நேரம் ப்ரியதர்ஷினி அந்த பக்கம் நடந்தாள். சந்தோஷ் மறுபுறம் வேடிக்கை பார்ததிருக்க நைஸாக ஓடும் முடிவில் வேகமாய் நடந்தாள்.​

இந்தரோ பத்து ரூபாய் நோட்டை திரும்ப பெற்றவனாக, "சந்தோஷ் ஒருத்தி கமுக்கமா ஓடறாடா." என்று சுட்டிக்காட்ட, ப்ரியா இந்தரை திரும்பி முறைத்தாள்.​

'இவன் கூட தேமேனு எங்கயோ வேடிக்கை பார்த்துட்டு இருக்கான். ஆனா இவன் இருக்கானே கீசெயின் வாங்கினா கூட கண்ணு எப்படி தான் என்னை பார்த்துச்சோ, பொல்லாத கண்ணு.' என்று முனங்கியபடி நின்றாள். சந்தோஷ் ப்ரியாவை இடைமறித்திருந்தான்.​

"ஊருக்கு போறேன் ப்ரியா" என்றான் சந்தோஷ். எப்பவும் போல "ப்ரியா இல்லை தர்ஷினி" என்று பல்லை கடித்தாள்.​

"தர்ஷினினு கூப்பிட தான் இந்தர் வந்துட்டானே. அவன் கூப்பிடுவான். வீட்ல தர்ஷினி தர்ஷு என்று அவங்க அம்மா அப்பாவிடம் உன்னை பத்தி தான் சதா பேச்சு.'' என்றதும் அவளால் அக்கணம் மறுத்திட வாய் வரவில்லை. அப்பா அம்மா வரை என்னை பற்றி பேசியிருக்கின்றானா? என்ற ஆச்சரியம் அடிக்கண்ணால் இந்தரை கவனித்தாள்​

கீசெயினை அவள் பார்க்கும் பக்கமாக ஆட்டினான்.​

அதில் சுள்ளென்ற கோபம் வெளிப்பட, நிமிர்ந்தாள்.​

"உனக்காக சும்மா இங்கயே நின்னுட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அந்த சின்ன பையன் சுத்தி சுத்தி கீசெயின் வாங்கிக்கறிங்களா அண்ணா? கர்ச்சீப் வாங்கிக்கறிங்களா அண்ணா? பப்பிள்ஸ் விடறது வாங்கிக்கறிங்களா அண்ணானு மினி வியாபாரி மைண்ட் செட்ல என்னையே துரத்தினான்.​

பாவம் அவனுக்காக வாங்கினேன். பப்பிள்ஸ் விடறதுலாம் இப்ப வாங்க முடியாது பாரு. நமக்கு குழந்தை வந்தப்பிறகு அதை வாங்கிக்கறேன்னு பிராமிஸ் பண்ணிட்டு கீசெயின் வாங்கினேன்." என்று அவள் முகத்தின் முன் ஆட்டினான்.​

"எனக்கு தேவையில்லை." என்று சந்தோஷ் பக்கம் திரும்ப, "நான் உனக்கு கொடுக்க வாங்கலையே. அச்சோ எங்கம்மா வீட்டு சாவியை போட ஒரு சாவி கொத்து கேட்டாங்க. அதுக்கு வாங்கினேன் தர்ஷு. நீ ஆசையா உனக்கு கொடுப்பேன்னு நினைச்சியா? ஐ அம் சாரி டியர்." என்றான் உதடுமடித்து குறும்பு சிரிப்போடு.​

தர்ஷினியோ வாயை பிளந்தபடி, "நான் ஒன்னும் ஆசையா கேட்கலை. அதுவும் என் அத்தை பையன் இருக்கறப்ப உன்னிடம் நான் ஏன் கேட்கப்போறேன்?" என்று சீறினாள்.​

லேசாக கோபம் இந்தர் மீது, அடிக்கடி தன்னை சீண்டுகின்றானே என்று.​

இந்திரஜித்தோ சந்தோஷை முன்னே தள்ளி, "இவன் தான் விலாசினியை விரும்பறான். உனக்கு அது நல்லாவே தெரியும். அப்பறம் எதுக்கு சீன் போடற. நீ சிங்கிள் தானே? என்னோட மிங்கிள் ஆனா நான் தான் வாங்கி தரணும். அவனில்லை." என்றுரைத்தான்.​

"சந்தோஷ் இவனை போக சொல்லு எனக்கு இவனை பார்க்கவே பிடிக்கலை." என்று கத்தினாள்.​

"தர்ஷும்மா சந்தோஷ் திருச்சி கிளம்பறான். அவன் பை-பை சொல்ல வந்தான். அவன் தான் இங்கிருந்து போகணும். இது நம்ம ஏரியாடி செல்லம். நான் இங்க தான் இருப்பேன். உன் நெஞ்சில் இடம் பிடிப்பேன் பார்க்கறியா?" என்று சவாலாய் மொழியவும் இந்தர் பேச்சை கேளாதவள் போல "சந்தோஷ் எந்த திருட்டு பழியாலையும் நான் இங்க வரலை. எனக்கு திருச்சில சம்பாத்தியம் பத்தலை. அதுக்கு தான் வேலைக்கு இங்க சென்னை வந்தது.​

மத்தபடி பழியை ஒரு சாக்கா வச்சி அம்மாவிடம் சொல்லிட்டு வந்தாச்சு. நான் அப்படி தான் நினைச்சிக்கிட்டேன். தயவு செய்து நடந்த நிகழ்வை தூரப்போட்டு வீட்ல யாரிடமும் ஆர்கியூ பண்ணாம, குயிக்கா விலாசினியோட கல்யாணத்தை முடிச்சிடு. அப்ப தான் அத்தை மாமா சந்தியா எல்லாரும் சந்தோஷப்படுவாங்க." என்று கூறவும் சந்தோஷ் அவளை கட்டி பிடித்து நின்றான்.​

"ஒருவேளை விலாசினி தான் பழியை சுமத்தியிருந்தா எனக்கு அந்த காதல் வேண்டாம் ப்ரியா" என்று குலுங்கினான்.​

ப்ரியாவோ நண்பனை தன்னிடமிருந்து பிரித்து, "லூசாடா நீ. விலாசினி இல்லைனு சொல்லிட்டு இருக்கேன். சும்மா அவளையே கார்னர் பண்ணற. அவ ரொம்ப நல்லவ. உன்னை உயிருக்கு உயிரா விரும்பறா. நீ என்னை விரும்பறதா நினைச்சி ஒதுங்கி வழிவிட நினைச்சவ. அவளை தப்பா பேசாத. அப்படி பேசியிருந்தா மன்னிப்பு கேளு." என்றதும் சந்தோஷ் நிமிர்ந்தான்.​

"ஆமாடா அவ நல்ல பொண்ணு. மனசை காயப்படுத்தி உடைச்சிடாத" என்று கடிகாரத்தை பார்த்தாள்.​

"எனக்கு டைம் ஆச்சு. அன்வர் பாய் எனக்கு நிறைய நல்லது செய்யறார். அப்படியிருக்க அட்வான்டேஜா நான் லேட்டா போக விரும்பலை. அதனால நான் கிளம்பறேன். நீயும் ஊருக்கு போ. அவளிடம் நல்லபடியா பேசு. வீட்ல கல்யாணத்தை முடிவு பண்ணினா எனக்கு ஒரு மெஸேஜ் பண்ணு. தயவு செய்து போன் எல்லாம் எல்லோர் முன்னாடி பண்ணிடாத.​

ஆஹ் முக்கியமா போறப்ப இவரை இழுத்துட்டு போயிடு. நாலு நல்ல புத்திமதி சொல்லிடு" என்றவள் புறப்பட, இந்தரோ அவள் கைப்பற்றி கொண்டு வந்த லஞ்ச் பாக்ஸை திணித்தான்.​

அவள் மறுத்து திருப்பி தர,‌ அவனோ வாங்காமல் விளையாட்டு காட்டி, அவளிதழில் பார்வை பதிக்க, விழுந்தடித்து ஓடினாள்.​

சந்தோஷ் ப்ரியா மீது பழிப்போட்டது விலாசினி இல்லையென்றதும் மனம் குதூகலம் அடைந்தான்.​

எப்பேற்பட்ட பாரம் இறங்கிய உணர்வில் அவன் திளைக்க, இந்தரோ விலாசினி இல்லைனா அவங்க அம்மாவா?' என்ற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்தான்.​

ப்ரியாவிடம் பேசும் போதெல்லாம் கடுகடுவென முகத்தை வைத்து தன்னையும் அவளையும் கண்டது அவர்கள் ஒருவர் தானே? என்ற எண்ணவோட்டத்தில் திளைத்தவனை சந்தோஷ் உலுக்கி, "டேய் என்னை பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு உன் தர்ஷு கூட டூயட்டை கன்டினியூ பண்ணு.​

பஸ்ஸுக்கு நேரமாகுது டா. அப்பறம் பஸ் போயிட்டா பணம் வேஸ்ட். " என்றதும் இந்தரோ "ஆமா உன் அத்தை பொண்ணோட டூயட் ஆ​

டிட்டாலும்" என்று அலும்பலோடு இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான்.​

-தொடரும்.​

-NNK79​

-நீயென் காதலாயிரு.​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-13​

இந்திரஜித் நகத்தை கடித்தபடி அன்வர் ரெடிமேட்ஸ் கடைக்கு வெளியே நின்றிருந்தான்.​

தன் எண்ணத்தில், கனவில், நனவில் என்று நித்தம் நித்தம் ஆட்டிப்படைக்கும் ப்ரியதர்ஷினியை காணவில்லை.​

அலுவலகம் செல்லும் நேரமோ நெருங்கியது.​

இதற்கு மேல் அவளை தரிசித்து, அதன்பின் தன் அலுவலகத்திற்கு சென்றால், தனது வேலை கேள்விக்குறியாக மாறிடும் என்பதால் ப்ரியாவின் அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து விட்டு, ப்ளூ டூத்தை காதில் வைத்து பைக்கில் பயணித்தான்.​

'தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை. மாமானை அள்ளி நீ தாவனி போட்டுக்கோ மச்சினி யாருமில்லை.' என்று லீயோ படப்பாடல் அதில் ஒலித்தது. பசும்பொன் படப்பாடலென்றதை தான் லீயோ ரீமேக் செய்து பாட்டின் படத்தையே மாற்றிவிட்டதே.​

இங்கு ஒருத்தன் தன்னையே மாற்றிக்கொண்டிருப்பதை கண்டு சலித்தபடி போனை கருப்பி(blocked) விடாமல், 'முதல் நாள் வேலைக்கு வந்ததும் போனா?' என்று மற்றவர் பார்வைக்கு ஆளாக கூடுமென்று இந்தர் அழைப்பை துண்டிக்காமல், வேலைக்கு செல்லும் இடம் வரும் முன் பேசிடும் முடிவோடு தொடர்பை ஏற்றாள்.​

"என்ன?" என்று சிடுசிடுப்பாய் கேட்டாள் தர்ஷினி.​

"என்னன்னா? எங்கயிருக்க?" என்றவன் குரல் அநியாயத்துக்கு தவிப்பாய் இருந்தது.​

ப்ரியதர்ஷினிக்குள் இந்தரின் தவிப்பான குரல் தேனாய் இனித்தது.​

தனக்காக ஒருவன் தவம் கிடப்பது. ஆனால் அடுத்த நொடி 'அவன் சந்தோஷ் பிரெண்ட் மனசுல வச்சிட்டு பேசு.' என்று நடுமண்டையில் விதி எள்ளியது.​

"எதுக்கு என்னை தேடற? சென்னையில ஆயிரம் பொண்ணுங்க இருக்காங்க. உனக்கு நான் தான் கிடைச்சேனா? எவப்பின்னாடியாவது போக வேண்டியது தானே. எதுக்கு என்னை துரத்தற?" என்று திட்டவும், ப்ளூ டூத்தில் அவளது இன்னிசை கானம் கேட்டவன், "மேம் இந்த சென்னையில ஆயிரம் என்ன, லட்சம் பேர் இருக்காங்க. அதுவும் சுண்டிவிட்டா தக்காளி கலருல அழகா, ஸ்டக்சரா, மாடலா நிறைய பொண்ணுங்க இருக்காங்க. பட் நான் எப்படி அவங்க பின்னாடி போறது?" என்று இடைவெளியிட்டான்.​

ப்ரியாவோ உதடுவிரிய, சிறு வெட்கம் கொண்டவள் அடுத்த பேச்சில் பல்லை கடித்தாள். ஆம் இந்தரோ "எத்தனையோ பேர் இருந்தாலும் நான் ஏன் உன் பின்னால வர்றேன்னா, என் டிபன் பாக்ஸ் உன்கிட்ட தான் இருக்கு. பூரி சாப்பிட்டியே டிபன் பாக்ஸ் திருப்பி கொடுத்தியா?" என்றதும் உதட்டை பல்லால் வலிக்காமல் கடித்து, விடுவித்து சத்தமின்றி சிரித்தாள்.​

"நான் பிறந்து எனக்கு பெயர் வைக்கிறப்ப, ரிட்டர்ன் கிப்டா இந்த டிபன் பாக்ஸை தந்தாங்களாம். இதுல ஸ்பெஷலே எங்கப்பா என் பெயர் போட்டு வச்சிருப்பார்." என்றதும் பேருந்தில் பயணித்தவள் கைப்பையை துழாவி டிபன் பாக்ஸை எடுத்தாள்.​

அதில் 'இந்திரஜித்' என்று அழகாக தமிழில் எழுதியிருந்தது. அதனை வருடினாள். "சின்னதுல அதுல தான் லஞ்ச் எடுத்துட்டு போவேன். சோ எனக்கு அது மெமரிஸுக்கு வேண்டும். எப்ப தருவ?" என்றான்.​

அவன் பேச்சு தன்னை உலுக்க, "நேர்ல பார்த்தா கொடுத்துடறேன். இரண்டு நாள் கொடுக்க எடுத்து வச்சேன். உன்னை பார்த்ததும் மறந்துட்டேன். அந்தளவு இம்சை நீ." என்றதும், "சரி நான் இம்சை பிடிச்சவனா இருந்துக்கறேன். எங்கயிருக்க?" என்றான்.​

பஸ்ஸில் இறங்குமிடம் கூறி கண்டெக்டர் கத்தவும், "தேங்க்ஸ் அண்ணா" என்றாள்.​

"இப்ப எதுக்கு அங்க போற?" என்ற இந்தரின் கேள்விக்கு "உன்னால தான். ஒழுங்கா வேலை பார்த்த இடத்துல நிம்மதியா இருந்தேன். அடிக்கடி வந்து லவ் பண்ணறதா இம்சை கூட்டவும் முதலாளி வேலை விட்டு துரத்திட்டார். இப்ப வேற வேலைக்கு சேர்ந்திருக்கேன் போதுமா?" என்றதும் இந்தருக்கு கவலை தாக்கியது.​

"ஹே.. நிஜமாவா?" என்றவன் குரல் ஸ்ருதி குறைந்திருந்தது. "பின்ன வயசு பொண்ணு பின்னாடி டெய்லி ஒருத்தன் வந்து கடைமுன்ன நின்றா கடை படுத்துக்காது." என்று திட்டவும், "தர்ஷு ஐ அம் சாரி. நீ என்ன வேலைக்கு போற? என்னிடம் உன் ரெஷ்யூம் கொடு. நான் பெட்டரா ஜாப் தேடி தர்றேன்" என்று அவளுக்காக வேலையில் உதவ முன் வந்தான்.​

ப்ரியதர்ஷினியோ போனை கீழே வைத்து, "புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கேன். அன்வர் பாய் அனுப்பினார்" என்று லெட்டரை காட்டவும், செக்கியூரிட்டியோ "நீ தான் புதுசா வந்த கணக்கெழுதற பொண்ணா. உள்ளப்போம்மா வலது பக்கம் படிக்கட்டு மூனாவது மாடிம்மா" என்றதும் நன்றியுரைத்தாள்.​

"ஓ அந்த பாய் வேற வேலை வாங்கி தந்தாரா? நல்லது தான். படிச்சிட்டு சேல்ஸ் கேர்ள் எதுக்கு? மச் பெட்டர். நானே உன் ரெஸ்யூமை கேட்க நினைச்சேன். தேங்காட் அந்த பாய் ரொம்ப ரொம்ப நல்லவரா இருக்கார்.​

சரி ஆபிஸ் நேம் என்ன?" என்று கேட்டதற்கு, "ம்ம் உங்க தாத்தா நேம், போனை வைடா. முதல் நாள் போனிலே பேசிட்டு இருக்க முடியாது. இங்க வந்தப்பிறகு கால் பண்ணுவனு தான் உடனே எடுத்தேன். தயவு செய்து தொந்தரவு பண்ணாத. குட்பை" என்று அணைத்திடும் வேகத்தில் "ஏ.. ஆல் தி பெஸ்ட்.' என்று கத்தவும் ப்ரியாவோ மென்புன்னகையோடு அணைத்தாள்.​

படியேறி மேலே வந்தவளுக்கு அலுவலகம் கண்டதும் கண்ணை சுழற்றியது.​

ஒரு ரெடிமேட் கடை வைத்திருக்கும் பாயுக்கு இத்தனை செல்வாக்கா?​

நல்ல வேலை கிடைத்த திருப்தியில் அங்கிருந்த இறைவன் வெங்கடசாலபதியை வணங்கினாள்.​

அதன் பின் தன் சர்டிபிகேட் அனைத்தும் மேலயிகாரியிடம், நீட்டினாள்.​

வேலைக்கு செல்லும் போது அதையெல்லாம் நகல் எடுத்து வரக்கூறியிருந்தனர்.​

அதன் பின் சிலதை வாங்கி வைத்து கொண்டு பணி செய்யும் இடம் காட்டி, அருகேயிருக்கும் அனைவரிடமும் ஒரு அறிமுகம் செய்தும் வைத்தனர். ப்ரியாவும் வணக்கம் வைத்து முடித்தாள்.​

பெரும்பாலும் நடுத்தர வயதுக்கொண்ட ஆட்களாக இருக்க, சில பெண்கள் மட்டும் இவள் வயதிற்கு கூடுதலாக இருந்தனர்.​

அங்கிருந்தவரில் ஒருவர் வந்து அன்றாட பணியின் நுணுக்கத்தை தாமாக சொல்லிக் கொடுத்தார்.​

விவரமாக கேட்டு விட்டு நன்றி தெரிவித்தாள் ப்ரியா.​

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கும்மா. பயப்படாம வேலையை பாரு. இது நம்ம ஏரியா. ஏதாவது டவுட்னா பிரச்சனை என்றால் 'மோகன்' அப்படின்னு ஒரு குரல் கொடு ஓடிவந்துடுவேன்." என்றதும் ப்ரியதர்ஷினியோ வாய் விட்டு புன்னகைத்தாள்.​

இந்த மோகன் இந்திரஜித்தின் தந்தை என்று தனியாக விளக்கவுரை அறிவிக்க வேண்டியதில்லை.​

எப்படியும் சங்கிலிதொடராக உலகத்தில் மனிதர்களை பிணைத்திடுகிறது இந்த விதி. ஒரு கெட்டது நடந்தால் அதில் நல்லதும் பிறக்கும். விதியின் ஆட்டம் கோரமாக இருந்தாலும் முடிவில் நல்லதும் அதில் கலந்து கட்டி செல்வது தான் நியதி.​

"ரொம்ப தமாஸா பேசறிங்க சார்." என்று நட்பை வளர்த்தாள் ப்ரியா.​

ஏற்கனவே மைந்தனின் போனில் கேலரி முழுக்க, ப்ரியா புகைப்படமாக பார்த்ததால் மோகனும் மருமகளிடம் தான் யாரென்ற அறிமுகத்தை காட்டிக்கொள்ளாது பழகினார்.​

மதியம் உணவருந்தும் நேரம் பக்கத்திலிருக்கும் மதுவதி என்ற பெண்ணோடு சாப்பிடும் இடம் நோக்கி நகர, மோகன் கூடவே இணைந்துக்கொண்டார்.​

"முதல் நாள் எப்படிப் போச்சு." என்று கேட்டதும் "மோகன் சார் நீங்களா? சட்டுனு பின்னால் குரல் என்றதும் யாரோனு பயந்துட்டேன். உங்க வாய்ஸ்.. உங்க வாய்ஸ் இதுக்கு முன்ன கேட்டது போலயிருக்கு." என்றதும் மோகன் பூடகமாய் சிரித்தார்.​

சில நேரம் கஷ்டப்பட்டு மைந்தனின் குரலில் பேச முயல்வார். இந்திரஜித்தின் சிறு வயது முதல், அவனின் கியூட்டான பேச்சை அப்படியே சித்ராவிடம் பேசி காட்டுவார். 'நம்ம பையன் எப்படி பேசினான் தெரியுமா?' என்று அதை செய்து காட்டும் திறமை. இன்றும் ப்ரியதர்ஷினியை லேசாய் அதிர வைக்க, இந்திரஜித்தின் குரலில் முயன்றார்.​

ப்ரிய்விற்கு இந்திரஜித்தே இங்கும் வந்துவிட்டானோ என்ற ஆர்வத்தில் தான் திரும்பி திரும்பி பார்த்தாள்.​

"மோகன் சார் உங்க குரல் மட்டும் இல்லை. நீங்களே ஏற்கனவே பழகிய மனிதர் போல தான் எனக்கு தெரியறிங்க. இதுக்கு முன்ன எங்கயாவது சந்தித்தது கூட இல்லை. ஆனா நல்லா தெரிந்தவர் மாதிரி மனசுக்கு நெருக்கமா இருக்கு. இங்க புது மனிதர்களா இருப்பாங்கன்னு பயந்தேன். உங்களை பார்க்கறப்ப அப்படி பீல் பண்ண முடியலை.​

அன்வர் பாய் உங்களுக்கு பிரெண்டா? என்னை பத்தி சொல்லியிருக்காரா?" என்று குதுகல குரலில் உணவருந்தும் இடத்தில் யாவரும் அமர, அவர்களும் அருகருகே அமர்ந்திட பேசினார்கள்.​

'சேசே எந்த அன்வர் பாயும் பிரெண்ட் இல்லை. உன்னோட பாய் பிரெண்ட் என்னோட சன்.​

என் மகன் தான் உன் போட்டோ காட்டி உன்னை காதலிக்கறதா சொன்னான்.' என்று கூற ஆசை தான் அவருக்கு.​

ஆனால் ஒரு சக மனிதனாக பழகி தன் மைந்தனை பற்றி என்ன கண்ணோட்டத்தில் இருக்கின்றாளென்று அறிய ஆர்வமானார்.​

அதோடு யார் பழி போட்டதென்று, இவளுக்கு தெரிந்தே வாயை மூடிக்கொள்வதாக இந்திரஜித் புலம்புவதை கேட்டதால், நல்ல நட்பாகி இவளிடம் இவரே கேட்கும் எண்ணத்தில் மைந்தனுக்கு மேலாக திட்டங்கள் தீட்டினார்.​

"என்னம்மா டிபன் பாக்ஸில் இந்திரஜித் நேம் இருக்கு? யாரு இந்திரஜித்" என்று அறியாதவர் போல கேட்க, ப்ரியாவின் வதனத்தில் சிறு வெட்கம் முறுவல் ஓடியொளிந்து திரிய, "என்னோடது சார். இது என் பிரெண்ட் பெயர்" என்றவள் கடையில் விற்கும் ப்ரிஞ்ச் சாதம் வாங்கியிருந்தாள்.​

மோகனோடும் கூட பணிப்புரியும் மதுமதியும் ஒரே நாளில் தோழமையோடு பழக, அந்த நாள் ப்ரியாவை பொறுத்தவரை இனிமையான நாளாக சென்றது. மாலை ஐந்து மணிக்கே அலுவலக நேரம் முடிவடைய, ப்ரியதர்ஷினி கிளம்பினாள்.​

மோகனோ "ஹாஸ்டல்ல போய் என்ன பண்ணுவம்மா? பொழுது போக்கு என்ன? போரடிக்குமா?" என்று வரிசையாக கேட்டதற்கு "இல்லை சார் எனக்கு க்விலிங்ல ஹாண்ட்மேட் ஹியரிங் செய்ய தெரியும். அதனால க்விலிங் ஹியரிங் செய்து அதை எனக்கு தெரிந்த ஒரு பாய் கடையில ஒரு சின்ன பாக்ஸ்ல சேல்ஸ்க்கு விற்க செய்துட்டு இருப்பேன். தனியா இருக்க போரடிக்காது. அதோட எனக்கு பிடிச்ச கிராப்ட். சோ டைம் நல்லா போகும்." என்று கூறவும் ப்ரியதர்ஷினியை கண்டு ஆச்சரியப்பட்டார்.​

"சோ பிஸினஸ்வுமனா மாறிடுவிங்க" என்று கேட்டதும் "சேசே அப்படியில்லை சார்,​

நேரம் போகணும். அதோட உபயோகமா போகணும். சின்ன கைதிறமை வேலைகள்" என்று கூறவும் முதல் நாளே ஒரே ஏரியா என்று கூறி தன் வண்டியில் மருமகளை அழைக்க மோகனுக்கு தயக்கம் பிறந்தது.​

என்ன இந்த ஆள் ஓவரா அட்வான்டேஜ் எடுக்கின்றாரென ப்ரியா நினைத்தால்...​

அதனால் ஒரேயிடமாக இவளது ஏரியா தாண்டி போனாலும் அதனை குறிப்பிடாமல் கிளம்பினார்.​

பாதி தூரம் சென்றதும் 'பச் மோகன் சார் என்னை பற்றி விசாரித்தார். நான் அவரை பத்தி ஒன்னும் கேட்கலை. அட்லீஸ்ட் எங்கயிருக்கார் என்றாவது கேட்டிருக்கணும். நாளைக்கு கேட்டுப்போம்' என்று நினைக்கும் நேரம் இந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. பஸ் ஏறியதும் அதனை ஏற்று, "சொல்லு" என்று வேண்டாவெறுப்பாய் கேட்பது போல நடித்தாள்.​

"முதல் நாள் எப்படி போச்சு?" என்று மோகன் கேட்ட அதே அச்சு பிசாகாத வார்த்தை. "குட்" என்றாள்.​

"எனக்கு குட்டா போகலை. எங்கயிருக்க உன்னை சந்திக்கணும்." என்றான்.​

ஏன் எதற்கு என்ற கேள்விக்குமுன் "என் டிபன் பாக்ஸை அம்மா கேட்டுட்டே இருக்காங்க." என்று அவனும் நல்ல நடிகனாக பேச்சில் சலித்தான்.​

'வேற டிபன் பாக்ஸே இல்லையா. இடியட் என் கூட அதுவாது இருக்கட்டுமே.' என்று மனதில் கருவியவள், "ஹாஸ்டல்ல இருக்கு." என்று கூறினாள்.​

நான்கு ஸ்டாப் கொண்ட பேருந்து நிறுத்தம் என்பதால் இறங்கி நடக்க, பைக்கில் அருகே வந்து "நான் கூடவே வந்து வாங்கிக்கறேன்." என்று நின்றான்.​

சுத்திமுத்தி பார்த்து "இங்க பாரு இப்படி பக்கத்துல வந்து பயமுறுத்தாத. எனக்கு பூரின்னா பிடிக்கும். அது முன்னபின்ன தெரியாதவங்க கொடுத்தா கூட வாங்கி திண்ணுடுவேன். அதான் நீ கொடுக்க திண்ணுட்டேன். டிபன் பாக்ஸ் ரூம்ல இருக்கு. என் ஹாண்ட்பேக்ல இருந்தா இப்பவே மூஞ்சில தூக்கி எறிந்திருப்பேன்." என்று கூற, இந்திரஜித்தோ பெண்ணவளை பேசவிட்டு அவளை ரசிக்க ஆரம்பித்திருந்தான்.​

ப்ரியதர்ஷினி அவனது பார்வை மாற்றங்களை தாமதமாக கண்டவள், அவனை சத்தம் வராமல் திட்டிமுனங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.​

"அப்பறம் சந்தோஷ் பேசினானா?" என்று பின்னால் பைக்கால் தள்ளியபடி கேட்டான் இந்தர்.​

"ரீச்சாகிட்டேன்னு மெஸேஜ் பண்ணினான். போனை நான் அட்டன் பண்ணலை." என்று நகத்தின் மீது கொண்ட வண்ணப்பூச்சை ஆராய்ந்தபடி கூறினாள்.​

"சந்தோஷோட போனை அட்டன் பண்ணலைனா பிராப்ளமில்லை. என் போனை அட்டன் பண்ணு. சரியா" என்றவன் பைக்கை உதைக்க ஆரம்பித்தான். ப்ரியதர்ஷினியின் தங்கும் விடுதி வந்து சேர, அவன் பைக்கை உதைக்கவும், ப்ரியா பதில் எதுவும் கூறவில்லை.​

மௌனமாக சென்றவளிடம், "தர்ஷினி'' என்றதும் திரும்பினாள்.​

"பை" என்றதும் அவனது புன்னகை முகம் அவளை தாக்கியது.​

யாரிவன் இப்படி தனக்காக தன் பின்னால் இத்தனை தூரம் பைக்கை தள்ளிக்கொண்டு நடந்து, என்னை தரிசித்து போகின்றான். நான் அவனுக்கு இத்தனை முக்கியத்துவமா?​

சந்தோஷை ப்ரியா காதலித்தது எல்லாம் கிடையாது. அத்தை மாமாவின் உரிமையாக 'மருமகள்' என்ற அழைப்பு மட்டும் பிடிக்கும். அதே போல சந்தோஷிடம் உண்டான நட்பு பிடிக்கும்.​

என்னதான் கண்ணன் அண்ணன் முறை என்றாலும் 'கண்ணன் அண்ணனிடம் கடைக்கு டவுனுக்கு என்று பைக்கில் சுற்ற அழைத்தாலும், பெண் பிள்ளைகள் இப்படி சுற்ற கூடாதென்றும், விலாசினியை அழைத்து செல்ல கூறுவான். பைக்கில் போக தான் ஆசைப்பட்டு கேட்டது. அதை புரியாதவன்.​

பெண்கள் அண்ணனாகவே இருந்தாலும் அவர்களோடு சுற்றக்கூடாது என்ற பழமைவாதி கண்ணன். அதனால் கண்ணனிடம் சிறு கருத்து பிரிவு உண்டு. ஆனால் சந்தோஷ் அப்படியில்லை. 'ஆண் என்ன? பெண் என்ன? என்று எண்ணுவான். சிலர் கல்யாணம் கட்டிக்கும் முறை என்பதால் சுற்றுகின்றனர், விரும்புகின்றார்கள் என்ற வதந்தி கூட திரித்தாலும், சந்தோஷ் ப்ரியா காதில் கூட வாங்க மாட்டார்கள்.​

'அதுங்க கிடக்கு அரத பழசுங்க. இந்த டிக்கெட் எல்லாம் லாஸ்ட்டா வந்த வைரஸ் வியாதில மண்டையை போட்டிருக்க வேண்டியதுங்க.' என்று சபாங்களை அள்ளி வழங்குவாள்.​

சந்தோஷிடம் நட்பையும், அத்தை மாமா வீட்டில் உறவில் உரிமையும் எதிர்பார்த்தவளுக்கு கடைசியில் அந்த உரிமையால் தான் பழியும் சுமக்கின்றாள்.​

இந்திரஜித் மட்டும் தினமும் வந்து சந்திக்காவிட்டால் தன் உடை, நடை கூட ஏனோ தானோ என்று மாறியிருக்கும். அவன் முன் உடைந்திடக்கூடாதென்ற திடம், தற்போது எல்லாம் பளிச்சென்ற வலம் வருகின்றாள்.​

அவளே அறியாது காதல் இருந்தாலும் முகம் புது பொலிவை முகத்தில் காட்டிக் கொடுத்திடும்.​

-தொடரும்.​

-NNK79​

நீயென் காதலாயிரு.​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-14​

ப்ரியதர்ஷினி வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் ஆக, அவளுக்கு ஒரளவு வாழ்வில் மாற்றங்கள் நிகழ்ந்தது எனலாம்.​

புது நட்பு மதுவதி, தன் பணியை செம்மைப்படுத்த வெல்விஷராக மோகன் சார் தனக்கு மேலிருக்கும் அதிகாரி என்று பலரிடம் நல்ல பெயரை பெற்றிருந்தாள்.​

அன்வர் பாயுக்கு காலையும் மாலையும் காலை வணக்கம் மாலை வணக்கம் என்று நபிகள் நாயகத்தின் வாசகமாக தேடி கண்டு பிடித்து அனுப்புவாள்.​

