எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்த்தவி-03 கதைத்திரி

NNK 67

Moderator
பார்த்தவி-03

இங்கே காலையிலேயே ராகவின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராகவை எழுப்பி, வெளியே கிளம்பச்சொல்லி அவசரப்படுத்திய நந்தனோ, தன் நண்பனைக் கூட்டிகொண்டு வெளியே எங்கோ செல்வதற்கு தயாராக இருக்க, அதனைக்கண்ட ராகவோ, “டேய் மச்சி..? எதுக்குடா இவ்வளவு அவசரமாக கூப்பிடுற..? அப்படி எங்கே போகப்போறோம்..?” என்று கேட்டதற்கு நந்தனோ, “இப்போ எங்கேன்னு சொன்னாதான் வருவியாடா..? அப்போ சரி..! நம்மோட புது கன்ஸ்ட்ரக்சன் சைட்ல ஏதோ ப்ராப்ளமாம்..? அதற்காகத்தான் உன்னை சீக்கிரம் கிளம்பிவர சொல்றேன்..! போதுமா..?” என்றதற்கு ராகவோ, “என்னது ப்ராப்ளமா..? அப்படி எதுவும் மேனேஜர் எனக்கு போன்பண்ணலையேடா..?” என்று சந்தேகமாகக் கேட்டிட, “ஆமாம்டா..! உனக்கு சொல்லலை..! எனக்குத்தான் கூப்பிட்டுச்சொன்னான்..! என்ன அதுக்கு..? இப்போ நீ, என்கூட கிளம்பி வரப்போறியா..? இல்லையா..?” என்று பதிலுக்கு நந்தன் கேட்க, “டேய்..? அதுதான் கிளம்பிட்டு இருக்கேன்ல..? வா போகலாம்..!” என்று சொல்லி வெளியே செல்வதற்கு ரெடியாகிக்கொண்டு தன் நண்பனை அழைக்க, பின் நண்பர்கள் இருவரும் வீட்டிற்கு வெளியேசென்று காரில் ஏறிப்பறந்தனர்..

முன்தினம் இரவு பெய்த பனியின் குளிரும் காலையில் உதித்த சூரியனின் இளஞ்சூடும் கலந்த ஒரு விதமான ரம்யமான காலைபொழுது ராகவிற்கு புத்துணர்வை தர, காற்றைக்கிழிக்கும் வேகத்தில் பாய்ந்த அவனது காரோ, அடுத்த 15நிமிடத்தில் நின்றது பெங்களூரிலேயே மிகப்பிரசித்திபெற்ற அம்மன்கோவில் வாசலில்தான்..! ஆம்..! காலையில் இவ்வளவு விரைவாக ராகவை, நந்தன் அழைத்துக்கொண்டு வந்தது கோவிலுக்குதான்..! திடீரென்று கோவிலின் வாசலில் கார் நின்றதைப்பார்த்த ராகவோ புரியாதவாறு தன் நண்பனின் முகம்கண்டு, “என்னாச்சுடா மச்சி..? சைட்டுக்கு போகாமல் இங்கே வந்திருக்கோம்..?” என்று வினவ, அதற்கு புன்னகையை இதழில் தவறவிட்ட நந்தனோ ராகவை தாவிக்கட்டியணைத்தபடி, “ஹாப்பி பர்த்டேடா மச்சி..!” என்று, சொல்லும்போதுதான் ராகவிற்கு, ‘இன்று அவனுடைய பிறந்தநாள்..!’ என்பதே ஞாபகத்திற்குவந்தது.. ஆம்..! இன்று ராகவுடைய பிறந்தநாள்..! என்ற காரணத்திற்காகதான், காலையிலேயே அவனுக்கு சொல்லாமலே கோவிலுக்கு அழைத்து வந்துவிட்டான் அவனது நண்பன் நந்தன்.. தன் நண்பன், தன்மீது வைத்திருக்கும் அன்பை புரிந்துகொண்ட ராகவோ, தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய தன் நண்பனிடத்தில் நன்றிகூறிவிட்டு, “இங்கேதான் போகிறோமென்று முன்னாடியே சொல்லமாட்டியாடா..?” என்றிட, அதற்கு நந்தனோ, “ஆமாம்..! இன்னைக்கு உன் பிறந்தநாள்..! நாம் கோயிலுக்கு போகலாமென்று சொன்னவுடனே, நீ முதல் ஆளாக கிளம்பிவந்திடுவ பாரு..? எப்படியும், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழிக்கத்தான் பார்ப்ப..? அதனால்தான், உனக்கு சப்ரைஸ் பண்ணலாம்னு, சொல்லாமலேயே உன்னை இங்கே கூட்டிட்டுவந்தேன்..! இன்று உன்னுடைய பிறந்தநாள் என்பதற்காக, இங்கு சிறப்பு பூஜைக்கும் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன்..! அதை நீ, உன் கையால் செய்யவேண்டும் என்ற ஆசைதான் எனக்கு..! அதனால்தான் உன்னை இங்கு கூட்டிட்டுவந்தேன்..! போதுமா..? இல்லை, இன்னும் வேறுவிளக்கம் எதுவும் வேண்டுமா..?” என்று கேட்க,

