எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 9 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 9​

இன்பா காலை எழும்போதே நிலா நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவள் பூ முகம் கண்டவன் அவள் கண்ணம் உரசி கொண்டிருந்த கேசத்தை காதுக்கு பின் ஒதுக்கி விட்டு நெற்றியில் முத்தமிட்டு எழுந்தான். அன்றாட உடற்பயிற்சிகளை முடித்தான். குளிக்க செல்லும் போது வீட்டு காலிங் பெல் ஓசை கேட்க வெளியே வந்து கதவை திறந்தான். சஞ்சய், சத்யா, பானுமதி மூவரும் நின்று இருக்க அவர்களை பார்த்தவுடன் உள்ள வாங்க என்று விட்டு தன் அறைக்கு சென்றான்.​

சமையல்காரன் பெண் காலை உணவு தயார் செய்து கொண்டிருக்க பானுமதியும் அவர்களுடன் இணைந்து கொண்டார். "அண்ணா.. அண்ணி எங்க சஞ்சய்?' கேட்க "அவ தூங்குற.. நான் எழுப்புறேன்" என்ற வந்து அறைக்குள் புகுந்து கொண்டான்.​

உறக்கத்தில் புரண்டு பார்த்தவளை எழுப்ப ம்ம்.. என்ற முனகளோடு எழுந்து அமர்ந்தாள். எழுந்தவளை அம்மா வந்திருக்காங்க என்றான். "இவ்வளவு காலையில என்ன??" உறக்கம் கலையாமல் கேட்க "என்னோட அம்மா தம்பி தங்கச்சி வந்திருக்காங்க" என்றான். அவளும் எழுந்த முகம் கழுவி பிரஷ் ஆகிவிட்டு கீழே வர அண்ணி.. என்று ஓடி அணைத்துக் கொண்டாள் சத்யா. சஞ்சய் பார்த்துக் கொண்டே நிற்க "நீங்க ஓகேவா நீங்க நல்லா இருக்கீங்களா?" என்ற சஞ்சயிடம் "எனக்கு ஒன்னும் இல்ல சஞ்சய் நான் நல்லா இருக்கேன்" அவனிடம் புன்னகையுடன் கூறினாள்.​

காலை உணவு வேலைகள் முடித்து சமையல்கார பெண் கிளம்பும்போது அவருக்கு தேவையான உணவை கட்டிக் கொடுத்து அனுப்பினார். அதற்குள் நிலா குளித்து உடைமாற்றி வர அவர்களுடன் இணைந்து கொண்டாள். பேசிக் கொண்டே இருந்தனர் இன்ப குளித்து முடித்து உடை மாற்றியவன் வெளியே வராமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்தான்.​

"உனக்கு ஒன்னும் இல்லையே? யார் அந்த பசங்க? ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க?" பதட்டமாக கேட்க "அவங்க சரியான பொறுக்கி பசங்க. காலேஜ்ல அவங்க பொருக்கி தனம் ரொம்ப தாங்க முடியல.​

ஏங்கிட்டே பேட் பிஹேவியர் பண்ணாங்க. நான் காலேஜ்ல கம்ப்ளைன்ட் பன்னேன். எச்ஓடி என்னால அவங்கள எதுவும் செய்ய முடியாதுமா. அவங்க பெரிய இடத்து பசங்க என்னால இன்வால் ஆக முடியாதுன்னு சொல்லிட்டாங்க. போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணா அவங்க ஃபியூச்சர் ஸ்பாயிலா போறதுக்கு சான்ஸ் இருக்கு. அதனால தான் அவங்க வீட்ல போய் பெத்தவங்க கிட்ட சொல்லிட்டு வந்தேன். ஆனா இப்படி பண்ணுவாங்க நான் நினைக்கல அத்தை. எது எப்படியோ அவர் காப்பாத்திட்டாரு. இனிமே எந்த பிரச்சனையும் இல்ல.. அவங்கள தூக்கி ஜெயில்ல போட்டாங்க" என்ற அவள் முகத்தை பார்த்த பானுமதி.​

நிம்மதி பெரு மூச்சு விட்டார். ஏதோ சொல்ல வந்து ஒரு வாரு தயங்கி கொண்டு "ஒரு விஷயம் உன்னை கேட்கிறேன் பதில் சொல்றியா?" என்று கேட்க "கேளுங்க அத்தை.." என்றாள் உரிமையுடன்.​