மருமகள் தன்னோடு தான் வேலை செய்வது கட்டிய மனைவியிடமும், மகனிடமும் கூட கூறாமல், இருந்தார் மோகன்.​

சித்ரா டிபன் பாக்ஸில் உணவை அடைத்து "ஏன்டா உங்கப்பா அவ்ளோ சொல்லியும் அந்த டிபன் பாக்ஸை வாங்கலையா? உன் மேல இருக்கற கோபத்துல அந்த பிள்ளை டிபன் பாக்ஸை தலையை சுத்தி தூரப் போடப்போகுதுடா" என்று டிபன் கட்டி முடித்தார்.​

இந்தரோ "அவ பத்திரமா வச்சியிருப்பா அம்மா. உங்களுக்கு தெரியாது அவ என்னை லவ் பண்ணறா" என்று சட்டை பட்டனை போட்டு வந்தான்.​

மோகன் மனைவி மகன் இருவரின் பேச்சை கேட்டு இந்தரிடம், "என்னடா மருமகளை பார்த்தியா?" என்று அவரது பையை எடுத்தார்.​

"அதெல்லாம் நாள் தவறாம தரிசனம் கிடைக்கும் அப்பா. என்ன பார்க்காத மாதிரி போவா. பிடிக்காத மாதிரி சீன் போடுவா. எனக்கு தான் சந்தோஷ் ப்ரியா ப்ரியானு பேசி பேசி யார்டா அவனு ஆவலை தூண்டி என் மனசுல பதிந்தா. மத்தபடி அவளுக்கு நான் லவ் அட் பஸ்ட் சைட்டா இருக்கணும். இல்லைனா திருட்டு பார்வையோட பார்க்க மாட்டா.​

பச் திருட்டு பார்வைனு சொல்லவும் பயமாயிருக்கு." என்றவனின் தலைகேசத்தை களைத்து விட்டார் மோகன்.​

"சந்தோஷமா ஆரம்பிச்ச ஏன்டா சோகம். இதே பீலிங்கை அவளிடம் கொட்டு. நீ போற ரூட் கரெக்டா இருக்கு" என்று தந்தை காதலுக்கு ஆதரவு தந்து பேசவும் சித்ராவோ "போதும் அப்பாவும் மகனும் பேசற லட்சணம். அவன் காதலிக்கறான். நீங்க ஐடியா கொடுங்க." என்றவர் மைந்தனிடம், "டேய் இதுல கோதுமை மைதா கலந்த பூரி. சூடாறிடும்னு ஹாட்பாக்ஸில தந்திருக்கேன். குட்டி ஹாட்பாக்ஸ் டா. திருப்பி தரணும்னு சொல்லிடு. எனக்கு இந்த குட்டி குட்டி பாத்திரம் பண்டம் தொலைய கூடாது. அவ்ளோ தான்" என்றதும் மோகனோ என்னை சொல்லிட்டு உன் அம்மா பண்ணற வேலையை பார்த்தியா?' என்ற பார்வை பார்த்து கிளம்பினார்.​

"சோ ஸ்வீட் மம்மி" என்று கன்னம் பற்றி முத்தம் வைத்து இந்தரும் சென்றான்.​

அப்பாவும் மகனும் ஆளுக்கொரு பைக் என்றதால் கிளம்பினார்கள்.​

இந்தரோ விசிலடித்தபடி வுமன் ஹாஸ்டல் இருக்கும் இடத்திற்கு அடுத்த சந்தில் ஸ்டாண்ட் போட்டு அதில் ஏறி அமர்ந்திருந்தான்.​

ப்ரியாவோ தூரத்திலேயை இந்தரை கண்டு மெதுவாக நடந்தாள்.​

அவள் வரவும் குறுக்கே வந்து, "என் சில்வர் டிபன் பாக்ஸ் எங்க?" என்றான்.​

"பச் மறந்துட்டேன்" என்று பொய்யாக சலித்தாள்.​

"இந்த போங்கு ஆட்டம் செல்லாது. வுமன்ஹாஸ்டலுக்கு போய் எடுத்துட்டு வா" என்று வுமன்ஹாஸ்டல் பக்கம் கையை காட்டினான்.​

"நான் நாளைக்கு தர்றேன்" என்று நடக்க, "எனக்கு இப்ப வேண்டும்" என்று பிடிவாதமாய் நின்றான்.​

"ப்ளீஸ் ஆபிஸுக்கு டைம் ஆகுது. இம்சை கூட்டாத" என்று நகர, "ஏய் எங்களுக்கு ஆபிஸ் இல்லையா? நான் ஐடீல வேலை பார்க்கறேன். உன்னைவிட எனக்கு தான் டைம் ஆகும். நானே பரவாயில்லைனு நிற்கறேன். டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வா" என்று அழிச்சாட்டியம் செய்தான்.​

கூடவே ''லவ்வும் பண்ண மாட்டாளாம். என் டிபன் பாக்ஸும் தரமாட்டாளாம். எதுக்கு என்னை அலைய விடணும். கொடுத்துட்டா வரமாட்டேன்ல" என்று கடுகடுத்தான்.​

ஏனோ இந்தர் அப்படி பேசவும், ப்ரியாவுக்கு முனுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.​

"டிபன் பாக்ஸ் கொடுத்துட்டா பின்னாடி வரமாட்ட தானே?" என்று கேட்டாள்.​

"வரமாட்டேன்" என்றான் கறாராக.​

கண்ணீரை துடைத்தபடி தன் ஹாண்ட்பேக்கை திறந்து, இந்தரின் டிபன் பாக்ஸை எடுத்தாள்.​

இதுல தக்காளி சாதம் இருக்கு. கீழ கொட்டிட்டு எடுத்துக்கோ" என்றாள். அதை உதிர்க்கும் முன் கண்ணீர் மடமடவென கன்னத்தை தாண்டி வடிந்தது.​

"நான் கீழ கொட்டணுமா? புட் வேஸ்ட் பண்ண மாட்டேன். நீயா காலி பண்ணு" என்று அவளை தீவிரமாக அழவைக்கும் முடிவில் இருந்தான்.​

ப்ரியதர்ஷினியோ "அங்கும் இங்கும் பார்த்தாள். ஒரு பலச்சரக்குகடை மட்டும் தென்பட, கண்ணீரை துடைத்தபடி, "அண்ணா ஒரு பாலிதீன் கவர் இருக்கா? கொடுங்களேன்" என்று கேட்க அவரும் கொடுத்தார்.​

இந்தர் பைக்கில் டிபன் பாக்ஸை வைத்து பாலிதீன் கவரை பிரித்து சாதம் கொட்ட போகவும், தடுத்தான்.​

"ஒரு நிமிஷம் உன் கண்ணுல ஏன் இந்த தண்ணீர் கொட்டுதுனும், உன் கன்னம் தாண்டி ஏன் வழியுதுனும் யோசி. நீ என் மேல வச்சிருக்கற உறவு புரிஞ்சிடும்.​

ஒரு டிபன் பாக்ஸும் தரவேண்டாம். அதை வச்சிக்கோ. அதோட கூடுதலா இதையும் அம்மா கொடுத்து விட்டாங்க. பூரி சூடா சாப்பிடணும்னு மினி ஹாட் பாக்ஸில தந்திருக்காங்க." என்று நீட்டினான்.​

ப்ரியதர்ஷினியோ உறைந்தவளாக நின்றவள் வாங்க மறுத்தாள்.​

"பச் டிபன் பாக்ஸ் வாங்கிட்டா பார்க்க வரமாட்டேன்னு நினைச்சியா? திரும்ப திரும்ப வருவேன். 'லவ் யூ இந்தர்'னு நீயா சொல்லற வரை வருவேன்." என்று பேசியபடி கன்னம் பிடித்து கட்டைவிரலால் ஈரத்தை துடைத்தான்.​

ஆள்காட்டி விரலால் "காதல் வந்தே தீரணும், பதில் சொல்லாம தப்பிக்க முடியாது" என்றான்.​

"வேண்டாம் இரண்டு டிபன் பாக்ஸும் எடுத்துட்டு போங்க" என்று கூற, "உன்னை வேண்டும்னா தூக்கிட்டு போறேன். டிபன் பாக்ஸை நமக்கு கல்யாணம் முடிஞ்சதும் கையோட கொண்டு வருவியாம்." என்று கண்சிமிட்டு சென்றான்.​

ரோட்டில் தனியாக நின்று அவன் சென்ற திசையை வெறித்தாள்.​

நீண்ட நெடு மூச்சு இழுத்துவிட்டு, "எஸ் ஐ லவ் இந்தர்' இந்தர் எந்த பிரச்சனை வந்தாலும் நீ வேண்டுமின்னு என்னை சொல்ல வச்சிட்டா நான் என்னை பழிபோட்டு துரத்தினவங்களையும் எதிர்க்க ஆரம்பிக்கணும்.​

உன் காதலை நான் எனக்குள் உணர உணர மத்தவங்களை எதிர்க்க ஆரம்பிச்சிடுவேனா? என் மேல பழிப்போட்டப்ப கூட விலகி வந்த நான் உனக்காக எந்த பழி வந்தாலும் ஓகேனு திருச்சிக்கு ரிடட்டர்ன் போவேனா? என்ற வினாவோடு பஸ்ஸில் பயணத்தை தொடர்ந்தாள்.​

அதில் தவறில்லை இந்தருக்காக எதுவும் ஒரு கை பார்க்கலாம். உனக்காக உன் மீது பழி விழுந்த கணமும் கூடவே நின்றவன். வாழ்நாளில் கூடவே நிற்பான். அப்படியிருக்க காதலித்தால் என்ன? மிஞ்சி மிஞ்சி சந்தோஷ் தோழனை வளைத்து பிடித்துவிட்டாளென்ற பெயர் கிடைக்கும் அவ்வளவு தானே?! என்று மனம் நினைக்க வறட்டு முறுவலே மிஞ்சியது.​

அலுவலகம் வந்தப்போது மோகன் வரவேற்றார்.​

கையில் மகன் கொண்டு சென்ற ஹாட்பாக்ஸ் இருக்க, ப்ரியாவை கண்டு இன்று 'யாரையாவது விரும்பறியாம்மா?' என கேட்டு விடவேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தார்.​

ப்ரியாவோ அதெல்லாம் கேட்கவே தேவையில்லை என் மனதில் இந்தர் இருக்கின்றான் என்று ஹாட் பாக்ஸ் திறந்து கண்ணீர் மல்க பூரியை சுவைத்தாள்.​

ஒவ்வொரு விள்ளலை விழுங்கும் போதும் ஆனந்த கண்ணீர் திரள, துடைத்தபடி சுவைத்நிருந்தாள்.​

மோகன் வந்து பேசவும், அதே நேரம் மற்ற ஆட்கள் வரிசையாக வரவும் மேலயிருக்கின்ற பூரி காலியானதால் மூடிவைத்து எழுந்தாள்.​

கீழே ஒரு பாக்ஸ் இருக்கும் மருமக பார்க்கலை போலயே' என்று மோகன் கூற யோசித்தார். அதற்குள் சரி பிரேக் டைம் பேசுவோம் என்று முடிவெடுத்துக் கொண்டார்.​

----​

மறுபக்கம் விலாசினி சந்தோஷ் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்தனர். சந்தோஷ் எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டும் மனம் மாறாது மன்னிக்காது இருந்த விலாசினி தற்போது அவனிடம் பேச வந்தாள்.​

"கோபம் போச்சா?" என்று பைனாப்பிள் ஜூஸ் ஆர்டர் தந்துவிட்டு அமர்ந்தான்.​

விலாசினியோ "என் மேல உங்களுக்கு எப்படி சந்தேகம் போச்சுனு தெரியலை. மேபீ ப்ரியா சொன்னதா இருக்கலாம்.​

எனக்கு எங்கம்மா மேல டவுட் இருந்துச்சு. ஏன்னா சில போட்டோவுல ப்ரியாவை முறைச்சிட்டு இருந்தாங்க. அதனால அவங்களிடம் சண்டைப்போட்டு நீ நகையை எடுத்து ப்ரியா சூட்கேஸ்ல வச்சியாம்மானு கேட்டேன்." என்றதும் சந்தோஷ் விலாசினியை தான் கண் இமைக்காமல் கதை கேட்டான்.​

"பட் அவங்க சொன்னதே சொல்லறாங்க. 'அந்த பையன் இந்தர் ப்ரியாவை விழுங்கற மாதிரி பார்த்தான். அவளும் அதை கண்டுக்காம இருக்கற மாதிரி தோணுச்சு. அதனால ப்ரியாவை முறைச்சேன் டி. சாமி சத்தியமா நான் பழிப்போடலை. அப்பனை சின்ன வயசுல பறிக்கொடுத்த பொண்ணு அவளுக்கு நல்லது நடந்தா நானும் சந்தோஷப்படுவேன்டி.​

எனக்கு சந்தோஷுக்கு உன்னை கட்டிக்கொடுக்க ஆசையிருக்கு. கல்யாணத்துக்கு பிறகும் இங்கனயிருக்கற இடத்துல பொண்ணு இருக்கானு நிம்மதி. ஆனா பழிபோட்டு தான் உன்னை சந்தோஷுக்கு கட்டிக்கொடுக்க நான் நினைக்கலை.'னு சொன்னாங்க.​

அதோட எங்கப்பா துரைமாமாவிடம் பொண்ணுக்கு வயசு ஏறுது. படிப்பும் முடியப்போகுது வரன் பார்க்கலாம்னு இருக்கேன். சொந்தத்துல சந்தோஷ் இருக்கராப்ல. எதுக்கும் கேட்கறேன் ஆசையிருந்தா சொல்லுங்கன்னு கேட்க துரைமாமா பானுமதி அத்தையிடம் பேசிட்டு சொல்லறதா சொல்லிருக்காங்க.​

மேபீ உங்களுக்கு என் மேல, என் வீட்டு ஆட்கள் மேல, சந்தேகம் இருந்தா சொல்லிடுங்க. கட்டிக்க வேண்டாம்." என்று எதிரே தண்ணீர் வைத்த குவளையை பார்த்து பேசி முடித்தாள்.​

"எனக்கு உன் மேல சந்தேகம் இல்லை. எனக்கு உன்னை கட்டிக்க தான் ஆசையாயிருக்கு. விட்டா இப்பவே கட்டிப்பேன் அந்தளவு ஆசையிருக்கு. ஏதோ வார்த்தை விட்டுட்டேன் மன்னிச்சிடு. அத்தை இவ்ளோ பேசியிருக்காங்க அவங்களை தப்பா நினைக்காத. நானும் தப்பா நினைக்கலை." என்று விலாசினி கையை பிடித்தான். அவளோ உருவிக்கொண்டு முகம் திருப்பினாள்.​

"அப்பா என்னிடம் வந்தார். ப்ரியாவை மனசுல வச்சிட்டு சுத்தியது போதும். விலாசினியை கட்டிக்கோ மாமாவா வந்து உன்னை விலாசினிக்கு கேட்கறார்னு சொன்னாங்க.​

நான் ப்ரியாவை விரும்பலை. எங்களுக்குள் இருக்கறது பிரெண்ட்ஷிப் அது விலாசினிக்கு தெரியும். விலாசினியை கட்டிக்கறதுல எனக்கு எந்த தடையும் இல்லைனு சொல்லிட்டேன்.​

என்ன நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று கால்கட்டை விரலால் அவள் கட்டைவிரலை அழுத்தினான்.​

நொடியில் அவன் பேசியதை கேட்டு சாந்தமான இதயம் அவன் செய்கையில் விதிர்த்து அவனை ஏறிட்டாள்.​

சில்மிஷமான புன்னகையோடு சந்தோஷ் மயக்கும் புன்னகை செலுத்த, மெதுமெதுவாக விலாசினி முகமும் மெல்ல மெல்ல​

தாமரையாக மலர்ந்தது.​

-தொடரும்.​

-NNK79​

-நீயென் காதலாயிரு.​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-15​

இன்று எப்படியாவது ப்ரியதர்ஷினி மைந்தன் மீது வைத்த காதலை அவள் வாயால் உரைப்பதை கேட்டிடும் முடிவில் மோகன் இருந்தார்.​

இத்தனை முகப்பொலி ப்ரியா வதனத்தில் தென்பட, தனியாக இந்தர் மீது காதல் உள்ளதா என்று கேட்டு அறிய வேண்டுமென்ற அவசியம் இருக்காது தான். ஆனால் மனித மனதில் இருப்பதை நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றியும் பேசுவார்கள். அது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக.​

ஒருவேளை நாளை சந்தோஷ் குடும்பத்திற்காக தன் மைந்தன் மீது வைத்த காதலை மறைத்து புதைக்கலாம். அந்த நிலையை நிவர்த்திடவே இன்று யாரோ என்ற போர்வையில் அறிந்திட துடித்தார்.​

அதற்கு பிரேக் டைம் திவ்யமாக அமைந்தது.​

காபி குடித்தபடி சமோசாவை விழுங்கியவளிடம் மோகனே அருகே வந்து, "ப்ரியா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்க போல" என்று வந்தார்.​

"அப்படியெல்லாம் இல்லை சார் எப்பவும் போல தான் இருக்கேன்" என்று அவர் வரவும் லாவகமாக அமர சேரை திருப்பி வைத்தாள்.​

அதில் அமர்ந்த மோகனோ, "இல்லையே, முகத்துல ஒரு தேஜல் தெரியுதே. மதுவதி கவனிச்சியாம்மா" என்று கூட்டு சேர்க்க, "லைட்டா ப்யூட்டி பார்லருக்கு போயிட்டு வந்த மாதிரி பளிச்சுனு இருக்காங்க சார்" என்று மதுவதியும் கூறினார்.​

"மதுவதி எனக்கு இங்க ப்யூட்டி பார்லர் எங்கன்னு கூட தெரியாது. அதோட எனக்கு காஸ்மிடிக் அலர்ஜி." என்று அவசரமாக மறுத்தாள்.​

மோகனோ தாடையில் கையை வைத்து யோசனையோடு "இது ப்யூட்டி பார்லரில் வந்த தேஜஸா தெரியலை. ஏதோ வேற. மூன்று எழுத்து மந்திரமா தெரியுது" என்று கிடுக்கு போட ஆரம்பித்தார்.​

ப்ரியாவோ சிரித்தபடி என்ன கூற வருகின்றார் என்று சிரிக்க, "மது இந்த பைலை என் கேபின்ல வச்சிடுங்க" என்று மதுவதியை கழட்டிவிட, மதுவதியும் காபி கோப்பை தீர்ந்ததில் "ஓகே சார்" என்று மரியாதைக்கு எடுத்து சென்றாள்.​

ப்ரியாவும் தனதுயிடம் செல்ல எழுந்தாள்.​

மோகனோ, "ப்ரியா யாரையாவது காதலிக்கறியா?" என்றதும் எழுந்தவள் சுற்றிமுற்றிபார்த்து திகைத்து 'இல்லையென்று தலையாட்டினாள்.​

"நீ பொய் சொல்லறதா உன் கண்ணு சொல்லுதே." என்று அவர் நோட்டமிட, தன் குட்டை மறைக்க முயன்று தலையாட்டி செல்லும் முடிவோடு திரும்ப, "பொய் சொல்லிட்டு ஓடப்பார்க்கறதா தெரியுதே." என்றதும், "சேசே அப்படியில்லை சார். பிரேக் முடியறதுக்குள் கேபின்ல போயிடலாம்னு" என்று சிகை கற்றையை காதுமடலுக்கு பின் சொருகினாள்.​

"உட்காரும்மா பொறுமையா போகலாம்." என்றதும் வயதில் பெரியவர், சீனியர் என்றதில் அமர்ந்தாள்.​

"யாரையாவது விரும்பறதா இருந்தா சொல்லும்மா. முதல் நாள் வந்த முகப்பொலிவுக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. கண்ணுல காதல் வழியுது." என்று நூல் விட்டு பார்த்தார்.​

ஏற்கனவே வரும் பொழுது, இந்தரோ 'கண்ணுல தண்ணீர் அருவி மாதிரி கொட்டுது. அதுகிட்ட கேளு. நீ என்னை லவ் பண்ணறதை.' என்ற வார்த்தைகள் செவியில் வந்து மோத சிலையாக நின்றாள்.​

மோகனோ "நீ யோசிக்கறதை பார்த்தா என் கணிப்பு உண்மையா? டீரீட் எல்லாம் ஒரு டீ, சமோசா போதும்மா. உண்மையை சொல்லு" என்று ஊக்கினார்.​

இல்லையென்று தலையாட்டியவளிடம், இதற்கு மேல் நாசூக்காய் கேட்டாலும் கூறமாட்டாளென்று புரிய இனி தனக்கு காதல் விவகாரம் தெரிந்ததாக காட்டி பேசினார். அதாவது அன்வர் கூறியதாக மேனேஜர் தன்னிடம் பேசியதாக, "மேனேஜர் சொன்னாரே, யாரோ ஒருத்தரை விரும்பறதா. ஏதோ அன்வர் பாய் கடையில கூட அந்த பையன் பேசியதா சொன்னார்." என்று கூறவும் திருட்டு முழி விழித்தாள்.​

"உட்காரும்மா சும்மா சொல்லு." என்று கூறவும் உட்கார்ந்துவிட்டாள்.​

"சார்... அவர் என்னை விரும்பறார். நான் விரும்பலை" என்று மறுத்திட முயன்றாள்.​

"அட பொய் சொல்லாதம்மா. உன் கண்ணும் முகமும் உன் மனசை சொல்லுதே." என்றதும் ப்ரியா நாணினாள்.​

எந்தவொர் விஷயமும் யாரிடமாவது பகிராமல் இருக்க மாட்டோம். நல்லதும் கெட்டதும் நமக்கு யாரிடமாவது பகிர ஆசைப்படுவோம்.​

பெரும்பாலும் ஆட்களை பொறுத்து பகிர்வுகள் மாறுபடும்.​

ப்ரியாவுக்குள் பூத்த காதலை அவள் சந்தோஷிடம் தான் தெரிவித்து குதுகலிக்க ஆசைப்படுவாள். ஆனால் அவனிடம் சொன்னால் இந்தரிடம் தன் குட்டு தெரிந்திடும்.​

சுதாவிடம் கூறும் அளவிற்கு அவள் நின்று பேசவில்லை. அவளுக்கு குடும்பம், குழந்தை, வேலை என்று பார்வையிடவே நேரம் சரியாக இருக்கும். அக்கா யமுனாவிடம் முதலிலிருந்தே பகிர மாட்டாள்.​

இந்த இடத்தில் மோகன் சாரிடம் பகிர ஆசையுண்டானது. அதுவும் தோழனாக மோகன் சார் இங்கு வந்த கொஞ்ச நாளிலேயே நட்பாக இருப்பவர் என்ற காரணங்கள் ப்ரியா மனதை திறக்க வைத்தது.​

"அவரிடம் நான் காதலிக்கறது சொல்லலை சார். ஆனா அவரை பிடிக்கும்" என்று உரைத்தாள்.​

"எங்க மறுபடியும் சொல்லு?" என்று கூற, ப்ரியா அறியாது போனில் ரெக்கார்ட் பட்டனை தட்டி பேண்டில் போட்டார். ப்ரியாவோ இந்தர் பற்றி கூற முடிவெடுத்து வெட்கத்தோடு தலை கவிழ்ந்தவள் மோகன் ரெக்கார்ட் செய்ய தயாராகி பேண்டில் போட்டதை கவனிக்கவில்லை.​

"அவர் பெயர் இந்தர் சார். முழுப்பெயர் இந்திரஜித். என்னை அவர் தான் காதலிப்பதா சொன்னார். இப்ப நானும் அவரை காதலிக்கறேன். ஆனா அவரிடம் சொல்லலை." என்றவள் முகம் மலர்ந்து மகிழ்ந்தது.​

மகனுக்கு இப்பொழுது பேசியதை, போனில் ரெக்கார்ட் செய்ததை போட்டு காட்டினாலே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானென்று புரிய அப்படியே பேச்சை வளர்த்தார்.​

"ஏன்ம்மா சொல்லலை.? எனி பெர்சனல்? என்னிடம் ஷேர் பண்ணும்மா. ரொம்ப வருஷம் ஆகுது. இப்படி பிரேக் டைம்ல காதல் கதை கேட்டு காபி குடிச்சி பேசறது.​

இந்த காலத்து காதலரை பத்தி தெரிந்துக்கறேன்." என்று கதை கேட்க, "ஏன் சொல்லலைனா... அவர் என் அத்தை பையனோட பிரெண்ட் சார். அவரா வந்து காதலிக்கறதா சொல்லறார். பட் இப்ப இருக்கற சிட்டுவேஷன்ல சொன்னா தப்பாயிடும்." என்று கலங்கினாள்.​

"என்னம்மா சடன்னா கலங்கற? என்னாச்சு. எதுனாலும் என்னிடம் ஷேர் பண்ணு." என்று பேசவும் ஒன்னுமில்லையென்று மறைத்தாள்.​

"பச் சொல்லும்மா" என்று அழுத்தம் கூட்ட, "இருக்கட்டும் சார் சந்தோஷமான விஷயம்னா சொல்லலாம். கஷ்டமானதுனா தவிர்க்கறது பெஸ்ட்" என்று கூறினாள்.​

கல்லில் கூட நார் உறித்திடலாம் போல இந்த பெண்ணிடம் வார்த்தை பிடுங்க முடியாது நின்றார். ஆனால் அப்படியே எழுந்து போக மனம் வந்தால் தானே. இன்று முடிவோடு பேச வந்தாயிற்று வார்த்தையை பிடுங்கு மோகன் என்றது மனசாட்சி.​

"சரிம்மா லவ் பண்ணற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பியா. இல்லை இந்த காலத்து பொண்ணுங்க மாதிரி கழட்டிவிட்டுடுவியா." என்று விளையாட்டாய் கேட்பதாக கேட்டு ப்ரியாவை ஆழம் பார்த்தார்.​

ப்ரியா மெதுவாக மௌவுனமாய் மாறி, "இந்தரை மேரேஜ் பண்ண முடியாது சார். ஆனா நான் அவரை ஏமாத்த மாட்டேன். என் காதலை அவரிடம் காட்டிக்க மாட்டேன்" என்று குரல் பிசிறு தட்ட கூறினாள்.​

மோகனுக்கு கோபம் உருவானது. தன் மகனை திருமணம் செய்ய மாட்டாளாமே. காதலிப்பதாக காட்டிக்க மாட்டாளாமே ஏனாம்? என்று கடுகடுவென முகம் மாறியது.​

"ஏன்ம்மா. நீ நல்ல பொண்ணாச்சே. காதலிச்சவனை கட்டிக்கறதுல என்ன தப்பு.? ஏன் அந்த பையன் சரியில்லையா?" என்று கேட்டார்.​

ப்ரியதர்ஷினியோ "நோ சார் அவர் ரொம்ப நல்லவர். நான் தான் அவர் குடும்பத்துக்கு செட்டாக மாட்டேன். ஆக்சுவலி என் மாமா பையனோட பிரெண்ட் தான் சந்தோஷ். எங்க மாமா அத்தைக்கு நான் சந்தோஷை கட்டிப்பேன்னு ரொம்ப கனவு. ஆனா அவன் என் சித்தி பொண்ணு விலாசினியை ரூட் விட்டான். இப்ப வீட்ல இரண்டு பேருக்கும் பேசி முடிவுப் பண்ணிடுவாங்க" என்று சந்தோஷமாக பகிர்ந்தாள்.​

"அப்பறம் என்னம்மா நீ இந்தரை கட்டிக்க வேண்டியது தானே?" என்று தனக்கான பதிலிலே நின்றுர்.​

மீண்டும் முகம் வாடியது. "இல்லை சார் ஆக்சுவலி நான் திருச்சில பிறந்து வளர்ந்தவ. இப்ப தான் ஒரு பிரச்சனையால இங்க வந்து வேலையில இருக்கேன். பிரச்சனை என்னன்னா சந்தோஷோட தங்கச்சி சந்தியாவுக்கு என்னை சுத்தமான பிடிக்கலை. ரீசண்டா சந்தோஷோட பெரிய தங்கச்சி சந்திரிகா கல்யாணம் நடந்தது.​

எதுக்கெடுத்தாலும் அத்தை மாமா என்னையே முன்னிலைப் படுத்தினாங்க.​

அதெப்படின்னா... சந்திரிகா கூடவே இருக்க சொன்னாங்க. எனக்கும் சந்திரிகா சந்தியா மாதிரியே டிரஸ் எடுத்துக் கொடுத்தாங்க. என்னை தான் வரவேற்பறையில் நிற்க சொன்னாங்க. மொய் கிப்ட் வாங்க மேடையில நிறுத்தினாங்க. இதெல்லாம் சந்தியாவுக்கு சுத்தமா பிடிக்கலை.​

அவளுக்கு இப்பன்னு இல்லை அத்தை மாமா என்னிடம் அன்பா பேசி பழக ஆரம்பிச்சதுலயிருந்தே அவளுக்கு பிடிக்காதாம். என் மேல ஒரு பழி சுமத்திட்டா. அதனால அங்கிருந்து மொத்தமா இங்க வந்துட்டேன்.​

இப்ப சந்தோஷ் வீட்ல எல்லாம் அந்த பழியை நம்பறாங்க. நான் அப்படியில்லைனு எதை வச்சி ப்ரூப் பண்ணறது? ஆதாரம் இல்லையே. சந்தோஷ் வீட்ல என்னை மருமகளா நினைச்சி உரிமையை கொடுத்தாங்க. பாசம் காட்டினாங்க. அது சந்தியாவுக்கு பிடிக்கலை. அதை முதல்லயே பழி போடறதுக்கு முன்ன என்னிடம் சொல்லிருந்தா நானே நாசூக்கா சந்தோஷ் பேமிலியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டுயிருப்பேன். அவ பழிபோட்டுட்டா. இப்ப சந்தோஷ் பிரெண்ட் இந்தரை எப்படி விரும்புவேன். கல்யாணத்துக்கு வந்தவனை மயக்கிட்டான்னு சொல்வாங்க. ஏற்கனவே ஒரு பழி. இதுல இந்த பழிவேறயானு பயமாயிருக்கு சார்.​

இந்திரஜித் எல்லாம் சூப்பர் கேரக்டர். அவன் அவனோட அப்பா அம்மாவிடம் கூட என்னை பத்தி சொல்லிருக்காணாம். காதலிக்கறதை பத்தி பெற்றோரிடம் டிஸ்கஷன் பண்ணிருக்கான். எந்தளவு பிரெண்ட்லியான பேமிலி. நான் தான் அவங்களோட வாழ கொடுத்து வைக்கலை." என்று கடிகாரத்தை பார்த்து சாரி சார் என்ன பழி ஏதுனு எதுவும் சொல்லாம பேசிட்டேன். சிலது பேசினா புண்ணை சொறிந்து விட்டமாதிரி ஆகிடும். விடுங்க சார் காதல் கல்யாணத்துல முடிஞ்சா தான் வெற்றியா?​

என் இந்தரை லைப் லாங் மனசுல போட்டு பூட்டி அவனை நினைச்சிட்டே வாழ்ந்திடுவேன்." என்று நேரம் முடிந்ததாக கூறி தனது பணிக்கு சென்றாள்.​

மோகனோ அங்கிருந்த நீரை குடித்து முடித்தார்.​

'என் பையனோட உன்னை சேர்த்து வைத்து எங்க கூட்டுல நீயும் வாழ்வம்மா. அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.' என்று மனதில் கூறி மருமகள் சென்ற திசைக்கு நடந்தார்.​

போனில் ரெக்கார்ட் செய்தவையை மகனுக்கு அனுப்பலாமா என்று சிந்தித்தார்.​

ஆனால் மகனின் முகபாவனை நேரில் கண்டு ரசிக்க ஆசைப்பட்டார். அதனால் மாலையில் சென்று காட்டி ஒலிப்பரப்பலாமென்று திட்டமிட்டார்.​

இதில் கூடுதலாக மருமகளை இன்று வீட்டிற்கு அழைத்து சென்று இந்தருக்கும் ப்ரியாவுக்குமே ஆனந்த அதிர்ச்சி தந்தால் என்ன? என்று திடீர் எண்ணம் உதயமானது.​

ஏனோ மருமகளோடு ஒரே அலுவலகத்தில் இருந்துக்கொண்டு வாயை கட்டுப்படுத்தி பேசுவது கடினமாயிருந்தது. பிறவியிலேயே மனதை உடைத்து பேசும் குணம் மோகன்.​

அதனால் ப்ரியாவை மாலை வீட்டிற்கு அழைத்து சென்று மகனிடம் காட்டி, பிறகு காதலிப்பதை நேரில் கேட்க வேண்டும். தற்போதை வார்த்தையால் கூறியதால் மகனிடம் மறுக்காமல் சம்மதம் தெரிவித்தே ஆகவேண்டும் அவள் வேறுவழியில்லை.​