அதற்கு விரக்தி சிரிப்பொன்றை சிந்திய ராகவோ, “இல்லடா..! பெத்தவங்களை என்னை பாரமென்று நினைத்து, வேண்டாமென..! வீதியில் விட்டபின், என்னைப் போன்ற ஒருவனுக்கு பிறந்தநாள் ஒரு கேடா..?” என்று கேட்க, அதற்கு நந்தனோ, “டேய் ராகவா..? அவங்களெல்லாம் உன் அருமை தெரியாதவங்கடா..! மண்ணுக்குள் புதைந்திருக்கும்வரை வைரத்தின் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை..! அதேபோல்தான்டா நீயும்..! மண்ணுக்குள் புதைந்திருந்த வைரம்..! உன்னுடைய மதிப்பு அப்போது அவர்களுக்கு தெரியவில்லை..! இப்போது நிச்சயம், உன்னை இழந்ததற்காக கண்டிப்பாக ஒருபுறம் தவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்..!” என்று சொல்ல,

அதற்கு விரக்தியுடன் மறுப்பாக தலையசைத்த ராகவோ, “கண்டிப்பா இல்லடா..! என்னை பெற்றவுடனே எங்க அம்மா போய்சேர்ந்துட்டாங்க..! தாய் முகத்தையே பார்க்காத எனக்கு, எல்லாவுமாக இருக்கவேண்டிய எங்க அப்பா, என்ன புரிஞ்சிக்கவேண்டிய வயசுல புரிஞ்சுக்காமல், வீட்டைவிட்டு வெளியே துரத்திட்டாரு..! இப்படியொரு ஈனப்பிறவியாக பிறப்பெடுத்ததற்கு, நான் பிறக்காமலே இருந்திருக்கலாம்..! என்று பலநாள் யோசித்திருக்கேன் தெரியுமா..? இப்படிப்பட்ட நிலைமையில், எப்படிடா என்னால் சந்தோசமாக பிறந்தநாள் கொண்டாடமுடியும்..?” என்று கேட்டிட,

நந்தனோ, “யாருடா சொன்னா..? யாருமில்லாத அனாதை நீயென்று..! யாரு சொன்னது..? நான் இருக்கேன்டா உனக்கு..! நண்பனாக, உறவாக, உறுதுணையாக எப்போவும் நான் இருப்பேன் உனக்கு..!” என்று, தன் நண்பனை கட்டியணைத்து தனது அன்பைக்காட்டிட, பெற்றவர்களே, தன்னை வேண்டாம்..! என்று வெறுத்து ஒதுக்கியபோதிலும் நட்பாக வந்து, தான் கஷ்டப்பட்ட காலங்களில் கூடவே இருந்து, இப்போதுவரை தனக்கு உறுதுணையாக நிற்கும் நண்பனையும், அவன் தன்மீது வைத்திருந்த பாசத்தையும் கண்டு மெய்சிலிர்த்தவனோ, உணர்ச்சிப்பெருக்கில் தன் நண்பனை மீண்டும் அனைத்துக்கொண்டான்..!