அதற்குள் "சஞ்சய் சத்யா உங்க அண்ணனை போய் பாருங்க அவன சாப்பிட வர சொல்லுங்க" என்று அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு "நீங்க சந்தோஷமா தானே இருக்கீங்க?" என்று கேட்க திடுக்கிட்டாள் நிலா.​

"என்ன சொல்றீங்க அத்த. எனக்கு புரியல" தெளிவாக அவள் கேட்க "உங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சது தானே?? சந்தோஷமா தானே இருக்கீங்க நைட்ல எல்லாம்" தயங்கி அவர் கேட்க தூக்கி வாரி போட்டது அவளுக்கு. இது போல் யாரும் அவளிடம் கேட்டதில்லை.​

தயக்கத்துடன் அவள் நிற்க அவள் தயக்கமே புரிந்து போனது பானுமதிக்கு பெருமூச்சு விட்டவர் "என் பிள்ளை முரடன் தாம்மா. ஆனா அவன் நல்லவன். என்ன பண்றது விதி அவனை இப்படி வாழ்க்கையில் அலைக்கலிக்குது. அன்னைக்கு என் வீட்டுக்காரரும் உங்க வீட்டுக்கு வேலைக்கு வராம இருந்திருந்தா இது எதுவுமே நடந்திருக்காதும்மா" என்று கூறி "என்னது உங்க வீட்டுக்காரர் எங்க வீட்ல வேலை செஞ்சாங்களா??" அவள் புரியாமல் கேட்க​

"ஆமாடா உங்க வீட்ல, உங்க அப்பாவுக்கு கார் டிரைவரா தான் எங்க வீட்டுக்காரர் வேலை செஞ்சாரு" என்று கூற அதிர்ந்தாள் நிலா.​

அவள் பார்வையே அவளுக்கு எதுவும் தெரியவில்லை என்று கூற "அப்போ நீ சின்ன குழந்தை டா. உனக்கு என்ன ஒரு ஏழு வயசு தான் இருக்கும் அதனால தான் உனக்கு எதுவும் தெரியல. ஆனா இன்பாக்கு எல்லாமே நல்லா தெரியுமே. அவன் டென்த் படிச்சிட்டு இருந்தான். உங்க வீட்ல தான் அவங்க அப்பா வேலை செஞ்சுட்டு இருந்தாரு. உங்க அப்பாவுக்கு இன்பா அப்பனா ரொம்ப பிரியம்.​

இன்பா அப்பா உன் மேல உயிரா இருந்தாரு. நீயும் அவர் மேல ரொம்ப பாசமா இருந்த. வாசன் அங்கிள்.. வாசனன் அங்கிள்ன்னு அவர் பின்னாடி சுத்தி சுத்தி வருவ. இன்பாவும் வீட்டுக்கு வருவான். நீயும் அவன்கூட விளையாடுவ.." என்று கூற குழம்பிப் போனார்.​

"ஆனால் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே அத்தை அவள் கேட்க அப்போ நீ ரொம்ப சின்ன பொண்ணுடா. உனக்கு ஞாபகம் இருந்து இருக்காது. எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு அன்னைக்கு உங்க அப்பாவ கூட போனா என் வீட்டுக்காரர் என்ன ஆச்சு ஏதாச்சும் தெரியல வரும்போது பிணமா தான் வந்தாரு.​

அதுக்கப்புறம் எங்க வாழ்க்கை தடம் மாறி போயிடுச்சு. எவ்வளவோ சொல்லியும் கேட்காம இன்ப அப்பா சாவுக்கு பழி வாங்கியே தீருவேன்னு சுத்திக்கிட்டு இருந்தான். உன்னோட அப்பா தான் அவன சமாதானப்படுத்தி படிக்க சொன்னாரு. படிக்க வச்சாரு. உங்க அப்பா தான் அவனுக்கு கார்டியன். இப்போ வரைக்குமே அவர்தான் எனக்கும் என் பசங்களுக்கும் பாதுகாப்பு. எனக்கு ஒரு மளிகை கடை வச்சு கொடுத்தாரரு. அதற்கான கடனே நான் இன்னும் உங்க அப்பாக்கு கொடுக்கல.​