அதோடு இந்த திருட்டு பழியை போட்டது சந்தோஷ் தங்கை சந்தியா என்று இந்தரிடம் கூறி, சந்தோஷிற்கு தெரியப்படுத்தி ப்ரியா மீதான பழியை களைந்திட வேண்டும்.​

நல்லவர்களுக்காக பழியை சுமக்கலாம். சுயநலம் கொண்டவர்களுக்காக, புரிந்துக் கொள்ளாதவர்களுக்காக பழியை சுமக்க அவசியமில்லையே.​

அதை ப்ரியாவிற்கு மகன் மூலமாக மருமகளுக்கு புரிய வைக்கவேண்டுமென்று முடிவெடுத்தார்.​

-தொடரும்.​

-NNK79​

நீயென் காதலாயிரு​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-16​

மோகன் சாரிடம் தன் காதலை பகிர்ந்ததும் ஏனோ சந்தோஷமாக இருந்தது. ஆனால் சந்தியாவை பற்றி வார்த்தை விட்டிருக்க கூடாதோயென்று நொடிக்கொரு முறை நினைத்தாள்.​

இருபது நிமிடம் கழித்து ப்ரியாவே 'மோகன் சார் சந்தோஷிடமோ இந்தரிடமோ சொல்லவா போறார். அவருக்கு அவங்களை யாருனே தெரியாது. இந்தர் ஆபிஸ் பக்கமா வந்து பேசலை. ஹாஸ்டல் பக்கம் தான் வர்றான். அதனால சமாளிச்சிடலாம்.' என்று வேலைகளில் முழ்கினாள்.​

மோகனும் இயல்பாக பணியில் தீவிரமாக, மற்ற எண்ணங்கள் மறக்கடிக்கப்பட்டது.​

வேலைகளில் மதிய உணவு நேரம் என்று மதுவதி உலுக்க, சில்வர் டிபன் பாக்ஸை எடுத்தாள். காலையில் சாப்பிட்ட குட்டி ஹாட்பாக்ஸ் இரண்டடுக்கு. மேலே பூரி இருக்க அவசரமாக சாப்பிட்டாள்​

கீழே டிபன் பாக்ஸில் அடித்தளம் இன்னும் கணமாக இருக்க, உணவை பார்த்தாள். காய்கறி சாதம் கலந்து கொடுத்துவிட்டதாக தெரிந்தது.​

இரண்டு டிபன் பாக்ஸையும் எடுத்து வந்து மோகன் மதுவதி அருகே அமர்ந்தாள்.​

மோகனுக்கு மதியமும் பூரியா? என்பது போல மருமகளை பார்த்திட, காய்கறி சாதமென்றதும் ஸ்பூனால் சுவைக்க, மதுவதியோ "அட மோகன் சார் நீங்களும் வெஜிடேபிள் ப்ரிஞ்ச், ப்ரியாவும் வெஜிடேபிள் ப்ரிஞ்ச்" என்றதும் மோகன் சாரின் உணவை கவனித்தாள்.​

இரண்டும் ஒரேவகையாக தோன்ற மதுவதியோ, "சார் உங்க புது பிரெண்டுக்கு மட்டும் கொண்டு வந்திங்களா?" என்று கேட்டாள்.​

"சேசே" என்றது போல தலையாட்டி மறுக்க முயல, இன்னொரு ஊழியரோ, "அட டிபன் பாக்ஸ் பார்த்தாலே தெரியலையா? அதுவும் நம்ம மோகன் சார் டிபன் பாக்ஸ். ஏதாவது விஷேஷம்னா கேசரி எல்லாம் இதுல தானே கொண்டாருவார்." என்று கூறவும் ப்ரியாவோ திகைத்திருந்தாள்.​

"சார் உங்களுக்கு இந்த மாசம் தானே வெட்டிங் அனிவர்சனி? இன்னிக்கா சார்?" என்று தேதியை கண்டார்கள்.​

எப்பொழுதும் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கும் தருணம் காதலர் தினத்திற்கு இரண்டு நாள் முன்பு திருமண நாள் என்பதால் இவருமே காதலரை போல இந்தர் வாங்கிய உடையை அணிந்து வருவார்.​

"மோகன் சார் உங்க வீட்டு டிபன் பாக்ஸ் ப்ரியாவிடம் இருக்கு.​

ஓ... நீங்க ரிலேட்டிவா? அதான் மோகன் சார் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து ப்ரியாவை பார்த்து பேசறார்." என்றதும் மோகனோ லேசாக சிரித்து மழுப்பினார்.​

ப்ரியாவோ இரண்டு உணவும் ஒரே மாதிரி இருந்ததும், மோகன் சாருக்கு இந்த மாதம் வெட்டிங் அனிவெர்சரினா? இவர்.. இவர்... இந்திரஜித்தின் தந்தையா?' என்று நாவறண்டது.​

முகசாடையை அவள் அதன் பின்னே ஒப்பிட்டால், மோகன் சார் பேசும் போது நெருங்கிய மனிதாராய் தெரிந்தாரே காரணம் இது தானா? என்றவளுக்குள் மனம் பூகம்பத்திற்குள் சிக்கியது போல இருந்தது.​

இந்திரஜித்தை விரும்பியதையும், சந்தியா தான் பழி சுமத்தியதையும் அவள் வாயாலே கூறினாளே?!​

மற்றவர்கள் பார்க்க அசடாக சிரித்துவிட்டு இருந்த உணவை ஒன்றும் பாதியுமா விழுங்கி தன்னிருப்பிடம் வந்து விட்டாள்.​

தலையில் கைவைத்து "இப்ப என்ன பண்ணறது. இப்படி சென்னை வந்து இந்தரையும், இந்தரோட அப்பாவையும் சந்திப்பேன்னு கனவுலையும் நினைக்கலை. ஆனா எல்லாம் எனக்குன்னு அமைஞ்சிடுச்சே' என்ற பாவத்தில் இருந்தாள்.​

மோகனோ இந்திரஜித் தந்தை என்றது அறிந்துக் கொண்டாளோ என்றதும் எப்படியும் மாலை வீட்டுக்கு அழைத்து அங்கே சர்பிரைஸ் கொடுக்க எண்ணியவருக்கு விதியே டிபன் பாக்ஸ் ரூபத்தில் அவருக்கே சர்பிரைஸை நிகழ்த்திவிட்டது.​

மெதுவாக மாலையில் பேசிப் பார்ப்போமென்று பணிகளுக்கு இடையே ப்ரியாவை நோட்டமிட்டார்.​

ப்ரியதர்ஷினியோ கல்லை முழுங்கியவளாக வேலையில் இருக்க கண்டவர், மனைவியிடம் ஒரே ஆபிஸ்ல நானும் மருமகளும் இருக்கோம் என்று சொல்லிருந்தால் இந்த குட்டி ஹாட்பாக்ஸ் மகனுக்கு தந்திருக்க மாட்டாள். அதோடு அதே உணவாக ப்ரிஞ்ச் கட்டி கொடுத்திருக்க மாட்டாள்.​

வேறு வேறு ப்ரிஞ்ச் என்று கூட வாதாட முடியாது. இரண்டிலும் தனித்துவமாக மக்காச்சோளம் சற்று உதிர்த்து பட்டாணி போல கலந்திருந்தாள். சித்ராவுக்கு மக்காச்சோளம் சேர்த்து செய்வது பிடிக்கும்.​

பல வண்ணங்கள் கேரட் ஆரேஞ்சு , பட்டாணி பச்சை, உருளை வெள்ளை, அதனால் மஞ்சளாக மக்காசோளம் சேர்ப்பார் கேட்டால் வித்தியாசமாம். இன்று அந்த ஒற்றுமை தான் வித்தியாசப்படுத்த முடியாது திண்டாட வைத்தது.​

மாலை பிரேக் டைம் டீ குடிக்க கூட எழுந்து வராது மாமனாரிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தாள்.​

அக்கணம் மோகன் முடிவெடைத்தார். எப்படியும் மைந்தனின் பார்வைக்கு கொண்டு சென்றாக வேண்டியது தன் கடமை என்று.​

மாலையில் புறப்படும் நேரம், ப்ரியா வெளிவர, "மருமகளே கோபம் வேண்டாம். மாமா என்ன சொல்ல வர்றேன்னா" என்று ஆரம்பிக்கும் நேரம், "இங்க வந்தப்பவே நான் யாருனு தெரியும் தானே?" என்று முனுக்கென்று கண்ணீரை சிந்தினாள்.​

"தெரியும் ப்ரியா. ஆனா இந்தரிடம் இப்பவரை நீ என் கூட தான் ஆபிஸ்ல வேலை பார்ப்பதை சொல்லலை. உன் மனசுல இந்தர் இருக்கான்னானு தெரிந்துட்டு அவனிடம் சொல்லணும்னு தான் காத்திருந்தேன். எந்த தடங்கலும் செய்யாம வீட்டுக்கு வாம்மா. இந்தரிடம் நாம பேசணும்." என்றார்.​

ப்ரியா மறுப்பாய் தலையசைக்க, "இங்கப் பாரும்மா நீ அவனை விரும்பறதை நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். அவனுக்கு போட்டு காட்டி விளக்கினா முதல் வேலையா வுமன்ஸ் ஹாஸ்டல் வாசல்ல வந்து நிற்பான்.​

இரவு நேரம் அங்கேயே சுத்திட்டு இருந்தா... அவன் வயசுக்கு நல்லாதான் இருக்கும். லாட் ஆப் கேர்ள்ஸ் வந்து போறயிடும்." என்றதும் ப்ரியா முனுக்கென்று சிரித்து விட்டாள்.​

"அவ்ளோ தான்டா வாழ்க்கை. ஒரு செகண்ட்ல கண்ணீர். அடுத்த செகண்ட் சிரிப்பு. துன்பம் இன்பம் கலந்து தான் கிடைக்கும். என்னோட வா இந்தரிடம் பேசலாம்" என்றதும் ப்ரியா தயங்கினாள்.​

வேண்டாம் என்று கூறாது யோசித்தாள். எப்படியும் இந்தரை விரும்பியது தெரியும் சந்தியா பற்றி மோகன் சார் சொல்லலாம். அதற்கு நேரில் சென்று தானாக இந்தரிடம் பேசுவதே நல்லது என்று மாமனார் பைக்கில் அமர்ந்தாள்.​

"அந்த கம்பியை புடிச்சிக்கோம்மா. அத்தையையே வச்சி ஓட்டுவேன். அதனால பயப்பட வேண்டாம்." என்று கூறி, வீட்டு பக்கம் வண்டியை விட்டார்.​

ப்ரியாவுக்குள் இந்தரிடம் என்னென்ன பேசவேண்டுமென்ற திட்டங்களை தீட்டினாள்.​

அவனை விரும்புவதை கூறிவிட்டதால் அதை மறுக்க முடியாது. ஆனால் தன்னை மறக்க கூறவேண்டும் என்று முடிவெடுத்தாள்.​

"மோகன் சார் நான் உங்களோட வர்றதாலயும், நான் இந்தரை விரும்பறதா சொன்னதாலையும் இந்தர் காதலை ஏற்றுக்கிட்டேன்னு அர்த்தமில்லை. எனக்கும் இந்தருக்கும் கல்யாணம் நடக்காது." என்றதும் மோகனோ 'எதுவென்றாலும் மகன் முன் பேசட்டும். மகன் முன் அவன் முகம் பார்த்து காதலை மறுப்பாளா?' என்ற எண்ண தோன்றியது.​

"அது உங்க முடிவும்மா. ஒரே ஒரு ரெக்வஸ்ட் ஆபிஸ் தாண்டி வந்தாச்சு. இந்த சாரை கட் பண்ணும்மா. முடிஞ்சா மோகன்னு கூப்பிடு. இல்லையா மாமானு சொல்லு." என்றதும் "அங்கிள் இரண்டும் கூப்பிட முடியாது" என்று கொட்டு வைத்தாள்.​

மோகனோ "அது சரி அங்கிளாவது வருதே'' என்று நேர்மறையாகவே எடுத்து கொள்ள, ப்ரியதர்ஷினிக்கு இந்தரை கூடுதலாக பிடித்தது.​

என்ன தான் பானுமதி துரைசிங்கம் அத்தை மாமா என்று அன்பை பொழிந்தாலும் அது வேறு. இது நட்பு ரீதியான பந்தமாய் வித்தியாசமாய் தெரிந்தது.​

மாம்பலம் வந்ததும், "இந்த பக்கம் தானேம்மா ஹாஸ்டல்" என்றார். "ஆமா அங்கிள்" என்றாள்.​

மோகன் அந்த பாதையில் சென்றதும் அச்சோ இங்க இந்தர் நிற்பாரே? என்று பதட்டமாக, அவள் எண்ணத்தை பொய்யாக்காமல் பைக்கை நிறுத்தி அதன் மேல் அமர்ந்து போனில் தலையை விட்டு முழ்கியிருந்தான்.​

இடது கையால் கழுத்து வலியோடு நிமிர, தந்தை பைக் தந்தையின் பின்னால் தர்ஷினி என்றதும் பைக்கிலிருந்து இறங்கி நின்றான்.​

"அப்பா" என்று தந்தையையும் தன்னவளையும் காண, மோகனோ "வீட்டுக்கு வாடா உட்கார்ந்து பேசுவோம்" என்று கூறிவிட்டு பைக்கில் சென்றார்.​

"தர்..தர்ஷி... அப்பா பைக்ல... வீட்டுக்கு போறா" என்று அதிர்ச்சியும் ஆனந்தமாய் தந்தை பைக்கை பின் தொடர்ந்தான்.​

ப்ரியாவோ தனக்கு பின்னால் மெதுவாக தன்னையே சாப்பிட்டு ஏப்பமிடும் விதமாக தொடர்பவனை கண்டு முகம் திருப்பி முன்னால் பார்வையிட்டாள்.​

தன்னை பாராது முன்னால் பார்வை பதித்தவளை கண்டு, வண்டியை முறுக்கி தந்தையை ஓவர்டேக் செய்து முன்னால் செல்ல, "அவசரத்தை பார்த்தியாம்மா" என்று பேசியபடி அவரின் மிதவேகத்தோடு வீடு வந்தடைந்தார்.​

"அம்மா... முதல்ல வெளியே வந்து பாரு. அப்பா யாரை கூட்டிட்டு வந்திருக்கார்னு." என்று இழுத்து வர, துணி மடிக்க விடறியாடா. எப்பப்பாரு அப்பாவும் மகனும் இம்சை பிடிச்சதுங்களா இருக்கே." என்று கூறி வர "தர்ஷினி ப்ரியதர்ஷினி. உன் லவ்வர்... என் மருமகடா" என்று சித்ரா கேட்க, "ஆமா ஆமா உன் மருமகளே தான்" என்று அறிமுகப்படுத்தினான்.​

"உங்கப்பா கூட்டிட்டு வர்றார்" என்று கூறி "வாம்மா ப்ரியா" என்று வரவேற்க, இந்தரிடம் பதிந்த பார்வை சித்ராவிடம் திருப்பினாள்.​

"வணக்கம் ஆன்ட்டி" என்றவள் மோகனை தான் கண்டாள்.​

"நீங்க எப்படிங்க ப்ரியாவை கூட்டிட்டு வர்றிங்க? உங்களுக்கு ப்ரியாவை தெரியுமா?" என்று கேட்டு ப்ரியாவை கைப்பிடித்து அழைத்து வர, இந்தர் பார்வை பெண்ணவளை தாண்டி வேறெங்கும் செல்லவில்லை.​

"என் ஆபிஸ்ல புதுசா ஜாயின்ட் ஆனது ப்ரியதர்ஷினி தான். சரி கொஞ்ச நாள் கழிச்சு உங்களிடம் சொல்வோம். அதுவரை ப்ரியா மனசுல நல்ல இடமா பிடிக்கலாம்னு பழகினேன்.​

இன்னிக்கு இந்தரை பத்தி கேட்டுடுவோம்னு முடிவுல இருந்தேன். கேட்டேன். கூடவே உன்னோட ப்ரிஞ்சு சாதத்தால மாட்டிக்கிட்டேன்.​

மதியம் இரண்டு பேரும் சாப்பிட்டுட்டே பேசுவோம். இன்னிக்கு சாப்பாட்டை வச்சி ப்ரியாவிடம் மாட்டிட்டேன். நம்ம வடிவேலன் டிபன் பாக்ஸை வச்சி என்னோடதுனு ப்ரியாவிடம் போட்டுக் கொடுத்துட்டார்.​

வேற வழியில்லாம தெரிந்தப் பொண்ணுனு அவங்களிடம் சொல்லியாச்சு. அதே போல ப்ரியாவிடம் இந்திரஜித் அப்பா மோகன் என்று அறிமுகமாகிட்டேன்.​

இந்தர் உன்னிடம் பேச தான் அழைச்சிட்டு வந்தது." என்று கூற, சித்ராவோ ஒரு பக்கம் தட்டில் முறுக்கு லட்டு, என்று கொடுக்க "டீயா காபியாம்மா?" என்று கேட்டார்.​

"காபி ஆன்ட்டி" என்று உரைத்தாள்.​

இந்தரோ அப்பா பக்கம் அமர்ந்தவன், அவளை தான் இமைக்காது பார்த்தான்.​

மோகனோ "முதல்ல நீங்க தனியா பேசுங்கம்மா. நீ அவனை பற்றி பேசியதை அவனிடமே சொல்லற. இந்தமுறை நழுவமுடியாது.​

ரெகார்ட் பண்ணியதை அவனிடம் கொடுப்பேன். அப்பறம் எப்படியும் உன் பின்னால வருவான். நீயா பேசி தெளிவாகி வாங்க. மாடில பேசணும்னாலும் பேசுங்க​

இல்லை அவன் ரூமுக்கு போய் பேசினாலும் ஓகே" என்று கூற, இந்தர் எழுந்து அவனது அறைக்குள் சென்றான்.​

"சாருக்கு நீ அவன் ரூம்ல காலடியெடுத்து வைத்து பேசணும்னு ஆசைப்போல. பேசிட்டு வாம்மா" என்று மோகன் கூற, "காபி" என்று சித்ராவும் நீட்ட அதனை வாங்கி இந்தரின் அறைக்குள் நுழைந்தாள்.​

சித்ராவோ 'ப்ரியாவை எப்ப, எப்படி சந்திச்சிங்க? என்ன பேசினா? பழகறதுக்கு எப்படி தெரியறா? இங்க வந்த காரணம் என்ன? அவ இந்தரை விரும்பறாளா? உங்களிடம் என்ன சொல்லிருக்கா?' என்று கேட்க மோகன் கூற தயாரானார்.​

இந்தரின் அறைக்குள் காபி கப்போடு வந்த ப்ரியாவை நொடிப்பொழுதில் காபி கப்பை வாங்கி மேஜையில் வைத்து, அவளை கட்டிப்பிடித்து முகத்தை நிமிர்த்தி முத்தங்களை வழங்க, ப்ரியாவோ கை நடுங்க "இல்லை" என்று அதிர, அவளது கையில் சூடான காபி கொட்டியது.​

"ஸ்ஆ அம்மா" என்றதும் அந்த காபி மக்கை வாங்கி மேஜையில் வைத்த இந்தரோ, "கண்டதும் நினைச்சி பயந்துட்டு வந்தா இப்படி தான். பாயும் புலி மட்டும் கண்ணுக்கு தெரியும்." என்று பேச தன் மனதில் நினைத்தவையை யூகித்து பேசியவனை கண்டு மெச்சுதல் அடைந்தாள்.​

"நான் ஒன்னும் தப்பா நினைக்கலை. காபி சூடாயிருந்தது." என்றதும், "காபிக்கு பதிலா பால் எடுத்துட்டு வந்ததா கனவெல்லாம் கண்டுட்டு பச்ச பொய் சொல்லாத." என்றவன் "உட்காரு" என்று மெத்தையை சுட்டிக்காட்டினான். இதென்ன கையில் காபி கப் மெத்தையில் அமரு என்றதெல்லாம் திரைப்படத்தில் மணமுடித்த தம்பதிகள் செய்கையே. அதோடு முடிச்சிட்டு பார்த்தாள்.​

ப்ரியா அமராமல் இந்தரை ஏறிட, "மேடம் உங்க எண்ணம் தறிக்கெட்டு போகுது. மாடிக்கே போகலாமா இல்லை இங்கயே பேசலாமா?" என்றதும் ப்ரியா நடப்பை அறிந்தவளாக வாய் திறந்தாள்.​

"நான் உங்களை விரும்பறேன்" என்றுரைத்துவிட்டு அவனை ஏறிட்டாள்.​

"ஓல்ட் நியூஸ்" என்று தாடையை தேய்த்தான்.​

"நீ சந்திரா கல்யாணத்துல என்னை அவாய்ட் பண்ணிட்டு போயிட்டு, ஒளிஞ்சு ஒளிஞ்சு ரசிச்சு பார்த்தியே அப்பவே உனக்கு என்னை பிடிக்கும்னு தெரியும். அப்பறம் நான் பானுமதி ஆன்ட்டியிடம் நீ திருடலைனு சொன்னதும் என்னை கண்ணீர் வழிய பார்த்தியே அப்பவே பிற்காலத்துல என்னையே நினைப்ப, கூடுதலா ரொம்ப பிடிச்சிடும்னு தெரியும்.​

இங்க வந்ததும் என்னை பார்த்து ஒரு ஆச்சரியம் கலந்த திகைப்பு, அதோட அச்சோ இவனை சந்திச்சிட்டோம்.இது காதலா மாறுமா? என்று பரிதவிப்பா அப்பவே குழம்பினப்பவே நீ காதலிச்சிடுவனு தெரியும்.​

நான் வழிய வந்து பேசியும் ரெஸ்பான்ஸ் பண்ணி நடந்த,என் டிபன் பாக்ஸை இப்பவரை தரலை. என் காதலை உனக்கு தேவைப்படுதுனும் தெரியும். நீ என்னை விரும்ப ஆரம்பிச்சு அதை மறைச்சி உன்னையே நீ ஏமாத்திட்டு இருப்பதும் தெரியும்.​

இப்ப எனக்கு தெரிய வேண்டியது. உன் மேல யார் திருட்டு பழி போட்டதுன்ற விஷயம் தான்." என்று கைகட்டி கேட்டதும் ப்ரியாவுக்கு 'இவன் என்ன காதலித்தால் போதுமென்று எண்ணத்தில் இருப்பானென்று நினைத்தாள். தன் பழியை களையும் முடிவோடு தான் இருக்கின்றான்​

என் காதலை விட எ​

ன் மீது மற்றவர் போட்ட பழியை களைவதில் முனைப்பாய் இருக்கின்றான் என்று பிரம்பிபப்பாய் பார்த்தாள்.​

-தொடரும்.​

-NNK79​

நீயென் காதலாயிரு​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-17​

ப்ரியா மறுப்பாய் தலையசைத்து "இங்க பாருங்க உங்களுக்கு நான் லவ் பண்ணணும். அவ்ளோ தானே. நான் உங்களை லவ் பண்ணறேன். பட் என் மேல பழியை தூக்கி போட்டது யாருனு எதுக்கு சொல்லணும். முடிஞ்சிப் போனதை விட்டு தள்ளுங்க" என்றாள்.​

இந்தரோ "ஏய்... நீ என்ன நினைச்சிட்டு இருக்க?​

நீ திருடலைனு முதல்லயே ஆதரவா வந்து நின்றேன். அப்ப நீ என் பிரெண்ட்டோட அத்தை பொண்ணு மட்டும் தான். அதுக்கே என் மனசு கிடந்து தவிச்சது.​

இப்ப நீ என் லவ்வர். நாளைய பின்ன எனக்கு மனைவி. எனக்கு காலேஜ்ல கிடைச்ச ஒரே பிரெண்ட் சந்தோஷ். அவன் வீட்டுக்கு அடிக்கடி போவேன் வருவேன். அப்ப எல்லாம் என் மனைவியை பழியோட அங்க நிறுத்த முடியுமா? முதல்ல யாருனு சொல்லு" என்று மிரட்டும் விதமாய் அதிகாரம் செய்தான்.​

தன்னவள் தன்னை விரும்புகின்றாளென்ற தைரியம், அவனுக்கு ப்ரியாவை அதிகாரம் செய்யும் துணிவை கொடுத்திருக்க வேண்டும்.​

ப்ரியாவோ இதென்ன பிரச்சனை அதிகரிக்குமோ என்று அச்சப்பட்டு, "இங்க பாருங்க நான் விரும்பறேன்னு தான் சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லவேயில்லை. எனக்கு கல்யாணம் பண்ணற ஐடியா இல்லை. அதோட சந்தோஷ் வீட்டுக்கு இனி நான் போகப்போறதும் இல்லை.​

நான் உங்கப்பாவிடமும் இதை தான் சொன்னேன். அவர் தான் என் பையனிடம் சொல்லுன்னு கூட்டிட்டு வந்துட்டார். இந்தாங்க உங்க டிபன் பாக்ஸ்." என்று மடமடவென கைப்பையிலிருந்து எடுத்து வைத்து ஓடப்பார்த்தாள்.​

"கல்யாணம் மட்டும் பண்ணாம புள்ளையை பெத்துக்கலாமா?" என்றதும் சடன் பிரேக்கிட்டு நின்றாள்.​

கோபமாய் திரும்பி, "என்ன திமிரா?" என்று கேட்டாள்.​

"எனக்கு இல்லை உனக்கு தான் திமிரு. நான் விரும்பறேன் நீயும் விரும்பற. எங்க வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. அப்படியிருக்க என்ன தான் பிரச்சனை. கல்யாணம் பண்ண மாட்டன்னு துள்ளற. நான் ஒன்னும் சந்தோஷ் இல்லை கையை கட்டி வேடிக்கை பார்க்க" என்று அவனும் கோபமாகவே பேசினான்.​

இந்திரஜித் வீடு, இந்திரஜித் அறை, இதில் காதலிக்கின்றேன் திருமணம் செய்ய மாட்டேன் என்றவளின் பேச்சை கேட்டு கோபத்தில் துள்ளி குதித்தான். யாரோ பழிப்போட, தன் காதல் ஒன்று சேர்வதற்கு தடையாகுமா?​

சாலை என்றாலே ப்ரியாவோடு நேரில் பேச சென்றிடும் ஆள். கடையிலும் பேச சென்று வம்பளந்து வாதம் செய்தவன். தன் வீட்டில் குரல் உயர்த்துவது ஆச்சரியமில்லை.​

ஆனால் ப்ரியதர்ஷினிக்கோ இதுவரை மென்னகையாக வலம் வந்தவனின் தோற்றம் கண்ணில் கோபம் கொப்பளிக்க பேச, எச்சிலை விழுங்கி, "இது சரிவராது நான் புறப்படறேன். இங்க வந்ததே தப்பு" என்று மீண்டும் அடியெடுத்து வைக்க, "அவளது கரத்தை பற்றி தன்பக்கம் திருப்பி உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டு முடித்தான்.​

இந்திரஜித்தின் தாய் தந்தை வெளியேயிருக்க, பேச மட்டும் தானே என்று வந்தவளுக்கு இந்த அதிரடி முத்தம் இதயத்தை வேலை நிறுத்தம் செய்ய வைத்திருக்க வேண்டும். தலையை அங்கும் இங்கும் திருப்ப, இந்தரின் இரு கைகளும் கன்னத்தை பிடித்து அசையாது பார்த்துக் கொண்டவனால், இவளது முயற்சி துவண்டதே தவிர, தலை இம்மியும் அசையாது இதழும் அவனிடமிருந்து விடுபடவில்லை.​

தன் மென் கரத்தால் இந்தரின் நெஞ்சில் கைவைத்து தள்ள முயன்றாள்.​

ஆறடியில் வளர்ந்தவனுக்கு தேகமும் இரும்பு தூணால் செய்தது போல இருக்க, ஒரடியும் அவனை தன்னிடமிருந்து பிரித்து நகர்த்த முடியவில்லை.​

ப்ரியதர்ஷினியோ கைகளை துழாவி அங்கிருந்த பேனா, கடிகாரம் தட்டிவிட்டு டிபன் பாக்ஸையும் தட்டிவிட, தொடர்ந்து பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டு மோகன் சித்ரா அவ்வறைக்கு வந்தார்கள்.​

"இந்தர்" என்ற தந்தை குரலில் தான் ப்ரியாவை விடுவித்தான்.​

ப்ரியா அழுதவாறு அவனிடமிருந்து விடுபட்டு, சித்ரா பக்கம் ஓடிவந்து கட்டிக்கொண்டாள். கண்ணீர் அருவியாக பொழிய தாய் சித்ராவுக்கே சங்கடமானது. இதே கண்ணீர் இல்லாமல் வெட்கம் கொண்டு ப்ரியா இருந்தால் கேலியோடு கடந்திருப்பார்கள்.​

மோகன் சித்ரா ஒன்றும் இது தவறு அது தவறென்று இந்தரை ப்ரியாவை குற்றம் சுமத்தி பேசி அசிங்கப்படுத்தும் ரகம் அல்ல.​

'என்னடா அவசரம். முத்தத்துக்கு நேரம் காலம் பார்த்து சொல்ல மாட்டோமா?' என்று கேலி கிண்டலாய் முடித்து சிரித்து பிரைவேஸி தந்து விலகியிருப்பார்கள்.​

ப்ரியா கண்ணீரோடு நிற்கின்றாள், இந்திரஜித் கோபத்தோடு கையை கட்டி அவளை முறைத்தான்.​

"என்னை நம்பி நம்ம வீட்டுக்கு வந்த மருமகளை, உன்னை நம்பி உன் அறைக்கு அனுப்பினா, என்ன இந்தர் பண்ணிருக்க, முதல்ல மருமகளிடம் மன்னிப்பு கேளு" என்றார்.​

இந்திரஜித்தோ பிடிவாதமாய் "அவ மேல யாரு பழி சுமத்தினானு கேட்டா சொல்ல மாட்டேங்குற. இதுல காதலிக்கறேன் ஆனா கல்யாணம் பண்ண மாட்டேன்னு பேசறா. அப்பா இன்னிக்கு இவ சொல்லிட்டு தான் வெளியே போகணும். நான் எதுக்கும் சாரி கேட்க மாட்டேன். அவ எனக்குரியவள். கிஸ் பண்ணினா தப்பில்லை" என்று ப்ரியதர்ஷினி போனை எடுத்து தன் பேண்ட் பேக்கட்டில் போட்டுக்கொண்டான்.​

ப்ரியா அழுதவாறு மோகனை காண, "டேய் மொபைலை மருமககிட்ட கொடு." என்றார்.​

இந்திரஜித் தந்தை சொல் கேட்காமல் மறுத்தபடி தலையாட்ட, "இந்தர் கொடு" என்று அதட்டினார்.​

தந்தை மோகனுக்கு இந்த அதட்டல் எல்லாம் என்றாவது தான் எட்டிப் பார்க்கும். மற்றபடி நகைச்சுவையாக பேசும் காதல் மன்னன் அவர்.​

தந்தை அதட்டவும் எடுத்து கொடுத்தான். பதிலுக்கு மோகன் தன் போனில் ரெக்கார்ட் செய்தவையை எடுத்து ஆடியோ ஒலிக்க போட்டார்.​

ப்ரியா காதலிப்பதாக கூறவும், லேசாக இந்தர் கோபம் மட்டுப்பட்டது. அவளது செவ்விதழை நோட்டமிட்டான். லேசாய் சிவந்து அவனது உதட்டு முத்தத்தால் வீக்கம் கொண்டிருந்தது.​

போனில் ரெக்கார்ட் கேட்டபடி கையை கட்டி கீழே விழுந்த பொருட்களை அவளை பார்த்தபடி எடுத்து வைத்தான்.​

அதனதன் இடத்தில் வைக்கும் கணம் யார் காரணமென்ற பேச்சு ஆடியோ போக, நெற்றி சுருக்கி, ஆடியோவை கூர்மையாக கவனித்தான்.​

சந்தியா என்றதும் பற்கடிக்கும் சத்தம் கேட்டது.​

"தேவையில்லாம விலாசினியையும் அவங்க அம்மாவையும் சந்தேகப்பட்டேன். ஊமைக் கொட்டானாட்டும் இருந்துட்டு என்ன வேலை பண்ணிருக்கா. சின்ன பொண்ணாச்சேனு நினைச்சேன். எனக்கு இவ மேல சந்தேகமே வரலை.​

இப்பவே சந்தோஷிற்கு சொல்லறேன்." என்று அவனது அலைப்பேசியிலிருந்து சந்தோஷ் எண்ணிற்கு போட எடுத்தான்.​