பின், இருவரும் காரிலிருந்து இறங்கி கோவிலுக்குள் சென்று, அங்கிருக்கும் அம்பாளை தரிசித்து, ராகவின் பெயரில் சிறப்பு பூஜைகளும் அலங்காரமும் செய்யப்பட அதைக்கண்டவர்களோ, அம்பாளை மனதாரப் பிராத்தித்துக்கொண்டு, அம்பாளிடம் தங்களது கோரிக்கையைவைத்தனர்.. ராகவை பொருத்தவரையில், எப்பொழுதும் அவனது நண்பனும் பிசினஸும் மட்டுமே முக்கியமென்பதால், அவற்றிற்காக மட்டுமே வேண்டிக்கொண்டான்.. ஆனால் நந்தனோ, ராகவிற்காக மனமுருகி வேண்டியபடி இறைவனிடம், விரைவில் ராகவிற்கு இனிதே திருமணம் நடக்கவேண்டும் என்றும், அவனும் மற்றவர்களைப்போல் மனைவி, குழந்தையென்று குடும்பமாக வாழவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டவனோ, வாழ்வில் அனைத்து மகிழ்ச்சியும் இனி அவனுக்கு கிடைக்கவேண்டும் என்றும், வேண்டிக்கொண்டான்..!

அப்போது, அவனது வேண்டுதல் இறைவனின் காதில் கேட்டதோ..? என்னவோ..? அதன் சாட்சியாய் கோவிலின் மணி மூன்றுமுறை ஒலித்தது..! அதன்பிறகு, பிரகாரத்தை சுற்றிவந்தவர்களோ ஏற்கனவே அங்குவரும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த அன்னதானத்தை துவக்கிவைத்தனர்.. அதன்படி அங்கு வந்திருந்த பக்தகோடிகளுக்கு ராகவின் கைகளால் அன்னதானம் கொடுத்திட, வந்தவர்களெல்லாம் மனமார ராகவை வாழ்த்திச்சென்றனர்.. அதைக்கண்ட ராகவிற்கு மனதில் ஏதோ ஒரு நிம்மதி பரவ, அது அவனது முகத்திலும் புன்னகையாக வெளிப்பட்டது..! அதனைக்கண்ட நந்தனோ தன் நண்பனிடம், “எப்படியோடா..? நான் ஆசைப்பட்டமாதிரி, இந்தவருஷம் உன்னோட பிறந்தநாளை நல்லபடியா தொடங்கியாச்சு..! இனிமேல், உன் வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக நடக்கும்..!” என்றவனோ, “அடுத்தவருஷம் உன் பிறந்தநாளுக்கு, இங்கே நீ உன் மனைவி குழந்தைகளோடு குடும்பமாக வரவேண்டும்..!” என்று சொன்னதைக்கேட்டு, இவ்வளவுநேரம் புன்னகைத்த ராகவின் முகம் திடீரென்று மாறிப்போனது..

அதனையும் தவறாமல் கண்டுகொண்ட நந்தனோ, “ஏன் மச்சி..? என்ன ஆச்சு..?” என்று கேட்க, “டேய்..? ப்ளீஸ்டா..! எனக்கு வாழ்க்கையில் உன்னையும், நம்ம பிசினஸையும் தவிர, வேறெதுவும் வேண்டாம்..!” என்று ராகவ் சொல்லவும், வேண்டுமென்றே தன் நண்பனின் வாயைப்பிடுங்க நினைத்தவனோ, “எதுவும் வேண்டாமென்றால் என்ன அர்த்தம்..? எதுவாக இருந்தாலும், நேரடியாக சொல்லுடா..?” என்று கேட்க, பொறுமையிழந்த ராகவோ, “டேய்..? வாழ்க்கையில் நான் இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு காரணமே..? என் குடும்பமும் சொந்தங்களும்தான்டா..! இனி எனக்கு, உன்னைத்தவிர வேறு எந்த சொந்தமும் தேவையில்லை..! குடும்பமும் தேவையில்லை..!” என்று உடைத்து பேசிட நந்தனோ, “டேய்.. முட்டாளாடா நீ..? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன் முட்டாளா நீ..? உன்னை, உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெறுத்து, வீதியில் விட்டுவிட்டார்கள் என்பதால், வாழ்க்கையில் கல்யாணம் குடும்பமேவேண்டாம்..! என்று ஒரேடியாக இருந்துவிடுவயா..?” என்று கேட்க, அதற்குஎதும் பதில்பேசாது, கல்லூலிமங்கனாய் நின்றிருந்த ராகவைக்கண்டு மேலும் கடுப்பான நந்தனோ, “இதோ பாருடா ராகவ்..? நான் உன்னை, என் உயிர்நண்பனாக மட்டுமல்ல, அதையும்மீறி உடன்பிறவா சகோதரனாகவும் நினைக்கிறேன்..! எப்போவும் உன் நன்மையில் மட்டும்தான், என் சந்தோஷம் இருக்கும்..! எனக்கு நீ, கல்யாணம்பண்ணி பொண்டாட்டி குழந்தை குட்டியோடு இருக்கணும்னு ஆசை..! அவ்வளவுதான்..! எவ்வளவுநாள், நீயும் நானும் தனிமரமாக இருப்பது..? தனிமரம் என்றும் தோப்பாகாது ராஜா..! புரிஞ்சுக்கோ..!” என்று கோவம் கலந்த நக்கல் மொழியில் சொல்ல,

