எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரத்த ரங்கோலி 7

Status
Not open for further replies.

NNK-105

Moderator
ரத்த ரங்கோலி 7


குப்பை என மக்கள் வீசி எறியும் பொருட்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும். அவை பெரும்பாலும் மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். சிலவகைக் குப்பை பொருட்கள் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அழிக்கப்படும்.

இதில் தேவையற்ற மின்னணு சாதனங்களும் அடக்கம். அவற்றில் செம்பு (copper) ஈயம்
(lead) பித்தலைப் போன்ற உலோகங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. அதனால்தான் மின்னணு சாதனங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆப்பர் என்னும் முறை பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.

மின்னணு அல்லாத பொருட்களிலும் சிறிது அளவேனும் ரசாயனம் அல்லது உலோகம் கலந்திருக்கும். அதற்கும் மதிப்பு உண்டு.

அவற்றைத் தகுந்த முறையில் உருக்கி உலோகங்கள்ப் பிரித்து எடுத்துவிடுவர். பிரித்தெடுக்கப்பட்ட உலோகம் மீண்டும் வேறொரு பொருளில் ஐக்கியமாகிவிடும்.

இதுதான் நடைமுறையில் உள்ள வழக்கம் ஆனால் கண்துடைப்பாக இப்படிச் செய்பவர்கள். அதன் பின்னே பலபல சட்டத்திற்கு விரோதமான காரியங்கள் செய்கின்றனர்.இந்தியாவில் சட்டப்படி ஒருவர் துப்பாக்கியை வாங்கலாம். அது தற்காப்பு அல்லது வேட்டை என்ற இருபிரிவுகளில் அடங்கும்.

முதலில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். துப்பாக்கி வழங்கும் போது அதனுடன் உரிமம் வழங்கப்படும். கூடவே ஆறு தோட்டாக்கள் கொடுக்கப்படும். கால இடைவேளை படி உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்தியாவில் துப்பாக்கி வைத்துக் கொள்வது அத்தனை சுலபம் அல்ல. அடுத்ததாகப் பல படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். தன் உயிருக்கு ஆபத்து என நிரூபிக்க வேண்டும். இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால் மட்டுமே மத்திய அரசு துப்பாக்கியை வழங்கும்.

ஆனால் இங்கே உற்பத்தி செய்யப்படும் தோட்டாக்கள் பெரும்பாலும் கள்ளத் துப்பாக்கி பயன்படுத்துபவர் கையில்தான் அடைக்கலமாகும்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்தது அந்த கள்ள தோட்டா தொழிற்சாலை. மும்முரமாக வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு பத்து தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்குச் சம்பளம் பல மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டது. தனி சாம்ராஜ்யம் போல இயங்கிக் கொண்டிருந்தது.

அருகில் ஹோவென்ற சத்தத்துடன் இருந்த நீர்வீழ்ச்சி தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் ஓசையை தனக்குள் அடக்கி அரணாக அமைந்தது.

இந்த துப்பாக்கி தொழிற்சாலையை நடத்துபவன் பெயர் ஆர்.பிரேமநாயகம் . அவனை ஆர். பி. என்றே அழைப்பர். இவனுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கோவா போன்ற மாநிலங்களில் பெரும் செல்வாக்கு உண்டு. வெளிநாடுகளிலிருந்து பணம் நயக்கரா நீர்வீழ்ச்சி போல பொழிகிறது.

எப்படி அந்த காலத்தில் இளவரசியை மணம் முடித்து இரண்டு நாடுகளுக்கு இடையே உறவு பாலம் ஏற்படுத்தப்படும். அதைப் போல ஒவ்வொரு மாநிலத்திலும் இவனுக்கு மாமன் மச்சான் என அரசியல்வாதிகளுடன் உறவு உண்டு. ஆதலால் இவனை அசைப்பது அத்தனை எளிதல்ல.

அரசியல்வாதியின் பினாமியாக தொழிற்சாலை இயங்குவதால் சட்டச்சிக்கலை எளிதாக எதிர் கொள்ள முடிந்தது. அப்படியும் பிரச்சனை வந்தால் தொழிற்சாலையைக் கைகழுவுவது அத்தனை கஷ்டமில்லை.