அவசரமாய் ப்ரியா சென்று தடுத்து "ப்ளிஸ் இந்தர். ஏற்கனவே அப்பா இல்லாத பொண்ணுன்னு அத்தை மாமா என் மேல இரக்கம் காட்டி பாசமா இருப்பதையே தப்பா புரிஞ்சிட்டு, என்னவோ அந்த வீட்ல எனக்கு தான் மதிப்பு மரியாதைனு கோபமா சுத்தறா. திருட்டு பழியை அவ தான் போட்டான்னு விஷயம் தெரிந்தா, மாமா-அத்தை அவளை அடிச்சி திட்டுவாங்க. என் மேல கூடுதலா சந்தியாவுக்கு கோபம் தான் அதிகரிக்கும்.​

ஏற்கனவே எப்பவும் சொந்த தங்கச்சியை கூட்டிட்டு போகாம என்னை பைக்ல சுத்தறதாகவும், எனக்கு டிரஸ் வாங்கி நான் செலக்ட் பண்ணினேன் என்று விளையாட்டுக்கு சீன் போட்டதை என்னவோ அண்ணனுக்கு தன் மேல பாசமில்லைனு கவலைப்படறா.​

ஒவ்வொன்னும் அத்தை என்னிடம் ஷேர் பண்ண என்ன செய்ய சொல்ல அவளுக்கு கூடுதலா கோபமும் பிடிவாதமும் தான் மிஞ்சும்." என்றதும் இந்தரோ நிதானமாக கேட்டுவிட்டு "அப்ப காலம் முழுக்க நீ பழிசுமக்கணுமா?" என்று கேட்டான்.​

தரையில் டேபிளிற்கு கீழே தொப்பென்று அமர்ந்து அழுதவள், "அந்த பழி போட்டதால தானே நான் இங்க வந்திருக்கேன். இந்த இடைப்பட்ட நாள்ல, இங்க சென்னைக்கு வந்தப்ப நானும் அழுதிருக்கேன். ஏன் தினம் தினம் பழிசுமக்கறது வலியை தந்தது.​

ஆனா என்னைக்கு உன்னை சந்திச்சேனோ அப்பயிருந்து நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்.​

அதுவும் ரீசன்ட் டேஸ்ல நான் எந்தளவு சந்தோஷமாயிருக்கேன்னு என் முகமே சொல்லும். மோகன் அங்கிள் நீங்க காலையில கூட சொன்னிங்க தானே." என்றதும் இந்தரோ நிதானமடைந்தான்.​

அமர்ந்த நிலையில் இருந்தவாறு "உனக்கென்ன கல்யாணம் பண்ணணுமா அம்மாவிடம் திட்டுவாங்கி, அடிவாங்கியாவது உங்களை கல்யாணம் பண்ணிக்கறேன். ஆனா சந்தோஷ் வேண்டுமின்னா இங்க வரட்டும் நாம அங்க போக வேண்டாம். ப்ளிஸ்" என்று அழவும், இந்திரஜித் மண்டியிட்டு அவள் கன்னம் ஏந்தி, தன் முகமருகே கொண்டு வந்து விடுபட்ட இதழ் முத்தத்தை மென்முத்தமாக பதித்தான்.​

மோகனும் சித்ராவும் சத்தமின்றி வெளியேற, இந்திரஜித் மெதுவாய் தேனிதழில் சுவைத்தான்.​

ப்ரியதர்ஷினி முன்பு போல திமிரவில்லை. அதே கணம் தள்ளிவிடவோ, விடுபடவோ முயற்சிக்கவில்லை. கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் மேலெழுப்பி அவன் முதுகை அணைத்தாள்.​

சிறிது நேரம் அங்கே நிசப்தம் ஆட்கொள்ள, இந்தரே விடுவித்தான்.​

இருவரும் டேபிள் மேஜையை ஓட்டி முதுகை சாய்த்தார்கள்.​

அவளது கையை பிடித்து, ஒவ்வொரு விரலாய் தொட்டு தடவியபடி, "இங்க காபி கப்போட வந்தப்ப முத்தத்தை நினைச்சி பார்த்த, அது தானா நடந்திட்டேன்.‌​

‌ உன் மனசுல நினைப்பதை இந்த இந்தர் செய்வான்.​

அதனால சந்தோஷ் வீட்டுக்கு போகலை. சந்தோஷிடம் ஷேர் பண்ணலை. ஆனாலும் உண்மை ஒரு நாள் அதுவா தெரிய வரும்." என்றவன் ப்ரியா லேசாய் போலி கோபம் கொள்ளும் நேரம், "எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று கேட்டான்.​

"அக்கா குழந்தை உண்டாகியிருக்கா, அடுத்து நிறைய செலவு வரும். ஏற்கனவே ஐந்து சவரன் போடலைனு யமுனாவை அவங்க மாமனார் திட்டறார்னு சொன்னா. அதுக்கு இப்ப தான் வீட்டை அடமானம் வச்சி பணம் வாங்கி ஐந்து சவரன் கொடுத்துட்டு வந்தாங்க அம்மா.​

முதல்லயே இதை செய்திருக்கலாம். அம்மா தான் வீட்டை அடமானம் வைக்கணுமானு யோசிப்பாங்க. அதான் வேற முறையில மகளிர் சுயவுதவி குழுல கடன் கேட்கலாம்னு இருந்தேன். பட் அதுக்குள்ள தவறா புரிஞ்சுக்கிட்டாங்க.​

பழி வந்த கொஞ்ச நாள்லயே யமுனா வீட்லயும் குடைச்சலா, அதனால அம்மா வீட்டை அடமானம் வச்சி கொடுத்திட முடிவெடுத்து அதை சரியா செய்துட்டாங்க. இனி கடனை அடைக்கறது மட்டும் தான் என் வேலை. அதுக்குள்ள அக்காவுக்கு பேறுகாலம் முடியும்னு நினைச்சேன்.​

இப்படி நடுவுல நாம சந்திப்போம், நமக்குள்ள காதல் வளரும்னு நினைக்கலை." என்றவள் அதன் பின் மோகன் அங்கிள் சித்ரா ஆன்ட்டியை தேடினாள்.​

"மோகன் சா.. ஆங்.. அச்சோ.. இங்க நீ முதல்ல கிஸ் பண்ணினப்ப அவங்க வந்தாங்க தானே. இரண்டாவது முறைசெய்தப்ப இருந்தாங்க. இப்ப... அச்சோ" என்று தள்ளிவிட்டு எழுந்தாள்.​

"கடவுளே ஏன்டா இப்படி செய்த? நான் முதல்ல வெளியே போறேன்" என்று நாலட்டு நடந்தாள்.​

தனியாக இந்தர் தாய் தந்தையரான மோகன் சித்ராவை காணவும் சங்கடமாக, "நீயும் வா." என்றாள் சங்கடமாய்.​

அவள் தோளில் கையை போட்டு, "பயப்படாம வா" என்று இயல்பாக்க முயன்றான்.​

இங்கு மைந்தன் மருமகளை முத்தமிட்டதும், அவர்களை காணாதது போல வெளிவந்த மோகன் சித்ரா ஹாலுக்கு வந்து, தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.​

"இல்லைங்க இது சரிவராது." என்று சித்ரா குரல் கேட்க ப்ரியதர்ஷினிக்கு பயமே கூடியது.​

"அதுக்கும் முன்ன முகூர்த்தம் கிடையாது சித்ரா." என்ற மோகனின் குரலில், "அப்பா கல்யாண டேட் பார்த்திங்களா இல்லையா?" என்று சர்வசாதாரணமாக வந்து தர்ஷினியையும் அமர வைத்து கூடவே ஒட்டிக்கொண்டான்.​

தர்ஷினி தான் மிகவும் பயந்து தவித்தாள். அங்கே திருட்டுபழி இங்கே ஒழுக்கம் கெட்டவளென்ற பழி வந்து விடுமோயென்ற பயம். திருட்டை கூட தாங்கிக்கொள்வாள் இந்த பழி வந்துவிட்டால்?​

அந்த பயம் சித்ரா வாய் திறக்கும் வரை இருந்தது.​

"உங்கம்மா அவசரத்துக்கும் உன் அவசரத்துக்கும் இங்க முகூர்த்த நாள் இல்லை ராஜா. அதனால காத்திருந்து தான் கைப்பிடிக்கணும்.​

முதல்ல அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்கணும். இப்ப இருக்கற சிட்டுவேஷன்ல என்ன முடிவெடுக்கறாங்கன்னு தெரியாது.​

என்ன பேசினாலும் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிடலாம். ஆனா அவங்க சௌவுகரியம் தான் எப்படின்னு கேட்டு அவகாசம் தரணும். அதுவரை முத்தத்தோட நிறுத்திக்கோட." என்று மைந்தனிடம் கூறவும் அங்கு நெளிந்தது என்னவோ ப்ரியா தான்.​

சித்ரா ப்ரியாவின் கையை பிடித்து, "ஏதாவது வம்பு செய்தா சொல்லு இனிமே கண்டிக்கறேன். இப்ப செய்த காரியத்துக்கு கண்டிச்சா ஆறுதல் தேறுதல்னு கதை விடுவான்.​

பதிலை பாக்கெட்லயே வச்சிட்டு இருப்பான் கிரிமினல்.​

அவன் செயலால் திடீருனு பதட்டம் வந்த, உன்னை கண்டுக்கவே மாட்டான்." என்று பையன் தான் தவறுக்கான காரணம் என்று கூறிவிட்டு ப்ரியாவை பேச வைக்க முயன்றார்.​

"ஆன்ட்டி அம்மா ஒத்துக்க மாட்டாங்க. அதுவும் சந்தோஷ் பிரெண்ட் என்றால் இந்தரை மறுக்கலாம்.​

உங்களை போல எங்க அம்மா இருக்க மாட்டாங்க. அவங்க ஒரு கூட்டுக்குள்ளயே வாழறவங்க. ஐ மீன் விடோனா நல்லதுல பங்கெடுத்துக்க கூடாதுனு தள்ளி நின்றுப்பாங்க. கல்யாணமாகி குழந்தைவுண்டாக லேட்டானா ஏதோ யார் காரணம் என்ன காரணம் என்று மெடிக்கல் சம்மந்தப்பா யோசிக்க மாட்டாங்க. பெத்த பொண்ணை தான் திட்டுவாங்க.​

இப்பவும் காதல் கல்யாணம்னு போய் கேட்டா, என்னவோ நான் தான் வேண்டுமின்ன காதலிச்சதா பேசுவாங்க. பொண்ணுங்க குனிந்த தலை நிமிராம இருந்தா எவனும் காதலிக்க மாட்டாங்க என்று ரொம்ப ஓல்ட் தாட்ஸ் நிறைய இருக்கு." என்று தன் அன்னை கவிதாவை பற்றி எடுத்துரைக்க, "அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் கவலையை விடு." என்று கூறவும் ஓரளவு இந்தர் வீட்டில் அவர்கள் திருமணத்தை எதிர்பார்ப்பது அப்பட்டமாய் தெரிந்தது.​

ஒரே பையன் அவன் காதல் திருமணத்தை இவர்கள் ஆதரித்து கோலாகலமாக நடத்தலாம். ஆனால் இப்பொழுது தான் யமுனா திருமணத்தை நடத்தி முடித்து வரதட்சனையெல்லாம் அள்ளி கொடுத்து நிம்மதியானார்.​

இதில் மாமன் மகள் சந்திரா திருமணத்தில் ஏற்பட்ட பழியால் துவண்டுவிட்டார்.​

பழியோட பேசிவிட்டு சென்றதால் இனி உறவுகளை எட்டி நிறுத்தி கொண்டாலும் கவிதா அடுத்து மகளுக்கு பேறுகாலம் முடிய, ப்ரியாவின்​

காதலை ஏற்பார்களாயென்ற ஐயம் துளிர்த்தது.​

-தொடரும்​

-NNK79​

நீயென் காதலாயிரு​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-18​

ப்ரியதர்ஷினியின் கையை பிடித்து, இந்தர் அமர வைக்க, அவன் கையை உதறிவிட்டு சித்ரா இருக்கும் பக்கம் ஓடினாள்.​

"ப்ரியா கண்ணுக்கு எங்க வீடு, வீட்லயிருக்கறவங்களை பிடிச்சிருக்கா?" என்று சித்ரா கேட்டதும், "ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை. மாமா மாஸ்டர் பீஸ்." என்றவள் ஹாலில் இந்தரும் மோகனும் எதற்கோ வாதம் செய்வதை கண்டு சிரித்தாள்.​

சித்ராவும் ப்ரியதர்ஷினியும் கிச்சனில் பூரியும் உருளைக்கிழங்கும் செய்து கொண்டே பேசினார்கள். ப்ரியா நீண்ட நாட்களுக்கு பின் இயல்பாய் பேசினாள்.​

முன்பு அத்தை பானுமதி, அம்மா கவிதா, யமுனா அக்கா, சந்தோஷ் விலாசினி, சந்தியா என்று யாரிடமாவது பேசிக்கொண்டே இருந்தவளுக்கு இங்கே வேலை முடித்து ஹாஸ்டலில் இயந்திரமாய் உம்மென்று இருப்பாள். என்ன தான் க்விலிங் இயரிங் கிராப்ட் செய்தாலும், ஆடின காலும் பேசிய வாயும் சும்மாயிருக்குமா?​

அந்த அமைதியை இன்று உடைத்து வருங்கால அத்தையிடம் அளாவினாள்.​

இரவு உணவை இங்கே முடித்து செல்ல சித்ரா கட்டளைமாக கூறியதும், சூடான பூரி உருளைகிழங்கு மசாலா என கொண்டு வந்து நால்வரும் ஒன்றாக இணைந்து சாப்பிட்டார்கள்.​

இந்தர் அடிக்கடி அவளுக்கு பரிமாறவும் அவள் தோளை தீண்டவும் இடையை பிடிப்பதும் அவன் ராஜ்ஜியமாக நடத்தினான்.​

ப்ரியதர்ஷினி நெளிந்தபடி, "இந்தர் ப்ளிஸ்" என்று அவன் கையை விலகியும் மெதுவாக தள்ளி நிறுத்தினாள். ஒருமுறையென்றால் பரவாயில்லை அவனோ அடிக்கடி செய்ய, அப்பொழுதே அவர்களுக்கு பிரச்சனை உருவானது. கையை தட்டி விட்டு கோபமுகத்தை காட்டினாள்.​

நேரம் கழியவும் வுமன்ஸ் ஹாஸ்டல் செல்ல புறப்பட்டாள்.​

"ஹேய் இரு நான் கொண்டு போய் விடறேன்." என்று சாவியை தூக்கி வந்தான்.​

"இந்தர் நானே கிளம்பிப்பேன்" என்று மறுத்தாள். பெற்றோர் எதிரில் ரொம்ப நெருங்க விட வேண்டாமென்ற எண்ணம்.​

ஆனால் வளர்ந்தவனுக்கு அது புரிந்தும் மண்டையில் ஏற்றிக்காமல், "இதப்பார் ஈவினிங் எங்கப்பா கூட பைக்கில வந்த. அதனால இப்ப என் கூட கண்டிப்பா வர்ற." என்று கூறி "அம்மா என் கூட வரச் சொல்லுங்கம்மா" என்று புகார் அளித்து அன்னையை வேறு தனக்கு சாதகமாக பேச வைத்தான்.​

சித்ராவோ "நீ அவர் கூட வந்ததுல இவன் ஹர்ட் ஆகியிருப்பான். எப்படியாவது அவன் வண்டில நீ ரிட்டர்ன் போனா தான் அவனுக்கு நைட்டு நிம்மதியா தூக்கமே வரும். இல்லை உங்க மாமா சீண்டிட்டே இருப்பார். அவன் முகத்தை தூக்கி வச்சிப்பான்" என்று மைந்தனின் வண்டியில் ஏற்றிவிட்டார்.​

மோகனும் மருமகளை வழியனுப்பி வைத்து சித்ராவிடம், "ரொம்ப நல்ல பொண்ணு. இந்தர் போல எனக்குமே ப்ரியா பழியை சுமந்துட்டு இருக்கறதுல விருப்பமில்லை. அதே சமயம் சந்தியா பத்தி சந்தோஷிடம் போட்டுதரவும் முடியலை.​

கல்யாணத்தை மட்டும் சீக்கிரம் வைக்கணும்மா. பையனோட வேகத்தை பார்த்தியா? காத்திருக்க வச்சா அந்த பிள்ளையை டார்ச்சர் பண்ணிடுவான்" என்று மோகன் உள்ளே செல்ல, "இவன் இப்பவே முத்தமிடறதும் தொட்டு பேசறதும்னு உரிமையா சேட்டை செய்யறான். பாவம் அந்த பொண்ணு ப்ரியா. நான் பார்க்காத நேரம் அவன் கையை எடுத்து விட்டு முறைச்சிட்டு தள்ளி தள்ளி நிற்கறா. அவன் வேண்டுமின்னா இடிச்சிட்டு நிற்கறான். ஆப்டர் மேரீட் என்ன அழுச்சாட்டியம் பண்ணுவானோ" என்று வீட்டிற்குள் செல்ல, வெளியே தன் பைக்கை வைத்து பறந்த இந்தரோ, தர்ஷினியின் வலது கையை எடுத்து அவனை அணைக்க வைத்தான்.​

"கையை கால வச்சிட்டு சும்மாயிருக்கிங்களா. இப்படியா பேரண்ட்ஸ் முன்ன கிஸ் பண்ணுவாங்க. அத்தை மாமா என்னை என்ன நினைச்சிருப்பாங்க?​

பையன் இழுத்த இழுப்புக்கு வர்றாளேனு சீப்பா என்னை நினைக்க மாட்டாங்க?" என்றதும் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.​

"இதப்பார் எங்கப்பா அம்மா இரண்டு பேருமே உன்னை தப்பா நினைக்கமாட்டாங்க. மேபீ வீட்டுக்கு போனா என்னை தான் திட்டுவாங்க.​

நான் சமாளிச்சிப்பேன். கொஞ்சம் யோசிப்பாரு காலையில கண்ணீரோட போன. அப்பவே சமாதானம் செய்ய முயன்றேன்.‌ உனக்கு ஆபிஸ் இருக்கும்னு போக விட்டேன்.​

ஈவினிங் அப்பா கூட வந்த. ஆல்ரெடி நீ என்னை விருப்பற என்று எனக்கு கன்பார்மா தெரியும்‌.​

‌‌ என்கிட்ட வந்து கல்யாணம் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்.​

உனக்கு புரியாறாப்ள செய்தேன். நீ உள்ள வர்றப்பவே காபி பக், பஸ்ட் நைட் இன்சிடெண்ட் நினைச்சியா இல்லையா?​

முதல் தடவை கிஸ் பண்ணினப்ப அடிச்சே தள்ளிவிட்ட, அப்பா அம்மா‌ வந்ததும் பேசியதும் அழுத. எனக்கு என்ன‌ பண்ணறதுனு தெரியலை. சில நேரம் வலியும் மருந்தும் ஒன்னா தான் இருக்கும். அதான் நான் வேண்டாம்னு சொன்னா அதே இதழுக்கு முத்தமிட்டு நான் இல்லைனா நீ இல்லைனு புரிய வச்சி ஆறுதல்படுத்தினது.​

இரண்டாவதா கிஸ் பண்ணினப்ப அம்மா அப்பாவே அமைதியா கிளம்பிட்டாங்க. பிகாஸ் இது காதலர்களோடட முடிவுன்னு அவங்க க்ளியர் ஆகிட்டாங்க.​

‌ நாமளும் வெளியே வந்தப்ப நீ கல்யாணத்துக்கு ஓகே என்ற எண்ணத்துல வந்துட்ட. உங்கம்மா என்ன சொல்வாங்கன்னு பயம் மட்டும் இருக்கு. அது கூட என்னோட பேரண்ட்ஸ் பார்த்துப்பாங்க.​

வீட்டு பத்திரம் வச்சி எங்க பணம்‌ வாங்கின.? முதல்ல அதை அடைச்சிடணும். அதர்வைஸ் நம்ம கல்யாணம் குழந்தை எல்லாமே என் செலவு தான்.' என்று இறங்குமிடம் வந்து நிறுத்தினான்.​

''தேங்க்ஸ். ஆனா எங்கக்கா குழந்தை பிறக்கறவரை என்னால கடனை அடைக்க‌ முடியாது. கடனை வச்சிட்டு நான் உங்களை கல்யாணம் பண்ண மாட்டேன்‌. என் வீட்டு பிரச்சனை நான் முடிச்சிட்டு வந்தப் பிறகு தான் நம்ம கல்யாணம். அதுக்குள்ள உங்களுக்கு அவசரம்னா வேற பொண்ணை பார்த்துக்கோங்க.​

நான் யாரோட உதவியும் இனி எதிர்பார்க்கறதா இல்லை" என்று கூறி அவள் தங்கிருக்கும் இடத்தின்‌ கேட்டை தாண்டி போக , இந்தரோ "நான் இன்னும் முடிக்கலை" என்றான்.‌​

போன்ல பேசலாம் என்று கையாட்டினாள். அந்த நேரம் சார்ஜ் லோ பேட்டரி காட்டியது.​

‌வீட்டுக்கு வந்தப்பிறகு போனை எடுத்து அழைக்க, ஸ்விட்ச் ஆப் என்று வரவும், அவள் கையை காட்டும் நேரம் லோ பேட்டரி காட்டியதால் 'சே நைட் முழுக்க பேசலாம்னா ஆசையில மண் அள்ளி போட்டுட்டா." என்று வீட்டுக்குள் நுழைந்தான்.​

"மருமகளை பத்திரமா விட்டியா? இல்லை போற வழில இங்க நடந்துக்கிட்ட மாதிரி திரிஞ்சியா?" என்று தண்ணீர் பாட்டிலை நிரப்பியவாறு கேட்டார் சித்ரா.​

"அடப்போங்கம்மா இங்க திட்ட முடியலைனு ரோட்ல திட்டிட்டே வந்தா." என்றவன் "அவ போன் வேற லோ பேட்டரி காட்டுச்சு. எப்ப சார்ஜர் போட்டு‌ பேசுவாளோ" என்று போனையே வெறித்தான்.​

மோகனோ ''டேய் போய் தூங்குடா. மருமக நிம்மதியா தூங்கட்டும்.'' என்று கூறி படுக்க செல்ல, அவனும் தனதறைக்கு சென்று தாழிட்டான்.​

‌ வெகு நேரம் அவள் எண்ணிற்கு தொடர்பு போகவில்லை என்றதும் ஒருவேளை தூங்கியிருப்பா" என்றவன் தலையணையை அணைத்து தனது முதல் முத்தமிட்ட தருணத்தை நினைத்து நினைத்து தனியாக சிரித்தான்.​

"அன் எக்ஸ்பெக்ட் கிஸ்" என்றவன் தனியாக பேசி, உதடு புன்முறுவலை ஏந்தி நித்திரைக்கு சென்றான்.​

‌ அடுத்த நாள் விழிக்கும் நேரம் கை அனிச்சையாக, போனை எடுத்து தர்ஷினிக்கு அழைக்க, போன் எடுத்தாள்.​

''குட் மார்னிங் டியர்'' என்றதற்கு, "விசும்பல் மட்டும் வந்தது.​

"ஏய்... அழுவறியா?" என்றான்.‌​

"இல்லை'' என்றவள் மூக்குறிவது தெளிவாக கேட்டது.​

"இப்ப என்ன பிரச்சனை?" என்றான்.‌​

‌ "உன் பிரெண்டுக்கு நிச்சயமாயிடுச்சா" என்று கேட்டாள்.​

இந்தரோ நெற்றி கீறியபடி "நேத்து நிச்சயமாச்சு" என்றான்.‌​

தற்போது குரல் மெதுவாக வந்தது.​

"ஏன் என்கிட்ட யாருமே சொல்லலை." என்று அழுவது கேட்டது.​

"ஏய் சொன்னா என்னப் பண்ணுவ? கங்கிராட்ஸ் சந்தோஷ்னு சொல்வ அவ்ளோ தானே?" என்று நக்கல் அடித்தான்.​

உண்மை தானே இந்த சூழலுக்கு அவள் நிச்சயத்துக்கு முதல் ஆளாக நிற்க முடியுமா?​

"உனக்கு யாரு சொன்னா?" என்றதற்கு 'அம்மா சொன்னாங்க" என்றதும் இந்தரோ பல் விளக்கி காபி பருகி "நல்லது. கண்ணை துடைச்சிட்டு வேலைக்கு கிளம்பு.​

நீ விரும்பறது என்னை. அவனையில்லை சும்மா அழுதுட்டு." என்றதும் கத்தரித்தாள்.​

‌ "என்னடா காலையிலயே ரொமான்ஸா?" என்று மோகன் வந்தார்.​

"ப்பா.. நேத்து முழுக்க போன் சுவிட்ச்ஆப். இப்ப போன் போட்டா சந்தோஷிற்கு நிச்சயமாயிடுச்சுனு அழுவறா. என்னை தானே விரும்பறா. அவனுக்கு நிச்சயம் ஆனா என்ன? யாரும் சொல்லலை..னு ஒப்பாரி" என்று தலையை உலுக்கினான்.‌​

சித்ரா அருகே வந்து, "சந்திரிகா கல்யாணத்துல இழுத்து போட்டு வேலை செய்தவளை பார்த்திருப்ப, இப்ப அடியோட ஒதுக்கினா அவளுக்கு கவலையிருக்காதா? முதல்ல காதலை மட்டும் பார்க்காதடா. அவ உறவு நட்பு எல்லாம் போச்சுனு யோசி'' என்று பேசியதும் இந்தரோ, "ஷிட் இதெல்லாம் வேற நினைச்சி அழுவா‌ளா? இவளை..." என்று கடிந்தபடி வேலைக்கு கிளம்பினான்.‌​

நேரில் தரிசித்து இரண்டு வார்த்தை பேச நினைத்தான். ஆனால் கோபத்தில் ப்ரியா அலுவலகம் செல்லும் பஸ்ஸில் ஏறி விட்டு, ''நான் ஆபிஸ் கிளம்பிட்டேன். எனக்காக வெயிட் பண்ணாத' என்று அனுப்பிவிட்டு இருக்க, "என்னை கொஞ்சம் கொஞ்சமா கொல்லற நீ." என்று அனுப்பிவிட்டு அவனும் அலுவலகம் சென்றான்‌.​

மோகன் மருமகளுக்கு உணவு கொண்டு வந்து அலுவலகத்திற்கு கொடுக்க, முகம் வாடியபடி, "மாமா நான் சந்தோஷிற்கு நிச்சயம் என்று வருந்தலை. அம்மாவை, என்னை, அக்காவை மொத்தமா ஒதுக்கிட்டாங்க. அதை தான் தாங்க முடியலை.'' என்று கேவினாள்.​

மோகனோ ''அதுக்கு தான்‌டா சொல்லறது தப்பு செய்யாம பழியை சுமக்க கூடாது. நீ யார் பழியை தூக்கி போட்டதுனு சொன்னா அட்லீஸ்ட் இந்த ஒதுக்கம் குறையும்‌. சொல்லப்போனா நாம ஒதுங்கியதா காட்டிக்கணும்.‌​

அவங்க தான் வருந்தணும்‌.​

இங்க பாரு கண்ணாடி உடைஞ்சிடுச்சு. இனி ஒட்ட வைக்க முடியாது. சிலதை நாமளா ஜீரணிச்சு பழகி வெளியே வரணும்." என்றதும் ப்ரியதர்ஷினி நிசப்தமாய் மாறினாள்.​

வேலை செய்யும் நேரம் நெருங்க மோகனும் ப்ரியாவும் வேலையில் முழ்கினார்கள்.​

ப்ரியாவிற்கு சந்தியாவை காட்டி கொடுத்து தன் பழியை களைவதா? என்று சிந்தித்தாள்.​

அங்கு இவளை நேசிக்கும் இந்தரோ, தந்தை போனிலிருந்து தனக்கு அனுப்பிய, 'ப்ரியா இந்தரை விரும்பியதையும் அதன் பின்‌ சந்தியா பழியை போட்டதும் ஆடியோ பதிவிருக்க, அதனை தன் நண்பன் சந்தோஷிற்கு தட்டி விட்டான்.‌​

இந்தரை பொறுத்தவரை தன்னவளின் கண்ணீரை துடைத்திட வேண்டும் அவ்வளவே.​

ப்ரியா போல சந்தியாவிற்கு பாவம் பார்க்கவில்லை அவன்.​

சந்தோஷ் ஆடியோ கேட்கும் நேரம் விலாசினி அருகேயிருக்க, அவளும் ஆடியோவை கேட்க நேர்ந்தது.​

சந்தோஷ் விலாசினி இருவரும் கேட்டதும் விலாசினியோ,​

"சந்தியாவா?'' என்று ஆச்சரியம் அடைந்தாள். சந்தோஷோ 'சந்தியாவா? தன்‌ தங்கையா? என் பல்லை கடித்தான்.‌​

-தொடரும்.​

- NNK 79​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-19​

சந்தோஷ் தன் வீட்டிற்கு வந்து தாய் தந்தையை ஒன்றாக நிற்க வைத்து, இருவரின் முன் இந்தர் அனுப்பிய ஆடியோவை போட்டு காட்டினான்.‌​

"போதுமா... போதுமானு கேட்டேன்.‌ கொஞ்சம் அவ சொல்லறதை கேளுங்கனு தலைப்பாடா சொன்னேன். என் பேச்சை மதிக்கலை.​

அட்லீஸ்ட் நிச்சயத்துக்கு அத்தையிடம் பார்மாலிடிஸுக்காவது சொல்லுங்கன்னு சொன்னா, அதையும் சொல்லாம திடுதிப்னு பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கணும்னு நிச்சயம் வச்சிட்டிங்க.​

இப்ப கேளுங்க நல்லா கேளுங்க. உங்க அருமை மகள் சந்தியா தான் ப்ரியா மேல பழிசுமத்தியிருக்கா. காரணம் கேட்டிங்களா? நீங்க இரண்டு பேரும் சந்தியாவை விட ப்ரியாவை தலை மேல தூக்கி வைக்கிறதா நினைச்சி இப்படி செய்திருக்கா." என்று கூறிவிட்டு சோபாவில் அமர்ந்தான்.‌​

‌ பானுமதிக்கு மகன் ப்ரியாவை விரும்பி தாங்கள் அதனை அழித்துவிட்டோமோ என்ற பயம் வாட்டியது‌‌. ஆனால் ப்ரியா இந்தர் விரும்பியது ஆடியோவில் தெரியவும் கொஞ்சம் நிம்மதி.​

இந்தர் வந்த காரணம், ப்ரியதர்ஷினிக்கும் சந்தோஷிற்கும் உள்ள பழக்கம், நட்பு மட்டுமே என்று விவரிக்க, தற்போது சந்தியா மீது கோபம் திரும்பியது.​

நல்ல வேளை சந்தியா கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டாள் இல்லையேல் தனி பஞ்சாயத்து இப்பொழுதே களைக்கட்டியிருக்கும்.​

‌‌ தற்போது நிதானம் வந்தது. அதோடு விலாசினியையும் மகன் கையோடு அழைத்து வந்து காட்டவும் பானுமதிக்கு கையை பிசைந்து மகளை எண்ணி வருந்தினார்.​

''ப்ரியா உன் பிரெண்ட் இந்தரை விரும்பறாளாடா?" என்று தணிவாய் கேட்க சந்தோஷோ கோபம் கொப்பளிக்க, "சந்தியா பண்ணியதுக்கு என்ன சொல்லறிங்க?" என்றதும் பானுமதி ஊமையானார்.​

‌"நான் என்னடா செய்ய, அப்பா இல்லாத பொண்ணு. இந்த வீட்டு மருமகளா வரப்போறானு ப்ரியா மேல கூடுதலா பாசம் வச்சேன். அவளுமே உன்னிடமும் இந்த வீட்லையும் ரொம்ப பாசம் வச்சா. பாசத்துக்கு பதிலா பாசம் காமிச்சது தப்பா?" என்று நொடித்து கொண்டார்.​

"தப்பில்லைம்மா ஆனா அதே பாசம் எல்லா நேரத்திலும் இல்லையே. யமுனா மதினிக்கு தேவைக்கு ப்ரியா நம்ம நகையை எடுத்திருப்பானு நீயா முடிவு கட்டிட்டியே, பாசத்துக்கு மோசம் காட்டிட்ட.​

ப்ரியா நிச்சயமா, சந்தியா செய்ததுக்கு காயப்பட்டுயிருக்க மாட்டா. நீங்க, அப்பா, சேர்ந்து அந்த நேரம் பழிப்போட்டு பேசியது தான் அவ நம்மளை விட்டு ஒதுங்க காரணம். உங்களை சொல்லி என்ன பிரயோஜனம்.​