நந்தனின் பிடிவாத குணமறிந்த ராகவோ, இப்போது அவனை சமாளிப்பதற்காக வெறுமனே எதுவும்பேசாமல், அவனுக்கு சரியென்று தலையை மட்டும் அசைத்துவிட்டு அமைதியாக இருந்தான்.. ஒருவழியாக இருவரும் பேசிக்கொண்டே அன்னதானம்கொடுத்து முடித்துவிட, மீதஉணவுகளை மற்றவர்களை கொடுக்க சொல்லிவிட்டு கிளம்பும்போது, அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டே பின்புறம் பார்க்காது நகர்ந்த ராகவின்மீது, திடீரென்று யாரோ ஒருவர் மோதிட, அதில் நிலைதடுமாறியவனோ கீழேவிழாமல் அருகேயிருக்கும் டேபிளை பிடித்து நின்றபின், எதிரே நிமிர்ந்து பார்க்கையில், அங்கே மருண்டபடி, தவறுசெய்த பயத்துடன் ராகவை பார்த்து நின்றுகொண்டிருந்தாள் மிதிலா..

ஆம்..! புதிதாய் திருமணமான தன் தோழியை வழியனுப்புவதற்காக வெளியேவந்திருந்த மிதிலாவோ, தன் தோழியர் அனைவருடன் கோவிலில் குழுமி, பின்பு அங்கிருந்து வெளியே செல்வதாக முடிவெடுத்துதான் வந்திருந்தனர்.. வந்த இடத்தில், தன் தோழிகளைக்கண்ட மகிழ்ச்சியில், அவர்களிடம் பேசியபடி விளையாடிக்கொண்டே பிரகாரத்தை சுற்றிவந்ததில் எதிரே இருந்த ராகவை பார்க்காது, தெரியாமல் அவன்மீது மோதிவிட்டாள்..

இங்கே, எதிரே பயந்தபடி நின்றிருந்த பெண்ணவளிடம் எதுவும்பேசாது பிரச்சனையை வளர்க்காமல் மரியாதை நிமித்தமாக, தானே முன்வந்து சாரி சொல்லிவிட்டு அங்கிருந்துசென்ற ராகவனைக்கண்ட மிதிலாவின் தோழியோ, “என்னடி..? என்னாச்சு..?” என்று கேட்க, நடந்தவற்றை சொன்ன மிதிலாவிடம் அவளது தோழியோ, “ஆள் பார்க்க, சும்மா ஹன்ஸாமா ஜம்முன்னுதான் இருக்காரு..! ஆனால் பாரு..? இப்போவெல்லாம் இந்த மாதிரி பசங்கதான்டி பொண்ணுங்களை வேணுமென்றே டீஸ் பண்ணிட்டிருக்கிறது..! எனக்கு என்னமோ..? நீ கவனிக்காமல் வந்ததை பயன்படுத்தி, அந்த ஆள் உன்னை வேணுமென்றே இடித்து இருக்காருன்னு நினைக்கிறேன்டி..?” என்று சொல்ல, அதனை மறுத்த மிதிலாவோ, “சேச்சே..! இல்லடி..? பார்த்தால் அப்படிதெரியலை..?” என்று கூறிடவே, அதனை மறுத்த அந்ததோழியோ, “என்னடி நீ..? உலகம் புரியாதவளாய் இருக்க..? இப்போவெல்லாம், இந்த மாதிரி பசங்கதான் எல்லாவிதமான வேலையும் செய்யுறாங்க..! முதலில் தெரியாதுபோல் இடிப்பாங்க..! அப்புறம் பாலோவ் பண்ணுவாங்க..! அதன்பிறகு ப்ரொபோஸ் பண்ணுவாங்க..! அதுக்கு நாம ஒத்துக்கவில்லையென்றால், நம்ம வீடிற்கேவந்து, நம்ம குடும்பத்தை அசிங்கபடுத்துவாங்க..! பொண்ணுங்க, நாமதான் எப்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்..!” என்று சொல்லிட, அதற்கு சந்தேகத்துடன் சரியென்று தலையாட்டிய மிதிலாவோ அங்கிருந்து சென்றுவிட்டாள்..

