எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தித்திக்கும் தேனருவி

Fa.Shafana

Moderator
#Shafa_review

#தித்திக்கும்_தேனருவி


ஓர் ஆழமான காதலின் பிரிவின் பின்னான வலியை, அந்த உணர்வைப் பேசும் கதை.

அந்தக் காதலை நேரடியாகக் கூறாது அவர்களின் பிரிவின் பின்னான தவிப்பையும் வலியையும் எழுத்தின் மூலம் நமக்குக் கடத்தி அந்தக் காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக எழுதிய கதாசிரியரின் எழுத்துத் திறமைக்கு என் பாராட்டுகள்.
இப்படி உணர வைப்பது தான் கதாசிரியரின் நோக்கம் என்றால் அதை கனகச்சிதமாக செய்து விட்டார்.

நிறைய இடங்களில் அந்தக் காதலும், அதன் வலியும் உணர்வும் மூச்சு முட்டவும் வைத்தது கண்ணீர் கசியவும் வைத்தது.

ஒரு சில கதைகள் தான் மறுபடியும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும். அதில் ஒன்று இந்தக் கதை.

அழகான, நிறைவான ஒரு கதையை கொடுத்ததற்கு உங்களுக்கு நன்றியும் அன்புகளும்.

போட்டியில் வெற்றி பெறவும் தொடர்ந்து இது போன்ற அழகிய கதைகள் எழுதவும் என் மனமார்ந்த வாழ்த்துகள் எழுத்தாளரே!
💐💐💐💐
 
Top