நான் கூட வேடிக்கை பார்த்துட்டேன்." என்று புலம்பினான்.​

"விலா கிளம்பு உன்னை உங்க வீட்ல விட்டுடறேன்.‌" என்று தன்னவளை எழுப்பினான். அவளை அழைத்து செல்லும் போது, அவளை நிறுத்தி அன்னை தந்தையிடம் திரும்பி, "சந்தியாவை கண்டிப்பிங்களோ செல்லம் கொஞ்சுவிங்கேளோ எனக்கு தெரியாது. இந்த வீட்டுக்கு விலாசினி மருமகளா வரப்போறா, சந்தியா ஏதாவது தகிடுதனம் செய்து ப்ரியா மாதிரி இவளை நடத்த ட்ரை பண்ணினா, நான் இந்த வீட்லயிருக்க மாட்டேன். எனக்கு விலாசினி முக்கியம். அவ இந்த வீட்ல மருமகளா வந்தா, மரியாதையும் அன்பும் கண்டிப்பா இருக்கணும். உங்க பொண்ணிடம் சொல்லிடுங்க" என்று விலாசினியை இழுத்து சென்றான்.‌​

‌‌​

பைக்கில் கோபத்தோடு முறுக்கினான்.​

சந்தோஷ் பேசியதை அமைதியாக கேட்டவள், இருசக்கர‌ வாகனத்தில் தோளை தீண்டி, அவன் முதுகில் தலை சாய்ந்து கொண்டாள்.‌​

விலாசினி வீடு வந்ததும் "சாரி விலா. உன்னை சந்தேகப்பட்டுட்டேன். வீட்லயே குற்றவாளியை வச்சிட்டு நீயா அத்தையானு தப்பா நினைச்சிட்டேன்." என்று தங்கையை எண்ணி திரும்ப துவண்டுவிட்டான்.​

விலசினியோ "காபி குடிச்சிட்டு போங்க.'' என்று அவன் கையை பிடித்து அழைத்தாள்.​

அவனிருந்த மனநிலைக்கு முகம் வாடி வந்தான்.​

கற்பகம் மாப்பிள்ளை வந்துள்ளான் என்று வரவேற்க, சற்று சன்னமான சிரிப்பை கடமைக்கு உதிர்த்தான்.​

கற்பகத்திடம் வேண்டுகோளாக "அத்தை நிச்சயத்துக்கு ஏதோ அம்மா அப்பா சொன்னாங்க என்று கவிதா அத்தைக்கு சொல்லாம இருந்திங்க. அட்லீஸ்ட் இப்பவாது பொண்ணு எடுத்து பொண்ணு கொடுப்பதை சொல்லி நிச்சயம் முடிஞ்சதை சொல்லுங்க.​

அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க" என்று கூறவும் கற்பகம் தயங்கினர்.​

அவர்கள் தயக்கம் கண்டவனோ "ஏன் அத்தை கவிதா அத்தைக்கிட்ட சொல்ல மாட்டிங்க. ப்ரியா நகை எடுக்கலை அத்தை. அதை அவளுக்கு பிடிக்காதவங்க செய்த வேலை.'' என்றான்.‌​

"சந்தோஷ் தப்பா எடுத்துக்காத. நான் ஏற்கனவே கவிதாவிடம் நிச்சயம் நடப்பதை சொல்லி கூப்பிட்டேன்.​

கவிதா போன்லயே விலாசினிக்கு வாழ்த்தினா, அதோட வர முடியாது மன்னிச்சிட சொன்னா. நான் வேற என்ன செய்ய முடியும். பூவும் பொட்டும் இல்லாததால, எப்பவும் ஒதுங்கி பழகினவ. பானுமதி எதுக்காகவோ உறவை தள்ளிடலாம். எந்த பிரச்சனையில்லாம நான் தங்கச்சி மாதிரி நினைச்சவளை கை கழுவ முடியுமா?​

என்னயிருந்தாலும் தனியா ப்ரியாவை தைரியமான பொண்ணா வளர்த்தவ. ப்ரியா சுட்டி மாப்பிள்ளை. அவயெல்லாம் திருடணும்னு கூட நினைக்க மாட்டா. என்ன கல்யாணத்தப்ப உங்க பிரெண்ட் இந்தர் அவளை விழுங்கற மாதிரி பார்த்தார். அதை அவ கவனிச்சாளா இல்லையானு தான் கோபமிருந்தது." என்றதும் சந்தோஷிற்கு நிம்மதி வந்திருக்க வேண்டும். ஆனால் அவனோ 'அச்சோ நீங்களே இப்படி யோசித்து நிச்சயம் நடந்ததை சொல்லிருக்கிங்க. நான் அப்பா அம்மா சத்தியம் வாங்கிடவும் ப்ரியாவுக்கு சொல்லாம விட்டேன்" என்று உடைந்து கலங்கினான்.‌​

விலாசினியோ தன் அன்னையை காபி போட கூறி அனுப்பிவிட்டு, சந்தோஷிடம் "ப்ரியா உங்களை தவறா நினைக்க மாட்டாங்க. அவளுக்கு இங்க கலந்துக்க முடியலையேனு வருத்தம் இருக்கும். மத்தபடி அவ யாரையும் தப்பா நினைக்க மாட்டா. அவ குணம் அப்படி" என்று உயர்த்தி பேசவும், விலாசினி கையை பிடித்து முகத்தில் வைத்து கொண்டான்.​

சிறிது நேரம் கழியவும் காபி வர, பருகினான்.‌​

"நான் கிளம்பறேன் அத்தை" என்றவன் விலாசினியிடம் கையை விடுவித்துக் நகர்ந்தான்.​

விலாசினிக்கு இப்பொழுதே சந்தியா என்றால் பிடிக்காமல் போனது.​

இப்படியா ஒருத்தி பழிப்போட்டு தன்னை முன்னிருத்த துடிப்பது. உரிமை வேண்டுமென்றால் மனம் விட்டு அத்தையிடம் பேசியிருக்கலாம்.​

பானுமதி அத்தையிடமே 'என்னம்மா ப்ரியா ப்ரியானு சொல்லற. நான்‌ செய்யறேன்" என்று முந்திக்கொண்டு வந்து நின்று இருக்கலாம். அதைவிட்டு பழிசுமத்தி விரட்டுவதா? திருமணம் ஆனப்பின் சந்தியாவோடு எட்டி நின்று பழக வேண்டுமென இப்பொழுதே முடிவெடுத்து கொண்டாள் விலாசினி.​

அன்று மாலை சந்தியா வீட்டுக்கு வந்த அடுத்த நிமிடம், பானுமதியின் பார்வைக்கு பொசுங்காமல் நின்றாள்.​

"அம்மா என் பிரெண்ட்ஸ் கிட்ட என்னோட நிச்சயம் சொன்னேன். எல்லாரும் கங்கிராட்ஸ் பண்ணினாங்க. அதோட இப்ப தான் அக்காவுக்கு முடிஞ்சிருக்கு அதுக்குள்ள பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கறிங்க. கல்யாணத்துக்கு பணம் நகை சேர்த்தாச்சா? பையன் கண்ணனானு ஏகப்பட்ட‌ குவெஸ்டின்.‌ இதுல ட்ரீட் கேட்டிருக்காங்க.‌ அம்மா.... நாளை மறுநாள் சனி இல்ல ஞாயிறு 'ஐனாஸ்' போயிட்டு படம் பார்த்துட்டே லஞ்ச் முடிக்க பிளான்.‌ அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிட்டு செலவுக்கு பணம் வேண்டும் அம்மா.'' என்றதும் அறையிலிருந்து கேட்டு வெளிவந்தார் துரைசிங்கம்.​

"பணமா பணம் மரத்துல காய்க்குதா? நீ பண்ணின வேலைக்கு உன்னை பட்டினி போடணும். லஞ்ச் ஹோட்டலுக்கு போவீங்களோ ஹோட்டலு. ப்ரியாவை துரத்திட்டு என்னடி பேசற?" என்று கர்ஜித்தார்.​

கடந்த மூன்று நான்கு மாதத்திற்கு மேலாக ப்ரியா பேச்சின்றி நிம்மதியாக இருந்த சந்தியாவோ, "இப்ப எதுக்கு அந்த திருடி பத்தி பேசறிங்க." என்றதும் கன்னம் தாங்கி சோபாவில் விழுந்தாள்.​

‌"யாருடி திருடி? ப்ரியாவா? நீயா? எங்களுக்கு எல்லாம் தெரிந்துடுச்சு.​

நாங்க ப்ரியா மேல அன்பாயிருக்கவும், அது பொறுக்காம பழியை சுமத்தி வச்சிருக்க பாவி மகளே. அவ என்னடி தப்பு பண்ணினா? ஏதோ அப்பா இல்லாமல் வளர்ந்தவ, சந்தோஷக்கும் பிடிக்கும் நல்ல பொண்ணு லட்சணமானவனு குணவதினு தானே பழகியது.​

‌​

இப்படி உனக்கு பிடிக்கலைனு ப்ரியாவை என் வாயால விரட்டி மனசு காயப்படுத்த வச்சிட்டியேடி" என்று முதுகில் சாத்தினார்கள்.‌​

தன் குட்டு யாரால் வெளியாகியிருக்கும் என் அறிந்திடாவிட்டாலும், அன்னையை உதறி தள்ளினாள்.‌​

"ஆமா நான் தான் நகையை அவ பெட்டில போட்டேன். அவளே நான் பார்க்க தான் சூட்கேஸ் நம்பரை திறந்து மூடினா.​

அப்ப எல்லாம் இப்படி பழிதூக்கி போட்டு, அவளை விரட்ட நினைக்கலை‌.​

நீ தான் மா, என்னை தப்பு பண்ண வச்சி.​

எதுக்கெடுத்தாலும் ப்ரியா... ப்ரியா... ப்ரியா... இந்த பெயரே எனக்கு பிடிக்கலை‌.‌‌ மோஸ்ட் பாப்புலர் நேம் ப்ரியா தான்.​

நம்ம வீட்ல ஐந்து நாள் காலேஜ் போயிட்டு வந்து நிம்மதியா இரண்டு நாள் வாழ விடறியா? எப்ப பாரு ப்ரியா எல்லாம் காலையில் எழுந்துப்பா‌... அவ அது செய்யறா... அவ இது செய்யறானு, அவ ஸ்டேடஸ் பார்த்துட்டே என்னை‌ இம்சை பண்ணற.​

அவ செடி வளர்க்கறா, பூ பூத்திருக்கு, க்விலிங் ஹீரிங் பண்ணறா, முறுக்கு சான்ட்வெச் செய்திருக்கா, ஹேர் ஸ்டெயில் வித்தியாசமா செய்யறா எப்ப பாரு அவ புராணம் பாடறிங்க.​

இந்த வீட்ல இரண்டு பொண்ணுங்க இருக்கோம். சந்திரா பத்தி ஏதாவது பேசிட்டே இருக்கிங்க... கிடையவே கிடையாது. ப்ரியா மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியறா.​

இதுல நானும் ப்ரியாவும் தான் அக்கா கல்யாணத்துக்கு டிரஸ் பண்ணிட்டு உங்க முன்ன நின்றோம். அவ மட்டும் எது போட்டாலும் அழகு‌. நான் பக்கத்துல தானே இருந்தேன், உங்க கண்ணுக்கு, நான் அவுட்ஆப் போக்கஸ்ல தெரிந்தேனா?​

'கண்ணு சந்தனம் கொண்டு போய் வையு, வந்தவங்களை வான்னு கூப்பிடு, மொய் பணம் வாங்குற இடத்துல நில்லு.'​

சந்திரா பக்கத்துல நான்‌ தானே நிற்கணும்.‌‌ கூடபிறந்த தங்கச்சி நானா? அவளா?​

ப்ரியாவை ஏன் அனுப்பறிங்க. இந்த வீட்டு மருமகளா அப்பவே அவளுக்கு சாவி தூக்கி கொடுத்துட்டு என்னை மூலையில தூக்கியெறிந்துட்டிங்க.​

இப்பவே இப்படின்னா? நாளைக்கு சந்தோஷ் அண்ணாவை‌ கட்டிக்கிட்டு வந்து நிற்பா. நான் தனியா என் ரூமுக்குள்ளயே குமறிட்டு கிடக்கணும்‌. அதான் அந்த நேரம் சான்ஸ் கிடைச்சது. திருட்டு பழி போடணும்னு அவ சூட்கேஸ்ல வைக்கலை‌. ஆனா அவ மேல நல்ல அபிப்ராயம் குறையும், என்னயிருந்தாலும் நம்ம மக தான் பெஸ்ட்டுனு நீங்க சொல்லணும்னு நினைச்சேன். சொல்ல வச்சேன். மத்தபடி அவளை அடியோட வெறுக்கறேன்" என்று மூக்குறிந்து தேம்பியவளை துரைசிங்கம் புழுவை போல பார்வையிட்டார்.‌​

‌‌ "நீ எனக்கு தான் பொறந்தியா?" என்ற ஒற்றை வார்த்தையை வீசியவர் அதிருப்தியாக நிற்க, "இதே கேள்வி தான் அப்பா எனக்கும். நான் உங்க பொண்ணு தானே? சந்திரா கல்யாணம் அப்ப வரவேற்பு இடத்துல, அண்ணா எங்கன்னு என்னிடம் கேட்காம அவகிட்ட கேட்கறிங்க. அவ அண்ணனை கல்யாணம் செய்யலையே. ஏதோ அவனோட ஒட்டி உரசிட்டு ஜாலியா ஊர் சுத்தினா" என்றதும் வாசலில் அம்மா அப்பா தங்கை பேசுவதை செருப்பு வைக்கும் இடத்தில் இருந்த சிமெண்ட் பலகையில் கையூன்றி, அதில் சாய்ந்து கேட்டுக் கொண்டிருந்தவன் விலுக்கென ஹாலுக்கு வந்தான்.​

‌ "ஏய்.. என்ன பேசற? ஒட்டி உரசிட்டா? பல்லை தட்டி கொடுத்திடுவேன். அவ என் பிரெண்ட். எப்பவும் பிரெண்ட்.​

இப்படி புத்தியில்லாம பேசற உனக்கு என்‌ பிரெண்டஷிப் பத்தி என்ன தெரியும்.​

அவ திருடலைனு எனக்கு அன்னைக்கே தெரியும். அந்த நேரம் சுமூகமா போகட்டும்னு பேசாம அமைதியா இருந்தேன்.‌ இப்படி ஒரு தங்கை கேவலமா இருப்பானு நான் நினைக்கலை.​

ஆனா ஒன்னு நீ கெட்டது பண்ணினாலும், என் பிரெண்ட் ப்ரியாவுக்கு நல்லது தான் நடக்கும்.​

சென்னையில இந்தர் அவளை திரும்ப பார்த்திருக்கான். இங்க விட்டு போன அவன் காதலை அங்க அவளிடம் மீட்டிடுவான்.​

அவனுக்கு ப்ரியதர்ஷினியை பிடிச்சிருக்கு. கல்யாண மண்டபத்திலயே அவ திருடலைனு ஆணித்தரமா அவளுக்காக நின்றவன். இனி வர்ற காலத்துல ப்ரியாவை ராணி மாதிரி பார்த்துப்பான்.​

நல்ல வேளை உன்னை மாதிரி சூனியக்காரி அந்த வீட்ல யாருமில்லை. அதோட யோசிக்காம பழகினவங்க மேல பழிசுமத்துறதும் செய்ய மாட்டாங்க. ஏன்னா சித்ரா ஆன்ட்டி மோகன் அங்கிள் எல்லாம் தங்கமான குணம்." என்றவன் தனதறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டான்.‌​

மகளை திட்ட வந்த பானுமதி துரைசிங்கம் இருவரும், தங்கள் மீதும் தவறிருக்க, இடிந்து போய் அமர்ந்து விட்டார்கள்.​

ப்ரியா மீது பழி போட்டதும், கல்யாண மண்டபத்திலிருந்து அவள் செல்ல வேடிக்கை பார்த்தார்கள்.​

கறிவிருந்துக்கும் வரமாட்டார்களென்று கவலைப்படவில்லையே. போதாதற்கு அவசர அவசரமாக பெண் எடுத்து பெண் கொடுக்க முடிவு செய்து, சந்திரா திருமணம் முடிந்த இந்த இடைப்பட்ட நான்கு மாதத்தில் வைத்துவிட்டார்.​

நிச்சயத்துக்கு வந்தவர்கள் கூட 'என்ன பானுமதி அக்கா, பெரிய பொண்ணு கல்யாணமாகி ஓய்ந்து போயிருப்பிங்க, இரண்டாவது பொண்ணு கல்யாணம் முடிச்சி பையனுக்கு ப்ரியாவை கட்டி வைக்க பார்ப்பிங்கனு நினைச்சேன். இப்படி பொசுகாகுனு விலாசினியை நிற்க வச்சிட்டிங்க.' என்று கேட்காதவர்கள் இல்லையே.​

இப்பொழுது எந்த முகம் வைத்து அந்த சிறுப்பெண் முன்‌நிற்போமென கவலையில் ஆழ்ந்தார்கள்.​

-தொடரும்.​

- NNK79​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-20​

இந்திரஜித், ப்ரியதர்ஷினி அருகே இடுக்கி கொண்டு அமர்ந்தான்.​

"இந்தர் கையையும் காலையும் சும்மா வச்சிட்டு வா ப்ளிஸ்" என்று கடித்து துப்பாத வார்த்தையை வீசினாள்.​

இந்திரஜித் காதில் வாங்காமல் ஜன்னலில் கை வைக்கும் சாக்கில் ப்ரியாவின் தோளில் கையை போடவும், அவள் எடுத்துவிடவும், திரும்ப போடவும் என்று இம்சித்தான்.​

‌‌ ப்ரியாவுக்கு அவள் அம்மா கவிதா 'சந்தோஷிற்கும் விலாசினிக்கும் நிச்சயம் நடந்திருக்கு. அதோட சந்தியா கண்ணனுக்கும் பேசியிருக்காங்க. பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்க நினைச்சிருக்காங்க‌. நீ தடையா இருக்கவும் உன் மேல திருட்டு பழி சுமத்தி அனுப்பியிருக்காங்க. காரணத்தோட தான் காய் நகர்த்தியிருக்காங்க.​

நாம தான் கண்டதும் நினைச்சி மனக்கோட்டை கட்டிட்டோம்' என்றார்.​

கவிதாவிற்கு தன் மகளிடம் வாய் நிறைய மருமகளே என்று பானுமதி அண்ணி, துரைசிங்கம் அண்ணா அழைத்துவிட்டு ஏமாற்றிவிட்டாரே என்ற வருத்தம்.​

ஆனால் ப்ரியாவுக்கு இந்த சந்தோஷ் ஏன் என்னிடம் இதை சொல்லலை. ஹாப்பி நியூஸ் தானே. அப்ப அத்தை மாமாவுக்காக என்னிடம் அவன் நிச்சயத்தை சொல்லலையே' என்ற வருத்தம்.​

ப்ரியா அழுதுக்கொண்டே போனை துண்டிக்க, இந்தரை விரும்பியதையும், சந்தியா பழிப்போட்டதாக ப்ரியா பேசிய ஆடியோவை சந்தோஷிற்கு அனுப்பிவிட்டான்.​

ப்ரியா அலுவலகம் வந்தவள் முகம் வாடியபடியிருக்க, மோகனோ வீட்டில் பையனிடம் 'ப்ரியா இன்னிக்கு முழுக்க அப்செட். அந்த பிள்ளை சிரிச்சி கலகலனு இருந்தா, இப்ப எதுக்கு சந்தோஷ் நிச்சயத்தை அவங்க அம்மா சொன்னாங்க. சந்தோஷே சொல்லிருந்தா இந்தளவு ப்ரியா பீல் பண்ணியிருக்கமாட்டா' என்று மைந்தனிடம் பேசி நகர்ந்தார்.​

அதன் தொடர்ச்சி ஒரு வாரமும் தன்னை காணும் போது காட்டும் முகமலர்ச்சி தர்ஷினியிடமில்லை என்றதும், இரண்டு நாட்கள் அரசாங்க அலுவலக விடுப்பு வேறு வரவும் இந்திரஜித் அவளை ஊருக்கு அழைத்து செல்லும் முடிவோடு இதோ பேருந்தில் குடும்பத்தோடு ஏறி விட்டார்கள்.​

ப்ரியதர்ஷினி எவ்வளவோ தடுத்தும் கவிதாவை பார்த்து பேசிடும் முடிவோடு வருகிறார்கள்.​

அன்னை என்ன சொல்வார்களோ? இதுநாள் வரை சந்தோஷோடு சுற்றும் போது ஒவ்வொருத்தர் பார்வை ஒவ்வொரு தினுசாக இருக்கும். அன்னை, அத்தை, மாமாவை பொறுத்தவரை மணக்க போகும் தம்பதியாக தான் பார்த்து தொலைத்தார்கள்.‌ ப்ரியாவும் சந்தோஷமும்‌ அந்த பார்வைக்கு விளக்கமோ, மறுப்போ தெரிவித்ததில்லை. காரணம் நாங்கள் காதலிக்கவில்லை என்று எங்களை அந்த கண்ணோட்டத்தோடு காணாதீர்கள் என்றால், கவிதா எல்லாம் சந்தோஷ் கூட ஊர் சுற்ற அனுப்பியிருக்க மாட்டார்.​

அதனால் நண்பர்கள் 'காதலர்களே' என்ற பிம்பத்தோடு வலம் வந்து கொண்டார்கள். யாரிடமும் விளக்கம் கொடுத்ததில்லை.‌​

இனி கவிதாவிடம் சந்தோஷ் பற்றி பேசுவதை தவிர்த்து, இந்தரை பற்றி விதைக்க வேண்டுமென்ற முடிவோடு கிளம்பினார்கள் எனலாம்‌.​

ப்ரியாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷமென்றால், மறுபக்கம் பயம் உருவானது. அம்மா ஏதேனும் இந்தரை அவர்கள் பெற்றோரை சொல்லி விட்டால்?​

அந்த டென்ஷன் அவளுக்கு இருக்க இந்தரின் அணைப்பு, அருகாமை எல்லாம் அவள் உணரவேயில்லை.​

சிடுசிடுவென இருந்தவளிடம் கூல்ட்ரிங்க்ஸ் நீட்டினான்.​

"ப்ளீஸ் இந்தர் எதுவும் வேண்டாம். சும்மாயிருக்கியா? அம்மா என்ன சொல்வாங்கன்னு மனசு படபடனு இருக்கு‌. நீ வேற?'' என்று எரிந்து விழுந்தாள்.​

கூல்ட்ரிங்க்ஸ் அவனே குடித்து முடித்து ''முதல் முறை ஒன்னா உட்கார்ந்து டிராவல் பண்ணறோம். நம்ம கல்யாணத்தை பத்தி பிள்ளையார் சுழிப்போட கிளம்பியிருக்கோம். எனக்கும் உன்னை மாதிரி டென்ஷன் இருக்கு. அதுக்காக இந்த அழகான தருணத்தை கெடுத்துக்க மாட்டேன்.​

நம்மை மீறி நம்ம வாழ்க்கை எங்கயும் சறுக்காது. சறுக்கவும் விடமாட்டேன். உன்னை விட உன்னை கல்யாணம் பண்ண எனக்கு தான் ஆசை அதிகமா இருக்கு. நான் வெல்-பிளானோட வர்றேன்‌. நீ தேவையில்லாம டென்ஷன் ஆகி என்னை திட்டற. ஐ அன்டர்ஸ்டான்ட் இனி எரிச்சல் மூட்ட மாட்டேன்" என்று கனிவாக பேசியவன் ஐ மாஸ்க் அணிந்து சீட்டில் சாய்ந்து கொண்டான்.​

ப்ரியதர்ஷினிக்கு இந்தரை அதிகம் திட்டி விட்டோமோயென்ற எண்ணம் உதிர்க்க, இத்தனை அருகாமையில் மனம் கவர்ந்தவன் இருக்க, அவனை ரசிக்காமல் தேவையில்லாமல் இப்பொழுதே அன்னை என்ன சொல்வாரென்று கவலையாகி அவரையும் காயப்படுத்திவிட்டோமென புரிந்துக்கொண்டாள்‌.​

மெதுவாக இந்தரின் தோளில் தலை சாய்த்து கன்னம் கை புஜத்தில் அழுத்தம் கொடுத்து அவன் கையை தன் கையோடு பிணைத்து கொண்டாள்.‌​

‌‌''சாரி இந்தர்" என்றதும் ஐ மாஸ்கை மேலேற்றி அவளை பார்த்து, "முன்ன உன் கூட யாருமில்லை. இப்ப நான் இருக்கேன். என் பேரண்ட்ஸ் இருக்காங்க.‌ நிம்மதியா இருடி" என்றவன் உறக்கத்தை தொடர ஆரம்பித்தான்.​

ப்ரியதர்ஷினியோ தன் ஆள்காட்டி விரலால் இந்தரின் கன்னத்தில் கோலமிட, "இப்ப மட்டும் அம்மா அப்பா பார்க்க மாட்டாங்களா?" என்று குறும்பாய் கேட்டவனிடம், செல்லமாய் கடித்தாள்.​

அவளது பற்தடம் பதிய துளியும் கத்தாமல் ஆனந்தமாய் ஏற்று, "நீ தூங்கு" என்றவன் அசராமல் ரசித்தான்.​

ஒரு வாரம் சரியாக உறங்காதவள் காதலன் தோள் தரவும் துயிலில் ஆழ்ந்தாள்.​

விழிக்கும் நேரம் திருச்சிக்குள் பேருந்து நுழைந்தது.​

பதட்டமாய் எழுந்து முகம் துடைத்து தெரிந்தவர் தெரியாதவர் இங்கு இறங்கும் நபர் யாரென நோக்கினாள்‌ .​

அவளுக்கு தெரிந்த முகம் யாருமில்லை என்றதும், நிம்மதியானாள்.​

இந்திரஜித்தோ முதுகுப்பையை மாட்டி அவளிறங்க கை கொடுக்கவும், சற்றுமுன் சித்ரா இறங்க, மோகன் கை கொடுத்து உதவியதை எண்ணி பார்த்தாள்‌‌.​

நிச்சயம் 'இவங்களை போல வாழணும்' என்ற வேண்டுதலோடு ஆட்டோ பேசி ஏறினார்கள்.​

மோகன், சித்ரா, ப்ரியா என்று வரிசையாக பின் பக்கம் அமர, ஆட்டோக்காரரோடு முன்னிருக்கையை பகிர்ந்தபடி இந்தர் இருந்தான்.‌​

''இந்தர் கம்பியை பிடிச்சிக்கோ'' என்று சித்ரா கூற, அவனோ, "அம்மா சென்னையில் ஷேர் ஆட்டோல ஏறி பழகியிருக்கேன் அம்மா. தர்ஷீ முன்ன என்ன குழந்தையா ட்ரீட் பண்ணாதீங்க" என்று கூறினான். திரும்பும் நேரம் ப்ரியாவை பார்த்து கண் சிமிட்டினான்.​

"ப்ரியா தான் டா. அத்தை அவரை ஒழுங்கா உட்கார சொல்லுங்கன்னு சொன்னது" என்றார்‌.​

தற்போது சித்ரா அத்தை மோகன் மாமா இப்படி தான் அழைப்பது.​

"எம்புட்டு இருக்குது பாசம் என் மேல்" என்று வார்த்தை மாற்றி போட்டு ராகமாய் பாட்டு பாட, "தம்பி இறங்கறிங்களா?" என்று ஆட்டோக்காரர் வண்டியை நிறுத்தினார்.​

‌​

"இல்லைங்கண்ணா நான் பாடலை. வண்டியை எடுக்க" என்று இந்தர் கூற, "அய்யோ தம்பி நீங்க இறங்க இடம் வந்துடுச்சு" என்று கூறவும் வீடுவந்த பயம் கூட ஓடிச்சென்று சிரித்துவிட்டாள் ப்ரியதர்ஷினி.​

பணத்தை கொடுத்து வீட்டு வாசலில் இறங்கினார்கள். சின்ன கேட் அதனை திறந்து "வாங்கத்தை" என்று வீட்டுக்குள் கூட்டி சென்றாள். அங்கே ஒரு குட்டி நாய் ஓடிவந்து அவள் காலை சுற்றியது. அதனை தூக்கி முக்காடு மூக்கு உரசி கீழே வைத்தாள்.​

‌‌ "அம்மா எப்பவும் கேட் சவுண்ட் கேட்டாளே வாசல் பக்கம் வந்திடுவாங்க. இன்னிக்கு என்னனு தெரியலை. உள்ளவங்க மாமா, அத்தை உட்காருங்க" என்றாள்.​

மின்விசிறியை போட்டுவிட்டு "அம்மா அம்மா" என்றழைக்க, கிணற்றில் நீரை இறைத்து குடத்தில் எடுத்து வந்த கவிதா மகளை கண்டதும் குடத்தை கீழே வைத்துவிட்டு, ஓடிவந்து கட்டி பிடித்தார்‌.​

"என்னடி இது சொல்லாம கொள்ளாம வந்திருக்க? எப்ப வந்த? என்ன மெலிஞ்சு போயிருக்க?" என்று மகளை இத்தனை நாள் காணாமல் கண்டதும் நலம் விசாரித்தார். உண்மையில் ப்ரியா மெலியவில்லை.​

"இப்ப தான் அம்மா வந்தேன். நீ நல்லாயிருக்கியா?" என்று ப்ரியா கேட்க, "எனக்கென்ன எல்லாம் கேட்டும் உசுரோட இருக்கேன்" என்றவர் பார்வை வந்திருந்த மற்ற மூவரையும் அலசியது.​

‌ இந்தரை கண்டவர் சட்டென சந்திரிகா திருமணத்தில் சந்தோஷ் பிரெண்ட் என்று அறிமுகப்படுத்திய பையனை போல தெரிய, கண்களாலே யாரு இவங்க?' என்று மகளிடம் கேட்டார்.​

சந்தோஷ் ப்ரியா பற்றியே சிந்திப்பதால் அவ்வாறு தனக்கு தோன்றுகின்றதென்று எண்ணினார் கவிதா.​

"அம்மா இது இந்திரஜித். இவங்க அவரோட அப்பா மோகன் அம்மா சித்ரா‌." என்றதும் அனிச்சையாய் கும்பிட்டு உட்கார கூறினார் கவிதா.​

யார் இவர்கள்? எதற்கு வந்திருக்கின்றார்கள்? மகள் அறிமுகம் செய்யும் முறையும் லேசாக அடிவயிற்றை கலக்கியது. பெற்றவளுக்கு நெஞ்சுப்பகுதியில் ஒரு அதிர்வு. இந்திரஜித் வேறு முகப்பொலிவோடு மகளை வருடும் பார்வை வீசுகின்றான். மகளும் சந்தோஷ் நிச்சயம் கூட கேள்விப்பட்டு வந்து இடிந்திடாமல் தூண் போல் நிற்கின்றாள்.​

வீட்டுக்குள் வந்ததும் ப்ரியா, பார்க்க மெலிந்தது போல தோன்றினாள். ஆனால் முகம் முன்பை விட பிரகாசம் பெற்று இருப்பதாக நிதானமாக கண்ணுக்கு புலப்பட்டது கவிதாவிற்கு.​

"அம்மா இது சந்தோஷோடு பிரெண்ட் இந்திரஜித்" என்று தயங்கி தயங்கி அறிமுகப்படுத்தினாள்.​

''தப்பு தர்ஷு, அத்தை இவளுக்கு அறிமுகப்படுத்தவே தெரியலை. நான் சந்தோஷ் பிரெண்டா இங்க வரலை. ப்ரியதர்ஷினியோட லவ்வர் அத்தை. நானும் அவளும் விரும்பறோம். இவங்க என்னோட பேரண்ட்ஸ். அப்பா மோகன் அம்மா சித்ரா.​

தர்ஷுவை பத்தி சந்தோஷ் அடிக்கடி பேசுவான் அத்தை. என்னடா நீ காதலிக்கறது விலாசினி என்ற பொண்ணு தானே‌. எப்பபாரு ப்ரியா ப்ரியா ப்ரியானு சொல்லறனு ஒரு நாள் கேட்டேன்.​

‌ விலாசினி‌ நான் விரும்பற அத்தை பொண்ணுடா. ப்ரியதர்ஷினி‌ என் கிளோஸ் பிரெண்டுடா, என்‌ இன்னொரு அத்தையோட பொண்ணுன்னு சொன்னான்.​