இங்கே காருக்குச்சென்ற ராகவோ, காருக்குள் ஏறி அமர்ந்ததும் அவனை தொடர்ந்து சென்ற நந்தனோ, காரை ஸ்டார்ட்செய்துகொண்டே, “என்னடா மச்சான்..? கோயிலில் நான் ஐயர்கிட்ட பேசிட்டு வர்றதுக்குள்ளயே, சிலபல சுவாரசியமான சம்பவங்களெல்லாம் நடந்துருச்சுபோலயே..? ஒருவேளை, நான் வேண்டிக்கிட்டதை அம்பாள் இன்னைக்கே நிறைவேத்திட ஆரம்பிச்சுட்டாளா என்ன..?” என்று நக்கலாக கேட்க, அதற்கு நந்தனை கண்டு முறைத்த ராகவோ, “என்னடா நக்கலா..?” என்று கேட்டிட, “அதில்லை மச்சி..! இதுவரையில், எந்த பொண்ணுகூடவும் நீ நின்று, பேசியதுகூட கிடையாது..! இன்னும் சொல்லப்போனால், உன் நிழலை ஒரு பெண் தொடுவதென்பது, அது கனவில்கூட சாத்தியமில்லை..! அப்படிப்பட்ட உன்னை, இன்று ஒரு பொண்ணு நச்சென்று இடித்து, நிலைதடுமாற வைத்துவிட்டாளே..? நீ கூட, அந்த பொண்ணுகிட்ட பாவமா சாரியெல்லாம் கேட்டியேடா..? அதைத்தான் சொன்னேன்..!” என்று நக்கல் செய்திட,

“அது ஒன்னுமில்லைடா..? அந்தபொண்ணு, என்னை தெரியாமல் இடிச்சிடுச்சு..! அப்புறம் என்கிட்ட சாரி கேட்பதற்கு தயங்கி நின்னுட்டு இருந்துச்சு..! அதனாலதான், நானே முதலில் சாரின்னு சொல்லி பிரச்சனையை முடிச்சிட்டேன்..! மத்தபடி வேறு எதுவும் இல்லை..!” என்று கூறி முடித்திட, நந்தன் மனதில், என்னவோ அந்தப் பெண்தான் ராகவிற்காக கடவுள் அனுப்பிவைத்த தேவதையோ..? என்ற எண்ணம் தோன்றியது..! பிறகு வழக்கம்போல் தங்கள் கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டிற்க்கு சென்று அங்கிருக்கும் வேலைகளை பார்த்தவர்களோ, சற்று நேரம் தாமதமாகவே தங்களது மெயின்பிரான்ச்சிற்கு சென்றனர்..