வனத்துறை அதிகாரிகள் வாயும் கண்ணும் பணத்தால் மூடப்பட்டது. அவர் கண்களுக்குத் தொழிற்சாலை தெரியவில்லை காதில் எதுவும் கேட்கவில்லை.

ஆந்திரா தமிழ்நாடு எல்லையின் காட்டுப் பகுதியில் இருப்பதால் இரண்டு பக்க பாதுகாப்பு. பிரச்சனை வருகையில் ஒருவர் மற்றொருவர் மேல் பழி போட வேண்டும். இந்த பஞ்சாயத்து முடியவே பதினைந்து வருடங்கள் ஆகிவிடும். அதன் பிறகு தோட்டா பிரச்சனைக்கு வர வேண்டும். இதுதான் அவனின் திட்டம்.

இங்கிருந்து தோட்டாக்கள் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. இவர்களிடமிருந்து வாங்குபவர்கள் பெரும்பாலும் ரௌடி கும்பல் மற்றும் கூலிப்படைகள் தான்.

தோட்டாக்களை உணவு பொருட்களுள் வைத்து அனுப்புவது இவர்கள் பாணி. ஜாம், சீஸ், மில்க் ஷேக் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவினுள் தோட்டாக்களை நன்றாக பேக் செய்து அடைத்துவிடுவார்கள். ஏனெனில் இவற்றைத் திறந்து சோதிப்பது அரிதிலும் அரிது.

இதற்காகவே இவர்கள் சில மிகப் பெரிய பிராண்ட் வகை உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி அதில் தோட்டாக்களை அடைத்து அனுப்புவார்கள். அந்த குறிப்பிட்ட பிராண்ட் உரிமையாளர்களுக்கு இது தெரியவே தெரியாது. அங்கும் ஆர்.பி ஆட்கள் வேலை செய்கிறார்கள்.

தரமான பிராண்ட் வகையைப் பார்த்ததும் வழியில் சோதனை கூட இருக்காது. இதுவரை எந்தவொரு இடத்திலும் பரிசோதிக்கப்படாமல் தோட்டா சீரான இலக்கை அடைந்துள்ளது. அதற்குப் பணமும் ஒரு காரணம்.துப்பாக்கியின் வகை கொண்டு தோட்டாவின் அளவு வடிவமைக்கப்படும். தோட்டாக்கள் செய்யச் செம்பு (copper), ஈயம்(lead), பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பலவகை பொருட்கள் பயன்படுத்தப்படும். ஆனால் செம்பு மற்றும் ஈயம் தான் துப்பாக்கி குதிரையை (trigger) அழுத்தியவுடன் வேகமாக இலக்கை அடைய உதவுகிறது.

இந்த தொழிற்சாலையில் பிஸ்டல் போன்ற துப்பாக்கிகளுக்கான தோட்டாகள்தான் அதிகளவில் தயாராக்கிப்படுகிறது.

அந்த தொழிற்சாலை முழுவதும் பல இடங்கள் கேமராவால் கண்காணப்பட்டது. ஆர்.பி.க்கு ஒருவன் மேல் சந்தேகம் ஏற்பட்டால் விசாரணை இன்றி அடுத்த நிமிடமே கொன்று புதைத்துவிடுவான். அவனை எதிர்க் கேள்வி கேட்க எவருக்கும் துணிவில்லை.

அங்கு பணிபுரியும் பத்து ஆட்களுக்குத் தேவைக்கு அதிகமான மது மாது மற்றும் பணம் வழங்பக்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்று குடும்பத்தாரைச் சந்திக்க இயலாது.

அந்த தொழிலாளிகளிடம் இது ராணுவத்திற்கான வேலை என்றும் அதனால் ரகசியமான இடத்தில் வேலை நடக்கிறது என்று சொல்லி அழைத்து வந்துள்ளனர். அதிகம் உலக அனுபவம் இல்லாத ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள்தான் இந்த வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்.

வீட்டினருக்கு மிகச் சரியாக பணம் சென்றடைவதால் அவர்களும் நிம்மதியாக வேலை செய்தனர். வேலை ஆட்களின் செல்போன்கள் பெரும்பாலும் நெட்வர்க் கிடைக்காமல் அவதியுறும். அதற்கு காரணம் ஆர்.பி. மூளை.