இது என் கடமைன்னு சொல்லி நான் கொடுத்த பணத்தை வாங்கல.. எங்க குடும்பத்தை பார்த்துக்குறதே உங்க அப்பா தான்டா கண்ணு. அதனால தான் என் பிள்ளைக்கு உன்னை கட்டி கொடுத்து இருக்காரு இதெல்லாம் உனக்கு தெரியாதா" அவர் கேட்க குழம்பி போனாள் நிலா.​

"சின்ன பொண்ணு நீ. படிச்சிட்டு வேற இப்பதான் வந்திருக்க. அதனால அவங்க ஏதும் சொல்லாம இருந்திருப்பாங்க" என்றார் பானுமதி.​

மூன்றாவது வரை மட்டும் இங்கு படித்துவிட்டு அதன் பிறகு ராணுவ பள்ளியில் படிக்க டெல்லி சென்று விட்டாள் நிலா. அப்போது நடந்த எதுவும் அவளுக்கு சரியாக நினைவில்லை. சிறு வயது என்பதால் இன்பாவுடன் பழகிய நாட்களும் அவளுக்கு நினைவில்லாமல் போக குழம்பினாள்.​

"அப்பாவ கொன்னவனை பழிவாங்கி கொன்னே தீருவேன்னு இன்பா சுத்திகிட்டு இருந்தான். உங்க அப்பா படிக்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தினார். ஒரு டிகிரி தான் படிச்சான். அதுக்கப்புறம் வாழ்க்கை அவன் பாத்துக்கிட்டான்" என்று கூறி நிறுத்த இன்பா தங்கை தம்பியுடன் இறங்கி வந்தான். அவனை கண்டவுடன் இருவரின் பேச்சும் நின்றது.​

என்பது லட்சம் கடனுக்காக தானே அப்பா கிட்ட இவன் என்ன கட்டிக் கொடுக்க சொல்லி கேட்டான். அப்படித்தானே என்கிட்ட சொன்னாங்க? இவங்க என்ன வேற மாதிரி சொல்றாங்க? என்ன நடக்குது இங்க? முதல்முறையாக தந்தையின் மீது சந்தேகம் வந்தது அவளுக்கு.​

கந்த வட்டிக்காரனுக்கு பொண்ண கட்டி கொடுக்குறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? அப்படி என்ன ரெண்டு பேத்துக்குள்ளயும் உறவு? என்று நினைத்த அவளுக்கு தலைவலிக்கு வந்தது தான் மிச்சம்.​

அன்று முழுவதும் பானுமதி சத்யா சஞ்சய் அவளுடனே இருந்தனர். சிறு சிறு சமையல்களை சமையல் குறிப்புகளை அவளுக்கு சொல்லிக் கொடுத்தார் பானுமதி அதை அவளும் அன்புடன் கற்றுக் கொண்டாள்.​

" வேலைக்கு மறுபடியும் போறியாமா என்று கேட்க எனக்கு தெரியல அத்தை" என்றாள் நிலா.​

" வேலைக்கு போறதும் போகாததும் உன் விருப்பமா. அதை எப்பவுமே நான் தப்பு சரின்னு சொல்ல மாட்டேன் ஆனால் நீங்க ரெண்டு பேரும் இப்படி தனித்தனியாக இருக்காது சரியில்லடா கண்ணு. கல்யாணம் ஆயிடுச்சு குடும்ப வாழ்க்கைய கொஞ்சம் பாருங்க.. எனக்கும் பேர பிள்ளைகளை தூக்கி கொஞ்சணும்னு ஆசை இருக்குடா. கொஞ்சம் பாத்துக்கோ எதுவா இருந்தாலும் படிச்ச பொண்ணு நீ. உனக்கு நான் சொல்லி புரிய வைக்கணும்னு இல்ல. எந்த கோபம் வெறுப்பு இருந்தாலும் பேசி முடிச்சிட்டு நல்ல முறையில் வாழ்க்கையை ஆரம்பிங்க.​

உங்க புள்ளைங்கள கொஞ்சறதுக்காக தான் நான் இன்னும் இந்த உயிர் புடிச்சு வச்சுக்கிட்டு இருக்கேன்" என்று கூறியவர் விழிகளில் தெரிந்த ஏக்கத்தை அவள் உணர்ந்து கொண்டாள். அவளும் மனதால் இன்பாவை ஏற்றுக் கொண்டு விட்டாள். ஆனால் ஏனோ அவள் மூளைக்கு இன்னும் அதுவும் உரைக்கவில்லை.​