ஒருதடவையாவது தர்ஷுவை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். சந்தோஷ் போன்ல தர்ஷு போட்டோவை காட்டினான்.​

அப்பா வேற கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா எனக்கு எப்படியொருத்தி இருக்கணும்னு இமேஜின் செய்து வைத்த மாதிரி தர்ஷு இருக்கவும், சந்திரா கல்யாணத்தோட வந்து தர்ஷுவை காதலிக்க ஆரம்பிச்சேன்.​

அங்க கல்யாண மண்டபத்தில நடந்த எல்லா விஷயமும் தெரியும். நான் கூடயிருந்தேன்‌. அப்ப நீங்க என்னை பாரத்திருக்கலாம்.​

சந்தோஷ் புயல் ஓய்ந்ததும் ப்ரியாவை சமாதானம் செய்ய நினைச்சான். ஆனா நிறைய அசம்பாவிதம்‌. அப்பவும் அதிர்ஷ்டவசமா ப்ரியதர்ஷினி மாம்பலம் வந்துட்டா. நான் கோடம்பாக்கம்.​

ஒரு மாசம் ப்ரியதர்ஷினியை தேடினேன். எதச்சயமா, ஒர்க் பண்ற இடத்துல பார்த்தேன்‌. திருச்சில விட்ட காதலை மாம்பலத்துல பிடிச்சிட்டேன். ப்ரியாவும் என்னை விரும்பறா அத்தை.'' என்று ரயில் பெட்டி போல வரிசையாக பேசினான்.​

இடையே கவிதா முகம் ஆத்திரம் அதிர்ச்சி, கோபம் என்று பலதர முகபாவணையை பிரதிபலித்தது.​

இந்திரஜித் அதனை காணாமல் இல்லை. சற்று கவிதா அத்தை தன் காதலை ஏற்றுக்க நேரம் கொடுத்தான்.‌​

‌ கவிதாவோ, ''இதுக்கு தான் சென்னைக்கு போறேன்னு ஒத்த கால்ல குதிச்சியா ப்ரியா" என்று இகழ்ந்து பேசி "சீ என்னோட பொண்ணா நீ. சந்தோஷை தானே விரும்பின. என்ன நடக்குது டி இங்க?" என்று கோபமாய் அடியெடுத்து அடிக்க முன்வர, "அடிக்காத அம்மா. நான் தேடி போய் எல்லாம் காதலிக்கலை. இவர் எந்த ஏரியானு கூட தெரியாது.'' என்று சித்ரா பின்னால் நகர்ந்தாள்.​

"அண்ணி மருமக மேல எந்த தப்பும் இல்லை" என்று தான் சித்ரா ஆரம்பித்தார்.​

''மருமகளா? யாருக்கு யாருங்க மருமக? இப்படி பேசி தான் ஒரு குடும்பம் இவளை பழிசுமத்தி முடக்கிடுச்சு திரும்பவுமா?​

தயவு செய்து காதல் கத்திரிக்கா, மருமகள் என்று யாரும் வரவேண்டாம் . தயவு செய்து வெளியே போங்க‌. வெளியே போறிங்களா? நாயை வச்சி மிரட்டவா?" என்றதும் சித்ரா மோகன் இருவரை கண்டு வாசல் பக்கம் கையை நீட்டினார் கவிதா.​

"அம்மா இந்திரஜித்தை நானும் விரும்பறேன். மரியாதையோடு பேசுங்க" என்று ப்ரியா பேச,"காலை உடைச்சி‌ அடு​

ப்புல வைப்பேன். வாயை மூடிட்டு உள்ளப்போ" என்று கூற இந்திரஜித்தை கையாளாகாத தனத்தோடு பார்த்தாள் ப்ரியா‌.​

-தொடரும்.​

- NNK79​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-21​

இந்திரஜித்தை அவன் பெற்றோர் இருவருமே ஒரு அடி கூட நகராமல் நின்றனர்.​

"அத்தை உங்க வீட்டு நாய் வச்சி மிரட்டுவீங்களா? அது பிறந்து ஆறு மாசம் தானே ஆச்சு? குட்டி பப்பியாச்சே, அதுக்கு சரியா கடிக்க வராது.​

அதுக்கு பதிலா நீங்க தர்ஷுவை வச்சி என்னை கடிக்க வைக்கலாம். நல்லாவே கடிப்பா. இங்க பாருங்க வர்றப்ப பஸ்ல 'டென்ஷனா இருக்கு இந்தர்'னு சொன்னா. நான் விளையாட்டு காட்டி மனசை மாத்தி சிரிக்க வைக்க ட்ரை பண்ணினேன். மனசாட்சியேயில்லாம என்னை கடிச்சிட்டா." என்று கைவளைவை காட்டினான்.​

ப்ரியதர்ஷினிக்கோ வரும் போது அவன் செய்த சேட்டைக்கு ஆசையாக கடித்து விட்டாள். அதை இப்படி போட்டு கொடுப்பதை கண்டு பின் நகர்ந்தாள்.​

கவிதாவின் பார்வைக்கு ப்ரியா பொசுங்காமல் உயிர் பிழைத்தால் எனலாம்.​

கவிதாவுக்கு தன் மகளா ஒரு ஆடவனோடு இந்தளவு விளையாடியிருப்பது என்ற‌ கோபம் உருவானது.​

''அத்தை இந்நேரம் என் தர்ஷு மேல யார் பழிசுமத்தியதுனு அங்க சந்தோஷ் வீட்ல தெரிந்திருக்கும். சாரி தர்ஷு நான் அந்த ஆடியோவை அவனுக்கு அனுப்பிட்டேன்.‌ என் ப்ரியதர்ஷினி அழக்கூடாது. நீ எப்பவும் சிரிக்கணும்." என்றவன் கண்ணீரை துடைத்து விட்டான்.​

கவிதாவுக்கு ஒர்கணம் மகளின் கண்ணீரை துடைக்கவும் ஒரு கரம் வந்துவிட்டதா? என்ற நிம்மதி வந்தது. இதற்கு முன் பேசியதை எண்ணி அமைதியானார்.‌​

ப்ரியதர்ஷினியோ "ஏன் இந்தர் இப்படி செய்த? சந்தியா இப்ப என் மேல இன்னமும் கோபத்துல இருப்பா" என்று கையை தட்டிவிட்டாள்.​

"அச்சசோ அத்தைக்கு சந்தியாவை பத்தி சொல்லவேயில்லை. இப்ப நீயா உலறுறியே தர்ஷு" என்றதும் கவிதா மகளை நோக்கி வந்தார்.‌​

‌‌"அவயெதுக்கு உன்‌மேல பழிப்போடணும்?" என்று கேட்க, "அத்தை மாமாவுக்கு நான் சந்தோஷை கல்யாணம் பண்ணிப்பேன்னு, என்‌மேல அதிகப்படியா பாசம் காட்டினாங்க. அவளுக்கு அது பிடிக்கலை. மாமா வீட்ல எப்பவும், என்னை தான் தூக்கி வைக்கறாங்கனு நினைச்சி பழிசுமத்திட்டா.​

நான் கடைசியாக என் சூட்கேஸுக்கு நம்பர் போட்டு‌ லாக் செய்தப்ப உன்னோட பிறந்த நாள் நம்பர் தான் போட்டேன் ம்மா. அப்ப அவ ஏய் அத்தையோட பிறந்த நாளை தான் நம்பரா வச்சிருக்கியானு கேட்டா. நான் ஆமானு சொன்னேன்.​

‌‌​

பழிசுமத்தி நான் அழுதுட்டு இருந்தப்ப, அவ தான் நிம்மதியா கையில தாளமிட்டபடி நின்றா.​

இங்கிருந்து சென்னை போகறப்ப அவளிடம் நான் கேட்டேன். ஏன் என்‌மேல பழிப்போட்டனு‌.​

முதல்ல மறுத்து நாடகமாடினா. அப்பறம் ஆமானு ஓத்துக்கிட்டா. என்னை, அத்தை , மாமா சந்தோஷ் முன்னிலைப்படுத்தி பேசறது, சபையில நிற்க வைக்கிறது அவளுக்கு அதெல்லாம் பிடிக்கலையாம். நிறைய பேசினா.‌ இனி நான் இங்க இருக்க மாட்டேன், நீ பழிசுமத்தியதை யாரிடமும் சொல்ல மாட்டேன் சந்தோஷமாயிருனு கிளம்பிட்டேன்.​

இப்ப எனக்கும் சந்தோஷுக்கும் கல்யாணமும் நடக்காதுனு ரொம்ப சந்தோஷமாயிருப்பா, அவளுக்கு தெரியலை நானும் சந்தோஷும் எப்பவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு. இப்ப தேவையில்லாத வேலை பார்த்து, மாமா-அத்தையிடம் திட்டு வாங்கியிருப்பா. பாவம் சந்தியா‌." என்று கூற இந்திரஜித் உச்சுக் கொட்டி கேலி செய்தான்.​

‌ "என்னத்த பாவம்? அதெல்லாம் அவ தவறை உணரமாட்டா.‌ நாம் தான் உடைஞ்சிப்போய் இருக்கணும்" என்று கவிதா கலங்கினார்.​

இந்தரோ "அத்தை அதெல்லாம் விலாசினி மூலமா அவங்க வீட்டுக்கு தெரியலாம். நமக்கு அது தேவையில்லாதது. பானுமதி ஆன்ட்டி, துரை அங்கிளுக்கு தெரிந்ததே அது போதும். நாளைக்கே கூட ப்ரியாவிடம் மன்னிப்பு கேட்பாங்க." என்று ஆருடம் கூறினான்.‌​

"மன்னிப்பு கேட்டு என்னவாக போகுது தம்பி. இனி உறவு என்றது அறுந்துப்போச்சு" என்று கண்களை துடைத்து மகளை பார்வையிட்டார்.​

ப்ரியதர்ஷினி இந்தரை சத்தமின்றி திட்டுவதை கண்டவர், "தம்பி இது ஆம்பளைங்க இல்லாத வீடு. அக்கம் பக்கம் பார்த்தா கண்ணு, காது வச்சி ஏதாவது பேசுவாங்க. தயவு செய்து நீங்க கிளம்புங்க." என்று இந்தரை பார்த்து கூறிவிட்டு, ''நீங்களும் மன்னிச்சிடுங்க. என்னடா இது வீட்டுக்கு வந்தவங்களை இப்படி அனுப்பறோம்னு தப்பா நினைக்காதீங்க." என்றவர் சித்ரா மோகனிடமும் கூறினார்.​

அவர்கள் அமைதியாக இந்தரை பார்த்தார்கள்.​

ப்ரியாவிடம் "அக்காவுக்கு முறுக்கு அதிரசம் சுட்டு வச்சிருக்கேன். அதை இவங்களுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டு காபி போடு போ" என்று‌ விரட்டினார்.‌​

ப்ரியா ஒரு பக்கம் அன்னை கூறியதை போல முறுக்கு, அதிரசம் கொடுத்துவிட்டு காபி போட கிச்சனுக்குள் நுழைந்தாள்.​

''அண்ணி... நீங்க இப்ப குழப்பத்துல இருக்கிங்க. சந்தோஷ் அப்பா அம்மா ப்ரியதர்ஷினியை மருமகள்னு கூப்பிட்டு பழகியதையும், இப்ப நாங்க உரிமையா பழகறதும் பயப்படறிங்க.​

கொஞ்ச நாள் போகட்டும். உங்களுக்கே ப்ரியாவை என்‌மகன் நல்லா பார்த்துப்பான்னு தோணும். அப்ப நாம சந்திச்சு நிதானமா பேசுவோம்‌." என்று சித்ரா கூற, மோகனோ, "தங்கச்சி முறுக்கு டேஸ்டா இருக்கு. கொஞ்சம் பேக் பண்ணி கொடும்மா‌" என்றார்.​

கவிதா திகைத்த படி விழிக்க, இந்தரோ "அத்தை நீங்களே இன்னிக்கு இங்க இருக்க சொன்னாலும் அம்மா விட மாட்டாங்க. வீட்லயிருந்து கிளம்பறப்பவே ஹோட்டல் புக் பண்ணிட்டோம். அதனால தர்ஷினியை இங்க விட்டுட்டு உங்களிடம் எங்க காதலை பகிர்ந்துட்டு, நாங்க அங்க போயிடுவோம். அப்பறம் லீவு முடியறப்ப எங்களோட தர்ஷுவை கூட்டிட்டு போயிடுவேன்.​

கோ-இன்சிடெண்டா அவளும் அப்பாவும் ஒரேயிடத்தில் வேலை பார்க்கறாங்க. அப்பாவால தான் என்‌ தர்ஷுவை சந்திச்சேன்." என்றதும் கவிதா மகளை தான் வினோதமாக பார்த்தார்.‌​

"காபி எடுத்துக்கோங்க தம்பி" என்று இந்தரை பேசவிடாமல் தடுத்தார். இந்திரஜித் பேசினால் அவன் பக்கம் மனம் சாய்கின்றது. மகளுக்கு ஏற்றவனோ என்று அடிக்கடி எண்ணங்கள் குறுட்டுத்தனமாக சென்று வருகிறது.​

"பையன் பேசினா நாம விழுந்துடுவோம். அந்தளவு வார்த்தையில நெயிர்ச்சி இருக்கும். இங்கிலிஷ்ல என்னடா சொல்வாங்க?" என்று மோகன் கேட்க, இந்தரோ 'சாக்லேட் பாய்' அப்பா" என்று காலர் பட்டனை ஒன்று சேர்த்து நல்லவனாக காட்டினான்.‌​

''மாமா இவன் சாக்லேட் பாய் இல்லை. ப்ளே பாய்." என்று கூறியதும் கவிதா முறைத்த‌ முறைப்பில் இந்தரின் இருக்கைக்கு அருகே அமர போனவள் சித்ரா அருகே நின்று விட்டாள்.​

"அப்பறம் வர்றேங்க. ப்ரியாவை திட்டாதிங்க‌. அங்க ஒரே அழுகை. சந்தோஷ் நிச்சயதார்த்தத்துக்கு கூட அத்தை மாமா இன்வெயிட் பண்ணலை. இந்த சந்தோஷாவது என்னிடம் சொன்னானா? அப்படியிப்படி அழுது முகம் வாடிப்போச்சு. இங்க இரண்டு நாள் உங்க கையால சாப்பிட்டு மனசு விட்டு இருக்க சொல்லுங்க." என்று‌ சித்ரா எழுந்தார்.​

‌​

கவிதா வேகமாய் கிச்சனுக்கு சென்று ஒரு டிபன் பாக்ஸில் முறுக்கை எடுத்து வைத்து நீட்டினார்.‌​

"எடுத்து போய் சாப்பிடுங்க" என்று‌ மட்டும் கவிதா நீட்ட பெற்றுக் கொண்டார் சித்ரா.​

இந்தரோ "அத்தை‌ அவளை போன்ல பேச சொல்லுங்க. எனக்கு இங்க வேற டைம்பாஸ் இல்லை" என்று அங்கிருந்த முறுக்கை கடித்தபடி கூற, கவிதாவுக்கு இப்படியும் மனிதர்களா? என்ற ரீதியில் வியந்தாள்.‌​

‌​

வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.​

இந்தரை கடைசி நிமிடம் வரை திட்டியபடி ப்ரியா முனங்க, கவிதா அதையெல்லாம் கண்டும் காணாதது போல இருந்தார்.​

இந்தர் சென்றதும் வீட்டில் வந்து தட்டு டம்ளரை எடுத்து வைத்தார்.​

"அம்மா இந்தரை நான் கூப்பிடலை. அவனா தான்‌ வந்தான்." என்றவளை "முழுப்பெயர் என்ன?" என்றார் கவிதா.​

''இந்திரஜித்‌... மாமா அத்தை கூடயிருக்கவங்க நெருக்கமானவங்க இந்தர்னு கூப்பிடுவாங்க." என்று விவரிக்க, "நீ இந்தர்னு கூப்பிடற? அந்தளவு நெருக்கமா? பக்கத்துல உட்கார்ந்து வந்திருக்க? அந்த தம்பியை கடிச்சி விளையாடியிருக்க?" என்றதும் ப்ரியா அமைதியாக தலைகவிழ்ந்தாள்.‌​

கவிதா வேறதுவும் கூறாமல் சென்றிட, ப்ரியதர்ஷினி அன்னையின் மனதில் என்ன ஓடுகின்றதென்று அறியாது விழித்தாள்.​

ஆட்டோவில் திருச்சியில் தங்க முடிவெடுத்து, ஹோட்டலுக்கு போகும் வழியில் இந்தரோ, "ப்ரியாவை திட்டாம இருப்பாங்களாம்மா" என்று கேட்டதும் தான் தாமதம்.​

மகனை இடித்து, "எதுக்குடா அவ உன்னை கடிச்சி விளையாடியதை அவங்களிடம் சொன்ன.‌ ப்ப்ப்பா என்னம்மா முறைச்சிட்டாங்க. கண்டிப்பா திட்டு விழும். நல்லா அவளை அவங்க அம்மாவிடம் போட்டு கொடுத்துட்டு வந்திருக்க" என்றார் சித்ரா.​

இந்தரோ மறுப்பாய் தலையாட்டி சிரித்து, '"அம்மா அவ என்னிடம் இந்தளவு நெருக்கமா, அன்பா இருப்பதை சொல்லிருக்கேன். நிச்சயம் அந்த நேரம் கோபமாயிருந்தாலும் யோசிப்பாங்க.". என்றான்.​

மோகனோ "ஏன்டா சந்தோஷ் வீட்டுக்கு போகணுமா?" என்று கேட்டு முடிக்க, "இல்லைப்பா ஹோட்டல் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கணும். நாளைக்கு வேண்டுமின்னா போகலாம்.​

அம்மா வேற திருச்சி கோவிலுக்கு போக கேட்டிருக்காங்க" என்று கூற ஆட்டோ அவர்கள் சொன்ன ஹோட்டல் முன்‌வந்து நின்றது.​

கீழே உணவகம், மேலே அறைகளெடுத்து தங்குமிடமாக இருந்தது. தங்கள் போனிலேயே புக் செய்ததை அறிவித்து பணத்தை கொடுத்து அறையின்‌ சாவியை வாங்கிக் கொண்டனர்.‌​

கதவு திறந்ததும் இந்திரஜித் தன் ஆறடி சரீரத்தை நீட்டி நிமிர்ந்திட, சித்ராவோ முகம் அலம்ப சென்றார்.​

மோகனோ "காபி டிபன் எல்லாம் மருமக வீட்ல முடிச்சாச்சு. நைட் டிபன் மட்டும் கீழே முடிச்சிடலாம்.​

‌அந்த டிவி ரிமோட் எடு இந்தர். மேட்ச் பார்ப்போம்" என்று கூற இந்தரோ டிவி ரிமோட்டை கொடுத்து சுவரில் முதுகை சாய்த்து தந்தையும் மைந்தனும் கிரிக்கெட்டில் மூழ்கினார்கள்.‌​

சித்ராவோ போனை எடுத்து, ப்ரியாவுக்கு அழைத்து, "அம்மா திட்டினாங்களா ப்ரியா?" என்று கேட்க, "நீங்க கிளம்பினதுலயிருந்து அம்மா என்னிடம் பேசலை அத்தை. அமைதியா இருக்காங்க." என்று கூறினாள்.‌​

"சரிம்மா ஏதாவதுன்னா உடனே போன்‌ பண்ணு. நாங்க கூடவேயிருப்போம். சரியாடா தங்கம்" என்று கூற "சரிங்கத்தை" என்று துண்டித்து கொண்டார்கள்.​

‌ "அங்க என்ன போன்ல? கிச்சனுக்கு வந்து சப்பாத்தி மாவு பிசைந்து கொடு. பூரி பூரினு சுட்டா ஐந்தாறு முழுங்க வேண்டியது. கூடமாட ஒத்தாசை செய்யறதில்லை" என்று கவிதா கூப்பிட, 'இனி போனை கையில எடுத்தாலே இந்த அம்மா பத்ரகாளியா மாறலாம். எதுக்கோ போனை தூரவைப்போம்' என்று வைத்துவிட்டு துப்பட்டாவை சோபாவில் போட்டுவிட்டு கிச்சனில் உதவ சென்றாள்.​

எப்படியும் உடனடியாக வெடிக்கா விட்டாலும் அடிக்கடி தனக்கு கொட்டு வைத்து திட்டி தீர்ப்பார்கள். அது நிச்சயம் நடக்கும்.​

மாவு பிசைந்தபடி அமைதியாக இருக்க, "நீ விரும்பறது யமுனாவுக்கு தெரியுமா டி?" என்று கேட்டார் கவிதா‌.​

"இல்லைம்மா. சந்தோஷுக்கு மட்டும் தெரியும் அதுகூட இந்தர் சொல்லிருப்பான்" என்றாள்.​

கவிதா மார்க்கமாய் முறைத்துக் கொண்டு, "உன்னை தேடி சந்தோஷ் கூட யமுனா வீட்டுக்கெல்லாம் போய் விசாரிச்சிருக்காராமே இந்த பையன்.​

இப்ப தான் யமுனாவிடம் போன்ல சொன்னேன்.‌ அவ அன்னைக்கே சந்தோஷும் சந்தோஷ் பிரெண்டும் வீட்டுக்கு வந்ததா சொல்லறா.​

கற்பகம் அக்கா வேற அன்னைக்கு மண்டபத்துல உன்னை நோட் பண்ணினாங்களாம். இந்த பையன் தான்‌ வலிய வந்து பேசி உன்னையே விழுங்கறாப்ள பார்த்தததா." என்றதும் ப்ரியா மௌவுனம் காத்தாள்.​

கவிதாவோ "‌‌அம்மாவை மீறி அவர் தான் வேண்டும்னு போவியா?" என்று கேட்க மறுப்பாய் தலையசைத்து "நீ என்னை கஷ்டப்பட்டு வளர்த்தம்மா. உன்னை சங்கடப்படுத்தி நல்ல வாழ்க்கை வந்தாலும் போக மாட்டேன்.‌ அக்காவுக்கு எப்படி நீயா நல்லது செய்தியோ, அதே போல எனக்கு நீ செய்து, இந்த உலகத்துல தனியாள நீ இரண்டு பொண்ணுங்களை நல்லா வளர்த்து நல்லபடியா கல்யாணம் செய்தனு பேர் வாங்கணும்.​

அதை விட்டு‌ சின்ன‌ பொண்ணை சரியா வளர்க்கலை அதனால் அது இஷ்டத்துக்கு ஓடிப்போச்சுனு கெட்ட பெயரை வாங்கி தரமாட்டேன்." என்று உருட்டினாள்.​

சப்பாத்தி மாவை தான் உருட்டினாள். அவள் வார்த்தையில் உருட்டல் இல்லாமல் நியாயமாய் பேசினாள் ப்ரியதர்ஷினி.​

-தொடரும்.​

-NNK79​

நீயென் காதலாயிரு​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-22​

கவிதா தோசையை வார்த்தபடி, "மூஞ்சியை இப்படி தூக்கி வச்சிக்கிட்டா சம்மதிச்சு தலையாட்டுவேன்னு நினைக்காத. இத்தனை நாளாக இந்த திருச்சியில சந்தோஷோட ஊர்சுத்தியிருக்க. இப்ப இந்த தம்பிக்கூட போறேன்னு குதிக்கற? காலை உடைச்சி அடுப்புல வச்சிடுவேன் பார்த்துக்கோ" என்று தர்ஷினி தட்டில் தோசையை வைத்து, "சூடா சாப்பிடுடி'' என்று திட்டிவிட்டு திரும்ப, அங்கே துரைசிங்கமும், பானுமதியும் நின்றிருந்தார்கள்.​

"சந்தோஷ் என்னோட பிரெண்ட். இந்தர் அப்படியில்லை. அதோட சித்ரா அத்தை வேற என்னை கூப்பிட்டிருக்காங்க. மோகன் மாமா வருவார்.​

நான் ஒன்னும் இந்தர் கூட தனியா போகலை." என்று வாதிட்டவள் வாசல் பக்கம் பார்வை பதித்து வாயை மூடினாள்.​

"வாங்க அண்ணா வாங்க அண்ணி" என்று கவிதா வரவேற்க, இருவரும் ப்ரியா முன் வந்து நின்றார்கள்.​

‌‌ ப்ரியாவோ சின்சியராய் தோசையை திண்பதில் இருந்தாள்.​

''ஒரு வார்த்தை சந்தியா தான் பழிப்போட்டானு சொல்லிருக்கலாமே கண்ணு" என்று பானுமதி தாடை பிடித்து கேட்க, "எங்க மேல கோபமா ப்ரியா?" என்று துரைசிங்கம் தலையில் ஆதுரமாய் கைவைத்து கேட்டார்.​

கவிதாவுக்கு தானாக ஏதேனும் சொல்வதில் வார்த்தை எழும்பவில்லை. தேவையற்று பழியை சுமந்தவளே பதில் தரட்டும் என்று நின்றார்.‌‌ குடிக்க தண்ணீரும் முறுக்கும் எடுத்து வந்து அண்ணன் அண்ணியை உபசரிப்பில் குறை வைக்காமல் நின்றார்.​

அன்னை சுட்ட தோசையோடு போதுமென முடித்துக் கொண்டவள் சாப்பிட்ட தட்டிலேயே கையை அலம்பிவிட்டு ஓரமாய் அதை எடுத்து வைத்து தன் சட்டையில் கையை துடைத்தாள்.​

''பேசமாட்டியா டி" என்று கண்ணீர் ததும்ப கேட்டதும், "உங்ககிட்ட பேசாம நான் எங்க போவேன் அத்தை. அப்பா இறந்ததும் நாங்க மூன்று பேரும் என்ன செய்யறதுனு தெரியாம இருக்க, மாமா தானே இந்த வீட்டுக்கு முன்ன நின்று, அப்பா உடலை எடுக்கவும், காரியம் செய்யவும், முப்பது நாள் எல்லாரும் முடிச்சி, அம்மா அழுதுட்டு இருந்தப்ப, நாங்க சொந்தமா உங்க கூடவே இருக்கோம்னு நீங்க எல்லாம் தான் தூணாக நின்றிங்க.​

சந்திரா கல்யாணதுல நடந்தது கண் திருஷ்டினு நினைச்சிக்கோங்க அத்தை. மத்தபடி நான்‌ அந்த நேரம் அதிர்ச்சியானேன். அப்பறம் யாருனு பொறுமையா இருந்து யோசிக்க, அடையாளம் கண்டு பிடிச்சிட்டேன்.​

என்ன அவளை உங்களோட கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க விருப்பமில்லை.​

‌​

இன்னொரு காரணம்‌ அந்த நேரம் நீங்க பேசியதுக்கு சந்தியா காரணமில்லை.‌ உங்களுக்கும் நான் எடுத்திருப்பேன்னு டவுட் வந்துடுச்சே.‌ அப்படியிருக்க சந்தியா செய்தது தப்பாயிருந்தாலும், சில சூழ்நிலையில் மனிதர்கள் மனசு எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம்னு புரிஞ்சுக்கிட்டேன்" என்றாள்.​

பானுமதியோ சேலை முந்தானையால் வாய் பொத்தி அழுதார்.‌​

"சந்தோஷுக்கு விலாசினியையும், சந்தியாவுக்கு கண்ணன் அண்ணவையும் பேசி முடிச்சதா கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் மாமா‌.​

சந்தோஷ் ரொம்ப நாளா விலாசினியை விரும்பினான். அவனா காதலிக்கறதை சொல்லாம ஏகப்பட்ட சொதப்பல்.‌ அவளை பார்க்க வந்ததை எல்லாம் என்னை பார்க்க வர்றதா எத்தனை வதந்தி. அதுக்கெல்லாம் முடிவுரை வந்துடுச்சு.​

நிச்சயத்துக்கு அம்மாவை மட்டும் கூப்பிட்டிருக்கலாம் மாமா. மொத்தமா ஒதுக்கிட்டிங்க, அப்ப தான் அப்பாயில்லாத வலி உண்டாச்சு." என்றதும் துரைசிங்கம் ப்ரியாவின் கையை பிடித்தார்.​

அவர் வாய் திறக்கும் முன் "யமுனா வீட்ல ஐந்து சவரன் நகை கொடுத்துட்டேன் மாமா. இந்த வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சி பணம் வாங்கி கொடுத்துட்டேன்.‌​

‌‌​

அவங்க வீட்ல யமுனா அத்தை மாமாவுக்கு, என்னைக்காவது இந்த இரண்டு நிச்சயம் தெரிந்தா என்ன சொல்வாங்க? சந்திரா கல்யாணத்துக்கு துணி எடுத்து கொடுத்து உரிமையா வரச்சொன்னாங்க, இதுக்கு இடையில இரண்டு பேருக்கு நிச்சயம் நடந்திருக்கு சொல்லவேயில்லைனு பேசுவாங்களா இல்லையா?" என்றதும் பேச்சடைத்து நின்றனர்.‌​

ப்ரியா கண்ணீரை துடைத்து, "கவலைப்படாதீங்க மாமா. நான்‌ சந்தோஷை கட்டிக்காததால கோபத்துல இருப்பாங்கன்னு யமுனாவிடம் சொல்ல சொல்லிடலாம். அவங்க நிச்சயம் என்னை‌ தான்‌ திட்டுவாங்க.​

இந்த பொண்ணுக்கு‌‌ என்ன தைரியம் காதலிச்சு கல்யாணம் பண்ணறா? அதான் அத்தை மாமா இப்படி நடந்துக்கிட்டாங்கன்னு என்னை தப்பா நினைச்சிப்பாங்க" என்றதும் பானுமதியோ, "நாங்க செய்தது தப்பு தான்டி ராசாத்தி.‌ உன்னிடம் மன்னிப்பு கேட்கவும் எங்களுக்கு அருகதையில்லை. எங்களை எட்டி நிறுத்திடாதே." என்று அழுதார்.​

"அதெப்படி அத்தை எட்டி நிறுத்த முடியும். நீயும் மாமாவும் தானே என் கல்யாணத்துல தாய்மாமா இடத்துல நிற்கணும்." என்று பேசிக்கொண்டே போனாள்.‌​

துரைசிங்கமும் "அம்மாடி நீ எங்களை மாதிரி கூறுயில்லாதவயில்லைடா. கற்பகம் ப்யூட்டிஷன் பொண்ணோட பழிசுமத்த இருந்தப்ப, எவ்ளோ நிதானமா அவசரப்படாதிங்க சித்தின்னு தடுத்த.‌ எங்களுக்கு அந்த அறிவுயில்லையேடா?" என்று குலுங்கி அழுதார்.​

விலாசினி அவள் வீட்டில் எல்லாம் கலந்து பேசி இருப்பது புரிந்தது.‌ சந்தியாவை என்ன திட்டியிருப்பார்களோ? என்று பயந்தாள் ப்ரியா.​

"மாமா சந்தியாவை ரொம்ப திட்டிட்டிங்களா?" என்று கவலையாக கேட்டாள்.‌​

''அவளை திட்டி என்ன பிரோஜனம் டா. அப்பவும் எங்களை தான் குற்றம் சுமத்திட்டு திமிரா இருக்கா. என்னவோ உன்னை தூக்கி வச்சி அவளை அதளபாதாளத்தில தள்ளின மாதிரி குதிச்சா. எங்க மேலயும் தப்பியிருக்கே. உன்னை சட்டுனு திருட்டுபழி சுமத்திட்டோம். அதுக்கு இப்படியொருத்தி எங்களுக்கு வாச்சியிருக்கா.​

எம்புட்டு கெட்ட எண்ணம், நல்ல வேளை சந்தோஷோட உன் கல்யாணம் நடந்து, அவளும் தன்னை தானே கெட்டயெண்ணத்தை மனசுல வளர்த்து, கூடவேயிருந்து சைக்கோவா சுத்திட்டு கெடுதல் செய்துட்டு இருந்திருப்பா.​

உன்‌ நல்லதுக்கு நீ இந்திரஜித் தம்பியை கட்டிக்கிட்டு இனி நிம்மதியா இருக்கலாம்." என்றதும் கவிதாவோ இவர்களுக்கும் அந்த தம்பி இவளை விரும்புவது தெரிந்துவிட்டதா என நினைத்தார்.​

‌"அம்மா அழுது வடிஞ்சது போதும். அவளை ரெடியாக சொல்லுங்க. இந்தர் வந்துட்டுயிருக்கான்.‌ அவனுக்கு ஊர்சுத்தி காட்ட சொல்லுங்க" என்றான் சந்தோஷ்.​

ப்ரியாவோ "தள்ளுங்க அத்தை" என்றவள் சந்தோஷிடம் சண்டைக்கு வந்து, "அவன் என்ன விரும்பறதா உன்னிடம் சொல்லிருக்கான். நீ என்னடா பண்ணிருக்கணும்? ஆங் சொல்லு என்ன பண்ணிருக்கணும்? அவ என் அத்தை பொண்ணு அவளை காதலிக்கறியானு சண்டை போட்டிருக்கணுமா இல்லையா?​