ஏழு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அதன் பின்பு ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும் என்று பொய் கூறி நம்பவைத்துள்ளனர். அந்த அப்பாவி இளைஞர்கள் நாட்டுக்காகச் செய்வதாக நினைத்து உழைக்கிறார்கள்.

இந்த தொழிற்சாலை தொடங்கி ஐந்து வருடங்கள்தான் ஆகியுள்ளதால். இதுவரை பிரச்சனை ஏற்பட்டதில்லை. ஆர்.பி. இந்த வனப்பகுதியை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளான். சிலர் காட்டின் முதல் நிலை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு அடுத்து உள்ளே எப்படி இருக்கும் என்று தெரியாது. தனக்கு மிகவும் நம்பகமான ஆட்களை மட்டுமே மூன்று நிலையிலும் அனுமதிப்பான்.

அதே போலத் தொழிலாளிகள் உல்லாசமாக இருக்கப் பெண்களை அழைத்து வருவான். அப்பெண்களை மயங்கச் செய்தே அழைத்து வருவான். செல்லும் போதும் அவ்வாறே. அவர்களுக்கு அங்கு எப்படி வந்தோம் எப்படிச் சென்றோம் என்று தெரியவே தெரியாது. தொழிற்சாலையில் இருக்கையிலும் அப்பெண்களைப் போதையிலேயே வைத்திருப்பான். தொழிலாளர்களிடமிருந்து எந்த விஷயமும் வெளிவரக் கூடாது என்பதால் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டான்.

ஒவ்வொரு இடத்திலும் மிக ஜாக்கிரதையாகச் செயல்படுவான். அவன் கணிப்பும் மிகச் சரியாகவே இருக்கும்.

அவனுக்குத் தேவை பணம் புகழ் செல்வாக்கு அது மட்டும் இருந்தால் போதும். பவனைப் போலப் பலர் அவனுக்கு உதவுகின்றனர். இதுவரை இந்த துப்பாக்கி தொழிற்சாலை உலகின் கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்று. அதற்குச் சூத்திரதாரி ஆர்.பி.

அவன் தினமும் வர மாட்டான். என்றேனும் தேவைப்படும் சமயத்தில் மட்டுமே காட்சியளிப்பான். அவனுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் தொழிலைக் கவனித்துக் கொள்வார்கள்.கைலாஷ் வீடு கலாட்டா கும்மாளமுமாகத் தெருவே அதிரும்படி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. பல நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டது.

ஆதி, அஸ்வின், அவன் மனைவி மற்றும் அம்மா. அவர்களுடன் பவன் என வீடே களைக்கட்டியது. எத்தனை நாட்களுக்குப் பிறகு இப்படி மகிழ்ச்சியான தருணத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

கடந்த சில காலமாக தங்களின் அன்பானவர்களின் மரணத்தால் அனைவரின் மனமும் வருத்தத்தில் இருந்தது. இனியேனும் பிரச்சனை இன்றி நாட்கள் செல்ல வேண்டும் என அனைவருக்கும் பிரார்த்தனை இல்லாமல் இல்லை.

பூமிநாதன் அனைவரையும் கண்குளிரக் கண்டார். என்று தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.சசி தன் கையால் சமைத்தே தீர வேண்டும் என அடம்பிடித்தாள். ஆதியின் அம்மா, அஸ்வின் மனைவி, கோகிலா என அனைவரும் சேர்ந்து சமைக்க முடிவெடுத்தனர்.

ஆனால் பூமிநாதன் குழந்தையுடன் சசி சமைப்பது கடினம். அதோடு விருந்தினர்களையே சமைக்கச் சொல்வதும் நன்றாக இருக்காது. பெண்கள் சமையலறையே கதி என்று இருந்தால் மற்றவர்களுடன் எப்போது பேவவது?

அதனால் சசி அவள் ஆசைக்கு ஏதேனும் ஒரு பலகாரம் மட்டும் செய்யச் சொல்லிவிட்டு. மற்றதை வெளியே ஆர்டர் கொடுத்துவிடலாம் என்றார். இந்த முடிவுக்கு அனைவரும் ஏக மனதாகத் தலையசைத்தனர். இவை அனைத்தும் முன்னமே வாட்ஸ்அப் கான்பிரன்ஸ் கால் மூலமாக முடிவெடுத்துவிட்டனர்.