கந்தவட்டிக்காரன் கொடுமைக்காரன் என்பதாலா? மாலை பானுமதி சத்யா சஞ்சய் வீட்டுக்கு கிளம்பினர். அப்போது தான் இன்பா வீட்டுக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்தவள் "முன்னாடியே எனக்கு உங்களை தெரியுமா?" என்று கேட்க அவளிடம் திரும்பினான்.​

" இப்படி பாக்காதீங்க? இதுக்கு முன்னாடியே எனக்கும் உங்களுக்கும் ஒருத்தர ஒருத்தர் தெரியுமா?? " என்று கேட்க "உனக்கு தெரியுமா தெரியாதான்னு உனக்கே தெரியலையா??" கேலியாக பதில் கேள்வி கேட்க,​

"கிண்டல் பண்ற வேலை வேண்டாம் உண்மைய சொல்லுங்க. இதுக்கு முன்னாடியே எனக்கு உங்களுக்கு தெரியுமா? நான் உங்ககிட்ட பேசி பழகி இருக்கேனா?" என்று கேட்க,​

பேண்ட் பாக்கெட்க்குள் கை நுழைத்து "ஆமா.. என் அப்பா உன் வீட்டில் தான் வேலை செஞ்சாரு.. அதனால எனக்கு உன்ன தெரியும். மத்தபடி பெருசா எந்த விஷயமும் இல்லை" பட்டும் படாமலும் பதில் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.​

ஆனால் நிச்சயம் இவன் முழு உண்மையுயும் சொல்லவில்லை என்று தோன்றியது. இது தவறாக இருப்பதாக உணர்ந்தால் இது பற்றி தந்தையிடம் கேட்க நினைத்து போனில் அளிக்க முதல் ரிங்கிலே அழைப்பை ஏற்றார் பிரகாஷ்.​

"அம்மா நிலா.. சொல்லுடா இப்பதான் உனக்கு அப்பா நினைவு வந்துச்சா? அப்பாவை மறந்துட்டியாடா கண்ணு" பாசமாக பிரகாஷ் எதிர் முனையில் பேச​

"அப்பா.. கொஞ்சம் சும்மா இருங்க.." கடு கடுவென கூற இதழுக்குள் சிரித்துக் கொண்டவர் "சரி சரி என்ன ஆச்சு? அந்த டைம்ல கால் பண்ணி இருக்க? இன்பா ஏதாவது சொன்னானா?" என்று கேட்க "அதெல்லாம் எதுவும் இல்லப்பா. இன்பா அப்பா நம்ம வீட்ல வொர்க் பண்ணாரா? உங்க டிரைவரா?" என்று கேட்க அதிர்ந்தார் பிரகாஷ்.​

ஆனாலும் சமாளித்துக் கொண்டு "ஆமா டா.. இன்பாவோட அப்பா என்னோட டிரைவர் தான்" என்று கூறினார்.​

அதிர்ந்தவள் " நீங்க என்பது லட்சம் கடனுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணி கொடுத்தா சொன்னீங்க? ஆனா இவங்க வேற ஏதோ சொல்றாங்க? என்ன நடக்குது பா? உண்மைய சொல்லுங்க" என்று கேட்க "உனக்கு எதும் தெறிய வேண்டாம்" என்று இணைப்பை துண்டித்தார் பிரகாஷ்.​

எதுவும் கூடாதா?? அப்படினா தனக்கு தெரியாத ஏதோ ஒரு கதை இங்கு இருக்கிறது என்பதை அவளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. தன்னை சுற்றி இருக்கும் உண்மையை கண்டுபிடிப்பாளா நிலா??​

தொடரும்..​

 

Mathykarthy

Well-known member
பணத்துக்காக கல்யாணம் ன்னு சொல்லி இவங்க தான் அவ மனசுல வெறுப்பை ஏற்படுத்திருக்காங்க.. இப்போவும் உண்மையை சொல்லாம மறைக்குறாங்க...
 

Advi

Well-known member
Antha anuraak paiyana iruppaana.... Prakash annaikku oru peru sonnaar illa.....

Avan irunthu than kaappaaththaa appadinu.....

Ivan appa irakkavum antha anukundu than kaaranama????
 
Top