இங்கே மிதிலாவின் தோழிகளோ, அவர்களது திருமணமான தோழிக்கு விருந்துகொடுக்க நினைத்து, பெங்களூரில் இருக்கும் மிகப்பெரிய ஏழு நட்சத்திர உணவுவிடுதிக்கு செல்ல, ஹோட்டலின் பிரம்மாண்டத்தைக்கண்டு பயந்த மிதிலாவோ, “ ஐயோ..! என்னடி இது..? இவ்வளவுபெரிய ஹோட்டலா இருக்குது..? இங்கே ஏன்டி கூட்டிட்டு வந்தீங்க..? எங்க அப்பாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவாரே..?” என்று சொல்ல மற்றதோழிகளோ, “ஐயோ..! பயந்தாங்கோலி..! இதுதான்டி பெங்களூரிலேயே ரொம்பபெரிய ஸ்டார்ஹோட்டல்..! இங்கேதான் இவளுக்கு ட்ரீட் கொடுக்கலாமென்று இருக்கோம்..! பணத்தை பற்றி கவலைப்படாதே..! உன்னால செலவு பண்ணமுடியாதுன்னு எங்களுக்கு தெரியும்..! இதுக்கு அப்புறம் இவளும் புருஷன் வீட்டுக்குபோயிட்டா, நம்மால் இவளை பார்க்கமுடியாதுல்ல..? தேவையில்லாமல், நீ எதுக்கு கவலைப்படுற..? எதைப்பற்றியும் யோசிக்காமல், என்ஜாய்பண்ணுடி..!” என்று சொல்ல, ஒருவழியாக சமாதானம் அடைந்தவளோ, அவர்களுடன் ஹோட்டலுக்குள் சென்று அங்கிருக்கும் டேபிளில் அமர்ந்து, தங்களுக்கு வேண்டுபவைகளை ஆர்டர்செய்து காத்திருக்க,

மிதிலாவோ ஹோட்டலின் பிரம்மாண்டத்தை புதிதாய் கண்கள் விரித்து, ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல் பிரமிப்பாகபார்க்க, அதனைக்கண்ட அவர்கள் தோழிகளில் சிலரோ, “ஹேய்.. இவளெல்லாம் சாதாரண மிடில்கிளாஸ்டி..! திடீர்னு இந்தமாதிரி ஹோட்டலுக்குள் வந்ததும், பட்டிக்காட்டான் பஞ்சுமுட்டாய் கடையைப் பார்ப்பதுபோல் பார்க்கிறா..! வேற எதுவுமில்லை..!” என்று தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.. பின்னர் தாங்கள் ஆர்டர்செய்த உணவுவந்ததும் அதை சாப்பிட்டு, தங்களுக்குள் பேசிக்கொண்டு மகிழ்ந்திருந்தவேளையில், மிதிலாவின்மீது டேபிளிலிருந்த சாஸ் கொட்டியதும் அதனைக்கண்டவளோ, “அச்சோ..! என்னடி இப்படி ஆயிடுச்சு..? சரி.. நீங்க இங்கயே பேசிட்டு இருங்க..! நான் போய் இதை கிளீன் பண்ணிட்டுவரேன்..!” என்று வாஸ்பேஷனிற்கு சென்றவளோ, அங்கு தன்மீது ஆகியிருந்த சாஸ்கரையை கழுவிக்கொண்டிருக்கையில்,

அப்போது வழக்கம்போல் தனது ஹோட்டலுக்கு நந்தனுடன் விசிட்செய்த ராகவோ, மேலேயிருக்கும் தனது கேபினுக்கு செல்வதற்கு முன்பு ஒரு சாம்பிள் டிஸ் ஒன்றை, ஒரு பெரிய ஆர்டருக்காக ஏற்கனவே செய்ய சொல்லியிருக்க, அதனை பரிசோதிப்பதற்காக கிச்சனுக்குள் செல்ல எத்தனித்தவனோ, அதற்கு முன்பு வாஷ்பேசனுக்கு சென்று கை கழுவப்போகையில், அங்கு ஏற்கனவே வாஷ்பேஷனில் கை கழுவிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தாவணியோ, ஹோட்டலில் வீசும் ஏசிக்காற்றின் வேகத்தில், அவளருகே உருட்டிச்செல்லும் வேஸ்ட் பிளேட் ட்ராலியின் ஹூக்கில் மாட்டிவிட,

