எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதரமே!

ரொம்ப நாள் அப்புறம் படித்த அருமையான ஃபேன்டஸி கதை!!!... உங்கள் கற்பனையை உங்கள் எழுத்துக்களால் எங்களை உணர வைத்த விதம் அருமை!!!... கண்முன்னே போர்களத்தையும் கண்டு விட்ட நிறைவு!!!...

அனைத்து ஃபேரீகளையும் ரொம்ப பிடித்தது!!... ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விளக்கி, அதற்கான பபத்தையும் சரியான விதத்தில் இனைத்தது உங்களின் உழைப்பை சொல்லியது!!!..

அவர்களின் உண்மையை அறிந்துகொள்ளும் காட்சி, அதன் பின்னான அவர்களின் உரையாடலும், எடுக்கப்பட்ட முடிவும் அசத்தல்!!.. முடிவில் உறுதியாக இருந்த விதமும் மனதை கவர்ந்தது!!... அவர்களின் வலிக்கு காதல் மருந்தான விதம் பிடித்தது!!...

காதல் மட்டுமில்லாது அவர்களின் நட்பும் பிரமிக்க வைத்தது!!... அனைவரின் நட்பும் பரிசுத்தமானது!!!...

அவர்களின் அந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அவன் தனியே போரிடுவதும், அவளுக்காக அவன் எதிர்த்து நிற்பதும் எனக்கு மிகப் பிடித்தமான காட்சி!!!...

அனைவரின் குணமும், காட்சியமைப்புகளும் இயல்பாய் இருந்தது!!!.. அனைவரின் காதலும் அழகு!!..

போரின் முடிவு துயரமானதாக இருந்தாலும், கதையின் முடிவு நிறைவானதாக இருந்தது!!... மீண்டு வந்து மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!!!...

ஆழமான காதலையும், அழகான நட்புகளையும் கொண்ட கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

 
Top