நீ பாட்டுக்கு அவனை சந்திரா கல்யாணத்துக்கு வரவச்சி என்னை அவனோட கோர்த்துவிட்டிருக்க, அவனும் என்னை ஏழரை நாட்டு சனி மாதிரி பின்னாடியே வந்துட்டான்.‌​

கற்பகம் சித்தி என்னையும் அவனையும் பஸ்பம் ஆக்காம விட்டாங்க.​

இதுல சென்னையில நான் இருக்கற இடம் தெரிந்ததும், டெய்லி வந்து இம்சைப்படுத்திட்டான்.​

இப்ப இங்க அம்மாவிடம் அவனால் எவ்ளோ திட்டு தெரியுமா?" என்றதும் சந்தோஷோ நிதானமாக, "அவன் பின்னாடி சுத்தினான் ஓகே. நீ என்‌ பிரெண்ட் சுந்தர் ஸ்கூல் படிக்கறப்ப உன் பின்னாடி சுத்தினானே, அப்ப அவனை அடிச்சி அசிங்கமா திட்டி அனுப்பின மாதிரி, இந்தரையும் அனுப்பியிருக்கலாம்ல, நீ ஏன் அவன் பூரி கொடுக்கவும் டிபன் பாக்ஸை வாங்கிக்கிட்ட?" என்றதும் ப்ரியா சமாளிக்கும் விதமாக, "எனக்கு பூரின்னா உசுரு. அதனால வாங்கினேன்" என்று பூசி மொழுகினாள்.​

"பச்சை பச்சையா பொய் பேசாத. நீயும் அவனை விரும்பின. எனக்கு தெரியும் உனக்கு அவனை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுடும்னு அதனால தான் கோர்த்துவிட்டேன். என் பிரெண்ட் நீ.​

உன் டேஸ்ட் எப்படின்னு எனக்கு தெரியாது" என்று அத்தனை பேர் எதிரிலும் கூறினான்.​

இத்தனை காலம் இவர்களுக்கா மணமுடித்து பார்க்க ஆசைப்பட்டோமென்று கவிதா, பானுமதி, துரைசிங்கதிற்கு தோன்றாமல் இல்லை.​

‌‌ வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்க, சந்தோஷோ ''இந்தர் வந்துட்டான்." என்று கூற, சந்தோஷை இடித்து வாசல் பக்கம் தலையை எட்டி பார்த்தாள்.‌​

கவிதாவோ கண்டிக்கும் பார்வையை வீசிட முகம் தொங்கப்போட்டு அடக்கவொடுக்கத்தை அணிந்தாள்.​

இந்தர் வந்ததும் ''அட எல்லாரும் இங்க தான் இருக்கிங்களா? எல்லாரும் எப்படியிருக்கிங்க? பானுஆன்ட்டி, துரைஅங்கிள் இவங்க தான் என் அப்பா அம்மா" என்று தாய் தந்தையரை அறிமுகப்படுத்தினான்.‌​

சித்ரா மோகனும் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகி நலம் விசாரித்து, கொண்டார்கள்.​

சந்திரா திருமணத்தில் நடந்த நகைதிருட்டு பழியையோ, சந்தியாவை பற்றியோ பேச்செடுக்காமல் மிகவும் கவனமாய் தவிர்த்து, சந்தோஷ்-விலாசினி, சந்தியா-கண்ணன் திருமணம் எப்பொழுது என்று அதனை குறித்து பேச்சு எழுந்தது.​

இரண்டு திருமணம் ஒன்றாக வைத்திடும் முடிவில் இருப்பதை தெரிவித்தனர். பொண்ணு எடுத்து பொண்ணு கொடுப்பதால் இரு செலவு எதற்கு? ஒரே நேரத்தில் முடித்துவிடலாமென்று கற்பகத்தின் கணவர் ஆறுமுகம் தெரிவித்ததை கூறினார்கள்.​

நல்லதென்று வாழ்த்து கூறினார்கள் இந்தர் பெற்றோர்.​

முன்பு கவிதா வாயே திறக்காமல் இந்தர் பெற்றோரிடம் பேசி அனுப்பியவரோ, இன்று 'யமுனா வளைகாப்பு, குழந்தை பேறுகாலம், குழந்தை பிறந்ததும் பெயர் வைக்கும் விழா என்று முடியும் வரை ப்ரியா திருமணம் தள்ளி வைக்கப்படுமென்று மனம் திறந்து கூற, இந்தரோ முகம் வாடிவிட்டான்.​

‌ எப்படியும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ற வருத்தம்.​

அதற்கேற்றது போல ப்ரியாவும் 'அதுக்குள்ள எங்க கடனையும் நான் சம்பாரிச்சு அடைச்சிடுவேன்.' என்றாள்.​

சித்ரா மோகன் இருவருமே சம்பந்தி கவிதாவிடம் கட்டாயப்படுத்தவில்லை.​

"உங்க விருப்பத்தோடு உங்க பொண்ணை என் பையனுக்கு கட்டிக் கொடுங்க. உங்க சைட்ல உங்க கடமையை முடிச்சிட்டு இந்த கல்யாணத்தை பார்ப்போம்.​

ஆனா அதுவரை சென்னையில மருமக வேலை பார்க்கட்டும். நாங்க அங்க இருப்பதால நல்லபடியா கவனிச்சிப்போம்." என்றதும் இந்தர் சித்ரா, கவிதா இருஅன்னையர்கள் அருகே வந்தான்.​

"அத்தை ஓகே சொல்லுங்க அத்தை." என்று இறைஞ்சவும், மகளை பார்த்து சம்மதமாய் தலையாட்டினார்‌ கவிதா.​

இத்தனை நேரம் தன் திருமணம் குறித்து எந்த பேச்சிற்கும் முடிவு தெரியாமல் திகைத்த ப்ரியாவுக்கு, அன்னையின் இந்த வாக்கும், பேச்சும் மகிழ்ச்சியை தந்தது.​

குடும்பமாய் ஊர்சுற்ற வந்தவர்கள்ஓ அப்படியே மாறி மாறி பேசவும், கவிதா ஒருபக்கம் சமையலை கவனிக்க, பானுமதி உதவுவதற்கு வந்தவர், கவிதாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதார்.​

கவிதாவோ 'விடுங்க அண்ணி. உங்களை ப்ரியாவே மன்னிக்கறப்ப நான் மன்னிக்க மாட்டேனா?' என்று பதில் தந்தார்.​

சித்ரா வரவும் ''நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு நாங்க சமைக்கறோம்" என்று பானுமதி உரைக்க, "அட சம்பந்தி அம்மா, ரொம்ப அமைதியா இருக்காங்க. சபையில வாயை திறக்க மாட்டேங்கறாங்க. சமையல்கட்டுனா பேச வசதி. நாம இங்கேயே மனசு விட்டு பேசிப்போம்" என்று கூறினார்.‌​

அதன் பின் கவிதா, சித்ரா, பானுமதி என்று குடும்பத்தோடு கதை அளந்தனர்.‌​

துரைசிங்கம், மோகன் இருவரும் ஹாலில் ப்ரியா இந்தரை பற்றி பேசினார்கள்.​

அதற்குள் சந்தோஷ் விலாசினியை ப்ரியா வீட்டுக்கு அழைத்திருக்க, அவளும் வந்து ஆஜரானாள்.​

மாடியில் இந்திரஜித்-ப்ரியதர்ஷினி, சந்தோஷ்-விலாசினி என்று ஜோடி பறவையாக கதைத்தனர்.​

இந்தரோ வெளியே போகலாமென்று அழைக்க, ப்ரியா மறுக்க, வலுக்கட்டாயமாக சந்தோஷ் பைக்கில் இந்திரஜித்-ப்ரியா கிளம்ப, விலாசினி ஸ்கூட்டியில் சந்தோஷ்-விலாசினி புறப்பட்டார்கள்.​

குடும்பத்தோடு ப்ரியாவை அனுப்ப யோசித்த கவிதா தற்போது ப்ரியாவை இந்தரோடு அனுப்ப மறுக்க முடியாது தலையாட்டினார்.​

அன்னையின் அனுமதியோடு இந்தரோடு தோள் வளைவில் முகம் புதைத்து சுகமாய் பயணம் செய்தாள்.​

-தொடரும்​

-NNK79​

நீயென் காதலாயிரு​

https://www.narumugainovels.com/threads/11829/

 

NNK-79

Moderator

அத்தியாயம்-23​

After Few Months....​

"அத்தை இந்த சேரி அழகாயிருக்கா? இந்தர் வாங்கி தந்தார்." என்று கேட்டு பானுமதியிடம் நின்றது சாட்சாத் ப்ரியா தான்.​

"உனக்கென்னடி ராஜாத்தி அழகுசிலை" என்று நெட்டி முறித்து கண்ணில் வைத்த கண்மையை கலையாமல் எடுத்து ப்ரியா கன்னத்தில் வைத்தார்.​

பானுமதி விழிகளில் லேசாக கண்ணீர் துளிர்த்தது. அதனை வழியவிடாது, "விலாசினியை ரெடி பண்ணி அழைஞ்சிண்டு வா" என்று சென்றார். இதே போல நிகழ்வுகள் போனமுறை வந்தப்போது இவளை திட்டி அனுப்பியது. இப்பொழுது சிரித்த முகத்தோடு, பழிப்போட்ட தங்களை மன்னித்து, தங்கள் வீட்டு திருமணத்தை மனதார கலந்துக்கொள்ள வந்துவிட்டாளே. இதற்கெல்லாம் பெரிய மனது நிச்சயம் வேண்டும். அது ப்ரியதர்ஷினிக்கு இருந்தது.​

ஆனந்த கண்ணீரை வடித்த பானுமதியை "அத்த, இன்னிக்கு சந்தியாவுக்கும் கல்யாணம். அவளை போயும் பாருங்க" என்று விரட்டினாள்.​

"அடிப்போடி என்னவோ நான் தான் இந்த உலகத்துல பேரழகி அப்படின்னு திமிரா இருக்கா. ஏதாவது பேசப்போனா என்னவோ நான் ஏதோ தப்பு செய்தவளாட்டம் என்னை ஆகாதவளா பார்க்கறா.​

அதனால அவக்கூட சந்திராவை பார்த்துக்க சொல்லிட்டேன்.​

கழுதைக்கு படிப்பு முடியவும் இங்கிருந்து பறக்கறதா நினைப்பு." என்று முனங்கினார்.‌​

ஆனாலும் மகளை காணும் ஆவல் இருந்தது.‌ பட்டுசேலையும், நகை நட்டும் அணிந்து கல்யாண கோலத்தில் நிற்பவளை கண்ணாற நிரப்பிட பக்கத்து அறைக்கு சென்றார் பானுமதி.​

விலாசினியோ "ப்ரியா இந்த மேக்கப் கரெக்டா இருக்கா? சந்தோஷுக்கு பிடிக்குமா? உன்னை மாதிரி கலர் இல்லை. அதனால சம் டைம் இன்ஃபீரியரா ஃபீல் ஆகுது " என்று கவலையாக கண்ணாடியை பார்த்து கேட்டாள்.‌​

அவளை மேலும் கீழும் பார்த்து, "அட கலரு கிலருனு பேசின கடிச்சிடுவேன். இந்த கலரு எல்லாம் பார்த்து காதல் வராது. மனசு மனசை பார்த்து காதல் அரும்பும். உன்னை சந்தோஷ் லவ் பண்ணி மேரேஜ் பண்ணறான்‌. உனக்கேன் இப்படி தோணணும்.​

எப்பவும் நாம அழகு, நம்ம திமிரு, நமக்கு மிஞ்சியும் யாரும் இல்லை. நமக்கு கீழேயும் யாருமில்லை. அப்படின்னு இருக்கணும். சந்தோஷ் வாங்கி தந்த சேலை மாஸா இருக்கு. உனக்கென்னடி குறைச்சல்" என்று பட்டாசு பேச்சோடு விலாசினி கன்னத்தை முத்தமிட்டு ஈரப்படுத்தினாள் ப்ரியதர்ஷினி.​

"அடிப்பாவி கேட்டது குத்தமா? இந்தர் அத்தான் வருவார் அவருக்கு கொடு இந்த கன்ன முத்தத்தை" என்று விலாசினி ப்ரியாவை கடிந்தவளாக வெட்கப்பட வைத்தாள்.​

‌ 'ம்கும் அவன் முதல் முதல்ல கொடுத்ததே லிப்லாக் தான். அதோட இரண்டாவது தடவை அத்தை மாமா எதிர்ல தந்தான்.‌ அதோட நேர்ல தனியா மீட் பண்ணறப்ப எல்லாம் கிஸ்ஸடிக்கறான். அதுக்காகவே அவன் வீட்டுக்கு போகக்கூடாதுனு இருப்பேன். ஆனா அத்தை மாமா சனி, ஞாயிறு அதுவுமா என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடுவாங்க. வாரம் வாரம் அவனிடமிருந்து தப்பிக்க நான் படுற அவஸ்தையிருக்கே.' என்று தனி உலகில் மிதந்தாள்.​

கற்பகமோ ப்ரியா தோளில் இடித்து "இங்க என்னடி பண்ணிட்டு இருக்க? அங்க உன் அக்கா வீட்டுக்காரர் அவங்க மாமனார், மாமியார் வந்திருக்காங்க. அவங்களை முதல்ல கவனி." என்று விரட்டினார்.​

"அச்சச்சோ அந்தம்மா என்னை ஆயிரத்தெட்டு கேள்வி கேட்குமே" என்று யமுனாவின் மாமியாரை நினைத்து முனங்கியபடி மண்டபத்தில் அவர்களை தேடினாள்.‌​

கவிதாவோ தன் மகள் யமுனாவை முதலில் சேரில் அமர கூறினார்.‌​

யமுனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. சுகப்பிரசவம் இல்லையென்பதால் இன்னமும் ஆப்ரேஷன் செய்த உடம்பிற்கு ஓய்வில் இருந்தாள். ஒரு வாரம் முன் தான் பெயர் சூட்டும் விழாவில் ஓய்ந்திருந்தாள்.​

இன்று ஒரே மேடையில் இரண்டு திருமணம் என்பதால் குழந்தையை கையில் தாங்கியபடி வந்தவளுக்கு மண்டபத்தில் பாதிக்கு மேலாக யமுனாவையும் குழந்தையையும் நலம் விசாரித்தார்கள்.​

சந்தடி சாக்கில் 'ப்ரியாவுக்கு சந்தோஷை கல்யாணம் பண்ணலாயா? நாங்களெல்லாம் ப்ரியாவை கட்டிப்பான்னுல நினைச்சோம்' என்று வினா தொடுத்தார்கள்.​

இதே முன்பானால் கவிதா முகம் வாடியிருப்பார். தற்போது இந்திரஜித்தை மருமகனாக பாவித்து பழகிவிட்டதால் சிறு கவலையுமின்றி நடமாடி 'யாருக்கு யாருனு‌ எழுதியிருக்கோ. நம்ம கையில இல்லைங்க' என்று அழகாய் பேசி முடித்தார்.​

"ஈஸ்வர் குட்டி சித்திக்கிட்ட வர்றிங்களா?" என்று ப்ரியா துள்ளி குதித்து, அக்கா மகனை வாங்க முயல, "குழந்தையை நானே வச்சிக்கறேன். நீ கல்யாணத்துக்கு வந்தவங்களை பாரு." என்று கவிதா கூறவும், சேலை முந்தானையை பிடித்து நடந்தாள்.​

யமுனாவின் அத்தை விசாலாட்சி மாமனார் ரத்னவேலு என்று வந்தவர்களை வாய் நிறைய வரவேற்று அமர வைத்தாள். இதே மற்ற நேரமென்றால் ஏதேனும் வறுத்தெடுக்கும் வினா தொடுத்திருப்பார். ஆனால் பெயர் சூட்டும் விழாவில் குறை சொல்லாத அளவிற்கு ப்ரியா 'செய்முறை'யை செய்திருந்தாள்.​

யமுனா மாமனார் ரத்னவேலு கூட, "என்னம்மா செய்முறை எல்லாம் தடபுடலாக இருக்கு" என்று கேட்டதற்கு, "ஆமா மாமா. முன்ன ஐந்து சவரன் நகை போட தாமதப்படுத்தவும், அக்கம்பக்கம் சும்மா சும்மா கேட்க, முகம் வாடிப்போனதா சொன்னா. இந்த முறை அப்படி அக்காவை யாரும் கேட்டுட கூடாது பாருங்க.​

நல்ல உத்தியோகம், நல்ல சம்பளம் அதனால் அக்காவுக்கு குறையில்லாம செய்திட முடிவு செய்தேன். கட்டி கொடுத்த இடத்துல, மத்த இடத்துல எந்த பேச்சும் வாங்க கூடாது இல்லையா?" என்று கேட்டிருந்தாள்.​

அதன் காரணமாக விசாலாட்சி ரத்னவேலு அடக்கி தான் வாசித்தார்கள். அவர் தானே நித்தம் நித்தம் கேட்டது.​

அதனால் நாசூக்காய் இருந்தார்.​

ஏதேனும் சத்தம் போட்டு‌ அது மகனின் காதுக்கு சென்றால் ராஜாவிற்கு பிடிக்காது. ராஜாவிற்கு இதெல்லாம் தெரியாத போது, முடிந்ததை தெரியப்படுத்துவானேன்?! என்று பெரியவர்கள் மீசையில் மண்‌ ஒட்டாத விதமாக நடந்து கொண்டார்கள்.​

‌​

அக்கா கணவர் ராஜாவோ "என்னம்மா ப்ரியா உங்க ஆளு இந்திரஜித் வரலையா?" என்று கேட்டதும் "அது வந்து மாமா அவர் அத்தை மாமாவை அழைச்சிட்டு வந்துட்டேயிருக்கார்." என்று நாணினாள்.​

போன வாரம் ஈஸ்வரன் பெயர் சூட்டும் விழாவில் இந்திரஜித்தை வரவழைத்து ராஜா மாமாவிடம் அறிமுகப்படுத்தினாள்.​

யமுனாவிற்கு வளைகாப்பு வைத்து வீட்டிற்கு அழைத்து வந்த போது ப்ரியா நேரிடையாக காதலித்ததை கூறிவிட்டாள். முன்பு அன்னை கூறி போனில் கேட்டாலும் நேரில் கதை கேட்பது போலாகாகதே.​

யமுனாவே 'அடிப்பாவி காதலிக்கறியா? அம்மா எப்படி சம்மதிச்சாங்க? இதுக்கு தான் எங்க வீட்டுக்கு சந்தோஷ் கூட அவர் பிரெண்ட் வந்தாரா?' என்று கேலி செய்து தங்கை காதலுக்கு அவளும் ஆதரவு தந்தாள்.​

அதனால் ஒரளவு நெருங்கிய சொந்தங்களில் ப்ரியா இந்திரஜித் காதல் தெரிந்துவிட்டது. ஆனால் பெற்றவர்கள் சம்மதத்தோடு மணமுடிக்க காத்திருப்பதாக தகவலும் அளித்திட மற்றவர்களுக்கு 'ஆமா ஆமா இப்ப எல்லாம் லவ் மேரேஜ் சாதாரணம்பா. கட்டிக்க போறவங்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி வாழ்ந்தா போதும்.' என்ற வசனத்தை உதிர்த்து விடுவார்கள்.​

அதனால் ப்ரியா தலை தப்பியது.​

அந்த வீட்டில் விலாசினிக்கு மட்டுமா திருமணம். சந்தியாவிற்கும் திருமணம் என்பதால் அவள் மற்றோரு அறையில் உடலெங்கும் நகையில் அலங்கரித்து இறுமாப்புடன் வீற்றிருந்தாள். அவளுக்கு துணையாக சந்திரா இருந்தாள்.​

சந்தியா‌ போல சந்திரா கிடையாது. அதோடு சந்தியா ப்ரியா மீது பழிப்போட்டதும் தெரிந்தும் தங்கையை திட்டி அந்த கதை நீர்த்து போனது.​

இப்பொழுது தான்‌ கல்லூரியில் இறுதி வருடம் படிக்கும் பெண் சந்தியா. அவளுக்கு என்ன அறிவிருக்கும், ஏதோ தவறு செய்துவிட்டாளென்ற விட்டு பிடித்தார்கள். அதோடு என்றாவது காலம் அவளை மாற்றும் நம்புவோமாக.​

ப்ரியா முன்பு போல எல்லாரிடமும் பேசுவாள். சந்தியாவிடம் மட்டும் குறைத்து கொண்டாள். திருமணத்திற்கு கூட முன்பு போல வரவேற்பில் நிற்கவில்லை‌.​

விலாசினியை பார்க்க வந்ததோடு சரி.​

முன்பு உரிமையாக பன்னீர் தெளித்து வரவேற்று, மொய் வாங்கி, கிப்ட் ஒதுக்கி என்று சந்திரா கூடவே இருந்தாள்.​

இம்முறை திருமணத்திற்கு வந்திருக்கின்றாள் அவ்வளவே. சந்தியா‌ பக்கமெல்லாம் சென்றிடவில்லை.​

அது தான்‌ இந்த இடைப்பட்ட நாட்களில் நடந்ததற்கு ஏற்ப பழகும் விதமென முடிவெடுத்தாள். சந்தோஷிற்கு அவளது முடிவும் அறிந்து வற்புறுத்தவில்லை‌. உன்‌‌ இஷ்டம் என்றான். அவளை கட்டாயப்படுத்தவில்லை.​

மணமகன் அறையில் கண்ணன் சந்தோஷ் இருவருமே இருந்தார்கள்.​

இதுவரை எட்டியிருந்த கண்ணன் மச்சான் முறையாகவும் சந்தோஷிடம் நன்றாகவே பேசினான்.​

இந்திரஜித் வரவும் ப்ரியா துள்ளிக் குதிக்காத குறையாக வாசலுக்கு ஓடினாள்.​

''வாங்கத்தை வாங்க மாமா‌. பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா? லாட்ஜில போய் ரெப்ரஷ் ஆகிட்டு வர்றிங்களா?'' என்று கேட்டாள்.​

"ஆமாடா ப்ரியா. நைட்டே டிரையின்ல வந்துட்டோம். போன வாரம் அக்கா மகனுக்கு கயிறுகட்ட வந்த அலைச்சல், இப்பவும் பிரயாணமா, கொஞ்சம் சளிப்பிடிச்சிடுச்சு" என்று சித்ரா வந்தார்.​

"கசாயம் எதுவும் குடிக்கலையா அத்தை?" என்று கேட்டாள்.​

‌ "நல்லா கேளும்ம. கசாயம் எல்லாம் மத்தவங்களுக்கு தான் செய்து தருவா. அவளுக்குன்னா கசக்கும்னு அவாய்ட் பண்ணி செய்து குடிக்க மாட்டேங்கறா" என்று மோகன் மனைவியை மருமகளிடம் மாட்டி விட நினைத்தார்.‌​

"ஏன் மாமா அத்தை கசாயம் போடலைனா என்ன? நீங்க போட்டு தரலாம்ல? நீங்க கசப்பை தந்தா கூட அத்தை குடிச்சிடுவாங்க‌. உடம்பு முடியலைனா அவங்களுக்கே அவங்களால செய்ய கஷ்டமாயிருக்காதா?​

உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை மாமா." என்று மாமானாரை அதட்டுப்போட்டாள்.‌​

"அட போடக்கூடாதுனு இல்லைம்மா. அடுப்படில நுழைஞ்சி பழக்கமில்லை. இனி பாரு வீட்டுக்கு போனதும் கசாயம் போட்டு தர்றேன். அதோட குடிக்கலைனா மடில போட்டு மூக்கு பிடிச்சி குழந்தைக்கு ஊத்தறாப்ல ஊத்திடறேன்" என்று கூறினார்.​

ப்ரியா, சித்ரா, மோகன் என் மூவரும் சிரிக்க கேபிற்கு பணத்தை கொடுத்துவிட்டு ப்ரியா முடியை இழுத்து சில்மிஷம் செய்த இந்திரஜித்தோ, தன்னை அவள் கண்டும் காணாமல் செல்ல, வளைவில் திரும்பும் நேரம் இடுப்பில் கிள்ளி வைத்தான்.​

"அவுச்" என்று துள்ளி குதித்தவளிடம், சித்ராவோ "நீ கல்யாணத்துக்கு வந்தவங்களை கவனி. நான் சம்பந்தி அம்மாவோட உட்கார்ந்துக்கறோம்." என்று சித்ரா நாகரிகமாய் நகர, "இங்கவொருத்தன் நீ போன் பண்ணலைனு வேற முகம் தூக்கி வச்சியிருக்கான். அதையும் சரிபண்ணுமா. ஆறடிக்கு வளர்ந்தும் குழந்தைக் கணக்கா சுத்தறான்" என்று மோகனும் சென்றார்.​

ப்ரியாவிடம் இந்திரஜித் "என்ன மேடம் கண்டுக்க மாட்டிங்களா?" என்று அவளை விழுங்கும்படி பார்வையில் அனுஅனுவாய் ரசித்தான். இப்படி தானே முன்பும் அவளை ரசித்து விழுங்கினான்.​

‌‌"உங்களையே பார்த்துட்டு இருந்தா கல்யாணத்துக்கு வந்தவங்களை யார் கவனிக்கறதாம்.‌" என்றவள் மெதுவாய் அவனை ஏறிட்டாள்.​

ஆண் அழகன் என்பதெல்லாம் தாண்டி பேரழகனாக நின்றவனை காண தெவிட்டவில்லை.​

கற்பகத்தின் கணவர் ஆறுமாகமோ கலைக்கும் விதமாக "என்னம்மா மாப்பிள்ளையை நிற்க வச்சி பேசற அவங்க அப்பா அம்மாவோட உட்காரவை" என்று கட்டைக்குரலில் கூறவும் நடப்புக்கு வந்து, "சரி சித்தப்பா" என்று‌ தலையாட்டி, "சந்தோஷ் கூட இருங்க. நாம அப்பறம் பேசுவோம்." என்று நழுவ பார்த்தாள்.‌​

"போறேன் போறேன். ஆனா இங்கிருந்து கிளம்பறப்ப நம்ம கல்யாண தேதியை குறிச்சிட்டு தான் போவேன்." என்று கறாராக கூறினான்.​

ப்ரியாவுக்கு முகம் வாடியது. கடன் ஓரளவு முடியும் தருணம் வந்தது. ஆனால் யமுனாவிற்கு சுகப்பிரசவம் எதிர்பார்த்திருக்க, ஆப்ரேஷன் செய்து ஈஸ்வரன் பிறந்தான்.‌​

அதனால் கூடுதலாக செலவு கை மீறியது. அதோடு வளைகாப்பு பெயர் சூட்டு விழாவிற்கு தங்கத்தில் இடுப்பு கொடி, அக்கா மாமா குழந்தைக்கு துணிமணி என வாங்கவும் செலவு பட்ஜெட்டை தாண்டியது.​

எனவே தங்கள் திருமணத்தை தள்ளி வைக்க முயன்றாள். கடனை அடைக்க நேரம் எடுக்க நினைத்தாள்.​

அதன்‌ காரணமாக இந்தருக்கும் ப்ரியாவுக்கும் தற்போது பனிப்போர் நடந்துக் கொண்டிருந்தது.​

அதனால் தான் அவனை காணாதது போல இந்த முகத்திருப்புதல், இந்தரை கண்டு நழுவுவது எல்லாமே‌‌.​

இந்தர் ஒரு முடிவோடு தான் இங்கே வந்தது.​

அதனால் ப்ரியாவை தற்போது அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்தான்.‌​

‌​

சந்தோஷிடம் இந்திரஜித் வந்து சேர நண்பனை கட்டி பிடித்தான்.‌ அங்கே சந்திரா கணவர் மகேஸ்வரனும் இருக்க, நண்பர்களின் கிண்டல் கேலி என்று அதை மீறி பேசிக்கவில்லை.​

கண்ணனுக்கும், இந்திரஜித் ப்ரியாவை மணக்க போவதை அறிந்ததால், ஓரளவு பழகி கொண்டார்கள்.​

"மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்க" என்றதும் மகேஸ்வரன் சந்தோஷை கைபிடிக்க, கண்ணனை சந்தோஷ் கைபிடித்து, பட்டு வேஷ்டியில் வெளிவர, இந்திரஜித்தோ சந்தோஷ் கூடவே சென்றான்.‌​

அவரவர் இருப்பிடத்தில் அமர வைத்து ஜோதிடர் மந்திரம் ஓதவும், மணப்பெண்ணை அழைத்து வர நேரம் நெருங்கியது.​

விலாசினியை ப்ரியதர்ஷினியும், சந்தியாவை அவள் அக்கா சந்திராவும் அழைத்து வந்தார்கள்.​

ப்ரியாவை காணும் போது சந்தியாவுக்கு விளக்கெண்ணெய் குடித்தவளாக முகம் மாறும்.‌ சந்தியாவை வைத்து மற்ற உறவுகளின் அன்பை உதாசினம் செய்ய இயலாதே.​

துரைசிங்கம் மாமா, பானுமதி அத்தை, நண்பனாய் சந்தோஷ், அவனை மணக்கும் விலாசினி, கற்பகம் சித்தி இவர்களுக்காக சந்தியாவின் முகம் காட்டும் குணத்தை மதிக்கவில்லை.‌​

ப்ரியாவை பொறுத்தவரை அவள் சந்தோஷ் விலாசினி திருமணத்தை காண வந்திருக்கின்றாள்.​

இதே சந்தியா‌ திருமணம் தனியாக நடந்திருந்தால் ப்ரியதர்ஷினி அவள் திருமணத்திற்கு வந்திருக்கவே மாட்டாள்.‌​

மேடையில் விலாசினியை விட்டுவிட்டு ப்ரியா யமுனாவை பார்ப்பதாக மேடையிலிருந்து இறங்கிவிட்டாள்.​

இனி இந்தருக்கும் மேடையில் என்ன வேலை?! அவனும் ப்ரியாவை பின் தொடர்ந்து இறங்கிவிட்டான்.​

கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, பூ மழை தூவி திருமணம் முடியவும், இந்திரஜித் ப்ரியாவை தன்னருகே அமர்த்தினான்.​

"எண்ணி ஒரு‌மாசம் கழிச்சு, உனக்கும் எனக்கும் சென்னையில மேரேஜ். அம்மா அப்பாவிடம் தெளிவா சொல்லிட்டேன். செலவு எல்லாம் நீ யோசிக்காத.‌​

‌‌ஏதாவது ஒரு‌செலவு வரும் போகும். நீதான் எல்லாத்துக்கும் ரெடி செய்யணும்னு என்னை தவிக்க விடாத தர்ஷினி.​

இதுவரை காதலை மனசுல வச்சிட்டு உன்னிடம் டீசென்சி மெயின்டெய்ன் பண்றது கஷ்டமாயிருக்கு. எந்த நேரம் எல்லை தாண்டிடுவேனு பயம் வருது." என்று‌ எமோஷனலாக பேச, ப்ரியா இடைப்புகுந்திட முயன்றாள்.​

"ப்ளிஸ் அப்படி ஏதாவது ஆனப்பிறகு உன் கழுத்துல தாலி கட்டினா என்னால தாங்க முடியாது. எனக்கு நீ வேணும். சரியான முறையில வேணும். ஆல்ரெடி உன்னை‌ ஹர்ட்‌ பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி" என்றான்.​

‌‌ அவன் ஏன் இப்படி பேசுகின்றானென்று தர்ஷினி அறிந்திருக்கின்றாளே.‌​

‌‌ஒரு வாரம் முன்‌ சென்னையில் அவன் வீட்டிற்கு ப்ரியா சென்றிருக்க, மோகனும் சித்ராவும் சந்தோஷ் திருமணத்திற்கு பரிசு வாங்க சென்றிருந்தார்கள்.​

தனிமையில் முத்தங்களை அள்ளி வழங்கும் இந்திரஜித்தை அவள் என்றும் தடுத்ததில்லை.​

அன்று இந்திரஜித் கைகள் எல்லை மீற ஆரம்பித்திருக்க, ப்ரியதர்ஷினி நடக்கும் அசம்பாவிதம் புத்திக்கு உரைக்க விழித்துட்டாள்.​

அவனை தள்ள, இந்தர் தேன் குடித்த மோகத்தில் திளைக்க, தர்ஷினி அவன் கன்னத்தில் அறைந்து நிதானத்திற்கு கொண்டு வந்தாள். அதன் பின் பேசாமல் வுமன்ஸ் ஹாஸ்டலுக்கு திரும்பிவிட்டாள்.​