அதனைக்கண்ட ராகவோ, “தனது ஹோட்டலில் இந்தமாதிரி அசம்பபாவிதங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது..!” என்ற நல்லெண்ணத்தில், வேகமாகச்சென்று டிராலியை சுற்றியிருந்த அந்த பெண்ணின் தாவணியை விடுவிப்பதற்காக பிடித்திழுக்க, திடீரென்று யாரோ தன் தாவணியை பின்னால் பிடித்திழுப்பதுபோல் தோன்றிய மிதிலாவோ, என்னவென்று திரும்பிப்பார்க்கையில், அங்கு கூக்கில் இருந்து விடுபட்டு ராகவின் கைகளில் தஞ்சம் கொண்டிருந்த தாவணியை பார்த்து, தவறாக புரிந்துகொண்ட பெண்ணவளுக்கு, கோவிலில் தன்தோழி இந்தமாதிரி ஆண்களைப்பற்றி சொன்னதெல்லாம் ஞாபகத்திற்கு வரவே, பதட்டத்தில் புத்தியை இழந்த கோபத்துடன் ராகவை ஏறிட்டு, “ஐயோ விடுங்க..! முதலில், என் தாவணியை விடுங்க..! எவ்வளவு தைரியம் இருந்தால், என் தாவணியை பிடித்திழுப்பீங்க..? என்ன..? கோவிலிலிருந்து எங்களை ஃபாலோ பண்றீங்களா..? உங்களைப்பற்றி என் பிரண்டு சொன்னது சரியாபோச்சு..! உங்களைப்போல வெளியில் டீசன்டாக தெரிகிற பசங்களெல்லாம், உள்ளுக்குள் இவ்வளவு கேவலமானவங்களா இருப்பீங்களா..? ச்ச.! என்ன மாதிரி ஆளு நீங்க..? இப்படி பார்த்தவுடனே அந்தபொண்ணு பின்னாடி சுத்தி, தாவணியை புடிச்சி இழுக்குற அளவுக்கு, கீழ்த்தரமான புத்தியுடையவங்க..? உங்களையெல்லாம் பார்ப்பதற்கே அருவருப்பா இருக்குது..! போங்க இங்கிருந்து முதலில்..!” என்று கோபமாக கத்த, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் நடப்பதை வேடிக்கை பார்க்க,

அவசரமான கால் ஒன்றை வெளியே பேசிக்கொண்டிருந்த நந்தனுக்கு, உள்ளே நடந்தது தெரியவில்லை..! ஆனால், அந்த ஹோட்டலில் வேலைசெய்யும் ஊழியர்களோ, தங்கள் முதலாளியை ஒரு பெண் இவ்வளவு துச்சமாக பேசுவதைக்கண்டு பயந்து, அவளிடம் எடுத்து சொல்வதற்காக முன்வர, “உண்மை புரியாமல் பேசும் இந்தப்பெண்ணோ, தான்தான் இந்த ஹோட்டலில் முதலாளி என்று தெரிந்தால், தேவையில்லாமல் ஹோட்டலைப்பற்றியும் தவறாக பேசிவிடக்கூடும்..!” என்று நினைத்த ராகவோ, கண்களாலேயே சைகைசெய்து வரும் ஊழியர்களை வேண்டாமென்று நிறுத்திவிட, அவர்களும் வேறுவழியில்லாமல், என்ன நடக்குமோ..? என்று கைகளை பிசைந்தவண்ணம் நின்றுகொண்டிருந்தனர்..

பின்பு மிதிலாவிடம், இரண்டாவது முறையாக வேண்டுமென்றே மன்னிப்பு கேட்ட ராகவோ, “சாரிம்மா..! எதுவும் நான் வேணுமென்று செய்யலை..! ஏதோ தவறாக தெரியாமல் நடந்துருச்சு..! என்னை மன்னிச்சிடுங்க..!” என்று மன்னிப்புகேட்க, அதனைக்கண்ட மிதிலாவோ நடந்துவற்றை எண்ணி, கோபத்திலும் பதட்டத்திலும் அவனது மன்னிப்பை ஏற்காது, கண்களில் துளிர்த்த கண்ணீர் துளியை துடைத்துக்கொண்டு தன் தோழிகளிடம் தான் கிளம்புவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்..