கைலாஷ் தானே உணவகத்திற்குச் சென்று உணவை வாங்கி வருவதாகச் சொன்னான். அவனுக்கு ஆர்டர் என்னும் சொல்லே அலர்ஜியாக இருந்தது. முன்பே கார்மேகம் மரணத்தில் உணவு ஆர்டர் கொடுத்து பிரச்சனை இன்னும் நிலுவையில் உள்ளது.

பூமிநாதன் விரைவில் தன் செல்ல மகள் கோகிலாவிற்குத் திருமணம் முடித்துவிட வேண்டும் என்று எண்ணினார். சமீபகாலமாக அவர் மனதை குடைந்து கொண்டே இருந்த எண்ணமிது. ஆனால் தன் எண்ணத்தை வெளிக் காட்டவில்லை.

இப்படி பலவாறு சிந்தித்துக் கொண்டே இருந்தவருக்கு உறக்கம் சாப்பாடு என அனைத்தும் போதிய அளவு இல்லாமல் போனது.

பவனுடன் குப்கை கிடங்கிற்குச் சென்று வேலை செய்ய முடியவில்லையே என்னும் ஆதங்கமும் ஒருபக்கம் வருத்தியது. ஆனால் தற்பொழுதைய சூழ்நிலையில் அங்குச் செல்லவும் அச்சம் தடுத்தது. இங்கு இருந்தபடியே பவனின் நலனுக்காக வேண்டினார்.

சசி எப்பொழுதாவது “மாமா நீங்கச் சரியா சாப்பிடறதே இல்ல” என அங்கலாய்ப்பாள்.

“வீட்லயே தானே இருக்கேன்மா பசிகல இது போதும்” என்று விடுவார்.

சசியும் அதற்கு மேல் எதுவும் கேட்க மாட்டாள்.

அன்று அனைவரையும் கோகிலா தன் கலகலப்பான பேச்சால் கவர்ந்திழுத்தாள். அவளுக்குச் சற்றும் சளைக்காமல் அவளுடன் ஆதி வாயாடினான். பவன் அதிகம் பேசாமல் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டான்.

ஆதிக்கு இங்கு அபூர்வாவை அழைத்து வர வேண்டும் என்று ஆசைதான். ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? எனச் சிந்தித்தவன் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். பவனுக்கு மட்டுமே அவன் காதல் கதை தெரியும்.

அபூர்வாவிடம் கைலாஷ் வீட்டிற்குச் செல்வதைப் பற்றிக் கூறியிருந்தான். அன்று அவளுக்கு படப்பிடிப்பு எதுவும் இல்லை. வீட்டில்தான் இருந்தாள். காலையில் ஆதி குடும்பத்துடன் கிளம்புவதைக் கண்டாள். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவள் புன்னகையுடன் கையசைத்தாள்.

ஆனால் அவனால் பதிலுக்கு அப்படிச் செய்ய இயலவில்லை. அதற்குள் அவன் அண்ணி “என்ன ஆதி எங்கேயோ பாத்திட்டு இருக்கே?” எனக் கேள்வி எழுப்ப

“இவங்க வேற” என மனதில் அலுத்துக் கொண்டவன் “மழை இல்லனு பாத்தேன்” என எதையோ சொல்லி வைத்தான்.

“இந்த வெயிலுக்கு மழையா” மீண்டும் அவர் குடைந்து கேள்வி கேட்க

“வானிலை அறிக்கையில் சொல்லலை?”

“இல்லையே”

“அதே தான் நானும் சொன்னேன் மழை இல்லனு” என ஆதி கிண்டலாக முடிக்க

அண்ணி அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தார்.

“சீக்கிரமா கிளம்புங்க” என அஸ்வின் அவனை காப்பாற்றினான்.

நிரந்தரமாக உறங்கப் போகும் பூமிநாதன் வீட்டை நோக்கி கார் சென்றது.தொடரும் …
 
Status
Not open for further replies.
Top