அதன் பின்‌ இந்திரஜித் சமாதானம் செய்து இயலாது பனிப்போரோக இருந்தது, இரண்டு நாள் முன் ப்ரியா தர்ஷினி திருச்சி வந்து சேர, இந்திரஜித் தங்கள் திருமணத்தை விரைவில் முடிக்கும் எண்ணத்தோடு அவன் தாய் தந்தையரான சித்ரா-மோகனிடம் 'திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டான்.‌​

இனி‌ கவிதா அத்தையிடம் பேசி முடிவெடுக்க வேண்டும். அதற்குள்‌ ப்ரியதர்ஷனியிடம் ஒருவார்த்தை‌ கூறிவிட்டு, அன்று‌ நடந்ததிற்கு மன்னிப்பு வேண்டி நின்றான்.‌​

‌‌​

-தொடரும்​

-NNK79​

 

NNK-79

Moderator

அத்தியாயம்-24​

இந்திரஜித் ப்ரியாவிடம் பேசிவிட்டு எழ, அவளோ "ப்ளீஸ் இந்தர் புரிஞ்சுக்கோ" என்று கூற, "எப்ப பேசினாலும் விதண்டாவாதமா டி. சரின்னு ஒரு வார்த்தை சொல்ல என்னவாம்?" என்றான்.​

கவிதா அத்தையிடம் இந்திரஜித் அமர்ந்து பேச நினைக்கும் நேரம், அவர்களாகவே இந்தரை தேடி வந்தார்கள்.​

"வாங்க தம்பி, ஆபிஸ்கு லீவு போட்டுட்டு வந்ததா அண்ணி சொன்னாங்க." என்று கவிதா பேசவும், "ஆமா அத்தை. சந்தோஷ் என்னோட பெஸ்ட் பிரெண்ட் அவன் கல்யாணமாச்சே. அதோட தர்ஷினியை பார்க்காம இருக்க முடியலை‌. ஓடி வந்தாச்சு" என்றான். ஒளிவுமறைவின்றி.​

'கேட்டா கேட்டதுக்கு பதில் சொல்லணும். இவன் ஏன்‌ தான் முடிக்கிறப்ப என்னை கோர்த்து பேசறானோ' என்று ப்ரியா முறைத்தாள்.​

கவிதா மகளை பார்த்து சன்னமாய் புன்னகைத்து, "அப்பறம் தம்பி, கொஞ்ச நாள் நேரம் கேட்டிருந்திங்க. நானும் யமுனா பிரசவம் குழந்தைக்கு பெயர் வைக்கிறதுன்னு முடியவும் பேசறது இருந்தேன்." என்று ஆரம்பிக்கவும், ப்ரியதர்ஷினி போல திருமணத்தை தள்ளி வைக்க கேட்கின்றாறோ என்று வாடினான்.​

ப்ரியதர்ஷினியை அதட்டி உருட்டி பேசிடலாம். தாய் தந்தையிடம் இறுதியாக தன்‌முடிவை உரைத்தாலும் அவர்கள் தலையிடமாட்டார்கள். ஆனால் கவிதா அத்தையிடம் மறுக்க முடியாதே என எண்ணினான்.​

கவிதாவோ "சொன்ன மாதிரி கல்யாணத்தை சென்னையில வச்சிடலாம் தம்பி‌. நீங்க நாள் கிழமை என்னனு சொன்னா, என்னால முடிஞ்சதை என் மகளுக்கு செய்ய முடியும்" என்று பேசவும், "ம்மா... சும்மாயிருக்கியா? யமுனாவுக்கு ஆப்ரேஷன் செலவு, ஈஸ்வரனுக்கு பெயர் சூட்டு விழானு செலவு ஏறியிருக்கு. அதெல்லாம் முடியட்டும்‌ பிறகு கல்யாணத்தை பார்க்கலாம்" என்று குரல் உயர்த்தினாள்.‌​

கவிதாவோ மகளின் வார்த்தையை செவிமடுக்காமல், "அவ பேசறதை கேட்க முடியாது தம்பி. செலவு ஒன்னு மாத்தி ஒன்னு வந்துட்டு தான் இருக்கும்‌. அதுக்காக வயசு பிள்ளையை வீட்லயே வச்சிட்டு இருக்க முடியுமா?​

கல்யாணம் ஒரு மாசத்துல, உங்களுக்கு தோதுவான மண்டபத்துல, தோதுவான ஏரியாவுல வையுங்க. என்னால் முடிஞ்சதை செய்துடறேன்.​

ஏற்கனவே வீட்டுக்கு பின்னாடி கொஞ்சம் இடமிருக்கு. கிணறு இருப்பதால, இத்தனை நாளா செடி கொடி மரம்னு செழிப்பா இருக்கும். அதை வித்துட்டு அந்த பணத்துல ப்ரியா கல்யாணத்துக்கு செலவுக்கு சரியாக இருக்கும். ஏதோ எங்களாலல முடிஞ்சது." என்று பேசினார்.‌​

‌ "அய்யோ அத்தை எதையும் விற்க வேண்டாம்" என்று இந்திரஜித் மறுக்கும் நேரம், "இல்லைங்க தம்பி... பெரியவளுக்கு இருபது சவரன் பேசினோம். பேசியபடி நகைப்போட்டு கட்டி கொடுத்தோம்.​

பெரிய மாப்பிள்ளை மாத வருமானம் உங்களை விட குறைச்சல் தான். ஆனாலும் இருபது பவுன் போட்டு முடிச்சது.​

நீங்க ஐடீயில் வேலை பார்க்கறவரு. எப்படியும் ஐம்பது அறுபது நகை போட்டு, ஏன் அதை விட கூடுதலாக கூட பெரிய இடமா சென்னையில பொண்ணு கிடைக்கும்.​

எங்க ப்ரியாவை பிடிச்சிருக்குன்னு நீங்க நகை பணத்தை பார்க்காம இருக்கலாம். ஏதோ இப்ப பதினைந்து அவளுக்குன்னு வாங்கியது இருக்கு. என்னோட இந்த தோட்டத்து வீட்டு பக்கம் வித்து வர்றதுல கல்யாண செலவு போக மீதி அப்படியே ப்ரியாவுக்கு தான். இரண்டு பொண்ணுக்கும் ஒரே மாதிரி முடிச்சி, கடன் எல்லாம் அடைஞ்சிடுவேன்‌." என்று பேச பேச "அதெல்லாம் வேண்டாம் அத்தை. எனக்கு ப்ரியா மட்டும் போதும்" என்றவனின்‌ கூற்றை கவிதா செவிமடுக்கவில்லை.​

"ஊரும் உலகமும் என் மகளை எதுவும் சொல்லிடக்கூடாது. இதுக்கு சம்மதம்னா கல்யாணம் ஒரு‌ மாசத்துல முடிங்க தம்பி. பக்கத்து வீட்டுல இருப்பவர்களே அந்த இடத்தை வாங்கிக்கறதா சொல்லிருக்காங்க. நான் அவங்களிடம் அதெல்லாம் பேசிட்டேன்‌. எத்தனை நாளைக்கு தான் ப்ரியா வுமன்ஸ் ஹாஸ்டல்ல இருந்து உங்க வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருப்பா. அவளும் மொத்தமா உங்களோடவே இருக்கட்டும்." என்று கவிதா முடித்தார்.​

இந்திரஜித்தோ ப்ரியாதர்ஷினியை பார்த்து, கவிதா அத்தையின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, "சரிங்க அத்தை. நீங்க சொல்லறப்படி பண்ணிடலாம்" என்று கூறினான்.​

ப்ரியதர்ஷினியோ "எல்லாத்தையும் கொடுத்துட்டு மத்த செலவுக்கு என்ன பண்ணுவிங்க. எல்லாம் உன்னாலடா. நீ என் லைப்ல வந்திருக்கவே கூடாது" என்று இந்தரை திட்டி அழுதாள்‌‌.​

ஏதோ திருமண விவகாரம் பேசும் முன்னரே இந்திரஜித்-ப்ரியா தனியாக பேச என்று, ஓரமாய் நகர்ந்த இடமென்பதாலும், கல்யாணத்திற்கு வந்தவர்களில் பாதிப்பேர் பந்திக்கு சென்றதாலும், அருகே குட்டி குட்டி பிள்ளைகள் மட்டுமே சாக்லேட் திண்று பூவை பிய்த்து விளையாடியபடி இருந்தார்கள்.​

"ப்ரியா என்ன இது. மட்டு மரியாதை இல்லாம 'டா' போட்டு பேசற வழக்கம்? யார் சொல்லி கொடுத்தா? மன்னிப்பு கேளு.​

இன்னிக்கு இல்லைனாலும் என்னைக்காவது எல்லாம் வித்து தான் ஆகணும். எதையும் விற்காம எதுவும் செய்ய முடியாது.​

இதெல்லாம் முன்னவே யோசித்தது தான். நீ சந்தோஷை கல்யாணம் செய்வ, உங்க அக்காவுக்கு கிணற்று பக்கம் இருந்த இடத்தை வித்து பைசல் பண்ணிட்டு உனக்கு வீடு எழுதி வைக்கணும் இருந்தேன்‌.​

துரைசிங்கம் அண்ணா உன் மேல இருந்த கோபத்திலும், ஆறுமுகம் அத்தானுக்கு எங்க வீட்ல யமுனா கல்யாணம் முடிந்தது. இப்ப சந்திரா கல்யாணம் முடிந்தது. அதனால அவங்க வீட்ல விலாசினியை கல்யாணம் நடத்த ஆசைப்பட்டாங்க.​

பொண்ணு எடுத்து பொண்ணு‌ கொடுக்க முடிவு செய்யவும் பானுமதி அண்ணி உடனே கல்யாணமா, இப்ப தானே சந்திராவுக்கு முடிச்சதுனு யோசித்தாங்க. ஆனா அவங்க வீட்ல ஒருத்தருக்கு ஒருத்தர் நகை நட்டு பத்தி பொறுமையா பார்த்துக்கலாம், மண்டபம் பிடிச்சி ஒன்னா முடிப்போம்னு இந்த குறிப்பிட்ட மாசத்துல முடிச்சாங்க.​

அவங்களுக்கு இரண்டு பக்கமும் ஆம்பள பசங்க இருக்காங்க. இங்க அப்படியில்லை. ஆனாலும் ப்ரியாவை நான் ஆம்பள பிள்ளைக்கு நிகரா தான் வளர்த்து விட்டேன்.‌​

இப்ப யமுனாவுக்கு வளைகாப்பு பிரசவ செலவு, அவ பிள்ளைக்கு பெயர் வைக்கிற விழா, இதுல ஏற்கனவே பேலன்ஸ் ஐந்து சவரன். எல்லாம் இவ சம்பாரிச்சு காசு. யமுனா தான் தங்கச்சிக்கு இனியாவது நல்லது பண்ணி கல்யாணம் செய்து கொடுங்கம்மா‌. இன்னும் என்னையே பார்ப்பிங்களானு கேட்டது‌.​

அது மட்டுமில்லை சந்தோஷ் வேற என்னிடம் சொல்லிட்டான். ப்ரியா இனி வேலைக்கு போனாலும் அந்த பணத்துல கொஞ்சம் எனக்கு தரணும்னு உங்களிடம் சொல்ல நீங்களும் உன்‌ இஷ்டம்னு சொன்னிங்களாம்." என்றதும் அது வந்து அத்தை... நான் என்‌ அப்பா அம்மாவுக்கு கொடுப்பது போல உங்களுக்கு அவ கொடுப்பா.‌ இதுல தப்பில்லை. அவ உழைப்பு அவ அம்மாவுக்கு கொடுக்கறதுல பிற்காலத்துல கணவனாக நான் தடுக்கறதுல நியாயம் இல்லையே‌." என்று இந்தர் மொழிந்தான்.​

மகளை பார்த்து கவிதாவோ, "இப்படி பேசற மாப்பிள்ளையை, இன்னமும் அவரை கட்டிக்காம ஏன் கெஞ்ச விடற? பொம்பளை பிள்ளைங்களை பெத்தா பெத்தவங்க கூடவே வச்சிக்க முடியாது‌. ஏன் ஆம்பளை பிள்ளைங்களே இப்ப எல்லாம் தனிக்குடித்தனம் தான் போறாங்க. பெரும்பாலும் அப்பா அம்மா தனியா தான் இருக்காங்க. என் வாழ்க்கையை பத்தி யோசிக்காத. நான் தனியா இருந்தாலும் என்னை பார்த்துப்பேன்.​

திருச்சி விட்டு நீ சென்னைக்கு போனப்பவும் நான் தனியா தான் இருந்தேன். அப்ப எல்லாம் யோசிச்சியா?" என்று கூறவும் ப்ரியதர்ஷினி அன்னையை கண்டு மூக்குறிந்தாள்.​

"இப்பவும் அப்படியே நினைச்சிக்கோ.​

மாப்பிள்ளை நல்லவரா இருக்கார். காதலிச்ச பொண்ணை தாலி கட்டி கூட வச்சிக்க ஆசைப்படறவரை முறைக்கற, டா போட்டு பேசற, எல்லா மாத்திக்கோ. இன்னும் ஒரு‌மாசத்துல உங்களுக்கு கல்யாணம்.​

இவ்ளோ நேரமா சம்பந்தியிடம் நாளெல்லாம் பேசி முடிச்சாச்சு." என்றதும் ப்ரியதர்ஷினி அன்னையை ஏறிட்டாள்.​

இந்திரஜித் தன் மாமியார் பேசுவதை கேட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தான். அவர்கள் மனதிற்கு எப்படி ப்ரியதர்ஷினியை தன்னிடம் ஒப்படைக்க விருப்பமோ அப்படியே செய்யட்டுமென்று இருந்தான். அதனால் அவர்கள் பேசுவதில் உள்ளே நுழையவில்லை. இந்த சினிமா பாணியில் எனக்கு உங்க பொண்ணு‌ மட்டும் வேண்டும் என்றோ, வீட்டை விற்காதீர்கள் என்றோ, எதுவும் மறுக்கவில்லை.​

அவனுக்கு கவிதா அத்தையை பற்றி புரிந்ததால் அவர்கள் மனதிருப்திக்கு செய்வதை செய்யட்டும் என்று நின்றான்.​

இதற்கு மேல் மறுத்து விட்டால், கவிதாவிற்கு வெறும் கையோடு மகளை அனுப்பியதாக அவர்கள் மனம் எண்ணும். எதற்கு அவர்கள் ஆசை கெடுப்பானேன்.​

மாப்பிள்ளை ஆனப்பின் மற்றதை பார்ப்போமென இருந்து கொண்டான்.​

"சம்பந்தி.... நேரமாகுது சின்ன சம்பந்தி(கற்பகம்) சாப்பிட போங்கன்னு இரண்டு மூன்று முறை சொல்லிட்டாங்க. இன்னும் தாமதிச்சா தட்டுல இலை போட்டு இங்கயே கொண்டு வந்துடுவாங்க" என்றதும், "பேசிட்டே இருந்துட்டேன் அண்ணி. வாங்க சாப்பிடலாம்" என்று பந்தி பரிமாறும் இடத்திற்கு நடந்தார்கள்.‌​

படிக்கட்டில் மெதுவாக செல்ல, இந்திரஜித் ப்ரியதர்ஷினியை பார்த்து ஒவ்வொரு படியில் அடியெடுத்து வைத்தான்.‌‌​

‌​

அவளது கண்மை கலைந்து இருக்க, தன் கைக்குட்டையால் எடுத்து அவளது கருமையை களைந்தான்.​

ப்ரியதர்ஷினியோ அவனது செய்கையில் பொசுக்கென்று அருவியை பொழிய, "அழுதா கிஸ் பண்ணிடுவேன்" என்று சத்தமின்றி உரைத்தான் இந்தர்.​

ப்ரியதர்ஷினியோ சுற்றி முற்றி பார்த்து, அவன் நெருங்கி நிற்க தள்ளிவிட்டு, 'ஆளை பாரு ஆளை' என்று முனங்கி ஓடினாள்.​

லேசான குறும்பு சிரிப்போடு அவள் பக்கத்தில் அமர்ந்து, 'அந்த பயமிருக்கட்டும்' என்று இலையில் பிரட் அல்வாவை விழுங்கினான்.​

யமுனா வீட்டில் அவளது மாமியார் மாமனார், கணவரென உணவு உண்டு முடித்து, கையில் ஈஸ்வரனை ஏந்தி வந்தார்கள். அவர்கள் கீழே செல்ஆக கூறி நடந்தார்கள்.​

அதன் பின் உணவுண்ணும் போது 'எனக்கு இந்த உணவு பிடிக்காது என்று இந்தர் அவள் இலைக்கும், அவளுக்கு பிடிக்காத உணவுகள் இந்தரின் இலைக்கும் மாறியது.​

சித்ரா-மோகனை போல கவிதாவும் இவர்களின் சேட்டை பிடித்த காதலை கண்டும் காணாதது போல பார்த்து மகிழ்ந்தார்.​

கீழே இறங்கும் போது "ஒரு கிஸ், ஒரு ஹக் கிடைக்கும்னு ஆசையா வந்தேன் டி. இப்படி கல்நெஞ்சக்காரியா இருக்கியே" என்று பெற்றவர்களை முன்னே அனுப்பிவிட்டு அவள் செவிமடலருகே கிசுகிசுத்தான்.‌​

"அதான் ஆசைப்பட்டபடி ஒரு மாசத்துல கல்யாணத்தை பண்ணிக்க போறியே. இன்னும் ஏன்டா நல்லவனா நடிக்கிற. எங்கம்மா வாயால கட்டி கொடுக்க வச்சிட்ட, உன் காட்டுல மழை" என்று நடந்தாள்.​

பீடாவை மென்றபடி வந்த ப்ரியாவை, இந்தர் நின்று நிதானமாக பார்வையிட்டு, அவளது சேலையணிந்த உடலில் வெளிச்சமிட்டு காட்டிய இடையில் நன்றாக கிள்ளி திருகினான்.​

"ஆஹ்.. அவுச் அம்மா." என்று அலறிய அடுத்த கணம் படிகளில் திபுதிபுவென இறங்கியிருந்தான் இந்திரஜித்.​

சிசிடிவி இல்லையென்றதும் தன் இடையை தேய்த்தபடி அவனை கொலைவெறியில் திட்டிக்கொண்டு வந்தாள் ப்ரியதர்ஷினி.​

கீழே யமுனாவின் உடல்நிலையாலும், அவளது அத்தை மாமாவிற்கும் மொய் கொடுத்து கிளம்புவதில் இருக்க, இந்திரஜித்திடம் ராஜா குடும்பத்தினர் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அதனால் இந்திரஜித்-ப்ரியா குடும்பமும் புகைப்படம் எடுத்து தாங்களும் செல்வதாக சந்தோஷிடம் தெரிவித்தார்கள். சந்தோஷம் இந்திரஜித், ப்ரியாவை கட்டாயப்படுத்தவில்லை.​

அங்கே மிகவும் நல்லவனாக வழியனுப்பும் செயலை செவ்வென செய்தவனை கண்டு முகத்தில் புரண்ட சிகையை செவிமடலருகே ஒதுக்கி, வந்து அக்கா குடும்பத்தை வழியனுப்பி, அவர்களும் கிளம்புவதாக கற்பகம்-ஆறுமுகத்திடம் நின்றார்கள்.​

பானுமதி-துரைசிங்கமோ "சாப்பிட்டாச்சா?" என்று திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை போல கேட்கும் நிலைக்கு ஆளாகியதில் லேசான வருத்தம்.​

"கிளம்பறோம் அத்தை" என்றாள் ப்ரியா.​

'இருந்து போகலாமே' என்று கூறுவதற்கு அருகதையின்றி நின்றார்கள் துரைசிங்கம் பானுமதி.​

கடந்த முறை ப்ரியா அழுதவாறு திருமண மண்டபத்திலிருந்து அனுப்பியதற்கு இந்த முறை இருக்க கூறவும் முடியாத வருத்தத்தில் இருந்தார்.​

உறவுகளில் உடைந்ததாலும்‌ ஒட்டுதல் உண்டாகும். ஆனால் முன்பு போல விரிசலோடு பிம்பத்தை காட்டும் கண்ணாடியாக. அதனால் மனதில் வலியை மறைத்து கொண்டு‌, ரிட்டர்ன் கிப்ட் தாம்பூலம் பை இரண்டும் பெற்று கொண்டு கிளம்பினார்கள்.‌​

"சந்தோஷிடம் சொன்னிங்களா?" என்று‌ ப்ரியா அதட்ட, அதெல்லாம் மேடையிலயே சொல்லிட்டேன்." என்று இந்திரஜித் ப்ரியா கையை பிடித்து நடந்தான்.​

-தொடரும்.​

-NNK79​

 
Last edited:

NNK-79

Moderator

அத்தியாயம்-25 (முடிவுற்றது)​


After Few Months...​


இந்திரஜித் ப்ரியதர்ஷினி திருமணம் என்று சந்தோஷ் திருச்சியிலிருந்து வேன் ஏற்பாடு செய்திருந்தான்.‌​

திருமணத்திற்கு கற்பகம் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைக்க, அங்கேயிருந்த சந்தியாவிடமும் பொதுவாய் "கல்யாணத்துக்கு வந்திடும்மா" என்று கூறினார் கவிதா.​

'அதெல்லாம் மாப்பிள்ளை சந்தோஷ் வண்டி அரேஜ் பண்ணிருக்கார் வந்துடுவோம்' என்று ஆறுமுகம் வாக்கெல்லாம் தந்தார். திருமணத்திற்கு கிளம்பும் நேரம் கண்ணனிடம் 'நம்ம நாளைக்கு போகலாம். இந்த கும்பல்ல போகணுமா?" என்று கொஞ்சினாள்.​

கண்ணனோ "இன்னிக்கு கும்பல்னு சொல்லி தப்பிப்ப, நாளைக்கு வயிற்று வலினு சொல்லி கல்யாணத்துக்கு போகாம இருப்ப. அப்படிதானே சந்தியா?" என்றதும் சந்தியா திடுக்கிட்டாள்.‌​

சந்தியா அவளது தோழியிடம் ப்ரியா கல்யாணத்துக்கு எல்லாம் நான் போக மாட்டேன்.‌' என்று கூறியதை கண்ணன் கேட்டிருந்தான்.​

‌ "என் தங்கச்சி‌ விலாசினியிடம் 'என்ன சந்தோஷ் மச்சான் முன்ன எல்லாம் சந்தியாவிடம் பாசமா பேசுவார். இப்ப எல்லாம் அவளிடம் பேச மாட்டேங்கிறார்னு' கேட்டேன் விலாசினி நடந்ததை என்னிடம் சொல்லிட்டா.​

ப்ரியா மேல பழிசுமத்தி நீ பண்ணின தில்லாலங்கடி எல்லாம் தெரிந்துடுச்சு." என்றான்.‌ சந்தியாவோ பயந்து கையை பிசைந்து நின்றாள்.​

வீட்டில் தான் செய்த காரியத்தால் அண்ணன் அடியோடு முகம் திருப்பி விட்டான். அம்மா அப்பா ஓரளவு தன்னை மன்னித்து ஏற்று பழகுகின்றார்கள். காரணம் அவர்களும் தவறு செய்தனர் அதனை ப்ரியா மன்னித்துவிட்டாளாம். 'மன்னிப்பது தவறல்ல' என்று அதற்கும் ப்ரியாவை தான் முன்னிருத்தினார்கள்.​

இன்று தான் விரும்பிய கண்ணன் வெறுத்தால்? சந்தியா பயந்தாள்.​

அவனோ 'உனக்கு அவளை இன்னமும் பிடிக்கலைனா கல்யாணத்துக்கு நீ வரவேண்டாம்.​

நான் உன்னை கோச்சிக்க மாட்டேன்.‌ தலைவலியும் வயிற்று வலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியும். நீ என்ன உளைச்சலில் இருந்தியோ.‌ ஆனா நீ எல்லாத்தையும் மறந்து வந்தா, இலையுதிர் காலத்துல இலைகள் சிதைந்து, திரும்ப துளிர்க்கிற மாதிரி உறவுகளும் நல்லபடியா அமையும். 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' இது ப்ரியாவுக்கு தெரியும். நீயும் தெரிந்துக்கோ தப்பில்லை‌.​

இப்பவும் ப்ரியாவை வச்சி முன்னுதாரணமாக பேசினாலும். எனக்கு என் சந்தியா மனசு தான் முக்கியம். நீ எப்பவும் ஸ்பெஷல்" என்று கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டு பேசி அகன்றான். அதன் பிறகும் மாறாமல் இருக்க சந்தியா என்ன படையப்பா நீலாம்பரியா?, ப்ரியதர்ஷினி திருமணத்திற்கு கண்ணனோடு கை கோர்த்து வந்துவிட்டாள்​

ப்ரியா அவளது அக்கா யமுனா எல்லாம் ஏற்கனவே மண்டப ஹாலிற்கு பக்கத்தில் ரூம் புக் செய்து இருந்துக் கொண்டனர்.​

விசாலாட்சி மண்டப வாடகை எவ்வளவு? இந்த ரூம் வாடகை என்ன என்று குடைந்தெடுக்கவில்லை..‌​

‌‌"அதெல்லாம் வரவு செலவு சின்ன மாப்பிள்ளை சொல்லலை சம்பந்தி. உங்க குடும்பம் நல்லபடியா வந்து கலந்துக்கணும்னு பார்த்து பார்த்து செய்யறார்.‌" என்றார் கவிதா.‌​

தங்களுக்கு குறைவாக செய்து மற்றவருக்கு அதிகம் என்றால் மல்லுக்கு நின்றிருப்பார். இன்றோ ப்ரியா அனைத்தும் நல்லவிதமாக செய்முறை செய்தப்பின் எதுவும் கூறமுடியுமா? சின்ன பொண்ணு என்னவோ அதிர்ஷ்டம் செய்திருக்கா. உங்களுக்கு செலவு இல்லாம பண்ணிட்டா" என்று ஆரம்பித்தார்.​

"அப்படியெல்லாம் இல்லைங்க சம்பந்தி‌. என் இரண்டு பொண்ணுமே கொடுத்து வச்சவங்க தான்.‌ பெரியவளுக்கு என்ன செய்தேனோ அதை தான்‌ சின்னவளுக்கும் செய்யறேன்." என்று பதில் தந்தார்.‌​

‌‌ விசாலாட்சி ரத்னவேலு சென்னையில் திருமணம் என்றதற்கு 'பொண்ணு வீடு இங்க வச்சிட்டு அங்க கல்யாணம் செய்யறது நம்ம முறையில்லையே'. என்று முதலில் கேட்டதற்கு, 'அதெல்லாம் யமுனா திருமணத்தை எனக்கு வேலை வைக்காம உங்க இஷ்டப்படி, நல்லபடியா செய்தது போல இப்ப இந்த சம்பந்தியும் எனக்கு சின்ன கஷ்டமும் கொடுக்கலை. எனக்கு கிடைத்த இரண்டு சம்பந்திங்களும் ரொம்ப பெருந்தன்மையானவர்கள்" என்று கவிதா கூறவும் விசாலாட்சி ரத்னவேலு பெருந்தன்மையை பாதுகாத்துக்க முடிவு செய்திருக்க வேண்டும்.​

ரிஷப்ஷன் திருமணம் என்று இந்திரஜித் தன்னவளை கண்ணுக்குள் தாங்கினான் என்று கூறலாம்.​

இதோ அவள் கண்ணில் குங்குமம் பட்டு கலங்க, தன் கைக்குட்டையால் மெல்லமாய் துடைத்து எடுத்தான். எப்பவும் போல செவிமடலருகே, "முதல் தடவை உன்னை நேர்ல பார்த்தது கல்யாண மண்டபத்துல, அப்ப நம்ம திருமண நாள் எப்ப வரும் ஏங்கினேன். ஏங்கின நல்ல நாள் இப்ப வந்துடுச்சு.​

ஐ ஆம் சோ ஹாப்பி தர்ஷினி.​

என்ன ஒரு குறை. இந்த கிறிஸ்டியன் மேரேஜ்ல, சர்ச்ல மேரேஜ் முடியவும் கப்பீள்ஸ் ஒரு‌ கிஸ் கொடுத்துப்பாங்க. அந்த மாதிரி நம்ம வழக்கத்தில இல்லை.​

நாம வேண்ணா புதுசா‌ உருவாக்கலாமா? கிஸ் பண்ணவா?" என்றவன் பார்வை ப்ரியதர்ஷினி உதட்டில் நிலை பெறவும், சடுதியில் அவனிடமிருந்து தள்ளி பின்‌நகர்ந்தாள்.​

"என்னாச்சு என்னாச்சு?" என்று மற்றவரின் குரலில் "கண்ணுல கர்ச்சீப் படவும் பின்னாடி வந்துட்டன்" என்று சமாளித்தாள்.​

இந்திரஜித்தோ குறும்பாய் புன்னகையோடு 'நல்லா சமாளிக்கற' என்றான் பார்வையும் தலையாட்டலுமாய்.​

'இவனை... தனியா கவனிச்சுக்கறேன்.' என்றவள், 'இப்பவே இப்படி இருக்கானே, இன்னிக்கு நைட் என்னன்ன ரகளையை இழுப்பானோ.' என்றவளின் எண்ண ஊர்வலத்தில், வெட்கமும் குடிக்கொண்டது.​

மோகனோ 'அம்மா ப்ரியா அன்வர் பாய் வந்திருக்கார்.' என்று சுட்டிக்காட்ட, "வாங்க சார்" என்று மனதார வரவேற்றாள்.​

"அல்லா உன் மனசுக்கு பிடிச்ச‌ வாழ்க்கையை கொடுத்திருக்கார். நீ நல்லா வாழ்வமா. மாஷா அல்லா" என்று வாழ்த்தினார்.‌​

கவிதாவிற்கு மகளின் வாழ்வில் நல்ல மனிதர்களை பெற்றிருப்பதை எண்ணி பூரித்தார்.​

அதன் பின் வேலை பார்த்த இடத்திலிருந்து மதுவும் வந்திருந்தாள். இந்த பக்கம் சுதா வந்திருந்தாள். சொந்த பந்தங்களை கண்டு ஒதுங்காமல் சித்ராவோடு மலர்ந்த முகமாய் வந்தவரை வரவேற்று உபசரித்தார்.​

திருமணம் என்பது பணத்தை செலவழித்து, சொந்த பந்தகளை திரட்டி, கலாச்சாரம் பண்பாட்டின் முறையை பாதுகாத்து அவரவர் சடங்கை மனதார ஏற்று சந்தோஷமாய் சில சங்கடங்களும் கலந்து ஏற்பட்டாலும் நிறைவில் அந்த மஞ்சள் அரிசி, பூக்கள் தூவலும் ஆசீர்வாதமாக பெற்று, பொன் தாலி அணிவித்து இன்னாருக்கு இன்னாரென கடவுள் போட்ட முடிச்சில் கைகளை பிணைத்து, அந்த வாழ்வில் இன்பம், துன்பம், சண்டை சச்சரவு, ஈகோவை விட்டுக்கொடுத்தல், இறுதியில் 'உனக்கென நான் எனக்கென நீ' என்று வாழ்வதெல்லாம் வரம்.​

எல்லோருக்கும் வரத்தை தக்க வைத்து கொள்வதில் தான்‌ சிக்கல். ஏனெனில் காதல் திருமணமோ, பெற்றவர் பார்த்து நடத்தி முடிக்கும் திருமணமோ இரண்டுமே, நேசத்தோடு ஆரம்பிக்கும். சில நாளில் நேசம் உயிரற்று கடமையாக மாறிவிடும். ஆனால் நேசம் கலந்த காதல் இறுதிவரை உறுதியாக இருந்தால், வரம் கொண்ட வாழ்வு வானவில்லாய் அமையும்.​

நிச்சயம் இந்த காதல் தம்பதியர்கள், 'நீயென் காதலாயிரு' என்ற கொள்கையில் விலக மாட்டார்கள். அதன் காரணமாக இந்திரஜித்-ப்ரியதர்ஷினி வாழ்வு இன்று போல் என்றும் நேசம் கொண்டவராக, உதாரண தம்பதியராக இருப்பார்கள்.‌​

💝சுபம்💝

‌‌ -NNK79​

-நீயென் காதலாயிரு​

கதைக்களுகாகான கருத்துக்களை காண ஆவலாக இருக்கின்றேன். வாசகர்களே உங்க ரிவ்யுவை எதிர்பார்​

த்து காத்திருக்கும் இந்திரஜித்-ப்ரியதர்ஷினி.​

‌பை...பை‌.....😘😘

 
Last edited:
Status
Not open for further replies.
Top