அதன்பிறகு கால்பேசி முடித்துவிட்டு ஹோட்டலுக்குள் வந்த நந்தனோ, அங்கே நின்ற ராகவைக்கண்டு அவனது முகத்தில் ஏதோ ஒரு மாற்றத்தைக் கவனித்து என்னவென்று கேட்க, நடந்தவற்றை கூறி முடித்த ராகவோ, “சின்ன பொண்ணுடா..! நடந்ததை புரிஞ்சுக்காமல், ஏதோ தெரியாம பேசிட்டாங்க..! பதிலுக்கு நாமும் பேசினால் சரிவராது இல்ல..? அது நம்மைதாண்டி நம் ஹோட்டலின் பெயரையும் பாதிக்கும்..!” என்று சொல்லிட, ஒரு பெண் இத்தனை பணியாட்கள் முன்பு, தன் நண்பனை அவமானப்படுத்தியதை நினைத்து, முதலில் கோபம்கொண்ட நந்தனோ, பிறகு அந்தப்பெண்தான் கோவிலில் பார்த்த பெண்..! என்று தெரிந்தவுடன், கோபம் புன்னகையாய் மாறியது..! பின் ராகவை கண்டவனோ, “நான்தான் காலையிலேயே சொன்னேன்லடா..? என்னுடைய வேண்டுதல் அந்த கடவுளுக்கு கேட்டதோ..? என்னவோ..? காலையில் கோவிலில் உன்னை இடித்த பெண்ணே, இங்கும் உன்னிடம் சிக்கியிருக்காள் என்றால், இதில் ஏதோ இருக்கு மச்சி..?” என்று சொல்ல கடுப்பான ராகவோ, “போதும்டா..! தேவையில்லாமல், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடாதே..! நாம பார்க்கவேண்டிய வேலைகள் நிறைய இருக்கு..! இப்போ வேலையை பார்க்கலாமா..?” என்று, நாசூக்காக அந்த பேச்சைத்தவிர்க்க நந்தனோ, “பார்க்கலாம்டா..! பார்க்கலாம்..! எத்தனை நாளைக்கு இப்படியே நீ, ஒதுங்கி போறேன்னு பாக்கலாம்..? கடவுள் இருக்கான் ராகவ்..!” என்று சொல்லி, தன் நண்பனையே கேலிசெய்து பின், தன் வேலையை கவனிக்கச்சென்றான்..

இங்கே வீட்டுக்குவந்த மிதிலாவோ, ஹோட்டலில் நடந்ததைப்பற்றி தந்தையிடம் எதுவும் சொல்லாது மறைத்து, சகஜமாய் தன்னை காட்டிக்கொள்ள அரும்பாடுபட்டவளோ, அன்று மதியம் நிகழ்ந்ததில் ஏற்பட்ட பதட்டம் குறையாது, சாப்பிடாமல் கூட அப்படியே இரவு படுக்கைக்கு சென்றுவிட்டாள்..! அதேபோல் ராகவும் வழக்கம்போல் உறங்குவதற்காக தன் படுக்கையறைக்கு செல்ல, வழக்கமாக படுத்ததும் உறங்குபவனோ இன்று உறக்கம் வராமல், படுத்துக்கொண்டே மேலிருக்கும் விட்டத்தை பார்க்க, தனது பிறந்தநாளான இன்று, தன் நண்பன் தனக்கு எந்த குறையுமின்றி பிறந்தநாள் வாழ்த்தும் பரிசும் கொடுத்தபோதிலும், தான் எதிர்பாக்காத பிறந்தநாள் வாழ்த்தாக, தேவையில்லாமல் அந்தப்பெயர் தெரியாத பெண்ணிடம் வாங்கிய அர்ச்சனைகள் நினைவுக்குவரவே அதை எண்ணி சிரித்தவனோ, இனம புரியாத உணர்வுடன் அப்படியே உறங்கிப்போனான்..

முதல் சந்திப்பிலேயே முன்னுக்குப்பின் முரனாய் முட்டிக்கொண்டவர்கள், வாழ்வில் ஒட்டிக்கொள்வார்களா…? பார்க்கலாம்…

தொடரும்…
 
Advi

Well-known member
ராகவ் Super😍😍😍😍

மிதி இப்படியே பேசிட்டு இரு, ஒரு நாளைக்கு மிதிக்க போறான் 😆😆😆😆😆😆
 
Top